சூர்ணிகை -77-
அவதாரிகை –
தத்வ த்ரயத்தில்
தத்வ த்ரயமாவது சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று உபதேசித்த க்ரமத்தில்
பிரதமம் சித் சப்த வாச்யனான ஆத்மாவினுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸ்புடமாக அருளிச் செய்தார் கீழ்-
அநந்தரம்
அசித் வஸ்துவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை அதி ஸ்புடமாக
அருளிச் செய்கிறார் –விடுவதை பற்றி நன்றாக அறிய வேண்டுமே -மாமேவ பிரத்யந்தே மாயையை தாண்ட –
அதில் பிரதமத்தில்
அசித் லஷணத்தை அருளிச் செய்கிறார் –
அசித்து
ஞான சூன்யமாய்
விகாராஸ்பதமாய்
இருக்கும் —மாறுதலுக்குஇடம் கொடுக்கும் -என்றவாறு
அதாவது –
அசித்தாகிறது -சைதன்ய அநாதாரமான வஸ்து இ றே-
அது தன்னை அருளிச் செய்கிறார் -ஞான சூன்யமாய -என்று –
அத்தைப் பற்றி இறே ஸ்ருதி போக்ய சப்தத்தாலே அசித்தைச் சொல்லிற்று/ போக்தா ஆத்மா -ப்ரேரிதா ஈஸ்வரன் –
விகாராஸ்பதம் ஆகையாவது -விகாரத்துக்கு இருப்பிடமாய் இருக்கை
விகாரமாவது -அவஸ்த்தாந்தராபத்தி-வெவ்வேறே நிலைகளை அடையும் -பிண்டம் கடம் சூரணை அவஸ்தைகள் அடையும் போலே
அதாவது சித் ஸ்வரூபம் போலே சதைக ரூபமாய் இராது ஒழிகை-
——————————————–
சூர்ணிகை -78-
இப்படி இதனுடைய லஷணத்தை அருளிச் செய்த
அநந்தரம் ‘
இவ் வசித்து தத்வம் தான்
சத்வைகாதாரமாயும்
சத்வாதி குணத்ரய யாதாராமாயும்
சத்வாதி குண சூன்யமாயும்
மூன்று வகைப் பட்டு இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –
இது
சுத்த சத்வம்
என்றும்
மிஸ்ர சத்வம்
என்றும்
சத்வ சூன்யம்
என்றும்
த்ரிவிதமாய் இருக்கும் –
—————————————–
சூர்ணிகை -79-
உத்தேசித்த க்ரமத்திலே அசித் தத்வத்தின்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை பிரதிபாதிப்பதாக நினைத்து
பிரதமம் -சுத்த சத்வத்தின் படியை அருளிச் செய்கிறார் –
இதில் சுத்த சத்வமானது
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே
கேவலசத்வமாய்
நித்தியமாய்
ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்
கர்மத்தால் அன்றிக்கே
கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
நித்ய முக்தராலும் ஈச்வரனாலும்
பரிச்சேதிக்கஅரிதாய்
அதி அத்புதமாய்
இருப்பதொன்று –
எல்லையில்லா வஸ்து -அறியாமல் இருப்பது–பரிச்சேதிக்க முடியாமல் இருப்பது – குற்றம் இல்லையே-
அதாவது
சுத்த சத்வம் என்று குணாந்தரம் கலசாத சத்வ குணத்தை யுடையது என்ற படி -அத்தை அருளிச் செய்கிறார் –
தூமணி மாடம் — துவளில் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம்- வாசி உண்டே –
ஸ்ரீ வைகுண்டம் -திரு மேனி போல்வன சுத்த சத்வம் -அப்ராக்ருதம் –
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே -கேவலசத்வமாய் -என்று
ஷய நதமச்ய ராஜச பராகே –நித்ய ஸூரீகள் உடன் கூடி
தமசச்து பாரே –
தம்ஸ பரச தாத –
பஞ்ச சகதிமைய திவ்யே சுத்த சத்வே ஸூ காகரே -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் இப்படி சொல்லா நின்றது இ றே-
நித்தியமாய் -அதாவது
அநாதி நிதநமாய் இருக்கை-
தத ஷரே பரமே வயோமன —பரம ஆகாசம் ஸ்ரீ வைகுண்டம் -பரம வ்யோம பாஸ்கரன் -முடிச்சோதியாய் இத்யாதி –
காலாதீனம் அநாதி ந அந்தம் -அப்ராக்ருதம் அசஞ்சலம் ப்ராப்ய அர்ச்சிராத பதாத சத்பிர் மயி சமநய சதமா நசை -தைத்ரியம் –
காலம் நடையாடாத தேசம் -ஆதி அந்தம் இல்லாதது அப்ராக்ருதம் சத்துக்கள் அர்ச்சிராதி மார்க்கம் மூலம் அவனை அடைகிறார்கள் –
யததத புராணாமாகாசம்சர்வச்மாத் பரமம் தருவமயத பதம் ப்ராப்ய தத்வஜ்ஞ்ஞா முசய ந்தே சர்வ கில்பிஷை –
பிரசித்தமான பரம பதம் புராணம் -மிக உயர்ந்த நித்யம் –அடைந்து தத்வம் அறிந்தவர்கள் – அனைத்து கர்மங்களில் இருந்தும் விடு பட்டு -அடைகிறார்கள் –
என்று இதனுடைய நித்யத்வம் ஸ்ருதி ச்ம்ருதிகளிலே சொல்லப் பட்டது –
–
ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் –
சுத்த சத்வம் ஆகையாலே ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் இருக்கும் இ றே
சத்வம் -ஜ்ஞான ஸூ காவஹமாய் இ றே இருப்பது
ஆகை இ றே சுத்த சத்வ -என்ற அனந்தரத்திலே-ஸூ காகரே -என்றது–ஸூ கத்துக்கு இருப்பிடம் என்றவாறு
கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் –
அதாவது —
சேதனன் கர்ம அனுகுணமாக இச்சிக்க
அந்த இச்சா அநு குணமாக பகவத் சங்கல்பத்தாலே
சதுர விம்சதி தத்வமாய்க் கொண்டு பரிணமித்து
சேதனர்க்கு போகய போக உபகரண போக ஸ்தானங்கள் ஆகிற பிரகிருதி தத்வம் போல் அன்றிக்கே
ஸ்வ போகார்த்தமாக உண்டான பகவத் இச்சையாலே
விமான கோபுராதி ரூபேண பரிணமியா நிற்கும் -என்கை—
தேவா நாம் பூரயோதயா தஸ்யாம் ஹிரண்மய கோச –
யோ வை காம ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -சங்கேத க்ஷேத்ரம் -அயோத்தியை முதல் பெயர் –
அபராஜிதா அடுத்து -அம்ருதத்தால் சூழப் பட்டுள்ள பட்டணம் –
அபராஜிதா பூர ப்ரஹ்மணா பரஜாப தேச சபாமா வேசம பரபதையே –சாந்தோக்யம் -என்று-திரு மா மணி -மண்டபத்துக்குள் பிரவேசிக்கிறான் முக்தன்
சுருதியிலும் சங்ரஹேண நித்ய விபூதியில் யுண்டான
திவ்ய நகர திவ்ய ஆயத நாதிகள் -இருப்பிடம் சொல்லப் பட்டது –
இது தன்னை ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே
திவ்யாவரண சத சஹச ராவ்ருதே திவ்யகலபகதே ருபசோபிததிவ்யோதயான
சதா சஹச்ர கோமபிராவ்ருதே அதி பரமானேதிவ்ய ஆயதனே கச்மி மச்சித விசிகர திவ்ய ரத்னமய திவ்ய ஆசன மண்டபே –
-திவ்ய கற்பக வருஷங்கள் சூழ்ந்து – உத்யாயனங்கள் -அதி பிரமாணம் -விஞ்சி -என்று —
தொடங்கி விஸ்தரேண் அருளிச் செய்தார் இறே-
நிரவதிக தேஜோ ரூபமாய் –
அதாவது -அக்னி ஆதித்யாதி தேஜ பதார்த்தங்களையும்
கதயோத கல்பமாக்கும் படி அளவிறந்த தேஜஸ் சாலே வடிவாய் இருக்கை —அவதி எல்லை -எல்லை அற்ற தேஜஸ் –
அக்னி போன்றவை மின்மினி பூச்சி என்னிம் படி தேஜஸ் –
ந சூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பா நதி குதயோ மகனி–கட உபநிஷத்
அதயாகா நலதீப தம தத சதாதம விஷ்ணோர் மகா தமன ச்வயைவ பரபயா
துராஜன துஷ பரேஷமே தேவதா நவை -என்னக் கடவது இறே–தனக்கு என்ற தேஜஸ் ஸ்வயம் பிரகாசம் அஜடம் -காண்பதற்கு அரிய-
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம்-8-10-என்றும் -எம்மா வீடும் வேண்டேன்
விளங்கும் சுடர்ச் சோதி –6-4-6-என்றும்
ஆழ்வாரும் இதனுடைய நிரவதிக தேஜோ ரூபத்தை பல இடங்களிலும் அருளிச் செய்தார் இ றே-
இசைவித்து என்னை உன் தாளினை –வேட்க்கை ஏழுவிக்க –வைதிக -பிள்ளைகள் இச்சை இல்லாமல் போனதால் திரும்பின –
நித்ய முக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய் –
அதாவது -இதனுடைய பரிமாணாதிகள் ஒருவராலும் அளவிட ஒண்ணாத படி இருக்கும் ஆயிற்று–
ஆச்சார்யர் மூலமே -கம் ஆனந்தம் ஆகாசம் அபரிச்சின்ன ஆகாசம் போலே அளவிறந்த ஆனந்தம் ப்ரஹ்மம் –
-பரமாகாசம் -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்– பரமாகாசம் தமிழ் படுத்தி —
அனஸ்தமிதி அஸ்தி சப்தம் ஒன்றாலே சொல்லலாம் படி இருக்கும் ஸ்ரீ கூரத் தாழ்வான
தேஷாமபி இயதபரிமாணம் இயதைசவாயாம் ஈத்ருசா ஸ்வ பாவமிதி பரிச்சேத்தும் அயோக்யே-என்று
நித்யரால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த இது
முக்தருக்கும் ஒக்கும் இ றே
ஈஸ்வர ஞானத்தோ பாதி இவர்களுடைய ஞானத்துக்கும்
சர்வதா சித்வம் யுண்டாகையாலே
அவனால் பரிச்சேதிக்கலாம் ஆகில் இவர்களாலும் பரிச்சேதிக்கலாம் இறே
ஆகையால் அவனுக்கும் அரிது என்கை –
ஆனால் இவர்களுடைய சர்வஞ்ஞதைக்கு கொத்தை வாராதோ என்னில் வாராது
சர்வஞ்ஞதை யாவது சர்வத்தையும் உள்ளபடி அறிகை இறே
பரிச்சேத்யமாகில் பரிச்சேதித்து அறிகையும்
அபரிச்சேத்யமாகில் அப்படி அறிகையும் இறே உள்ளது
சீமை இல்லாத ஒன்றுக்கு சீமை அறியாமை சர்வஞ்ஞதைக்கு அனுகுணம் என்னும் இடம்
தேவி தவனமஹிமாவதிர் ந ஹரிணா நாபி தவயாஜ்ஞாயதே யதயபயேவ மதாபி நைவ யுவயோச
சர்வஜ்ஞதா ஹீயதே யன்னா சதயேவ தத் ஜ்ஞாதாமனு குணாம
சர்வஞ்ஞாதாயா விதுர் வயோமா மபோஜமித நதயா கில விதன பரானதோய மிதயுச்யதே -என்று
ஸ்ரீ ஸ்தவத்திலே ஆழ்வானும் அருளிச் செய்தார் –
தேவி தேவரீருடைய மஹாத்ம்யத்தின் எல்லை உமக்கும் உம கேள்வனுக்கும் அறிய முடியாதே -ஆனபோதிலும் உங்களுக்கு சர்வஞ்ஞாதவாம் குறை இல்லை
இல்லாத வாஸ்து -எல்லை இல்லை என்பதை தெரியாது இருப்பதே ஞானத்தின் குணம் -ஆகாச தாமரையை முன்பு இருப்பதாக அறிபவன் பிராந்தன் அன்றோ
இங்கன் அன்றாகில்
தனக்கும் தன தன்மை அறிவரியான் -என்கிற இதுவும் –யானே என்னை அறியக்கில்லாதே -ஆழ்வார் சொல்லிக் கொள்வது போலே
-சர்வஞ்ஞதையோடு விரோதிக்கும் ஆகையால்
நித்ய முக்த ஈச்வரகளால் அபரிச்சேத்யம் என்கிற இதில் குறை இல்லை
இத்தால் இதனுடைய வைபவம் சொன்னபடி
அதி அத்புதமாய் இருப்பதொன்று –
அதி அத்புதமாவது -அநு ஷணம் அபூர்வ ஆச்சர்யவஹத்வம்
அன நதாசசாயா நந்த மகா விபவ -என்றார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர்-
க்ஷணம் தோறும் புதிய அனுபவம் -அநந்த ஆச்சர்யம் பெருமைகள் உடன் கூடியது
ஆக
சுத்த சத்வமாவது இப்படி இருப்பது ஓன்று என்றது ஆயிற்று –
—————————————————–
சூர்ணிகை -80-
இத்தை–சுத்த சத்வத்தை – சிலர்
ஜடம் என்றார்கள்
சிலர்
அஜடம் என்றார்கள் –
ஸ்வயம் பிரகாசம் இல்லை என்றும் உண்டு என்றும் சொன்னவாறு —
சூழ் விசும்பு திருவாயமொழி -உபநிஷத் -ஆச்சார்யர்கள் உபதேசம் மூலம் தானே அறிகிறோம்
சாஸ்திரம் ஸ்வயம் பிரகாசம் சொல்லும்
அநாதி கர்மம் திரோதானம் என்பதால் நமக்கு தெரியவில்லை –
தூங்கும் பொழுது நான் நான் தோற்றும் நான் ஞானம் உடையவன் என்று தோன்றாதே –
தடங்கல் நீங்கினால் எப்பொழுதும் உணர்த்தும் -பத்த தசையில் பிரகாசிக்காது -முக்த தசையில்
வேறே உதவி இல்லாமல் தானே பிரகாசிக்கும் -என்று முடிக்கப் போகிறார் மேல் –
அதாவது
சுத்த சத்வம் தன்னை
இந்த தர்சன ஸ்தானங்களிலே
சிலர் ஜடம் என்றார்கள்
அங்கன் அன்றிக்கே
சிலர் அஜடம் என்று சொன்னார்கள் என்கை
இஹ ஜடா மாதிமாம் கேசி தாஹூ-என்று இறே அபி உக்தரும் சொல்லிற்று–
வேதாந்த தேசிகன் தத்வ முக்த கலாபகம் இப்படி இரண்டு பக்ஷங்களும் சொல்கிறார்கள் என்கிறார்
கேசித்தாஹு-என்றால் இந்த பக்ஷம் அநாதரம்-
—————————————————-
சூர்ணிகை -81-
ஜடம் ஆகையாவது ஸ்வயம் பிரகாசம் இன்றிக்கே இருக்கை
அஜடமாகை யாவது ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை –
அத்தை அருளிச் செய்கிறார் –
அஜடமான போது
நித்யருக்கும்
முக்தருக்கும்
ஈஸ்வரனுக்கும்
ஜ்ஞானத்தை ஒழியவும்
தோற்றும் –
நம்முடைய ஞானம் இருப்பதை வேறு ஓன்று துணை இல்லாமல் நமக்கு தோன்றுமே -வேறே ஞானம் வைத்து அறிய வேண்டாம் -தர்ம பூத ஞானம் உட்பட –
ஸ்வயம் பிரகாசம் -சுத்த சத்வமும் -தர்ம பூத ஞானம்
பரமாத்மா ஆத்மா வாசி உண்டே /
அதாவது –
அஜடம் ஆனபோது என்றது -ஜடம் என்றும் ஒரு பஷம் சொல்லுகையாலே
அப்படி அன்றிக்கே
இப்படியானபோது -என்றபடி –
அந்த பஷத்தை விட்டு இத்தை உபபாதிக்கையாலே
இவர் தமக்கு இதுவே திரு உள்ளம் என்று தோற்றா நின்றது இ றே
ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும்-என்றது
ஜ்ஞானத்தாலே தன்னை அறிய வேண்டாதபடி தானே பிரகாசிக்கும் என்றபடி –
தர்ம பூத ஞானம் போலே கருவியும் விஷயமும் ஒன்றே -அத்தைக்கு கொண்டே அதை அறிவதால் ஸ்வயம் பிரகாசம்-
————————————————————–
சூர்ணிகை -82-
இப்படி ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
சம்சாரிகளுக்கு ஜ்ஞான வேத்யம் ஆகவேன்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –
சம்சாரிகளுக்குத்
தோற்றாது –
அதாவது
இது தான் அபி உக்தராலே -தேசிகராலே –விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது-எங்கனே என்னில்
த்ரிவித அசேதனங்கள் -என்று எடுத்து
அவற்றில் பிரக்ருதியும் காலமும் -ஜடங்கள்
சுத்த சத்வமான தரவத்தையும் ஜடம் என்று சிலர் சொல்லுவார்கள்
ஜடத்வமாவது ஸ்வயம் பிரகாசம் அன்றிக்கே இருக்கை
பகவத் சாஸ்த்ராதி பராமாகாசம் பண்ணினவர்கள் ஜ்ஞானாத்கமகமாக சாஸ்திர சித்தம் ஆகையாலே
சுத்த சத்வ த்ரவ்யத்தை ஸ்வயம் பிரகாசம் என்பார்கள் –
இப்படி ஸ்வயம் பிரகாசம் ஆகில் சம்சாரிகளுக்கு சாஸ்திர வேத்யமாக வேண்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்னில் -த்ருஷ்டாந்தம் காட்டி அருளுகிறார்ர் -சீதை-தானும் அக்குளத்தில் மீன் போலே என்று காட்டியது போலே
கிருஷ்ணனும் பிறவிகள் மித்யையா கானல் நீரா -தானும் அவதரித்து -மனுவுக்கு உபதேசம் என்று காட்டியது போலே – –
ஆத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்ம பூத ஞானமும்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்க
1–ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம் பிரகாசமாய்
வேறே எல்லாருக்கும் ஞானாந்தர வேத்யமானாப் போலேயும்
2–தர்ம பூத ஞானமும் ஸ்வ ஆச்ரயதுக்கே ஸ்வயம் பிரகாசமாய்
இதரருக்கு ஸ்வயம் பிரகாசம் அல்லாதாப் போலேயும்
இதுவும்–சுத்த சத்வமும் – நியத விஷயமாக–நித்ய முக்த ஈஸ்வரனுக்கும் – ஸ்வயம் பிரகாசமானால் விரோதம் இல்லை –
யோ வேத்தி யுகபத சர்வம் பிரதயஷேண சதா ச்வத
தம பிரணமய ஹரிம் சாஸ்திரம் ந்யாயத்வம் பரசஷமஹே –ந்யாயதத்வம் ஸ்ரீ மத நாதமுனிகள் -இப்பொழுது லுப்தமான கிரந்தம் -என்கிறபடியே
அறிகிறான் -ஏக காலத்தில் அனைத்தையும் கண் முன்னே பார்ப்பது போலே சதா இயற்கையாக -என்றபடி -தன் தர்ம பூத ஞானத்தைக் கொண்டு –
சர்வம் -சுத்த சத்வத்தையும் தர்ம பூத ஞானத்தால் பார்க்கிறார் என்றால் ஸ்வயம் பிரகாசத்வம் பாதிக்கும் -என்பதை மேலே காட்டி –
தர்ம பூத ஞானத்தாலே சர்வத்தையும் சாஷாத் கரித்து கொண்டு இருக்கிற ஈஸ்வரனுக்கு
சுத்த சத்வ த்ரவ்யம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறபடி எங்கனே -என்னில்
இவனுடைய–சர்வேஸ்வரனுடைய – தர்ம பூத ஞானம் திவ்ய ஆத்மா ஸ்வரூபம் முதலாக சர்வத்தையும் விஷயீ கரியா நிற்க
திவ்யாத்மா ஸ்வரூபம்-ப்ரஹ்ம ஸ்வரூபம் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறாப் போலேயும்
இதுவும்-சுத்த சத்வமும் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்கலாம்
இப்படி நித்யருக்கும் துல்யம்
விஷய பிரகாசன காலத்திலே தர்ம பூத ஞானம் ஸ்வயம் ஆஸ்ரய மாத்ரத்துக்கே ஸ்வயம் பிரகாசமாக ஆனால் போலே
முக்தாக்களுக்கும் அவ்வவஸ்தையிலே இது-சுத்த சத்வம் – ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை –
தர்ம பூத ஞானத்தின் யுடைய ஸ்வயம் பிரகாசன சக்தியானது
-ஸ்வ ஆத்ம பிரகாசன சக்தி – விஷய பிரகாசனம் இல்லாத காலத்திலே கர்ம விசேஷங்களாலே பிரதிபத்தை ஆனால் போலே
சுத்த சத்வத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியும் பத்த தசையில் பிரதிபத்தை யாகையாலே
சுத்த சத்வம் பத்தருக்கு பிரகாசியாது ஒழிகிறது-
தியச ஸ்வயம் பிரகாசத்வம் முகதௌ ஸ்வா பாவிகம் யதா
பத்தே கதாசித சம்ருததம ததா தரா பி நியமயதே –
இவ்வளவு அவசதா நதாரபத்தி விகாரி த்ரவ்யதுக்கு விருத்தம் அன்று-
அவஸ்த்தாந்தர பத்தி -விகார த்ரவ்யத்துக்கு விருத்தம் அன்று–விகாரம் பகவத் இச்சையால் -பத்த தசையில் கர்மா திரோதானத்தால் தெரிவது இல்லை என்றவாறு
ஆகையாலே பிரமாண பிரதி பந்தன அர்த்தத்துக்கு யுக்தி விரோதம் சொல்ல வழி இல்லை -என்று
இப்படி ரஹச்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே – மா முனிகள் -தேசிகன் ஸ்ரீ ஸூக் திகளை இப்படி நிறைய இடங்களிலே காட்டி அருளுகிறார் –
—————————————————
சூர்ணிகை -83-
கீழே ஆத்மாவும் அஜடமாய்
ஞானமும் அஜடமாய் இருக்கச் செய்தே
அந்யோந்யம் பின்னம் என்னுமத்தை தர்சிப்பித்தால் போலே
சுத்த சத்வமும் அஜடமாய் இருக்கச் செய்தே
இவை இரண்டிலும் பின்னமாய் இருக்கிற படியை
தர்சிப்பிக்கைக்காக தஜ் ஜிஜ்ஞ்ஞா ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –
முன்பே ஒற்றுமை வேற்றுமைகளை பார்த்தோம் -தர்ம பூத ஞானத்துக்கும் ஆத்ம ஸ்வரூபத்துக்கும் -சுத்த சத்வமும் -மூன்றாவது கோஷ்ட்டியில் –
ஆத்மாவிலும்
ஜ்ஞானத்திலும்
பின்னமான படி
என் -என்னில்–சுத்த சத்வம் மற்ற இரண்டிலும் வாசி ஏது என்னில்
——————————————
சூர்ணிகை -84-
அநேக ஹேதுக்களால் அது தன்னை தர்சிப்பிக்கிறார் –
நான் என்று தோற்றாமையாலும்
சரீரங்களாய் பரிணமிக்கையாலும்
விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
சப்த தச பாசாதிகள் யுண்டாகையாலும்
பின்னமாகக் கடவது –
அதாவது
ஆத்மாவஸ்து பிரத்யக் ஆகையாலே
அஹம் என்று பிரகாசியா நிற்கும் —
இது பராக் ஆகையாலே இதம் என்று இறே பிரகாசிப்பது
அதற்கு அது நான் என்று தோற்றாது -தன்னை வைகுந்தம் நான் என்று சொல்லாது
ஆத்மா அஹம் இதம் இரண்டுக்கும் பொருளாகும்
இத்தால் ஆத்மாவில் பின்னம் என்றபடி-
சரீராதிகளாய் பரிணமிக்கையாலே ஆத்மாவிலும் ஞானத்திலும் இரண்டிலும் பின்னம் என்றபடி-
ஸ்ரீ வைகுந்தத்தில் சாரூப்பியம் சுத்த சத்வ திருமேனி அங்கு
சாமீப்யம் சாலோக்யம் சாம்யாபத்தி சாயுஜ்யம் உண்டே –
ஏக ரூபன் ஆகையாலே ஆத்மாவுக்கு பரிணாமம் இல்லை இறே-ஒரே வடிவம் -ஞானம் பரிணாமம் அடையும் –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகள் உண்டே – -சரீரமாக பரிணமிக்காதே –
ஞானத்துக்கு பரிமாணம் யுண்டாகையாலும் சரீராதிகளாய் பரிணமிதியாது இறே
விஷய நிரபேஷமாக பிரகாசிக்கையாலும்–சுத்த சத்வம் விஷயம் எதிர்பார்க்காதே -தர்ம பூத ஞானத்துக்கு விஷயம் வேண்டுமே -நமக்கு கிரஹித்து காட்ட –
சப்த ஸ்பர்சாதிகளுக்கு ஆச்ரயம் ஆகையாலும்–அப்ராக்ருத பஞ்ச பூதங்கள் அங்கு –
விஷய சந்நிதியில் ஒழிய பிரகாசிப்பிததும் செய்யாதே
சப்தாஸ்ரயமும் இன்றிக்கே
தத் ஆகாரமாய் இருக்கிற -தர்ம பூத ஜ்ஞானத்தில் பின்னம் -என்றபடி –
————————————————————–
சூர்ணிகை -85-
ஆக இப்படி சுத்த சத்வத்தின் யுடைய பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம் ‘
மிஸ்ர சத்வ பிரகாரத்தை அருளிச் செய்வதாக –தொடங்குகிறார் –
மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி
1–பத்த சேதனருடைய
ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
2–விபரீத ஜ்ஞான ஜநகமாய்
3–நித்தியமாய்
4-ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
5–பர தேச பேதத்தாலும்
கால பேதத்தாலும்
சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
6–பிரகிருதி அவித்யை மாயை என்கிற
பேர்களை யுடைத்தாய் இருக்கும்
அசித் விசேஷம் –
அதாவது –
மிஸ்ர சத்வமாவது -சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி –
ரஜஸ் தமஸ் ஸூ க்களோடு கூடின சத்வ குணத்தை யுடைத்தானது –
திரிகுணம் தாஜ் ஜகதயோ நிர நாதி பரபவா பயயம-என்றும்
திரிகுணம் கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே -என்றும்
சத்வமர ஜசதம இதி குணா பரக்ருதிசம்பவா -என்னக் கடவது இ றே-
பத்த சேதனருடையஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய் –
குண த்ரயாத்மகமாய் இருக்கையாலே
ரஜஸ் தமோமசத்தாலே ஜ்ஞாநாதிகளுக்கு திரோதானத்தைப் பண்ணும் என்கை-
சேதனருடைய ஞானானந்தங்களுக்கு த்ரோதாயகம் என்று சாமானாயேன சொல்லாதே
பக்த சேதனருடைய -என்று விசேஷிக்கையாலே
கர்ம சம்ஸ்ருஷ்டரான சேதனருடைய ஞானாதிகளுக்கே அது திரோதாயகம் -என்றபடி
அல்லது
ஐசகிகமாக பராக்ருத சரீரம் பரிக்ரஹம் பண்ணுகிற நித்ய முக்தருடைய
ஜ்ஞாநாதிகளுக்கும் இது சங்கோ சத்தைப் பண்ண வேண்டி வரும் இறே –
ஆகையாலே -அசஹ்ருத சஹஜ தாஸ்யச ஸூ ர்யச சரச பந்தா
விமல சரம தேஹோ இதய மீ ரங்க தாமே மஹிதமனுச திர்யக் ஸ்தாவர தவா சசரயந்தே -என்கிறபடியே
நித்ய முக்தரும் இங்கே வந்து பராக்ருத தேஹங்களைப்பரிகிரஹித்து
சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணும் அளவில் அவர்களுக்கு இது சங்கோ சத்தைப் பண்ணா மையாலே
பத்த சேதனருடைய ஜ்ஞானாதிகளுக்கே இது திரோதயம் என்னும் இடம் சித்தம் –
அணைய–எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாக பாரித்து இருப்பார்களே -அனந்தாழ்வான் எறும்பு பிரசாத ஐதிக்யம் –
அநீசயா சோசதி முஹயமான -என்றும்
அநாதி மாயயா ஸூ பத -என்றும்
பகவ நமா யாதிரோ ஹித ஸ்வ பிரகாச -என்னக் கடவது இறே-
விபரீத ஜ்ஞான ஜநகமாய்-
அதாவது -அதஸ்மின் தத் புத்தி–அது இல்லாத இடத்தில் அதுவாக புத்தி பண்ணி
அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தியும்
அஸ்வதநதரமான ஆத்மவஸ்துவில் ஸ்வ தந்திர புத்தியும்
அந்ய சேஷமானவது தன்னில் அந்ய சேஷத்வ புத்தியும்
அநீச்வரானவர்கள் பக்கலில் ஈஸ்வர புத்தியும்
அபுருஷார்த்தமான ஐஸ்வர்யாதிகளிலே புருஷார்த்தவ புத்தியும்
அனுபாயங்கள் ஆனவற்றில் உபாயத்வ புத்தியும்
தொடக்கமானவை –
யதா ஜ்ஞானத்தை மறைக்கும் அளவு அன்றிக்கே
இப்படி இருந்துள்ள விபரீத ஜ்ஞானங்களையும்
பத்த சேதனருக்கு யுண்டாக்கா நிற்கும் ஆயிற்று –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஜ்ஞான ஜகநீம் -என்று இது தன்னை
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் இறே –
நித்தியமாய் –
அதாவது -உத்பத்தி விநாச ரஹிதமாய் இருக்கை
அஜாமேகாம -என்றும்–பிறப்பிலியாய் ஒன்றுமாய் இருக்கும்
கௌர நாதய நதவதீ சா ஜநிதரீ பூத பாவி நீ -என்றும்
அசேதனா பரார்ததா ச நித்யா சததவிகரியா –பரம சம்ஹிதை -என்றும்
விகார ஜநநீ மஜ்ஞ்ஞா மஷ்ட ரூப மஜாம த்ருவாம்–மாந்த்ரீக உபநிஷத் -என்றும்
சொல்லக் கடவது இறே –
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் –
அதாவது –
சர்வேஸ்வரனுடையஜகத் ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு உபகரணமாய் இருக்கை –
க்ரீடதோ பாலக சயேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -குழந்தை போலே அவன் சேஷ்டை என்றும்
அப்ரமேயோ நியோஜயச்ச யத்ர காம காமோ வசீ மோததே
பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்றும்
த்வம் நயஞ்சத ப்ருதஞ்ச தபி கர்ம ஸூ த்ரோ பபாதிதை ஹரே விஹரசி க்ரீடாக நது கைரிவ ஜந்துபி–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றும்
சொல்லப் படுகிற சர்வேஸ்வரனுடைய லீலைக்கு
குண த்ரையாத்மகமான பிரகிருதி இ றே பிரதான உபகரணம்
சிதா சிதா ச ரக்தா ச சர்வ காமதுகா விபோ -என்னக் கடவது இறே -வெளுப்பு கருப்பு சிவந்து முக்குண சேர்க்கை
தைவி ஹயேஷா குணமயீ-என்று தானே அருளிச் செய்தான் இறே –7-அத்யாயம் -மாயா தாண்ட முடியாது –
விளையாட எண்ணம் கொண்ட என்னால் பண்ணப்பட்ட இந்த மாயை -சத்ய சங்கல்பம் போன்ற என்னையே சரணம் அடைந்து மாயையைத் தாண்டுகிறார்கள்
தூக்கணாங்குருவி கூட்டையே பிறக்க முடியாதே இவனால் –
பிர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய் –
பிரதேச பேதமாவது-குண வைஷம்யம் இல்லாத பிரதேசமும்
குண வைஷம்யம் உள்ள பிரதேசமும்–வி சமமாக இருப்பதே விஷமமாய் இருப்பது –
பிரளய -கார்ய உன்முகமான தசை -நடுவில் -ஸ்ருஷ்டியான பின்பு -மூன்று நிலைகள் –ஸூஷ்மாம் —நடு தசை -தயாராகும் தசை –ஸ்தூல தசை மூன்றும் உண்டே –
தன்மாத்திரை தசையே நடு தசை -ஸ்பர்சாதிகள் -குணங்கள் தன்மாத்திரை வேறே வேறே -தன்மாத்திரை த்ரவ்யம் / குணமாக கொண்டால் வேறே –
அஹங்காரம் ஆகாசம் இரண்டும் த்ரவ்யங்கள் -தாமச அஹங்காரம் -பஞ்ச தன்மாத்திரை -சப்தம் பிரதம தன்மாத்திரை த்ரவ்யம் –
பூதங்கள் உண்டாகும் முன் தசை த்ரவ்யம் -உருவான பின்பு பிருத்வி குணம் கந்தம் -அது அத்ரவ்யமாக குணம் -தன்மாத்திரை இருக்காதே அப்புறம் –
பூநிலாய ஐந்துமாய் -சொன்னது குணத்தை அத்ரவ்யத்தை -பூமியில் உள்ள ஐந்து குணங்கள் /
ஒரு தன்மாத்திரை ஒரு பூதமாகும் -கந்த தன்மாத்திரை பிருத்வியாகும் -அந்த தன்மாத்திரை பேரிலே குணம் –
ஸூ ஷ்மம் சத்ருச தசை –காரண நிலை
நாடு நிலை
ஸ் தூல தலை -கார்ய தசை -வி சத்ருச தசை –
இது தனக்கு குண வைஷம்யம் உள்ளது கார்ய உந்முகமான ஸ்தலத்திலே இறே
அல்லாத இடம் எல்லாம் குண சாம்யாபன்னமாய் இருக்கும் அத்தனை –
அதில் குண வைஷம்யம் இல்லாத இடம் சத்ருச விகாரமாய் இருக்கும்-ஸூஷ்ம தசை –
வைஷம்யம் உள்ள இடம் விஸ்த்ருச விகாரமாய் இருக்கும் –
சத்ருச விகாரமாவது நாம ரூப விபாக நிர்தேச யோக்யமாய் இருக்கும் ஸ்தூல விகாரம்–பிரித்து அறிதலும் சொல்லிக் கூப்பிடுதலும் -நாம விபாக ரூபா நிர்தேச –
குண சாம்ய மநு தரிக தமன யூனம -என்கையாலே
அவ்யக்த அவஸ்தையில் உள்ள விகாரம் எல்லாம் சத்ருசமாய் இருக்கும்–விளக்கம் அற்ற நிலையிலே –
அவ்யக்தம் -மஹான் பிரதம விகாரம் -பிரகிருதி தானே அவ்யக்தம் -மூல பிரகிருதி -விகாரம் அடையும் -எதுவும் விகாரம் அடைந்து ஆக வில்லை
பஞ்ச பூதங்கள் விகாரம் ஆகாது
மஹான் அஹங்காரம் -இரண்டு நிலைகளும் உண்டு -விகாரம் அடைந்து விகாரமும் ஆகும்
அவிக்ருதி பிரகிருதி /பஞ்ச பூதங்கள் -24-மூன்றாக சொன்னால் விக்ருதி -/ விக்ருதி விக்ருதி / அவிக்ருதி என்று மூன்று வகை –
தரை லோக்யம் என்று இதை சொல்வார்கள்
மஹதாதி விஸ்த்ருத விகாரமாய் இருக்கும் —இதில் இருந்து தான் நாம ரூபா விபாகம் வரும்
அவ்யக்தம் பிரகிருதி நான்காக இருக்கும் -அவிபக்த தமஸ் -விபக்த தமஸ் -அக்ஷரம் அவ்யக்தம் –
மூல பிரகிருதி அவிபக்த தமஸ் -விபக்த தமஸ்–அக்ஷரம் -கடைசியில் தான் -அவ்யக்தம் -ஆகும் –
இனி கால பேதமாவது
சம்ஹார காலமும் -சிருஷ்டி காலமும்
சம்ஹார காலத்திலே இது அவிபக்த தமஸாய்க் கிடைக்கையாலே ஒரு இடத்திலும் குண வைஷம்யம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க சத்ருச விகாரமாய் இருக்கும்
சிருஷ்டி காலத்திலே பகவத் அதிஷ்டான விசேஷத்தாலே விபக்தமாய்–பிரிந்து -ப்ரஹ்மத்தின் சரீரத்தில் இருந்து அவிபக்தம் பிரிந்து அறிய முடியாத நிலை -அது மாறி விபக்தமாய்
கார்ய உன்முகமாய் குண வைஷம்யம் பிறந்தவாறே விசத்ருச விகாரத்தை யுடைத்தாய் இருக்கும்
சத்த விகாரச பதமாய் இருக்கையாலே அதுக்கு சத்தா பிரயுக்தம் இ றே விகாரம்
அதினுடைய சௌ ஷ்மயா சௌ ஷமய நிபந்தனமான விபாக நிர்த்தேசம் இ றே-ஸூ ஷ்மமான தசை சூஷ்மம் இல்லா தசை
அல்லது நிர் விகாரமாய் இருப்பதோர் அவஸ்தையும் இல்லைஇ றே-
பிரகிருதி அவித்யை மாயை என்கிற பேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –
மிஸ்ர சத்வமாவது இப்படி இருப்பதோர்
அசித் விசேஷம் என்று
வாக்ய அந்வயம்-
——————————————
சூர்ணிகை -86-
பிரகிருதி யாதி நாம பேதங்கள் இதனுடைய ஸ்வ பாவங்களைப் பற்றி
வந்தது என்கிறார் –
பிரகிருதி -என்கிறது
விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது
ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது –
விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
இப்படி பெயர்க்காரணங்களை அருளிச் செய்கிறார் / பிரகிருதி கார்ய தசை இல்லையே காரணம் மட்டுமே –
அதாவது
மூல பிரக்ருதிரவிக்ருதி -இத்யாதிகளிலே
பிரகிருதி -சப்தம் காரணவாசியாகச் சொல்லப் பட்டது இறே
இது தான் உபாதான காரணத்துக்கே வாசகம் -ஆகை இறே
மற்று ஒன்றின் விகாரம் இல்லை -/மண் போலே -இதுக்கு விகாரம் உண்டு மடக்கு குடம் போல்வன
ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் உபாதனத்வத்தை சொல்லுகிற சூத்திர காரர்
பிரக்ருதிச்ச பிரதிஞ்ஞா த்ருஷ்டானதா அனுபரோதாத்–1 4-பாதம் –என்று
பிரகிருதி சப்தத்தாலே சொல்லிற்று
நிமித்த காரணம் குயவன் எளிதாக ப்ரஹ்மத்தை ஒத்துக் கொள்வார் உபாதானம் சொன்னால் விகாரம் வரும் என்று ஒத்துக் கொள்வது சிரமம் -அது உபாதான காரணமும் கூட என்று சொல்லாமல் -பிரக்ருதியும் என்கிறார் –
அதனால் பிரகிருதி என்று உபாதானம் என்றவாறு
ஏக விஞ்ஞானம் சர்வம் விஞ்ஞானம் பவது– ஸ்வேதகேது –
ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராத படியால் ப்ரஹ்மம் உபாதான காரணமும் –
ப்ரஹ்மத்துக்கு உபாதான காரணம் பொருந்துவதே பிரக்ருதியை சரீரமாக கொண்டதால் தானே -ஸ்வரூபம் விகாரம் அடையாதே –
ஆகையால் இத்தை பிரகிருதி என்கிறது –
மஹதாதி விகாரங்களை தன பக்கலில் நின்றும் ஜனிப்பிக்கையாலே
அவித்யா சப்தம்
வித்யாபாவத்துக்கும் வித்யேதரத்துக்கும் வித்யா விரோதிக்கும்
வாசகமாய் இருந்ததே ஆகிலும்
வித்யா அபாவம் –வித்யா விட இதர–வித்யா விரோதி -மூன்று அர்த்தங்கள் உண்டே —
வேதாஸ் சாஸ்திரம் பரா நாஸ்தி -வேறே பட்ட சாஸ்திரம் இல்லை உயர்ந்த அர்த்தம் இல்லை அங்கு
கர்மாயோகம் அகர்ம -ஞான யோகம் –இதர அர்த்தம் –
விஷய அனுகுணமாக இறே பிரயோகம் இருப்பது-
ஆகையாலே இத்தை அவித்யை என்கிறது ஞான விரோதி ஆகையாலே –
ஞாநானந்தங்களுக்கு திரோதாயகமாய் -என்று இதனுடைய ஞான விரோத்வம் தானே கீழே சொல்லப் பட்டது-
அசூர ராஷசாதி கிரியைகளை ஆச்சர்யகரத்வத்தை பற்ற மாயா சப்தத்தால் சொல்லுகிறாப் போலே-மாயா சிரஸ் மாயா போர் போலே
/மித்யை இல்லை -ஆச்சர்யம் விசித்ரம் /விசிஷ்டாத்வைத மாயா ஆச்சர்யம் / அத்வைதி பொய் என்பர் /
இத்தையும் மாயை -என்கிறது விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
அதாவது ஓன்று போல் அன்றிக்கே விஸ்மய நீயங்களான கார்யங்களை ஜநிப்பிக்கை –
——————————————————–
சூர்ணிகை -87-
ஏவம்பூதமான அசித்து தான் கார்ய காரண ரூபேண அநேகத்வமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார்
பிருத்வி காரணமாக மட்டுமே / பிரகிருதி காரியமாக மட்டுமே -நடுவில் காரண கார்ய உபாயமாகவும் இருக்கும்
இதுதான்
பொங்கைம்புலனும்
பொறி ஐந்தும்
கருமேந்த்ரியம்
ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய
பிரகிருதி
மானாங்கார
மனங்கள் –10–7-
என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –
அதாவது
ஐம்புலன் சப்தாதிகள்–த்ரவ்யத்தின் வகைகள் தன்மாத்திரைகளை சொன்னபடி குணங்களை சேர்க்க வில்லை -என்றால்
குணங்கள் தானே ஈடுபடுத்தும் -ஆழ்வார் குணங்களை தான் அருளிச் செய்கிறார் -தன்மாத்திரைகளை சொல்ல வில்லை –
பொங்குதலால் சேதனரை விக்ருதரராய் பண்ணும்படிக்கு ஈடான–பொங்கி வந்து ஈர்க்கும் –
இவற்றினுடைய உத்ரேகம் சொல்லுகிறது-
இவ்விடத்தில் விசேஷ்யம் மாத்ரமே அபேஷிதம்–
பொறி ஐந்தாவன -ச்ரோத்ராதிகள்–ஞான இந்திரியங்கள்
கருமேந்த்ரியம் -வாக்காதிகள்
ஐம்பூதம் -கக நாத்திகள்-ஆகாசாதிகள்
இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி -என்கிறது
சம்சார தசையில் இவ்வாத்மாவோடே அத்யந்த சம்ஸ்ருஷ்டையாய்க் கிடக்கிற பிரகிருதி -என்றபடி –
விட்டுப் பிரியாமல் ஆத்மாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே –
இங்கும் விசேஷ்யம் மாதரம் இறே தத்வ சங்கையைக்கு வேண்டுவது
மானாங்கார மனங்கள் ஆவன -மகானும் -அஹங்காரமும் -மனஸ் ஸூம்
இப்படி இருபத்து நாலு தத்வங்களையும் அருளிச் செய்கிற ஆழ்வார்
தன மாத்ரைகளை அருளிச் செய்யாதே
சப்தாதிகளை அருளிச் செய்தது
தன மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாத்திரம் ஆகையாலே
தன மாத்ரங்களான பூதங்கள் பத்தையும் அஞ்சு தத்வமாக்கி
சப்தாதிகள் ஐந்தையும் ஐந்து தத்வங்களாகக் கொண்டு
இவையும் ஏகாதச இந்த்ரியங்களும்
பிரகிருதி மகான் அஹங்காரம்
இப்படி
சதுர்விம்சதி தத்வம் என்று கொள்ளுவதும் ஒரு பஷம் யுண்டாகையாலே
உபய பஷத்திலும் தத்வ சங்கையையில் நயூநாரிதேகம் இல்லை இறே-ந்யூனம் அதிரேகம் குறைவோ நிறைவோ இல்லை என்றபடி
ஆகையால் இப்பாட்டில் சொன்ன படி யே இருபத்து நாலு
தத்வமாய் இருக்கும் என்றது ஆயிற்று –
———————————-
சூர்ணிகை -88
இப்பாட்டில் தத்தவங்களை சொன்ன இத்தனை ஒழிய
இவற்றினுடைய க்ரம கதனம்
பண்ணிற்று இல்லை இ றே
ஆகையால் இதில் பிரதம தத்வம் ஏது என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
இதில்
பிரதம
தத்வம்
பிரகிருதி
பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் அவ்யக்தம் என்றும்
பிரதம தத்வதுக்கு பேர்
பிரகிருதி என்று சொல்லுகைக்கு அடி முன்பே சொல்லப் பட்டது–உபாதாளத்வம் / முன்பே அவித்யை மாயை இரண்டையும் பார்த்தோம்
பிரதானம் -என்கிறது -எம்பெருமானுடைய லீலைக்கு பிரதானமான உபகரணம் ஆகையாலே
அவ்யக்தம் என்கிறது அநபிவ்யக்த குண விபாகம் ஆகையாலே-வெளிப்படையாக தெரியாமல் என்றபடி
—————————————————-
சூர்ணிகை -89-
இப்படி பிரதம தத்வமான பிரகிருதிக்கு யுண்டான
அவஸ்தா விசேஷங்களை அருளிச் செய்கிறார் –
இது அவிபக்த தமஸ் -என்றும்
விபக்த தமஸ் என்றும் -என்றும்
அஷரம் என்றும்
அவ்யக்தம் -என்றும் )
(சில அவஸ்தைகளை
யுடைத்தாய் இருக்கும் –
விதை -பருத்து -நீரில் மூழ்கி பருத்து-அக்ஷரம் – -முளை விட்டு நிலை -அவ்யக்தம் -நான்கு நிலை –
லயம் கார்ய அவஸ்தை முடிந்து காரண அவஸ்தையில் ஒன்றுவது -அவ்யக்தம் -அக்ஷரம் -லயம்-அது விபக்தத்தில் அது -அவிபக்தத்தில் அடையும் –
அதற்கு முன்பு -மஹான் அவ்யக்தம் அடையும் –
ப்ரஹ்மம் விபு -பிரிந்தால் தானே சென்று ஒட்டிக்கும் -மார்க்கமே இல்லை -இருந்த இடத்திலே நாம ரூப அர்ஹம் இல்லாமல் ஒட்டிக்கும் –
அவிபக்த தமஸ் விபக்த தாமஸ் -பிரக்ருதி இடம் பிரிந்து அறிய முடியாமலும் அறியும் படியும்
ஜீவாத்மா பிரகிருதி பற்றி அப்புறம் -மஹான் வரும் வரை நாம ரூப விபாகம் இல்லை –
ஆத்மாவை சரீரமாக கொண்டே படைக்கிறார் -அநேக ஜீவன அணு பிரவேச -படைக்கப்பட்ட தத்வங்களுக்குள் பிரவேசிக்கிறார் –
பிரித்தே அறிய முடியாமல் -அவ்யக்த அவஸ்தை வரை –
மூல பிரக்ருதியில் ப்ரஹ்மம் தானே வியாபிக்கிறார் -ஜீவனை கொண்டு இல்லை -மேலே மேலே வரும் பொழுது தான் –
அதாவது
அவ்யக்தம் அஷரே லீயதே –ஸூ பால உபநிஷத்
அஷரம் தமசீ லீயதே-தமஸ்-விபக்தம் அவிபக்தம் இரண்டு நிலை
தமே பர் தேவ ஏகி பவதி -என்கிறபடியே-ஒன்றாக ஆனபின்பு பிரித்து அறிய முடியாமல் இருக்கும் –
சம்ஹ்ருதி சமயத்திலே அவ்யக்த அவஸ்தை குலைந்து
அக்ஷர அவஸ்தமாய்–அக்ஷரம் -ஜீவாத்மாவுக்கு பெயர் அன்றோ -இங்கு பிரக்ருதியை அதே சப்தத்தால் –
உபசாரமாக சொன்னபடி -முன்பு ஆத்மா இருப்பதைக் காட்டாமல் -கர்ப்பத்துக்கு முக்கியம் கொடுத்து இந்த சப்தம் –
அது தானும் குலைந்து அதி சூஷ்மமாய் தமஸ்ச பத வாச்யமாய்
அது தானும் நாம ரூப விபாகம் அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பவித்து நிற்கையாலே
அவிபக்த தமஸ் -என்றும் –ஒன்றாக நிற்கும்
சர்க காலம்–ஸ்ருஷ்ட்டி காலம் – வந்தவாறே பராதுரா சீத்தமோ நுத -என்கிறபடியே
அவனாலே ப்ரேரிதமாய்க் கொண்டு நாம ரூப விபாகம் யோக்யமாம்படி
அவன் பக்கல் நின்றும் விபக்தமாய்–
கார்ய உந்முகம் ஆகையாலே விபக்த தமஸ் என்றும்-
அநந்தரம்
தத் சங்கல்ப விசேஷததாலே
புருஷ சமஷ்டி கர்ப்பமான அசேதனம் என்று விவேகிக்கைக்கும்
அபத்தமாம்படியான தம அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான
அவஸ்தையைப் பிராபித்து நிற்கையாலே அஷரம் என்றும்
கர்ப்பம் தெரியா நிலையில் இருந்து தெரியும் படி என்றபடி -அதனால் அக்ஷரம் -ஆத்மாவை சொல்லும் சொல் கொண்டே பிரக்ருதியை சொல்கிறார் –
இங்கனே சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் -என்கை –
ஆகையால்
இது அவிபக்த தமஸ் ஆகையாவது
அவ்யக்த அஷர அவஸ்தைகளை குலைந்து தமஸ் சப்த வாச்யமாய்
நாம ரூப விபாக அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பாவித்து நிற்கை –
விபகததமஸ் ஆவது -நாம ரூப விபாகம் அர்ஹமாம்படி விபக்தமாய் கார்ய உந்முகமாகை –
அஷரம் ஆகையாவது -இது அசித் என்றும் இதன் உள்ளே புருஷ சமஷ்டி கிடக்கிறது என்றும்
விவேகிக்க ஒண்ணாத படி அதி சூஷ்மமாய் இருக்கிற
தமோ அவஸ்தை குலைந்து
புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான அவஸ்தையை பஜிக்கை-என்றது ஆயிற்று –
குண த்ரய வைஷமையச அனந்தர பூர்வவஸ்தா குண சாம்யம் குண சாம்ய லஷனம் அவயகதம் -என்றும்
அவயகதம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யா மவசதாயாம குண சாம்யம் அபயச்புடம் ததவசதம
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சபதே நோ சயதே
தனு சேதன மாதரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதி தவயோகாத
அதசசாவம் ததவஜாதம சித்சிதாத்மகம் மந்தவ்யம் ப்ரதா நாதி விசேஷ நதம
சேதன அசேதன நாத்மகம் இதி பிரசார வசனாத் அதர து சீதா காப்பே வஸ்து நய ஷர சப்த உபசரித பரயோகே நயதா சித்தே
சக்தய நதரகல்ப நாயோகாத அஷரம் தமசி லீயதே இதி –
சிதகா அபத்வம் அசிதவமபி யத்ர விவேகதுமசகயம் தத்வசதாதா அதி சூஷ்ம பிரதானம் தமஸ் சபதே நாபிலயம
அஷராதயவசதா ப்ராப்த யௌவன முக்கய விசிஷ்டம் ததேவ விபகதம தம ததௌதமுக்க்ய ரஹிதம் அபிபகதம
தம பரமா தம சரீர தயாபி சிந்தையது மசகயம சலிலவிலீ நல்வண சந்த்ரகாந்தஸ் தசலில சூர்யகாந்தஸ் தவஹா நிகல்பம்
சர்வஞ பரமாத்மைக வேத்ய மவதிஷ்டதே பூதல விநிஹித
பீஜ சதா நீயா மவிபகதம தம மருத நிச சருத பீஜ வாத விபகதம
சலில சம ஸ்ருஷ்டாத்ரா சத்தில அவயவ பீஜ துல்யம் அஷரம் உச சூன பீஜ சமா நமவ
யக்தம அங்குர சதா நீயா மகான இதி விவேக -என்று
ஸூ பால உபநிஷத் வ்யாக்யானத்திலே சுருதி பிரகாசர்
இதனுடைய அவஸ்தா விசேஷங்களை ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்
பூமிக்குள்ளே -பீஜம் அவிபக்தம் / கிளம்பிய விதை போலே விபக்தம் -நீர் உடன் கலந்து பருத்து அக்ஷரம் –
பருத்து வெடித்து அவ்யக்தம் -முளை விட்ட நிலை மஹான் என்றபடி -குண வைஷம்யம் இப்பொழுது தான் தெரியும் –
குண த்ரய வைஷமையச அனந்தர பூர்வவஸ்தா குண சாம்யம்-
அடுத்து முன்னாக -அனந்த பூர்வ -உடனுக்கு உடன் முன்னால் என்றபடி –
குண சாம்ய லக்ஷணம் அவ்யக்தம் -என்றும்
அவ்யக்தம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யா மவசதாயாம குண சாம்யம் அபயச்புடம் ததவசதம
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சபதே நோ சயதே–உச்யதே சொல்லப்படுகிறது -அக்ஷர சப்தேன சப்தத்தால் –
ஜீவாத்மாவை சொல்கிறதோ என்னில்-
தனு சேதன மாதரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதி தவயோகாத–
ஜீவன் இடம் அவ்யக்தம் வரவில்லையே /விபக்தம் மாறி ஜீவன் ஆக வில்லையே -இரண்டும் இல்லையே -பாட்டி தாய் பெண் -போலே
அதசசாவம் ததவஜாதம சித்சிதாத்மகம் மந்தவ்யம் -எல்லாம் சித்த அசித் ஆத்மகம் -ஈஸ்வரனும் உண்டு ஒவ் ஒன்றுக்குள்ளும் –
ப்ரதா நாதி விசேஷ நதம–பூத வஸ்துக்கள் –சேதன அசேதன நாத்மகம் இதி பரசார வசனாத்–ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லி உள்ளார் –
அதர து சீதா காப்பே வஸ்து நய ஷர சப்த உபசரித பரயோகே நயதா சித்தே–அக்ஷர சப்தம் உபசாரமாக சொன்னது என்றபடி
சக்தய நதரகல்ப நாயோகாத -வேறே சக்தி கல்பிக்க கூடாதே –
அஷரம் தமசி லீயதே இதி –
சிதகா அபத்வம் அசிதவமபி யத்ர விவேகதுமசகயம் தத்வசதாதா அதி சூஷ்ம பிரதானம் தமஸ்–அவிவிபக்த தமஸ் – சபதே நாபிலயம
அஷராதயவசதா ப்ராப்த யௌவன முக்கய விசிஷ்டம் ததேவ விபகதம தம–ததௌதமுக்க்ய ரஹிதம் அபிபகதம
தம –அக்ஷரம் ஆக இசைந்த நிலை விபக்த தமஸ்
பரமா தம சரீர தயாபி சிந்தையது மசகயம-பரமாத்மா சரீரம் என்று நினைக்க கூட முடியாதே த்ருஷ்டாந்தங்கள் மேலே
சலிலவிலீ நல்வண சந்த்ரகாந்தஸ் தசலில சூர்யகாந்தஸ் தவஹா நிகல்பம்-நீரில் உப்பு –சந்த்ர காந்த கல்லில் நீர் – -சூர்யா காந்த கல்லில் அக்னி போலே -இருக்கும்
சர்வஞ பரமாத்மைக வேத்ய மவதிஷ்டதே–அவன் மட்டுமே அறிவான்
பூதல விநிஹித-பீஜ சதா நீயா மவிபகதம தம மருத நிச சருத பீஜ வாத விபகதம-பூமிக்குள் விதை -மண்ணில் இருந்து பிரித்து அறியும் நிலை அடுத்து
சலில சம ஸ்ருஷ்டாத்ரா சத்தில அவயவ பீஜ துல்யம் அஷரம் –நீரில் ஊரி வெடிக்க தயார் அக்ஷரம்
உச சூன பீஜ சமா நமவ யக்தம அங்குர சதா நீயா மகான இதி விவேக –
இத்தால்
அஷரமும் தமஸ் ஸூ ம்
குஸூமதத்தின் யுடைய முகுள கோரக அவஸ்தைகள் போலே-மொட்டித்த தன்மை அக்ஷரம்-
இதனுடைய சங்கோச தசை யாகையாலே மகாதாதிகளைப் போலே தத்வ அனந்தரம் அன்று என்னும் இடம் சித்தம்-
———————————————————————
சூர்ணிகை -90-
இனி இந்த பிரக்ருதியில் நின்றும் மஹதாதி விகாரங்கள்
ஜநிக்கைக்கு மூலம் இன்னது -என்கிறார் –
இதில் நின்றும்
குண வைஷம்யத்தாலே
மஹதாதி விசேஷங்கள்
பிறக்கும் –
குணங்களுக்கு வைஷம்யம் ஆவது -பரஸ்பர உத்தரேகம்-ஒன்றுக்கு ஓன்று உயர்வது
—————————
சூர்ணிகை -91-
அப்படி இருக்கிற குணங்கள் தான் எவை என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
குணங்கள் ஆகிறன
சத்வ
ரஜஸ்
தமஸ் ஸூ க்கள் –
———————————
சூர்ணிகை -92-
இவை தான் இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –
இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபன்திகளான
ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில்
அனுத பூதங்களாய்
விகார தசையில்
உத் பூதங்களாய்
இருக்கும் –
இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபன்திகளான ஸ்வ பாவங்களாய–அனுபந்தி -கூடவே இருக்கும் –
சத்வம் ரஜஸ் தமஸ் இதி குண பிரகிருதி சம்பவா –ஸ்ரீ கீதை -3–27–என்றும்
பிரக்ருதே க்ரிய மாணிநி குணை கர்மாணி சர்வச —என்றும்
சத்வம் ரஜஸ் தமஸ் இதி பிரக்ருதோ குணா -என்றும்
சொல்லக் கடவது இ றே-
சரீரம் எடுத்துக் கொண்டதால் இவை செயல்களை தூண்ட நான் செய்கிறேன் என்று உணர வேண்டும் –
ஸ்வ பாவ அனுபந்திகள் -என்றது ஆகந்துகங்கள் அன்றிக்கே
சத்தா பிரயுக்தங்கள் ஆகையாலே
இவற்றை ஒழிந்து ஓர் அவஸ்தையும் இல்லை -என்கை-
இவற்றை ஸ்வ பாவங்கள் என்றும்
பிரக்ருதிக்கு ஸ்வ ரூப அனுப பந்திகள் என்றும் சொல்லுகையாலே
மூல பிரக்ருதிர் நாம ஸூக துக்காமோகா தமகா நி லாகவ பிரகாச சலனோ பஷ்ட ம்பன கௌரவா வரண
கார்யாண்யா தயா நதா தீ நதரியாணி–இந்த்ரியங்களால் உணர முடியாமல் –
கார்யைக நிரூபண-விவேகாநி-கார்யம் கொண்டே அறியும்படி
அனயூனா நதிரே காணி சமுதா முபே தானி சதவரஜச தமா மாசி த்ரவ்யாணி -என்று
இவற்றைத் த்ரவ்யங்களாயும்
இவை தான் பிரகிருதி ஸ்வ ரூபமாகவும் கொள்ளுகிற சாங்க்ய மதம் நிரசமாயிற்று-
இவை பிரக்ருதிக்கு ஸ்வ பாவம் -இவை குணம் அத்ரவ்யம் -பிரகிருதி த்ரவ்யம் -கபிலர் தப்பாக ஸ்வரூபம் என்பர் –
வந்து போகும் ஸ்வபாவம் இல்லை -இருந்தே -ஸ்வரூப அனுபந்தி -என்றோம் –
இந்த மத நிராகரண அர்த்த மாக வி றே ஆளவந்தார் -குணா பிரதானம் -என்று பிரித்து அருளிச் செய்தது-ஸ்தோத்ர ரத்னத்தில்-குணங்களும் பிரக்ருதியும் என்று அருளிச் செய்ததால் –
பிரக்ருத அவஸ்தையில் அனுத பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
அதாவது
சாம்யா பன்னங்களாய் இருக்கையாலே பிரகிருதி அவஸ்தையில் இவற்றின் யுடைய ஸ்வரூப விபாகம் தோற்றாது –
வைஷமயா பத்தியாலே விக்ருத அவஸ்தையில் இவற்றினுடைய ஸ்வரூப விபாகம் தோற்றி இருக்கும் என்கை –
ஸ்தவரஜ சதமாமசி தரயோ குணா பிரக்ருதேச ஸ்வ ரூபா அனுப பந்தி நச ஸ்வ பாவ விசேஷா பிரகாசாதி
கார்யைக நிருபணீயா பிரக்ருத அவஸ்தாயம் அனுத பூதாஸ
தத் விகாரேஷூ மஹதாதி சூத பூதா -என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –ஸ்ரீ கீதா பாஷ்யம் -14–5- ஸ்லோகம்
ஸ்வரூபத்தை பற்றி இருப்பதை ஸ்வரூபமே என்பர் சாங்க்யர் -வந்தேறி இல்லை கூடவே இருப்பதால் ஸ்வரூபம் என்று மயங்கி –எப்போதும் இருப்பதால் –
அதனால் தான் நாம் இரண்டும் சொல்லி இதை நிரூபிக்கிறோம் –
மண்டோதரி சாக்ஸ் ஸ்லோகி -வ்யக்தமேஷா மஹா யோகி -உன் இந்திரியங்கள் வசத்தில் வைக்காமல் போனாய் –
தமஸ பரமோ தாதா -ஸ்ரீ வத்ச வஷா நித்ய ஸ்ரீ -இரண்டு அடையாளங்கள் -திரு மறு மார்பன் -மாசு மறு அற்ற -குற்றமோ சங்கை வருமே –
நித்ய ஸ்ரீ குறை இல்லை என்று காட்ட –இதை மட்டும் சொல்ல்லக் கூடாதே –
யவனிகா மாயா ஜெகன் மோஹினி அந்தப்புரத்துக்கு திரை போட வேண்டுமே -அதனால் இரண்டும் வேண்டும்
உத்பூதா விளக்கம் -வைஷம்யம் வரும் மஹான் வந்ததும் -பிரகிருதி அநுபூதா விளக்கமாக தெரியாது என்றபடி –
————————————————————–
சூர்ணிகை -93-
விகார தசையில் இவை தான் கார்யைக நிரூபணீயங்கள் ஆகையாலே
கார்யகதன முகத்தாலே இவற்றினுடைய ச்வரூபங்களைத் தர்சிப்பிக்கிறார் –
கார்யம் வைத்தே கண்டு பிடிக்க -என்றீரே அத்தை சொல்லும் என்று கேட்க பதில்
சத்வம்
ஜ்ஞான
ஸூகங்களையும்
உபய சங்கத்தையும்
பிறப்பிக்கும் –
அதாவது
சத்வகுணம் நிர்மலம் ஆகையாலே–
ஜ்ஞான ஸூ காவரணம் இன்றிக்கே–திரை உறை போட்டு மூடாமல்
அவற்றுக்கு ஜநகமுமாய்- அவற்றினுடைய பேற்றுக்கு ப்ரவர்த்திக்கும் படி–ஈடுபடும்படி
அவை இரண்டிலும் சங்கத்தை யுண்டாக்கும் -என்கை
உபய சங்கம் -ஞானம் ஸூ கம் இரண்டுக்கும்-பற்றுதலை ஏற்படுத்தும் -என்றபடி –
தத்ர சத்வம் நிமலத்வாத் பிரகாசகம நாமயம ஸூ க சங்கேன பத்நாதி ஜ்ஞான சங்கேன சாநக -14–6-/7-/8-ஸ்லோகங்கள் என்னக் கடவது இ றே –
சத்வம் சம்சாரத்தில் கட்டுப்படுத்தும் -தங்க சங்கிலி போலே
-சரீரம் தொலைந்து தான் முக்குணங்களையும் தாண்ட முடியும் –
கஷ்டங்களுக்கு நடுவில் ஸூ கம் காட்டி -அகற்ற நீ வைத்த வல் வினை -பாலைவனத்தில் சோலை என்று உணராமல் –
——————————————————–
சூர்ணிகை -94-
ரஜஸ் ஸூ
ராக த்ருஷணா
சங்கங்களையும்
கர்ம சங்கத்தையும்
பிறப்பிக்கும் –
அதாவது
ரஜோ ராகா தமகம வித்தி தருஷ்ணா சங்க சமுதபவம ததனிபத நாதி
கௌ நதேய காம சங்கேந தேஹி நாம் -என்னக் கடவது இ றே
1–ராகமாவது யோஷித புருஷர்களுக்கு அந்யோந்யம் யுண்டான ஸ்பருஹை
2–த்ருஷணை யாவது சப்தாதி சர்வ விஷய ச்ப்ருஹை
3–சங்கமாவது -புத்திர மித்ராதிகள் அளவில் சம்ச்லேஷ ச்ப்ருஹை
4–கர்ம சங்கம் ஆவது -கிரியைகளில் ச்ப்ருஹை-
விருப்பம் ஆசை பற்று -ராகம் திருஷ்ணை சங்கம் -கர்மா சங்கத்தையும் பிறப்பிக்கும் –
———————————————–
சூர்ணிகை -95-
தமஸ் ஸூ
1–விபரீத ஜ்ஞானத்தையும்
2–அநவதா நத்தையும்
3–ஆல ஸ்யத்யையும்
4–நித்ரையும்
பிறப்பிக்கும் –
அதாவது
தமஸ் அந்யதா ஜ்ஞனாஜம் வித்தி மோஹனம் சர்வ தேஹி நாம்
பரமதாலச்ய நித்ராபிச தந்நிபத நாதி பாரத -14–8–என்னக் கடவது இ றே
மயக்கப்பண்ணும் -அந்யதா ஞானத்துக்கு ஹேது -கவனக்குறைவு சோம்பல் நித்திரை உண்டு பண்ணும்
விபரீத ஞானம் ஆவது -வஸ்து யாதாம்ய விபரீத விஷயமான ஜ்ஞானம்
அநவதாநமாவது -செய்யுமது ஒன்றில் குறிக்கோள் இல்லாமை
ஆலஸ்யமாவது -ஒரு கார்யத்திலும் ஆரம்பம் அற்று இருக்கும் சோம்பல் -சொப்பம்
நித்ரையாவது -புருஷனுக்கு இந்திரிய பிரவர்ததன ஸ்ராந்தி அடியாக வருகிற சர்வ இந்த்ரிய பிரவர்தத நோபரதி–உபரதி ஒய்வு -என்றவாறு –
—————————————————
சூர்ணிகை -96-
இனி இக் குணங்களை உடைய சம தசையிலும்
விஷம தசையிலும்
பிரக்ருதியினுடைய விகாரங்கள் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
இவை சமங்களான போது
விகாரங்கள் சமங்களுமாய்
அஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும்
விஷமங்கள் ஆனபோது
விகாரங்கள் விஷமங்க ளுமாய்
ஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும் –
நாம ரூப விகாரங்கள் ஸ்பஷ்டம் அஸ்பஷ்டம்
அதாவது
இக் குணங்கள் பரஸ்பர உத்ரேகமாதல்
க்ருச்தன உத்ரேகம் ஆதல் இன்றிக்கே சாம்யா பன்னங்களாய் இருந்த போது
பிரக்ருதியினுடைய விகாரங்கள்
நாம ரூப விசேஷ ராஹித்யத்தாலே -தன்னில் -சமங்க ளுமாய்
பிரமாணங்களால் தர்சிக்கப் போகாத படி ஸ்பஷ்டங்களும் அன்றிக்கே இருக்கும்
இக் குணங்கள் உத்ரேகித்து விஷமங்கள் -வேறுபட்ட –ஆனபோது பிரக்ருதியினுடைய
விகாரங்களும் நாம ரூப விசேஷ சாஹித்யத்தாலே
தன்னில் விஷமங்களுமாய்
பிரமாணங்களால் தர்சிகலாம் படி ஸ்பஷ்டங்களாய் இருக்கும் என்கை-
பிரதேச பேதத்தாலும்
கால பேதத்தாலும் -என்று கீழ்ச் சொன்னதுக்கும் இந்த குண சாம்ய வைஷமயங்கள் இறே ஹேது
அது இங்கே விசதமாயிற்று -இந்த பிரகரணம் இத்துடன் நிறைவு பெற்றது என்றபடி –
—————————————————-
சூர்ணிகை -97-
இந்த குண வைஷம்ய பிரயுக்தமான விஷம விகாரங்களில் பிரதம விகாரம் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
விஷம விகாரங்களில்
பிரதம விகாரம்
மகான் –
அதாவது
குண சாமயாத தத் சத் சமாத ஷேத்ரஞ்ஞாதி ஷடிதானமுனே
குணவயஞ் ஜன சம் பூதி சாககாலே தவிஜோததம–ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்னக் கடவது இ றே
மைத்ரேயர் இடம் -சொன்னது –
அதாவது –
குண சாம்யத்தை யுடைத்தாய்
ஷேத்ரஞ்ஞனான பக்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யவகத்தில் நின்றும்
வ்யக்த குணே நமேஷ ஹேதுவாகையாலே- குணா வயஞ்ஞனம் என்று பேரான
மகத் தத்வம் உபாதானம் -என்றபடி —
——————————————
சூர்ணிகை -98-
இதனுடைய ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் -புத்தி தத்துவமே மஹான்
இது சாத்விகம்
ராஜசம்
தாமசம்
என்று த்ரிவிதமாய்
அத்யவசாய ஜனகமாய்
இருக்கும் –
அதாவது இந்த மஹத் தத்வம்
சாத்விகோ ராஜச சைவ தாமசச்ச த்ரிதா மகான் -என்று பிரகாச பிரவ்ருத்தி மோகன உன்மயமானசத்வ ரஜஸ் தமோ
ரூப குண அன்வயத்தாலே
சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரிவிதமாய்
பிரகாசம் -பிரவிருத்தி மோகம் மூன்றும் சத்வ ரஜஸ் தமஸ் -கார்யங்கள் –
மகான் வை புத்தி லஷண -என்று புத்தி லஷணம் ஆகையாலே அத்யாவசாய ஜனகமாய் இருக்கும் -என்கை-
அதில் சாத்விக புத்தி யாவது-18–30-
பிரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யா பயாபயே பந்தம் மோஷம் ச யா வேத்தி புத்திஸ
என்று பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் அடையவும்
கார்யாகார்யங்களினுடையவும்
பயாபயங்களினுடையவும்
பந்த மோஷங்களினுடையவும்
யதாவதவ்யவசாயம் என்றும் -யது யது சரியோ அதில் அதில் நம்பிக்கை என்றபடி –
ராஜச புத்தி யாவது -யயா தர்ம மதர்மம ச கார்யம் ச கார்யமேவச அயதாவத பரஜா நா
தி புத்தி ச ச பார்த்த ராஜசீ-18–31- -என்று
தர்ம அதர்மங்களையும்
கார்யாகார்யங்களையும்
அயதாவாக அறுதி யிடுகை என்றும்
தாமச புத்தியாவது அதர்மம் தர்மம் இதி யா மனயேன தமசாவ்ருதா
சர்வார்த்தான விபரீதாம்ச ச புத்திஸ சா பார்த்த தாமசீ -18–32–என்று
அதர்மத்தை தர்மமாகவும்
தர்மத்தை அதர்மமாகவும்
இப்படி சர்வார்த்தங்களையும் விபரீதமாகவும் நிச்சயிக்கை என்றும்
பகவான் தானே கீதோபநிஷத்திலே அருளிச் செய்தான் இ றே –
ஆக பிரக்ருதியினுடைய விஷம விகாரங்களில் பிரதம விகாரம் இன்னது என்றும்
அதினுடைய ஸ்வரூபம் இருக்கும் படியையும்
அதனுடைய க்ருத்யமும்
சொல்லிற்று ஆயிற்று –
————————————————
சூர்ணிகை -99-
இனி மற்று யுண்டான விகாரங்களும் க்ரமத்திலே சொல்லப் படுகிறது –
இதில் நின்றும்
வைகார்யம்–சாத்விக அஹங்காரம்
தைஜசம்–ராஜஸ அஹங்காரம்
பூதாதி என்று–தாமச அஹங்காரம்
த்ரிவிதமான அஹங்காரம்
பிறக்கும் –
அதாவது
இந்த மஹானில் நின்றும்
வைகாரிக சதைஜ சசச பூதாதி ச சைவ தாமச த்ரிவிதயோம் அஹங்காரோ மஹத தத்வாத ஜாயதே -என்கிறபடியே
சாத்விக ராஜச தாமச ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும் தைஜசம் என்றும் பூதாதி என்றும்
த்ரிவிதமான அஹங்காரமும் பிறக்கும் -என்கை
இத்தால் த்ரிகுணாதமிகையன மூல பிரக்ருதியில் நின்றும்
பிறந்ததாகையாலே மகானும் திரி குணமாய் இருக்கும் -என்கை -உப்புக்காளவாயில் போட்ட மரக்கட்டையும் ஊறி அதுவேயாகும்
———————————————–
சூர்ணிகை -100-
அஹங்காரம்
அபிமான
ஹேதுவாய்
இருக்கும் –
அதாவது தேஹாத்மா அபிமாநாதிகளை ஜனிப்பிக்கை
இத்தால் இதனுடைய க்ருத்யம் சொல்லப்பட்டது –
தேஹாத்ம அபிமானம் ஜெநிப்பிக்கும் என்றது -அநஹமான தத்துவத்தை அஹம் புத்தி பண்ண வைக்கும் -என்றபடி
——————————————————-
பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் -இல்லாதது வரவில்லை -பரிணாமம் அடையும் -ஸத்கார்ய வாதம் தானே என்றபடி –
பஹஸ்யாம் -சங்கல்பம் கொண்டே ஸ்ருஷ்ட்டி –பிரஜாயேயா -ஆகக் கடவேன் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி -சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -/
பஞ்சீ கரணம் -அண்டம் -சேதனஷமஷடியில் இருந்து -கர்மா அனுகுணமாக நான் முகன் மூலம் சத்வாரமாக வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி –/
தத் தேஜஸ் ஐஷத -பார்த்தது சங்கல்பித்தது –தா ஆப ஐஷத -இவற்றுக்கு ஞானம் இல்லையே -இவை எல்லாம் அசித் தத்வம் -சங்கல்பிக்க முடியாதே –
பொருந்த விட வேண்டுமே -ப்ரஹ்மத்தில் இருந்தீயெல்லாம் பிறந்தது -நாராயணா ப்ரஹ்மா ஜாயதே ருத்ரன் ஜாயதே –
நான்முகனை நாராயணன் படைத்தான் –நான் முகனும் -தான் முகனாய் சங்கரனை படைத்தான்
அந்தராத்மாவாக இருந்தே ஸ்ருஷ்ட்டி -/ சமஷடிக்கும் வியாஷிடிக்கும் வாசி உண்டே அத்வாரகம் சத்வாரகம் வாசி காட்ட திருமழிசை ஆழ்வார் -பாசுரம் -/
தேஜஸ் சங்கல்பித்தது -வாக்கியம் -இங்கும் -ப்ரஹ்மத்தின் இருந்து தான் ப்ரஹ்மம் உருவாகும் -காரண ப்ரஹ்மம் கார்ய ப்ரஹ்மம் உருவாகும் –
ஸூ ஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மமாக பரிணமிக்கும் -உருவாகும் –
உத்பத்தி விகாரம் இல்லாத ப்ரஹ்மம் -ஸ்வரூபம் இல்லை -சரீரம் தான் -சதைக ரூப -ரூபாய -ஸ்வரூபமும் ரூபமும் விகாரமோ பரிணாமமோ ஆக முடியாதே –
வியாபித்து ரூபத்தால் இல்லை -ஸ்வரூபமே வியாபிக்கும் -ஸ்வரூபமே விபு -எங்கும் பரந்து நீக்கமற இருக்குமே-
பிரகிருதி முடிவில் பெரும் பாழ் திருமேனியில் ஏக தேசம் தான் -அவிபக்த தாமஸின் ஏக தேசமே மாறி அடுத்த அவஸ்தை –
மஹானை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் -சங்கல்பித்து -அடுத்த நிலை -தேஜஸை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் சங்கல்பிக்கும் -என்றவாறு –
ஆகாசாத் வாயு -நேராக இல்லை -நடுவில் தன்மாத்திரை உண்டே -தனக்கு உள்ள பூதமாக மலரும் -ஒரு பக்ஷம்
தன்மாத்ரையில் இருந்தே தன்மாத்திரை உருவாகும் வேறே ஒரு பக்ஷம்
சப்தம் -ஸ்பர்சம் ரூபம்
இதுவும் த்ரவ்யம் தானே -பஞ்ச பூதங்களின் குணங்களே இவை -இரண்டு பக்ஷங்களிலும் குறை இல்லை
இரண்டு காரண தன்மையுடன் மூன்றாவது -சப்தம் -ஸ்பர்சம் -இரண்டு குணங்களும் சேர்ந்து ரூபம் -ரசம் மூன்றையும் -கந்தம் நான்கையும் ஆவரணம் போலே சேர்ந்தே போகும்
காரண வாஸ்துவில் காரியங்களின் குணங்கள் இருக்க வேண்டுமே அம்பன்ன கண்ணாள் யசோதை -கண்ணன் திருக்கண்களை பார்த்து அவள் இடம் இருக்க வேண்டும்
வேழ போதகமே தாலேலோ -இப்பொழுது யானையாக இருக்க அப்பொழுது யானைக்குட்டி என்னலாம்–
பிருத்வியில் ஐந்து தன்மைகளும் தெரியும் -பூநிலாய ஐந்துமாய்-
ஆகாசாத் வாயு -வாயுவுக்கு இரண்டு தன்மாத்திரைகள் உடன் சம்பந்தம் உண்டே -சப்த ஸ்பர்ச தன்மாத்திரைகள் உடன் –ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
ஆகாசம் அஹங்காரத்தால் வியாபாரிக்கும்– முன்னும் பின்னும் தொடர்பு இருக்கும் –
இந்த மூன்றையும் உணர வேண்டும் –
பஞ்சாக்கினி வித்யை -அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வேண்டுமே ஜீவாத்மா கர்ம அனுகுணமாக சரீரத்தில் புகுந்து கர்மம் கழிக்க
எல்லா திசையிலும் அந்தராத்மாவாக ஈஸ்வரன் அவகாசம் பார்த்து அன்றோ இருப்பான் –
சூர்ணிகை -101-
இதில் வைகாரிகத்தில் நின்றும்
ச்ரோத்ர
த்வக்
சஷூர்
ஜிஹ்வா
க்ராணங்கள்-
என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக்
பாணி
பாத
பாயு
உபச்தங்கள்
என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஸூம் ஆகிற-11-இந்திரியங்கள் பிறக்கும் –
அதாவது -இப்படி த்ரிவிதமான அஹங்காரத்தில் வைகாரிகமாவது சாத்விக அஹங்காரம் ஆகையாலே
இதில் நின்றும் சாத்விக கார்யமான லகுத்வ பிரகாசத்வங்களை யுடைத்தான இந்திரியங்கள்
பதினொன்றும் பிறக்கும் என்கை –
வைகாரிகத்தில் நின்றும் ஏகாதச இந்த்ரியங்களும் பிறக்கும் என்று சொல்லி விடாதே
இப்படி –பிரித்து – அருளிச் செய்தது
இவற்றினுடைய கார்ய பேதத்தையும் சம்ஞ்ஞா பேதத்தையும் ஒழிய–
ஆழ்வார் இந்திரியங்கள் தங்கள் கார்யம் தவிர மற்ற ஒன்றின் செயலையும் விரும்பும் கேட்க்கும் –
பாம்பணையான் -கடச்செவி-அன்றோ -பாம்பு ஏறி உறை பரனே என்று விழித்து –
இவற்றின் யுடைய ஸ்வரூப பேதமும் வ்யவஹார பேதமும்
தோற்றாது என்று–
சப்தம் ஆகாசம் -ஸ்பர்சம் வாயு ரூபம் அக்னி ரசம் அப்பு கந்தம் பிருத்வி -பெட்ரா தாய் வேறே ஒவ் ஒன்றுக்கும்
மனஸ் ஸூ க்கு கார்யம் உபய ஞான கர்ம இந்திரியங்களுக்கு -சஹ காரித்வம்
அது தான் இவ்விடத்தில் சொல்லாது ஒழிந்தது மேலே இவை தன்னை விஸ்தரேண்
சொல்லுகிற இடத்தில் சொல்லுகிறோம் என்று –
இந்த்ரியங்கள் சாத்விக அஹங்கார கார்யம் என்று அருளிச் செய்கையாலே
இவற்றை ராஜச அஹங்கார கார்யம் என்கிற பஷம் பிரதிஷிப்தம்—
தைஜசா நீந்த்ரியாண் யாஹூர் தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் சாத்ர தேவா வைகாரி காச ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் 1–2–என்றும்
தைஜஸம் ராஜஸ அகங்கார கார்யம் என்பர் சிலர் -தேவதைகள் கண் சூர்யன் ரசம் வருணன் -அதிஷ்டானம் —
அக்னிர் வாக் பூத்வா முகம் பிராவிசத் வாயு கரோனோ பூதவா நாசிகா பராவிசத ஆதிதயச
சஷூர் பூத்வா அஷிணீ பராவிசத திசச சரோத் தர்ம பூத்வா கானௌவ் பராவிசத ஔஷதி
வனசபதயோ லோ மானி பூதவா தவசம பராவிசன சந்தரமா மனோ பூதவா ஹ்ருதயம் பராவிசத
ம்ருதயுற பானோ பூதவா நாபிம பராவிசத ஆபோரேதோ பூதவா சிசநம பராவிசத -என்கிறபடியே
தேவாதி ஷடிதங்களாலே தேவ சப்த வாச்யங்களான இந்த்ரியங்கள் பதினொன்றும்
ராஜச அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர்
சாத்விக அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர் என்று சொல்லி
அதில் சாத்விக அஹங்கார கார்யம் என்கிறதே ஸ்ரீ பராசர பகவான் நிச்சயிக்கையாலே
இவருக்கு இப்படி அருளிச் செய்யக் குறை இல்லை-
அக்னி தேவதை வாக்காகாக – வாயு -மூக்கு / ஆதித்யன் கண் / திக்குக்கள் ஸ்ரோத்ரம் / கொடிகள் வனஸ்பதி முடிகளாக ஆகி தோலை / சந்திரன் மனஸ் ஹிருதயம் அடைந்து /
மிருத்யு அபான வாயு நாபி /இத்யாதி
இந்த்ரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வியஷ்டி விஷயம் அன்று -சமஷ்டி விஷயம்
உடம்புக்குள் நிறைய இந்திரியங்கள் -சமஷடியில் -11-தான் -கர்ப்ப காலத்தில் உருவாக்கி -உபாதானம் -11-தான் -இந்திரியம் சூஷ்மம் /
கண் இந்திரியம் ஓன்று தானே இரண்டு உண்டே / உடம்பு முகிழுவதும் தோல் -உண்டே –எண்ணிறந்த இந்திரியங்கள் வேண்டுமே –
தேஷா ந்த தவவயவான சூஷ்மான ஷனனாமபயாமி தௌஜசாம சந்நிவேசயா தம்மமா தராஸூண் சர்வ பூதாமி நிர்மமே-என்று
அணுக்கள் ஆகையாலே சூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்மா மாத்ரைகளிலே
பிரவேசிப்பித்து
சர்வ பூதங்களையும் ஈஸ்வரன் சிருஷ்டித்தான் என்று மனு வசனம் யுண்டாகையாலே
இதில் சூஷ்ம -என்கையாலே அணவசசச -என்கிற சூத்திர மரியாதையாலே-இந்திரியங்கள் அணுக்களாகவும் உள்ளன -2-அத்யாய சூர்ணிகை –
இந்த்ரியங்கள் அணு வென்றும்
அவயவான -என்கையாலே இந்திரியங்கள் தோறும் வ்பக்தி — பாஹூள்யம் யுண்டு என்றும்
ஆத்மா மாத்ரையில் கூட்டினான் என்கையாலே அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத சம்சாரம் அனுவர்த்திக்கும் என்றும்
சரீரம் யதவாப்நோதி யச்சாபயுத கரமாதீசவர கருஹீத வைதானி சமயாதி வாயு கந்தா நிவாசயாத -ஸ்ரீ கீதை -15-8–என்கிறபடி
இங்கு ஈஸ்வரன் -ஆத்மாவை குறிக்கும் -ஜீவன் -மணம் உள்ள பொருள்களில் இருந்து மணத்தை வாயு கிரஹிக்குமா போலே
இந்திரியங்களை -பூத சூஷ்மம் புஷபம் போலே -கிரஹித்து
மணம் மகரந்த தூள்களை கிரஹித்து கொண்டே வருமா போலே -பூத சூஷ்மத்தில் இந்திரியங்கள் அம்சம் உள்ளன –
வேறு தேகத்தை இவன் அடையும் பொழுது பூத சூஷ்மங்களை அனைத்து கொண்டே போகிறான் -அவை இவனை விட்டு தனித்து இல்லை –
சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போது
இந்த்ரியங்களை க்ரஹித்துக் கொண்டு போம் என்று தோற்றுகிறது-
ஷானனாம் என்றும் மனஷஷஷடடாநி -என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை
இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே-கர்மங்கள் உடன் ஒட்டியே இவையும் யாவதாத்ம பாவி இருக்குமே
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply