தத்வ த்ரயம் -சித் பிரகரணம்-சூர்ணிகை –36-76— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

பராயத்தம் பகவத் ஆதீனம் பட்டு -ஜீவனுக்கு கர்தவ்யம் -சாஸ்திரம் வையர்த்தம் வாராமைக்கு –கர்த்தா சாஸ்திராத்வத்வாத்
பராத் து –அவன் அருளால் -தது ஸ்ருதே/சரீரம் சக்கரம் கர்மா யந்த்ரா ரூடேன மாயயா / வைஷம்யம் நிர்க்கருண்யம் வாராதோ
பிரயத்தனம் எதிர்பார்த்து -செய்கிறான் -/
மூன்று ஸூ த்ரங்களின் விவரணம் / உதாசீனர் மத்தியஸ்தர் முதலில் பிரதம பிரவ்ருத்தி -அடுத்து அனுமதி /பின்பு தூண்டி -பார்த்தோம் –

சூர்ணிகை -36-

அவதாரிகை –
இப்படி ஆத்மா ஞான ஆஸ்ரயமாக இருக்குமாகில்
யோ விஞ்ஞானே திஷ்ட்டன –
விஞ்ஞானமய
விஞ்ஞானம் யஜ்ஞமதனுதே
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தாதா –
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏத புத்தய
விஞ்ஞானம் பரமார்த்ததோ ஹி தவைதி நோய தயதாசின-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாஸ்த்ரங்களில் இவனை ஞானம் என்று
சொல்லுவான் என் என்கிற
ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார்
த்வத்தைம் என்று நினைப்பவர் -சரியாக உணரவில்லை –
ஞான
ஆச்ரயமாகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஞானவான் என்று
சொல்லுவான்
என் என்னில்

——————————————-

சூர்ணிகை -37

இப்படி சாஸ்திரங்கள் சொல்லுகைக்கு மூலம்
இன்னது
என்கிறார் –

ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிகையாலும்
ஜ்ஞானம்
சாரபூத குணமாய்
நிரூபக தர்மமாய்
இருக்கையாலும் -சொல்லிற்று
இரண்டு காரணங்களாலும் சொல்லிற்று / தர்ம பூத ஞானம் விலக்கினாலும் நான் என்று உணர்வதால் -/ தத் குண சாரத்வாத் -தத் விபதேச
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -அவள் இடம் காதலுக்கு ஆஸ்ரயம் இங்கு காதலாகவே -இதுவே நிறைந்து இருப்பதால் –

அதாவது
ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் பிரகாசகமாய் இருக்குமோபாதி
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும்
ஞானம் இவனுக்கு சாரபூத குணம் ஆகையாலே
ஸ்வரூப அனுபநதிதவேன
ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
சொல்லிற்று என்கை –
இது தான்
தத குண சார தவாதது ததவயபதேச பராஜ்ஞத்வ யாவதாத்மபாவித வசச ந தோஷச ததாத ச நாத -என்கிற
ஸூத்ரத்த்வத்தாலும் சொல்லப் பட்டது –
ஞான மாத்திர வ்யபேதேசஸ்து ஜ்ஞானசய
பிரதான குணத்வாத் ஸ்வரூப அனுப நதி தவேன
ஸ்வரூப நிரூபக குணதவாத ஆத்மா ச்வரூபச்ய ஞானவத
ஸ்வ பிரகாசத்வா வோபபதாயதே -என்று இறே
தீபத்திலும் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
ஆத்மாவுக்கு ஞானமே பிரதான குணம் -அனுபந்தி சம்பந்தி -நிழல் போலே தொடர்ந்து -ஸ்வரூபத்துக்கு ஞானம் விடாமல் –
ஸ்வயம் பிரகாசம் இரண்டும் -ப்ரத்யக் / பராக் தர்ம பூத ஞானம் -அதனால் ஞானம் என்றே சொல்லலாம் –

——————————————————-

சூர்ணிகை -38-

நியாமகமாகை
ஆவது
ஈஸ்வர புத்திய
அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
யுண்டாம்படி
இருக்கை —
எல்லா செயல்களும் திரு உள்ளபடியே /என்றால் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வது எதனால் -கொஞ்சம் ஸ்வா தந்திரம் கொடுத்து -ஞானத்தால் அவனுக்கு கடவன் என்று முடிவு எடுத்து செயல்படவேண்டும் -/

அதாவது
ஆத்மனி திஷ்ட்டட ந நாத மநோ ந்த ரோயமாதமா
ந வேத யச்யாத்மா சரீரம் அயம் ஆத்மானம் அநதரோ யமயதி
சத ஆத்மா நதாயாமயமா ருத –ஸூ பால உபநிஷத் -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அந்தராத்மாதயா நின்று நியமிக்கை-
ஈஸ்வரனுக்கு சர்வ காலீனம் ஆகையாலே
இவ்வாத்மா வஸ்து அவனுக்கு நியாமகை யாவது
சரீரத்தின் யுடைய சகல பிரவ்ருதிகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாமா போலே
சரீரபூதமான இவ்வாதம வஸ்துவினுடைய சகல வியாபாரங்களும்
சரீரியான பரமாத்வானுடைய புத்யா அதீநம் படி யுண்டாய் இருக்கை என்றபடி-
அந்தர்யாமி சரீரீ அமிர்தம் -எல்லா காலத்திலும் -என்று புரியாமல் அல்லல் படுகிறார்கள்

இப்படி
தச் சரீரதயா தத் அதீன சகல பிரவர்திகன் ஆனாலும்
அசேதனமான சரீரம் போலே
தானாக ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாத படி இருக்கை அன்றிக்கே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை
ஸ்வா பாவிக தர்மங்களாக யுடையவன் ஆகையாலே
ஜ்ஞான சிகிரிஷா பிரயத்ன பூர்வக பரவ்ருதி ஷமனாய் இருக்கையாலும்
சகல பிரவ்ருதிகளும் இவனுடைய பிரதம பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலும்
விதி நிஷேத சாஸ்திர வையர்தயம் இல்லை-

இவனுடைய பிரவ்ருத்தி மூலமாக ஈஸ்வரன் பண்ணும்
நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கும்
தத் அனுகுணமான
பல பிரதானத்துக்கும் விரோதம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது –

——————————————–

சூர்ணிகை -39-

தார்யம் ஆகையாவது
அவனுடைய
ஸ்வரூப
சங்கல்பங்களை
ஒழிந்த போது
தன சத்தை இல்லையாம்படி
இருக்கை –
தனித்து இருக்க முடியாதே -இன்றியமையாமை -தாரக கார்ய பாவம் முதலில் / சங்கல்பம் ஒழிந்த பொழுது செயல்பாடுகள் இல்லை

அதாவது
ஏஷ சேதோ விதாரண —பகவானே சேது -/இக்கரையில் இருந்து அக்கரை சேர்ப்பிப்பான் -இரண்டும் கலவாதபடி அணையாகவே இருப்பார் —
ஏதத் சர்வம் பரஜ்ஞ்ஞாதே பிரதிஷ்ட்டிதம்–காண்கின்ற ஸமஸ்த பிரபஞ்சமும் நன்கு நிலை பெற்று அவன் இடம் உள்ளது
ஏவ மேவ சாஸ்மி நனாதமநி சர்வாணி பூதானி சர்வ ஏவா தமானஸ் சமாபித–அவனாலே தரிக்கப்பட்டு ஸூ ரக்ஷகமாக உள்ளன
ஏதச்யவா அஷரச்ய பிரசாசதே கார்கி ஸூ ர்யா சந்திர மசௌ விதருதௌதிஷ்டத –சங்கல்ப சக்தியால் தங்கி -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் சகல சேதன அசேதனங்களையும் பற்றி நியமேன தாரகன் ஆகையாலே–நேரே -தானே தரிக்கிறான் -ஆத்மா மூலமாக சரீரத்தை தரிக்கிறான் என்பது இல்லை
நிர்வாணம் பேஷஜம் பிஷக் —ஊசி வைத்து மருந்து செலுத்துவது போலே —
பிரகிருதி மஹான் அஹங்காரம் -இத்யாதி –பஞ்சீ கரணம் முன்பு -ஆத்மாவை சரீரமாக கொள்ளாமல் வியாபிக்கிறார்
இவ்வாத்மவஸ்து தாரயமாகை யாவது
தனக்கு நியமேன தாரகமாய்க் கொண்டு
தன் சத்தா ஹேதுவாய் இருக்கிற
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்தையும்
இந்த ஸ்வரூபாசரீரத்வத்துக்கும் சதா அனுவர்த்திரூபையான ஸ்திதிக்கும்
ஹேதுவாய் இருந்துள்ள அவனுடைய நித்ய இச்சா கார்ய
சங்கல்பத்தையும் ஒழிந்த போது
தன் சத்தா ஹாநி பிறக்கும்படி இருக்கை
என்றபடி-
சத்தைக்கும் ஸ்திதிக்கும் ஸ்வரூபமும் சங்கல்பமும் ஹேது என்றபடி -/ இருப்புக்கு ஸ்வரூபம் காரணம் -பிரவ்ருத்திகள் சங்கல்ப அதீனம்/
சீதா பிராட்டி -தான் இருப்பதால் -இவள் சத்தை பெருமாள் அதீனம் –மாயா சிரஸ் கண்டு பயப்பட வேண்டாமே

இப்படி
தார்யா வஸ்துக்களை ஸ்வரூப சங்கல்பங்கள் இரண்டாலும் தரிக்கும் என்னும் இடமும்
அபியுக்தராலே–தேசிகராலே- விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது -எங்கனே என்னில்
ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவயவஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாய் இருக்கும்
காரணத்வம் தரிப்பது போலே ஆத்மாக்களை தரிக்கிறார்-அவரே ஸுலபன் -ஸுலப்யம் தரிக்கிறார் -என்பது போலே –
அவ்வவோ தரவ்யங்களை ஆசரித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வவோ த்ரவ்யத்வாரா ஆதாரமாய் இருக்கும்
துளசி கந்தம் -/ மல்லிகை பூ வியாபித்து அதன் மூலம் குணம் பரிமளம் தரிப்பார் /துர் நாற்றம் உள்ள பொருள்களும் உண்டே -பொருள் த்வாரேன தரிக்கிறார்
ஜீவர்களாலே தரிகாப் படும் சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று
சிலர் சொல்லுவார்கள்-அநாதாரம் தோற்ற அருளிச் செய்கிறார் -என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டு -நேரே தரிப்பர் சித்தாந்தம்
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -தோஷம் இல்லை -விலக்ஷணம் அவன்
ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாம் என்று சில ஆச்சார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஆச்ரயதைப் பற்ற
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே
இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள்-

சர்வ வஸ்துக்களின் யுடையவும் சத்தை சங்கல்ப அதீநம் ஆகையாவது
அநிதயங்கள் அநித இச்சையாலே உதபனநன்களாயும்
நிதயங்கள் நித்யா ஆச்ச்சாசிதங்களாயும்-இருக்கை
இவ்வர்த்தத்தை
இச்சாத ஏவ தவ விசவ பதார்த்தத சத்தா -என்கிற ஸ்லோகத்தாலே அபியுக்தர் -ஸ்ரீ கூரத் தாழ்வான விவேகித்தார்-
நித்யர்கள் நித்ய இச்சையால் தொடரும் -உத்பத்தி இல்லா விட்டாலும் அவன் அதீனம்
வைகுண்ட ஸ்தவம் 30-ஸ்லோகம் -இச்சையால் தான் -சில நித்யம் ப்ரீதியாக அபேக்ஷிக்க -நித்தியமாக உள்ளன -ஒருவருக்குக்கே பரதந்த்ரமாக -கல்யாண குணங்கள் நிதர்சனம் த்ருஷ்டாந்தம்

இத்தாலே
சர்வத்தினுடைய சத்தா அனுவர்த்தி ரூபையான ஸ்திதியும்
ஈஸ்வர இச்சாதீன படியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்பாசரிதம் என்று சொல்கிறது
குரு த்ரவ்யங்கள் சங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுமது
தயௌ ச சசனதராகக நஷத்ராகம திசோ பூர் மகோததி வாசூதேவச்ய வீர்யேண விக்ருதானி மகாத்மான
என்கிறபடியே -வீர்யம் =சங்கல்பம் என்றபடி –ஒரோ தேச விசேஷங்களில் விழாதபடி நிறுத்துகைப் பற்ற
இப்படி இச்சாதீன சததாச்திதி பிரவ்ருதிகளான வஸ்துகளுக்கு
பரமாத்மா ஸ்வரூபம் என் செய்கிறது -என்னில்
பரமாத்வானுடைய இச்சை இவ்வஸ்துக்களை பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும்
இப்படி சர்வ வஸ்துவையும் ஈஸ்வர ஸ்வரூப அதீனமாய்
ஈஸ்வர சசாதீனமுமாய்
லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூப ஆச்ரயமாய் சங்கல்ப ஆச்ரயமாய் இருக்கக் காணா நின்றோம்
இவன் இருந்த காலம் இருந்து
இவன் விட்ட போது ஒழிகையாலே
ஸ்வரூப ஆஸ்ரிதம்
இல்லாத போது என்பது இல்லையே ஆத்மா நித்யம் என்பதால் -அதனால் தான் இவன் விட்ட போது என்கிறார்
இவ்வாதம சங்கல்பம் இல்லாத
ஸூ ஷூ பதாயதய அவஸ்தைகளில் தெளிவது
ஜாகராதி தசைகளிலே சங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும் போது
சங்கல்பாஸ்ரிதம் என்னக் கடவது
என்று இப்படி ரகஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே-

———————————————–

சூர்ணிகை -40-

சேஷமாகை யாவது
சந்தன
குஸூம-புஷ்பம்
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு
இஷ்ட விநியோக
அர்ஹயமாய் இருக்கை-
இறுதி அடையாளம் இது -அடியேன் உள்ளான் -சேஷத்வம் முதல் -நாயக லக்ஷணம் இதுவே –

அதாவது –
சந்தன குஸூமாதி பதார்த்தங்கள் -தனக்கு என இருப்பதோர் ஆகாரம் இன்றிக்கே
பூசுமவனுக்கும்
சூடுமவனுக்கும்
உறுப்பாக
விநியோகம் கொள்ளுமவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு
தான் உகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்குமா போலே –
செண்டு சிலுப்பி காதில் கதிப்பிட்டு -எதுக்கு இது என் –பரகால நாயகிக்கு —
சேதன வஸ்துவாய் இருக்க
ஸ்வபிரயோஜன கந்தம் இன்றிக்கே
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ வைலஷண்யம் எல்லாவற்றாலும்
சேஷிக்கு அதிசயகரமாய்
விநியோக தசையில் அவனுக்கு தானும் விநியோகம் கொண்டு
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே
தான் உகந்தவர்களுக்கு எல்லாம் உறுபபாகலாம் படி
வேண்டிய விநியோகத்துக்கு யோக்யமாய் இருக்கை -என்றபடி –

சித் த்ரவ்யத்துக்கு அசித் த்ரவ்யங்களை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று
பாரதந்த்ர்ய அதிசயம் சொல்லுகைக்காக இறே
ஆத்மா ஸ்வரூபம் யாதாத்மயம் இது வாகையாலே இறே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று ஆழ்வார் அருளிச் செய்தது -அப்பாஞ்ச ஜன்யம் போலே முகத்தை மாற வைத்து அருளிச் செய்கிறார்
எம்மா வீட்டில் எம்மா வீடு பாசுரம் /சேஷத்வ போக்த்ருத்வம் போலே அன்று பாரதந்தர்ய போக்யதைகள் -இவை உயர்ந்தவை என்றவாறு –
விதுர பிரகலாத பரத விபீஷண சத்ருக்ந ஆழ்வான்-என்கிறோம் -படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
போக்யமாக இருப்பேன் -போக்தா நீர் அனுபவிக்க அத்தை பார்த்து அப்ரதான போக்தாவாக அடியேன் -என்றவாறு –

பரகத அதிசய ஆதான இச்சயா
உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பரச சேஷீ
என்று சேஷி சேஷத்வ லஷணம்
ஸ்ரீ பாஷ்யகாரராலே அருளிச் செய்யப் பட்டது –
பிறருக்கு அதிசயம் செய்யும் இச்சை -யாலே செயல்படுத்தும் -பரனுக்கு அதிசயம் செய்ய முடியுமோ –அவாப்த ஸமஸ்த காமன் -கிருஷி பலிக்கப்பண்ணுவதே அதிசயம்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றதும் முகம் மலர்வானே —
இந்த லஷண வாக்யார்த்தத்தை அனுசரித்துக் கொண்டு
இச்சயா யது பாதேயம் யஸ்யாதி சயசிதயயே உபய அனுபயைகை கஜூ ஷா தௌ சேஷ சேஷி நௌ-என்று
சேஷ சேஷித்வ லஷணத்தை
அபியுக்தர் ஆனவர்களும் சொல்லி வைத்தார்கள்-
இரண்டு பேர்களை அடைந்தும் -சேஷன் சேஷி -பொரு சிறைப் புள் உவந்து ஏறும் -இருவருக்கும் ஆனந்தம் /
இருவரை அடையாமல் ஒருவரை அடைந்து -சேஷிக்கு பிரதான ஆனந்தம் -சேஷனுக்கு அமுக்கிய ஆனந்தம் –
ஞானத்தின் வெளிப்பாடே ஆனந்தம் தானே -அதனால் தான் அவன் பவளவாய் காண வேண்டும்

யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சபதேன கததயதே ஈஸ்வரேண ஜகத் சர்வம்
யதேஷ்டம் விநியுஜயதே -என்று சொல்லுகையாலே
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹத்வம்-எனபது சாஸ்திர சித்தம் –

இப்படி ஈஸ்வர விஷயத்தில் ஆத்மாவுக்கு யுண்டான சேஷத்வம் தான்
யச்யாச்யயாமி ந தமனதரேமி-என்றும்–அவனை தாண்டி நடக்க மாட்டேன்
பரவாநச்மி காகுத்சதத தவயி வாஷசதமி சதிதே–ஸ்ரீ ராமாயணம் –என்றும்–தேவரீருக்கு உடையவன் -தர்மம் தர்மவான் பரன் பரவான்
தாஸ பூதாஸ சவதச சர்வே ஹா தமான பரமாத்மன நாதயதா லஷணம்
தேஷாம் பந்தே மோஷ ததைவ ச –ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -பத்த மோக்ஷ திசையிலும் வேறே லக்ஷணம் இல்லை
நீதி வானவர் -முறைமை அறிந்து கைங்கர்யம் செய்வார்கள் உயிரை உடையவன் நாரணன் என்று அறிந்தவர்கள் -என்றும்
சவோஜ ஜீவ நேச்சா யதி தே ஆத்மதாச்யம் ஹரேச
ஸ்வா மயம் ஸ்வ பாவஞ்ச சதா சமர –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரி ஸ்வாமி சதா நினைப்பதே சத்தைக்கு காரணம்
சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் படா நின்றது-
இந்த நான்கு பிரமாணங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

——————————————————-

சூர்ணிகை -41-

அவதாரிகை –

ஒருவனுக்கு க்ருஹ ஷேத்ராதிகளும் சேஷமாய்
ஸ்வ சரீரமும் சேஷமாய் இருக்கச் செய்தே
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் சித்த்யாதிகளுக்கு அர்ஹமாய்
சரீரம் அவற்றுக்கு அனர்ஹமாய் இருக்கக் காண்கையாலே
இவ்வாதம வஸ்து ஈஸ்வரனுக்கு சேஷமாம் இடத்தில்
இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இதுதான் –
க்ருஹ ஷேத்திர
புத்ர களத்ராதிகளைப் போலே
ப்ருதக் சித்யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே
சரீரம் போலே
அவற்றுக்கு
அயோக்யமாய் இருக்கை -தகுதி இல்லை -பிரிந்து தனியாக இருக்காதே சரீரம்

இது தான் என்கிறது —
இப்படி ஈஸ்வர சேஷமாகச் சொல்லப் பட்ட ஆத்மவஸ்து தான் -என்றபடி –
க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே -என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தாலே
தன தான்ய ஆராம தாஸ தாசி வர்கங்களைச் சொல்லுகிறது –
ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே -என்கிற இடத்தில்
ப்ருதக் சித்தி யாவது சஹோபலம்ப நியமம் இன்றிக்கே சேஷியானவனை ஒழியவும் தான் சித்திக்கை
ஆதி சப்தத்தாலே அநேக சாதாரணத்வத்தைச் சொல்லுகிறது
கிருஹ ஷேத்திர தாஸ தாசி பரப்ருதிகள் பித்ரு புத்ர ஜ்யேஷ்டக நிஷ்டாதிகளுக்கு சாதாரண சேஷமாய் இருக்கும்
களத்ரமும்-சோம பரதமோ விவிதே கநதாவோ விவித உத்தர தருதீயோக நிஷ்டே பதி சதுரீ யாசதே மனுஷயஜா -என்று
பாணிக்ரஹண அனந்தரம் ஷேமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே–சோமன் கந்தர்வன் அக்னி பார்த்தா நால்வருக்கும்
அநேக சாதாரணமாய் இருக்கும்
இப்படி அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை -யாவது
அப்ருதுக் சித்தமாய் அநந்ய சாதாரணமான சரீரம் போலே
ப்ருதுக் சித்தி யாதிகள் ஆனவற்றுக்கு தான் அநர்ஹமாய் இருக்கை
ப்ருதுக் ஸ்திதி யாதிகளுக்கு -என்று பாடம் ஆகில்
ஆதி சப்தத்தால்
பருதகுபலபதியை சொல்லுகிறது–தனியாக இருப்பதை நினைக்கவே முடியாதே
அப்போதைக்கு இதுதான் க்ருஹ ஷேத்திர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே
பிரிந்து நிற்கைக்கும்
பிரிந்து தோற்றுகைக்கும்
அர்ஹமாம்படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே தத் உபாயா நாஹமாய் இருக்கும் என்று பொருளாகக் கடவது –
அயமேவாதம சரீரபாவ
ப்ருதக் சித்திய நாஹாதார தேய பாவ
நியந்த்ரு நியாமய பாவ
சேஷ சேஷி பாவ ச -என்றும்
இது தானே ஆத்மா சரீர லக்ஷணம்–நான்கும் சொல்லி 1- -வேறாக பிரிக்க தகாதது -2-ஆதாரம் ஆதேயம் பாவம் / -3-நியந்த்ரு நியாமய பாவ
-4-சேஷ சேஷி பாவ ச
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா
ச்வார்த்தே – தன பிரயோஜனத்துக்காகவே -நியந்தும்
தாரயிதும் ச சகயம்
தத் சேஷை தைக ஸ்வரூபம் ச ததச்ய சரீரம் -என்றும்
வேதார்த்த சங்க்ரஹத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும்
ஆத்மா சரீர பாவ லஷணமாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்த
-1-நியந்த்ரு நியாமாக பாவம்
-2-ஆதார ஆதேய பாவம்
-3-சேஷ சேஷி பாவம்
ஆகிற மூன்றும் இவ்விடத்திலே சொல்லப் படுகையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷரம் சரீரம் -என்று இத்யாதி
சுருதி சித்தமான
ஆத்மாவினுடைய பரமாத்மா சரீரதவம் அர்த்ததா சித்தமாயிற்று –

ஆக கீழே ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய சோதனம் பண்ணப் பட்டது-

———————————————–

சூர்ணிகை -42-

அவதாரிகை –

இனி ஏவம்பூதமான ஆத்மா ஸ்வரூபம் அநாதயசித சம்பந்த
தத்வியோக
தத் அன்வயங்களாலே
பத்த
முக்த
நித்ய
ரூபேண த்ரிபிரகாரமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –
-13-அடையாளங்கள் -அநாதி அசித் சம்பந்தம், -சரீர சம்பந்தம் -பத்தர்கள் /வியோகம் முக்தர்கள் /அன்வயம் இல்லாத நித்யர்கள்

ஆத்மஸ்வரூபம் தான்
பக்த
முக்த
நித்ய
ரூபேண
மூன்றுபடிப் பட்டு இருக்கும் –

———————————————–

சூர்ணிகை -43-

இதில் பத்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார்

பத்தர் என்கிறது
சம்சாரிகளை –
தங்களையும் மறந்து –ஈஸ்வரனையும் மறந்து -கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-இருக்கும் சம்சாரிகள்

அதாவது பத்த ர்கள் ஆகிறார்கள்–கத்யத்ரயத்தில் அருளிச் செய்ததை அப்படியே எடுத்துக் காட்டி அருளுகிறார்
தில தைலவத தாரு வஹ நிவத தூவிவேச-எள்ளில் எண்ணெய் போலே மரக்கட்டையை நெருப்பு போலே பிரிக்க முடியாமல் -செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவர்
குணத்ரயா
தமகா நாதி
பகவத மாயா திரோஹித–ப்ரக்ருதியால் மறைக்கப்பட்டு – ஸ்வ ஸ்வரூப்ராய அனாதயவிதையா சஞ்சித-அனந்த
புண்யபாபரூப கர்மவேஷ்டிதராய்–மூடப்பட்டவராய்
தத் தத் கர்ம அனுகுண விவித விசித்திர தேவாதிரூப தேக விசேஷ ப்ரவிஷ்டராய்
அவ்வோ தேகங்களில் அஹம் புத்தியைப் பண்ணியும்
தேக அனுபந்திகளில் மமதா புத்தியையும் பண்ணி
யானே என் தனதே என்று இருந்து -மோர் குழம்பு தேன்குழல் முறுக்கு உண்டு -பசித்தவனுக்கு தானே பசி போகும் -ரைக்குவர் –
துர்வாசனா ருசி விவசராய் ஸ்வ ஸ்வ கர்ம அனுகுண
ஸூகதுக்க பரம்பரைகளை
அனுபவிக்குமவர்கள் –

————————————-

சூர்ணிகை -44-

இனி முக்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

முக்தர்
என்கிறது
சம்சார சம்பந்தம்
அற்றவர்களை -இருந்து அறுத்தவர்களை –

அவர்கள் ஆகிறார்கள் –
அநாதி கர்ம ப்ரவாஹ பிரயுக்தமான சம்சார சம்பந்தம் நடவா நிற்கச் செய்தே-
1–மோஷ ருசிக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷம் அனுபவத்தாலே ஆதல்
2–சாமானயேன அனுஷ்டிக்கும் பிராயச்சித்த கர்மங்களாலே யாதல்
3–அநபிசமஹித பலமாய அதியுத்கடமான ப்ரமாதிக புண்யங்களாலே ஆதல் –
ஷயித்து-அது அடியாக –
ஜாயமான தசையில் பகவத் கடாஷத்தால் யுண்டான
சத்வோதரேகத்தாலே மோஷ ருசி பிறந்து
சத்குரு சமாஸ்ரயண் சம்பிராப்த வேதாந்த வேத்ய
பர ப்ரஹ்ம ஞானராய்
தத் பிராப்தி ரூப மோஷ சித்யர்த்தமாக
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான கர்மங்களை பல சங்க கர்த்ருத்வ-த்ரிவித
த்யாக பூர்வகமாக அனுஷ்டித்து
தாமேண பாபமப நுததி -என்றும்
கஷாயே கர்ம அபி பக்வே ததோ ஜ்ஞானம் பரவாததே -என்றும்
சொல்லிற்றே
அந்த சத் கர்ம அனுஷ்டானத்தாலே ஜ்ஞான உத்பத்தி விரோதி
ப்ராசீன கர்மம் ஷயித்த வாறே அந்த கரணம் நிர்மலமாய்
பகவத் ஏக அவலமபியான சமயக் ஞானம் உதித்து
அநந்தரம் —ஞானத்துக்கு இத்தனை அடை மொழி
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம்
ஷீண பாப நாம கிருஷ்ண பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்க இத்தனை -ஆரம்ப பாபங்களை முடிக்க இவ்வளவும் செய்து –பக்தி தொடங்கி -அதன் மஹாத்ம்யத்தால் மோக்ஷம் -என்றவாறு
தைல தாராவத விச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூப பக்தி மூலமாக வரும்
பகவத் பிரசாதத்தாலே ஆதல் –
அன்றிக்கே
தன்னுடைய நிர்ஹேதுக சௌஹாரத்த விசேஷத்தாலே–ஸூ ஹார்த்தம் யுடையவர் -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
யாத்ருச்சிகாதி ஸூக்ருத
பரம்பரைகளை கல்பித்து அது அடியாக விசேஷ கடாஷத்தை பண்ணி
அநந்தரம்
அத்வேஷத்தை ஜனிப்பித்து
ஆபிமுக்யத்தை யுண்டாக்கி
சாத்விக சம்பாஷணத்தை விளைத்து
அவ்வழியாலே
சதாச்சார்யா சமாஸ்ரயணத்திலே மூட்டி
தத் உபதேச முகேன தத்வ ஞானத்தை பிறப்பித்தல்
தன்னுடைய விசேஷ கடாஷம் தன்னாலே தத்வ ஞானத்தை பிறப்பித்தல் செய்து
மகா விசுவாச பூர்வகமாக தன் திருவடிகளை உபாயம் என்று நிற்கும்படி பண்ணும்
பகவத் ஆகஸ்மிக கிருபையாலே உபாயாந்தர விஷயத்தில் பிறந்த
துஷ்கரத்வாதி புத்தி மூலமாக வரும் ப்ரபதன மூலமான
பகவத் பிரசாதத்தாலே
யாதல் – சம்சாரிக்க சகல திருத்தங்களும் கழிந்து
ஆவிர்பூத ஸ்வரூபராய்
பகவத் அனுபவ கைங்கர்ய ஏக போகரானவர்கள் -முக்தர்கள் –

அவிசேஷண-முக்தர் -என்கிறது சம்சார சம்பந்தம் அற்றவர்களை -என்கையாலே-பகவல்லாபார்த்தி இல்லாமல்-
பகவத் அனுபவத்தில் ருசி இன்றிக்கே
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
சம்சார நிவ்ருதியை யுண்டாக்கிக் கொண்டு
தேச விசேஷத்திலே போய் ஸ்வ ஸ்வ ரூப அனுபவம் பண்ணி இருக்கும்
கேவலரையும் சொல்லிற்று ஆயிற்று –

—————————

சூர்ணிகை -45-

இனி நித்யர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

நித்யர் என்கிறது
ஒருநாளும் சம்சரியாத
சேஷ
சேஷசநாதிகளை –சேஷ அசனர் -சேஷம் உண்ணும் விஷ்வக் சேனர்/ ஆதி மற்றவர்கள்

இத்தால் முக்தரை வ்யாவர்த்திக்கிறது –
நிவ்ருத்த சம்சாரர் இறே அவர்கள் –
இவர்கள் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் இறே
அஹ்ருத சஹஜ தாசயாச ஸூ ராயச ஸ்ரஸ்த பந்தா–ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் என்றார் இறே பட்டர் -அபகரிக்கப்படாத தாஸ்யம் -நீதி வானவர் –
நித்யோ நித்யா நாம -என்றும்
ஜ்ஞாஜஜௌ தவாவஜா வீச நீ சௌ -என்றும் சொல்லுகிறபடியே
ஆத்மஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தே
அசந்நேவ-எனபது
சந்தமேனம் -எனபது ஆகிறது
பகவத் விஷய ஞான ராஹித்ய சாஹித்யங்களாலே இ றே
ஆகையால் இவர்களை நித்யர் என்றும்
பகவத் ஞானத்துக்கு ஒரு நாளும் சங்கோசம் இல்லாமையாலே என்று கொள்ள வேணும்
இந்த வைபவத்தைப் பற்றி இ றே
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா –ஸ்ரீ புருஷ ஸூ க்தம் விண்ணாட்டவர் மூதுவர் -என்றும்
யத்ர ருஷய பிரதமஜா யே புராணா –யஜுர் வேதம் -முன்பே உண்டானவர்கள் பழைமையானவர்கள் -என்றும்
சுருதி இவர்களை ஸ்லாகிக்கிறது
ஸ்ரீ பாஷ்ய காரரும் இவர்கள் யுடைய வைபவத்தை
ஸ்வ சந்தா அனுவர்த்தி இத்யாதியாலே ஸ்ரீ கத்யத்திலே பரக்க அருளிச் செய்தார்
ஈஸ்வரன் திரு உள்ளத்தை ஆஜ்ஜையை சங்கல்பத்தை விடாமல் பின் தொடர்ந்து இருப்பவர்கள் என்றவாறு
ஆகையால் -ஒரு நாளும் சம்சரியாதே -என்ற போதே -இவர்களுடைய
வைபவம் எல்லாம் சொல்லிற்று ஆயிற்று
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அனவிதனாய கைங்கர்ய பரர்க்கு எல்லாம் படிமாவாய்–உவமானம் இப்படி என்று காட்டும் படி – இருக்கையாலே
திரு வநந்த வாழ்வானை சேஷன் என்கிறது –
-சென்றால் குடையாம் -இத்யாதி
நிவாச சையா ஆசனம் பாதுகம் அம்சக உபாதானம்தா பவாராணாதிபி தாதப வர்ஷா வாரணம் நிவாரணம் மழை வெய்யில் தடுத்து திரு வெண் கொற்றக் குடையாகவும்
சரீர பேதை சதவ சேஷ தாம கதை யசோசிதம சேஷ இதீரிதே ஜனை –ஸ்தோத்ர ரத்னம் -40–என்று இ றே ஆளவந்தாரும் அருளிச் செய்தது –
இமான் லோகான் -வாமன நரசிம்ம லோகங்கள் அங்கும் உண்டே –அங்கும் சஞ்சரிக்கலாம் -காம ரூப்யன்–விவஸ்தை இல்லாமல் -வரையறை இல்லாமல்
மற்றுள்ள ததீயரைப் போலே அநியமமாய் இராதே சர்வேஸ்வரன் அமுத செய்த சேஷம் ஒழிய
அமுது செய்யாத நியமத்தைப் பற்ற சேஷாசனர் என்று
சேனை முதலியாரை நிரூபிக்கிறது
தவதீய புக்தோ ஜஜித சேஷ போஜினா-என்றார் இறே ஆளவந்தாரும்
வநாதரி நாதச்ய ஸூ ஸூந்தரச்யவை பரபுகதசிஷ்டாதயச சைனய சத்பதி –ஸூந்தர பாஹு ஸ்தவம் -74–என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –
திருமால் இரும் சோலையில் -ஸூத்ரவதி உடன் ஸ்ரீ விஷ்வக் சேனர் சேவை ஒரே சிலையில் இருவரும் சேவை –

ஆதி -சப்தத்தாலே
சேஷ சேஷாசன கருட ப்ரமுக நானாவித அநந்த பரிஜன பரிஜாரிக பரிசரித சரண யுகள -என்கிறபடியே
பகவத் கைங்கர்ய ஏக போகராய் இருந்துள்ள வைனதேய பிரமுகரான நித்ய சித்தர் எல்லாம் சொல்லுகிறது –

———————————————-

சூர்ணிகை -46-

அவதாரிகை –
பூர்வோகதமான ஸ்வரூப வைலஷ்ண்யத்தை யுடைய ஆத்மாவுக்கு
அவித்யாதி தோஷ சம்பந்தம் வந்தபடி என்-
என்கிற சங்கையில்
சத்ருஷ்டாந்தமாக தத் ஹேதுவை அருளிச் செய்கிறார் –

ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்சர்க்கத்தாலே
ஔஷண்ய
சப்தாதிகள்
யுண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே
அவித்யா
கர்ம
வாசனா
ருசிகள்
உண்டாகிறன-

அதாவது
ஸ்வ பாவாத ஏவ நிர்விகாரமாய் சீதளமாய் இருக்கிற ஜலத்துக்கு
அக்னியோடு சம்ஸ்ருஷ்டியான ஸ்தாலியோட்டை சம்சர்க்கத்தாலே
ஔ ஷண்ய சப்தோத்ரேக ரூபங்களான விகாரங்கள் யுண்டாகிறாப் போலே
ஸ்வத ஞான ஆனந்த அமல ஸ்வரூபனான ஆத்மாவுக்கும்
குண த்ரய ஆஸ்ரய அசித் சம்பந்தத்தாலே–சூடான பானை மூலம் தண்ணீருக்கு நெருப்பு சம்பந்தம் போலே
அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாகிறன என்கை-
இவருடைய திருத் தம்பியாரும் ஆச்சார்யா ஹிருதயத்திலே
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் -என்று அருளிச் செய்தார் இ றே
அநாதி பகவத் சம்பந்தம் ஞான காரணம் -அநந்த கிலேச பாசனம் -அது நிரதிசய ஆனந்தம் இது -இப்படி ஏழு படிக்கட்டுக்கள் காட்டி அருளுகிறார் அங்கு
இப்படி ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே-6-அம்சம் -7-ஸ்லோகம்
நிர்வாணமய ஏவாயமாத்மா ஞான மயோமல துக்கஞ்ஞா
நாமலா தாமா பிரக்ருதேச தே ந சாதமன ஜலசய சாக நி
சமஸ்ருஷ்ட சதாலீ சங்காத ததாபி ஹி சப்தோ தரேகாதி கான
தாமான தாதா கரோதி யதா முனே ததா தமா பரக்ரு தௌ
சங்காத அஹமம நாதி தூஷித
பஜதே பராகருதான தாமாதனைய சதேபயோபி சோவயய-என்று சொல்லப் பட்டது –
பிரகிருதி குணங்கள் -ஜலத்துக்கு அக்னியுடன் சம்பந்தப்பட்ட பானை சம்பந்தம் போலே என்று இங்கும் காட்டி அருளுகிறார்
அகங்கார மமகாராம் தூஷித்தமாக அடைகிறான் –
சரீர குறைகள் இவர் ஏற்றுக் கொண்டு -பிராகிருத தர்மங்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான்
1–அவித்யை யாவது -அஞ்ஞானம்
அது தான் ஜ்ஞான அநுதய -அந்யதா ஞான –விபரீத ஞான
ரூபேண அநேக விதமாய் இருக்கும்
2–கர்மமாவது கரணத்ரய க்ருதமாய் புண்ய பாபாத்மகமான க்ரியா விசேஷம்-சிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும் சேர்த்த இரு வல் வினைகள் / இருமை பெருமை
அதில் புண்யம் ஐஹிக ஆமுஷ்மிக நானா வித போக சாதனதயா பஹூ விதமாய் இருக்கும்
பாபமும் அக்ருத்ய கரண கிருத்திய அகரண பகவத் அபசார பாகவத் அபசாரா அசஹ்யா அபசார ரூபேண அநேகவிதமாய் இருக்கும்
3—வாசனை ஆவது முன்பு செய்து போந்த வற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான –சம்ஸ்காரம் / மனப்பதிவு –
இது தான் ஹேது பூதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்
4—ருசியாவது ரசாந்தரத்தாலும் மீட்க ஒண்ணாத படி ஒன்றிலே செல்லுகிற விருப்பம்
இதுவும் விஷய பேதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாயிற்றன -என்னாமல்-உண்டாகிறன -என்கையாலே
இவற்றின் உடைய ப்ரவாஹ ரூபத்வம் சொல்லப் பட்டது-
வர்ணாஸ்ரம கர்மா யோகத்தால் தான் இந்த சம்ஸ்காரம் போக்க முடியும் -அனுஷ்டானம் அனுசந்தானம் ஆராதனம் இதற்கு வேண்டும் –
வெறும் ஞானத்தால் மோக்ஷம் இல்லை -அனுஷ்டானம் -கைங்கர்ய பர்யந்தம் செய்ய வேண்டுமே –

————————————————

சூர்ணிகை -47

இப்படி ஆத்மாவுக்கு வந்தேறியான அவித்யாதிகள் தான்
எவ் வவஸ்தையில் கழிவது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அசித்து கழிந்த வாறே
அவித்யாதிகள்
கழியும்
என்பார்கள் –
ஆழ்வாராதிகள் தான் சரீரம் முடியும் முன்பே அவித்யாதிகள் கழிந்து- அவன் சங்கல்பத்தால் இருந்தார்கள் -அவித்யை காரியம் -சரீரம் காரணம் என்றவாறு

அதாவது
காரண நிவ்ருதயயா கார்ய நிவ்ருத்தி யாகையாலே
அசித் சம்பந்தம் நிபந்தனமாக வந்த இவையும்
தத் சம்பந்தம் கழிந்தவாறே கழியும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி
என்பார்கள் -என்ற இத்தை பரமதமாக்கி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களுக்கு பகவத் பிரசாத விசேஷத்தாலே
அசித்து கழியும் முன்னே அவித்யாதிகள் கழியக் காண்கையாலே
அந்த நியமம் இல்லை என்று இவருக்கு கருத்து என்று சொல்லுவாரும் உண்டு
அது முக்கியம் அன்று
அவர்கள் திரு மேனியோடு இருக்கச் செய்தே பரமபக்தி பர்யந்தமாகப் பிறந்ததே யாகிலும்–அந்தமில் அமரரோடு இருந்தமை உண்டே -இங்கேயே –
வினைப்படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகளவும்
யானும் உளன் ஆவான் என் கொலோ–பெரிய திருவந்தாதி 76- -என்கையாலே
கர்மங்கள் அழியும் படி கடாக்ஷித்து –நானும் இருக்கேன் கர்மங்களும் உள்ளன என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார் இதில் –
ஜென்மம் தோறும் சரீரம் அழியும் அவித்யாதிகள் போக வில்லையே –
சர்வம் ஹ பசய பச்யதி என்கிற முக்த அவஸ்தையில் வைசத்யம்–ஞான விகாசம் விசத தமமாக –
அசித்து கழிவதற்கு முன்பு இல்லாமையாலே –

ஆக கீழ்ச் செய்தது ஆயிற்று
ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும் என்றும்
அதில் பக்த சேதனருக்கு அவித்யா உத்பத்தி மூலமும்
தந் நிவ்ருத்தி கரமும் சொல்லி நின்றது –

———————————————–

சூர்ணிகை -48-

இப்படி உக்தமான த்ரிவித ஆத்மா வர்க்கமும்
இத்தனை சேதனர் என்று சங்கயேயமாய் இருக்குமோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இம் மூன்றும்
தனித் தனியே
அனந்தமாய்-
இருக்கும் –

அதாவது
வர்க்ய த்ரமுமாக அநந்தம் என்று தோற்றும் என்று நினைத்து
தனித் தனியே என்று விசேஷிக்கிறார் –
அனந்தமாய் இருக்கும் என்றது அசங்கயேயமாய் இருக்கும் என்றபடி –

—————————————-

சூர்ணிகை -49-

உக்தமான ஜீவ அனந்யத்துக்கு விரோதியான
ஜகதாய மத வாதத்தை நிராகரிக்கிறார் மேல் –

சிலர்
ஆத்மா பேதம் இல்லை
ஏக ஆத்மாவே உள்ளது
என்றார்கள் –

சிலர் என்று அநாதரோ கதியாலே அருளிச் செய்கிறார்
இப்படி சொல்லுமவர்கள் தாங்கள் ஆரோ என்னில்
ஜீவ அத்வைத பிரதிபாதிக சாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள்/ ஒரே ஜாதி நெல் -ஒன்றே இல்லையே அதனால் குத்ருஷ்டிகள் தப்பாக / ஸ்ருதி ஓன்று என்றும் அநேகர் என்று சொல்வது ஒரே ஜாதி
ப்ரஹ்மா ஒன்றே -ஜாதி இல்லை -எண்ணிக்கையில் ஒன்றே
அதாவது
ப்ரஹ்ம அத்வைதம் என்றும்
ஜீவ அத்வைதம் என்றும்
சாஸ்திர பிரதிபாத்யமான அத்வைதம் த்விவிதமாய் இருக்கும்
அதில் ப்ரஹ்ம அத்வைதம் ஆவதுபிரகார்ய அத்வைதம்
ஜீவ அத்வைமாவது பிரகார அத்வைதம்
இதுக்கு நியாமகம் ஏது என்னில்
ப்ரஹ்ம பர கரணங்களில் —
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -ப்ரஹ்மத்தை சார்ந்தே உள்ளவை சித்தும் அசித்தும்
ஜகதாய மாயம் இதம் சர்வம் -சந்தோக்யம் -அத்தனையும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்டவை என்னும் தன்மை
புருஷ ஏவேதம சர்வம் -சரீரமாக கொண்டு -பிரகாரங்களாக கொண்டு என்றபடி
என்று சாமாநாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை பிரதிபாதிக்கையாலும் –
சாமாநாதி கரண்யம் பிரகார பேத விசிஷ்ட பிரகார யேகத்வ பரமாகையாலும் –
தேவதத்தன் -சமம் யுக லோகிதாசன் / பானை வேலைப்பாடு வாயும் வயிறுமாய் மண்ணால் செய்யப்பட / தன்மைகளை ஏற்றி ஒரே இருப்பிடத்தில்
தீயாய் நிலனாய் –சிவனாய் அயனாய் -முனியே நான் முகனே – முக்கண் அப்பா -ஒரே வேற்றுமையில் படிக்கலாம் -சமான அதிகரணம் –
ஓன்று என்னில் ஒன்றேயாம் பல என்று சொன்னால் பலவேயாம்
ஏகஸ் சன் பஹூதா விசார –யஜுர் வேதம் -என்று பிரகார பஹூத்வம் கண்டோகத மாகையாலும்
இந்த ஸ்ருதியை ப்ரஹ்மம் ஒன்றே அதுவே சிவன் விஷ்ணு ப்ரஹ்மா என்று தப்பாக சொல்வார்கள்
ஓன்று பலவாக பேசப்படுகிறது பிரகார பஹூத்த்வம் சொல்லும் ஸ்ருதி இது
ஐக விதிக்கு சேஷமான -தேக நா நாஸ்தி -கட உபநிஷத் -இத்யாதி பேத நிஷேதம் விஹித ஐக்ய விரோதி பேத விஷயமாகையாலும்
ப்ரஹ்மாத்மகமான பதார்த்தங்கள் இல்லையே -பொருள்கள் இல்லை என்று சொல்ல வில்லை –
கிடையாது -ஒன்றும் புத்தர்கள் -/ பொருள்கள் கிடையாது அத்வைதிகள் -நாநா சப்தத்துக்கு தப்பான அர்த்தங்கள் -நாநா நாஸ்தி– பேதம் இல்லை என்பதற்கு –
விகித ஐக்கியம் விரோதியாக இல்லை -சரீராத்மா பாவம் -ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருள்கள் இல்லை
பிரகாரி பஹூத்வ நிஷேதபரமாகையாலும்
ந தத சமச சாப பயதி கச்ச தருச்யதே -என்று ப்ரஹ்ம துல்ய பிரகாராந்தர நிஷேத
கண்டோகதியாலும் பிரகார அத்வைதமே ப்ரஹ்ம அத்வைதம்-
ப்ரஹ்மதுக்கு ஓத்தார் மிக்கார் இல்லை ஏக மேவ அத்விதீயம் –
எக்கோ பஹு நாம் ஒன்றான ப்ரஹ்மம் -எண்ணிக்கையில் இரண்டாவது இல்லை
ஆத்மாக்கள் பஹு -ஒரே ஜாதி -என்றவாறு -பிரகாரங்கள் பல -பிரகார பிரகாரி அத்வதாம் வாசி உணர வேண்டாம் –
பிரகாரம் இல்லாத பிரகாரி இல்லையே -தந்தை என்றால் மகன் மகள் இருக்க வேண்டுமே அது போலே –
ஆத்மாக்களுக்குள் பரஸ்பர பேதம் -சரீர ஆத்ம விவேக ஞானம் -ஜீவ பர -ப்ரஹ்ம – விவேக ஞானம் மூன்றையும் உணர வேண்டும்
பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் -புஷபம் மணம் / மாணிக்கம் ஒளி போலே -பிரிந்து ஸ்வ தந்திரமாக ஸ்திதி பிரவ்ருத்திகள் இல்லாமல் சார்ந்தே இருக்கும்
விசிஷ்ட வஸ்து என்றால் ஒன்றே -விசேஷண வஸ்துக்கள் என்று பார்த்தால் போலவே /
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மித்யா -ஜீவோ ப்ரஹ்மம் ஒன்றே ந பர வேறு இல்லை -வேதாந்தம் திண்டிமம் கோஷிக்கும் -என்பர் அத்வைதிகள்
காரண கார்ய பாவம் / சரீராத்மா பாவம் / பிரகார பிரகாரி பாவம் -சாமா நாதி கரண்யம்-/ஸ்வரூப ஐக்கியம் சொல்லப்பட வில்லை
விசேஷ்யம் விசேஷங்கள் உடன் விசிஷ்டமாக இருக்கும் /
ஜீவ பஹூத்வம் சுருதி சித்தமாகையாலும்
அல்லாதபோது பக்த முக்த வ்யவஸ்த அனுபபத்தியாலும்
உபதேச அனுபபத்தியாலும்–இருவர் இல்லை என்றால் உபதேசம் யார் யாருக்கு –
ஸூகாதி வ்யவஸ்த அனுபபத்தியாலும்–ஸூகம் துக்கம் அனைவருக்கும் ஓன்று போலே இல்லையே –
புமாந ந தேவோ ந நரோ ந பசு ந ச பாதப–மரமும் அல்லன்- சதுர்விதோ விபேதோயம் மிததயா ஜ்ஞான நிபந்தன
தேவாதி பேத அபத்தவசதே -இத்யாதி களிலே
தேவாதி சரீர பேத விசேஷ நிஷேதம் கண்டோகதமாகையாலும்
முக்தாத்மாக்களுக்கு சாம்யத்தை சுருதி சொல்லுகையாலும் ஜீவ அத்வைதம்- பிரகார அத்வைதமே–
விசிஷ்ட வேஷத்தை பார்க்காமல் நிஷ்க்ருஷ்ட வேஷம் பார்த்து ஒரே ஜாதி என்றவாறு
ப்ரஹ்ம அத்வதாம் பிரகாரி அத்வைதம் /

இது தான் ஸ்ருத பிரகாசிகையிலே
ஆதிபரத -சதுச்லோகீ வியாக்யான உபக்ரமத்திலே
ப்ரஹ்ம அத்வைதம் ஜீவாத வைதஞ்சேத்ய அத்வைதம் த்விவிதம் சாஸ்திர பிரதிபாத்யம் -என்று தொடங்கி
ஸ்ரீ வேத வியாச பட்டராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது –

இப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப் படுகிற ஜீவ அத்வைதத்துக்கு ஹிருதயம் அறியாதே
ஆத்மபேதம் இல்லை -ஏகாத்மாவே உள்ளது என்று
சில குத்ருஷ்டிகள் சொன்னார்கள் -என்கை-

———————————————

சூர்ணிகை -50-

அது அயுக்தம் என்னும் இடம் சாதிக்கிறார் –
அந்த பஷத்தில்
ஒருவன்
ஸூகிக்கிற காலத்தில்
வேறே ஒருவன்
துக்கிக்க கூடாது –
ஒருவன் துக்கிக்க-அத்தைப் பார்த்து வேறே ஒருவன் ஸூ கம் அடைகிறான் –

அதாவது
அப்படி ஆத்மபேதம் இல்லாத பஷத்தில்
அஹம் ஸூகி -என்று ஒருவன் ஸூகோத்தரனாய் இருக்கிற காலத்தில்
அஹமதுகீ -என்று ஒருவன் துக்கோதரனாய் இருக்கிற
இந்த ஸூக துக்க வியவஸ்தை கூடாது என்கை
ஸூக துக்கங்கள் இரண்டும் ஏக ஆச்ரயகதமாகில்
உபய பிரதி சந்தானமும் ஒருவனுக்கே யுண்டாக வேணும் இறே
ஆகையால் ஸூ க துக்கங்கள் நியதங்கள் ஆகையாலே ஆத்மா பேதம் யுண்டாக வேணும் என்று கருத்து-

———————————————

சூர்ணிகை -51-

அந்த ஸூ க துக்க வியவஸ்தைக்கு ஹேது
தேக பேதம் என்கிறவர்கள் உக்தியை அனுவதிக்கிறார்

அது
தேக பேதத்தாலே
என்னில்–ஆத்மா ஒன்றே-தேக பேதம் என்பர் -அந்த பக்ஷத்தில் –

————————————————–

சூர்ணிகை -52-

அதுக்கு அனுபபத்தி சொல்லுகிறார் –

சௌபரி சரீரத்திலும்
அது
காண
வேணும் –

அதாவது
தேஹபேதம் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது என்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இந்த ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்
ஸ்மரியாது ஒழிகிறது சம்ஸ்காரத்தின் யுடைய அனுதபவத்தாலே ஆதல்
நாசத்தாலே ஆதல்
சரீராந்தரத்தில் ஸூக துக்க ச்ம்ரிதாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும்
இரண்டில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும்-தனித்தனி அவயவங்கள் – ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும்
ஒரே தேகத்தில் அவயவங்கள் அனுபவத்தை சேர அனுபவித்து போலே -தேகாந்தர அனுபவம் ஒரே ஆத்மா அனுபவம் –

ஆகையால்
ஸூக துக்க நியமத்துக்கு ஹேது தேக பேதம் என்ன ஒண்ணாது-

——————————————

சூர்ணிகை -53-

இப்படி ஸூ க துக்க வ்யவஸ்த அனுபபத்தியே என்று
ஏகாத்மா என்னும் பஷத்தில்
பக்த முகதா வ்யவஸ்தா அனுபபத்தியும்
சிஷ்யாச்சார்யா வ்யவஸ்தா அனுபபத்தியும்
யுண்டு என்கிறார் மேல்

ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யனாகையும்
கூடாது

அதாவது -ஏகாத்மா வாகில் –
அநேக ஜன்மம் சஹஸரீம் சம்சார பதவீம் வரஜன மோஹ ஸ்ரமம்
பர யாதோ சௌ வாசநா ரேணு குண்டித -என்கிறபடியே ஒருவன் சம்சரிக்கையும்
சுகோ முக்கோ வாமதேவோ முக்த –என்கிறபடியே ஒருவன் முக்தனாகையும்
தத் விஞ்ஞாநாரதாத்மா ச குருமேவாபி கசசேத சமித பாணிச
ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ச விதவாநுபச னனாய சமயக் பிரசாந்த
சிததாய சமானவிதாய யே நாஷரம் புருஷம் வேத சத்யம் பரோவாச தாம தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்கிறபடியே
ஒருவன் சிஷ்யனை வந்து உபசததி பண்ண
ஒருவன் ஆச்சார்யனாய் இருந்து அவனுக்கு உபதேசிக்கையும் கூடாது என்கை-

——————————————————–

சூர்ணிகை -54-

இன்னமும் ஒரு அனுபபத்தி சொல்லுகிறார் –

விஷம
சிருஷ்டியும்
கூடாது -வைஷம்யம் வேறுபாடு -உண்டே

அதாவது ஏகாத்மா வாகில்
தேவ திர்யகாதி ரூபேண சில ஸூ கோத்தரமாகவும்
சில துக்க கோத்தரமாகவும்
இப்படி லோகத்தில் பதார்த்தங்களை விஷமமாக சர்வேஸ்வரன் சிருஷ்டிக்க கூடாது என்கை
ஜீவ பேதமும் கர்ம தாரதர்யமும் இறே விஷம சிருஷ்டிக்கு ஹேது-

————————————-

சூர்ணிகை -55-

இப்படி யுக்தியாலே அநேக விரோதங்களை தர்சிப்பித்தார் கீழ்
இவ்வளவே அன்று –
இப் பஷத்துக்கு சுருதி விரோதமும் யுண்டு -என்கிறார் –

ஆத்மபேதம்
சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும் –

அதாவது -ஏகாத்மா என்கிற பஷம்
நித்யோ நித்யா நாம் சேதனச சேதனா நாமேகோ பஹூ நாம யோ விததாதி காமான–கட உபநிஷத் -என்று
ஆத்ம பேதத்தை சொல்லுகிற ஸ்ருதிக்கும் சேராது -என்றபடி
ஆத்மாக்கள் பேதம் பலர் உண்டே ஸ்ருதி சொல்லுமே –

——————————–

சூர்ணிகை -56-

இந்த சுருதி ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்னில்
போக்தா போக்கியம் -என்றும்–ஒருமையில் ஆத்மா
ப்ருதகாதமானமா –என்றும்–ஒருமையில் ஆத்மா
ஜஞாஜௌ தவவாஜௌ -என்றும்–அறிந்தவன் அறியாதவன் ஒருமை சொல்லும் சுருதிகள்
அன்யோனதர ஆத்மா விஞ்ஞானமய -என்றும்
ஜீவைகதவ ப்ரதிகாதிகைகளான அநேக ஸ்ருதிகளோடும்
விரோதிக்கும் ஆகையால்
இது ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்று இ றே அவர்கள் சொல்லுவது
அத்தை நிஷேதிக்கிறார்

சுருதி
ஔபாதிக பேதத்தை
சொல்லுகிறது
என்ன
ஒண்ணாது –

ஔபாதிக பேதமாவது
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும்
அபேதம் இயற்க்கை -பல தெரிவது செயற்கை -காரணத்தால் பல என்று தெரிகிறது என்பர் –
சரீரம் வேறு பட்டதால் ஆத்மா வேறு பட்டதாக தோன்றுகிறது என்பர்

——————————————–

சூர்ணிகை -57-

ஔபாதிக பேதம் என்ன ஒண்ணாமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

மோஷ
தசையிலும்
பேதம்
யுண்டாகையாலே –

அதாவது
சதா பஸ்யந்தி-என்றும்-பன்மையில் ஸூர்யா –பச்யதி இல்லையே பஸ்யந்தி
மமசாதர்ம்யம் ஆ கதா -என்றும்-ஆகாதா
முக்தாநாம் பரமாம்கதி -என்றும்-முக்தானாம் முக்தர்களுக்கு
யேஷாம் தேஷாம் -அஞ்ஞானம் தொலைந்த பின்பு எல்லாருக்கும் ஆதித்யன் போலே பிரகாசிக்கும் -பலர் இங்கும்
சாயுஜ்யம் பிரதிபன்நா யே -என்றும்
யஸ்மின் பதே விராஜா ந்தே முகதாச சம்சார பந்தனை -கட உபநிஷத் -என்றும் மோஷ தசையில் ஆத்மா பேதத்தை ஸ்ருதிகள் சொல்லுகையாலே
அப்படி சொல்ல ஒண்ணாது என்கை/இயற்க்கை எய்தினார் -ஸ்வரூப ஆவிர்பாவம் -என்றவாறு –

மோஷ தசையாவது சர்வோபாதி விநிர்முக்த தசை இ றே
அந்த தசையிலும் ஆத்மா பேதம் சுருதி சித்தம் ஆகையாலே
நித்யோ நித்யா நாம் -என்கிற ஸ்ருதியும் ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்றது ஆயிற்று –

————————————————–

சூர்ணிகை -58/59

அவதாரிகை –

ஆனால் ஆத்மா பேத பிரதிபதிக்கு ஹேதுவாய்
ஔபாதிகமாய் இருந்துள்ள
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒரு பிரகாரத்தாலும் பேதகதனத்துக்குயோக்யதை இல்லாதபடி இ றே மோஷ தசை இருப்பது —
அவ்விடத்தில் ஆத்மபேதம் சித்திக்கிற படி எங்கனே
என்கிற வாதி பிர்சனத்தை அனுவதிக்கிறார்

சூர்ணிகை -58-

அப்போது தேவ மனுஷ்யாதி
பேதமும்
காம க்ரோதாதி
பேதமும்
கழிந்து
ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய்
ஒரு படியாலும் பேதம் சொல்ல
ஒண்ணாத படி
இருந்ததே யாகிலும்

—————————————————————————-

திருஷ்டாந்த முகேன பேதத்தை
சாதிக்கிறார்

சூர்ணிகை -59-

பரிமாணமும் எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள்
ரத்னங்கள்
வரீஹ்கள்
தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும்
சித்தம் –

அதாவது
அளவும் தூக்கமும்-எடையும்- வடிவும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வரீஹகள் முதலான பதார்த்தங்களுக்கு
பேதகமாய் இருப்பதொரு லஷணம் இல்லை யாகிலும்
அதிலே நாநாத்வம் காண்கிறாப் போலே
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி
ஏக ஆகாரமான முக்த ஆத்மாக்களுக்கும்
ஸ்வரூப பேதம் சித்திக்கும் என்றபடி –ஸ்வ பாவத்தில் வாசி இல்லை –

———————————————————————————

சூர்ணிகை -60-

கீழ்ச் சொன்னவற்றை எல்லாம் அனுபாஷித்துக் கொண்டு நிகமிக்கிறார்

ஆகையால்
ஆத்மா பேதம்
கொள்ள வேணும் –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று –
சிலர் ஆத்மா பேதம் இல்லை
ஏகாத்மாவே உள்ளது என்றார்கள் -என்று தொடங்கி
இவ்வளவாக முன்பு தாம் அருளிச் செய்த
ஜீவ அனந்த்ய பிரதிபடமான ஏகாத்ம வாதத்தை உத்ஷேபித்து
யுக்தியாலும்
சாஸ்த்ரத்தாலும்
பஹூ முகமாக அத்தை தூஷித்து
ஆத்மா பேதத்தை சாதித்தார் ஆயிற்று –

——————————————————-

சூர்ணிகை -61-

அவதாரிகை –

கீழே ஆத்ம ஸ்வரூப வைலஷ்ண்யத்தை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அதில்
1–அசித் விலஷணத்வம்
2—அஜடத்வம்-ஸ்வயம் பிரகாசத்வம்
3–ஆனந்த ரூபத்வம்-அனுகூல ஞானத்தவம்
4–அவ்யவகத்வம்
5–அசிந்த்யத்வம்
6–நிர்வவயத்வம்
7–நிர் விகாரத்வம்
8–ஞான ஆஸ்ரயத்வம்-
ஆகிற இவை எட்டும் ஜீவ ஈஸ்வர சாதாராணம்-
நியாமயத்வாதிகள் மூன்றும்–நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சித் அசித் சாதாரணம் –
அணுத்வமும் அசித் பரமாணு ஜீவ சாதாரணம் –
நித்யத்வம் தத்வ த்ரய சாதாரணம் –
இவை இத்தனையும் சேரக் கூடி ஆத்ம ஸ்வரூபத்துக்கு
அசித் ஈஸ்வர வ்யாவ்ருதியை சித்திப்பைக்கையாலே
இவற்றை லஷணம் என்னக் குறை இல்லை – –
அப்படி அன்றிக்கே –
ஸூக்ரஹமமாக
ஒரு லஷணம் அருளிச் செய்கிறார் –

இப்போது
இவர்களுக்கு லஷணம்
சேஷத்வத்தோடே கூடின
ஜ்ஞாத்ருத்வம் –
அறிவும் அடிமைத்தனமும் சேர்ந்து யுடைய -என்றபடி

இவர்கள் -என்கிறது த்ரிவித சேதனரையும்-
லஷணம் எனபது அசாதாராண தர்மம் இறே
ஆகையால்
சேஷத்வம் மாத்ரத்தைச் சொல்லில் அசித் வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தை சொல்லில் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
சேஷத்வே சதி ஜ்ஞாத்ருத்வமே லஷணம் என்கிறார் —

————————————————————————————–

சூர்ணிகை -62-

இப்படி ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய
ஜ்ஞானதுக்கும்
ஸ்வரூபதுக்கும்–ஆத்மாவாகிய ஞானத்துக்கும் –
யுண்டான
சாதர்ம்ய வைதர்ம்யங்களை–ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் — அருளிச் செய்கிறார் மேல் –
தர்மத்தை யுடையவன் தர்மி இரண்டுக்கும் வாசி உண்டே -உடைமை ஞானம் / உடையவனும் ஞான மயம் /தர்மக் ஞானம்- தர்மி ஞானம் வாசி உண்டே /
கடம் வஸ்து கடத்தவம் ஜாதி / குணம் கிரியை ஜாதி மூன்றும் ஒரு விரக்தியை ஆஸ்ரயித்து இருக்கும் -அந்த வ்யக்தி தான் வஸ்து /
கடத்வம் ஆகாரம் –வஸ்து த்ரவ்யமாக இருக்கும் / கிரியை ஜாதி குணம் இவை அத்ரவ்யங்கள் /
ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் –தானாகிய தன்மை -தன்னை பிரகாசப்படுத்தும் தன்மை / வாசி உண்டே /சமாசம் வேறுபாடுகள் –
த்ரவ்யமே தரவ்யத்தை ஆஸ்ரயித்து இருப்பது–ஸூர்யன் தேஜஸ் / ஆத்மா ஞானம் போல்வன சிலவே –
தர்மம் விசேஷணம் -விசேஷ்யம் தர்மி -சார்ந்தே இருக்கும்

இவர்கள் யுடைய
ஜ்ஞானம் தான்–(தர்ம பூத ஞானம் -தர்மக் ஞானம் -)
ஸ்வரூபம் போலே
1–நித்ய
2–த்ரவ்யமாய்
3–அஜடமாய்–ஸ்வயம் பிரகாசமாய் -என்றவாறு -தனக்கு தான் பிரகாசிக்காது -ப்ரத்யக் யாக இருக்காது –
4–ஆனந்த ரூபமாய்-அனுகூல ஞானம் என்பதால்
இருக்கும் –

இத்தால்
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்வ
ஆனந்தரூபத்வங்கள்
ஸ்வரூபத்தோபாதி ஜ்ஞானத்துக்கும் யுண்டு என்றபடி-

———————————————————-

சூர்ணிகை -63-

அவதாரிகை-

நித்யத்வாதிகளை உபபாதித்து வைதர்ம்யத்தை சொல்லும் அளவில்
அநேக கிரந்த வ்யவஹிதமாம் என்று நினைத்து
சாதர்ம்யம் சொன்ன அனந்தரம்
வைதர்ம்யத்தையும் சொல்லுவதாக
தஜ் ஜிஜ்ஞாஸூ பிர்சனத்தை உதஷேபிக்கிறார் -அனுவாதிக்கிறார் என்றபடி

ஆனால்
ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
வாசி என்
என்னில்-

————————————-

சூர்ணிகை -64-

வைதர்ம்யம் தன்னை அருளிச் செய்கிறார் –

ஸ்வரூபம்
1–தர்மியாய்
2–சங்கோச விகாசங்களுக்கு
அயோக்யமாய்
3–தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய்
4–அணுவாய்
இருக்கும்
ஜ்ஞானம்
1– தர்மியாய்
2—சங்கோச விகாசங்களுக்கு
யோக்யமாய் ‘
3–தன்னை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே–தன்னை ஆத்மாவுக்கு (-ஆத்மாவுக்கே -) பிரகாசிக்கக் கடவதாய்-
4–விபுவாய்
இருக்கும்

அதாவது
1–தர்மித்வம்
2–சங்கோச விகாச அயோக்யத்வம்
3–ஸ்வ வ்யதிரிக்தார்த்த அபிரகாசத்வம்/
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வம்–
4–அணுத்வம்
இவை ஸ்வரூபத்துக்கு விசேஷம்

1–தர்மத்வம்
2–சங்கோச விகாச யோக்யத்வம்
3–ஸ்வ வ்யதிரிக்தார்த்த பிரகாசத்வம்/
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாச ரஹித்தத்வம்/
ச்வாஸ்ரைய ஸ்வயம் பிரகாசத்வம்
4–விபுத்வம்
இவை ஜ்ஞானதுக்கு விசேஷம் என்றபடி –

விபுவாய் இருக்கும் என்று ஜ்ஞானத்தின் உடைய ஸ்வாபாவிக வேஷத்தை அருளிச் செய்தார் இத்தனை இ றே

————————————————————-

சூர்ணிகை –65-

அவதாரிகை –
சகல சேதனருடைய ஜ்ஞானமும் இப்படி இராது ஒழிவான் என்
என்கிற சங்கையிலே
சங்கோச அசங்கோச நிபந்தனமான தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் –

அதில் சிலருடைய ஜ்ஞானம்
எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும்
அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம்
ஒருக்கால் விபுவாய்
ஒருக்கால் அவிபுவாய்
இருக்கும் –

அதாவது
அயர்வறும் அமரர்கள் -என்கிறபடியே பகவத் ஜ்ஞானதுக்கு ஒரு நாளும்
சங்கோசம் இன்றிக்கே
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சதா அனுபவம் பண்ணுகிற
நித்ய சூரிகளினுடைய ஜ்ஞானம் எப்போதும் விபுவாய் இருக்கும்
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பாய் இருக்கிற
பத்தர்கள் யுடைய ஜ்ஞானம் கர்ம அனுகுணமாக
சங்கோச விகாசங்களோடு கூடிக் கொண்டு எப்போதும் அவிபுவாய் இருக்கும் –
கரைகண்டோர்–திருவாய் -8–3–10–என்கிறபடியே பகவத் பிரசாதத்தாலே சம்சார சாகரத்தைக் கடந்து
அக்கரைப்பட்ட முக்தருடைய ஜ்ஞானம்
பூர்வ அவஸ்தையிலே அவிபுவாய்
உத்தர அவஸ்தையிலே-சர்வம் ஹ பசய பச்யதி -என்கிறபடியே
விபுவாய் இருக்கும் என்கை —

—————————————————–

சூர்ணிகை -66

இனிமேல் ஜ்ஞானதுக்கு சொன்ன நித்யத்வாதிகளை
உபபாதிக்கிறார் –
அதில் பிரதமத்திலே
எனக்கு இப்போது ஜ்ஞானம் பிறந்தது
எனக்கு இப்போது ஜ்ஞானம் நசித்தது
என்று உத்பத்தி வினாசவத்தாகச் சொல்லப் படுகிற
ஜ்ஞானத்துக்குன் நித்யத்வம்டு கூடும்படி எங்கனே என்கிற
சங்கையை பரிஹரிக்கைக்காக தஜ்ஜிஞர ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –

ஜ்ஞானம் நித்யமாகில்
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது
நசித்தது
என்கிறபடி என்
என்னில்-

—————————————

சூர்ணிகை -67-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

இந்த்ரியத் த்வாரா
பிரசரித்து
மீளுவது ஆகையாலே
அப்படிச் சொல்லக்
குறை இல்லை –
ஆத்மா நித்யத்வம் முன்பு பார்த்தோம் சரீரம் கொள்ளுவதும் விடுவதும் போலே
இங்கும் கமனம் ஆகமனம் உண்டே ஞானத்துக்கு –

அதாவது
சர்வம் ஹ பசய பச்யதி -என்றும்
ச ஸ ஆனந்தாய கல்ப்பதே -என்றும்
முக்த தசையில் சர்வ விஷயமாகச் சொல்லுகையாலே
சர்வத்தையும் சாஷாத் கரிக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தேயும்
யா ஷேத்திர ஜ்ஞ் சக்தி சச வேஷ்டிதா ந்ரூப சாவகா -என்கிறபடியே கர்மத்தாலே சங்குசிதமாய்
தயா திரோஹித தத வாசாச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா
சர்வ பூதேஷு பூபால தார தம்யேன வர்த்ததே அபராணி மத்ஸூ ஸ்வல்ப ச ஸ்தாவரேஷூ ததோதிகா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–7-என்கிறபடியே
கர்ம அனுகுணமாக தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு
இந்த்ரியாணாம் ஹி சர்வேஷாம் யத்யேகம ஷரத் இந்த்ரியம் தேநாசய ஷரதி பிரஜ்ஞ்ஞா த்ருதே பாதாதி வோதகம -மனு தர்மம்– என்கிறபடியே
இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிப்பது மீளுவது ஆகையாலே
தாத்ருசமான விகாசத்தாலும் சங்கோசத்தாலும் வந்த
பிரகாச அப்ரகாசங்களைக் கொண்டு
பிறந்தது நசித்தது என்னக் குறை இல்லை -என்கை –

————————————————–

சூர்ணிகை -68

அவதாரிகை –

இப்படி இந்த்ரிய த்வாரா பிரசரிக்கிற ஜ்ஞானம் ஏகமாய் இருக்கச் செய்தே
விஷய க்ரஹண வேளையிலே பிரகாசிக்கும் போது
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதத்தை யுடைத்தாய்க் கொண்டு
அநேகத்வேன பிரகாசிக்கிற படி எங்கனே -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –
கேள்வி ஞானம் -முகர்ந்த ஞானம் இத்யாதி பெயர்கள் -பேதம் மூலம் நாநாவாக தோற்றும்

இது தான்
ஏகமாய் இருக்கச் செய்தே
நாநாவாய்த் தோற்றுகிறது
ப்ரசரண பேதத்தாலே –

அதாவது
ஏகமுகமாக ப்ரசரிக்கை அன்றிக்கே
சஷூஸ் ச்ரோத்ரா தய அநேக இந்த்ரிய த்வார பிரசரித்து
ரூப சப்த தயா அநேக விஷயங்களை கிரஹிக்கிற விதுக்கு
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதேன தோற்றுகிற நாநாத்வம் பிரசரன பேத நிபந்தனம் என்கை –

இத்தால்–நித்தியமான ஜ்ஞானத்துக்கு உத்பத்தி விநாச வ்யவஹார ஹேது
இன்னது என்று சொன்ன அனந்தரத்திலே
ப்ராசாங்கிகமாக அதனுடைய நாநாத்வேன ப்ரசரண ஹேதுவும் சொல்லப் பட்டது ஆயிற்று –

ஆத்மாவினுடைய தர்ம பூத ஜ்ஞான நித்யத்வம்
ந ஹி விஜ்ஞ்ஞாது விஜ்ஞ்ஞாதோ விபரிலோபோ வித்யதே
ந ஹி த்ருஷ்டோ விபரிலோபோ வித்யதே –ப்ருஹதாரண்ய உபநிஷத் -என்றும்
ஜ்ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் தர்மசச மனுஜேச்வர
ஆத்மனோ ப்ரஹ்ம பூதச்ய நித்யமேதத சதுஷ்டயம் யதோதபான கரணாத கரியதே ந ஜலாம்பரமம் சதேவ நீயதே
வயக்தி மசதச சம்பவ குத ததா ஹேய குணதவ மசா தவபோதா தையோ குணா
பிரகாசயனதே ந ஜனயந்தே நித்யா ஏவாத மநோ ஹி தே—ஸ்ரீ விஷ்ணு தர்மம்
நான்கும் நித்யம் -ஞானம் -வைராக்யம் -ஐஸ்வர்யம் -தர்மம் -முக்தனுக்கு -சாம்யம் பெற்றதால்
-கிணறு வெட்ட -நீர் உண்டு பண வேண்டாம் -இருப்பதை -கல் மண் மூட -அவற்றை எடுத்து -இல்லாததும் எப்படி உத்பத்தி -சத் கார்ய வாதம் –
கை பேசி -ஆகாசம் காற்று இருப்பதை கண்டு பிடித்ததே -பேர் மட்டும் மாறு படும் -தடங்கல்களை நீக்கி ஞானம் நித்யம் தான் என்று உணர்கிறோம் –
என்று சுருதி ஸ்ம்ருதி யாதிகளில் சொல்லப் பட்டது இ றே – –

—————————————————————–

சூர்ணிகை -69-

இப்படி இருந்துள்ள ஞான நித்யத்வத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
இனி இதனுடைய த்ரவ்யத்தை உபபாதிப்பதாக தஜ் ஜிஜ்ஞா ஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

த்ரவ்யமான
படி என்
என்னில் –

——————————-

சூர்ணிகை -70-

தத் ஹேதுக்களை அருளிச் செய்து த்ரவ்யத்தை
சாதிக்கிறார் –

க்ரியா குணங்களுக்கு
ஆச்ரயமாய்
அஜடமாய்–நித்ய விபூதி தர்ம பூத ஞானம் ஜீவாத்மா பரமாத்மா நான்கும் தானே -அனைத்தும் த்ரவ்யம் –
ஸ்வயம் பிரகாசமாக இருப்பதாலே த்ரவ்யம்
கிரியா குணங்களுக்கு ஆச்ரயமாய் இருப்பதாலும் த்ரவ்யம் -இது ஒரு விதி
இருக்கையாலே
த்ரவ்யமாகக்
கடவது –

அதாவது
கிரியை ஆவது -சங்கோச விகாசங்கள்
குணமாவது -சம்யோக வியோகங்கள்
அஜடத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்
க்ரியாஸ்ர்யம் த்ரவ்யம் குனாஸ்ரையோ த்ரவ்யம் -என்று த்ரவ்ய லஷணம் சொல்லப் படுகையாலே
கிரியாஸ்ர்யத்வமும் குனாஸ்ரயத்வமும் ஓர் ஒன்றே த்ரவ்யத்வ சாதகம்
இவற்றோடு அஜடத்வத்தையும் சொல்லுகையாலே அதுவும் த்ரவ்யத்வ சாதகம் என்று இவருக்கு கருத்து
எங்கனே என்னில்
ஜட வஸ்துக்களிலே த்ரவ்யாத்ரவ்யங்கள் இரண்டும் உண்டு –
அஜட வஸ்துக்களிலே அத்ர்வ்யமாய் இருப்பது ஓன்றும் இல்லை இ றே
ஆகையால் ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடதவாத்– யதஜடம் தத் த்ரவ்யம் யாத ஆதமநீ -என்று
அஜடத்வம் தன்னைக் கொண்டு த்ரவ்யத்வம் சாதிக்கலாம் இ றே

ஆகை இ றே-இது தான் அஜடமுமாய் சங்கோச விகாசங்களுக்கும்
சமயோக வியோகாதிகளுக்கும் ஆச்ரயமுமாய் இருக்கையாலே த்ரவ்யம் என்று
தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

இப்படி த்ரவ்யமாய் இருக்குமாகில் இதுக்கு ஆத்ம குணத்வம் கூடும்படி என் -என்னில்
நித்ய தத் ஆச்ரயத்வத்தாலே கூடும்
ஆச்ரயா தனயதோ வருததே ராசரயயேண சமநவயாத த்ரவ்யத்வம்
ச குணத்வம் ச ஜ்ஞான சயைவோ பபதயதே –சித்தி த்ரயம் -என்று இ றே ஆளவந்தார் அருளிச் செய்தது
ஆஸ்ரயம் காட்டில் வேறு இடத்தில் இருந்தால் த்ரவ்யம் -குணம் அப்படி இல்லை —
ஞானம் சார்ந்தே இருக்கும் குணத்வம் -விட்டு தனித்து சங்கோசம் விகாசம் கர்மத்தால் அதனால் த்ரவ்யம் சாதிக்கப்படும்
ஆசரயா தனயதோ வ்ருதித்வம் க்ரியாசரயத்வம் சொன்ன போதே சொல்லிற்று ஆயிற்று

இது தான் ஜ்ஞானதுக்கே அன்று இ றே
தீபாதி தேஜபதார்த்த பிரபைகளுக்கும் ஒக்கும் இ றே–ஸூர்யன் கிரணம் த்ரவ்யம் குணம் இரண்டும் உண்டே
ஆகையால் த்ரவயதய குணத்வங்கள் இரண்டும் ஜ்ஞானதுக்கு உபபன்னம் –

————————————————————–

சூர்ணிகை -71-

கீழே ஜ்ஞானதுக்கு தாம் அருளிச் செய்த அஜடத்வ
விஷயமான ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை
அனுவதிக்கிறார் –

அஜடம் ஆகில்
ஸூ ஷுப்தி
மூர்ச்சாதிகளில்
தோற்ற வேண்டாவோ
என்னில்

அதாவது
ஞானம்-அஜடம் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
எப்போதும் பிரகாசிக்க வேண்டாவோ
ஸூ ஷூப்தையா அவஸ்தைகளில் பிரகாசியாது ஒழிவான் என் -என்கை

————————————————

சூர்ணிகை -72-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

ப்ர ஸ்மரணம்
இல்லாமையாலே
தோற்றாது –

அதாவது
ஜ்ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் ஏவ பிரகாசிப்பது தான்
விஷய கிரஹண வேளையிலே இ றே
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தமோ குணா தயபிபவத்தாலே–தமஸ் மூட-
சங்குசிதமாய்
திரோஹிதங்களான மணி பிரகாசாதிகளைப் போலே
ப்ரசரணம் இல்லாமையாலே பிரகாசியாது என்கை –

——————————————-

சூர்ணிகை –73-

இனிமேல் இதனுடைய ஆனந்த ரூபத்தை
உபபாதிக்கிறார் –

ஆனந்த ரூபம்
ஆகையாவது
ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது
அனுகூலமாய் இருக்கை –
சர்வம் ப்ரஹ்மாத்மகம் என்று அறியாமல் பிரதி கூலமாக படுகிறது
இருந்தால் எத்தை பார்த்தாலும் அனுகூலமாகவே இருக்கும்

அதாவது
ஞானம் பிரகாசிக்கும் போது ஆவது –
ஸ்வ ஆச்ரயதுக்கு விஷயங்களை தர்சிப்பிக்கும் போது –
அப்போது இ றே இது தான் பிரகாசிப்பது -அவ்வஸ்தையிலே அனுகூலமாய் இருக்கை யாவது
அவ்வோ விஷயங்கள் எல்லாம் அனுகூலமாய்த் தோற்றுகையாலே
அவற்றை விஷயீ கரித்த இந்த ஞானம் ஸ்வ ஆச்ரயத்துக்கு ஸூ க ரூபமாய் இருக்கை –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு எல்லாம் அனுகூலமாக தோற்றினவே -மண்ணை இருந்து துழாவி —-செந்தீயை தழுவி அச்சுதன் திருமேனி என்பர் ஆழ்வார்-

————————————–

சூர்ணிகை -74-

ஆனால் விஷ சசதராதிகளை தர்சிக்கும் போது
அவற்றை விஷயீகரித்த ஞானம் பிரதிகூலமாய் இருப்பான் என் -என்கிற சங்கையை
உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

விஷ சஸ்ராதிகளை
காட்டும் போது
பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி
தேஹாத்மா ப்ரமாதிகள்-
நான் ஆத்மாவுக்கு இலவே இல்லையே –
தேஹாத்ம விவேகம் வந்தால் -பரீக்ஷித் –பிராணன் போனாலும் தான் போக மாட்டான் என்ற அறிவை பெற்றான் -ஸூகமாக இருந்தான் –

அதாவது
அவற்றைத் தர்சிப்பிக்கும் போது அவற்றை விஷயீ கரித்த ஞானம்
துக்க ரூபமாய் இருக்கைக்கு காரணம்
அவற்றில் பாதகத்வ புத்திக்கு மூலமான
தேஹாத்மா ப்ரமமும்–தப்பான எண்ணம் அன்றோ –
கர்மமும்
ஈஸ்வராதமகத்வ ஜ்ஞான ராஹித்யவமும்-

———————————————————–

சூர்ணிகை -75-

இவை தனக்கு ஸ்வா பாவிக வேஷம் ஏது
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வராத்மகம்
ஆகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
ப்ராதிகூல்யம் வந்தேறி –

அதாவது
ஜகத் சர்வம் சரீரமதே -என்றும்
தானி சர்வாணி ததவபு -என்றும்
ததஸா வம வை ஹரே சத்னு -என்றும்
சகல பதார்த்தங்களும் பகவத் சரீரம் என்று சாஸ்த்ரன்களிலே சொல்லப் படா நின்றது இ றே –
அப்படி பகவதாதமகமாக காணும் போது சகலமும்
அனுகூலமாய்க் கொண்டு தோற்றுகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
இவற்றில் தோற்றுகிற பிராதிகூல்யம்
தேஹாத்மா பிரமாதி மூலம் ஆகையாலே
வந்தேறி -என்கை-

—————————————————-

சூர்ணிகை -76-

அவதாரிகை –
இப்படி ஈச்வராத்மகம் ஆகையாலே சகல பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் என்பான் என்
சந்தன குஸூமாதிகளில் உண்டான ஆனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்றோ
என்கிற சங்கையின் மேலே அருளிச் செய்கிறார் –

மற்றைய அனுகூல்யம்
ஸ்வா பாவிகம் ஆகில்
ஒருவனுக்கு ஒருக்கால் ஓர் இடத்திலே
அனுகூலங்களான சந்தன குசஸூ மாதிகள்
தேசாந்தரே
காலாந்தரே
இவன் தனக்கும்
அத்தேசத்திலே அக்காலத்திலே
வேறே ஒருவனுக்கும்
பிரதிகூலங்களாகக் கூடாது

மற்றைய அனுகூல்யம் -என்கிறது தாம் அருளிச் செய்த
பகவதாத்மகத்தாலே வந்து ஆனுகூல்யத்தை ஒழிய-
சந்தன கு ஸூ மாதி பதார்த்தங்களில் தோற்றுகிற ஆனுகூல்யத்தை
அது அவற்றுக்கு ஸ்வா பாவிகம் ஆகில் போக்தவாய் இருப்பவனுக்கு ஒரு காலத்திலே ஒரு தேசத்திலே
அனுகூலங்களாக இருந்தவை
காலாந்த்ரத்திலே ஆதல் தேசாந்தரத்திலே ஆதல்
இவன் தனக்கே பிராதிகூல்யங்கள் ஆவது
இவனுக்கு அனுகூல்யங்களாய் இருக்கிற தேச காலங்கள் தன்னிலே வேறே ஒருவனுக்கு
பிரதிகூலங்கள் ஆவதாகை கூடாது
இப்படி பிரதிகூலங்களாக தோற்றக் காணா நின்றோம் இ றே

ஆகையால் பகவதாத்மகத்வ நிபந்தனமான ஆனுகூல்யமே ஸ்வா பாவிகம்
மற்றவை அனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்று என்கை-

வசதே வேக மேவ து காய ஸூ காயோமஷ மாகாயா ச கோபாய ச யதசதசமாத வஸ்து
வஸ்தவாதமகம் குத ததேவ பரீதயே பூதவா புநா துக்காய ஜாயதே ததேவ கோபாய யத பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத்
துக்காதத்மகம் நாசதிந ச கிஞ்சிச ஸூ கதாமகம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–6-40 -என்று இவ்வாதம் வியாச பகவானாலே விசதமாகச் சொல்லப் பட்டது இறே
இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில்
விஷசராதிகள் பிரதிகூலங்களாயும்
சந்தன குஸூமாதிகள் அனுகூலங்களாயும் தோற்றுகிறது
தேஹாத்மா பிரமாதிகளாலே –ஆதி சப்தம் கர்மம் ப்ரஹ்மாத்மகம் என்ற ஞானம் இல்லாமை
ஈச்வரத்தாமகமாகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ஆகையாலே
அவ்வாகாரத்தாலே காணும் போது
சர்வ விஷய பிரகாசன தசையிலும் ஆனந்த ரூபமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

————————————–

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
சித் என்கிறது ஆத்மாவை -என்று முதலிலே–சூர்ணிகை -3- சித் சப்த வாச்யமான ஆத்மாவை உத்தேசித்து
அநந்தரம்
தேஹாதி விலஷணமாய் -என்று தொடங்கி–சூர்ணிகை -4-
சேஷமாய் இருக்கும் –சூர்ணிகை -40–என்னும் அளவாக-13-அடையாளங்கள் –
உக்த லஷணத்தை பரீஷித்து

உத்தேச்யம் -லக்ஷணம் பரீஷை மூன்றும் ஆனதே

அநந்தரம்
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
த்ரி பிரகாரமாய் இருக்கிற படியையும்–சூர்ணிகை -41-/-42-
பக்தா த்மாக்களுக்கு அவித்யாதிகள் யுண்டாகைக்கு ஹேதுவையும்-தண்ணீர் சூடான பானை சம்பந்தம் த்ருஷ்டாந்தம் பார்த்தோம்
தந் நிவ்ருத்தி க்ரமத்தையும்–சூர்ணிகை -47-
த்ரிவித வர்க்கமும் தனித்தனியே அனந்தமாய் இருக்கும் படியையும் சொல்லி -சூர்ணிகை -48-

அந்த ஜீவா அனந்த்ய பிரதி படமான ஏக ஆத்மா வாதத்தை யுக்தி சாஸ்த்ரங்களாலே நிரசித்து
ஆத்மா பேதத்தை சாதித்து–சூர்ணிகை -60-

முன்பு விஸ்தரேண சொன்ன படி அன்றிக்கே ஸூக்ரமமாக
த்ரிவித ஆத்மாக்களுக்கும் யுண்டான
லஷணத்தை தர்சிப்பித்து–சேஷத்வத்துடன் கூடிய ஞாத்ருத்வம் –

அநந்தரம்
ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் யுண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்களை சொல்லி–சூர்ணிகை -62-
ஜ்ஞான விபுத்வ பிரசங்கத்திலே த்ரிவித சேதனருடைய ஞானத்துக்கும் யுண்டான விசேஷத்தை சொல்லி
முன்பு ஞானத்துக்கு சொன்ன
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்த்வ
ஆனந்த
ரூபவத்தங்களை
அடைவே உபபாதித்து
இப்படி சித் தத்தவத்தின் யுடைய வேஷத்தை அருளிச் செய்து
தலைக் கட்டினார் –

சித் பிரகரணம் முற்றிற்று

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: