தத்வ த்ரயம் -அவதாரிகை/ சித் பிரகரணம்-சூர்ணிகை -1-35— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

ஸ்ரீ தத்வ த்ரயம் -ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ வரதராஜர் அம்சம் / மணப்பாக்கத்து நம்பியிடம் மீதி இரண்டு ஆற்றுக்கு நடுவே -அவரோ நீர் /
தத்வங்கள் நித்யம்–உண்மை பொருள்கள் – –அவை மூன்று –
ரகஸ்ய கிரந்தம் விளக்க =8=கிரந்தங்கள் / தத்வ த்ரய விளக்கம் –5-கிரந்தங்கள் / சம்பிரதாய விளக்கம் -5-கிரந்தங்கள் -இப்படி அஷ்டதச கிரந்தங்கள்
1-தத்வ சேகரம் -சம்ஸ்க்ருத பிரசுரமான கிரந்தம் -பிரமாணங்கள் காட்டி ஸிலாக்கம் /2-பிரமேய சேகரம் -/3-அர்த்த பஞ்சகம் –தத்வ த்ரயங்களும் அஞ்சிலே மூன்று தானே /
அர்ச்சிராதி மார்க்கம் விளக்கம் /தத்வ த்ரயம் -ஆகிய ஐந்தும் –
பேர் வைத்ததில் மீதி சமயங்கள் ஆறும் நிரசனம் -பிரகரணம் -சித்/அசித் / ஈஸ்வர -மூன்றும் பிரகரணங்கள் /
ஸ்வாமி – சேஷி ஆதாரம் – தாரகன் – நியாந்தா -விளக்க இந்த தத்வ கிரந்தம் /

அர்த்த பஞ்சகத்துக்குள் அடங்கும் இந்த தத்வ த்ரயங்கள்

ஆறு வியாக்கியானங்கள் –நான்கு பிராமண திரட்டு /ஜீயர்படி திருவாராதன கிரமம்/ ஸ்ரீ கீதை
மூன்று மூல நூல்கள் ஆர்த்தி பிரபந்தம்–உபதேச ரத்னமாலை /திருவாயமொழி நூற்றந்தாதி /
தேவ ராஜ மங்களம் / யதிராஜ விம்சதி / காஞ்சி திவ்ய தேச முக்த ஸ்லோகங்கள் இரண்டு /மூன்று மூல நூல்கள்
ஆக-18-கிரந்தங்கள் மா முனிகள் அருளிச் செய்தது

லோக குரு -குருவி சக பூர்வ கூர குலத்தோமா தாசர் —
அபிராம வரர் -தாய் வழி பாட்டனார் -திகழ கிடந்த நாவீர -தனது தந்தை
சம்சாரம் பாம்பு- ஜீவாது-18-/ கிருஷ்ண பாதர் -வடக்க்கி திருவீதிப்பிள்ளை குமாரர் –ஈயும்நீ பத்மசார்யர் சாதித்தது
கௌண்ட்லிய குலம் -கூர குலோத்தமை தாசர் -லோக குரு கிருபைக்கு பாத்திரம் -ஸமஸ்த ஆத்ம குணங்களுக்கு இருப்பிடம்
குந்தி நகர் திருவவதாரம் -திருவாய் மொழி பிள்ளை /பிராசத லப்த/ கைங்கர்யம் செய்து –
பாத அம்போஜம் ராஜ ஹம்சம் -ஞான வைராக்ய
அசேஷ சாஸ்த்ரா விதம் சுந்தவரா வரர் -குரு கருணா -அருளால் ஞான கோயில் -தன தந்தையை வணங்கி –
இப்படி தனியன்கள்

-202–76–64–62-ஸூத்ரங்கள் -சித் / ஈஸ்வரன் /அசித் பிரகாரணங்கள் –

—————————–

அவதாரிகை–விளக்கம் –

அநாதி மாயயா ஸூக்த -என்கிறபடியே –இந்த பிரமாணம் எல்லா வித்தியாக்யானங்கள் -தூக்கம் -அசித்சம்பந்தம் -சரீர சம்பந்தம் கூடவே இருக்குமே
அஞ்ஞானம் -தங்களையும் மறந்து கைங்கர்யங்களை இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-
நீ யார் -ஆறு அடி உயரம் சொன்னால் தப்பு என்று உணர்வது போலே அன்றோ தேவோஹம் மனுஷயோஹம் =என்பது –

சேஷன் -யாருக்கு என்று சொல்லாமல் -அத்தை மற்ற இடங்களில் விநியோகிக்க வாய்ப்பு
அன்பன் -பகவான் -=அனைவருக்கும் போலே / பகவத் அன்பார் ஆழ்வார் / ஆழ்வாருக்கு அன்பன் மதுரகவி /

கள்வா -பண்டே உனக்கு தொண்டன் -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -ராமா சஹஸ்ர நாமம் துல்யம் போலே -இந்த ஆத்ம அபஹாரம் -ஒன்றே பல பாபங்களுக்கு சமம் அன்றோ –

அல்ப அஸ்திரம்–அசித் அனுபவம் / அநந்தம் ஸ்திரம் -ஈஸ்வர அனுபவம் / கைவல்யம் நடுவில் ஸ்திரமாக இருந்தாலும் அல்பமாக இருக்குமே –
பர துக்க அஸஹிஷ்ணுத்வம் –பரம தயாளுவான சர்வேஸ்வரன் -சக்தியும் உண்டே நியமிக்க -தயை முதலில் -இதுவே முக்கியம் -நிர்ஹேதுகத்வ அனுக்ரஹம் –
நினைத்து பண்ணவேண்டும் நாம் -அவன் நினைவே செயல் ஸத்யஸங்கல்பன் அன்றோ /
அத்தைச் செய்யாதே -ஸமாச்ரயணம் செய்வது முக்கியம் என்பதால் தனியாக இத்தை எடுத்துக் காட்டி -இதனாலே வித வாக் சிரோமணி –
படைத்த முகில் வண்ணன் -காருண்யம் -பரம தயாளுவான -மூலத்தை ஒட்டியே -முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன் -செய்தது எல்லாம் என்னை ரஷிக்கவே
ஸுஹார்த்தம் ஸூ ஹ்ருதயம் படைத்த -ஸூஹ்ருத் சர்வ பூதானாம் ஸ்ரீ கீதை /
ஞானம் ஸ்வரூப நிரூபிக்க ஞானம் அறிந்து விஞ்ஞானம் நிரூபித்த ஸ்வரூபம் பற்றி அறிந்து பரதவ ஸுலப்ய அவஸ்தைகளை -இரண்டாலும் சொல்லும்
கடாக்ஷம் அடியாக -ரஜஸ் தாமஸ் நீங்கி சத்வம் வளர்ந்து மோக்ஷ சிந்தை பிறந்து –அறிந்து கொள்ள விருப்பத்துக்கும் அடி ஜென்ம யாயமான கடாக்ஷம்
சேதனர் -காரண பெயர் ஞானம் இருப்பதால் -ஆனால் மந்த மதி –அறிவினால் குறையில்லா அகல் ஞானத்தார்
ஜாயமான புருஷன் பசு பக்ஷி மனுஷ்ய ஆத்மாக்கள் அனைவரையும் சொல்லும் புருஷ சப்தம் –

தத்வ த்ரயம் -விசேஷித்து அருளிச் செய்த ஸ்ரீ பராசரரை வணங்குகிறார் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் ஆரம்பத்தில் /
தத்வ த்ரய நிர்ணயம் / தத்வ தீபம் / சில்லரை ரஹஸ்யங்கள் -போன்றவைகள் இதே காரணத்தால் பிறந்தவை / இவரே பல கிரந்தங்கள் அருளிச் செய்தததுக்கும் அதுவே காரணம் –

—————————————-

சூர்ணிகை -1-
முமுஷூ வான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம்போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

போக்தா போக்யம் ப்ரேரிதா–தத்வத்ரயம் ஸ்ருதி பிரமாணம் /
சேததி இதி சித் -ஞானம் –தாது -ஞானத்துக்கு கர்த்தா ஞான ஆஸ்ரயம் -ஆத்மா /
சித் ஆத்மா ஜீவன் -மூன்றும் பர்யாய சப்தங்கள்
மோக்ஷம் யுண்டாம் போது -ஆசை வந்தால் என்றபடி
முமுஷு -மோக்ஷம் அடைய ஆசை பிறந்தவன் / விருப்பமும் வேண்டும் ஞானத்துக்கும் ஆஸ்ரயமும் வேண்டுமே –
சேதனன்-அறிவுடையவனுக்கு மூன்று தத்வங்கள் பற்றிய அறிவு உண்டாக வேண்டும்
அறிவு இருந்தவனுக்கே இந்த ஞானம் உண்டாகும் —
முமுஷுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று அங்கு -இங்கு தத்வ த்ரய ஞானம் –பஞ்ச சம்ஸ்காரம் பண்ணியவனுக்கு அங்கு -இங்கு அனைவருக்கும் -தத்வத்ரய ஞானம் –
ரஹஸ்யத்ரயம் -சப்தம் அதிகமாக பிரயோகம் இல்லை –
கைவல்யார்த்திக்கு திருமந்திரம் போதும் -தத்வ தர ஞானம் வேண்டுமே -அதனால் தான் அங்கு முமுஷுப்படியில் விளக்கி வியாக்யானம்
கதி த்ர்ய மூலம் பகவான் -மூன்று வித அதிகாரிகளுக்கும் பலப்ரதன் அவனே –
ஞானம் பயன் சித்திக்க தொடங்கும் முமுஷுவாக ஆசை பிறந்ததும் தானே
பகவத் பிராப்திக்கு விரோதியான–சம்சாரத்தின் உடைய விமோசனத்தில் இச்சை யுடையனான அதிகாரிக்கு–தத்வ த்ரயங்களும் உண்டே இதில் –

கர்ம லோகம் -விடாமல் செய்து ப்ராஹ்மணனுக்கு வெறுப்பு அடைந்து /கர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட லோகங்கள் என்றுமாம் -கர்மா சிதான் லோகான் -என்றுமாம் –
ஆராய்ந்து நிர்வேதம் பிறந்து -அம்ருத மயமான பகவத் பிராப்தி -அநித்யமான கர்மத்தால் அடைய முடியாது என்றுஅறிந்து
ப்ரஹ்ம நிஷ்டன் -சமிதபாணியாக ஆச்சார்யரை அடைந்து -தத்வ ஞானம் பெற -ஸ்ருதி சொல்லிய படி -இந்த சூர்ணிகை /
ஜாயமான கடாக்ஷம் -பெற்ற பின்பு சத்வ குணம் வந்து முமுஷுத்வம் பிறக்கும் -பின்பு தேட -ஆச்சார்யரை அடைந்து தத்வத்ரய ஞானம் பெறுகிறான் –
தத்வ ஞான உத்பத்திக்கு முன்னே முமுஷை ஜனிக்க கூடும் –
தத்வ ஞானம் மோக்ஷம் லாபம் அஞ்ஞானத்தால் சம்சாரம் –சகல சித்தாந்தம் சாதாரணம் – -சாங்க்யாதிகள் கூட ஒத்துக்க கொள்ளும் –
எது சம்சாரம் எது மோக்ஷம் எது உபாயம் இவற்றிலே தான் வாசி -விருத்த பிரதிபத்தி வி பிரதிபத்தி

ஆசை யுடையார்க்கு எல்லாம் -ஆசை இல்லாமல் இருந்தாலும் பரதந்த்ரனான ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கி இருந்தால் –
இது த்யாஜ்யம் அது உபாதேயம் என்ற ஞானமே போதும் –
ஆசை யுடையார்க்கு எல்லாம் -ஆசை இல்லாமல் இருந்தாலும் பரதந்த்ரனான ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கி இருந்தால் –
இது த்யாஜ்யம் அது உபாதேயம் என்ற ஞானமே போதும் –
சில ஸ்ருதி வாக்கியங்கள் -பேத அபேத சுருதிகள் -உண்டே -மூன்றையும் தான் எல்லா வாக்கியங்களையும் சொல்லும் என்றவாறே -தத்வ த்ரயமுமே வேதாந்த பிரதிபாத்யம்

ப்ரஹ்மத்தை மட்டுமே அறிந்தவன் மோக்ஷம் போகிறான் சொல்ல -எதுக்கு தத்வ த்ரயம் -என்று ஆஷேபம் இப்பொழுது
அதுக்கு சமாதானம் -சொத்து இல்லாமல் ஸ்வாமி இல்லையே -/ சேஷன் இல்லாமல் சேஷி இல்லையே /
நாராயணனே நமக்கே பறை தருவான்
/ப்ருதகாதமா நம ப்ரேரிராதம ச மதவா -ஜூஷடச் ததஸ தேனா மருத்தவ மீதி –பரமாத்மாவின் ப்ரீத்க்கு விஷயமான ஜீவாத்மா மோக்ஷம் அடைகிறான் –

————————————————-

சூர்ணிகை -2-

அவதாரிகை –
தத்வ த்ரயம் தான் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்-

தனோதி சர்வம் இதி /வியாபிக்கிறார் -தனோதி-தனு விஸ்தார -எங்கும் வியாபிப்பவர் -தத்வம் -தத்வம் என்றாலே பரமாத்மா சபிதார்த்தம்
தாநோதம் இல்லை தத்வம் -ப்ருஷோதரம் போலே ப்ருஷா உதரம் பெரிய உதரம் போலே -இங்கும் தத்வம்
நம-சமஸ்காரம் வணக்கம் ரூடி அர்த்தம் / நான் எனக்கு உரியன ஆலன் யோகார்த்தம்
பங்கஜம் -ஜலஜா தாமரை போலே ஜலத்தில் இருந்து பிறந்தது
தாது கொண்டு / உண்மை பொருள் என்று இரண்டு அர்த்தங்கள் தத்வம் அர்த்தம்
உத்தேச்யம் லக்ஷணம் பரிஷா மூன்றும் -அடையாளங்கள் சொல்லி ஆபேஷபம் வந்தாலும் விவரித்து விளக்கம் –
ஈஸ் நியமன சாமர்த்தியம் இயற்கையிலே உள்ள சாமர்த்தியம் –நியமிக்க ஆள் வேண்டுமே -வைசேஷிகன் யோகன் சொல்லும் படி இல்லை /
ஷரம பிரதான மமருதா ஷரம ஹர ஷராதமா நா வீசதேவ ஏக -அழியக்கூடியது பிரதானம்
-அக்ஷரம் தேய்வு இல்லாமல் மரண தர்மம் இல்லை -அதனால் அக்ஷரம் என்று சொல்லப்படும் ஆத்மா
ஹர-ஆத்மாவாசகம் ஜீவாத்மா /ஷரத்தையும் ஆத்மாவையும் நியமிப்பவன் ஒரே தேவன் ஈஸ்வரன்
ஸ்தான பிரமாணம் -இங்கு ஆத்மா -அமிருதம் அக்ஷரம் ஹரன் என்று சொல்லும் ஆத்மா -/

பிரதான ஷேத்ரஞ பத்திர குணேச -என்னக் கடவது இ றே-
பிரதானம் அசித் /
க்ஷேத்ரத்தை விளை நிலம் என்று அறிந்தவன் சேதரஞ்ஞன்/ ஷேத்ரமும் ஷேத்ரஞ்ஞானும் நான் -ஆகவும்– சா பி மாம் வித்தி –
என்னை அறிந்து கொள்ள வேண்டும் இதுவாகவும் அறிந்து கொள்ளவேண்டும் -மாயாவாத நிரசனம் -அபி சப்தம் –குணங்களுக்கு நியமனம் சர்வேஸ்வரன்

—————————————————-

அவதாரிகை –

உபதேச ( உத்தேச்ய)-கிரமத்திலே
தத்வ த்ரயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாக
திரு உள்ளம் பற்றி
பிரதமம் சித் தத்தவத்தை உபபாதிக்க உபரமிக்கிறார் –

சித் என்கிறது
ஆத்மாவை –

ஆப் நோதி -அடைகிறான் -கர்மத்தால் சரீரத்தையும் -கிருபையால் பகவத் ப்ராப்தியையும்
வியாப் நோதி – வியாபிக்கிறான் –சரீரங்கள் தோறும் ஞானத்தால்
ஜீவாதீதி ஜீவன் வாழும் முறைப்படி வாழ்கிறான் –பிறந்து பிறந்து அனந்த கோடி பிறவிகளில் வியாபித்து வாழ்கிறான் –
ஜித ஞானே -ப்ரத்யயம் லோபம் -சித்=ஞான ஸ்வரூபம் -ஞான ஆஸ்ரயம் -ஞானம் உடையவன் அறிகிறார் -சேதத்தி சித்
அறிவு உணர்வு அறிபவர் உணர்பவர் -அறியப்படுபவர் -அறிதல் என்ற கிரியை யுடையவர்
–சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ -என்று ஆளவந்தாரும்
அசேஷ சிச் அசித் வஸ்து சேஷினே-என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
அருளிச் செய்த வசனங்கள் உபய கோடியிலும் சேரும்
அச்சு எழுத்து குறைந்து -உள்ளதை முதலில் –சித் ஒரு எழுத்து / அசித் இரண்டு எழுத்து / ஈஸ்வர மூன்று
அர்த்தம் பலமாக சொல்லி இருந்தால் ஈஸ்வரன் முதலில் சொல்ல வேண்டுமே
அர்த்தம் பலிம் உடையதாய் -முதலில் வந்தே கோவிந்த தாதவ் / இதிஹாச புராணங்கள் போலே –

சித் சப்தம் ப்ரேஷோபலப்திச சித் சமவித பிரதிபத் ஜ்ஞப்தி சேதனா–பிரெஷா–உப லப்தி-சித் சமவித–பிரதிபத் –அமர கோசம்
தத் குண சாரத்வாத்–தத் வியாபதேச -பொருளில் எந்த குணம் பிரசுரமாக உள்ளதோ ஒளியுடையவன் ஸூ ர்யனை ஒளியாக சொல்வது போலே
ஆதாமாவை சித் என்று சொல்லலாமே -ஆத்மா ஞானத்தால் பூர்ணமாக இருப்பதாலே –
ஞான ஆஸ்ரயத்துக்கு பல ஸ்ருதி வாக்கியங்கள் உண்டே -மரணம் இல்லை அக்ஷரம் ஜீவன் ஹரி -தேவன் ஏகன் நியமிக்கிறார் –
யாக அந்தராக ஆத்மாநாம் யமயதி நியமிக்கிறானோ -ந வேத அறியவில்லையோ -யஸ்ய சரீரம் -பரமாத்மாவுக்கு சரீரம் -ஸூ பாலோ உபநிஷத்
ஆத்மா ஸூ த்த அக்ஷரம் -இயற்கையில் கர்மங்கள் தட்டாமல்
ஞான மயம் அமலன் முக்குணங்கள் குற்றங்கள் இல்லை அகங்கார மமகாரங்கள் இல்லை -ஸூ த்த ஆத்மாவுக்கு
ஞானத்தால் -செய்யப்பட்டவன் மய பிரத்யயம் -முதல் வேற்றுமை –
ஆத்மா மட்டும் சொன்னால் ஞானம் உடையவன் அர்த்தம் வராதே -வியாபகம் -என்றே கொள்ளும் -ஆகவே இரண்டுமே தேவை –

—————————————————
சூர்ணிகை -4-

அவதாரிகை –
இனி இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
இருக்கும் படி எங்கனே -என்கிற சங்கையிலே
ஆத்மா ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

ஸ்வம் ரூபம் –தானான தன்மை ஸ்வரூபம் -வடிவம் ரூபமும்–தானான ரூபம் -தன்னதான ரூபம் என்றவாறு -அசாதாரண ஆகாரம் இன்றியமையாத –
-13- லக்ஷணங்கள் -வாக்ய குரு பரம்பரை போலே
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு –தேகத்துக்கு உள்ளே நின்ற ஆத்மா
அதனுள் நேர்மை -இதை விட பெரிய ஈஸ்வரனையே அனுபவித்து இருந்த ஆழ்வார் -ஆத்மாவை பார்க்க வில்லை
நாம் தேகத்தையே பார்த்து கொண்டு ஆத்மாவை பார்க்க வில்லை -ஆழ்வார் –பாதி பாட்டு வரை மூன்றாம் பாட்டில் தன்னை பற்றி சொல்லி –
பிறர் நன் பொருளான ஆத்மாவை சொல்லி கட்ட அறிந்தார் –
காட்ட -நின்ற ஒன்றை உணர்ந்தார் ஆழ்வார் -அதனுள் நேர்மை -ஒன்றும் ஒருவருக்கும் அறிய முடியாதே -உணர்ந்து மேலும் காண்பது அறிவித்து
சென்று சென்று -பரம் பாரமாய் -ஐந்து தடவை சொல்ல சந்தஸ் இல்லை பஞ்ச கோசம் / அன்னமயமோ / பிராண மயமோ / மனோ மயம் / விஞ்ஞான மயம் / ஆனந்த மயம்
சுருதிகள் ஸ்ம்ருதிகளை சொல்லாமல் -8–8-தத்வ தர்சி வசனம் முக்கிய பிரமாணம் -வைதிகர் மனத்தை பின் தொடர்ந்து வேதம் போகும்-
விதயச ச வைதிகாச த்வதீய கம யீரமேநோ நுசாரிண—20-என்று இறே பரமாச்சார்யர் அருளிச் செய்தது – -ஸ்தோத்ர ரத்னம்
வேதத்த்தை உணர்ந்து நடக்கும் ஆச்சாரம் பரம பிரமாணம் -வேதங்களும் -தர்மஞ்ஞான் சமயம் -வேதம் -அக்ஷரம் குறைந்தாலும் பலம் அதுக்கு அதிகம் -அர்த்தம் வலிமை –
சொல்லும் அவித்து ஸ்ருதி -திண்ணை பேச்சே சாஸ்த்ர அர்த்தம் ஆகுமே -பர்வத அணு வாசி -ரிஷிகளை விட ஆழ்வாருக்கு உண்டே
விரோசனன் இந்திரன் போன்றாருக்கு உபதேசித்த ப்ரஹ்மா -சரீரம் -அன்னம் —பிராணன் -மனோ — விஞ்ஞானம் –அனுகூல ஞானம் -ஆனந்தம் –
ஆனந்தமயம் சொன்னால் ஸ்வ தந்த்ரன் என்ற புத்தி வருமே -பரமாத்மா ஸ்வரூபம் சொல்லி அப்புறம் அருளிச் செய்த ஆழ்வார் பாசுரம் முதலில் காட்டி
பிரதானம் பிரசித்தமாக நாம் நினைத்து இருப்பதை முதலில் இல்லை என்று காட்டி -அப்புறம் இப்படி என்று காட்டி சொல்லி
புத்தி -மஹான் -தத்வம் -பிரக்ருதியில் முதல் விகாரம் -அதுவோ இது என்ற சங்கை வரும் –
இங்கு புத்தி என்றது ஞானத்தை -அறிவு என்றவாறு -அறிவே ஆத்மா என்றால் ஒரே தத்வம் -அனுபவம் மட்டுமே என்று இல்லை
ஞானத்தை காட்டில் வேறுபட்டு அஞ்ஞானம் இல்லை ஞானம் ஆஸ்ரயம் என்றவாறு –

————————–

சூர்ணிகை -5

ஆத்ம ஸ்வரூபம்
தேஹாதி விலஷணம்
ஆனபடி
என்
என்னில்-

சோதனம் -ஆராய்ந்து பரிசோதித்து -அரிசியை சோதித்து கல் மண் எடுத்து என்றவாறு -சோதனம் –
உபதேசம் லக்ஷனை பரீஷை -மூன்றும் வேண்டுமே –

தேஹம் அநேக அவயவ சங்கா தாத்மகம்- சங்காத்மகம் -கூட்டம் சங்கமம் –
அநேக சேதன உபலப்தி அனுபவம் பிரசங்கிக்கும் -அவயவங்களை சைதன்யம் கொண்டால் / என் கண் என் காது சொல்ல முடியாதே
எனக்கு தலைவலி -நான் தலைவலி
என் வயிறு பசிக்கிறது -எனக்கு பசி தெரிகிறது / எனது மனஸ் ஒத்துக் கொள்ளவில்லை -புத்தி ஒத்துக் கொள்ள வில்லை தப்பு –நான் வேறே மனஸ் புத்தி வேறே

என் உயிரை அறவிலை செய்தனன் சோதி -என்னுடைய ஆத்மாவை என்றால் நான் யார் —
மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதம் இல்லாமையாலே –

நான் கர்த்தா- மனஸ் கரணம்- நினைத்தால் கார்யம் –மனஸ் ஆத்மாவாக கூடாதே

———————

சூர்ணிகை -6-

-தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்-

ஆதி -இந்திரிய பிராணன் மனஸ் புத்தி போன்றவை
நான் -என்பதற்கு ஆத்மா விஷயமாகும் என்னுடைய மமதா புத்தி -இவை விஷயமாகும் –
என்னுடைய புத்தி ஞானம் தர்ம பூத ஞானம் -சங்கோசம் விகாசம் அடையும் -தர்மி ஞானம் மாறாது –

——————–

சூர்ணிகை -7

இந்த உக்திகளுக்கு
கண் அழிவு யுண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே
ஆத்மா -தேஹாதி விலஷணனாகக்
கடவன்

ஸ்ருதின் நியாதி பேதம் –ஸ்ருதி யுக்தி -இரண்டையும் -வேதார்த்த ஸங்க்ரஹ இரண்டாவது மங்கள ஸ்லோகம் /பாத்மோத்தர புராணம் /
ஜடபரதர் ரகுகுணன் சம்வாதம்

———————

சூர்ணிகை -8

அஜடமாகை யாவது
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை –

முதல் விலக்ஷணம் பார்த்தோம் -அடுத்து -அஜடம் -/ ஜடம் -ஸ்வயம் பிரகாசமாய் இருக்காதே / விளக்கு தானே பிரகாசிக்கும் -தானே தோற்றும்
வஸ்துக்கள் பிரமாணம் பிரமேயம்–பிரமேயத்தை -த்ரவ்யம் அத்ரவ்யம் -மாறும் தன்மை த்ரவ்யம் உபாதாளத்வ தன்மை உண்டே மண் போலே
த்ரவ்யம் பிரித்து ஜடம் அஜடம் -/ ஜடம் -24-தத்வங்ககள்-கால தத்துவமும்
அஜடம் -பிரத்யக் பராக் அர்த்தம் —ஸ்வஸ்மை பிரகாசத்வம் தனக்குத் தோற்றும் / தானே பிரகாசிக்கும் தனக்கு பிரகாசிக்கும் -தனக்குத் தானே பிரகாசிக்கும் -ஸ்வயம் ஸ்வஸ்மை –
அஜடம் ப்ரத்யக் -ஜீவனும் பரனும்
அஜடம் பராக் -நித்ய விபூதி தர்ம பூத ஞானமும் -தானே பிரகாசிக்கும் கோடி ஸூ ர்ய சமானம்
ஹிருதய நதர் ஜ்யோதி புருஷ -என்றும்
அதராயம புருஷச ஸ்வ யமஜயோதிர் பவதி -என்றும்–மனத்துள்ளான்-
விஞ்ஞானகன -என்றும்-கணம் -அதுவேயாக இருத்தல் உப்புக்கட்டி போலே -கட்டடங்க ஞான ஆனந்த மயன்
ஆத்மாஜஞானமய- என்றும்
தச்ச ஞானமயம் வயாபிஸ்வ சமவேதயமநூபமம -என்றும்–நிகர் அற்ற ஓத்தார் மிக்கார் இல்லாதவன்
ஆத்மா சமவேதயம் தத ஜ்ஞானம் –ப்ரஹ்ம வித்யையே ஞானம் -என்றும்
சொல்லக் கடவது இ றே-

—————————————

சூர்ணிகை -9

ஆனந்த ரூபமாகை யாவது
ஸூ கரூபமாய் இருக்கை –

அனுகூல ஞானம் ஆனந்தம் -ஸ்வ ஏவ இஷ்டத்வம்/ ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –

————————

சூர்ணிகை -10
உணர்ந்தவன்
ஸூகமாக உறங்கினேன்
என்கையாலே
ஸூக ரூபமாகக்
கடவது –

மெதுவாக நடந்தேன் கிரியையில் அந்வயிக்கும் விசேஷணம்
நன்றாக தூங்கினேன் -ஆத்மா இடம் அன்வயம் -தூக்கத்தில் இல்லை -இயற்க்கை -தூங்கும் பொழுதும் ஸூகம் ஆத்மாவில் அன்வயம்
நான் நேற்று இனிதாக பாடினேன் -இனிமையை நினைக்கலாம் -இப்பொழுது
அது போலே நன்றாக நேற்று தூங்கினேன் -என்பது இல்லை -தூங்கும் பொழுதே நன்றாக நான் உணர்ந்தமையை சொன்னதாகும்
தூங்கும் பொழுதே ஸூகம் அனுபவித்தேன் -கருவி ஆத்மா விழித்து இருந்து ஸூ கம் அனுபவம் —

——————————————-

சூர்ணிகை -11

நித்யமாகை யாவது
எப்போதும் யுண்டாகை –

நித்யமாவது சர்வ கால வர்த்தித்வம்

மூன்றாவது அடையாளம் -நித்யம் -எப்போதும் உண்டாகை–யஞ்ஞா ப்ரச்னம்-கொக்கு வடிவில் தர்ம புத்ரரிடம் – –
எது ஆச்சர்யம் ஒன்பது வாசல் திறந்து இருக்க போகாமல் இருப்பதே ஆச்சார்யம் -அதை விட ஆச்சர்யம்
போவார்கள் -போனாலும் நாம் நித்யம் என்று தூக்கி கொண்டு இருப்பவர் தாம் நித்யம் என்று நினைப்பது போலே

———————————————————————————————–

சூர்ணிகை -12-

எப்போதும் யுண்டாகில்
ஜன்ம
மரணங்கள்
யுண்டாகிற படி என் என்னில்
ஜன்மமாவது தேக சம்பந்தம்
மரணமாவது தேக வியோகம் –

நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் அசித் தான் -/ ஆத்மாவை மட்டும் சித் -சேதனன் பரம சேதனன் -ஆத்மா பொதுவாக -ஜீவாத்மா பரமாத்மா விசேஷித்து சொல்கிறோம்
ப்ரத்யக் –
அசித்தாக இருந்தே அஜடம் நித்ய விபூதி தர்மபூத ஞானம் –பராக் தத்வம் -ஆனந்த ரூபமாக இருக்காதே -தனக்குத் தானே பிரகாசிக்காதே
நான்கும் -ஸ்வயம் பிரகாசம் –
அஜடம் -ஆனந்த ரூபம் -வாசி உண்டே -ஸ்வரூபம் ஸ்வ பாவம் இரண்டும் ஞானம் —
தத்வ த்ரயங்களும் நித்யம் தானே / உத்பத்தி விநாசங்கள் இல்லை என்றாலும் -/ விகாரங்கள் பரிணாமங்கள் உண்டே -மண் பரிணமித்து குடமாகும்-இதுவே உத்பத்தி
பிரளய காலத்தில் மண்ணும் இல்லை-எல்லாம் முன் தத்வம் லயம் அடைந்து -முன் நிலை அடைவதே பிரளயம் –
சமஷ்டி அசித் -பிரகிருதி நித்யம் -அது அழியாதே –சர்வ சக்தன் சத்ய வாக்யன் சத்ய ஸங்கல்பன் -அழிக்க மாட்டேன் வாக்கு கொடுத்து -ஆத்மா பிரகிருதி நித்யம் /
பிரகிருதி –சிறு பகுதி -விகாரம் அடைந்து -மஹான் -விகாரம் அடைந்து அஹங்காரம் -பிருத்வி தான் விகாரம் ஆகும் வேறே ஒன்றை உண்டாக்காது /
அவ்யக்தம் -மாறாத பிரகிருதி நிறைய உண்டே -/ ப்ரஹ்மத்தின் சிறிய பகுதி பிரகிருதி /
சதேவ சோமயா ஏக மேவ அத்விதீயம் ஒன்றாகவே இருந்தது சொல்வது -ஏகத்துவம் -நாம ரூப-அக்ரே ஏக ரூப -முன்னால் ஒன்றாகவே இருந்தது
இப்பொழுது கண்ணால் பார்ப்பன பலனாக இருந்ததை கண்டான் பிள்ளை -பிரளய தசையில் ஒன்றாக இருந்தன –
இப்பொழுது நாநாவாக-ஒன்றாக -நாம ரூப வேறுபாடு இல்லாமல்
ப்ரஹ்மதின் ஒட்டி உள்ள ஓன்று மாறுவது -உபாதானம் கார்யம் -ப்ரஹ்மதுக்கு விகாரம் இல்லை நித்யம் நிர்விகாரத்வம்
உபாதானம் வர மாற வேண்டுமே -ஸ்வரூபத்தில் மாறாது -சரீரம் மாறுவது போலே –
கர்மாதீனம் மாறி கிருபாதீனம் வர வேண்டும் -உனக்கு ஒரு சொல் மா ஸூ ச -எனக்கு வாழ்வு -ஆழ்வார் -சங்கல்ப ரூப ஞானம் -\
ஜ்ஞா ஜஜௌ த்வா அஜவ் வீச நீசௌ—இருவரும் பிறப்பிலி நித்யர்

——————————–

சூர்ணிகை -13-

அணுவான
படி
என்
என்னில் –

———————-

சூர்ணிகை -14-

ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப் போவது
வருவதாம் என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா
அணுவாகக்
கடவது –

ஹ்ருதிஹயே வாயமாதமா -என்று ஹிருதய ஸ்திதியையும்
தேன பரதயோ தே நைஷ ஆத்மா நிஷகராமதி சஷூ ஷோவா
மூதா நோவா அநயே பயோவா சரீரே தேசப்ய–கௌஷீக உபநிஷத் -பரியங்க வித்யை -என்று உதக்ரமணததையும்–புறப்பட்டு போவது -ஓவ்டுலோமி -விடுபட்டு மேலே சென்று -அர்ச்சிராதி கதி மார்க்கம் வழி சென்று
யேவைகே சாச்மால லோகாத பரய நதி சந்தரமசமேவ தே சர்வே கச்சந்தி -என்று கமநததையும்–தூ மாத்தி மார்க்கத்தல் சந்த்ர மண்டலத்தில் இருக்கும் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் எட்டாவது லோகம் இது
தசமால லோகாத புனரேத் யசமை லோகாய காமேண -என்று ஆகமனததையும்–திரும்ப வருகிறான் சந்த்ர மண்டலத்தில் இருந்து
நிர்தோஷ பிரமாணமான வேதாந்த சாஸ்திரம் சொல்லுகையாலே
அணுவாகக் கடவது -என்கை–வியாபிக்காமல் -ஏக தேசத்தில் இருக்கும்
ஸ்தூலம் சூஷ்மம் -கண்ணால் கிரஹிக்க முடியாது / அணு விபு அளவில் சிறியது பெரியது / ப்ரஹ்மம் ஸூஷ் மம் -விபு எங்கும் இருப்பார் –
பிரகிருதி ஸூ ஷ்மம் பிராகிருத பதார்த்தங்கள் ஸ்தூலம் / ஆத்மா ஸூஷ்மாம் அணு /
விபுவாகில் இவை ஒன்றும்–கிளம்புவது போவது திரும்புவது இவை கூடாது இறே–
சூத்ரகாரரும் ஆத்மவினுடைய அணுத்வம் சாதிக்கிற அளவில்
உத்கரா நதி கதயாகதீ நாம -என்று இவற்றாலே இறே முந்துற சாதித்தது-
ஏஷ அணுராத்மா சேதஸா வேதிதவ்ய -என்றும்
வாலாகர சதா பாகச்ய சத்தா கலபித சயச பாகோ ஜீவசச விஜ்ஞ்ஞேய -நெல்லின் நுனி பங்கு இத்யாதி -என்றும்
ஆராகர மாதரோ ஹயவரோபி திருஷ்ட –ஊசி நுனியைக் காட்டிலும் ஆல்பம் -என்றும்
ஸ்வரூப அணு மாதரம் சாத ஜ்ஞானானந்தயைக லஷணம்-
தரசரேணு பரமாணா ச தே ரசமகோடிவிபூஷிதா —இத்யாதி
ஸ்ருதி ச்ம்ருதிகளாலும்
ஆத்மாவினுடைய அணுத்வம் சம்ப்ரதிபன்னம் –

——————————–

சூர்ணிகை -15

இப்படி இருக்குமாகில் -சர்வ சரீர அவயாபியான ஸூக துக்க அனுபவம்
எங்கனே என்கிற சங்கையை
அனுவதிக்கிறார் —ஹிருதய சிகிச்சை -ஆத்மாவை வெட்டவோ நினைக்கவோ கூடாதே –
சமவாயம் சேர்க்க -நூல் நூல் உடன் சேர்ந்து -ஸ்ரீ பாஷ்யம் விசாரம் -உண்டை பாவு வைத்து -நிரூபிக்கிறார்

அணுவாய்
ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில்
ஸூக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –

அதாவது
அணு பரிமாணமாய ஹிருதய பிரதேச மாத்ரத்திலே நின்று விடுமாகில்
பாதே மே வேதனா சிரசி மே வேதனா
பாதே மே ஸூ கம் சிரசி மே ஸூ கம் -என்று
ஆபாதசூடம் சரீரம் எங்கும் ஒக்க
ஸூ க துக்கங்களை புஜிக்கிற படி
எங்கனே என்னில் -என்கை —

———————————————

-சூர்ணிகை -16-

அதுக்கு உத்தாம் அருளிச் செய்கிறார் –

மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்திலே இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வ்யாபிக்கையாலே
அவற்றைப் பூஜிக்கத்
தட்டில்லை –

அதாவது
மணி த்யுமணி தீபாதிகள் ஆகிற பரபாவாத பதார்த்தங்களை
ரத்னம் ஸூ ர்யன் தீபம் போன்றவை ஏக தேசஸ்தங்களாய் இருக்கச் செய்தேயும்
தத் பிரபை சுற்று எங்கும் வ்யாபிக்கிறாப் போலே
ஆத்மா ஹிருதய பிரதேசத்திலே இருக்கச் செய்தேயும்
தத் தர்மமான -ஆத்ம தர்மமான -ஜ்ஞானம் எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே
சரீரம் எங்கும் ஒக்க ஸூக துக்கங்களை
புஜிக்கைக்கு ஒரு பிரதி ஹதி இல்லை -என்கை
இது தான்
குணாத வாலோகவாத -என்கிற ஸூதத்ர அர்த்தம் —குணமாக இருக்கும் தர்ம பூத ஞானத்தால் அனுபவம்
வாசபதோ–வா சப்தமானது – மதா நதர வ்யாவ்ருத்ததயா தத ஆத்மா
ஸ்வ குணேன ஜ்ஞாநேன சகல தேக அவஸ்தித
ஆலோகவத யதா மணி தயுமணி ப்ரம்ப்ரு வ்யாபியா தீ நாம ஏக தேச வர்த்தித்தி நாம ஆலோக
அநேக தேச வயாபீ தருச்யதே ததவத ஹிருதய சத சயாத
மநோ ஜ்ஞானம சகல தேஹம் வ்யாப்ய வர்த்ததே
ஜ்ஞாது பரபா ஸ்தாநீயச்ய ஜ்ஞானச்ய ஸ்வ ஆஸ்ரயாத் நாய்தர வருத்ததி

மணி பிரபாவத உபயதயாத இதி பிரதம சூத்ரே சதாபிதம் -என்று இறே இதுக்கு ஸ்ரீ பாஷ்யம்

இப்படி ஜ்ஞான வ்யாப்தியாலே சர்வத்தையும் புஜிக்கும் என்னும் இடம்
பருக தாரண்யத்திலே சொல்லப் பட்டது –
பிரஜ்ஞயா வாசம சமாருஹ்ய வாசா சர்வாணி நாமா நாயாப் நோதி–வாக்கை அடைந்து எங்கும் அடைகிறார்
பிரஜ்ஞயா கராணம சர்வான் கந்தா நாப நோதி–மூக்கால்
பிரஜ்ஞயாசஷூஸ் ச மாருஹ்ய சஷூஷா சர்வாணி ரூபாண ஆப்நோதி-கண்ணால்
பிரஜ்ஞயா ஸ்ரோத்ரம் சமாருஹ்ய ஸ்ரோதரேண சர்வாஞா
சபதா நாப நோதி–காதுகளை அடைந்து -சளைக்காமல் சொல்லும் உபநிஷத் -ஆத்மா ஞானத்தால் அடைந்து ரசம் அனுபவம்
பிரஜ்ஞயா ஹசதௌ சமாருஹ்ய ஹஸ்தாப்யாம சர்வாணி கர்மாண்யாப நோதி–கைகளை
பிரஜ்ஞயா சரீரம் சமாருஹ்ய சரீரேணஸூ க துக்கே ஆப் நோதி–சரீரம்
பிரஜ்ஞயா அபசதம சமாருஹ்ய உபசதே நானா நதம ரதிம பரஜாம சாப நோதி-
பிரஜ்ஞயா பாதௌ சமாருஹ்ய பாதாபயாம சர்வா கதீர் ஆப்நோதி–கால்களை
பிரஜ்ஞயா தியமா சமாருஹ்ய தியா விஞ்ஞா தவயமா காமமாப நோதி -அறிய வேண்டிய அனைத்தையும் அறிகிறான்
என்று இப்படி சொல்லுகையாலே –

—————————————————–

சூர்ணிகை -17-

ஏக சரீர மாதரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை
பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வயாபதியாலே யாக
வேண்டாவோ -என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஒருவன் ஏக காலத்திலே
அநேக தேஹங்களைப்
பரிக்ரஹிக்கிறதும்
ஜ்ஞான வ்யாப்தியாலே –

ஒருவனுக்கே அநேக தேக பரிக்ரஹம் கால பேதத்தாலே
சம்பவிக்கும் இறே-
அத்தை வ்யாவர்த்திக்கைக்காக
ஏக காலத்திலே–யுகபத் -என்கிறது
ஏக காலே அநேக தேக பரிக்ரஹம்
சௌபரி பரப்ருதிகள் பக்கலிலே
சம்பிரபன்னம் இ றே –கூடு விட்டு கூடு பாய்வார்கள் உண்டே அவர்களை பரப்ருதிகள்

———————————————

சூர்ணிகை -18-

அவயகதம் ஆகையாவது
கட படாதிகளை
க்ரஹிக்கிற சஷூராதிகளாலே
தோற்றாது இருக்கை —அவ்யக்தம் அச்சித்தயா அவிகாராய -ஸ்ரீ கீதை-2–25- -சோகம் வர ப்ரமேயம் இல்லை
வியக்தம் புலன்களுக்கு புலப்படும் –

சதேதா நாதி யோக யானி கடபடா தீனி வஸ்தூனி யை
பரமாணைர் வ்யஜயனதே
தைரயமாத்மா ந வயஜயதே இதய வயகத -என்று இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தது
வெட்டுவதற்கு யோக்யதை யுடைய கடம் படம் -பிரத்யக்ஷம் மூலம் அறியப்படுவது போலே அவற்றால் அறிய மாட்டாய்
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார்
இங்கன் அன்றிக்கே
ஒரு பிரமாணத்தாலும் தோற்றாது இருக்கை என்னில்
துச்சத்வம் வரும் இறே–வஸ்துவே இல்லாத தன்மை
ஆகையாலே
மானஸ ஜ்ஞானம் கம்யம் இத்தனை யல்லது
ஐன்திரியக ஜ்ஞான கம்யம் அன்று என்கை–மன்னன் உணர்வு அளவிலன்-ப்ரஹ்மம் – பொறி உணர்வு அவை இலன் -மனசுக்கு விஷயம் ஆகும் இங்கு
அவ்யக்த சப்தார்த்தம்
சென்று சென்று பரம் பரமாய் -என்று தொடங்கி
ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிற ஆழ்வாரும்
ஞானம் கடந்ததே -என்று
ஐந்திரிய ஞான அகோசரத்வத்தை இறே அருளிச் செய்தது-
இந்த்ரியங்களால் ஏற்படும் ஞானத்தை கடந்து நிற்கும் -மனசுக்கு அறியலாம் –

——————————————————

சூர்ணிகை -19-

அசிந்த்யமாகை யாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது
இருக்கை –
சிந்தித்து பழகியவை அசித் -ஆத்ம த்யானம் கைகூடுவது எப்படி –பிரத்யக்ஷம் பார்த்து சிந்திக்க முடியாதே

அதாவது
யத சதேத யாதி விசஜாதீயஸ் தத ஏவ சர்வ வஸ்து விசஜாதீ யத வேன
தத் தத் ஸ்வ பாவ உக்தயா சிந்தயதிம் அபி நார்ஹ -என்று இறே
இதுக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது-2–25-ஸ்லோகம்
சேதனம் வெட்ட அகப்படும் ஜாதி அசித் -அதில் இருந்து வேறு பட்ட -அவற்றை போலே நினைக்க யோக்யதை இல்லை
இதை போலே என்று சொல்ல முடியாது என்றபடி –
ஆகையாலே இவரும் இப்படி அருளிச் செய்கிறார் –
இங்கன் அன்றிக்கே
அச்சிந்த்யத்வம் ஆவது
ஒருபடியாலும் சிந்திக்கைக்கு யோக்யம் அன்றிக்கே இருக்கை என்னில் –
ஆத்மா ஸ்வரூப விஷயமான சரவண மனனாதிகளுக்கு வையர்த்த்யம் பரசங்கிக்கும் இறே–வேத வாக்கியம் வீணாகுமே
ஆகையால் அசித் சஜாதீய புத்த்ய அநாஹத்வமே அசிந்த்ய சப்தார்த்தமாகக் கடவது –
ஆக
அவ்யக்தோயம சிந்தயோயம -என்று
கீதா உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தபடியே –
இவரும்
ஆத்மா ஸ்வரூப வைலஷண்யம் பர கட நார்த்தமாக இவ்விடத்திலே அருளிச் செய்தது –

————————————————-

சூர்ணிகை -20-

நிர்வவவமாகை யாவது
அவயவ சமுதாயம் அன்றிக்கே
இருக்கை –
அதாவது –
விஞ்ஞான மய-என்றும்
விஞ்ஞான கன-என்றும்சொல்லுகிறபடியே
ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே
அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை –
சரீரத்துக்கு தானே அவயவ சமுதாயம் உண்டு -ஞான வடிவாகவே இருப்பார் -எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் –

——————————————————–

சூர்ணிகை -21-

நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை–

அதாவது –
அம்ருதாஷர மஹர-என்றும்–மரணம் இல்லா தன்மை ஆகையால் அக்ஷரம் -தேய்த்தல் இல்லை வளருதல் இல்லை -நிர்விகாரம்
ஆத்மா சுத தோஷர -என்றும்
அஷர சப்த வாஸ்யமான வஸ்துவாகையாலே
ஷண ஷரண ஸ்வ பாவம் ஆகையாலே–க்ஷணம் தோறும் விகாரம்
ஷர சப்த வாஸ்யமான அசித்துப் போலே விகரிக்கை அன்றிக்கே
சதைக ரூபமாய் இருக்கை
ஆகை இறே-அவிகார்யோயம் -என்று கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தது –

—————————————————————–

சூர்ணிகை -22-

அவதாரிகை –
ஏவம் பரகாரமாகையாலே சசேதயாதி
விசஜாதீயமாய் இருக்கும்
என்கிறார் மேல் –

இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம்
அக்னி
ஜலம்
வாதம்
ஆதபம்
தொடக்க மானவற்றால்
சேதித்தல்–சேத்தா/ சேதனம் கிரியை /சேத்யம் வெட்டப்படும் பொருள் –
தஹித்தல்
நனைத்தல்
சோஷிப்பித்தல்
செய்கைக்கு
அயோக்யமாய் இருக்கும் –
கத்தியால் வெட்டுவது இல்லை -நெருப்பு கொளுத்துவது இல்லை தண்ணீர் நனைப்பதில்லை காற்று உலர்த்துவது இல்லை
சொல்லிய பின்பு
வெட்டுப்படவோ கொளுத்தப்படவோ பாடவோ -நனைக்கப்படவோ -உலர்த்தப்படவோ

இப்படி அவயவகததவாதிகளை நாலையும்
அநு பாஷிக்கிறது ஆதல்
நிர்விகாரத் மாதரத்தை யாதல்
அதாவது
சஸ்த்ராக நயாதிகளை சதேதநதஹ நாதிகளை பண்ணும் போது
தத் வஸ்துக்களில் வியாபித்து செய்ய வேண்டுகையாலும்–அளவிலே சின்னதாக இருந்தால் தானே முடியும் -ஆத்மா தான் அணு -அனோர் அணுயாம்
நியந்த்ருத்வம் தாரகத்வம் உண்டே -இவற்றால் உள்ளே புகுந்து செய்ய முடியாதே
ஆத்மா சர்வ அசித் தத்வ வியாபகன் ஆகையாலே
அவற்றில் காட்டில் அத்யந்த சூஷ்ம பூதன் ஆகையாலும்
வ்யாப்யமாய் ஸ்தூலமாய் இருக்கிற இவை
வியாபகமாய் சூஷ்மமான ஆத்மவஸ்துவை
வியாபித்து விகரிப்பிக்க மாட்டாமையாலும்
சஸ்த்ரா கனி ஜல வாதா தபாதிகளால் வரும்
சதேதன தஹன கலேதன சோஷணங்களுக்கு
அநாஹமாய் இருக்கும் என்கை –

நை நம சசி ந்த நதி சஸ்த்ராணி
நை நம தஹதி பாவக
ந சை நம கலே தயன தயாபோ ந சோஷயதி மாருத
அசசேதயோ யமதஹா யோயமகலே தயோ சோஷய ஏவ ச
நிதய சசாவகதச சதாணு ரசலோயம் சதாதன -என்று அருளிச் செய்தான் இ றே –
நித்யம் -எங்கும் வியாபித்து -நிலை பெற்று -விகாரம் அற்று இருப்பார் அநாதி சனாதன –

————————————————–

சூர்ணிகை -23-

அவதாரிகை –

இப்படி நிர்விகாரமான ஆத்மவஸ்துவுக்கு
பரிணாமித்வம் கொள்ளுகிற
ஆர்ஹத மதம் ஆயுக்தம் என்னும் இடத்தை
தர்சிப்பிக்கிறார் மேல் –ஜைனர்கள் வாதம் -நிரசனம்
ஆனை அளவு எறும்பு அளவு ஆத்மா என்பர்

ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணன்
என்றார்கள் –

ஆர்ஹதர் ஆகிறார் –
ஜைனர் அவர்கள் -பாதமே வேதனா -இத்யாதி பரகாரேண
ஆபாத சூடம் தேஹத்தில் யுண்டான துக்காதய அனுபவம்
ஆத்மா தேக பரிணாமம் அல்லாத போது கூடாது
நாம் சொன்ன பிரமாணம் கொண்டே தப்பான அர்த்தம் கல்பிக்கிறார்கள் –
ஆகையால்
ஆத்மா ஸ்வ கர்ம அனுகுணமாக பரிகரஹிக்கும்
கஜ பீபிலாதி சரீரங்களுக்கு அனுகூலமாக பரிணமித்து-யானை எறும்பு -உடல்களை போலே என்றவாறு
எப்படி பெருக்கும் இளைக்கும் —
தத் தத் ஏக பரிமாணனாய் இருக்கும் என்று இ றே சொல்லுவது –
அத்தை அருளிச் செய்கிறார் -தேக பரிமாணன் -என்றார்கள் -என்று-

————————————————

சூர்ணிகை -24-

அவதாரிகை –

அத்தை நிராகரிக்கிறார் –

அது
ஸ்ருதி விருத்தம் –

இவ்விடத்தில் இவர்க்கு விவஷிதையான ஸ்ருதி ஏது என்னில்
அம்ருத அஷர மஹர -என்று
ஆத்மாவினுடைய நிர்விகாரத்வ பிரதிபாதிகையான–ஸ்ருதி பெண் பால் ஸ்த்ரீ லிங்கம் –
ஸ்ருதி யாக வேணும் —என்ன ஸ்ருதி மூல கர்த்தா சொல்லவில்லை -அதனால் இப்படி இருக்க வேணும் -அவருக்கு பல தெரியும் –
மரணம் இல்லாத குறைதல் விகாரம் இல்லாமல் ஆத்மா -என்றவாறு
தேக பரிமாணன் என்கிற பஷம் ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் -என்று–பிறவி மாறும் பொழுது ஆனை எறும்பாகலாமே-
விகாரம் கூடாதே
இவர் தாமே தத்வ சேகரத்திலே அருளிச் செய்கையாலே –
ஏஷ அணுர ஆத்மா —
வாலாகரசத பாகசய -இத்யாதி
ஸ்ருதிகளும் தேக பரிமாண பஷத்துக்கு பாதிகைகள் ஆகையாலே
அவற்றையும் இவ்விடத்திலே சொல்லுவாரும் உண்டு –

———————————————————-

அவதாரிகை –

ஏதத் விஷயமாக தூஷணாந்தரமும்
அருளிச் செய்கிறார் –

அநேக தேகங்களை
பரிக்ரஹிக்கிற
யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யமும் வரும் –

அதாவது
தேக பரிமாணம் -என்னும் பஷத்தில்
சம் சித்த யோகராய்
சௌபரியைப் போலே ஏக காலத்திலே அநேக தேகங்களை பரிகிரஹிக்கும் அவர்களுக்கு
தங்களுடைய ஸ்வரூபத்தை அநேகமாக சினனமாக்கிக் கொண்டு-வெட்டிக் கொண்டு –
அவ்வவ தேகங்களை பரிக்ரஹிக்க வேண்டி வரும் என்கை –
பரகாய பிரவேச முகேன அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு
ஸ்தூலமான சரீரத்தை விட்டு சூஷ்மமான சரீரத்தை பரிக்ரஹிக்கும் அளவில்
இதுக்கு எல்லாம் அது அவகாசம்–இடைவெளி – போராமையாலே சைதில்யம் வரும் என்னவுமாம் –
ஏவஞ்சாதமாகார்தச நயம-2–2-பாதத்தில் -என்கிற சூத்ரத்திலே சொல்லுகிறபடியே
தேகத்து அளவு ஆத்மா என்றால் குறை வருமாம் -அணு அளவு என்றால் அது தான் நிறைவு
அல்ப மகத பரிமாணங்களான கஜ பீபிலிகாதி சரீரங்களை
ஸ்வ கர்ம அனுகுணமாக
பரிஹரிக்கும் அவர்களுக்கு
கஜ சரீரத்தை விட்டு பிபீலிகா சரீரத்தை பரிஹரிக்கும் அளவில்
கஜ சரீர சம பரிமாணமாய் இருக்கும் அந்த ஸ்வரூபத்துக்கு
பிபீலிகா சரீரம் அவகாசம் போராமையாலே
சைதில்யம் வரும் என்று
இங்கனே இவ்வாக்யத்துக்கு யோஜித்தாலோ என்னில்
யோகிகள் ச்வரூபதுக்கு என்கையாலே
அது இவ்விடத்தில் இவருக்கு விவஷிதம் அன்று-

——————————————————–

சூர்ணிகை -26

ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஞானத்துக்கு
இருப்பிடமாய்
இருக்கை –
ஏக தத்வ வாதம் நிரசனம் –

ஞானமாவது–ஆத்ம தர்மம் –
ஸ்வ சத்தா மாத்ரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தைப் பற்றி
ஸ்வ பர வ்யவஹாரத்துக்கு உடலாய் இருப்பதொரு
ஆத்மா தர்மம்
இதுக்கு ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் இரண்டும் தேஜோ த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயமாய் இருக்குமா போலே
இரண்டுமே தேஜஸ் பதார்த்தங்கள் தீபம் ஜ்வாலா – பிரபா வெளிச்சம் -அகல் விளக்கை சொல்லவில்லை -தீபம் என்று /
தானும் ஜ்ஞான ஸ்வரூபனாய் இருக்கச் செய்தே
ஸ்வ தர்மமான ஜ்ஞானத்துக்கு–தர்ம பூத ஞானம் -தர்மமாக இருக்கக் கூடிய அறிவு என்றபடி பூதம் =இருப்பு என்றபடி தன்னை ஒழிய
ப்ருதக் ஸ்திதி யுபலமபங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாய் இருக்கை–தனித்து நிற்காதே -வெளிச்சம் மட்டும் தீபம் இல்லாமல் இருக்காதே
தூபம் கமழ–வெளிச்சம் வாசனை மட்டும் வந்து த்ரவ்யம் கண்ணில் படாமல் -நாயனார் -தூ மணி மாடம் பாசுரம் வியாக்யானம்
ஆத்மா ஞானம் இரண்டும் ஞானத்தால் ஆனவை -ஞானமயமான ஆத்மா தனது தர்மமான ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ஆத்மா த்ரவ்யம் -உபாதாளத்வம் உண்டே -ஸூ க துக்கங்களால் மாறும்– ஞானம் என்றும் சொல்லலாம்
பண்பும் த்ரவ்யமும் -கமன ஆகமனங்கள் உண்டா
ஞானம்ஞா த்ரவ்யம்ன மட்டும்த்து இல்லை குணமாகவும் இருக்கும்க்கு
அத யோ வேதேதம ஜிகராணீதி ச ஆத்மா மனசைவை
தானகாமா நபசய நரமதே–முகருகிறேன் என்று தெரிந்து கொள்கிறன் –
மனசால் ஸமஸ்த குணங்களையும் அனுபவிக்கிறான்
நபசயோ மருத்யும பசயதி விஜ்ஞாதார மரே கேன விஜாநீயதே
ஜாநா தயே வாயம புருஷ
ஏஷ ஹி த்ரஷ்டா ச்ரோதாகராத ரசயிதா மந்தா போக்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ
ஏவமே வாசாய பரிதரஷ்டு -இத்யாதி–விஞ்ஞானம் விஞ்ஞாதா இரண்டும் உண்டே
ஸ்ருதிகளாலே ஜ்ஞாத்ருத்வம் சித்தம்–

———————————

சூர்ணிகை -27-

ஏவம் பூதமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை
இசையாதே–ஞானம் உடையவன் என்று ஒத்துக் கொள்ளாமல்
ஜ்ஞானம் மாதரம் என்று சொல்லுகிற
பௌத்தாதிகள் யுடைய மதத்தை
நிராகரிக்கைக்காக தத் தத் பஷத்தை அனுவதிக்கிறார் –

ஆத்மா
ஜ்ஞானத்துக்கு
இருப்பிடம் அன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம்
ஆகில் –

————————————-

சூர்ணிகை -28-

அஹம் இதம் ஜாநாமி-என்கிற
பிரத்யஷத்தாலே
அத்தை நிராகரிக்கிறார் –

நான் அறிவு என்று
சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன்
என்னக் கூடாது –
ஆத்மா உடலால் நடக்கிறார் -உடல் கருவி போலே அறிகிறார் -ஞானம் கருவி /

அதாவது –
ஆத்மாவுக்கு ஞான ஆஸ்ரயம் அன்றிக்கே
கேவலம் ஜ்ஞானமாய் இருக்கும் அளவே உள்ளதாகில்
நான் அறிவு -என்று தன்னை ஞான மாத்ரமாக சொல்லுகை ஒழிய
நான் இத்தை அறியா நின்றேன்–அறிகிறேன் -என்று தன்னை ஞாதாவாகச் சொல்லக் கூடாது -என்கை –
இவ்வாதத்தை நான் அறியா நின்றேன் என்கையாலே
விஷய கராஹியானதொரு ஜ்ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம் என்னும் இடம் தோற்றா நின்றது இ றே
இப்படி ஆத்மாவினுடைய ஞாத்ருத்வம் ப்ரத்யஷ சித்தம் ஆகையாலே அபாதிதம் என்று கருத்து –
இதமஹ மபிவேத மீதயாதம விததயோர் விபேத சபுரதியதி ததைகயம பாஹ்ய மப யேகமச்து –ஸ்ரீ ரெங்கராஜா உத்தர சதகம் -10—என்று பட்டரும்
இப்படி இ றே பௌதம மத நிரா கரணம் பண்ணுகிற இடத்தில் அருளிச் செய்தது —
அறிவால் அறிகிறேன் பேதம் உண்டே -கண் முன்னால் பார்த்த ஒன்றே அதுவாக சொல்லி -சர்வம் ஸூ ந்யம் -அறிபவன் அறிவு அறியப்படும் பொருள் ஒன்றுமே இல்லை –
நான்கு வகை புத்தர் -மாத்மிகன்—ஸூன்யமான மோக்ஷம் –

—————————————-

சூர்ணிகை -29-

அவதாரிகை –
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞான ஆஸ்ரயமாய் -என்று
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லி
மற்றவை இங்கு சொல்லாது ஒழிவான் ஏன்
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா
போக்தா
என்னுமிடம்
சொல்லிற்று ஆய்த்து-

——————————————-

சூர்ணிகை -30-

அவதாரிகை –

இப்படி பிரதிஞ்ஞா மாத்ரத்திலே போராது
என்று அதுக்கு ஹேதுவை அருளிச்
செய்கிறார் –

கர்த்ருத்வ
போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள்
ஆகையாலே
அறிவின் நிலைப்பாடுகள் -இவை -தாய் மகள் தோழி அவஸ்தைகள் ஆழ்வாருக்கு போலே

ஹேய உபாதேய ஜ்ஞான மூலம் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மன
தத் தத் ப்ரஹாணோ பாதான
சிகீஷாகா தருதாசரயா -என்கிறபடியே
ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ஹேய உபாதேய பிரதிபத்திக்கு ஹேதுவாய் இருக்கும்-செய்வதற்கு இச்சை கர்த்ருத்வம் -நல்லதை செய்து தீயதை விட அறிந்து செய்வோமே
அடைய முயற்சி கர்த்ருத்வம் இச்சை ஞானத்தால் வரும்
அவ்வோ ஹேயங்களை விடுகையிலும்
உபாதேயங்களைப் பற்றுகையிலும் உண்டான சிகீஷா கர்த்ருத்வம் அடியாக இருக்கும்
கர்த்தாவுக்கு இ றே சிகீர்ஷை யுள்ளது-கர்த்தும் இச்சை சிகீர்ஷா
அந்த சிகீர்ஷை தான் ஜ்ஞான அவஸ்தா விசேஷம் இ றே
அத்தோடு–ஸஃநாதருதவத்தோடு கர்த்ருத்வதுக்கு உண்டான பிரதயாசத்தியைக் கடாஷித்து-நெருக்கத்தைம் கடாக்ஷித்து
கர்த்ருத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசரித்து அருளிச் செய்கிறார்
அல்லது-கீழே சொன்னபடி சொல்லாமல் முக்கியமாக சொல்வது பொருந்தாது –
கர்த்ருத்வம் ஆவது க்ரியாசரத்வம் ஆகையாலே அத்தை
ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று முக்கியமாக சொல்லப் போகாது இறே
ஞானம் பிறந்து விருப்பம் ஏற்பட்டு செயல் -மற்று ஒரு நிலை செயல்பாடு என்று முக்கிய அர்த்தமாக கொள்ளக் கூடாது
கவலை துக்கம் பயம் ஞானத்தின் பயன் –

கிரியை யாவது -ஜ்ஞானாதி இச்சதி பரயததே கரோதி -என்று ஜ்ஞான சிகீர்ஷா பரயத
நாநானந்தர பாவியான பரவ்ருத்தி யாகையாலும்–அறிந்து விரும்பி முயன்று செய்வது நான்கு நிலைகள் -இறுதி நிலை கர்த்ருத்வம் -அனந்தர பாவி –
தத் ஆஸ்ரயம் கர்த்ருத்வம் ஆகையாலும்
அத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசார பிரயோகம் என்றே கொள்ள வேணும்

இனி போக்த்ருத்வம் ஆவது போகாசரயத்வம்–அனுபவத்துக்கு இருப்பிடம்
போகமாவது ஸூகதுக்க ரூபமான அனுபவ ஜ்ஞானம்
அது ஜ்ஞான அவஸ்த விசேஷம் இ றே
தத் ஆஸ்ரயத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று
சொல்லுகையாலே இதுவும் ஔபசாரிகம்

இப்படி ஜ்ஞாத்ருத்வதுக்கும் இவற்றுக்கும்–கர்த்ருத்வம் போக்த்ருத்வங்கள் – உண்டான
பரதயா ஸ்தத அதிசயத்தாலே
ததை கயகதனம் பண்ணலாம் படி இருக்கையாலே
ஜ்ஞாத்ருத்வம் சொன்ன போதே
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லிற்று ஆய்த்து என்ன தட்டில்லை இறே –

———————————————————————–

சூர்ணிகை -31

சிலர்
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை
என்றார்கள் –
அவிரோத அத்யாயம் -விவரிக்கிறார் இவற்றை சாங்கிய மத நிரசனம் / பிரகிருதி புருஷன் மட்டும் –
ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் ஆத்மா சரீரம் பிரகிருதி புருஷர் விவேகம் வந்தால் மோக்ஷம் -புத்தியால் அறியப்படும் ஆத்மா –
குணங்கள் -என்று சாங்க்யர் முக்குணங்களால் ஆக்கப்படட சரீரம் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் என்பர் –
முக்குணங்கள் பிரகிருதி உடன் ஒட்டி உறவாடுவதால் குணங்கள் -பிரகிருதி கார்யமான சரீரத்துக்கு என்பர்
கால் நடக்காதவன் கீழே கண் தெரியாதவன் மேலே போலே –
மேலே உட்க்கார்ந்து -மேல் சொன்னவன் சொன்னதை புரிந்து கொள்ள ஞாத்ருவம் வேண்டுமே -மேல் உள்ளவனுக்கு கர்த்ருத்வம் உண்டே –
நீ சொன்னதையே ஒவ்வாமை உண்டே -வேதம் சொல்வதை இல்லையாக்கி வாதம் கொண்டு சாதிக்கப்பார்க்கிறார்கள்
சிலர் என்று
அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான
அநாதரம் தோற்ற அருளிச் செய்கிறார் –
குணங்கள் என்றும் பிரகிருதி என்றும் பேதம் இல்லை இறே இவர்களுக்கு
ஆகையால் பிரக்ருதிக்கே என்கிற
ஸ்தானத்திலே
குணங்களுக்கே -என்கிறார் –
நங்கையை கண்டேன் அல்லேன் -நல்ல குடிப்பிறப்பு பொறுமை பதிவ்ரதம் இந்த மூன்றையும் கண்டேன் என்றார் திருவடி –
மூல பிரகிருதி நாம ஸூகத்துக்க மோஹாதமகாநி லாகவ பிரகாச சலனோ
பஷ டம பன கௌரவா வரண கார்யாணி அத்யந்த அதீன தார்யாணி
கார்யைக நிரூபண விவேகாநி அநயூந அனதிரேகாணி சமுதாமுபேதானி
சதவரஜச தமாமசி தரவயாணி -என்று இறே அவர்களுடைய சித்தாந்தம் –
விகாரம் அடையும் த்ரவ்யம் நாம் சொல்லும் மூல பிரகிருதி
இவர்கள் சோகம் துக்கம் மோகம் ஸ்வரூபம்
லகு பிரகாசம் அசையும் பற்றி இருக்கும் பாரமாக மறைக்கும் அத்யந்த இந்திரியங்களுக்கு புலப்படாமல் -கார்யம் வைத்தே அறியும்படி
குறைவில்லாமல் -நிறைவும் இல்லாமல் -சத்வம் ரஜஸ் தமஸ் சம பாவம் பிரளயம் /
வாதம் பித்தம் கபம் உடலில் சமமாக இருந்தால் ஆரோக்யம் சித்த வைத்தியம் –
ஆகையால் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றபடி –
அதாவது
கடவல்லியிலே-ந ஜாயதே மரியதே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு ஜனன மரணாதிகளான பிரகிருதி தர்மங்களை எல்லாம்
பிரதிசேஷித்து ஹந்தா சேது மந்யதே ஹந்தும் ஹதசசசேன மந்யதே ஹதம
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம ஹநதி ந ஹனயதே -என்று
கன நாதி கரியைகளிலே கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும்
ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே
நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –13-14-அத்யாய ஸ்லோகங்கள்
என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே
கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை
போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –

—————————————————

சூர்ணிகை -32-

அத்தை நிராகரிக்கிறார் -கர்த்ருத்வம் சரீரத்துக்கு ஞாத்ருத்வம் ஆத்மாவுக்கு என்கிற சாங்கிய மதம் நிரசனம் /

அப்போது இவனுக்கு
சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும்
குலையும்
கர்த்ருத்வம் இல்லாதவனுக்கு எதுக்கு உபதேசம் /

அதாவது
பிரக்ருதிக்கே–பிரகிருதி கார்யமான சரீரத்துக்கே – கர்த்ருத்வமாய்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லையான போது
இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்தரத்துக்கு
தான் அதிகாரியாய்க் கொண்டு
அதன் வசத்திலே நடக்க வேண்டுகையும்
விஹித நிஷித்த கரண ப்ரயுக்த ஸூ கதுக்க ரூப பல போக்த்ருத்வமும்
சேராது -என்கை-/ சரீரத்துக்கே போகும் -ஞானம் இல்லையே பொறுத்ததே
சேதனன் கர்த்தா வாகாதபோது சாஸ்தரத்துக்கு வையாததயம் பிரசங்கிக்கும்–வியர்த்தமாக போகுமே
சாஸ்திர பலம் பரயோகதரி–கர்த்தாவானபோது தான் பலிக்கும்
கர்த்தா சாஸ்தரார்த்தத்வாத்-2-அத்யாயம் -3-பாதம் -என்னக் கடவது இ றே –
இனித் தான்
ஸ்வா ககாமோ யஜத—சுவர்க்கம் போக விருப்பம் ஞாத்ருத்வம் உள்ளவன் யாகம் செய்ய வேண்டும் கர்த்ருத்வம் உண்டே -இரண்டையும் வெவ்வேறாக சொல்ல வில்லையே-
இவரே அனுபவிக்கவேண்டும் போக்தாவும் இவனே
முமுஷூர் பரஹ்மோபாசீத்-என்று
ஸ்வர்க்க மோஷாதி பல போக்தாவை இ றே கர்த்தாவாக
சாஸ்திரம் நியோக்கிகிறதும் –
ஆகையால் பல போக்தாவே கர்த்தாவாகவும் வேணும் இ றே
அசேதனதுக்கு கர்த்ருத்வம் ஆகில் சேதனனைக் குறித்து விதிக்கவும் கூடாது
சாசானாஸ் சாஸ்திரம் -என்னக் கடவது இ றே
சாசனமாவது பரவாததனம்–ப்ரவர்த்தனம் ஈடுபடுத்துவது -நியோகம் -ஞானம் உள்ளவனுக்கு உபதேசித்து எடுபடுத்தப்பண்ணி கர்த்ருத்வம்
சாஸ்தரத்துக்கு ப்ரவர்த்தந கத்வம் போதஜனந த்வாரத்தாலே–அறிவை புகட்டி தூண்டும் என்றவாறு –
இஷுவாகு குலத்தில் பிறந்து நல்லதை செய் வசிஷ்டர் சொல்ல சக்ரவர்த்தி பெருமாளை தந்தால் போலே
அசேதனமான பரதானத்துக்கு போதத்தை விளக்கப் போகாது இ றே
ஆகையால் சாஸ்திரம் அர்த்தவததாம் போது–பொருள் உள்ளதாகும் பொழுது –
போக்தாவான சேதனனுக்கே கர்த்ருத்வம் ஆகவேணும்
இது எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும் என்று அருளிச் செய்தது –

—————————————————–

சூர்ணிகை -33-

ஆனால் கர்த்ருத்வம் எல்லாம் இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் ஆமோ என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –
செய்யும் செயல்கள் பிரகிருதி ரஜஸ் தமஸ் தூண்ட -ஸ்ரீ கீதா ஸ்லோகம் உண்டே /இயற்கையானது இல்லை -கர்மாதீனம் என்றவாறு
திருவாராதனம் கைங்கர்யம் அங்கும் செய்ய வேண்டுமே -சென்றால் குடையும் -திருமேனி எடுத்து கைங்கர்யம் -ஸ்வரூப ஆவிர்பாவம் உண்டே
இயற்க்கை அங்கே-அதனால் தான் சாம்சாரிக பிரவ்ருத்திகளில் என்ற விசேஷணம் இங்கு பிரயோகம் –

சாம்சாரிக
பிரவ்ருதிகளில்
கர்த்ருதம்
ஸ்வரூப
பிரயுக்தம்
அன்று –

அதாவது
சம்சாரிக்க பிரவ்ருதிகளான
ஸ்திரீ அன்ன பாநாதி போகங்களை
உத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வியாபாரங்கள் –
அவற்றில்
கர்த்ருத்வம் ஔபாதிகம் ஆகையால்-உபாதி கர்மம் காரணம் என்பதால் –
ஸ்வரூப பிரயுக்தம் அன்று -என்கை –
பகவத் பாகவத ஆச்சார்யர் கைங்கர்யம் -நானும் உனக்கு பழ வடியேன் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –

———————————————————–

சூர்ணிகை -34

ஆனால் அது தான் இவனுக்கு வந்தபடி என் -என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

குண சமசர்க்க
க்ருதம்

அதாவது
குணங்கள் ஆகிறன -சத்வம் ரஜஸ் தமஸ் ஸூ க்கள்
அவற்றின் யுடைய சமசர்க்கத்தாலே யுண்டானது -என்றபடி பிரக்ருதே கரியமாநாணி குணை காமாணி சர்வச
அஹங்கார விமூடாதமா காதாஹமிதி மந்யதே -என்னக் கடவது இ றே
இது எல்லாம்
கர்தா சாஸ்த்ராத்வாத் -என்கிற ஸூ தரத்திலே
பூர்வ பஷ சித்தான ரூபேண ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்-

————————————–

சூர்ணிகை -35

இப்படி சாங்க்ய பஷத்தை நிராகரித்து
ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை சாதித்தார் கீழ் –
இந்த கர்த்ருத்வம் தான் ஸ்வா யததாமோ
பராய ததாமோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

கர்த்ருத்வம்
தான்
ஈஸ்வர
அதீநம்

அதாவது
இந்த ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் தான்
ஸ்வாதீனம் அன்றிக்கே ஈஸ்வர அதீநமாய் இருக்கும் -என்றபடி –
பராதது தசசருதே -என்று வேதாந்த ஸூ த்ரத்திலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பராயத்தநம் என்று
சித்தமாகச் சொல்லப் பட்டது இறே
அசித்துக்கும் ஈஸ்வரனுக்கு யோக்யதை இல்லை -இதுக்கு ஞானம் இல்லை -அவன் வசப்படான் -கர்த்ருத்வம் ஆத்ம தர்மம் தான்
சாஸ்த்ராத்தவாத த்துக்காக கர்த்ருத்வம் ஆத்மா தர்மம் என்று கொள்ள வேணும்
அந்த கர்த்தாவுக்கு தாமமான ஜ்ஞான இச்சா பிரயத்தனங்கள்
பகவத் அதீனங்களாய் இருக்கையாலும்
அந்த ஜ்ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய க்ரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய கர்த்ருத்வம் ஈஸ்வர அதீநம் -என்கிறது –
ஞானம் உள்ள சேஷம் ஜீவன் /ஞானம் இல்லா சேஷன் அசித் -அதனால் ஸூகம் துக்கம் ஆத்மாவுக்கு /
இவனுடிய புத்தி மூலமான பிரயத்தனத்தை அபேஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது என்று
விவரணத்திலே ஆச்சான் பிள்ளையும்
இப்படி கர்த்ருத்வம் பரமாதமாய்த்தமானாலும்
விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது –
க்ருத பரயத்நா பேஷச்து விஹித ப்ரதி ஷித்தா வையா தயாதிபய -என்று
பரிஹரிக்கப் படுகையாலே –
அதாவது
விஹித பரதி ஷித்தங்களுக்கு வையாதயாதிகள் வாராமைக்காக
இச் சேதனன் பண்ணின பிரத பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பிக்கும் -என்றபடி –
முதல் பிரவ்ருத்திக்கு உதாசீனம் -அனுமதி இரண்டாவது மூன்றாவதில் தூண்டுகிறான் ஈஸ்வரன் –
எங்கனே என்னில்
எல்லா சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையாலே
சாமானாயேன பிரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வம் யுண்டாயே இருக்கும்
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வகிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாகக் கொண்டு நில்லா நிற்கும்
சத்தைக்கு உள்ளே இருக்க வேண்டுமே
அவனாலே யுண்டாக்கப் பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன்
அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன ஞான சிகீர்ஷா பிரத்யனனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்–
அவ்விடத்திலே மத்யஸ்தன் ஆகையாலே உதாசனரைப் போலே இருக்கிற–விட்டு போகாமாட்டாமல் இரா மடமூட்டுவா ரைப் போலே -லோகவஸ்து லீலா கைவல்யம் –
பரமாத்மாவானவன் அந்த சேதனர் யுடைய பூர்வ வாசன அனுரூபமான
விதி நிஷதே பிரவ்ருதியிலே
அனுமதியையும் அநாதரத்தையும் யுடையவனாய் கொண்டு
விஹிதங்களிலே அனுக்ரஹத்தையும்
நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணா நிற்பானாய்
அனுக்ரஹாதமகமான புண்யதுக்கு பலமான ஸூகத்தையும்
நிக்ரஹாதமகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வவோ சேதனருக்கு கொடா நிற்கும்
இது தன்னை அபி யுக்தரும் சொன்னார் –

ஆதா வீச ஸ்வர தததயைவ புருஷச ஸ்வா தந்த்ரிய சகதயா
ஸ்வ யம தத் தத் ஞான சிகீர்ஷா பிரத்யத்ன யுத்பாத யன வாததே ததரோபேஷய
தத் அனுமதய விதத்த தன நிக்ரஹ அனுக்ரஹ தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததச சர்வச்ய புமசோ ஹரி -என்று அடியிலே
சர்வ நியந்தாவாய்
சர்வ அந்தராத்மாவான
சர்வேஸ்வரன்
தனக்கு யுண்டாக்கிக் கொடுத்த ஞானத்வ ரூபமான ஸ்வா தந்த்ரிய சக்தியாலே
இப்புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞான சிகிருஷா பிரயத்தனங்களை
யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும் –
அவ்விடத்திலே
அசாஸ்தா யங்களிலே உபேஷித்தும்
சாஸ்திரீ யங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹ அனுக்ரஹங்களை பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்னா நின்றார்கள் –
நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
இப்படி சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை
அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து
என்று தீப பிரகாசத்திலே ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள் இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –
உதாசீனனாக இருந்து கர்மா காரணம் -அனுமதி இவன் ஆதீனம்–என்று காட்ட பின்பு தூண்டுவது புண்யங்களை வர்த்திப்பிக்க
அவன் இச்சை படி பிரபன்னர்களுக்கு மட்டும் -ஆழ்வாராதிகளுக்கு -ஒரே சொல் மா ஸூ ச -ஒருவனே அனைத்துக்கும் இவர்களுக்கு —
ஆனால்
ஏஷ ஹ்யேவசாது கர்ம காரயதி தம யமேபயோ லோகேபய
உன்னிநீஷதி ஏஷ ஏவாசாது காம காரயதி தம யமதோ நிநீஷதி -என்று
உன்னிநீஷ-யாலும் அதோ நிநீஷை யாலும் சர்வேஸ்வரன் தானே
சாதவசாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்னும் இது சேரும்படி என் என்னில்
இது சர்வ சாதாரணம் அன்று
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதிமாத்ரமான ஆனுகூல்யத்திலே
வ்யவசிதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே ஸ்வ பிராப்த உபாயங்களாய
அதி கல்யாணங்களான கர்மங்கலளிலே ருசியை ஜனிப்பிக்கும் –
யாவன் ஒருவன் அதி மாத்திர பிராதி கூல்யத்தில் வ்யவச்திதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோ கதி சாதனங்களான கர்மங்களிலே சங்ககிப்பிக்கும் என்று
இந்த சுருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையாலே
இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே
அஹம் சர்வச்ய பிராபவோ மத்த்ஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதபா வசம் அந்விதா-10–8–என்று தொடங்கி–நானே பிரவர்திக்க காரணம் என்று அறிந்து அதீத ப்ரீதியுடன் பஜிக்கிறார்கள் –
அவன் திரு உள்ளம் படியே செய்கிறார்கள் /
தேஷாம் சத்த யுக்தா நாம பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி
புத்தி யோகம் தம யேன மாம் உபயாநதி–கூடி இருப்பவர்களுக்கு கொடுக்கிறேன் -கூடவே இருக்க ஆசைப்பட்டவர்களுக்கு என்று தாத்பர்யம்
ப்ரீதி பூர்வகம் தாதாமி –பக்தி செய்வதே ப்ரீதி உடன் தான் -அவனும் ப்ரீதியுடன் கொடுக்கிறான்
தே தேஷாம் ஏவ அனுகம பார்த்தம் அஹம் ஞானம் ஜமதம
நாசயாம யாதமாவசததோ ஜ்ஞான தீபேனபாசவதா என்றும்
அவர்கள் மனசில் இருந்து ஞானம் தீபத்தால் அஞ்ஞானம் போக்கடிக்கிறேன் -நக்க காரியம் ஈடுபடுத்து இதில்
அசதயமப்ரதிஷ்டம் தே ஜகதா ஹூர நீச்வரம் -என்று தொடங்கி-16–18-
மாமாதமபரதேஹேஷூ பரதவிஷன தோபய ஸூ யகா என்னும் அது அளவாக–த்வேஷிக்கும் அவர்கள் உள்ளும் நான் தான் இருந்தேன் -நன்மை செய்ய அவகாசம் பார்த்து
அவர்கள் யுடைய பிராதி கூல்ய அதிசயத்தை சொல்லி
தானஹமத விஷத கரூரான சம்சாரேஷூ நாரத மான ஷிபாமயஜசரமசுபா
நா ஸூ ரிஷி வேவ யோ நிஷூ -என்றும் அருளிச் செய்கையாலே–மாறி மாறி அ சூரா யோனிகளில் அழுத்தி வைக்கிறேன்
ஆகையால் அநுமத தருதவமே சர்வ சாதாரணம் பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும்
பரம்பரையாக காரணம் -விசேஷ கார்யம்
கருத பிரயதாநா பேஷூ சது -என்கிற ஸூ தரத்திலே
இது எல்லாம் ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம் -என்று அருளிச் செய்தது –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை-என்று
பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி
ஜ்ஞானம் மாதரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஜ்ஞாத்ருவ கதன அநந்தரம்
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே
அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வரும் என்னும் இடத்தை தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து
அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப பிரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு யுண்டான கர்த்ருத்வம் தான்
சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீநமாய் இருக்கும் என்று
நிகமித்தார் ஆயிற்று
இது எல்லாம் ஆத்மாவினுடைய ஞான ஆஸ்ரயம் அடியாக வந்தது இ றே-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: