Archive for November, 2017

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -14-22-புருஷகார உபாய வைபவ பிரகரணம் -உபாய வைபவம்-/உபய சாதாரண வைபவம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

November 29, 2017

முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார் –

——————————–

உபாய வைபவம் –
சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –

க்ருபாதிகளை வெளி இட்டமை சொன்ன  போதே -ஸ்ரீ ராமாயணத்தில் புருஷகார
வைபவம் முக்தமான படியை உபபாதித்தாராய் -மகா பாரதத்தில் உபாய வைபவம்
முக்தமானமையை உபபாதிக்கிறார் –

அர்ஜுனன் விஷயமாக ஆச்சார்ய கிருத்யம் ஏறிட்டுக் கொண்டானே –பிரார்த்தித்த போது-பிறர் கார்யம் செய்தது இது
-பிராட்டி கிட்டே இல்லையே-அர்ஜுனன் பிராத்திக்காமலே புருஷகார க்ருத்யமும் ஏறிட்டுக் கொண்டு
பிரார்த்திக்காமல் தன்னுடைய செயலான /உபாய க்ருத்யர்த்ததையும் ஏறிட்டுக் கொண்டு என்றது –
அர்ஜுனன் உபதேசம் பண்ணியும் -சரம ஸ்லோகம் பூர்வார்த்தம் அருளியதும் -பிரபத்யே -சரணம் – பண்ணாமல் –இருந்தும் விடாமல் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று ரக்ஷணத்தை அருளிச் செய்தான் இ றே-
உபாய ஸ்வரூபம் என்னாமல் உபாய வைபவம் என்றது இம் மூன்றும் செய்ததால் -ஸ்வ பாவம் வேறே பிரபாவம் வேறே –
மோக்ஷம் கொடுத்தாலும் ஸ்வ பாவம் தான் அவனுக்கு -மற்றவர் செயலை ஏறிட்டுக் கொண்டதால் வைபவம் –
பிராட்டி புருஷகார பட்டாபிஷேகம் ராம அவதாரத்தில் –
ஸ்ரீ மத் பதம் பூர்வம் -நாராயண பதம் உத்தரம் -அதனால் புருஷகார வைபவம் சொல்லிய அனந்தரம் உபாய வைபவம் அருளிச் செய்கிறார் –

ஷட்க த்ரயார்த்தத்தையும் -அபராத பயத்தை போக்கி -இஷ்ட பிராப்தி அநிஷ்ட பரிகரத்தையும் -நிரங்குச ஸ்வதந்த்ரன் -நித்ய உபாயம் நித்ய உபேயமான தான்
வலிய ஏறிட்டுக் கொண்டு -உபாய பிரதானமான மஹா பாரதம்
உபதேஷடாவான ஆச்சார்யன்-உபதேச விஷய பூதன் ஆச்சார்ய பாரதந்தர்ய யோக்யதை இல்லாமல் தானே ஏறிட்டுக் கொண்டு
விசேஷயமான தான் விசேஷமான பிராட்டி க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டு
நித்ய உபேயம் காதா சித்தகமான உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு
கீதா உபநிஷத் சாரம் -மாம் சரணம் வ்ரஜ பற்றுவித்து -விரோதி நிவர்த்தக பூர்வக பலம் கொடுத்து -ஏறிட்டுக் கொண்டது காணலாம்
ஆச்சார்யத்வம் ம் ச குணமாக இருக்க -சாஸ்த்ரா பாணியாக தானே அவதரித்து இருக்க —
-பரத்வ ஸுலப்யம் கலந்த அவதாரத்தில் ஸுலப்யம் கார்யம் மாத்திரம் ஏறிட்டுக் கொண்டு
அவளை முன்னிட்டு -மாம் புருஷகார விசிஷ்டம் -ஆகையால் -ஸ்ரீ மான் கண்ணனாக -தோன்றி நின்று புருஷீ கரிக்க காணாமையாலும் –
-தத் சா பேஷனாய் ஏறிட்டுக் கொண்டான் என்னலாம்
உபாயத்வம் போலே உபாயத்வம் ஸூவ சித்தம் -உபாயாந்தரங்களுக்கும் உபாயமானது போலே இல்லாமல்
தானே உபாயம் உபேயம் -இங்கு -ஏறிட்டுக் கொள்வது
இவ்வளவும் செய்தும் அர்ஜுனன் செய்யாதது கொத்தை அல்லையோ -என்னில் -தேக அவசானத்தில் மோக்ஷம் இல்லாமை
-கேட்ட அர்த்தத்தில் நிலை இல்லாமல் மறைக்கையாலும் இப்படி மறைக்கைக்கும் அடி–பிரபல -திரௌபதி பரிபவம் கண்டு
இருந்த பாகவத அபசாரத்தாலே –என்பர் ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் –

அஞாதஞாபனம் ஆச்சார்ய கிருத்யம் இறே -சரண்ய கிருத்யம் அன்றே –
ஆகை இறே என்னைப் பெற்ற அத் தாயாய் தந்தையாய் -திரு வாய் மொழி -2 -3 -2 -என்று
பிரிய கரத்வ ஹித கரத்வங்கள் ஆகிற -மாதா பித்ரு க்ருத்யங்களை ஸ்வ யமேவ தமக்கு
செய்த உபகாரத்தை அருளி செய்த அநந்தரம்-ஆச்சார்யன் செய்யும் விசேஷ உபகாரத்தையும்
தானே தமக்கு செய்தமையை அருளி செய்கிற ஆழ்வார் -அறியாதன அறிவித்த -என்று அருளி செய்தது –
இவ்விடத்தில் இவர் அருளி செய்கிற வாக்கியம் தான் அந்த திவ்ய சூக்திக்கு சூசகமாய் இறே இருக்கிறது –
அறியாத அர்த்தங்களை அடைய அறிவிக்கை யாவது –
தத்வ விவேகம் தொடங்கி -பிரபத்தி பர்யந்தமாக -17-அர்த்தங்கள் –
அர்ஜுனனுக்கு முன்பு அஞ்ஞாதமாய் இருந்த
அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கை –
1–தத்வ விவேகம் -2-நித்யத்வ அநித்யத்வங்கள் -3-நியந்த்ருத்வ -4-ஸுலப்ய -5-சாம்யா -6-அகங்கார தோஷ
-6- இந்திரிய தோஷ பல -8-மனா ப்ராதான்ய
9–கரண நியமன -10-ஸூ க்ருதி பேத-11-தேவா ஸூர விபாக -12-விபூதி யோக -13-விஸ்வரூப தர்சன –
14-சங்கா பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகள் -அன்று ஓதிய கீதை -ஆச்சார்ய ஹிருதயம்
தேக ஆத்மா அபிமானியாய் –
தேக அநு பந்திகளான பந்துக்கள் பக்கலிலே அஸ்தானே சிநேகத்தை பண்ணி நிற்கிற இவனை –
பிரகிருதி ஆத்ம விவேகாதிகளாலே தெளிவிக்க வேண்டுகையாலே –
நத்வ வாஹம் ஜாது நாசம் நத்வம் நேம ஜனாதிபா
நசைவ நபவிஷ்யாமஸ்  சர்வே  வயமித பரம்
தேஹி நோச்மின் யதா தேஹே கௌ மாரம்  யௌ வனம் ஜரா ததா
தேகாந்தர ப்ராப்திர்  தீரஸ் தத்ர ந முஹ்யதி-2-12–இத்யாதிகளாலே
1–பிரகிருதி ஆத்ம விவேகம்-
2–ஆத்ம பரமாத்ம விவேகம் ஆகிய தத்வ விவேகத்தையும் –
அந்தவந்த இமே தேஹா நித்யச்யோக்தா ச்சரீரின
அனாசினோ  பிரேமயச்ய  தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
ந ஜாயதே ம்ரியதேவா  கதாசின்  நாயம் பூத்வா பவிதாவா  நபூய
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே
ஹன்யமானே சரீரே வாஸாம்சி ஜீர்னாணி யதா விஹாய
நவானி க்ருஹ்னாதி நரோ பராணி ததா சரீராணி
விஹாய ஜீர்னான் யன்யானி சம்யாதி நவானி தேஹீ -2-18-/-22-இத்யாதிகளாலே
3–ஆத்ம நித்யத்வ
4–தேஹாத்ய அநித்யங்களையும்-பிரதமம் உபதேசித்து -இவனுடைய ச்வாதந்திர பிரமத்தை தவிர்க்கைக்காக –
பூமிரபோ நலோ வாயு கம் மனோ புத்தி ரேவச அஹங்கார இதீயம்
மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபேரே யமிதஸ் த்வன்யாம்
ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-/5-என்கிறபடியே -ஸூ யாதாம்யாம் அறிவித்து –
5–சேதன அசேதன சரீரியாய் –
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ  மத்தஸ் ச்ம்ருதிர் ஞான மபோஹநஞ்ச-15-15- -என்றும்
ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருத் தேசெர்ஜூன திஷ்டதி ப்ராமயன்
சர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா -18–61–என்றும்  சொல்லுகிறபடி
6–சர்வ  ஜன ஹ்ருதயச்தனாய் நின்று –
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை  யாகிற தன்னுடைய-நியந்த்ருவத்தையும் –
அப்படி சர்வ நியந்தாவாய்கொண்டு சர்வ ச்மாத் பரனாய் இருக்கும் அளவன்றிக்கே –
பரித் ராணாய சாதூனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்று –7–அவதாரப்ரயுக்தமான—தன்னுடைய சௌலப்யத்தையும் –
சம்பவாமி யுகே யுகே என்பதே ஸுலப்யம் -இந்த க்ருத்யங்கள் இல்லை –
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய—என்று
8–தன்னுடைய ஆஸ்ரயனித்வ சாம்யத்வையும் –
ப்ரக்ருதே க்ரியமானாதி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமுடாத்மா கர்த்தா ஹமிதீ மந்யதே -3–27–என்று
9—அஹங்கார தோஷத்தையும் –
யாததோ ஹ்யபி கௌ ந்தேய புருஷஸ்ய விபச்சித
இந்திரியாணி பரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2–60–என்று–10-இந்திரிய பிராபல்யத்தையும்
அசம்சயம் மகாபாஹோ மனோ துர் நிக்ரகஞ் சலம் -என்று அந்த ப்ராபல்யத்தில் மற்றை இந்திரியங்களை பற்றவும்
மனசினுடைய-ப்ராதான்யத்தையும்
தர்சிப்பிக்கையாலே -ஆச்ரயண விரோதிகளையும் –
தானி சர்வாணி சம்யய யுக்த ஆஸீத் மத் பர -வசேஹி யச்யேந்திரியாணி
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2–61–என்றும் –
யதோ யதோ நிச்சலதி மனஸ் சஞ்சலம் அஸ்திரம் ததஸ் ததோ
நியம்யை ததாத் மன்யமேவ  வசம் நேத்-6- -என்று
ஆச்ரயண உப கரணங்களான பாஹ்யாப்யாந்தர கரணங்களை
10–சுவாதீனமாக நியமிக்கும் பிரகாரத்தையும் —அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -போலே என்னிடம் செலுத்தி –
சதுர்விதா பஜந்தே மான் ஜனாஸ் சூக்ருதிநோர்ஜூன
ஆர்த்தோ ஜிஞ்ஞா சூரரத்தார்த்தீ ஜ்ஞானிச பரதர்ஷப -7-14 –என்று
11–ஆஸ்ரயிக்கும் அதிகாரிகளுடைய சாதுர் வித்யத்தையும்-ஸூ ஹ்ருத பேதம்
த்வவ் பூத சர்கவ் லோகேச்மின் தைவ ஆசூர ஏவச
தைவீ சம்பத்  விமோஷாய நிபந்த்தாயா சூரி மாதா-15- -என்று தன்னுடைய
ஆஞ்ஞா அநு வர்த்தன பரரானவர்கள் தேவர்கள்
தத் அதிவர்த்தன பரரானவர்கள் அசுரர்கள் என்று
12–தேவ அசுர விபாகத்தையும் –
ஹந்த தே கதயிஷ்யாமி விபூதி ராத்மனஸ் சுபா ப்ராதான்யாத குரு ஸ்ரேஷ்ட நாச்த்யந்தோ விச்தரச்ய மே–10—என்று தொடங்கி-
இவ் விபூதியில் சமஸ்த பதார்த்தங்களுக்கும் வாசகமான சப்தங்கள் தன் அளவிலே பர்யவசிக்கும் படி
13–இவற்றை அடைய ஸ்வ பிரகாரமாக கொண்டு வியாபித்து நிற்கும் படியையும் –
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்ய மே யோகமைச்வர்யம் -என்று திவ்ய சஷுசை கொடுத்து
பச்யாமி தேவான் தவ தேவ தே ஹே சர்வாந்ததா பூத விசேஷ சங்காத்
பிரம்மாண மீசம் கமலா சனச்ச்தம் ருஷீம்ச்ச சர்வான் உரகாம்ச்ச தீப்தான்-11- -இத்யாதியாலே –
தன்னுடைய விஸ்வரூபத்தை கண்டு பேசும்படி பண்ணுகையாலே –
14–தான் உகந்தாருக்கு திவ்ய ஞானத்தை கொடுத்து தன் படிகளை தர்சிப்பிக்கும் என்னும் அத்தையும் –
ஆச்சார்யர் விஸ்வரூபம் காட்ட மாட்டாரே -விஸ்வரூபம் உபதேசமோ என்று கேட்ப்பார்க்கு இந்த வாக்கியம் -திவ்ய ஞானம் இது -அன்றோ –
திவ்ய சஷூஸ் கொடுத்து திவ்ய ஞானம் அருளினான் அன்றோ –
மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யசி  யுக்த்வைவம் ஆத்மானம்  மத் பராயணா-9 -34– –
என்று இப்படி இருந்துள்ள பரத்வ சௌலப்ய யுக்தனான தன் திரு அடிகளை பிராபிக்கை ஆகிற
15-பரம புருஷார்த்ததுக்கு உபாயமாய் இருந்துள்ள கர்ம ஞான ரூப அங்க சஹிதையான பக்தியையும்
–முக்கரணங்களால் பக்தி அதுக்கு அங்கமான பிரபத்தியையும்
-மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –7-4-என்றும்
தமேவசாத்யம் புருஷம் பிரபத்யேத்–15-4–என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத— -என்று-16- அந்த பக்தி அங்கமான பிரதி பத்தியையும் –
நடுவில் பிரபத்யே உத்தம புருஷன் -இவர் பண்ணுவாரா –பிரபத்தி பண்ண வேண்டும் -சரணாகதி பண்ணி -அஞ்ஞானம் போக்க -என்கிறார் –
ஆச்சார்ய க்ருத்யம் ஏறிட்டுக் கொண்டு -அவதார ரூபத்தில் பரம ரஹஸ்ய தம அர்த்தம் உபதேசிக்க ஆச்சார்ய உபாசனம்
தர்மத்தை ஸ்தாபிக்க அனுஷ்டித்துக் காட்ட வேண்டுமே –
ஆதி புருஷனை உபாசிக்கிறார் -பத்ரிகாஸ்ரமத்தில் தானே சிஷ்யனாயும் ஆச்சார்யராகவும்
காமன் சாமான் காலில் விழுந்தது –ப்ராப்ய த்வரை தூண்ட -இருவரும் ப்ரஹ்மமே என்றும் வியாக்யானம் –
மூன்று இடங்களில் சரணாகதி – பற்றி -ஸ்ரீ கீதையில் –
சரம ச்லோகத்தாலே -அந்த பக்தி உபாயத்தின் துஷ்கரத்வாதிகளை உணர்ந்து சோகிப்பாருக்கு
17–ஸூ கரமுமாய் -ஸ்வரூப அநு ரூபமான உபாயம் பிரபத்தி என்னும் அத்தையும்
தானே அறிவித்து அருளினான் இறே-
ஆக இப்படி அறியாதன அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கையாலே
ஆச்சார்யா க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்டான் என்கிறது

-இனி புருஷகார க்ருத்யமும் -சரண்யனான தன்னதன்றே -பிராட்டி க்ருத்யம் இறே –
மத் ப்ராப்திம் ப்ரதி ஜந்தூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வ  நிர்திஷ்டா பரமர்ஷிபி மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லஷணம் பவேத்- -இத்யாதிகளாலே –
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
இவனுக்கு தத்வ ஜ்ஞானாதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டுகையாலே–ஆதி சப்தம் வைராக்யம் பக்தி போல்வன –
ஆச்சார்ய க்ருதயத்தை ஏறிட்டு கொண்டான் ஆகிறான் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ள வேண்டுவான் என்-
அங்கீகரித்து விட அமையாதோ என்னில் -அங்கீகாரத்துக்கு இதுவும் அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே –
எங்கனே என்னில் -இவ் உபாயத்துக்கு புருஷ சாபேஷை யோபாதி புருஷகார சாபேஷைதையும் உண்டு இறே
இவ் உபய சாபேஷைதையும் -உபாய வர்ண ரூபமான பூர்வ  வாக்யத்தில்
பிரதம சரம பதங்களிலே காணலாம் -ஸ்ரீ -சப்தத்தாலே புருஷகாரத்தையும் உத்தமனாலே
அதிகாரியையும் இறே சொல்லுகிறது -பிரபத்யே உத்தம புருஷன் தன்னிலை –
ஆகையால் சேதனர் தன்னை உபாயமாக பற்றும் இடத்தில் -ஸ்வ அபராத பயத்தாலே
பிராட்டியை புருஷகாரமாக முன்னிட -அவள் இவன் அபராத நிபந்தனமான தன் திரு உள்ளத்தின்
கலக்கைத்தையும் தானே தணித்து கொண்டு இவனை சேர்த்து கொள்ளுகையாலும் –
அதுதான் செய்கிற அளவில் -அர்த்தித்வ நிரபேஷமாக செய்கையாலும் –
புருஷகார க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் -என்கிறது –
மூன்று அபராதங்கள் -திரு உள்ளம் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வைப்பது பிராட்டி வியாபாரம் தானே -தானே பண்ணிக் கொண்டான் –
ஆகவே புருஷகார க்ருத்யத்வத்தை ஏறிட்டுக் கொண்டான் என்றபடி –

இனி உபாய  க்ருத்யம் தன்னதாய் இருக்க -அத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் என்கிறது –
த்வமேவ உபாய பூதா மே பவ இதை பிரார்த்தனா மதி சரணாகதி –என்று இவர் அர்த்தித்தால் -கார்யம் செய்ய அமைந்து இருக்க -/
வேண்டுதல் உபாயம் இல்லை அதிகாரி விசேஷம் -பிரார்த்தித்து பெற்றால் தானே புருஷார்த்தம் ஆகும் –
நாமே இவனுக்கு உபாயமாய் அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணக் கடவோம் என்று தானே என்று கொண்டு –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ-சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கையாலே –சரணாகதியே இல்லாமல் -தானே செய்தானே -அது தான் ஏறிட்டுக் கொண்டான் என்றது –
அல்லது -இப்படி இன்றிக்கே வேறே யோஜனை –உபாய உபேயத்வே ததிஹா தவ தத்தவம்  னது குணவ் -என்கிற வஸ்துவுக்கு-ஸ்வரூபமே உபாயம் –
உபாய க்ருத்யத்வம் வந்தேறி அன்று இறே –
உபய லிங்க விசிஷ்டத்வத்தாலே உபாய உபேயத்வங்கள் இரண்டும் ச்வதஸ் சித்தமாய் இறே இருப்பது –ஸ்வரூபத்திலே நித்ய நியதங்களாய் இருப்பது
ஹேய ப்ரத்ய நீகத்வம்-ஹேயா ரஹிதவமும் அந்நிய ஹேயே நிவர்த்தகம் -அநிஷ்ட நிவ்ருத்தி உபாயத்வம்
கல்யானைகதத்வம் மற்ற அனைவருக்கும் அனுகூலமாய் இருப்பதே -இத்தால் ப்ராப்யத்வமும் விவஷிதம் –
அன்றிக்கே உபேயமான தன்னை உபாயம் ஆக்குகையாலே உபாய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டான்
என்கிறது என்பாரும் உண்டு –ஆய் ஸ்வாமிகள் இப்படி அருளிச் செய்கிறார் –
கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குவது போலே –அது பால் மருந்தாம் போலே இவனும் உபாயமாம் இடம் இங்கும் உள்ளது ஒன்றாகையாலே
அர்ஜுனனுக்கு இப்போது அசாதாராணமாக செய்தது ஓன்று அல்லாமையாலும் –
உபாயம் -என்றே வஸ்துவை நிர்தேசித்து தத் வைபவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலும்
இவ் இடத்துக்கு உசிதம் அன்று -ஆன பின்பு கீழ் சொன்ன படியே பொருளாக வேணும் —

ஆச்சார்ய க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் -கார்பண்ய தோஷோ பகத ஸ்வபாவ
ப்ருச்சாமி த்வா தர்ம சம்மூட சேதா-யச்ஸ்ரேயஸ் சியான் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்
தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் என்று இவன் அர்த்தித்வம் உண்டாகையாலே
அந்ய க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்ட மாத்ரமே விவஷிதம் ஆகையாலும் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அந்ய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டமையும் –
அது தன்னை அர்த்தித்வ நிரபேஷமாக ஏறிட்டு கொண்டமையும் விவஷிதம் ஆகையாலும் –
ஸ்வ க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அர்த்தித்வ நிரபேஷமாக செய்த அளவே-விவஷிதம் ஆகையாலும் –
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே -என்கிற இது -க்ருத்ய த்ரயத்திலும் யதாயோகம்-அந்வயிக்க கடவது –

ஆச்சார்ய அஞ்ஞாத ஞாபனம் பண்ண –
பிராட்டி புருஷீகரிக்க –
வந்த தன்னை உபாயமாக பற்றினவனுக்கு
அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணி கொடுக்க அமைந்து இருக்க –
இவை எல்லா வற்றையும் தானே ஏறிட்டு கொண்டது வைபவம் இறே –
ஏறிட்டு கொள்ளுகையாலே மகா பாரதத்தில் உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து-என்றது
ஏறிட்டு கொண்டமையை பிரதிபாதிகையாலே சொல்லிற்று ஆய்த்து -என்றபடி –

———————————————-

உபய சாதாரண வைபவம்
சூரணை-15-

புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-

ஆக புருஷகார உபாயங்கள் இரண்டுக்கும் அசாதாராண வைபவத்தை அருளி செய்தார் கீழ்-
உபய சாதாரண -பொதுவான – வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –
தத்தத் சாதாராண வைபவம் சொல்லுகையாலே -புருஷகாரத்தையும் -உபாயத்தையும் -தனித்தனியே உபாதானம் பண்ணி அருளி செய்தார் கீழ் –
உம்மை தொகை இருப்பதால் பொதுவான குணங்கள் இரண்டுக்கும் உண்டே என்பதாலே
இது உபயத்துக்கும் சாதாரண-வைபவ கதனம் ஆகையாலே -புருஷகரத்துக்கும் உபாயத்துக்கும் -என்று தந்த்ரே னோபாதனம்
பண்ணி அருளி செய்கிறார் -உபயத்துக்கும் அசாதாராண வைபவம் சொல்லுகிற இடங்களில்
-இருவரையும் திருத்துவது -இத்யாதியாலே சாப்தமாக புருஷகார ஸ்வரூபமும் –ஸ்வரூபம் வேற வைபவம் வேறே -கீழே வைபவம் தானே அருளிச் செய்தார் –
தோஷ நிவர்த்தக -திருத்துவது என்று ஸ்வரூபம் -/ உப யுக்த கிருபாதி குணங்கள் புருஷகார அசாதாரண வைபவம்
உபாய வைபவம் -மற்ற உபாயம் எதிர்பார்க்காத தன்மை தானே ஸ்வரூபம் -வைபவம் ஆவது க்ருத்யம் சப்தத்தால் –
அர்த்திக்காமல் பிறர் கிருத்யம் ஏறிட்டுக் கொண்டது உபாய வைபவம் –
உபய சாதாரணம் ஸ்வரூபம் -உபாயம் எதிர்பார்க்காமல் –தன்னை அண்ட பிராட்டி எதிர்பார்க்காமல் -பெருமாள் உபாயாந்தரங்களை எதிர்பார்க்காமல்
பொதுவான ஸ்வரூபம் -குண ஹானி கொண்டு தள்ளாமல் இருப்பது ஸ்வரூபம் -அவற்றை பச்சையாக கொள்வது வைபவம் –
உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொள்கையாலே -என்கையாலே -ஆர்த்தமாக-உபாய ஸ்வரூபமும் சொல்லப் பட்டது –
இங்கு உபய ஸ்வரூப கதன பூர்வகமாக வைபவத்தை அருளி செய்கிறார் –

தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-என்று -தோஷம் ஆவது -அக்ருத்ய  கரணாதி  நிஷித்த அனுஷ்டானம் –
குனஹாநியாவது -விஹிதாகரணம் –
இவை இரண்டையும் -மநோ வாக் காயை -இத்யாதி சூர்னையாலே எம்பெருமானார் அருளி செய்தார் இறே –
இதம் குரு -இதம் மா கார்ஷீ -என்று விதி நிஷேதாத்மகமான சாஸ்திரம் தான் பகவத் ஆஞ்ஞா ரூபமாய் இறே இருப்பது –
ஸ்ருதிஸ் சம்ருதிர் மமைவாஞ்ஞா -என்று தானே அருளி செய்தான் இறே –
ஏவம் பூதம் சாஸ்த்ரத்தில் நிஷித்தத்தை செய்கையும் -விஹிதத்தை செய்யாமையும் இறே –
அநாதி காலம் ஷிபாமி ந ஷமாமி -என்னும் பகவன் நிக்ரகத்துக்கு இலக்காய் போருகைக்கு காரணம் –
இவை இரண்டையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே -என்றது –
ஆஸ்ரயண உந்முக சேதன கதனங்களான இவற்றை தர்சித்து -இவனை வேண்டாம் என்று கைவிடாதே –
அங்கீகரிக்கும் மாத்ரம் அன்றிக்கே என்றபடி –

அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-யாவது –
அப்படிப் பட்ட தோஷ குண ஹானிகள் தன்னையே -முகம் மலர்ந்து
அங்கீகரிகைக்கு உறுப்பான உபகாரமாக கொள்ளுகை-
உபேஷியாமைக்கு ஹேது -தயா ஷாந்திகள்
பச்சை யாக கொள்ளுகைக்கு ஹேது -வாத்சல்யம் –
சுவடு பட்ட தரையில் புல் கவ்வாத பசு -தன் கடையில் நின்றும் விழுந்த கன்றின் உடம்பில்
வழும்பை போக்யமாக விரும்புமா போலே -இருப்பது ஓன்று இறே இது –
இக் குணத்துக்கு ஒப்பதொரு குணம் இல்லை இறே-ஆகையால் இறே -நிகரில் புகழாய் -என்று ஆழ்வார் அருளி செய்தது –
உடையவரும் -அபார காருண்யா சௌசீல்ய வாத்சல்ய என்று குணாந்தரங்கள் உடன்
ஒக்க அருளி செய்தே -இதன் வ்யாவ்ருத்தி தோற்ற மீளவும் -ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -என்றார் இறே –
இவ் வாத்சல்யம் தான் மாத்ருத்வ சம்பந்தத்தாலே ஈச்வரனிலும் பிராட்டிக்கு-அதிசயித்து இறே இருப்பது –
ஆகையால் இருவரும் தம் தாம் அங்கீகரிக்கும் தசையில் இச் சேதனனுடைய
தோஷ குண ஹானிகளை பச்சையாக கொண்டு அங்கீகரிப்பார்கள் என்கை-

——————————————-

சூரணை -16
இரண்டும்  இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –

இப்படி புருஷகாரமும் -உபாயமும் -தோஷ குண ஹானிகள் குலைவதற்கு  முன்னே அங்கீகரிக்கிறது என் –குலையட்டும் என்று விருப்பம் கொண்டு –
நாம் -ஆசையுடன் இவர்கள் முன்னே நின்றவுடன் அங்கீ கரிக்கிறார்கள் -இவை குலைந்தே அங்கீ கரிக்க வேண்டும் என்று இருக்க மாட்டார்களே –
அவை குலைந்தே அங்கீகரிக்க கடவோம் என்று இருந்தால் வருவது என்என்ன -அருளி செய்கிறார் –

இரண்டும் என்கிறது -புருஷகார உபாயங்களை –
இரண்டும்  குலைய வேணும் என்று இருக்கை யாவது -இவனை அங்கீகரிக்கும் போதைக்கு இவனுடைய
தோஷ குண ஹானிகள் இரண்டும் -போய்- கொள்ள வேணும்-அங்கீ கரிக்க வேணும் – என்று நினைத்து
ஆஸ்ரயண உன்முகனாக இவனை அங்கீகரியாது இருக்கை விஷ்ணு சித்தர் கேட்டு அதன் படி இருப்பர் போலே -அங்கீ காரியா விட்டால்
சத்தையே இல்லாமல் தவிப்பார்கள் -இருக்கில் வரும் குற்றம் மேல்
-இப்படி இருக்கில் -இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது -புருஷ காரத்துக்கும் உபாயத்துக்கும்-தோஷ குண ஹானிகள்  இரண்டும் வருகை –
முதலில் தோஷ குண ஹானிகள் அவர்களுக்கு என்றும்- மேலே கிருத்ய அகரணம் அக்ருத்ய கரணங்கள் என்றும் அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில் -தோஷம் வருகை யாவது –
த்வம் மாதா சர்வ லோகானாம்
தேவதேவோ ஹரி பிதா
அகில ஜகன் மாதரம்
பிதாசி லோகஸ்ய சராசரஸ்ய-என்கிறபடியே
சகல சேதனருக்கும் நிருபாதிக மான சம்பந்தம் – தாயும் தகப்பனும் ஆகையாலே இச் சேதனனுடைய நன்மை தீமைகள் இரண்டும்
தங்கள் தாம் படியான உறவு உண்டாய் இருக்க -இச் சேதனனுடைய
தோஷாதிகளை பார்த்து அங்கீகரியாமையாலே-தாத்ருச சம்பந்தத்ததுக்கு-நிருபாதிக சம்பந்தத்துக்கு –கொத்தை விளைகை-
குண ஹானி வருகை யாவது -இவனுடைய துக்கம் கண்டு இரங்காமையாலும் –
இவனுடைய தோஷத்தை போக்யமாக கொள்ளாமையாலும்-
க்ருபா வாத்சல்யங்களுக்கு ஹானி வருகை –
அதவா –
இரண்டும் உண்டாய்த்தாம் -என்கிற இடத்திலும் -தோஷ குண ஹானிகள் ஆவன –
அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்கள் ஆகவுமாம்
புருஷகாரத்துக்கு அக்ருத்யகரணமாவது-ஈஸ்வரனையும் உள் பட தோஷம்
காண ஒட்டாத  தான் -தோஷாதிகள் குலைந்து அன்று அங்கீ கரியேன்-என்று இருக்கை–மைத்தடம் கண்ணினாய் -வாய் திறவாய் –
மா ஸூச- சொல்ல ஒட்டாமல் என் பரிகரங்களை நீரோ ரஷிக்க வேண்டும் -என்று சேர்ந்து ரஷிக்க வேண்டியவள் தடுத்தது போலே —
க்ருத்ய அகரணம் ஆவது -இவனுடைய தோஷாதிகள் பாராதே -கை கொண்டு
ஈச்வரனோடு சேர்பிக்கை ஆகிற ஸ்வ க்ருத்யத்வத்தை செய்யாமை –
ஈஸ்வரனுக்கு அக்ருத்ய கரணமாவது-சம்சாரி சேதனருடைய தண்மையை பார்த்து கை விடாதே –நித்ய -நிருபாதிக சம்பந்தம் அடியாக –
அத் வேஷமே தொடங்கி உண்டாக்குகைக்கு -எதிர் சூழல் புக்கு திரிகிற சர்வ பூத ஸூ க்ருதனான தான்
இச் சேதனனை அங்கீகரிக்கும் அளவில் இவன் தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீ கரியேன் என்று இருக்கை –
க்ருத்ய அகரணமாவது-இவனுடைய தோஷாதிகளை பாராதே கை கொண்டு ஸ்வ க்ருத்யமான
அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை பண்ணாமை –
இது தான் சேதனனுக்கு சொன்ன அக்ருத்ய கரணாதிகளை சாஸ்த்ரத்தை பற்ற சொல்லுகிறது அன்றே —கர்ம வஸ்யர்கள் இல்லையே
இவர்களுடைய ஸ்வரூபம் ஸ்வ பாவங்களை பற்றி சொன்னதாயிற்று
இவர்கள் ஸ்வபாவத்தை பற்றி சொல்லுகிற இவை இத்தனை இறே-விமுகரையும் உள் பட தோஷ குண ஹானிகள்
பச்சையாக மேல் விழுந்து அங்கீகரிக்கும்
ஸ்வபாவரான இவர்களுக்கு -அபிமுக சேதனர்களை அங்கீகரிக்கும் அளவில் தோஷாதிகள்
குலைய வேணும் என்று இருக்கை தான் முதலிலே கூடாமையாலே இவர்களுக்கு இவை
வருகைக்கு அவகாசம் இல்லை இறே-ஆயிருக்கச் செய்தே இப்படி அருளிச் செய்தது —
ராவணனை உட்பட மேல் விழுந்து அங்கீ கரிப்பவர் வருவார்களே விடுவார்களோ -நீராடக் போதுவீர் வியாக்யானம் –
இவ் அர்த்த தத்வம் அறியாதவர்களுக்கு- ஆச்ரயண உந்முக சேதன கதங்களான
தோஷ குண ஹானிகள் குலைய வேணும் என்று இராமல் அவற்றுடனே அங்கீகரிக்கை
இவர்களுக்கு அவஸ்ய கரணீயம் என்று அறிவிக்கைக்காக-
தண்டனை சாஸ்திரம் கிருபை யார் இடம் காட்ட -ஆச்ரயண உன்முகன் இடம் கிருபை — வைமுக்யன் இடம் சாஸ்திரம் காட்ட அன்றோ
அவள் முன்பே அருளிச் செய்தாள்- இந்த ஞானம் நமக்கு தெரிய வேண்டும் என்று இந்த சூர்ணிகை –
புத்ரனை அநீதியை கை விடுவது மாதா பிதா குற்றமே யாவது போலே சரீரத்தில் அழுக்கு இவனுக்குத் தானே வரும் –
லீலா ரசம் அபேக்ஷை -இல்லாமல் -தத் அனுகுண உபேக்ஷையும் இல்லாமல் இருக்க வேண்டும்
-சம்பந்தம் வாத்சல்யம் கிருபைகளுக்கு கொத்தை வரும் –

———————————————-

சூரணை-17-

இரண்டும்  குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –

இப்படி தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீ கரியோம் என்று இருக்கில்
அத் தலைக்கு அவை இரண்டும் வரும் என்னும் இடம் சொல்லி –
தோஷாதிகள் குலையப் பட்டு அன்றோ நம்மை அங்கீகரித்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இவை இரண்டும் வரும் என்கிறார் மேல் –

அபிமுகனான தோஷம் குண ஹானி பூர்ணனான சேதனன் -ஸூ அனுஷ்டான ஆஸ்திக்யங்களாலே கட்டுக் குலைந்து போனது -என்று கர்வத்து இருந்தால்
புருஷகாரம் உபாயம் -அடி அற -குற்றம் யார் இடமும் இல்லை என் அடியார் அது செய்யார் -தோஷம் தேடி இல்லை -என்ற நிலை கழிந்து பழைய படியே ஆகும் –
தன் யத்னத்தால் வந்தது என்றால் அவர்கள் உபேக்ஷிக்க காரணம் ஆகுமே -பல நீ காட்டிப் படுத்துவார்கள் –
தோஷ குண ஹானிகளுக்கு இசைந்தவர்களே ஆச்ரயண அதிகாரி -இல்லாத குற்றத்தை இருக்கு என்றாலும் இசைந்து இருப்பவனே ஸ்ரீ வைஷ்ணவன்
தோஷாதிகளில் ஒய்வு எடுக்கும் அபேக்ஷை -உபாய பூர்வ பாவியான புருஷகாரத்துக்கு முற்பட்டு –
தோஷாதிகள் இல்லாமல் இருப்பதை அனுஷ்டானம் உபாயத்துக்கு அப்புறம் —
ப்ரவ்ருத்தகரான சக்தரே நிவ்ருத்தகர் –அப்ரவ்ருத்தரான அசக்தர் -நாம் நம் குற்றங்களை போக்க முடியாதே –
ஆச்ரயண விரோதியான பாபங்களை போக்கும் பிராட்டி -பிராப்தி விரோதங்களை போக்குபவன் அவன் –
செய்விப்பவன் அவனே -சாது அஸாது கர்மங்களை எல்லாம் –

இரண்டும்  குலைந்தது என்று இருக்கை யாவது –
இத்தனை நாளும் நம்மை அங்கீகரியாதவர்கள்-இன்று அங்கீகரித்தது -நம் தோஷாதிகள்
குலையைப் பட்டு அன்றோ -ஆகையால் நமக்கு அவை குலைந்தது என்று அநு சந்தித்து இருக்கை –
இப்படி இருக்கில் -இத் தலைக்கு இரண்டும் உண்டாகையாவது –
அக்ருத்ய கரணமும்-க்ருத்ய அகரணமும்- வருகை –
எங்கனே என்னில் -இவ் வதிகாரிக்கு -அநாதி காலம் அங்கீகரியாதவர்கள் இன்று நம்மை
அங்கீகரித்தது நம்முடையதோஷ ஹானிகள் இரண்டும் குலைந்தவாறே அன்றோ
என்று அநு சந்திக்கை -அக்ருத்யமாய் இருக்க -அத்தை செய்கையாலும்-தோஷம் குண ஹானிகள் இருப்பதை –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -திரு வாய் மொழி – 3-3 -4-
அமர்யாத-ஸ்ரீ ஆளவந்தார்
புத்தவாச நோச-ஸ்ரீ –கூரத் ஆழ்வான்
அதிக்ரம அந் நாஜ்ஞம்–ஸ்ரீ பராசர பட்டர் -இத்யாதிபடியே
நம்முடைய தோஷ குண ஹானிகள்  இப்போது அளவாக ஒன்றும் குலைந்தது இல்லை என்றும் –
இப்படி இருக்க செய்தே தோஷாதிகளே பச்சையாக நம்மை அவன் அங்கீகரித்து அருளுவதே
என்றும் அநு சந்திக்கை க்ருத்யமாய் இருக்க அத்தை செய்யாமையாலும்-இரண்டும் வரும் இறே

——————————————

சூரணை -18-

ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –

இப்படி புருஷகாரமும் உபாயமும் -தோஷாதிகள் பச்சையாக அங்கீகரித்த இடம் உண்டோ
என்னும் அபேஷையிலே-தத் தத் அங்கீகாரம் பெற்ற ராஷசிகள் உடையவும் -அர்ஜுனன் உடையவும் –
தோஷங்களை தர்சிப்பிக்கவே அது சித்திக்கும் என்று நினைத்து
ப்ரதமம் ராஷசிகள் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –

அர்த்தவாதங்கள் -உண்மை இல்லை என்று ஆபேஷித்தால் -சாஸ்திரம் -விதி நிஷேதங்களுக்கு விரோதம் -கிருபா /
க்ஷமாதி வைபவம் சொல்லும் சாஸ்த்ர வாக்கியங்களும் உண்டே -ஆஸ்ரயித்தவர்களுக்கு குற்றங்களையே பச்சையாக கொண்ட இடங்கள் உண்டே –
புருஷகாரம்-இவற்றை பச்சையாக கொண்டு அங்கீ காரம் பெற்ற இடம் ராக்ஷஸிகளுக்கு -/
உபாயம் -இவற்றை பச்சையாகக் கொண்டு அங்கீ காரம் செய்த இடம் அர்ஜுனனுக்கு –

ஏகாஷி ஏக  கரணி முதலான ஏழு நூறு ராஷசிகளும் –
சங்க்யா நியதி-நம் இடம் உள்ள ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை -புராணாந்தரங்களிலே கண்டு கொள்வது —
க்ரூரர்கள் -கொடுமையான பார்வை உள்ளவர்கள் -நிகண்டுவில் குரூரம் -700-என்றும் உண்டே —
பரஹிம்சை பண்ண பெறில் உண்ணாதே
தடிக்கும் படி ப்ரக்ருத்ய  பாப சீலைகளாய்-பத்து மாசம் ஒரு படி பட்ட தர்ஜன பர்த்ச்னம் பண்ணி
நலிந்து போந்தவர்கள் இறே –
இவர்கள் தோஷம்  பிரசித்தம்-என்றது -ஸ்ரீ ராமாயணம் நடையாடும் தேசத்தில்
அறியாதார் இல்லை என்ற படி -ஏவம் பூதைகள் ஆனவர்களை குறித்து
ராஜ சம்ஸ்ரைய வச்யானாம் –பாபானாம் வா சுபானாம் வா -என்று
குற்றத்தை குணமாக உபபாதித்து -திருவடியோடே மன்றாடி –
ரஷிக்கையாலே -தோஷமே பச்சையாக அங்கீகரித்தமை
பிரசித்தம் என்று கருத்து –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது–இஷ்ட வ்யதிரேகம் மாத்திரம் குண ஹானி – -தோஷம் பச்சை யாம் இடத்தில்
குண ஹானி பச்சை யாம் என்னும் இடம் சொல்ல வேண்டா இறே என்று –
இவர்கள் தங்களுக்கு குண ஹானி யாவது –
இடைவிடாது நலிந்து போகிற இடத்தில் இவளும் நம்மோபாதி ஒரு பெண் பிறந்தவள்
அன்றே என்றாகிலும் மறந்தும் அல்பம் நெஞ்சில் இரக்கம் உண்டாதல் –
பவேயம் சரணம் ஹி வ -என்றதற்கு பின்பு நலிகிற இடத்தில் -ஐயோ இப்படி சொன்னவள் அன்றோ –
என்று சற்றும் நெஞ்சு உளுக்குதல் செய்யாமை -முதலானவை –
க்ரூர கர்மா ஜென்மங்கள் ராக்ஷஸிகள் தோஷம் -உள்ள இடத்தில குண ஹானியும் உண்டே
-த்ரிஜடை விலக்க விலக்க பண்ணினதால் குண ஹானியும் உண்டே

———————————————-

சூரணை-19-

ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-

இப்படி தோஷ பிரசுத்தி அர்ஜுனன் பக்கல் இல்லாமையாலும் -குண பிரதை உண்டாகையாலும் –
இவனுக்கு தோஷம் எது என்கிற சங்கையை அனுவதித்து கொண்டு தத் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –

அஸ்தானே ஸ்நேஹம் / அஸ்தானே காருண்யம் / தர்ம அதர்ம வியாகுலம்/
தாய் முறை சொல்லி -ஜிதேந்த்ரம் வென்றவன் -ஆஸ்திக்யம் உடையவன் –திருத்தி பணி கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டானே -/
அர்ஜுனன் ஜெயம் கிருஷ்ணன் கீர்த்தி எப்பொழுதும் -அபிமதன் / பிராக்ருதர்கள் பக்கல் முன்பு இல்லாத ஸ்நேஹம் -காட்டி /
ரக்ஷமாம் சரணம் கதம் திரௌபதி பரிபவம் கண்டு ரக்ஷிக்காதது பெரிய குற்றம் –ஸாமாந்ய தர்மம் சூதாட்டத்தில் தோற்று —

ஜிதேந்திரியரில் தலைவன் என்றது –
ஆரணச்ய ஆபரணம் பிரசாதன விதே பிரசாதன விசேஷ
உபமானாச்யாபி சகே பிரத்யுபமானம் வாபஸ் தஸ்யா -என்னும் வைலஷண்யம் உடைய
ஊர்வசி வந்து மேல் விழ-தாயார் – முறை கூறி நமஸ்கரித்து கடக்க நின்றவன் ஆகையாலே
இந்திரிய ஜெயம் பண்ணினாரில் தனக்கு மேல் பட்டார் இல்லாதவன் -என்கை
ஆஸ்திக அக்ரேசன் -என்றது-அஸ்தி என்று ஒத்துக் கொள்பவர் ஆஸ்திகர்
தர்ம அதர்ம பர லோக சேதன ஈச்வராதிகளுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில்
ப்ரமாண்ய புத்தி உடையவர்களுக்கு முன் நடக்கும் அவன் என்கை –
கேசவச்யாத்மா என்று கிருஷ்ணனுக்கு தாரகமாய் இருக்கிற -என்றது
அர்ஜுன கேசவச்யாத்மா கிருஷ்ணஸ் சாத்மா கிரீடின-என்று அன்யோன்யம் பிராண பூதராய்
இருப்பார்கள் என்கையாலே -இவனை பியில் கிருஷ்ணன் தரிக்க  மாட்டான் என்னும் படி
அபிமத விஷயமாய் இருக்கும் அவன் என்கை-

இப்படி இருக்க -அர்ஜுனனுக்கு தோஷம் எது என்ற சங்கை -என்னில் -என்றது -அநு வாதம் -தோஷங்கள் தன்னை சொல்லுகிறது –
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும் -என்று –
இவற்றில் சிநேக காருண்யங்கள் தோஷங்கள் ஆகிறது -அஸ்தானே க்ருதங்கள் ஆகையாலே –
வத பீதி தோஷம் ஆகிறது -ஸ்வ தர்மத்தில் அதர்ம புதத்யா வந்தது ஆகையாலே –
அஸ்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம த்யாகுலம் –தீ புத்தி கலங்கி என்றபடி என்று இறே ஆளவந்தாரும் அருளி செய்தது –
தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே சமவேதா யுயுத்சவ -என்கிறபடியே யுத்த இச்சையிலே இரண்டு தலையும்
வந்து அணைந்து நின்ற பின்- -யுத்தமே கர்த்தவ்யமாய் இருக்க -அத் தசையில் –யுத்தத்தில் திட புத்தி உள்ளவன் யுதிஷ்ட்ரன் -என்ற பெயர் காரணம் –
ஸ்நேஹம் மனஸ் இளகி இருப்பது -/ ஆர்த்ததா தன்மை -/ காருண்யம் -தயை -/
உபகாரம் பண்ணி புண்யம் -வைத்தியர் அஹிம்சா பரமோ தர்மம் என்று அறுவை சிகிச்சை செய்யும் பொழுது செய்யலாமோ -/
ந கான்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் சூகாநிச கிம் நோ ராஜ்யேன
கோவிந்த கிம் போகைர் ஜீவதேநவா ஏஷாமர்த்தே கான்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் சூகாநிச
த இமே வச்திதாயுத்தே ப்ராணான் த்யக்த்வா தநாநிச -இத்யாதி படியே
இவர்களை கொண்டு நான் ஜீவிப்பதொரு ஜீவனம் உண்டோ என்று பந்துக்கள் பக்கல்
பண்ணின சிநேகம் -ஸ்வ வர்ண-ஷத்ரிய வர்ண – வ்ருத்தம் ஆகையாலே நிஷித்தம் இறே –
தான் சமீஷ்ய  ச கௌ ந்தேயஸ் சர்வான் பந்தூ ந வஸ்திதான்
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந் நித மப்ரவீத் -என்னும்படி
அத் தசையில் பண்ணின காருண்யமும் -பஸ்வா லம்பநத்தில் காருண்யம் போலே நிஷித்தம் இறே —
குர்யாத் -விசிஷ்டா அதிகாரி மாவாலும் நெய்யாலும் பசு வைத்து பண்ணலாம் யாகம் –
கதம்  நஞ்ஞேய மச்மாபி பாபா தஸ்மா ந் நிவர்த்திதம்  குலஷய
க்ருதம் தோஷம் பிரபச்யத்பிர் ஜனார்த்தன -என்று தொடங்கி-
அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவசிதா வயம்
யத் ராஜ்ய  சூகலோபேன ஹந்தும் ஸ்வ ஜன முத்திதா -என்னும் அளவும்
ஸ்வ வர்ண தர்மமான வாதத்திலே அதர்ம புத்த்யா பண்ணிய பீதியும் அப்படியே இறே –

———————————————

சூரணை-20-

திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது
கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –

இவை எல்லாம் அப்ரதானம் -இன்னும் பிரதான தோஷம் வேறே என்கிறார் –

கரிஷ்யே வசனம் தவ என்று உடனே யுத்தத்தில் இல்லாமல் -18- சொல்லி இசைவிக்க வேண்டியதால் குண ஹானி உண்டே அர்ஜுனன் இடம்
இனி உறாமை என்று ஆழ்வார் அருளிச் செய்ததும் -உடன் உற்றேன் முடிக்காதது-மேலே பிரபந்தம் சொல்லியே முடிக்கப் பெற்றது –
பகவான் குற்றம் இல்லையோ என்னில் இல்லை அங்கு -நாடு திருந்த நச்சுப் பொய்கையை ஆகாமைக்கு இத்யாதி நான்கு காரணங்கள் உண்டே
இங்கு அர்ஜுனன் – ஸ்வா தந்தர்யத்தால் -வர்ணாஸ்ரம தோஷம் பிராயாச்சித்தம் பண்ணி போக்கலாம் இது ஸ்வரூப நாசம் –
-அது ஸ்தூலம் இது சூஷ்மம் -எனவே பிரதான்யம் –

முன்பு திரௌபதியை துர்யோதநாதிகள் பரிபவிக்கிற படியை கண்டு இருக்க செய்தே –
சூதிலே தோற்றமையை நினைத்து -அதர்ம பீதியாலே பொறுத்து இருந்தாலும் –
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணாம் கதம் -என்று கிருஷ்ணனை சரணம் புகுந்த பின்பு
பரிபவிக்கிற அளவில் -பகவத் ஆஸ்ரயிரை பிறர் பரிபவிக்க கண்டால் சக்தன் ஆகில் விலக்க வேண்டும் –
அசக்தன் ஆகில் இழவோட அவ்வருகே போக வேணும் என்னும் விசேஷ சாஸ்திர மரியாதை பார்த்தாதல் –
தன் அளவில் கிருஷ்ணனுக்கு உண்டான சிநேக பஷ பாதங்களை நினைத்து -அவனை சரணம்
புகுந்தவள் பரிபவிப்பட பார்த்து இருந்தால் அவன் முகத்தில் நாளை விழிக்கும் படி என்-என்றாதல் –
சரக்கென எழுந்து இருந்து விலக்க இறே அடுப்பது –
அத்தை செய்யாதே முன்புத்தையில் காட்டில்–திரௌபதி சரணம் அடைவதற்கு முன்புள்ள தசை – ஒரு விசேஷம் அற-வாளா – இருந்தான் இறே –
இதுவே ஆய்த்து இவன் தோஷங்கள் எல்லா வற்றிலும் பிரதானமாக கிருஷ்ணன் திரு உள்ளத்தில்
பட்டுக் கிடப்பது -அத்தை பற்ற -கிருஷ்ணன் அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் -என்கிறது –
தோஷத்துக்கு பிரதாந்யம் க்ரௌர்யத்தால் இறே –
அல்லாதவை போல்-அல்லாதவை பகவத் அபசாரம் போல்வன என்றவாறு- அன்றிக்கே -ந ஷமாமி -என்னும் படி யான தோஷம் இறே இது –

—————————————–

சூரணை -21-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க
வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –

இத் தோஷத்தின் கொடுமையை உபபாதிக்கிறார் மேல் –
அன்றிக்கே இத் தோஷம் ஐவர்க்கும் ஒவ்வாதோ -ஆன பின்பு இத்தலையையும்
நிரசித்து பொகடாமல் வைத்தது என் என்கிற சங்கையில் அருளி செய்கிறார் ஆகவும்-

பாகவத அபசாரம் கொடுமை இதுவே இப் பிரபந்த சாரம்/ நேராக வராததும் இதுவே காரணம் -/
சரணகதாம் என்ற நாக்கு வேரூன்றி உள்ள கழுத்து பற்றிய மங்கள ஸூ த்ரம் அன்றோ —
செய்ய வாய் -முற்றும் உண்ட கண்டம் -வாய் வழியே போட்டால் தான் கழுத்தில் வரும் -அங்கு வியாக்யானம் /

முற்பட சங்கதிக்கு அர்ஜுனனை என்னாதே -பாண்டவர்களையும் -என்றது இத் தோஷம் ஐவர்க்கும்
ஒக்கும் என்று தோற்றுகைக்காக என்று யோஜிக்க கடவது –
அனந்தர சங்கதிக்கு தானே தன்னடைவே சேரும் இறே
பரிபவித்த துர்யோதனாதி களோபாதி பரிபவம் கண்டு இருந்த இவர்கள்
நிரசநீயர் என்கிறது  -ச சப்தத்தாலே –உம்மைத் தொகையால் –
நிரசிக்க பிராப்தமாய் இருக்க வைத்தது -என்றது -இவர்கள் செய்த கொடுமைக்கு
தலையை அறுத்து பொகட வேண்டி இருக்க -பிராணனனோடே இருக்கும் படி -வைத்தது என்ற படி –
திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக -என்றது -அவளுக்கு அபிமதமான மங்கள சூத்ரம்
போகாமைக்கு என்ற படி -விரித்ததலை காண மாட்டாதவன் -வெறும் கழுத்து காண மாட்டான் இறே –
இத்தால் ஆஸ்ரிதரை பரிபவித்தோரோ பாதி அது கண்டு -வாளா – இருந்தாரும் நிரசன நீயர் என்னும் இடமும் –
அவர்கள் தாங்களே ஆஸ்ரிதர்க்கு விட ஒண்ணாத தொரு பந்தம் உடையார் ஆகில்
அவர்களுக்காக அவனால் ரஷிக்க படுவர் என்னும் இடமும் -பிரகடிதம் ஆய்த்து –

———————————————————

சூரணை -22-

அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —

ஆனால் இப்படி நிரச நீயன் ஆனவனுக்கு இழி தொழில் செய்ததும்
பரம ரஹச்யத்தை உபதேசித்ததும் -என் செய்ய -என்ன -அருளி செய்கிறார் –

அந்தத்தில் முடியும் வகை அடியேற்கு தெரியும் ஓ ஆதி மூர்த்தி -சகாதேவன் சொன்னதை -வில்லிபுத்தூரார் –
பாகவதையான பரிபவம் கண்டு வாளா இருந்தமை –ஆறாவது காது கேட்க்க கூடாத -பூசல் காலத்திலே உபதேசித்து –
கடகன் போலே தூது சென்று பூசல் விளைத்து -சாரதியாய் இருந்து தன் மநோ ரதம் நடத்தியும் -சரணாகதையின் அபேக்ஷிதம் நடத்தி தலைக்கட்டவே —

தூது போய்த்தது-பொய் சுற்றம் பேசி நின்று பேதம் செய்து பூசல் விளைக்காக—பெரியாழ்வார் திருமொழி – – – –
சாரத்தியம் பண்ணிற்று -ஆயுதம் எடுக்க ஒண்ணாது ஆகையாலே -கொல்லா மா கோல் கொலை செய்து
பாரத போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவிக்கைக்காக -திரு வாய் மொழி -3- 2- 3-
பிரபத்தி உபதேசம் பண்ணிற்று -ந யோத்ச்யாமி -என்று இருந்தவனை -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி
யுத்தே பிரவ்ருத்தன் ஆக்குகைக்காக –
இவை எல்லாம் செய்தது -சரணாகதை யான இவள் சங்கல்பத்தின் படியே
துர்யோநாதிகளை அழிய செய்து இவள் குழலை முடிப்பைக்காக இறே –
ஆக அர்ஜுனன் திறத்தில் செய்த தூத்யாதி த்ரயமும் இவளுக்காக செய்தான் என்கிறது –
பாண்டவர்களையும் என்று தொடங்கி -இவ்வளவும் கீழ் சொன்ன பிரதான தோஷ
க்ரௌர்யமும் உபபாதிதம் ஆய்த்து –
ஆக இப்படி
அஸ்தான ச்நேகாதிகளும் -சரணாகதை பரிபவம் கண்டு இருந்த மகா தோஷமும்
இவனுக்கு உண்டாய்  இருக்க –
சர்வ குஹ்யதமம் பூய –
ஸ்ருணுமே பரமம் வச –
இஷ்டோசி மே த்ருட இதி ததோ வஹ்யாமி தேஹிதம் –
மன் மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ்  குரு மமே வைஷ்யசி சத்யம் தே
பிரதி ஜானே ப்ரியோசி மே -என்று
இவன் அளவில் உகப்பு தோற்ற அருளி செய்கையாலே இவன் தோஷங்களை பச்சையாக கொண்டு
அங்கீகரித்தமை பிரசித்தம் என்று கருத்து —சிரித்துக் கொண்டே உகந்து செய்த படியால் –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது -தோஷம் பச்சையாம் இடத்தில் குண ஹானி பச்சை யாம் என்னும் இடம்
கிம்புனர் நியாய சித்தம் ஆகையாலே —
இவன் தனக்கு குண ஹானிகள் ஆவன –
தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -என்று அருளி செய்த போதே –
கரிஷ்யே வசனம் தவ -என்று எழுந்து இருந்து ஸ்வ க்ருத்யமான யுத்தத்தை பண்ணாமையும் –
கிருஷ்ணனை சரணம் புகுந்தவளை பரிபவிக்க விட்டு பார்த்து கொண்டு இருந்தோமே என்னும்
அநுதாப லேசமும் நெஞ்சில் இல்லாமையும் தொடக்கமானவை –
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காகா வாகில்-
இவன் தோஷத்தை பச்சையாக கொண்டு அங்கீகரித்தான் என்னும் அது கூடாதே -என்னில் -அதுக்கு குறை இல்லை –
இவள் கார்யார்த்தமாக இவனை குறித்து இவை எல்லாம் செய்கிற இடத்தில் -இவன் தோஷங்களை
பார்த்து முகம் சுளியாமல் உகப்போடே செய்கையாலே –

த்வய விவரணம் இப்பிரபந்தம் என்கிறார் மேலே
அர்ஜுனனை குறித்து ஆச்சார்யா க்ருத்யாதிகளை
ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அவன் தோஷத்தை பச்சையாக கொண்டும் -சாரதியாக புரை யற கலந்து நின்றும்
செய்கை முதலானவை உண்டாகையாலே –
அறியாத அர்த்தங்களை -இத்யாதியாலே -ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான வாத்சல்யாதி குணங்கள் சூசிதம் —பூர்வ வாக்கியம் நாராயண அர்த்தம்
இங்கே -தூத்ய சாரத்வங்கள் பண்ணிற்றும் -என்கிற இத்தாலே –
அஸ்மாத் வேத்த பரான் வேத்த  வேத்தார்த்தம் வேத்த பாஷிதம் யத் யதஸ் மத்திதம்
கிருஷ்ண தத் தத் வாச்யஸ் சூயோதன -என்கிறபடியே
கார்ய அகார்யா ஞானனான   தான் போனால் அல்லது கார்ய சித்தி உண்டாகாது என்று
இத்தலையை ரஷிக்கைகாக தான் தூது போனமையும் –
ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்கையாலே -சாரத்யத்தில் ப்ரவர்தனாய் கொண்டு தேர் காலாலே
பிரதி பஷத்தை அழிய செய்தமையும்  தோற்றுகையாலே – ஆஸ்ரித கார்ய ஆபாதங்களான
ஞான சக்தி யாதிகள் சூசிதம் -உத்தர வாக்ய நாராயண அர்த்தம் –
இன்னமும் -பிரதி பத்தி பண்ணிற்றும் -என்கையாலும்-சரம ஸ்லோகத்தில் -மாம்-அஹம் -என்கிற
பதங்களால் சொல்லப் படுகிற உபயவித குணமும் சூசிதம் இறே-
ஆகையால் புருஷகார வைபவம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ மத் பதார்த்தம் பிரகடிதமானவோபாதி –
அநந்யார்ஹை பாரதந்த்ர கேட்பீக்கும் -குண வர்த்தகை -ஸ்ரீ சபிதார்த்தம் –
உபாய வைபவம் சொல்லுகிற இடத்தில் நாராயண பதார்த்தம் பிரகடிதம் –
உபாயத்வம் -சொல்லுகையாலே -சரணவ் சரணம் -என்றதும் சூசிதம் –
ஆக -இதிஹாச ஸ்ரேஷ்டம் 5–என்று தொடங்கி -இவ்வளவும் -ஸ்ரீ இராமாயண மகா பாரத
உக்தங்களான புருஷகார உபாய வைபவங்கள் தத் தத் ஸ்வரூபங்களோடே விசதமாக பிரதி பாதிக்க பட்டது –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -5-13-புருஷகார உபாய வைபவ பிரகரணம் -புருஷகார வைபவம்- ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 29, 2017

முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார்

புருஷகார வைபவம்–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றம் –

——————————————

சூரணை -5-

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-

ஸ்ரீ ராமாயணத்துக்கு ஸ்ரேஷ்டத்துக்கு அடை மொழி சொல்லி -மஹாபாரதம் நேராக சொல்லி – தூது போனவன் என்று ஆஸ்ரித பரதந்த்ரன் என்றவாறு –
உஜ்ஜீவனத்துக்கு அன்றோ இந்த பிரபந்தம் -ஆகவே சாரமான அர்த்தங்களை இந்த இதிகாசங்களில் இருந்து அருளிச் செய்கிறார் –

முதலிலே வேதார்த்தம் இத்யாதியாலே -வேத தத் அர்த்த தத் உப ப்ருஹ்மணங்களை
சாகல்யேன உபாதானம் பண்ணி -அந்த வேதத்தினுடைய பாக விபாக தத் உப ப்ருஹ்மண
விபாகங்களையும் பண்ணினாரே ஆகிலும் -(-சங்கா பரிகாரம் மேலே )-
சேதனருடைய உஜ்ஜீவனத்துக்கு அபேஷித அர்த்தங்களை
அருளி செய்ய இழிந்தவர் ஆகையாலும் ( ப்ரஹ்ம மீமாம்ஸையிலும் இதே போலே தானே )-அது தான் பூர்வ பாக வேத்யம் அன்றிக்கே -உத்தர பாக
வேத்யம் ஆகையாலும் -பூர்வ பாகத்தில் முமுஷுவுக்கு ஞாதவ்ய அம்சம் உள்ளதும் -உத்தர பாக
அர்த்தங்களான ஸ்வரூப உபாய புருஷார்த்த பிரதிபாதன ஸ்தலங்களிலே -தத் தத் அனுகுண
த்யாஜ்யுபாதேய கதன முகேன ஞாபிகளாய் இருக்கையாலும் -உத்தர பாக அர்த்த நிர்ணயத்திலே-ப்ரவர்த்தராய் -அது தன்னிலும்
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் பகவத் உபாசானாதிகளையும்
பரக்க நின்று பிரதிபாதிக்கிற இடங்களில் -சார அசார விவேக பூர்வகமாக தாத் பர்யங்களை ஸங்க்ரஹித்து –
சம்சய விபர்யயம் அற சேதனருக்க்கு பிரபத்தி விஷயமாம் படி அருளி செய்து செல்லுகிறார் மேல் – (ஸாத்ய விஷயங்கள் அசாரம்- சித்த விஷயங்கள் தானே சாரம்-
அதனாலே நேராக புருஷகார வைபவம் அருளிச் செய்கிறார் -சார தாமம் அன்றோ – )
(கீழே பிராமண நீர்த்தேசம் -பிரமேய நீர்த்தேசம் செய்கிறார் )
அதில் பிரதமத்திலே உத்தர பாக உப ப்ரும்ஹண த்வயத்தில் பிரபலமாக சொன்ன இதிகாசங்களில் வைத்து கொண்டு
ஸ்ரீ ராமாயணத்தினுடைய பிராபல்யத்தை பிரகாசிப்பியா நின்று கொண்டு தத் பிரதிபாத்ய விசேஷத்தை அருளி செய்கிறார் —

இதிஹாச த்வயத்தில் பிரதிபாத்ய அர்த்த விசேஷயத்தை பற்ற ஸ்ரேஷ்டம் என்கிறார் ஸ்ரீ ராமாயணத்தை –
பிரபந்த கர்த்தா நான்முகன் அனுக்ரஹம் அங்கு தகப்பனார் அனுக்ரஹம் இங்கு / ஸீதாயா சரிதம் மஹத் -வால்மீகி –
காவ்யம் உள்ளுறை பொருளால் பெருமை சப்தங்கள் எல்லாம் ராமனை சொல்லும் -ராமாயணம் காவ்யம் க்ருஸ்னம்- முழுவதும் என்றவாறு –
கிருபா அதிசயத்தால் வந்த ஏற்றம் அந்த கர்மம் சிறை இருந்தவள் என்பதால் -தொனிக்கும் -ராமன் சிறை இருக்க வில்லையே –
கலப்பை நுனி சீதா// சீதாஷீன் தாது தலைப்பட்டு இருந்தவள் சிறைப்பட்டு இருந்தவள் –
மடக்கு ஓசை கழுத்தில் கட்டி -இன்னார் தூதன் -சுலப ரக்ஷகத்தால் வந்த ஏற்றம் -ஸ்ரேஷ்டம் -சப்த வை லக்ஷண்யம் இல்லை இரண்டும் சம்ஸ்க்ருதம் –
உபய கர்த்தாக்களும் ரிஷிகள் -கிரந்த பாஹுலயத்தால் இல்லை
தூது போனவன் சரித்திரத்தை பகல் விளக்கு படுத்தும் சிறை இருந்த சரித்திரம் பிரபாவம் அர்த்த விசேஷம் அன்றோ –
பிறர் கால் விலங்கு அற- -பிறர் அனர்த்தம் கண்டு -இயற்கையிலே ஸ்த்ரீ -இளகிய நெஞ்சு சார தம்மை -தந்தை காலில் விலங்கு அற வந்தது ஏற்றமோ –
சிறைப்படாமல் நழுவியும் பிறர் அனர்த்தம் கண்டு கால் நகர்ந்து தூது போனதும் ஏற்றமோ – –
கருணை பாரதந்தர்யம் ஸ்வாதந்தர்யம் அடியாக ஏறிட்டு கொண்டவன் நெஞ்சு -பிரபாவம் -ஒக்குமோ
வெஞ்சொல் பொருத்தும் இனிய சொல் சொல்வாரை தேடி ஆற்றாமை கரை புரண்டு -பாரதந்தர்யம் நோக்கி ஸ்வ சக்தியை கைவிட்டு –
சக்திமான் பின்னே தொடர்ந்து நடந்தும் – ஆஸூர பிரக்ருதிகளுக்கு ஹிதம் சொல்லியும்- ததியர் வரக் கண்டு சத்தையைப் பெற்றும் –
தத் ஸ்பர்சம் பெற்று பாடு ஆற்றியும் -ததீயர் விக்ரஹம் மங்களா சாசனம் பண்ணியும் நெருப்பு சுடக்கூடாது என்றதை இப்படி அருளிச் செய்கிறார் –
ததியர் இடம் சல்லாபித்து ஆற்றாமை தாபம் குறைத்தும் -சாபராதம் பண்ணிய ராக்ஷஸிகள் இடமும் கிருபை பொழிந்து
அநந்யார்ஹர்-அநந்ய தைவம் அநந்ய போக்தராயும் – பரம ஆப்தருடைய தன்னேற்றம் -பிந்து ப்ரஸேனம் செய்து அருளுகிறார் -என்பர் ஆய் ஸ்வாமிகள் –

ஸ்ரீ ராமாயணத்துக்கு இதிஹாச ஸ்ரேஷ்டத்வமாவது -வால்மீகயே மகர்ஷயே சந்தி தேச
ஆசனம் தத பிரஹ்மணா சமனுஜ்ஞாதஸ் சோப்யு பாவிசத சனே-என்று சகல லோக பிதாமஹானான
பிரஹ்மாவாலே சம்பாவிதனான-கௌரவிக்கப்பட்ட ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரநீயதம் ஆகையாலும் –
(வியாஸர் எழுதி வருந்தி நாரதர் சொல்லி பாகவதம் எழுத்தாகி சொன்னாரே அங்கு )
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்று –ப்ரஹ்மா அநுக்ரஹிக்கையாலே இதில் சொன்ன
அர்த்தங்களை எல்லாம் மெய்யாக கடவதாகையாலும் —
எம்பெருமான் தானே திரு ஓலக்கம் இருந்து கேட்டு அருளிய பெருமை உண்டே ஸ்ரீ ராமாயணத்தை சாம கானம் போலே உகந்து -உத்தர காண்டம்–
பவிஷ்யத் நடக்கப் போவதை லவகுசர் சொல்ல கேட்டு மகிழ்ந்து -பரம பிரயாணம் -) தாவத் ராமாயண கதா லோகேஷூ பிரசர்ஷயதி -என்று
சகல லோக பரிக்ரஹம் உண்டாகையாலும் -இதிஹாசாந்தரங்களை பற்ற பிரபல பிரமாணமாய் இருக்கை-
இது தன்னை-நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தத்தவத்ரய பிரபந்தத்தில் பிரமாண அதிகாரத்திலே அருளி செய்தார் இறே–இந்த பிரபந்தம் இப்பொழுது கிடைக்க வில்லை –
நம்பிள்ளை லோகான் சத்யத்தால் வென்றான் என்று சொல்லியத்தை கேட்டு இந்த நடுவில் திரு வீதி பிள்ளை அரசனிடம் பரிசு பெற்ற ஐதிக்யம் உண்டே –

இன்னமும் வேத வேத்யே பரே பும்சி-இத்யாதி படியே சர்வச்மாத்பரனான சர்வேஸ்வரன் சம்சாரி சேதன ரஷண அர்த்தமாக
இதர சஜாதீயனாக வந்து அவதரித்தால் போலே -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான வேதமும் -தத் அவதார குண சேஷ்டித
பிரதிபாதன முகேன-தத் ஆச்ரயண ருசியை சம்சாரிகளுக்கு உண்டாக்கி ரஷிக்கைகாக ஸ்ரீ ராமாயண ரூபேண அவதரித்தது என்று
சொல்லப் படுகையாலும் -இதனுடைய ஏற்றம் சம்ப்ரதிபந்தம் –( வேதமே வால்மீகி மூலம் இங்கே ஆவிர்ப்பவிக்க வியாசம் வேதத்தை காவியமாக அன்றோ ஆக்கினார் )
பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக -தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –
இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி
மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது – அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் –சிறை இருந்ததாலே விளப்புற்றாளே-
சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே -ஆஸ்ரிதரான தேவர்கள்
உடையஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –
இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷண அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது என்னும் இடம் -காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம்
சீதாயாஸ் சரிதம் மஹத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர் –
உம்முடைய சரித்ரத்தாலே பிராண தாரணம் -என்கிறார் -பிரகர்ஷமாக உஜ்ஜீவிக்கிறது –

அநந்தரம் மகாபாரத பிரதிபாத்யத்தை அருளி செய்கிறார் -மகா பாரதத்தால் என்று தொடங்கி –
க்ருஷ்ணத் வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும் கோக்யந்தோ புவி மைத்ரேய மகாபாரத
க்ருத் பவேத் ஏவம் விதம் பாரதந்து ப்ரோக்தம் யேன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபி மகா முனி –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்று பகவத் ஆவேச அவதாரமாய்-சஹோவாச வியாச பாராசர்ய-என்று ஆப்த தமனாக- பிரசித்தமாய்
இருந்துள்ள -ஸ்ரீ வேத வியாச பகவானாலே -வேதான் அத்யாபயாமாச ,மகா பாரத பஞ்சமாத் -என்கிறபடி –
பஞ்சம வேதமாய் -ப்ரணீ தமாய் -அநேக புராண பிரசச்தமாய் இருந்துள்ள மகா பாரதமும் ஸ்ரீ ராமாயணத்தோ பாதி
பிரபல பிரமாணம் –இத்தாலே ஸ்ரீ ராமாயணம் பிரபல தமம் என்றதாயிற்று – –இதுவும் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தாமே அருளி செய்தார் –
பெரிய பட்டரும் ஸ்ரீ சஹஸ்ரநாமபாஷ்ய உத்போதகத்தில் ஸ்ரீ இராமாயண வந் மகா பாரதம் சரணம் -என்று அருளி செய்தார் இறே
சர்வேஸ்வரன் -என்னாதே -தூது போனவன் -என்றது அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ரத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேவதேவனானவன் தன்பெருமையையும் -செய்கிற தொழிலின் தண்மையையும் -பாராதே –
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்தது-
ப்ரணத பாரதந்த்ர்ய ருசி பரவசனாய் இறே -இது தான் இவனுடைய ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக நீர்மைக்கு
உடலாய் இருந்துள்ள வாத்சல்யாதிகளுக்கு எல்லாம் பிரகாசமாய் இருப்பது ஓன்று இறே –
இந்த குண ஆதிக்யத்திலே ஈடு பட்டு இறே -இன்னார் தூது என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-என்றும்
குடை மன்னர் இடை நடந்த தூதா –பெரிய திரு மொழி -6-2-9–என்றும் –திரு மங்கை ஆழ்வார் அருளி செய்தது-
அந்த திவ்ய சூக்தி இறே இவர் இப்படி அருளி செய்கைக்கு மூலம் -பேசிற்றே பேசுகை இறே இவர்களுக்கு ஏற்றம் –
தூது போனது தண்மை ஆவது -கர்மவச்யத்தை அடியாக வரிலே இறே –
ஐச்சமாக ஆஸ்ரித விஷயத்தில் செய்கிற தாழ்ச்சி எல்லாம்
ஏற்றத்துக்கு உடலாய் இறே இருப்பது -ஸ உச்ரேயான் பவதி ஜாயமான -என்று-அந்த பரம் பொருள் ஒருவனுக்கு இந்த பெருமை என்றதே –
பரார்தமாக பிறக்கையாலே நிறம் பெரும்- என்று சுருதி சொன்ன இது பரார்தமாக
தன் இச்சையிலே செய்யும் அவை எல்லாம் இவனுக்கு தேஜஸ் கரம் என்னும் அதுக்கு உப லஷணம் இறே –
இவன் செய்த தூத்யத்தை மாந்த்ய ஹேதுவாக நினைப்பார் அறிவு கேடரில் தலை யானவர்கள் இத்தனை –
அறிவில் தலை நின்றவர்கள் -எத்திறம் -என்று மோகிக்கும் படி இறே இருப்பது -இப்படி இருந்துள்ள
இந் நீர்மையின் ஏற்றத்தை -வெளி இடுகைக்காக ஆய்த்து இவர் -தூது போனவன் -என்று அருளி செய்தது –
மகா பாரதம் எல்லாம் இவனுடைய ஏற்றம் சொல்லுகையிலே தாத் பர்யம் ஆகையாலே இறே
மகாபாரத கதை சொல்ல தொடங்குகிறவன் -நாராயண கதாம் இமாம் -என்றது –
ஆக பிரபந்த த்வ்யத்துக்கும் பிரதான பிரதிபாத்யங்கள் என்னது என்னும் இடம் பிரகாசிக்க பட்டது-

—————————–

சூரணை-6-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

இரண்டாலும் என்றது ஸ்ரீ ராமாயணத்தையும் ஸ்ரீ மஹா பாரத்தையும் -புருஷகார வைபவம் உபாய வைபவம் இரண்டுமே
முதல் பிரகரணத்தில் உண்டே என்றாலும் முன்னதே பிராசர்யம்
இவ்வேற்றம் இரண்டின் ஊற்றத்தை அருளிச் செய்கிறார் – அபராத பய நிவ்ருத்தி போக்கும் தாயாதி கிருபை தயா வைபவமும் —
சித்த உபாயத்தை தானே அருளிச் செய்து -சுலபத்வாதி-தூது போவதே ஸுலப்யத்தின் காரியமே – மாம் என்று தொட்டுரைத்த சொல் —
ஹார்த்தமாக உள்ளுறைப் பொருளாக -சொல்லிற்று ஆயிற்று –

உபய ப்ருஹ்மண முகேன -வேதார்த்த தாத்பர்யத்தை நிஷ்கரித்து –(வேத தாத்பர்யம் என்று சொல்லாமல் -)-உஜ்ஜீவனதுக்கு உடலான வற்றை
சொல்லுவதாக இறே உபக்ரமித்தது -அதில் இப்போது சொன்ன இவற்றால் வேதாந்தத்தில் எவ் அர்த்தங்கள்
சொல்லிற்று ஆய்த்து -என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிறை இருந்தவள் ஏற்றம்-தூது போனவன் ஏற்றம் -என்ற இவை இரண்டாலும் அபராத பூயிஷ்டரான
சேதனருக்கு ஆஸ்ரயணீயை யாம் அளவில் -அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் –த்வம் மாதா சர்வ லோகாநாம் – –
க்ருபாதிகளாலும் –நிருபாதிக நித்ய -பிரியம் ஏக -/ தண்ட கரத்வ ஸ்வா தந்தர்ய கந்தமே இல்லையே பிராட்டிக்கு –அவனுக்கு அபிபூதமாக மறைக்கப்பட்டு இருக்குமே —
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -தண்ணீரை ஆற்ற தண்ணீர் வேண்டாமே –வந்து ஆஸ்ரயிகலாம்படியாய்-அபராதங்களை பார்த்து சீறி –
ஷிபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி பெருமாளை திருத்தி என்னாமல் ஈஸ்வரனை என்றது -இவனுடைய பெருமையைக் காட்டி
அவனையும் நியமிக்கும் இவளது பெருமையைக் காட்ட –அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும்
எல்லாருக்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் -இவளுக்கு அவனைப்பற்றி ஸ்வரூப லாபம்
-அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-என் அடியார் அது செய்யார் -என்று மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்-
என் அடியார் அது செய்யார் -எப்பொழுது இவன் அடியார் ஆனார் -நம் அடியார் என்னாமல் -என் அடியார் -என்பதால்
பிராட்டி மகிழ்ந்து -தன் புருஷகாரம் இல்லாமலும் கைக் கொள்ளுவேன் –என்கிறான் –
உபாய பூதனானவன் வைபவமும் சொல்லிற்று ஆய்த்து என்கை-
புருஷகாரம் -என்றும் -உபாயம் -என்றும் -இவற்றை நிரூபகமாக அருளி செய்தது –
பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -அசாதாரணம் என்று தோற்றுகைக்காக-வியாவர்த்தம் -விசேஷம் -இதை தவிர மற்றத்தை நிவர்த்திக்கும் –
பிராட்டிக்கு உபாயத்வமும் அவனுக்கு புருஷகாரத்வமும் இல்லை -வியாவர்த்தகம் -விருத்தி தாது -இதர பேத அனுமதி ஜனகத்வம் – –
உபாயம் என்றால் ஸ்வா தந்தர்யம் வரும் -புருஷகாரமாக பாரதந்தர்யம் வேண்டுமே –
இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் –பாஞ்சராத்ரம் -என்றும் –
என்னை அடைய -சம்சாரத்தில் ஆழ்ந்த ஜனங்களுக்கு லஷ்மி புருஷகாரமாக -ரிஷிகள் சொல்வார் -என் திரு உள்ளமும் அதுவே –
வேறே லக்ஷணம் இல்லை -பிராப்தி பூர்வபாவி -புருஷகாரத்வ அவிருத்தமாய் பிராப்தி உபயோகியான அசாதாரண தர்மம் இல்லை என்றவாறு –
அந்நிய லக்ஷணம் நாஸ்தி –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
லஷ்மி பதியான நான் உபாயமாக இருக்கிறேன் -பிரசித்தம் -நானே உபாயம் -வை சப்தம் -அவளை புருஷகாரமாக இருக்கும் பொருட்டு வைத்துள்ளேன் –
இந்த பாவனைகள் வேதாந்தத்தில் உள்ளதே –சாஷாத் ஸ்வயம் உபாயம் -உபாயாந்தரங்கள் உபாயம் ஆகாது லஷ்மியும் இல்லை ஸ்வயம் என்பதால் –
அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன
மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன
மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
சேனாபதி ஆழ்வானுக்கு பாஞ்சராத்ரத்தில் -ஆகிஞ்சன்யம் பற்றாசாக -திருவடிகளை பற்றி -ப்ரீதியான மனதுடன் -அவளை புருஷகாரமாக பற்றி –
என்னுடைய க்ஷமையை ஏற்றுக் கொண்டு -பிரப்பயமான என்னை பிராபகமாக கொண்டு -கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி –
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
பிரதி நியதி தர்ம த்வயம் -புருஷகாரத்வமும் உபாயத்வமும் –விவஸ்தாபக வாசகம் -/சம்சார அர்ணவ தாரிணி/
பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் என்னும் இடங்களில் -புருஷகாரமாகவே பர்யவசிக்கும் –உபாயத்வம் த்வனிக்கும் சப்தங்களுக்கு பிரதி நீயத்வ தர்மமே சித்தம் —
ரஹஸ்ய த்ரயம் -23-/-27–28-பிராட்டிக்கு யுக்தமான உபாயத்வம் பொருந்தாது –
பிள்ளான் முதலிய மத்யஸ்த கிரந்தம் -அரும்பத உரையில் -1776-/ இருபாலாரும் ஏற்றுக் கொண்டு காலக்ஷேப கிரந்தம் /
முனி த்ரயம் பிள்ளான் மட்டும் -அஹோபிலம் ஈடு வாசிப்பார் / அவஸ்ய வக்த்வய ஸ்தலங்களில் பிராட்டிக்கு புருஷகாரத்வம் மட்டுமே சொல்லப்பட்டது -இதிலும் –
பிராட்டி தன் பெருமைகளை குறைத்துக் கொண்டு காரணத்தவம் உபாயத்வம் அவன் இடமே விட்டு இருக்கிறாள் என்பதே தேசிகர் பக்ஷம்
லோகாச்சார்யா வேதாசார்ய சம்ப்ரதாயம் -பெருமாளுக்கு அடுத்து பிராட்டி நிலை இருவரும் –/
பெரியாழ்வார் ஆண்டாளுக்கு மங்களா சாசனம் பத்நித்வ ப்ரயுக்தம் தானே
ப்ரஹ்மம் ஒன்றே த்வித்வம் வரக் கூடாதே -இதில் இருவரும் கொள்கிறார்கள் -யோஜனா பேதமே -மத பேதம் இல்லை —

மற்றை பிராட்டிமாருக்கும் -நிழல் போன்றவர்கள் –சூரிகள் முதலான ததீயருக்கும் இவள் சம்பந்தம் அடியாக வருகிற
புருஷகாரத்வம் இறே உள்ளது -இவளை போலே ச்வதஸ் சித்தம் அன்றே –
ஆகை இறே –
ஏதத் சாபேஷ சம்பந்தா தன்யேஷா மாமலாத்மனாம்
தேவி சூரி குரூ னாஞ்ச கடகத்வம்  நது ஸ்வத-என்று தீப சங்கரத்திலே-வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளி செய்தது
உபாயத்வமும் -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமாக சொல்லப் படுகிற
அவனுக்கே ச்வதஸ்  சித்தமாய் -ததீயருக்கு ததா சித்தி அடியாக வருகிறது இறே உள்ளது –
உபாய அநபேஷா உபாயத்வம் -நித்ய சித்த உபாயம் இவன் ஒருவனே -சனாதத்வம் தர்மத்துக்கு விசேஷணம் –
தர்மமாகிற உபாயத்வம் நித்யம் சித்தம் -சேதனன் யத்னத்தால் இல்லை -அதிருஷ்ட த்வாரக மோக்ஷ பிரதத்வம் –ததீயர்களுக்கு அவன் சம்பந்தத்தால் –
ஆகையாலே பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -நிரூபகமாக
தட்டு இல்லை –
இவ் அர்த்தத்தை வெளி  இடுகைக்கு ஆய்த்து இவர் இப்படி அருளி செய்தது –
இப்படி உப ப்ரஹ்மணமான பிரபந்த த்வ்யத்தாலும் பிரதி பாதிக்க படுகிற புருஷகாரத்வமும் உபாயத்வமும்
உப ப்ரும்ஹ்யமான  வேதாந்தத்தில் உக்தமான ஸ்தலம் எது என்னில்
கடவல்லி உபநிஷத் சித்தமான
த்வயத்தில் பூர்வ வாக்யத்தாலே உபயமும் சேர உக்தம் இறே –
இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம்
உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயணதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை-அன்றிக்கே –
கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் —
ஹித புத்தியால் திருத்த தண்டித்தாலும் -இவன் துக்கப்பட்டு கண் கலங்க விட மாட்டாள் இவள் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும் குற்றவாளர்க்கும் கூசாமல்
வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்—பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தோடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் –இரண்டும் உண்டே புருஷோத்தமனுக்கு -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூர தண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி-அத்யந்த பயங்கரமாய் – இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன்  அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-

————————————-

சூரணை -7-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-

உப ஜீவ்ய உப ஜீவக சம்பந்தம் -இவை மூன்றுக்கும் புருஷகாரத்துவத்துக்கும் –சங்கதி –
கார்யகரமாம் போது இவை வேண்டுமே –ஸ்வ தந்த்ர உபாயம் -இச்சா அனுவிதானம் பண்ணி —
அவன் திரு உள்ளம் அனைவரும் தன் திருவடி அடையவே தானே –
தத் அதிசய கரமாய் கொண்டு புருஷகாரமாக இருக்கும் போது -உபய சம்பந்தம் அநாதியாய் இருக்கச் செய்தேயும் –
தத் அனுரூப புருஷகாரமும் அநாதி –
ஆம் போது என்றது – ஸ்வா தந்தர்ய நிருத்தமான காலம் இல்லாமல் கிருபா விசிஷ்ட ஸ்வ தந்தர்யம் கண்டு –
விரோதம் அற்று புருஷீ கரிக்கும் போது என்றவாறு –
பர துக்க அசஹிஷ்ணுத்வ -ரூபையான கிருபையும் / பராதீன பாரதந்தர்யம் -பகவானே பிரதானம் பிரயோஜனம் -/
அந்நிய யோக்யதா ராஹித்யமான அநந்யார்ஹத்வம் /
பெருமாளுக்கும் இவை மூன்றும் உண்டு ஆச்ரித பாரதந்தர்யன் -ந தே ரூபம் பக்தருக்காக -உபாயமாகவும் இம் மூன்றும் வேண்டும்
ஸ்வ தந்தர்ய வஸ்துவுடைய கிருபை -நிரபேஷம்-மதில் மேல் பூனை /
சர்வ சாதாரணமான பாரதந்தர்யம் -சமுத்திர ராஜன் இடம் கூட சரண் அடைந்தார்
மஹா பாலி இடம் கை நீட்டி -நம்ப முடியாதே
அடியார்களுக்கே இருந்தாலும் -அநந்ய அர்ஹமான சர்வஞ்ஞத்வமும் சர்வ சக்திதவமும் உண்டே /
மூன்றும் பகல் விளக்கு பட்டு இருக்கும் –
அன்யோன்ய சா பேஷம் இம் மூன்றும் இவளுக்கு –கடகத்வத்துக்கு -அபேக்ஷிதம் –
பாரதந்தர்ய அநந்யார்ஹத்வம் -பெருமாளை குறித்து / கிருபை நமக்கு -/
பராதீனம் பரார்த்தமாய் இருக்கும்
அநந்தரம் புருஷகாரத்தின் படிகளை விஸ்தரேன உபபாதிக்க கோலி-
பிரதமத்திலே புருஷகாரத்வதுக்கு அவஸ்ய அபேஷித குணங்களை அருளி செய்கிறார் –
புருஷகாரம் ஆம் போது என்றது புருஷகாரம் ஆம் இடத்தில் என்ற படி –
க்ருபையாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் – / துக்கித்துவமா -பொறுக்க முடியாமத்தா -போக்க முயலுவதா —
தானும் துன்பப்படுவதே மிக உயர்ந்தது -/
இது குறை இல்லை -கர்மத்தால் அல்ல கிருபையால் தானே /ச ஏகாகீ ந ரமேத -வாடி அங்கு அவனுக்கு —
குண பெருமை தானே இதுவும் அவனுக்கு /
பாரதந்த்ர்யமாவது பார அதீனத்வம் –அவனுக்கு வசப்பட்டு இருக்கை
அனந்யார்ஹத்வமாவது-தத் வ்யதிரிக்த விஷய அனர்ஹத்வம் —
இவை புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் ஆனபடி என் என்னில் –
சேதனர் சம்சாரத்தில் படுகிற துக்கம் கண்டு பொறுக்க மாட்டாமல் -ஈச்வரனோடே இவர்களை
சேர்க்கைக்கு உடலான யத்னம் பண்ணுகைக்கு கிருபை வேணும் —ஸ்வரூப உபயுக்தம் கிருபை என்றபடி –
ஸ்வதந்த்ரனை வசீகரிக்கும் போது அனுவர்த்தனத்தாலே வசீகரிக்க வேண்டுகையாலே–பாரதந்த்ர்யம் வேணும்
அவனுக்கு பிடித்ததையே செய்து -அவனை வசீகரித்து –தான் நினைத்த படி பெருமாளை செய்ய வைப்பது இல்லை -பாரதந்தர்யம் குலையுமே –
அவன் இச்சைப்படி அவனை நடக்க வைப்பதே -தடுப்பை நீக்கி -சம்சாரி சேதனன் அனைவரையும் தன் தாளிணை கீழ் சேர்ப்பதே அவன் இச்சை —
-நம்மை ஒழிந்த ஒரு விஷயத்துக்கு அர்ஹ்ம் இன்றியே நமக்கே
அதிசயகரமாய் இருக்கும் வஸ்து ஆகையாலே நம் கார்யம் அன்றோ சொல்கிறது என்று -பிராட்டி
சொன்னபடி அவன் செய்கைக்கு உறுப்பாகையாலே-அனந்யார்ஹத்வம் வேணும் –அந்நிய அர்ஹம் படாமல் -என்றவாறு –
ஆகையிலே இறே மூன்றும் புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் இறே –
ஈஸ்வர கிருபையில் காட்டில் இவள் கிருபைக்கு விசேஷம் என் என்னில் -ஈச்வரனாவன் நிரங்குச -ஸ்வ தந்த்ரனானவன் -நிக்ரஹ அனுக்ரஹங்கள்
இரண்டுக்கும் கடவனாய் -சேதனர் கர்மங்களை நிறுத்து அறுத்து-தீத்துமவன் ஆகையாலே –
அவனுடைய கிருபை ஸ்வாதந்த்ர்யத்தால் அமுக்கு உண்டு கிடந்தது -ஒரோ தசைகளிலே தலை எடுக்க கடவதாய் இருக்கும் –
இவள் அனுக்ரஹ ஏக சீலை ஆகையாலே-அனுக்ரஹ ஏக சீலம் -அனுக்ரஹம் -மட்டுமே இருக்கும் -எப்பொழுதும் வரும் -என்றவாறு
இவளுடைய கிருபைக்கு வேறு ஒன்றால் ஓர்அநபிபவம் இல்லாமையாலே -எப்போதும் ஒருபடிபட்டு இருக்கும் –
ஆகையால் இவளுடைய கிருபை கரை அழித்து இருக்கும் –
சம்பந்தத்தில் வியாவ்ருத்தி   போலே ஆய்த்து கிருபையில் வியாவ்ருத்தியும் —
பிதா மாதா -/ அன்னையாய் அத்தனையாய் என்பான் என்னில் -ஏறிட்டுக் கொண்ட மாத்ருத்வம் குறையே -/
ஆழ்வாருடைய நாயகி பாவத்துக்கு இந்த குறை இல்லை -ஆத்மசித்த ஸ்த்ரீத்வம் உண்டே மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே –
இப்படி இருக்கையாலே இறே இவளை ஆஸ்ரயிப்பார்க்கு வேறு ஒரு புருஷகாரம்-வேண்டாது ஒழிகிறது-
ஈஸ்வர விஷயத்தில் இவளுடைய பாரதந்த்ர்ய  அனந்யார்ஹத்வங்களும்
1–ஸ்வரூப பிரயுக்தமான மாத்ரம் அன்றிக்கே– -ஹ்ரீச்ச  தே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் –
விஷ்ணு பத்நீ -என்றும் சொல்லுகிற-
2- பத்நீத்வ பிரயுக்தமாயும் -அஹந்தா பிராமணாஸ் தஸ்ய சாகமச்மி சனாதநீ-என்றும்
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -மண்டோதரி சதுஸ் ஸ்லோகி –என்றும் சொல்லுகிறபடியே
-3-பகவத் –ஸ்வரூப நிரூபகத்வாதி– சித்தமான அனந்யத்வ பிரயுக்தமாயும் இருக்கும்-
பிரிந்து இருக்கும் தன்மை இல்லையே -அநந்யா ராகவத்வ -போலே —
பெருமாளுடைய ஸ்வரூபம் இவளால் நிரூபிதம்- இத்தால் பூமி நீளா தேவி வியாவ்ருத்தம்/
இப்படி மூன்றும் உண்டே –ஸ்வரூப -பத்நீத்வ -பகவத் ஸ்வரூப நிரூபக அந்நயத்வம் -மூன்றும் –
இப்படி இருக்கையாலே இறே அல்லாதார்க்கு அடைய மிதுன சேஷத்வமும் -இவள் ஒருத்திக்கும் ததேக சேஷத்வமுமாய் ஆய்த்து –
இந்த அவ்யவதா நேன வுண்டான- நேராக இடையில் யாரும் வேண்டாத சாஷாத் –சம்பந்தத்தால்  இறே இவளுக்கு
ஈஸ்வரனை வசீகரிக்கும்-அளவில் புருஷகாரம் வேண்டாது ஒழிகிறது –
இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங்  சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் -ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா  அனந்யார்ஹத்வங்கள் இரண்டும் –
ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –
ஸ்ரீ -நித்ய யோக மத் ப்ரத்யயம் – –அவனை ஆஸ்ரயிக்கிறாள் -பாரதந்தர்யம் அநந்யார்ஹத்வம் -இருப்பதால்
நாம் ஆஸ்ரயிக்கிறோம் -கிருபை இருப்பதால் –

—————————————

சூரணை-8-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

இந்த க்ருபாதி த்ரயத்தையும் – (எல்லாரும் அறியும் படி –பிரதிகூலரான ராக்ஷஸிகளும் அறியும் படி கிருபை –
ரிஷிகள் எல்லாரும் அறியும் படி இரண்டாம் பிரிவு பாரதந்தர்யம்– விச்வாஸம் வர வேண்டுமே )-தானே வெளி இட்டு அருளின வைபவத்தை-
ஸ்ரீ ராமாயணத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்தாலும் தர்சிப்பிக்கிறார் மேல் –

மது ப்ரத்யயம் -சொல்லி விஸ்லேஷம் -த்ரயம் உபபன்னம் எங்கனே -ஸ்வரூபம்- திரு மார்பில்-அக்ஷரத்தில் எல்லாம் நித்ய யோகம் /
அவதாரத்தில் வந்த பிரிவு -பாவனா மாத்ரமோ என்னில் -நாடகமோ என்னில் -கதை என்றால் விச்வாஸம் வராதே -என்னில் விஸ்லேஷம் உண்டு –
புல்கிக் கிடந்தேன்-என்நீர்மை கண்டு இரங்கி -கண்டால் எதற்கு இரங்க வேண்டும் கேட்டு இருக்க வேண்டும் தமிழன் சொல்ல –
அணைப்பை திடப்படுத்த -அந்த விஸ்லேஷம் -திட ஆலிங்கனாதி -ஸூ இச்சையால் வந்த அவதார விஸ்லேஷம் -நெகிழ்த்த இடத்தில் போலே
அவதார விக்ரஹ மாத்திரத்தில் -விஷ சஸ்திரங்கள் தேடும் படி படாத பாடு பட்டாள்–
முடிந்து பிழைக்க முடியாது- பிழைத்து முடித்துக் கொள்வேன்- பாரதந்தர்யம் காட்டி -ஸ்த்ரீத்வம் -இரண்டாவது பிரிவு –
வராஹ பெருமாள் தானே பிராட்டி திருவடியைப் பற்றி வர வேண்டும் நேராக காட்டி அருள –
பெருமாள் அநந்யார்ஹத்வம் காட்ட அன்றோ மூன்றாம் பிரிவு –
நான் கண்ட நல்லது என்று அன்றோ இதனாலே ஆழ்வார் அருளிச் செய்தார் –

நித்ய அநபாயினி –நலிந்து போன ராக்ஷஸிகளை -செருக்கனான திருவடியுடன் மன்றாடி –
குற்றமே நற்றமாக நோக்கின படியால் -ரஷித்த படியால் –
கிருபையை ஸூ அபராத பீதர் எல்லாரும் அறியும்படி
ராகவன் வம்சம் -அழிக்க கூடாதே கை விட்ட பெருமாள் நினைவை பின் சென்று-அவரை விட்டு தான் உயிருடன் இருந்தமையால் – -பாரதந்த்ரம் –
கடியன் கொடியன் –ஆகிலும் கொடிய வன் நெஞ்சம் அவன் என்றே கிடக்குமே –துஸ் ஸூ தந்த்ரனும் அறியும் படி -இளைய பெருமாளை
அஸ்வமேத யாகம் –பெருமாள் திரு முன்பே பிறந்தகத்தே புக்கு அனந்தரம் பிரிந்தது -பூமியில் இருந்து பிறந்தவள்தானே
-ஸூர்யன் ஓளி விட்டு இல்லாதப் பாதி அன்யரும் அருகில் உள்ளாறும் அறியும் படி பிரிந்து காட்டி –
புருஷகாரமாக பற்ற ருசி வளருகைக்காக அன்றோ இம் மூன்றும் –

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேஹானு ரூபாம் வை கரோத்யே ஷாத்மனஸ் தானும் -என்கிறபடியே –
நாயகனான சர்வேஸ்வரனுடைய தத் தத் அவதார சஜாதீயமான விக்ரஹ பரிக்ரஹம்
பண்ணி வந்து அவதரிக்கும் அவள் ஆகையாலே –ராகவத்வேபவத்  சீதா -என்கிறபடியே —
கர்ப்ப வாசம் இல்லாமல் -ஒரு நூல் உயர்ந்து –
அவன் சக்கரவர்த்தி திரு மகன் ஆனவாறே-பிடித்த திரு நாமம் ராமருக்கும் மேலே இதே போலே
சீதைக்கும் – தத் அநு ரூபமாக தானும் ஜனக ராஜன் திரு மகளான
பிராட்டி- -தண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்க செய்தே -ராவணன் பிரித்தான் என்ற ஒரு
வியாஜ்யத்தாலே -பிரதமம் பெருமாளை பிரிந்து -இலங்கைக்கு எழுந்து அருளிற்று —
பிருகு மகரிஷி சாபம் காரணம் இந்த முதல் பிரிவு லிங்க புராணம் சொல்லுமே
தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக —என்கை –
பரமம் -மேம்பட்டது இல்லை -அவன் கிருபையை இவள் கிளப்பி விட வேண்டும்
இவள் கிருபைக்கு வேறே ஒன்றும் வேண்டாமே -எங்கனே என்னில் —
(காருண்யமே ரூபமாக -பெருமாள் காருண்யம் கிளறி- பெருமாள் காருண்யமே வடிவு என்று சொல்லும் படி மூன்றும் உண்டே )
தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொப்பனம் கண்டதாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் -சரணாகதி பண்ணாத திசையிலும் –
லகுதரா ராம கோஷ்ட்டி -இதனாலே பரம கிருபை என்றார் —
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச  வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே–சாமான்யமாக சொல்லி – அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் –
கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கும் இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும்-கையில் உள்ள ஈரமும் காயாத முன்பு -என்றபடி -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

நடுவில் இத்யாதி -நடுவில் பிரிவாவது -மீண்டு பெருமாளுடன் கூடி திரு அயோத்தியிலே எழுந்து அருளி
திரு வயிறு வாய்த்து இருக்கிற காலத்தில் –1000-வயசில் கர்ப்பம் –
அபத்ய லாபோ வைதேஹி மமாயம் சமுபஸ்தித கிமிச்சசி சகாமா த்வம் ப்ரூஹி சர்வம் வரானனே -என்று
உனக்கு அபேஷை ஏது என்று கேட்டு அருள –
தபோ வனாநி புண்யா நி த்ருஷ்டும் இச்சாமி ராகவ-
கங்கா தீர நிவிஷடானி ருஷீணாம் புண்ய கர்மாணாம்
பல மூலாசினாம் வீர பாத மூலேஷூ வர்த்திதும்
ஏஷமே பரம காமோயன் மூல பல போகிஷூ
அப்யேக ராத்ரம் காகுத்ச்த   வசேயம் புண்ய கீர்த்திஷூ-என்று
தனக்கு உண்டான  வன வாச ரஸ வாஞ்சையை விண்ணப்பம் செய்ய -சரம பர்வ நிஷ்டை -ஆச்சார்யர்கள் உடன் கூடி இருக்க –
ஆக ஆச்சார்ய அபிமானம் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப்பட்டது –
கீழே ராமனை விட்டு பிரிந்தால் நரகம் என்றவள் இங்கு இப்படி அருளிச் செய்கிறாள்
அத்தை பற்ற  போக விடுவாரை போலே -லோக அபவாத  பரிகார்த்தமாக -சர்வேஸ்வரனுக்கும் லோக பரிகாரம் உண்டே –
பெருமாள் காட்டிலே  போக விட போனது –
இப் பிரிவுக்கு பிரயோஜனம் -பெருமாள் கட்டிலே வைத்த போதொடு காட்டிலே விட்ட
போதொடு வாசியற -அவருடைய நினைவையே பின் செல்ல வேண்டும் படியான
தன்னுடைய பத்நீத்வ பிரயுக்தமான -பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பிக்கை-
கீழே ஸ்வரூப பிரயுக்தம் -கிருபையைக் காட்டியது இங்கு பத்நீத்வ ப்ரயுக்தம்
கங்கை கரை ஏறின அநந்தரம் இளைய பெருமாள் கனக்க கிலேசப் பட்டு கொண்டு
பெருமாள் திரு உள்ளமாய் விட்ட கார்யத்தை விண்ணப்பம் செய்ய -அத்தை கேட்டு மிகவும் பிரலாபித்து –
ந கல்வத்யைவ ஸௌ மித்ரே -ஜீவிதம் ஜாஹ்ன வீஜலே
த்யஜேயம் ராகவம் வம்சே பரத்துர் மா பரிஹாச்யாதி -என்றாள் இறே –
இத்தால் ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்க தேட்டமாக நிற்க்கச் செய்தேயும் –
அது செய்ய மாட்டாதே பெருமாள் நினைவை பின் சென்று தன் பிராணனை நோக்கி கொண்டு இருக்க
வேண்டும் படியான -பாரதந்த்ர்யத்தை இறே பிரகாசிப்பித்தது –பெருமாள் நினைவு லோக அபவாதம் போக்குவதே –
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்தருக்கு முடிவு தேட்டமானாலும் முடிய போகாதே –
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே –திரு வாய் மொழி -5 -4 -3 – என்றார் இறே ஆழ்வார் –
பிரதம விச்லேஷத்தில் பத்து மாசத்துக்கு உள்ளே படுவது எல்லாம் பட்டவள் –
பதிர்ஹி தைவதம் நாரா பதிர்பந்து பதிர்கதி ப்ரானைரபி
ப்ரியம் தஸ்மாத்  பார்த்து கார்யம்  விசேஷத-என்று தான் அருளி செய்தபடியே-பிராணனை விட பார்த்தா திரு உள்ளம் –
லோக அபவாதம் இவள் முடிந்தால் வரும் -அலாப்ய லாபம் பிள்ளை பெற்றால் என்றானே இவை இரண்டும் அவன் அபிப்ராயம் –
பதி சித்த அநு விதானமே நமக்கு ஸ்வரூபம் என்னும் பாரதந்திர புத்தியாலே இறே
அநேக சம்வத்சரம் பாடாற்று இருந்தது –
ஆக இப்படி இப் பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளி இட்டாள் இறே-

-அநந்தரம் -இத்யாதி –
அனந்தரத்தில் பிரிவாவது -மீண்டு பெருமாள் சன்னதியிலே வந்து இருக்க செய்தே பிரிந்து
பிறந்தகத்திலே புக்கு விட்டது –இப் பிரிவுக்கு பிரயோஜனம் –
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா -என்று
உபய சம்மதமான–பெருமாளுக்கும் பிராட்டிக்கு -பிரமாணத்துக்கும் ஸ்வ பாவத்துக்கு என்றுமாம் –
தன்னுடைய அனந்யத்வ பிரயுக்தமான அனந்யார்ஹத்வத்தை
சர்வ சம்மதமாம் படி பிரகாசிப்பிக்கை -எங்கனே என்னில்
பெருமாள் அஸ்வமேதம் பண்ணி அருளா நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவானுடைய
நியோகத்தாலே குசலவர்கள் வந்து-கேசன் மூத்தவர் என்பதால் நம் ஆச்சார்யர்கள் குசலவர்கள் என்றே அருளிச் செய்வார்கள் –
ஸ்ரீ ராமாயணத்தை பாடிக் கொண்டு திரியா நிற்க –
அத்தை பெருமாள் திரு செவி சாத்தி சன்னதியிலே அவர்களை அழைத்து விசேஷஞ்ஞர் –சங்கீத ஞானம் ரசம் அறிந்தவர்கள் என்றபடி – எல்லாரையும் கூட்டி
அவர்கள் பாட்டு கேளா நிற்கிற நாளிலே -அவர்களை பிராட்டி உடைய பிள்ளைகள் என்று அறிந்த அநந்தரம்
பிராட்டி அளவிலே திரு உள்ளம் சென்று தனக்கேற சுத்தை ஆகில்–ஆத்மா சாக்ஷியாக சுத்தி என்றபடி -மக்களுக்கு அறியும் படி என்றுமாம் –
இது தான் பெருமாள் மநோ ரதம்-என்று அறிந்து செய்வதே பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் -ஆத்மாவை சேஷம் என்றே
மணத்தையும் ஒளியையும் பிரியாத பூவையும் மாணிக்கம் போலே இருக்க வேண்டுமே – கடுக-இத்திரளிலே நாளை வந்து
ப்ரத்யய முகத்தாலே தன் சுத்தியை பிரகாசிப்பாளாக என்று தூத முகேன பெருமாள்
மகரிஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்து விட -அப்படியே ஸ்ரீ வால்மீகி பகவானை முன்னிட்டு கொண்டு
அந்த மகா பர்ஷத்திலே -பெருமாள் சன்னதியிலே -வந்து ஒடுங்கி நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
இவள் சுத்தை என்னும் இடத்தை பல முகத்தாலும் சொல்ல-பெருமாள் இவள் சுத்தை என்னும் இடம் நானும் அறிவன் –
மகரிஷி சொன்னதுவே போரும் -ஆனாலும் லோக அபவாத பரிகர்த்தமாக ஒரு ப்ரத்யயம் இத் திரளிலே
பண்ண வண்டும் என்று திரு உள்ளம் ஆன படியாலே – சர்வான் சமாகதான் த்ருஷ்ட்வா சீதா காஷாய வாசிநீ
அப்ரவீத் ப்ராஞ்சலீர் வாக்கியம் அதோ திருஷ்டி ராவான்முகீ –என்கிறபடியே-
பெருமாளை பிரிந்து கஷாய வஸ்திரம் கொண்டு இருந்தாள் அன்றோ –
கையும் அஞ்சலியுமா கவிழ தலை இட்டு கொண்டு நின்று –
யதாஹம் ராகவாதந்யம் மனசாபி ந சிந்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
மனசா கர்மணா வாசா யதா ராமம் சமர்த்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி-பூமா தேவி இடை வெளி கொடு -ராமனை மனசாலும் முக்கரணங்களாலும் மட்டுமே அறிவேன் –
யதைதத் சத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே
மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி -என்று சபதம் பண்ண –
ச பந்த்யாம்- சபதம் உண்மை ஆக்ரோஷம் இரண்டும் -இல்லாமல் உண்மை மட்டும் என்றபடி
ததா சபந்த்யாம்  வைதேஹ்யாம் ப்ராதுராசீன் மகாத்புதம் பூதலா
துத்திதம் திவ்யம் சிம்ஹாசன மனுத்தமம் த்ரியமாணம் சிரோபிச்து நாகைரமிதவிக்ரமை
திவ்யம் திவ்யேன வபுஷா சர்வ ரத்ன விபூஷிதம்
தச்மிம்ச்து தரணீ தேவீ பாஹூப்யாம் க்ருஹ்ய மைதலீம்
ச்வாகதே நாபி நன் யை  நா மாசனே  சோபவேசயத்
தாமாச நகதாம் த்ருஷ்ட்வா பிரவீ சந்தீம் ரசாதலம் புஷ்ப
வ்ருஷ்டிர விச்ச்சின திவ்யா சீதா மவாகிரத் -என்று
அவ்வளவிலே பூமியில் நின்றும் ஒரு திவ்ய சிம்ஹாசனம் வந்து தோன்ற –
அதிலே பூமி பிராட்டி இவளை ஸ்வாகத ப்ரசன பூர்வகமாக -இரண்டு கையாலும்
எடுத்து கொண்டு போய் வைக்க -ஆசன கதையாய் கொண்டு ரஸா தலத்தை பிரவேசியா
நிற்க இவளைக் கண்டு திவ்ய புஷ்ப வ்ருஷ்டி இடைவிடாமல் இவள் மேல் விழுந்தது
என்கையாலே -இப் பிரிவிலே தன்னுடைய அனந்யார்ஹத்வத்தை பிரகாசித்தாள் இறேஆக –

இவ் அவதாரத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்துக்கும் ஹேது
இக் குணங்களை இப்படி வெளி இடுகைக்கு ஆய்த்து-இங்கன் அன்றாகில் -அநபாயிநியாய்-அகர்மவச்யையாய் –
யதா சர்வ கதா விஷ்ணு இவளும் -அவன் விபு -பத்தினியான படியால் பிரியமாட்டாள் அதனால் இவளும் என்றவாறு
இருக்கிற இவளுக்கு கர்ம வச்யருக்கு போலே -இப்படி  பிரிவு வருகைக்கு யோக்யதை இல்லை இறே —
தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான குணங்களையும் -புருஷகாரத்வத்தையும் பிரகாசிப்பைக்காக -வந்த அவதாரம் இறே இது –
ஆகை இறே யது தான்யதுதா ஹரந்தி சீத அவதார முகமேத தமுஷ்ய யோக்யா -என்று
பட்டர் அருளி செய்தது -இப்படி சேதனர் பக்கல் அனுக்ரஹத்துக்கு உடலான கிருபையும் –
ஈஸ்வரன் பக்கல் அணுகி வசீகரிக்கைக்கு உடலான பாரதந்த்ர்யாதிகளையும் -தானே வெளி இட்டது –
சாஸ்த்ரங்களில் கேட்கிற மாத்திரம் அன்றிக்கே -அனுஷ்டான பர்யந்தமாக காண்கையாலே –
தன்னை புருஷகாரமாக பற்றுவாருக்கு ருசி விச்வாசங்கள் உறைக்கைக்கு உறுப்பாக-
ஸ்ரவண மனன அனுஷ்டானம் மூன்றும் நமக்கும் வேண்டுமே –
வாரீர் நிருபாதிக -சர்வ காம பிரதத்வ உபாயமான பெருமாளையும் சித்த உபாய பிரதத்வ ரூப உதாரம்
கருணா சீலத்தவம் ஆச்ரித தோஷத்தை குணமாக கொள்ளும் வாத்சல்யம் –
வெள்ளோட்டம் போலே சீதா அவதாரம் பெரிய பிராட்டியார் இடம் இன்றும் காணலாம் -அப்யாஸம் அங்கு –

———————————————-

சூரணை-9-

சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும்
புருஷகாரத்வம் தோற்றும் –

இளைய பெருமாள் காகாசூரன் ராவணன் ராக்ஷஸி -நால்வர் பக்கலிலும் காணலாம்
புருஷகாரத்வம் – பகவத் க்ஷமையை கிளப்பி விடுதல் மட்டும் இல்லையே -புருஷகாரத்வம் அவளுக்கு ஸ்வரூபம் தானே –
உபதேசித்து ஆஸ்ரியரை ஸம்ஸலேஷிக்க செய்தல் மட்டுமே இல்லையே –
ஸத்யஸங்கல்பனை நினைக்க விட கூடாதே -நினைத்தாலே அது கார்யகரம் ஆகுமே –
ஏவம் பூத குண விசிஷ்டை யான இவளுடைய புருஷகாரத்வம் தோற்றுவது எங்கே -என்ன
அருளி செய்கிறார் மேல் –

புருஷகாரத்வம்  ஆவது கடகத்வம்–
அது இவளுக்கு அவனோடு கூடி இருக்கும் தசையிலும் -நீங்கி இருக்கும் தசையிலும் பிரகாசிக்கும் என்கை–
கடகத்வம்- ஆவது இருக்கும் எண்ணங்களை தூண்டி தடங்கலை விலக்கி -அதாவது
சேதன ஈஸ்வர விஷயங்கள் -யோகார்த்த அர்த்தங்களில் -பிரபத்ரு பிரபத்ருத்வய பாவம் -க்ஷமிக்கத்தக்கவன் ஷமிப்பவன் –
அந்நிய தர ரூப கடனா –இருக்கும் சம்பந்தத்தை வழிப்படுத்திக் கொடுத்தல் –
கடி மா மலர் பாவையோடு ஓக்க சாம்ய ஷட்கம் –பிரதிசம்பந்திதயா-இருவருக்கும் உண்டே –

ஸம்ஸ்லேஷ தசையில் போல் விஸ்லேஷ திசையிலும் தோற்றுமோ என்னில் –தோற்றும் -என்று ஆய் ஸ்வாமி அவதாரிகை –
இரண்டிலும் -துல்யமாக மா முனிகள் -இவர் அதில் போலே இதிலும் -தோற்றும் என்கிறார் -மாழை மான் மட நோக்கி -தமேவம் சரணம் –
லக்ஷ்மணன் குகன் காகாசுரன் -மூவரையும் கூட்டி -அருளுகிறார் இவர் –
குகன் சரணாகதி அடைந்தானோ என்னில் -ஏழை –என்னாது இரங்கி -பெருமாள் திரு உள்ளத்தில் நினைக்காமல் -இரங்கி /
குகன் சொல்லாமல் இருந்த போதும் -என்ற அர்த்தத்தில் சரணாகதி பண்ண வில்லை
பேச்சு சரணாகதி பண்ணினானோ இல்லையோ -எப்படி இருந்தாலும் அவளது புருஷகாரத்வம் -அவள் நோக்கினதே -காரணம் பெருமாள் உபாயமாவதற்கு –
ராக்ஷஸி குசலவ பூமிகளுக்கு -மூன்றையும் காட்டி அருளுகிறார் இவர் -அஸ்வமேத யாகம் குதிரை விருத்தாந்தம் குசலவ -விஸ்லேஷ தசையில்
விஸ்லேஷ தசையில் சேதனருடைய சித்தத்தில் உள்ள அழுக்கை போக்கி புருஷகாரம் செய்து அருளுகிறாள் –

சம்ச்லேஷ தசையிலே -இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது-
பெருமாள் நிறுத்தி போவதாக தேடின அளவில் —
விசேஷ விதி -சீதை உன்னை தவிர மற்று ஒன்றால் சுவர்க்கமும் வேண்டாம் -லஷ்மணனை கூட்டிப்போவதாக இல்லை அர்த்தாத சித்தம் –
இலஷ்மணன் சோகத்துடன் நின்றான் என்று இருப்பதாலும் –
என்னைக்கூட கொண்டு போக வேண்டும் என்று
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசா தியசா  ராகவஞ்ச மகா வ்ரதம்-என்கிறபடி-வாசிக சரணாகதி பிராட்டி இடம்
பெருமாள் இடம் காயிகமாக சரணாகதி –என்றபடி -சரணம் புகுகிற அளவிலும் –சோகம் தாங்காமல் மநோ வியாபாரமும் உண்டே –
பஞ்சவடியிலே எழுந்து அருளின போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு பிரதேசத்தை
பார்த்து பர்ண சாலையை சமையும் என்று பெருமாள் அருளி செய்ய –
நம் தலையிலே ச்வாதந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மை கை விட்டார் என்று
விக்ருதராய் –பிரபல தம விரோதி நமஸ் இது -பரத ஆழ்வானுக்கு திருமந்திர நமஸ் கைகேயி ராஜன் என்றதும் –
காட்டில் உள்ளவனுக்கும் கட்டில் உள்ளவனுக்கும் ஆபத்து வந்ததே –
ஏவ முக்தஸ்து ராமேன லஷ்மணஸ் சம்யதாஞ்சலி
சீதா சமஷம் காகுத்ஸ்தமிதம் வசன மப்ரவீத்
ப்ரவா நஸ்மி  காகுஸ்த த்வயி  வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதா மிதமாம் வத-என்கிறபடியே
தம்முடைய பாரதந்த்ர்யத்தை பெறுகைக்காக கையும் அஞ்சலியுமாய் நின்று அபேஷிக்கிற அளவிலும் –
சீதையை நோக்கி கையைக் கூப்பி -புருஷகாரமாக –
பெருமாளை நோக்கி பேசவுபாயமாக பற்றி -ஞாத்ருத்வம் தாஸ்யம் புரிந்து ஸூ பிரயோஜன நிவ்ருத்தனாகி —
உபாய பிரார்த்தனை —பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு
தம் அபேஷிதம் பெறுகையாலும்–

ஆசூர பிரக்ருதியான ஜெயந்தன் காக ரூபத்தை கொண்டு வந்து ஜனனி பக்கல் அக்ருத்ய ப்ரவர்தனாக —
அஸஹ்யா அபசாரம் -என்ன என்று சொல்ல நா கூசும் –
க க்ரீடதி சரோஷேன பஞ்ச வக்த்ரென போகினா -என்று பெருமாள் அவன் மேல் சீறி தலையை
அறுப்பதாக ப்ரஹ்மாச்த்ரத்தை பிரயோக்கிக்க -ச பித்ராச பரித்யக்தஸ் சூரைச்ச சமஹர்ஷிபி
த்ரீன்லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத —என்கிறபடியே எங்கும் சுற்றி திரிந்த இடத்திலும்
ஒரு புகலிடம் இல்லாமையாலே போக்கற்று சரணம் புக –
ச தம் நிபதிதம் பூமவ் சரண்யச் சரணாகதம் வதார்ஹமபி காகுஸ்த  க்ருபயா பர்யபாலயத் -என்றும் –
புரத பதிதம் தேவீ தரண்யாம் வாயசம் ததா தச்சிர
பாதயோஸ் தஸ்ய யோஜயாமாச ஜாநகீ தமுத்தாப்ய கரெனோத
க்ருபாபீயுஷூ  சாகர ரரஷா ராமோ குணவான் வாயசம் தயையை ஷத்-என்றும்
ஸ்ரீ இராமாயண பாத்ம புராணங்களிலே சொல்லுகிறபடியே இவள்
புருஷகாரமாக பெருமாள் ரஷிக்கையாலும் —மாம்ச விருப்பம் காக்கை ரூபம் -காமம் ஆசையுடன் வந்தான் என்றால் –
தேவன்-செய்த அபசாரம் – என்றால் உடனே தண்டனை கிடைத்து இருக்குமே /
சரணாகதம் -வால்மீகி சொன்னாலும்– யுக்தி உண்டு என்பாரும் உண்டு –
கையால் ஆகாத தன்மையை வெளியிட்டால் சரணாகதனாக திரு உள்ளம் கொள்வான்
ராக்ஷஸிகள் கடைசி வரை சரணம் பண்ணாமல் கடைசி வரை ஹிம்சை பண்ணி கொண்டே இருந்தார்கள்
பாத்ம புராணம் –பாதத்துடன் தலையை சேர்த்து -கடகத்தவம்-குணவானான ராமன் ரக்ஷித்தான் பிராட்டி புருஷகார பலத்தால் –

விஸ்லேஷ தசையிலே
இஹசந்தோ நவா சந்தி சதோவா நானுவர்த்த சே ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஷிதா -இத்யாதியாலே
விபரீத புத்தியான ராவணனை பெருமாள் திரு அடிகளிலே சேர்க்கைக்கு விரகு பார்க்கையாலும் —உபாய உபாயத்வமே புருஷகாரத்வம் –

ராவண வத அநந்தரம் ராஷசிகளை சித்ர வதம் பண்ணுவதாக உத்யுக்தனாய் நிற்கிற
திருவடியை குறித்து -பாபானாம்வா சுபானாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யென ந கச்சித் ந பராத்யதி -என்று அவன்-திருவடி – இரங்கத் தக்க
வார்த்தைகளை சொல்லி அவர்கள் அபராதங்களை பொறுப்பிகையாலும்-இங்கு புருஷகாரம் பண்ணுவது திருவடி இடம் -ரஷிக்க-
இது தேறுமோ என்னில்- சேதனர் அநிஷ்டம் போக்குவதே –

உபய தசையிலும்-இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றது இறே திருவடி ராஷசிகளை அபராத அநு குணம் 
தண்டிக்கும் படி காட்டித் தர வேணும் என்ற அளவில்
பிராட்டி அவனுடன் மன்றாடி ரஷித்த இத்தனை அன்றோ –
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்த்ர அபராதாஸ் த்வயா ரஷந்த்யா
பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம்
சரணமித் யுக்தி ஷமவ் ரஷதாஸ் சா நஸ் சந்திர மகா கசஸ்  சூகயது ஷாந்தீ ச்தவாகச்மிகீ -என்று
பவனாத்மஜன் நிமித்தமாக ரஷித்தாள் என்று அன்றோ பட்டரும் அருளி செய்தது –
அவ்விடத்தில் புருஷீகரித்தமை எங்கனே என்னில் —உபாயத்வம் ஆகாதோ –
பலாத்காரித்து மற்றவரை சமாதானப்பட வேண்டி இல்லாமல் செய்வதே உபாயத்வம் –
ரக்ஷகத்வம் -சுக்ரீவன் தடுத்த போது பிசாசோ கந்தர்வரோ விறல் நுனியால் வெல்வேன் என்றாரே பெருமாள் –
மித்ரா பாவேந -வந்தாலும் நான் கைக் கொள்வேன் என்றாரே
பலாத்காரத்தால் அன்றிக்கே அநு சாரத்தாலே அபராதங்களை பொறுக்கையாலே
புருஷகாரத்வம் என்கிறது —பெருமாள் பொறுப்பிக்க மாட்டாரே –
மன்றாடி -பராதீனமாக செய்தார்கள் -தன்னுடைய பாக்ய ஹானி -அவர்களை குற்றம் சொல்லாதே –
ரஷிக்காமல் இருக்க முடியாதே என்று தன்னுடைய ஸ்வரூபம் சொல்லி –
கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —

ஆகையால் இரண்டு தசையிலும் இவள் புருஷகாரத்வம் தோற்றும் என்கிற மாத்ரத்தை
சொல்லுகிற இவ்  வாக்யத்திலும் கூட்டக் குறை இல்லை-

———————————————–

சூரணை-10-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –

அங்கீகார அபிமுகன் ஆக்கியும் – ஆஸ்ரித அபிமுகன் ஆக்குகையும் –

ஈஸ்வரனை திருத்துகையாவது -அபராதத்தையே பார்த்து -ஷிபாமி-ந ஷமாமி -என்று
இருக்கும் இருப்பை குலைத்து அங்கீகார உந்முகன் ஆக்குகை–பரம சேதனனை என்னாமல் ஈஸ்வரனை என்றது
ஸ்வதந்த்ரன் -அதனாலே கோபிப்பாரே -ஆஸ்ரித பரதந்த்ரன் என்று சொல்லி திருத்துகிறாள்
சேதனனை திருத்துகையாவது -அக்ருத்ய கரணாதி சீலனாய் –ஆதி சப்தத்தால் கிருத்ய அகரணமும் சொல்லி -பகவத் விமுகனாய் -திரிகிற
ஆகாரத்தை குலைத்து ஆஸ்ரேயன உந்முகன் ஆக்குகை –சேதனன்-ஞானம் உள்ளவன் ஸ்வ தந்த்ரன் என்ற தப்பாக நினைத்து –
சேஷத்வ ஞானம் அடியேன் உள்ளான் -பாரதந்த்ரம் நினைவூட்டி திருத்துகிறாள்
சம்ச்லேஷ தசையில் இளைய பெருமாளுக்காக ஈஸ்வர விஷயத்திலும் –
விஸ்லேஷ தசையில் ராஷசிகளுக்கு திருவடி விஷயத்திலும் புருஷி கரித்தமை
உபய தசையிலும் புருஷகாரத்வம் தோற்றும் என்கிற மாத்ரத்துக்கு கூட்டி கொள்ளலாய்
இருந்தது ஆகிலும் -பிரகரண அர்த்தம்- – சம்சாரி சேதனனையும் ஈஸ்வரனையும் சேர விடுகையாலே
இவ் வாக்யத்துக்கு இப்படியே அர்த்தமாக கடவது —
இளைய பெருமாள் சர்வேஸ்வரன் விஷயம் பொருந்தும் -சேதனன் திருவடி -என்பது எப்படி பொருந்தும் –என்கிற சங்கைக்கு —

ஆகையால் ஈஸ்வரனுடன் தான் கூடி இருக்கும் தசையில் சேதனன் ஆச்ரயண உன்முகனாய் வந்து
இருக்க செய்தே -பூர்வ அபராதத்தை பார்த்து ஈஸ்வரன் அங்கீகரியாது இருக்கும் அளவில் –
அவன் ச்வாதந்த்ர்யத்தை தவிர்த்து –
க்ருபாதி குணங்களை கிளப்பி –
இவனை அங்கீகரிக்கும் படி ஆக்குகையும் –
பிரிந்து இருக்கும் தசையில் –
ஈஸ்வரன் அங்கீகார உன்முகனாய் வந்து இருக்க செய்தே -இச் சேதனன்
கர்ம அநு குணமாக விமுகனாய் இருக்கும் அளவில் –
இவன் வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைப்பித்து
ஆச்ரயண உந்முகன் ஆக்குகையும்
இவள் இரண்டு தலையையும்– திருத்துகை ஆவது –

ஆக இப்படி-
அங்கீகார விரோதியான ச்வாதந்த்ர்யத்தை மாற்றி -அங்கீகாரத்துக்கு உடலான
க்ருபாதிகளை உத்பவிக்கையாலும் –
ஆச்ரயண விரோதியான வைமுக்யத்தை மாற்றி -ஆச்ரயண ருச்யாதிகளை
ஜனிப்பிக்கையாலும் —
ஹிம்சாயாம் -என்கிற தாதுவிலும்
ஸ்ரு விஸ்தாரே-என்கிற தாதுவிலும்
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்திலும் ஸ்ருனாதி ஸ்ரூனாதி -என்கிற வ்யத்பத்தி த்வய அர்த்தமும்–
தோஷத்தை போக்கி குணத்தை பெருக்குகிறாள் என்றவாறு –
இவ் இடத்திலே தோற்றுகிறது
ஸ்ருனாதி  நிகிலான் தோஷான் ஸ்ருனாதி ச குணைர் ஜகத் -என்று
இவ் உத்பத்தி த்வ்யமும் சேதன பரமாக தோற்றிற்றே ஆகிலும் –
ஈஸ்வரனை திருத்தும் -என்கிற இடத்திலும் இந்த நியாயம் தோற்றுகையாலும் –
இப்படி சொல்ல குறை இல்லை/ ஸ்வா தந்தர்யம் அவனுக்கு தோஷம் –
ஜகத் சப்தம் அவனையும் குறிக்கும் -ஆக இருவர் இடத்திலும் பொருந்தும் –

இருவர் இடமும் வியாபரிக்கிறாள் —விருப்பப்பட்ட கார்ய விரோதிகள் இருவர் இடமும் உள்ளதே –
கர்மம் இங்கும் ஸ்வா தந்தர்யம் அங்கும் –
தோஷம் நிவ்ருத்தி பூர்வக -குணம் ஏற்படுத்தி -கர்மம் போக்கி ருசியை கொடுத்து இங்கு –
ஸ்வாதந்தர்யம் போக்கி கிருபாதிகளை கிளப்பி -அங்கு /
கூட்டம் கலக்கி செல்வர் விரோதி என்றால் போலே -இவள் விருப்பத்துக்கு விரோதி என்றவாறு –
அந்நிய தர இரண்டில் ஓன்று/ அந்நிய தம பலரில் ஓன்று /-ஈஸ்வர சம்சாரி -இருவரும் சேதனர்/
கர்த்தா கர்மா -அங்கீகாரம் கர்த்தாவுடைய கர்மம்
அங்கீகார -ஆச்ரயண -அந்நிய தர -விரோதி -ஸ்வா தந்தர்ய வைமுக்யம் அன்யதர நிவேதன பூர்வகம் –
கிருபை ருசி கிளப்பி -இருவர் இடமும் புருஷகாரம் –
கொடுப்பதால் அவன் புருஷன் அவனை நோக்கி நடப்பதால் இவன் புருஷன் –
இதுவே அங்கீகாரம் -ஆஸ்ரயணம்-என்கிற சப்தத்தால் அருளிச் செய்கிறார் –
இதுவே இரண்டு தலையும் திருத்துகை -தசை -சம்ச்லேஷத்தின் பொழுது அவனை / விஸ்லேஷத்தில் இவனை -இதுக்குத் தானே
தனிக் கோயில் நாச்சியார் திரு மார்பு நாச்சியார் உபய நாச்சிமார் -இப்படி கஷ்டமான நிர்வசனம் புருஷகாரத்துக்கு
பலம் கொடுக்க சேதன நிஷ்ட அபிகந்த்வ்ய -நாம் அபீகமானம் பண்ண – -ஆக்குவதும் உபாயமே புருஷகாரம் என்றால் என்ன -லகு நிர்தேசம் –
ஜீவாத்மா பற்றி இல்லாமல் -உபாயத்வம் மட்டும் என்றால் குணங்களுக்கும் சேரும்
புருஷகார த்வய ஸ் தா ஸ்ரீ சப்த உத்பத்தி -இரண்டும் ஹிம்சிக்கிறாள் சேர்த்து வைக்கிறாள் –
நிகில தோஷங்களையும் போக்க இருவரையும் சொல்ல வேண்டுமே —
புருஷகார வ்யுத்பத்தி த்வயம் -இருவரையும் சொல்ல வேண்டுமே –
அபேக்ஷித்தமாயும் -இருவருக்கும் உண்டே -ருசி விளைந்தே மோக்ஷம் -அர்த்தித்தே பெற வேண்டும்
அசங்கோசமான நியாயம் -இருவர் இடமும் பொருந்தும் -ஆகையால் இருவரையும் குறித்தே புருஷகாரம் –

—————————————————

-சூரணை -11

இருவரையும் திருத்துவதும்  உபதேசத்தாலே –

இருவரையும் திருத்துவது எவ் வழியாலே என்னும் ஆகாங்க்ஷையிலே அருளி செய்கிறார் –

அஞ்ஞாதம் ஞாபனத்தால் அறியாததை அறிவித்த அத்தா போலே தெரியாததை தெரிய வைப்பதே –
கண் பார்வையே போதும் அவனுக்கு –
தத் தத் உசித உபதேசத்தால் திருத்துகிறாள் –உனக்கு வேண்டிய நம் பெருமாள் நல்லவர் —
பிதா போலே ஹிதத்தில் ஆசை கொண்டவர் கோபம் ஏற்படலாம் –
கோபத்தை உசித உபாயத்தால் அடக்கி -சாஸ்திரம் கிருபை இரண்டும் குலையாமல் இருக்க வழி சொல்லி –
சாஸ்திரம் விமுகர் -கிருபை அவிமுகர் பக்கல் –
ஆனுகூல்ய லேசம்-கூட வேண்டாம் ப்ராதிகூல்யம் போனாலும் போதும் தர்மம் சூஷ்மம் அறிந்தவர் –
குற்றம் நற்றமாக கொள்ளும் ஞால நாதன் –
செருக்கு உள்ளவன் என்பதால் கை கொடுக்கச் சொல்லி உபதேசம் –

ஈஸ்வரனை திருத்துவது -இச் சேதனனுடைய குற்றங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக்
கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான பந்த
விசேஷத்தை பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே-
என் பிழையே நினைந்து அருளி -ஏவகாரத்தால் மற்றவை எல்லாம் மறந்தீர் —
நாரமும் அயனும் சம்பந்தம் அறியாமல் அந்த நாரங்களுக்குள் உள்ள ஸ்ரீ சொல்ல வேண்டும் படி –
குடிநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -உபாதி மூலம் வந்த தாஸ்யமானால் கும்ப நீர் உடைத்து அறுக்கலாம் –
ஆத்மசம்பந்தம் இத்தாலும் போகாதே —
ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான
உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான் சொல்ல வேணுமோ –
ரக்ஷணா சாபேஷனாய் வந்து இவனை ரஷியாத போது -உம்முடைய சர்வ ரஷகத்வம் விகலம் ஆகாதோ —
நல்கித் தான் காத்து அளிக்கும் நாரணன் —
லோக பார்த்தாராம் -லோகத்துக்குள் நான் இல்லையோ -சீதை கேட்டால் போலே -என்னையும் உளள்-போலே
அநாதிகாலம் நம்முடைய ஆஞ்சாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய் போந்த இவனை
அபராத உசித தண்டம் பண்ணாதே -அத்தை பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ
என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால்
உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-அவை ஜீவித்தாவது இவனை ரஷித்தால் அன்றோ –
நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது க்ருபாதிகள் ஜீவியாது -என் செய்வோம் என்ன வேண்டா –
சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கி -க்ருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆன பின் இவனை ரஷித்து அருளீர் என்னும் உபதேசத்தாலே —
இவ் உபதேச க்ரமம் இவர் தாம் அருளி செய்த பரந்தபடியிலும் –
ஆச்சான் பிள்ளை அருளி செய்த பரந்த ரஹச்யத்திலும் விஸ்தரேன காணலாம் –

பிதேவ த்வத் பிர யேத் ஜன நி பரிபூர்ணா கஸி ஜனே ஹிதே ஸ்ரோதோ வ்ருத்தையா
பவதிச சுதாசித் கலுஷதீ -கிமேதன் நிர்தோஷ -க இஹா ஜகதீதி த்வமுசிதைரூபாயைர்
விஸ்மார்ய ச்வஜநயசி மாதா ததாசி ந–ஸ்ரீ குண ரத்ன ஸ்லோகம் -என்று
அபராத பரிபூர்ண சேதன விஷயமாக ஹித பரனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் சீரும் படியையும் –
அத்தசையில் இச்சீற்றத்துக்கு  அடி என் எனபது -இவன் தீர கழிய செய்த அபராதம் என்றவன் சொன்னால் –
மணல் சோற்றிலே  கல் ஆராய்வார் உண்டோ –
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் -என்பதே உசித உபாயங்களால் -அபராதங்களை
மறப்பித்து பிராட்டி சேர்த்து அருளும்படியையும் அருளி செய்கையாலே உபதேசத்தாலே
ஈஸ்வரனை திருத்தும் படி ஸங்க்ரஹேன பட்டரும் அருளி செய்தார் இறே-
தம் பிழையும் படைத்த பரப்பும் –அபராத சஹத்வம் பாராமல் – –மறப்பித்த தூது நாலுக்கும் விஷயம் –
அவதார தசையிலும் -பிராண சம்சய மா பன்னம்  த்ருஷ்ட்வா சீதாத வாயசம்
த்ராஹி த்ராஹீதி பார்த்தார முவாச தாயாய விபும் -என்று வாசா மகோசரமான மகா அபராதத்தை பண்ணின
காகத்தை தலை அறுப்பதாக விட்ட ப்ரஹ்மாச்த்தரத்துக்கு ஒரு கண் அழிவு கற்ப்பித்து பெருமாள் ரஷித்து
அருளிற்றும்-இவள் உபதேசத்தாலே என்னும் இடம் -பாதம புராணத்திலே சொல்லப்  பட்டது இறே –
த்ராஹி த்ராஹி -காப்பாற்ற வேண்டும் -என்பதே உபதேசம் -கிருபையை ரஷித்து அருள வேண்டும் என்றபடி

இனி சேதனனை திருத்துவது –
உன் அபதாரத்தின் கனத்தை பார்த்தால் உனக்கு ஓர் இடத்தில் காலூன்ற இடமில்லை –
ஈச்வரனானவன் நிரந்குச ச்வாதந்த்ரன் ஆகையாலே -அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு
அறுத்து அறுத்து தீர்த்தா நிற்கும் -இவ் அனர்ததத்தை தப்ப வேண்டில் -அவன் திருஅடிகளில் தலை
சாய்க்கை ஒழிய வேறு ஒரு வழி இல்லை -அபராத பரி பூர்ணனான என்னை அவன் அங்கீகரிக்குமோ
தண்டியானோ என்று அஞ்ச வேண்டா -ஆபிமுக்க்ய மாத்ரத்திலே அகில அபராதங்களையும் பொறுக்கைக்கும்-
போக்யமாக கொள்கைக்கும் ஈடான குணங்களாலே–ஷமா வாத்சல்யம் – புஷ்கலன் என்று லோக பிரசித்தனாய் இருப்பான் ஒருவன் –
ஆனபின்பு நீ சுகமே இருக்க வேணும் ஆகில் அவனை ஆஸ்ரயிக்க பார் -என்றும் பரம ஹித உபதேசத்தாலே –
அப்படி எங்கே கண்டோம் என்னில் –அவனும் ஹித காமன் -இவள் பரம ஹிதை-
பாபிஷ்டனாய் வழி கெட நடந்து திரிகிற ராவணனை குறித்து –
-1-மித்ரா மவ்பயிகம் கர்த்தும் ராம / -2-ஸ்தானம் பரீப்சதா /-3-வதஞ்ச அநிச்சதா கோரம்
-4-த்வயா ஸௌ புருஷர்ஷப–இந்த நாலையும் கீழே விவரித்து அருளுகிறார் –
விதிதஸ் சஹி தர்மஞ்சச் சரணாகத வத்சல
தேன மைத்ரீ  பவது தே யதி ஜீவிது மிச்ச்சசி-என்று
-1-பெருமாள் உடன் உறவு கொண்டாடுகை காண் உனக்கு பிராப்தம் -உசிதம் –
-2-அது செய்ய பார்த்திலை யாகில் வழி யடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று-வழி அடிக்க வேணுமே –
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –அவர் அல்லாத ஒரு ஸ்தலம் இல்லை காண்
3–எளிமையாக  எதிரி காலிலே குனிந்து இவ் இருப்பு இருப்பதில் காட்டில் –
பட்டு போக அமையும் என்று இருந்தாயோ -உன்னை சித்ரவதம் பண்ணாமல் நல் கொலையாக கொல்லும்
போதுமவரை பற்ற வேணும் காண்
-4–நான்  பண்ணின அபதாரத்துக்கு என்னை அவர் கைக் கொள்வாரோ
என்று இருக்க வேண்டா -ஆபிமுக்க்யம்  பண்ணினால் முன்பு செய்த அபராதத்தை பார்த்து சீரும்
அந்த புன்மை அவர்பக்கல் இல்லை காண் -அவர் புருஷோத்தமர் காண் -சரணாகதி பரம தர்மம் என்று அறிந்தவராய் –
சரணாகத தோஷம் பாரத வத்சலராக எல்லாரும் அறியும் படி காண் பெருமாள் இருப்பது –
நீ ஜீவிக்க வேண்டும் என்று இச்சித்தாய் ஆகில் அவரோடு உனக்கு உறவு உண்டாக வேணும் என்று
இப்படி அச்சம் உறுத்தி உபதேசித்தாள் இறே —
மைத்ரே– நட்ப்புக்கும் சப்தம் தர்மம் -சரணாகதியை இவனுக்கு தர்மம் -அறிந்தவன்
-அவன் திருந்தாது ஒழிந்தது இவளுடைய உபதேச குறை அன்றே –
அவனுடைய பாப பிரசுர்யம்  இறே இப்படி உபயரையும் உபதேசத்தாலே என்கையாலே ஸ்ரூ ஸ்ரா -என்கிற தாதுவிலே
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்தில் ச்ருணோதி ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் -வைத்து கொண்டு –
ச்ராவயதி என்கிற வ்யுத்பத்தி அர்த்தம் சொல்லப் பட்டது-ச்ராவயதி -என்கிறது ஈஸ்வர விஷயமாக
பூர்வர்கள் கிரந்தங்களில் பலவற்றிலும் காணப் பட்டதாகிலும்
அதவா விமுகா நாமபி பகவத் ஆஸ்ர்யேன உபதேச ஸ்ராவயித் ர்த்வம்
விதிதஸ் சஹி தர்மனஜஸ் சரணாகத வத்சல
தேன மைத்ரீ  பவது தே யதி ஜீவிது மிச்சசி
இதி ராவணம் பிரத்யு உபதேசாத் -என்று தத்வ தீபத்திலே சேதன விஷயமாகவும்–கேட்ப்பிக்கிறாள்- வாதி கேசரி அழகிய மணவாள
ஜீயர் அருளி செய்கையாலே இவ் இடத்திலும் சேதன விஷயமாகவும் சொல்லக் குறை இல்லை –
ச்ருணோதி -கேட்க்கிறாள்-
ச்ராவயதி -கேட்க்கும் படி செய்கிறாள்-இருவரையும் –

—————————————

சூரணை-12-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –

இவ் உபதேசத்தால் இரண்டு தலையிலும் பலிக்கும் அது என்ன -அருளி செய்கிறார் –

கர்த்தாவானவன் கர்மா பலம் அனுபவிக்க வேண்டாவோ என்று கர்மத்தின் தலையிலே ஸ்வாதந்திரத்தை ஏற்றி –
மேல் நழுவுகிற ஈஸ்வரனுடைய கர்ம பாரதந்தர்யம் –
கர்மம் என்று ஓன்று உண்டோ -தேவரீர் கற்பித்தது அன்றோ -புண்யம் பாபம் எது எது நீர் தானே சொன்னீர் –
நின்றனர் –அனைத்தும் தேவரீர் அதீனமே-
அசேதனம் இதுக்கு -ப்ரேரகரே நீர் பல பிரதரும் நீரே மூச்சற்ற கருமத்துக்கு ஒரு ஸ்வாதந்தர்யம் கற்பித்து
பரதந்த்ர ஆத்மவஸ்துவை விட்டால் -பழி உம்மது அன்றோ-
கிருபா பரதந்த்ரராக ஆக வேண்டாமோ -/ இவனை அவனைப் பற்ற வைத்து மோக்ஷயிஷ்யாமி சொல்ல வைக்கிறாள் –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து அலைகிற சம்சாரி சேதனனுடைய -ஞாத்ருத்வ நிபந்தமான கர்த்ருத்வமும் பகவத் அதீனமாய்-
அவன் தூண்ட தானே செயல் படுகிறாய் –
கர்மங்களுக்கு ஸ்வாதந்தர்ய கந்தமும் இல்லை அவனுடைய போக ரசத்துக்கு உறுப்பாய் உஜ்ஜீவி -போக்யம் என்று புரிந்து – இப்படி உபதேசம்

அதாவது –
எப்படி இரண்டு தலைக்கும் தத் தத் அநு குணமாக இவள் பண்ணும் உபதேசத்தாலே
புண்ய பாபங்களின் வசத்திலே இழுப்பு உண்டு பகவத் விமுகனாய் திரிகை யாகிற சேதனனுடைய-கர்ம பாரதந்த்ர்யமும் –
இவன் பண்ணின கர்மத்தை பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக செய்வன் இத்தனை என்று
இவனுடைய ரஷணத்தில் விமுகனாய் இருக்கை யாகிற ஈஸ்வரனுடைய கர்ம பாரதந்த்ர்யமும்-நிவ்ருத்தமாம் என்கை-
சேதனனுடைய கர்ம பாரதந்த்ர்யம் -அனாத் யசித் சம்பந்த  கார்யமான அவித்யா நிபந்தனம்
ஈச்வரனுடைய கர்ம பாரதந்த்ர்யம் -நிரந்குச ச்வாதந்த்ர்யம் கார்யமான ஸ்வ சங்கல்ப நிபந்தனம் –
இவை இரண்டும் -அநாதி சித்தமாய் போந்ததே ஆகிலும் -மாத்ருத்வ சம்பந்த்தாலே -சேதனனுக்கு ஆப்தையாய்
மகிஷீத்வ சம்பந்த்தாலே ஈஸ்வரனுக்கு அபிமதையும் ஆன இவள் –
இரண்டு தலையும் நெஞ்சு இளகி ஆஸ்ரயண அங்கீகார அபிமுகமாம் படியாக பண்ணும் உபதேசத்தாலே நிவ்ருத்தமாக தட்டில்லை-

————————————————

சூரணை -13-

உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –

சித்த உபாய விசேஷங்களால் திருத்த பார்ப்பாள் -அழகும் அருளும் சித்தம் -உபதேசம் சாத்தியம் என்றவாறு –
புத்ரன் திரும்பி திரிந்தாலும் வத்சலாய் மாத்ருத்வ நிபந்தமான அருளால் பகவத் அபிமுக்யன் ஆகும் படி திருத்தும்
உபதேசம் -த்ருஷ்டம் -அதிருஷ்டம் அருள் -என்றவாறு -இவள் இரக்கம் இவனை அபி முகீகரித்து உஜ்ஜீவிப்பிக்கும்
தன் வல்லபன் -ஸ்வ தந்த்ரன் -அன்புக்கு கட்டுப் பட்டவன் –
ஓடம் ஏத்திக் கூலி கொள்வாரைப் போலே – காட்டிக் கொடுத்து தானே சித்குரைக்கிலும்
என் அடியார் அது செய்யார் தன்னையும் உதறிக் கைக் கொள்ளும் படி திருத்தி அருளும்
இதன் பெருமையைக் காட்டவே அவன் உபதேசத்தால் திருந்தாமல் இருக்கிறான் –
போக தசையில் திருப்பவளம் கற்பூர நிகரமாகக் கைக் கொள்ளும் படி மெய்யான உபாயம் -அருள் —
போக கடகத்வங்கள் ஏக காலத்தில் பொருந்தும் படி –
கடாக்ஷம் ஈஸ்வர சங்கல்பத்தாலே தானே பலிக்கும் -ரக்ஷண சங்கல்பம் கொண்டவர் பெருமாள் —
அருளைக் காட்ட வில்லை -பெருமாளை திருத்த சம்ச்லேஷம் இல்லை –
எம்பெருமானுக்கு வீர்ய ஸுர்ய பராக்கிரம -தினவு அடங்கும் படி பிரதி யுத்தம் -ஜெய விஜயர்கள் இசையார் –
அனுபவித்தே அறும் படி -சாபத்தை சங்கல்பித்து –
கர்ம வஸ்யர்கள் இல்லையே இவர்கள் -ஞானாதிகளை பிரகிருதி சம்பந்தத்தால் மறைத்து யுத்த ரசம் பண்ண சர்வேஸ்வரன் பண்ணுகிற கிருஷி
விபலம் ஆக்க ஒண்ணாதே என்று அருள வில்லை
முன்பே மூன்று ஜென்மம் பிறக்க -மீளவும் எம்பெருமான் திருவடி சேர கிலேசிக்க–
திருவனந்த ஆழ்வான்-ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு -இவர்கள் நிமித்தம்
பெரிய பிராட்டியார்-ராவண வத நிமித்தம் – திருவாழி ஆழ்வான் -சிசுபாலாதிகள் –
உபதேசம் -ஞானம் ஆடி மண்டி கலங்க -ஒரு நாடு அடங்க அனர்த்தம் பட கண்டு தன்னை மறந்து உபதேசித்தாள் -என்றவாறு –
உபதேசத்துக்கு யோக்யதை இல்லாத இடத்திலும் செய்தால் கை முதிக நியாயம் -காகம் சிறுமை பாராமல் ப்ரஹ்மாஸ்திரம் விட –
தனஞ்ச பிரஜை -ஒரு நீர் க்ருணனன் நம்மை சுட்டி –சீதோ பவ என்றால் போலே
அம்பன்ன கண்ணாள் கடாக்ஷித்து காகத்துக்கு ஒரு ரக்ஷையும் இட்டு
முன் வளைத்துக் கொண்டு வரும் படி ஏவ –
காகாசுரன் விழுந்தால் போலே ராவணனும் -சசால சாபஞ்ச வெறும் கை வீரன் –
திவ்விய அஸ்த்ர புருஷர்கள் -இவள் வசம் -அவன் கையில் வில்லும் விழ
ராமா சரணம் என்னும் அளவும் கூட்டி வர -ஸ்வா தந்தர்யம் போக -பிராதி கூல்யம் குலைய -ரஷிக்க ப்ரதிஜ்ஜை உண்டே பெருமாளுக்கு —
கச்சா -சொல்ல கேட்டு போனான் -சொன்னதை கேட்டு பரதந்தர்யமும் காட்டி -கடாக்ஷ பலம் இதுவே –
ராவணனையும் அருளால் திருத்தினாள் என்னலாம்–
ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி-இதுவே சரணாகதி –
த்ராஹி த்ராஹி அங்கே அவனை ஆழங்கால படுத்தி ரஷிக்க பண்ணினாள் -கண் அழிவே பலமாக -ஆக்கி –
தேவ ஸ்த்ரீகள் விலங்கை தன் காலில் இருக்க -ராவணன் விபரீத ப்ரவ்ருத்தி -இருந்தாலும் –
சென்று வா என்ன குணம் எந்த கோஷ்ட்டி தெரியவில்லையே –
கூட இருக்கவே அங்கு பலித்தது -இவள் சந்நிதி இல்லாமையால் ராவணன் முடிந்தான்-

சேதனன் மீளாமைக்கு அடி -அநாதி காலம்–யாதானும்  பற்றி நீங்கும் -திரு விருத்தம் – 95- என்கிறபடியே
பகவத் விமுகனாய் -விஷயாந்தர ப்ரவணனாய்-போருகையால் வந்த துர்வாசநாதிகள்–ஆதி சப்தம் ருசிகள் –
ஈஸ்வரன் மீளாமைக்கு அடி அபாரத அநு குணம் இவனை சிஷிக்க வேணும் என்னும் அபிசந்தியாலே
நின்ற நிலை இளகாமல் நிற்க்கைக்கு உடலான நிரங்குச ச்வாதந்த்ர்யம் —
இவ்வோ ஹேதுகளாலே இரண்டு தலையும் தன்னுடைய உபதேசத்தால் ஸ்வ ஸ்வ கர்ம-பாரதந்த்ர்யத்தில் நின்றும் மீளாத அளவில் –
சேதனனை அருளாலே திருத்துகை யாவது -ஐயோ இவனுடைய துர்புத்தி நீங்கி
அநு கூலபுத்தி உண்டாக வேணும் என்று அவன் திறத்தில் தான் பண்ணுகிற
பங்கயத்தாள் திரு அருள் -பெரிய திரு மொழி -9 – 2-1 -என்கிற பரம கிருபையாலே–திரு அருள் பரம கிருபை உத்க்ருஷ்டம்
தனக்கு புருஷார்த்தம் வேண்டாத படி அவன் கிருபையை கிளர்த்தி விடும் கிருபை அன்றோ –
அவன் பாப புத்தி குலைந்து பகவத் அபிமுகனாம் படி பண்ணுகை —ராவணனை அருளால் நிறுத்தாமல் உபதேசத்துடன் நிறுத்தினாள்- –
தேவதைகளுக்கு ராவண வத ப்ரதிஜ்ஜை இருந்ததால் –அங்கத முகத்தால் ராவணனுக்கு உபதேசித்த பெருமாளை பின் தொடர்ந்து உபதேசித்தாள்-
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது –
ஒம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிழ்த்துதல்-செய்து தன் அழகாலே அவனை
பிச்சேற்றி தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாத படி பண்ணி
அங்கீகார உன்முகன் ஆக்குகை-

ஆக -புருஷகாரம் ஆம் போது-7- -என்று தொடங்கி-இவ்வளவாக
புருஷகாரத்வ உபயோகிகளான குண விசேஷங்களையும் –
அவை தன்னை தானே வெளி இட்டபடியையும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டிலும் புருஷீகரிக்கையும் –
தத் பிரகார விசேஷங்களையும் –
சொல்லிற்று ஆய்த்து-

—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -1 –4— ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 27, 2017

சூரணை-1–

வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே..

ஏக சாஸ்திரம் -கர்ம ப்ரஹ்ம விசாரம் -/ வேதார்த்தம் -ஸ்ம்ருதி வேதாந்தார்த்தம் இதிகாச புராணங்கள் -/
இவற்றை அடிப்படையாகக் கொண்டு வேதார்த்தம் ஆச்சர்ய அபிமானமே உத்தாராகம் என்று விளக்கப் போகிறேன் -என்றவாறு –
எல்லா மங்களங்களும் இதிலே உண்டு -வகாரம் மங்கள பிரயோகம் –
-மங்களா சாசனம் -நடுவில் சொல்லி /பல பர்யந்தமாகும் இறுதியில் -மூன்றும் மங்கள சப்தங்கள்
வேத அர்த்தம் -சப்தம் மட்டும் இல்லை நிர்ணயிப்பது –
வகாரம் அம்ருத வாசி இ காரம் ஐஸ்வர்ய வாசி /இரண்டையும் கொடுக்கும் வயவ் ததாதி வேதா -அவனையே சொல்லும்
-வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை / வேத நான்காய் -அவனையே சொல்லும் -சகல பல ப்ரதோ விஷ்ணு வேத –
விஷ்ணு சர்வ லாபாயா கேசவ -மோக்ஷ போக ப்ரதன் த்வி வித பலப்ரதன் -/
சோதனா லக்ஷனா அர்த்தம் தர்மம் – தூண்டும் பிரமாணம் வேதம் – / பிரத்யக்ஷம் அனுமானம் விட பிரபலம் -/

இதில் பிரதம வாக்யத்தால் வேத தாத்பர்யம் இந்த பிரபந்தம் -என்கிறார் -அத்தை அறுதி இடுகை பிரயோஜனம் –
நிர்ணயக நிரனேய சம்பந்தம் -நூலுக்கும் ஆச்சார்ய அபிமானத்துக்கும் –
இந்த தொடர்பை முதல் சூர்ணிகை சொல்லும் / சாரார்த்த ஸ்ரோர்த்தா அதிகாரி /
ப்ரத்யஷத் யாதி பிராமண விலக்ஷணமாய் -ப்ரோஷம் அர்த்த பிரகாசகமாய் அபவ்ருஷேமாய் –
அவிச்சின்ன சிஷ்ய ப்ரசிஷ்ய வைதிக ஸம்ப்ரதமாய்-யதார்த்தம் காட்டும் -வேறே துணை இல்லாமல்
தானே பிரதானமாய் அர்த்தத்தை விளக்குவதால் வேதம் – -மறைக்கும் விருப்பம் இல்லாதவனுக்கு –
கர்ம ப்ரஹ்மம் பூர்வ பாக அபர பாக சம்சய விபர்யயம் இல்லாமல் -நிச்சயிக்கும் /
மன்வாதி ஸ்ம்ருதிகள் -வேதார்த்த அனுசாரி களான – சதாச்சார்யாதி நிஷ்டர்கள் -உணர்ந்து அனுஷ்ட்டிக்கும் -நடத்தை விளக்கும்
இதிகாசம் புராணம் –நிர்ணயிக்கும் -புராவ்ருத்த -முன் நடந்த -சர்க்காதி பஞ்ச லக்ஷணம் –
சர்க்கம் படைப்பு பிரதிசர்க்கம் பிரளயம் வம்சம் மன்வந்தரங்கள் அனுசரிதம் -ஆகியவை –
ஆதவ் வேதா பிரமாணம்– வேதம் -அர்த்தம் -சாமான்யம் -வேதாந்தத்தையும் உள் அடக்கி – /
கர்மம் ப்ரஹ்மம் வேறே வேறே -அர்த்தமும் சாமான்ய வாசி –
கர்மங்களால் ப்ரஹ்மத்தை ஆராதிக்கிறோம் -வேறே வேறே இல்லையே -ஏகார்த்தம் –
தேவதா காண்டம் ஜைமினி ப்ரோக்தம் -முன் கர்ம காண்டம் -பின்பு ப்ரஹ்ம காண்டம் –
சர்வ கர்ம சமராத்யன் -சர்வ தேவதாதா அந்தராத்மா ப்ரஹ்மம் -ஒருவனே -உபய பாக சாமான்ய வாசி
சப்தம் அறுதி இடுகிறதை வியாவர்த்திக்கிறது -அர்த்தம் என்பதால் —

பிரமாதா வானவன் பிரமாணத்தை கொண்டு இறே ப்ரமேயத்தை நிச்சயிப்பது-(ப்ரமிதி-உண்மையான புத்தி – சம்பாதிக்க ) .
.அந்த பிரமாணம் தான் பிரத்யஷாதி ரூபேண அஷ்ட விதமாக சொல்லுவார்கள்..
அதில் ப்ரத்யஷ மேகன்சார்வாக-இத்யாதியாலே சொல்லுகிற
பாஹ்ய குத்ருஷ்டிகளை போல் அன்றிக்கே ப்ரத்யஷ அநுமான ஆகமங்கள் மூன்றையும் ,பிரமாண தயா அங்கீகரித்து
உபமாநாதி பஞ்சகத்தையும் ( உபமாநம் ,அருத்தாபத்தி ,அபாவம், சம்பவம், மற்றும் ஐதீகம்–
தேவதத்தன் பருத்துள்ளான் பகலில் சாப்பிடுகிறான்இல்லை -அதனால் இரவில் உண்கிறான் என்பதே அருத்தாபத்தி-/
கடம் இல்லாதது இன்மை ஒரு பிரமாணம் -கடம் இருப்பது பிரத்யக்ஷ பிரமாணம் போலே -அபாவம் ஒரு பிரமாணம் என்பர் /
சம்பவம் 1000-இருந்தால் 100 இருப்பது சித்தம் -சம்பவிக்கும் / ஐதீகம் செவி வழி செய்தி போல்வன – – )
அவற்றிலே யதாயோகம் அந்தர்பவித்து,—( உவமானம் அர்த்தப்பத்தி சம்பவம் மூன்றையும் அனுமானத்துக்குள்ளும் –
அபாவம் பிரத்யக்ஷத்தில் அந்தர்பவித்து -ஐதிக்யம் சப்தத்தில் அந்தர்பூதம் )-
அவற்றில் ப்ரத்யஷம் இந்த்ரிய கிரகண யோக்யங்களிலும் அநுமானம், ப்ரத்யஷம் ,
ஸித்த வ்யாப்தி கிரகண அநுரூபமான கதி பயபரோஷார்தங்களிலும் பிரமாணம் ஆகவும்
அதீந்த்ரியார்த்ததில் சாஸ்திரமே பிரமாணமாகவும் நிஷ்கரித்து அது தன்னிலும் வேதே கர்த்ராத்ய அபாவாத் பலவதி ஹி
நயைஸ் த்வன்முகே நீயமாநே தன மூலத்வேன மாநம் ததி தர தகிலம் ஜாயதே -( ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம்-14 )
என்கிற படி ஸ்வ பிரமாண்யத்துக்கு மூல சபேஷமான
பௌருஷேய சாஸ்த்ரத்தை பற்றாசாக பிரமாணம் உடைய வேதமே பிரபல பிரமாணம் ஆகவும் அறுதி இட்டு இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே
(வைதிகர் -பாஹ்யர் வியாவருத்தி பரம வைதிகர் குத்ருஷ்டிகள் விருத்தி )
இப் பிரபந்தங்களில் தாம் அருளி செய்கிற அர்த்தங்கள் எல்லாம் வேத பிரதி பாத்யம் என்னும் இடம் தோற்ற
முதலிலே வேதத்தை பிரமாணமாக அங்கீகரித்து கொண்டு ததர்த்த நிர்ணயம் பண்ணும் க்ரமத்தை இவ் வாக்யத்தாலே அருளி செய்கிறார்..

அகில ஹேய பிரத்யதீகத்வ கல்யாணைக தானத்வங்களால் ஈஸ்வரன் அகில ப்ரமேய விலஷணனாய் இருக்குமா போல இறே
அபௌருஷேயத்வ நித்யத்வங்களால் வேதம் அகில பிரமாண விலஷணமாய் இருக்கும் படி .-
வேதத்தின் உடைய அபௌருஷேயத்வம் -வாசா விரூப வித்யயா–இத்யாதி
சுருதியாலும் அநாதி நிதனாஹ்யேஷா வாகுச்த்ருஷ்டா ஸ்வயம்புவா ஆதவ் வேத மயீ திவ்யா யதாஸ் சர்வா ப்ரசூதய -இத்யாதி
ச்ம்ருதியாலும் ப்ரிதிபாத்திக்க படா நின்றது இறே.-
இந்த சுருதி ஸ்ம்ருதிகள் வேத நித்தியத்தை சொல்லுகையாலே தத் பௌருஷேத்யத்வமும் சித்தம் இறே.-
அதேவ ப்ரம விப்ரலம்ப ப்ரமதாம் அசக்தி ரூப தோஷ சதுஷ்டய சம்பாவன கந்த ரஹீதமாய் இருக்கும் பௌருஷயத்வம் இறே
அவை வருகைக்கு மூலம்..இப்படி இருக்கையாலே இதுக்கு மேம்பட்ட ஒரு சாஸ்திரம் இல்லை ..ஆகையாலே இறே –
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி ,ந தைவம் கேசவாத் பரம் –ஹரி வம்ச ஸ்லோகம் -என்று
ஐதிகாசகராலும் பௌராணிகராலும் ஏக கண்டமாக சொல்லப் பட்டது ..( பர சப்தம் –மேம்பட்ட என்பது இல்லை –
அந்த பக்ஷத்தில் சமமாக இருப்பது சம்பவிக்கும் -வேறுபட்டது இல்லை என்றவாறு )
இதன் ஏற்றம் எல்லாம் திரு உள்ளம் பற்றி இறே –சுடர் மிகு சுருதி -என்று நம் ஆழ்வார் அருளி செய்தது
அவரை பின் செல்லுபவராய் அபியுக்த அக்ரேசரான பட்டரும் -ஆதவ் வேதா : பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்றார் இறே ..
இத்தை வேதம் என்கிறது வேதயதீதி வேத : என்கிற வ்யுக்பக்தியாலே புபுஷூ க்களாய்–ஆஸ்திகராய் இருப்பாருக்கு ஸ்வார்த்த பிரகாசமாய் இருக்கையாலே ..
இப்படி இருந்துள்ள-வேதம் தான் பிரதிபாத்யார்த்த விசேஷத்தாலே பாக த்வயாத்மகமாய் இருக்கும்
(.-இதனால் அறிகிறேன் இதனால் அறியப்படுகிறது வேதம்–)
.அத்தை இவ் இடத்தில் உபய பாக சாமான்யவாசியான வேத சப்தத்தாலே சாகல்யேன (சகலமாக முழுவதுமாக ) சொல்கிறது ..

அர்த்தம் என்று பூர்வ பாக ப்ரதிபாத்யமான கர்மத்தையும் உத்தர பாக பிரதிபாத்யமான ப்ரஹ்மத்தையும் சொல்லுகிறது..
(-20 மீமாம்ச அத்தியாயங்கள் -20–ரஹஸ்ய த்ரய சப்தங்கள் -20-ஸ்லோகங்கள் யதிராஜா விம்சதி ஒரே அர்த்தம் காட்டுமே )
பூர்வோத்தர மீமாம்சைகளில் ,-அதாதோ தர்ம ஜிஜ்ஜாசா -என்றும்-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா என்றும் இறே உபக்ரமித்தது-
ஆகையாலே-ஏக சாஸ்திரமாக இருப்பதால் – பாக துவயத்துக்கும் பிரதிபாத்யம் ஆராதனா ரூபமான கர்மமும் ,ஆராத்ய வச்துமான ப்ரஹ்ம இறே..-
கர்மத்தின் உடைய பாகவத ஆராதநத்வம்-ச ஆத்மா அங்கான் அன்யா தேவதா -என்று
அக்நீத்ராதி சகல தேவதைகளும் பகவத் சரீர பூதராக சாஸ்திரம் சொல்லுகையாலே சித்தம் இறே –
இவ் ஆகாரம் அறியாதார் அவ்வோ தேவதா மாத்ரங்களையும் உத்தேசித்து பண்ணும் கர்மமும் ,வச்துகத்யா பகவத் ஆராதநமாக தலை கட்டும்.
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மானான்சஹூதாச்னான் சர்வ பூதாந்த்ர ஆத்மாநாம் விஷ்ணு மேவ யஜந்தி தே-என்ன கடவது இறே-( ஏவ சப்தம் -)
யேப்அன்ய தேவதா பக்தா யஜந்தே ச்ரத்த யான்விதா தேபி மாமேவ கவ்ந்தேய யஜந்தி விதி பூர்வகம்–கீதை 9-23-என்று தானே அருளி செய்தான் இறே .-
(அபி சப்தம் -அவிதி பூர்வகம்–வேத வாக்ய தாத்பர்யம் அறியாமல் -இருந்தாலும் என்னையே ஆராதிக்கிறான் ) .
ஆகவே எல்லா படியாலும் ,கர்மத்துக்கு பகவத் ஆராதனா ரூபம் சித்தம் இறே –

இப்படி ஆராதனா ரூபமான கர்மமும், ஆராத்ய வஸ்துவான ப்ரஹ்மமும் ஆகிற அர்த்த த்வத்தையும் அறியவே
த்யாஜ்ய உபாயதேய ரூப சகலார்தங்களையும்(கர்ம ப்ரஹ்மம் அறியவே- ப்ராப்ய பிராப்பகங்கள் பிரதானம் ஆனாலும் -சகல அர்த்தங்கள் அர்த்த பஞ்சகமும் –சித்தம் )
அறியலாய் இருக்கையாலே- பாக த்வய ப்ரதிபாத்யம் கர்ம ப்ரஹ்மங்கள் என்கிறது-.எங்கனே என்னில்
கர்மம் தான் புபுஷுகளுக்கு ஐஸ்வர்ய சாதனமாய்
முமுஷுக்களில் பக்தி நிஷ்டருக்கு உபாசன அங்கமாய்
பிரபன்னருக்கு கைங்கர்ய ரூபமாய இறே இருப்பது..
இப்படி இருந்துள்ள கர்மத்தின் வேஷத்தை உள்ளபடி அறியவே
அநந்த ஸ்திர பல ப்ரஹ்ம ப்ராப்தி காமரான சாதகருக்கு இது
உபாசன அங்கத்வேன உபாதேயம்.-ஐச்வர்யாதிகளுக்கு உபாதேயமான ஆகாரத்தால் த்யாஜ்யம் என்று அறியலாம் –
அநந்ய சாதனருக்கு இது கொண்டு சாதிக்க வேண்டுவது ஓன்று இல்லாமையாலே கைங்கர்ய ரூபேண உபாதேயம் .-
உபாசகருக்கு உபாதேயமான ஆகாரத்தாலே த்யாஜ்யம் என்று அறியலாம் .(-கைங்கர்யமே ஸ்வா பாவிக ஆகாரம் )-

ப்ரஹ்மத்தை அறியும் போது ,தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை எல்லாம் அறிய வேண்டும் ஆகையாலே
விபூதி பூத சேதன அசேதனங்களின் ஸ்வரூபம் அறியலாம்
(பத்த -முமுஷு -முக்த – கேவல -நித்ய-சேதன ஸ்வரூபமும் -/அசேதன தேக தேச விசேஷங்களை அறியலாம் )
அதில் ஞாநாநந்த லஷணமான சேதன ஸ்வரூப வைலஷணம் அடியாக வருகிறது ஆகையாலே கைவல்யத்தின் வேஷமும் அறியலாம்.
ப்ரஹ்மத்தின் உடைய சேஷித்வ ப்ராப்யத்வங்களை அறியவே தத் அநுபவாதிகள் புருஷார்த்தம் என்று அறியலாம்.
தத் உபாச்யத்வ சரண்யத்வங்களை அறியவே தத் ப்ராப்தி சாதன விசேஷங்களை அறியலாம்.
ப்ரஹ்மத்தின் உடைய நிரதிசய ப்ரஹ்மக்யத்வத்தையும் அநந்ய சாத்வத்தையும் தத் பிரகார தயா பரதந்த்ரமான ஸவஸ்ரூபத்தையும் தர்சிக்கவே
சாத்யாந்தர சாதனாந்த்ரங்கள் உடைய த்யாஜ்யத்வத்தையும் ஸூஸ்பஷ்டமாக அறியலாம்-
(உபாசகர் -பிரபன்னர் -மோக்ஷ அனுபவம் ஒன்றாக இருந்தாலும் அவன் திரு உள்ளத்தால் வாசி உணர்வானே-)
ஆக இப்படி இருக்கையாலே பாக த்வயத்துக்கும் பிரதிபாத்யம் ஆராதனா ஸ்ரூபமான கர்மமும் ஆராத்ய வஸ்துவான ப்ரஹ்மமும் என்ன குறை இல்லை-
த்வதர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஞாபநைஸ் த்வத் பதாப்தவ் -என்று இறே பட்டர் அருளி செய்தது –

இப்படி பாக த்வய பிரதிபாத்யங்களான இவ் அர்த்தங்களை அறுதி இடுகையாவது –
கர்மத்தினுடைய ஸ்வரூப அங்க பலாதிகளையும் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூப ரூப குண விபூதி யாதிகளையும் –
சம்சய விபர்யயம் அற நிர்ணயிக்கை-
அது தான் செய்யும் போது -சகல சாக ப்ரத்யய ( ஞான ) நியாயத்தாலும் -சகல வேதாந்த ப்ரத்யய நியாயத்தாலும் செய்ய வேண்டும்
அதில் சகல சாகா பிரத்யயமாவது -ஒரு வாக்யத்திலே ஓர் அர்த்தத்தை சொன்னால் –
அதனுடைய அங்க உபாங்காதிகள் (கர்மம் பற்றி – அங்கம் உபாங்கம் பலம் போல்வனவற்றில் சங்கை வருமே )
நேராக அறிக்கைக்காக -சாகாந்த்திரங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்து
அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களிலும் ஞானம் பிறந்து -அவ் அர்த்தங்களுக்கு அன்யோன்ய விரோதிகளையும் சமிப்ப்த்து –
தனக்கு அபிமதமான அங்கியோடே சேருமவற்றை சேர்க்கை –
சகல வேதாந்த ப்ரத்யய நியாயமாவது -ஒரு வேதாந்தத்திலே ஒரு வாக்கியம் ஓர் அர்த்தத்தை சொன்னால் –
அல்லாத வேதாந்தங்களிலும் சஞ்சரித்து -அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு (ப்ரஹ்மம் பற்றி அர்த்தத்தில் தானே சங்கை வரும் ) அன்யோன்ய விரோதம்
பிறவாதபடி-விஷய விபாகம் பண்ணி -தனக்கு அபிமதமான அர்த்தங்களோடு சேருமவற்றை சேர்க்கை –(நிர்விகாரம் -உபாதானம் ப்ரஹ்மம் பொருந்த வைக்க -போல்வன )
இது தான் மகா மதிகளான மக ரிஷிகளுக்கு ஒழிய -அல்லாதாருக்கு செய்யப் போகாமையாலே –
உப ப்ரஹ்மணங்கள் கொண்டே நிர்ணயிக்க வேணும் -ஆகையால் தத் நிர்ணய அங்கங்களை அருளி செய்கிறார் –ஸ்ம்ருதி இதிகாச புரானங்களாலே -என்று-

ஸ்ம்ருதிகள் ஆவன -ஆப்தரான மன்வந்த்ரி விஷ்ணு ஹாரீத யஞவல்க்யாதிகளாலே
அபிஹிதங்களான தர்ம சாஸ்திரங்கள் –-(ஆச்சார்ய வ்யவஹார பிராயச்சித்தம் பற்றியவை-தர்ம ஞானம் கொடுப்பவை –
ஸ்ம்ருதி -சொன்னாலே தர்ம சாஸ்திரங்கள் இதிஹாச புராணங்கள் சேரும் –மேலே தனித்து சொல்வதால் இங்கு தர்ம சாஸ்திரங்களை சொல்லும்
மனு -அத்ரி-ஹாரீதர்-விஷ்ணு யாஜ்ஜ்வல்க்யர் –போல்வார் –யதார்த்த த்ரஷ்டா வக்தா –நன்றாக அறிந்து நன்றாக காட்டுபவர்
மனு ஸ்ம்ருதி -பிரகஸ்பதி ஸ்ம்ருதி -தக்ஷ ஸ்ம்ருதி -இயம ஸ்ம்ருதி -கௌதம ஸ்ம்ருதி -அங்கிர ஸ்ம்ருதி -யாஜ்ஜ்வல்க்ய ஸ்ம்ருதி -பிரதேச ஸ்ம்ருதி –
சாதாதப ஸ்ம்ருதி -பராசர ஸ்ம்ருதி -சம்வர்த்த ஸ்ம்ருதி -உசன ஸ்ம்ருதி -சங்க ஸ்ம்ருதி -லிகிஸ ஸ்ம்ருதி -அத்திரி ஸ்ம்ருதி -விஷ்ணு ஸ்ம்ருதி –
ஆபத்ஸ்தம்ப -ஹாரீத ஆகிய -18-ஸ்ம்ருதிகள் உண்டே -இவற்றுள் -மனு ராஜஸ ஸ்ம்ருதி ஆனாலும் -ஸூ பால உபநிஷத் விளக்கம் -/-)
இதிகாசங்கள் ஆவன -ப்ராவ்ருத்த பிரதிபாதங்களாக ஸ்ரீ இராமாயண மகா பாரதாதிகள் –-
புராணங்கள் ஆவன -சர்காதி பஞ்ச லஷண உபேதங்களான-ப்ரஹ்ம பாத்ம வைஷ்ணவாதிகள் –(-ப்ரஹ்ம -பாத்ம -விஷ்ணு -பாகவத -சைவ -பவிஷ்ய –
நாரதீய -மார்க்கண்டேய -ஆக்னேய -பிரமகைவர்த்த -லிங்க -வராக -சாந்த -வாமன -கூர்ம -மத்ச -காருட ப்ரஹ்மாண்ட -ஆகிய -18-புராணங்கள் –
ப்ரஹ்ம புராணம் ராஜஸ -சாத்விக அம்சங்கள் நிறைய இருப்பதால் இங்கே எடுத்துள்ளார் )

வேதார்த்தம் அறுதி இடுவது இவற்றாலே என்று -( இவற்றால் தான் வேறு எவற்றாலும் அல்ல -அன்வய வ்யதிரேக பிரமாணங்கள் மேலே அருளிச் செய்து )-
இப்படி நியமேன அருளி செய்தது -இவற்றை ஒழிய-ஸ்வ புத்தியா நிர்ணயிக்கும் அளவில் -அல்ப ஸ்ருதனானவனுக்கு விப்ரதிபத்தி வருமாகையாலே –
வேத காலுஷ்ய ஹேதுவாம்-( வேத புருஷன் கோபிக்க ) என்று நினைத்து -இந் நியமம் தான் -இதிகாச புராணாப் யாம் வேதம் சம உப பிரம யேத்-
பிபேத்யல் பஸ்ருதாத் வேதோ மா மாயம் பிரதரிஷ்யதி -என்று பார்கச்பத்திய ச்ம்ருதியிலும்-மகா பாரதத்திலும்-சொல்லப் பட்டது இறே –
இவ் உபக்கிரம வாக்ய பிரக்ரியையாலே -புருஷகாரம் வைபவம் தொடங்கி-ஆச்சார்யா அபிமானம்-பர்யந்தமாக
இப் பிரபந்தத்தில் இவர் அருளி செய்கிற வேதார்த்தங்கள் எல்லாம் உப ப்ரஹ்மணங்கள் கொண்டே நிச்சயித்து
அருளி செய்கிறார் என்னும் இடம் தோற்றுகிறது -அது தான் தத் அர்த்தங்கள் அருளி செய்கிற ஸ்தலங்களில்-சம்ப்ரதிபந்தம் –

ஆக -இவ் வாக்யத்தால் –சகல பிரமாணங்களிலும்-வேதமே பிரபல பிரமாணம் என்னும் இடமும் –
தத் அர்த்தம் நிர்ணயம் பண்ணும் கரமமும் சொல்லிற்று ஆய்த்து –

———————————————-

சூரணை-2

ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

ஸ்ம்ருதியாலே -ஜாதி ஏக வசனம்
மன்வாதி ஸ்ம்ருதியாலே -பகவத் ஆராதன ரூப கர்ம பாகம் -பிரதான்யம் -ப்ரஹ்ம பரம் உண்டே ஆனாலும் -ஆராதனத்தில் நோக்கு –
ஸ்ம்ருதி வ்யாவருத்தமான மற்ற இரண்டாலும் பகவத் ஸ்வரூபாதி -உத்தர பாகம் -பிரதான்யம் –கர்ம பரத்வம் உண்டேயாகிலும் -கீதையிவ் கர்மா வசனங்கள் உண்டே –
மற்ற இரண்டாலும் -ஸ்ரேஷ்டம் என்று ஸூசகம்

இவற்றில் எத்தாலே எந்த பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது என்ன -அருளி செய்கிறார் –
உப ப்ரும்ஹ்யமான வேதத்துக்கு பிரதிபாத்ய அர்த்த விசேஷத்தாலே இறே பாத பேதம் உண்டாய்த்து –
அப்படியே உப ப்ரும்ஹணங்களாயும் பிரதிபாத்ய விசேஷத்தாலே பேதம் உண்டு இறே –
அதில் ஸ்ம்ருதிகள் பூர்வ பாக உபப்ரும்ஹணங்களாயும் -இதிகாசாதிகள் உத்தர ப்ரும்ஹணங்களாயும்
நிர்மிதன்கள் ஆகையாலே -தத் உப ப்ரும்ஹணங்களைக் கொண்டே தத் பாக அர்த்தம் நிச்சயம் பண்ண
வேண்டி இறே இருப்பது –
அத்தை பற்ற ஆசார வ்யவஹார (பங்காளி பாகம் பிரிக்கும் முறைகள் போல்வன ) ப்ராயசித்தாதிகளுக்கு பிரதிபாதங்களான இதிஹாச புராணங்கள்
ஆகிற மற்றை இரண்டாலும் -பிரம பிரதிபாதகமான உத்தர பாகத்தில் அர்த்தம் நிச்ச்சயம் பண்ண கடவது என்கிறார் –
இப்படி உபய விதமான உப ப்ரும்ஹணங்களாயும் உபய பாக அர்த்தையும் அறுதி இடுகை யாவது –
அநதீத (கற்காத ) சாகாந்தரங்களுக்கும் பிரதிபாதகங்கள் ஆன இவற்றாலே அதீத ( கற்ற ) சாகார்த்தங்களை அபேஷித விசேஷங்கள் கூடே-நிச்சயிக்கை –
ஸ்ம்ருதிகள் தன்னிலே பிரம பிரதிபாதனமும் -இதிகாசாதிகளிலே கர்ம பிரதிபாதனமும்
உண்டாய் இருந்ததே ஆகிலும் –ஸ்ம்ருதிகளில் பிரம பிரதிபாதனம் கர்மங்களினுடைய தத் ஆராதன
ரூபத்வ ஞாபன அர்த்தமாகவும் -இதிகாச புராணங்களில் கர்ம பிரதிபாதனம் கர்மங்களினுடைய உபாசன
அங்கத்தவ ஞாபன அர்த்தமாகவும் ஆகையாலே -இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை –
ப்ராயேன (-பிராசுர்யேன )- பூர்வ பாகர்த்த பூரணம் தர்ம சாஸ்த்ரத-இதிகாச புரானாப்யாம் வேதந்தார்த்த பிரகாச்யதே -என்ன கடவது இறே –

———————————

சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

இதிகாசம் பிரபலம் என்கிறார் மேல் -விசேஷம் பிரதானம்
சார பாக உப ப்ராஹ்மண சாம்யம் இரண்டுக்கும் —
சத்வகுணம் -சாத்விக புராணம் -/ குணத்துக்குத் தக்க தேவதையை கொண்டாடி -/ கலந்து கட்டியாய் பக்ஷபாதியாய் -அந்நிய பாரமாய் –
பகவத் குண மாத்ர பிரதானமாய் -ஸ்வரூபங்கள் சேஷ்டிதங்கள் விரிக்காமல் –
இதிஹாசங்களோ-/ஆதி மத்திய அவசானம் ப்ரஹ்மத்தையே அநந்ய பரமாய் பகவத் குண சேஷ்டித்த உபய பிரதானமாய்-பூரணமாய்
இரண்டு -ஏக பாக சாம்யம் அன்யோன்ய பிரதியோகத்தவம் –

உத்தர பாக உப ப்ரக்மன த்வ்யத்துக்கும் தாரதம்யம் உண்டோ
(தரம் தமம் தாரதம்யம் ) -தன்னில் ஒக்குமோ -என்கிற
சங்கையில் அருளி செய்கிறார் மேல் –
அன்றிக்கே –
ஏக பாக விஷயமான இரண்டு உப ப்ரும்ஹணங்களாயும் இன்னத்துக்கு பிராபல்யம் என்னும் அத்தையும்
தர்சிப்பிக்க வேணும் என்று தாமே திரு உள்ளம் பற்றி அருளி செய்கிறார் ஆகவுமாம்

இவை இரண்டிலும் என்று தொடங்கி -அதாவது -ஸ்ரேஷ்ட பாக உப ப்ரும்ஹண தயா வந்த சேர்த்தியை
உடைத்தான இவை இரண்டிலும் வைத்து கொண்டு – ப்ராபல்யத்தில் வந்தால் புராணத்திலும்
இதிகாசத்துக்கு பிராபல்யம் உண்டு என்கை-புராணத்தில் காட்டில் இதிகாசத்துக்கு பிராபல்யம் –
1–பரிக்ரக அதிசயம்-(-புராணங்கள் இதிகாசங்களை கொண்டாடும்–புராண பரிக்ரகம் உண்டே )-
-2- -மத்யஸ்ததை— (பக்ஷபாதம் இல்லாமல்-குணத்ரய விஷயம் இல்லாமல் )
-3–கர்த்துராப்த தமத்வம் -வியாசாதிகள் ஆப்தர்களால் -ஆகிய இவற்றாலே –
இவற்றில் பரிக்ரகம் ஆவது –சாஸ்திர பரிக்ரகம் –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே வேத ப்ராசேதசா தாசீத் சாஷாத் ராமாயனாத்மனா-ஸ்கந்த புராணம்
மதி மந்தா நமாவித்ய யேனாசொவ் சுருதி சாகராத் ஜகத்திதாய ஜநிதோ மகாபாரத சந்த்ரமா
வியாச வாக்ய ஜலவ்கேன குதர்மத ருஹாரினா வேத சைலா வதீர்னே ந நீர ஜஸ்கா மஹி க்ருதா– லிங்க புராணம்
பிபேதி கஹனாச் சாஸ்த்ரான் நரஸ் தீவ்ராதி வவ்ஷதாத் பாரதஸ் சாஸ்திர சாரோயம் அத
காவ்யாத்மனா கருத விஷ்ணவ் வேதேஷூ வித்வத்சூ குருஷூ பிராமனேஷூ ச பக்திர்பவதி
கல்யாணி பாரததேவ தீமதாம் -இத்யாதிகளாலே புராண விசேஷங்களிலே இதிஹாசம்-ச்லாகிக்க படா நின்றது இறே –
(வேதம் ராமாயணம் ஸ்கந்த புராணம் -/லிங்க புராணம் வைகுண்ட பாரா லோகே/
சைவ லிங்க புராணம் -மதி மந்த ஜகத் ஹிதம் -வேத வியாசர் -சுருதி சாகரம் மஹா பாரதம் அமிர்தம் -/
மார்க்கண்டேய புராணம் -ரஜஸ் இல்லாமல் பூமா தேவி -வேதமாகிய மலையில் இருந்து விழுந்து -வ்யாஸ வாக்கியம் பெரும் தண்ணீர் மஹா பாரதம் அழுக்கு அற்று /
ஆழமான வேத சாஸ்திரம் எய்தற்கு அரிய மறைகள் பாரதம் -காவ்யம் கிராந்தி தர்சி -வேதம் பிரபு வாக்கியம் புராணம் ஸூ ஹ்ருது வாக்கியம்
இதிகாசம் காதலன் காதலி வாக்கியம் /விஷ்ணு வேதம் அந்தணர் குரு பாகவத உத்தமர்கள் பக்தி ஏற்பட பாரதம்–சரமபர்வம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்)
மத்யஸ்தை யாவது – யஸ்மின் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் பிராமணா புராதஸ்ய தச்யஸ்து மகாத்மியம்
தத் ஸ்வரூபென வர்ண்யதே-என்று சர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் பிரம்மாவாய்-அவனுக்கு
யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தால் யாதொரு குணம் விஞ்சி இருந்தது -அந்த குண அநு குண
தேவதையினுடைய மகாத்ம்யத்தை புராணத்திலே சொல்லுகையாலே பஷ பாதிகளாய் இருக்கும்
புராணங்கள் போல் அன்றிக்கே -லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயித்திலே அதிக்ருதங்கள் ஆகையாலே-ஒரு விஷயத்திலும் பஷ பாதம் இன்றிக்கே இருக்கை–
கர்த்து ஆப்த தமத்வமாவது -பிரபன்ன கர்த்தா வானவன் –யாதா தர்சன
சாமர்த்தத்தையும் யதா த்ருஷ்டார்த்த வாதித்வத்தையும் மிகவும் உடையவனாய் இருக்கை –
அதேதிஹாச புராண யோரிதி ஹாசா பலியாம்ச குத தேஷாம் பரிஹ்ரகாதி குத தேஷாம்
பரிக்ரஹாதி சயாதிகளாலே புராண இதிகாசம் பிராபல்யம் சாமான்யேன தத்வ நிர்ணயத்திலே
உய்யக் கொண்டாராலும் -மகா பாரதம்ஹி பரிக்ரஹ விசேஷாவசிதம்-என்று தொடங்கி-தர்மே சார்த்தேச
காமேச மோஷச பரதர்ஷப யதிஹாச்தி ததனயத்ரா யன் நேஹாச்தி ந தத் க்வசித் –
இதி லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயாதி க்ருதத்வேன க்வசிதபி அபஷ பாதித்வாச்ச
புரானேப்யோ பலவத்தரம் -என்னும் அது அளவாக –
பரிக்ரஹ அதிசயத்தாலும் -மத்யஸ்தை யாலும் -புராணங்களில் காட்டில் இதிஹாச விசேஷமான
மகாபாரதத்துக்கு உண்டான பிராபல்யம் ஸ்ரீ சஹச்ர நாம பாஷ்யத்திலே பட்டராலும் பிரதிபாதிக்கபட்டது இறே –

——————————————

சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –

பிரதான்யத்தை மூதலிக்கிறார் -பிரபலமாகவும் பிரதான்யமாகவும் -இதிகாசம் -என்றவாறு -பிரதிபாத்ய அர்த்த விசேஷ சித்த பிராபல்யத்தால் –
முன்பே மூன்று காரணங்கள் பார்த்தோம் -இது நான்காவது –ப்ராபல்யம் ஸ்தீகரிக்கப்படுகிறது-
ஆக பாக பேதத்தையும் -ஸ்ம்ருதிகளைக் காட்டிலும் இவை இரண்டுக்கும் உள்ள ஸ்ரேஷ்டம் -சார பாவம் பார்த்தோமே -முன்பே –
இந்த த்வயத்தில் பிரதம உப ப்ரஹ்மண்யத்தின் பிரதான்யம் சொல்லி இவ்வளவும் இப்பிரபந்தம் தொடக்கம்

அதின் பிராபல்யத்தை இசைவிக்கிறார் –
அந்த ப்ராபல்யத்தாலே -இதிஹாச புராணம் பஞ்சமம் –(பூம வித்யை சுருதி வாக்கியம் -இதிகாசங்களும் புராணங்களும் ஐந்தாவது வேதம் –
த்வந்த சமாசம் ஏக வசனம் -சமாகார த்வந்தம் -கூட்டு பல காய் கரிகால் சேர்ந்தாலும் இதுவே சமாகாரம் / ஜாதி ஏக வசனம் கொண்டு )
இதிஹாச புரானாப்யாம்-என்றும் –
சுருதி ச்ம்ருதிகளிலே இரண்டையும் சேர சொல்லுகிற அளவில் –
இதிஹாசமானது புராணத்துக்கு முன்னே சொல்லப் பட்டது என்கை –( இந்த பிரபந்தத்தில் இத்தை முன்னே அருளிச் செய்தார் முன்னமே-அத்தை இசைவிக்கிறார் )
த்வந்த்வ சமாசத்திலே -அல்பாச்தரமாதல்–(அச்சு எழுத்து குறைவாக உள்ள இடங்கள் முன்னே ) -அப்யர்ஹிதம் ஆதல்
(பொருளில் பிரதானமாக சீர்மையாக உள்ளது முன்னே-வந்தே கோவிந்த தாதவ -எம்பாரை முன்னே அருளிச் செய்தது போலே –
ஞான பிறவி கொடுத்த ஆச்சார்யருக்கு ஏற்றம் உண்டே )-இறே முற் படுவது –
அதில் அல்பாச்தரம் அன்றியிலே இருக்க அது முற் பட்டது அப்யர்ஹிதத்தாலே இறே –
இந்த அப்யர்ஹிதத்துக்கு மூலம் அதி பிராபல்யம் என்று கருத்து –
அதவா –
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே என்று -பாகத்வய உபப்ரும்ஹணங்களாயும் சமஸ்தமாக-சொல்லுகிற இடத்தில் –
இதிஹாசச்ச புராணா நிச இதிஹாச புராணா நி / சம்ர்தயச்ச இதிஹாச புராண நிச ச்மர்த்தீதிஹாச
புராணா நி -என்று இப்படி சமாச விவஷை ஆகையாலே -அல்பாச்தரமான புராணத்துக்கு
முன்னே இதிகாசத்தை அருளி செய்ததின் கருத்தை -இவை இரண்டிலும் -இத்யாதியாலே-அருளி செய்கிறார் ஆகவுமாம்–
இந்த யோஜனையில்-அத்தாலே அது முற் பட்டது -என்கிற இதுக்கு அந்த ப்ராபல்யத்தாலே –
இதிஹாச புராணங்களாலே -என்கிற இடத்தில் புராணத்துக்கு முன்னே இதிகாசம் சொல்லப் பட்டது
என்று பொருளாக கடவது -( ஸ்ம்ருதி முன்னே சொன்னது பூர்வ பாக உப ப்ராஹ்மணம் என்பதால் -பிரபல்யத்தால் முன்னே சொல்ல வில்லை என்றபடி –
மூன்றையும் சேர்த்து சொன்னது ஆராதன ரூப கர்மத்துக்கும் ஆராத்யமான ப்ரஹமம்துக்கும் உள்ள சம்பந்தத்தால் —
பாஞ்ச ராத்ர ஆகமும் மனு ஸ்ம்ருதிகள் இத்யாதியால் அர்த்தாத சித்தம் -)
ஆக
வேதார்த்தம் நிர்ணயம் பண்ணும் அளவில் தத் உப ப்ரும்ஹணங்களாலே பண்ண வேணும் என்றும் –சூர்ணிகை -1-–
அதில் பூர்வ உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாயும் இன்னது என்றும்–சூர்ணிகை -2–உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாலே
இதிஹாச புராணங்களில் இதிகாசம் பிரபலம் என்றும் –சூர்ணிகை -3-/4-அருளி செய்கையாலே
மேல் தாம் அருளி செய்ய புகுகிற அர்த்தங்களுக்கு பிரமாணம் ஒருங்க விட்டு அருளினார் ஆயத்து –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -அவதாரிகை – ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 26, 2017

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அசமத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோ பகவத தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –

மாதா பிதா யுவதய தநயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்
ஸ்ரீ மத் ததன்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா

பூதம் சரச்ச மகாதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குலசேகர யோகிவாஹான்
பக்தான்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரண தோச்மி நித்யம்-

———————-

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
-திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற /ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -முதல் படி –
தஸ்ய பிரகிருதி லீனஸ்ய -சலித்து -வேத தாத்பர்யமான –திருமந்திரம் -பிரணவம் -அகாரம் -சாரதமம் -யாதாம்யா ஞானம் –
பிரகர்ஷேன-ஸ்தோத்ரம் பண்ணப்படுகிறான் பிரணவத்தால் -பிரணவம் சொல்லிக் கொண்டே ஆத்ம தன்னை ஸமர்ப்பிக்கக் கடவன் –
ரஹஸ்ய த்ரயம் -20-சப்தங்கள் -65-எழுத்துக்கள் -/
அஷ்ட ஸ்லோகி ஸ்ரீ பராசர பட்டர் /
ஐப்பசி திருவோணம் -பிள்ளை லோகாச்சார்யார் -திருவவதாரம் -முடும்பை -வடக்குத் திரு வீதிப்பிள்ளை -திருக் குமாரர் –
தத்வ த்ரயம் விளக்கம் -5-/ ரகசிய த்ரய விளக்கம் -8-/ சம்ப்ரதாய விளக்கம் -5-
=1323-நம்பெருமாளை ரக்ஷணம் -பிரமாணம் பிரமேயம் இரண்டையும் ரக்ஷணம் –
-1205-/-1325-/ -1323-புறப்பட்டார் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து /-1207-நாயனார் அவதாரம் -1323-/
ராமர் இலஷ்மணர் -2-நாள் பின் பிறந்து 2-நாள் முன் போனால் போலே இங்கும்
காட்டு அழகிய சிங்கர் சன்னியிலே காலஷேபம் -/ மனப்பாக்கத்து நம்பி -அவரோ நீர் -பேர் பெருமாள் நியமனப்படி கிரந்தப்படுத்தி –
-1370 —1371-மா முனிகள் திருவவதாரம் -ரஹஸ்யம் விளைந்த மண் -/விசத வாக் சிகாமணி /-1343–73-திரு நக்ஷத்திரங்கள் மா முனிகள் இங்கு –
திருவாயமொழிப் பிள்ளை வியாக்யானம் உண்டு -ஆயி ஜநன்யார்ச்சார்யார் ஜனனி ஆய் -தாய் -போன்ற பரிவால் –அவன் இடமும் அடியார் இடமும் /
நாலூர் ஆச்சான் பிள்ளை மூலம் ஈடு திருவாய்மொழிப் பிள்ளைக்கும் -ஆய் ஸ்வாமிக்கும் -அருளினார் –
தேவ பெருமாளே பிள்ளை லோகாச்சார்யாராக திருவவதாரம் –
ஆச்சார்ய ஹிருதயம் -ஸ்ரீ வசன பூஷணம் -தொடர்பு –
பாகவத பெருமை பேசப்பட்ட கிரந்தங்கள் -கொந்தளிப்பு -ஸ்ரீ ரங்கத்தில்
நம் பிள்ளை அனுக்ரஹத்தால் பிள்ளை லோகாச்சார்யார் -நம் பெருமாள் அனுக்ரஹத்தால் நாயனார் -திருவவதாரம் -அதனாலே இவர்கள் திருநாமங்கள் —
நான்கு வீதி புறப்பாடு நான்கு பிரகரணங்கள் த்ராவிட நாம் ஹ்ருதயம் ஆச்சார்ய ஹிருதயம் /
அரும் பதத்துக்கு உரைகளும் உண்டே –திருமழிசை அண்ணா அப்பா அய்யங்கார் –எம்பார் ஜீயர் ஸ்வாமி இருவரும் -அருளி உள்ளார்கள் –
குன்றத்தூய ஐயன் ஸ்வாமி மீமாம்ஸா பாஷ்யம் ஸ்ரீ வசன பூஷணத்துக்கு சமஸ்க்ருத வியாக்யானம் -பூர்வ பக்ஷம் சொல்லி சித்தாந்தித்து அருளி உள்ளார் –

தத்வ த்ரயம் -அர்த்த பஞ்சகம்–அறுத்த பஞ்சகம் தீமைகளை அறுக்கும் -அர்ச்சிராதி -ப்ரமேய சேகரம் -தத்வ சேகரம் -ஆகிய ஐந்தும் தத்வ த்ரய விவரணம்
முமுஷுப்படி –பரந்த படி யாதிருச்சிக்க படி ஸ்ரீ யப்படி-தனி பிரணவம் -தனி த்வயம் -தனி சரமம் —சார ஸங்க்ரஹம் -ஆகிய எட்டும் -ரஹஸ்ய த்ரய விவரணம்
சம்சார சாம்ராஜ்யம் -(அடவி படாவி -காடு-பிரமித்து சாம்ராஜ்யம் என்று எண்ணுகிறோம் )-நவரத்ன மாலை -நவ வித சம்பந்தம் –
பிரபன்ன பரித்ராணம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆகிய ஐந்தும் -ஸம்ப்ரதாயார்த்த விவரணம் –

ஸ்ரீ சானு தாசர் –தேவ ராஜர் –ஆயி ஸ்வாமிகள் –மா முனிகள் -இருவரும் நடுவில் -சந்தித்து -/
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ—ஆழ்வாரோ கிருஷ்ணனோ –எந்தை அவர் மூவரில் யார் –
-விஷமிகள் சொத்தை -அனுக்ரஹிக்க ஆசைப்படுபவர் பொருளை களவாடுகிறேன் பிரமாணம் -ஞானப்பிரான் விக்ரஹம் மட்டும் திரும்பி வாங்கி வாழ்ந்தார் –
நம் ஆயி இவர் -மா முனிகள் –

அவதாரிகை -ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் அருளிச் செய்தது –
சரம அர்த்தம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -பிராமண சாரம்
-சரம சேஷி பிரமேய சாரம் சதாச்சார்யன் -/
தத் சேஷ பூதரே பிரமாத்ரூ சார பூதர் –
தத் சேஷத்வமே சரம ஸ்வரூபம் /
தத் திருவடிகளே சரம உபாயம்
தத் கைங்கர்யமே சரம புருஷார்த்தம்
இதில் விசுவசித்து நிஷ்டை -சரம அர்த்த அபிலாஷைகள் -ஸ்ரீ மதுர கவிகள் தொடக்கி
திரு தகப்பனார் பிள்ளை அளவாக திரு -நா வீறுடையார் -குரு பரம்பரை மூலம் லப்தமான
சரமார்த்த விசேஷத்தை -சர்வ சாரஞ்ஞரும் -உஜ்ஜீவிக்கும் படி லோகாச்சார்யார் பிள்ளை –
நம்பிள்ளை அனுக்ரஹத்தால் பிறந்த பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்கிறார்
பிரபல பிரதானமான வேதம் -கர்ம பாகத்தை விட ப்ரஹ்ம பாவம் பிரபலம் -சாரம் –
அத்தை பற்ற ப்ரஹ்ம நிஷ்டை பிரதிபாத்யமான வசனம் சாரம்
சர்வ விசேஷண விசிஷ்ட ப்ரஹ்மம் விட விசேஷயமான ப்ரஹ்மம் பிரமேய சாரம்
அத்தைப்பற்ற சுலப ப்ரஹ்மம் விசேஷம் பிரமேய சாரம்
சித்த ஸாத்ய நிஷ்டர் -சாத்தனாந்தர நிஷ்டரை விட –
சரம உபாய நிஷ்டர் பிரமாத்ரூ சார பூதர்
ஒன்பது பிரகரணங்கள்
சாரார்த்த பிரபந்த அதிஷ்டித்தை -முதல் நான்கு ஸூ த்ரங்கள் /ஐந்து முதல் -22-வரை –முதல் பிரகாரணம் -புருஷகார வைபவம்
அடுத்து இரண்டாவது உபாய பிரகரணம் –23-முதல் -114-ஸூ த்ரங்கள் வரை
-115–141-ஸூத்ரங்கள் மூன்றாவது – உபாயாந்தர தியாக ஹேது பிரகாரணம் தோஷங்களை சொல்லும்
நான்காவது -142 -242 -அளவாக சித்த சாதன நிஷ்ட வைபவம் பிரகரணம் –
-243–307-ஸூ த்ரங்கள் பிரபன்ன தினசரியா பிரகரணம் ஐந்தாவது -கீழே உறுதியை சொல்லி நடக்கும் முறை இதில்
-308–320-ஸூ த்ரங்கள் -சதாசார்ய லக்ஷணம் பிரகரணம் -ஆறாவது
-321–365-ஸூ த்ரங்கள் ஸச் சிஷ்யர் லக்ஷண பிரகரணம் -ஏழாவது
-366–406-ஸூ த்ரங்கள் நிர்ஹேதுக தயா பிரகரணம்-எட்டாவது -சம்பந்தம் பொது –
இறுதியில் -407–463-சரம ப்ராப்ய ப்ராபக பிரகரணம் –

————-

மா முனிகள் அருளிச் செய்த – அவதாரிகை

சகல வேத சந்க்ரஹமான திரு மந்த்ரத்தில் -பத த்ரயத்தாலும் -பிரதிபாதிக்க படுகிற
ஆகாரத்ரயமும் –சர்வாத்ம சாதாரணம் ஆகையாலே -யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண -என்கிற
நித்ய சூரிகளோபாதி-சுத்த சத்வமான பரம பதத்தில் -நித்ய அசங்குசித ஞானராய் கொண்டு –
நிரந்தர பகவத அனுபவ ஜனித-நிரதிசய-அநந்த த்ருப்தராய் இருக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க செய்தேயும் –

சகல -ச கலா -மஹா லஷ்மி உடன் கூடி உள்ள திருமால் -/ க ப்ரஹ்மம் -ல வாங்கிக் கொடுக்கிறாள் ஜீவர்களுக்கு -ஸ்வஸ்தி வாசகம்
கலைகள் உடன் சேர்ந்த வேதம் என்றுமாம் -விடப்பட்ட அனைத்தும் வேதத்தில் திருமந்திரத்தில் உண்டே –
கலையுடன் கூடிய திருமந்திரம் வேத சாரம் ‘
சரம ஸ்லோகம் கலை /ச த்வயம் கூடி உள்ளதால்/ வேத ஸங்க்ரஹம் திரு மந்த்ரம் -ரஹஸ்ய த்ரயம் என்றுமாம் –
சரம ஸ்லோக ஸங்க்ரஹம் த்வயம் அதின் ஸங்க்ரஹம் திருமந்திரம் –
அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் -ஆகார த்ரயம் -அனைவருக்கும் பொது
சகலாத்ம சாதாரணம் -என்று சொல்லாமல் சர்வாத்ம சாதாரணம் என்றது பிரமாணங்கள் சப்தத்தின் படி –அனைவரும் ஸ்வா பாவிக தாச புதர்கள் –
யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண-மந்த்ர த்ரஷ்டாக்கள் நித்யர்கள் -போலே யோக்யதை யுடைய கனம் சொல்லி –
முக்தர்களை த்ருஷ்டாந்தம் சொல்லாமல் -அவன் திரு உள்ளம் இப்படியே நினைக்கும் -இதுவே பிராப்தம் நமக்கு –
நித்யம் -கால பரிச்சேத ராஹித்யம் -நிரங்குச விஷய பரிச்சேத ராஹித்யம்-

அநாதி மாயயா சூப்த–அஜம் அனித்ரம் அஸ்வப்னம் அத்வைதம் — -என்கிறபடி– தில தைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுணத் துரத்யய அநாதி
பகவன் மாயா திரோஹித ஸ்வ பிரகாசராய்-அநாத்ய அவித்யா சஞ்சித அநந்த புண்ய அபுண்ய கர்ம அநு குணமாக –

கத்ய த்ரய ஸ்ரீ ஸூ க்திகளை எடுத்துக் காட்டி -ஸ்ரீ -வசன பிரசுர பூஷணம் –தானே –
மறைக்கப்பட்ட ஆத்மஞானம் -தேஹாதி விலக்ஷணன் என்கிற -அறிவும் இல்லாமல் தர்ம பூத ஞானமும் மறைக்கப் பட்டு

சூரா நர திர்யக் ஸ்தாவர யோநிகள் தோறும் –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய்மொழி -2-6-9-
பிறந்த பிறந்த ஜன்மங்கள் தோறும் –தேக ஆத்மா அபிமானமும் -ச்வாதந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும்-ஆகிற
படு குழிகளில் விழுந்து -தத் அநு குண சாத்திய சாதனங்களிலே மண்டி –

அசித் அவிசேஷ -அசித்துக்கு அருகில் ஒட்டிக் கொண்டு அசித்தே சங்கை கொண்டு -அசித்து தான் என்று எண்ணி -தேவோஹம் –
தேஹாத்ம அபிமானம் -வந்து -ஸ்த்ரீ அன்னம் போன்றவை சாத்தியம் என்று எண்ணி -அர்த்தம் சாதனம்
ஸ்வா தந்தர்யம் -ஸ்வர்க்காதிகள் சாத்தியம் -அதுக்கு சாதனம் யாகாதிகள் -ஜ்யோதிஷ்டம் போல்வன
அந்நிய சேஷத்வம் -தேவதாந்த்ர உபாசித்து தத் சாயுஜ்யம் அடைய நினைக்க /–ஆகிய மூன்று படு குழிகள்

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை –திரு விருத்தம் -95-ஏறிட்டுக் -கொண்டு – –
ப்ராப்த சேஷியாய் -பரம ப்ராப்ய பிராபக பூதனாவன் பக்கல் அத்யந்த விமுகராய் –
கர்ப்ப ஜன்ம பால்ய யௌவன வர்த்தக மரண நரகங்கள் ஆகிற அவஸ்தா சப்தகத்திலே நிரந்தர
விதத விவித நிரவதிக துக்கங்களை அநு பவித்து திரிகிற இஸ் சம்சாரி சேதனரிலே-
ஆரேனும் சிலர்க்கு -ஜாயமான கால பகவத் கடாஷ விசேஷத்தாலே–

மது சூதனன் –கடாக்ஷத்துக்கு உபயோகியான ஞானாதி ஷட் குணங்கள் -பகவத் -/விசேஷ கடாக்ஷம் -நிர்ஹேதுகம் –
ரஜஸ் தமஸ்கள் தலை மடிந்து -சத்வம் தலை எடுத்து -மோஷ ருசி உண்டானாலும்–உம்மைத் தொகை-இது –
ஆழ்வான் பள்ளியில் ஓதின ப்ராஹ்மணர் ஜயமான கடாக்ஷம் இல்லாமல் -சர்வசக்தரான தேவரீருக்கு முடியாதோ என்ன –
பிள்ளைக்கு ஜயமான கடாக்ஷம் செய்து அருளி அவ்வழியால் இவனுக்கு செய்து அருளினார் என்கிற ஐதிக்யம் –
பிரார்த்தித்து பெறுவதே புருஷார்த்தம் -என்பதால் -/ருசி வளர்ந்து பக்குவம் ஆக வேண்டுமே –
ஸ்ரீ வசன பூஷண பிரபந்தம் அறிந்து பக்குவம் பட வேண்டுமே -என்றவாறு

தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அவை தம்மை சாஸ்திர முகத்தாலே அறிய பார்க்கும் அளவில் -சாஸ்த்ரங்களில்
தலையான வேதமானது –அநந்தா வை வேதா -என்கிறபடி –
அனந்தமாய்-ஸ்வார்த்த நிர்ணயித்தில் -சர்வசாகா ப்ரத்யய நியாயாதி சாபேஷமாய் இருக்கையாலே –
அல்ப மதிகளுக்கு அவஹாகித்து அர்த்த நிச்சயம் பண்ண அரிதாகையாலும்-
அனந்த வேத பாரகராய் -ஸ்வ யோக மகிம சாஷாத்க்ருத பராவர தத்வ விபாகரான –
வ்யாசாதி பரமரிஷிகளாலே -ப்ரணீதங்க ளாய்-வேத உப ப்ருஹ்மணங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணங்களிலும்
சார அசார விவேக சதுரர்க்கு ஒழிய -தாத்பர்யாம்சம் தெரியாமையாலும் –

சாரம் பகவத் வைபவம் தத் ஆராதனாம் -அசாரம் அந்நிய வைபவம் –
தத் ஆராதனா –சர்வ நமஸ்காரம் கேசவ கச்சதி எங்கும் கும்பீடு கொள்ளலாம் என்பார் –
பாஷாண்டிகளாக கலியுகத்தில் என்றதே ஸ்ரீ மத பாகவதம் –

அவை போல் அன்றிக்கே சம்சார சேதனோ உஜ்ஜீவன காமனான சர்வேஸ்வரன்-தானே ஆச்சார்யனாய் –-சத்வாரமாக இல்லாமல் –
வெளிப்படுத்தின சகல வேத சாரமான ரஹச்ய த்ரயமும் -அதி சங்கரக தயா அதி கூட அர்த்தங்கள் ஆகையாலும் –
மறைந்துள்ள அர்த்தங்கள் உண்டே –

பகவதாகச்மிக கடாஷ விசேஷத்தாலே–அகஸ்மாத் யாதிருச்சிக்கமாக நிர்ஹேதுக -விசேஷ கடாக்ஷத்தால் –மயர்வற மதி நலம் அருளப் பெற்று –
சகல வேத சாஸ்திர தாத்பர்யங்களையும் –கரதலாமலகமாக சாஷாத்கரித்த பராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்கள் அருளி செய்த
திராவிட வேத– தத் அங்க –உபாங்களான திவ்ய பிரபந்தங்களும்–
திவ்ய ஞான மூலமாக கொண்டு பிறந்த பிரபந்தங்கள் -திவ்ய ஞானம் -நிர்ஹேதுக கிருபையால் பெற்றது அன்றோ –
வேதம் அங்கம் உப அங்கம் போலே அன்றோ இவையும் –
அளவிலிகளால் அர்த்த தர்சனம் பண்ண போகாமையாலும் –

ருசி பிறந்த சேதனர் இழந்து போம்படி இருக்கையாலே –ஆழ்வாருடைய நிர்கேதுக–பகவத் கடாக்ஷத்தில் வியாவருத்தி –
கடாஷ லப்த திவ்யஞானரான நாதமுனிகள் தொடக்கமாக-
பன்னீராயிரம் உரு -பராங்குச நம்பி -கண்ணி நுண் சிறுத் தாம்பு- இருக்க நிர்ஹேதுகம் என்பான் என் என்னில் –
ஆயிரம் மட்டும் இல்லாமல் அகில தர்சன விசேஷமும் -திவ்ய சஷூஸ் அருளி –
ரஹஸ்ய த்ரய அர்த்தம் -எம்பெருமானார் பவிஷ்யாச்சார்யா விக்ரஹமும் அருளி
சத் சம்ராதாய சித்தராய்-சகல சாஸ்திர நிபுணராய் -பரம தயாளுக்களான–ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அஸஹிஷ்ணுக்கள் —
பூர்வாச்சார்யர்கள் அந்த வேதாதிகளில் அர்த்தங்களை சங்க்ரகித்து மந்த மதிகளுக்கும் சூக்ரகமாம் படி
பிரபந்தீகரித்தும் -அதுக்கு மேலே – உபதேசித்தும் போந்தார்கள் –

அப்படியே சம்சாரி சேதனர் இழவு சஹிக்க மாட்டாத பரம கிருபையாலே –
தத் உஜ்ஜீவன அர்த்தமாக தாமும் பல பிரபந்தங்கள் அருளி செய்த பிள்ளை லோகாச்சார்யர் ஆச்சர்ய பரம்பரா
ப்ராரப்தங்களான வர்த்தங்களில் -அவர்கள் தாங்கள் கௌரவ அதிசயத்தாலே -ரஹச்யமாய் உபதேசித்து போந்தமையாய் –
அருமை பெருமைகளை பற்ற-அருமை சூஷ்மம் பெருமை மஹத்வம் – இதுக்கு முன்பு தாமும் பிரகாசிப்பியாமல் அடக்கி கொண்டு போந்தவையுமான அர்த்த
விசேஷங்கள் எல்லாத்தையும் –பின்பு உள்ளாறும் இழக்க ஒண்ணாது என்கிற தம்முடைய க்ருபா அதிசயத்துக்கு மேலே –
பெருமாளும் ஸ்வப்பனத்திலே திரு உள்ளமாய் அருளுகையாலே –ஸ்ரீ வசன பூஷணம் ஆகிற இப் பிரபந்த முகேன
வெளி இட்டு அருளுகிறார் –

முன்பே பேர் அருளாள பெருமாள்-கிருபா மாத்திரை ப்ரசன்னாசார்யர்களையும் அனுக்ரஹிப்பதால் பேர் அருளாளர் -என்ற திரு நாமம் –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையால் மணர்பாக்கத்தில் இருப்பார் ஒரு நம்பியாரை -இவரும் ஒரு அர்ச்சகர் ஸ்வாமி -திருச்சானூர் கைங்கர்யம் –
பிராட்டிக்கு செய்யும் கைங்கர்யம் காரணமாக விசேஷ கடாக்ஷம் – விசேஷ கடாஷம் பண்ணி அருளி
-தஞ்சமாய் இருப்பன சில அர்த்த விசேஷங்களை
தாமே அவர்க்கு ஸ்வப்பன முகேன அருளி செய்து -நீர் போய் இரண்டு ஆற்றுக்கு நடுவே வர்த்தியும் -இன்னமும் உமக்கு
இவ் அர்த்தங்கள் எல்லாம் விசதமாக நாம் அங்கே
சொல்லுவோம் என்று திரு உள்ளமாய் அருளுகையாலே –
அவர் இங்கே வந்து-ஸ்ரீ ரெங்கம் வந்து – பெரிய பெருமாளை சேவித்து கொண்டு -தமக்கு முன்பே அங்கு அருளி செய்த அர்த்தங்களையும்
அசல் அறியாதபடி அனுசந்த்தித்து கொண்டு -ஏகாந்தமான தொரு கோவிலிலே வர்த்தியா நிற்க செய்தே –
பல மண்டலப் பெருமாள் என்ற காட்டு அழகிய சிங்கர் கோயிலிலே –
தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கமான முதலிகளும் தாமுமாக பிள்ளை–பிள்ளை லோகாச்சார்யார் – ஒருநாள் அந்த கோவிலிலே
யாத்ருச்சிகமாக எழுந்து அருளி -அவ்விடம் ஏகாந்தமாய் இருக்கையாலே -ரஹச்யார்த்தங்களை
அவர்களுக்கு அருளி செய்து கொண்டு எழுந்து அருளி இரா நிற்க -அவை தமக்கு பேர் அருளாள பெருமாள்
அருளி செய்த அர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே -அவர் போரவித்தராய் உள்ளின்றும் புறப்பட்டு வந்து
பிள்ளை ஸ்ரீ பாதத்தில் விழுந்து –அவரோ நீர் -என்ன -ஆவது என் -என்று பிள்ளை கேட்டு அருள -பேர் அருளாள பெருமாள்
தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியையும் -இத் தேசத்தில் போர விட்டு அருளின படியையும் –
விண்ணப்பம் செய்ய கேட்டு -மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்து அருள -அவரும் அங்குத்தைக்கு அந்தரங்கராய்
வர்த்திக்கிற நாளிலே -பெருமாள்–அரும் பதத்தில் பெரிய பெருமாள் என்பர் – அவருக்கு ஸ்வப்பனத்திலே இவ் அர்த்தங்கள் மறந்து போகாதபடி
அவற்றை ஒரு ப்ரபந்தம் ஆக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும் என்று திரு உள்ளமாக –
அவர் இப்படி பெருமாள் திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய -ஆனால் அப்படி செய்வோம் என்று
திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் ப்ரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே-
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப் போலே –
பூர்வாச்சார்யர்கள் உடைய வசன பிரசுரமாய் அநு சந்தாதாக்களுக்கு ஔஜ்வல்யகரமாய் இருக்கையாலே
இதுக்கு வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று-

—————–

இதுக்கு திருமழிசை அண்ணாவாப்பங்கார் ஸ்வாமிகளின் அரும்பத விளக்கம்
இங்கே சமாக்யையை விவரிக்கிறார் -ரத்ன பிரசுரமான -என்று தொடங்கி -திருநாமம் ஆயத்தகு -என்னும் அளவாக –
ரத்னம் ச தத் பூஷணம் ச ரத்ன பூஷணம் என்று கர்ம தாரயனை ஆஸ்ரயிக்கும் அளவில் கனக -கந்தலே நைவ ரத்னம் உன்மீல்யதே -என்கிறபடியே
பொன் சேராத ரத்னம் ஒளி யுடைத்தல்லாமையாலே அது பூஷணமாகா மாட்டாது -என்று
கர்ம தாரயனை விட்டு -ரத்னை ப்ரசுரம் ரத்ன ப்ரசுரம் ரத்ன பிரசரம் ச தத் பூஷணம் ச ரத்ன ப்ரசுர பூஷணம் -என்றாய்
சாக பிரிய பார்த்திவ சாக பார்த்திவ -என்றுமா போலே உத்தர பத லோபத்தாலே ப்ரசுர பதம் லுப்தமாய் ரத்ன பூஷணம் என்கிறது –
அதில் பிராஸுர்யத்துக்கு ஸ்வ ஆஸ்ரயம் பிரதி விசேஷ்ய தயா பான ஸ்தானத்தில் ஸ்வ ஆஸ்ரய ஸாமாநாதி கரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றும் என்னும் நியமத்தாலே
இங்கும் பிராஸுர்ய ஆஸ்ரய ரத்ன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றக் கடவது –
ரத்ன பிரசுர பூஷணத்தில் ரத்ன விஜாதீயம் தான் பொன்னே யாகை யுசிதம் என்று திரு உள்ளம் பற்றி
-ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப்போலே -என்று அருளிச் செய்கிறார்

சப்தத்துக்கு விஜாதீயமாவது அர்த்தமாய் -அர்த்தம் அற்பமாய் -சப்தம் பிரசுரம் என்று சித்தித்ததாக பிரசங்கிக்கும் ஆகையாலே
வசன பூஷணம் என்ற திரு நாமத்தில் வசன சப்தம் பூர்வாச்சார்ய வசனமாய் –
பிராஸுர்யம் தத் அபேக்ஷயா விசேஷ்யமாய்த் தோற்றும் அளவிலே
பூர்வாச்சார்ய வசன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ பிரதி யோகிகமாய்த் தோற்றக் கடவது
அதில் பூர்வாச்சார்ய வசன விஜாதீயமாவது ஸ்வ வசனம்
ஸ்வ வசனம் ஸ்வல்பமாய் ஓர்வாச்சார்ய வசனம் பிரசுரமாய் இருக்கை
ஸ்வ கபோல கல்பிதத்வ சங்கா வ்யுதசன த்வாரா ப்ராமாண்யத்துக்கு அத்யந்த அவஸ்யகம் என்று திரு உள்ளம் பற்றி அருளுகிறார் -பூர்வாச்சார்யர்களுடைய வசன பிரசுரமாய் -என்று

————–

கர்த்ரு வைலக்ஷண்யம் -பிரபந்த வைலக்ஷண்யம் -அனுசந்தாக்களுக்கு பூஷணம்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் விசதமாக சொல்லுவதால் விஷய வைலக்ஷண்யம் /
முக்கிய பிரயோஜனம் உஜ்ஜீவனம் -பிரதான பலன் -தத்வ ஹித பிரயோஜன விசதமான ஞானம் அவாந்தர பலம் –
ஆகார த்ரய ஞானம் அவாந்தர பலம் -உஜ்ஜீவனம் அடைய காமம் வளர்க்கும் –

அனைத்தும் த்வயார்த்தம் -ஆறாகவும் எட்டாகவும்- ரஹஸ்ய த்ரயம்-ஒன்பதாகவும் த்வயத்தை பிரிப்பார்கள் –
அகண்ட நமஸ் சகண்ட நமஸ் -வைத்து -8 -/9-
நான் எனக்கு அறியேன் அல்லேன்-கைங்கர்யம் ஆனந்தம் என்னுடையது அல்ல – -தொழுகை –
அஷ்ட ஸ்லோகி -த்வயம் ஆறு பதமாயும் பத்து அர்த்தம் பட்டர் -கைங்கர்ய பிரார்த்தனை -அடியேன் ஆக வேணும் –
பிரார்த்தனை சப்தம் தருவித்து கொள்ள வேண்டும் –

இப் பிரபந்தத்தில் —சூரணை- 1- வேதார்த்தம் அறுதி இடுவது -என்று தொடங்கி-சூரணை – 4-
அத்தாலே அது முற்பட்டது -என்னும் அளவாக வஷ்யமநார்த்த நிர்ணயக பரமான நிர்த்தேசம்
பண்ணுகிறது ஆகையாலே –பிரபந்த உபோத்காதம் –

இதிஹாச ஸ்ரேஷ்டம் -5–என்று தொடங்கி
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -22–என்னும் அளவும் சாபராத சேதனருடைய
சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து ரஷிப்பிக்கையே ஸ்வரூபமான புருஷகார வைபவமும்
அந்த புருஷகாரமும் மிகை யாம் படி யான உபாய வைபவமும் சொல்கிறது –
ஞான பாலாதி கொண்டே யாரும் தூண்டாமல் ஸ்ருஷ்டித்து அருளினான் -நிராங்குச ஸ்வாதந்த்ரன் இச்சைப்படி செய்வான்
-இத்தையே புருஷகாரம் மிகை என்னும் படி சித்த உபாய வைலக்ஷண்யம் —
அபராத அனுகுண-தண்ட அபாய விசேஷம் பகவதீய சங்கல்பம் ஏற்படுத்துவதே சஹிப்பிப்பது–பெருமையை சொல்லி -ஷமையின் ஏற்றம் சொல்லி –
அதுக்கும் மேலே -அழகை காட்டி – க்ஷமை வாத்சல்யம் தூண்டி விட்டு / தேவ்யா காருண்ய ரூப்யா -/புருஷனை புருஷனாக ஆக்கி -/
பூர்ணன் ஆக்கி ஷமையால்-/கொடுப்பவனாக ஆக்கி -அலம் புரிந்த நெடும் தடக்கை – / ஜீவனையும் புருஷனாக்கி -/
ஆபீமுக்கியத்துடன் போக வைக்கிறாள் /பரஸ்பர லாபமாக்கி சத்தா லாபம் /பிராட்டி உபாயத்துக்கு உபாயம் என்றவாறு –

ப்ரபத்திக்கு –23-என்று தொடங்கி ஏகாந்தீவ்ய பதேஷ்டவ்ய –79-என்னும் அளவு இவ் உபாய வரண ரூப
பிரபத்தியினுடைய தேச காலாதி நியம அபாவம் -விஷய நியமம் -ஆஸ்ரய விசேஷம் –
இத்தை சாதனமாக்கில் வரும் அவத்யம் -இதன் ஸ்வரூப அங்கங்கள் -முதலானவற்றை சேர சொல்லி
பிரபத்யவனே உபாயம் என்று சாதிக்கையாலே –பூர்வோக்த உபாய சேஷம் ஆகையாலே -உபாய பிரகரணம் –

உபாய வைபவ பிரகரணம் -இதில் -71-முதல் -79 -பிராசங்கிகம் –
உபாயமாக இருக்க வேண்டும் பிரார்த்தனா ரூபமே -/
பிரபத்தி இரண்டு வகை கீதையில் ஸ்வ தந்த்ர பிரபத்தி -அங்க பிரபத்தி -பிராயச்சித்த ஸ்தானத்தில் /
இங்கு உபாய வரணம் -வரித்தல் -இசைத்தல் பிரார்த்தித்தல்–/பல பிரபத்தி ஓன்று -உபாய பிரபத்தி வேறே -/
பக்தி பிரபத்தியே பலமாக இருக்குமே -ருசி வளர பக்தி -சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாழ்கள் சார்வு/ சர்வேஸ்வரன் உபாயம் -/
பலம் அனுபவம் செய்ய யோக்யதை கொடுக்க வேண்டும் -போஜனத்துக்கு சுத்து போலே –
இதில் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்னும் அளவும் பிரதான பிரமேயம் –
மேல் என்னுமளவு-இவ் உபாயத்தை கொண்டு உபேயத்தை பெருவானொரு சேதனனுக்கு உபாய உபேய
அதிகார பிரதான அபேஷிதங்களையும்-(சக்தி-பிராட்டி சக்தியை விட்டாள்
லஜ்ஜை இரு கையும் விட்டேனோ திரௌபதியை போலே ஸ்வ வியாபாரம் தொலைத்து )-(ப்ரேம்ம் அவா ) )
உபாயாந்தர த்யாக ஹேதுக்களையும்—மற்றும் த்யாஜ்ய உபா தேயங்களாய்
உள்ளவற்றையும் விஸ்தரேண சொல்லுகையாலே அதிகாரி நிஷ்டாக்ரமம் சொல்லுகிறது –-80-தொடக்கி -307-வரை –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது–308-என்று தொடங்கி உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –365-வரை
என்னும் அளவாக ஹித உபதேச சமயத்தில் -ஸ்வ ஆச்சார்ய பாரதந்த்ர்யாதிகளான-சதாசார்யா லஷணம்-
( தன் ஆச்சார்யருக்கு திருவடி ஸ்தானமாக நினைக்க வேண்டுமே )
சச்சிஷ்ய லஷணம் -தத் உபயர் பரிமாற்றம் -தீ மனம் கெடுத்த ச்வாச்சார்ய விஷயத்தில் சிஷ்யன் உபகார
ஸ்ம்ருதி க்ரமம்- இவற்றை சொல்லுகையாலே சித்த உபாய நிஷ்டனான அதிகாரி யினுடைய ச்வாச்சார்ய
அநு வர்த்தன க்ரமம் சொல்லுகிறது ( பிரசாத ஜனக வியாபாரங்கள் )

-ஸ்வ தோஷ அநு சந்தானம் பய ஹேது-366- -என்று தொடங்கி
நிவர்தக ஞானம் அபய ஹேது -406–என்னும் அளவாக இவ் அதிகாரிக்கு அத்வேஷம் தொடங்கி –
ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தமாக உண்டான பேறுகளுக்கு எல்லாம் ஹேதுவாய்-
ஸ்வ கர்ம பய நிவர்தகமான –பகவன் நிர்கேதுக க்ருபா பிரபாவம் சொல்லுகிறது –

ச்வதந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே -407–என்று தொடங்கி மேல் எல்லாம் மிக்க வேதியர்
வேதத்தின் உள் பொருளான சரமபர்வ நிஷ்டையை வெள்ளியதாக சொல்லுகிறது
(ஆச்சார்ய விசிஷ்ட வேஷமான பெருமாளை பற்றுவதே சரம பர்வ நிஷ்டை–
பரதந்த்ரனாக இருந்து மோக்ஷ பிரதானம் -பரதந்த்ர உபாயம் வேண்டும் -உபாயமும் அவனே -இதுக்குத் தானே ஆச்சார்ய அவதாரம் –
யசோதா பரதந்த்ரன் போலே இதுவும் இச்சையால் ஸ்வா தந்த்ரத்துக்கு குறை இல்லாமல் அவதாரம் – )

-வேதார்த்தம் அறுதி இடுவது என்றுதொடங்கி இவ் அர்த்தத்திலே–ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – தலைக் கட்டுகையாலே
இப் பிரபந்தத்தில் சரம பிரகரண ப்ரதிபாத்யமான அர்த்தம் வேத தாத்பர்யம் என்னும் இடம்
சம்ப்ரதிபன்னம் –

ஸ்ரீ கீதைக்கு சரம ஸ்லோகம் போலே இறே இப் பிரபந்தத்துக்கு சரம பிரகரணம் –
அங்கு சாத்திய உபாயங்களை உபதேசித்து கொண்டு போந்து -ச்வாதந்த்ர்ய பீதனான அவனுக்கு
அவற்றை தள்ளி சித்தோ உபாயம் காட்டப் பட்டது –
இங்கு சித்த உபாயத்தை சொல்லி கொண்டு போந்து ஈஸ்வர ச்வாதந்த்ரத்துக்கு அஞ்சினவனுக்கு
பிரதமபர்வத்தை தள்ளி சரம பர்வம் காட்டப் பட்டது –(ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பரதந்தர்ய ஆச்சார்ய விசிஷ்ட ப்ரஹ்மம்-
புருஷகாரம் இருக்கும் பொழுது இதுக்கு அஞ்சுவான் என் என்னில் -அரவிந்த மன காந்தை அன்றோ இவள் –அவன் லீலையை தடுக்க மாட்டாள்-
சம்சாரியை திருத்தி வேண்டுமானால் என்னையும் திருத்தி மோக்ஷம் பிரதானதுக்கத்தானே ஆச்சார்ய அவதாரம் -ப்ரீதிபரமான தாய் சேதனன்
தப்பாக ஐஸ்வர்யாதிகளைக் கேட்டாலும் கொடுப்பாள் -ஆச்சார்யர் தெளிவாக இது அல்பம் அஸ்திரம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லலாமே –
ஹித பரர் அன்றோ-அத்யந்தம் பிரிய தமர் -கொடு உலகம் காட்டேல் -லீலா விபூதி பிரசங்கமே பொறுக்காத ஆச்சார்யர் அன்றோ /
நின் கண் வேட்கை எழுவிப்பன் என்று -பராங்குச பரகால நாத யமுனா யதிவராதிகள்–திருவாய்ப்படியில் வெண்ணெய் போலே ப்ரியதமராய் இருப்பார் —
ந சம்சய அஸ்தி சாஸ்திரம் பக்த பரிசர்யா-சொல்லுமே -தூது விடும் பறவைகள் ஆழ்வாருக்கு முன்னே அவனை காணுமே –
உடையவர் -இடம் அனைத்தையும் சோதி வாய் திறந்து உபய விபூதி சாம்ராஜ்யம் அருளினான் )
ஆக இப்படி ஆறு பிரகரணமாய் ஆறு அர்த்த பிரதிபாதகமாய் இருக்கும் –

ஒன்பது பிரகரணமுமாய்-ஒன்பது அர்த்த பிரதிபாதகமாயுமாய் இருக்கும் என்னவுமாம் –
அந்த பஷத்திலும் பிரதம பிரகரணம் பூர்வவத் –முன்பு போலே இங்கும் -புருஷகார வைபவம் –

மேல் -பிரதிபத்திக்கு -23–என்று தொடங்கி -பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும்-114- -என்னும் அளவும் –
பூர்வ பிரகரண உக்தோபாய சேஷம் ஆகையால் உபாய பிரகரணம் –புருஷகார உபாய வைபவம் இது என்றவாறு

ப்ரபாந்தர பரித்யாகத்துக்கு-115- -என்று தொடங்கி -ஆகையாலே சுக ரூபமாய் இருக்கும் –141-
என்னும் அளவும் உபாயாந்தர தோஷ பிரகரணம் –
இப் பிரகரணத்தில் -பிரபத்தி உபாய வைலஷ்ண்ய கதனம் ப்ராசங்கிகம்-

இவன் அவனை பெற நினைக்கும் போது -142–என்று தொடங்கி
இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242-என்னும் அளவும்
சித்தோ உபாய நிஷ்டருடைய வைபவ பிரகரணம் –

இப்படி சர்வ பிரகாரத்திலும்-243- -என்று தொடங்கி –
உபேய விரோதிகளாய் இருக்கும் -307–என்னும் அளவும் பிரபன்ன தினசரியா பிரகரணம் –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது -308–என்று தொடங்கி –
சேதநனுடைய ருசியாலே வருகையாலே-320- -என்னும் அளவும் சதாச்சார்ய லஷண பிரகரணம் –

சிஷ்யன் எனபது -321–என்று தொடங்கி -உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -365-என்னும் அளவும்
சச் சிஷ்ய லஷண ப்ரகரணம் –

ஸ்வ தோஷ அநு சந்தானம் -366–என்று தொடங்கி -நிவர்த்தாக ஞானம் அபய ஹேது –406-
என்னும் அளவும் பகவத் நிர்கேதுக விஷயீகார பிரகரணம் –

ச்வதந்த்ரனை -என்று தொடங்கி-407- மேலடங்க-463-வரை – சரம ப்ராப்ய பிராபக பிரகரணம் –

இவ் இரண்டையும் பற்ற இறே -பேறு தருவிக்குமவள் தன்பெருமை -திரு மகள் தன் –
என்கிற தனியன்கள் இரண்டும் அவதரித்தது –
ஆகையால் இரண்டு பிரகாரமும் அனுசந்திக்க குறை இல்லை-

——————————

ஆய் ஸ்வாமிகள் –
1–சித்த உபாயத்தை -பெருமாளை – வளைப்பிக்கும் புருஷகார வேஷமும் –
2–தத் உந்மிஷித உபாய வேஷமும் –
3–தத் இதர உபாய தியாக புத்தி விசேஷமும் –
4–உபாய சங்க –அஸஹ-சித்த உபாயம் தானே பெருமாள் –நிஷ்டா ஸ்வ பாவம்
5–தன் நிஷ்ட அனுசந்தான நியதி விசேஷம்
6–தத் பிரேத ஆச்சார்ய லக்ஷணம்
7–தன் நிஷ்ட ஸச் சிஷ்ய லக்ஷண
8–தத் பாவ உதய நிர்ஹேதுகத்வ நிரூபண விசேஷமும்
9–தத் ஸ்வரூப அனுகுண சரம ப்ராப்ய ப்ராபக பிரகரணங்கள்
அர்த்த விசேஷ சம்பந்தம் -மந்த்ர த்ரயார்த்தமான -ஸ்வரூப சாதன புருஷார்த்தமான
ஸ்வரூபம் திருமந்திரம் -புருஷார்த்தம் த்வயம் /சாதனம் சரம ஸ்லோகம் -/
சப்தத்ரயம் என்று திருமந்திரம் பிரணவம் -ஸ்வரூபம் /நமஸ் சாதனம் /-நாராயணாயா புருஷார்த்தம் -என்றுமாம் –
இதில் –
ஸ்வரூபம் –நாலாவதும் ஏழாவதும் -அதிகாரி நிஷ்டை ஸ்வரூபம் சொல்லும் நாலாவதில் -ஸச் சிஷ்ய லக்ஷணம் ஏழாவது -சொல்லுமே –
இரண்டு மூன்று ஓன்று- எட்டு சாதனம் –உபாயம் இரண்டாவதில் –தத் அங்கம் -மூன்றாவதில் –
உபாயாந்தரங்களில் தோஷம் அங்கம் என்றவாறு -சர்வ தரமான பரித்யஜ்ய போலே /
தத் சுவீகார அபேக்ஷிதம் -புருஷகார வைபவம் முதல் பிரகரணம் /எட்டாவதில் ஹேது இல்லாத தயை இதுவும் சாதனம் அம்சம்
பிரதம கிருதி ஆச்சார்யனை பற்றி பிராட்டியைப் பற்றி இதர உபாயங்களை விட்டு அவனைப் பற்றுகை – –
ஐந்து ஆறு ஒன்பது புருஷார்த்தம் -விசேஷணம் –சரம பிரபன்ன சரித -தன் நிஷ்டா தினசரி -ஐந்தாவதில் -இதுவும் ப்ராப்யத்தில் அந்தர்கதம்-
ஆறாவதில் ஆச்சார்ய லக்ஷணம் இதுவும் ப்ராப்யத்தில் சேர்த்து -/ஒன்பதில் சரம -ஆச்சார்ய கைங்கர்யம் செய்ய வேண்டுமே –

த்வயார்த்தம் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் ஸமஸ்த பதம் முதல் இரண்டும் –
உத்தம பதம் கிரியா பதம்- பிரபத்யே -மூன்றாவது பிரகரணம்-விட்டே பற்ற வேண்டும் –
சரம ஸ்லோகத்தில் வியக்தமாக சொன்னதை வருவித்து கொள்ள வேண்டும்
ஸ்வீ கார பூர்வ பாவி -பற்றுவதற்கு முன் உள்ள தியாக நிரூபணம் -மூன்றாவதில் –
சதுர்த்த பிரகரணம் –அதிகாரி நிஷ்டை -மற்றவை உபாயமாகாது- இவன் சித்த உபாயம் இரண்டும் வேண்டுமே –
பிரபத்யே -புத்தியால் உறுதி கொள்ளுதல் -புத்யர்த்தம் கத்யர்த்தம் -பிரார்த்தனா கரப்ப விசுவாசம் -/
பஞ்சம சரம பிரகரணங்களால் -சரம சதுர்த்யர்த்தமும் / நிஷ்டா அனுஷ்டான நியதி விசேஷம் -ஐந்தாவதில் -ஆச்சார்யர் பிராப்யம் என்பதே சரம பிரகரணம்
ஆறாவது -சரம நாராயண பதார்த்தம் -சதாச்சார்ய லக்ஷணம் / பிரதம நாராயண திருமந்திரம் / த்வதீய நாராயண பூர்வ வாக்கியம் /
ஏழாவது சரம நார சப்தார்த்தம் -சிஷ்ய லக்ஷணம்
எட்டாவது -ஹேது இல்லாமல் -சம்பந்தத்தால் ஸ்பஷ்டமாகுமே -பஹு வ்ரீஹி சித்தம் -சம்பந்த அனுரூப ரஷக நிரூபகத்வம் –
தத் புருஷன் சொல்லாதது -அது இயற்க்கை -நாமே சென்று ஒட்டிக் கொண்டால் ரஷிக்க வேண்டிய அவசியம் இல்லையே –
அயனம் நாரங்களுக்குள் வந்தால் தான் ரக்ஷணம் சித்தம் –
தன் வஸ்துவை கொடுக்க கடவன் அல்லன் -சரம நமஸ் அர்த்தம்–தன்னது என்று அபிமானம் கூடாதே –
உடல் பொருள் ஆவி எல்லாம் சரீரம் அர்த்தம் பிராணஸ்ஞ்ச சத் குருவிடம் நிவேதியத -ஸ்வர்த்ததா கந்தமும் கூடாதே -பிரபலதர விரோதி
த்வய சரம பிரகாசமாய் இருக்கும் -ஆச்சார்ய பர்யந்தம் த்வயம் என்றவாறு –

சரம ஸ்லோகார்த்தம்
ப்ரபாகாந்த்ர பரித்யஜ்யம் –ச வாசனமாக விட்டு –/ எல்லாம் ஆச்சார்யனே அவதாரண அர்த்தம் /மாம் ஏகம் போலே /ஆச்சர்ய விசிஷ்ட வேஷத்தையே /
மோக்ஷத்துக்கே ஹேது -நிச்சயம் ..இச் -இஷ்யாமி அர்த்தம் தன்னடையே விட்டுப்போம் –
சரண்ய அபிமத தம -சரம சரம ஸ்லோகார்த்தம் -பிரகாசகமாய் இருக்கும் –

வெளித திரு முற்றத்தில் பிள்ளை சரமார்த்தம் அருளிச் செய்யா நிற்க -திருச்சானூர் நம்பியார் –மணப்பாக்கத்து நம்பி —
பிரபந்தீ கரித்த பரம சரம ரஹஸ்யமாயிற்று
சரம பிரபன்ன ஜன சரவண மனன ரசனை போக்ய பூஷணம் ஆயிற்று -யுக்த அர்த்த விஷத்தீகரணம்-யுக்த அர்த்த போதனம்-இது –

——————

இப் ப்ரபந்தம் தான் தீர்க்க சரணாகதியான திரு வாய் மொழி போலே த்வய விவரணமாயிருக்கும்-எங்கனே என்னில்
-திரு வாய் மொழியாலே முதல் மூன்று பத்தாலே உத்தர கண்ட அர்த்தத்தையும் –
(தொழுது எழு-தனக்கே யாக என்னைக் கொள்ளும் ஈதே -ஒழி வில் காலம் எல்லாம்-முதல் மூன்று பத்தாலே உத்தர கண்ட அர்த்தம் )
மேல் மூன்று பத்தாலே பூர்வ கண்ட அர்த்தத்தையும் சொல்லி –
(திரு நாரணன் தாள் -ஆறு எனக்கு -அகலகில்லேன் -இத்யாதி )
மேல் நான்கு பத்தாலும் (கடல் ஞாலம் காக்கின்ற -மணிமாமை குறையில்லை / / உங்களோடு எங்களுக்கு இடை இல்லை /
நங்கள் பிரான் நாரணன் / / அவா அற்று வீடு பெற்ற -) அவ உபாய உபேயோகியான குணங்களையும் –
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும் –
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக பந்தத்தையும் – தாம்
பிரார்த்தித்த படியே பெற்ற படியையும் பிரதிபாதிக்கையாலே –
தத் அநு ரூப அர்த்தங்களை சொல்லி தலை கட்டினாப் போலே –
இதிலும் –
பிரதமத்தில் புருஷகாரத்தையும்
அநந்தரம் உபாயத்தையும்
அநந்தரம் ஏதத் உபாய அதிகாரி நிஷ்டையையும் சொல்லுகையாலே–
பூர்வ கண்ட அர்த்தத்தையும் –
அவ் அதிகாரி நிஷ்டை சொல்லுகிற அளவில்
உபேய அதிகாரி அபேஷிதங்களை சொல்லுகிற இதுக்குள்
உத்தர கண்ட அர்த்தைத்தையும் சொல்லி –
மேல் பிரபந்த சேஷத்தாலும்-தத் உபதேஷ்டாவான ஆச்சார்யன் அளவில்
இவனுக்கு உண்டாக வேணும் பிரதிபத்திய அநு வர்த்தன பிரகாரங்களையும் ––(ஆச்சார்ய ஸேவனம் )
இவனுக்கு மகா விசுவாச ஹேதுவான பகவன் நிர்ஹேதுக க்ருபா பிரபாவத்தையும் ––
( மஹா விசுவாசம் -மயக்கம் -உபாய லகுத்தவம் -அநாதி கால பாப கூட்டங்கள் -பிராப்யமோ மிக ஸீரியது- மூன்றும் காரணம் –
நீக்க அவன் நிர்ஹேதுக கிருபை மட்டுமே )
வாக்ய த்வய உக்தி உபாய உபேய சரமாவதியையும் சொல்லி தலை கட்டுகையாலே-

ஒன்பதர்த்த பிரதிபாதகமான பஷத்திலும் -பூர்வ வாக்யத்தில் -க்ரியாபத உக்தமான
ச்வீகார உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் அல்லது இல்லாமையாலும்-(பிரபத்யே பரித்யாஜ்ய பூர்வகமாகவே இருக்குமே )
திநசர்யையும் அப்பதத்தில் சொல்லப் படுகிற அதிகாரிக்கே உள்ளது ஆகையாலும்-
சதாச்சார்ய லஷணம் த்வய உபதேஷ்டாவான ஆச்சார்யன் படி சொல்லுகிறது-ஆகையாலும் த்வய விவரணமாக நிர்வஹிக்க குறை இல்லை —

இப்படி த்வய விவரணமான இதினிலே த்வயம் -தன்னில் போலே மற்றை ரஹச்யத்வ்ய அர்த்தங்களும் (திருமந்திரமும் சரம ஸ்லோகம் )
ஸங்க்ரஹ ணோத்தங்களாய்-( ஸங்க்ரஹேன – சுருக்கமாக உக்தங்கள் ) இருக்கும் -எங்கனே என்னில் –
அஹம் அர்த்தத்துக்கு என்று தொடங்கி அடியான் -77-என்று இறே -என்னுமளவாகவும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் என்றும் –111-பிரணவ அர்த்தம் சொல்லப் பட்டது –
ஸ்வ யத்ன நிவ்ருத்தி-71- -இத்யாதியாலும் -தன்னை தானே முடிக்கை யாவது -180–என்று தொடங்கி
இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்கிறதுக்கு கீழ் உள்ளதாலும் -நம-சப்த அர்த்தம் சொல்லப் பட்டது –
பர பிரயோஜன பிரவ்ருத்தி –இத்யாதியாலும் உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -291-இத்யாதியாலும்
கைங்கர்யம் தான் பக்தி மூலம் அல்லாத போது -இத்யாதியாலும் த்ருதீய பத அர்த்தம் சொல்லப் பட்டது –

அஞ்ஞானத்தாலே -இத்யாதியாலும் ப்ராபகந்தர பரித்யாகத்துக்கு -115–இத்யாதியாலும்
உபாயாந்தர த்யாகத்தை சஹேதுகமாக சொல்லுகையாலே -தத் த்யாஜ்யதையும் –
த்யாக பிரகாரத்தையும் சொல்லுகிற பத த்வய அர்த்தமும் சொல்லப் பட்டது –(சர்வ தர்மான் பரிதிஜ்ய )
இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதியாலும்
ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு -இத்யாதியாலும் –மாம் ஏகம் சரணம் -என்கிற
பதங்களின் அர்த்தம் சொல்லப் பட்டது –(பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு )
பிரபத்தி உபாயத்துக்கு-134- -இத்யாதியாலே வ்ரஜ -என்கிற ச்வீகார வைலஷண்யம் சொல்லப் பட்டது –
அவன் இவனை –என்று தொடங்கி ச்வதந்த்ர்யத்தாலே வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் -என்னும் அளவும் –( அவன் தானே ஏறிட்டுக் கொண்டது அன்றோ )
சர்வ பாபங்களையும் தள்ளி அங்கீகரிக்கும் ஈஸ்வர ச்வாதந்த்ர்யத்தையும்
க்ருபா பலம் அனுபவித்தே அற வேணும் -என்று பல சித்தியில்
கண் அழிவு இல்லாமையும் சொல்லுகையாலே உத்தர அர்த்தத்தில் அர்த்தம் சொல்லப் பட்டது-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை —–172-202– –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 25, 2017

சூர்ணிகை -171-

ஆக ஈச்வரனே த்ரிவித காரணமும் என்னும் இடம் சாதித்தாராய் நின்றார் கீழ் –
அஜாமேகாம -என்றும்–பிறப்பிலி ஒன்றாக உள்ள பிரகிருதி
சௌர் நாதாய நதவே தீ -என்றும்
த்ரி குணம் தஜ ஜகத யோநிர அநாதி ப்ராபவாபயயமா -என்றும்
அஜோஹயகே -என்றும்-ஜீவனும் பிறப்பிலி ஏக
ஜ்ஞாஜஜௌ தவா வஜா வீச நீ சௌ -என்றும்–இருவரும் பிறப்பிலி அறிந்தவன் அறிவிலி ஈசன் நியமிக்கப்படுபவன்
அஜோ நித்யச சாச்வதோயம் புராண–ஸ்ரீ கீதை -2–20- -இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
நித்தியமாய் இருந்துள்ள அசித்தையும் சித்தியும் ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது தான் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது
அசித்தை பரிணமிப்பிக்கையும்
சேதனனுக்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப்
பண்ணுகையும் –

கீழே ஜகத் காரண பூதனாகச் சொல்லப்பட்ட ஈஸ்வரன்
சேதன அசேதநாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது –
தம பரே தேவே ஏகி பவதி -என்கிறபடியே தன்னோடு அவபிக்தமாய்க் கிடந்து–பிரித்து அறிய முடியாத நிலையில் கிடந்து—
தனித்து பிரகாசிக்காத நிலை முன்பு – தமஸ் சப்த வாச்யமான அசித்தை
ததஸ ஸ்வயம் பூர பகவா நவயகதோ வயஞ்ஜய நதிதம மகா பூதாதி திவ்ருத தௌஜா பராதுரா ஸீத தமோ நுத -என்கிறபடியே
கீழே முன் தன்மை லயம் சொல்லி இங்கு ஏகி பாவம் -ஒன்றாக -தாமஸ் -பாரா தேவதை இடத்து ஒற்றுமை அடைந்தது -ஒன்றாகி விட்டது என்று சொல்லாமல் -ஒன்றி கிடக்கிறது
பரிணாமம் ஆக்கும் வரை ஒன்றி இருக்கும் –
தத்வங்கள் மூன்றும் நித்யம் –சத்தா ஸ்திதி பிறவிருத்திகள் ஈஸ்வர அதீனம்
கீழே பிரளீயதே -பிரளயம் என்றாலே கீழ் நிலையை அடைந்தது -லயம் அடைந்தால் கீழே உள்ள நிலை இல்லை -வார்த்தைப்பாடு பிரளீயதே என்றும்
ஏகி பார்வதி வேதாந்தம் ஜாக்கிரதையாக சொல்லிற்று
ஸ்வ ப்ரே ரண விசேஷத்தாலே ஸ்வ சமாத விபக்தமாக்கி
அநந்தரம்
அஷர அவஸ்ததம் ஆக்கி-மூன்றாவது நிலை இது –
அது தன்னை பின்பு அவ்யவகத அவஸ்த்தம் ஆக்கி-நான்காம் நிலை இது –
அத்தை வ்யக்த சப்த வாச்யமான சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்கள் ஆம் படி பரிணமிப்பிக்கையும் –
அசித விசேஷிதான பிரளய ஸீமநி சமசரத -என்கிறபடியே
கரண களேபர விதுரனாய் -புலன்களும் சரீரமும் இல்லாமல் –
போக மோஷ சூன்யனாய்-
அசித் விசேஷிதனாய் -கிடந்த சேதனனுக்கு
போக ஸ்தானமான சரீரத்தையும்-
போக உபகரணங்களான இந்த்ரியங்களையும்
கொடுத்து
போக மோஷ பாகித்வ -அநர்ஹனாம்படி பண்ணி
முன்பு சங்குசிதமாய்க் கிடந்த ஜ்ஞானத்தின் யுடைய விகாசத்தை பண்ணுகையும் -என்கை
சேதனனுக்கு என்ற இது ஜாதி ஏக வசனம் –

————————————–

சூர்ணிகை -172-

அநந்தரம் ஸ்திதி சம்ஹாரங்களின் யுடைய பிரகாரங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி
பிரதமம் ஸ்திதியினுடைய பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்திதிப்பிக்கை யாவது –
ஸ்ருஷ்டமான வஸ்துக்களில்
பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று
சர்வ ரஷைகளையும்
பண்ணுகை –

ஸ்திதிக்கை யாவது என்னாதே
ஸ்திதிப்பிக்கை யாவது -என்றது -ஸ்திதி யாவது சிருஷ்டி சம்ஹாரங்கள் போலே
கர்த்ரு கதம்–கர்த்தாவே செய்ய வேண்டியது – அன்றிக்கே ரஷணத்துக்கு
கர்மீபவிக்கிற வஸ்துகதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
என்னை ரஷிக்கப்போகிறார்-கர்மகதம் அன்றோ

ஆத்ம ஞானம் வளர்த்து – -வாழ வைத்தல் -வாழ்வித்தார் என்றவாறு –
நம் இசைவால் தானே வாழவைக்க முடியும் -இசைவித்துஎன்னை உன் தாளிணைக் கீழ் இருத்துமம் அம்மான் அன்றோ –
எந்தன் கருத்தை உற வீற்று இருந்தான் -இருத்திடும் வியந்து
மூன்று ஜுரம் ஆழ்வாருக்கு –பத்துடை அடியவர்க்கு எளியவன் -மூன்று தத்துக்கு பிழைத்த குழந்தை –வாழ்ந்தார் சொல்ல மாட்டோம் / படைப்பித்தார் சொல்ல வேண்டாம் –
பொன்னடிக்கீழே வியந்து இருத்தும் என்று அன்வயம் -ஆச்சர்யப்பட்டு -திமிரிக் கொண்டு நான் இருக்க
என்னை இருத்தி வைத்தது எனக்கு வியப்பு -ஆழ்வார் -இதுவே ஸ்துதிப்பிக்கை -இசைந்தால் தான் ரஷிக்க முடியும் –

ஸ்ருஷ்டமான இத்யாதி -அதாவது -தத் த்ருஷ்ட்வா -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே
பயிருக்கு ரஷகமாய்க் கொண்டு அனுகூலமாய் நிற்கும் நீர் நிலை போலே ததேவ அனுபிராவிசத் என்கிறபடியே
தத் ரஷண அனுகூலமாக உள்ளே பிரவேசித்து நின்று
தத் தத் வஸ்து அனுகுணமான
சர்வ ரஷைகளையும் பண்ணுகை -என்கை
அனுபிரவேச சப்தத்துக்கு அனுகூலதயா பிரவேசம் இவர்க்கு இவ்விடத்தில் விவஷிதம் –
அனுபிரவேசம் -பின் தொடர்ந்து போனால் தானே அனு சப்தம்
அநந்தரம் சம்ஹார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
-உடம்பு ஊசி மருந்து போலே -அசேதனம் சேதனம் ப்ரஹ்மம் என்பது இல்லை -ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றுமே இல்லையே
அனு என்றது அனுகூலமாய் இருக்கை -பயிருக்கு தண்ணீர் போலே என்றவாறு –
சதா அனுகூலம் -கஷ்டம் கொடுப்பதும் வைராக்யம் வளர்க்க தானே –

இத்தால்
ஸ்திதிப்பிக்கை யாவது
நிலைப்பிக்கையாலே
தத் தத் ரஷணங்களைப் பண்ணுகை
என்றது ஆயிற்று -நிலைத்தார் சொல்லாமல் நிலைப்பிக்கை இங்கு மீண்டும்
சம்ஹரிக்கை யாவது

————————————————–

சூர்ணிகை -173-

அவி நீதனான புத்ரனை
பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற
கரணங்களை
குலைத்திட்டு வைக்கை –

அதாவது
விசித்ரா தேக சம்பத்தீ ரீச்வராய நிவேதிதும் -என்கிறபடியே
ஸ்வ சமாஸ்ரயணீயத்தைப் பண்ணி
உஜ்ஜீவிப்பிகைக்கு உறுப்பாக
தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு
தன்னை வழி படுககை அன்றிக்கே
பாஹ்ய விஷய பிரவணனாய் போகப் புக்க வாறே
விதி நிஷேத வச்யனாய் ஒடுங்கி வர்த்தியாமல்
ஸ்வைரசாரியான புத்ரனை ஹித பரனானபிதாவானவன்
ஒரு வியாபார அர்ஹன் அல்லாத படி விலங்கை இட்டுஒடுக்கி வைக்குமா போலே
தன்னை ஒழிந்த விஷயங்களிலே அதி பிரவணனாய் நடக்கிற
கரணங்களைக் குலைத்து ஒடுக்கி இட்டு வைக்கை -என்கை –

—————————————-

சூர்ணிகை -174-

இனி இந்த ஸ்ருஷ்டியாதிகள் தான்
பிரத்யேகம் சதுர்விதமாய் இருக்கையாலே
அத்தையும் தர்சிப்பிக்கைக்காக அருளிச் செய்கிறார்

இம் மூன்றும்
தனித் தனியே
நாலு
பிரகாரமாய் இருக்கும் –

சதுர்விபாகச சம்ச்ருஷ்டௌ சதுர்ததா சம ஸ்திதிச ஸ்திதிதௌ பிரளயஞ்ச கரோதயே ந்தே சதுர்பேதா ஜநார்த்தனா-என்னக் கடவது இ றே-

———————————————–

சூர்ணிகை -176-

ஸ்திதியில்
விஷணவாதி ரூபேணஅவதரித்து
மன் வாதி முகேன சாஸ்த்ரங்களை
பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி
காலத்துக்கும்
சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய்
சத்வ குணத்தோடு கூடி
ஸ்திதிப்பிக்கும்-

அதாவது
ஸ்திதியில் வந்தால்
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -என்கிற விஷ்ணு அவதாரம் தொடக்கமாக
ஸூ ர நர திரசசாமவதாந -என்றும்–ஜெகதாதி ஜெ முதல் அவதாரம் விஷ்ணு –
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே அநேக அவதாரங்களைப் பண்ணி-அவதாரம் பண்ணி ரஷிப்பது மட்டும் இல்லாமல் உபதேசிக்க
தானும் சத்வாரகமாகவும் முனிவரை இடுக்கியுகம் முந்நீர் வண்ணனாய் வெளியிட்டதும் –
மந்த்ர த்ரஷ்டாவாக கொண்டு ஆழ்வாரை -இட்டு -யானாய் தன்னைத் தான் பாடி -இதுவும் அவன் அவதாரமே -யுக வர்ண க்ரம அவதாரம் –
தத்தாத்ர்யர் ராமன் கண்ணன் ஆழ்வார் நான்கு வர்ணங்கள் –பின்னை கொல் –பிறந்திட்டாள் –
யதவை கிஞ்ச மனு ரவதததத பேஷஜம் -என்று ஆபத் தமனாக
ஸ்ருதி பிரசித்தனான மனு முதலான யாஜ்ஞ்ஞாவல்க்ய பராசர வால்மீகி சௌ நகாதிகள் முகேன –
ஸ்ம்ருதி இதிஹாச புராண ரூப சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து–
சேதனர் அபேத பிரவ்ருத்தராகாமல் ஈடேறுகைக்கு உறுப்பான நல் வழிகளை தர்சிப்பித்து
ரஷண உபயோகியான காலத்துக்கும்-திரௌபதி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வாராதிகள் கூப்பிட்ட காலத்தில் வந்து ரக்ஷித்தானே –
லோகத்தில் ஓன்று ஓன்று ரஷகமான சர்வ பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் உடன் பிரஜைகளை ரக்ஷித்தானே
ஜ்ஞான பிரகாசாதி ஹேதுவான சத்வ குண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்திதிப்பிக்கும் -என்கை –
ஏகா மசேந ஸ்திதி தோ விஷ்ணோ கரோதி பரிபாலனம்
மன்வாதி ரூபீ சானயேன கால ரூபோபாரேண ஸ
சர்வ பூதேஷு சானயேன சம்ஸ்தித
சத்வம் குணம் சமா சரிதய ஜகத் புருஷோத்தம -என்னக் கடவது இ றே
புராணத்தில் ஏகா மசேன ஸ்திதோ விஷ்ணு –ஏக அம்சமான விஷ்ணு என்றவாறு –என்று விஷ்ணு அவதாரம் ஒன்றையும் சொன்னது –
அவதாராந்தரங்களுக்கும் உப லஷணம் என்று கொள்ள வேணும்
விஷ்ணு வாதி ரூபேண அவதரித்து -என்று இவர் அருளிச் செய்கையாலே –

————————————-

சூர்ணிகை –177-

சம்ஹாரத்தில்
ருத்ரனுக்கும்
அக்னி அநதகாதிகளுக்கும்-அந்தகன் -யமன் -நரகாந்தகன் -நரகாசுரனை முடித்த பரப்ரஹ்மம் –
காலத்துக்கும்–சம்ஹார உபயோகி அன்றோ காலம் –
சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய்
தமோ குணத்தோடு கூடி
சம்ஹரிக்கும் –

அதாவது சம்ஹாரத்தில் வந்தால்
சம்ஹாரத தாதிகளில் தலைவனான ருத்ரனுக்கும்
அவாந்தர சம்ஹர்த்தாக்களான அக்னி அநதகாதிகளுக்கும்
சம்ஹார உபயோகியான காலத்துக்கும்
ஒன்றுக்கு ஓன்று நாசகமான சகல பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் எல்லாம் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கண் பாராமல் செய்கைக்கு உறுப்பான தமோ குண விசிஷ்டனாய்க் கொண்டு
சம்ஹரிக்கும் -என்கை
ஆசரிதய தமசோ வருத்தி மந்தகாலே ததா பிரபு ருத்ர ஸ்வரூபோ
பகவானே காம சேன பவத்யஜ அகனய நதகாதி ரூபேண பாகேனா நயேன வர்த்ததே கால ஸ்வரூபோ பாகோ நாய்ச சர்வ பூதானி
சாபர விநாசம குர்வதச தஸ்ய சதுர்ததைவ மகாத்மான –ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்னக் கடவது இ றே
ஸ்ருஷ்டியாதிகளில் சதுர்விபாகம் சொல்லுகிற இடத்தில்
அம்ச சப்தத்தாலே ப்ரஹ்மாதிகளைச் சொல்லிற்று
அவர்கள் அவனுக்கு பிரகார பூதர் ஆகையாலே என்னும் இடத்தை
அநந்தரம்
ப்ரஹ்மா தஷாதய காலச ததைவாகில ஜந்தவ விபூதயோ
ஹரே ரேதோ ஜகத் சிருஷ்டி ஹேதவ விஷ்ணுர் மனவாதய காலச சர்வ பூதானி ஸ தவிஜ ஸ்திதிதோ
நிமித்த பூதஸ்ய விஷ்ணோ ரேதா விபூதய ருத்ர காலா ந்த
காதயாச்ச சமசதாச சைவ ஜந்தவ சதுர்த்தா பிரளயே
ஹயேதா -ஜனார்த்தன விபூதய -என்று
மூன்று ஸ்லோகத்தாலே ஸ்புடமாக பிரதிபாதித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –
இத்தை நினைத்தே இவரும்-அந்தர்யாமியாய் -என்று அருளிச் செய்தது
விஷ்ணு மனவாதய -என்கிற ஸ்லோகத்தில் விஷ்ணுவையும் விபூதியாக சொன்ன இது
அவதார பிரயுக்தமான விக்ரஹ பரமாகக் கடவது –

—————————————

சூர்ணிகை -178-

இனி விஷம சிருஷ்டி அடி யாக மந்த மதிகளுக்கு உண்டாகக் கடவ சங்கையை பறிஹரிக்கைக்காக
பிரதமம் தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சிலரை ஸூ கிகளாகவும்
சிலரை துக்கிகளாகவும்
ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு
வைஷம்ய
நைர் கருண்யங்கள்
வாராதோ -என்னில்

அதாவது -ஸ்ருஷ்டிக்கிற அளவில் சர்வ ஆத்மாக்களையும் ஏக பிரகாரமாக அன்றிக்கே
தேவ மனுஷ்யாதி விபாகேன சில ஆத்மாக்களை
ஸூ கிகளாயும்-சில ஆத்மாக்களை துக்கிகளாயும் ஸ்ருஷ்டித்தால்
சர்வ சமனாய் பரம தயாவானாய் இருக்கும் ஈஸ்வரனுக்கு
எல்லார் அளவிலும் ஒத்து இராமையாகிற
வைஷயமும்-துக்கிகளாய் ஸ்ருஷ்டிக்கையால் –
பரத்துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபை இல்லாமையும் வாராதோ -என்கிறதாகில் -என்கை –
சாம்ய குணம் காட்டி அருளுகுகிறான் த்வார த்ரயத்தாலே-

——————————————–

சூர்ணிகை -179-

அத்தை பரிஹரிக்கிறார் –

கர்மம் அடியாகச்
செய்கையாலும்
மண் தின்ற பிரஜையை
நாக்கிலே குறி இட்டு
அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே
ஹித பரனாய்ச் செய்கையாலும்
வாராது –

அதாவது
சிலரை ஸூ கிகளாயும் சிலரை துக்கிகளாயும் ஸ்ருஷ்டிக்கிற இது
விஷம ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பான சேதனர் உடைய கர்மம் அடியாகச் செய்கையாலும்
துக்கிகளாக ஸ்ருஷ்டிக்கிற இது தனக்கு ரோக கரமான மண்ணை விரும்பித் தின்ற பிரஜையை
மேலே தின்னாதபடி நாக்கிலே குறி இட்டு மண் தின்ன பயப்படும்படி பண்ணும்
ஹித பரதையான மாதாவைப் போலே
இவர்கள் மேல்-பின்பு – துக்க ஹேதுவான கர்மங்களைப் பண்ண அஞ்சும்படி
ஹித பரனாய்ச் செய்கையாலும் வைஷம்ய நைர்க்கருணயங்கள் இரண்டும் இவனுக்கு வாராது -என்கை
இத்தால் -வைஷம்ய நைகருண்யே ந சாபேஷத்வாத் -2–1-34- -என்கிற வேதாந்த ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
நிமே நோ ந நதஞ்சகருணஞ்ச ஜகத் விசித்ரம் கர்ம வ்யபேஷய சருஜதச தவ ரெங்க சேஷிந
வைஷம்ய நிர்க்கருண தயோர் ந கலு பிரசக்திச தத் ப்ரஹ்ம
ஸூ த்ரச்சிவா ஸ்ருதயோ கருண நதி–உத்தர சதகம் -42- -என்று இது தன்னை பட்டரும் அருளிச் செய்தார் இ றே –
நிம்னா உன்மய ஈச ஈஸித்வய –உயர்வு தாழ்வு பேச்சுக்கு கூட இடம் இல்லையே -சசிவோத்தமன்-திருவடிக்கு இத்தை சொல்லுவோமே –
-மந்திரி -வேதாந்த வாக்கியம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் மந்திரி போலே ஒழுங்காக ஸ்தாபிக்குமே –

—————————————-

சூர்ணிகை -180-

ஆக
ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் என்றத்தை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதிப்பதாக உபக்ரமித்தார் –

இவன் தான்
முந்நீர் ஞாலம் படைத்த
என் முகில் வண்ணன்
என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு
ஸ்ருஷ்டியாதிகளைப்
பண்ணும் –

நடுவு சொன்ன –
ஆர்த்தாதி சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்வமும்
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் ஆகிற
இவை இரண்டையும் உப பாதியாது ஒழிவான்-என் -என்னில்
காரணந்து தயேய-என்றும்
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் இத்யாதியில் சொல்லுகிறபடி
காரண வஸ்துவே உபாசயமும் ஆசரயணீயமும் ஆகையாலே காரணத்வம் சொன்ன போதே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிற சதுர்வித சமாஸ்ரயணீயத்வமும்
பலமத உபபத்தே -3–2–37–என்கிறபடியே பல ப்ரதத்வ ஹேதுவான–தான் பலமாகவும் இருப்பார் -கேட்டதை கொடுப்பார் -தானும் பலமாக இருப்பார் –
சர்வ சக்தி யோகம் கீழே உக்தம் ஆகையாலே
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் அர்த்தாத் உக்தம் என்னும் நினைவாலும்
அவற்றில் உபபாத நீயாம்சம் மிகவும் இல்லாமையாலும்
தத் உப பாதானம் பண்ணிற்று இலர்-திரும்ப சொல்லி விளக்க வில்லை –
ஆகையால் கீழ்ச் சொன்ன காரணத்வத்தோடே விக்ரஹ யோஹத்துக்கு அந்வயத்தைச்
சொல்லிக் கொண்டு அருளுகிறார்-

இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே -என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் என்று –
அதாவது
இப்படி ஜகத் சர்க்காதி கர்த்தாவாக சொல்லப் பட்ட இவன் தான்
எனக்காக–ஆழ்வாருக்காக -அவன் செய்து அருளிய எல்லா சேஷ்டிதங்களும் பிரவ்ருத்திகளும்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலம் என்று மூன்று வகைப் பட்ட நீரை யுடைத்தான
சமுத்ரத்தோடே கூடின ஜகத்தை ஸ்ருஷ்டித்த
வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவனே என்று
ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தத்தில் சொல்லுகிற படியே
விக்ரக ஸ ஹிதனாய்க் கொண்டு ஸ்ருஷடி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றையும் பண்ணும் -என்கை
முகில் வண்ணன் என்கிற இது ஔதார்ய குண பரமாக வ்யாக்யாதாக்கள்
பலரும் வியாக்யானம் பண்ணினார்களே ஆகிலும்
விக்ரஹ பரமாக இவர் அருளிச் செய்கையாலே
இங்கனும் ஒரு யோஜனை யுண்டு என்று கொள்ள வேணும்
ஒன்றுக்கு பல யோஜனைகள் உண்டாய் இ றே இருப்பது –
ஜகத்தை படைக்கும் பொழுது விக்ரஹ விசிஷ்டன் -முகில் வண்ணனாக படைக்கிறான்

————————————-

சூர்ணிகை -181-

இனி இந்த விக்ரஹத்தின் யுடைய வை லஷண்யத்தை ஒரு சூர்ணிகை யாலே விஸ்தரேண
உபபாதிக்கிறார் –

விக்ரஹம் தான்
ஸ்வரூப -குணங்களில் -காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய்
ஏக ரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க
பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷண பூஷிதமாய்
இருக்கும்-

விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதம் யாகையாவது
-ஆனந்த மயமான ஸ்வரூபமும் ஆனந்தா வஹமான குணங்களும் போல் அன்றியே
நிரதிசய ஆனந்தாவஹமாய் இருக்கையாலே
அவற்றிலும் காட்டில் மிகவும் அபிமதமாய் இருக்கை –

ஸ்வ அனுரூபம் ஆகையாவது -அநநுரூபமாய் இருக்கச் செய்தேயும் அபிமதமாய் இருக்குமவை போல் அன்றிக்கே
தனக்கு அனுரூபமாய் இருக்கை-

நித்யமாகை -ஆவது –
ஸ்வரூப குணங்களோ பாதி அநாதி நிதனமாய் இருக்கை –ஆதி நிதனம்- முடிவு இல்லாமல் என்றபடி
லோகத்தில் அவயவிகளுக்கு அநித்யத்வம் காண்கையாலே இதுக்கும் அவயவிதவேன அநித்யத்வம் வாராதோ என்னில் வாராது
எங்கும் ஒக்க அவயவ சம்பந்த மாதரம் அல்ல அநித்யத்வ ஹேது அவயவ ஆரப்தம் –
அவயவ சம்பந்தம் மாத்ரமே அநித்யத்வ ஹேதுவாம் ஆகில் கர சரணாத அவயவ சம்பந்தம் உண்டான ஆத்மாவுக்கும் விநாசம் வர வேணுமே
இங்கு அப்படி அவயவார பதத்வத்தில் பிரமாணம் இல்லாமையாலே
இது கர சரணாத யவயவ யோகியாய் நிற்கச் செய்தேயும்
நித்யமாயே இருக்கும் என்று இப்படி விவரணத்தில் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இ றே-

ஏக ரூபமாகை யாவது –வ்ருத்தி ஷயாதி விகார ரஹிதமாய் இருக்கை
சதைக ரூப ரூபாயா -என்னக் கடவது இ றே -சுருக்குவார் இன்றியே சுருக்கினாய்-

ஸூ த்த சத்வாத்மகமாகை யாவது —
குணாந்தர சம்சர்க்கம் இல்லாத சத்வத்துக்கு ஆச்ரயமாய் இருக்கிற அப்ராக்ருத த்ரவ்யமே வடிவாய் இருக்கை –
ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி -என்னக் கடவது இ றே –

சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் –
சுத்த சத்வாத்மகம் ஆகையாலே குண த்ரய ஆச்ரயமான சேதன தேஹம் போலே
ஞானமயம் ஆகையாலே தேஜோரூபமான ஸ்வரூபத்தை
புறம் தோற்றாதபடி மறைக்கை அன்றிக்கே
மாணிக்கத்தை செப்பாக சமைத்து அதிலே பொன்னை இட்டு வைத்தால்
உள்ளிருக்கிற பொன்னை அது புறம்பே நிழல் எழும்படி தோற்றுவிக்குமா போலே –
எண்ணும் பொன்னுருவாய் -என்கிறபடியே ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே
பொன்னுக்குள் மாணிக்கம் திருமேனிக்குள் ஸ்வரூபம் இல்லாமல் -மாணிக்கத்துக்குள் பொன் போலே என்கிறார் –
திருமேனி-திவ்ய மங்கள விகிரஹம் – திவ்யாத்ம ஸ்வரூபம் வாசி உண்டே –
பொன்னுரு-ஈஸ்வரன் மின்னுரு – சரீரம் -பின்னுரு -ஆத்மா -தத்வத்ரயம் மூன்று சொற்களால் -அருளிச் செய்தார் இ றே-

பொன்னுரு என்று சொல்லப் படுமதான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு தான் பிரகாசகமாய் இருக்கை-

நிரவதிக தேஜோ ரூபமாகை யாவது –
நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக ஜாதிய த்ரவ்யமாய் இருக்கச் செய்தே-அப்ராக்ருத த்ரவ்யம் –
ஏக ஜாதீய த்ரவ்யாத்மகமான கத்யோத சரீர தேஜஸ் சில் காட்டிலும்—கத்யோதம் ஆகாசம் மினுமினி பூச்சி —
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ –நாய் ஆடுவதோ நாரி கேசரி முன் –
ஆதித்ய சரீரத்துக்கு உண்டான தேஜோதிசயம் போலே
இவை ச வதிக தேஜஸ சாம்படி தான் நிரவதிக தேஜஸ் சை யுடைத்தாய் இருக்கை –

சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாகை யாவது –
சௌகுமார்யம் சௌந்தர்யம் லாவண்யம் சௌகந்த்யம் யௌவனம்
முதலான கல்யாண குண சமூஹத்துக்கு கொள்கலமாய் இருக்கை –
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்ய
யௌவன அத்யந்த குணநிதி திவ்ய ரூப-ரூப குணங்கள் சூர்ணிகை –
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் இ றே —
மாயன் குழல் -கொள்கின்ற -கோள் இருளை- -அன்று –

யோகி த்யேயமாகை யாவது –
பகவத் த்யாந பரமான பரம யோகிகளுக்கு சுபாஸ்ரயமாய்க் கொண்டு
எப்போதும் த்யான விஷயமாய் இருக்கை
காசா நயா தவா மருதே தேவி சர்வ யஞ்ஞமாயம் வபு
அத்யாசதே தேவ தேவஸ்ய யோகி சிந்தயம் கதாபருத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–9-
என்று அசாதாரண விக்ராஹமே யோகி சிந்தயமாகச் சொல்லப் பட்டது இ றே

சகல ஜன மோகனமாகை யாவது –
ஜ்ஞான அஞ்ஞான விபாகம் அற சகல ஜனங்களையும் ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றுமதாய் இருக்கை –
பும்ஸாம் திருஷ்டி சிந்தா அபஹரிணம் -என்றும்
சர்வ ஸ்தவ ம்நோஹர –
கண்டவர் தம் மனம் வழங்கும் -என்னக் கடவது இ றே –சதா சர்வாங்க சுந்தரன் அன்றோ –
கீழே யோகிகளுக்கு த்யான விஷயம் -மேலே நித்ய முத்தர்களுக்கு அனுபாவ்யம் -நடுவில் நம் போன்ற சம்சாரிகளுக்கு இப்படி –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -இழந்தது சங்கே கட்டே -ஒவ் ஒன்றையும் இழக்கும் படி அன்றோ அழகு -இதுவே மோஹனம்
-மெய்யமர் பல் கலன் நன்கு அணிந்தான் இல்லை -மெய்யில் அமர்ந்து -சேர்த்தே -செவ்வரத்தை உடையாடை -அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்று –
மேக்க குழாங்கள் ஒக்கும் அம்மான் உருவம் -காட்டேன்மின் உம் உரு என்று சொல்லும்படி இருக்குமே -படி எடுத்து சொல்லும் படி அன்றே பெருமாள் உருவம் -திருவடி –
ராம கமல பத்ராக்ஷன் -சமுதாய சோபை அவயவ சோபை –

சமஸ்த போக வைராக்ய ஜனக-மாகையாவது –
தன வை லஷண்யத்தைக் கண்டவர்களுக்கு
ஸ்வ இதர சகல விஷய அனுபவத்திலும் ஆசை அறுதியை விளைக்குமதாய் இருக்கை-
பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆராத தோள்–என்னக் கடவது இ றே -/ தோள் கண்டார் தோளே கண்டார் -/
உன்னும்ம் சோறு –எல்லாம் கண்ணன் -/ தூது செய் கண்கள் -தாயாய் அளிக்கும் தண் தாமரைக்கு கண்ணன் -/
செம் கண் திருமுகத்து /கதிர்மதியம் போல் முகத்தான் -ஜயமான கடாக்ஷம் –

நித்ய முக்த அனுபாவ்ய-மாகை யாவது –
அபரிச்சின்ன ஜ்ஞானாதி குணகரான நித்யராலும் முக்தராலும்
சதா பஸ்யந்தி சூரய-படியே அநவரதம் அனுபவிக்கப் படுமதாய் இருக்கை –

வாசத் தடம் போலே சகல தாப ஹர-மாகை யாவது –
கண் கை கால் தூய செய்ய மலர்களா -என்று தொடங்கி
ஆழ்வார் வர்ணித்த படியே திவ்ய அவயவங்களும் திரு மேனியுமான சேர்த்தியாலே
பரப்பு மாறத் தாமரை பூத்து பரிமளம் அலை எறியா நிற்பதொரு தடாகம் போலே இருக்கையாலே
தன்னைக் கிட்டினவர்களுக்கு சம்சாரிக்க விவித தாபத்தோடு விரஹ தாபத்தோடு வாசி அற
சகல தாபத்தையும் போக்குமதாய் இருக்கை –

அநந்த அவதார கந்த-மாகை யாவது –
அஜாயாமானோ பஹுவிதா விஜாயதே -என்றும்
பஹூ நிமே வயதி தானி -என்றும் சொல்லப்படுகிற
அசங்க்யாதமான அவதாரங்களும் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி கொண்டு
தீபா துதபன்ன ப்ர தீபம் போலே
வருகிறவை யாகையாலே அவை எல்லாவற்றுக்கும் மூலமாய் இருக்கை
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி -என்றும்
கல்பே கல்பே ஜாயமானச ஸ்வ மூர்த்தாயா –என்றும்
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -என்றும் சொல்லக் கடவது இ றே/ அழுக்கு பதிந்த உடம்பாக பரஞ்சுடர் உடம்பு -சஜாதீயமாக்கி –

சர்வ ரஷகம் -ஆகை யாவது –
ஐஸ்வர் யாதிகளோடு கேவலரோடு
பகவத் சரணாகதர்களில் உபாசகரோடு -பிரபன்னரோடு -அனுபவ கைங்கர்யரான நித்ய முக்தரோடு
வாசி அற சர்வருடைய
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி களைப் பண்ணுவது
திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய்க் கொண்டே ஆகையாலே
எல்லாருக்கும் ரஷகமாய் இருக்கை –
சர்வாபாஸ்ரயம் -ஆகை யாவது –
உபய விபூதிக்கும் ஆச்ரயமாய் இருக்கை -மண்ணும் விண்ணும் தொழ-

அஸ்த்ர பூஷண பூஷிதம் -ஆகை யாவது –
கீழ்ச் சொன்ன சர்வாஸ்ரயத்வ ஸூ சகமாம் படி
அஸ்த்ர பூஷன அத்யாயத்தில் சொல்லுகிறபடியே
விபூதய அபிமானிகளான திவ்ய ஆயுதங்களாலும்
திவ்ய ஆபரணங்களாலும் அலங்க்ருதனாய் இருக்கை –
ஆத்மா நமஸ்ய ஜகதோ நிர்லேபம குணாமலம் பிபாததி கௌச்துபமணிமா ஸ்வரூபம்
பகவான் ஹரி ஸ்ரீ வத்ஸ சமஸ்த தானதர மன நதேச சமாசரிதம் பிரதானம் புத்திர பயாசதே கதா ரூபேண மாதவே
பூதாதி மிந்த்ரியா திஞ்ச த்வித அஹங்கார மீச்வர பிபாததி சங்ககரு ரூபேண
சாரங்க ரூபேண ச ஸ்திதிதம் சல ஸ்வரூப மத்யந்த ஜவே நானா தரிதா நிலம் –
சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தததே விஷ்ணு கரே ஸ்திதிதம்
பஞ்ச ரூபாது யாமாலா வைஜயந்தீ கதாபருத ச பூத ஹேது
சங்கா தோபூத மாலாச ச த்விஜ யாதீந்த்ரிய விசேஷாணீ
புத்தி காமா தமாக நிவி சர ரூபாணாய சேஷாணி தானி ததே ஜனார்த்தனா
பிபாததி யச்சாசிரத நமச்யுதோ தயந்த நிர்மலம் வித்யாமயந்து தத் ஜ்ஞானம் வித்தியாச மமசாம் ஸ்திதிதம் -என்னக் கடவது இ றே-
சஞ்சல மனஸ் -சக்கரம் / கௌஸ்துபம் ஆத்மதத்வம் /பிரதிநீயத்வம் உண்டே -சர்வருக்கு -சர்வத்துக்கும் -/ பிரதானம் ஸ்ரீ வத்சம்
/புத்தி கதை /தாமச சாத்விக அஹங்காரங்கள் –சங்கும் சாரங்கமும் /
தன் மாத்திரை வனமாலை / பஞ்ச பூதங்கள் -இந்திரியங்கள் இவை -சர ரூபம் / வித்யை கட்கம் உறை அவித்யா –

——————————————–

சூர்ணிகை -182-

ஆக -விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதித்தார் கீழ் –
இந்த விக்ரஹ யோக பிரயுக்தமான ஈஸ்வரனுடைய பரத்வாதி பஞ்ச பிரகாரத்தையும்
தனித் தனியே ஸூ வியக்தமாக தர்சிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -பிரதமம்
அது தன்னை உத்ஷேபிக்கிறார் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான்
பரத்வம்
வ்யூஹம்
விபவம்
அந்தர்யாமித்வம்
அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே
கூடி இருக்கும் –

அதாவது -இத்தை சொல்லி அருளி
ஸ்ரீ லஷ்மி பூமா நீளா நாயகனாய் -என்றதையும் உபபாதித்து விட்டு
பின்னை இது சொல்லாது ஒழிவான் என் என்னில்
அதில் உபபாதிக்க வேண்டுவது பணி இல்லாமையாலும்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சகாயோ ஜனார்த்தனா
உபாபயாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்கையாலே
மேல் சொல்லுகிற பரத்வத்திலே அர்த்ததாதுகதமாம் என்னுமதைப் பற்றவும்
தனித்து உபபாதிதிலர்-ஆகையால் விரோதம் இல்லை –

ஈஸ்வர ஸ்வரூபம் -என்கிற இடத்தில்
ஸ்வரூப சப்தத்தால் சொல்லுகிறது -ஸ்வ அசாதாரண விக்ரஹதை யாதல்
விக்ரஹ விசிஷ்டமான ஸ்வரூபம் தன்னை யாதல் –
சங்கரஹேண் இட்டு அருளின மற்றை இரண்டு தத்வ த்ரய படியிலும் ஒருபடியிலே திரு மேனியும் அஞ்சு படியாய் இருக்கும் -அதாவது
பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அந்தர்யாமித்வம் -அர்ச்சாவதாரம் -என்றும்
மற்றைப் படியிலே ஈஸ்வர ஸ்வரூபம் ஹேய பிரதிபடமாய் -என்று தொடங்கி
பத்நீ பரிஜன விசிஷ்டமாய் இருக்கும் -என்றத்தை உபபாதித்த அநந்தரம்
இது தான் அஞ்சு படியாய் இருக்கும் என்றும்
இதம் சப்தத்தாலே பிரக்ருதமான ஈஸ்வர ஸ்வரூபத்தை பராமர்சிதது
அது தான் பரத்வாதி ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும் என்று இவர் தாமே அருளிச் செய்கையாலே
இப்படி பரத்வாதி பஞ்ச பிரகார விசிஷ்டனாய் இருப்பன் என்னும் இடத்தை
மம பிரகாரா பஞ்சேதி பரா ஹூரா வேதாந்த பாரக
பரோ வ்யூஹச்ச்ச விபவோ நியந்தா சர்வ தேஹி நாம
அர்ச்சாவதார ச ச ததா தயாலு புருஷர்க்ருதி இத யேவம்
பஞ்சதா பராஹோர் மம வேதாந்த விதோ ஜனா -என்று
விஷ்வக் சேன சம்ஹிதையிலே தானே அருளிச் செய்தான் இ றே-

————————————

சூர்ணிகை -183-
ஆதி முதன்மை- அம் அழகிய- சோதி -மூன்று விசேஷணங்கள் -தீபத்தில் இருந்து கொளுத்திய தீ வெட்டி போலே -த்ருஷ்டாந்தம் -சர்வான் தேவான் நமஸ்யந்தி பெருமாள் நன்மைக்கு கோயில்களுக்கு சென்று அயோத்யா மக்கள் –

இனி இந்த அஞ்சு பிரகாரத்தையும் அடைவே உபபாதிக்கக் கோலி பிரதமம் பரத்வத்தை
உபபாதிக்கிறார் –

அதில்
பரத்வமாவது
அகால கால்யமான
நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு
போக்யனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

அதாவது
அவ்வைந்திலும் வைத்துக் கொண்டு பரத்வம் ஆவது
நாகால சததரவை ப்ரபு -என்றும்
கலா முஹூர்த்ததாதி மாயச்ச கால ந யத விபூதே பரிணாம ஹேது -என்றும்–ச கண்டம் -பிரித்து -அக்கண்டம்- -பிரளயம் உணர்த்த -இரண்டு வகையான காலம்
யாவை நஜாது பரிணாம பதாஸ்பதம் சா காலாதிகா தவ பரா மஹதீ விபூதி -என்றும்–காலம் அதிக்ரமணம் தாண்டி இருக்கும் –
யத காலாத அபிசேளிமமம–ஸ்ரீ குண ரத்னா கோசம் -என்றும் சொல்லுகிறபடியே–காலத்தால் பக்குவப்படாத தேசம் –
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையாலே
காலகாலயம் அன்றிக்கே இருப்பதாய்
நலமந்த மில்லதோர் நாடு -என்றும்
ஆனந்தம் அளவிறந்து அத்விதீயமாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
யத்ர பூர்வே ஸாத்யாச சந்திதேவா -என்றும்–பிரதம பிராப்யம் -வந்தவர் எதிர் கொள்ள -அடியவர்கள் தானே
யத்ராஷய பிரதமஜா யே புராணா -என்றும்-பிரதம ஜா -அநாதி சித்தர் என்றவாறு -புரா அபி நவ புராணம் -அன்று அன்று புதிதாக -பழமையாக இருந்தும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அசங்குசித ஜ்ஞானராய் இருந்துள்ள
அநந்த கருட விஷ்வக்சேனர்திகளான நித்ய சூரிகளுக்கும்
சூர்ய கோடி ப்ரதீகாச பூர்ணே நதவயுத சந்நிபா யஸ்மின் பதே விரஜாந்தே முக்தாஸ சம்சார பந்ததை -என்கிறபடியே
நிவ்ருத்த சம்சாரராய்
அசங்குசித ஜ்ஞானரான முக்தருக்கும்–160000-பூர்ண சந்த்ர பிரகாசம் கொண்ட முத்தர்கள் –
அனுபவ விஷய பூதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை –
வைகுண்டேது பரே லோகே நித்யதவேன வ்யவஸ்திதம்
பச்யந்திச சதா தேவம் நேதரைர் ஜ்ஞாநேன வமரா -என்னக் கடவது இ றே-கண்களாலும் ஞானத்தாலும் பார்க்கிறார்கள் –

————————————————

சூர்ணிகை -184-

அநந்தரம் வ்யூஹத்தை உப பாதிக்கிறார் -123-தொடக்கி -24-திருநாமங்கள் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில்

வ்யூஹமாவது
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும்
சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும்
உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண
பிரத்யும்ன
அநிருத்த
ரூபேண
நிற்கும் நிலை –

சம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி –ரக்ஷணம் / சங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்தன -/ஆத்மா சரீர சம்பந்தம் -ஸ்திப்பிக்கை வாழ வைக்கை- பிரார்த்திக்காமல்
வ்யூஹ வாஸூ தேவன் –பூ லோக வைகுண்டம் வ்யூஹ வாஸூ தேவன் பெரிய பெருமாள் –வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் கோயிலிலே –
பாஞ்சராத்ரம் வ்யூஹம் தொடர்பு -பூ லோக வைகுண்டம் திவ்ய தேசம் –
சம் ரக்ஷணம் -அர்த்தம் -தனியாக –அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுக்க -திரௌபதி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்-பிரார்த்தித்து பெறுவது –
கேசவாதி துவாதச திரு நாமங்களை இந்த நால்வருக்கும் -பாஞ்ச ராத்ரம் இவற்றை விவரிக்கும் – -நான்கு கைகளிலும் ஒரே திவ்ய ஆயுதம் -வரணங்கள் வேறே –
துவாதச பிராட்டி திரு நாமங்களை உண்டே –

அதாவது -வ்யூஹத்துக்கு விநியோகம் லீலா விபூதியில் ஆகையாலே
இவ் விபூதியினுடைய ஸ்ருஷ்டி என்ன ஸ்திதி என்ன சம்ஹாரம் என்ன
இவற்றை நிர்வஹிக்கைக்காகவும்
புபுஷூக்களான சம்சாரிகளை அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை
பண்ணி ரஷிக்கைக்காகவும்
முமுஷூக்களாய் உபாசிக்குமவர்களுக்கு சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக
தன்னை வந்து பிராபிக்கைக்கு உடலான அனுக்ரஹத்தை பண்ணுகைக்கு உடலாகைக்காகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்துக்களாய்க் கொண்டு
நிற்கும் நிலை வ்யூஹம் ஆவது -என்கை –
இதில் இன்ன வியூஹத்தாலே இன்னது செய்யும் என்னும் இடம் மேல் உப பாதனத்திலே கண்டு கொள்வது –
சதுர்விதச ச பகவான் முமுஷூணாம் ஹிதாயா அன்யே ஷாம் அபி லோகாநாம் ஸ்ருஷ்டி ஸ்தித்ய ந்த சித்தயே -என்றும்
ஆன நதயாத தவ சேனா நே யயூஹா ஆதயோ மயே ரித
அநாதி கர்ம வச்யா நாம சம்சாரே பததாமத
என்று தொடங்கி
உபாசகா நுக்ரஹார்த்தம் ஜகதோ ரஷணாய ச -என்றும்-முமுஷுக்கும் புகுஷுக்கும் என்றவாறு
ஆவி ராசீத பகவத பஞ்சாயுத பரி ஷக்ருதருக்மாபச சோயமே மலச
சர்வ சாஸ்த்ரேஷூ சப்தித சோயம் பிரத்யும்ன நாம நாபூத
ததோக நாதாவபுர்த்தர
சோயாம சங்கர்ஷணா ககயோபூத ததேகா ந்த வபுர்தர இந்திர நீல பிரதீகாச
எஸ சாஸ்த்ரேஷூ சப்தித ததோ நாம நா அநிர்த்ததோயம் ஸ்வயமேவ வைபவ நமுனே ததேகா ந்த வபுர்யுகதச ததா தவிககந ப்ரப-என்றும்
ருக்ம ஸ்வர்ணம் போலே காந்தி -படைத்து நிர்மலம் -பர வாஸூ தேவன் இடம் நால்வரும் ஆவிர்பவித்து -பிரத்யும்னன் –
அவர் சங்கர்ஷணன் ஆனார் -அவர் இந்திர நீல பிரகாசம் கொண்டு
-அவர் அநிருத்தன் ஆனார்-
பக வத் சாஸ்த்ரத்திலே ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமத்தில் –ஸ்ருஷ்டியாதிகளும்
சம்சாரி சம் ரஷணமும்
உபாசக அனுக்ரஹமும் ஆகிற வ்யூஹ கிருத்யங்களும்
சங்கர்ஷணாதி வுயூஹங்களும் -சொல்லப் பட்டது இ றே –
சதுர்விதச ச பகவான் என்கிற இடத்தில்
சதுர்விதமாகச் சொல்லிற்று வாஸூ தேவரையும் கூட்டுகையாலே –

——————————————————————-

சூர்ணிகை -185-

இந்த பர வ்யூஹங்களுக்கு தன்னில் விசேஷம் ஏது என்ன
அருளிச் செய்கிறார் –

பரத்வத்தில்
ஜ்ஞாநாதிகள் ஆறும்
பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘
இவ்விரண்டு குணம்
ப்ரகடமாய் இருக்கும் -ப்ரா

அதாவது
சம்பூர்ண ஷட்குணச தேஷு வா ஸூ தேவோ ஜகத்பதி -என்றும்
பூர்ண சமிதி ஷாட்குண்யோ நிச தரங்கா ரண வோபம் -என்றும்-
அலை இல்லா கடல் போலே பூரணமாய் –
ஷணணாம் யுகபது நமேஷாத குணா நாம ஸ்வ ப்ரசோதிதாத
அநந்த ஏவ பகவான் வா ஸூ தேவச சனாதன -என்றும் சொல்லுகிறபடியே
வாஸூ தேவ ரூபமான பரத்வத்திலே
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆகிற ஆறு குணங்களும் பரிபூரணமாய் இருக்கும்-
சங்கர்ஷணாதி ரூபமான வ்யூஹத்தில் -தத்ர தத்ர அவசிஷ்டமயத குணா நாம த்வியுகம் முனே அனுவிருத்தம் பஜதயேவ தத்ர தத்ர யதாத்தம் -என்கிறபடியே
அவிசிஷ்டமான குண சதுஷ்ட்யமும் தத்ர தத்ர அனுவிருத்தமாய் நிற்கச் செய்தேயும்
அதிகரித்த கார்யங்களுக்கு அனுகுணமான இவ்விரண்டு குணமே பிரகாசமாய் இருக்கும் என்கை-
சக்தி தேஜஸ் ரஷிக்க/ ஸ்ருஷ்டிக்க ஐஸ்வர்யம் வீர்யம் –படைக்கும் பொழுது விகாரம் அடையாமல் தான் இருக்க /
-சம்ஹரிக்க ஞானம் பலம் என்றவாறு /இவை பிரகாசமாக இருக்கும் மற்றவைகளும் உண்டு
குணை ஷட்பிச தவேதை பிரதமதா மூர்த்தி ச தவ பவௌ
ததஸ திசரச தேஷாம்
த்ரியுக யுகளை ஹி த்ரிபிறப்பு வ்யவஸ்ததா யா சைஷா
ந்து வரத சாவிஷ க்ருதி வசாத பவான சர்வத்ரைவ தவ கணித மகா மங்கள குணா -என்று
த்ரியுக -மூன்று இரட்டைகள் -/மூன்றான இரண்டுகளால் -பிரகாசித்தன -/ எப்பொழுதும் எண்ண முடியாத மங்கள குணங்கள் யுடையவர் அன்றோ -தேவப் பெருமாளே -என்கிறார்
இது தன்னை ஆழ்வான் அருளிச் செய்தார் இ றே-

———————————————————-

சூர்ணிகை -186-

இனி இந்த சர்கர்ஷணாதிகள் மூவர் பக்கலிலும் பிரகாசிக்கிற குண விசேஷங்களையும்
இவர்கள் தான் இன்ன கிருத்யங்களுக்கு கடவராய் இருப்பார்கள் என்னுமத்தையும்
தனித் தனியே அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
பிரதமத்தில் சங்கர்ஷணர் படியை அருளிச் செய்கிறார் –

அதில் சங்கர்ஷணர்
ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி
ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து
பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது–இது ஒரு செயல் -மேலும் –
சாஸ்திர பிரவர்த்தனத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும்
பண்ணக் கடவராய் இருப்பார் –

அதாவது வ்யூஹ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு சங்கர்ஷணர்
தத்ர ஞான பல த்வந்தவாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே -என்றும்
பகவான் அச்யுதோபீததம ஷட் குணேந சமேதித பல ஞாநௌ குநௌ தஸ்ய சப்புடௌ கார்ய வாசன் முனே -என்றும் சொல்லுகிறபடியே
சர்வகுணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமாக
ஜ்ஞான பலங்கள் இரண்டும் கூடி
சோயம் சமஸ்த ஜீவானாம் அதிஷ்டாத்ருதயச ச்ததித-என்றும்
சங்கர்ஷண ச து தேவாசோ ஜகத் ஸ்ருஷ்டும் நாச தத ஜீவ தத்வம் அதிஷ்டாய பரக்ருதேச்து விவிசய தன -என்றும்
சொல்லுகிறபடியே
பிரக்ருதிக்கு உள்ளே மயங்கிக் கிடக்கிற ஜீவ தத்தவத்தை அதிஷ்டித்து-ஆதாரமாக இருந்து -அனுபிரவேசித்து என்றுமாம் –
அந்த அதிஷ்டான விசேஷத்தாலே இத்தை பிரக்ருதியில் நின்றும்
நாம ரூப விசேஷம் தோற்றும்படி விவேகித்து பிரித்து -ஸ்ருஷ்டிக்க முதல் வேலை இவர் பார்த்து தயார் நிலையில் வைப்பார் என்றவாறு
விவேகாந்தரம் தேவ பிரத்யும்ன தவ மவாப ச -என்றும்-
சோயம பிரத்யுமன நாம பூத ததேகாந்தவ புத்திர -என்றும்
சொல்லுகிறபடியே
பிரத்யும்ன அவஸ்தையும் பஜிதது –
சாஸ்திர பிரவர்த்த நஞ்சாபி சம்ஹாராஞ்சைவ தேஹி நாம -என்றும்
பலேன ஹாதீ தம ச குணென நிகிலம் முனே ஜ்ஞாநேன தநுதே சாஸ்திரம்
சர்வ சித்தாந்த கோசரம் வேத சாஸ்திரம் இதி க்யாதம் பாஞ்சராத்ரம் விசேஷத –
என்றும் சொல்லுகிறபடியே வேதாதி சாஸ்திர பிரவர்த்தனத்தையும்-ஆதி -பாஞ்சராத்ர ஆகமம் –
ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை –

ஆத்ம தத்வம் அதிஷ்டானம்- சாஸ்த்ர பிரவர்தனம் /மனஸ் தத்வம் அதிஷ்டானம் -தர்ம பிரவர்தனம்/
தத்வ ஞானம் ப்ரவர்த்தனம் – பல பிரதத்வம் மூன்றும் மூவரும் செய்வார் -என்றபடி –

———————————————–

சூர்ணிகை -187-

அநந்தரம் பிரத்யும்னர் படியை அருளிச் செய்கிறார் –

பிரத்யும்னர்
ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி
மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும்
மனு சதுஷ்டயம் தொடக்கமான
சுத்த வர்க்க சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர்-

அதாவது -ஐஸ்வர்ய வீர்ய சம்போதத ரூபம் பிரத்யும்னம் உச்யதே -என்றும்
பூர்ண ஷடகுண ஏவாயம் அச்யுதோபி மகாமுனே குணா ஐஸ்வர்ய வீர்யா க்க யௌ ச்புடௌ தஸ்ய விசேஷத -என்றும்
சொல்லுகிறபடியே சகல குணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
கார்ய அனுகுணமான விசேஷண ஸ்ப்புடங்களாய் இருக்கிற ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி
மன சோயம் அதிஷ்டாத மநோ மய இதீரத -என்கிறபடியே
ஜ்ஞான பிரசரண த்வாரமான மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து –
ஐஸ்வர் யேண குணே நாசௌ ஸ்ருஜதே தச சரா சரம வீர்யேண சர்வ தர்மாணி பிரவர்த்தயதி சர்வச –
என்கிறபடியே சாஸ்தராத்த அனுஷ்டான ரூபமான தர்மங்களின் யுடைய உபதேசத்தையும்–வேத போதித இஷ்ட சாதனத்தவமே தர்மம் –
மநு நாம சாசமக்ர்தோ முக பாஹூரு பாத்த சதுராணாம் ப்ரஹ்மணா தீ நாம
சாச்த்வாரம் ஜகத் பத்தி த்விஜ யுகமம் ஷத்ர யுகமம் விஷய யுகமம் ததைவ ச
மிதுநஞ்ச சதுர்தச்ய ஏத நமனு சதுஷ்டயம் மனுப்யோ மான வசதம்
ஸ்திரீ புமமிது ந்தோ பவேதே ஏகைகர்ம வர்ண பேதேன தேபயோ
மாநவ மாநவ சஹசா சமபபுபூ யுச்ச ஸ்திரீ புமமிது நதச ததா
மனுஷ்யாச்ச ததச தேபா பராதுஷயா வீதமதசரா ஏதே ஹி சுத்த சத்வ சதா தேஹா நதம நா நயயாஜின நிராசீ
கர்ம கரணான மாமேவ பராப நுவனதிதே த்ரயந்தேஷூ
ச நிஷணதா த்வாத் சாதயா தம சீததகா வ்யூஹ நிவ்ருத்திம்
சத்தம் குர்வதே தே ஜகத்பதே த்ருதீ யேன ஜகத்தாதர நிர்மிதா மனசா ஸ்வயம்
குண பிரதானயோகே ச நிஷ்டிதா புருஷர்ஷப இத்யேஷசுததசர்கோயம் ச னேச தவ கீர்த்தித -என்று
விஷ்வக் சேன சமிதையில் சொல்லுகிற படியே-கண நாதாயா என்று விஷ்வக்சேனரை -சொன்னவாறு –
முக பாஹூரு பாதஜராய்-முகம் கை பாதம் தொடை
மிதுனமாய் இருக்கிற ப்ரஹ்மானாதி மனு சதுஷ்டயம் தொடக்கமாக-ப்ராஹ்மண மிதுனம் ஆண் பெண் –
இந்த மனுக்கள் பக்கல் நின்றும் மிதுனங்களாய்க் கொண்டு தனித் தனியே
வர்ண பேதேன யுண்டான மாநவ சதமும்
அப்படியே ஸ்திரீ பும மிதுனங்களாய்க் கொண்டு
அந்த மாநவர் பக்கலிலே நின்றும் யுண்டான மாநவரும்
அவர்கள் பக்கலிலே நின்றும் யுண்டான மனுஷ்யருமாயக் கொண்டு
நிர்மதஸ்ரராய்-பகைமை உணர்வு இல்லாமல் – சுத்த சத்வச்தராய் தேஹானத மன யயாஜிகள் அன்றிக்கே
பல அபி ச நதி ரஹீதராய் கொண்டு
பகவத் சமாராதன ரூபமான கர்மத்தை அனுஷ்டியா நிற்பாராய் –
வேதாந்ததிலே நிஷனாதராய்
த்வாதச அஷர முகேன-ஓம் நமோ பகவத் வாசுதேவாயா -முகேன அத்யாத்ம சிந்தராய்க் கொண்டு
சர்வேஸ்வரனுடைய வ்யூஹ அனு வ்ருத்தியை எப்போதும் பண்ணா நின்று கொண்டு
பகவத் பிராப்தியைப் பண்ணா நிற்கும் சுத்த வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை-

ப்ரவர்த்தன் நாபி கமலத்தில் இருந்து நான்முகன் என்றவாறு =

——————————

சூர்ணிகை -188

அநந்தரம் அநிருத்தர் படியை அருளிச் செய்கிறார் –

அநிருத்தர்
சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
கால ஸ்ருஷடிக்கும்
மிஸ்ர ஸ்ருஷடிக்கும்
கடவராய் இருப்பர்-

அதாவது -அநிருத்தர் சக்தி தேஜஸ் சமுத காஷாத அனிருத்த தநூஹரே -என்றும்
புருஷோபி மகாதயஷா பூர்ண ஷட் குண உச்யதே சக்தி தேஜௌ குனௌ
தஸ்ய ஸ்புடா கார்யவசனா முனே -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ குணங்களும் யுண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமான
சக்தி தேஜஸ் ஸூ க்களோடே கூடி –
சக்த்யா ஜகதிதம் சர்வ மனனதாண்டம் நிரந்தரம் பிப்ரததி பாதி ச ஹரிர
மணிசாநுரி வாணி கம தேஜஸா நிகிலம் தத்வம் ஜ்ஞாபய தயா தமனோ முனே -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும்
உஜ்ஜீவன ஹேதுவான தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
த்ருடி முதலாக த்விபிரார்தன பர்யந்தமாக உண்டான கால ஸ்ருஷடிக்கும்
துரீ யோயம் ஜகந்நாதோ ப்ரஹ்மணா மசருஜத புன முக பஹூரு பஜ ஜாதோ ப்ரஹ்மண பரமேஷ்டின
சதுர்விதோ பூத சர்வாச தேன ஸ்ருஷ்டச ஸ்வயம்புவா ப்ரஹ்மணாதயாஸ்
ததா வரணா ராஜா பிரசுர்யதோ பவன
தராய் மார்சேஷூ நிஷணாத பலவாதே ரமந்திதே தேவா தீ னேவ மன வானா ந ச மாம் மே நிரே ச்வத
தம ப்ராயாச தவிமே கேசி தமமே நிதானம் பிரகுர்வதே
ஆராத யஞ்ச நியந்தாரம் ந ஜானனதே பரஸ்பரம்
சல லாபம் குர்வதோ வயகரவேதா வா தேஷு நிஷ்ட்டிதா
மாம் ஜ ஜானநதி மோகன தே ஹி சம்சார வாதமனி இத்யேஷ மிஸ்ர சஸ்து கணேச தவ கீர்த்தித –
என்று விஷ்வக் சேனை சம்ஹிதையில் சொல்லுகிறபடி
ப்ரஹ்மாவினுடைய முக பாஹூ ருபாதஜராய்
ப்ரஹ்மணாதி வர்ணராய்
ரஜ பிரசுரராய் பூர்வபாமரர் நிஷதணராய் ஷலவாசதிலே ரம்யா நிற்பரே
ஈஸ்வரனை ஒழிய தேவாதிகளை ஆராதயாரக நினைத்து
அதிலே சிலர் தம பிரசுரராய்
பகவன் நிந்தனையைப் பண்ணி ஆராதயனாய நியந்தாவாய் இருக்கிற அவனை அறியாதே
வயகரமான வேத வாக்யங்களிலே மனசை வைத்து ஒருவர்க்கு ஒருவர் சல்லாபித்துக் கொண்டு
ஆகையாலே பகவத் ஜ்ஞான பக்திகளிலே அந்வயம் இன்றிக்கே
ஸ்வ ஜாதிகளிலே ரம்யா நின்று கொண்டு
ஸ்வ கர்ம பல அவசானத்திலே அதபதித்து கர்ம விஷயமான மனசை யுடையவராய்
ஜரா மரணங்களை அடைந்து சம்சார மார்க்க கர்மிகளாய்
திரியுமவர்கள் ஆகிற மிஸ்ர வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியும் பண்ணக் கடவராய் இருப்பர் என்கை-

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனர்க்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் -என்று
சமஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் அத்வாரமாகவும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவும் –
இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும்
இவ்வண்டத்திலே பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவுக்கும்-முக்தாத்ம சமஷ்டியோ நித்யாத்ம சமஷ்டியோ இல்லையே –
இதுக்கு கீழே ஸ்வ சங்கல்ப்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும்
இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவே கொள்ள வேணும் ஆகையால்
பிரத்யும்ன கிருத்யமாகச் சொன்ன சுத்த ஆத்ம ஸ்ருஷ்டி அத்வாரகம்
அநிருத்தன் கிருத்யமாகச் சொன்ன மிஸ்ர ஆத்ம ஸ்ருஷ்டி சத்வாரகம் என்ன ஒண்ணாது
ஆகையால் சுத்தாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ராத்மா ஸ்ருஷ்டியும்
சத்வார ஸ்ருஷ்டி தன்னிலே சேதனர் உடைய கர்ம விசேஷ பிரயுக்தமான சங்கல்ப விசேஷத்தாலே யாகக் கடவது
இந்த சுத்தவாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ரவாத்மா ஸ்ருஷ்டியும் எம்பெருமான் தானே அருளிச் செய்ய கேட்ட அநந்தரம்
பகவன் தேவ தேவேச சர்வஞ்க்ன பரமேஸ்வர
கிமேஷ பவிதா ஸ்ருஷ்டோ மிஸ்ரசாமோ ஜகத் பத்தி
சுத்த ஸ்ருஷ்டிம் விஹாயை ஷாம நிர்தய புருஷோத்தமா –
என்று சேனை முதலியார் கேட்க-
தயையே இல்லாமல் சுத்த ஸ்ருஷ்ட்டியை விட்டு மிஸ்ரா ஸ்ருஷ்ட்டியை எதற்க்காக பண்ணினீர் -தேவதேவ -பரமேஸ்வர சர்வஞ்ஞனே -என்று -கொண்டாடி கேட்டார் விஷ்வக் சேனர்
விஹாய சுத்த ஸ்ரீசஞ்ச மிஸ்ரா சாசய காரணம் ஸ்ருணுஷ்வ
கண நாத
தவம் தயாலு நிர்தயோ ந ச சர்வஞ்ஞோஹம் ந சந்தேஹச
ததாபி ச சருஜா மயஹம்
அநாதய விதயா சமமுஷ்ட சேமுஷீ காண நாரா நிஹா
வீஜயாஜா ஜ்ஞான பிரசங்கம் து நிஷித்த கரணம் ததா விஹிதா கரணஞ்சாபி வீஷயை ஷாம
பராதகான மிசராத்மா கரோம யேவ ப்ரஹ்மனா பரமேஷ்டினா
ஏவம் ஸூ கருத லேசேன சுத்த சத்வாத்மா கரோமி ச
மனுபர முகசாசோ யச சுத்த சாசோ மயேரித
சுத்த சத்வ மயாசே சர்வே மதபக்தி நிரதாச சதா மமார்ச்ச்சனா ஜீதேன தரியா
பக்த்யா பரமயா சைவ பரபத்த்யாவா மகா முனே பிராப்யம் வைகுண்டம்
ஆசாதய ந நிவர்த்தந்தி தேவயயா ஏவம் சர்வேஷூ குரவத ஸூ மான வேஷூ முமுஷூ ஷூ
ஸ்ருஷடி ஷயோ மகா நாசித நாரகீ பூச தருண வருதா
இதி ஜ்ஞாத்வா மிஸ்ராத்மா கரியதே லீலயா மயா –
என்று பகவான் தானே அருளிச் செய்கையாலே —
விளையாட்டுக்காக -செய்தென் -நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும்–லோக வைத்து லீலா கைவல்யம் -கண நாதா -என்று விழித்து -சேனைக்கு முதலியார் அன்றோ –
நான் தயாளு தான் -நிர்த்தயோ இல்லை-சர்வஞ்ஞன் தான் சங்கை இல்லை – -ஆனாலும் மிஸ்ரா ஸ்ருஷ்ட்டி பண்ணுவது
அநாதி காலம் அவித்யையால் மூடப்பட்ட ஞானம் – அஞ்ஞானம் உடையவர்கள் -நிஷித்த கரணம் -விஹித அகரணமும் – கடாக்ஷித்து —
பரமேஷ்ட்டி பிரம்மன் முகமாக -நடுவில் வைத்து -ஸூ ஹ்ருதம் லேஸம்–கதாசித் -சுத்த வர்க்க ஸ்ருஷ்டியும் பண்ணுகிறேன் –
இங்கு முக்குணம் இல்லாதவர் என்பது இல்லை -அனைவரும் முக்குண சேர்க்கையால் தானே
மனுக்கள் ஸ்ருஷ்ட்டி சுத்த வர்க்க ஸ்ருஷ்ட்டி -ரஜஸ் தமஸ் -இல்லாமல் -கிட்ட தட்ட சுத்த சத்வம் -பிரகிருதி சம்பந்தம் இருக்கும் வரை முக்குண சேர்க்கை உண்டே —
அர்ச்சன பரர்கள்–பகவத் தியானமே யாத்திரை -ஜிதேந்த்ரியர்கள் -பரம பக்திமான்கள் பிரபன்னர்கள் -ஸ்ரீ வைகுண்டம் அடைந்து திரும்பாமல் உள்ளார்கள்
கர்ம ஞானங்கள் நேராக மோக்ஷம் கொடுக்காதே –
முமுஷுவாக சர்வரும் ஆனால் -ஸ்ருஷ்டிக்க வேண்டிய தேவையே இருக்காதே -நரக பூமி புல் எழுந்து ஒழியும் –
முத்கலன்-நமனும் பேச –நரகில் நின்றார்கள் கேட்க -உபதேசமும் இல்லை -இங்கு -நரகமே ஸ்வர்க்கமானதே -நாமங்கள் யுடைய நம்பி
-லீலையாக மிஸ்ர ஸ்ருஷ்ட்டி செய்யப்பட்டது என்றாரே -விபீஷணன் பிரகலாதன் மிஸ்ர ஸ்ருஷ்டியால் வந்தாலும் சுத்த வர்க்கம் ஆனார்கள்

————————————————————-

சூர்ணிகை -189-

ஆக வ்யூஹத்தின் படியை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விபவத்தின் படியை விஸ்தரேண உபபாதிக்கிறார் மேல் –

விபவம்
அனந்தமாய்
கௌண
முக்ய
பேதத்தாலே
பேதித்து இருக்கும் –

பிறப்பில் பல் பிறவி என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் -விசேஷனே பவம் இதி விபவம் –

அதாவது
விபவோபி ததா அனந்தோ தவிதைவ பரிகீரதயதே கௌண முக்கய விபாகேன சாஸ்த்ரேஷூ ச ஹரே முனே -என்றும்
ப்ரா துர்ப்பாவோ தவிதா பரோகதோ கௌண முக்கய விபேததே-என்றும்-ப்ராதுர் பாவம் -அவதாரம் —
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -இறங்குகிறார் -அவதாரணம் -விசேஷண பவதி நமக்காக உருவாக்கிக் கொள்கிறார் –
சொல்லுகிறபடியே-இதுவும் விஷ்வக் சேனா சம்ஹிதை பிரமாணம் -அஜாயமானோ பஹுதா விஜாயதே –
விபவமானது பரி கணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அனந்தமாய்
கௌண முக்கியம் ஆகிற பேதத்தால் இரண்டு வகையாகப் பிரிந்து இருக்கும் -என்கை
விபவம் ஆவது -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஆவிர்பவிக்கை–ஆழ்வார்கள் -பிறந்து வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்து /
இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு சாஷாத் அவதாரத்துக்குத் தான் பொருந்தும்
இதில் கௌணம் என்றது அவரம் என்றபடி–வர உயர்ந்தது அவர தாழ்ந்தது
முக்கியம் என்றது ஸ்ரேஷ்டம் என்றபடி
கௌணம் ஆவது ஆவேச அவதாரம்– -ஆத்மாவை அதிஷ்டானம் பண்ணிக் கொண்டு என்றபடி
முக்யமாவது -சாஷாத் அவதாரம் -ஆவேசம் தான் -ஸ்வரூப ஆவேசம் என்றும் சக்த்யா ஆவேசம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதில் ஸ்வரூப ஆவேசம் ஆவது ஸ்வமான ரூபத்தாலே ஆவேசிக்கை–ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் –தானான தன்மை என்றபடி -ரூபம் இல்லை – /
ப்ரஹ்மத்வமும் குணம் -இதுவே இன்றியமையாது குணம் தன்மை -/
ஆதாவது பராசுராமாதி களான சேதனர் உடைய சரிரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை–
சக்த்யா ஆவேசமாவது -கார்ய காலத்திலே விதி சிவாதிகளான சேதனர் பக்கலிலே
சக்தி மாத்ரத்திலே ஸ்புரித்து நிற்கை –ஸ்வமான ரூபத்தாலே இல்லை –அந்த நிமிஷத்து தோன்றி -என்பதே ஸ்புரித்து –
இதனால் தான் இந்திரன் கோவர்த்தனம் பாரிஜாதம் -இத்யாதிகளில் மீண்டும் மீண்டும் அபசாரம் பட்டான் –
கார்த்த வீர்யார்ஜுனன் -சக்தி ஆவேசம் / பரசுராமர் ஸ்வரூப ஆவேசம் -/பெருமாள் முக்கிய அவதாரம் -/
அங்கதப்பெருமாள் ராவணன் இடம் சொல்லி -கார்த்த வீர்யார்ஜுனன் பெருமை சொல்லி -/
பரசுராமன் பல ராமனை அவதாரத்தில் சேர்த்து இலக்குமனை சேர்க்க வில்லையே- பரசுராமன் கள்ளை குடித்தாராமே -ரோஷ ராமர் என்கிறோமே
இத்யாதி கேள்விகளுக்கு -இந்த ஆவேச விபவமே காரணம் –

————————————

சூர்ணிகை -190-

இனி முக்கிய விபத்தோடு கௌண விபவத்தோடு
சாம்ய
வைஷம்யங்களை
அருளிச் செய்கிறார் –

மனுஷ்யத்வம்
திர்யக்த்வம்
ஸ்த்தாவ்ரத்வம்–குட்டை மா மா மரம் தானான முக்கிய அவதாரம் –
போலே
கௌணத்வமும்
இச்சையாலே வந்தது
ஸ்வ ரூபேண அன்று -ஸ்வரூபேண ப்ரஹ்மத்வம் தானே -இவை இச்சையால்
சாஷாத் அவதாரம் -ஸ்வரூபேணாவும் இச்சையாலும்
கௌணத்வமும்-ஸ்வரூபேண இல்லை இச்சையால் மட்டுமே என்றவாறு

அதாவது
மதிச்சயா ஹி கௌண த்வம் மானுஷ்யம் இச்சேசயயா ஸூ க்ரதவஞ்ச மத்ச்யத்வம்
நாரசிம்ஹ தவமேவச யதாவா தண்ட கராணயே குப்ஜாமரத்வம் மச்சேயா
யதா வர்ஜி முகதவஞ்ச மம சங்கல்ப தோ பவத சேனா பதே
மமேச்சாதோ கௌ ண த்வம் ந ச கர்மணா–விஷ்வக் சேனா சம்ஹிதை – என்கிறபடியே
ராம கிருஷ்ணாத் வாதியான மனுஷ்யத்வம்
மத்ஸ்ய கூர்மத்வாதியான திர்யக்த்வம்–குதிரை முகத்தானும் நரஸிம்ஹமும் இதுவே
குப்ஜாமரத்வம் ஆகிற ஸ்தாவரத்வம்–தாண்ட காரண்யத்தில் இந்த அவதாரம் என்பர் –
ஆகிற இவை -இச்சையாலே ஆனால் போலே
ஆவேச ரூபமான கௌணத்வமும் இச்சையாலே வந்தது என்னும் ஆகாரம் ஒக்கும்
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ அசாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று என்கை –
உபாத்த வசனங்கள் இச்சையாலே வந்தது என்கிற மாத்ரத்தை சொல்லிற்றே ஆகிலும்
கௌணத்வம் ஆவது மனுஷ்யத்வாதிகள் போலே
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு
அவதரித்தது அல்லாமையாலே
ஸ்வரூபேண வந்தது அன்று என்னும் இடம் சித்தம் இ றே-

———————————-

சூர்ணிகை -191-

இன்னமும் உபாஸ்யத்வ அனுபாஸ்யத்வ கதன முகத்தாலும்
உபயத்துக்கும் யுண்டான விசேஷத்தை
தர்சிப்பிதாக திரு உள்ளம் பற்றி
பிரதம் முக்கிய விபவத்தின் உடைய உபாயஸ்த்வத்தை சஹேதுகமாக அருளிச் செய்கிறார்

அதில்
அப்ராக்ருத விக்ரஹங்களுமாய்
அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே
யிருக்கக் கடவதான
முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு
உபாஸ்யங்களாய் இருக்கும் –

போற்றும் புனிதன் ராமானுஜன் -உபாசித்தார் இல்லை -பூசித்தார் என்ற அர்த்தமே –

அதாவது
உபய விதமான விபவத்திலும் கொண்டு
ப்ராதுர்ப்பா வாஸ்து முக்யாய மதமசதவாத விசேஷத அஜஹத ஸ்வ பாவ விபவா திவ்ய அப்ராக்ருத விக்ரஹா
தீபாத தீபா இவோ தப நானா ஜகதோ ரஷணாய தே அர்ச்சயா
ஏவஹி சேநேச சம்ஸ்ருயூதத தரணாய முக்க்யா உபாசயாச
சேநேச அநாச்சையான இதரான் விது -என்கிறபடியே –
-குண பூர்த்தி உள்ள இடமே சரணம் -ஸுலப்யம் அர்ச்சையிலே பூர்ணம் -அமுக்கிய அவதாரங்களில் குண பூர்த்தி இருக்காதே –
ஆதி யஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தது ஆகையாலே
அப்ராக்ருத விக்ரஹகங்களுமாய்
அஜோபிசன் அவயவத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -என்கையாலே
விடாதே இருந்துள்ள
அவதாரம் சத்யம் -இச்சையால் சங்கல்பம் மூலம் அவதாரம் -திருமேனியை -அப்ராக்ருதம் -இயல்பான திவ்ய மங்கள விக்ரஹம்– ஸ்வாம் திஷ்டாயா -தரித்துக் கொண்டு —
அபி சன் அத்தோடு இருந்து கொண்டே –விடாமல் -பிறவாதவனாக இருந்தே பிறந்து பிறப்பிலி -கர்மத்தால் இல்லை ஸ்வ இச்சையால் /
அவயவத்மா- அழிவற்றவனாக இருந்து கொண்டே பிறக்கிறேன் -விநாசம் அடைந்தே தானே உத்பத்தி -அழிவில் ஆரம்பித்ததே ஸ்ருஷ்ட்டி -/
சங்கல்பம் முடிந்த பின்பு திரும்புவேன் -அகில ஹேயா ப்ரத்ய நீக்காதவம் சொல்லிற்று
ஈஸ்வரனாக இருந்து கொண்டே நியந்த்ருத்வம் -விடாமல் பிறக்கிறேன் -பிறப்பித்தவனுக்கு அடங்க வேண்டாமோ என்னில்
-மூன்றும் விடாமல் -ஏற்ற திருமேனி எடுத்துக் கொண்டு –
அஜத்வ அவ்யவத்வ சர்வேஸ்வரத்வ வாதியான-
ஸ்வ பாவ விபவங்களை யுடையவையுமாய்-
அத ஏவ தீபத்தில் நின்றும் உத்பன்னமான ப்ரதீபம்
ஸ்வ காரணமான தீபத்தின் யுடைய ஸ்வ பாவத்தை
உடையதாய் இருக்குமா போலே-பரம ஸ்பஷ்டம் -ஜடாயுவை மோக்ஷத்துக்கு அனுப்பியதில் பீரிட்டதே பரத்வம் –
ஸ்வ காரண துல்ய ஸ்வ பாவமாய் இருக்கிற முக்கய ப்ரதுர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூக்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் -என்கை —

——————————————–

சூர்ணிகை -192-

அநந்தரம்
கௌண விபவத்தின் உடைய அனுபாசயத்வத்தை
சஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –

விதி சிவ பாவக -அக்னி
வியாச
ஜாமதக்ன
யார்ஜூன
விததே சாதிகள் ஆகிற–குபேரன் போன்றார்
கௌண ப்ரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுக்த ஜீவர்களை அதிஷ்டித்து
நிற்கையாலே
முமுஷூக்களுக்கு
அனுபாஸ்யங்கள் –

அதாவது
அநர்ச்சயா நபி வஷயாமி பரா துர்ப்பவாந யதாக்ரமம் சதுர்முகச து பகவான் ஸ்ருஷ்டிகார்யே நியோஜித
சங்க ராக்க்யோ மகாருதரச சம்ஹாரே விநியோஜித
மோஹனாககயச ததா புத்தோ வியாச ச சைவ மகா த்ருஷி வேதா நாம வ்யசனே தத்ர தேவேன விநியோஜித
அர்ஜூனோ தன்வி நாம ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகா நருஷி
வ ஸூ நாம பாவ கச்சாபி வித்தே ச ச ச ததைவ ச ஏவ மாதாயாச து சே நேச
ப்ரா துர்ப்பாவைர திஷ்டி நா ஜீவாத்மா நச சர்வே நோபா சதிர
வைஷ்ணவி ஹி சா ஆவிஷ்ட மாதரச தே சர்வே
கார்யார்த்த மமிததயுதே அநாசசயார்ச சர்வே
யேவைதே விருத்த வான் மகாமதே அஹங்கருதி யூதாச சேமே
ஜீவமிஸ்ரா ஹைய திஷ்டிதா -என்கிறபடியே

ஆராதிக்க தக்கவர்கள் அல்ல -பூஜ்யனாய் -ஸ்ருஷ்ட்டி செய்ய நியமிக்கப்பட்ட சதுர்முகன் -போல்வார்
ஸ்ருஷடி கர்த்தாவான ப்ரஹ்மாவும்
சம்ஹார கர்த்தாக்களான சிவ பாவகாக்களும்–சம் ஸூ கம் கொடுக்கும் சங்கரன் – ருத்ரன் ரோதானாதி பிறந்த உடன் அழுது ஓடி –/ அக்னி போல்வாரும் –
மோகம் பண்ணும் புத்தர் போல்வார் – -கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மான் –
வேதங்களை வ்யசித்த வ்யாசனும்-பிரித்து கொடுத்த வேத வியாசர்
கார்த்த வீர்யார்ஜுனன் -வில்லாளி
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்னி புத்ரனான பரசுராமனும்
பாவகன் அஷ்ட வசுக்களில் ஒருவன் -குபேரன்
அகார்யா சிந்தா சம மேவ பர துர்ப்பவம் சாபதர புரஸ்தாத் -என்கிறபடியே
சாபரதனாய்க் கொண்டு ஜகத்தை ரஷித்துக் கொண்டு போந்த
கார்த்த வீர்ய அர்ஜூனனும்
ஔ தார்யா பரதானனான வித தேசனும்-குபேரனும்
ஆதி சப்தத்தாலே
கரோடி கருதரான ககுஸ்த முசுகுந்த பரப்ருதி களுமாகிற
கௌண ப்ராதுர்ப் பாவங்கள் எல்லாம்
ஸ்வ தந்த்ர்யா ரூபமான அஹங்கார யுக்தரான ஜீவர்களை–ஸ்வாதந்த்ர யுக்தரான அஹங்காரம் -தேஹாத்ம அபிமானம் இல்லை இவர்களுக்கு –
அத்யந்த பாரதந்தர்யம் புரியாதவர்கள் -ஆத்ம ஞானம் கை வந்த ரிஷிகள் பர்வதம் போலே நம்மை ஒப்பிட்டால் –
ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானம் உண்டே இவர்களுக்கு -அத்தை அன்றோ இங்கு சொல்லிற்று
கார்யார்த்தமாக ஆவேச முகேன அதிஷ்டித்து நிற்கையாலே-
புபுஷூக்களாய் இருப்பார்க்கு ஒழிய
முமுஷூ க்களுக்கு உபாசயங்கள் அன்று -என்கை –
ஒவ் ஒருவருக்கும் ஒரு காரியத்துக்காக முன்பே சொல்லி அந்த காரியத்துக்காக ஆவேசம் -சரீரத்தில் ஜீவன் அஹங்காரம் இருக்கிறதே –
பூஜிக்கத்-உபாஸிக்கத் தக்கவர்கள் அல்லர்கள்
வியாச ஜாமதாகன யார்ஜூன -என்கிற இடத்தில்
அர்ஜூனன் என்கிறது பாண்டு புத்ரனான அர்ஜூனனையும் ஆக்கவுமாம்
அவனையும் ஆவேச அவதாரமாக இதிஹாசாதிகளில் சொல்லுகையாலே-நர நாராயணன் அவதாரமே கண்ணன் அர்ஜுனன் என்பர் –

இந்த கௌண பரா துர்ப்பாவ அனுபாயச்த்வம் தான்
ப்ரஹ்ம ருத்ர ரார்ஜூன வியாச சஹசர கர பார்க்கவா
ககுத சதா தரேயா கபில புத்தாதய யே சஹச்ரச
சகதயா வேசாவதாராச து விஷ்ணோ சததகால விக்ரஹா
அனுபாச்யம் முமுஷாணாம் யதேநதராக நயாதி தேவதா -என்று
சம்ஹிகாந்தரத்திலும் சொல்லப் பட்டது இ றே
காகுஸ்தர் ஆத்ரேயர் கபிலர் புத்தர் -அந்த காலத்தில் உள்ள விஷ்ணு விக்ரகங்கள் -தத்கால் -சக்தி ஆவேச அவதாரங்கள் –
இந்திரன் அக்னி தேவதைகள் போலே உபாஸிக்க தக்கவர்கள் -அல்லர் –
உபதாத வசனங்களில் புத்த முனியையும் ஆவேச அவதாரங்களில் ஒன்றாக சொன்ன இது
மாயுருவில் கள்ள வேடம் -என்று ஸ்வேன ரூபேண அவதரித்ததாகச் சொன்ன-மா யுருவில் என்பதால் -சாஷாத் அவதாரம் அன்றோ என்னில் –
நம் ஆச்சார்யர்கள் வசனத்தோடு விருத்தம் அன்றோ என்னில்
கல்ப பேதத்தால் அப்படி யும் செய்யக் கூடும் ஆகையாலே விருத்தம் அன்று
ஜாமதக் நயன ஸ்வரூப ஆவேச அவதாரமாய் இருக்க
சக்தி ஆவேசங்களோடு சஹபடித்தது
ஸ்வரூபேண ஆவேசிக்கிறது சக்தி விசேஷத்தாலே ஆகையாலே -என்று நியமித்துக் கொள்வது –

—————————————————————————

சூர்ணிகை -193-

ஆக
விபவங்களின் உடைய அனநதத்தையும்
அதில் சொன்ன முக்கய விபாகத்தையும்
அந்த கௌண முக்யங்களுக்கும் உண்டான பரஸ்பர விசேஷத்தையும்
அருளிச் செய்தார் கீழ் –
அநந்தரம்
கீழ்ச் சொன்ன பர வ்யூஹங்களிலும் முக்கய விபவங்களிலும்
உண்டான அவாந்தரபிதைகளும்-இடைப்பட்ட பேதங்கள் –
அவற்றின் உடைய புஜ ஆயுத வரணாதி பேதங்களும் சொல்ல வேண்டி இருக்க
சொல்லாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

நிதயோதித
சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான
சாதுராதமயமும்
கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான
பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபக்த
ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண
மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார
விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத
வர்ண க்ருத்ய ஸ்தாநாதி பேதங்களும்
துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய்
இருக்கையாலே
சொல்லுகிறிலோம்-

நிதயோதித சாந்தோதாதி பேத-மாவது –
நித்யோதிதாத சமப்பூவ ததா சாந்தோ தித்தோ ஹரி -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நித்ய முக்த அனுபாவ்யராய்
நிதயோதித சமஞ்ஞகராய் இருக்கும் பர வாஸூ தேவரும்
அவர் பக்கலில் நின்றும் உத்பன்னராய் சங்கர்ஷண வ்யூஹ காரணமாய்
சாந்தோதித சமஞ்ஞகராய் இருக்கிற வ்யூஹ வாஸூ தேவரும்
முதலான வாஸூ தேவ மூர்த்தியில் பேதமும் –
வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்த்ரங்களிலே சொல்லும்
நாலும் யுண்டாய் இருக்க மூன்று என்கிறது
வியூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூ தேவ ரூபத்தில் காட்டில்
அனு சந்தேய குணபேதம் இல்லாமையாலே என்று அபி யுகதர் சொல்லுகையாலே
இவர் கீழ் வியூஹ த்ரயம் என்று அருளிச் செய்ததுக்கு
இங்கு வ்யூஹ வாஸூ தேவர் யுண்டாக அருளிச் செய்ததுக்கும் விரோதம் இல்லை-

விசாக வ்யூஹ ஸ்தம்பம் -ஜாக்கிரதை தசை – ஸ்வப்ந தசை – -ஸூ ஷூ ப்தி தசை -துர்ய தசா -நான்கும் உண்டே -ப்ரஹ்மத்தின் அருகில் –

ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான சாதுராத்மயம்-ஆவது –
சாந்தோதி சோதபத்தி சொன்ன அநந்தரம்
சாதுராதமயம் அதோ பிண்டம் க்ருபயா பரமேஷ்டினா உபாச காநுக்ரஹார்த்தமய ய பரச்சேதி கீர்த்தயதே
சாந்தோதி தாத பிரவ்ருத்த தஞ்ச சாதுராத மயத்ரயம் ததா
உபாசகா நுக்ரஹார்த்தம் சேநேச மமததபுன
ஸூஷுப்தி ஸ்வப்ன சம்ஜஞம் யத ஜாகரத சம்ஜ்ஞம் ததா பரம சாதுர் மாஸ்யம் மகா பாக பஞ்சமம் பாரமேச்வரம் -என்றும்
பரம புருஷன் கிருபையால் -சாதுராத்மா த்ரயம் -நான்காக பிரித்து ஒவ் ஒன்றையும் மூன்றாக -கேசவாதி துவாதச -/பர வாசுதேவனை சேர்த்து ஐந்தாகும் என்றவாறு
ஆதயோ வ்யூஹோ மயா பரோ கதோ ஹய பரம தரிதயம் சுருணு
உபாசகா நுக்ரஹார்த்தம் ச்வப்னாதி பத சம்சதிதம ஸ்வப்ன நாதயவஸ்தா பேதச து தயாயி நாம கேதச நதயே
தத்த பதசத தேவா நாம தந்தி வருததயா தத மேவச ஸ்வப்ன நாதயவஸ்தா ஜீவா நாம அதிஷ்டாதர ஏவ நே
காமதம நாஞ்ச சேநேச ததபதசதோ மமேச்சயா உபாசயோஹம் மஹாபாக பதபேத பிரயோஜனம் -என்றும்
சொல்லுகிறபடியே-
ஸ்வப்னாதி அவஸ்தா பேதம் துக்கம் சாந்தியின் பொருட்டும் –
-உபாசகா நுக்ரஹார்த்தமாக தன கிருபையால் பண்ணினதாய்
தயாதிகளினுடைய கேதசா நதியின் பொருட்டும்
தத்தத பத சத ஜீவர்களுக்கு தனநிவ்ருத்தியின் பொருட்டுமாய்-
தத்தத் வசத ஜீவர்களுக்கு அதிஷ்டாதருதவேன தத்தத் பதச்தனாய் கொண்டு
காம வச்யரான சேதனர்க்கு உபாசயனாகையே பத பேத பிரயோஜனாய்க் கொண்டு
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் பிரத்யேகம் உண்டான
ஜாக்ரத ஸ்வப்ன ஸூ ஷுப்தி துரீய சம்ஜ்ஞகனாய்க் கொண்டு நாலு வடிவை உடையனாய் இருக்கை-
கேசவாதி மூர்த்யந்தரமும்-ஆவது –
ஏதத் அந்தர்கதா தாச சர்வே மூர்த்தயந்தே ரசமாஹவயா கேசவாதய த்வாதச
ச லலாடா திஷூ நிஷ்டிதா சரீர ரஷகாச சர்வே தயாயி நாம தாபச நதயே -என்றும்
கேசவாதயம் த்ரயம் தத்ர வா ஸூ தேவதா விபாவயதே
சங்கர்ஷணா ச ச கோவிந்த பூர்வம் த்ரிதயமதபுதம்
த்ரிவிக்ரமாதயம் த்ரிதயம் பிரத்யுமநாத உதிதம் முனே
ஹருஷீ கேசாதிகம் தத்வத அநிருத்தா நமஹ முனே -என்றும் சொல்லுகிறபடி
கேசவ நாராயண மாதவ -வ்யூஹ வாசுதேவ
கோவிந்த விஷ்ணு மது சூதன சங்கர்ஷணன்
த்ரிவிக்ரமன் வாமன ஸ்ரீ தர -பிரத்யும்னன்
ரிஷிகேசன் பத்ம நாபன் தாமோதரன் அநிருத்தன் –
லலாடாதிகளிலே நின்று சரீர ரஷண்த்தைப் பண்ணா நின்றுகொண்டு
தயாயிகளின் உடைய தாபசா நதியின் பொருட்டாய் இருப்பதாய்
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் ஓர் ஒன்றிலே மும் மூன்றாக உத்பன்னமாய்
மூர்த்த்யந்தர சமாஹவமாய் இருக்கிற கேசவாதி வ்யூஹாந்தரம்–
ஷட் தரிமசத பேத பின்னமான பத்ம நாபாதி விபமமும்-ஆவது –
பத்ம நாபாதிகாச சர்வே வைபவீயாச தவைச ஷட் த்ரிமசதா
சங்கயா சங்க யாத பராதான யேன கணேஸ்வர
ஷட் த்ரிமசத பேத பின நாச தே பத்ம நாபாதிகாச ஸூ ரா
அநிருததாத சமுத்த பனனா தீ பாத தீப இவேச்வரா -என்கிறபடியே
-36-/39 அவதாரங்கள் என்பர் தேசிகன் -/ பத்ம நாபன் போலே –
தீ பாத தீபான தாம போலே அநிருத்தாத உபபன்னங்களாய் பிரதானங்களாய்
ஷட் த்ரிம சத பேதத்தாலே பின்னங்களாய் இருக்கிற
பத்ம நாபாத யவதார விசேஷங்கள் –
இந்த பத்ம நாபாதிகள் தான்
விபவா பத்ம நாபாதய த்ரி ம ச ச ச நவசைவ ஹி பத்ம நாபோ தருவோ நந்த சக்த்யாத்மா
மது ஸூ தன வித்யாதிதேவ கபிலோ விச்வரூபோ விஹங்கமே கரோடாதமா
படபாவகதரோ தாமோ வாகீச்வரசததா ஏகாம்போ நிதிசாயீ
ச பகவான் கமலேஸ்வர வராஹோ நரசிம்ஹ ச
பீயூஷா ஹரணச ததா ஸ்ரீ பதிர்பகவான் தே கான தாதமா
அம்ருத தாரக ராஹூ ஜித காலனே மிக்ன
பாரிஜாத ஹர்ச ததா லோக நாதச து சாந்தாத்மா தததாதரயோ
மகா பிரபு நாயகரோ தசாயீ பகவான் ஏக ஸ்ருங்க தநுச ததா
தேவோ வாமன தேஹச து சர்வ வியாபி த்ரிவிக்ரம நரோ நாராயண ச சைவ ஹரி கிருஷ்ணச
ததைவச ஜவலதபரசுதாக ராமோ ராமாச்சா நாய்ச சதுர்க்கதி வேதவித பகவான் கல்கி–
பாதாள சயித பிரபி த்ரிம ச ச ச நவசைவைதே பத்ம நாபாதயோ மதா -என்று-
பத்ம நாபன் த்ருவன் அனந்தன் மது சூதனன் கபிலன் -விஷ்வா ரூபன் -தர்மன் -வாகீஸ்வரன் ஏக அம்போ நிதி சாயி -ஷீராப்தி சாயி
/கமலேஸ்வரன் வராஹன் நாரசிம்ஹன் அமிருதம் திருடி ஸ்ரீ பதி-மோஹினி ராகு ஜித் காலநேமி கொன்றவன் பாரிஜாத ஹாரன் தத்தாத்ரேயன்
ஆலிலை சயனம் -ஏக சுருங்க ஒத்தை கொம்பு வாமனன் த்ரி விக்ரமன் நரேன் நாராயணன் கோடாலி ராமன் பரசுராமன் சதுர்த்தி ராமன் -வேத வித் காளி பாதாள பிரபு —
முப்பத்து ஒன்பதாக அஹிர்புதனைய சம்ஹிதாதிகளில்
சொல்லிற்றே ஆகிலும்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே முப்பத்தாறாக சொல்லி இருக்கையாலே
இவர் ஷட் த்ரிமசத பேத பின்னம் என்றதில் குறை இல்லை
இனி அந்த முப்பத்து ஒன்பதிலே மூன்றைக் குறைத்து கொள்ளுகை இ றே உள்ளது
அவையாவன -கபில தத்தாத்ரய பரசுராம ரூபமான ஆவேச அவதாரங்கள்-குறைத்து -36-
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்–ஆவன –
அவதார கந்தம் ஆகையாலே சர்வ அவதாரங்களுக்கும் அநிருத்தரே காரணமாகச் சொல்லிற்றே ஆகிலும்
முன்பு சொன்ன பத்ம நாபாதிகளிலே சஹபடிதங்கள் ஆனவற்றில்
பூர்வ உத்பன்ன விபவத்தில் நின்றும் விபவாந்தரங்களாக உத் பன்னங்கள் ஆனவையும் உண்டு
என்னும் இடத்தை தர்சிப்பிக்கை முதலான சில பிரயோஜனங்களைப் பற்ற —ஒன்றில் இருந்து அடுத்த அவதாரம் போல்வன வேறே கோஷ்ட்டி –
நர நாரணன் / உபேந்திரனே -வாமனன் த்ரிவிக்ரமன் போல்வன –
பூர்வ உத்பன்நாத வைபவீயாத பராதுர்ப்பூத மகேஸ்வரா
பராதுர்ப்பாவா நதரான விததி தான கணேஸ்வர
முக்கயத உபேன தரா ச ச யதா முக்கய த்ரிவிக்ரம தனுர்ஹரி கிருஷ்ணச ததைவச -என்று
பிரித்து எடுத்துச் சொல்லப் பட்ட இந்தரனுக்கு துணையாய் இருந்து ஜகத் ரஷணம் பண்ணுகிற உபேந்திர அவதாரமும்
எல்லை நடப்பாரைப் போலே லோகத்தை அளந்து அவன் இழந்த ஐஸ்வர் யத்தைக் கொடுத்த த்ரிவிக்ரம அவதாரமும்
அவனுக்கு-இந்திரனுக்கு அம்ருத பிரதானார்த்த மாகக் கொண்ட ததிபக்தாவதாரமும்
வேத பிரதானார்த்த மாகக் கொண்ட ஹயக்ரீவ அவதாரமும்
சிஷ்யாச்சார்யா ரூபேணநின்று திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளின நர நாராயானா அவதாரங்களும்-தர்ம தேவதை இடம் பிறந்த நர நாராயணன் –
தனியாக கோயில் உண்டு தர்ம தேவதைக்கு அங்கு கீழே
அவர்களோடு ஒக்க தர்ம தேவதை பக்கலிலே பிறந்து லோக ரஷணம் பண்ணின ஹரியும்
கிருஷ்ணனுமான அவதாரங்களும்
பிரளய ரஷணம் மந்த்ராதாரத்வம் பூமி யுத்தரணம் ஆகிற இவற்றோடு
வித்யா பரதானங்கள் பண்ணின மத்ஸ்ய கூர்ம வராஹ அவதாரங்களும்
ஆதி சப்தத்தாலே கரோடீ க்ருதங்களுமான நரசிம்ஹ கல்கி அவதாரம் தொடக்க மான வையும் –

அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய ஸ்தாநாதி பேதங்கள் -ஆவன
கீழ் சொல்லப் பட்ட பர வ்யூஹ விபவங்கள் ஆகிற -அவற்றின் உடைய
புஜ ஆயுத நாம நியமச தத்ர தத்ர இச்ச்யா மம ஜாக்ரத சமஜ்ஜே சாதுராதமயே தத்த புஜச சதுஷ்டயம்
சாந்தோதி தாச து த்விபுஜா ஸ்வப்நாதயா கண நாயகா
ஆதி தேவோ ஜகந்நாதோ வா ஸூ தேவோ ஜகத்பதி
சதுர்புஜஸ் ச ச்யாமளாங்க பரமே வயோமதி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி ஷட் குண சந்தோதிசச சாந்தவபுர தவி புஜ புருஷாக்ருதி -என்றும்
புஜம் ஆயுத நியமங்கள் இச்சையால் உள்ளன -சாதுராத்மா -ஜாக்கிரதை நான்கு புஜங்கள் –கறுத்த திரு மேனி –வ்யூஹ வாசுதேவன் இரண்டு திருக்கைகள் –
கேசவா தயா குணாதயஷா மூர்த்யாந்தர சமாஹவையா உபாசக நாம சேநேச
புக்தி முக்தி பல ப்ரதா சர்வே சதுர புஜா ஜ்ஞேயோ பத்ம சங்காதி தாரகா
தத்த ச சாஸ்த்ரேஷூ ஜ்ஞேயோ லாஞ்ச நா பரணாதய
சதுச் சக்ர தாம மாம து சம்ருதவா
ஜாமபூ நத பரபம சதுச சங்கதரம் தேவம் நீல ஜீமுத சந்நிபம் இந்திர நீல நிபசயாமம் சதுர ஹசதைர் கதாதரம்
சதுர்புஜ தனுஷமந்தம் சந்த்ரபா சத்ருசா யுதிம்
சதுர ஹலதரம் தேவம் பத்ம கிஞ்ச ஜலக சந்நிபம்
முசலாசதரம் மகா விஷ்ணும்
அரவிந்தாபமேவ ச கடக பாணிம் சதுர ஹஸ்தம் அக்னி சந்நிபதேஜசம சதுர வஜ்ராதரம் தேவம் தருணாதிய சந்நிபம்
பட்டசாயுத ஹச்தஞ்ச புண்டரீகாப மேவ ச சதுர்பிர் முத்கரதரம் புஜைர் வித்யூத சமத்யுதிம் பஞ்சாயுத தரம் மாஞ்ச சஹாஸ்ராம்சு
சம்ப்ரபம் பாச ஹச்ததரம் தேவம் பாலார்ககச
த சந்நிபம் -என்றும்
இத்யாதிகளாலே சொல்லப் படுகிற
நான்கு திருக்கைகள் அனைவரும் –/பத்மம் சங்கம் தரித்து -அடையாளம் ஆபரணம் -மாறி -விளக்கமான சாஸ்திரங்கள் உண்டு
அனைவரும் சதுர்புஜம் /
கேசவன் -நான்கு கைகளிலும் -சக்கரம் தரித்து -பொன்னிறம்-நம் இடம் நெற்றி -கிழக்கு பக்கம் காக்கிறார் -மார்கழி மாதம் கேசவ மாதம் வடக்கே இங்கு தனுர்மாதம்
/ துவாதச ஆதித்யர் -அம்சகன் -பிராட்டி -ஸ்ரீ தேவி பிரதம நாமம் –
நாராயணன் –சங்கு -இந்திர நீலம் நிறம் -/மேற்கு / தாய் /பதன் ஆதித்யன் /அம்ருத உத்பாவில்
மாதவன் -கதை / இந்திரா நீல வர்ணம் -மார்பில் -மேல் பக்கம் காத்து -/மாசி / த்வஷ்டா -பிராட்டி கமலா
மூவரும் வாசுதேவன்
கோவிந்தன் –தனுஷ் சந்த்ர காந்தி ஒளி / வெண் மதி போலே / நடு கழுத்தில் தெற்கு பக்கம் -பங்குனி விஷ்ணு ஆதித்யன் /சந்த்ர சோபனா
விஷ்ணு -கலப்பை கையில் -தாமரை தாது வர்ணம் -வலது வயிற்றில் வடக்கு / சித்திரை தாதா ஆதித்யன் விஷ்ணு பத்னி
மது சூதனன் உலக்கை முசலம் தரித்து -அரவிந்த வர்ணம் -வலது மேல் கை / தென் கிழக்கு வைகாசி காரியமா ஆதித்யன் –
த்ரிவிக்ரமன் கட்கம் வாள் / நெருப்பு நிறம் -வலது கழுத்து -தென் மேற்கு -ஆணி மித்ரன் வராரோஹா
வாமனன் -வஜ்ரம் -இளம் சூர்யன் நிறம் -இடது வயிற்றில் வட மேற்கு வருணன் ஹரி வல்லப -ஆடி
‘ஸ்ரீ தரேன் ஈட்டி / புண்டரீகம் வண தாமரை நிறம் இடது மேல் கை ஆவணி இந்திரன் சாரங்கணி தேவி
அநிருத்தன் – ரிஷிகேசன் -பத்ம நாப-தாமோதரன்
ரிஷிகேசன் -சம்மட்டி மின்னல் நிறம் இடது கழுத்தில் கீழ் ரக்ஷகம் புரட்டாசி விவசுவான் ஆதித்யன் தேவதேசிகா
பத்ம நாபன் சங்கு சக்கரம் பஞ்ச ஆயுதம் சூர்யன் நிறம் முது இதய தாமரை ரக்ஷகம் எப்படி பூசா மஹா லஷ்மி
தாமோதரன் -பாச ஹஸ்தம் -பட்டாம்பூச்சி பின் கழுத்து உள்ளும் புறமும் வியாபித்து கார்த்திகை பர்ஜன்யன் ஆதித்யன் லோக சுந்தரி –

புஜ பேதங்களும்
வர்ண பேதங்களும்
இந்த வ்யூஹ பேத விபவ பேதங்களுக்கு எல்லாம் பிரத்யேகம் உண்டான க்ருத்ய பேதங்களும்
ஆமோதாதிகளும்–வாழும் இடங்கள்
அயோத்யா மதுராதி களுமாய்க் கொண்டு
வ்யூஹ விபவங்களுக்கு பிரத்யேகம் உண்டான ஸ்தான பேதங்களும்
ஆதி சப்தத்தாலே
கரோடீ க்ருதங்களான பூஷண வஸ்த்ராதி பேதங்களும்
துரவதரங்களுமாய் குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-என்றது
இவை எல்லாம் சொன்னாலும் ஒரு வாக்கு புத்தி பண்ணவும் அரியதாய்
அவதார ரஹச்யங்கள் ஆகையாலே மிகபும் குஹ்யமுமாய் இருக்கையாலே
சொல்லுகிறோம் இல்லை -என்கை-

பரத்வாதி பஞ்சகம் நடாதூர் அம்மாள் ஸ்தான பேதம்-அருளிச் செய்கிறார் –

———————————-

சூர்ணிகை -194-

லோகத்தில் ஜென்மங்களுக்கு ஹேது கர்மமாய் அன்றோ இருப்பது
இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது ஏது-என்ன அருளிச் செய்கிறார் –

அவதாரங்களுக்கு
ஹேது
இச்சை –

அதாவது
பஹூ தா விஜாயதே -என்றும்-கர்மாதீன பிறப்பு இல்லை -ஜாயதே இல்லை விஜாயதே விசேஷமாக பிறக்கிறான் -இச்சையால் பிறக்கிறான் –
பஹூ நி மே வயதீ தாநி ஜன்மானி-என்றும்
பல பிறப்பாய் -என்றும்
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்றும்
மனிசரும் முற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த -என்றும்
பஹூ விதமாக சொல்லப் படுகிற இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது
இப்படி அவதரிப்போம் என்னும் ஸ்வ இச்சை ஒழிய ஹேதவந்தரம் இல்லை -என்கை –
சம்பவாமி ஆத்மமாயயா -என்று தானே அருளிச் செய்தான் இ றே
ஆத்மமாயயா -என்றது ஆத்ம இச்சையா -என்றபடி
மாயா வயு நம ஜ்ஞானம் -என்று மாயா சப்தம் ஜ்ஞான வாசி ஆகையாலே
இச்சா ரூபமான ஜ்ஞானத்தைச் சொல்கிறது
இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -என்னக் கடவது இ றே –
இயம் வையூஹீ வை ஸ்திதி ரத கிலேச்சா விருஹதயே
விபூதி நாம மத்யே ஸூ ர நர திரச்சாமா அவதரன
சஜாதீயச தேஷா மிதிது விபவாக்கயா ம்பி பஜன
கரீச தவம்
பூர்ணோ வரகுண கணைச தான சதகயசி –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -என்றும்
ஏவம் ஸ்திதே தவதுபசம சரயணா பயுபாயோ மாநேன கேனசித அலபசயத
நோபலப்தும் நோசேத அமாதய மநுஜா தி ஷூ யோ நி ஷூ
தவம் இச்சாவிஹார விதி நாசம்வாதரிஷ்ய-அதி மானுஷ ஸ்தவம் -8- -என்றும்
அவதார ஹேது இச்சை என்னும் இடத்தை ஆழ்வான் விசதமாக அருளிச் செய்தார் இ றே-
அவதரித்து ஸுசீல்யம் ஸுலப்யம் காட்டி அனைவரையும் பக்தி மூலம் அடையலாம் என்று காட்டி அருளி -இந்திரியங்களுக்கு வசப்பட்டு -சகல மனுஷ நயன விஷயமாகி -அருளினீர் –

———————————————

சூர்ணிகை -195-

பலம்
சாது
பரித்ராணாதி
த்ரயம் –

அதாவது
பரித்ராணாய சாது நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்ததாய சம்பவாமி யுகே யுகே -என்று
த்ராணம் ரக்ஷகம் -பரித்ராபாய நன்றாக சம்ரக்ஷணம்
சாது பிரஹலாதன் போல்வார் -உயிரை மட்டும் காப்பது ரக்ஷணம் -வந்து சேவை சாதித்தது பரித்ராணாம் -தொழும் காதல் யானைக்கு வரா விட்டால் மழுங்குமே –
-தர்மம் ஸ் தாபனம் -சம் ஸ்தாபனம் -தன்னையே சாஷாத் தர்மமாக ஸ் தானம் -ஆக்க அன்றோ அவதாரம் -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
பெருமாள் சாமான்ய தர்மமும் காத்து-பித்ரு வாக்ய பரிபாலனம் – தன்னையும் தர்மமாக காட்டி அருளி – -கண்ணன் அப்படி அன்றோ -சாஸ்திரம் இவனை பின் தொடரும்
வெண்ணெய் திருடினது தப்பா இல்லையா பட்டி மன்றம் இல்லையே -பெருமாள் வாலி வாதம் பட்டி மன்றம் நிறைய உண்டே –
யுகம் தோறும் பிறக்கிறான் -/சாது பரித்ராணாமே பிரதானம் என்பர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் /
நஞ்சீயர் ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் என்பர் –
அவன் தானே அருளிச் செய்த படியே தன பக்கல் பிரேம யுக்தராய்
தன்னுடைய அனுபவம் ஒழிய ஷண காலமும் செல்லாதே
தன்னைக் கான வேணும் என்று ஆசைப் பட்டு இருக்கும் சாது ஜனங்களைத்
தன்னுடைய ரூப சேஷ்டித அவலோகன ஆலாபன தான முகேன ரஷிக்கையும்
தத் விரோதிகளான துஷ்க்ருதிகளை நசிப்பிக்கையும்
தன்னுடைய ஆராதனா ரூபமாய் ஷீணமாய்க் கிடக்கிற வைதிக தர்மத்தை
ஆராத்யனான தன ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கையும்
ஆகிற இம் மூன்றுமே பலம் -என்கை –
சாதவ்-உக்த லஷண
தர்ம சீலா
வைஷ்ணவ அக்ரேசரா
மத சமாஸ்ரயனே பிரவ்ருத்ததா
மன் நாம கர்ம ஸ்வரூபானாம்
வாங் மனஸா அகோசரதையா
மத தர்ச நேன வினா
ஆத்மதாரண போஷணாதி கம அல்பமானா
ஷண் மாத்ர காலம் கல்ப சஹாச்ரம் மன்வானா ப்ரதி சிதல
சர்வகாதரா பவே யுரிதி
மத ஸ்வரூப சேஷ்டித அவலோகன ஆலப நாதி தானேன தேஷாம் பரித்ராணாய
தத் விபரீதா நாம் விநாசாய ச
ஷீணச்ய வைதிகஸ்ய தர்மஸ்ய மத ஆராதனா ரூபச்ய ஆராத்ய ஸ்வரூப தாசநேன ஸ்தாபநாய
ச யுகே யுகே சம்பவாமி -கருத த்ரேதாதி யுக விசேஷ நியமோபி நாசதீ தயாதத-என்று இ றே–விதுர அக்ரூர மாலாகாரர் உத்தவர் சஞ்சயன் போல்வார்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
யே பக்தா பவதேக போக மநசோநனயாதம சஞ்சீவன தத் சம்ச்லேஷண
தத் விரோதி நித நாதாய ததம வநாதரீச்வர
யதவாதரச ஸூர நராத யாகார திவ்யா கருதிச தேநைவ
தறி தசைர் நரை ச ச ஸூ கர்ம ஸ்வ பராததித்த பராத்த நம-ஸ்ரீ ஸூ ந்த்ர பாஹு ஸ்தவம் — -என்று இ றே ஆழ்வானும் அருளிச் செய்தது –

———————————–

சூர்ணிகை -196-

அவதாரம் இச்சம் என்று அறியாதே கர்ம நிபந்தனமாக நினைத்து மந்த மதிகள்
பண்ணும் பிரசனத்தை அனுவதிக்கிறார் –

பல
பிரமாணங்களிலும்
ப்ருகு சாபாதிகளாலே
பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது
கர்மம் ஆக வேண்டாவோ என்னில்

கவிகளில் உசனா கவியாக இருக்கிறேன் -சுக்ராச்சார்யார் இந்த கவி -மாதா கவ்யா -பித்ருவுடைய தர்ம பத்னி –சாபம் கொடுத்து -ராம கிருஷ்ணா அவதாரம் அதனால் –
உத்தர ராமாயண ஸ்லோகம் –
ஜமதக்கினி பிருகு வம்சம் பார்க்கவ ராமரும் இந்த வம்சம்

அதாவது இதிஹாச புராண ரூபமான பல பிரமாணங்களிலும்
பதிவ்ரதா தர்மபரா ஹதா யேன மம ப்ரியா ச து பரியா விரஹித சிரகாலம் பவிஷ்யதி –
என்றால் போலே யுண்டான ப்ருகு சாபம் முதலான வற்றாலே
பிறந்தானாகச் சொல்லுகையாலே அவதார ஹேது இச்சை அன்றியே கர்மம் ஆக வேண்டாவோ -என்னில் என்கை –

——————————————

சூர்ணிகை -197-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அவை தன்னிலே
சாபம் வியாஜ்யம்
அவதாரம் இச்சம்
என்று
பரிஹரித்தது-
அதே உத்தர ராமாயணம் இப்படி சொல்லுமே

அதாவது
தபசாராதி தோ தேவோ ஹய பரவீத பகவத தசல லோகா நாம சம்ப்ரியார்த்ததம் து சாபம் தம க்ருஹய முகதவான் -என்று
உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும்
சாபம் லோகங்களுக்கு பிரியார்த்தமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றாரே -அதனாலே இச்சையால் அவதாரம் –
சர்வாவாததே ஷூ வை விஷ்ணோர் ஜன நம ச்வேச்சசயைவ து
ஜரகாச்த்ரா சசலே நைவ ச்வேச்சயா கம நம ஹரே த்விஜ சாப சசலே நைவ அவதீர்ணோபி லீலையா -என்று
லிங்க புராணத்திலும் சொல்லுகையாலே
வேடன் அம்பு / உலக்கை -/ ஜரா வேடன் -கட்டை விரலில் பட -அது வியாஜ்யம் / த்விஜ சாபம் -ப்ராஹ்மணர் சாபம் -/பிரபாச க்ஷேத்ரம் –
பிருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கிற இவை தன்னில்
சாபம் வ்யாஜ மாதரம்
அவதாரம் இச்சாக்ருஹீதம்
என்று பரிஹரித்தது -என்கை –

——————————————-

சூர்ணிகை -198-

ஆக
இப்படி விபவத்தை உபபாதித்த அநந்தரம்
அந்தர்யாமித்வத்தை
உப பாதிக்கிறார்

அந்தர்யாமித்வம்
ஆவது
அந்த பிரவிசய
நியந்தாவாய்
இருக்கை –

கார்த்த ரூபம் -இரா மதமூட்டுக்குவாராய் போலே -நியமன அர்த்தமாக

அதாவது
ய ஆத்மா நம நதரோ யமயதி
என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜனா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர் சேஷ சய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித -என்றும்–சாஸ்தா நியமிப்பவர் -அசேஷ -சமஸ்தத்துக்கும் உள்ளும் புறமும் வியாபித்து நியமனம் –
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சேதனருடைய யுள்ளே பிரவேசித்து
சகல பிரவ்ருதிகளுக்கும் நியந்தாவாய் இருக்கை
அந்தர் யாமித்வம் -என்கை-

—————————————–

சூர்ணிகை -199-

இது தான் ஆத்மாவின் உள்ளே தன் ஸ்வரூபத்தாலே வியாபித்து நின்று
நியமிக்குமதுவும்
ச விக்ரஹனாய்க் கொண்டு
ஹிருதயத்திலே வியாபித்து இருந்து நியமிக்குமதுவும் கொண்டு
த்வி விதமாய் இருக்கையாலே
உபயத்தையும் அருளிச் செய்கிறார் –

உளன் கண்டாய் நாள் நெஞ்சே -உத்தமன் என்றும் -உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் –இரு வகை என்பதால் மீண்டும் –ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்கிறார்களே -ஸ்புரித்து இவர்கள் போல்வாருக்கு –
பூ சத்தாயாம் தாது -அனைவர் உள்ளும் உண்டே சத்தைக்கும்-

ஸ்வர்க்க
நரக
பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்
சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே
சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்
அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு —

அதாவது –
அந்தர்யாமி ஸ்வரூபஞ்ச சர்வேஷாம் பந்துவத ஸ்திதம் -என்று தொடங்கி-
ஸ்வர்க்க நரக பிரவேசேபி பந்து ராதமாஹி கேசவ -என்று சொன்னபடியே
புண்ய நிபந்தனமாக ஸ்வர்க்கத்தை பிரவேசிக்கையும்
பாப நிபந்தனமாக நரகத்தை பிரவேசிக்கையும்
உபய நிபந்தனமாக கர்மத்தை பிரவேசிக்கையும்
முதலான எல்லா அவஸ்தை களிலும்
எல்லா சேதனர்க்கும் இரா மடம் ஊட்டுவாரைப் போலே
உள்ளேயே பதி கிடந்தது–பதம் -இடம் -பதி என்றவாறு –
அந்தர்யாமி உள்ளே இருந்து நியமிக்கை– அந்தராத்மா உள்ளே இருந்தால் தானே சத்தத்தையே —
சத்தையையே பிடித்து நோக்கிக் கொண்டு போருகையாலே
துணையாய்
அவர்களை ஒரு காலும் விடாதே–அவகாசம் பார்த்து இருப்பானே -சத்து என்றாலே ப்ரஹ்மாத்மகம் தானே -கேட்டு அலைந்த காலத்திலேயே விடாதவன் அங்கு சென்றாலும் விடுவானோ –
அந்தராத்மாவாய் நிற்கும் நிலைக்கு மேலே —
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜயோ திரிவாதூமாக -என்றும்–புகை இல்லாத ஜ்வாலை போலே –
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா-என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே–மின்னல் விழுங்கிய கருப்பு மேகம் என்று கொள்ள வேண்டும் –
ஜ்யோதி ரூப மயமான ச்யாமளமான தன்னை முட்டாக்கிடும் படி
செம்பொனே திகழுகிற புகராலே நீல தோயத்தை விழுங்கின
வித்யுல்லேகை போலே இருக்கையாலே
பாஹ்ய விஷய பிரவணமான மனசை
அதில் நின்றும் பற்று அறுத்து
தன் பக்கலிலே பிரவணமாம் படிக்கு
சுபாஸ்ரயமான திரு மேனியோடு அந்த சேதனர்க்கு
த்யான ருசி பிறந்த போது த்யெயன் ஆகைக்காகவும்
புத்த்யாதிகளுக்கு நியாமகனாய்க் கொண்டு
அவர்களை ரஷிக்கைக்காகவும்
நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்காலே
பந்து பூதனாய்க் கொண்டு
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்ச சாபயதோமுகம்-என்கிற ஹிருதயத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை
அந்தராத்மதையை முதலில் சொல்லி
அதுக்கு மேலே ச விக்ரஹனாய்க் கொண்டு ஹிருதய கமலத்தில் இருக்கும் இருப்பைச் சொல்லி தலைக் கட்டிற்று –
விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதிகளைச் சொல்லி வருகிற பிரகரணம் -ஆகையாலே-

——————————————————–

சூர்ணிகை -200-

ஆக அந்தர்யாமித்வத்தை உப பாதித்தாராய் நின்றார் கீழ் –
அநந்தரம்
அர்ச்சாவதாரத்தை உப பாதிக்கிறார் —

அர்ச்சாவதாரம் -ஆவது
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே
விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி
சந்நிதி பண்ணி
அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும்
கிருஹங்களிலும்
எழுந்து அருளி நிற்கும் நிலை –

அர்ச்சா -ப்ரதிமா –அர்ச்சா பூஜ்யா என்றுமாம் / அவதாரம் -அவதாரத்துக்கு பிரதிநிதி -அர்ச்சாவதாரம் /அவதார ரஹஸ்யம் -நான்கு ஸ்லோகங்கள் -6-ரஹஸ்யம்
1–அவதாரம் மெய்-2- பெருமைகள் குறையாமல்-3- அப்ராக்ருதம் –4-கர்மத்தால் இல்லை கிருபையால்-5- -தர்மம் குலையும் பொழுது-6- சாது சம்ரக்ஷணத்துக்கு –
விருப்பப்பட்ட படி சேவை -அர்ச்சாவதாரமும் சேர்த்து -அருளி -/கிருஹர்ச்சா — கனிவார் வீட்டு இன்பம் -ஆழ்வார் /
பதி கிடந்து உறைவான் -அவனுக்கு மிகவும் ப்ரீதி-அன்றோ
மோந்து பார்த்து கொண்டு இருப்பான் -வியாக்யானம் -/
பரவாசுதேவன் வ்யூஹம் விபவம் சொல்லும் பொழுது அவனை விளக்கி அர்ச்சை என்றாலே திவ்ய தேசம் இது ஒன்றே நமக்கு போக்கிடம் –
ஆஜகாம முகூர்த்த யத்ர-ராம -ச லக்ஷ்மணன் கதையும் கையுமாக -ராமன் இருக்கும் இடம் வந்தார் -என்று சொல்லாமல் —
-ராமன் எங்கு லஷ்மணன் உடன் கூடி இருந்தாரோ அங்கு -இடத்துக்கு பிரதான்யம் -திருப்புல்லாணி -என்றவாறு –
திவ்ய தேசம் முதலில் -அப்புறம் தானே பெருமாள் வந்தார் -வண்டினம் முரலும் சோலை இத்யாதி -பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை அன்றோ –
எந்த திவ்ய தேசத்துக்கு மங்களா சாசனம் -சொல்கிறோம் -ஸ்ரீ ரெங்கம் மாலை பிரசாதம் என்கிறோம் -பெருமாளும் திவ்ய தேசத்துக்கு மாலை போலே எழுந்து அருளி உள்ளார் –
திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாரத்திலே மண்டி –
நீர் மலி வையத்து நீடு இருப்பாரே -திருக்கண்ணபுரம் இறுதி பதிகம் -கார் மலி கண்ணா புறத்து அடிகளை பாடினேன் இத்தை சொல்லி தெள்ளியீர் தேவர் அனுபவம் இங்கு தானே
பாணனார் திண்ணம் இருக்க –நாணுமோ–காணுமோ கண்ணபுரம் என்று காட்டுவாள் -எங்கு இருந்தும் பார்க்கலாம் –

அதாவது –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே-முதல் திருவந்தாதி -44- என்கிறபடியே
ஆஸ்ரிதர் யாதொன்றை தனக்குத் திரு மேனியாகக் கோலினார்கள்-அத்தையே
தனக்கு வடிவாகக் கொள்ளும் என்றபடியே-
இச்சா க்ருஹீதானம் என்றது ஆஸ்ரிதர் இச்சைப்படி என்று அன்றோ கொள்கிறான் -அவன் திரு உள்ளபடி தானே வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் –
ஆஸ்ரிதரான சேதனர்க்கு அபிமதமான
ஸ்வர்ண ரஜதாதி சிலாபர்யந்தமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்திலே
அயோத்யா மதுராதி தேச நியமம் என்ன
பதினோராயிரம் சம்வச்த்ரம் நூறு சம்வச்தரம் என்றால் போலே யுண்டான கால நியமம் என்ன
தசரத வஸூ தேவாதிகள் என்றால் போலே சில அதிகாரி நியமம் என்ன
இவற்றை யுடைத்தாய் கொண்டு சந்நிதி பண்ணின
ராம கிருஷ்ணாதி விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே –
பௌம நிகேத நேஷ வபி குடீகுஞ்ஜே ஷூ ரெங்கேஸ்வர -உத்தர சதகம் -72- -என்கிறபடியே–இல்லங்கள் தோறும் போகிறீர் -குடில்களிலும் -ஸ்ரீ ரெங்கேஸ்வரனே–
திரு நாகை ஏழும் இரண்டும் ஒன்றும் -ஸூவ அனுபவம் ஏழு – பர உபதேசம் மூன்று – பலம் சொல்லி தலைக்கட்டுகிறார் –
எல்லா திவ்ய தேசங்களையும் சேர்த்து திரு நாகை மங்களா சாசனம் –
ஒருதேச நியமம் இல்லாத படியாகவும்
அர்ச்சகனுடைய அபேஷா காலம் ஒழிய தனக்கு என்று ஒரு கால நியமம் இல்லாத படிக்கும்–தீர்த்தம் பிரசாதியாமல் –
64-சதுர் யுகம் திருக்கண்ணபுரம் அதுக்கு முன் திருவெள்ளறை —
ருசி யுடையார் எல்லாருக்கும் ஆகையாலே இன்னார் எனபது ஓர் அதிகாரி நியமம் இல்லாத படியாகவும்
சந்நிதி பண்ணி
சர்வ சஹிஷ்ணு -என்கிறபடி -சஹிஷ்ணு வாகையாலே
அவர்கள் செய்யும் அபராதங்களைக் காணாக் கண் இட்டு
அர்ச்சக பராதீநா கிலாதம் ஸ்திதி -என்கிறபடியே-
பார்க்காமல் முதலில் பார்த்து இதிலே உள்ளது உதாசீனரை போலே -தெரிந்தும் தெரியாமல் திருந்த அவகாசம் பார்த்து –
அர்ச்சக பரதந்த்ரமான ஸ்நான ஆச நாதிகளான
சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் நிலை அர்ச்சாவதாரம் -என்கை –
அர்ச்சா பூஜா பிரதிமயோ -என்கையாலே–அர்ச்சா சப்தம் பிரதிமா வாசி –

—————————————–

சூர்ணிகை -201-

இவ் வர்ச்சாவதாரத்தின் யுடைய
ருசிஜனகத்வாதி குண பூர்த்தியை
அருளிச் செய்கிறார் –

1—ருசி ஜனகத்வமும்
2–சுபாஸ்ரயமும்
3–அசேஷ லோக சரண்யதவமும்
4–அனுபாவ்யத்வமும்
எல்லாம்
அர்ச்சாவதாரத்திலே
பரி பூர்ணம் –

நான்கிலும் பரி பூர்ணம் -ருசி ஜனகத்வம் வைஷ்ணவ -வாமனத்தவம் -திருக்குறுங்குடி – பாதமே சரணாக தருவான் –உதார குணம் வானமா மலையில் கொழுந்து விடும்
பொது நின்ற பொன்னம் கழல் சாமான்ய அதி தைவம் -கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் –
மருந்தும் விருந்தும் இவனே –

அதாவது
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போரும் சேதனர்க்கு தன்னுடைய
ரூப ஔதார்ய குணங்களாலே வைமுக்யத்தை மாற்றி
தன் பக்கலிலே ருசியை ஜனிப்பிக்கையும்–
ருசி பிறந்த அநந்தரம்
தன்னை பஜிக்குமவர்களுக்கு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம் படி
சுபாஸ்ரயமாய் இருக்கையும்–இரண்டு கோட்டையும் ஆக்ரமித்து நாட்டை க் கொள்வாரைப் போலே -மங்களம் ஏற்படுத்த வல்ல ஸ்தானம் சுபாஸ்ரயம் –
அவ்வளவு அன்றிக்கே தன்னையே உபாயமாக சுவீகரிக்கும் அளவில்
குணாகுண நிரூபணம் பண்ணாதே
சகல லோகங்களில் உள்ளவர்களுக்கும் சரண வர்ணார்ஹமாய் இருக்கையும்-சமோஹம் சர்வ பூதேஷூ –
உபாயமான மாத்ரமாய் ஒரு தேச விசேஷத்திலே போனால்
அனுபாவ்யமாம் படி இருக்கை அன்றிக்கே
வை லஷண்யத்தில் வாசி அறிந்தவர்களுக்கு
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்னும்படி
அனுபாவ்யமாம் படி இருக்கையும் ஆகிற
இவை எல்லாம் அர்ச்சாவதாரத்தில் பரி பூரணமாய் இருக்கும் என்கை –
விலக்ஷண ஞானம் உள்ளவர்கள் –தொண்டர் அடிப்படை ஆழ்வார் -திருப்பாண் ஆழ்வார் -போல்வார் —
ஸூ ருபாமா பிரதிமாம் விஷ்ணோ பிரச்னனவாத நேஷானாம்
க்ருதவாதமான ப்ரீதி கரீமா ஸ்வர்ண ரஜ தாதிபி தர்மசசயதே தாம பரணமேத
தாம் பஜேதே தாம் விசிந்தயேத் விசதய பாசத தோஷச்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம்-என்று
இவ் வர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தை
தனக்குத் திருமேனியாகக் கொண்டு
அவர்களுக்கு உபாசயனுமாய் பிராப்யனுமாய்
இருக்கும் என்னும் இடம் ஸ்ரீ சௌநக பகவானாலும் சொல்லப் பட்டது இ றே-
அரங்கத்து அமலன் முகத்து -அஞ்சேல் என்று வைத்த திருக்கைகள் – இரண்டு தூணுக்கு நடுவில் ஒரு முஹூர்த்தம் மட்டும் இல்லாமல் அனைவருக்குமான இருக்கும் அமலன் –
அடி தோறும் அர்ச்சை –வைபவமும் சர்ச்சையும் சேர்ந்தே அருளிச் செய்கிறார் -மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யார் உய்யலாமே –
அநுகாரமும் அர்ச்சையில் -வடவரை நின்றும் வந்து இடவகை கண்ணபுரம் கொள்வது நானே -கடல் ஞாலம் செய்தெனும் யானே-நம் ஆழ்வார்
பாடவைத்த முக்கோட்டை திருக்கண்ணபுரம் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை என்று வாய் வெருவி–மெய்யம் வினவி -உருகினாள் உல் மெலிந்தாள்-பெருகு நீர் கணபுரம்-
முலையோ முழு முற்றும் போந்தில–பெருமாள் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –
கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ -வாயால் சொல்ல முடியாத நிலையிலும் கை தொழுகிறாள் இவள் –
அக்னி கார்யம் செய்து ப்ரஹ்மம் – -யோகி ஹிருதயம்– சம தர்சனம் எங்கும்-காணலாம் – புத்தி இல்லா மந்த மதிகளுக்கும் விக்ரஹ ரூபம் அர்ச்சை –

————————————————-

சூர்ணிகை -202-

இன்னமும் இவ் வர்ச்சாவதார குணாதிக்யத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்வ ஸ்வாமி பாவத்தை
மாறாடிக் கொண்டு
அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும்
அசவந்தரைப் போலேயும்
இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு
சர்வ அபேஷிதங்களையும்
கொடுத்து அருளும் –

சர்வ அபேக்ஷித்ங்களையும் கொடுத்து அருளும் என்று பிரபந்தம் நிகமானம் -தானாகே அமைந்ததே

அதாவது
ஸ்வ தவமா தமநி சஞ்ஜாதம் ஸ்வாமி தவம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிறபடியே
சேதனனுக்கு ஸ்வத்வமும்-தனக்கு ஸ்வாமி தவமும் வ்யவஸ்திதமாய் இருக்க
இவன் தன் உடைமைகளோடு ஒக்க அவனையும் சஹபடிக்கும்படி–எல்லாம் எடுத்து வைத்து தீர்த்தம் முறுக்கு படுக்கை போலே பெருமாளையும்
-பெருமாள் பெட்டி என்று அன்றோ சொல்கிறான் -இவன் –
ஸ்வாமித்வம் இவன் பக்கலிலும் ஸ்வத்வம் தன் பக்கலிலும்
ஆக –தன் இச்சையால்– மாறாடிக் கொண்டு–இதுவும் அவன் ஸ்வாதந்தர்ய கார்யம் அன்றோ -மா முனிகள் அழகாக காட்டி அருளுகிறார்
யஸ் சர்வஜ்ஞ்ஞஸ் சர்வவித் பராசய சக்திர் விவிதைவ சரூயதே -என்றும்–அறிவு பூர்த்தி -சக்தி பூர்த்தி –
ந தசயேசே கச்சந -என்றும்–ஓத்தார் மிக்கார் இலையாக மா மாயன்
சர்வேச்வரச சர்வத்ருக் சர்வவேததா சமஸ்த சக்தி பரமேச்வராககைய -என்றும்–
சொல்லுகிறபடி
சர்வஜ்ஞ்ஞனாய்
சர்வ சக்தியாய்
நிரந்குச ஸ்வ தந்த்ரனாய்–அங்குசம் இட ஆள் இல்லையே
இருக்கிற தன்னை அமைத்துக் கொண்டு
தன் காரியமும் பிறர் காரியமும் அறிய மாட்டாத அஜஞரைப் போலேயும்
தன்னைத் தான் ரஷிக்க மாட்டாத அசக்தரைப் போலேயும்
தனக்கு என ஒரு முதன்மை இல்லாத அஸ்வதந்தரைப் போலேயும்
இரா நிற்கச் செய்தேயும்
விமுகரையும் உட்பட விட மாட்டாத படி கரை புரண்டு செல்லுகிற காருண்யம் இட்ட வழக்காய்க் கொண்டு-
சேதனன் இட்ட வழக்கு இல்லை -இவனது காருண்யம் இட்ட வழக்கு அன்றோ –
நேத்ர புத்ர விதரணம் முதலாக மோஷ ஸ்தான பர்யந்தமாக
யதாதிகாரம் சேதனருடைய சகல அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் என்கை –

அர்ச்சாவதார ரச சர்வேஷம் பாந்தவோ பக்த வத்சல
ஸ்வ தவமாத்மநி சஜ்ஞ்ஞாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்திதம் –விஷ்வக்சேனர் சம்ஹிதை -என்று
அர்ச்சாவதாரமானது சர்வர்க்கும் பாந்தவமாய் பகவத் ஸ்வம்மாய் இருக்கும்
ஸ்வத்வமானது ஆத்மாவின் பக்கலிலும் ஸ்வாமித்வம் ஆனது என் பக்கலிலும் வ்யவஸ்திதமாய் இருக்கும் என்றும்
இதிவ்யவஸ்திதே சாபி மமாயம் கேசவசச தவதி மமாயம் ராம இதயேவ தேவ பிரசுலாஞ்சந-என்றபடி
சேஷித்வம் வ்யவஸ்திதமாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய கேசவன் என்றும்
பரசுவை அடையாளமாக உடையனான தேவனான ராமன் என்னுடையவன் என்றும்
மமாயம வாமனோ நாம நரசிம்ஹாக்ருதி பிரபு வராஹ வேஷா பகவான் நரோ நாராயணஸ் ததா -என்று
என்னுடையவன் இந்த வாமனானவன்
பிரபுவான நரசிம்ஹ ரூபியானவன்
வராஹ வேஷத்தை யுடைய பகவான்
அப்படியே நர நாராயணன் -என்றும்
ததா கிருஷ்ணச ச ராம்ச ச மமயாமிதி நிரதிசேத மதகராமவாசீ பகவான் மமைவேதி ச தீர் பவேத -என்னும்படி
கிருஷ்ணனும் ராமனும் என்னுடையவன் சொல்லா நிற்கும்
என்னுடைய கிராமத்தில் இருக்கும் பகவான் என்னுடையவன் என்றும் மமத்வ புத்தி யுண்டாகா நிற்கும்
சிந்தயேசச ஜகந்நாதம் சுவாமி நாம பரமார்த்தததா அசக்தம்
அஸ்வ தரஞ்ச ரஷ்யஞ்சாபி ஜநார்த்தனம் -என்று
பரமார்த்ததால் ஜகன்னாதனாய ஸ்வாமியான ஜனார்த்தனனை அசக்த னாகவும்
அஸ்வ தந்த்ரனாயும் ரஷ்ய பூதனாகவும் சிந்திப்பதும் செய்யா நிற்கும்–ஜகந்நாதன் ஸ்வா தந்தர்ய பலத்தால் இப்படி ஆக்கி நிற்குமே –
பொன்னுலகம் ஆளீரோ புவனா முழுவதும் ஆளீரோ–குருவி
காட்டும் மூலையில் குடில் கட்டி மிதுனம் வாழும் –
திசசயா மகா தேஜோ புங்க்தே வை பக்த வத்சல ஸ்நானம் பானம் ததா யதா ராம குருதே வை ஜகத்பதி –
என்று பெரிய தேஜஸ் சை யுடைய ஜகத்பதி யானவன்-பக்தனுக்கு வத்சலனாய்க் கொண்டு
அவன் இச்சித்த போது அமுது செய்யா நிற்கும்
அப்படியே ஸ்நானத்தையும் பானத்தையும் யாத்ரையும் பண்ணா நிற்கும் -என்றும்
ஸ்வ தந்த்ரச ச ஜகன்நாதோபி அஸ்வதந்த்ர்யோ யதா ததா
சர்வ சக்தி ஜகந்தாதாபி அச்சக்த இவ சேஷ்ட தே -என்று
ஸ்வ தந்த்ரனாய் ஜகன்நாதனாய் இருக்கச் செய்தேயும் அவன் யாதொருபடி
அஸ்வதந்த்ரன் -அப்படி யாகா நிற்கும்
சர்வ சக்தியாய் ஜகத்துக்கு ஸ்ரஷ்டாவாய் இருக்கச் செய்தேயும் அசக்தரைப் போலே சேஷ்டியா நிற்கும் என்றும்
சர்வான் காமான் தத ச்வாமயபி அச்சக்த இவ லஷ்யதே அபராதா நபி ஜஞச சன சதைவ குருதே தயாம -என்று
எல்லா கர்மங்களையும் கொடா நின்று ஸ்வாமியாய் நிற்கச் செய்தேயும்
அசக்தரைப் போலே காணப்படா நிற்கும்
அபராதங்களில் அறிவிலானாக நின்று கொண்டு எப்போதும் தயைப் பண்ண நிற்கும் -என்றும்

அர்ச்சாவதார விஷயே மயாபி உத்தேச தச ததா உகதா குணா ந சக்யந்தே வக்தும் வாஷச தைரபி-என்று
அவனுடைய யாதோ வாசோ நிவர்த்தந்தி–அவனுடைய மொழியைக் கடக்கும் விஷயம் அன்றோ –
அர்ச்சாவதார விஷயத்தில் என்னாலும் சுருங்கச் சொல்லப்பட்ட அத்தனை
குணங்கள் ஆனவை நூறு வருஷம் கூடினாலும் சொல்ல சக்யங்கள் அல்ல என்றும்
ருதே ச மத பிரசாத தவா ஸ்வதோ ஜ்ஞாநாகமேன வா -என்று
என்னுடைய பிரசாதம் ஒழிந்தாலும்
ஸ்வஸ் சித்தமான ஜ்ஞானம் இல்லாத போதும் சொல்ல முடியாது என்றும்
ஏவம் பஞ்ச பிரகாரோஹம் ஆத்மாநாம பத்தாம அத பூர்வ சமாதபி பூர்வ சமாத ஐயாயாம்ச சைவோத தரோ ததா -என்று
இப்படி பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரனான நான்
அத பதிக்கிற ஆத்மாக்களுக்கு
பூர்வ பூர்வ பிரகாரங்களில் காட்டில்
உத்தர உத்தர பிரகாரத்தில்
சௌலப்யத்தாலே ஸ்ரேஷ்டனாய் இருப்பேன் என்றும்
சௌலப்யதோ ஜகத் ஸ்வாமீ ஸூ லபோ ஹயுத்த ரோததர -என்று
ஜகத் ஸ்வாமியான தான் சௌலப்யத்தாலெ மேலே மேலே
ஸூ லபனாய் இருப்பேன் இ றே என்றும் –
சர்வாதி சாயி ஷாட குண்யம் சமஸ்திதம் மந்தரபிம்பயோ மந்தரே வாசயதே
மனா நித்யம் பிம்பே து க்ருபயா ஸ்திதம் -என்று
சர்வத்தையும் அதிசயிப்பதான ஷாட் குணிய ரூபமானது
மந்தர பிம்பங்களிலே நிற்கும் என்றும்
மந்தரத்திலே வாசயாதமநா நிற்கும்– பிம்பத்திலே கிருபையாலே நிற்கும் என்றும் –
இப்படி அர்ச்சாவதாரத்தின் உடைய குணாதிக்கியம்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே சர்வேஸ்வரன் தன்னாலே அருளிச் செய்யப் பட்டது இ றே-
அர்ச்சா திருமேனியில் ஷாட் கணங்கள் பரிபூரணம் -கிருபையால் இங்கு -மந்த்ர சொல்லின் பொருளால் அங்கு

ஆஸ்தாம தே குணாராசிவாத குணா பரீவாஹாதம நாம ஜன்மாநாம் சங்க்யா பௌம
நிகேத நேஷ வபி குடீ குஞ்ஜேஷூ ரெங்கேஸ்வர
அர்ச்சயச சர்வ சஹிஷ்ணு அர்ச்சக பராதீ நாகிலாத மஸ்திதி பரீணீஷி ஹ்ருதயாலுபிச
தவததச சீலாஜா ஜடீ பூயதே –உத்தர சதகம் -74–என்று
அவதாரங்களை அருளிச் செய்த அனந்தரத்திலே
அர்ச்சாவதார வைபவத்தை சங்க்ரஹேண ஒரு ஸ்லோகத்திலே அருளிச் செய்தார் இ றே பட்டர்-

————————————————————————————-

ஆக
ஈஸ்வரனுடைய ஸ்வரூப வைலஷண்யத்தையும்
அந்த ஸ்வரூபத்தையும் நிறம் பெறுத்தும் குண வைலஷண்யத்தையும்
அக் குணங்கள் அடியாக அவன் பண்ணும் ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களையும்
அப்படி காரண பூதன் ஆனவனுடைய சர்வ பல பிரதத்வத்தையும்
காரணத்வாத் உபயோகியான விலஷண விக்ரஹ யோகத்தையும்
அந்த விக்ரஹ வை லஷண்ய அனுரூபமான லஷ்மி பூமி நீளா நாயகத்வத்தையும்
அந்த விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதி பஞ்ச பிரகாரத்வத்தையும்
அருளிச் செய்து
ஈஸ்வர தத்தவத்தை நிகமித்தார் ஆயிற்று –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை —-141-171— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 24, 2017

சூர்ணிகை -141-

இப்படி சித் அசித் ரூபமான தத்வ த்வயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸூவ்யக்தமாம் படி அருளிச் செய்து
அநந்தரம்
ஷராத்மா நாவீ சதே தேவ ஏக -என்கிறபடியே–
தத் உபய நியந்தாவான ஈஸ்வரனுடைய ஸ்வரூபாதிகளை
சம்சய விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –
அதில் பிரதம சூர்ணிகை யாலே
ஈஸ்வரத்வம் அசாதாரண தர்மதயா வஸ்துவுக்கு நிரூபகம் ஆகையாலே
ஈஸ்வரன் என்றே வஸ்துவை நிர்தேசித்து -தத் ஸ்வரூபாதி வை லஷண்யத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்-
அதில் பிரதமத்தில் குணம் ரூபம் ஆஸ்ரயமான -குணாதிகளுக்கு ஆஸ்ரயமான-ஆதாரமான – ஸ்வரூபத்தை -ஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

ஈசன சீலன் நாராராயணன் -ஆதி சங்கரர் தானே அருளி -அம்ருத்ராக்ஷரம் ஹர -ஷரம் அக்ஷரம் இரண்டுக்கும் தேவ ஏக ஈசதே/
ஏகோ தேவ -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -திவ்ய தேவ ஏக -தான் ஒரு வேர் தனி முதல் வித்தாய் -நாராயண –
ஐயம் திரிபு இல்லாமல் சம்சயம் விபர்யயம் அற/ நியமன சாமர்த்தியம் இயற்கையிலே -ஈஸ்வரன் –
இன்றியமையாத தனியான தர்மம் இவன் ஒருவனுக்கே -அவ்யாப்தி அவியாப்தி இல்லாமல்

ஈஸ்வரன்
1–அகில ஹேய ப்ரத்ய நீக
2–அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
3–ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
4–சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
5–ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற-சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
6–தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
7–விலஷண விக்ரஹ யுக்தனாய் –
8–லஷ்மி பூமி நீளா நாயகனாய் –
இருக்கும்

அதாவது
அகில ஹேய ப்ரத்ய நீக அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
சமஸ்த ஹேய பிரதிபடமாய்-எதிராய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்-தேச கால வஸ்து -விபு என்பதால் -தேசம் பரிச்சேத ரஹிதன் / அந்தராத்மா என்பதால் வஸ்து பரிச்சேத ரஹிதன்
ஸ்வயம் பிரகாசத்வ -ஸூ க ரூபவத்மே வடிவான
ஸ்வரூபத்தை யுடையவனாய் -என்கை –

சத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம -என்றும்
விஜ்ஞ்ஞானம் ப்ரஹ்மம் -என்றும்
ஆனந்தோ ப்ரஹ்மம் -என்றும் சொல்லக் கடவது இ றே-
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந
ச்வேதர சமஸ்து வஸ்து விலஷண
ஆநந்த ஜ்ஞானா நனதைக ஸ்வரூப -என்று இறே எம்பெருமானார் அருளிச் செய்தது -கத்யத்திலே –
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார் –
ஆனால்
கல்யாணை கதா நத்வமும் -ச்வேதர சமஸ்து வஸ்து விலஷண த்வமும் இவர் அருளிச் செய்யாது ஒழிவான் ஏன் என்னில்
ஹேய ப்ரத்ய நீகதை-புக்க விடத்தே கல்யாணைக தாநத்வமும் வரும் என்னுமதைப் பற்றவும்
ஆநந்த ரூபம் சொல்லுகையாலே தன்னடையே சித்திக்கும்
என்னுமதைப் பற்றவும் கல்யாணை கதா நத்வம் அருளிச் செய்திலர் —
ச்வேதர சமஸ்து வஸ்து விலஷணதவம் உபய லிங்க விசிஷ்டத்வ பிரயுக்தம் ஆகையாலே
அர்த்தாதுகதம் என்று அருளிச் செய்திலர்-அனுமானிக்கலாம் என்றவாறு

ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
ஆதி -சப்தத்தாலே குண சூர்ணையில் எம்பெருமானார் அருளிச் செய்த குணங்களை எல்லாம் சொல்லுகிறது –
குணங்களுக்கு கல்யாணத்வம் ஆவது -ஆஸ்ரிதர்க்கு பரம போக்யமாய் இருக்கை–நின் புகழில் வைகும் ஆனந்ததும் மற்று இனிதோ நீ அருளும் வைகுந்தம் எனும் வான்
கண சப்தம் சமூஹ வாசி –
பூஷிதன் ஆகையாவது -இவற்றாலே அலங்க்ருதனாய் இருக்கை-
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு திவ்ய ஆபரணங்கள் போலே ஆயிற்று
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு திருக் கல்யாண குணங்கள் ஔஜ்வல்ய கரமாய் இருக்கிற படி –
இத்தால் -யஸ் சர்வஜ்ஞ்ஞச சர்வ வித –முண்டக உபநிஷத் -என்றும்–அனைத்தையும் அறிந்தவன் அனைத்து பிரகாரங்களை அறிந்தவன்
பராசய சக்திர் விவிதைவ சரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்றும்
சமஸ்த கல்யாண குணா தமகோ சௌ-என்றும்
சொல்லுகிற கல்யாண குண யோகத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் –
ஜகத் -சப்தத்தாலே கார்ய வஸ்துவைச் சொல்லுகிறது
சகல -சப்தத்தாலே சமஷ்டி வ்யஷ்டி ரூபமான சமஸ்த பதார்த்தங்களையும் சொல்லுகிறது
சர்க்கமாவது -சிருஷ்டி
இதுதான் சத்வாரக அத்வாரக ரூபேண த்வி விதையாய் இருக்கும்
ஸ்திதி யாவ்வது -ரஷணம்-இதுவும் பாஹ்யாபயந்தர ரூபேண த்விவிதமாய் இருக்கும்
சம்ஹாரம் ஆவது -அழிக்கை-இதுவும் சத்வாரக அத்வாரக ரூபேண த்விவிதமாய் இருக்கும்
இவை எல்லாம் மேல் இவர் உப பாதிக்கிற இடத்தில் காணலாம்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி
யத ப்ரயந் தய பிசமவிசநதி தத் விஜிஞ்ஞாஸ்வ தத் ப்ரஹ்ம -இத்யாதி
ஸ்ருதிகளாலே இவனுடைய சகல ஜகத் சர்க்காதிகள் சொல்லப் படா நின்றது இ றே–ஆதி மோக்ஷ பிரதத்வமும் உண்டே –
இத்தால் கீழ் சொன்ன குண விசிஷ்டன் ஆனவனுடைய வியாபார விசேஷங்களை அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ –7–10-என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-கதி த்ரய மூலாஸ்ய -ஆளவந்தார்
ஆர்த்தனாவான் -முன்புண்டான ஐஸ்வர்யத்தை இழந்து அதைப் பெற வேணும் என்று ஆசைப் படுமவன்-துடிப்பு உள்ளவன் -முமுஷு மோக்ஷத்தில் போலே புபுஷு அன்றோ இவன்
ஜிஜ்ஞாஸூ ஆகிறான் -ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவை அனுபவிக்க ஆசைப் படும் கேவலன்-கர்ம யோகம் ஞான யோகம் -கைவல்யம் இவற்றையே அறிபவன்
அர்த்தார்த்தி ஆகிறான் அபூர்வமாக ஐஸ்வர் யத்தை ஆசைப் படுமவன்-புத்த ஐஸ்வர்யம் கேட்பவன்
ஜ்ஞானி ஆகிறான் பரம புருஷார்த்தமான பகவத் பிராப்தியை ஆசைப் படுமவன்-பக்தி யோக நிஷ்டனை ஞானி சப்தத்தால் -ஞானமே பரிபக்குவப்பட்டு பக்தி ஞான விசேஷம்
ஸ்திதே –அஹம் ஸ்மராமி மத பக்திம்-சரணாகதனை பக்தன் என்ற சொல்லால் -அந்திம ஸ்மரணம் வர்ஜனம் -i
ஆர்த்த -பிரதிஷடாஹீந பரஷ்டைச்வர்ய புனச தத் பிராப்தி காம
அர்த்தார்த்ததீ -அப்ராப்த ஐஸ்வர் யதயா ஐஸ்வர்ய காம தயோர் முக பேத மாதரம்
ஐஸ்வர்ய விஷய தயா ஏக ஏவாதிகார-
ஜிஞ்ஞாஸூ -பிரகிருதி வியுக்தாதம் ஸ்வரூபாவ தீசசு ஜ்ஞானமே வாசாய ஸ்வரூபம் இதி ஜ்ஞ்ஞா ஸூ ரித யுக்தம்
ஜ்ஞானிச -இதஸ்த்வ நயாம பிரகிருதி வித்தி மே பராம இத்யாதி ந அபஹித பகவத் சேஷதை கரசாதம் ஸ்வரூபம் இத
பிரகிருதி வியுக்த கேவலாதம நயபாயாவ சயன பகவந்தம் பரேப ஸூ ர பகவந்தம் ஏவ பரமபராபயம் மனவான -என்று
சதுர்வித அதிகாரி வேஷத்தையும் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார் இறே-
பிரதிஷ்டா ஹீனன் ஐஸ்வர்யம் போனவன் -அதை அடைய ஆசைப்படுபவன் ஆர்த்தன்-
முக பேதம் -கொஞ்சம் பேதம் -பிரகிருதி -தொலைத்த கேவல ஆத்ம அனுபவம் இச்சிப்பவன் -ஞானமே ஸ்வரூபம் இவனுக்கு -அத்தை வைத்தே பெயர்
ஞானி -வேறான -சேஷத்தைக ரசம் ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் –பூமி ஆப அனலை கம் ஆகாசம் -இவை தாழ்ந்த சொத்துக்கள் -அபரா பிரகிருதி /
உயர்ந்த -வேறு பட்ட -ஆத்ம-பரா பிரகிருதி சைத்தன்யம் உள்ள -சேஷத்வம் அறிந்தவன் —
அவனே ஞானி -தத் சேஷத்தைக ஸ்வரூபம் -பக்தி யோக நிஷ்டன்-
இந்த சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்தை
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ச ஸூ கருதிநோர்ஜுனா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரத ரிஷப –7–14-என்றும்–புண்யசாலிகள் என்று கொண்டாடுகிறான் நால்வரையும் -நால்வரும் உதாரர்கள் –
சதுர்வித மம ஜனா பக்த ஏவ ஹி சே ஸ்ருதா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ சேதி பிருதக் பிருதக் –மோக்ஷ தர்ம உபதேசம் –என்றும்
தானே அருளிச் செய்தான் இறே
இத்தால் ஜகத் காரண பூதனாக கீழ்ச் சொல்லப் பட்டவனுடைய
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தை அருளிச் செய்தார் ஆயிற்று -பெத்த பாவிக்கு விடப்போமோ –
கண்ணாவான் -சஷூஸ் தேவானாம் தானவாம் -அனைவருக்கும் -அஸ்தி நாஸ்தி இரண்டிலும் உள்ளான் -உளன் உளன் அலன் என்றாலும் உளன் –

தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
தர்மார்த்த காம மோஷாக்கிய புருஷார்த்த உதாஹருத -என்று
புருஷார்த்தம் சதுர்விதமாய் இ றே இருப்பது —
சகல பல ப்ரதோ விஷ்ணு
தர்மமாவது -இஷ்டா பூர்த்வங்கள்–
இஷ்டமாவது -யாகாதி பூர்த்தமாவது வாதாஷி–குளம் வெட்டுவது போல்வன
அர்த்தமாவது-ஸூவர்ண ரஜ சாதிகள்–தங்கம் வெள்ளி வைரம் போல்வன –
காமமாவது ஐஹிக பர லௌகிக போக்கிய பதார்த்த அனுபவ ஸூ கம் -விஷயாந்தர அனுபவம்
மோஷம் ஆவது ஆத்மா அனுபவ பகவத் அனுபவங்கள்
இவற்றில் -தர்மம் சாதனயா புருஷார்த்தமாய் இருக்கும்
அர்த்தம் சாதநதாயும் ஸ்வயமாயும் புருஷார்த்தமாய் இருக்கும்
காம மோஷங்கள் இரண்டும் ஸ்வயமாய் புருஷார்த்தமாய் இருக்கும்
ஏவம் விதமான சதுர்வித பலங்களையும் அதிகார அனுகுணமாகக் கொடுக்குமவன் -என்கை-
பிரார்த்தித்தே பெற வேண்டும் -புருஷார்த்தமாக புருஷனாலே ஆர்த்திக்கப்பட வேண்டுமே –
இத்தால் சர்வ சமாஸ்ரயணீயன் ஆன இவனுடைய
சகல பல பிரதத்வத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று-
தேவேந்தரச த்ரிபுவன மாதத மேக பிங்கச சர்வாததிம
த்ரிபுவன சாஞ்ச கார்த்த வீர்ய
வைதேக பரமபதம் பரசாதாய விஷ்ணும் சம்ப்ராபதஸ் சகல பல பிரயோஹீ விஷ்ணு -என்னக் கடவது இ றே –
ஏக பிங்கன் குபேரன் சொத்தை பெற்றான் -விதேக ராஜர் பரமபதம் பெற்றார் -தேவேந்திரன் மூன்று லோகம் பெற்றான் -கார்த்த வீர்ய ராஜன் -இப்படி நால்வரையும் பற்றி அருளியது-

விலஷண விக்ரஹ யுக்தனாய் –
அதாவது -விக்ரஹம் தான் ஸ்வரூப குணங்களிலும் காட்டில் அத்யந்த அபிமதமாய் -என்று தொடங்கி
மேல் அருளிச் செய்கிற வைலஷண்யத்தை யுடைய விக்ரஹத்தோடே கூடி இருக்குமவன் -என்கை
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேக பாஸ்வரா-இத்யாதியிலே விக்ரஹ வைலஷண்யம் ஸ்ருதி பிரசித்தம்
இவ பாஸ்வர இது போலே -லேகா ரேகா -மின்னல் வெட்டு -கொடி போன்ற -கருத்த காள மேகத்தின் நடுவில் -தோயத -தண்ணீர் கொடுப்பதால் தோயதம்- சூல் கொண்ட மேகம்
தன் நடுவே கொடு இருக்கும்-என்றுமாம் -மின்னல் கொடி -அபூத உவமை -கருத்த மேகத்தை தனக்குள் வைத்துக் கொண்டு –
ஒளி அதீதமாக -வர்ணம் கறுப்பு என்பதால் காள மேகம் -பரஞ்சோதிஸ் -மின்னல் வெளுப்பாகுமே -சமன்வயப்படுத்த இப்படி –
ஸ்வ அபிமத அனுரூபைக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய சௌந்தர்ய சௌகந்த்ய
சௌகுமார்ய லாவண்ய யௌவன அத்ய அநந்த குணநிதி திவ்ய ரூப -என்று
திவ்ய மங்கள விக்ரஹ லஷணத்தை அருளிச் செய்தார் இ றே -எம்பெருமானார்-
குமாரனார் தாதை -தாமரைக் கண்ணன் -கரி பூசி அருளிச் செய்யும் படி அன்றோ திவ்ய ரூபம் -தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா புலவ் புண்டரீக விஷாலாஷவ் -என்று கொண்டாடும்படி அன்றோ
கண்டவர் மணம் வழங்கும் ரூப ஸுந்தர்யம் அன்றோ
இத்தால்
கீழ்ச் சொன்ன ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசமாய்
ஜகத் காரணத்வத்துக்கும்–கொப்பூழ் அழகர் -எழு கமலப் பூ அழகர் -அயனைப் படைத்ததோர் எழில் உந்தி அன்றோ காட்டும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்துக்கும்–மண்ணுலகில் மனுஷர் உய்ய – இனிதாக திருக்கண் வளர்ந்து –
சர்வ பல பிரத்வத்துக்கும்-அலம் புரிந்த நெடும் தடக்கை -வாங்குபவன் போதும் என்ற சொன்னதும் தானே திரும்பும்
ஏகாந்தமான
திவ்ய விக்ரஹ யோகத்தை
அருளிச் செய்தார் ஆயிற்று-

லஷ்மி பூமி நீளா நாயகனாய் -இருக்கும்
அதாவது-
உனக்கே ஏற்கும் -என்னும்படியான வை லஷண்யத்தை யுடையளாய்
சேதனருக்கு புருஷகார பூதையாயும் –
பிராப்யையாயும்
இருக்கும் பிரதான மஹிஷியான பெரிய பிராட்டியாருக்கும்
அவளோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கும் பூமி நீளைகளான மற்றை இரண்டு பிராட்டிமாருக்கும்
அநுரூப நாயகனாய் இருக்கும் -என்கை
ஹரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று லஷ்மி பூமிகள் இருவரையும்
வேத புருஷன் சொன்ன இது நீளைக்கும் உப லஷணம்-சகாரம் -சமுச்சயம் உண்டே
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன
உபாயயாம பூமி நீளா பயாம சேவித பரமேஸ்வர–சைவ புராணம் ஸ்லோகம் -என்னக் கடவது இ றே
லிங்க மஹாத்ம்யம் சொன்னதுக்கு பிராயச்சித்தமாக சொல்லும் ஸ்லோகம் -ஆஸ்தே பக்தைஸ் பாகவத சக -வைகுந்தது அமரரும் முனிவரும் -கைங்கர்ய மனன சீலர்கள் உண்டே –
ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாதய நவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப
ஏவம் வித பூமி நீளா நாயக -என்று இ றே எம்பெருமானார் அருளிச் செய்தது
-சர்வ கந்த சர்வ ரஸா என்னுமவனுக்கும் கந்தமூட்டும் கந்தம் கமழும் குழலி அன்றோ –
இத்தால்
கீழ்ச் சொன்ன விக்ரஹ வை லஷண்யம்
காட்டில் எரித்த நிலா வாகாதபடி
அனுபவிக்கக் கடவரான பிராட்டிமாரோட்டை சேர்த்தியை
அருளிச் செய்தார் ஆயிற்று-

—————————————————————————

சூர்ணிகை -142-

இப்படி உக்தமான ஸ்வரூபாதிகளை விஸ்தரேண உபபாதித்து அருளுகிறார் மேல்
அதில் பிரதமத்தில் அகில ஹேய பிரத்ய நீகத்வத்தை உபபாதிக்கிறார் –

அகில ஹேய பிரத்ய நீகன்
ஆகையாவது
தமஸ் ஸூ க்கு
தேஜஸ் போலேயும்
சர்ப்பத்துக்கு
கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு
பிரதிபடனாய்
இருக்கை –

ஹேயமாவது -தோஷம்
அகில ஹேயம் -என்கையாலே -த்ரிவித சேதன அசேதன தோஷங்களையும் சொல்லுகிறது
த்ரிவித சேதன அசேதன தோஷங்களும் ஈஸ்வரனுக்கு வாராது என்று
இது தன்னை வ்யக்தமாக மேலே அருளிச் செய்கிறார் இ றே
தமஸ் ஸூ க்கு தேஜஸ் ஸூ பிரதிபடமாய் இருக்குமா போலேயும்
சர்ப்பத்துக்கு கருடன் பிரதிபடமாய் இருக்குமா போலேயும் -என்கை –
விகாராதி தோஷங்கள் -என்கிற இடத்தில்
விகார சப்தத்தாலே த்ரிவித அசிததின் யுடைய பரிணாமத்தைச் சொல்லுகிறது
ஆதி -சப்தத்தாலே பக்த சேதனருடைய அஞ்ஞான துக்கங்களையும்
முக்தருடைய சேறு தோய்த்து கழுவினால் போலே
பிரகிருதி சம்ருஷ்டராய் விடுபட்ட ஆகாரத்தையும்
நித்யருடைய பரிச்சின்ன ஸ்வரூபத்வ பாரதந்த்ரியங்களையும் சொல்லுகிறது-விபு இல்லையே -இவர்கள் –
பாரதந்த்ர்யம் தோஷமோ என்னில் புருஷனுக்கு ஸ்தன உத்பேதம் போலே ஸ்வ தந்த்ரனுக்கு தோஷம் என்கை –
இத் தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை யாவது -தான் மாறாது இருக்கை –
பிரதிபடம் என்கையாலே -ஆத்மா ஜ்ஞான மயோமல-என்கிறபடியே
ஸ்வரூப நிபந்தனமாக மல சம்பந்தம் இல்லையே யாகிலும்
உபாதி நிபந்தனமான-கர்ம சம்பந்தம் உண்டே – மல சம்பந்தத்துக்கு யோக்யமான
ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டில் பகவத் ஸ்வரூபத்துக்கு வாசி தோற்றுகிறது –
தத் ப்ரஹ்ம பரமம் நித்யம்ஷ மஷய மவ்யயம் ஏக ஸ்வரூப
ந்து சதா ஹேயா பாவச்ச நிர்மலம் -என்றும்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷண வாக்கியம் பரமம் பதம் -என்றும்
அவிகாராய சுததாயா நித்யாய பரமாத்மனே -என்னக் கடவது இ றே –
அமலன் விமலன் நிமலன் நிர்மலன் -வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன் -சதைக ரூப ரூபாயா ஸ்வரூபத்துக்கும் ஸ்வ பாவத்துக்கு -திவ்ய மங்கள விக்ரஹமும் ஏக ரூபம்

ஹேய ப்ரத்ய நீகத்வம் ஆவது -ஆஸ்ரிதர் யுடைய ஹேய நிராசகத்வத்துக்கு அடியான ஹேய பிரதிபடத்வம் -என்னவுமாம்
துயர் அறு சுடர் ஆதி -துயர் அறுக்கும் என்றும் அறும் என்றும் உண்டே வல்வினை மாள்விக்கும் -அதை பார்த்து தான் துயர் அறும்-
என்னும் ஒரு யோஜனையும் யுண்டு இ றே-
கத்ய வ்யாக்யானங்களிலே நஞ்சீயர் ஆச்ச்சான் பிள்ளை முதலான ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது
சர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும் என்கிற த்ருஷ்டாந்தத்தாலே
அதுவும் இவ்விடத்து அர்த்தம் ஆனாலோ என்னில்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை என்கையாலே
இவ்விடத்தில் இவர்க்கு அது விவஷிதம் அன்று–

————————————————

சூர்ணிகை -143-

அநந்தரம் அனந்ததவத்தை உப பாதிக்கிறார் –

அநந்தன் ஆகையாவது
நித்யனாய்
சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய்
இருக்கை –
அந்தம் நாஸ்தி காலம் தேசம் வஸ்து -மூன்றாலும் வரை அறுக்க முடியாதே

அதாவது
தேசத காலதோ வஸ்து தச்ச அபரிச்சேத்யம்-
விபுதவாத் -தேச பரிச்சேத ராஹித்யம்
நித்யத்வாத் -கால பரிச்சேத ராஹித்யம்
ஸ்வ வய திரிகத சமஸ்த வஸ்துக்களுக்கும் பிரகாரியாய் இருக்கையாலும்
தனக்கு பிரகார்யாந்தரம் இல்லாதபடி நிற்கையாலும்
சத்ருச வஸ்து அபாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்
அத்தை அருளிச் செய்கிறார்-

நித்யனாய் சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய் இருக்கை -என்று இத்தால்
நித்யன் ஆகையாலே -இன்ன காலத்தில் உள்ளான் காலாந்தரத்தில் இல்லை என்கிற கால பரிச்சேதம் இன்றியிலே
சகல சேதன சேதனங்களுக்கும் வ்யாபகனாய்க் கொண்டு
விபுவாய் இருக்கையாலே -இன்ன தேசத்தில் உள்ளான் தேசாந்தரத்தில் இல்லை என்கிற தேச பரிச்சேத்யம் இன்றியிலே
சர்வாந்தர்யாமி யாகையாலே சர்வத்துக்கும் தான் பிரகாரியாய் தனக்கு பிரகாரந்தரம் இல்லாத படி இருக்கையாலே
இன்ன வஸ்து போலே என்கிற வஸ்து பரிச்சேதமும் இன்றியிலே இருக்கை என்றதாயிற்று
நித்யம் விபும் சர்வச்தம் ஸூ ஸூ ஷ்மம்-என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்றும்–சாஸ்தா நியாமகன் -என்றவாறு
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்றும்
நதத் சமாச்சா பயதிகச்ச த்ருச்யதே -என்றும் சொல்லக் கடவது இ றே-ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் அன்றோ –

———————————————————–

சூர்ணிகை -144-

இவற்றோடு தான் ஒட்டு அற்று இருக்கை அன்றிக்கே
அந்தர்யாமிதயா அவஸ்திதனாய் இருக்குமாகில்
தத்கத தோஷங்கள் வாராதோ -என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –

அந்தர்யாமி
ஆனால்
தோஷங்கள்
வாராதோ
வென்னில் —

—————————————–

சூர்ணிகை -145-

அத்தை பரிஹரிக்கிறார்

சரீர கதங்களான
பால்யாதிகள்
ஜீவாத்மாவுக்கு
வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன
தோஷமும்
ஈஸ்வரனுக்கு வாராது –
பக்ஷம் – சாத்தியம்– ஹேது வைத்தே நையாயிக நியாய வாதங்கள் –

அதாவது
இந்த சரீரத்தை அதிஷ்டித்து ஸ்வா தீனமாக நிர்வஹித்துக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத்கதமான பால்ய யௌனாதி விகாரங்கள்
தத் அந்தர்வர்த்தியான ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய்
இவற்றை சரீரமாகக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத்கத தோஷம் ஈஸ்வரனுக்கு வாராது -என்கை –
ஆவி சேர் உயிரினுள்ளான் யாதுமோர் பற்றிலாத பாவனை யதனைக் கூடில் யவனயும் கூடலாமே -3–4–என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது
பற்றற்ற பக்தி பாவனையால் கூடலாம்– மற்ற வன் பாசங்களை முற்ற விட்டு -மால் பால் மணம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு இத்யாதி
சரீரியான ஜீவாத்மாவுக்கு சரீர கதங்களான பால்யாதிகள் வந்ததில்லை யாகிலும்
சரீர சம்பந்த நிபந்தனமாக துக்க அஜஞாநாதிகள் வருகிறவோபாதி
சரீர பூதமான இவற்றோட்டை சம்பந்தத்தால் இவனுக்கும் இங்கனே சில தோஷங்கள் வாராதோ என்னில்
வாராது -அதுக்கு அடி
பிரவேச ஹேது விசேஷம்-கிருபா இச்சா தயா கருணை அனுகம்பா அவனுக்கு
இவனைப் போலே கர்மம் அடியாக அன்றிக்கே–கர்மம் அடியாகவே தான் அனுபிரவேசமும் ஸூ க துக்க அனுபவமும் -ஆத்மாவுக்கு –
அனுக்ரஹம் அடியாக இ றே அவனுக்கு இவற்றில் பிரவேசம் இருப்பது
அனஸ்நன் நன்ய -என்றும்-ஒரு மரம் இரண்டு பறவை பழம் உண்ணாமல் ஒளி விஞ்சி -கர்ம அனுபவத்தால் ஆத்ம –சமானம் விருக்ஷம் ஹிருதய கமபத்தில் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா -என்றும்
விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே -என்றும் சொல்லிற்று இ றே–ஜிஷ்ணு அனைத்தையும் வென்றவர்

—————————————–

சூர்ணிகை -146-

அநந்தரம்
ஜ்ஞானாந்ததைக ஸ்வரூபத்தை உப பாதிக்கிறார் –

ஞானானநதைக
ஸ்வரூபன் ஆகையாவது
ஆநந்த ரூப
ஜ்ஞானனாய்
இருக்கை –
அனைவருக்கும் எல்லா ஞானமும் அனுகூலம் -பிரதிகூல்யமாக இருப்பது கர்மத்தாலும் – அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் என்ற அறிவில்லாமை யாலும் –
பயம் கவலை –அஹந்காராதி ரூபமான ஞானம் இல்லாமல்

ஞ்ஞாந ஆநந்தங்களையே ஸ்வரூபமாக யுடையனாய் இருக்கை என்று
சப்தத்துக்கு அர்த்தம் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞானம் என்றும் ஆனந்தம் என்றும் பிரித்துச் சொல்ல
இரண்டு அவஸ்தை இன்றிக்கே
ஜ்ஞானமே ஸ்வரூபமாய்
அது தான் அனுகூலமாய் இருக்கை –
ராவணனாதிகளை பார்த்து லீலைக்கு விஷயம் -ஆழ்வாராதிகளை பார்த்து போகத்துக்கு விஷயமாக இருக்குமே ப்ரஹ்மதுக்கு –
லோகத்தில் தான் ஞானம் ஆனந்தம் இல்லாமலே இருக்குமே
ஆனந்தம் ஆகையாலே ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்று அருளிச் செய்கிறார் –
அனுகூல ஜ்ஞானமே ஸ்வரூபமாய் இருக்க
ஜ்ஞான ஆனந்தங்கள் என்று பிரித்துச் சொல்லுகிறது
இரண்டும் யுண்டாகைக்காக என்று இ றே
இவர் தாம் இட்டு அருளின கத்ய வ்யாக்யானத்தில் அருளிச் செய்தது-
பிள்ளை லோகாச்சார்யார் கத்ய த்ரய வியாக்யானம் அருளிச் செய்து இருக்க வேண்டும் –

————————————

சூர்ணிகை -147-

ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்றது தன்னை உபபாதிக்கிறார்

அதாவது
கட்டடங்க
அனுகூலமாய்
பிரகாசமுமாய்
இருக்கை –
மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபன் /உயர் நலம் உடையவன் உயர்வற என்றாரே ஆழ்வார் இத்தையே –

கட்டடங்க என்றது -ஸ்வரூபம் உள்ள பரப்பு எங்கும் -என்றபடி-ஸ்வரூபம் விபு தானே -அதனால் எங்கும் என்றபடி –
இத்தால் ஸ்வரூபத்தில் அ நனுகூலமாயாதல் அபிரகாசகமாயாதல் இருக்கும் இடம் இல்லை என்கை
ஜ்ஞானாந்த ஏக ஸ்வரூபம் என்ற இதில் ஏக சப்தார்த்தம் இது இ றே
அனுகூலத்வம் ஆவது ஆஹ்லாதகரத்வம்
பிரகாசத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்-
அநந்யாதீன பிரகாசத்வா வாஹ்லாதகரத்வ ரூப ஜ்ஞான மேவ யஸ்ய ஸ்வரூபம் ச ஹிஜ்ஞானாந்ததைக ஸ்வரூப -என்னக் கடவது இ றே

————————————-

சூர்ணிகை -148-

இப்படி ஸ்வரூப வைலஷண்யத்தை யுபபாதித்த அநந்தரம்
ஸ்வரூப ஆஸ்ரிதமான குணங்களின் யுடைய
வைலஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

இவனுடைய
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
1–நித்யங்களாய்
2–நிஸ்ஸீமங்களாய்
3–நிஸ் சங்கயங்களாய்
4–நிருபாதிகங்களாய்
5–நிர்த் தோஷங்களாய்
6–சமா நாதிக ரஹீதங்களாய்
இருக்கும் –

ஆதி சப்தத்தாலே –
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூ க்களும்
வாத்சல்யாதிகளும்
சௌர்யாதிகளும்
ஆகிற குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது-

நித்யங்கள் ஆகையாவது -உத்பத்தி விநாச ரஹீதங்களாய் இருக்கை
ஸ்வரூப அனுபந்திகள் ஆகையாலே யாவதாத்மா பாவிகளாய் இருக்கும் இ றே–ஸ்வரூபம் போலே இவையும் நித்யம் –
த இமே சத்யா காமா -சாந்தோக்யம் – என்று குணங்களின் யுடைய நித்யத்வம் ஸ்ருதி சித்தம்
காமயந்த இதி காமா கல்யாணகுணா த இமே சதயா நித்யா இத்யாதயா -என்று இ றே இந்த ஸ்ருதிக்கு அர்த்தம்
விரும்பப்படும் குணங்களை கொண்டவன் -ஸத்ய காமன் -சத்யம் நித்யம் என்றவாறு –
ஈறில வண் புகழ் -என்றார் இ றே ஆழ்வார்-

நிஸ்ஸீமங்கள் – ஆகையாவது -ஓர் ஒன்றே அவதி காண ஒண்ணாது இருக்கை
எதோ வாசே நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ–தைத்ரியம் -ஆனந்த வல்லி -என்று
மீண்டு விட்டது இ றே ஆநந்த குணத்தை எல்லை காணப் புக்க வேதம்
இது ஆநந்த குணம் ஒன்றிலும் அன்று இ றே
குணங்கள் எல்லாம் இப்படி இ றே இருப்பது
உபர்யு பாயபஜபுவோபி பூருஷாந பரகல்ப்ய தே யே சதமித்ய நுகாரமாத
கிரச தவ தேகைக குணாவதீ பசாய சதா ஸ்திதிதா நோதய மதோதி சேரதே -என்னக் கடவது இ றே-அப்யுஜன் நான்முகன் –
உயர் நலம் என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது-
உயர்வு நலம் உலகத்தில் சொல்வதை எல்லாம் உயர்வு அறுந்து போகும் படி அன்றோ இவனுடையது

நிஸ் சங்கயங்கள் -ஆகையாவது -இப்படிப் பட்ட குணங்கள் தான் எண்ணிறந்து இருக்கை –
யதா ரதநாதி ஜலதேர சங்கயேயாநி புத்ரக ததா குணா ஹயன நதஸ்ய
அசங்க யேயோ மஹாத மன -என்றும்
சமுத்திரத்தில் ரத்தினங்கள் போலே அளவற்றவை –
வாஷாயுதைர் யஸ்ய குணா நசகயா வக்தும் சமேதைரபி சர்வ லோகை
மகா தம நச சங்கு சக்ராசி பானே விஷ்ணோர் ஜிஷ்ணோ வசூதேவா தமசஜ்ச்ய –பீஷ்ம பர்வம் -என்றும்
யானும் ஏத்தி எழு உலகும் ஏத்தினாலும் -பேச சக்தி இல்லையே குணங்கள் எண்ணிறந்தவை
சதுர்முகா யுயாதி கோபிவக்தா பவேன நா கவாபி விசுததசேதா சதே குணா
நாமயுதை கம்ம சம வதேன ந வா தேவவா பரசீத–ஸ்ரீ வராஹ புராணம் -என்றும்
அபூத உவமை பிரம்மன் ஸ்ருஷ்டித்து கோடி வாய் கொடுத்து ஏக தேசம் குணத்தை சொல்ல முடியாதே
நஹி தஸ்ய குணா சசர்வே சர்வைர் முனி கணைரபி
வக்தும் சக்யாவியுகதச்ய சத்வாதயை ரகிலை குணை-என்னக் கடவது இ றே
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -என்றார் இ றே ஆழ்வாரும்
யேஷவே கஸ்ய குண சய விபு ருடபி வைலோகோ தாம ச்வாச்ராயம் குர்யாத் தாத்ருசா வைப வைர கணிதைர்
நிஸ் ஸீம பூமா நவிதை நித்யைர் திவ்ய குணை
சத்தோ திக சுபதவை காசபதா தமாஸ்ரையை ரிததம
ஸூ ந்தர பாஹூ மச்மி சரணம் யாதோ வநாதரீச்வரம் –
என்கிற ஸ்லோகத்தில் குணங்களின் யுடைய நித்ய – நிஸ் சீமதிச சங்கயத்வங்களை- அருளிச் செய்தார் இ றே ஆழ்வான் -ஸ்ரீ ஸூ ந்த்ர பாஹு ஸ்தவத்தில்
ஒவ் ஒரு குணத்தின் ஒரு திவலை மட்டும் -சொல்லி முடிக்க முடியாதே -பிரசித்தம் அன்றோ —

நிருபாதிகங்கள் –ஆகையாவது -பரதந்திர வஸ்து கதங்கள் ஆகையாலே
சவோயாதிகளிலே ஈஸ்வர இச்சை யாகிற உபாதியை அபேஷித்து இருக்கும்-
நம்முடைய குணங்கள் அவன் கிருபையை எதிர்பார்த்து இருக்குமே –
சேதன குணங்கள் போல் அன்றிக்கே ஸ்வா பாவிகங்களாய் இருக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தில் –
ஸ்வ பாவதோ நிரசத நிகில தோஷா நவதிகாதிசய சங்க யேய
கல்யாண குணகண புருஷோத்தாமோ பிதீயதே -என்கிற
இடத்துக்கு வியாக்யானம் பண்ணுகிற ஸ்ருத பிரகாசகாரர்
அநவதிக அதிசய சப்தத்தாலே -நித்ய சித்தரை வ்யாவர்த்திக்கிறது என்று முந்துற ஒரு யோஜனை பண்ணி
அனுஷ்க தேன ஸ்வ பாவத இதி பதே நவா நித்ய சித்த வ்யாவ்ருத்தி
தேஷாம் தாத்ருச குணகத்வம் ஹி பகவன் நிதயே சசாதீ நம் -என்று
அனந்தர யோஜனையில் இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இ றே
பிரபாவத்தா நித்யர் களுக்கு -ப்ரஹ்மத்துக்கு ஸ்வா பாவிகம்-என்றவாறு -வந்தேறி அவர்களுக்கு வந்த காலம் தெரியாது அதனால் நித்யம் அவர்களுக்கு
-அனுக்ரஹத்தால் வந்தது என்றவாறு
ஸ்வ பாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்று குணங்களின் யுடைய ஸ்வா பாவிகத்வத்தை ஸ்ருதியும் சொல்லா நின்றது இ றே
இந்த ஸ்ருதியில் கிரியை என்கிறது நியமநத்தை -நியமன சாமர்த்தியமும் ஸ்வா பாவிகம் -என்றவாறு -ப்ரஹ்மாதிகள் பிரார்த்தித்து பெற்றது
பரா சயேதி-ஜ்ஞான சக்த்யாதி நாம ஸ்வ பாவிகத்வ முக்தம் க்ரியா -நியமனம் என்று இ றே இதுக்கும்
ஸ்ருதி பிரகாசகாரர் வியாக்யானம் பண்ணிற்று-

நிர்த் தோஷங்கள் -ஆகையாவது ‘ஹேய குணா சம்சர்க்கம் ஆகிற தோஷம் இன்றிக்கே இருக்கை –
அபஹத பாப்மா விஜரோவிமிருத்யூர் விசோகா
விஜிகதஸ் சோபிபாசச சத்யகாமஸ் சத்யா சங்கல்ப–சாந்தோக்யம் -என்றும்
சதவாதயோ ந சநதீச யத்ரச பராக்ருதா குணா -என்றும்-பிராகிருத முக்குண சேர்க்கை இல்லையே -குண சூன்யம் என்று குத்ருஷ்டிகள் இதுக்கு –
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் அஸ்ய சேஷத -என்றும்
பகவத் சப்த வாச்யானி வினா ஹேயைர் குணாதிபி-என்றும்
தேஜோ பல ஐஸ்வர்ய மகா வைபோஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி–ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்றும்-குணங்களுக்கு ஒரே கொள்கலம் –
பர பராணாம் சகலா நயதரகாலே சாதயசச நதி பராவரேசே -என்கிறபடியே–ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகன் –
ஆச்ரயம் ஹேய பிரத்ய நீகம்ஆகையாலே இவற்றுக்கு
ஹேய குணா சம்சர்க்க தோஷா பத்திக்கு யோக்யதை இல்லை இ றே –

சமா நாதிக ரஹீதங்கள் -ஆகையாவது
சேதநாந்தர குணங்களை சமமாகவும்
ஈஸ்வர குணங்களை அதிகமாகவும் யுடைத்தாய் இருக்கும்
சேதன குணங்கள் போல் அன்றிக்கே
தனக்கு ஒத்ததும் மிக்கதும் இன்றிக்கே இருக்கை –
ந தத் சமச் சாபயதி கச்ச த்ருச்யதே -என்கிற சமாதிக தரித்திர வஸ்துவை ஆச்ரயமாக யுடையவை ஆகையாலே
இவையும் சமநாதிக ரஹீதங்களாய் இருக்கும் இ றே –
தோஷோ பதாவதி சமாதி சயான சங்க யா நிர்லேப மங்கள குனௌ கதுவா ஷடதே
ஜ்ஞான தைச்வர்யா சக்தி வீர்ய பலாச சிஷ சத வாம ரங்கேச பாச இவ ரத்னம் நாக கய நதி-உத்தர சதகம் -27–என்கிற
ஸ்லோகத்தில் இவை அத்தனையும் பட்டர் அருளிச் செய்தார் இ றே-

———————————————-

சூர்ணிகை -149-

இப்படி இருந்துள்ள குணங்கள் தான் மூன்று வகைப்பட்டு
இருக்கையாலே
அம்மூன்று வகைக்கும் விஷயங்களை வகுத்து அருளிச் செய்கிறார் –

இவற்றில்
வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்-
சௌர்யாதிகளுக்கு விஜயம் பிரதிகூலர் –
இவற்றுக்கு காரணமான
ஜ்ஞான சக்தியாதிகளுக்கு
எல்லாரும் விஷயம் –

அதாவது –
வாத்சல்யாதிகள் -என்கிற ஆதி சப்தத்தாலே
சௌசீல்ய சௌலப்ய மார்தவ ஆர்ஜவ -வாதிகளான குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது –
விஷயம் அனுகூலர் என்றது ஆஸ்ரிதர் -என்றபடி –
சௌர்யாதிகளுக்கு-என்கிற ஆதி சப்தத்தாலே பராக்ரமத்தைச் சொல்லுகிறது
விஷயம் பிரதிகூலர் -என்றது -ஆஸ்ரித விரோதிகள் என்றபடி
தவஷத் அன்னம் ந போக்தவ்யம்-தவிஷ நதம நைவ போஜ்யதே
பாண்டவ நத விஷசே ராஜன மம ப்ராணா ஹி பாண்டவா -என்று
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் என்று அருளிச் செய்தான் இ றே-
இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்தியாதிகள் -இங்கே ஆதி சப்தத்தாலே
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூக்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யாதிகளுக்கும் சௌர்யாதிகளுக்கும் ஜ்ஞான சக்தியாதிகள்
காரணம் ஆகையாவது
பரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலமதுலம் ஐஸ்வர்யம் அகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்தி ரபிச பரம தேஜஸ் சேதி பரவர குண ஷட்கம்
பிரதம ஜம குணா நாம் நிஸ சீம நாம கணந விகுணா நாம பிரசவபூ –வரதராஜ சதகம் -என்றும்
அதுலமான பலமும் —விமரியாத வீர்யம் அடக்க முடியாத -உத்க்ருஷ்ட சக்தி தேஜஸ் -பிரதமஜம் -முதலில் எண்ணத்தக்க பிரசவ பூ உத்பத்தி ஸ்தானம் –
மங்கள குண ளாவாஷா ஷடேதா –ஸ்ரீ ரெங்கராஜா சத்வம் -என்றும் சொல்லுகிற படியே
அவற்றுக்கு ஊற்று வாயாய் இருக்கை –
அவை தான் வஸ்து உத்கர்ஷ பாதக ஷட் குணயாத்தகுணா பாவமாய்த்து இ றே இருப்பது

எம்பெருமான் யுடைய திவ்ய ஆத்ம குணங்கள் ஆவன ஜ்ஞான சக்த்யாதி குண ஷட்கங்களும்
அதிலே பிறந்த சௌசீல்யாதிகளும்-என்ற இவ் வாக்யத்துக்கு அர்த்தம் எழுதும் அளவில்
அதிலே பிறக்கை யாவது -வஸ்து உத்கர்ஷ ஆபாதக ஷாட் குண்ய ஆயத்த குண பாவம் -ஆகை -என்று இ றே விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –
உத்பத்தி என்றால் நித்யத்வம் குறையுமே –
இந்த குண ஷட்கத்தில் வைத்துக் கொண்டு ஞானம் ஆவது
அஜடம் ச்வாதம் சமபோதி நித்யம் சர்வாகஹானம் ஜ்ஞான நாம குணம் பராஹூ பிரதமம் குணசிந்தகா
என்கிறபடியே– என்றும் ஒக்க -சர்வ விஷய பிரகாசமுமாய்
ஸ்வ பிரகாசமுமான குண விசேஷம் –அஜாதம் -ஸ்வயம் பிரகாசம் -பிரத்யக்காயும் –சர்வ அவகாஹனம் –
சக்தியாவது -ஜகத் பிரகிருதி பாவோ யசஸா சக்தி பரி கீர்த்திதா -என்கிற
ஜகத் பிரகிருதி பாவமாதல்– அகடிதகட நா சாமர்த்தியம் ஆதல்
பலமாவது-சரமஹா நிசது யா சத்தம் குர்வதோ ஜகத் பலம் நாம குணசதஷ்ய கதிதோ குண சிந்தகை -என்கிற
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்ரமம் இன்றியிலே ஒழிகை ஆதல்
பலம் தாரண சாமர்த்தியம் -என்கிற சமஸ்த வஸ்து தாரண சாமர்த்தியம் ஆதல்
ஐஸ்வர்யம் ஆவது -கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யா பரிபருமகிதம ஐஸ்வர்யம் நாம தத் பரோகதம் குணா தத்வராதாதா சிந்தனை -என்கிற
கர்த்ருத்வ லஷணமான ஸ்வா தந்த்ர்யம் ஆதல்
சமஸ்த வஸ்து நியமன சாமர்த்தியம் ஆதல் –
வீர்யமாவது -தசயோபாத நபாவேபி விகார விரஹோ ஹி யா வீர்யம் நாம குணா சசோ யமச யுததவோ பரா ஹவய -என்று
ஜகத் உபாதானமாகா நிற்கச் செய்தேயும்
ஸ்வரூப விகாரம் இன்றியிலே ஒழியும்படியான அவிகாரயதை–விகாரம் அற்ற தன்மை வீர்யம் என்றவாறு – –
தேஜஸ் ஆவது -சஹ காரியா நபேஷா யா தத் தேஜஸ் சமுதாஹருதம -என்கிற
சஹாகார நைரபேஷம் ஆதல்
பராபி பவன சாமர்த்தியம் ஆதல் –
இவற்றுக்கு எல்லாரும் விஷயமாகை-ஆவது
அனுகூல ரஷணாதிகளுக்கும் பிரதிகூல நிரசனாதிகளுக்கும்
ஜ்ஞான சக்தியாதி விசிஷ்டனாய்க் கொண்டு
நிர்வஹிக்க வேண்டுகையாலே
இவற்றுக்கு சர்வரும் விஷயமாய் இருக்கை

———————————————————

சூர்ணிகை -150-

இப்படி குணங்களை மூன்று வகை யாக்கி அவற்றுக்கு விஷயங்களை தர்சிப்பித்த அளவு அன்றிக்கே குணங்களுக்கு பிரத்யேகம் விஷய நியமம் யுண்டாகையாலே
அத்தையும் தர்சிப்பிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி
கீழ் எடுத்த குணங்களில் சிலவற்றுக்கு தனித் தனியே குணங்களை தர்சிப்பிக்கிறார் –

ஜ்ஞானம் அஞ்ஞர்க்கு
சக்தி அசக்தர்க்கு
ஷமை சாபராதர்க்கு
கிருபை துக்கிகளுக்கு
வாத்சல்யம் சதோஷர்க்கு
சீலம் மந்தர்க்கு
ஆர்ஜவம் குடிலர்க்கு
சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு
மார்த்த்வம் விஸ்லேஷ பீருககளுக்கு
சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு
இப்படி எங்கும் கண்டு கொள்வது-

ஜ்ஞானம் ஆவது-சேதனருடைய -ஹிதாஹித நிரூபணத்துக்கு உறுப்பான குணம் -ஆகையால்
கவாஹமத்யே நததுர்புத்தி கவசாத மஹித வீஷணம் யத்திதம் மமதேவேச ததா ஜ்ஞாப்ய மாதவ -என்கிறபடியே
ஸ்வ ஹிதாஹித நிரூபணாதிகளுக்கு அஞராய் இருக்குமவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-

சக்தி -அசக்தர்க்கு -என்றது -சக்தியாவது அகடிதகட நா சாமர்த்தியம்
ஆகையால் ஸ்வ இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களில் அசக்தராய் இருக்குமவர்கள் உடைய-கார்ய சித்திக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

ஷமை சாபதாரர்க்கு என்றது -ஷமை யாவது அபராத சஹத்வம்
ஆகையால் அஹம் அஸ்ய அபராத நாம் ஆலய -என்கிறபடியே அபராத சஹிதராய் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
ஷமா சாபராதே நுதாபி நயுபேயோ கதம சாபராதேபி தருபதே மயி சயாத-என்று இ றே பட்டர் அருளிச் செய்தது-
-அபராதம் செய்தாலும் அனுதாபம் பட்டால் க்ஷமை கார்யகரம் ஆகும் -கர்வத்துடன் இருக்கும் என் விஷயத்தில் உன் கிருபை எப்படி காரியமாகும் -உத்தர சதகம் -96-
அருளாத நீர் -அபராத சஹத்வம் பற்றாசாக தூது -1–4-என் பிழையே நினைத்து –

கிருபை துக்கிகளுக்கு -என்றது
கிருபை யாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் -ஆகையாலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று துளங்குகை முதலான
துக்கம் யுடையவர்களுக்கு உறுப்பாயிருக்கும் -என்கை
தயா பரவசாய நஹராபவவயதா ஸூ காயதே மம ததஹம தாயாதிக -என்று அருளிச் செய்தார் இ றே பட்டர் -உத்தர சதகம் -98-/
துக்கப்படவே இல்லையே -சம்சாரம் துக்கம் என்று சொல்லாமல் சுகம் என்று நினைக்கிறேன் -எனக்கு ஹிதம் அஹிதமே தெரியாதே /எந்த குணத்துக்கு விஷயம் ஆவேன்

வாத்சல்யம் சதோஷர்க்கு -என்றது வாத்சல்யமாவது -அன்று ஈன்ற கன்றின் உடம்பின் வழுவை ஆதரித்துப் புஜிக்கும் தேனுவைப் போலே
அன்று அதனை ஈன்று உகந்த ஆ போலே -செய்த குற்றம் நற்றமாகவே கொள்
ஆஸ்ரிதர் யுடைய தோஷங்களைப் போக்யமாக கொள்ளுவதொரு குணம் –
ஆகையால் அவித்யா காமாதி தோஷ சஹிதராய் தங்களை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
தோஷம் இருக்கு என்று நினைக்க வேண்டுமே -இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் –

சீலம் மந்தர்க்கு -என்றது
சீலமாவது -பெரியவன் தாழ்ந்தவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வ பாவம் –கஹா குணவான் இத்தை சொன்னது -ஸூ சீலன் யார் -என்றவாறு
ஆகையால் அவர்கள் யுடைய தண்மையை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

ஆர்ஜவம் குடிலர்க்கு -என்றது -ஆர்ஜவம் ஆவது -கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் இருக்கை
ஆகையாலே தங்கள் உடைய கரண த்ரய கௌடில்யத்தை நினைத்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
-38-வயசில் தன் சரித்திரம் சொல்லிய பெருமாள் சூர்பனகைக்கு முழுவதும் சொல்லிய பின் நீ யார் என்றாரே அது அன்றோ ஆர்ஜவம்

சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு -என்றது சௌஹார்த்தம் ஆவது எப்போதும் நன்மையை சிந்தித்து இருக்கும் ஸ்வ பாவம்
ஆகையாலே சர்வ காலமும் தீமையே நினைத்து இருக்கும் துஷ்ட ஹிருதயராகத் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு
உறுப்பாய் இருக்கும் -என்கை–ஸூ ஹ்ருதயம் உள்ளவர் என்றபடி -இதை கொண்டே வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று நாமும் போக நம்பிக்கை இத்தை கொண்டே

மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்கு -என்றது
மார்த்வம் ஆனது -ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாகையாலே
தன்னுடைய விச்லேஷத்தில் பீரு உடையவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -மகாத்மாக்கள் விசேஷம் தரிக்க மாட்டாத மார்த்வம் –

சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு -என்றது
சௌலப்யமாவது-அதீந்த்ரியமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காம்படி பண்ணுகை
ஆகையால் தன்னைக் காண வேணும் என்று ஆசைப் பட்டவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-

இத்தால்
இவனுடைய ஜ்ஞானத்தில் அபேஷை உள்ளது -தம்தாமுடைய ஹிதாஹித நிரூபணத்தில் அறிவு இல்லாதவர்களுக்கு ஆகையாலே ஜ்ஞானம் அஜ்ஞர்க்காய் இருக்கும் –
இவனுடைய சக்தியில் அபேஷை உள்ளது -ச்வேஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் அசக்தராய் இருப்பார்க்கு ஆகையாலே சக்தி அசக்தருக்காய் இருக்கும் –
பொறை யில் அபேஷை உள்ளது அபராதம் உடையார்க்கு ஆகையாலே ஷமை சாபராதர்க்காய் இருக்கும் –
ஐயோ என்று இரங்க வேண்டுவது நோவு பட்டவர்க்கு ஆகையாலே கிருபை துக்கிகளுக்காய் இருக்கும்
தோஷத்தை போக்யமாகக் கொள்ள வேண்டுவது தோஷவான்களுக்கு ஆகையாலே வாத்சல்யம் சதோஷர்க்காய் இருக்கும் –
தண்மை பாராதே புரையறக் கலக்க வேண்டுவது தாழ்ந்தவர்கள் விஷயத்திலே ஆகையாலே சீலம் மந்தர்க்காய் இருக்கும்
கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்க் கொண்டு தன்னை அமைத்துப் பரிமாற வேண்டுவது
செவ்வைக் கேடர் விஷயத்தில் ஆகையாலே ஆர்ஜவம் குடிலர்க்காய் இருக்கும் –
தான் எப்போதும் நன்மை சிந்திக்க வேண்டுவது தம்தாமுக்கு தீமைகள் சிந்திக்கும்
தீ மனத்தர் விஷயத்தில் ஆகையாலே சௌஹார்த்தம் துஷ்ட ஹிருதயர்க்காய் இருக்கும்
விரஹம் பொறாத மென்மை வேண்டுவது விரஹத்துக்கு அஞ்சுவார் திறத்தில் ஆகையாலே
மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்காய் இருக்கும்
அதீந்த்ரமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காக வேண்டுவது
அவ்வடிவைக் காண்கையில் ஆசை உடையவர்களுக்கு ஆகையாலே
சௌலப்யம் காண ஆசைப்பட்டவர்களுக்காய் இருக்கும்
என்று குணங்களின் உடைய விஷய பிரதி நியத்வத்தை தர்சிப்பித்தார் ஆயிற்று
இப்படி எங்கும் கண்டு கொள்வது -என்றது
கீழ் சொன்ன பிரகாரத்தில் அனுக்தமான குணங்கள் எல்லா வற்றுக்கும்
பிரத்யேகம் விஷயங்களை தர்சித்துக் கொள்வது -என்றபடி –

————————————-

சூர்ணிகை -151-

-ஏவம் பூத குண விசிஷ்டன் ஆகையாலே ஈஸ்வரன் ஆஸ்ரித விஷயத்தில் பரிமாறிப் போரும்படிகளை
விஸ்தரேண ஒரு சூர்ணிகையாலே அருளிச் செய்கிறார் மேல் –

இப்படி ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்கேயாய்
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல்
ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய்
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும்
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத்
தன்னையும் தன்னுடைமையும் வழங்கி
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்வத்தையே நினைத்து
அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி
எல்லா தசையிலும் இனியனாய்
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே
குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும்
அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு
அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி
தான் ஈடுபட்டு
அவர்களுக்கு பாங்காய் தன்னைத் தாழ விட்டு
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்
புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு
ச்நேஹித்துக் கொண்டு போரும்-

இப்படி -என்று கீழ் உக்தமான குண யோக பிரகாரத்தை பராமர்சிக்கிறது –
ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே -என்று
குண யோகத்தை ஹேதுவாக அருளிச் செய்தது
மேல் சொல்லுகிற பரிமாற்றங்கள் எல்லாம் ஓரோர் குணகார்யம் என்று தோற்றுகைக்காக-
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி -இது கிருபா கார்யம்
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று ஈடுபடுகிறது பர துக்க அசஹிஷ்ணு வாகையாலே இ றே-
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து –
இது சௌஹார்த்த கார்யம்
எப்போதும் ஒக்க -என்றது இவர்கள் அறிந்த காலத்தோடு அறியாத காலத்தோடு வாசி அற
சர்வ காலத்திலும் -என்றபடி
ஆஸ்ரித சர்வ மங்கள அ ந்வேஷண பரனாய் இருக்கிறது சௌஹார்யத்தாலே இ றே-
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்க்கேயாய்-
இது ஆஸ்ரித பாரதந்த்ர்ய கார்யம்
ஸ்வ அர்த்த பரனாயே இருத்தல் ச்வார்த்த பரார்த்தங்கள் இரண்டுக்கும்
பொதுவாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
சந்தரிகாதி பதார்த்தங்கள் போலே பரார்த்த ஏக வேஷனாய் இருக்கிறது பாரதந்த்ர்யத்தால் இ றே –
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல் ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே –
இது சாம்யகுண கார்யம்-த்வார த்ரயத்தால் காட்டி அருளும் சாம்ய குணம் –
ஆஸ்ரிதர் பக்கல் ஜன்மாதிகளால் உண்டான தண்மை பாராமல் பரிமாறுகிறது-ஆதி சப்தம் –தனம் ஞானம் வ்ருத்தங்கள்
சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே
ஜன்மாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசி அற
ஆஸ்ரயணீ யதவே சமனாய் இருக்கும் ஸ்வ பாவத்தாலே இ றே-
விருப்பு வெறுப்பு இல்லாமல் -உத்க்ருஷ்டம என்று விருப்பமோ அபக்ருஷ்டர் என்று வெறுப்போ இல்லாமல் சமோஹம் சர்வம்-
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய் –
இது அசரண சரண்யத்வ கார்யம்
தாங்களும் தங்களுக்கு ரஷகர் அன்று -பிறரும் தங்களுக்கு ரஷகர் அன்று
என்று கை வாங்கின தசையில் தான் ரஷகன் ஆகிறது
பற்றிலார் பற்ற நின்றான்-7–2–7- -ஆகையாலே இ றே -நேரான தமிழ் மொழி பெயர்ப்பு அசரண்ய சரண்யன்
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும் அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும் –
இது சத்யகாமத்வ கார்யம் –
மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல் வாய் மாண்டானை -என்கிறபடியே
நெடும் காலத்திலே கடல் கொண்டு போன சாந்தீபன் புத்ரனையும்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் -என்கிறபடியே
ஜனித்த போதே
என்னுடைய மனைவி காதல் மக்களை பயத்தாலும் காணாள்-என்கிறபடியே
பெற்ற தாயும் தர்சிக்கப் பெறாத படி நாச்சியார் தங்கள் ஸ்வா தந்த்ர்யத்தால் அழைப்பிக்க–கண்ணனை காண ஸ்வா தந்தர்யம் பயன்படுத்தலாமே –
தப்பின பிள்ளைகளை -என்கிறபடியே கை தப்பிப் போய்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியிலே கிடந்த வைதிகன் புத்ரர்களையும் உரு உருவே கொடுத்தான் என்றும்
உடலோடும் கொண்டு கொடுத்தவனை -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வவ ரூபன்களோடு மீட்டுக் கொடு வந்து கொடுத்தால் போலே துஷ்கரங்களைச் செய்தும் ஆஸ்ரிதர் அபேஷிதங்களைத் தலைக் கட்டுகிறது-
ஆஸ்ரித ரஷண விஷயோ மநோரத காம ச பரதிஹதோ அபவதீதி சத்ய காமா -என்கிற சத்ய காமன் ஆகையாலே இ றே –
சத்யகாமன் ஆகையாவது சாந்தீபன் புத்ரனை கொடு வந்தால் போலே சகல அபேஷிதங்களையும் முடிக்க வல்லனாகை
என்று இ றே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் தத்வ த்ரயத்திலே அருளிச் செய்தது-
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும் –
இது சத்யசங்கல்ப கார்யம் –
உத்தானபாத புத்ரனான த்ருவனுக்கு ஊர்த்த அவதியிலே அபூர்வமாய் இருப்பதொரு பதம்
கல்ப்பித்துக் கொடுத்தால் போலே
ஆஸ்ரிதர்க்கு பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்குகிறது –
அபூர்வ போக்யங்களை சிருஷ்டிக்க வல்ல அமோக சங்கல்பன் ஆகையாலே இ றே
சத்ய சங்கல்பன் ஆகையாவது த்ருவ பதம் போலே பண்டு இல்லாத வற்றையும் உண்டாக்க வல்லனாகை என்று
இதுவும் பட்டர் தாமே அருளிச் செய்தார் இ றே –
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத் தன்னையும் தன்னுடைமையும் வழங்கி –
இது ஔதார்ய கார்யம்-கொள்ளக் குறைவிலன் -அலம் புரிந்த நெடும் தடக்கையன்
வரத சகல மேதத சம்சரிதார்த்தம் சகாத்த -என்கிறபடியே
தங்கள் உடைமையை தாங்கள் விநியோகம் கொள்ளுமா போலே
விநியோகம் கொள்ளலாம் படி ஆத்மா ஆத்மீயங்களை
ஆஸ்ரிதர்க்கு கொடுக்கிறது –
கொடுத்தோம் என்கிற அபிமானமும் தன நெஞ்சில் இல்லாதபடியாகவும் கொள்ளுமவர்களுக்கு
பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படியாகவும்
கொடுக்கும் பரம உதாரன் ஆகையால் இ றே-
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய் –
இது கிருதிவ கார்யம்
ஆஸ்ரிதர் கார்யம் தலைக் கட்டினால் அவர்கள் கிருதக்ருத்யர் ஆகை அன்றிக்கே
அபிஷசைய ச லங்காயாம் -இத்யாதிப் படியே தான் கிருதகிருத்யனாகிறது –
ஆஸ்ரிதர் ரஷணம் பெற்றால் பேறு தன்னதாய் இருக்கும் ஸ்வ பாவத்தால் இ றே
கருதிகை யாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதம்பூர்ணமானால் தான் க்ருதக்ருத்யனாகை-என்று இ றே பட்டரும் அருளிச் செய்ததே-
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்வத்தையே நினைத்து –
இது க்ருதஞ்ஞதா கார்யம்
தன திறத்திலே ஒரு சரணாகதி முதலான ஸூ கருத லேசத்தை பண்ணினால்
அவர்களுக்கு தான் ஒரு எல்லா நன்மைகளையும் செய்தாலும் அவற்றை ஒன்றும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்தையே நினைத்து இருக்கிறது
செய்த நன்றி அறியுமவன் ஆகையாலே இ றே
க்ருதஞ்ஞன் ஆகையாவது ஆஸ்ரிதர் உடைய ஸூ க்ருதலவத்தை ஒன்றையுமே நினைத்து
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் பாராதே இருக்கை -என்று இதுவும் பட்டர் அருளிச் செய்தார்-

அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி எல்லா தசையிலும் இனியனாய் –
இது மாதுர்ய கார்யம் –
அநாதி காலம் பிடித்து கொளுந்திக் கிடக்கிற ப்ராக்ருத விஷய ரசங்களை விஸ்மரிக்கும் படி
சர்வ அவஸ்தையிலும் இனியனாகிறது
சர்வ ரச-என்கிறபடியே நிரதிசய போக்யனாய் இருக்கையால் இ றே-
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே –
இது சாதுர்ய கார்யம்
பார்யா புத்ராதிகளோடே கூடி வர்த்திப்பான் ஒரு புருஷன் அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டு இருக்கச் செய்தேயும்
காணாதாரைப் போலே இருக்குமா போலே
ஆஸ்ரிதர் செய்து இருக்கிற குற்றங்களை கண்டு இருக்கச் செய்தேயும் தன திரு உள்ளத்தாலே நினையாது இருக்கிறது
ஆஸ்ரிதர் தோஷங்களைத் தெரியாத படி மறைக்க வல்ல சாதுர்யன் ஆகையாலே இ றே-

குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து-
இது ஸ்திரதவ கார்யம் –
சொன்னது செய்ய வேண்டும்படி தனக்கு அபிமதையாய்
சேதனர் குற்றங்களை பொறுப்பித்துச் சேர விடும் பெரிய பிராட்டியார்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் -என்கிறபடியே குற்றங்களைக் காட்டினாலும்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்று
அவளோடு மறுதலைத்து நிச்சலனாய் நின்று ரஷிக்கிற ஸ்திர ஸ்வ பாவன் ஆகையாலே இ றே-
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு –
இது பிரணயித்வ கார்யம்
காமினி விஷயத்தில் பிரணயித்வத்தாலே அவள் உடம்பில் அழுக்கை விரும்பும் காமுகனைப் போலே
ஆஸ்ரிதரான வர்களுடைய பிரகிருதி சம்பந்தாதி தோஷங்களை
போக்யமாகக் கொள்ளுகிறது பரம பிரணயி-ஆகையாலே இ றே –
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -நின்றார் அறியா வண்ணம் பராங்குச நாயகி உள்ளம் புகுந்தான் –
பிராட்டியும் அறியா வண்ணம் -குட்ட நாட்டுத் திருப் புலியூர் திருவாய் மொழி –

ஊற்றமுடையாய் ஸ்திர புத்தி /–பெரியாய் செய்தோம் என்று சொல்லிக் கொள்ளாமல் -புருஷோத்தமன் /
-உலகில் தோற்றமாய் நின்ற -ஸுசீலம்- சுடரே -தன் பேறாக கொள்பவன் அன்றோ –

அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் –
இது ஆர்ஜவ கார்யம் -நேர்மை -செப்பம் யுடையாய் –
மனோ வாக் காயங்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராய் இருக்குமவர்கள் பக்கலிலே
நீர் ஏறா மேடுகளில் விரகாலே நீர் எற்றுவாரைப் போலே
தன்னை அமைத்து
த்ரிவித கரணங்களாலும் செவ்வியனாய் போருகிறது ருஜூ ஸ்வ பாவன் ஆகையாலே இ றே –
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி தான் ஈடுபட்டு –
இது மார்த்த்வ கார்யம்
ஊர்த்த்வம் மாசான ந ஜீவிஷயே -என்றால்
ந ஜீவேயம் ஷணம் அபி -என்கிறபடியே-
தன்னைப் பிரிந்தால் ஆஸ்ரிதர் படும் வ்யசனம்
கடல் போன்ற தன வ்யசனத்துக்கு ஒரு குளப்படி மாதரம் என்னும் படி
தான் கிலேசப் படுகிறது
ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாலே இ றே-

அவர்களுக்கு பாங்காக தன்னை தாழ விட்டு –
இது சௌசீல்ய கார்யம் –
ஜன்மாதிகளால் தண்ணியராய் இருக்குமவர்களுக்கு அனுகூலமாக சர்வேஸ்வரன்
சர்வ உத்க்ருஷ்டனான தன்னை தாழ விடுகிறது சீலவத்தையாலே இ றே-

அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
இது சௌலப்ய கார்யம்
அவதார தசையிலே நவநீத சௌர்ய வ்யாஜத்தாலே -சிக்கென வார்த்தடிப்ப -என்கிறபடியே
யசோதாதிகளுக்கு கட்டவும் அடிக்கவும் ஆம்படி எளியனாய் இருக்கிறது -எளிவரும் இயல்வினன்-1-3-2- -ஆகையாலே இ றே-
என் அவலம் களைவாய் -ஆடுக செங்கீரை -சர்வேஸ்வரனும் இவள் சொல்லி ஆடுகிறான்
மன்னு குறுங்குடியாய் -கண்ண புரத்து அரசே -கண்ணன் மட்டும் இல்லை இவர்களும் ஆட வேண்டுமாம் இவள் அவலம் களைய –
சிக்கென ஆர்த்து அடிப்ப –இடுப்பிலும் இடம் இல்லை இடுப்புக்கும் உரலுக்கும் இடைவெளி இல்லை –
-தாம்புகளால் படைப்பை -ஒளியா வெண்ணெய் உண்டான் –ஒண் கயிறு -ஸ்ரீ வேண்டுமே அவன் உடன் சம்பந்தம் கொள்ள – -அலர்ந்தான்-அலந்தான்

அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும்-
இது வாத்சல்ய கார்யம்
அந்து தான் பெற்ற கன்றுக்கு தாயான பசு இரங்கி-அன்று தான் பெற்ற கன்றுக்கு ஆ -இங்கு -சரணாகதி செய்த இன்று –அப்ரஹ்மாத்வம் இல்லாத வஸ்து இல்லையே –
முன்பு தான் ச்நேஹித்துக் கொண்டு போந்த முன் அணைக் கன்றையும்
தனக்கு போக்யமான புல்லிட வந்தவர்களையும் உட்பட மூசிக் கொம்பிலே கோத்தெடுப்பது
குளம்பாலே மிதிப்பது ஆம்போலே
பரிரம பணாதிபோக உபகாரியான பெரிய பிராட்டியாரையும்
முன்பு சிநேக விஷயமாகப் போந்த நித்ய சூரிகளையும் தள்ளி விட்டு
இன்று ஆஸ்ரயித்தவர்களை ச்நேஹித்துக் கொண்டு போருகிறது வத்சல்யன் ஆகையாலே இ றே-
சமுத்திரம் தாண்ட அன்று ஈன்ற கன்றான -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இடம் கேட்க -சுக்ரீவனை சொல்ல -சரண் அடைய சொல்லி -ஏழு கடுக்காய் எருது கெட்டார்க்கும்-

—————————————

சூர்ணிகை -152-

ஆக
ஜ்ஞான சக்தியாதி கல்யாண குண பூஷிதனாய் -என்றதை விஸ்தரேண உபபாதித்தார் கீழ் –
அநந்தரம்
சகல ஜகத சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் -என்றதை விஸ்தரேண உபபாதிப்பதாக யுபக்ரமிக்கிறார்

இவனே
சகல
ஜகத்துக்கும்
காரண
பூதன் –

அதாவது
இவன் -என்று கீழ் சொன்ன விலஷண ஸ்வரூப குண விசிஷ்டனான ஈஸ்வரனை பராமர்சிக்கிறது
அவதாரணத்தாலே -ஜகத் காரணத்வத்தின் யுடைய அந்யோந்ய வ்யவச்சேதம் பண்ணுகிறது –
ராமன் வில்லாளியே அயோக வியச்சித்தம்-பரம் -தொடர்பு உண்டு சேர்த்தி இல்லை -இல்லை என்பது இல்லை –
ப்ரஹ்மம் ஜகத் காரணமே /-மறுப்பை நிரசித்து ஸ்தாபனம்
ராமன் வில்லாளி அர்ஜுனன் வில்லாளி -ராமனே வில்லாளி -ப்ரஹ்மமே காரணம் -அவனே இங்கு என்றது அன்யா யோக விவச்சேதம் -வேறு இடத்தில் தொடர்பு இல்லை என்றவாறு –
சமன்வய -அவிரோத -சாதனா பல அத்யாய சதுஷ்டயம்
பொருந்த விடுதல் சமன்வயம் -ஜகத் காரணத்வம் ப்ரஹ்மத்துக்கு
விரோதம் வாராது -முதல் இரண்டாலே ப்ரஹ்மமே ஜகத் காரணமே நிரூபிதம்
காரணம் து த்யேயதா -அடுத்து -பக்தி சாதனம் -பலம் அடுத்து -156-அதிகரணங்கள் -நான்கும் சேர்ந்து –
உபநிஷத் கடலை கடைந்து வேத வியாசர் அருளி –
வேதாந்தத்திலே -சதேவ சோம்யே–இதம் அக்ர- ஏகமேவ ஆஸீத் -என்று சாந்தோக்யத்திலும்-சத் பொதுச் சொல் –
ப்ரஹ்ம வா இதமேக மேவாகர ஆஸீத -என்று வாஜச நேயகத்திலும்–குதிரை முகத்துடன் ஸூ ர்யன் உபதேசம் -கிருஷ்ண யஜுர் வேதம் காக்க -பறவைகள் பிடித்து வைத்து -ஸூக்ல யஜுர் வேதம் ஸூ ர்யன் உபதேசிக்க –
ப்ரஹ்மம் பொதுச் சொல் இங்கும் –
ஆத்மா வா இதமேக மேவ அக்ரே ஆஸீத் -என்று ஐதரேகத்திலும்
சத் ப்ரஹ்மாதமரூப சாமான்ய சப்தங்களாலே சொல்லப் பட்ட
காரண வஸ்து ஏது என்னும் ஆகாங்ஷையிலே
ஆத்மா என்று மீண்டும் பொதுச் சொல் –
கதி சாமான்ய நியாயத்தாலே-பொதுச் சொல்லால் சொல்லப்பட்ட -காரண வஸ்து –கதி-பர்யவசாயனம் -கொண்டு போய் சேர்க்க –
ஏகோஹ வை நாராயண ஆஸீத் -என்று மகா உபநிஷத்திலே விசேஷிக்கப் பட்ட நாராயணனே
ஜகத் காரண பூதனாக நிச்சயித்து இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே
இவனே என்று சாவதாரணமாக அருளிச் செய்கிறார்-
சிவன் சப்தம் மங்களம் -சிவ ஏவ -விசேஷித்து நாராயணன் / இந்திர =இதி பரம ஐஸ்வர்ய தாது –
அனைத்துக்கும் அந்தராத்மா -திரிசூலத்தை பற்றி யுள்ள சிவன் போன்ற வார்த்தைகளுக்கு -அக்னி முன்னேற்ற பாதையில் கூட்டிச் செல்லுமவன் –

சகல ஜகத்துக்கும் காரனபூதன் -என்றது
சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்களுக்கும் காரணபூதன் -என்றபடி –
பிரகிருதி தானே பரிணமித்து -நான்முகன் மூலம் செய்யும் ஸ்ருஷ்டியும் அந்தராத்மாதயா இவனே பண்ணுகிறான் என்றபடி
இத்தால் –சமன்வயமும் -அவிரோதமும் -சாதனமும் -பலமும் -ஆகிற அர்த்த சதுஷ்டத்தையும்
அடைவே பிரதிபாதிக்கிற உத்தர மீமாம்சையில்
அத்யாய சதுஷ்டயத்திலும் வைத்துக் கொண்டு
அததோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாசா -என்று ஜிஜ்ஞாசயமாக சொல்லப் பட்ட ப்ரஹ்மத்துக்கு லஷணமாக-அதனால் -அதன் பிறகு வருகிறான் -அறிய வேணும் என்ற ஆசையுடன் –
ஜனமாதயச்த யத -என்று ஜகத் காரணத்வத்தைச் சொல்லி-யார் இடத்தில் இருந்து ஜென்ம ஆதி -காத்தல் சம்ஹாரங்கள் -போன்றவை ஏற்படுமோ அதே ப்ரஹ்மம் –
அதனுடைய அயோக அந்யயோக வ்யவச்சேத முகத்தாலே
ஜகத் காரண வஸ்து பிரதிபாதிக சகல வேதாந்த வாக்யங்களுக்கும்
ப்ரஹ்மணி சம்யக அந்வயத்தை பிரதிபாதித்த பிரதம அத்யாயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று -முழுவதுமான அன்வயம் சம்யக அன்வயம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதீ லீலே –ரக்ஷிதி தீஷே –சுருதி சிரஸி விதீப்தே -ப்ரஹ்மணி ஸ்ரீனிவாஸ்
வேங்கடம் மேய விளக்கே —சேமுஷீ பக்தி ரூபா ஞானம் ஏற்படட்டும்
ஸ்ரீ பாஷ்யார்த்தம் முழுவதும் உள்ள மங்கள ஸ்லோகம் -/ மிதுனம் சேஷி -சம்ப்ரதாயம் ஸ்ரீநிவாஸே-என்று காட்டி அருளுகிறார்

———————————————-

சூர்ணிகை -153-

அவிரோத பிரதிபாதகமான த்விதீய அத்யாயத்தின் படியே
ப்ரஹ்ம காரணத்வ விரோதியான
பரமாணு காரணவாதிகளை நிராகரிக்கிறார்

சிலர்
பரமாணுவைக்
காரணம்
என்றார்கள்-

அணுக்கள் கூடி த்வை அணு ஆகும் -த்ரி அணு ஆகும் என்பான் -அவயவம் உண்டு என்றால் -தானே ஒன்றுடன் ஓன்று சேரும் -உடையும் பாவும் சேர்ந்து -வஸ்திரம் –
பரமாணு நிரவவயம் —
மஹாதீர்க்கஅதிகரணம் -ரசனாதிகாரணம் பிரதானம் காரணம் என்பவரை நிரசனம்
/பரிமண்டலம் பரம அணு -கூடுவதற்கு வாய்ப்பு இல்லையே அவயவம் இல்லை என்பதால் –

சிலர் என்று பௌத்த ஆர்ஹத வைசேஷிகாதிகளைச் சொல்லுகிறது
இதில் -புத்த ஆர்ஹதர்க்கு கேவல பரமாணுக்களே ஜகத் காரணமாக மதமாய் இருக்கும்
வைசேஷிகாதிகளுக்கு பரமாணுக்கள் உபாதான காரணமாய்
ஆனுமானிக ஈஸ்வரன் நிமித்த காரணமாக மதமாய் இருக்கும்–சாஸ்த்ர ஸித்தமான ஈஸ்வரன் இல்லை –
கர்த்தாவை ஈஸ்வரன் என்று அனுமானித்து -ஞான சக்தி அபரிச்சேதயம்
இவர்களில் பௌத்த வைசேஷிகாதிகள் பாரத்ததிவா அப்பயதை ஐஸ்வர்ய வீயங்கள் என்று
பரமாணுக்களை சதுர்விதமாகக் கொள்ளுவார்கள்
ஆர்ஹதர்-ஜைனர் – ஏகரூபமாகக் கொள்ளுவார்கள்
இங்கனே சில விசேஷங்கள் உண்டானாலும் பரமாணு காரண்த்வ அங்கீகாரம்
எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே சிலர் என்று சமுச்சியத உபாதானம் பண்ணுகிறார் –

————————————————————–

சூர்ணிகை -154-

இவர்கள் மஹீ மஹீதராதிப சகல கார்யங்களும் பரமாணு பரிமாணம் என்று இ றே சொல்வது –
அந்த பஷத்தை நிராகரிக்கிறார் –

பரமாணுவில்
பிரமாணம் இல்லாமையாலும்
ஸ்ருதி விரோதத்தாலும்
அது சேராது-

பிரத்யக்ஷம் அனுமானம் சப்த பிரமாணம் இல்லாமையாலும் -ஆகமம் சாஸ்திரமும் சித்தமும் இல்லை

அதாவது
ஜகத் காரணதயா அங்கீ கரிக்கப் படுகிற பரமாணுக்கள்
ப்ரத்யஷ சித்தமும் இன்றியே
ஆகம சித்தியும் இன்றியே
அனுமானத்தாலே சாதிக்கப் பார்க்கில்
அது ஆகம விருத்தமான அர்த்தத்தை சாதிக்க மாட்டாமையாலே
அனுமான சித்தியும் இன்றியே இருக்கையாலே
பரமாணு சத்பாவத்தில் ஒரு பிரமாணமும் இல்லாமையாலும்
ஈச்வரனே ஜகத் காரணம் என்கிற ஸ்ருதிக்கு விரோதம் ஆகையாலும்
பரமாணுக்கள் ஜகத் காரணம் என்ற வது சேராது -என்கை-

——————————————-

சூர்ணிகை -155-

அநந்தரம் -ஜகத்துக்கு பிரக்ருதியே ஸ்வதந்திர காரணம் என்று சொல்லுகிற கபில மதத்தை
நிராகரிக்கைக்காக அத்தை உத்ஷேபிக்கிறார் –

கபிலர்
பிரதானம்
காரணம்
என்றார்கள்

இயற்கையே போதும் -என்பர் -யுக்தி வைத்தே இவர்களை நிரசிப்பர்-

கபிலர் -என்கிறது கபில மத நிஷ்டரான சாங்க்யரை–சாங்க்ய யோகம் ஸ்ரீ கீதை -சொல்வது வேறே -சாங்க்யம் புத்தி -என்றவாறு
ஜெபா குஸ்மம் படிகங்கள் போலே ஆத்மா பிரகிருதி இரண்டுமே போதும் என்பர் கபிலர் -பிரகிருதி வேறே ஜீவன் விவேக ஞானமே முக்தி என்பர்
ப்ரஹ்மம் உபாதானம் என்றால் அஜடம் தானே ஜகத்தாகும் ஜகம் ஜடம் அன்றோ என்பர் -பொன்னை வைத்து மண் குடம் வராதே என்பர்
மிருதாத்மகமான கடத்துக்கு மிருத் த்ரவ்யமே காரணம் ஆகிறாப் போலே
சத்வ ரஜஸ் தமோ மய ஸூ க துக்க மோஹாத்மகமான ஜகத்துக்கும்
குண த்ரயங்களின் யுடைய சாம்ய ரூபமான பிரதானமே
ஸ்வ தந்த்ரமான காரணம்
ததி பாவேன பரிணமியா நிற்கும்
பயஸ் ஸூ க்கு அனநயாபேஷமாக ஆதயபரிஸ் பநனம் முதலான
பரிமாண பரம்பரை ச்வத ஏவ கூடுகிறாப் போலே யும்
பாலை தயிராக மாறுவதற்கு ஈஸ்வரன் தேவை இல்லையே
மேக விமுகதமாய் ஏக ரசமாய் இருக்கிற ஜலத்துக்கு நாரி கேள தால சூத கபித்த நிம்ப திநதரிண யாதி
விசித்ர ராசா ரூபேண பரிணாம பிரவ்ருத்தி காணப் படுகிறாப் போலேயும்–
எலுமிச்சம் பழம் ரசம் /இளநீர் /விசித்திர ரஸா பரிணாமம் நீருக்கு போலே
பரிமாண ஸ்வ பாவமாய்– பிரதிசர்க அவஸ்தையில்–சம்ஹார தசையில் – சத்ருச பரிணாமமுமாய் இருந்த பிரதானத்துக்கு
அனனயாதிஷ்டிதமாகவே -சர்க வவஸ்தையில் குண வைஷம்ய நிமித்தமான விசித்ர பரிமாணம் கூடும் ஆகையாலே
பிரக்ருதியே ஸ்வ தந்த்ரமாகக் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது என்று இ றே அவர்கள் சொல்வது –

—————————-

சூர்ணிகை -156-

அத்தை நிராகரிக்கிறார்

பிரதானம்
1–அசேதனம் ஆகையாலும்
2–ஈஸ்வரன் அதிஷ்டியாத போது
பரிணமிக்க மாட்டாமையாலும்
3–சிருஷ்டி சம்ஹார வ்யவஸதை
கூடாமையாலும்
அதுவும் சேராது –

அதிஷ்டானம் -குறுக்கே ஓன்று வேணும் -/சேதனன் அதிஷ்டானம் பண்ணி தானே கார்யம்

அதாவது
விசித்ர ஜகத் காரேண பரிணமிப்போம் என்று இருக்கைக்கு யோக்யதை இல்லாத படி
பிரதானம் சைதன்ய ரஹித வஸ்து வாகையாலும்
பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிசயாத மேசசயா ஹரி ஷோபயாமாச சம்ப்ராப்தே சர்வ காலே வயயா வயயௌ -என்கிறபடியே
தன இச்சையால் புகுந்து -கலக்கி -ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத இரண்டையும் கலக்கி -பிரதானத்தையும் புருஷனையும் -சரீரமே நான் என்று
அபிமானிக்கும் படி அன்றோ கலக்கி -கலக்குபன் இருந்தால் ஒழிய தானே கலங்க முடியாதே –
ஈஸ்வரன் அதிஷ்டித்த போது ஒழிய பரிணமிக்க மாட்டாமையாலும்
தத் அதிஷ்டானம் ஒழிய பரிணமிக்கும் ஆகில்
சர்வ காலமும் சிருஷ்டியாய் செல்லுமது ஒழிய
சம்ஹ்ருதயமாய்க் கிடக்கை என்னுமது கூடாமையாலே
கால பேதேன வருகிற சிருஷ்டி சம்ஹார வ்யவஸ்ததை கூடாமையாலும்
பிரதானம் காரணம் என்கிற அதுவும் சேராது என்கை
அதுவும் -என்று பூர்வ யுக்த பரமாணு காரண வாதத்தை சமுச்சயிக்கிறது —

ரசனா அனுபத்தேதே ச -பிரகிருதி தானே ரசனை பண்ணுவது பொருந்தாது என்றவாறு -அசேதனம் ஆனபடியால் -சைதன்யம்
ந அனுமானம் பிரவ்ருத்தேச –
யத்ர அபாவத்தா ச –
அன்யத்ர அபாவத் ச -த்ரினாவது-புல்லை போலே -புல்லை கொண்டு காளைமாடு பாலை தராதே என்று யுக்தி கொண்டே நிரசனம்

————————————

சூர்ணிகை -157-

இப்படி அசேதனமான பிரதானத்தை ஜகத் காரணமாகக் கொள்ளுகிற பஷத்தை நிராகரித்த
அநந்தரம்
சேதனனை ஜகத் காரணமாகக் கொள்ளும் பாசுபதாதி மதத்தை நிராகரிக்கிறார்

சேதனனும்
காரணம்
ஆகமாட்டான்

பொருந்தாதது அவனும் படைக்கப்பட்டவன் தானே -பசுபதியும் –

சப்தத்தாலே கீழ்ச் சொன்ன அசேதனத்தை சமுச்சயிகிறது
ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
ஆனுமானி கேஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
பாசுபத வைஷிகாதிகள் சொல்லுகிற ருத்ரன்
சேதனரில் அந்யதமன் இ றே
ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த ததாகரே –இத்யாதி வாக்யங்களைக் கொண்டு
சேதனரில் அந்யதமனான ப்ரஹ்மாவையும் ஜகத் காரணமாகச் சொல்லுவாரும் யுண்டு இ றே
அவை எல்லா வற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே சேதனனும் -என்று பொதுவிலே அருளிச் செய்தது
காரணம் ஆகமாட்டான் -என்றது காரணமாக ஷமன் அல்லன் -என்றபடி-

—————————————————-

சூர்ணிகை -158-

எத்தாலே -என்ன அருளிச் செய்கிறார் –

கர்ம
பரதந்தனுமாய்
துக்கியுமாய்
இருக்கையாலே –

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் -இவனே / ருத்ரன் நான்முகன் பதவி தானே –

அதாவது
சங்குசித ஜ்ஞான சக்திகனாய் கொண்டு தான் நினைத்த படி ஒன்றும் செய்ய வல்ல ஷமன் அல்லாதபடி
கர்மாதீனனுமாய்
ஆனந்தியாக் கொண்டு ஜகத் வியாபாரத்திலே மூளுகைக்கு
யோக்யதை இல்லாதபடி துக்கியுமாய் இருக்கையாலே -என்கை –
அபஹத பாபமா -என்கிறபடியே
அகர்ம வச்யனுமாய் -ஆனந்தமய -என்கிறபடியே நிரதிசய ஆனந்தியுமாய்
இருக்கிற அவனுக்கே இ றே அப்ரதிஹத ஜ்ஞான சக்திகனாய் மன ப்ரீத்தியை யுடையவன் பண்ணும் ஜகத் வியாபாரம் கூடுவது
ப்ரஹ்மா தயாச சகலா தேவா மனுஷ்யா பசவச ததா
விஷ்ணோர் மயா மஹா
வர்த்த மோஹாந்ததம சர்வ்ருதா ஆப்ரஹம ஸ்தம்ப
பர்ய நதா ஜகத நதா வ்யவச்திதா
ப்ராணின கர்ம ஜனித சம்சார வசவர்த் தின-என்கிறபடியே
கர்ம வச்யருமாய்
தத க்ரோத ப்ரீ தேன சமாகத நய நேன ச வாமாங்குஷ்ட நகா கரேண சின நம தஸ்ய சிரோ மய
யஸ்மாத் நபரா தஸ்ய சிரச் சின்னம் தவயா மம தசமாச சாப சமா விஸ்ட கபாலீதவம் பவிஷ்யசி -என்கிறபடியே
தலை அறுப்பாரும் அறுப்புண்பாருமாய்க் கொண்டு
துக்கிக்களுமாய் இருப்பார்க்கு
ஜகத் ஸ்ருஷ்டியாதி வியாபாரம் கூடாது இ றே-

————————————————————

சூர்ணிகை -159-

ஆக இப்படி விரோதி பரிஹாரங்களைப் பண்ணி
பிரதிஞ்ஞா அனுகுணமாக நிகமிக்கிறார்

ஆகையால்
ஈச்வரனே
ஜகத்துக்கு
காரணம்

ஆகையால் என்று
சேதன அசேதனங்கள் இரண்டும்
காரணம் இன்றிக்கே ஒழிகையாலே -என்கை -பரம சேதனனே காரணம் என்றவாறு

———————————————————–

சூர்ணிகை -160-

லோகத்திலே அவித்யா கர்ம நிபந்தனமாகவும்
பர நியோக நிபந்தனமாகவும்
காரணமாகை யுண்டாகையாலே -அவற்றைக் கழித்து
இவனுடைய காரண ஹேதுவை-அருளிச் செய்கிறார் –

இவன் காரணம் ஆகிறது
அவித்யா
கர்ம
பர நியோகாதிகளால்
அன்றிக்கே
ஸ்வ இச்சையாலே –

அவித்யாவோ கர்மமோ பிறரால் தூண்டப்பட்டோ லோகத்தில் காரணம் ஆகிறதே -/ஸ்வ இச்சா மாத்திரை நிதானம் -அவதார ரஹஸ்யம் -நான்கு ஸ்லோகங்கள் -ஆறு காரணங்கள் –

அதாவது
அவித்யா கர்ம நிபந்தனமான காரணத்வம் சகல ஜந்து சாதாரணம்
அதாவது -லோகத்தில் ஒன்றுக்கு ஓன்று உத்பாதகமாய்க் கொண்டு வருகிற காரணத்வம்
வைஷயிக ஸூ க பிராவண்ய ஹேதுவான அஞானத்தாலும் கர்மத்தாலும் இ றே–விஷய ஸூக ப்ராவண்யம் -ஹேதுவே அஞ்ஞானம் -அது கர்மத்தால் –
அதில் சாஸ்திர வச்யமான வற்றினுடைய உத்பாதகத்வம் கர்ம பிரதானமாய் இருக்கும்-பித்ருக்கள் கடனை தீர்க்க குழந்தை பெறுவது -கர்ம காரணம் என்றவாறு
அல்லாதது அவித்யா பிரதானமாய் இருக்கும்
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டு இராது
அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகள் யுடைய காரணத்வம் பர நியோக பிரதானமாய் இருக்கும்
பிரஜாபத்யம் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேசி தம் -என்றும்
யெதௌ தவௌ புருஷ சரே ஷட்டௌ பிரசாத க்ரோத ஜௌ சம்ருதௌ
தாதாதா சித்தப நனானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
ஆதி சப்தத்தாலே இவர்க்கு விவஷிதம் –அவர்ஜீயமான -ராகமோ –என்று-விட முடியாத ஆசை என்றவாறு -தேவை இல்லை என்று தெரிந்தாலும் -வாசனை ருசி அடியாக –
நடிவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்தாராம் இத்தனை –
அந்த ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் எம்பெருமானுக்கு அவித்யா கர்ம நிபந்தனமோ
அன்றிக்கே அவர்ஜீயமான ராகமோ –
இல்லையாகில் பரப்ரேரிதனாய்க் கொண்டு செய்கிறானோ என்று இ றே
அவர் சங்கா வாக்யத்தில் அருளிச் செய்தது
இவற்றால் அன்றிக்கே -ஸ்வ இச்சையால் -என்றது -நிவாரகர் இல்லாத ஸ்வா தந்தர்யம் உண்டே அவனுக்கு
நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
அபஹதபப்மா -என்றும்
ந தசயேசகசசந-என்கிறபடியே
அவித்யாதி தோஷ பிரதிபடனாய்
தனக்கு ஒரு நியாமர் இன்றிக்கே இருப்பானாய்
இருப்பவன் ஒருவன் ஆகையாலே தன் இச்சை ஒழிய ஹேதவாந்தரம் இல்லை -என்றபடி –
அசித விசேஷிதா ந பிரளய ஸீம நி சம்சரத கரண களேபரைர் கடயிதும் தயமா நம நா
வரத நிஜேச சயைவ பரவாநகரோ ப்ரக்ருதம் மஹதபிமா நபூத கரணாவளி கோர கிணீம்-என்றும்
ப்ரளய சமய ஸூ ப்தம் சவம் சரீரை கதேசம வரத சிதசிதாககயம் ஸ்வ இச்சையா
விஸ்தருணாந கசிதமிவ கலாபம் சிதரமாததய தூன வன அனுசிகினி சிகீவ கரீடசி ஸ்ரீ சம்ஷம் –உத்தர சதகம் -44—என்று இ றே பட்டர் அருளிச் செய்தது —
பெண் மயிலை பார்த்து ஆன் மயில் தோகை விரிப்பது போலே உன் சரீர ஏக தேசத்தில் உள்ள சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டித்தீர் –
அங்கீ கரித்து -பிராட்டி புருவ நெரிப்பே–பிரமாணமாக கொண்டீர் –

—————————————————————-

சூர்ணிகை -161-

இப்படி இச்சை யானாலும் இது தான் ஆயாச ரூபமாய் இருக்குமோ என்ன
அருளிச் செய்கிறார் –

ஸ்வ சங்கல்பத்தாலே
செய்கையாலே
இது தான் வருத்தம் அற்று
இருக்கும் –

அதாவது
யத்ன ரூபமான காயிக வியாபாரத்தால் அன்றிக்கே
அயத்னமான மானச வியாபார ரூப சங்கல்ப்பத்தாலே செய்கையாலே
இந்த ஜகத் சிருஷ்டி ரூப வியாபாரம் தான் இவனுக்கு அநாயாசமாய் இருக்கும் என்கை –
சோகாமயத் பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
மனசைவ ஜகத் ஸ்ருஷ்டும் சம்ஹாராஞ்ச கரோதி யா
தச்ய அரிபஷ ஷபனேகியா நுதயம் விசதர -என்றும்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய்
முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்துன் பெருமை மாசூணாதோ மாயோனே -என்றும்
சொல்லக் கடவது இ றே-
மனம் செய் ஞானம் -மானஸ சங்கல்பம் –

—————————————

சூர்ணிகை -162-

அநாயாசமாய் இருந்ததே யாகிலும் அவாப்த சமஸ்த காமத்தா
பரி பூர்ணனாய் இருக்கிறவனுக்கு
இந்த வியாபாரத்தால் பிரயோஜனம் என் -என்ன -அருளிச் செய்கிறார் –

இதுக்கு
பிரயோஜனம்
கேவல
லீலை –

அதாவது
இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –
லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தை
கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –
இதுக்கு பிரயோஜனம் -என்று
சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது
இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும்
பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும்
தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இ றே இவனுக்கு –
இத்தால் -லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற சூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
கரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய -என்று ஸ்ரீ பராசர பகவானும்
அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ
மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும்
நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும்
இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும்
அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இ றே-

ஆனால் –
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும்
உய்ய வுலகு படைத்து -என்றும்
விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -விஷ்ணு தத்வம் -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை —ராமானுஜ நூற்றந்தாதி -என்றும்
அசித் அவிசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –
உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது
ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிம் அன்யதசசச கர்த்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே த்வம் ஸ்வதந
த்ரயம் ஐஸ்வர்யம் அபர்யநுயோஜய மாஹூ–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –என்கிறபடியே
நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே
சகல ஆத்மாக்களையும் யுகபதேவ -சக காலத்திலேயே – முக்தராக்க வல்லனாய்
இருக்கச் செய்தேயும்
ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து
கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே இ றே
லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்
ஆகையால் இவ்விபூதியில் லீலையே ப்ரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
சூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————–

சூர்ணிகை -163-

இப்படி ஜகத் சிருஷ்டி பண்ணுகிறது லீலார்த்தமாக ஆகில்
சம்ஹார தசையில் லீலை குலையாதோ –
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்

ஆனால்
சம்ஹாரத்தில்
லீலை ‘
குலையாதோ
என்னில் –

————————————————–

சூர்ணிகை -164-

அத்தைப் பரிஹரிக்கிறார்

சம்ஹாரம்
தானும்
லீலை -யாகையால்
குலையாது –

அதாவது
கொட்டகம் இட்டு விளையாடுகிற பாலர்க்கு
இட்ட கொட்டகம் தன்னை மீள அழித்துப் பொகடுகிறது தானும்
லீலையாய் இருக்குமா போலே
இவற்றை சம்ஹரிக்கை தானும் ஸ்ருஷ்டியோபாதி லீலையாய் இருக்கையாலே
அப்போதும் லீலை குலையாது -என்றபடி –
அகில புவன ஜன்ம ஸ்த்தேம பங்காதி லீலே -என்றும்
நிகில ஜகத் உதய விபவ லய லீல-என்றும்
ஸ்ருஷ்டியோபாதி சம்ஹாரத்தையும் அவனுக்கு லீலையாக அருளிச் செய்தார் இ றே எம்பெருமானார்-

———————————————————————————-

ஆக
இதுக்கு கீழே
ஈச்வரனே ஜகத்துக்கு காரணம் -என்றும்
இவன் காரணம் ஆகிறது ஹேத்வந்தரங்களால் அன்று என்றும்
ஸ்வ இச்சையால் -என்றும்
சங்கல்ப மாத்திர வகலபதம் ஆகையாலே இதுதான் அநாயாசமமாய் இருக்கும் என்றும்
இது தனக்கு பிரயோஜனம் லீலை என்றும்
சொல்லி நின்றது –

————————————-

சூர்ணிகை -165-

இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாதரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்

இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –

பிரக்ருதிச் ச -உபாதானமும் அவனே ப்ரதிஞ்ஞா -வும் பொருந்துகிற படியால் -ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்த படி ஸ்வேதா கேது –
இவன் -தானே பரிணமித்து ஜகத் —தான் தான் உபாதான காரணம் -பரிணமிக்கும் ஓன்று தானே உபாதானம் -தான் -விசுஷ்ட ப்ரஹ்மம் என்றபடி –
நிமித்தமும் உபாதானமும் ப்ரஹ்மம் அபின்ன உபாதானம் -ப்ரஹ்மம் என்றபடி –

அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும் கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்–குயவன் நெசவாளி –
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்–மண்ணும் நூலும்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம்–சாந்தோக்யம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய்ப் பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –

இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது-சக்கரம் உம்மைத்தொகை
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் -முன்னே சொல்லி
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
பரிணாமம் அடைந்து ஜகத்தாக ஆனது -தானே முன்னே சொல்லி –
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்–விளக்கும் த்ருஷ்டாந்தத்தாலும் –
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –

ஏகமேவ அத்விதீயம் –மஹா வாக்கியம் -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல் இருந்தது -சத் கார்ய வாதம் –என்றும்-நிமித்தம் தேட வேண்டாம் –
காரணமாக சத்தாகவே இருந்தது -உபாதானமாக சூஷ்மமாக இருந்தது –
தத்வமஸி -இதுவும் மஹா வாக்கியம்
நிர்விசேஷ சின் மாத்திரம் அத்வைதம் —
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்-அந்த ப்ரஹ்மம் தானே தன்னை செய்து கொண்டது உபாதானமாக -யானாய் தன்னைத் தான் பாடி –
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–12-என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சர்க கர்த்தா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
படைக்கப்பட்ட வையும் அவரே கர்த்தாவும் அவரே -பரிபாலிப்பவனும் அவனே
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இ றே –

———————————————

சூர்ணிகை -166-

இப்படி தான் ஜகத்தாய் பரிணமிக்கும் ஆகில்
நிர்க்குணம் நிரஞ்சனம் நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
அவிகாராய சுத்தாய -என்றும்
இவனை நிர்விகாரனாகச் சொல்லும்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்

ஆனால்
நிர்விகாரன்
என்னும்படி
என்
என்னில்-

———————————–

சூர்ணிகை -167-

அத்தை பரிஹரிக்கிறார்

ஸ்வரூபத்துக்கு
விகாரம்
இல்லாமையாலே –

அதாவது
சித் அசித் ரூப விசேஷண விசிஷ்டனான– தானே– ஜகதாய்ப் பரிணமிக்கும் இடத்தில்–வ்யாவ்ருத்தி அர்த்தம் தானே விசேஷணம் —
விசேஷண விசிஷ்டமாக விசேஷயம் இருக்கும் அப்ருதக் ஸ்திதி பிரியாமல் இருக்கும் -/ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணம் அன்றோ ப்ரஹ்மம் /
-ஸ்வ ஆதீன த்ரிவித சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
விசேஷ்யமான ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே
நிர்விகாரன் என்னக் குறை இல்லை என்கை –
சரீரம் -ஏக தேசம் தானே பரிணமிக்கும் -திருமேனியில் ஒரு ஏக தேசத்தில் ஒரு துளி தானே பரிணமிக்கும்

————————————————

சூர்ணிகை -168-

ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லை யாகில்
இவன் தானே ஜகத்தாய பரிணமிக்கிறான் -என்ற பரிணாமம்
இவனுக்கு உண்டாம்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –

அதில்
பரிணாமம்
உண்டாம்படி
என்
என்னில் –

————————————————————————————–

சூர்ணிகை -169-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

விசிஷ்ட
விசேஷண
சத்வாரகமாக –

சேதன அசேதன மூலமாக பரிணமிக்கிறார் ப்ரஹ்மம் -என்றவாறு -விசேஷணம் வழியாக பரிணமிக்கும் –
விசேஷணம் கூடியே இருக்கும் -விசிஷ்டமாகவே இருக்கும் –
ப்ரஹ்மத்தை விட்டு எப்போதும் பிரியமாட்டோம் என்கிற சிறப்புடன் கூடி இருப்பதால் -இவரே மாறுகிறார் என்றால் தப்பில்லை
ஸ்வரூபேண விகாரம் இல்லை –

விசிஷ்டஞ்ச தத் விசேஷணம் ச இ தி விசிஷ்ட விசேஷணம் -என்று-முன்னால் அடை மொழி -பெயர்ச் சொல் சித்த அசித் –
பிரதமம் கர்ம தாரயா சமாசத்தைப் பண்ணி
த்வாரேண சஹ வர்த்தத இதி சத்வாரகம் – என்று
அனனதர பதத்தை பஹூ வரீகித்து–அதை த்வாரமாக கொண்டு –
விசிஷ்ட விசேஷண -சத்வாரகம்
என்று த்ருதியாதத புருஷனாக சப்தத்துக்கு–இதனால் -சித்த அசித்துக்களால் -என்று – வ்யுத்புத்தி பண்ணிக் கொள்வது-
விசிஷ்டம் ஆவது -விசேஷ யுக்தமானதாய்
விசிஷ்டமான விசேஷணம் என்று தண்ட குண்டலாதிகள் போல் அன்றிக்கே-கழற்றி வைக்க முடியாத படி –
சரீர பூதம் ஆகையாலே ப்ருதக் சித்த யர்ஹம் அல்லாத விசேஷத்தை உடைத்தான
சித் அசித் ரூப விசேஷணத்தைச் சொல்லுகிறது –
அன்றிக்கே
விசிஷ்ட விசேஷணம் என்கிற இதுக்கு
சரீர பூதமாய்க் கொண்டு என்றும் ஒக்கத் தன்னோடு கூடி இருக்கிற விசேஷணம் என்றும் பொருளாம்
அப்போதும் பிருதக் சித்தி அர்ஹமான தண்ட குண்டலாதிகளில் வ்யாவ்ருத்தி சித்திக்கும் இ றே
விசேஷணத்தாலே சத்வாரகமாக என்றது
இப்படி அப்ருதக் சித்த விசேஷணம் ஆகிற ஹேதுவாலே
த்வார சஹிதமாக இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்கை
இத்தால்
அப்ருதக் சித்தமான சித் அசித் ரூப விசேஷண த்வாரா
இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்றது ஆயிற்று –

————————————————–

சூர்ணிகை -170-

இப்படி ஸ்வரூபத்துக்கு விகாரம் இன்றிக்கே இருக்க
ஸ்வ சரீர பூத விசேஷண த்வாரா
கார்ய ஜகத்துக்கு எல்லாம் இவனே உபாதானமாகக் கூடுமோ -என்ன
அருளிச் செய்கிறார்-

ஒரு சிலந்திக்கு
உண்டான
ஸ்வபாவம்
சர்வ சக்திக்கு
கூடாது
ஒழியாது இ றே

நூலை விட நினைத்து நூலை விட்டு சிலந்தி மாறாமல்
இருக்க -ப்ரஹ்மம் சொல்ல வேண்டுமோ என்றபடி

அதாவது
அல்ப சக்திகதமான சிலந்திக்கு ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே
ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தாலே தத் அனுஜாதமாக கார்ய ஜாததுக்குத் தான் உபாதானமாம் படியாம் யுண்டான
ஸ்வ பாவம்-
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்று ஒதப் படுகிற சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே என்கை-
யாதோரண நாபிஸ் ஸ்ருஜதே கருஹண தே ச-முண்டக உபநிஷத் -என்றும்
ஊராண நாபிர் யதா ஸ்ருஷ்ட்வா ஸ்வயம் தத க்ரசதே-என்னக் கடவது இ றே
கார்யே நந்தே சவத நுமுகதச தவா முபாதா நாமா ஹூ ஸ
சா தே சகதிச ஸூ கர மிதரச சேதி வேலாம விலங்கய
இச்சா யாவத விஹரதி சதா ரெங்கராஜா நபேஷா சைவாச நாததி சயகரீ சோரண நாபௌ விபாவய–ஸ்ரீ ரெங்கராஜா சதகம் 2—31-என்று
அருளிச் செய்தார் இ றே பட்டர் -வரம்பிலாய மாய மாயன் -அன்றோ -சிலந்தி படைத்து அத்தை சாக்ஷியாக படைத்து -இத்தை காட்டி அருளினீர்

இப்படி நிமித்த உபாதான காரணத்வங்களை சொல்லி
சஹ காரி காரணத்வம் சொல்லாது ஒழிந்தது –
சர்வஞ்ஞத்வாதி குண யோகம் கீழே சொல்லுகையாலும்
நிமித்த உபாதானங்களுக்கு ஐக்யம் சொல்லுகையாலும்
தன்னடையே சித்திக்கும் என்னுமத்தாலே –

ஆகை இ றே வேதாந்த சூத்ரத்திலும் இதி விசேஷித்து சொல்லாது ஒழிந்தது –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை —102–140— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 22, 2017

சூர்ணிகை -102-

இனி மேல் பூதன மாத்ர சர்கோ ய மஹங்காராதது தாமசாது -என்கிறபடியே
பூதாதி சப்த வாச்யமான தாமச அஹங்காரத்தில் நின்றும்
தந்மாத்ர பஞ்சகமும்
தத் விசேஷமான ஆகாசாதி பஞ்ச பூதங்களும் உத்பன்னங்களாம் க்ரமம் அருளிச் செய்கிறார் –

பூதாதியில் நின்றும்–தாமச அஹங்காரத்தில் நின்றும் என்றபடி –
சப்த தந்மாத்ரை பிறக்கும் –
இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாய்வும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் தேஜஸ் ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –

தது மாத்திரம் -தன்மாத்ராம் -அது மட்டும் -விகசித்தமான ஆகாசத்தில் வேறே சிலவும் உண்டே –
சப்தம் தன்மாத்திரை ஆகாசமாக மலர்கிறது -மலர்ந்த பின்பு வேறே சிலவும் உண்டே
நெருப்பு வாயு இரண்டிலும் -விரோத பாவம் தண்ணீர் பிருத்வி -அனுகூல பாவம் – ஆகாசம் உதாசீன மூட பாவம்
சப்தம் ஸ்பர்சம் ரூபம் இவற்றில் விரோத அனுகூல பாவம் தெரியாதே –
அவிசேஷம் விசேஷம் -என்றும் பெயர்களும் உண்டு -தன்மாத்திரைகளுக்கும் பூதங்களுக்கும் –

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான–பெயர் பெற்ற – தாமச அஹங்காரத்தில் நின்றும்
ஆகாசத்தின் யுடைய ஸூஷ்ம அவஸ்தையான சப்த தந்மாத்ரை பிறக்கும்
இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த சப்த குணகமான ஆகாசமும்-
(அவ்யக்த சப்தம் -சப்த தன்மாத்திரை த்ரவ்யம்-வியக்த சப்த குணம் அத்ரவ்யம் )
வாயுவினுடைய சூஷ்ம அவஸ்தையான ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ஸ்பர்ச குணகமான வாயுவும்
தேஜசினுடைய சூஷ்ம மான ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய ரூப குணகமான தேஜஸ்ஸூம்
அப்பினுடைய சூஷ்ம மான ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ரச குணையான அப்பும்
பிருதிவினுடைய சூஷ்ம மான கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த கந்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையா கந்த குணையான பிருத்வி பிறக்கும் -என்கை –

ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
என்று உத்பத்தி சொல்லுகிற அளவில் பூதத்தை முற்படச் சொல்லி
தந்மாத்ரையை பிற்படச் சொல்லிக் கொண்டு வந்தது பூத உத்பத்திக்கு அநந்தரம்
தந்மாத்ர உத்பத்தி என்கிற க்ரமம் தோற்றுகைக்காக-
இந்த தந்மாத்ர அனந்தர உத்பத்தி க்ரமம் நம் ஆச்சார்யர்களுக்கு மிகவும் ஆதரணீயமாகப் போகும்
அத்க்கடி -அஷ்டௌ பிரக்ருதய ஷோடஸ விகார -என்கிற ஸ்ருதிக்கு ஸ்வரார்த்தம் சித்திக்கையாலே
ஈச்வராத பிரகிருதி புருஷௌ பிரக்ருதோ மஹான் மஹதோ
ஹன்காரோ ஹன்காராச சப்த தன்மாத்ரம் சப்த தன்மாத்ராதாகாசம்
ஸ்பர்ச தன்மாத்ராஞ்ச ஸ்பர்ச தன்மாதராத வாயு ரூப தன்மாந்த்ராஞ்ச ரூப தன்மாத்ராதா
தேஜோ ரச தன்மாத்ராஞ்ச ரச தன்மாத்ராதா தாபோ நந்த தன்மாத்ராஞ்ச கந்த தன்மாதராதா பிருத்வி -என்று
இந்த க்ரமத்தை யாதவ பிரகாசிதிகளும் ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்–

————————————-

சூர்ணிகை –103-

இனி பூதாத தந்மாத்ரா உத்பத்தி க்ரமமும்
சாஸ்திர சித்தம் ஆகையாலே அத்தையும் சங்கரஹேண அருளிச் செய்கிறார் –

ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான
நாலு தந்மாத்ரைகளும்
ஆகாசம் தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் காரணமாய்
இருக்கும் என்றும்
சொல்லுவார்கள்
என்று அடுத்த பக்ஷமும்-சாஸ்த்ர சித்தம் —சப்தம் பிருத்வி எடுத்து நான்கு தன்மாத்திரைகளையும் நான்கு பூதங்களையும் மட்டும் காட்டி அருளுகிறார் –

அதாவது-பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் –
சப்த தந்மாத்ரை நின்றும் ஆகாசம் பிறக்கும்
ஆகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
வாயுவில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் பிறக்கும்
தேஜஸ் ஸில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையில் நின்றும் அப்பு பிறக்கும்
அப்புவில் நின்றும் கந்த தந்மாத்ரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் -என்றபடி-

இந்த க்ரமம் ஸ்ரீ விஷ்ணு புராண சித்தம்
பூர்வ க்ரமம் புராணாந்தர சித்தம் -என்று சொல்வார்கள்
அது சொல்ல ஒண்ணாது இ றே
இரண்டுமே சித்தம் தான் என்றவாறு
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா –கர்ப்ப உபநிஷத் -என்று ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும்–
பிரக்ருதிகள் எட்டு -விக்ருதிகள் -பதினாறு / பிரகிருதி மஹான் அஹங்காரம் தன்மாத்திரைகள் எட்டும் -விகாரம் அடைந்து மற்றவை பிறக்கும்
சப்த்தாதி குணங்கள் ஐந்தும் பதினோரு இந்திரியங்கள் விகாரம் என்றவாறு –
த்ரவ்யம் -24-/சப்தாதி குணங்கள் ஐந்தையும் சேர்க்க வேண்டாமோ / தன்மாத்திரைகள் குணங்கள் இரண்டில் ஒன்றையும் மட்டும் சேர்த்து -24-/
தன்மாத்திரைகள் ஐந்தையும் விட்டால் -முன் பாவம் பின் பாவம் தசா விசேஷம் தானே என்பர் /
குணங்களை விட்டால் -பஞ்ச பூதங்களுக்குள் உண்டே இவை என்பர் -/
இந்திரியங்களோபாதி கேவலம் விக்ருதிகளாக–கார்யங்களாக – சுருதி சொல்லுகையாலே
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
ஆகாசச்து விகுர்வாண ஸ்பர்ச மாதரம் சசாஜா ஹி-என்று தொடங்கி–ஆகாசம் விகாரம் அடைந்து ஸ்பர்சம் தன்மாத்திரை ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று
ஸ்பர்ச தன்மாத்ராதிகளுக்கு காரணமாகச் சொன்ன ஆகாசாதி பதார்த்தங்களையும்
தந்மாத்ர லஷணமான–அடையாளம் இட்டு – பூதங்களாக ஸ்ரீ பராசர பகவானுக்கு விவஷிதம் என்று நினைத்து
வியாக்யாதாக்கள் வியாக்யானம் பண்ணி வைக்கையாலே –
ஆகையால் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் பூதாத தந்மாத்ரா உத்பத்தி சாப்தமாய்த் தோற்றி இருந்ததே யாகிலும்
வியாக்யான பிரகிரியைப் பார்த்தால்
தன்மாத்ராத தந்மாத்ரா உத்பத்தி என்றே கொள்ள வேணும்-
நம் பூர்வர்களுக்கு இந்த பக்ஷம் ஆதரணீயம் என்று அருளிச் செய்தார் -இதனாலே தான் –
பூதாத தந்மாத்ரா உத்பத்தி பஷத்திலும்
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா -என்று சொல்லுகிற
ஷோடஸ விகாரங்கள் ஆகிறது-அதே பிரமாணம் இந்த பாசத்துக்கும் –
எட்டு விகாரம் காரணம் -தன்மாத்திரை சேர்த்தா பூதங்களை சேர்த்தா என்று கொண்டு இரண்டு பக்ஷங்களும் வரும் –
பூதங்களை ஒழிய ஏகாதச இந்திரியங்களும் சப்தாதிகள் ஐந்தும் என்று
தன்மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாதரம் ஆகையாலே-
அஷ்டௌ பரக்ருதய -என்று
பிரகிருதி மஹான் அஹன்காரங்களையும்
ஆகாசாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது என்றும் ஸ்ருதி அவிரோதம் நிர்வஹிப்பார்கள்-
இது தான் வேத வியாச பகவானாலே
அஷ்டௌ பிரக்ருதய பரோகதா விகா ராசசாபி ஷோடஸ அய வயகதானி
சபதைவ பராஹூர தயாதம சிந்தகா அவயக தஞ்ச மகாமச சைவ
ததா ஹன்கார ஏவ ச பிருத்வி வாயு ஆகாசம் ஆபோ ஜ்யோதிஸ்ஸ பஞ்சமம்
ஏதா பிரக்ருதய சத வஷ்டௌ விகாராநபி மே சருணு ச்ரோதரம்
தவக சைவ சஷூசச ஜிஹ்வா காரணாஞ்ச பஞ்சமம்
வாக ச ஹச்தௌ ச பாதௌச பாயு மேடரம ததைவச சப்த சபாசௌ ச ரூபஞ்ச ரசோ
கந்தசத தைவச ஏதே விசெஷா ராஜேந்திர மகா பூதேஷு பஞ்ச ஸூ தச இந்த்ரியாண யதை தானி சாவி சேஷாணி மைதில மனஷ
ஷோடசமி தயா ஹூர தயா தமகதி சிந்தகா -என்று
மோஷ தர்மத்திலே யாஞ்ஞ்வல்க ஜனக சம்வாதத்திலே சொல்லப் பட்டது –
மிதிலா தேச மன்னன் ஜனகரை கர்மத்தால் சித்தி அடைந்தார்- என்று கிருஷ்ணனே கொண்டாடுகிறான் ஸ்ரீ கீதையில் –
ஞானம்–வேதாந்தம் -/ அனுபவம் அருளிச் செயல் / அனுஷ்டானம் ரஹஸ்ய த்ரயம் –மூன்றுமே வேண்டுமே
-ஆழ்வார்கள் நேராக திருமந்திரம் சொல்லாமல் நானும் சொன்னேன் –நீங்களும் நமோ நாராயணா சொல்லுமின் என்பர்
அவ்யக்தம் -மஹான் -அஹங்காரம் பிருத்வி வாயு -பூதங்கள் -பஞ்சமம் –ஆகிய எட்டும் -/விகாரங்கள் சொல்கிறேன் கேள் மே ஸ்ருணு -ஜனக அரசன் இடம்
–பஞ்ச ஞான இந்திரியங்கள் /கர்ம பஞ்ச இந்திரியங்கள் /மனஸ் சப்தாதிகள் –ஆகிய -16-/

அப்படியே
யம சுருதியிலும்
மநோ புத்திர ஹன்காரகா நிலாகா நிஜலானி பூ ஏதா பிரகருதய ச
தவஷ்டௌ விகாராஷ ஷோட சாபரே சரோதரா ஷிரசநாக ராண தவக ச சங்கல்ப
ஏவ ச சப்த ரூப ரச ஸ்பர்ச கந்த தவக பாணி பாயவ உபசதபாதாவிதி ச விகாரா ஷா ஷோடஸ சம்ருதா -என்று சொல்லப் பட்டது –
இந்த ஸ்ம்ருதியில் பிரக்ருதிகளிலே பரிகணிகையாலும்
பிரதமத்தில் எடுக்கையாலும் மந்த வயதையாலே மனஸ் என்று பிரதானத்வம் சொல்லப் படுகிறது –
மனஸ் சப்தம் பிரக்ருதியை குறிக்கும் இங்கு என்றபடி –இதுவும் எட்டு /-16-காட்டி /கடைசிலேயில் சங்கல்பம் என்றது மனசை சொன்னபடி –
சங்கல்ப சப்தத்தாலே தத் காரணமான மனஸ் லஷிக்கப் படுகிறது என்று ஸூ பால உபநிஷத்தில் வ்யாக்யானத்தில்
சுருதி பிரகாசராலே வியாக்யானம் ஆயிற்று
இப்படி இதிஹாசாதிகளிலே சொல்லப் படுகையாலே
அஷ்டௌ பிரக்ருதய என்கிற ஸ்ருதிக்கு
பூதாத தந்மாத்ரா உத்பத்தி பஷத்தில் விரோத அபாவம் ஸூ ஸ்பஷ்டம் -விரோதம் இல்லை என்றவாறு –

தவசா பீஜ மிவா வருதம-என்கிற திருஷ்டாந்த பலத்தாலே
தவிக்கில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதவோ பாதி
ஆவாரகத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்று தோற்றுகையாலும்
காரண குணத்தை ஒழிய உத்தர உத்தர விசேஷங்களிலே
ஆத யாத யஸ்ய குணா நேதா நாப நோதிச பர பர -என்று ஸ்வ விசேஷத்துக்கு
சொல்லுகிற குணாதிசயம் கூடாமையாலும்
ஆகாசம் சப்த மாத்ரனது ஸ்பர்ச மாதரம் சமாவிசத ரூபம் ததைவா விசா தசசப ஸ்பர்ச குணா யு பௌ
சப்த ஸ்பர்ச ரூபஞ்ச ரச மாதரம் சமா விசன தஸ்மாத் சதுர்குணாஹயாபோ விசேஷா சசேந்த்ரிய க்ரஹா –
என்கிற புராண வசனங்களின் யுடைய ஆனுகுண்யத்துக்காகவும்

பீஜம் –தோல் / ஆவரணம் தோல் -பஜ்ஜி -கடலை மாவில் தோய்த்து -தன்மாத்ரைக்கு மூடி தோல் எது -/தன்மாத்ரையில் இருந்து தன்மாத்திரை –
பிருத்விக்கு கந்தம் மூடி / சப்த தன்மாத்திரை மூடி ஆவரித்து பீஜம் உருவாகும் சக்தி கொடுக்கும் -குணம் கொடுக்கும் பூதங்களுக்கு -அங்குரிக்கும் சக்தி வேண்டுமே –

தேபய சதநமா தரே பயோ யதா சங்கய மேக தவதரி சது பஞ்சப்யோ பூதானா யாகாசா நிலாநல சலிலாவ நிருபாணி பஞ்ச ஜாயந்தே -என்று
இதில் அதிக்ருதனான சாங்க்ய வாசஸ்பதி சொல்லுகையாலும்
கார்ய உத்பாதங்களான தத்வங்கள் ஸ்வ ஸ்வ காரண ஆவ்ருத்தங்களாய்க் கொண்டு
உத்பாதிக்கிறது என்று சொல்ல வேணும் என்று தத்வ த்ரய விவரணத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்

பிரதாந தத்வ உத்போதம் மகா நதம தத் சமா வருணோத -ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்றும்
யதா பரதா நேன மகான மஹதா ச ததாவ்ருத -என்றும்
சப்த மாதரம் ததாகாசம பூதாதிச சசமா வருணோத -என்றும்
ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்ச மாதரம் சமா வருணோத -என்றும்
ஸ்பர்ச மாதரஸ்து வைவாயூ ரூப மாதரம் சமா வருணோத -என்றும்
ரச மாத்ராணி சாமபாமாசி ரூப மாதரம் சமா வருணோத -என்றும்
ஸ்ரீ பராசர பகவானாலே உக்தம் ஆகையாலும்
முன்புத்தை தன மாத்ரைகளோடு கூட்டிக் கொண்டு
உத்தர உத்தர தன மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே-என்று
இவர் தாமே மேலே அருளிச் செய்கையாலும் ஆவரண க்ரமம் கொள்ள வேணும்

அப்படியே பூர்வ பாவ நியமத்தைப் பற்ற ஸ்பர்சாதி தன மாத்ரைகளுக்கு ஸ்வ ஸ்வ விசேஷங்களை
உத்பாதிக்கும் அளவில் ஸ்வ ஸ்வ பூர்வ பூர்வ சஹாயத் வமும் கொள்ள வேணும்
அதாவது பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தந்மாத்ரையை பூதாதி ஆவரிக்கும்
இதில் நின்றும் ஆகாசம் பிறக்கும்
அநந்தரம் இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன மாதரை பிறக்கும்
ஸ்பர்ச தன மாதரை சப்த தன மாத்ரையை ஆவரிக்கும்
இப்படி சப்த தன்மாத்ரா வருதையாய் ஆகாசத்தை சகாயமாய் யுடைத்தான
ஸ்பர்ச தனமாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையை ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ஸ்பர்ச தன்மாத்ரா வருதையாய் வாயுவை சகாயமாக யுடைத்தான
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் ஸூ பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையை ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரூப தன்மாத்ரையாய் வருதையாய் தேஜசைசகாயமாக யுடைத்தான ரச தன்மாத்ரையில்நின்றும் அப்பு பிறக்கும்
இந்த ரச தன மாத்ரையில் நின்றும் கந்த தன மாதரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையை ரச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரச தனமாத்ரையாய் வருதையாய் அப்பை சகாயமாய் யுடசித்தான கந்த மாத்ரையில் நின்றும் பிருத்வி பிறக்கும் என்கை
சப்த தந்மாத்ரா வருத்தமாய் ஆகாசத்தை சஹாயமாக யுடைத்தான
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும் என்று தொடங்கிச் சொன்ன விசேஷ உத்பத்தியில் க்ரமம்
பூதாத தன்மாத்ரம் உத்பத்தி பஷத்துக்கும் ஒக்கும்
பூர்வ பூர்வ பூதத்தில் நின்றும் உத்தர உத்தர தந்மாத்ரா உத்பத்தி
ஆகிற இது விசேஷம் -இது தத்வ த்ரய விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த க்ரமம் –

ஒன்றை ஓன்று ஆவரிக்கும் -இரண்டையும் ஆவரிக்கும் -எதன் சகாயம் ஏத்துக் கொள்ளும் இதற்கும் இரண்டு நிர்வாகம் –
-அந்த தன்மாத்திரை அதன் விஷேகமான பூதம் இரண்டையும் -என்றவாறு -முன் உள்ள தன்மாத்திரை
பூதாதி -சப்தத்தையும் ஆகாசத்தையும் ஆவரிக்கும் –
தன்மாத்திரை அதன் விசேஷம் படைக்கும் போது தன பூதம் சகாயத்தை ஏத்துக் கொள்ளும்
முன் உள்ள பூத ஸஹாயமா -தன விசேஷமான பூதம் ஸஹாயமா -என்று கொண்டு இரண்டு பக்ஷங்கள்-

இங்கன் அன்றிக்கே தத்வ நிரூபணத்தில்-ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்- அருளிச் செய்ததும் ஒரு க்ரமம் யுண்டு –
அதாவது பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தன்மாத்ரையில் நின்றும் அதனுடைய ஸ்தூல அவஸ்தையான ஆகாசம் பிறக்கும்
சப்த தன்மாத்ரையும் ஆகாசத்தையும் பூதாதி ஆவரிக்கும்
இப்படி பூதாதாயா வருதமாய் ஸ்தூல ஆகாச சஹகருதமாய்க் கொண்டு விக்ருதமான சப்த தன்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும் –
அதில் நின்றும் ஸ்பர்ச குணகமான வாயு பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான சப்த தந்மாத்ரை ஆவரிக்கும்
சப்த தன்மாத்ரா வருதமாய் வாயு சஹ கருதமாய் விகரித்த ஸ்பர்ச தன்மாத்ரத்தில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ் ஸூ பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் தேசச சஹ க்ருதமாய் விகரித்த ரூப தன்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரச குணகமான ஜலம் பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் அம்பா சஹ கிருதமாய்க் கொண்டு விகரித்த ரச தன்மாத்ரையில் நின்றும்
கந்த தன்மாத்ரம் பிறக்கும்
அதில் நின்றும் கந்த குணகமான பிருத்வி பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரச தந்மாத்ரை ஆவரிக்கும் -என்கை
இதில் முற்பட்ட க்ரமத்திலே ஸ்பர்ச தன்மாத்ராதி சதுஷ்டயத்துக்கு
ஸ்வ ஸ்வ விசேஷ உத்பாதனத்தில்
பூர்வ பூர்வ பூத சஹாயத்வம் சொல்லப் பட்டது
பிற்பட்ட க்ரமத்தில் பூர்வ பூர்வ தன்மாத்ரத்துக்கு உத்தர உத்தர தன்மாத்ரம்
உத்பாதனத்தில் ஸ்வ ஸ்வ விசேஷ சஹாயத்வம் சொல்லப் பட்டது
ஆகையால் அன்யோன்ய விரோதம் இல்லை-

ஓர் ஒன்றிலே இரண்டும் அனுகதமே யாகிலும் இரண்டும் அபேஷிதம் ஆகையாலே
ஆவரண கதனத்திலும் பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரதையும் தத் விசேஷத்தையும்
ஆவரிக்கும் என்று ஜீயர் அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சப்த மாதரம் ததாகாசம் பூதாதிசச சமா வருணோத -என்ற விதுக்கு
சப்த மாதரம் -சப்த தன்மாத்ரம் ததாகாசம் ஸ்தூலா காசஞ்ச ச பூதாதி ரா வருணோத
யேதன பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரம் தத் விசேஷஞ்ச வ்ருணோதிதி தர்சிதமே -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் வியாக்யானம் பண்ணுகையாலும்
தத்வ விவரணத்தில்
தன்மாத்ரத்துக்கு ஆவரணம் சொன்னவோபாதி தத் விசேஷத்துக்கு ஆவரணம் சொல்லிற்று இல்லை யாகிலும்
அது உப லஷணமாம் இத்தனை
அல்லாத போது அவ்விடம் தன்னில் பூதாத் தன்மாத்ரா உத்பத்தி சொல்லவும் போகாது
ஆகையால் இரண்டும் கொள்ள வேணும் –

தத்வ நிரூபணத்தில் தன்மாத்ரா தத் விசேஷங்கள் இரண்டுக்கும் ஆவரணம் சொல்லுகிற அளவில்
இரண்டையும் சேர்த்துப் பிடித்துச் சொல்லப் பட்டதே யாகிலும்
விசேஷ உத்பத்திக்கு முன்பே தன்மாத்ரத்துக்கு ஆவரணம் கொள்ள வேணும்-
பூநிலாய ஐந்துமாய் –சம காலத்தில் ஆவரித்தால் குணம் கொடுக்காதே -தன்மாத்திரத்தை ஆவரித்து பூதத்தை ஆவரிக்கும்
த்வகில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதாப் போலே
ஆவாரகத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது இ றே-

இப்படி பூத தன்மாத்ர சிருஷ்டி சொல்லுகிற இடத்தில் ஆவரண க்ரமம் வக்தவ்யமாய் இருக்கச் செய்தேயும்
அருளிச் செய்யாது ஒழிந்தது அபேஷிதம் அல்லாமை அன்று
சங்கோசேன உத்பத்தி க்ரமத்தை அருளிச் செய்தார் இத்தனை
பெரிய வாச்சான் பிள்ளையும் இப்படி இ றே அருளிச் செய்தது-

——————————————

சூர்ணிகை -104-

ஆக பூத தன்மாத்ர உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தார் கீழ்
அதில் தன்மாத்ரங்கள் தான் எவை -என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

தன மாத்ரங்கள் ஆவன
பூதங்களின் யுடைய
சூஷ்ம அவஸ்தைகள் –

அதாவது -தஸ்மிம் சதஸ் மிம்ச்து தன்மாத்ரம் தேன தன்மாத்ரா ஸ்ம்ருதா
தன்மாத்ராண்யா விசேஷாணி அவி சேஷாஸ் ததோஹித
ந சாந்தா நாபி கோராச்தே ந மூடாச்ச விசேஷிண-என்று
சாந்தத்வ கோரத்வ மூடத்வ லஷணமான விசேஷங்களை
யுடைத்து அல்லாத
சப்தாதி மாத்ரத்தை குணமாக யுடைத்தாய் இருக்கிற ஆகாசாதி பூத சூஷ்மங்கள் –
இது மாத்திரம் என்பதையே -தன்மாத்ரம்-என்கிறது -பூதமாக விரிந்த பின்பே மற்றவை வரும் –
அகஸ்திய பிராதா -என்பது போலே -மாமான் மகளே போலே -அது மாத்திரம் என்கிற பெயரும் இதுக்கு -குணம் மட்டுமே இருக்கும் -சப்தம் மாத்திரம் ஒன்றில் இத்யாதி –
அதின் இடம் அதுவே இருக்கும் என்று சொல்ல வேண்டுமோ -ஆஸ்ரயம் -திரவ்யம் சப்தம் குணம் —-த்ரவ்யம் தான் ஆவரிக்கும் -ஆவரிக்கும் பொழுது குணத்தை கொடுக்கும்-
ஆகாசம் -மூடம் -அனுகூலமோ பிரதிகூலமோ இல்லையே /வாயு அக்னி கோருங்கள் -பிரதிகூலங்கள் / தண்ணீர் பிருத்வி அனுகூலங்கள் சாந்தம் –
சாந்தத்வம் மூடத்தவம் கோரத்வம் இதுவும் குணங்கள் -பூதங்கள் த்ரவ்யம் –
சத்வ குணத்தால் சாந்தித்வம் -தமோ குணத்தால் மூடத்தவம் -ரஜோ குணத்தால் கோரத்வம் –

சாந்தத்வம் ஆவது -அனுகூல வேத நீயத்வம்
கோரத்மவாது -பிரதிகூல வேத நீயத்வம்
மூடத்வமாவது -உதாசீன வேத நீயத்வம்
அதில் ஸ்வ பாவமே சாந்தங்களாய் இருக்கும் -பூமியும் ஜலமும் –
கோரங்களாய் இருக்கும்–தேஜஸ் ஸூம் வாயுவும்
மூடமாய் இருக்கும் -ஆகாசம்
-மேளனத்தாலே-கலப்படம் – எல்லா பூதங்களும் சாந்தவ கோரத்வ மூடத்வங்களை யுடையனவாய் இருக்கும்-பஞ்சீகரணத்தாலே
தன்மாத்ரைகளுக்கு இந்த சாந்தத்வாதி விசேஷம் இல்லாமையாலே அவை அவிவிசேஷங்கள் என்று சொல்லப் படுகின்றன
ஆகையால் தன்மாத்ரைகள் என்றும் அவிவிசேஷங்கள் என்றும் பர்யாயம்
அதில் அபி யுக்தரான யாதவ பிரகாசாதிகளும்
தன மாத்ராண்யா விசேஷா இதய நர்த்தாந்தரம்
சாந்தவ கோரத்வ மூடத்வ மிதி தரயோ விசேஷாஸ் தரை குண்யாத் மானச தேஷா மனுத்பவாத்
சூஷ்ம ஆகாசம் விசேஷ லஷணம் பவதி
தேன சப்த தன்மாத்ரம் உச்யதே
ஏவம் சூஷ்மோ வாயுஸ் சூஷ்மம் தேஜஸ் சூஷ்மா ஆபஸ் சூஷ்மா பிருத்வி -என்று சொல்லி வைத்தார்கள் இறே
ந அர்த்தஅந்தரம் -வேறு பொருள் இல்லாமல் ஒரே பொருளை குறிக்கும் அவிசேஷம் தன்மாத்திரை –
முக்குணங்களை ஸ்வரூபமாக உள்ள சாந்தத்வம் கோரத்வம் மூடத்தவம் உண்டாகாதாகையாலே-
பிரகிருதி சம்பவம் தானே இவை -m -உள்ளே ஒளிந்து இருக்கும் நீர் பூத்த நெருப்பு போலே உத்பன்னமாக தெரியாது-
சூஷ்மம் -அவஸ்தைகள் போலே -அவை உத்பவித்தது ஸ்தூலமாக தெரியும் பூதங்களில் –

ஆக த்ரிவித அஹங்காரத்திலும் வைத்துக் கொண்டு
சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்களும்
தாமச அஹங்காரத்தில்நின்றும் பூதத் தன்மாத்ரைகளும்
உத்பன்னமாம் க்ரமம் சொல்லி நின்றது-

——————————————————————-

சூர்ணிகை -105-

இனி ராஜஸ் அஹன்காரத்தின் கார்யம் சொல்லுகிறது –

மற்றை இரண்டு
அஹங்காரமும்
ஸ்வ கார்யங்களைப் பிறப்பிக்கும்
ராஜச அஹங்காரம்
சஹகாரியாய்
இருக்கும் –

அதாவது
சதவிக தாமச அஹன்காரங்கள் இரண்டும் வைகார்யங்களை
உத்பாதிக்கும் போது
பீஜத்தின் யுடைய அங்குரத்துக்கு ஜலம் போலவும்–முளை விட நீர் வேணும்
அக்னியினுடைய ஜலனத்துக்கு வாயு போலவும்–ஜ்வலிக்க வாயு வேண்டுமே –
ராஜச அஹங்காரம் சஹ காரியாய் இருக்கும் -என்கை –

இது சஹாகரிக்கை யாவது ரஜ ப்ரவர்த தகம தத்ர -தூண்டு கோல் -போலே என்கிறபடியே
இவற்றில் இந்த்ரிய ஹேதுவான சத்வ அம்சத்துக்கும்–சாத்விக அகங்கார காரியங்கள் தானே
பூத ஹேதுவான தமோ அம்சத்துக்கும்
சல ஸ்வ பாவமான ராஜச ஸூ பிரேரகமாய்க் கொண்டு பிரவர்த்திப்பிக்கை -நின்றவா நில்லா நெஞ்சு -போலே சல சல-ஸ்வ பாவம் -ரஜோ குணத்துக்கு –

————————————————

சூர்ணிகை -106-

இப்படி சாத்விக தாமச அஹன்காரங்களுக்கு சாதாரண சஹாகாரியை அருளிச் செய்தார் கீழ்
அநந்தரம்
சாத்விக அஹங்காரத்துக்கு அசாதாராணாமாய் இருப்பன சில
சஹகாரி விசேஷங்களை அருளிச் செய்கிறார் –
இந்திரியங்கள் சப்தாதிகளை கிரஹிக்க வேண்டுமே –அதனால் சஹகாரிகளாக -கொள்ளும் சப்தம் -காது
ஸ்பர்சம் தோலுக்கு /இத்யாதி அடைவே –
த்ரவ்யம் தானே சஹகாரி ஆகும் அதனால் தன்மாத்திரைகளை சஹகாரியாக கொள்ளும்

சாத்விக அஹங்காரம்
சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும்
அடைவே சஹகாரியாய் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத சஹ க்ருதமாய்க் கொண்டு
வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழிய தானே
மனசை சிருஷ்டிக்கும்
என்றும் சொல்லுவார்கள் –

அதாவது
சாத்விக அஹங்காரம் இந்த்ரியங்களை சிருஷ்டிக்கும் அளவில் இவற்றின் யுடைய விஷய பிரதி நியமத்துக்காக–கண் பார்க்கவும் -காது கேட்கவும் -என்றவாறு
சப்த தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு ச்ரோத்ரத்தையும்
ஸ்பர்ச தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு தவக் இந்த்ரியத்தையும்
ரூப தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு சஷூஸ் சையும்
ரச தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு ஜிஹ்வையையும்
கந்த தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு க்ராண இந்த்ரியத்தையும்
சிருஷ்டிக்கும்
இப்படி சப்த தன்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாகக் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்களையும் சிருஷ்டித்த அநந்தரம்
ச்ரோத்ர க்ராஹ்யமான சப்த விஷயமாயும்
தவக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும்
சஷூர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருத்தி ஹேதுவாயும்
ரசனா விஷய ரச ஆச்ரயச்மான ஜலத்தின் யுடைய நிசசரண ஹேதுவாயும்
க்ராண விஷய கந்த ஆச்ரயமான பிருத்வி அம்சமான அந்நாதிகளில்
ருஷீ ஷோதர்ச சாஜன ஹேதுவாயும்-
இப்படி ஞான இந்த்ரிய பஞ்சக சேஷமாய்க் கொண்டு
சப்தாதி பஞ்சகத்தையும் ஒட்டி இருக்கும்
கர்ம இந்த்ரிய பஞ்சகத்தை சிருஷ்டிக்கும் அளவில்
ச்ரோத்ர சஹ கருதமாய்க் கொண்டு வாக்கையும்
த்வக் சஹ கருதமாய்க் கொண்டுபாணியையும்
சஷூஸ் சஹ கருதமாய்க் கொண்டுபாதத்தை
ஜிஹ்வா சஹ கருதமாய்க் கொண்டு உபசஸ்தத்தையும்
க்ர்ணா சஹ கருதமாய்க் கொண்டு பாயுவையும்
சிருஷ்டித்து
ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் கர்ம இந்த்ரியங்களுக்கும் சஹகாரியாய்
உபாயதமகமான மனசை சஹகாரி நிரபேஷமாக தானே
சிருஷ்டிக்கும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை-

இது தன்னை
ஸ்ரீ விஷ்ணு புராண வ்யாக்யானத்தில்
அயமதரே நதரிய சிருஷ்டிகரம் வைகாரிக அஹங்காரத க்ரமேண சப்த தன்மாத்ராதி பஞ்சக சஹாயாத க்ரமேண
ச்ரோத்ராதி ஞான இந்த்ரிய பஞ்சகச்ய சிருஷ்டி தசமாதேவ தத் சஹாயாத்-
வாகாதி கர்மேந்த்ரிய பஞ்சகச்ய அசஹாயாதது தஸ்மான் மனச்ச ஸ்ருஷ்டிருதி -என்று பிள்ளை எங்கள் ஆழ்வானும் அருளிச் செய்தார்-
சப்தாதிகளுக்கு ஞான இந்திரியங்கள் சஹகாரி -கர்ம இந்திரியங்களுக்கு ஞான இந்திரியங்கள் சஹகாரிகள் என்றவாறு –

———————————-

சூர்ணிகை -107-

அநந்தரம் இப்படி தாம் அருளிச் செய்த இந்த்ரிய உத்பத்தி க்ரமத்துக்கு விரோதி பஷத்தை
நிரசிக்கைக்காக அத்தை யுத்ஷேபிக்கிறார் –

சிலர்
இந்த்ரியங்களில்
சிலவற்றை
பூத கார்யம்
என்றார்கள் –

அதாவது -சிலர் -அவர்கள் ஆகிறார் க்ரணாதிகளான இந்த்ரியங்களை–ஞான இந்திரியங்களை –
பிருதிவ்யாதி பூத காரயமாகவே கொள்ளும்
நையாயிகாதிகள்
அவர்கள் தாம் ஆனுமாநிகர் ஆகையாலே
அனுமானத்தாலே இ றே அர்த்தத்தை சாதிப்பது-

————————————————

சூர்ணிகை -108-

அத்தை காலா தயயாபதேசத்தாலே தூஷிக்கிறார்

அது
சாஸ்திர
விருத்தம்

அதாவது
இந்த்ரியங்களை பூத கார்யம் என்று சொல்வது
இவற்றை ஆகங்காரி களாக சொல்லுகிற
இதிஹாச புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-
அஹங்காரிகளில் இருந்து உத்பத்தி -ஆகங்காரிகள்-

———————————————

சூர்ணிகை -109-

அது என் என்ன மோஷ தர்மத்திலே –
சப்த ச்ரோத்ரம ததா காதி த்ரய ஆகாசம் சம்பவம் வாயோ ஸ்பர்சம்
ததா சேஷ்டா தவக் சைவ தரிதயம் சம்ருதம் ரூபம் சஷூஸ்
ததா வயகதி சதரிதயம் தைஜ உச்யதே ரச கலேதசச ஜிஹ்வா ச தரயோ ஜலகுணா சம்ருதா
கராணம் க்ரேயம சரீரஞ்ச தே து பூமிகுணா சம்ருதா -என்று சொல்லுகையாலே
இதிஹாசாதிகள் தன்னிலேயும் இந்த்ரியங்களுக்கு பௌதிகத்வம் சொல்லப் படுகையாலே
பூதங்கள் இவற்றுக்கு காரணமாக வேணுமே -என்ன –

பூதங்கள்
ஆப்யாயங்கள்
இத்தனை –

அதாவது
இதிஹாசாதிகளில் இந்த்ரியங்களுக்குச் சொன்ன பௌதிகத்வம் பூதங்களால் யுண்டான ஆபயாய நமாத்ரத்தைப் பற்ற வாகையாலே
இந்த்ரியங்களுக்கு பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை
காரணங்கள் அன்று -என்கை –

ஆப்யாயகத்வம் ஆவது -போஷகத்வம்
இன்னமும் அஹங்காரத்தை இந்த்ரியங்களுக்கு நிமித்த காரணமாகவும்
இவற்றை உபாதான காரணமாகவும் சொல்லுகிற குத்ருஷ்டி மதம் யுண்டு இறே-இரண்டு வித பிரமாணங்களை சமன்வயப்படுத்தும் இத்தால் என்பார்கள் இவர்கள்
அஹங்கார சயே நதரியாணி பாரதி நிமித்தத்த மேவ
பூதானா மேவ உபாதானத்வம் அநனமயம் ஹி சோமாய மன
ஆபோமைய பராணசதேஜோ மயீ வாக இதி சருதேரித கேசிதா ஹூ தத் யுக்தம்
அஹங்கார சயைவோ பாதா நதவேபி பூதானா மாபயாயாக்தவே நாபி ததா நிர்தே சோப பத்தே -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் எடுத்துக் கழித்தது அதுவும்
மயம் வந்தாலே உபாதானம் ஆகும் ஸ்வர்ண மயம் ஆபரணம் அன்னமயம் மனாஸ் ஆபோ மயம் பிராண தேஜோ மயம் வாக்கு –

இந்த்ரியங்களில் சிலவற்றை என்று தொடங்கிஇவர் அருளிச் செய்த க்ரமம் தன்னாலே பிரதிஷிபதம்
அப்போதைக்கு -அது சாஸ்திர விருத்தம் -என்றது
ஏகாதசம மனசசாதர தேவா வைகாரி காச சம்ருதா -இத்யாதிகளாலே
இவற்றை சாத்விக அஹங்கார காரயமாகவே சொல்லுகிற புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-
புராணாதிகளைப் பற்ற
அன்னமயம் ஹி சோமாய மன -இத்யாதி ஸ்ருதிக்கு பிராபல்யம் யுண்டே யாகிலும்
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபபரு மஹயதே-என்கையாலே
உப பருமண அனுகூலமாக அதுக்கு அர்த்தம் கொள்ள வேணும் என்று கருத்து –

ஆனால் உப பருமஹணங்கள் தன்னிலேயும் பௌதிகத்வம் சொல்லுகையாலே
இவற்றுக்கு பூதங்கள் காரணமாய் அன்றோ தோற்றுகிறது
என்ன -பூதங்கள் ஆப்யாயங்கள் இத்தனை -என்று நிர்வாஹம் –
க்ரணாதிகளான இந்திரியங்களுக்கு பிருத்வ்யாதி பூதங்களால் யுண்டான ஆபயாய நம சுருதி ச்ம்ருதிகளிலே பிரசித்தம்
இது தான் ஸூபால உபநிஷத் வ்யாக்யானத்திலே
க்ர்ணா தீ நாமி நாதரியாணாம் ஹி பிருதிவ்யாதி பூதை
ராப்யாயநம சுருதி ச்ம்ருதிஷூ பிரசித்தம்
அன்னமயம் ஹி சோமய மன ஆபோமய பிராண்ஸ் தேஜோமயீ
வாக் ச்ரோதரம் நபோ கராணமுக்தம் பிருதிவ்யா இதயாரபய வாயவா தமகம
ஸ்பர்ச நமாம நந்தி ன்பே சரோதரஞ்ச தன்மயம் இத்யாதிஷூ –
என்று சுருதி பிரகாசகராலே அபிஹிதம் ஆயிற்று

இப்படி இந்த்ரியங்களுக்கு பூதங்கள் எப்போதும் ஆப்யகங்களாய் இருக்கும் என்னும் இடம்
மோஷ தர்மத்திலே ப்ருகு பரத்வாஜ சம்வாதத்திலே
ஆபயாய ந்தே ச நித்யம் தாதவச தைசது பஞ்சாபி -என்று ஸூ வ்யக்தமாக சொல்லப் பட்டது –

ஆகையால் பூதங்கள் இந்த்ரியங்களுக்கு ஆப்யாயகங்கள் இத்தனை காரணங்கள் அன்று என்றது ஆயிற்று-

——————————————————

சூர்ணிகை -110-

ஆக இப்படி மஹதாதி பதார்த்தங்களின் யுடைய உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இவற்றைக் கொண்டு ஈஸ்வரன் அண்ட ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும்படியை அருளிச் செய்கிறார் -மேல்

இவை கூடினால் அல்லது
கார்யகரம் அல்லாமையாலே
மண்ணையும் மணலையும் நீரையும்
சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே
ஈஸ்வரன் இவற்றை எல்லாம்
தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி
அதுக்கு உள்ளே
சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –
பஞ்சீ கரணம் வரை சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -அப்புறம் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி /
அதாவது –
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே –
நாநா வாயா பருதக் பூதாஸ் ததஸ தே சம்ஹிதம் விநா
நாசக நுவன பரஜாச ஷர ஷடு மசமாக மயகருதச நாசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-என்கிறபடியே
சாந்தத்வ கோரத்வ மூடத்வங்களாலே
நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் -பிரிந்த பூதங்கள் –இருக்கிற
இம் மஹதாதி பதார்த்தங்கள் பரஸ்பர சமஹதம் ஆனால் அல்லது
அண்டரூபமான கார்யத்தை உத்பாதிக்க மாட்டாமையாலே -என்கை-
மண் பானை அரிசி நீர் நெருப்பு காற்று இடைவெளி வேணுமே சாதம் பண்ண -பஞ்ச பூதங்களும் சேர வேண்டுமே –
மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக் சுவர் இடுவாரைப் போலே –
அதாவது -ப்ருதக் வீர்யங்களாய் ப்ருதக் ஸ்திதங்களாய் இருக்கிற
ம்ருத சிகதா சலிலங்களை-அந்யோந்யம் சேர்த்து
தத் சமுதாயாதமகமான தொரு த்ரவ்யமாகி
பித்தி ரூபமான தொரு கார்யத்தை நிர்மிப்பாரைப் போலே என்கை-அண்ட புத்தி சுவர் என்றபடி –
ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி –
அதாவது -ஜகத் ஸ்ருஷ்டாவான ஈஸ்வரன்
சமேதயா நயோ நய சம்யோகம் பரஸ்பர சமாச ரயா
ஏக சங்காத லஷ்யாசச சமபரா பயைகயம சேஷத மஹதாதயோ விசேஷா நதா ஹயண்ட முதபாதயந்திதே -என்கிறபடியே-
இவற்றை எல்லாம் அந்யோந்யம் சம்ஹதமாக்கி இவற்றாலே அண்ட சிருஷ்டியைப் பண்ணி -என்கை –
முன்பே அது அதுக்கு பிரதான குணம் உண்டு ஆவரித்தது குணத்தை புகுத்த -விதை முளைக்க தோல் போலே என்று முன்பே பார்த்தோம்
இங்கு அஞ்சும் கூடணும்–த்ரவ்யங்கள் சேர வேண்டும் பஞ்சீ கரணத்தில் -முன்பு குணத்தை புகுத்திற்று மட்டுமே –
இவ்வண்டத்துக்கு உள்ளே மஹதாதி கார்யங்களை அடையக் காண்கையாலே
மஹதாதி பதார்த்தங்கள் எல்லா வற்றையும் சேர்த்து அண்ட சிருஷ்டியைப் பண்ணினான் என்னும் இடம் ஸூவ்யக்தம் ஆகையாலே
பூதேப யோண்டம் மகா புத்தே பருஹ த்தது தகேசயம் -என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் அது உதகத்திலே கிடக்கும் என்று சொன்னதும்
அப ஏவ சசா ஜாதௌ தா ஸூ வீர்யம்பாச ருஜத ததண்டம் பவத தை மம சஹாஸ்ராமசுச சமபரபம் -என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னதும் பூதாந்தரதுக்கும் உப லஷணம்-பெரிய நீர் படைத்து -அப ஏவ சராஜ்ய-
அதாவது பூர்வ பூதாம்சங்களோடேசம்ஸ்ருஷ்டமுமாய்
பிருத்வியும் தனக்கு உள்ளே கரைந்து கிடக்கிற ஜலத்தில் நின்றும் உத்பன்னமாய்
அதிலே கிடக்கும் -என்றபடி –
ஆபோ நாராயண -நாற்றத்தில் பற்றிய மீன்கள் வாழ அயனத்தை பற்றிய பராங்குச நாயகி துடிக்கவா -செங்கல் வாய் பாய் திருவரங்கத்தாய் –
இப்படி அண்ட சிருஷ்டியை பண்ணும் படியை அருளிச் செய்து
அநந்தரம்
இந்த பாஹ்யமான பூதங்கள் ஆந்தரமான ஆகாசாதிகளாய் பரிணமித்த பின்பு-
அண்டத்துக்கு வெளியே ஆகாசம் -அண்ட ஸ்ருஷ்டிக்கு முன்பே ஆகாசம் உண்டே -ஆகாசம் அண்டத்துக்கு உள்ளும் உண்டே –
அவற்றைக் கொண்டு லோக விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
அந்த லோகங்களில் தேவாதி ஜீவ விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
இவ்வண்டத்துக்கு உள்ளே பத்தாத்மா சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவை சிருஷ்டித்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –
அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் -பூவில் நான்முகனைப் படைத்து –என்று
சதுர முகனுக்கு பத்தாத்மா சமஷ்டி பாவமாவது
இவ்வண்டத்துக்கு வேண்டும் காம வசய சேதனா -இவன் சரீரத்தில் யுண்டாய் கிடக்கை-
இப்படி சதுர்முகனை சிருஷ்டித்து இனி மேல் யுண்டான சிருஷ்டி எல்லாம் சத்வாரமாக நின்று செய்வதாக இறே –
ப்ரஹ்மானோ முகமாஸ்ய -வாயில் இருந்து ப்ராஹ்மணர் –நான்முகன் சரீரத்தில் இருந்து பிறக்கும் படி சமஷ்டி ஜீவன் இவனுக்குள் -இருக்குமே

————————————————-

சூர்ணிகை -111-

அது தன்னை தர்சிப்பிக்கைக்காக சமஷ்டி சிருஷ்டியிலும் வ்யஷ்டி சிருஷ்டியிலும்
சர்வேஸ்வரன் செய்யும் க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல்

அண்டத்தையும்
அண்ட காரணங்களையும்
தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட
வஸ்துக்களை
சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று
யுண்டாக்கும் –

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும் –
அதாவது -சமுதாய கார்யமான அண்டத்தையும்–சமுதாய பதார்த்தங்களின் கார்யம் -சமுதாயமே கார்யம் என்றுமாம் –
தத் காரணமான மஹதாதி பதார்த்தங்களையும்
சத்ய சங்கல்பனான தன்னுடைய அவயவஹித சங்கல்பத்தாலே யுண்டாக்கும் -என்கை –
-நடுவில் எதையும் இடையில் கொள்ளாத -என்றபடி -அவனே உபாயம் பல பிரதான அன்றோ -பக்திக்கும் அவன் தானே பலம் கொடுக்க வேண்டும் –

சோபிதயாய சரீராத சவாத சிசருஷூர் விவிதா பரஜாஅப ஏவ
சசா ஜாதௌ தா ஸூ வீர்யமபாசருஜத ததண்டம் பவத தை மம சஹஸ்ராம சு சம்பரபம் -என்னக் கடவது இ றே –
சதுர்முகாதி சேதனர்களுடைய ஹ்ருதயங்களில் இருந்து –ஸ்ரீ கீதை -15–15 -ஸர்வஸ்ய சாஹம் சன்னிவிஷ்ட்ய –
சங்கல்ப ஞானாதிகளை ஜெநிப்பித்துக் கொண்டு -அண்டாந்த்ர வர்த்திகளான சகலத்தையும் ஸ்ருஷ்டிக்கும்
யாதொரு சத்வ சமூகத்தால் -யாதொரு வாஸ்து ஸ்ருஷ்ட்க்கப்படுகிறதோ அதில் ஈஸ்வரன் காரணமாக இருக்கிறான் -அந்தர்யாமியாக -இருந்து -என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரம் என்றதாயிற்று –
பிரக்ருதியும் இருக்கும் -ஒரு துளி பரிணாமம் அடைந்து சகலமும் -சகல கர்த்தாக்களுக்கும் சரீரீ -சகல சார்தரு சரீரீ -ப்ரஹ்மம் என்றதாயிற்று –

——————————————————————

சூர்ணிகை -112-

ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி -என்று
சர்வேஸ்வரன் மஹதாதி பதார்த்தங்களைச் சேர்த்து அண்ட சிருஷ்டியைப் பண்ணும்
என்னும் இவ்வளவு இறே கீழே அருளிச் செய்தது
இப்போது
1–இந்த அண்ட பஹூத்வத்தையும்
2—அவற்றின் யுடைய கட்டளை இருக்கும் படியையும்
3–அவை தான் சர்வேஸ்வரனுக்கு இன்ன விநியோகத்துக்கு உறுப்பு என்னுமத்தையும்
4–அவற்றின் யுடைய பரிணாம பிரகாரத்தையும்
அருளிச் செய்கிறார் –
ஆக நான்கையும் அருளிச் செய்கிறார் –

அண்டங்கள் தான் அநேகங்களாய்
பதினாலு லோகங்களோடே கூடி
ஒன்றுக்கு ஓன்று பதினாறு மடங்கான
ஏழு ஆவரண்ங்களாலும் சூழப் பட்டு
ஈஸ்வரனுக்கு கரீடா க நதுக சத்தா நீயங்களாய்
ஜலபுத புதம் போலே ஏக காலத்திலே
ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்-

நூறு கோடி யோஜனை -/50-/-60-கோடி யோஜனை என்பர் ஒவ் ஒரு அண்டமும் /மிதந்து கொண்டே இருக்கும் -அப்பு தேஜஸ் -வாயு ஆகாசம் அஹங்காரம் மஹான் தமஸ்–இத்யாதி ஏழு உறைகள் -/ ப்ரஹ்மத்தின் இடம் மிதந்து இருக்கும் -/பரிணாமம் அடையாத ஆகாசம் வெளியில் இருக்கும் -பரிணாமம் அடைந்த ஆகாசம் உள்ளே இருக்கும் –
நீர் குமிழி போலே ஒரே காலத்தில் அனைத்தும் உருவாகும் -பஹஸ்யாம் -சங்கல்பம் அடியாக தானே -நினைத்த உடனே -நடக்கும் –

அண்டங்கள் தான் அநேகங்களாய்-
அண்டா நாம து சஹாஸ்ராணாம் சஹஸ்ராணா யயுதானி ச
ஈத்ருசா நாம ததா தத்ர கோடி கோடி சதாநிச-என்னக் கடவது இ றே–
விஷ்ணு சித்தியம் வியாக்யானம் உண்டு ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு -முதல் அம்சம் ஸ்ருஷ்ட்டி -விவரிக்கும் –
அநேகம் கோடி அண்டங்கள் அந்த பிரக்ருதியில் இருக்கும் -தத்ர -சப்தம் -கடைசி உறை அது தான் -அவ்யக்தம் ஏழாவது உறை தானே –
பதினாலு லோகங்களோடே கூடி –
பதினாலு லோகங்கள் ஆவன -கீழில் அண்ட கபாலத்துக்கு ,மேல் -எண்பத்து மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் ,யோஜனை
உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே–உதகம் தண்ணீர் -கர்ப்ப உதகம் –835000-யோஜனை –
சபததிசது சஹாஸ்ராணாம் தவி ஜோச்சராயோபி கதயதே
தச சஹச்ர மேகைகம பாதாளம் முனி சததம
அதலம் விதலஞ்சைவ நிதலஞ்ச கவசதிமத மகா ககாயம்
ஸூ தலாஞ் சாகாயம
பாதாளாஞ்ச சைவ சபதமம் –என்கிறபடியே
பாதாள லோகம் ஒவ் ஒன்றும் -16000-யோஜனை –ஏழு லோகங்கள் -ஏழாவது பாதாளம் -1-யோஜனை =10மைல் /
ஓர் ஓன்று பதினாலாயிரம் யோஜனத்து அளவும் உயர்தியையும் பரப்பையும் யுடைத்தாய்
தைதய தானவ பனனக ஸூ பாணாதிகள் வர்த்திக்கும் தேசமாய்– தைத்யர்கள் பாம்புகள் கருடன் போன்றோர் வசிக்கும் லோகங்கள்
சுக்ல கருஷண அருணா பீதாச சாககராச சில காஞ்சனா பூமயோயத்ர மைத்ரேய வர பராசாத சோபிதா -என்கிறபடியே
சுக்லங்களாயும் க்ருஷ்ணங்களாயும் அருணங்களாயும் பீதங்களாயும்
வாலுகா மயமான-மண் மயம் – சர்ககரா ரூபங்களாயும் சைலரூபமாயும் பொன்னாயும் இருக்கிற
ஸ்தல விசேஷங்களை யுடையவையாய் விலஷணமான மாளிகைகளாலேயும் ப்ராசாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
ச்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமுமாய்
அதலம் என்றும்
விதலம் என்றும்
நிதலம் என்றும்
கபசதிமதம் என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
மஷாதலம் என்றும்
ஸூ தலம் என்றும்
பாதாளம் என்றும்
பேரை யுடைத்தாய் அதா லோகங்கள் ஏழும்
இதுக்கு மேலே எழுபதினாயிரம் யோஜனம் அகலத்தை யுடைத்தாய்
சப்த த்வீப சாகர பர்வதாதி விசிஷ்டமாய்
பாதசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
பத்மாகாரமான பூலோகமும்
பூ லோகத்துக்கு மேலே ஆதித்யனுக்கு கீழே
நூறாயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
கந்தர்வாதிகள் வர்த்திக்கும் தேசமான புவர் லோகமும்
ஆதித்யனுக்கு மேலே த்ருவனுக்கு கீழே பதினாலு நூறு ஆயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
சாதிகாரான க்ரஹ நஷத்ர இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேசமான ஸ்வர் லோகமும் –
த்ருவனுக்கு மேலே ஒரு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய்
விநி வருத்தாதி காரஸ்து மகாலோக நிவாசின –என்று
நிவ்ருத்த அதிகாரராய் அதிகார அபேஷரான இந்த்ரிராதிகள் வர்த்திக்கும் தேசமான மகா லோகமும்–அதிகாரம் இல்லாமல் ஆசைப்பட்டு இருக்கும் இந்த்ராதிகள் வசிக்கும் மக்கர் லோகம் –
அந்த மகா லோகத்துக்கு மேலே இரண்டு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடையதாய்
ப்ரஹ்ம புத்ரர்களான சனகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான ஜனர் லோகமும்
ஜனர் லோகத்துக்கு மேலே எட்டுக் கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய் தபோ லோகமும் –
தேஷாமேஷாம் கேசன ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யாந்தே சந்தி ததரைவ லோகா –
விஷ்னே ரநய சநதி லோகா விசாலாச தாமச தான லோகான தானுபாசய வரஜ நதி -என்கிறபடியே
ப்ரஹ்ம விஷ்ணு சிவர்களும்
அவர்களை உபாசித்து தத் பிராப்தி பண்ணினவர்களும்
வர்த்திக்கும் தேசமான சத்ய லோகமும்
ஆக ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு அறுபது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும்-
ஐம்பது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும் என்பாரும் யுண்டு
அதில் -சூர்யாண்ட கோள யோர்மத்யே கோடய சசயு பஞ்ச விம்சதி -என்கிற
சுக்ர வசனத்தின் படியே
சூர்யனுக்கு மேலே இருபத்தஞ்சு கோடியும்
கீழே இருபத்தஞ்சு கோடியுமாய் இருக்கும்-

இப்படி இருந்துள்ள சதுர்தச புவனங்களோடு கூட
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப் பட்டு –
அதாவது
கீழ்ச் சொன்ன பதினாலு லோகத்தையும்
ஏத தண்ட கடா ஹேன திரச சோர்த்த்வம்த சததா கபித தஸ்ய யதா பீஜம் சர்வதோ வை சமாவ்ருதம்-2–7–என்கிறபடியே
திரஸ்ய ஊர்த்வம் குறுக்காயும் உயர்ந்தும் -என்றபடி
உள் வாயில் விளாம தசையை விளாவோடு எங்கும் ஒக்க ஆவரிக்குமா போலே
கோடி யோஜன மானச்து கடாஹச சமய வசதித -என்று
கோடி யோஜனம் எடுப்பம் அவகாசதயா உக்தமான படி
அண்ட கடாஹம் ஆவரித்து நிற்கும்–சைவ புராணம் ஒரு கோடி என்று சொல்லும் -கீழே -50-/-60-கோடி பார்த்தோம்
சாண்ட கடாஹமான இவ்வண்டம்
தசோததா ரேண பயஸா மைதரே யாண்டஞ்ச ததவருதம -என்கிறபடியே
தன்னில் பதிற்று -பத்து – மடங்கு பறந்து இருக்கிற ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் –
பஞ்ச சதா கோடி விஸ்தார சேய முர்வீ மகா முனே சஹைவாண்ட கடா ஹேன
பூ மண்டலம் பஞ்சா சதகோடி விஸ்தாரமாகச் சொல்வாரும்
பூ மண்டலம் து சதகோடி விஸ்தாரம் சாண்ட கடாஹம் -என்று
ஸ்ரீ வராஹ புராணத்தில் சொல்லுகையாலும்
இப்படி ஸ்கந்த புராணத்திலே சிவ ரஹச்யத்திலே பரக்கச் சொல்லுகையாலும்
மேருவைச் சுற்றும் பஞ்சா சதகோடி விஸ்தாரத்தைக் கொண்டு
பூமியை சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுவாருமாய் இருக்கும்
இதில் இரண்டது ஒரு மரியாதையை தளமாக்கி அதில் பதிற்று -பத்து – மடங்கு
பெருத்த ஜல தத்வத்தாலே ஆவருதமாய் இருக்கும் என்றபடி-

அண்ட கடாஹத்தைப் பற்ற பதிற்று -பத்து – மடங்கு பெருத்த ஜல தத்வத்தாலே ஆவருதம் என்பாரும் யுண்டு-
இப்படி தசோத்ர மாயக் கொண்டு ஜல தத்தவத்தை தேஜஸ் தத்வம் ஆவரிக்கும்
அப்படியே அத்தை வாயு தத்காம் ஆவரிக்கும்
வாயுவை ஆகாசம் ஆவரிக்கும்
ஆகாசத்தை அஹங்காரம் ஆவரிக்கும்
அஹங்காரத்தை மஹத் தத்வம் ஆவரிக்கும்
அந்த மஹத் தத்தவத்தை அவ்யகதம் ஆவரிக்கும்
தத் அநந்தம் சங்காத் பரமாணம் -என்று அபரிமித பரமாண மான அவ்யத்துக்கு–முடிவில் பெரும் பாழ் அன்றோ -அளவில்லையே என்னில் – ஆவரண தத்வ பிரயுக்தமான
தசோதரத்வம் கூடும்படி எங்கனே என்னில்
ஆயிரத்தில் பத்தும் யுண்டாமா போலே அபரிமித சங்கையில் அதுவும் யுண்டாகையாலெ கூடும்-/

வாரி வஹ நய நிலாக சைஸ ததோ பூதாதி நா பஹி வருதம தச குணைர் அண்டம் பூதாதிர் மஹதா ததா
அவ்யக்த அனாவ்ருதோ ப்ரஹ்ம ந தைசசா வைஸ சஹிதோ
மகான்
ஏபி ராவரணை ரண்டாம் சபதபி பராக்ருதைர் வருதம –1–3-என்கிறபடியே
இப்படி தசோததரங்களான சப்த அவரண்ங்களாலும் சூழப் பட்டு ஈஸ்வரனுக்கு க்ரீடா கனதுக சத்தா நீயங்களாய்-அதாவது
க்ரீடா பரனானபாலனுக்கு கரீட நகங்கள் போலே
க்ரீடார சாநுபு பூஷுவான ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்களாய் இருக்கை—
பிராக்ருதமான ஏழு ஆவாரணங்கள் -விளையாட்டு பந்து -பந்தார் விரலி -விபூதி ஒரு கையில் விபூதிமான் ஒரு கையில் –
ஹரே விஹர சி க்ரீடா கன து கைரிவ ஜந்துபி -என்றும்
மோததே பகவான் பூதைர் பாலக கரீட நகைரிவ-என்றும்
சொல்லுகிறபடியே ஈஸ்வரனுக்கு விபூதியாக லீலா உபகரணமாய் இ றே இருப்பது-

ஜலபுதபுதம் போலே ஏக காலத்திலேயே ஸ்ருஷ்டங்களாய் இருக்கும் –
அதாவது
இவ்வண்டங்களை ஈஸ்வரன் சிருஷ்டிக்கும் அளவில் ஓரிரு படையாக இட்டு அகல் எடுக்குமா போலே-அடுக்கு மாடி கட்டடம் போலே இல்லை –
க்ரமத்தில் பரிணமிக்கை அன்றிக்கே
ந க்ரமேண விவ்ருத தமத்த ஜலபுத புதவதசமம் -என்கிறபடியே
நீர் குமுழி போலே ஒருக்காலே உத்பன்னங்களாய் -யென்கையும்
ஏக காலேன சருஜயந்தே -என்கிறபடியே சகல அண்டங்களும்
ஏக காலத்திலேயே உத் பன்னங்களாய் -யென்கையும்-

ஆக –
அண்டங்கள் தான் அநேகங்கள் -என்னும் இடமும்
அவை தான் எல்லாம் ஓன்று போலே இருக்கும் என்னும் இடமும்
சொல்லிற்று ஆயிற்று –
அண்டாந்தர வர்த்திகளில் தான் வாசி உண்டு —

——————————————

சூர்ணிகை -113

பூத பஞ்சகங்களுக்கும் தனித்தனியே
விநியோகங்களைத் தர்சிப்பிக்கிறார் –

பூதங்களில்
ஆகாசம் அவகாச ஹேது
வாயு வஹ நாதி ஹேது
தேஜஸ்ஸூ பஐ நாதி ஹேது –
ஜலம் சேசன பிண்டி கரணாதி ஹேது
பிருத்வி தாரணாதி ஹேது
என்பார்கள்-

அதாவது –
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது –
சகல பதார்த்தங்களுக்கும் ஸ்திதி கமநாதிகளுக்கு இடம் கொடுத்து கொண்டு இருக்கிற இது-இதன் பயன் –
ஆகாசத்துக்கு விநியோகம் என்கை-
அஸ்ய தேஜச்ய வியதோ லாகவம்
வாயு வஹ நாதி ஹேது சௌஷமயமேவ ச சப்த ச்ரோத்ரம் பலம் ப்ரஹ்மன ஸூஷிரத்வம் விவிகததா -என்று
இதுக்கு அநேக விநியோகங்கள் யுண்டாய் இருக்க இது –ப்ராஹ்மணரே மைத்ரேயரே -பராசரர் சொல்கிறார் –
லாகவும் லேசாக இருக்கை—ஸூஷ்மமாக -சப்தம் ஸ்ரோத்ரமும் பலத்தை யுடைத்தாய் இருக்கையும் –
த்வாரங்கள் உடைத்தாய் இருக்கையும் -விவிக்ததா – அவகாசம் கொடுத்துக் கொண்டும் இருக்கும்
உத்பலாக -மாம்சத்தில் எண்ணம் இல்லாமல் சாமாக்கதிர் போலே இருக்கும் ரிஷிகள் -ராஜா வெட்ட ஆரம்பிக்க -உத்பலாக விமானம் அன்றோ திருக்கண்ணபுரம் –
அவகாசம் யுடைத்தாய் இருக்கையும் -உண்டே –ஒன்றையும் அருளிச் செய்தது
இதனுடைய ப்ராதான்யத்தைப் பற்ற -இது தான் மற்றை அவற்றுக்கும் உப லஷணம்

வாயு வஹ நாதி ஹேது –
வஹனம் வஹிக்கை-வாசனை வகித்து காத்து எங்கும் வருமே -தாதுக்களையும் எடுத்துக் கொண்டே வரும் –
ஆதி சப்தத்தாலே வயூஹன சேஷடாதிகளை சொல்லுகிறது–
இது தான் -வாயோ ச ச பாசேன தரியஞ் சேஷ்டாம கார்க்ககச்யம் சபர்சமேவ ச வயூஹநம் வாஹநம் தேஜஸ சவீகரோதி சதுததம் -என்று சொல்லப் பட்டது இறே –
ஸ்பர்ச இந்திரியம் -சேஷ்டை கிரியா ஆஸ்ரயம் -கடினமாக இருப்பதும்- வியாபாரிப்பதும் வகிப்பதும் உண்டே –
தொடு உணர்ச்சியும் தோலும் காற்றில் இருந்து பலம் பெரும் -/புயல் சூறாவளி காற்று கடினம் அறிவோம்
உடம்பு பிருத்வியிடம் இருந்து கெட்டித்தன்மை வாங்க வில்லை -காற்றில் இருந்து வந்ததால் வளையவும் நிமிரவும் முடிகிறது –

தேஜஸ்ஸூ பஐநாதி ஹேது –
பஐனம் ஆவது பாகம் பண்ணுகை–தளிகை பண்ணுவது -உஷ்ணம் பிரகாசம் இவையும் உண்டே
ஆதி சப்தத்தாலே ஔஷண்ய பிரகாசாதிகளை சொல்லுகிறது
இதுவும் அகனே ரௌஷண்யம் பிரகாசத்வம் ரூபேந்த்ரிய மமாஷணம்
சந்தாப சௌ ர்ய தை ஷண யானி வர்ணம் பசன சக்தி தாம ஆதததே சஹசா தேஜஸ சாஹசஞ்ச தவிஜாரிஷப-என்று
கதிதமாயிற்று-ஜாடராக்கினி உள்ளேயும் உண்டே –
உஷ்ணம் -பிரகாசத்வம் -ரூப இந்திரியம் -சகியாமை -சந்தானம் தபிப்பது சக்தி பராக்ரமம் உக்கிரமாக இருக்கும் -உடம்பு உஷ்ணம் -98–4-இருக்க வேண்டும்
ரூபம் -வடிவத்தை சொல்ல வில்லை -பளபளப்பை சொல்லிற்று —
/சரீரம் பிரகாசம் வாங்கிக் கொள்வது -கண்ணில் உள்ள ஒளியைச் சொன்னவாறு -இருட்டுக்கு பழகும் கண் –
தைர்யம் -மல் பயிற்சி -ஸுர்யம்- தேஜஸ் மூலம் பெறுகிறது -/
சிகப்பு மஞ்சள் கருப்பு மூன்றுமே ஜ்வாலையிலே உண்டே -அது போலே சரீரத்துக்கு வர்ணமும் இது கொடுக்கும் –
சாஹச வேலை செய்யும் திறலையும் கொடுக்கும் –

ஜலம் சேசன பிண்டி கரணாதி ஹேது –
சேசனம் ஆவது -நனைக்கை
பிண்டி கரணமாவது -திரட்டுகை
ஆதி -சப்தத்தாலே சைத்ய மார்த்வாதிகளை–குளிர்ச்சி மென்மை சொல்லுகிறது
இதுவும் அதபயச சைத்யம் சமாதததே சனிகததத்வம் ரசேந்தரியம் பிரசாதம் மார்த்வம்
பிண்டீ கரணம் கலேதநஞ்ச வை -என்று அபிஹிதம் ஆயிற்று –
பிண்டீகரணம் -திரட்டுகை–/சீதளம் -ரசனை இந்திரியம் தெளிவு மிருதுவாய் இருக்கையும் நனைக்கையும் உண்டே –
ஸ்நிக்த்வம் -வள வள கொழு -மஜ்ஜை முட்டியில் உள்ளதே -நீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் -இருக்குமே –
மனத்தெளிவு -நீரால் சரீரத்துக்கு வரும் –
தமஸா நீரில் வால்மீகி தீர்த்தம் -ராமணீயம் பிரசன்னம் அபு -சாத்விகர் உள்ளம் போலே தெளிந்து உள்ளது என்றாரே –
உள்ளம் நனைந்து மார்த்வம் உண்டே –

பிருத்வி தாரணாதி ஹேது என்பார்கள் –
தாரணம் -தரிக்கை-உடம்பில் ஒவ் ஒரு பாகமும் ஒவ் ஒன்றை தாங்குமே –
ஆதி சப்தத்தாலே மூர்த்ததிமத்வ குருத வாதிகளைச் சொல்லுகிறது–உருவத்துடன் இருக்கும் -பெரியதாக பாரமாக இருக்குமே
பூமோ கந்த குணம் காரணம் கரிமாணஞ்ச தாரணம் மூர்த்திமதத்வம்
சஹிஷ்ணுத்வம்
ச்வீகரோதி யதாத்தம் -என்று இதுவும் வயாஹ்ருத மாயிற்று
என்பார்கள் -என்றது -தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி –
கந்த குணம் / கிரண இந்திரியம் குருத்வம் தரிப்பது சகித்து கொண்டு -போல்வன உண்டே –

——————————————————

சூர்ணிகை -114-

இனி ஏகாதச இந்த்ரியங்களினுடைய வ்ருத்தி பேதத்தை அருளிச் செய்கிறார் –

ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
அடைவே சப்தாதிகள் ஐந்தையும்
க்ரஹிக்கை தொழில் –
வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
விசர்க சில்ப பக்த யுக்திகள் தொழில்
மனஸ் ஸூ இவை
இத்தனைக்கும் பொது –

சப்த தன்மாத்திரை முதலில் -அதனால் ஸ்ரோத்ராதி முதலில் /

அதாவது
ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில் –
ச்ரோத்ரத்துக்கு சப்த க்ரஹணமும்
தவக் இந்த்ரியத்துக்கு ஸ்பர்ச க்ரஹணமும்
சஷூ ஸூ க்கு ரூப க்ரஹணமும்
ஜிஹ்வைக்கு ரச க்ரஹணமும்
க்ராணத்துக்கு கந்த க்ரஹணமும்
தொழில் –
தவக் சஷூர் நாசிகா ஜிஹ்வா ச்ரோத்ரம் அத்ர து பஞ்சமம்
சப்தா தீ நா மவாப்தயர்தம்
புக்தி யுகதானிவை த்விஜ-1–2-48- -என்னக் கடவது இறே
ஆத்மா ஞானம் மனசையோ அடைந்து கண்ணை அடைந்து கிரஹிப்பதால் அவாப்த யர்த்தம்
இந்த ஸ்லோகத்தில் இந்த்ரியங்களை வயுத் க்ரமமாக எடுக்கையாலே
இன்னாத்துக்கு இன்ன விஷயம் என்கிற நியமம் ந்யாயம் கொண்டு நிச்சயிக்க வேணும்-
தோல் -கண் -மூக்கு நாக்கு காது -என்று தொடக்கி சப்தாதிகள் -நேர் கிரமம் இல்லை -என்றவாறு –
ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு சப்தாதிகளை க்ரஹிக்கை தொழில் என்னும் இவ்வளவே பிரகாசிப்பது –
வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் விசர்க சில்ப யுக்திகள் தொழில் —
அதாவது -இப்படி வ்யுது க்ரமமாக அருளிச் செய்தது வாக்ய ஸ்வரஸ்யத்துக்காக
இத்தால்
வாக்குக்கு உக்தியும்
பாணிக்கு சில்பமும்-கைவினை என்றவாறு
பாதத்துக்கு கதியும்
உபஸ்தத பாயுகளுக்கு ஜல மல விசர்ஜனமும் தொழில் என்கை -பாயூப சததௌ கரௌ பாதௌ வாக் ச மைத்ரேய பஞ்சமீ
விசர்க சில்ப யுக்தி காம தேஷாஞ்ச கதயதே -என்னக் கடவது இறே

மனஸ் ஸூ இவை இத்தனைக்கும் போது –
அதாவது -ஜ்ஞான இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்கும் போதும்
கர்ம இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ கர்மங்களைப் பண்ணும் போதும்
மனஸ் சஹகாரம் வேண்டுகையாலே
உபயாத்மகமான மனஸ் ஸூ இவை இத்தனைக்கும்
சாதாரணமாய் இருக்கும் -என்கை –உபய சஹகாரி என்றபடி –

———————————————

சூர்ணிகை -115-

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு விஷயமாகச் சொல்லப் பட்ட
சப்தாதிகள் ஐந்தும்
ஆகாசாதிகளுக்கு பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

ஆகாசாதி பூதங்களுக்கு
அடைவே
சப்தாதிகள்
குணங்களாய் இருக்கும் –

அதாவது
ஆகாச குணம் -சப்தம்–பேர் இரைச்சல் கேட்க்கும்
வாயு குணம்- ஸ்பர்சம்
அக்னி குணம்- ரூபம்
ஜல குணம்- ரசம்
பூ குணம்- கந்தம்-
என்றபடி-
பூவுக்கும் பூமிக்கும் கந்தம் -புஷபமும் ப்ரித்வியில் இருந்து வந்ததே –

———————————————–

சூர்ணிகை -116-

இப்படி பிரதி நியத குணங்களான பூதங்களுக்கு
குண விநிமயம் வருகைக்கு அடி அருளிச் செய்கிறார் –

குண விநிமயம்
பஞ்சீ கரணத்தாலே –

குண விநிமயமாவது -ஏக பூதத்திலே பூதாந்திர குணங்களும் காணலாம்படி–ஒவ் ஒன்றிலும் ஐந்தையும் காணலாமே –சப்தாதி குணங்கள் அத்ரவ்யம் /தன்மாத்திரைகள் த்ரவ்யம் / குணம் அனுத்பூதமாய் இருக்கும் தன்மாத்ரையில் பூதத்தில் விளங்கும் – உத்பூதமாய் இருக்கும் என்று முன்பே பார்த்தோம் –
நிறம் மணம் குணம் கலந்து –வெண்ணெய் கலந்து -குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயித்து தானே நிற்கும் -த்ரவ்யம் த்ரவ்யம் கலந்து குண கலப்பு ஏற்படும்
கண்ணுக்கு குண கலப்பு தான் தெரியும் குணமாக கலக்க முடியாது கலந்த பின்பு த்ரவ்யங்களை பிரித்து பார்க்க முடியாது
சாந்தோக்யம் தேஜோ வண்ணம் -தேஜஸ் அப்பு அன்னம் -த்ரிவிக்ரணம்-பஞ்சீ காரணத்துக்கு உப லக்ஷணம்
பூதங்களில் யுண்டான குணக் கலப்பு சுருதி பிரகாசிகாகாரர்
சுக பஷீயத்திலே
தேஜோ வாரி மருதாம யதா விநிமய -என்கிற விதுக்கு
விநிமய பரஸ்பரஸ் மமீ சரி கரணம் -என்றாரே இவரும்
பாகவத த்யான ஸ்லோகம் -தேஜா வாரி மிருத்யு -மூன்றும் -வினிமயம் பரஸ்பரம் கலந்து நன்கு கலந்து
பரஸ்பர சமமிசரீ கரணமே விநிமய சப்தார்த்தம்
அங்கு பூதங்களுக்கு அந்யோந்யம் கலப்புச் சொல்லிற்று-
இங்கு குணங்களுக்கு அந்யோந்யம் சொல்லுகிறது
குணங்களுக்கு அந்யோந்யம் கலப்பாவது பூதமும் பூதாந்தரமும் போலே
குணமும் குணாந்தரமும் தன்னிலே கலக்கை அன்று
ஒன்றினுடைய குணம் ஒன்றிலே புக்கு எல்லா வற்றிலும் எல்லாம் யுண்டாம்படி இருக்கை –
பரமாணுவைக் கலந்து -ஆகாசம் மஹா பூத்துக்குள் புகுந்து -குணத்துடன் போகும் –ஒன்றாக பிசிவது போலே -குண விநிமயம் வேணும் –

அதவா –
விநிமயமாவது ஒன்றைக் கொடுத்து ஒன்றைக் கொள்ளுகையாய்
தன குணத்தை பூதாந்தரங்களுக்கு கொடுத்து அதன் குணத்தை தான் பஜிக்கை -என்னவுமாம் –
இத்தால் தன குணம் அந்யத்தின் பக்கல் யுண்டாய்
அந்யத்தின் யுடைய குணம் தன பக்கலிலும் யுண்டாம்படி இருக்கையைச் சொல்லுகிறது –

இந்த குணா விநீயம் பஞ்சீ கரணத்தாலே -என்றதுக்கு கருத்து
குணங்கள் ஆகையாலே ஆச்ரயாத நயதோ வருத்தி இல்லை இ றே இவற்றுக்கு
ஆகையால் த்ரவ்யத்தின் யுடைய கலப்பே குணக் கலப்புக்கு ஹேது என்கை –

பஞ்சீ கரணமாவது –
ஏவம் ஜாதேஷூ பூதானி பரதயேகம சயுர் தவிதா தத சதுர்ததா பின்ன மே கைகமா ததமாததம்
ததா சததிதம வயோ மனோர்த்த பாகாசா சதவாரோ வாயு தேஜ பயோபுவாம் அர்த்தா நியானி வாயோ சது வயோ மதேஜ பயோபுவாம் -இத்யாதி
புராணங்களில் சொல்லுகிறபடியே
ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி
அவற்றில் ஒரு கூறை நாலு கூறாக்கி
அந்த கூறு களை பூதாந்தரங்களிலே கூட்டி-ஒவ் ஒன்றின் அரைக்காலையும் அத்துடன் சேர்த்து -என்றபடி –
சர்வ பூதங்களிலும் சர்வமும் யுண்டாம்படி பண்ணுகை –

இப்படி பஞ்சீ கரணம் ஆனாலும் அவிபக்தமான அர்த்தங்கள் பிரதானங்களாய் நிற்கையாலே
ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்கும் குறை இல்லை –

——————————————————————————-

சூர்ணிகை -117-

ஆகாசம்
கறுத்துத்
தோற்றுகிறதும்
அத்தாலே –
நீலம் -தான் கறுத்துத் தோற்றும் என்பர்

அதாவது
அதி சூஷ்மதையாலே கண்ணுக்குத் தோற்றாத படி இருக்கும் ஆகாசத்துக்கு சஷூர் விஷயத்வமும்
யத க்ருஷ்ணம் தத பிருத்வி – என்று பிருதிவிக்கு உள்ளது ஒன்றாக சொல்லுகிற கிருஷ்ணத்வமும் யுண்டாயிற்று
அது பஞ்சீ கரணத்தாலே -என்கை-

முன்பே தன்மாத்திரை ஆவரிக்கும் என்று பார்த்தோம் -குணம் அடுத்ததுக்கு போக / ஆகாசத்தில் ஒரு குணம் –பிருத்வியில் ஐந்து குணம் வந்ததே –
விதைக்கு உறை போலே முளைக்க ஆய்வறிக்கை வேண்டும்
இதுவே பஞ்சீகரணம் இல்லையோ என்னில் -/ ஆவரித்தது ஒரு வழி பாதை / பிருத்வி குணம் ஆகாசத்தில் பார்க்க முடியாதே அங்கு –
பஞ்சீ கரணத்தில் தான் ஐந்திலும் ஐந்தும் இருக்கும்
பஞ்சீ கரணமே போதுமே ஆவரிப்பது எதுக்கு -என்னில்
படைக்க அதற்கு அதற்கு உண்டான குணம் கொடுக்க வேண்டுமே -தன்மாத்திரை உறை வேண்டுமே -தனக்கு முந்திய தன்மாத்ரையை எதிர்பார்க்கும் -/
ஆவரித்த பின்பு குணங்கள் சேரும் -சப்த தன்மாத்ரையால் ஆவரிக்கப்பட்ட ஸ்பர்ச தன்மாத்திரை ரூப தன்மாத்ரையை ஆவரிக்குமே —
கலப்பை வைத்து ஆவரிக்கும் பொழுது குணங்கள் சேர்ந்தே வரும் –
திருவாட்டாறுபெருமாள் பத்ம நாபிக்கு முன்னால் -போலே -அங்கு நாபி கமலமோ ப்ரஹ்மாவும் இல்லையே -திருவனந்தபுரத்தில் தானே பத்ம நாபன்
ஆவரித்த பின்பு விவகாரத்துக்காக தன்மாத்திரை உண்டா என்னில் வியவஹாரத்துக்கு தன்மாத்ரை வேண்டாமே
அனுபூதமாக இருப்பதால் பிரதானம் அப்ரதானம் பார்க்க முடியாதே –

இத்தால்–தேஜோ பன்னம் என்று தரிவருத கரணத்தைச் சொன்ன அநந்தரம் சுருதி தானே
யத கனே ரோஹிதம் ரூபம் தேஜஸ் ச தத் ரூபம் யச சுக்லம்
ததபாம யத் க்ருஷ்ணம் தத நன சய-என்று
அக்னியிலே தரிரூபத்வத்தை தர்சிப்பித்தால் போலே
இவரும் பஞ்சீ கரணத்தை அருளிச் செய்த அநந்தரம்
அது தன்னை சர்வத்தையும் பற்ற ஸூ ஷ்மமாய் இருப்பதொரு பூதத்திலே தர்சிப்பார் ஆயிற்று–
அக்னி உதாரணம் அங்கு ஆகாசம் உதாரணம் இங்கு -முதலில் தோன்றிய ஸூ ஷ்மமான ஆகாசம் –
ஒரு குணம் தான் நினைக்கிறோம் -பிருத்வியில் உள்ள குணத்தை சொன்னால் அனைத்தையும் சொன்னதாகுமே

இப்படி ஸ்ரீ பாஷ்யத்திலே
யதகனோ லோஹிதம ரூபம் தேஜஸ் ச ததுபாமாபி சுக்லம் க்ருஷ்ணம் பருதி வயாச சேதயகனா வேவ த்ரிரூபதா
ஸ்ருதயைவ தாசிதாதச மாத சர்வே சர்வதர சங்கதா –
ஏற்று ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் இறே –
அக்னியில் உள்ள சிகப்பு ரூபம் தேஜஸ் பூத பாகம் -வெள்ளை ஜலத்தின் பாகம் -பிருதிவி கறுப்பு பாகம் –
மூன்று ரூபங்களை -சொல்லி எல்லாவற்றிலும் எல்லாம் கலந்து என்றதாயிற்று

சாந்தோ கயத்தில் பஞ்சீ கரணம் சொல்லாத த்ரிவ்ருத காரணத்தை சொல்லுவான் என் என்னில்
அங்கு தேஜ உப பன்னங்கள் மூன்றும் யுடையவும் உத்பத்தி மாதரம் இறே சொல்லிற்று
ஸ்ருதியந்தரத்தில் சொல்லுகிற ஆகாச வாயுக்களின் யுடையவும்
அவ்யவகத மஹத் அஹங்காராதிகளின் யுடையவும் உத்பத்தி தானும் சொல்லிற்று இல்லை இறே
ஆகையால் தேஜோ உப பன்ன மாதரம் கதனம்
தத் வாந்தரங்களுக்கும் உப லஷணம் ஆனால் போலே
த்ரிவ்ருத கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கும் உப லஷணம்
சர்வ சாகா பிரத்யய நியாயம் உண்டே –

இப்படி பஞ்சீ கரணத்தாலே சகல பூதங்களும் பரஸ்பரம் மிஸ்ரங்கள் ஆகையாலே
சப்தாதி குண பஞ்சகமும் சர்வ பூதங்களிலும் யுண்டாய் இருக்கும் என்று
குணா விநிமய ஹேது சொல்லிற்றாய் நின்றது –

—————————————————————

சூர்ணிகை -108-

இனி ஆகாசாதிகளில் பூர்வ பூர்வத்தைப் பற்ற உத்தர உத்தரவத்துக்கு
குணாதிக்யம் யுண்டாகைக்கு மூலம் அருளிச் செய்கிறார் –

முன்புத்தை தன மாத்ரைகளோடே
கூடிக் கொண்டு
உத்தர உத்தர தன்மாத்ரைகள்
ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே
குணாதிக்யம் யுண்டாயிற்று
என்றும் சொல்வார்கள்-

அதாவது
சப்த தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு
ஸ்பர்ச் தந்மாத்ரம் வைவிஷயமான வாயுவை ஜநிப்பிக்கையாலே
வாயுவுக்கு ஸ்பர்ச சப்தங்கள் இரண்டும் குணமாயிற்று
இப்படி சப்த தந்மாத்ரையாலே ஆவ்ருத்தமான ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ஆவ்ருத்தமான
அவை இரண்டோடும் கூடி நின்று ரூப தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான தேஜசை ஜநிப்பிக்கையாலே
அத தத்வத்துக்கு சப்த ஸ்பர்ச ரூபங்கள் ஆகிற மூன்று குணங்களும் யுண்டாயிற்று
இப்படி பூர்வ தந்மாத்ராத்வய விசிஷ்டமான ரூப தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்
அவை மூன்றோடு கூடி நின்று ரச தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான ஜலத்தை ஜநிப்பிக்கையாலே
அதுக்கு சப்த ஸ்பர்ச ரூப ரச குணங்கள் நாலும் யுண்டாயிற்று
இப்படி பூர்வ தன்மாத்ரதையா விசிஷ்டமான ரச தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்க் கொண்டு
கந்த தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான பிருதிவியைப் பிறப்பிக்கையாலே
அதுக்கு சப்தாதிகள் ஆன அஞ்சு குணங்களும் உண்டாயிற்று -என்கை –

இத்தால் ஏகைகுண ஆச்ரயமான ஆகாசாதி பூதங்களுக்கு
குண விநிமயம் பஞ்சீ கரண பர யுக்தமானவோபாதி
உத்தர உத்தர பூதங்களில் குணாதிக்யம்
ஸ்வ ஸ்வ தன்மாத்ரங்களுக்கு யுண்டான
ஆவரண பரயுக்தம் என்றது ஆயிற்று
என்றும் சொல்லுவார்கள் என்று கீழ் சொன்னத்தோடே
இத்தையும் சமுச்சயித்து அருளிச் செய்கிறார்
இப்படி தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை –

ஆகாசம் சப்த மாத்ராந்து ஸ்பர்ச மாதரம் சமாவிசத
ரூமமத்தை வாசித
சப்த ஸ்பர்ச குணா யுபௌ சப்த ச ஸ்பர்ச ச ரூபஞ்ச ரசமாத்ரம்
சமாவிசத தச்மாச்ச
துர் குணாஹயாபோ விசேஷா சசேந்த்ரிய க்ரஹ -என்னக் கடவது இறே –

பஞ்சீ கரணத்தால் அஞ்சிலும் அஞ்சிலும் தோற்றும் -/ ஆவிருத்தத்தால் ஆகாசத்தில் உள்ள குணம் அடுத்துக்கும் –
இப்படி ஜாலம் நான்கு குணங்கள் – பிருத்வியில் ஐந்து குணங்கள் ஆனது என்றவாறு –
அனுபூதம் -தன்மாத்திரை -இந்த்ரியங்களால் கிரஹிக்கவே முடியாதே –
தன்னுடைய குணம் மாத்திரம் மட்டும் உத்பூதமா-ஆவரித்த பின்பு கீழே அவதரித்த இக்குணங்களும் சேர்ந்து உத்பூதமா –
கலவையான பின்பு உத்பூதம் இல்லையே –

————————————————–

சூர்ணிகை -119-

உத்தேச க்ரமத்திலே -சுத்த சத்வ -மிஸ்ர சத்வங்களின் -யுடைய
ஸ்வரூபாதிகளைத் தெளிய அருளிச் செய்தார் கீழ் –
இனி சத்வ சூன்யமாகிறது ஏது என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சத்வ
ஸூன்யமாவது
காலம் –

அதாவது
சத்வ குணம் ரஜஸ் தமஸ் குணங்களுக்கும் உப லஷணமாய்
சத்வ ஸூன்யம் என்றது
சத்வாதி குண த்ரய ஸூன்யம் -என்றது ஆயிற்று
இத்தால் ‘
கேவல சத்வமாயும்
குணத்ரய ஆச்ரமாயும்
இருக்கிற அசித் த்வயத்தையும் பற்ற
இது வ்யாவ்ருத்த ஸ்வரூபமாய் இருக்கும் -என்கை —

——————————————————–

சூர்ணிகை -120-

இதனுடைய பிரகாரம் ஏது என்னும் ஆகாஙஷையிலே சொல்லப் படுகிறது மேல் –

1–இது பிரகிருதி
பிராக்ருதங்களின் யுடைய
பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
2–கலா காஷ்டாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
3–நித்யமாய்
4–ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
5–சரீர பூதமாய்
இருக்கும் –

அயம் காலோஸ்மி -காலத்தை சரீரமாக கொண்டு தூண்டப்பட்டு படைக்கிறேன் -என்றபடி /ஸ்ருஷ்ட்டி காலம் அளவு கழிந்த பின்பே சம்ஹாரம் -பிரளயம் அத்தனை காலம் இருக்கும் –
கால விசிஷ்டனாக இருப்பதால் சஹகாரி -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம் – -சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மம் உபாதானம் -இப்படி த்ரிவிதமாய் –

அதாவது –
இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-
பிரகிருதி என்கிறது அவ்யகதத்தை
ப்ராக்ருதம் என்கிறது வ்யகதத்தை
பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு கால தத்வம் ஹேதுவாகை யாவது –
இவற்றை ஸ்வ சங்கல்பாதிகளாலே பரிணப்பிக்கிற சர்வேஸ்வரன்
காலத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்களைப் பார்த்து கொண்டு இருந்து
அவ்வவ காலங்கள் வந்தவாறே இவற்றை நிர்வஹிக்கையாலே
இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு இது அவஸ்யம் அபேஷிதமாய் இருக்கை-

பிரக்ருதிம் புருஷஞ்சைவ பரவிசயாத மேச்சாயா ஹரி
ஷோபயாமாச சம பராபதே சர்வ காலே வ்யயாவதய யௌ–ஸ்ரீ விஷ்ணு புராணம்எ ன்றும்
காலே சமசதி யோக்யதாம் சிதசிதோரநயோ நய மாலிங்கதோ
பூதா ஹன்க்ருதி புத்தி பஞ்சீ கரணி ஸ்வாந்தா
ப்ரவருத்ததீ நதரியை அண்டா நாவரணை ச சஹச்ரமகரோத -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –
என்கிறபடியே ஜகத் சிருஷ்டி பண்ணுகிற போது
அக்காலம் வரும் அளவும் பார்த்துக் கொண்டு இருந்து இறே சிருஷ்டித்தது
இது தான் ஸ்திதி யாதிகளுக்கும் ஒக்கும் இறே
இப்படி கால பிரதானமாக சர்வேஸ்வரன் நிர்வஹித்து அருளுகையாலே
இவ்விபூதியில் சகல பதார்த்தமும் கால க்ருத பரிணாமமாய் இருக்கும்
இவற்றின் யுடைய பரிணாமங்களுக்கு காலம் ஹேது என்னும் இடம்
இதனுடைய அந்வய வ்யதிரேகங்களாலே லௌகிக பதார்த்தங்களிலே காணலாம் இறே
ஆகையால் காலத்தின் யுடைய பிரகிருதி ப்ராக்ருத பரிமாண ஹேதுத்வம்
ஆகமத்தாலும் பிரத்யஷத்தாலும் சித்தம் –

அநந்தரம் கீழ் சொன்னதுக்கு உபயோகியான இதன் பரிணாம விசேஷத்தைச் சொல்லுகிறது –
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்-
காஷ்ட்டடா பஞ்சதச காயாதா நிமேஷா முனி சத்தம் காஷ்டா தரிமசத கலா தரிமசத ‘
கலா மௌ ஹூர்த்ததிகோ வித தாவத சங்க்யை ரஹோராதரம்
முஹூர்த்த தைர் மானுஷம் சம்ருதம் அஹோராதராணி தவாநதி மாச பஷ த்யாத்மாக தைஷ ஷட் பிரயத்னம் வர்ஷம் தவே யனே
தஷிண உத்தர அயனம் தஷிணம் ராத்ரிதா தேவானா முத்தாரம் தினம் திவ்யையா
வாஷச ஹச ரைசது க்ருததரே தாதி சம்ஜிதம் சதுர்யுகம்
தவாத சபிச தத் விபாகம் நிபோதமே சதவாரி தரீணி தவேசைகம கருதா திஷூ யதாகரமம
திவ்யபதா நாம சஹாஸ்ராணி யுகேஷு வாஹூபுராவித
தத் பரமாணை ச ச தைச சனதயா பூர்வா ததராபி தீயதே
சந்த்யா மசகச்ச தததுலயோ யுக சயா நனதரோ ஹி ச
சந்தயா சந்த்யா மசரோந்தர்யா காலோ முனி சத்தம் யுகாகயச
ச து விஜ்ஞ்ஞேய க்ருததரே தாதி சம்ஜ்ஞின-என்று தொடங்கி-
ஏவந்து ப்ரஹ்மணோ வாஷமேவம் வாஷ சதா ந்து தத சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மகாதமன –
என்னுமது அளவாக காலத்தின் யுடைய பரிணாம விசேஷம்
ஸ்ரீ பராசர பகவானாலே கதிதமாயிற்று —

இது தன்னை நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
நிமிஷம் பதினைந்து கொண்டது காஷ்டை -கண்ணை இமைக்கும் நேர நிமிஷம் நிமி ராஜா பேரால் -நாம் சொல்லும் நிமிஷம் இல்லை –
காஷ்டை முப்பது கொண்டது கலை –
கலை முப்பது கொண்டது முஹூர்த்தம்/-
முஹூர்த்தம் முப்பது கொண்டச்து திவசம்-நாள்
திவசம் முப்பது கொண்டது -பஷ த்வய ரூபமான மாசம்
மாசம் இரண்டு கொண்டது ருது
ருது மூன்று கொண்டது அயனம்
அயனம் இரண்டு கொண்டது சம்வத்சரம்
இப்படி மானுஷ சம்வத்சரம் 360 கொண்டது ஒரு தேவ சம்வத்சரம் தேவ சம்வத்சரம் 12000 கொண்டது சதுர யுகம்
அதில்
கிருத யுகம் -4000
த்ரேதை -3000
த்வாபரம் -2000
கலியுகம் -1000
கிருத யுகத்துக்கு பூர்வ சந்த்யை-400-அபர சந்த்யை -400
த்ரேதைக்கு -பூர்வ சந்த்யை-300-அபர சந்த்யை -300
த்வாபரத்துக்கு பூர்வ சந்த்யை-200-அபர சந்த்யை -200
கலி யுகத்துக்கு பூர்வ சந்த்யை-100-அபர சந்த்யை -100
இப்படி 71 சென்ற சதுர யுகம் ஒரு மன்வந்தரம்
14 மன்வந்தரம் 1000 சதுர யுகம்
இது ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல்
ராத்ரியும் இத்தோடு சமமாய் இருக்கும்
இப்படி அஹோராதரங்களும் மாச சம்வத்சரங்க ளுமாய் பெருக்கி
சதாந் தமாக பரிகணிதமான ப்ரஹ்ம ஆயுஸ் ஸூ க்கு பரம் என்று பேராம் -என்று
ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார்
ஆக காலத்தின் யுடைய கலா காஷ்டாதி ரூப பரிணாம பிரகாரம் சொல்லப் பட்டது-

நித்யமாய் –
இவ்விடத்திலே நித்யத்வம் ஆவது
அநாதிர் பகவான் -காலோ நாத தோசய த்விஜ விதயதே என்கிறபடியே
ஆதி அந்த ரஹிதமாய் இருக்கை –

ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கை-
அதாவது -நிகில ஜகத் உதய விபவ லய லீலனான சர்வேஸ்வரனுக்கு
தத் தத் லீலா உபகரணம் ஆகை
பிரகிருதி புருஷ காலங்கள் மூன்றும் லீலா உபகரணமாய் இ ரே இருப்பது –
அதில் பிரகிருதி புருஷர்கள் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கர்மீபவித்து லீலா உபகரணம் ஆவார்கள் –
இது சஹகாரித்வேனலீலா உபகரணமாய் இருக்கும்
ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளை நிர்வஹிக்கும் இடத்தில்
ஸத்ய சங்கல்பனான தான் அடியில் பண்ணி வைத்த கால நியமம் தப்பாத படி
அவ்வ்வ்வ கால ஆகமனம் பார்த்து இருந்தே நிர்வஹிக்கையாலே
இது தன்னை நிமிஷ காஷ்ட்டாதி ரூபேண பரிணமிப்பிக்கையாலே
இது தான் சிருஷ்டி விஷயமாமுமாய் இ றே இருப்பது
ஆக இப்படிகளாலே ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் இருக்கும்
இத்தை க்ரீடா பரிகாரம் என்றே சொல்லுகையாலே காலக்ருத பரிணாமமே யாய்ச் செல்லுகிற
லீலா விபூதியிலே இதுக்கு விநியோகம்
ந காலச தாத்ரா வை பிரபு-என்கிற போக விபூதியில் இது கொண்டு அபேஷை இல்லை என்றதாயிற்று-

அநந்தரம்-ஏவம் பூதமான கால தத்வம் ஈஸ்வரனுக்கு அப்ருதக் சித்த விசேஷணமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
சரீர பூதமாய் இருக்கும் -என்று –
அன்னலனுடை ஒருவனை நணுகினம் நாமே -பரத்வாஜர் ஆஸ்ரமம் -பரத ஆழ்வான் வர -அக்னி ஹோமம் புகை கண்டு அருளிய ஸ்லோகம் –
விலகி இருந்தால் அப்ருதக் விசேஷணம் போகுமே -விலகினால் அன்றோ அருகில் வர –உள்ளம் ஒத்துக் கொள்ள வில்லை –
பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷ பரமம் த்விஜ வ்யகதா வ்யகதே ததை வானயே ரூபே காலச ததா பரம -என்றும்
பிரதான புருஷா வ்யக்த காலாஸ்து பரவிபாகச ரூபாணி சத்தி சாகா நத வ்யக்தி சதபாவ ஹேதவ-என்றும்
விஷ்ணோ ஸ்வரூபாத பரதோதிதே த்வே ரூபே பிரதானம் புருஷச்ச விபர தசயைவ
தேனயேன தருதே வ்யகதே ரூபான்தரம் தத த்விஜ கால சம்ஜ்ஞ்ஞம் –1–2–49-என்றும்
சொல்லக் கடவது இ றே
பிரதானம் வியக்தம் -பிரகிருதி பிராகிருதம் என்றவாறு -புருஷனும் காலமும் இவையும் சரீரம் -விகாரத்வம் போக்த்ருத்வம் உண்டே இவற்றுக்கு
ஒரு சேதனனோடு ஒரு த்ரவ்யத்துக்கு யுண்டான பிருதக் சித்த யனாஹா ஆதார ஆதேய பாவமும்-
நியந்த்ரு நியாமய பாவமும்- சேஷ சேஷி பாவமும்
ஓர் ஒன்றே சரீர லஷணமாய் இ றே இருப்பது
கால சம்ஜஞக அசித் த்ரவ்யத்துக்கு -ஏதத் சம்பந்த த்ரவ்யமும்
ஈச்வரனோடு யுண்டாகையாலே இது அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றதாயிற்று

இப்படி பிரக்ருதியாதி பரிணாம சஹகாரியான காலம் ஈஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கும் என்கையாலே
சஹகாரி காரணமும் ஈச்வரனே என்னுமதுக்கு விரோதம் இல்லை –

ஆக
சத்வ சூன்யமாகிறது இன்னது என்றும்
அது செய்யும் கார்யமும்
அதுக்கு உறுப்பான அதனுடைய பரிணாமமும்
அதனுடைய அநாதி நிதனத்வமும்
அது தான் ஈஸ்வரனுக்கு இன்னத்துக்கு பரிகரமாய் இருக்கும் என்றும்
அது தான் அவனுக்கு சரீரமாய் இருக்கும் என்றும்
சொல்லி நின்றது –

———————————————

சூர்ணிகை -121-

த்ரிவித அசித்தையும் அருளிச் செய்கிற விடத்தில் அவனுக்கு போக உபகரணமான கௌரவத்தைப் பற்ற
சுத்த சத்வத்தை பிரதமத்தில் அருளிச் செய்தார்
அநந்தரம்
அவனுடைய லீலைக்கு பிரதான உபகரணமாய்க் கொண்டு பிரதான சப்த வாச்யனான மிச்ர சத்வத்தை அருளிச் செய்தார் –
அநந்தரம்
அந்த பிரதான பரிணாமத்துக்கு சஹகாரியாய்க் கொண்டு லீலா உபகரணமாய் இருக்கும் சத்வ சூன்யத்தை அருளிச் செய்தார் –
இப்படி அசித் த்ரயத்தையும் சொல்லுகிற இடத்தில்
பிரகிருதி ப்ராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்-என்று
கால தத்துவத்துக்கு விநியோகம் சொன்னாவோபாதி
பூர்வ அசித் த்வயத்துக்கும் விநியோகம் சொல்லப் பட்டது இல்லை இ றே
அத்தை அருளிச் செய்கிறார் மேல் –

மற்றை இரண்டு அசித்தும்
ஈஸ்வரனுக்கும்
ஆத்மாவுக்கும்
போக்கிய
போக உபகரண
போக ஸ்தானங்களாய்
இருக்கும் –

அதாவது
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் என்றது
சேதனர் இ றே அசேதனதுக்கு போக்தாக்கள்
சேதனராக உள்ளது ஈஸ்வரனும் ஆத்மாவும் இ றே
ஆனபின்பு உபயர்க்கும் போக்யாதிகளாய் இருக்கும் என்றபடி
ஆத்மாவுக்கும் என்ற ஏக வசனம் ஜாதி அபிப்ராயம் ஆகையாலே த்ரிவித சேதனரையும் சொல்லுகிறது –

இப்படி உபய அசித்தும் உபயர்க்கும் போக்யாதிகளாய் இருந்ததே யாகிலும்
கேவல பகவத் இச்சையாலே தத் போக அர்த்தமாக பரிணமிக்கையாலும்-
அநவரத அபரோஷித ஸ்வ பர ஸ்வரூபரான நித்ய முக்தரில்
திருமகளும் நீயும் -என்கிறபடியே
அம்மிதுனத்தினுடைய போகத்துக்கு கை தொடுமானமாய் இருக்குமது ஒழிய–சாதனம் கருவியாய் -இருக்குமது ஒழிய என்றவாறு –
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலும்
சுத்த சத்வத்தின் யுடைய விநியோகம் ஈஸ்வர பிரதானமாய் இருக்கும்-

அங்கன் இன்றிக்கே
சேதன கர்ம அனுகுணமாக- பகவத் சங்கல்ப்பத்தாலே -பரிணமிக்கையாலும்-
சேதனர் எல்லாரும் தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியைப் பண்ணி
ஸ்வ தந்திர போக்தாக்களாய் இருக்கையாலும்
ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் லீலா ரசமே பிரசுரமாய்
போக ரசம் அத்ய அல்பம் ஆகையாலும்-திருப் புளிய மரத்தின் அடியில் உள்ள ஆழ்வார் விமல சரம திருமேனி போன்றது மட்டுமே போக்யம் அவனுக்கு இங்கு –
மிச்ர சத்வத்தின் யுடைய விநியோகம் பத்த சேதன பிரதானமாய் இருக்கும் –

——————————————————

சூர்ணிகை -122-

அந்த விபூதியில் போக்யங்கள் ஆவன அப்ராக்ருதமான சப்தாதிகள்
போக உபகரணங்கள் ஆவன திவ்ய மால்யாதிகளும் சத்ர சாமராதிகளும் கரணங்கள் தானும்-
போக ஸ்தானங்கள் ஆவன அப்ராக்ருத ரத்ன மயமான மண்டபம் என்ன மாளிகை என்ன இத்யாதிகளும்
பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய விக்ரஹங்களும்(பரமேஷ்டி -புமான் -விஸ்வம் -நிவ்ருத்தி -மற்றும் ஸர்வம் )

இப்படி நித்ய விபூதி பிரக்ரியையும் இவ்விடத்திலே அருளிச் செய்ய வேண்டி இருக்க
சங்கோசித்து
லீலா விபூதி பிரக்ரியா மாதரத்தை அருளிச் செய்கிறார் –

போக்யங்கள் ஆகிறன-விஷயங்கள்
போக உபகரணங்கள் ஆகிறன -சஷூராதி கரணங்கள்
போக ஸ்தானங்கள் ஆகிறன -சதுர்தச புவனமும் சமச்த தேஹமும் –

இது தான் உபய விபூதிக்கும் ஆனாலோ என்னில்
போக உபகரணங்களில் பிரதானங்கள் சொல்லாமையாலும்
போக ஸ்தானங்களில் வைஷம்யத்தாலும் சேராது–
(ஸ்ரீ வைகுந்தத்தில் வைஷம்யம் இல்லையே )

இங்கு சேதனருக்கு போகமாவது ஸூக துக்க ரூபமான அனுபவ ஞானம்
அந்த ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆகையாலே சப்தாதி விஷயங்கள் போக்யங்கள்-
அந்த ஜ்ஞானத்துக்கு உபகரணங்கள் ஆகையாலே இந்த்ரியங்கள் போக உபகரணங்கள் –
யாதொரு அதிகரணத்திலே நிற்கிற சேதனனுக்கு அந்த ஜ்ஞானம் பிறக்கிறது அது
போக ஸ்தான சப்தத்துக்கு அர்த்தம் ஆகையாலே
போக ஸ்தானங்கள் என்று லோகங்களையும் தேஹங்களையும் சொல்லுகிறது –
லோக விபாகம் கீழே சொல்லப் பட்டது
சமஸ்த தேஹங்கள் ஆவன ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான சரீரங்கள்-

ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் யுண்டான போக்ய போக உபகரணாதிகளையும்
அவதார கந்தமான ஷீரார்ணவ சயனத்திலும்
அவதார விசேஷங்களிலும்
அர்ச்சாவதார விசேஷங்களிலும்
யுண்டான விநியோக விசேஷங்களாலே கண்டு கொள்வது –

——————————————————-

சூர்ணிகை -123

அநந்தரம் த்ரிவித அசித்தின் யுடைய பரிணாமங்களை
அருளிச் செய்கிறார் —

இதில் முற்பட்ட அசித்துக்கு
கீழ் எல்லை யுண்டாய்
சுற்றும் -மேலும் -எல்லை இன்றிக்கே
இருக்கும்

நடுவில் அசித்துக்கு
சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே
மேல் எல்லை யுண்டாய் இருக்கும்

காலம்
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் –

பூர்வ அசித்துக்கு கீழ் எல்லை யுண்டு என்கிறது
மிச்ர சத்வ அவதி ஆகையாலே

நடுவில் அச்சிதுக்கு மேல் எல்லை யுண்டு என்கிறது
சுத்த சத்வ அவதி யாகையாலே

காலத்துக்கு அங்கன் ஒரு அவச்சேதம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் என்கிறது

இப்படி சர்வத்ரிகமான காலம் தான்
உபய விபூதியிலும் நித்யம் என்று இறே தமக்குத் திரு உள்ளம் –

(நித்ய விபூதியிலும் கால தத்வம் உண்டு –
இருந்தாலும் இல்லாததுக்கு சமம் அங்கு –
சேர்த்து வைத்து இங்கே நம்மை படுத்தும் )

——————————————-

சூர்ணிகை -124-
இங்கன் அன்றிக்கே இதுக்கு விபூதி பாகத்தை இட்டு
ஒரு பேதம் சொல்லுவாரும் யுண்டு
என்கிறார்

காலம் தான்
பரம பதத்தில் நித்யம்
இங்கு அநித்யம்
என்றும் சொல்லுவார்கள் –

இப்படி சொல்லுகைக்கு அடி –
பரமபதத்தில் இதுக்கு உத்பத்தியாதிகள் யுண்டாக சாஸ்திரங்கள் சொல்லாமையாலும்
இந்த விபூதியிலே இதுக்கு உத்பத்தியாதிகள் சொல்லுகையாலும்
வ்யூஹ க்ருதயங்களை சொல்லும் இடத்தில்
கால சிருஷ்டியை அநிருத்த கிருத்யமாக சொல்லா நின்றது இறே

(அநிருத்த ஆழ்வான் இங்கே ஸ்ருஷ்டிக்கப்பட்டதாக சொல்லுமே
அதனால் அநித்தியம் இங்கு என்றவாறு –
ஸ்ருஷ்டிக்கு உணர்த்துவது காலம் என்று சொல்லி காலத்தை ஸ்ருஷ்டிப்பார் என்பது என் என்னில்
காலத்தை சரீரமாக இல்லாத ப்ரஹ்மம் உண்டோ என்னில் )

பிரக்ருதியை ஸ்ருஷ்டிக்கை யாவது
மஹதாதி ரூபேண பரிணமிக்கையானால் போலே-
(இல்லாததை உருவாக்குவது இல்லையே –அதே போலே )

காலத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது
நிமிஷ காஷ்டாதி ரூபேண பரிணமிப்பிக்கை

சத்த பரிணாமிநீ யான பிரக்ருதிக்கு–(ஸ்த்ரீ லிங்கம் ) மஹதாதி ரூபமான
ஸ்தூல பரிணாமம் போலே இறே–
சத்த பரிணாமியான
இதுக்கும் நிமிஷாதி ரூபமான பரிமாணம்

அந்த மஹாதாதியோபாதி நிமேஷாயாதியான இதுவும்
விநாசவத்தாகையாலே
இவ்வளவைக் கொண்டு காலம் இங்கு அநித்யமாய் இருக்கும் என்கிறது
பரம பதத்தில் ஈத்ருச பரணாம விசேஷ ப்ரயுக்தோதபத்யாதி
வ்யவஹார ராஹித்யத்தாலே நித்தியமாய் இருக்கும் என்கிறது –

இப்படி காலத்துக்கு பரிணாமம் கொள்ளாதே
ஏக ரூபத்தைக் கொண்டு-(ஏற்றுக் கொண்டு )
இப்படி இருந்துள்ள காலம் தான்
தன்னுடைய நிமிஷம் காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரம் தொடக்கமாக
பரார்த்தம் ஈறாக யுண்டான விசேஷ வ்யவஹாரத்துக்கு ஹேதுவான
நிமேஷோ நமேஷங்கள் ஆதித்ய கதி தொடக்கமான அவச்சேதங்களோடே சம்பந்தித்து இருக்கும்

ஆகையாலே ஷண லவாதி பேத வ்யவஹாரம் யுண்டாகின்றது என்று
சொல்லுவதும் ஒரு பஷம் யுண்டு இறே
இது விறே தத்வ த்ரய விவரணத்தில் பெரிய வாச்சான் பிள்ளை பிரதானயேன அருளிச் செய்தது
அந்த பஷத்தில் உபய விபூதியிலும் கால ஸ்வரூபம் ஏக ரூபமாய் இருக்கையாலே
பரம பதத்தில் நித்யம் இங்கு அநித்யம் என்ற இது சொல்லப் போகாது
ஆகையால் இது பரிணாம பஷத்தை அவலம்பித்து சிலர் சொன்னது என்று கொள்ள வேணும்
நம்முடைய தர்சன ஸ்தானங்களிலே இங்கனேயும் சிலர் அருளிச் செய்கையாலே
அத்தையும் தர்சிப்பித்து அருளினார் ஆயிற்று –

பொய் நின்ற ஞானம் –
(பொய் ஞானம் இல்லை -ஜெகதே பொய் என்பது இல்லை -மாறுதலுக்கு உட்பட்டு ஒருதலைப்பட்டு இருப்பதால் )
பரிணாமம் ஒத்துக் கொண்டால் தான் நித்யம் அநித்தியம்
பரிணாமம் இல்லாமல் அவச்சேதம் காரணம் என்றால்
நித்தியமாக இங்கும் அங்கும் என்பர்

—————————————–

சூர்ணிகை -125-

சிலர் காலத்தை
இல்லை என்றார்கள் –

காலம் தன்னை இல்லை என்று பௌத்தாதிகள் சொல்லுகையாலே -சிலர் -என்கிறார்
சர்வம் சூன்யம் என்பார்களே

——————————

சூர்ணிகை -126-

அத்தை நிராகரிக்கிறார்

பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும்
சித்திக்கையாலே
அது சொல்ல ஒண்ணாது –

பிரத்யஷமாவது ஸ்தாவர ஜங்கமாத்மகமானசமச்த பமார்த்தமும்
கால க்ருத பரிணாம மாகவே காணப் படுகிற இது
ஆகமமாவது ஸ்ருதியாதிகள் -கலா முஹூர்த்தா காஷ்டா ச சஹோராத்ராச்ச சர்வச -என்றும்
மதுச்ச மாதவச்ச வாசந்திகாவ் ருதூ சுகரச்ச சுசிச்ச கரைஷ மாவருதூ-என்று/ மது சித்திரை /மாதவ வைகாசி /
கால பரிணாம விசேஷங்களான -கலை காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரங்கள் ருது விசேஷங்களை
சொல்லா நின்றது இ றே சுருதி –
கால ஸ்வரூபம் விஷணோச்ச யந மயோகதம தவா நக -இத்யாதியாலே
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே இது தான் விஸ்தரேண சொல்லப் பட்டது இறே
புராணாந்தரங்களிலும் இதிஹாசாதிகளிலும் இப்படி கண்டு கொள்வது –
இதுக்கு என்னவே நிர்மிதமாய் அத்யய நாதி கால நியமங்களை பிரதிபாதிக்கிற
ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வேதத்துக்கு திருஷ்டியாக சொல்லா நின்றது இறே
அந்த சாஸ்திரம் தன்னிலே இன்ன காலத்திலேயே இன்னது யுண்டாம் என்று சொன்னால்
அது பிரத்யஷிக்கலாய் இரா நின்றது இறே-
ஆகையால் பிரத்யஷத்தாலும் ஆகமத்தாலும் இப்படி சித்திக்கையாலே
கால அபாவம் சொல்ல ஒண்ணாது என்கை –

——————————————-

சூர்ணிகை -127-

பலரும் திக்கு என்று
தனியே ஒரு த்ரவ்யம்
யுண்டு
என்றார்கள் –

வைசேஷாதிகள் பிருதிவ்யாதிகளோ பாதி
திக்கு என்றும் ஒரு த்ரவ்யம் யுண்டு என்று சொல்லுகையாலே
இப்படி அருளிச் செய்கிறார் –
த்ரவ்யாணி பருதிவயபதேஜோ வாயவாகாச காலதி காதமம நாமாசி நவைவ —தர்க்க ஸங்க்ரஹம் -என்று இ றே அவர்கள் சொல்லுவது -ஒன்பதையும் சொல்வார்கள்
பூராபோ ஜ்யோதிர நிலோ நப காலச ததாதிச ஆத்மா மன இதி பராஹா த்ரவ்யாணி நவ ததவித -என்றான் இறே வரத ராஜன் —
தார்க்கிக்க ராஷா -12-நூற்றாண்டில் இருந்தவர் -பிள்ளை லோகாச்சார்யார் காலம் -நையாயிக வரதராஜன் –

————————————–

சூர்ணிகை -128-

அத்தை நிராகரிக்கிறார் –

பல ஹேதுக்களாலும்
ஆகாசாதிகளிலே
அந்தர்பூதம் ஆகையாலே
அதுவும் சேராது –

அதாவது –
நாலு பேர் நாலு திக்கிலும் நின்றால் நால்வர்க்கும் நடுவான
பிரதேசம்
ஒருவனுக்கு கிழக்காய்-ஒருவனுக்கு மேற்காய்-ஒருவனுக்கு வடக்காய் -ஒருவனுக்கு தெற்காய்
தோற்றா நின்றது இ றே
அதுக்கடி த்ரவ்யம் அன்றிக்கே பிரதியோக அணுகுண கல்பனம் ஆகை
நால்வருக்கு நடுவே இருக்கிற பிருதிவ்யாதிகள் த்ரவ்யம் ஆகையால்
இப்படி விப்ரதிபத்தி விஷயம் ஆகிறது இல்லை இ றே
இனித்தான் ஆதித்யன் உதிக்கிற இடம் கிழக்காகவும்
அவன் அஸ்தமிக்கிற இடம் மேற்காகவும் இ றே கொள்ளுகிறது -இரவிலும் சூர்யன் உண்டே -ரஸ்மி அனுசாரி சூத்ரம் –
அது தான் மகா மேருவுக்கு நாலு பார்ச்வத்திலும் பேதித்து இ றே இருப்பது
ஆகையால் இ றே நாலு பார்ச்வத்திலும் உள்ளவர்களுக்கு மகா மேரு வடக்காய் இருக்கிறது -மேரோகோ தக்ஷிண பார்ஸ்வ அனைவருக்கும் –
நைவாச தமய மரீ ககச்ய நோதயச தவீப வாஷாணாம் மேரு ருத தரதோ யத -என்று
இது தான் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப் பட்டது-
சூரியனுக்கு அஸ்தனமாம் உதயம் இல்லை தர்சனம் இல்லாதது கொண்டு உதயம் அஸ்தமனம் என்று பேரிட்டு உள்ளார்கள் -அனைவருக்கும் மேரு வடக்கில் உள்ளது

இப்படி பல ஹேதுக்களாலும் ஆகாசாதிகளில் அந்தர்பூதமாய்
தனக்கு என ஒரு த்ரவ்ய அவஸ்தை இல்லாமையாலே
திக்கு என்று ஒரு த்ரவ்யம் யுண்டு என்கிற வதுவும் சேராது என்கை –
ஆகாசாதி -என்கிற ஆதி சப்தத்தாலே பூமியைச் சொல்லுகிறது
இவற்றில் திக்கு அந்தர்பூதம் ஆகையாவது சூர்யனுடைய உதயாதிகளுக்கு ஈடாக
இவற்றுக்கு உள்ளே திக் விபாகத்தை கல்பித்துக் கொள்ளுகிறது-ஒழிய பிரித்துக் காணலாவது ஒரு வஸ்து இன்றிக்கே இருக்கை
அதுவும் சேராது என்றது முன்பேயும் ஒரு பஷத்தை நிஷேதிக்கையாலே சமுச்சயம்-

———————————————————-

சூர்ணிகை -129-

பிருத்வ்யாதி சதுஷ்டத்யோ பாதி ஆகாசத்தையும்
பாவ ரூப பதார்த்தமாகக் கொள்ளாதே–ஆவரண
அபாவ ரூபமாக கொள்ளுகிற பௌத்த மதத்தை
அருளிச் செய்கிறார் –
இல்லாத தன்மை -அபாய ரூபம் -எல்லாமே சூன்யம் என்பார்களே -இல்லாமையே அனைத்தும் –

சிலர் ஆவரண அபாவம்
ஆகாசம் என்றார்கள் –

ஆவரணம் மூடி–திரை / அபாவம் இல்லாமை தான் ஆகாசம்
கத்தியால் பலத்தை நறுக்குகிறோம் கர்த்தா கரணம் இரண்டு உத்பத்தி -கர்மணி -எத்தை செய்தாய்
கர்த்தரி கர்மணி கரணே மூன்றும் இந்த மூன்றும் உண்டே

அதாவது -ஆவரியதே அநேன -என்கிற கரண வ்யுதபுத்தியாலே
ஆவரணங்கள் ஆவன ஸ்த்தூல பதார்த்தங்களான பிருத்வ் யாதிகளாய்
அவற்றினுடைய அபாவமே ஆகாச சப்த வாச்யம் அல்லது
இது ஆகாசம் என்று காட்டலாம் படி–இதம் என்று சித்திக் காட்ட வல்ல –
பாவ ரூபமானதொரு பதார்த்தம் அன்று -என்கை –
நச பிருதிவ்யா தயபாவமா தரமாகாச கிதி வக்தும் சகயம் -என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –2–2–23-ஸூ த்ரம்-
அத்தை நிராகரிக்கிறார் -புத்த பஷத்தை -என்றபடி –

—————————————-

சூர்ணிகை -130-

அத்தை நிராகரிக்கிறார் –

பாவ ரூபேண
தோற்றுகையாலே
அதுவும் சேராது –
நன்கு இதம் என்று தோற்றுகிறதே

அதாவது –
பாவ ரூபத்வேன அங்கீ கரிக்கப் பட்ட பிருதிவ்யாதிகளோ பாதி
அத்ர சயனே பத்தி அத்ர க்ருதர பத்தி என்று சயேநாதிகளுடைய பதந்தத்துக்கு தேசமாய்க் கொண்டு
ஆகாசமும் பாவ ரூபமாய்த் தோற்றுகையாலே
பருந்து கழுகு விழுகிறது என்கிறோமே –
இத்தை ஆவரண பாவ ரூபமாகச் சொல்லுகிற அது சேராது என்கை
அதவும் -நிஷித்த சமுச்சயம்–
உம்மை தொகை -தள்ளலினவற்றை சேர்த்து அருளிச் செய்கிறார் –
இது தன்னை-ஆகாசே சாவிசே ஷாத–2–2—23 –என்கிற ஸூ தரத்தில்–வேறு பட்டு இல்லாத படியால் -ஆகாசம் துச்சம் இல்லை என்று வழங்கக் கூடாது –
பிருதிவி அப்பு போலே -இதுவும் சேராது -ஆகாச ச அவிசேஷாத் -சகாரம்–அபாதித ப்ரதீதி -பாதிக்க முடியாதே பிருத்வி அப்பு போலே –
ஆகாசத்தில் தும்சத்வம் சொல்ல முடியாது என்றபடி அபாதித ப்ரதீதி தடங்கல் இல்லா தோற்றம் உண்டே –
ஆகாசே ச நிருபாக கய்தா ந யுக்தா பாவ ரூப தவே நாப யுபகத
பிருதிவ்யாதி வத ஆகாச சயா பய பாதிதா ப்ரதீதி சித்த வாவி சேஷாத
ப்ரதீயதே ஹயாகாசோதர சயேன பத்தய தய க்ருத்ர பத்தி இதி சயே நாதி பதந்தே சத வேன-என்று தொடங்கி
ஸ்ரீ பாஷ்ய காரர் விஸ்தரேண அருளிச் செய்தார்-
ஆபாத ப்ரதீத சித்தத்துவத்தில் வேறுபட்டு இராமையாலே —

——————————————————

சூர்ணிகை -131-

இனி ஆகாசத்துக்கு நித்யத்வ நிரவயவதவ விபுத்வ அபரத
யஷத்வங்கள் கொள்ளுகிற
நையாயிக வைசேஷிக மதத்தை
அருளிச் செய்கிறார்

வேறே சிலர்
இது தன்னை
நித்யம்
நிரவயவம்
விபு
அப்ரத்யஷம்
என்றார்கள் –

—————————————–

சூர்ணிகை -132-

இது தன்னை நிராகரிக்கிறார் –

பூதாதியிலே பிறக்கையாலும்
அஹங்காராதிகள் இல்லாமையாலும்
கண்ணுக்கு விஷயம் ஆகையாலும்
அவை நாலும் சேராது

தாமச அஹங்காரத்தில் இருந்து தோன்றுவதால் -தோன்றினாலே நித்யத்வம் நிர அவயவத்வம் போகுமே /

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான தாமச அஹங்கார த்திலே உத்பன்னம் ஆகையாலும்
ஒன்றிலே நின்றும் உத்பன்ன மான தொன்றுக்கு
ச அவயவத்வம் சித்திக்கையாலும்
நித்யம் நிரவவயம் என்கிற இரண்டும் சேராது-
பூதாதியிலே பிறக்கையாலும் -என்றது
சப்த தன்மாத்ரையினுடைய ஸ்தூல அவஸ்தை ஆகையாலே
அதுக்கும் இதுக்கும் யுண்டான ஐக்யத்தைப் பற்ற –அதனுடைய தசா விசேஷம் தானே –
இனி விபுவாகில்
சர்வகதமாக வேணும் இ றே
த்ரி / பஞ்சீ கரணம் -அஷ்ட கரணம் நியாய சித்தாஞ்சம் -அஹங்காரம் மஹான் பிரக்ருதிகளையும் சேர்த்து
உத்பூதமாக-பிருத்வியில் ஐந்து குணங்களும் இருக்கும் –
குண வினீமயம் -ஐந்திலும் ஐந்தும் தோன்றும் பார்த்தோம் வாயுவில் ரூபம் தெரியாது என்பர் தேசிகன் அது அநுத்பூதமாகவே இருக்கும் -என்பர் /
ஸ்வ காரணமான அஹங்காரா திகளில் இதுக்கு வ்யாப்தி இல்லாமையாலே
அதுவும் சேராது–
ஆகாசம் வியாபிக்காத மூன்று தத்வங்கள் உள்ளனவே -அஹங்காரம் மஹான் பிரகிருதி -மூன்றிலும் -சுருங்கிய இருக்கும் இவை -அத்தை விரிக்கிறார் பெருமாள் மேலே
பஞ்சீ கரண பிரயுக்தமான ரூபத்வத்தாலே கண்ணுக்கு விஷயம் ஆகையாலே
அப்ரத்யஷம் என்கைக்கும் சேராது
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே -என்றார் இறே கீழே
இது தன்னை -அண்டாந்தர வர்த்தி நச சாகாசச்ய த்ரிவ்ருத கரணோபதேச
ப்ர தாசித பஞ்சீ கரனேன ரூபவதத வாச சஷூ ஷதவே பய விரோத -என்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் –2–2–23-ஸூ த்ர ஸ்ரீ பாஷ்யம் /
சாந்தோக்யம் த்ரிவிக்ரணம் தேஜா அபு அன்னம் மூன்றும் தானே அதனாலே உபலக்ஷணம் பஞ்சீ கரணம் என்கிறார் -அப்ரதிக்ஷம் என்று சொல்ல முடியாது –

——————————————

சூர்ணிகை -133-

வாயுவும் பிரத்யஷம் அன்று
ஸ்பர்ச அனுமேயம் என்று இ றே அவர்கள் சொல்லுவது
அத்தையும் நிராகரிக்கிறார் –

த்வக் இந்த்ரியத்தாலே
தோற்றுகையாலே
வாயு அப்ரத்யஷம் என்கிற
அதுவும் சேராது –

அதாவது
ஜ்ஞான இந்த்ரியங்களில் ஏதேனும் ஒன்றுக்கு
கோசரம் ஆனபோதே பிரத்யஷம் சித்திக்கையாலே
த்வக் இந்த்ரியத்தாலே தோற்றுகிற வாயுவை
அப்ரதியஷம் என்ன ஒண்ணாது -என்கை –
கண்ணுக்கு முன்னால் என்ற அர்த்தமானாலும் ஐந்துக்கும் உப லக்ஷணம்

————————————

சூர்ணிகை-134-

இனி பரஸ்பர விலஷண ஸ்வ பாவங்களான பூத விசேஷங்களில்
ஜ்ஞாதவ்ய அம்சங்களை அருளிச் செய்கிறார் –

தேஜஸ் ஸூ
பௌ மாதி பேதத்தாலே
பஹூ விதம் –
பவ்மாக்னீ பூமியில் இருந்து தோற்றுவதால்

அதாவது –
பௌமம திவ்யம் ஔதார்யம் ஆக்ரஜம்-என்கிற
பேதத்தாலே அநேக விதமாய் இருக்கும் -என்கை
பார்த்திவ மாத்ரேந்தமான தேஜஸ் ஸூ பௌமம் –இந்தநம் -விறகு எண்ணெய் போன்றவை பிருத்வியில் இருந்தே -அதாவது–தீபாதி
ஜல மாத்ரேந்தமான தேஜஸ் ஸூ திவ்யம் அதாவது ஆதித்யாதி
பார்த்திவ ஜலமாத்ரேந்தமான தேஜஸ் ஸூ ஔதர்யம்–மண் நீர் இரண்டையும் -ஜாடராக்கினி -தீர்த்தமும் அன்னம் இரண்டும் வேண்டும் -அதாவது ஜாடாராக்னி
நிரிநதமான தேஜஸ் ஸூ ஆக்ரஜம் -அதாவது -ஸூ வரணாதி–மண்ணோடு மண்ணாக இருந்து ஒளி விடுமே -தங்கம் போன்றவை

—————————————————-

சூர்ணிகை –135-

இதில் ஸ்த்திர அஸ்த்திர விபாகம் பண்ணுகிறார் –

அதில் ஆதித்யாதி
தேஜஸ் ஸூ ஸ்திரம்
தீபாதி தேஜஸ் ஸூ
அஸ்திரம் —

சிரகால வர்த் தித்வத்தாலே ஆதித்யாதி தேஜஸ் ஸூ ஸ்திரம் என்கிறது-நித்யம் இல்லை நீண்ட காலம் -சிரஞ்சீவி சிர காலம் -நிறைய என்றவாறு –
ஷிபர விநாசித்வத்தாலே தீபாதி தேஜஸ் ஸூ அஸ்தரம் -என்கிறது –
லலிதா சரித்திரம் திரி தூண்ட ரிஷியாக பிறந்ததே -எலி திரியை தூண்ட புண்ணியம் பெற்றதே –

——————————-

சூர்ணிகை -136-

தேஜஸ் ஸூ க்கு
நிறம்
சிவப்பு
ஸ்பர்சம்
ஔஷண்யம்-

தேஜஸ் ஸூ க்கு நிறம் சிவப்பு இத்தாலே-
தேஜ பதார்த்தங்களிலே வர்ண பேதம்
பதார்த்தாந்தர சம்சர்கஜம் என்கை// கண்ணாடி சம்பந்தத்தால் வேறே நிறமாக தெரியுமே -வாயு செலுத்தி -நீளமாக தெரியும் –
ஸ்பர்சம் – ஔஷண்யம்-இத்தாலே
உஷ்ண ஸ்பர்சம் சீத ஸ்பர்சம் அனுஷணாசீத ஸ்பர்சம் -என்கிற
த்ரிவித ஸ்பர்சத்தாலும் இதுக்கு ஸ்பர்சம் ஔஷண்யம் என்கை –
இது தான் தேஜ பதார்த்தங்களான ஸூர்வணாதிகளில் பலவத் சஜாதீய த்ரவ்யங்களாலே
அபிபூதம் ஆகையாலே தோன்றாது—மண்ணுடன் சேர்ந்த தங்கத்தில் தொற்றாது மண் பலவான் தானே -தங்கம் கொஞ்சம் தானே -அதனால் உஷ்ணம் -மறைக்கப் பட்டு இருக்கும்

———————————————–

சூர்ணிகை -137-

ஜலத்துக்கு நிறம்
வெளுப்பு
ஸ்பர்சம் சைத்யம்
ரசம் மாதுர்யம்

ஜலத்துக்கு நிறம் வெளுப்பு -இதுக்கு ஸ்வாபாவிக வர்ணம் இது
வர்ண பேதம் வந்த விடம் ஔபாதிகம்–உபாதை சம்பந்தத்தால் –
ஸ்பர்சம் சைத்யம் -இத்தால் த்ரிவித ஸ்பர்சத்திலும் இதுக்கு உள்ளது என்கை
ஆகையால் இதுக்கு ஸ்பர்ச பேதம் யுண்டாகிறதும் அந்ய -சம்சர்கத்தாலே
ரசம் மாதுர்யம் -இத்தால் இதுக்கு ஸ்வா பாவிக ரசம் இது
ரசநாதரபத்தி சம்சர்கஜம் என்கை —
சுவை அற்றது வர்ணம் அற்றது தண்ணீர் என்பர் -விஞ்ஞானிகள் இப்பொழுது அவர்களே மாற்றி -சொல்கிறார்கள் —

———————————-

சூர்ணிகை -138-

பூமிக்கு
நிறமும்
ரசமும்
பஹூ விதம் –

அதாவது -லோகத்தில் காணப் படுகிற
நாநாவித வர்ண ரசங்களுக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானம் இது -என்கை –

—————————————-

சூர்ணிகை -139-

ஸ்பர்சம்
இதுக்கும்
வாயுவுக்கும்
அனுஷணா சீதம்-அனுஷ்ன அஸீதம் இரண்டும் அற்ற தன்மை

அதாவது
திரிவித ஸ்பர்சத்திலும் வைத்துக் கொண்டு இவற்றுக்கு ஸ்பர்சம் இது என்கை
ஆகையால் இவற்றிலும் காதாசித்கமாக காணப் படுகிற ஸ்பர்ச பேதமும் ஔபாதிகம்-

——————————————

சூர்ணிகை -140-

இப்படி
அசித்து
மூன்று படிப் பட்டு
இருக்கும் –

இப்படி என்று
சிம்ஹாவ லோகன ந்யாயத்தாலே
முன்பு அருளிச் செய்தவற்றை எல்லாம்
கடாஷித்து
அனுபாஷித்துக் கொண்டு
அசித் தத்வ உபன்யாசத்தை
நிகமித்தார் ஆயிற்று –

—————————————-

ஆக
பிரதமத்திலே
அசித்து ஜ்ஞான சூன்யமாய் விகாராச பதமாய் இருக்கும் -என்று அசித்தின் யுடைய லஷணத்தைச் சொல்லி
அநந்தரம்
அது தான் சுத்த சத்வம் ஆதிபேதன திரிவிதமாய் இருக்கும் படியைச் சொல்லி
உத்தேச க்ரமத்தில்
பிரதமம் சுத்த சத்வம் ஆகிற அசித்தினுடைய பிரகாரத்தைச் சொல்லி
தத் அநந்தரம்
மிச்ர சத்வம் ஆகிற அசித் விசேஷம் இன்னது என்றும்
அது தான் சதுர் விம்சதி தத்வமாய் இருக்கும் என்றும்
அதில் பிரதம தத்வம் இன்னது என்றும்
அந்த தத்தவத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்கள் இருக்கும் படியையும்
அதில் நின்றும் தத்வாநதரங்கள் உத்பன்னம் ஆகைக்கு ஹேது அதனுடைய குண வைஷம்யம் என்றும்
அந்த குணங்கள் தான் இன்னது என்றும்
அவை தான் அதுக்கு அவி நாபூதங்களாய
அதனுடைய அவஸ்தா பேதங்களால் அனுத் பூதங்களாயும்
உத் பூதங்களாயும் இருக்கும் என்றும் அவைதான் கார்யனுமேயங்கள் என்றும்
அவற்றின் யுடைய வைஷம்ய பிரயுக்தமான மஹதாதி தத்வ உத்பத்தி க்ரமத்தையும் சொல்லி
அநந்தரம்
இப்படி உத் பன்னங்களான தத்வங்களின் யுடைய சமுதாய கார்யமான அண்ட உத்பத்தியையும்
அந்த அண்டத்துக்கு உள்ளில் சமஷ்டி புருஷ சதுர் முக உத்பத்தியையும்
ஈஸ்வரன் சமஷ்டி வ்யஷ்டி பதார்த்தங்களை அத்வாரமாகவும் சத்வாரமாகவும் நின்று
சிருஷ்டிக்கும் படியையும் சொல்லி
அநந்தரம்
அண்டங்களின் யுடைய பஹூத்வத்தையும்
அவற்றின் யுடைய கட்டளையையும்
அவை தான் ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்கள் என்னுமத்தையும்
அவற்றின் யுடைய உத்பத்தி பிரகாரத்தையும் சொல்லி
அநந்தரம்
ஆகாசாதி பூதங்களுக்கு தனித் தனியே யுண்டான விநியோகத்தையும்
ஜ்ஞான கர்ம இந்த்ரியங்களுக்கும் உபயாதமகமான
மனசுக்கும் யுண்டான வ்ருத்தி பேதத்தையும்
ஆகாசாதிகளுக்கு சப்தாதிகள் பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியையும்
அவற்றுக்கு குண விநிமயம் வருகைக்கு ஹேதுவையும்
குணாதிக்யத்துக்கு ஹேதுவையும் சொல்லி
இப்படி மிச்ர சத்வத்தின் யுடைய பிரகாரத்தை விஸ்தரேண உபபாதித்து
அநந்தரம்
இதனுடைய பரிமாணங்களுக்கு ஹேதுவாய் இருந்துள்ள
சத்வ சூன்யம் ஆகிற அசித் விசேஷத்தையும்
சங்க்ரஹேண சொல்லி
அநந்தரம்
ஏதத் பூர்வ உக்தமான அசித் த்வயத்தின் யுடைய பரிணாமங்களையும் சொல்லி
ஏதத் தர்ச நைகதேசிகள் யுடைய
கால விஷய பிரதிபத்தி பேதத்தையும் காட்டி
அநந்தரம்
கீழ்ச் சொல்லப் பட்ட வற்றில்
பாஹ்ய குத்ருஷ்டிகள் யுடைய விப்ரபத்தி பிரகாரங்களையும்
அவை தான் அயுக்தம் என்னும் இடத்தையும் சொலி
அநந்தரம்
பரஸ்பரம் விலஷணமான பூத விசேஷங்களில் ஜ்ஞாதவ்ய அம்சங்களையும் தர்சிப்பித்து
இப்படி அசித் த்ரயத்தின் யுடைய பிரகாரத்தையும்
அருளிச் செய்து தலைக் கட்டினார் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை –77-101— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 20, 2017

சூர்ணிகை -77-