Archive for October, 2017

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-9-

October 21, 2017

எம்மா வீடு பிரவேசம் –
ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

—————————————

சர்வ பிரகார விசிஷ்டமான மோக்ஷத்திலும் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் -என்று அபேக்ஷிக்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -எவ்வகைப்பட்ட உத்க்ருஷ்டமான மோக்ஷ பிரகாரமும் சொல்லோம்
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்-உன்னுடைய சிவந்த உத்தேச்யமான திருவடித் தாமரைகளை தலையிலே கடுக சேர்க்க வேணும்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே–துதிக்கை முழுத்தும் படி அழுந்தின ஆனையினுடைய துக்கத்தைப் போக்கினை மஹா உபகாரகனாய்
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே-இவ்வபத்தானத்தைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியே உனக்கு அடியேனான நான் –
ஏன் ஸ்வரூபத்துக்குத் தகுதியான பலமாக வேண்டி இருப்பது இதுவே
-புருஷன் அர்த்தித்து அன்றோ புருஷார்த்தம் என்று கருத்து –
ஒல்லை -சடக்கென / கைம்மா -ஆனை/ஒல்லை கைம்மா என்று கூட்டவுமாம்
செப்பம் -செப்போம் அன்றியே செப்பம் -என்று செவ்விதாம் என்றாய் மோக்ஷ பிரகாரம் எல்லாம் செவ்விதாகை யாவது -திருவடிகளில் சேர்த்தி என்றாகவுமாம் –

——————————————————–

அநந்தரம் இந்த சம்பந்த விஷயமான ஞானத்தைத் தந்து அருள வேணும் -என்கிறார் –

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

என்மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்–எனக்கு இந்த ருசி ஜனகமான -கருமையும் செறிந்த ஒளியையும் உடைத்தான
மாணிக்கம் போன்ற வடிவு அழகையுடைய என் ஸ்வாமியே
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் -உன்னை நான் எக்காலத்திலும் கொள்ளும் பிரயோஜனம் இதுவே -ஏது என்னில்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்கைதா -பெறுதற்கு அறிய உன் திருவடிகளை நான் பெறுதற்கு ஈடான தெளிவாகிற ஞானக் கையை தர வேணும்
காலக் கழிவு செய்யலே –கால விளம்பம் பண்ணாதே கொள்-
ஞானத்தைக் கை என்றது தமக்கு ஆலம்பனம் ஆகையாலே –

————————————————–

அநந்தரம் அவ்வறிவுக்கு ஈடாக ஆபத்தசையிலும் உன்னை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் -அக்ருத்ய கரணாதிகளான தீ வினைகளை செய்யாதே கொள் என்று
என் பக்கலிலே கிருபா கார்யமான நியமனத்தை பண்ணுகைக்கு உறுப்பாய்
என்கையார் சக்கரக் கண்ண பிரானே–திருக் கையோடு பொருந்தின திருவாழியை யுடையனாய் -கிருஷ்ணனாக ஸுலப்யத்தாலே உபகரித்தவனே
ஐயார் கண்டம் அடைக்கிலும் -ஐயாலே நிறைந்த கண்டமானது யுக்தி சாமர்த்தியம் இல்லாத படி நிரவிவரமாகிலும்
நின் கழல்எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –விரோதி நிவர்த்தகனாய் ஸூலபனாய் ப்ராப்தனான உன் திருவடிகளை
இளைப்பற்று ஏத்தும்படி எனக்கே அசாதாரணமாக கிருபை பண்ணி அருள வேணும் –
ஐ -ஸ்லேஷமா –

—————————————

அநந்தரம் காயிகமாயும் மாநஸமாயும் வாசிகமாயும் உள்ள பகவச் சேஷத்வத்தை -கீழ் மூன்று பாட்டிலும் அனுசந்தித்து –
இதில் பிரதானமான ததேக பாரதந்தர்யத்தை ப்ரயோஜன தயா நிஷ்கர்ஷிக்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று -எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய் என்று அருளிச் செய்து -அவ்வளவில் நில்லாதே
என்மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி–என் மனஸ்ஸூக்கே வந்து –விச்சேதம் இல்லாத படி நிரந்தர வாசம் பண்ணி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–பிறருக்கும் அன்றியே எனக்கும் அன்றியே எனக்கும் தனக்கும் கூட்டு அன்றியே தனக்கே பரதந்த்ரனாம் படி என்னை அங்கீ கரிக்கும் இதுவே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -எனக்கு அனுரூபமாக கிருஷ்ணனை நான் அபேக்ஷிக்கும் பிரயோஜனம்
சிறப்பு -பிரயோஜனம்-

————————————–

அநந்தரம் இப்பாரதந்தர்ய ப்ரகாசகனான ஈஸ்வரனை மறவாது ஒழிகை யாகிற உகப்பைப் பெற வேணும் -என்கிறார் –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

இறப்பில் -சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்- -இச் சரீரத்தை விட்ட அளவிலே -ஆனந்தமாகிற நன்மையில் யான மோக்ஷம்
ஸூக ஆபாசமான சுவர்க்கம் -துக்கை கதாநமான நரகம் ஆகிற இவற்றை
எய்துக எய்தற்க – தேஹாத் பரனாய்க் கொண்டு போய்க் கிட்டவுமாம் -தேஹம் தான் என்றாய் இவற்றைக் கிட்டாதே முடிந்து விடவுமாம்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை-தனக்குப் பிறவிக்கு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே-பஹுதாவாக பிறக்கக் கடவனான சர்வேஸ்வரனை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –இவ்வாதாரத்தாலே ஆஸ்ரிதரை நித்ய பரதந்த்ரர் ஆக்கின குண சேஷ்டிதங்களை ஒன்றையும் மறவாதே –
என்றும் அவிஸ்மரணத்தால் வந்த ஆனந்தத்தை உடையேனாக வேணும் –
கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –

———————————————————-

அநந்தரம் இந்த ஆந்திர அனுபவம் அடியாக பாஹ்ய அனுபவத்தை அபேக்ஷிக்கிறார் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்–ஸூக பிரசுரமான தேவதா வர்க்கம் -ஞான பிரகாச யுக்தமான மனுஷ்ய வர்க்கம் -பிரகாச ரஹிதமான திர்யக் ஸ்தாவரங்கள்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே-தேஜஸ்விதையால் வந்த உகப்பை உடைத்தான் ஜ்யோதி பதார்த்தங்களாய்க் கொண்டு
பஹுஸ்யாம் என்கிற கணக்கிலே விஸ்திருதனான ஸ்வாமியானவனே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு -உன் பக்கல் ஆபிமுக்யத்தாலே ப்ரீதி யுக்தமான நினைவையும் உக்தியையும் கிரியையும் கொண்டு
என்றும்-சர்வ காலமும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு நான் -இக்கரணத்ரய வியாபாரத்தை யுண்டாக்கிக் தந்த உன்னை
அனுபவிக்கும் படி எழுந்து அருளி வர வேணும் –
உலோகம் அலோகம் -என்று சேதன அசேதனங்கள் ஆகவுமாம்-

———————————————————–

அநந்தரம் -ஆந்திர அனுபவம் ஆராமையாலே ச விஷாதமாக பாஹ்ய அனுபவ அபேக்ஷை பண்ணுகிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

உன்னை என்னுள் வைப்பில் என்றும்-ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –நித்ய அனுபாவ்யனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாக வைக்கும் இடத்தில் -அமையும் என்னா தபடி எனக்கு அதிருப்திகரனாய் -எல்லா நாளிலும் எல்லாப் போதிலும்
யுன் திருப்பாத மலர்க்கீழ்–ப்ராப்தனான உன்னுடைய சிலாக்யமாய் போக்யமான திருவடிகளிலே-பரதந்த்ரனாய்க் கொண்டு
பேராதே நான் வந்தடையும் படி தாராதாய் வாராய் -விஸ்லேஷ ரஹிதனாம் படி நான் வந்து கிட்டுக்கைக்கு அவகாசம் தாராதவனே
யுன் திருப்பாத மலர்க்கீழ்-பேராதே நான் வந்தடையும் படி நான் அப்படி கிட்டும்படி –
வாராய் –வந்து அருள வேணும் –

—————————————————————–

அநந்தரம் அல்ப கால அனுபவம் பெறிலும் அது ஒழிய வேறு ஒன்றும் வேண்டா என்கிற அத்யபிநிவேசத்தை அருளிச் செய்கிறார் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

மிக்கார் வேத விமலர் விழுங்கும் -அதிசயித ஸ்வ பாவராய் வைதிக அக்ரேஷரான நிர்மலரானவர்கள்
தங்கள் ஆதார அதிசயத்தாலே கபளீ கரித்து- அனுபவிக்கும் கணக்கிலே
என்-அக்காரக் கனியே — எனக்கு அக்காரம் தோய்ந்த கனி போலே போக்கிய பூதனானவனே
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் -ஏதேனும் அல்ப காலத்திலேயே யாகிலும் எனக்கு ஸ்வாமியான ஆகாரம் தோன்றும்படி
என் நெஞ்சிலே பிரகாசிப்பித்து நிற்கப் பெறில்
மற்று-எக்காலத்திலும் யாதொன்றும் உன்னை யானே வேண்டேன்-இது ஒழிய எல்லாக் காலத்திலும் ஏதேனும் ஒன்றையும் உன்னை நான் அபேக்ஷியேன்

—————————————————————

அநந்தரம் -சம்பந்தம் அப்ருதக் ஸித்தமாய் இருக்க அநாத்ய ஞானத்தால் அஹங்கார மமகார தூஷிதனாய் இழந்தேன் -என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

யானே என்னை யறியகிலாதே-நான் தானே என் விஷயத்திலே யாதாத்ம்ய ஞானம் இல்லாமையாலே
யானே என்தனதே என்று இருந்தேன்-நான் ஸ்வ தந்த்ரனே யாகவும் என்னை ஒழிந்தவை என் உடைமையாகவும் –
அஹங்கார மமகாரங்களைப் பண்ணி முடிந்து போகாதே ஆத்ம நித்யத்வமும் அநரத்த அவஹாம் படி இருந்தேன் –
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –இவ்வறிவு கேடு இன்றியிலே யாதாத்ம்ய ஞானம் நடையாடும் பரமபதமாக –
உன்னுடைய சம்பந்தத்தை ஏத்தும்படி அங்குள்ளார்க்கு சேஷியான செருக்குத் தோன்ற இருக்குமவனே –
அர்த்த ஸ்திதி உணர்ந்தால்
யானே நீ என்னுடைமையும் நீயே-நான் நீயே என்னலாம்படி அபிருத்தாக் சித்த பிரகார பூதனாய் இருப்பன் –
என்னுடைமையானவையும் உனக்கு அப்படியே பிரகாரமாய்க் கொண்டு நீயே எண்ணலாம் படியாய் இருக்கும் –

——————————————-

அநந்தரம் அந்த சம்பந்தம் குலையாதபடி என்னைக் காய் விடாது ஒழிய வேணும் -என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

ஏறேல் ஏழும் வென்று –ஏன்று கொண்ட ஏறு ஏழையும் வென்று
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த -அழகை யுடைத்தானா இலங்கையை பஸ்ம சாத்கரித்ததாலே
நெடுஞ்சுடர்ச் சோதி-மிக்க தேஜஸ்ஸை யுடையனான உஜ்ஜ்வல விக்ரஹனே
தேறேல் என்னை -என்னை எனக்கு நன்மை அறிவன் என்று விஸ்வசியாதே
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை-உன்னுடைய உஜ்ஜவலமான திருவடிகளிலே சடக்கென சேர்த்து
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –விஷயாந்தரங்களை நினைத்து வேறு போகும்படி எல்லாக் காலத்திலும் விடாது ஒழிய வேணும்
விதி நிர்மிதமான இந்த அன்வயத்தைப் பாலனம் பண்ணி விடாது ஒழிய வேணும் -என்று கருத்து –

—————————————————–

அநந்தரம் இத்திருவாயமொழி மோக்ஷ ஆனந்த ப்ரதம் என்று பலத்தை அருளிச் செய்கிறார்

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

விடலில் சக்கரத் தண்ணலை -விடுதல் இல்லாத திருவாழியை யுடைய ஸ்வாமியை
அப்படியே
மேவல்-விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-மேவி விட ஷமர் அல்லாத மஹா உதாரரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
இதில் அந்வயித்தார்க்கு
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்-அனர்த்தம் வாராதபடியான ஆயிரத்துள் இவை பத்தும்
கிளர்வார்க்கே – சாதரமாகச் சொல்ல வல்லவர்களுக்கு
இது தானே
கெடலில் வீடு செய்யும்-அவித்யாத்ய அநர்த்த கந்த ரஹிதமான மோக்ஷ ஆனந்தத்தை பண்ணிக்க கொடுக்கும்
கிளர்தல் -சொல்லுதல் -கிளர்த்தியாய் உத்யோகமாகவுமாம்
இது கலி விருத்தம் –

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-9-

October 21, 2017

எம்மா வீடு பிரவேசம் –
நலமந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்-2-8-4- -என்ற ப்ராப்ய பிரசாங்கத்தாலே ஸ்வ அபிமதமான புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்து அத்தை பிரார்த்திக்கிறார் –

—————————————

முதல் பாட்டில் சர்வ பிரகார விசிஷ்டமான மோக்ஷத்திலும் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்று அபேக்ஷிக்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எத்தனையேனும் உத்க்ருஷ்ட புருஷார்த்தமான ஸ்ரீ வைகுண்டத்திலும் எனக்கு அபேக்ஷை இல்லை -மற்று எதில் அபேக்ஷை யுள்ளது எண்ணில்
உன்னுடைய அழகிய திருவடி மலர்களை என் தலையிலே வைத்து அருள வேணும் -அது செய்து அருளும் இடத்து
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு செய்து அருளினால் போலே வந்து செய்து அருள பற்றாது –
செய்து கொண்டு நிற்க வேணும் -இதே அடியேன் வேண்டுவது -என்கிறார்-

——————————————————————–

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

எற்றைக்கும் இதுவே நான் உன் பக்கல் கொள்ளும் ப்ராப்யம் -பக்தி யோகத்தால் அல்லது சித்திக்குமோ என்னில்
அந்த பக்தி யோகம் தன்னையும் நீயே ஈண்டெனத் தந்து அருள வேணும்-என்கிறார் –

——————————————–

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

உன் கையும் திருவாழியுமாய் இருக்கிற அழகைக் காட்டி வ்யதிரிக்த விஷயத்தில் ப்ராவண்யத்தைத் தவிர்த்து உன் திருவடிகளில் என்னை ப்ரவணம் ஆக்கினவனே –
உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார் –

———————————————

தம்மை அடிமை செய்வித்துத் கொள்ளும்படியை எம்பெருமானைக் கற்பிக்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

சர்வ காலமும் எனக்கே அடிமை செய் -என்று திருவாயாலே அருளிச் செய்து -ஒரு க்ஷணம் மாத்திரம் ஒழியாமே என் நெஞ்சிலே புகுந்து இருந்து அருளி
தாம் சாத்தி அருளும் சாந்து சந்தனம் திருமாலை திருப் பரிவட்டங்கள் போலே
என்னைத் தனக்கே சேஷமாகக் கொள்ளும் இதுவே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பு -என்கிறார் –

————————————————————

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

தேகமே ஆத்மாவாகலாம் -தேஹாதிரிக்தமாய் நித்ய சித்த- ஞான குணமான அஹம் அர்த்தமே ஆத்மாவாகலாம் -அதிலொரு ஆதாம் இல்லை –
கர்ம நிபந்தமான ஜென்ம ரஹிதனாய் வைத்து ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக தேவ மனுஷ்யாதி ரூபேண வந்து பிறந்து அருளும் ஸ்வ பாவனாய் இருந்த
எம்பெருமானுடைய சர்வ திவ்ய அவதாரங்களையும் சர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் சர்வ கல்யாண குணங்களையும்
மறவாதே என்றும் அனுபவிக்கப் பெற வேணும் -என்கிறார் –

——————————————————-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

பரம காருண்யத்தாலே இஜ்ஜகத்தை எல்லாம் படைத்து அருளினவனே -என்னுடைய சர்வ கரணங்களாலும் சர்வ காலமும்
த்வத் அனுபவ ஏக ஸ்வ பாவனாய்க் லோடு உன்னை அனுபவிக்கும்படி வந்து அருள வேணும் -என்கிறார் –

———————————————————-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

உன்னுடைய நிரவதிக போக்யதையை எனக்கு காட்டி வைத்து உன்னை பஜிக்கத் தாராது இருக்கிற நீ
சர்வ காலமும் உன் திருப் பாத மலர்க கீழ் பேராதே யான் வந்து அடையும்படி பிரானே வாராய் -என்கிறார் –

———————————————–

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எக்காலமும் என்னை எல்லா அடிமையும் செய்வித்துத் கொண்டு என்னுள்ளே மன்னில் உன்னைப் பின்னை
ஒரு காலமும் ஒன்றும் அபேக்ஷிக்கிறிலேன்-என்று கொண்டு
எம்பெருமானை அபேக்ஷித்து பின்னையும் எம்பெருமானுக்கு அடிமை செய்கையில் உள்ள ஸ்ப்ருஹஹையாலே –
எம்பெருமானை உள்ளபடி கண்டு அனுபவிக்கிற மஹாத்மாக்கள் ஆரோ -என்கிறார் –

———————————————

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

நானும் என் உடைமையும் உனக்கே அடிமையாய் இருக்கச் செய்தே-இதுக்கு முன்பு போன காலம் எல்லாம் உனக்கு அடிமை என்னும் இடத்தை அறியாதே
நான் என்றும் என்னுடையது என்றும் உண்டான ஸ்வாதந்த்ரய அபிமானத்தாலே நஷ்டனானேன் என்று –
தம்முடைய இழவை அனுசந்தித்து அத்யந்தம் அவசன்னராய் -ஸ்வ பாவத ஏவ அஸ்கலித ஞானராய்
ஒரு க்ஷணம் மாத்ரமும் எம்பெருமானை இழவாதே திரு நாட்டிலே இருந்து அனுபவிக்கிறவர்கள் ஆரோ -என்கிறார் –

—————————————————–

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

இந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு பிரதிபந்தகங்கள் உளவே என்னில்-அவற்றை எல்லாம் நப்பின்னைப் பிராட்டிக்கு அசோக வனிகையில் பிராட்டிக்கு
உன்னோடு ஸம்ஸலேஷிக்கைக்கு பிரதிபந்தகங்களை நீயே போக்கினால் போலே போக்கியருளி -உன் திருவடிகளிலே என்னை ஈண்டெனச் சேர்த்து அருளி
உன் திருவடிகளில் திவ்ய ரேகை போலே பின்னை ஒரு காலமும் உன்னைப் பிரியாததொருபடி பண்ணியருள வேணும்
இப்படி இச் க்ஷணமே செய்து அருளாவிடில் ஒன்றும் தரியேன் -என்கிறார் –

—————————————————–

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

இப்படி ஆழ்வார் அபேக்ஷிக்க -அபேக்ஷித்தபடியே திருமலையில் புகுந்து அருளி ஆழ்வாரோடு திருவாழி ஆழ்வானோடு ஸம்ஸலேஷித்தால் போலே
ஒருக்காலும் பிரியாதபடி ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைச் சொன்ன இத்திருவாய் மொழி வல்லார் ஆழ்வார் பெற்ற பேறு பெறுவார் -என்கிறார் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –எட்டாம் -இறுதி பாகம் –ஸ்ரீ வ்ரஜ பூமி / ஸ்ரீ வடமதுரை / ஸ்ரீ கோகுலம்-திருவாய்ப்பாடி /ஸ்ரீ நந்தகிராமம் -நந்தகாவ் /ஸ்ரீ கோவர்த்தனம் / ஸ்ரீ பிருந்தாவனம் -மஹாத்ம்யங்கள் —

October 20, 2017

ஸ்ரீ வ்ரஜ பூமி மஹாத்ம்யம் –
தூய யமுனையின் இரு கரையிலும் தில்லிக்கு -100-மைல் தெற்கேயும் பறந்து விரிந்த பூமி -ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி தேர்ந்து எடுத்துக் கொண்டு அருளிய ஸ்தலம்
-168-மைல் விஸ்தாரமான க்ஷேத்ரம் –திருவவதார ஸ்ரீ மதுரா -/ வளர்ந்த ஸ்தலமான திருவாய்ப்பாடி -கோகுலம் மற்றும் நந்தகிராமம் /
சேஷ்டிதங்கள் புரிந்து அருளிய ஸ்ரீ பிருந்தாவனம் /ஸ்ரீ கோவர்தனம் -ஸ்ரீ பர்ஸானா -ஸ்ரீ காம்யவனம் போன்றவை உள்ள க்ஷேத்ரம் –
வ்ரஜதி -என்றால் செல்லுதல் திரிதல் -மாடு கன்றுகள் ஆயர்களுடன் திரிந்த பூமி
புண்யா பத வ்ரஜபுவோ யதயம் ந்ருலிங்க கூட புராண புருஷ வன சித்ர மால்ய
கா பாளையன் சக பல க்வணயம் ச வேணும் விக்ரீட யாஞ்சதி கிரித்ர ரமார்சி தாங்க்ரி –ஸ்ரீ மத த் பாகவதம் -10–44–13-திருவடி சம்பந்தத்தால் புண்ய பூமியாயிற்று
கிம் த்வம் வ்ரஜே ஷூ நவநீதம் அஹோவ்யமுஷ்ணா என்றும் ரிங்காத வ்ரஜ சதனாங்க ணேஷூ கிம்தே -என்றும் ஸ்ரீ கூரத் தாழ்வான் வியந்து அருளிச் செய்கிறார் –
ருக்வேதமும் முதல் மண்டலத்தில் -தா வாம் வாஸ்தூன் யுஷ்மாசி க மத்யை யத்ர காவோ பூமி ஸ்ருங்கா அயாச
அத்ரஹ தாது ரூகா யஸ்ய வருஷ்ண பரமம் பதம் அவபாதி பூரி -என்று
ஸ்ரீ கிருஷ்ணன் திருப் புல்லாங்குழல் ஊதி பசுமாடுகளை ரஷித்து அருளிய வ்ரஜ பூமி மிகப் பெருமை வாய்ந்தது என்கிறது –

யமுனை –
கண்ணனின் கருமை நிறத்தோடும் கலந்து -வ்ரஜ பூமியில் ஓடுகிறது -காளிந்தீ காந்தி ஹாரீ த்ரிபுவனவபுஷ காளிமாகை டபாரே-ஸ்ரீ தேசிகன் –
அழகாலும் புனிதத்தன்மையாலும் நம் மனத்தையும் பாபங்களையும் திருடுகிறாள்-
யச்சதி இதி யமுனா -தைரியத்தை கொடுக்கிறபடியால் யமுனை /
யமயதி இதி யமுனா -உபரமதே நிவர்த்ததே பாபேபியா இதி யமுனா -பாபங்களில் இருந்து விலகி நம் பாபங்களை போக்குபவள் –
யச்சதி விரமதி கங்காயாம் -கங்கையில் சென்று பிரயாகையில் சேர்ந்து ஒய்பவள்
இவள் ஸூர்யனின் பெண் -யமனின் தன்மை -காளிந்தீ /சூர்யதனயா/ யமஸ்வஸா-என்ற வேறு பெயர்கள்
தூய பெரு நீர் யமுனை -ஆண்டாள் -கொப்பளித்த நீரை ஏந்தியபடியால் -முழங்கால் அளவு வற்றி கிருஷ்ண கைங்கர்யம் செய்ததாலும்
வஸூ தேவ வஹன் கிருஷ்ணம் ஜானு மாத்ர உதகம் யயவ் -ஸ்ரீ விஷ்ணுபுராணம் -திருவடியைப் பற்றினார்க்கு சம்சாரக் கடல் வற்றும் என்று உணர வைக்கவே
திருவேங்கடமுடையான் ஹஸ்த முத்திரையால் இதையே காட்டி அருள்கிறான் -கம்சன் மாளிகைக்கு அருகிலேயே இருந்தும் பயப்படாமல் ஸ்ரீ கிருஷ்ண கைங்கர்யம் -கோதாவரி போல் அல்லாமல் –
ஸ்ரீ மன் நாதமுனிகள் தங்கி ஈடுபட்டு -யமுனாச்சார்யர் என்று திருப்பி பேரனார் ஆளவந்தாருக்கு திரு நாமம் சாத்தினார்
யதிகட்க்கு இறைவன் யமுனைத்துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
தர்சன ஸ்தலங்கள்
1–யமுனைக் கரையில் ராசா மண்டலங்கள்
2–சமயமான / நாக தீர்த்தம் -வஸூ தேவர் கண்ணனைச் சுமந்து கொண்டு யமுனையைக் கடந்த இடம்
3–ராம் காட் -கோபித்து பலராமன் கலப்பையால் இழுத்து திசை மாற்றிய இடம்
யமுனையின் மேற்கு கரையில் ஸ்ரீ வடமதுரையும் கிழக்கு கரையில் ஸ்ரீ கோகுலமும் உள்ளன –

ஸ்ரீ வடமதுரை மஹாத்ம்யம்
மதுரா நாம நாகரீ புண்யா பாபஹரீ சுபா -புராண ஸ்லோகம் -யுகம் தோறும் சம்பந்தம் -மன்னு வடமதுரை –
க்ருத யுகத்தில் த்ருவன் யமுனையில் நீராடி நாரதர் இடம் உபதேசம் பெற்று தவம் புரிந்து பகவானை தரிசித்தான் இங்கேயே
த்ரேதா யுகத்தில் -மது என்னும் அசுரனின் மகன் லவணாசுரன்-துன்புறுத்த –தம்பி சத்ருக்னணனை அனுப்பி அழித்தான்-
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் இதற்கு மதுரா என்று பெயரிட்டு தானே ஆண்டு வந்தான் என்பதை உத்தர காண்டம் சொல்லும் –
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி -பெருமாள் திருமொழி –
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரீ த்வாரவதீ சைவ ஸப்த தைதா மோக்ஷதா யகா -ஸ்லோகம் படி முத்தி தரும் க்ஷேத்ரம் –

நம்மாழ்வார் -பத்து -7 -10-4–/-8–5–9-/-9–1–3-தொடங்கி -10-வரை குலசேகரர் -1-/
பெரியாழ்வார் -நான்கு–திருப்பல்லாண்டு -10-/பெரியாழ்வார் திருமொழி -3–6—3 /—4-7–9-/–4–10–8-/
ஆண்டாள் -ஏழு -திருப்பாவை -5-/ நாச்சியார் திருமொழி -4–5-/ -4–6-/-6-5-/-7–3-/-12–1-/ -12–10-/
திருமங்கை ஆழ்வார் -நான்கு -6-7-5-/ -6–8–10-/-9-9–10-/ சிறிய திருமடல் -40 கண்ணி-/
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -ஓன்று -திருமாலை 45-ஆகிய ஆறு ஆழ்வார்களால் -27-பாசுரங்களால் மங்களா சாசனம் –

மதுரையார் மன்னன் என்று பெயர் இடச் சொல்லி ஸ்வப்னத்தில் சாதித்த ஐதிஹ்யம் –
அஹோ மது புரீ தன்யா வைகுண்டாச்ச கரீயஸீ தினமேகம் நிவாஸேன ஹரவ் பக்தி ப்ரஜாயதே -வாயு புராணம் -பக்தி பிறக்கும் ஒரு நாள் தங்கினாலேயே
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகாதோ மதுராம் பூரிம்-

மதன ஆதார பூமி -அதாவது கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி
ப்ருது மஹா ராஜன் இவ்விடத்திலேயே பூமா தேவியிடம் இருந்து மக்கள் வாழ வேண்டிய சிறந்த பொருட்களை எல்லாம் கடைந்து எடுத்த படியால் இப்பெயர்
மத்யதே பாப ராசி யயா இ தி -எதனாலே மக்களின் பப்பட் கூட்டங்கள் கடைந்து அகற்றப் படுகிறதோ அதுவே மதுரா
இங்கு வசித்தாலும் -கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும் சம்சாரத் தளைகள் வஸூ தேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போலே விலகிப் போகும் –

தர்சன ஸ்தலங்கள் –
1–அக்ரூர காட் -அக்ரூரர் கண்ணனையும் பலராமனையும் தேரில் அழைத்துக் கொண்டு மதுரை வரும் போது கண்ணன் லீலை புரிந்து நதிக்கு உள்ளே சேவை சாதித்தான்
வெளியே ரத்தத்திலும் சேவை -இப்படி மாறி மாறி சேவை சாதித்து -தானே சர்வ வ்யாபி சர்வ நியாந்தா -என்று புரிய வைத்தான் –
இங்கு அக்ரூரருக்குஒரு கோயில் உள்ளது -யமுனை தற்காலத்தில் சற்று தள்ளி ஓடுகிறது –இந்த சரித்திரம் -ஸ்ரீ மத் பாகவதம் -10-39-/-40-விவரிக்கும்
2–ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி -சிறைச்சாலை -தந்தை காலில் விலங்கு அவிழ நான்கு தோளோடு எட்டாவது கர்ப்பமாய் பிறந்து ஜென்ம ரஹஸ்யம் வெளியிட்டு அருளி
அவர்கள் அதை மறக்கும் படி செய்தான் -பிறந்த அன்றே கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டு யோகமாயையை எடுத்து வந்தார்
இங்குள்ள புராதனமான திருக் கோயில் கண்ணனுடைய கொள்ளுப் பேரனான வஜ்ர நாபனாலே ஸ்தாபிக்கப் பட்டது
பல படை எடுப்புக்களுக்கு ஆட்பட்டு தற்போதுஉள்ள நிலை –
3–கேசவஜீ மந்திர் -ஜென்ம பூமிக்கு அருகில் உள்ள இக்கோயில் புராதனம் -கம்சனின் சிறை இவ்விடம் இருந்ததாக சொல்லுவார்கள்
இங்கு இருக்கும் மூர்த்தி பகவானுடைய -24-அவதாரங்களாலும் அலங்கரிக்கப் பட்டு இருக்கிறார்
4–போத்ரா குண்ட் -ஜென்ம பூமிக்கு அருகில் வஸூ தேவரும் தேவகியும் துணி துவைத்த இடம் –
பவித்ரா குண்டம் என்னும் சொல் சிதைந்து போத்ரா குண்ட் என்று கூறப்படுகிறது
5–கம்ச டீலா / ரங்க பூமி -முஷ்டிக சாணூரர்கள் இடம் பொருத ஸ்தலம் -கம்சனையும் கீழே இழுத்துத் தள்ளி கொன்ற ஸ்தலம் –
அஞ்சலகத்துக்கு அருகே இவ்விடம் தற்போது அமைந்துள்ளது-
6— ஆதி வராஹர் சந்நிதி -புராதனமான மதுரா ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் -இங்கு இருக்கும் ஸ்ரீ வராஹ மூர்த்தி கபில முனிவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு
பின்பு திரு அயோத்தியில் இருந்து ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது
7–த்வரகாதீசன் சந்நிதி -150-ஆண்டுகளுக்கு முன்பு வல்லபாசார்ய ஸம்ப்ரதாயத்தாரால் கட்டப்பட்டது -ருக்மிணீ சத்ய பாமையோடு எழுந்து அருளி இருக்கும் கண்ண பிரான் –
ஸ்ரவண மாதத்தில் மிகப் பெரிய உத்சவம் –
8—சமயமன தீர்த்தம் -ஸ்வாமி காட் என்றும் சொல்லுவார் -இவ்வழியாகத் தான் கண்ணனைச் சுமந்து கொண்டு யமுனையை வஸூ தேவர் கடந்தார்
யமுனையில் உள்ள -24-துறைகளில் ஒன்றாகும்
9–விஸ்ராம் காட் –இதுவே நடுவாக விழுங்கும் காட் –
கண்ணன் கம்சனை முடித்து அந்திம கிரியைகளை துருவ காட்டில் நடத்தி வைத்து இங்கே வந்து நீராடி ஓய்வெடுத்தான்
கார்த்திகை ஸூக்ல பஷ த்விதீயை -எம த்விதீயை -அன்று தான் யமனின் தங்கை யமுனை பிறந்த நாள் –
அன்று நீராடினால் சம்சார நிவ்ருத்தி கிடைக்கும் -முன்பு ஸ்ரீ வராஹ பெருமாளும் இங்கே ஓய்வெடுத்ததாகச் சொல்லப்படுகிறது
10–துருவ டீலா -யமுனையின் மற்றொரு கரையில் இருக்கும் இதில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான் –
இத்தலத்தை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளலாம்
இது மது வனத்துக்குள் மஹாலி கிராமத்தில் பாதை சரியில்லாத இடத்தில் அமைந்துள்ளது –
11–தாள வனம் -தேனுகாசுரன் கழுதை வடிவு கொண்ட அசுரனை பலராமன் இங்கு தான் கொன்றார் -இக்காடு கிரைய பனை மரங்கள் நிறைந்து உள்ளன
ஞானம் அற்ற சம்சாரியே கழுதை -சுக துக்கங்கள் பொதி -சுமந்து பக்தி இல்லாமல் இருக்க -பகவான் அறிவின்மையை அழித்து நற்கதி அளிக்கிறான்
மதுரைக்கு தெற்கே -6-மைல் தொலைவில் உள்ள இவ்விடத்தில் பலராமன் கோயிலும் பலராமன் குண்டமும் உள்ளன –ஸ்ரீ மத் பாகவதம் -10-15-இதை விவரிக்கும்
12–மதுவனம் -மதுரைக்கு தேன் மேற்கே உள்ள இங்கு தான் க்ருத யுகத்தில் மது என்னும் அசுரனைக் கொன்று பகவான் மது சூதனன் என்ற பெயர் பெற்றான்
த்ரேதா யுகத்தில் மதுவின் மகனான லவணாசுரனை இங்கு தான் சத்ருன ஆழ்வான் கொன்றான் -அவனே வராஹ பெருமானுக்கு கோயில் அமைத்து ஆண்டு வந்தான்
இங்கு சத்ருக்ன ஆழ்வானுக்கு சந்நிதியும் மது குண்டமும் உள்ளன
த்வாபர யுகத்தில் கண்ணன் கற்றுக் கறைவைகளோடு இங்கு வந்து நாட்டியமாடி மகிழ்வான்
இங்கு த்ருவன் தவம் பண்ணிய சிறு குன்று கோயிலும் உள்ளன -லவணாசுரன் ஒளிந்து இருந்த குகையையும் காணலாம்
13–குமுதவனம் -தாளவானத்தில் இருந்து மேற்கே -2-மைல் தொலைவில் உள்ள இங்கு கோபிகளுக்கு குமுத மலர்களை கண்ணன் சூட்டி விடுவபானாம்
இங்கு தாமரை மலர்கள் நிறைந்த பத்ம குண்டத்தின் கரையில் கபில முனிவர் பல காலம் தவம் புரிந்தார் –

———————————————–

திருவாய்ப்பாடி -கோகுலம் மஹாத்ம்யம் –
விபவ அவதார பால்ய சேஷ்டிதங்கள் தன்னுள் கொண்டுள்ள அத்புத திவ்ய தேசம்
கோகுலம் -பசுக்களின் சமூகம் /கவாம் குலம் யஸ்மின் தத் கோ குலம் -பசுக்களின் கூட்டம் எங்கு இருக்கிறது அவ்விடமே கோகுலம் –
ஆய்ப்பாடி -ஆயர்கள் பாடி என்று கொண்டாடப்படும் -ஸ்ரீ கிருஷ்ணன் ஐந்து வயது வரை இந்குயே வசித்து –
பின்பு கம்சன் தொல்லை அதிகமான படியால் நந்த கிராமத்துக்கு குடி பெயர்ந்தார் –
காலோ வ்ரஜதால் பேந கோகுலே ராம கேசவ் ஜா நுப்யாம் ஸஹ பாணிப்யாம் ரிங்க மாணவ் விஜ ஹ்ரது –ஸ்ரீ மத் பாகவதம் -10–8–2-
முழந்தாள்களாலே திருக் கைகளை ஊன்றி தவழ்ந்தார்கள் –
ஸ்ரீ கூரத் தாழ்வானும் ரிங்காத வ்ரஜ சதனாங்க ணே ஷூ கிம் தே கோ யஷ்ட்டி கிரஹணவ ஸான்னு கோப கோஷ்ட்யாம் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –

பெரியாழ்வார் -பதின்மூன்று பாடல்களாலும் -1-1–2-/-1-1-4- /2-2-5-/-2-3-7-/-3-1-9-/-3-2–2-/-3-2–4-/-3-2–5-/-3–4–10-/-3-6-7-/
ஆண்டாள் –ஐந்து பாடல்களாலும் -திருப்பாவை 1-/நாச்சியார் -12-2-/-13–4-/-13-10-/-14-2-/
திருமங்கை ஆழ்வார் –ஏழு பாடல்களாலும்-1–8–4-/-5–5–6-/-5-9–8-/-11-5–2-/-11-5–3-/-11–5-4-/ சிறிய திருமடல் -28-கண்ணி /
ஆக மூவராலும் -25-பாடல்களால் மங்களா சாசனம் –

இத்திருத் தலத்துக்குள்ளேயே ஸ்ரீ கோவர்த்தனம் -நந்தகிராமம் பிருந்தாவனம் -காம்யவனம் ஆகிய இடங்களும் அடங்கியவை
1–பத்ரவனம் -இது யமுனைக் கரையில் நந்தகாட்க்கு இரண்டு மைல் தென் கிழக்கில் உள்ளது –
இங்கு தான் கன்றின் பின்னம்கால்களை சுழற்றி விளாங்கனி எரிந்து அருளினான்
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி -ஆண்டாள் –
2—பாண்டீர வனம் -பிரலம்பாசுரனைக் கொன்ற இடம் -இங்கு இருக்கும் வடவ்ருஷத்தருகில் பலநாள் ராஸக்ரீடை புரிந்துள்ளான் –
நம்பி மூத்த பிரானும் கண்ணனும் மெல்ல யுத்தம் இங்கே பயின்றார்கள் -ப்ரலம்பன் இடையர் வேஷம் பூண்டு ஆட்டத்தில் புகை பலதேவன் வென்ற பாண்டிவடம் –
இங்கு வேணு கூபம் என்னும் குளம் உண்டு -கோபியர்கள் கண்ணனுக்கு பசுவைக் கொன்ற தோஷம் வந்தது என்று சொல்லி புனித நீரில் குளிக்க கோபியர்கள் வேண்ட
அப்போது கண்ணன் தன் புல்லாங்குழலால் பூமியைக் குத்த எல்லா புனித நீர்களும் இந்த வேணு கோபத்தில் வந்து சேர்ந்தன –ஸ்ரீ மத் பாகவதம் -10–18-
3—மஹா வனம் -இவ்விடத்தில் தான் கோகுலம் உள்ளது குழந்தை பிராயம் கழித்த இடம்
4–ப்ரஹ்மாண்ட காட் -நந்த பவனத்துக்கு ஒரு மைல் கிழக்கே உள்ளது -கண்ணன் மண்ணை யுண்டு ஏழு உலகங்களையும் காட்டிய இடம்
யசோதா பிராட்டி தானம் கொடுத்து த்ருஷ்ட்டி கழித்தாள்-இதர அருகே யமுனை அழகாக ஓடுகிறாள்
5–உகல் பந்தனம் –வெண்ணெய் யுண்டு பிடிபட்டு உரலோடு கட்டுண்டதை இன்றும் காணலாம் -ஸ்ரீ மத் பாகவதம் -10–9-
6–நந்த பவனம் -நந்தன் திருமாளிகை பூதனை சகடாசுரன் நிரசித்த இடங்கள் –ஸ்ரீமத் பாகவதம் -10–6-/-7-
இதற்கு அருகில் குபேரனுடைய புதல்வர்கள் நள கூபரனும் மணிக்ரீவனும் அர்ஜுனன் மரங்களாக நிற்க நடுவே உரலை உருட்டி சாய்த்து உய்வித்த இடம்
நந்தபாவனத்தில் யோகமாயா பிறந்த இடமும் உள்ளது -ஸ்ரீமத் பாகவதம் -10–10-
7–த்ருணா வர்த்த வத ஸ்தலா –ஸ்ரீ மத் பாகவதம் -10–7-
8–ரமண் ரேடி-தவழ்ந்து புரண்டு தளர் நடையிட்டு எல்லா விளையாட்டுக்களையும் அரங்கேற்றிய ஸ்தலம் –

—————————–

ஸ்ரீ நந்தகிராமம் -நந்தகாவ் -மஹாத்ம்யம் –

ஸ்ரீ கண்ணன் ஐந்து திருநக்ஷத்ரத்துக்கு பின் கம்சனின் தொல்லையால் -40-மைல் தொலைவில் உள்ள நந்த கிராமத்தை அடைந்து வாசிக்கலானார்கள்
1–ஸ்ரீ கிருஷ்ண குண்டா -மிகவும் பிடித்தமான குளம் -மாடு கன்றுகளை தண்ணீர் அருந்த அழைத்து நண்பர்களுடன் நீராடி விளையாடுவான்
உத்தவர் பிருவாற்றாமையால் வருந்து இருப்போரை சமாதானம் செய்ய வந்து இக்குளத்தில் நீராடி அருகில் உள்ள கதம்ப மரங்களுக்கு பின்பு மறைந்து இருந்த கோபியர்கள்
முகத்தில் தவழும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியைக் கண்டு -இவர்களை சமாதானப்படுத்துவது முடியாத செயல் என்று கண்டு கொண்டார் –
2—அக்ரூர கமனா –இந்த பாதை வழியாகவே தேரில் அழைத்துச் சென்றார் அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்றார்கள் கோபிமார்கள் –
3—ஸூர்ய குண்டா –சேஷ்டிதங்களில் ஆழ்ந்து ஸூர்ய சந்திரர்கள் நகர மாட்டாமல் இவ்விதமே நின்றபடியால் இந்த பெயர்
த்ரிபங்கி கோலத்தில் ஸ்ரீ கண்ணன் இருவருக்கும் சேவை சாதித்தார்
4—நந்த பைடக் -நந்தகோபன் கிராம நலன்களை பற்றியும் கம்சனின் தொல்லைகளை பற்றியும் கலந்து ஆலோசிக்கும் இடம் –
அமானுஷ்யமான சேஷ்டிதங்கள் செய்யும் போது இவன் யாரோ என்று வியந்து இறுதியில் இவன் ஒன்றும் அறியாத நம் குழந்தை தான் என்ற முடிவுக்கு வருவார்கள் –
5–யசோதா குண்டா -நந்த பவனத்துக்கு தெற்கே உள்ள குளம் -யசோதை நீராட வரும் இடம் -கண்ணன் நம்பி மூத்த பிரான் விளையாடல்களை கரையில் அமர்ந்து கண்டு களிப்பாள்-
கரையில் நரஸிம்ஹர் சந்நிதி பிரசித்தம் – ஊரார் கண்ணன் நன்மைக்காக வேண்டிக் கொள்ளும் திருக் கோயில் –
இதன் அருகில் புராதனமான குஹை உள்ளது -சித்த புருஷர்கள் யோகத்தில் இன்றும் ஈடுபட்டுஇருப்பதாக கூறுகிறார்கள்
6–ததி மந்தன் -யசோதை மூன்று வேளையும்-வர்ணாஸ்ரம தர்மமாக -ஆலிடை மாட்டாமல் தானே தயிர் கடையும் இடம் இன்றும் பெரிய தயிர்த் தாழி உள்ளது –
7–சரண் பஹாடி -மாலை வேளையில் மாடுகளை கூட்ட திருப்பி புல்லாங்குழல் இங்கு இருந்தே ஊதுவான்-ஆநிரை மீளக் குறித்த சங்கம் என்பர் பெரியாழ்வார்
இங்கு ஸ்ரீ கண்ணன் திருவடிகளின் சுவடு சேவையாகிறது -உத்தவர் இதைக் கண்டுமோஹித்து இவ்விடத்திலேயே தங்கிவிட விரும்பினார் –
8–நந்த பவன் -அற்புதமான கோயில் குன்றின் மேல் அமைந்துள்ளது -இங்கு நந்த கோபன் யசோதை பலராமன் கிருஷ்ணன் ஆயர் நண்பர்கள் குடும்பத்துடன் சேவை
இங்கு பிரகாரங்கள் மாடங்கள் அழகுற விளங்குகின்றன -குன்றின் மேல் உள்ள இக்கோயிலில் இருந்து அனைத்து இடங்களையும் காணலாம் –

——————————–

ஸ்ரீ கோவர்த்தனம் மஹாத்ம்யம் –
கிரிராஜ் -கண்ணன் கையில் ஏறும் பாக்யம் பெற்றதால் -ராமன் திருவடிகளை விடாத பாதுகாக்கும் இந்த கோவர்த்தன மலைக்கும் அன்றோ பட்டாபிஷேகம் நடந்தது
புலஸ்திய மஹரிஷி த்ரோணாசல மலையை அடைந்தார் -அம்மலையின் புதல்வனான கோவர்த்தன மலையின் அழகையும் பெருமையையும் கண்டு
காசிக்கு எடுத்துச் சென்று தவம் புரிய வேண்டி கேட்டு பெற்றுக் கொண்டார் –
தன்னைத் தூக்கிச் செல்லும் பொழுது வழியில் எங்கு கீழே வைத்தாலும் அங்கேயே நிலைத்து விடுவேன் என்ற நிபந்தனையின் பேரில் கூடச் செல்ல சம்மதித்து
வ்ருந்தாவனத்தைக் கடந்து சென்ற போது க்ருஷ்ண அனுபவத்தால் மலை கனக்க தூக்க முடியாமல் கீழே வைத்தார்
தூக்க முடியாமல் ரிஷிக்கு கோபம் வந்து நீ தினமும் எவ்வளவு தேய்ந்துபோவாய் என்று சாபம் இட்டார் –
கண்ணன் திருக் கைகளில் என்ற விரும்பிய கோவர்த்தன மழையும் இந்த சாபத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது –
எனவே இம்மலையும் தேய்ந்து இன்று -80-ஆதி உயரமே உள்ளது
கவாம் வர்த்தனம் யஸ்மின் ஸ்தானே தத் கோவர்த்தனம் -என்று இலை தழைகள் மூலிகைகளால் பசுக்களின் வளர்ச்சி ஏற்படும் இடம் என்றவாறு –
கண்ணனின் ஏழாவது திரு நக்ஷத்திரத்தில் நடந்த விருத்தாந்தம் -அன்னக்கூட உத்சவம் -அட்டுக் குவி சோற்றுப் பருப்பதம் –பெரியாழ்வார் -3–5–பறக்க பேசுகிறார்
-21-கி மீ சுற்றளவு பரிக்ரமா -சிலர் சாஷ்டாங்க ப்ராணாமம் செய்து கொண்டே வலம் வருகிறார்கள் –

1–குஸூம் சரோவர் –கோபிகளுக்கு மலர் சூட்டி விடுவான் -கோட்டை கொத்தளங்களுடன் அழகிய புஷ்கரணீ -உத்தவர் விக்ரஹமும் உள்ளது
ஆசாமஹா சரண ரேணு ஜூ ஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவனே கிமபி குல்மலதவ் ஷதீ நாம் –ஸ்ரீ மத் பாகவதம் -10-47–.61-
செடி கொடிகளின் ஒன்றாக பிறக்க பாரித்தார்
2–நாரதவனம் -நாரதர் கண்ணனை சேவிக்க இங்கே வர ப்ரேம பாவத்துடன் உள்ள பெண்களுக்கே சேவை சாதிப்பான் என்று உணர்ந்து
வருந்த தேவியால் அருளப்பட்ட நாரதர் பெண்ணுருக்கொண்டு கண்ணனை தரிசித்த இடம்
3–கிரி தர்சனம் –ஆங்காங்கு மலை உயர்ந்தும் சில இடங்களில் சிறு சிறு பாறாங்கற்களாகவும் காட்சி அளிக்கிறது –
கால் படாமல் கையால் தொட்டே நமஸ்கரிக்கிறார்கள்
4–அணியோரா –அன்னக்கூட உத்சவம் இவ்விடத்தில் தான் நடந்தது -இதற்கு அருகில் ஜதி புரா என்னும் இடத்தில்
இன்று நாதத்வாராவில் சேவை சாதிக்கும் ஸ்ரீ நாத்ஜிக்கு அபிஷேகம் நடந்தது –
5–மாநஸி கங்கா -கண்ணன் சங்கல்பத்தால் உருவான -நீராட -கங்கை தீர்த்தமாகவே கொண்டாடப்படுகிறது -கண்ணனின் லீலைகளை அனுபவிக்க யமுனை வேண்டி உருவானான் இங்கு
6—தான் காட் -கோவர்தனத்தின் நடுவில் மதுரையில் இருந்து காம்யவனம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது –
கண்ணன் இங்கு நின்று கொண்டு இவ்விடத்தைக் கடந்து பால் தயிர் நெய் இவற்றைத் தலையில் தூக்கிச் செல்லும் கோபியரிடம் அடாவடியாக வரி வசூல் செய்வான்
7–கோவிந்த குண்டம் -கோவிந்த பட்டாபிஷேகம் இங்கே இந்திரன் செய்தான் -காம் விந்தத்தி பாலயத்தி இதி கோவிந்த –
ரக்ஷித்ததால் கோவிந்தன் நாமகரணம் –ஸ்ரீமத் பாகவதம் -10–25-
8–உதவ டீலா -இங்கு தான் உத்தவர் செடி கொடிகளாக கிடப்பதாக ஐதிக்யம்
9–ஸ்யாம குண்டம் -ராதா குண்டம் –கண்ணனும் கோபிகளும் போட்டி இட்டுக் கொண்டு உருவாக்கிய இரண்டு குளங்கள்
கண்ணன் அரிஷ்டாசுரன் -காளை யுவில் வந்த அசுரனை கொன்றதும் தோஷம் போக்க புனித நீராட கோபிகள் சொல்ல கண்ணன் சிரித்துக் கொண்டே
எல்லா புனித நீர்களையும் இங்கே வரவழைக்க அதுவே ஸ்யாம குண்டம்
கண்ணன் கோபிகைகளுக்கு அரிஷ்டாசுரன் பக்ஷபதித்து இருந்ததால் நேர்ந்த தோஷம் போக்க புனித நீராட வேண்டும் என்று சொல்ல
கோபியர் பிரார்த்தனைக்கு இணங்க புனித நதிகள் ராதா குண்டம் ஆயின –
10–ஜிஹ்வா சிலா -கோவர்த்தன மலையின் நாக்கு உள்ள இடம் -தினம் பூஜையும் பால் திருமஞ்சனமும் நடை பெறுகிறது
11–ஸ்யாம் குடி –மரங்கள் அடர்ந்த ரத்ன ஸிம்ஹாஸனம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ளது -இங்கே கறுப்பு நிற கண்ணன் கஸ்தூரியை உடல் முழுதும்
பூசிக் கொண்டு கறுத்த ஆசை அணிந்து விளையாட கோபிகைகளால் கூட அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போயிற்று –

——————————————-

ஸ்ரீ பிருந்தாவன மஹாத்ம்யம்
எல்லா இடங்களை விட பெருமை பெற்றது -தமிழகத்து ஸ்ரீரங்கோஜி மந்திர் உள்ளது —
ஆண்டாள் -14-பதிகம் முழுவதும் இவ்விடத்தில் கனனைத் தேடியும் கண்டும் அனுபவித்துப் பாடுகிறாள்
ப்ருந்தா-என்றால் நெருஞ்சி முள் -பிருந்தா வனம் -நெருஞ்சி முள் காடு -கண்ணன் மேய்ச்சல் நிலமாக மாற்றினான்
ப்ருந்தா வனம் பகவதா கிருஷ்னேன அக்லிஷ்ட்ட கர்மணா ஸூ பே ந மனசா த்யானம் கவாம் வ்ருத்திம் அபீப்சாதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–6–19-
ப்ருந்தா -என்றால் துளசி என்றும் சொல்லுவார்கள்
ப்ருந்தம் -கூட்டம் -கூட்டம் கூட்டமாக பசுக்களும் பக்தர்களும் பெருமானை சேவிக்கும் இடம் என்றுமாம் –
முக்கிய -12-காடுகள் –இவற்றில் -7-யமுனையின் மேற்கு கரையிலும் -5-கிழக்கு கரையிலும் உள்ளன –
மஹா வனம் /காம்யவனம் /மதுவனம் /தாள வனம் /குமுதா வனம் /பாண்டீர வனம் /
பிருந்தா வனம் /கதீர வனம் /லோக வனம் /பத்ர வனம் /பஹுளா வனம் /பில்ல வனம் —
அதிமானுஷ ஸ்தவத்தில் -ப்ருந்தாவணே ஸ்திரா சராத்மக கீட தூர்வா பயந்த ஐந்து நிசயே பதயே ததா நீம்
நைவா சபா மஹி ஜனீம் ஹத காஸ்த ஏதே பாபா பதம் தவ கதா புநராஸ்ரயாம-50-இங்கு புல் புழு அடைய பாரித்தார்
ஆசின்வத குஸூமம்ங்க்ரி சரோருஹம் தே யே பேஜிரே வனஸ்பதயோ லதா வா
அத்யாபி தத் குலபுவ குல தைவதம் மே ப்ருந்தா வனம் மாமா தி யஞ்ச ச நாத யந்தி -52-நாதன் உடையவர்களாக்கி உய்விக்கின்றன இன்று வாழும் செடி கொடிகள்
ஏழு நாட்கள் தங்கி பரிக்ரமா செய்து எல்லா இடங்களையும் சேவிக்கலாம்
1–ஸ்ரீ ரெங்கஜீ மந்திர் –காஞ்சிபுரம் ஸ்ரீ உ வே கோவர்தனம் ரங்காச்சார்யா ஸ்வாமி -1845- தொடங்கி -1851-கட்டி முடித்த திருக் கோயில்
புல்லாங்குழலோடு பிரதான மூர்த்தியாக கண்ணனும் ஆண்டாளும் சேவை -ஸ்ரீ ரெங்க நாதருக்கு தனி சந்நிதியும் ஆழ்வார் ஆச்சார்யர்கள் சந்நிதிகளும் உண்டு
2–வம்சீ வடம் -குழலூதும் சிறப்பை பெரியாழ்வார் நாவலாம் பெரிய தீவு -3–6-அருளிச் செய்தபடி
பவ்ர்ணமி அன்று ராஸக்ரீடை பண்ணி குல்தூத்தினான் –ஸ்ரீமத் பாகவதம் -10-29-
3–கேசி காட் -கடையில் வந்த குர்ஹனிடை வடிவில் கேசி -அனாயாசமாக வாயைக் கிழித்து மடிவித்தான் –
துரங்கம் வாய் கீண்டுகந்தானது தொன்மையூர் அரங்கமே –பெரிய திரு -8-2-7-
4–நிதி வனம் -அந்தி சாய்ந்த பின்பு கோபிகளுடன் விளையாடிய தோட்டங்களில் முக்கியமான ஓன்று –
ந ஸ்ரீர் அபி அங்க ஸமாச்ரயா என்று இடைப்பெண்கள் பெற்ற அனுபவம் ஸ்ரீ மஹா லஷ்மியே பெற்றது இல்லை என்கிறார் ஸ்ரீ ஸூகாசார்யர் –
5—இம்லி தலா –இங்குள்ள புளிய மரம் கண்ணன் காலத்திலேயே இருந்து ஆழ்வார் திருநகரி திருப் புளிய மரத்தை நினைவுபடுத்தும் –
இங்கு அடிக்கடி கோபியருடன் அமருவான்-சில சமயம் கோபிகளை பிரிந்த விரஹ தாபத்தால் திருமேனி வெளுத்து விடும் –
இம்மரத்தடியில் தனியாக அமர்ந்த உடன் முன்பு கோபியருடன் கூடிக் களித்தது நினைவுக்கு வர பழைய கறுமை நிறத்தானாக மாறி விடுவான் –
6—புராண காளிய காட் –கதம்பம் ஏறி காளியனின் தலைமீது குதிக்க -சரண் புக மன்னித்து ஒட்டி விட்ட விருத்தாந்தம் –ஸ்ரீமத் பாகவதம் -10–10-
7–துவாதச ஆதித்ய டீலா -வெகுநேரம் நீரில் மூழ்கி இருந்ததால் உடல் குளிர் எடுக்க திருமேனிக்கு வெப்பம் கொடுத்து பனி செய்ய அனுக்ரஹித்தான்
திருமேனி வியர்க்க அந்நீர் கீழே பிரவஹித்து இன்று ப்ரஸ்கந்தன தீர்த்தமாக உள்ளது –
இங்கு புராதான ராதா மதன மோஹனர் திருகி கோயில் இருந்தது –
8—சேவா குஞ்ச்–கோபியர்களுடன் மாலைப் பொழுதில் ஆடிப்பாடி விளையாடிய இடம் -இன்றும் இரவில் வாத்ய ஒலி-பட்டு ஒலி கேட்க்கிறது
கண்ணன் இங்கே நெரிக்க வருகிறான் என்ற நம்பிக்கையில் மாலை -5-1 /2- மணிக்கு மேலே யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை
குரங்குகள் கூட மாலை சரியாக இடம் பெயர்ந்து சென்று விடுகின்றன
கோவிந்தாஜி மந்திர் / கிருஹன பலராம மந்திர் /பாங்கே பிஹாரி மந்திர் / ராதா ரமணா மந்திர் /ராதா வல்லபைஜிமந்திர் -போன்ற பலவும் உண்டே –

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஏழாம் பாகம் —ஸ்ரீ அவந்திகா -உஜ்ஜைன் /ஸ்ரீ மத் த்வாரகா /ஸ்ரீ புஷ்கரம் / ஸ்ரீ குரு க்ஷேத்ரம் / ஸ்ரீ ஹரித்வார் –மாயா /மஹாத்ம்யங்கள் —

October 19, 2017

ஸ்ரீ அவந்திகா -உஜ்ஜைன் மஹாத்ம்யம் –
மத்திய பிரதேசத்தில் உள்ள க்ஷேத்ரம் -அவந்தி அரசின் இளவரசியின் பெயரால் இது வழங்கப்படுகிறது –
பாரத தேசம் -16-ஜன பதங்களுள் ஓன்று அவந்திகா நகரம் – நீதி சதகம் இயற்றிய ராஜா மார்த்ருஹரி இங்கே அரசாண்டார்
கவி காளிதாசர் பாசர் முதலியோர் இந்நகரத்தின் வளத்தை புகழ்ந்துள்ளார்
சாந்தீபனி ஆஸ்ரமம் உள்ள க்ஷேத்ரம் -ஆஸ்ரமத்துக்கு அருகிலேயே அங்கபாதம் என்னும் ஸ்தலம் உள்ளது –
இங்கு தான் ஸ்ரீ கிருஷ்ணன் கரும் பலகையைக் கழுவி பாடம் எழுதுவாராம்
சிம்ஹஸ்த கும்ப மேளா -இங்குள்ள ஷிப்ரா நதியில் கும்ப மேளா 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது
ஸ்ரீ ராம் மந்திர் காட் -ஷிப்ரா நதிக் கரையில் உள்ள கட்டம் –

————————————

ஸ்ரீ மத் த்வாரகா மஹாத்ம்யம் –
முத்தி தரும் ஷேத்ரங்கள் அயோத்யா / மதுரா/ மாயா -ஹரித்வார் / காசீ / காஞ்சீ / அவந்திகா / துவாரகை –
த்வாரம் காயதி -ப்ரதிபாத யதி = தர்சயாதீதி த்வாரகா –மோக்ஷ வாயிலைக் காட்டிக் கொடுக்கும் க்ஷேத்ரம் த்வாராகா –

தீர்த்தங்கள் –கோமதி நதி / சக்ர தீர்த்தம் /ருக்மிணீ ஹ்ரதம் /விஷ்ணு பாதோத்பவ தீர்த்தம் /கோபி சரோவரம் /சந்த்ர சரோவரம் /ப்ரஹ்ம குண்டம் /பஞ்ச நத தீர்த்தம் /
ருஷி தீர்த்தம் /சங்கோத்தாரா தீர்த்தம் /வருண சரோவரம் / கதா தீர்த்தம் –போன்ற பல -இவற்றில் பலவும் சமுத்திரத்தில் மூழ்கி விட்டன –

1-டாகோர் த்வாரகை-
கோமதீ துவாரகையில் உள்ள ரண்சோட்ராயின் -யுத்தத்தை துறந்து ஓடின பிரபுவின் – மூல மூர்த்தியை கோடாணா என்னும் பக்தர் டாகோர் என்ற ஊருக்கு
எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் அங்கேயே ப்ரதிஷ்டை செய்தார் –
ஸ்ரீ மத பாகவதம் -10-ஸ்கந்தம் -51-அத்யாயம் இதன் சரித்திரம் கூறும் -ஜராசந்தன் -18-முறை படையெடுத்து ஒவ் ஒரு முறையும் சைன்யங்களை இழந்தான் –
-17-யுத்தத்துக்கு பின்பு காலயவனன் என்னும் மிலேச்சன் மூன்று கோடி மிலேச்சர்களுடன் வந்து மதுரா புரியைத் தகைக்க
ஸ்ரீ கிருஷ்ணன் -12-யோஜனை-(1-யோஜனை =10-மைல் ) அளவுள்ள ஒரு துர்க்கத்தையும் -அரணையும்-ஸ்ரீ மத் த்வாராகா பட்டணத்தையும் ஏற்படுத்தினான் –
-12-யோஜனை நீளம் -12-யோஜனை அகலம் உள்ள பட்டணம் –
பின்பு சக்தி மஹிமையினால் மதுரா நகரத்துக்கு ஜனங்களை எல்லாம் அவ்விடம் கொண்டு போய் ஒரே இரவில் சேர்த்தான் –
மலைக்குஹை வரை காலயவனனை பின் தொடரச் செய்து -முசுகுந்தன் –இஷுவாகு வம்சத்தில் மாந்தாதாவின் புதல்வன் -என்பவனை கண்ணன் என்று நினைத்து எழுப்ப
சாம்பலானான் -இப்படி யுத்தம் செய்யாமல் ஓடியதால் ரண்சோட்ராய் என்ற பெயர் பெற்று டாகூர் துவாரகையில் விளங்குகிறான் –

2-கோமதீ த்வாரகா
கோமதீ த்வாரகையும் பேட் த்வாரகையும் சேர்த்து த்வாரகா புரியாகும் -இரண்டுக்கும் நடுவில் இன்று கடல் உள்ளது –
கோமதீ த்வாரகையில் இருந்து யோகா என்ற துறைமுகம் வரை தரையில் சென்று அங்கு இருந்து படகில் பேட் த்வாரகைக்குச் செல்ல வேண்டும் –
பண்டைய த்வாரகையின் சிஹ்னங்கள் பூமிக்கு அடியில் கிடைத்து வருகின்றன -இந்நகரம் காடியவாதி என்ற இடத்தில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது –
இங்குள்ள கோயில் முதலில் ரண சோட் ராய் மந்திர் என்று பெயர் பெற்றது -இது த்வாரகாதீ சமந்திர் -என்றும் சொல்லப் படுகிறது –
கோமதீ நதிக்கரையில் இருந்து -56-படிக்கட்டுக்கள் ஏறினதும் திருக் கோயில் உள்ளது –
நான்கு பக்கமும் வாசல்கள் உண்டு -பரிக்ரம மார்க்கம் இரண்டு சுவர்களின் நடுவில் உள்ளது -உலகிலேயே பெரிய த்வஜ கொடி மரம் இங்கே உண்டு –
ரண சோட ராய் கருப்பு வர்ணத்தில் நாலு திருக் கைகளுடன் எழுந்து அருளி உள்ளார் -இங்குள்ள மூலவரை போடாணா பக்தர் டாகோர் எழுந்து அருள பண்ண
ஆறு மாதத்துக்கு பின்பு ஸ்ரீ ருக்மிணி தேவி பூஜித்த மூர்த்தி லாட்வா என்ற கிராமத்துக்கு அருகில் ஒரு குளத்தில் கிடைக்க
அந்த மூர்த்தி தான் இங்கே ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
தெற்கு பாகத்தில் த்ரிவிக்ரமன் திருக் கோயில் உள்ளது -இங்கே சனகர் சனாதனர் சனந்தனர் சமந்தா குமாரர் மஹாபலி மூர்த்திகளும் உண்டு –
பெரிய திருவடி மூர்த்தியும் உண்டு -இதில் ப்ரத்யும்னர் கருப்பு வர்ணத்தில் உள்ளார் அவருக்கு அருகில் அநிருத்தன் எழுந்து அருளி உள்ளார் –
சபா மண்டபத்தின் ஒரு பக்கம் பலராமர் எழுந்து அருளி உள்ளார் -ஆலயத்தின் கிழக்கு பகுதியில் துர்வாசருடைய சிறிய கோயிலும் உண்டு –

மூன்று மைல் தூரத்தில் ஸ்ரீ ராம லஷ்மணர்கள் மந்திர் உள்ளது -அங்கு இருந்து -2-மைலில் ஸ்ரீ சீதாவாடீ உள்ளது -அதில் பாபா புண்யங்கள் வாசல்கள் உள்ளன

க்ருத யுகத்தில் மஹாராஜர் ரைவதர் சமுத்திரத்தின் நாடு பூமியின் மேல் குசத்தைப் பரப்பி யஜ்ஞம் செய்தார் -அதனால் இவ்விடம் குசஸ்தலீ என்ற பெயர் பெற்றது
பிற்காலத்தில் குசன் என்ற கொடிய தானவன் உபத்திரம் செய்ய அவனை நிரசிக்க ப்ரஹ்மா மகாபலியின் ராஜ்யமான
பாதாள லோகத்தில் இருந்து த்ரிவிக்ரம பகவானை அழைத்து கொல்வித்தார்
துர்வாசர் துவாரகைக்கு வர -காரணம் இல்லாமல் ருக்மிணியை நீ ஸ்ரீ கிருஷ்ணனை பிரிய வேணும் என்று சபித்தார் –
ஸ்ரீ கிருஷ்ணன் அவளை ஆச்வாஸப்படுத்தி தம்முடைய மூர்த்தியை அவள் பிரிவு காலத்தில் பூஜிக்கலாம் என்று கூறினார் –
அவள் பூஜித்த மூர்த்தியே இப்போது இருக்கும் ஸ்ரீ த்வாரகதீசரின் மூர்த்தியாகும் –
இப்போது உள்ள திருக் கோயில் ஸ்ரீ கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனான வஜ்ரா நாபனால் அமைக்கப்பட்ட்டதாகும்

ஸ்ரீ மத் பாகவதம் –தசம ஸ்கந்தம் -50–அத்யாயம் -இதன் சரித்திரம் கூறும் –
கம்சனுக்கு அஸ்தி ப்ராஸ்தி-என்ற இரண்டு பட்ட மஹிஷிகள் -ஸ்ரீ கிருஷ்ணனால் கொல்லப்பட-தந்தை ஜராசந்தன் இடம் சென்று அழ-
கோபம் கொண்டு யாதவப் பூண்டே இல்லாதபடி செய்ய முயன்றான் -23-அஷவ்ஹிணி சைன்யங்களை திரட்டி மதுரையை தகைத்தான்
-21780-தேர்கள் -21870-யானைகள் -65610-குதிரைகள் -109350-காலாட்படை கொண்டது ஒரு அஷவ்ஹிணி சேனையாகும் –
இது பூமிக்கு பாரம் -ஜராசந்தனை அளிக்காமல் விட்டால் தான் மேலும் அவன் சேனைகளை திரட்டி வருவான் என்ற திரு உள்ளம் கொண்டு சேனைகளை மட்டும் அழிக்க
சைன்யங்கள் எல்லாம் முடிந்து தேரும் இல்லாமல் ப்ராணன்கள் மட்டுமே மீதி உள்ள ஜராசந்தனை அல்ப மிருகத்தை பிடிப்பது போலே பலராமன் பிடிக்க
அவனைக் கொல்ல வேண்டாம் என்று ஸ்ரீ கிருஷ்ணன் தடுக்க -சிசுபாலன் போன்றார்களால் தூண்டப்பட்டு பதினெட்டு தடவைகள்
பல அஷவ்ஹிணி சைத்தன்யங்களுடன் வந்து யுத்தம் செய்தான்
-17-யுத்தத்துக்கு பின் காலயவனன் மிலேச்சர்கள் உடன் வர -ஜல துர்க்கத்தை ஏற்படுத்தி -பந்துகளை கொண்டு போய் வைத்தான்
விஸ்வகர்மா வாஸ்து சாஸ்த்ரா விதியின் படி ராஜவீதிகள் உப்பரிகைகள் கோபுரங்கள் அச்வசாலை அன்னசாலை இவற்றை நிர்மாணித்தான்
தேவேந்திரன் ஸூ தர்மை என்னும் சபா மண்டபம் –

3–பேட் த்வாரகா –
கோமதீ துவாரகையில் இருந்து -20-மைல் தூரத்தில் உள்ளது -பேட் =த்வீபம் — தீவு /-18-மைல் தூரத்தில் ஓகா துறை முகம் -அதுவரை தரையில் வந்து மீதி படகில் –
-7-மைல் சுற்றளவு உள்ளது –
ஸ்ரீ கிருஷ்ண மஹல் –விசாலமான ஆலயம் -ப்ரத்யும்ன சந்நிதி ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதி -புருஷோத்தமன் -தேவகீ-மாதவன் -ஆகியோர்களின் சந்நிதிகள் –
தீவின் தென்மேற்கில் பெரிய திருவடி சந்நிதி உள்ளது –
ஸ்ரீ கிருஷ்ணன் மஹாலில் சமீபத்தில் சத்யபாமை ஜாம்பவதி சந்நிதிகள் உள்ளன -கிழக்கே சாஷீ கோபாலன் சந்நிதி உள்ளது –
வடக்கில் ருக்மணி ராதா சந்நிதிகள் உள்ளன -ஜாம்பவதி மஹாலில் ஸ்ரீ லஷ்மீ நாராயணனின் சந்நிதி ஜாம்பவதி சந்நிதிக்கு முன்னாள் உள்ளது
ருக்மணி மஹாலில் அவளின் சந்நிதிக்கு முன்னாள் கோவர்த்த நாதரின் சந்நிதி உள்ளது –
பேட் துவாரகையில் ரண சோட் சாகர் –ரத்னதாலாப் – ரத்ன குளம் –கசாரி தாலாப் -சங்க தாலாப் போன்ற பல குளங்கள் உள்ளன
முரளி மனோகர் ஆலயம் ஹனுமான் ஆலயம் போன்றவை உள்ளன -சிறிது தூரத்தில் யோகாசன ஸ்தானம் உள்ளது -அருகில் பல குண்டங்கள் குளங்கள் உள்ளன –
ஸ்ரீ கிருஷ்ண மஹாலில் இருந்து 1 /2 மைல் தூரத்தில் சங்கோத்தர தீர்த்தம் உள்ளது -இங்கே சங்க சரோவரம் -சங்க நாராயண மந்த்ரம் இரண்டும் உள்ளன
இங்கே தான் ஸ்ரீ கிருஷ்ணன் சங்கா ஸூரனை -பஞ்சஜனனாய் கொன்று பாஞ்ச ஜன்யம் எடுத்துக் கொண்டார் –
சங்க நாராயண பகவானின் மூர்த்தியின் மேல் தசை அவதாரங்களின் மூர்த்திகள் உள்ளன
பரிக்ரமா -சமுத்திரத்தின் கரை -சரண் கோமதீ -பத்ம தீர்த்தம் -ஐந்து காக்கைகள் -கல்ப வருஷம் காளிய நாகம் –
சங்க நாராயண மந்த்ரம் -இவை யாவற்றையும் ப்ரதக்ஷிணம் சுற்றி வருவார் –
கோபீ தாலாப் -பேட் துவாரகையில் இருந்து படகில் சென்று ஓகா துறைமுகத்தில் இறங்காமல் மேந்த ரடாக் கிராமத்தில் இறங்கி அங்கு இருந்து இரண்டு மைல் தூரம்
கோமதீ த்வாரகையில் இருந்து -13-மைல் தூரத்தில் உள்ளது –
பிண்டாரா -பிண்ட சரோவரம் -இந்த ஷேத்ரத்தின் பழைய பெயர் பிண்டராகம் -பிண்ட தாரகம்-கோமதீ துவாரகையில் இருந்து -20-மைல் தொலைவில் உள்ளது
த்வாரகா ஜாம் நகர் ரயில் பாதையில் -ஜாம் நகரில் இருந்து -54-மைல் தூரம் -போபால் என்ற நிலையத்தில் இருந்து -12- மைல் தூரம் –இது மத்திய பிரதேச போபால் இல்லை –
இங்கு சரோவரம் குளம் -பிண்டம் கொடுக்க அவை மூழ்காமல் மிதக்கின்றன -துர்வாசர் ஆஸ்ரமம் இங்கே இருந்ததாம் –
பாண்டவர்கள் ஸ்ரார்த்தம் செய்த இடம் -லோகத்தாலான பிண்டத்தை செய்து கொடுத்தாலும் மிதந்ததாம் -துர்வாசரின் வர தான பலத்தால் –

ஸ்ரீ மத் பாகவதம் -10-ஸ்கந்தம் -59-/-69- அத்தியாயங்கள் -நரகாசூரன் சத்யா பாமையின் பிள்ளை –விருத்தாந்தம் –
இந்திரனுடைய தாயான அதிதியின் குண்டலங்களையும் மேரு மலையில் உள்ள மணிபர்வதம் என்ற இந்திரனுடைய இடத்தையும் பறித்துப் போக –
நரகனுடைய நகரமான பராக் ஜ்யோதிஷபுரத்துக்கு சென்று சக்ராயுதத்தால் தலையை அறுத்துத் தள்ளி -16000-சிறையில் இருந்த பெண்மணிகளை
-16000-உருவங்களை எடுத்துக் கொண்டு ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து ஒரு நொடியும் பிரியாமல் இருந்து
க்ருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தான் –

4–ப்ரபாஸ தீர்த்தம்
சவ் ராஷ்ட்ரத்தில் மேற்கு ரயில்வேயின் ராஜ்கோட் வேராவால் ரயில் பாதை / கிஜடியா வேராவால் ரயில் பாதை -இரண்டாலும் வேராவால் சென்று இங்கே அடையலாம்
இந்த தீர்த்தத்தின் கரையில் தான் யாதவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மரணம் அடைந்தார்கள் –
ப்ராஸீ – திரிவேணி –இங்கே செல்லும் போது முதலில் ப்ரஹ்ம குண்டம் என்ற குளம் உள்ளது -அதற்கு அருகில் நிறம்மா கமண்டலு என்ற கிணறு உள்ளது
அதற்கு முன்னால் ஆதி ப்ரபாசம் ஜல ப்ரபாசம் என்ற இரண்டு குண்டங்கள் உள்ளன –
ப்ரபாஸ தீர்த்தத்தில் ஹிரண்யா சரஸ்வதி கபிலா என்ற நதிகள் சமுத்திரத்தில் கலக்கின்றன -இந்த சங்கம ஸ்தலமான ப்ராஸீ திரிவேணி –
கபிலா நதி சரஸ்வதியை கலந்து சரஸ்வதி ஹிரண்யாவில் கலக்கிறது -ஹிரண்யா நதி கடலில் கலக்கிறது
இந்த த்ரிவேனியில் இருந்து சிறிது தூரத்தில் ஸூர்ய மந்திரம் உள்ளது -ஐந்து அழிந்த நிலையில் உள்ளது -இதன் அருகில் ஒரு வ்ருக்ஷத்தின் அடியில் பலராமரின் மந்திரம் உள்ளது
இங்கு இருந்து பாம்பின் வடிவுடன் பாதாள லோகம் அடைந்தார் -இங்கே த்ரிவேணீ மாதா ராமன் கிருஷ்ணன் ஆலயங்கள் உள்ளன
இதை தேஹ உத்சர்க்க தீர்த்தம் -உடலை விடுவது என்கிறார்கள் -ஸ்ரீ கிருஷ்ணர் பாலாக தீர்த்தத்தில் தன்னுடைய பாணங்களை துறந்து இங்கு வந்து மறைந்தார்
யாதவஸ் தலீ-ஹிரண்யா நதியின் கரையில் உள்ளது -இங்கே யாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு மாண்டார்கள் –
இங்கு இருந்து சிறிது தூரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹர் மந்த்ரம் உள்ளது
பால தீர்த்தம் வேராவால் ரயில் நிலையத்தில் இருந்து ப்ரபாஸ தீர்த்தம் வரும் வழியில் -2-1 /2-மைல் தூரத்தில் பாலுபுர் கிராமம் உள்ளது
இங்கே பால குண்டம் குளம் உள்ளது -அதன் அருகில் பத்ம குண்டம் உள்ளது -அங்கே ஒரு அரச மரம் உள்ளது -அதை மோக்ஷ பீபல் என்பர் –
இங்கு தான் ஸ்ரீ கிருஷ்ணர் சயனித்து வலது திருவடியின் மேல் இடது திருவடியை வைத்து அசைத்துக் கொண்டு இருக்க
ஜரா என்ற வேடன் இடது கால் கட்டை விரலில் பணத்தால் அடிக்க அந்த வ்யாஜத்தால் ஸ்ரீ வைகுண்டத்துக்கு எழுந்து அருளினான்
அந்த வேடன் பகவானுடைய திருவடியில் பதிந்த பணத்தை எடுத்து பால குண்டத்தில் சேர்த்தான்
ஸ்ரீ மத் பாகவதம் இதை –11-ஸ்கந்தம் -30-/-31-அத்தியாயங்களில் கூறும் அதுவே மேலே வைகுண்ட தாம கமனமாக வரும் –

5–வைகுண்ட தாம கமனம்-
யாதவர்கள் ரிஷிகளை பரிகாசம் செய்ய எண்ணி சாம்பன் என்பவனுக்கு பெண் வேடமிட்டு -உலக்கையை வைத்து கட்டி -எண்ண குழந்தை பிறக்கும் -என்று கேட்க
வயிற்றிலே உள்ளதே பிறக்கும் என்று சாபம் இட -சாம்பனுக்கு உலக்கை பிறந்தது -பயந்த யாதவர்கள் உலக்கையை அரசனிடம் காட்ட
அதை அவன் பொடி பொடியாக்கி கடலிலே கரைக்கச் சொல்ல -அம்மரத்த துகள்கள் கரையில் ஒதுங்கி கோரைப் புற்களாக முளைக்க –
உலக்கையின் இரும்புத் துண்டை ஓர் மீன் விழுங்கி அது ஒரு வேடனிடம் ஸ்ர -அந்த இரும்புத் துண்டைத் தீட்டி தன அம்பின் நுனியில் ஏற்ற
ப்ராஹ்மணர்களின் சாபத்தால் முளைத்த கோரைப் புற்களால் யாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு அழிய –
இரும்புத் துண்டு கண்ணன் வைகுண்டம் எழுந்து அருள உதவிற்று –
பூமியின் பாரம் தீர்க்கவே அன்றோ ஸ்ரீ கிருஷ்ண திருவவதாரம்
பலராமனும் தன்னை சங்கர்ஷணனாக தியானித்து மானிட உருவத்தை துறந்தான்
இந்த சரித்திரத்தை எவன் பரிசுத்தனாகி பக்தியுடன் சங்கீர்த்தனம் செய்து அதன் மஹிமையாலே கதிகளில் சிறந்த ஸ்ரீ வைகுண்ட லோக கதியைப் பெறுவார் –
பிரபாச -பெயர்க் காரணம் -பிரகார்ஷேன பகவத் வைபவா பா சந்தே அஸ்மின் தே சே இதி ப்ரபாஸ -பகவத் வைபவங்கள் வெளிப்படும் இடம் என்றவாறு
ரிஷிகளின் சாபங்களுக்கு கட்டுப்பட்டு ஆஸ்ரித பாரதந்தர்யம் வெளியிட்டு அருளின சரித்திரம் –

6–ஸ்ரீ நாத த்வாரகா –
ஸ்ரீ நாதன் -ஸ்ரீ நாத் ஜி -கோவர்த்தன கிரிதாரி ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு வடக்கே -50-கி மை தூரத்தில் உள்ளது
மேவார் ராணா வினுடைய கைங்கர்யத்தில் -17-நூற்றாண்டில் கட்டப் பட்ட திருக் கோயில்
நாதன் இருக்கும் இடத்துக்கு வாயில் -நாதனிடம் அழைத்துச் செல்லும் வாசல் என்ற பொருள்
முதலில் ஸ்ரீ ப்ருந்தாவனத்திலேயே எழுந்து அருளிய மூர்த்தி -ஓவ்ரங்க சீப்பின் படையெடுப்பில் இருந்து காக்க கோ ஸ்வாமி தாவோஜி
ராணா ராஜ்சிங்கின் உதவியோடு -1762-ஆண்டு மாட்டு வண்டில் இங்கே கொணர்ந்தார்
அந்த வண்டி மண்ணில் புதைந்து நகராமல் நிற்க இங்கேயே இருக்க திரு உள்ளம் போலும் என்று எண்ணி தாவோஜி அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்தார் –

கிரிதாரி -கோவர்த்தன கிரியை இடது திருக் கையால் அனாயாசமாக தூக்கிக் கொண்டு வலது திருக் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நாட்டியமாடும் திருக் கோலம்
கருப்பு சலவைக்கல்லில் வடிக்கப்பட்ட இவ்விக்ரஹத்தில் இரண்டு மாடுகள் ஒரு பாம்பு இரண்டு மயில்கள் ஒரு கிளி ஆகியவையும் உள்ளன
குழந்தை கண்ணனாகவே பாவித்து -அவனை துயில் எழுப்புதல் -கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தல் திருமஞ்சனமாட்டுதல் -ஸ்ரீ வல்லபாசார்ய சம்ப்ரதாயம்
ஒரு முறைக்கு -30-நிமிடங்களுக்கு மேல் சேவை இல்லை -குழந்தை கண்ணன் அன்றோ
மங்களா – சிருங்கார –க்வால் -உத்தாபன –போக்-சந்த்யா ஆர்த்தி சயன ஆர்த்தி என்று ஒவ் ஒரு நாளும் 8-முறை தரிசனங்கள் உண்டு –
மூன்று வாசல்கள் உண்டு -தனி வாசல் பெண்களுக்கு -கண்ணன் அருகில் இவர்களுக்கே சேவை –
கோ சாலையும் உண்டு -அவற்றின் பாலை கோயிலிலே நாமே பெற்று பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் –
ஜென்மாஷ்டமி அன்னக்கூட உத்சவம் சிறப்பு இங்கே –
பக்த மீராபாய் வரும் அளவும் கதவுகள் திறக்காமல் இருந்து தனக்கு அவள் பால் இருந்த பிரளயத்தை உணர்த்திய கிரி கோபாலன்

7–மூல த்வாரகா -போர்பந்தரில் இருந்து -30-கி மீ தொலைவில் உள்ளது

8–காங்க்ரோலி த்வாராகா -ஸ்ரீ நாத த்வாராகாவில் இருந்து -12-கி மீ தொலைவில் உள்ளது –

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –
பெரியாழ்வார் -4–1–6-/-4-7-8-/-4-7–9-/-4–9–4-/-5–4–10-/
நாச்சியார் -1–4-/-9-8-/-12–9-/-12–10-/
பெரிய திருமொழி -6–6–7-/-6–8–7-
நான்முகன் -71-
திருவாய் மொழி -4-6-10-/-5-3–6-/

—————————

ஸ்ரீ புஷ்கர க்ஷேத்ரம் மஹாத்ம்யம்
1–ஆர்ஷம் –ரிஷிகளால் ஏற்படுத்தப் பட்ட ஸ்தலங்கள்
2–பவ்ராணிகம் –புராணங்களால் விவரிக்கப்படும் ஸ்தலங்கள்
3–ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள்
4–தைவம்-பிரம்மாதி தேவர்கள் தவம் செய்து உண்டான ஸ்தலங்கள்
5–மானவம் -மன்னர்களாலும் அடியவர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட ஸ்தலங்கள்
6–அபிமான ஸ்தலம் –ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப் பட்ட ஸ்தலங்கள்
இவற்றுள் ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -8-/ சாளக்கிராமம் -பத்ரி -நைமிசாரண்யம் -புஷ்காரம் -வானமா மலை -ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ முஷ்ணம் -திருமலை ஆகியவை
புஷ்கரணி- புஷ்கரம்- குளம் –தாமரையில் இருந்து உண்டான தீர்த்த ரூபம் –
நம் பாரத தேச பஞ்ச புண்ய தீர்த்தங்கள் -புஷ்கரம் -குரு க்ஷேத்ரம் -கயா -கங்கா ப்ரபாசம் ஆகியவை
பஞ்ச புண்ய சரோவர் -மான சரோவர் -புஷ்கரம் -பிந்து சரோவர் -நாராயண சரோவர் -பம்பா சரோவர்
இது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் -18-கி மீ தொலைவில் அராவல்லி மலைத்ததோடர்களால் சூழப்பட்டுள்ளது –

ஸ்ருஷ்டிக்கு முன் யாகம் செய்ய வேண்டும் என்று இந்நிலத்தை பிரேமா தேர்ந்து எடுக்க -அங்கு வஜ்ரநாடன் அரக்கன் சிறுவர்களை கொள்வதையே
தொழிலாக கொண்டு இருக்க -அவனை அழிக்க தன் கையில் இருந்த தாமரை மலரை ஏறிய அது தூள் தூளாக்கி -5-கி மீ தூரம் வரை -52-இடங்களில் விழுந்ததாம் –
அவை விழுந்த இடங்களில் எல்லாம் குளம் தோன்ற -அதுவே புஷ்கரம் -இவ்வாறாக இங்கு -52-சிறிய பெரிய வற்றாத குளங்கள் உள்ளன –
இங்கு இருந்து தான் சரஸ்வதி நதி பெருகுகிறது -அரக்கனை அளித்த பிரமன் யாகம் செய்யத் தீர்மானித்தார் -வெகு நேரம் வரை சரஸ்வதி வரவில்லை –
காயத்ரீயை மணந்து கொண்டு ஆரம்பிக்க -அங்கு சரஸ்வதி வர பிரம்மாவை சபிக்க -இந்த ஸ்தலம் தவிர வேறு எங்கும் கோயில் கட்டி வணங்க மாட்டார்கள் –
மலை உச்சியில் சரஸ்வதி த்வத் திருக் கோலம் -தீபாவளி அன்று காயத்ரீ தேவியுடன் கூடிய பிரம்மாவுக்கு தேன் பால் தயிர் பஞ்சாமிர்த திருமஞ்சனம் ஆரத்தி காட்சி சிறப்பு இங்கு
தீர்த்தங்களுக்கு அரசனாக புஷ்கரம் –உதயமாகும் முதல் ஸூர்ய கிரணம் இங்கே தீர்த்தத்தில் தான் விழுகிறது -கார்த்திகை ஏகாதசி இங்கே தீர்த்தமாடுதல் விசேஷம்
கார்த்திகை பவ்ர்ணமீ பூஜை சிறப்பு -33-கோடி தேவர்களும் கலந்து கொள்கிறார்களாம்
ஜ்யேஷ்ட புஷ்கரம் என்று அழைக்கப்படும் இடத்தில் பிரம்மாவும் -மத்திய புஷ்கரம் இடத்தில் விஷ்ணுவும் கனிஷ்ட புஷ்கரம் இடத்தில் சிவனும் வணங்கப்படுகிறார்
பிரம்மா கோயிலில் வலப்பக்கம் சாவித்ரிக்கும் இடப்பக்கம் காயத்ரிக்கும் திருக் கோயில்கள் உண்டு -சவ்நகர்த்தி முனிவர்களும் சேவை
யானை மீது அமர்ந்த குபேரனும் நாரதரும் சேவை -பத்ரி நாராயணன் கோயிலும் ஸ்ரீ வராஹர் கோயிலும் பழமை வாய்ந்தவை
தென்னிந்திய ஸ்ரீ வைகுண்ட நாதர் கோயிலும் இங்கு உண்டு
வீற்று இருந்த திருக் கோலத்தில் புண்டரீக வல்லி தாயாருடன் சேவை
கனிஷ்ட புஷ்கரத்தில் ராதா கிருஷ்ணன் கோயில் உண்டு -மலை உச்சியில் சாவித்ரி தேவிக்கும் காயத்ரி தேவிக்கும் கோயில்கள் உண்டு
யஜ்ஞ பர்வதம் இங்குண்டு அங்குள்ள அகஸ்திய குண்டத்தில் நீராடிய பின்பு தான் புஷ்கர யாத்திரை பூர்த்தியாகும்
நாக குண்டம் சக்ர குண்டம் பத்ம குண்டம் கங்கா குண்டம் போன்ற பலவும் உண்டு இங்கு சரஸ்வதி நதியில் நீராடுவது புனிதம்
இங்கு இந்நதி சுபத்ரா காஞ்சனா ப்ராஸீ நந்தா விஷாலிகா என்ற ஐந்து பெயர்களுடன் பெருகுகிறது
அருகில் நாக பர்வதத்தில் அநேக குகைகள் உண்டு -பர்த்ரு குஹை பார்க்க வேண்டியது -புரா மந்திர் நயா மந்திர்-பிரசித்தம் –

—————————-

ஸ்ரீ குரு க்ஷேத்ர மஹாத்ம்யம்
ஸ்ரீ மஹா பாரதம் வனபர்வம் ஸ்ரீ பாத்ம புராணம் விரித்து உரைக்கும் –

குரு க்ஷேத்ரம் க மிஷியாமி குரு க்ஷேத்ரே வஸாம்யஹம்
ய ஏவம் சததம் ப்ரூயாத சோ அபி பாபை ப்ரமுச்யதே –வாயார அழற்றவே பாபங்களில் இருந்து விடுதலை
பாம்சவோ அபி குரு க்ஷேத்ரே வாயு நா சாமுதீரிதா
அபி துஷ்க்ருதா கர்மாணம் நயந்தி பரமாம் கதிம் –தூசிகள் பரம கதி அளிக்கும்
மனசாப்யபி காமஸ்ய குரு க்ஷேத்ரம் யுதிஷ்ட்ர
பாபா நி விப்ரணச் யந்தி ப்ரஹ்ம லோகம் ச கச்சதி -மனசால் ஆசைப்படவே பாபங்கள் நீங்கி பரமபதம் அடையலாம் –
கத்வா ஹி ஸ்ரத்தாயா யா யுக்த குரு க்ஷேத்ரம் குரூதூஹ
பலம் ப்ராப் நோதி ச ததா ராஜ ஸூயா ஸ்வ மேதா யோ –சிரத்தையுடன் தீர்த்த யாத்ரையால் ராஜஸூய அஸ்வமேத யாகங்கள் பலன்களை பெறலாம் –

டெல்லியின் வடக்கிலும் ஹரியானா மா நிலம் அம்பாலா நகரின் தெற்கேயும் அமைந்துள்ளது –
இதனை சமந்தபஞ்சகம் என்றும் பிரமனின் உத்தர குண்டம் யாகவேதி என்றும் சொல்வர்
ஐந்து யோஜனை -50-மைல் நீள அகலங்கள் -250-சதுர மைல் விஸ்தீரணம்
சரஸ்வதி நதிக் கரையில் தவம் செய்த ரிஷிகளுக்கு வேத மந்த்ரங்கள் வெளியிட்ட போது முதன் முதலாக இந்த புண்ய பூமியிலே ஓதினார்கள்
வைதிக யஜ்ஞ கர்மங்களை இங்கேயே செய்தார்கள் -வசிஷ்டர் விசுவாமித்திரர் இங்கே தான் அருள் பெற்று ப்ரஹ்ம ரிஷிகள் ஆனார்கள்
குரு மஹா ராஜாராம் செப்பனிடப்பட்ட க்ஷேத்ரம் -ஆத்ம ஞான கேந்திரமாக உருவாக்கினான் -வாமன புராணம் இதை விவரிக்கும்
அஷ்டாங்க தர்மம் -வளர்த்தான் -தபஸ் -சத்யம் -ஷாமா -தயா -சவ்சம் -தானம் -யோகம் ப்ரஹ்மசர்யம் -ஆகியவையே இவை
-48-கோச அளவுள்ள பூமி தர்ம பூமி -அக்ஷயமான பலம் நல்கும்
இதனாலேயே தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே வாக்கியம் -இது தர்ம பூமி என்பதை உணர்த்தும்
ஸ்ரீ கீதை உபதேசிக்கப் பெட்ரா இடம் -ஜ்யோதிசர்-என்ற புண்ய தீர்த்தஸ்தலம் –

இங்கு ஏழு புண்ய நதிகள் -ஏழு திவ்ய வனங்கள் நான்கு புண்ய தடாகங்கள் -பவித்ரமான நான்கு கிணறுகள் புராதான பிரசித்தம் –
சரஸ்வதி புண்யாததா வைதர்ணீ நதீ ஆபகா சமஹா புண்யா கங்கா மந்தாகி நீ நதீ
மதுஸ்ரவா அம்லு நதீ கௌஸகீ பாபநாசி நீ த்ருஷதூதீ மஹா புண்யா ததா ஹிரண்யவதீ நதீ –ஸ்ரீ வாமன புராணம்
சரஸ்வதி -வைதர்ணீ – ஆபாகா -மது ஸ்ரவா-கௌஸகீ -த்ருஷதூதீ -ஹிரண்வதீ -ஆகிய ஏழு புண்ய நதிகள்
காம்யகம் ச வனம் புண்யம் ததா அதி தீவனம் மஹத்
வ்யாஸஸ்ய ச வனம் புண்யம் பல்கீவனமே வச
ததா ஸூர்ய வனம் ஸ்தானம் ததா மதுவனம் மஹத்
புண்ய சீத வனம் நாம சர்வ கல்மஷ நாசனம் –ஸ்ரீ வாமன புராணம்
காம்யக வனம் -அதி தீவனம் -வ்யாஸ வனம் -பலகீ வனம் -ஸூர்ய வனம் -சீதா வனம் -ஆகியவை
நான்கு பவித்ரா தடாகங்கள் –
ப்ரஹ்ம சரோவர் -ஜ்யோதிசர் -ஸ்தானேசர் -காலேஸர்-ஆகியவை பவித்ரமான தடாகங்கள் -ஜ்யோதிசர் இடத்தில் ஸ்ரீ கீதா உபதேசம்
நான்கு பவித்ர கூபங்கள் -கிணறுகள் -சாந்த்ர கூபம் -விஷ்ணு கூபம் -ருத்ர கூபம் -தேவீ கூபம்-நான்கும் பவித்ரமான கிணறுகள் –

ஆபாகா நதீ -கர்ணகேடா குடில் அருகில் உள்ள நதீ -மானஸ தீர்த்தம் கிழக்கில் ஒரு கோச தூரத்தில் பூஜிக்கப் பட்டு வந்தது
காம்யக வனம் –பாண்டவர்கள் வனவாசத்தில் சில காலங்கள் இங்கே அளித்ததாக கூறுவர்
ப்ரஹ்ம தடாகம் -முன்பு மிக பெரிய நதியாக இருந்தது -இன்று ப்ரஹ்ம சரோவர் பெயரில் -3600- அடி நீளம் /-1200-அடி அகலம் /-12-அடி ஆழம் கொண்ட தடாகம்
துரியோதனன் பாரத போரின் இறுதி நாட்களில் இங்கு தான் ஒளிந்து கொண்டு இருந்தான்
ஜ்யோதிசர் –ஸ்ரீ கீதாம்ருதம் ஊட்டிய இடம் -முன்பு பழைமையான நதி இன்று ஞான ஊற்று பெயரில் தொடக்கமாக விளங்குகிறது
கரைகளில் பல ஆலமரங்கள் -அக்ஷய வட வ்ருக்ஷம் மிக பழைமை -1960-வருடம் மஹா ராஜா தர்பங்கா அக்ஷய படத்தின் நாற்புறமும் மேடை அமைத்து உறுதியான தளமிட்டார்
சந்த்ர கூபம் -குரு க்ஷேத்ர சரோவரின் மத்தியில் உள்ள புருஷோத்தமபுரம் என்ற மிகப் புராதனமான இடத்தில் உள்ள கிணறு –
அருகில் பழைய கோயில் இருக்கிறது -பாரத போர் முடிவில் யுதிஷ்ட்ரர் இங்கு விஜய ஸ்தம்பம் நாட்டினார் என்றும் காலப்போக்கில் அது அழிந்து விட்டது என்றும் சொல்வர் –

க்ரஹணமும் குருக்ஷேத்ரமும் -தீர்த்தமாடுதல் புனிதம் -இங்குள்ள சன்னிஹித தீர்த்த தடாகம் நீராட்டம் நூறு அஸ்வமேத யாக பலனை கிட்டும்
ததீசி முனிவரது ஆஸ்ரமம் –தேவ அசுர யுத்தம் வெற்றி பெற எலும்பை தானம் செய்த ததீசி முனிவர் -ஆஸ்ரமம் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள சன்னிஹித தீர்த்தக் கரையில் உள்ளது
இந்த சன்னிஹித தீர்த்தம் பரசுராமரால் உரு ஷேத்ரத்தில் உருவாக்கப் பெற்ற ஐந்து நதிகளில் முக்கியமான ஒன்றாகும்
யுத்தத்தில் கொல்லப்பட்ட பந்து மித்ரர்களுக்காக பிண்ட தானம் தர்ப்பணம் செய்த இடம்
பண கங்கா பீஷ்ம காட் -குருஷேத்ரத்தில் இரண்டு பண கங்கைகள் இருக்கின்றன -ஓன்று தயால்பூர் கிராமத்துக்கு அருகிலும் மற்று ஓன்று நரகாதாரி கிராமத்திலும் உள்ளன –
நரகா தாரையில் அம்புப் படுக்கையில் படுத்து உத்தராயண காலம் எதிர்நோக்கி இருந்த பீஷ்ம பிதாமஹர்க்கு அர்ஜுனன்
தனது பணத்தினால் ஒரு நீரூற்றை உண்டாக்கி தாக்கம் தீர்த்தான் –அதுவே பாண கங்கை
இங்கு தான் ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ சஹஸ்ர நாம உபதேசம் –
தயால்பூர் அருகில் உள்ள பாண கங்கையில் ஸ்ரீ கிருஷ்ணன் யுத்த காலத்தில் குதிரைகளை நீர் அருந்தச் செய்ததாகச் சொல்லப்படுகிறது
வைகாசி மாதமும் கங்கா தசராவிலும் இங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன –
பெஹலா எனப்படும் பித்ருக்கள் தீர்த்தம்
விசுவாமித்திரர் ப்ரஹ்ம ஞானம் பெட்ரா இடம் -பிருகு மஹா ராஜர் தனது தகப்பானாரின் அந்திம கிரியைகள் செய்ததால் இந்த பெயர்
சர்ப்ப தமன் -ஸூ பீதோ என்ற இடத்தில் உள்ள இந்த ஸ்தலத்தில் ஜனமேய ராஜா சர்ப்ப தமன பாகம் செய்ததாக கூறப்படுகிறது
இங்குள்ள நதி ஸூர்ய குண்டம் -இங்குள்ள நாக தீர்த்த ஸ்நானம் செய்து சர்ப்பங்களுக்கு நெய்யும் தயிரும் தானம் செய்கின்றனர்
சர்வதேவி என்ற பெயரால் மஹா பாரதத்திலும் சர்ப்பததி என்ற பெயரால் ஸ்ரீ வாமன புராணமும் இத்தைக் குறிக்கும்
கைதல்-சுக்ர தீர்த்தம் -ஸ்ரீ ஹனுமான் வாசம் செய்த இடமாதலால் கபிஸ்தலம் என்ற பெயர் -யுதிஷ்டர் வேண்டிய ஐந்து கிராமங்களில் ஓன்று
பராசரர் -த்வை பாயனர் ஹ்ருதய தீர்த்தம் -ப்ரஹ்ம சரோவரைப் போன்ற ஒரு பெரிய நதி -பாரதப்போரில் துரியோதனன் இங்கு ஒளிந்து இருக்க பாண்டவர்கள்
அவனை அறை கூவி வெளிவரச் செய்து கொன்ற இடம் -ஸ்ரீ பராசர முனிவர் ஆஸ்ரமம் இருந்த இடம் –

ஸ்ரீ கீதா விஷயமான அருளிச் செயல்கள்
நாச்சியார் -11–10 –
நான்முகன் -50–/-71
திருவாய் மொழி -4–8-6–
ராமானுஜ நூற்றந்தாதி -68-

————————————-

ஸ்ரீ ஹரித்வார் -மாயா -மஹாத்ம்யம்
ஸ்வர்க்க த்வாரேண தத் துல்யம் கங்கா த்வாரம் ந சம்சய
தத்ராபி ஷேகம் குர்வீத கோடி தீர்த்தே ஸமாஹித
லபதே புண்டரீகம் ச குலம் சைவ சமுத்தரேத்
தத்ரைக ராத்ரி வாசேந கோ சஹஸ்ர பலம் லபதே
சப்த கங்கே த்ரி கங்கே ச சக்ர வர்த்தே ச தர்ப்பயன்
தேவன் பித்ரூம்ஸ்ச விதிவத் புண்யே லோகே மஹீயதே
தத கனகலே ஸ்நாத்வா த்ரிராத்ரோ போஷிதோ நர
அஸ்வமேதம் அவாப்நோதி ஸ்வர்க்க லோகம் ச கச்சதி –
முக்தி தரும் ஏழு ஷேத்ரங்களுள் ஓன்று -அமுதம் சொட்டு விழா வியக்கத்தக்க மாயா -க்ஷேத்ரம் -நுழைவு வாயில் -ஸ்வர்க்க ஆரோஹிணி –
அஜாமிளன் இங்கு வந்து கங்கையில் நீராடி கைங்கர்யம் செய்து முக்தி அடைந்தான்
குசாவர்த்த காட் -க்ருத யுகத்தில் அத்ரி மஹரிஷியின் புதல்வரான தத்தாத்ரேயராக திருமால் திருவவதாரம்
இங்கு நான்கு சீடர்களுக்கு நான்கு வேதங்களை உபதேசித்து இங்கேயே தவம் புரிந்தார்
அவருடைய தர்பம் மரவுரி கமண்டலம் த்ரிதண்டம் ஆகியவை இங்கு உள்ளன
சதீ குண்ட்-தக்ஷ பிரஜாபதி யாகத்தில் அவருடைய மகள் சதீ தேவி உயிரை நீத்த இடம் -திருமால் தோன்றி அவளை மீண்டும் உயிர்ப்பித்தார் –
ப்ரஹ்ம குண்டம் -ஹரி கீ பைடி –இங்கு திருமால் ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கையை ஆராதித்து முக்தி பெறுவது உறுதி என்று நான்முகன் சுவேதன் என்னும் அரசனுக்கு உபதேசித்தான்
தினம் கங்கா ஹாரத்தி நடைபெறுகிறது -ஸ்ரீ பத்ரீகாஸ்ரமம் அடைய படிக்கட்டு -பைடீ -இது
பகீதரனின் தவப்பயனாக ஆகாயத்தில் இருந்து இறங்கிய கங்கை ஹிமாசலத்தில் ஓடி முதலில் பூமி மட்டத்தில் ஓடாத தொடங்கியது இங்கு தான்
காவுகாட்-கோ மாதாவிடம் அபசாரப்பட்டால் இங்கு நீராடி பாபம் விலகப் பெறலாம் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஆறாம் பாகம் —ஸ்ரீ கயா /ஸ்ரீ வாரணாஸீ-காசீ க்ஷேத்ரம் /பிரயாகை -த்ரிவேணீ சங்கமம் /திரு அயோத்யா /திரு நைமிசாரண்யம் மஹாத்ம்யங்கள் —-

October 18, 2017

ஜீவதோர் வாக்ய கரணாத் பரத்யப்தம் பூரி போஜநாத்-
கயாயாம் பிண்ட தாநாத் ச த்ரிபி புத்ரஸ்ய புத்ரதா –மகனின் கடமைகளை சொல்லும் வாக்கியம் –
ஷேத்ரத்தின் பெயர்க்காரணம்
மகத நாட்டில் மதுவனம் -சம்பகாரண்யம் -கோலாஹல பர்வதம்-என்னும் இடத்தில் உள்ள க்ஷேத்ரம் கயா -கயன் என்ற அசுரன் இருந்தான் –
அவன் உடல் பத்து சதுர மயில் நீள அகலம் -அவன் பெயரால் அதே பரப்பளவுடன் கயா க்ஷேத்ரம் –
ப்ரம்மாவின் புத்திரர் மரீசி ஒய்வு எடுக்க -அவரது தர்மபத்தினி தர்மவாதி அவர் திருவடிகளை வருட -அங்கு பிரம்மா வர -மரியாதை நிமித்தமாக அவள் எழுந்திருக்க
கோபமுற்ற மரீசி கல்லாக போம்படி சபிக்க -ஆயிரம் ஆண்டுகள் தர்மவாதி தவம் புரிந்து -ஸ்ரீ மன் நாராயணன் திரு உள்ளம் மகிழ்ந்து
அவளுடைய சிலா உருவத்தின் மேலே அனைத்து தேவர்களும் வாழ்வார்கள் என்று வரம் அளித்தார் –
கயன் என்னும் அசுரன் தவம் புரிந்து கொண்டே இருக்க -மகிழ்ந்த திருமால் அவன் உடல் அனைத்து புண்ணிய நதிகளை விட புனிதமானதாக இருக்கும் என்று வரம் அளித்தார் –
பின்னும் கயன் தொடர்ந்து தவம் புரிய உலகமே நடுங்கிற்று -விஷ்ணுவின் ஆலோசனை படி ப்ரஹ்மா தான் யாகம் செய்ய கயனின் புனிதமான உடலை வேண்டினார் –
உடன்பட்ட கயன் தூங்கும் போது ப்ரஹ்மா யாகம் செய்யத் தொடங்க -யாகம் முடிவடைவதற்கு முன்னே கயன் எழுந்திருக்க முற்பட –
தேவர்கள் தர்மவாதி சிலையை அவன் மேல் வைத்து அழுத்த -அவன் உடல் நடுக்கம் அதனாலும் அடங்காமல் இருக்க -கதையை ஏந்தி
விஷ்ணு ஒரு திருவடியால் அந்த சிலையின் மேல் நிற்க -கதாதரப் பெருமாள் நின்றவுடன் கயனின் உடல் நடுக்கம் அடங்கியது –
அவன் உடல் கிடைக்கும் பத்து மைல் பரப்பு தான் இன்று கயா க்ஷேத்ரம் -விஷ்ணுவின் திருவடி வரைய பட்ட தர்மவதி சிலையை நாம்
பிண்ட தானம் செய்ய விஷ்ணு பாதமாக போற்றுகிறோம் -கயா ஷேத்ரத்தில் பிண்ட தானத்தை எங்கு செய்தாலும் -எந்த திதியில் செய்தாலும் -அது புண்ணியமே –

கயா ஸ்ரார்த்தத்தின் மஹிமை –
ஸ்ராத்த பிரகல்பிதா லோகா ஸ்ராத்தே தர்ம ப்ரதிஷ்டித
ஸ்ராத்தே யஜ்ஞாஹி திஷ்டந்தி சர்வ காம பல ப்ரதா–சந்தான உத்பத்தி ஏற்படும் –தான தர்மங்கள் நிலை பெரும் –
ஸ்ராத்தே யத்தியதே கிஞ்சித் தேவ விப்ர அக்னி தர்பணம்
ஸ்ராத்தே தத் விஜானியாத் புறா ப்ரோக்தோ மஹர்ஷிணா–தேவர்கள் பித்ருக்கள் அக்னி திருப்தி அடைகிறார்கள் –
கயாவில் பல்குனி நதி -கயா சிராஸ் -ப்ரம்ம சுரேஷ் -மதங்கவாபி பிரேத சிலா -இடங்கள் ஸ்ரார்த்திருக்கு உரியவை
இவற்றுள் பல்குனி தீர்த்தம் விஷ்ணு பாதம் அக்ஷயவடம் -முக்கியமாக சொல்லப் படுகின்றன –
கயாவில் எட்டு நாட்கள் தங்கி அஷ்ட ஸ்ரார்த்தங்கள் -கூபகயா / மதுகயா / பீம கயா /வைதரணி /கோஷ்பதம்/பல்கு/விஷ்ணு பாதம் /அக்ஷயவடம் -இடங்களில் செய்வது ஸ்லாக்யம்-
தீர்த்த சம்பந்தமான ஷவ்ரம் உபவாசம் கயாவில் இல்லை –
கயாவில் பாயாசம் அன்னம் சத்துமாவு அரிசி இவைகளில் ஒன்றினால் பிண்டதானம் செய்யலாம்
அக்ஷயம் என்று சொல்லி கொஞ்சமாக தரப்பட்டாலும் ஹோம அர்ஹமான அன்னத்தை தந்த பலன் கிட்டும் –
1-தந்தை 2-தாயார் 3-மனைவி 4-சகோதரி 5-பெண் 6-அத்தை -7-தாயின் சகோதரிகள் இந்த ஏழு குடும்பங்களில் -101-தலைமுறைகள் நல்ல கத்தி அடைகிறார்கள்
ஏஷ்ட வ்யா பஹவ புத்ரா யதி ஏகோபி காயம் வ்ரஜத–பத்ம புராணம் –
ததோ காயம் சமாசாத்ய ப்ரஹ்மசாரி ஸமாஹித அஸ்வமேதம் அவாப்னோதி கமனா தேவ பாரத –மஹா பாரதம் -அஸ்வமேத யாக பலன் கிட்டும் –

கயா ஸ்ரார்த்த முறைகள் –
ஸ்ரார்தத்தை கயாவாசிகளை வ்ரித்தே செய்ய வேண்டும்
கணவன் மனைவி சேர்ந்து கயா ஸ்ரார்த்தம் செய்வது சிறந்தது
கருப்பு எல்லையே உபயோகிக்க வேண்டும்
தந்தை தாய் பரம பதித்து ஓர் ஆண்டுக்கு பிறகே கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்
தந்தை பரமபதித்து தாய் ஜீவித்து இருக்கும் போது கயா ஸ்ரார்த்தம் செய்யலாம் -ஆனால் தாய் பரமபதித்து தந்தை ஜீவித்து இருந்தால் செய்ய முடியாது
பார்வண முறைப்படி ஹோமம் செய்பவர் அதற்கென தனியே ஸ்ரார்த்த தளிகை பண்ணி கையாவாசிக்கு போஜனம் இட வேண்டும்
ஹோமம் இல்லாமல் ஸ்ரார்த்தம் செய்பவர்களே சமஷடியாக செய்ய முடியும்
பல்குனி நதியில் ஸ்நானம் விஷ்ணு பாதத்தித்த்தில் ஸ்ரார்த்தம் அக்ஷய வடத்தில் பிண்ட பிரதானம் ஆகியவை முக்கியம்
-13-நாட்களோ -7-நாட்களோ கயையில் தங்கி ஸ்ரார்த்தம் செய்வது விசேஷம்
பிண்ட தானம் கொடுக்கப்படும் உறவினர்கள் -பித்ரு வர்க்கம் 3-/மாத்ரு வர்க்கம் -3-/மாதாமஹ வர்க்கம் -3-/மாதா மஹி வர்க்கம் -3-/
சபத்நீ மாதா/ சிறிய பெரிய தகப்பனார் /பிராதா / பிராதாவின் பத்னீ /அத்தை /தாய் வலி பெரிய சிறிய தாயார்கள் /சகோதரி /சகோதரியின் கணவன் /
மாமா /மாமாவின் மனைவி /பெண் /மாமனார் /மாமியார் /மைத்துனன் /ஆச்சார்யன் /சிஷ்யன் /எஜமானன் /மற்ற பந்துக்கள்
நற்கதி அடைய /துர்மரணம் அடைந்தார்க்கும் நற்கதி அடைய /

பெற்ற தாய்க்கு தனி சிறப்பு -பிரத்யேகமாக -16-பிண்டங்கள் –
1–கர்பஸ்ய தாரணே துக்கம் விஷமே பூமி வர்தமநீ -தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
2–யாவத் புத்ரோ ந பவதி தாவணி மாதுஸ் ச சந்தனம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம் –
3–மாசி மாசி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவவேஷூச தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
4–சம்பூர்ணே தஸமே மாசி ஹ்ருத்யந்தம் மாத்ரு பீடனம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
5–சவ்சில்யம் ப்ரஸவே மாதா விந்த திதுஷ் க்ருதம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
6—பத்ப் யாஸ்து ஜனயேத் புத்ர ஜனன்யா பரிவேதனம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
7—அக்னி நாசோஷயேத் தேஹம் த்ரிராத்ரே உபயோஷநம் ச யத் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
8–பபவ் யா கடுத்ரவ்யானி க்வாதாநி விதித்த நிச தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
9—அஹர்நிசம்ஸ்து யன்மாது ஸ்தனபோடாம் அதாமஹம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
10–ராத்ரவ் மூத்திர புரீஷாப்யாம் பித்யதே மாத்ரு கம்பபவ் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
11–மாகே மாசி நிதாகே சசிசிரா ஆதப தூக்கிதா தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
12–ஷூத் த்ருட்ப் யாம் வ்யாகுலஸ் யார்த்தே அன்னாஹாரம் பிரயச்சத்தி தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
13– புத்தரே வியாதி சமாயுக்தே சோகார்தா ஜநநீ ச யா தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
14–அல்பாஹாரா ச யா மாதா யாவத் புத்ரோஸ்த்தி பாலக தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
15—காத்ர பங்கோ பவேந் மாது ம்ருத்யுரேவ ச சம்சய தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
16–யமத்வாரே மஹா கோரேக் யாதா வைதரணீ நதீதஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம் –

பிண்ட தானம் முடிந்த பின் –
ஆக தோஸ்மி காயம் தேவ பித்ரு கார்யே கதாதர தமேவ சாஷீ பகவான் அந்ருணீஹம் ருணத்ரயாத்–தேவ ரிஷி பித்ரு கடன்கள் நீக்கி அருள பிரார்த்தனை –

பால்குனி நதி -பல்கு நதி என்றும் சொல்வர் –ஆண்டுக்கு ஆறு மாதங்களே தண்ணீர் ஓடும் -மீதமுள்ள மாதங்களில் ஊற்று போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
விஷ்ணு பாதம் -பால்குனி நதிக் கரையில் உள்ள கோயில் -எட்டு கோணங்களில் உள்ள வேதிகையின் மேல் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திருவடி உள்ளது
இக்கோயிலில் வெளியுள்ள சபா மண்டபத்தில் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்
கதாதரன் -விஷ்ணு பாத கோயிலில் வட கிழக்கே சதுர்புஜ மூர்த்தி சந்நிதி
அக்ஷயவடம் -ப்ரம்ம சரோவர் மற்றும் வைதரணி சரோவருக்கு அருகே உள்ள ஆலமரம் இங்கே பிண்ட தானம் கொடுக்கிறோம் –

————————————–
ஸ்ரீ வாரணாஸீ-காசீ க்ஷேத்ர மஹிமை –

முத்தி தரும் ஷேத்ரங்கள் ஏழினுள்ளும் ஓன்று -ரிக் வேதம் ஆப இவ காசிநா சங்க்ருஹீதா -என்றும் –
யஜ்ஞ காசீ நாம் பாரத ஸாத்வதமிவ-என்றும் புகழப்பட்ட புராதீன க்ஷேத்ரம்
இந்த க்ஷேத்ரம் தோன்றிய போது மாதவ புரி என்ற பெயர் –

வrரணாஸ் ஸீச நத்யவ்த்வே புண்யே பாபஹரே உபே
த்வயோர் அந்தர் கதா யா து ஸைஷா வாராணஸீ ஸ்ம்ருதா-

வரணா மற்றும் அஸீ இரண்டு நதிகளுக்கு நடுவே -பனாரஸ் மருவி வந்த பெயர்
காசாயதி ப்ரகாசயதி இதம்சர்வம் யா சா காசீ –சத்விஷயங்கள் அனைத்தையும் ப்ரகாசப்படுத்துகிற படியால் காசீ
காசீ காசீதி காசீதி ஜெபத்தோ யஸ்ய சம்ஸ்திதி அந்யத்ராபி சதஸ் தஸ்ய புரோ முக்தி ப்ரகாஸதே–எங்கு இருந்து காசீ காசீ என்று ஜபித்தாலும் மோக்ஷம் பிரகாசிக்குமே
மற்ற பெயர்கள் -ஆனந்த கானகம் /-மஹா சமாசானம் /ருத்ர வாசம் /காசிகா / தபஸ்தலி /முக்தி பூமி/ சிவபுரீ –

வாராணஸி து புவனத்ரய சார பூதா ரம்யாந்ருணாம் ஸூ கதிதா கில ஸேவ்ய மாநா
அத்ராகதா விவித துஷ்க்ருத காரினோஅபி பாபஷயே விரஜஸ ஸூ மந ப்ரகாசா –ஸ்ரீ நாரத புராணம் –
அந்யாநி முக்தி ஷேத்ராணி காசீ பிராப்தி கராணிச காசீம் ப்ராப்ய விமுச்யேத ந அந்யதா தீர்த்த கோடிபி–ஸ்கந்த புராணம்
-காசீ ஒன்றே நேரே முக்தி மற்ற முக்தி தரும் ஷேத்ரங்கள் காசீ வாழ்வைக் கொடுத்தே முக்தி தருபவை —
ப்ரஹ்ம கபாலம் ஒட்டிக் கொள்ள பல க்ஷேத்ர யாத்திரை செய்ய -பாகீரதி நதிக்கரையில் உள்ள வாராணஸீ க்ஷேத்ரம் அடைந்த உடன் ப்ரஹ்ம ஹத்தி தோஷம் நீங்க
கபாலமும் வெடித்து -இவ்விதமே கபால மோக்ஷ தீர்த்தம் -பின்னர் ஸ்ரீ மஹா விஷ்ணுவிடம் இதையே நித்ய வாசஸ்தானமாக வரம் வேண்ட –
அந்த வரம் அளித்த விஷ்ணுவின் கண்களில் அந்தக் கண்ணீர் துளிர்க்க -அந்த கண்ணீர் விழுந்த இடமே பிந்து சரோவர் -அந்த பெருமாளே பிந்து மாதவன் –
பரமசிவன் விஸ்வநாதர் என்னும் நாமத்துடன் விளங்குகிறார் -ஸ்கந்த புராணம் ப்ருஹன் நாரதீய புராணங்கள் இந்த க்ஷேத்ர மஹாத்ம்யம் கூறும் –

த்வியோஜனம் அத அர்தம் ச பூர்வ பச்சிமத ஸ்திதம் அர்த யோஜனா விஸ்தீரணம் தக்ஷிண உத்தர ஸ்ம்ருதம் -நாரத புராணம்
வரணாசிர் நதீ யாவத் அஸி சுஷுக நதீ சுபே ஈஷா ஷேத்ரஸ்ய விஸ்தார ப்ரோக்தோ தேவேந சம்புனா –அக்னி புராணம்
காசீ க்ஷேத்ரம் கிழக்கு மேற்காக 20-மைல் நீளம்-தெற்கு வடக்காக -4-மைல் அகலம்
இங்கே தீட்டே கிடையாது –

-50-/-60-படித்துறைகள் உண்டு /ஐந்து பிரசித்தம்
1–வரணா சங்கம் காட் -மேற்கில் இருந்து ஓடிவரும் வரணா நதி கங்கையில் கலக்கும் இடம் -இதன் அருகில் படிக்கட்டுக்கள் மேல் ஆதிகேசவன் திருக் கோயில் உண்டு
2–பஞ்ச கங்கா காட் –யமுனா சரஸ்வதி கிரணா மற்றும் தூதபாபா கங்கையோடு கலக்கின்றன –
படிக்கட்டுக்கள் மேல் அக்னி பிந்து என்னும் அந்தணனுக்கு வரம் கொடுத்து அருளிய பிந்து மாதவன் திருக் கோயில் உண்டு
3– மணி கர்னிகா காட் -இந்த காட்டுக்கு மேலே மணிகர்ணிகா குண்டம் உள்ளது -இந்த குண்டத்தின் தண்ணீர் எட்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியேறுகிறது
அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியே தூய தண்ணீர் தானே வந்து இந்த குண்டத்தை நிரப்புகிறது
4–தசை அஸ்வமேத காட் -ப்ரஹ்மா பத்து அஸ்வமேத யாகங்களை செய்தார் -ஜ்யேஷ்ட சுக்ல தசமி அன்று முடியும் கங்கா தசராவின் போது இங்கே நீராட்டம் சிறப்பு
இத காட்டுக்கு மேலே பாலா முகுந்தர் கோயில் உள்ளது
5–அஸீ சங்கம் காட் -இங்கு அஸீ நதி கங்கையில் கலக்கிறாள் –

அஷேஷூ சக்த மதிநாச நிராதரேண வாராணஸீ ஹரபுரி பவதா விதக்தா -அதி மானுஷ ஸ்தவம் -பவ்ண்ட்ரக வாஸூ தேவன் கண்ணன் இடம் அபசாரப் பட
அவனை கண்ணன் அளிக்க -அவன் நண்பன் காசீ ராஜன் கோபமுற்று க்ருத்யையை ஏவ கண்ணன் தன சக்ரத்தை ஏவி க்ருத்யையையும் காசீ நகரத்தையும் எரித்து விட்டதே
பிற்காலத்தில் காசீ நகரம் மீண்டும் நிர்மாணம் செய்யப்பட்டது –

——————————————

பிரயாகை -த்ரிவேணீ சங்கமம் மஹிமை –

அலஹாபாத் –கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் -/ வேணி –பின்னல் -/ ஸ்ரீ மஹா லஷ்மியின் மூன்று பின்னல்கள் இவை –
தேவ ப்ரயாக் / நந்த ப்ரயாக்/ கர்ண ப்ரயாக் /ருத்ர ப்ரயாக் / கேசவ ப்ரயாக்/ விஷ்ணு ப்ரயாக் / உண்டே -இவற்றுக்குள் இதுவே பிரதானம் –
ப்ரக்ருஷ்டோ யாகோ யத்ர யத்ர யஜ்ஞா பிரகர்ஷேண பவதி இத்யர்த்த –எங்கு சிறப்பாக யாக யஜ்ஞங்கள் நடை பெருகின்றனவோ அந்த தீர்த்த ஸ்தானமே பிரயாகை –
ப்ரஹ்மா இத்தலத்தில் யாகம் செய்தே ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கினார் –

ப்ராஹ்மீ ந புத்ரீ த்ரிபதாஸ் த்ரிவேணீ சமாகமேன அஷத யோக மாத்ரான்–என்றும்
யாத்ராப் லுதான் ப்ரஹ்ம பதம் நயந்தி ச தீர்த்த ராஜோ ஜயதி பிரயாக–ஸ்ரீ பாத்ம புராணம் –ப்ரஹ்ம பாதத்தை நல்கும் ராஜ பிரயாகை இது
க்ரஹாணாஞ்ச யதா ஸூர்யா நக்ஷத்ராணாம் யதா ஸசீ தீர்த்தானாம் உத்தமம் தீர்த்தம் ப்ரயாகாக்யம் அநுத்தமாம் –

1–அக்ஷய வடம் –திரிவேணி சங்கமத்தின் அருகில் இந்த ஆலமரம் உள்ளது -இதன் இலையில் தான் பிரளயத்தில் பால முகுந்தன் சயனம் –
ஆதி வட சமாக்யாத கல்பாந்தேபி ச த்ருச்யதே சேதே விஷ்ணுர் யஸ்ய பத்ரே அதோயம் அவ்யய ஸ்ம்ருத –
2–வேணி மாதவன் -ஆதி காலத்தில் தொடங்கி தீர்த்த ரூபத்தில் ஸ்ரீ வேணி மாதவர் எழுந்து அருளி உள்ளார்
மாதவாக்ய தத்ர தேவ ஸூகம் திஷ்டாதி நித்யாச தஸ்ய வை தர்சனம் கார்யம் மஹா பாபை ப்ரமுச்யதே –மாதவனை தரிசிக்க தீது ஒன்றும் அடையா ஏதமும் சாராவே –
3–சங்கமம் -கங்கை ஒரு வண்ணம் / யமுனை ஒரு வண்ணம் / சரஸ்வதி அந்தர்வாஹினி -அந்தணர் நித்யம் பூஜிக்கும் மூன்று அக்னி ஸ்தானங்கள் இவை
கங்கை யமுனை சேரும் மையைப் பகுதி கார்ஹபத்யாக்நி/ தனியே கங்கை ஓடி வரும் பகுதி ஆஹவனீய அக்னி /தனியே யமுனை ஓடி வரும் பகுதி தக்ஷிணாக்கினி
4—பரத்வாஜ ஆஸ்ரமம் -ஸ்ரீ ராமர் பரத்வாஜரை சந்தித்த இடம்– இவர் இடம் வழி கேட்டு இங்கு இருந்து சித்திர கூடத்திற்கு சென்றார்
5—கும்ப மேளா –பிரயாகை / ஹரித்வார் –கங்கை உஜ்ஜைன் ஷிப்ரா நதி சங்கமம் / நாசிக் -கோதாவரி நதி ஆகிய இடங்களில் நடைபெறும்
அமுதக் கும்பம் – தன்வந்திரி -தோன்றி -இந்த நான்கு இடங்களில் சிந்த -இங்கு நடப்பதே சிறந்தது என்பர் –
2-ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் /ப்ருஹஸ்பதி வ்ருஷப ராசியிலும் ஸூர்யன் மகர ராசியிலும் இருக்கும் போது கும்ப மேளா நடைபெறும்
சாந்த்ரமான மாக மாதத்தில் -தை மாதத்தில் பிரயாகையில் கும்பமேளா நடைபெறும் -ஆண்டு தோறும் தை மாதம் நீராடல் சிறப்பு ஆகும்
ப்ரயாகேது நரோ யாசித்து மாக ஸ்நானம் கருதி ச ந தஸ்ய பல சங்க்யானி ஸ்ருணு தேவர்ஷி சத்தம–பாத்ம புராணம் –

இங்கே நீராடி கொத்தலர் பூங்குழலாள் கூந்தல் மலர் மங்கையான ஸ்ரீ மஹா லஷ்மியின் அருள் பெறுவோம் –

——————————————————-

திரு அயோத்யா மஹாத்ம்யம் —

சரயு நதிக்கரையில் தென்கரையில் அமைந்துள்ள க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட அம்சம் -ஸ்வாயம்புவ மனுவுக்கு ஸ்ரீ மன் நாராயணன் கொடுக்க –
அதை அவர் மனுவுக்கு கொடுக்க -அவரால் சரயூ நதிக் கரையில் அமைக்கப்பட்டது -முத்தி தரும் ஏழு ஷேத்ரங்களுள் முதன்மை பெற்றது
ஸூர்ய வம்சத்தவர்களான இஷுவாகு தொடக்கமான மன்னர்களின் தலைநகரம் -சாகேதம் என்னும் பெயர் பெற்றது -சராசரங்களை வைகுந்தத்துக்கு கொண்டு சென்று அருளியதால்
குசனாலே புனர் நிர்மாணம் பண்ணப்பட்ட க்ஷேத்ரம் -ஐந்து ஆழ்வார்கள்–பெரியாழ்வார்-3-9-6/3-9-8/3-9-10/3-10-4/3-10-8/4-7-9-ஆகிய ஆறு பாடல்கள்
-குலசேகரர் -8-6/8-7-/10-1/10-8-ஆகிய இரண்டு பாடல்கள் -தொண்டர் அடிப்பொடியார்-திருப்பள்ளி -4/ -நம்மாழ்வார் –7-5-1/திருமங்கை ஆழ்வார் 10-3-8/
ஆகியோரால் மொத்தம் -13-பாடல்களால் – மங்களாசாசனம் -ஸ்ரீ ரெங்க ப்ரணவாகார விமானம் பெரிய பெருமாளோடு இஷுவாக்குவாள்ஸ்தாபிக்கப்பட்டு
ஸ்ரீ ராமபிரான் வரை ஆராதிக்கப்பட்டு வந்தது –
தர்சன ஸ்தானங்கள் –
1–ஸ்ரீ ராம ஜென்ம பூமி -த்ரேதா யுகத்தில் திருவவதாரம்
2–அரண்மனைகள் -தசரதர் கௌசல்யா ஆகியோர்கள் -கைகேயி கோபம் கொண்டு கிடந்த கோப புவனமும் உண்டு -தர்சனேஸ்வர் மஹாலும் உண்டு
3–கனக பவன் -ஸ்ரீ சீதா ராமர்களின் அந்தப்புரம் -ப்ராசீனமான
சிறிய மூர்த்திகள் சிங்காதனத்தில் பெரிய மூர்த்திகள் தர்சனம்-
4– பரத்பவன் -தசரதன் புத்ர காமேஷிடி பண்ணிய இடம் இன்றும் ஹோம குண்டத்துடன் காட்சி
5–லஷ்மண காட் -ஸ்ரீ வைகுண்டத்துக்கு புறப்பட்ட இடம்
6–குப்தார்காட் -15-கி மி தூரம் -சராசரங்களை சாந்தா நிக்க லோகத்துக்கு உய்த்துப் புறப்பட்ட இடம்
7–தசரத தீர்த்தம் -அந்திமச் சடங்குகள் செய்யப்பட இடம்
8—ஹனுமான் கடீ-60-படிகள் கொண்ட சிறிய குன்றின் மேல் திருவடி அமர்ந்த திருக் கோலம்
9–சரயூ -கோ தானத்துக்கு பிரசித்தி
10–வால்மீகி பவன் –வால்மீகி லவ குசர்கள் தர்சனம் -24000-ஸ்லோகங்களையும் தரிசிக்கலாம் –
11–அம்மாஜி மந்திர் -தென் திசை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிர்மாணித்த ஸ்ரீ ராமர் திருக் கோயில்
12–நந்திக்கிராமம் –பரத குண்டம் -25-கி மி தெற்கே -அலஹாபாத் மார்க்கத்தில் உள்ள இடம் -திருவடி பரதன் ஆலிங்கனம் தர்சனம் –
பெருமாள் இங்கே வந்து சடைமுடி கழித்து பின்பே திரு அயோத்யைக்குள் பிரவேசித்தார்

——————————————-

திரு நைமிசாரண்யம் மஹாத்ம்யம் –

திரு அயோத்யைக்கு வடமேற்கு திசையில் -200-கி மி தூரம் /பெரிய திருமொழி -1-6-மங்களா சாசனம் -சரணாகதி அனுஷ்டிக்கிறார் திருமங்கை ஆழ்வார் இங்கே –
காடுகளின் இன்றியாமையை உணர்த்தி அருள அரண்யம் காடு ரூபி /ப்ரஹ்ம வனம் –ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் -பத்ம நாபோ அமர பிரபு மர பிரபு –
கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்துடன் ஸ்ரீ தேவ ராஜர் ஸ்ரீ புண்டரீக வல்லி -சேவை சாதிக்க -ஸ்ரீ ஹரி விமானம் /
கோமுகி அல்லது கோமதி நதி திவ்ய விஸ்ராந்தி தீர்த்தம் மற்றும் சக்ர தீர்த்தம்-
இந்திரன் சுதர்மன் மற்றும் தேவ ரிஷிகளுக்கு பிரத்யக்ஷம் –

ரிஷிகளுக்கு தொல்லை கொடுத்த அசுரர்களை திருமால் ஒரு நிமிஷத்தில் நிரசனம் -அதனால் நைமிசாரண்யம் –
நிமிஷாந்த மாத்ரேண நிஹதம் ஆஸூரம் பலம் யத்ர தத தத்து நிமிஷம் அரண்யமிதி -என்றவாறு
தவம் புரிய விரும்பிய ரிஷிகள் இடம் நான்முகன் ஒரு சக்கரத்தைக் கொடுத்து அது உருண்டு அதன் வெளிப்பகுதி நேமி எவ்விடத்தில் தட்டி நிற்கிறதோ
அதுவே தவம் புரிய சிறந்த இடம் என்று கூற -நேமி நின்ற அரண்யம் நைமிசாரண்யம் -என்றுமாம் –
ப்ராம்மணா விஸ்ருஷ்டஸ்ய மநோ மய சக்ரஸ்ய நேமி சீர்யதே யத்ர இதி நைமிசம் தாதாக்யம் அரண்ய இதை போத்யம் -என்றவாறு
நிமிஷம் என்னும் ஒரு வகையான தர்பம் புள் வளர்ந்து இருக்கும் அரண்யம் நைமிசாரண்யம் என்றுமாம் –

தர்சிக்க வேண்டிய ஸ்தலங்கள் –
1–சக்ர தீர்த்தம் -நேமி பூமியில் புகுந்த இடம் -மையப் பகுதியில் ஊற்றுப் போலே தண்ணீர் வலிந்து கொண்டே இருக்கிறது -இதன் வெளிப்பகுதியில் நீராட வேண்டும்
2—வ்யாஸ சுக தேவ மந்திர் -கோயிலுக்குள் சுகதேவரின் திரு உருவமும் வெளியில் வியாசரின் பீடமும் உள்ளன –
இங்கு இருக்கும் ஆலமரத்தின் நிழலிலே -18-புராணங்களும் முற்காலத்தில் ஒத்தப்பட்டன –
3—ஸூத பவ்ராணிக ஸ்தானம் -ரோமா ஹர்ஷணர் இங்கே அமர்ந்து புராணம் சொல்ல -பலராமர் வர -அவரைக் கவனிக்காமல் இருக்க
கோபமுற்ற பலராமர் கலப்பையால் தட்ட அவர் இறக்க -பக்தர்கள் துன்பப்பட பலராமர் ரோமா ஹர்ஷனரின் புதல்வரான ஸூதர் என்பவருக்கு
எளிமையாக புராணக்கதை சொல்லும் வல்லமையை அளித்தார் -இங்கே அமர்ந்து சவ்நகர் முதலான ரிஷிகளுக்கு -18- புராணங்களை உபதேசித்தார் –
4–அஹிமஹி ராவண ஸ்தானம் -உத்தர பாரதத்தில் உள்ள வ்ருத்தாந்தம் –
இந்திரஜித்தை லஷ்மணன் கொன்றதும் ராவணன் தன சகோதரனான அஹி ராவணனை அணுகினான் -பாதாள உலக அரசன் மஹி ராவணனின் உதவியோடு
ராம லஷ்மணரை கடத்திச் செல்ல அகஸ்தியர் இந்த ரஹஸ்யம் வெளியிட திருவடி விரைந்து பாதாள லோகத்துக்கு சென்று
அஹி மஹி ராவணர்களை அளித்து ராம லஷ்மணர்களை மீட்டார் -இங்கே பெரிய வடிவத்தில் இருக்கும் திருவடியை தரிசிக்கலாம்
5—கோமதி நதி -இந்த நதிக் கரையில் தான் -88000-ரிஷிகள் நேமி தட்டிய இடத்தில் இருந்து ஞான சத்திரம் புரிந்தனர்

இந்த க்ஷேத்ரத்தைத் தான் ஸ்ரீ ராமர் தனது யஞ்ஞ சாலையாகக் கொண்டு அஸ்வமேத யாகம் புரிந்தார் –

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஐந்தாம் பாகம் —ஸ்ரீ பூரி ஜெகந்நாத க்ஷேத்ர மஹிமை —

October 18, 2017

வர்ஷாணாம் பாரத சிரேஷ்ட தேஸாநாம் த்கால ஸ்ம்ருத
உத்கலஸ்ய சமோ தேச நாஸ்தி மஹீ தலே –வர்ஷன்களுக்குள் பாரதமும் தேசங்களில் உதகளமும் -ஒடிஷா -ஒப்பு உயர்வற்றவை –

உத்கல க்ஷேத்ரம் –சங்க க்ஷேத்ரம் –பூரி / பத்ம க்ஷேத்ரம் -கோனாரக் /சக்ர க்ஷேத்ரம் -புவனேஸ்வரம் /கதா க்ஷேத்ரம் -ஜாஜபுரா -ஆகியவற்றை உள்ளடக்கியது
இவை அனைத்தும் -100-சதுரமைல் பரப்பு -/பூரி -5-க்ரோசங்கள் -10-சதுரமைல் பரப்பு /
-6-சதுரமைல் கடலுக்குள்ளும் -4-சதுரமைல் நிலத்திலும் சக்ர வடிவத்தில் உள்ளது –20-கிலோ மீட்டர் சுற்றளவு –
சங்கம் தோன்றிய நாள் -மார்கழி தேய்பிறை பஞ்சமி -அன்று வளம் வருவது மரபு –
பாத்ம ப்ரஹ்ம ஸ்கந்த புராணங்கள் இதில் மஹாத்ம்யம் கூறும் –

சார்தாம் –ஸ்ரீ பத்ரீ/ஸ்ரீ பூரி/ ஸ்ரீரங்கம்/ஸ்ரீ த்வாராகா /நான்கு எல்லைகளில் -உள்ள புண்ய ஷேத்ரங்கள் /பரம பாவனம் இங்கு யாத்திரை செல்வது
ஸ்ரீ மன் நாராயணன் விடியற்காலையில் ஸ்ரீ பதரியில் நீராடி -ஸ்ரீ த்வாராகாவில் திருவஸ்த்ரம் தரித்து /ஸ்ரீ புரியில் திரு அமுது செய்து திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளுகிறார் –
ஸ்ரீ பூரி -பல பெயர்களுடன் விளங்குகின்றது –
1–ஸ்ரீ க்ஷேத்ரம் –ஸ்ரீ மஹா லஷ்மியின் கேள்வன் ஸ்ரீ புருஷோத்தமன் உறையும் தேசம் –
2–சங்க க்ஷேத்ரம் -சங்க வடிவில் இருப்பதால்
3—புருஷோத்தம க்ஷேத்ரம் -அபுருஷன் -அசேதனங்கள்-/புருஷன் பத்த -கட்டுண்ட ஜீவர்கள் /உத்புருஷன் -முக்த ஜீவர்கள் /உத்தர புருஷன் நித்ய ஸூ ரிகள்/
இவர்களை விட வ்யாவருத்தமானவன் புருஷோத்தமன் உத்தம புருஷன் -ஸ்ரீ கீதை -15-புருஷோத்தம வித்யை விளக்கும் –
4–நீலாஸலம் -நீலமலையில் உள்ளபடியால் இப்பெயர் -இதுவே புராதானப் பெயர்
5–பூஸ்வர்கம்–ஸ்வர்க்கம் போலெ மிதமான தட்ப வெப்பமும் இன்பமும் இங்கு எப்போதும் இருக்கிறபடியால் பூ லோக ஸ்வர்க்கம் –
6—நரஸிம்ஹ க்ஷேத்ரம் -இத் திருக் கோயில் கட்டிய பின்பு ப்ரஹ்மா ஒரு யாகம் செய்ய ஸ்ரீ நரஸிம்ஹர் உக்ர வடிவுடன் தோன்றி பின்பு சாந்தம் அடைந்ததால் இப்பெயர் –

ஸ்தல புராணம் –
க்ருத யுகத்தில் இந்த்ரத்யும்னன் என்னும் அரசன் — அவந்தி நகரை தலைநகரமாக கொண்ட மலேயா தேச அரசன் -தனது குல குருவினிடம்
பகவானை நேருக்கு நேர் தரிசிக்கும் பெருமையையுடைய புண்ய க்ஷேத்ரம் கண்டுபிடித்து கூற பிரார்த்திக்க -குருவும் ஷேத்ராடனம் போய்வரும் யாத்ரீகர்கள் இடம் வினவ
அதில் ஒருவர் -நான் அனைத்து புண்ய ஷேத்ரங்களையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன் –
பாரத வர்ஷத்தில் உத்கல-ஒடிஷா தேசத்தில் கடலுக்கு வடக்கே இருப்பது புருஷோத்தம க்ஷேத்ரம் -அங்கு அடர்ந்த கானகத்தின் நடுவே நீலமலை உள்ளது –
அங்கு இருக்கும் கல்பவிடம் என்னும் ஆலமரத்தின் மேற்கே ரோஹிணி குண்டம் புண்ய தீர்த்தம் உள்ளது -அதின் கிழக்கே ஒளிவிடும் நீல மணியால் ஆன
ஸ்ரீ வாசுதேவர் கோயில் கொண்டுள்ளார் -தீர்த்தத்துக்கு மேற்கே சைபர் தீபக் என்னும் ஆஸ்ரமத்தில் இருந்து சற்று தொலைவில் ஜகந்நாதர் கோயில் கொண்டுள்ளார்
ஒரு முழு ஆண்டு கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றேன் -மன்னா தங்கள் அங்கு சென்றால் பகவானை நேரே தரிசிக்கலாம் -என்று கூறி மறைந்தார் –
அரசன் குலகுருவிடம் நீலாசலம் சென்று ஜெகந்நாதனை தரிசித்து மோக்ஷம் பெற உதவ வேண்ட –
குருவும் தன தம்பி வித்யாபதியை முதலில் அங்கு சென்று விபரம் அறிந்து வராகி சொன்னார் –
வித்யாபதியும் விரைவில் மஹா நதியை அடைந்து அனுஷ்டானங்களை முடித்து ஏகாம்பர கானனம் என்ற புவனேஸ்வரத்தை தாண்டி
நீலாத்ரியைக் கண்டு -மலை உச்சியில் கல்பவடத்தை தரிசித்தார் -இரவாகிவிட்ட படியால் இருட்டில் அடர்ந்த காட்டில் தங்கினார் –
சிலரின் குரல் கேட்டு தொடர்ந்து சென்ற பொது ஸபர் தீபக் –மலைவாசி -ஆஸ்ரமத்தை அடைந்தார் -அங்கு இருந்த விச்வா வசூ-இவரை வரவேற்று பிரசாதம் அளித்தார் –
இந்த்ரத்யும்னன் இங்கு வந்து தங்குவார் என்று கோபி பட்டு இருக்கிறேன் -போவோம் வாரும் என்று சொல்லி கூட்டிப் போக பாதை குறுகி முள் நிறைந்து இருக்க
விடியலில் புண்யமான ரோஹிணி குண்டத்தை தரிசித்தனர் -பின் கல்பவடத்தை வணங்கி இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள தோப்பின் உள்ளே சென்று பேர் ஒளியுடன் உள்ள
பகவானை வியந்து வணங்கினார் -பின் வேகமாக மலை இரங்கி ஆஸ்ரமத்தை அடைந்து விச்வாவசூ அளித்த அமானுஷ்யமான சுவை கொண்ட மஹா பிரசாதத்தை உண்டார் –
இந்திரன் சமைத்து ஜெகந்நாதனை ஆராதித்து சேஷமான பிரசாதம் -இதை உண்டால் பாபங்கள் எல்லாம் தொலையும்-என்று ஜெகந்நாதனின் பிரசாத பெருமையை உரைக்க
வித்யாபதி -எங்கள் மன்னர் இங்கு வந்து நீல மாதவனை தரிசித்து ஒரு பெரிய கோயிலை எழுப்பி சிறப்பான பூஜை முறைகளையும் ஏற்படுத்துவார் -என்றார் –
ஆனால் விச்வாவசூ -மன்னார் வருவார் -ஆனால் இப்போது இருக்கும் பெருமான் அவர் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து விடுவார் -மன்னர் உபவாசம் இருக்க
பகவான் வேறு மர உருவத்தில் தோன்றி ப்ரஹ்மாவால் ஸ்தாபிக்கப் பட்டு பின் நெடும் காலம் காட்சி கொடுப்பார் -ஆனால் இவற்றை மன்னன் இடம் அறிவிக்க வேண்டாம் என்றார் –

வித்யாபதியும் விடை பெற்று மீளவும் அவந்தி புரியை அடைந்து பிரசாதத்தை மன்னனுக்கு கொடுக்க உடனே அங்கு செல்ல விருப்பம் கொண்டான்
தெய்வ சங்கல்பத்தால் நாரத ரிஷி அங்கு வந்து மன்னனின் விருப்பம் ஈடேறும் என்று ஆசீர்வதித்தார் -ஜ்யேஷ்ட மாத பஞ்சமி திதி அன்று
நாரதர் ராணி பிரஜைகள் புடை சூழ தேரில் புறப்பட்டு மஹா நதி கரையை அடைந்து இருக்க உத்கல மன்னன் காண வர -இருவரும் ஒருவரை ஒருவர் நமஸ்கரிக்க
சூறாவளியால் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டதை தெரிவிக்க -நாரதர் அனைத்தும் ப்ரஹ்மா கூறியபடியே நடக்கிறது –
பகவான் நான்கு உருவங்களோடு உனக்குத் தோன்றுவார் -நல்லதே நடக்கும் -என்று சொல்லி நீலாசலத்தை அனைவரும் அடைய
உக்ரமான நரஸிம்ஹ விக்ரஹத்தை கண்டனர் -நீல மாதவன் மண்ணால் மூடப் பட்டு இருப்பதையும் கண்டனர் -நரசிம்ஹ பெருமானை மேற்கு முகமாக எழுந்து அருள பண்ணி
யாக சாலை அமைத்து ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்ய
மன்னன் தியானத்தால் – -ஸ்வேத த்வீபத்தை கண்டு -அது ஸ்படிகக் கல்லால் ஆக்கப்பட்டு பாற் கடலால் சோள பட்டுள்ளதை கண்டான்
அங்கு ஆதிசேஷ பீடத்தில் ஸ்ரீ மன் நாராயணன் சதுர்புஜனாய் எழுந்து அருளி இருந்தான் -மன்னன் இந்த கனவை கூற நாரதர் –
பெருமாள் எழுந்து அருளும் தருணம் நெருங்கி விட்டது -அவர் தாரு-உரு விடுக்க இருக்கிறார் -கடற்கரைக்கு செல்வோம்-என்றார்
கிழக்கு கடலில் ஒளிவிடும் ஒரு மரம் உருவாக்கி மிதந்து வர -அவ்விடம் சக்ர தீர்த்தம் -எனப்படுகிறது -அதை ராஜா ராணி பக்தியுடன் பெற்றுக் கொண்டனர்
அசரீரி வாக்கு -இதை வஸ்த்ரத்தில் சுற்றி வையும் -ஒரு தச்சன் வந்து செதுக்குவார் -யாரும் உள்ளே செல்லக் கூடாது –
செதுக்கும் ஒலி வெளியில் கேட்க்காதபடி வாத்தியங்கள் முழங்க வேண்டும் -என்று சொல்ல
அரசனும் அதன் படியே செய்ய -தச்சன் வந்து செதுக்க -15-நாட்கள் கழிய ஒலி நிற்க -ராணி குண்டீஸா கதவைத் திறந்து பார்க்க விரும்ப அரசன் தடுத்தும் கேளாமல்
ராணி அறையைத் திறக்க ஆணை இட-திறந்த பொது தச்சன் அங்கு இல்லை -விக்ரஹங்கள் பாதி நிலையில் இருக்க -அசரீரி வாக்கியம் –
இந்த எளிய நிலையிலேயே தர்சனம் கொடுப்பார் என்று கூற -அன்று முதல் ஜெகந்நாதப் பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார் –

ஸ்ரீ புருஷோத்தமன் இவ்வுருவத்தில் இருக்கும் ரஹஸ்யம் –
கண்ணன் ஸ்ரீ மத் துவாரகையில் அஷ்ட மஹிஷிகளுடன் ஆனந்தமாக ராஜ்ஜியம் ஆண்ட போதும் -கோகுல பெண்டிர்களையே திரு உள்ளத்தில் நிறைந்து இருக்க
அஷ்ட மஹிஷிகளும் ரோஹிணி தேவியை வினவ -ரசமான லீலைகளே காரணம் -என்று சொல்ல அவற்றை மஹிஷிகள் கேட்க விருப்பம் கொள்ள
ரோஹிணி மாதா -கூறுகிறேன் ஆனால் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கோள் -என்றார் –
காவலுக்கு ஸ்ரீ ஸூபத்ரா தேவியை நிறுத்தி விட்டு
அனைவரும் கதை கேட்டு லயித்து இருக்க
அருகில் இருவர் வந்து நிற்பதை உணராமல் இருக்க -கதை கேட்டு மூவரும் மெய் மறந்து கை கால்கள் சுருங்கி விழிகள் விரிய நின்று கொண்டு இருக்க
நாரதர் அந்த சேவையைக் கண்டு ஆனந்த கூத்தாட -மூவரும் உணர்ந்து இயல்வு நிலையை அடைய முயல நாரதர் தடுத்து
தேவர்ர்ர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையை தரிசித்தால் பக்தர்கள் பாபங்கள் தொலைந்து முக்தி அடைவார்கள் –
இந்த எளிய திருக் கோலத்துடன் கோயில் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்திக்க
அதன் படியே பத்துடை அடியவர்க்கு எளியனான எம்பெருமான் இங்கே சேவை சாதித்து அருளுகிறார் –

கடைத் தலை சீய்த்த அரசன் –
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே–ரத்த யாத்திரைக்கு முன் பெருக்கிய அத்தேசத்து அரசன் புருஷோத்தமனுக்கு கல்யாணமே நடந்த ஐதீகம் –
தங்கத் துடைப்பத்தால் பெருக்குவது மரபு –காஞ்சிபுரம் சென்று ஸ்ரீ வராத ராஜனை தரிசித்த மன்னன் காஞ்சி மன்னன் மகளைக் கண்டு மையல் கொண்டான் –
இரு மன்னர்களும் சம்மதிக்க புருஷோத்தமன் ஸ்ரீ பூரி திரும்ப -முறையாக பேச காஞ்சி மன்னன் மந்திரியை அனுப்ப
அன்று ரத்த யாத்ரையாய் இருக்க -மன்னன் துப்புரவு செய்ய பொறுக்காத மந்திரி திரும்பி மன்னன் இடம் கூற பெண் கொடுப்பதில் தடை ஏற்பட்டது –
இதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதி பூரி மன்னன் காஞ்சீ நகரின் மேல் படை எடுத்தான் -ஆனால் அவன் படை சிறியது –
இரு மன்னர்களும் பூரி படை தோற்றால் ஜகந்நாதர் பலபத்ரர் ஸூ பத்ரா மற்றும் ஸூ தர்சனர் விக்ரகங்களை காஞ்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும்
காஞ்சி படை தோற்றால் அவர்கள் ஆராதிக்கும் விநாயகர் விக்ரஹத்தை புரிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் சபதம் செய்தனர் –
புருஷோத்தமன் ஜகந்நாதர் இடம் தேவரீரது அருளால் அடியேனது சிறிய படை வெற்றி பெற வேணும் -என்று பிரார்த்தித்தான் –
அரசன் புறப்பட்ட போது ஜகந்நாதர் கருப்புப் பிறவியிலும் பலராமர் வெள்ளைப் பிறவியிலும் ஆரோஹணித்து -இரு வீரர்கள் போல் காஞ்சிக்கு சென்று
வழியில் ஒரு கிராமத்தில் தாக்கத்துக்காக ஒரு முதிய இடைப்பெண்ணிடம் மோர் வாங்கிக் குடித்தனர் –
கையில் காசு இல்லாமல் மோதிரத்தை காட்டி பணம் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள் –
புருஷோத்தமன் படையோடு அவ்வழியே வர முதியவள் கொடுத்த மோதிரத்தைக் கண்டு வியந்து உருகினான்-
இரு வீரர்கள் உதவியால் வெற்றி பெட்ரா மன்னன் காஞ்சி இளவரசியை சிறையெடுத்து வந்து புரியில் துப்புரவு செய்யும் ஒருவனுக்கு மனம் முடிக்க சொன்னான் –
பக்தரான மந்திரி இளவரசியிடம் தனிமையில் பேசி -அவளின் பக்தியையும் மன்னனிடம் அவள் கொண்ட காதலையும் அறிந்து
அவர்களை சேர்த்து வைக்கும் தருணத்துக்கு காத்து இருந்து அடுத்த ரத்த யாத்திரையின் போது இளவரசியை மணக்க கோலத்தில் தயார் செய்து
மன்னன் தங்கத் துடைப்பத்தால் பெருக்க -மன்னா இவளுக்கு ஏற்ற பேருக்கும் மணமகனைத் தேடினேன் -அப்படிப்பட்டவர் நீர் ஒருவரே -எனக் கண்டு கொண்டேன் –
ஆகவே ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள் முன் நீரே மனம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள –
அரசனும் மந்திரியின் சமயோசித புத்தியைப் பாராட்டி கல்யாணம் செய்து கொண்டான் –
ஆகவே கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினையும் களையலாம் -கல்யாணமும் செய்து கொள்ளலாம் –

புண்ய தீர்த்தங்கள் —
1–மஹா நதி -கிழக்கு சமுத்திரம் -ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ கீதையில் ஸரஸாம் அஸ்மி சாகரம் -என்கிறான் –
அதன்படி இங்குள்ள கிழக்கு கடலே சக்ர தீர்த்தம் என்று கொண்டாடப் படுகிறது –
இங்கு தான் தாரு ப்ரஹ்மம் -சக்ர முத்திரையோடு தோன்றினார்
க்ருத யுகத்தில் பார்கவி என்னும் நதி கடலில் கலக்கும் இவ்விடத்தில் தான் பாங்கி முஹானா -பங்குனி சுக்ல துவாதசி அன்று தாரு ப்ரஹ்மம் தோன்றினார்
கடலில் இவ்விடத்தில் தான் இந்த்ரத்யும்னன் -ராஜா ராணி தாரு ப்ரஹ்மத்தைப் பெற்று பெருமானின் பிம்பத்தை வடிவு அமைக்க வேண்டினார்
கங்கா யமுனா கோதாவரி காவேரி தாமிரபரணி ஆகியவை இக்கடலிலே கலக்கின்றன –
2—இந்த்ரத்யும்ன சரோவரம் –இந்த்ரத்யும்ன மன்னன் பகவத் பிரதிஷ்டை செய்யும் போது ஆயிரம் பசுக்களை தானம் செய்தான் –
அவற்றின் குளம்பு பட்டு பள்ளம் ஏற்பட்டு மன்னம் தானம் கொடுத்த போது விழுந்த தீர்த்தத்தால் அது நிரம்பி இந்தக் குளம் ஏற்பட்டது
3–மார்க்கண்டேய சரோவரம் -ரிஷியின் வேண்டுகோளின் படி பகவான் பிரளய கடலில் ஆலிலைத் தளிரில் சயனித்து இருப்பதைக் காட்டி அருள
அன்று முதல் அந்த தீர்த்தத்தின் கரையிலேயே ரிஷி தவம் செய்து வந்தார் –
4—ஸ்வேத கங்கா –இங்கு ஸ்வேதா மாதவன் மற்றும் மத்ஸ்ய மூர்த்தியின் கோயில் உள்ளது -இது த்ரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத மன்னனால் தோற்றுவிக்கப் பட்டது –
5—ரோஹிணி குண்டம் -இது கோயிலுக்கு உள்ளே உள்ளது -கடந்த பிரளயத்தின் சிறிதளவு தீர்த்தம் இங்கு உள்ளது -அடுத்த பிரளயமும் இந்த தீர்த்தத்தில் இருந்தே உருவாகுமாம்
ப்ரஹ்மா இங்கே வந்த போது ஒரு காக்கை இதில் விழுந்து நான்கு கைகளோடு விஷ்ணு ஸ்வரூபம் பெற்று முக்தி அடைந்தத்தைக் கண்டார் –

ஜெகன்நாத் பூரி கோயிலின் அமைப்பு
இப்போது உள்ள கோயில் சோட கங்க தேவனால் கட்ட ஆரம்பிக்கப் பட்டு அநங்க பீமா தேவனால் -1200-ஆண்டு முடிக்கப் பட்டது
நில மட்டத்தில் இருந்து -214-அடி உயரத்தில் நீலாசலம் மலையில் உள்ள திருக் கோயில் –
-10.7-ஏக்கர் நிலப்பரப்பில் -20-அடி உயரமுள்ள செவ்வக வடிவில் -15-நூற்றாண்டில் கட்டப் பட்டு இரண்டு நீண்ட மதிள் சுவர்களால் சூழப் பட்டுள்ளது –
வெளி மதிள் -மற்றும் பிரகாரத்துக்கு மேக நந்த ப்ராசீரம் -665-.-640-அடி /உள் சுற்றுக்கு கூர்மபேதம் -420-.-315-அடி –
பிரதான கிழக்கு வாசல் -சிம்ம சிங்கம் துவாரம் / தெற்கு வாசல் அஸ்வ துவாரம் /மேற்கு வாசல் வ்யாக்ர துவாரம் /வடக்கு வாசல் ஹஸ்தி துவாரம் /
அந்த அந்த வாசல்களில் அவ்வவற்றின் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன
கிழக்கு வாசலுக்கு வெளியே -36-அடி உயர அருணா ஸ்தம்பம் உள்ளது –
18-நூற்றாண்டில் கோனாராக்கில் இருந்து கொண்டு வந்து பிரதிஷடை செய்யப்பட இதன் உச்சியில் ஸூ ர்யனின் தேரோட்டியாக அருணன் அமர்ந்துள்ளார்
இத் திருக் கோயில் நான்கு பகுதிகளாக உள்ளது
1–போக மண்டபம் -பிரசாதம் கண்டு அருள பண்ணும் பெரிய மண்டபம் -60-/.-57-அடி -இதில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் அழகான சித்திரங்களாக வரைய பட்டுள்ளன
2–நட மண்டபம் -பெருமாளை உகப்பிக்க இசை நாட்டியம் நடக்கும் -70-/67-அடி மண்டபம்
3–ஜெகன் மோஹன மண்டபம் -முக சாலா –இங்கு தான் பக்தர்கள் நின்று கொண்டு தரிசிக்கும் இடம் -இதில் கருட ஸ்தம்பம் உள்ளது –
4–விமான மண்டபம் -இதுவே கர்ப்பகிரகம் -ரத்ன சிம்ஹாசனத்தில் -16–13–4-அடி / பலதேவர் -6-அடி உயரம் வெள்ளை நிறம்
ஸூபத்ரா -4-அடி உயரம் மஞ்சள் நிறம் / ஜகந்நாதர் -5-அடி உயரம் கருப்பு நிறம் / ஸூ தர்சனர் லஷ்மீ நீல மாதவர் சரஸ்வதி ஆகியோர் எழுந்து அருளி உள்ளனர்
குறிப்பிட்ட நேரத்தில் ரத்ன வேதிகையில் ஏறி இவ்வனைவரையும் வலம் வரலாம் –
திருக் கோயிலின் கைங்கர்ய பூஜாரிகள் –சுமார் -1000-பேர் உள்ளனர் -36-வகையான கைங்கர்யங்களை செய்கின்றனர் –

திருக் கோயிலுக்குள் இருக்கும் மற்ற தரிசன ஸ்தலங்கள்
1–பைசா பஹாசா -கிழக்கு வாசலில் இருந்து உள்ளே எரிச் செல்லும் -22-படிகள் பக்தர்களின் பாத தூளிபட்டுப் புனிதமானது –
யமதர்மராஜனும் கூட சாஷ்டாங்கமாக பிராணாயாமம் செய்யும் பெருமை பெற்றது
2–கல்பவடம்-அபீஷ்டங்களை வழங்கும் ஆலமரம்
3–முத்தி மண்டபம் -வேத விற்பன்னர்களின் த்யான மண்டபம் -16-கால் மண்டபம் -ப்ரஹ்ம சபா என்றும் வழங்கப்படும்
4–நரஸிம்ஹர் சன்னதி -முத்தி மண்டபத்துக்கு அருகே உள்ளது –
5–ஸ்ரீ தேவி பூ தேவி சந்நிதிகள் -இங்கு இருக்கும் மூலிகைச் சாற்றினால் வரைய பெட்ரா சித்திரங்களில் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் பகவத் ராமானுஜர் ஆகியோர் உள்ளனர்
6–கோய்லா மண்டபம் –ஸ்ரீ ஜெகந்நாதராது திருமேனி -12-ஆண்டுகளுக்கு ஒரு முறை புது தருவாள் செய்யப்படும் –
இந்த உத்சவம் நவ கலேவரம் எனப்படும் -பழைய திருமேனி இவ்விடத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படும் –
7–ஆனந்த பஜார் -மஹா பிரசாதம் விநியோகிக்கப் படும் இடம் –

திருக் கோயிலுக்கு வெளியே இருக்கும் சந்நிதிகள் –
1–குண்டீஸா மந்திர -ராணி குண்டீஸாவின் பெயரால் -படா தாண்டா சாலையின் -க்ராண்ட் ரோட் –
ஒரு கோடியில் ஸ்ரீ ஜகந்நாதர் திருக் கோயிலும் மறு முனையில் குண்டீஸா மந்திரம் உள்ளது -ஆசியாவிலேயே மிகப் பெரிய சாலை இது தான் –
இந்த கோயிலில் தான் முதலில் தாரு ப்ரஹ்மத்தில் இருந்து விக்ரஹங்கள் செதுக்கப் பட்டன -ஆகவே பகவானின் பிறப்பிடம் இதுவே –
இவ்வளாகத்தில் தான் அரசன் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தார் -ரத்த உத்சவத்தின் போது ஸ்ரீ ஜகன்னாநாதர் பலதேவர் ஸூ பத்ரா ஸ்ரீ ஸூ தர்சனர் ஆகியோர்
இங்கு தான் எழுந்து அருளி இருப்பர் –
2–யஜ்ஞ நரஸிம்ஹ தேவர் -குண்டீஸா மந்தரில் இருந்து இந்த்ரத்யும்ன சரோவர் போகும் வழியில் மஹாவேதி என்னும் இடத்தில் எழுந்து அருளி உள்ளார்
இங்கு தான் இந்த்ரத்யும்னன் மன்னன் இவரை பிரதிஷ்டை செய்து ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பின்னரே ஜகந்நாதர் தோன்றினார் –
இவருடைய திருமுகம் முன்னர் தரிசிக்க சாந்தமாகவும் மற்றொரு புறம் உக்ரமாகவும் இருக்கும் –
3–அலர்நாத் -20-மில் தூரத்தில் உள்ளது -ஆலால நாதன் -பெயருடன் -இவரே ஆழ்வார் நாதன் -ஆலங்கால் பட்டோர்க்கு ஆட்படுபவர்
ஸ்ரீ கேதன் என்பவர் தனது மகனான மது என்னும் சிறுவனிடம் கொதிக்கும் சக்கரைப் பொங்கலைத் தந்து அதனை உண்மையான அன்புடன்
பெருமானுக்கு அமுது செய்யச் சொல்ல அந்த சிறுவனும் செய்ய பெருமானின் திரு விரல்கள் சிவந்து இருப்பதை இன்றும் காணலாம்
இங்கு சைதன்ய பிரபு தரிசிக்க வந்த போது ஆச்ரித பாரதந்தர்யத்தை கேட்டு உருகி மயங்கி விழுந்து கிடந்த சுவடே இன்றும் காணலாம் –
4–சாக்ஷி கோபால் -15-மைல் தொலைவில் உள்ள சந்நிதி -கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாபரால் பிரதிஷ்டை -வ்ருந்தாவனத்தில் உள்ள மத மோஹனர் போலே-
ஐவரும் முதலில் பிரதான கோயிலில் இருக்க அனைத்து பிரசாதங்களை முன்னமேயே உண்டு முடிக்க -லீலா ரசமாக பிணக்கு ஏற்பட
பின்பு ஒரு முடிவுக்கு வந்து வெளியே கோயில் கொண்டுள்ளதாக ஐதிஹ்யம்
ஒரு அந்த இளைஞ்சனுக்கு பெண் கொடுக்க இசைந்த முதியவர் ஒருவர் பின்பு பானா வ்யவஹாரத்தால் மறுக்க அப்போது தன பக்தனுக்காக மக்கள் மன்றத்தில் சாக்ஷி சொல்லி
கல்யாணத்தை நடத்தி வைத்த படியால் அன்று முதல் சாக்ஷி கோபால் என்று அழைக்கப் பட்டதாக வரலாறு-

ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் –இங்கே தரிசிக்க வர -இங்குள்ள பூஜா முறைகள் ஆகமத்தின் படி இல்லாததைக் கண்டு சரிப்படுத்த எண்ண
ஸ்ரீ ஜகந்நாதர் இங்கு தொண்டு புரியும் பூஜாரிகளை வீட்டுக் கொடுக்க திரு உள்ளம் இல்லாமல் அவர் அறியா வண்ணம் ஸ்ரீ கூர்மத்தில் கொண்டு போய் விட்டார்
ஆச்ரித பக்ஷபாதத்தை உணர்ந்து பல்லாண்டு பாடினார் -அவர் தங்கிய மடம் மற்றும் எம்பார் மேடம் ஆகியவை உள்ளன –
இங்கு உள்ள சன்யாசிகளுக்கு இத் திருக் கோயிலில் பரம்பரையாகப் பெறப்பட்ட கைங்கர்யமும் உள்ளது –

ஸ்ரீ ஜெகந்நாதரின் மஹா பிரசாத மஹிமை –
முதலில் பிரசாதம் யாருக்குமே கிடைக்காமல் இருக்க -ஸ்ரீ மஹா லஷ்மியிடம் நாரதர் பிரார்த்திக்க -பிரசாதம் பெற்று ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று கூத்தாடினார் –
இதனைக் கண்டா பரமசிவனும் வேண்டி பெற்று ஆனந்த நர்த்தனம் ஆட மேருவும் கைலாசமும் நடுங்கின –
பார்வதி தேவி இனி உலகில் ஸ்ரீ ஜகந்நாதர் பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்வேன் என்று சபதம் செய்ய அவள் பக்தியை பாராட்டி
இனி அன்ன ப்ரஹ்மமாகவே இருப்பேன் என்று ஸ்ரீ ஜகந்நாதர் அருளினார் –
பிரசாதம் உண்பதாலேயே பாபங்கள் அனைத்தும் விலகி நன்மைகளே விளையும் –
இங்கே அமர்ந்தே உண்ண வேண்டும் -விநியோகத்துக்கு கரண்டிகள் உபயோகிக்க கூடாது -இலைகளை உபயோகிக்கலாம் –
உண்டு முடித்து முதல் வாய் கொப்பளித்து துப்பாமல் விழுங்க வேண்டும் -அடுத்தவாய் மண்ணில் துப்ப வேண்டும் -சாப்பிட்ட இடத்தை கைகளால் சுத்தம் செய்ய வேண்டும் –

திரு மடப்பள்ளி மஹாத்ம்யம்
உலகிலேயே மிகப் பெரிய சமையல் கூடம் -தென் கிழக்கு மூலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் திரு மடப் பள்ளி -752-அடுப்புக்கள் ஒவ் ஒன்றும் -3–4-அடி அளவு கொண்டவை
சட்டிப்பானைகள் தவிர வேறே யந்திரமோ உலகமோ இல்லை
20-படிக்கட்டுக்கள் இறங்கி கேணியில் இருந்து தாம்புக் கயிற்றால் கைகளால் இழுக்கப் பட்ட சுத்தமான தண்ணீரை -30-தொண்டர்கள் இடைவிடாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்
மிளகாய் வெங்காயம் பூண்டு காரட் உருளை தக்காளி போன்ற நிஷித்தமான பல காய்கறிகள் உபயோகப் படுவதில்லை
-400-கைங்கர்ய பரர்கள் -மேலும் -400-உதவியாளர்கள் –
ஒரு நாளைக்கு -72-குவிண்டல் –(சுமார் -5000 படி பிரசாதம் )/ விசேஷ நாட்களில் -92-குவிண்டல் –
-60-கைங்கர்ய பரர்கள் தொழில் சுமந்து பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள்
ஒவ் ஒரு நாளும் -56-வகையான பிரசாதங்கள் -சப்பன் போக் -செய்யப் படுகின்றன /-9-வகை சித்தரான்னம் -14-வகை கறியமுது-9-வகை பால் பாயாசம்
-11-வகை இனிப்புக்கள் -13-வகை திருப்பி பணியாரங்கள்
காலை -8-மணி கோபால் வல்லப போகம்
காலை -10-மணி சகல போகம்
பகல் -11-மணி -போக மண்டப விநியோக போகம்
மதியம் -12–30-மத்யாஹ்ன போகம்
மாலை -7-மணி சயன போகம் –
இரவு -11-15-மஹா சிருங்கார போகம் –

தினம் நிகழும் கொடி ஏற்றம்
விமானம் -214-அடி உயரம் –அதன் மேலே நீல சக்ரம் ஸ்ரீ ஸூ தரிசன சக்ரம் பொருத்தப் பட்டுள்ளது -எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது -36-அடி சுற்றளவு கொண்டது
இதில் மேல் மஞ்சள் சிகப்பு வெள்ளை ஆகிய நிறம் கொண்ட கொடிகள் தினமும் மாலை-6–30- மணி அளவில் ஏற்றப்படுகின்றன
கருட சேவகர்கள் என்று அலைக்கும் தொண்டர்களில் ஒருவர் அனைத்து கொடிகளையும் சுமந்து -15-நிமிடங்களில் சர சர என ஏறி -10-நிமிடங்களில் கொடிகளை கட்டுகிறார்கள்
இப்பரம்பரையில் வந்தவர்களுக்கு கருட பகவானின் அருளால் -8-வயது முதலே இத்தொண்டில் பழக்கம் ஏற்படுகிறது –

நவ கலேவர -புது திருமேனி உத்சவம் –
எந்த ஆண்டில் அதிக மாசமாய் ஆணி மாதத்தில் இரண்டு பவ்ர்ணமிகள் வருமோ அந்த ஆண்டு இந்த உத்சவத்துக்கு என்றே நியமனம் பெட்ரா பூஜாரிகள்
சுமார் -40-மில் தூரத்தில் ப்ராஸீ நதிக் கரையில் இருக்கும் காகாத்புர் எனும் உரின் காடுகளில் தகுந்த வேப்ப மரங்களைத் தேடுவர்
சில விசேஷ அடையாளங்கள் உடன் இருக்கும் மரத்தை எடுத்து வந்து பூஜித்து அதை கோய்லா வைகுண்டத்தில் இருக்கும் மண்டபத்தில் தச்சர்கள் செதுக்குவார்கள் –
புதுத் திருமேனிகள் உருவானவுடன் அமாவாசை இரவு அவர்களை எழுந்து அருள பண்ணிக்க கொண்டு வந்து கர்ப்பக்கிருகத்தில் உள்ள பழைய திருமேனிகளை அருகே வைப்பர் –
அன்று ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் படும் -பூஜாரிகளில் மூத்தவர் கண்களைக் கட்டிக் கொண்டு கைகளிலும் துணி சுற்றிக் கொண்டு
இடையே நின்று பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரஹ்ம பதார்த்தத்தை எடுத்து புதுத் திரு மேனியில் பொறுத்துவார்
பின்பு பழைய திரு மேனிகள் கோய்லா வைகுண்டத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படுபவர் –
சுமார் நான்கு மாதங்கள் நடக்கும் இந்த உத்சவம் -பரம ரஹஸ்யமாக நடத்தப்படும் -பழைய திருமேனிக்காக தாயாதிகள் -தயிதர்கள் -13-நாட்கள் துக்கம் அனுஷ்ட்டிப்பார் –
கடந்த நவ கலேவர – உத்சவங்கள் நடந்த ஆண்டுகள் –1912-/-1931-/–1950 -/-1969-/-1977-/-1996-ஆகியவை –

ஜகம் புகழும் ரத யாத்திரை –
ராணி குண்டீஸாவின் வேண்டுகோளுக்கு இணங்கி பல்லாயிரம் ஆண்டுகளாக மூன்று மூர்த்திகளும் மூன்று தேர்களில் -2-மைல் பவனி வந்து
குண்டீஸா மந்திர அடைவர் -ஆனி மாதம் பவ்ர்ணமியில் -ஸ்நான பூர்ணிமா தொடங்கி ஆடி மாதம் சுக்ல சதுர்த்தசி அன்று நீலாத்ரியிலே முடியும் இத்தேர் திரு விழா –
ரத யாத்ரா குண்டீஸா யாத்ரா கோஷா யாத்ரா என்று அழைக்கப் படும் –10-திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ வடமதுரை வந்ததை நினைவு கூறும்
தேர்களின் அமைப்பு
மூன்றுமே மரத்தால் கைகளாலேயே செய்யப்பட்டவை -இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாகவே –125-தச்சர்கள் -2188-மறதி துண்டுகள் இணைத்து செய்வர்
ஸ்ரீ ஜகந்நாதர் தேர் -நந்தி கோஷ் என்ற பெயருடன் -7-அடி உயரமுள்ள -16-சக்கரங்கள் -கலைகள் பொருத்தப்பட்ட இதன் உயரம் -45-அடி –
தேர்ச் சீலைகள் வர்ணம் மஞ்சள் –/சங்கிகா ரேஸிகா மோஷிகா மற்றும் த்வாலினி என்ற பெயர்கள் கொண்ட நான்கு குதிரைகள் பூட்டி இருக்கும் அடி நீளம் –
சக்கரங்கள் மன்வந்த்ரங்கள் பொருத்தப்பட்டு -இதன் உயரம் -44-அடி /தேர்ச் சீலைகள் வர்ணம் நீலம்
ருக் யஜுஸ் சாம அதர்வணம் பெயர்களுடன் நான்கு குதிரைகள் -மாதலி தேரோட்டி -வாஸூகி தெற்கை கயிறு
ஸூபத்ராவின் தேரின் பெயர் பத்மத்வஜம் -தேவதாலனம் /-12-சக்கரங்கள் பொருத்தப்பட்டு -மாதங்களின் கணக்கு /உயரம் -43-அடி
தேர்ச் சீலைகள் வர்ணம் சிவப்பு /ப்ரஜ்ஞ்ஞா -அநுபா -கோஷா -அக்ரி -நான்கு குதிரைகள் அர்ஜுனன் தேரோட்டி -ஸ்வர்ண சூடன் தேர்க் கயிறு –
இத்தேரில் ஸ்ரீ ஸூதர்சனரும் எழுந்து அருளி இருப்பர் –

உத்சவத்தில் முக்கிய நாட்கள்
1 -ஆனி பவ்ர்ணமி -ஸ்நான யாத்ரா -தாரு ப்ரஹ்மத்தில் இருந்து ஸ்ரீ ஜகந்நாதர் தோன்றிய நாள் –
இன்று -108-குடம் பன்னீரால் திரு மஞ்சனம் -அதனால் ஜலதோஷம் பிடிக்க அடுத்த -15-நாட்கள் தனிமை -தர்சனம் இல்லை –
2-ஆனி சுக்ல த்விதீயை -முதலில் பலராமர்-அடுத்து ஸூ பத்ரா -கடைசியாக ஜகந்நாதர் -அலங்காரத்துடன் தேரில் எழுந்து அருள்வார்கள்
அரசன் தங்க துடைப்பத்தால் பெருக்க தேர்கள் புறப்பட்டு குண்டீஸா மந்திர் சென்று அடைவர் –
மூர்த்திகள் உள்ளே சென்று அடுத்த ஒன்பது நாள்கள் இங்கேயே எழுந்து அருளி இருப்பர் -பிரசாதங்களை இங்கேயே தளிகை பண்ணப் படும்
3-ஆனி சுக்ல பஞ்சமி -ஹோரா பஞ்சமி –தன்னை விட்டுச் சென்றதற்காகக் கோபம் கொண்ட மஹா லஷ்மீ பிரதான கோயிலில் இருந்து
பல்லக்கில் குண்டீஸா மந்திர் வந்து ஜகந்நாதர் தேரின் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக லீலா ரசம்
4—ஆனி சுக்ல தசமி -உல்டா ரத்தம் –மூர்த்திகள் திரும்ப எழுந்து அருள்வார் –
பிரணய கலகம் -மட்டையடி உத்சவம் -பிரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்து இருப்பர் –
5–ஆனி சுக்ல ஏகாதசி -ஸூனா வேஷ தர்சனம் –ஸ்வர்ண திரு ஆபரணங்கள் மூர்த்திகள் சாத்திக் கொள்வார்கள் –
மூலை மூட்டுக்களில் இருந்து மக்கள் வெள்ளம் பெருகி வருவர்
6—ஆனி சுக்ல துவாதசி -இன்று இரவு பெருமாள் உள்ளே எழுந்து அருள்வார் -வீதியில் தேரில் இருக்கும் போது மட்டும்
பக்தர்கள் அனைவரும் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு தரிசிக்கலாம் –

ஜெய் ஜெகன்நாத் புரி புருஷோத்தம் தாம் கீ ஜெய்
நீலாசல நிவாசாயா நித்யாய பரமாத்மனே ஸூபத்ரா ப்ராண நாதாயா ஜெகந்நாதாய மங்களம்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –நான்காம் பாகம் —தீர்த்த யாத்திரை மஹிமை —

October 17, 2017

தீர்த்த யாத்திரை எதற்க்காக செல்ல வேண்டும் —

1-ச ஹரி ஜ்ஞாயதே சாது சங்க மாத் பாபவர்ஜிதாத்
யேஷாம் க்ருபாத புருஷா பவந்த்ய ஸூக வர்ஜிதா —

2-தே சாதவ வ சாந்தராகா காம லோப விவர்ஜிதா
ப்ருவந்தி யன்மஹா ராஜ தத் சம்சார நிவர்த்தகம்

3-தீர்த்தே ஷூ லப் யதே சாது ராம சந்த்ர பாராயண
யத் தர்சநாத் நிரூணாம் பாபராசி ராஸூ சஷணி

4-தஸ்மாத் தீர்த்தே ஷூ கந்தவ்யம் நரை சம்சார பீரூபி
புண்யோத கேஷூ சததம் சாது ஸ்ரேணி விராஜிஷூ —

——————————–

தீர்த்த யாத்திரையை சாஸ்திரம் காட்டும் விதம் –

1-விராகம் ஜனயேத் பூர்வம் களத்ராதி குடும்ப கே
அஸத்ய பூதம் தத் ஜ்ஞாத்வா ஹ்ரீம் து மனசா ஸ்மரேத் –

2-க்ரோச மாத்ரம் ததோ க த்வா ராம ராமேதி ச ப்ருவன்
தத்ர தீர்த்தா தி ஷூ ஸ்நாத்வா ஷவ்ரம் குர்யாத் விதா நவித்

3-மனுஷ்யாணாம் ச பாபாநி தீர்த்தா நி ப்ரதி கச்சதாம்
கேசம் ஆஸ்ரித்ய திஷ்டந்தி தஸ்மாத் தத் வபநம் சரேத்

4-ததோ தண்டம் து நிர்கந்திம் கமண்டலும் அதாஜிநம்
பிப்ருயாத் லோப நிர்முக்த தீர்த்த வேஷத ரோ நர –

5-விதி நா கச்ச நாம் ந்ருணாம் பலா வாப்திர் விசேஷத
தஸ்மாத் சர்வ ப்ரயத் நேந தீர்த்த யாத்ரா விதம் சரேத்–

6—யஸ்ய ஹஸ்தவ் ச பாத வ் ச மனஸ் சைவ ஸூ சம்யதம்
வித்யா தபஸ் ச கீர்த்திஸ் ச தீர்த்த பலமஸ் நுதே –

7—ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண பக்தவத்சல கோபதே
சரண்ய பகவான் விஷ்ணோ மாம் பாஹி பஹு சம்ஸ் ருதே –

8—இதை ப்ருவன் ரஸநயா மனசா ச ஹ்ரீம் ஸ்மரன்
பாத சாரீ கதிம் குர்யாத் தீர்த்தம் ப்ரதி மஹோதய —

—————————————————–

மானஸ தீர்த்தத்தின் மஹிமை —

1—சத்யம் தீர்த்தம் ஷமா தீர்த்தம் இந்த்ரிய நிக்ரஹ
சர்வ பூததயா தீர்த்தம் தீர்த்தம் ஆர்ஜவம் ஏவ ச –

2—தானம் தீர்த்தம் தபஸ் தீர்த்தம் சந்தோஷஸ் தீர்த்தம் உச்யதே
ப்ரஹ்மசாரியம் பாரம் தீர்த்தம் தீர்த்தம் ச ப்ரியவாதி தா —

3—ஜ்ஞானம் தீர்த்தம் த்ருதிஸ் தீர்த்தம் தபஸ் தீர்த்தம் உதாஹ்ருதம்
தீர்த்தா நாமபி தத் தீர்த்தம் விஸூத்திர் மனசஸ் பரா —

4—ந ஜலாப் லுததே ஹாஸ்ய ஸ்நானம் இத்யபி தீ யதே
ச ஸ்நாநோ தமஸ் ஸ்நான ஸூசி ஸூத்த மநோ மல–

5—யோ லுப்த பிஸூந க்ரூரோ தாம்பி கோ விஷயாத்மக
சர்வ தீர்த்தே ஷ்வபி ஸ்நான பாபு மலிந ஏவ ச –

6—ந சரீர மலத்யாகாத் நரோ பவதி நிர்மல
மனசே து மலே த்யக்தே பவத்யந்த ஸூ நிர்மல

7—ஜாயந்தே ச ம்ரி யந்தே ச ஜலேஷ்வேவ ஜெ லவ்க ச
ந ச கச்சந்தி தி ஸ்வர்க்கம் அவி ஸூத்த மநோ மல-

8— விஷயேஷூ அதி சம்ரோகோ மாநசோ மல உச்யதே
தேஷ் வேவ ஹி விராகோ அஸ்ய நைர்மல்யம் சமுதாஹ்ருதம் –

9—சித்தம் அந்தர்கதம்துஷ்டம் தீர்த்த ஸ்நாநாத் ந ஸூத்த யதி
சதசோ அபி ஜலைர் தவ்தம் ஸூரா பாண்டமிவ அஸூசி —

10– தானம் இஜ்யா தப சவ்சம் தீர்த்தம் சேவா ஸ்ருதம் ததா
சர்வாண்யே தான்ய தீர்த்தா நியதி பாவோ ந நிர்மல –

11—நிக்ருஹீ தேந்த்ரியக் ராமோ யத்ரைவ ச வசேந்நர
தத்ர தஸ்ய குருஷேத்ரம் நைமிஷம் புஷ்கராணி ச –

12—த்யான பூதே ஜ்ஞான ஜலே ராகத்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானஸே தீர்த்தே ச யாதி பரமாம் கதிம் —

—————————————

தீர்த்த யாத்ர பலன் யாருக்கு கிடைக்கும்-யாருக்கு கிடைக்காது –

1–யஸ்ய ஹஸ்தவ் ச பாதவ் ச மனஸ் சைவ ஸூ சம்யதம்
வித்யா தபஸ் ச கீர்த்திஸ் ச ச தீர்த்த பலம் அஸ்னுதே-

2—ப்ரதிக்ர ஹாத் அபாவ்ருத்த சந்துஷ்டோ யேன கேநசித்
அகங்கார விமுக்தஸ் ச தீர்த்த பலம் அஸ்னுதே –

3—அதம்பகோ நிராரம்போ லக்வாஹாரோ ஜிதேந்த்ரிய
விமுக்த சர்வ சங்கை ய ச தீர்த்த பலம் அஸ்னுதே —

4—அக்ரோத நோ அமல மதி சத்யவாதி த்ருட விரத
ஆத்மோ பமஸ்ச பூ தேஷூ ச தீர்த்த பலம் அஸ்னுதே —

5–தீர்த்தா நநுசரன் தீரஸ் ஸ்ரத்ததா ந ஸமாஹித
க்ருதபாபோ விஸூத்த் யேத கிம் புந ஸூத்த கர்மக்ருத்

6–அஸ்ரத்த தான பாபாத்மா நாஸ்தி கோஸ்ச்சி ந்ந சம்சய
ஹேது நிஷ்டச்ச பஞ்சைதே ந தீர்த்த பல பாகிந

7—ந்ருணாம் பாபக்ருதாம் தீர்த்தே பாபஸ்ய சமனம் பவேத்
யதோ க்தா பலதம் தீர்த்தம் பவேத் ஸூத் தாத்மநாம் ந்ருணாம் –

8—-காமம் க்ரோதம் ச லோபம் ச யோ ஜித்வா தீர்த்தம் ஆவிசேத்
ந தேந கிஞ்சித் அப்ராப்தம் தீர்த்தாபிக மநாத் பவேத் –

9—தீர்த்தா நீ யாதோ க்தேந விதி நா சஞ்சரந்தி யே
சர்வத் வந்த் வசஹா தீரா தே நரா ஸ்வர்க்க காமிந —

10— கங்கா திஷு தீர்த்தே வசந்தி மத்ஸ்யா தே வாலயே பஷிகணாஸ் ச சந்தி
பாவோஜ் ஜி தாஸ்தே ந பலம் லபந்தே தீர்த்தாச்ச தே வாயதநாச்ச முக்யாத்
பாவம் ததோ ஹ்ருத்கமலே நிதாய தீர்த்தா நி சேவேத ஸமாஹிதாத்மா —

ஸூபம் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –மூன்றாம் பாகம் -ஸ்ரீ ஸிம்ஹாசலம் -மஹாத்ம்யம் -/ஸ்ரீ கூர்மம் -மஹாத்ம்யம் —

October 17, 2017

ஸ்ரீ வராஹ நரசிம்மனாக சேவை சாதித்து அருளுகிறார் -த்ராஹி த்ராஹி என்று ஸ்ரீ ப்ரஹ்லாதன் அழைக்க வேகமாக
ஒரு திருக் கையால் திருப் பீதாம்பரத்தை பிடித்துக் கொண்டு
மாற்று ஒரு திருக் கையால் பெரிய திருவடிக்கு வாயில் அம்ருதத்தை கட்டை விரலால் கொடுத்துக் கொண்டே குதிக்க –
வேகம் தாளாமல் பூமி பிளந்து பகவான் திருவடிகள் பாதாளம் வரை சென்றன –
ஹிரண்யகசிபுடன் -32-ரூபங்கள் எடுத்து யுத்தம் செய்தார் -அவற்றில் ஒன்றே ஸ்ரீ வராஹ ந்ருஸிம்ஹ அவதாரம் –
ஸ்ரீ பிரஹ்லாத ஆழ்வான் திருவாராதனம் செய்தார் -அவன் தன் ராஜ்யத்துக்கு திரும்பியதும் பெருமானை வல்மீகீம் புற்று மூட-
கால கிரமத்தில் புரூவரஸ் சக்ரவர்த்தி இந்த இடத்தைக் கடக்க விமானம் தாண்ட முடியாமல் போக -அவன் தேட –
கங்காதாரா தீர்த்தத்தின் அருகில் இருப்பதாக எம்பெருமான் காட்டி அருளினான் –

கங்கா தாரா சமம் தீர்த்தம் க்ஷேத்ரம் ஸிம்ஹாத்ரி நா சமம்
நாரஸிம்ஹ சமோ தேவ த்ரை லோக்யே நாஸ்தி நிச்சய –சிலா சாசனம் க்ஷேத்ர மஹாத்ம்யத்தில் உள்ளது
எம்பெருமானை புற்றில் இருந்து வெளியே எழுந்து அருள பண்ணி கங்கா தாரா தீர்த்தத்தில் திரு மஞ்சனம் செய்து –
வைகாசி சுக்ல த்ருதீயை அன்று பிரதிஷடை செய்தான் –
அது அக்ஷய த்ருதீயை என்று கொண்டாடப் படுகிறது -அன்று சந்தன உத்சவம் நடை பெறுகிறது -நிஜ ரூப தர்சனம் அன்று மட்டும் கிட்டும் –
அன்று -3-மணுகு-125-கிலோ சந்தனம் சாத்துகிறார்கள் -வைகாசி பவுர்ணமி அன்றும் -3–மணுகு சந்தானம் சாத்துகிறார்கள் –
ஜ்யேஷ்ட பவுர்ணமி -ஆனி மாதம் -அன்றும் 3–மணுகு சந்தானம் சாத்துகிறார்கள் –
ஆஷாட பவுர்ணமி -ஆடி மாதம் -அன்றும் 3–மணுகு சந்தனம் சாத்துகிறார்கள் –
ஆக -500-கிலோ சந்தனத்துடன் எப்பொழுதும் சேவை சாதிக்கிறான்
கங்கா தாரா தீர்த்தமே பிரசாத்துக்கு திரு மஞ்சனத்துக்கும் உபயோகம் –

ஸ்ரீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமியின் -32-த்வாத்ரிம்சத் திரு நாமங்கள் –
ஸ்ரீ ஸ்தம்ப உத்பவ நரஸிம்ஹர்
ஸ்ரீ பாவந நரஸிம்ஹர்
ஸ்ரீ பஞ்ச முகி நரஸிம்ஹர்
ஸ்ரீ ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹர்
ஸ்ரீ ஜ்வாலா உக்ர நரஸிம்ஹர்
ஸ்ரீ யோகா ஸ்ரீ நரஸிம்ஹர்
ஸ்ரீ சாளக்ராம நரஸிம்ஹர்
ஸ்ரீ யோகா நந்த நரஸிம்ஹர்
ஸ்ரீ வீர நரஸிம்ஹர்
ஸ்ரீ சர்வதோ முக நரஸிம்ஹர்
ஸ்ரீ மஹா விஷ்ணு நரஸிம்ஹர்
ஸ்ரீ ஸாத்ர வட நரஸிம்ஹர்
ஸ்ரீ ராஜ்ய லஷ்மீ நரஸிம்ஹர்
ஸ்ரீ பார்கவ நரஸிம்ஹர்
ஸ்ரீ ஸூ தர்சன நரஸிம்ஹர்
ஸ்ரீ வ்யாக்ர நரஸிம்ஹர்
ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹர்
ஸ்ரீ கருடா ரூடா நரஸிம்ஹர்
ஸ்ரீ கண்டா பேரண்ட நரஸிம்ஹர்
ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர்
ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹர்
ஸ்ரீ வித்யா நரசிம்ஹர்
ஸ்ரீ யோகப்பட நரஸிம்ஹர்
ஸ்ரீ மாலோல நரஸிம்ஹர்
ஸ்ரீ க்ரோடா நரஸிம்ஹர்
ஸ்ரீ அபாய நரஸிம்ஹர்
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர்
ஸ்ரீ வித்யா சக்ரா நரஸிம்ஹர்
ஸ்ரீ யோக வட லஷ்மீ நரஸிம்ஹர்
ஸ்ரீ கிரிஜா நரஸிம்ஹர்
ஸ்ரீ கல்யாண நரஸிம்ஹர்
ஸ்ரீ வராஹ லஷ்மீ நரஸிம்ஹர் –

——————————————————

ஸ்ரீ கூர்மம் மஹாத்ம்யம் –

ஸ்ரீ கூர்ம க்ஷேத்ரம் மஹாத்ம்யமானது ப்ரஹ்மாண்ட புராண அந்தர்கதமான பாத்ம புராணத்தில் சொல்லப் பட்டது –
இந்த ஸ்ரீ கூர்ம ஷேத்ரத்தில் இருந்து -12-கி மீ தொலைவில் காரா பிராந்தியத்தில் சாலி ஹூண்டா இடம் உள்ளது
இவ்விடங்களை ஸ்வேத சக்ரவர்த்தி ஆண்டு வந்தார் -அவருடைய கோட்டை சாலி ஹூண்டா -வம்ச தாரா நதியால் சூழப்பட்டு இருந்தன இவ்விடங்கள் –
ராணியின் பெயர் ஹரிப்ரியா -பீஷ்ம ஏகாதச விரதம் இருக்கும் பொது காமத்துக்கு வசப்பட்ட ராஜா ராணியிடம், செல்ல
ராணி பெருமானை வேண்ட -இடையில் ஊற்று பிறக்க அதுவே வம்சதாரா-
வருத்தத்துடன் திரும்பிய ராஜாவுக்கு நாரதர் ஸ்ரீ கூர்ம மந்த்ரம் உபதேசித்து இங்கு உள்ள எட்டு புண்ய தீர்த்தங்களில் நீராடி தவம் புரிய சொன்னார் –
ஸ்ரீ மஹா விஷ்ணு பிரத்யக்ஷமாகி -ஸ்ரீ கூர்ம ரூபியாக சேவிக்க பிரார்த்திக்க ராஜாவின் பெயரிலே இங்குள்ள மலையை ஏற்படுத்தி சேவை –
ஸ்வேதாசல நிவாஸாய கூர்ம நாதாயா மங்களம் –

இந்த ஆலயத்தை பிரமன் ஏற்படுத்தினான் –108-விதமான தூண்கள் உண்டு
சக்ர தீர்த்தம் பிரசித்தம் -அங்கு இருந்தே தாயார் திரு அவதாரம்
க்ருத யுகத்தில் பிரமன்
த்ரேதா யுகத்தில் லவ குசர்கள்
த்வாபர யுகத்தில் பலராமன் –திருவாராதனம் –
கலி யுகத்தில் எம்பெருமானார் எழுந்து அருளி மங்களா சாசனம் –

ஸ்வேதாசல நிவாஸாய கூர்ம நாதாயா மங்களம் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமலை வைபவம் -நம்மாழ்வாரும் திருவேங்கடமுடையானும் -ஸ்ரீ வரதராஜன் ஸ்வாமிகள்

October 16, 2017

ருக் வேதம் -அராயி காணே விகடே கிரிம் கச்ச சதாந்வே சிரம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -என்று -தாப த்ரயங்கள் நீங்கி – சகல புருஷார்த்தங்களையும் அடைய
திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய திருமலையைக் குறித்து பக்தர்களுடன் சென்று சேர்ந்து யோக்யதை பெறலாம் என்கிறது –

வேதம் தமிழ் செய்தான் மாறன் – வேதத்தின் உட்ப்பொருள் நிற்கப் பாடினான் -வேதைச்ச சர்வை -அஹமேவ வேத்ய-வேதப்பொருளே வேங்கடவா -வேதாந்த விழுப்பொருளே இவன்
அர்த்த பஞ்சகமம் அருளி வேதத்தால் அறியப்படும் திருவேங்கடத்தான் நித்ய வாசம் செய்யும் திரு வேங்கடத்தையே பிதற்றி –
அவன் தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஸ்வரூபம் விபூதிகள் அனைத்தையும் காட்டி அருள -தங்கள் மனத்தே கண்டு
அவனுக்கு சகல வித கைங்கர்யங்களையும் செய்ய பாரித்து அவனிடமே சரணாகதி அடைந்து -த்வய பூர்வ உத்தர வாக்கியங்களை அவன் இடமே அருளிச் செய்கிறார் ஆழ்வார் –

சேஷ தர்ம புராணம் -48-13—மாயாவி பரமானந்தம் த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் ஸ்வாமி புஷ்கரணீ தீரே -என்பதையே
ஸ்ரீ வைகுண்ட விரக்த்யா ஸ்வாமி புஷ்கரணீ தீடே ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் -என்று அருளிச் செய்கிறார்-

பரமபதத்தில் இருந்து முதலில் தங்கிய திவ்ய தேசம் அன்றோ –
பாண் குன்ற நாடார் –திரு விருத்தம் -8- வண்டுகள் பாடா நின்றுள்ள திவ்ய தேசம்
தண் மா மலை வேங்கடத்து உம்பவர் நம்பும் சேண் குன்றம் –உறைபவன் இடம் –
அம்பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் மிசை மிண் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே -30-என்று
மேகங்களை தூது விடுகிறாள் பராங்குச நாயகி –
தேரில் வரும் திருவேங்கடவன் பராங்குச நாயகியின் தளர்ந்த நிலைமையை அறிந்து தன பாகனைப் பார்த்து –
விரைந்து நண்ணுதல் வேண்டும் வலவ தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முதல் வாசிகைத்தாய் மண் முதல் சேர்வுற்று
அ ருவி செய்யா நிற்கும் மா மலைக்கே–50-என்கிறான் பிரிந்த நாள் சிரமம் தீரும் படி அன்றோ அருவிகள் –

அறியா காலத்திலேயே அடிமை செய்ய வேண்டி திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே உடையவள் -60-பராங்குச நாயகி
திருமலையையும் திருப் பாற் கடலையும் ஸ்ரீ வைகுந்தத்தையும் விட்டு நிறம் கரியனாய் ஆழ்வார் உள்ளம் புகுந்து நீங்காதவனாய் இருப்பதை
அடியேன் உள்ளத்தகம் –பெரிய திருவந்தாதி –68-என்று அருளிச் செய்கிறார் –
சஷூர் தேவானாமுமர்த்யானாம் -யஜுர் வாதம் படியே கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8–3-என்பர் –
பக்த முத்த கோடி த்வயத்தோடே ஸம்ஸலேஷிக்கைக்கு ஈடாக அன்றோ இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான் –

மண்ணோர் விண்ணோர்க்கு என்பது ஈஸ்வரன் நினைவாலே -விண்ணோர் வெற்பனே நித்ய ஸூ ரிகள் நினைவாலே –
நாதன் ஞாலம் கொள் பாத்தான் என்னம்மான் -1–8–10-என்று ஆழ்வாருக்கு கிட்டலாம் படி அன்றோ திருமலையில் வந்து ஆழ்வாரை அடிமை கொண்டவன் –
தண் வேங்கடம் மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே -2–6–10-பரிமளம் மிகுதியால் அதனை மோந்து கொண்டு உள்ளான்
தோமாலை சிறப்பு –தோளில் இட்ட மாலை கொண்டு எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –2–6–9-
அடிமையை நிலை நிறுத்தி அருளினான் ஸ்ரமஹரமான திருமலையில் வந்து நின்று ஸ்வாமித்வத்தை காட்டி சேஷத்வத்திலே நிறுத்தி அருளினவன் அன்றோ –
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –2-7–11-
வள்ளல் தன்மைக்கு மூலமே திருமலை தான்
கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடூயிரே–3–2–10-என்று
ஆழ்வார் துக்கம் தீர ஆத்மா நித்யமாம் படி திருமலையில் காணப் பெற்றேன் என்கிறார் -நாயனார் நித்ய வஸ்து நீடு பெற்று -221-என்பர் –

திருமலையில் நின்று அருளும் நிலையை மனத்தில் கண்ட ஆழ்வார் -எழில் கொள் சோதி -3–3–1-வேங்கடம் மேய விளக்கு அன்றோ-குன்றில் மேலிட்ட்ட விளக்கு –
-அகலகில்லேன் இரையும் என்று பிராட்டி நித்ய வாசம் செய்கிறாள் அன்றோ –
திருப் பாற் கடல் சோதி கடலே கொள்ளை கொண்டு கிடக்கும்-பரமபதத்தில் பகல் விளக்கு -போல் அன்றோ –
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதானம் பரமம் ச தைவதம்—ஸ்வேதாஸ்வர உபநிஷத் -என்பதையே எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –3–3–2-
அந்தமில் புகழ் உடையவன் -அணி கொள் செந்தாமரைக் கண்ணன் -இவனது பவளவாய் காண அன்றோ படியாய்க் கிடக்கிறார் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
பிராட்டி உடன் கூடி எழில் கொள் சோதி யானவன் -அந்தமில் புகழால் கார் எழில் அண்ணாவானான் -குணத்தாலும் அழகாலும் எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் ஆனான் –
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என்னிடம் பாசம் வைத்து பரஞ்சுடர் சோதியானான்
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -என்பதையே சோதியாகி எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -3–3-5-
யதோவா இமானி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்த்யபிசம் விசந்தி தத் விஜிஞ்ஞாஸ்வ தத் ப்ரஹ்மேதி –தைத்ரியம் -காரண வாக்கியம் –
காரணம் து த்யேய சர்வ ஐஸ்வர்ய சம்பந்த சர்வேஸ்வர சம்புர் ஆகாச மத்யே -அதர்வசிக உபநிஷத் –அந்த ஆதி மூர்த்தி தீதில் சீர்த் திருவேங்கடத்தான் –3–3–5-
அவனே வேதியர் முழு வேதத்து அமுதன் -ஆனந்தோ ப்ரஹ்ம-ரஸோ வை ச –
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் –அது சுமந்தார்கட்கே -3–3–6-கடன்கள் -பூர்வ உத்தர ஆகங்கள்–தததிகம உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாசவ் தத்வ்யபதேசாத்-
கடன்கள் மெய் மேல் முற்றவும் வேம்-கொண்டு கூட்டி பொருள் உரைத்து இது மெய் சத்யம் என்றுமாம் –
புகழும் நல் ஒருவன் -3-4-பதிகத்தில் வாசிக கைங்கர்யம் -பெரும் காற்றிலே பழத்தை எடுப்பாரைப் போலே அருளிச் செய்கிறார் –

திருவேங்கடமுடையான் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுத்து அருள –
உணர்வின் மூர்த்தி -3-4–10-ஞான ஸ்வரூபன் /நலம் கடல் அமுதம் -அறுசுவை அடிசில் -நெய்ச்சுவை தேறல் –போக்யம் ஆனந்தம் /
அமலன் –அகில ஹேய ப்ரத்ய நீகன்/தோய்விலன்-வியாபகத தோஷம் தட்டாதவன் –
அனந்தன் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் அபரிச்சேதன் / பங்கயக் கண்ணன் –முதல்ளி உறவு பண்ணும் திருக் கண்கள் – மணி வண்ணன் , கொண்டால் போல் வண்ணன் -ரூபம் /
புகழும் நல் ஒருவன் -பாவு சீர்க் கண்ணன் -குணங்கள் /கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணல் -சேஷ்டிதங்கள் /
அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும்படி சர்வாத்ம பாவத்தை புகழ்ந்து அருளிச் செய்கிறார் –
திருவேங்கடமுடையானின் நீர்மையிலே ஈடுபட்டு அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதி விஷயமான திரு நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை
நித்ய ஸூ ரிகள் ஆதரிப்பார்கள் என்பதை வார் புனல் அம் தண் அருவி வாடா திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லி –அமரர் தொழப் படுவாரே–3–5–8-
பேர் பல ஒழிவில் காலத்திலும் -புகழு நல் ஒருவனிலும்-அருளிச் செய்த படி –அதாவது வானவர் ஈசன் -ஈசன் வானவர் -வானவர் ஆதி என்கோ -என்பதால் ஸ்வரூபமும்
கார் எழில் அண்ணல்,-கரு மாணிக்கம்–பங்கயக் கண்ணன் என்கோ என்பதால் ரூபமும் -அந்தமில் புகழ்–புகழும் நல் ஒருவன் என்கோ என்பதால் குணமும் –
அஹம் அன்னம் -அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களித்து ஆடுவது பாடுவது போலே இவையும் –
என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் தென்னா தென்னா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –3-9-1-
திருவேங்கடத்து -என்பதால் ஸுலபன் /என் ஆனை-கவி பாட விஷயம் அவனே / என்னப்பன் -உதவியாளன் /எம்பெருமான் -கெடுதல் செய்தாலும் விட ஒண்ணாத பிராப்தி /
உளனாக –ஆழ்வார் மங்களா சாசனம் செய்ததால் தான் தான் உளனாக என்னும் வத்சலன் -ஆழ்வார் கவி பாடி சம்பாதித்த யானை யாயிற்று திருவேங்கடத்தான் –
இவர் திருக் கையில் தாளத்தைக் கொடுத்து தான் மங்களா சாசனம் பெற -ஆழ்வாரும் வீற்று இருந்து -4–5-பதிகம் -/
தமக்கு ஒப்பு பரம பதத்திலும் இல்லை என்பதை நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பந் -என்பர் –
மாரி மாறாத தண்ணம் மலை வேங்கடத்து அண்ணலை –ஆயிரத்து இப்பத்தால் வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4–5–11-
சீல குண சரமபர்வ நிலையை காட்டி அருளுகிறான் –

மாசறு சோதி -5–3–கடியன் கொடியின் நெடியமால் உலகம் கொண்ட அடியன்–ஆகிலும் அவன் என்றே கிடக்கும் –
வழி அல்லா வழி யாகிலும் அவனுடன் கலக்க எண்ணுகிறாள் –
ஆற்றாமையால் மோகிக்க திருத் தாயார் -மாலுக்கு -6–6-பதிகத்தில் -கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை –சடகோபன் சொல் ஆயிரத்து –
ஓன்று ஆக்கைப் புகாமை உய்யக் கொள்வான் நின்ற திரு வேங்கடம் அன்றோ -அவசர பிரதீஷனாய் நின்று அருளுகிறான்
உலகம் உண்ட பெருவாயனில் -6-10-கூடுமாறு கூறாயே -என்று ஏங்கி சரணாகதி செய்கிறார் –
உலகம்
1-பிரளய ஆபத்திலேயோ ரஷிப்பது-உன்னை விஸ்லேஷித்து இருக்கும் அடியேனை ரஷிக்கலாகாதோ –
2 =உலகம் எல்லாம் ஈடுபட்டால் தானோ ரஷிப்பது -அவை அனைத்தும் அடியேன் ஒருவனுக்கு ஏற்பட்டால் ரஷிக்கலாகாதோ
3-துக்கம் அறியாதாரையோ ரஷிப்பது -உன்னை ஆசைப்பட்ட அடியேனை ரஷிக்கலாகாதோ
உண்ட –
4-திரு வயிற்றில் வைத்து தான் ரஷிப்பதோ-உன் வடிவைக் காட்டி ரஷிக்கலாகாதோ
பெரு –
5–உனது அதிகமான ஆசைக்கு இலக்காகாதவரை மட்டுமே ரஷிப்பதோ -உன் பாக்கள் அதிகமான பிரியம் உள்ள அடியேனை ரஷிக்கலாகாதோ
வாய் –
6–வாயாலேயோ ரஷிப்பது -உனது வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
உலப்பில் கீர்த்தி
7–எல்லையற்ற குணங்களை அழிய மாறியோ ரக்ஷிப்பது-அந்த குணங்களை அனுபவிக்கும் படி செய்து என்னை ரஷிக்கலாகாதோ –
அம்மானே –
8–சேஷி சேஷ பாவம் அறியாத உலகையே ரஷிப்பதோ-அதை அறிந்த அடியேனை ரஷிக்கலாகாதோ –
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி –
9–உன் ரூபத்தின் பெருமை அறியாதாரையோ ரக்ஷிப்பது -அறிந்தவரை ரஷிக்கலாகாதோ –
நெடியாய் –
10–உன் பெருமை உணராதாரையோ ரஷிக்கலாவது-உணர்ந்த அடியேனை ரஷிக்கலாகாதோ –
அடியேன் ஆருயிரே –
11–உன்னை விஸ்லேஷித்து தரிப்பாரையோ ரக்ஷிப்பது -தரியாத அடியேனை ரஷிக்கலாகாதோ
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே
12–கண்டு பற்றுகைக்கு அறிவில்லாதாரையோ ரஷிக்கலாவது -கண்டு பற்றுகைக்கு ஸூலபன் என்று அறிந்த அடியேனை ரஷிக்கலாகாதோ –
குல தொல் அடியேன் –
13–மற்றவருக்கு ஆட்பட்டாரையோ ரஷிக்கலாவது -அநந்யார்ஹனாய் உனக்கே ஆட்பட்ட அடியாரை ரஷிக்கலாகாதோ –
உன பாதம்
14–உபாயாந்தரங்களை பற்றினாரையோ ரஷிக்கலாவது -உன்னையே பத்ரிநாராய் ரஷிக்கலாகாதோ
கூடும்
15–பிரயோஜனாந்தரங்களை விரும்புவர்களையோ ரஷிக்கலாவது -உன்னையே ஸ்வயம் பிரயோஜனமாக கொல்வாரை ரஷிக்கலாகாதோ
ஆறு –
16–பிரிய நினைப்பாரையோ ரஷிக்கலாவது -உன்னுடன் கூட நினைப்பாறை ரஷிக்கலாகாதோ
கூறாயே
17–பெரிய சேஷ்டிதங்களை செய்தோ ரஷிக்கலாவது -மாஸூ ச என்று வார்த்தை அருளி ரஷிக்கலாகாதோ
இவ்வாறு வார்த்தை தோறும் ஆழ்வாரது அலமாப்பை தொகுத்து வியாக்யானம் அருளிச் செய்வர் –

இப்படி துக்கம் மேலிட்ட ஆழ்வார் மேல் பாசுரங்களால் –
திருவேங்கடத்தானுடைய அசாதாரண பெருமைகளையும் -விரோதி நிரசனத்துக்கு தேஜஸ் மிக்க பரிகாரங்கள் கொண்டவன் என்றும் –
காள மேக ரூபம் கொண்டவன் என்றும் -வியப்பை உண்டு பண்ணும் குணங்களை யுடையவன் என்றும் -நெஞ்சிலே புகுந்து தித்திக்கும் அமுது என்றும் –
உலக விரோதத்துக்கு தீங்கை விளைக்கும் ஸ்ரீ மத்தை உடையவன் என்றும் –
எல்லாக் காலத்திலும் இமையோர் இனம் இனமாய் வந்து வணங்கி சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அடிமை செய்யும் படி திருமலையில் நிற்பவன் என்றும்
எல்லையற்ற அவயவ சோபையை யுடையவன் என்றும் பலபடியாக அனுபவித்து அகலகில்லேன் இறையும் என்று –பற்ற தகுதியாக பிராட்டியுடன் கூடிய தன்மையும்
குணப் பெருமையும் உடையவன் என்றும் அருளி பூவார் கழல்களிலே முறைப்படி பூர்ண சரணாகதி செய்து அருள்கிறார்
மன்னார் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழுலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் -நாயனார் –160-

ஆழ்வார் திருமேனியில் அதி பிரியம் கொண்டவன் கார்யம் செய்ய வில்லை –
உண்ணிலவியா ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
உனது பாத பங்கயம் -என்பதற்கு தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள் -என்றும் -பூவார் கழல்கள் -என்றும் -திருவேங்கடமுடையான் திருவடிகளில் நோக்கு என்பர் நம்பிள்ளை –
நங்கள் வரிவளை–வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே –8-2–1-என்று
கலந்து பிரிந்த பராங்குச நாயகி திருவேங்கடமுடையான் இடம் ஆசைப்பட்டு பாசுரம் இடுகிறாள்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலையுண்ட வாயான் மாதவனே-10–5–7-என்று
அடியாருக்காக கண்ணனாய் வந்து திருவவதாரம் செய்து விரோதியை நிரசித்தவனாய் சிரமத்தை போக்கும் நிறத்தை யுடையனான திருமகள் கேள்வன் –
துரும்பும் எழுந்து ஆடும்படி அடிமையிலே மீண்டு அல்லது நிற்க முடியாத வடிவு யுடையவன் –
மாதவன் வேங்கடம் மேயான் -ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே-இவ்வாறு திருவேங்கடமுடையானை அனுபவித்து அவா அற்று வீடு பெற்றார் ஆழ்வார் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வரதராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –