Archive for October, 2017

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கீசுகீசு என்று– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 26, 2017

ஈராயிரப்படி -அவதாரிகை –
இப்பாட்டில் பழையளாய் வைத்து புதுமை பாவித்துக் கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

போது விடிந்தது எழுந்திராய் என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன
கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசுகின்றன -என்கிறார்கள்
கீசு
அநஷரமாய் இருக்கை-
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் விடியுமோ என்ன
எங்கும் பேசா நிற்பது -என்ன
நீங்கள் அதுக்கு இல்லையோ -என்ன
எங்களால் அன்றிக்கே தானே யுணர்ந்தன -என்ன
அதுக்கு அடையாளம் என் என்ன
கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ -கேளாமைக்கு மற்ற ஆரவாரம் யுண்டோ –
நிஸ்வநம் சக்ரவாகா நாம் இத்யாதி –
இப்பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லை யாவதே
சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் இத்யாதி
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும் கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
இவள் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாவதே என்ன தர்ம ஹானி -என்று ஆய்த்தான் அருளிச் செய்வர் –

பேய்ப் பெண்ணே-
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் தன்னேற்றம் என்று அறிந்து வைத்துப் பேசாதே கிடக்கையாலே சொல்லுகிறார்கள்
என்ன அறிவு தான் -பேய்ப்பெண்ணே என்றதோடு நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே
பின்னையும் எழுப்புகிறார்கள்
காசும் பிறப்பும்
அச்சுத் தாலியும் முளைத் தாலியும் –இடைச்சிகள் பூணும் ஆபரணம் –
கலகலப்ப –
அரவூரு சுலாய் மலை தேய்க்கும் மலை -என்னுமா போலே
கை பேர்த்து-
தயிரின் பெருமையாலும் இவர்கள் சவ்குமார்யத்தாலும் கை பேர்க்கப் போகாது
அதுக்கு மேலே அவன் சந்நிதியிலும் கடையைப் போகாது -அவன் அசந்நிதியிலும் அப்படியே –

வாச நறும் குழல் –
தயிர் கடைகைக்கு நியமித்து முடித்துக் கட்டிய மயிர் முடி -கடைந்த ஆயாசத்தாலே குலைந்து -கடைந்த வேர்ப்பாலே அதி பரிமளிதமாய்
முடை நாற்றமும் தோற்றாத படி கிண்ணக வெள்ளம் கரையை உடைத்து பெருகுமா போலே எங்கும் சுற்று வெள்ளம் இடா நின்றது
பரிமளம் ஊரை உறங்க ஓட்டுகிறது இல்லை
ஆய்ச்சியர்-மத்தினால்-ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
க்ருஹிணிகள் எல்லாரும்
விக்ரேதுகாமா கில கோப கந்யா -இத்யாதி
ஊராகக் கிளர்ந்தது -மத்தினால் ஓசைப்படுத்துகிற த்வனியும் -இவர்கள் சிலம்பின் த்வனியும் -குழல்களில் வண்டுகளின் த்வனியும் –
ஆபரணம் தன்னில் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்களாய் எங்கும் பரப்புகை
கோவிந்த தாமோதர மாதவேதி-போலே
அரவம் கேட்டிலையோ
கெண்டை ஒண் கண்கள் மடவாள் ஒருத்தி இத்யாதிப் படியே –
ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்
விடிந்தமைக்கு அடையாளம் கேட்டிலையோ தயிர் கடைந்த ஓசை என்ன
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே எப்போதும் உண்டு என்ன –
நாயகப் பெண் பிள்ளாய் –
சேஷ பூதர் சேஷிகளுக்குச் சொல்லுவார் உண்டோ -அழகிதாக நிர்வாஹகை யானாய் -என்று
அவள் துணுக் என்று புறப்படுகைக்காக கேசி வத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –
நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்
மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –
கேசவனைப் –
பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –
பாடவும் கேட்டே கிடத்தியோ-தேசமுடையாய் -உன்னைக் கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய் என்கிறார்கள் –

————————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –

சிலரைச் சிலர் எழுப்பினால் -அவர்களைக் கொண்டு நோன்புக்கு போமவர்கள் அல்லரே இவர்கள் –
பிறருடைய நன்மையே தங்களுக்கு பிரயோஜனம் என்று இருக்குமவர்கள் இ றே
நாம் -வைஷ்ணவர்கள்-தந்தாமே சில நன்மைகள் சம்பாதித்துக் கொண்டாலும் பொறுக்க மாட்டோமே-
பகவத் சம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த பிரஜையினுடைய ஸம்ருத்தி தன்னது என்று இருக்குமா போலே இருக்க வேணும் இ றே
நாம் இவ்வர்த்தம் சொல்லுகை பறையர் ஒத்துச் சொல்லுமா போலே இ றே
ஆசாரத்திலும் சிறிது உண்டாகா விடில் ஞானம் இல்லை என்னும் அத்தனை
ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்த வார்த்தைக்கு நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –

ஸ்ரீ தேவி மங்கலத்திலே கமுகிலே நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தையுடைய சிலர் இருப்போரை யடைய அமுது செய்விக்கக் கண்டு
பட்டர் பிடாத்தை இட்டுக் கொண்டு ப்ரீதராய் நம்முடைய கையில் சில மெய்யுண்டாய் அன்று -அடியிலே சில மெய்யர்யுண்டாய்
அவர்களுடைய மெய் இவ்வளவும் வரப் பேசுகிறது -என்று அருளிச் செய்தார் –
அடியார்கள் குழாங்களை– கூடுவது -என்றார்
யதாக்ரது ரஸ்மிந் லோகே புருஷ ததே த ப்ரேத்ய பவதி -என்கிற தத்க்ரது நியாயத்தாலே -அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றார்
இங்கே இக் குழாம் இனிதானால் இ றே அக் குழாம் ஸித்திப்பது-கலியர் சோறுடையார் வாசலிலே சென்று கூப்பிடுமா போலே சென்று எழுப்புகிறார்கள்

கீழ் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்பிற்று -இப்பாட்டில் பழையளாய் இருந்து வைத்து புதுமை பாவித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறது –

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

போது விடிந்தது எழுந்திராய் என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன
ஆனைச் சாத்தன் என்று பேசா நின்றது என்கிறார்கள் –
கீசு
அநஷர ரஸமாய் இருக்கை-
கீழில் பாட்டில் -மெள்ள எழுந்த அரி என்ற பேர் அரவத்தோடு இவற்றினுடைய சப்தத்தோடு வாசியாற்று இருக்கிறது
விவஷித்தால் திருநாமம் சொன்னதோடு அநஷரமான இவற்றின் த்வனியோடு வாசியற உத்தேச்யமாய் இருக்கிறபடி
நாராயணாய என்றத்தோடு நாராயண என்றத்தோடு வாசியாற்று அவனுக்கு உத்தேச்யமாய் இருக்குமா போலே
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் விடியுமோ என்ன
எங்கும் பேசா நிற்பது -என்ன
நீங்கள் அதுக்கு இல்லையோ -என்ன
எங்களால் அன்றிக்கே தானே யுணர்ந்தன -என்ன
அதுக்கு அடையாளம் என் என்ன
கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ -என்ன –
இரவு எல்லாம் உறங்கி வீடியோ நிற்கவோ கலப்பது என்ன
இரவு எல்லாம் கலந்து இப்போது பிரிக்கிறோம் என்று பகல் எல்லாம் பிரிந்து இருக்கைக்கு விளை நீர் அடைத்து பிரியப் புகுகிறோம் என்று
தளர்த்தி தோற்ற பேசுகிற பேச்சு கேட்டிலையோ என்ன
மரக்கலம் ஏறுவார் ஆறு மாசத்துக்கு தண்ணீரும் சோறும் ஏற்றுமா போலே இக்கலவை அரவம் கேட்டிலையோ
-கேளாமைக்கு மற்ற ஆரவாரம் யுண்டோ -செல்லுகிறது
நிஸ்வநம் சக்ரவாகா நாம் இத்யாதி –
இப்பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லையாவதே
சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் வல்கு வ்யாஹரதாம் ஸ்வநம் – இத்யாதி
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும் கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
அவர்கள் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாய் -வேறே சிலரையும் இப்பேச்சும் உன் செவியில் பட்டது இல்லையோ என்று
எழுப்புவதாய்த்தே என்ன தர்ம ஹானி –என்கிறான் ருஷி
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து இடைச்சியாய் கண்ணுறங்காதே எழுப்பித் திரிகிறாப் போலே இவர்களும்

பேய்ப் பெண்ணே-
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் தன்னேற்றம் என்று அறிந்து வைத்து அறியாதார் பேச்சைச் சொல்லுகை –
இவர்களாகில் இப்படி சொல்லுகை பணி என்று பேசாதே கிடைக்க -அறிந்து வைத்துக் காற்கடைக் கொள்ளுகையாலே பேய்ப்பெண்ணே என்கிறார்கள்
தத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிந்து வைத்துப் பேசாதே கிடைக்கையாலே சொல்லுகிறார்கள் –
என்ன அறிவு தான் -மிதுனமாய்க் கலந்தால் அடியேன் என்னிலும் என்பர் -எதிர்தலையைத் தாழச் சொல்லிலும் சொல்லுவர்
-பேய்ப்பெண்ணே என்றதோடு நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே

போது விடியாது இருக்க விடிந்தது என்கிற நீங்களோ நானோ பேய்ப்பெண் -என்ன
விடியச் செய்தே விடிந்தது இல்லை என்கிற நீயே பேய்ப்பெண் -என்ன
விடிந்தபடுத்தி எங்கனே -என்ன
தயிர் கடைந்த ஓசை கேட்டிலையோ -என்கிறார்கள்
காசும் பிறப்பும் –
அச்சுத் தாலியும் முளைத் தாலியும் –இடைச்சிகள் பூணும் ஆபரணம் –
ப்ராஹ்மணர் சந்த்யா வேளையில் பூணூல் இடுமா போலே தங்கள் அனுஷ்டான வேளையில் இவர்களுக்கு ஆபரணம் பூண வேணும் -என்கை –
கலகலப்ப –
அரவூரு சுலாய் மலை தேய்க்கும் மலை -என்னுமா போலே
கை பேர்த்து-
தயிரின் பெருமையாலும் இவர்கள் சவ்குமார் யத்தாலும் கை பேர்க்கப் போகாது
அதுக்கு மேலே அவன் சந்நிதியிலும் கடையைப் போகாது -அவன் அசந்நிதியிலும் அப்படியே -என் என்னில்
கானா விடில் கை சோரும்-காணில் தயிரை மோராக்க ஓட்டேன்-என்று கையைப் பிடிக்கும்
மோரார் குடமுருட்டி என்னக் கடவது இ றே –

வாச நறும் குழல் –
தயிர் கடைகைக்கு நியமித்து முடித்துக் கட்டிய மயிர் முடி -கடைகிற ஆயாசத்தாலே குலைந்து -கடைந்த வேர்ப்பாலே அதி பரிமளிதமாய்
முடை நாற்றமும் தோற்றாத படி கிண்ணக வெள்ளம் கரையை உடைத்து பரம்புமா போலே எங்கும் சுழித்து வெள்ளம் இடா நின்றது
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை -என்னுமா போலே
பரிமளம் ஊரை உறங்க ஓட்டுகிறது இல்லை
ஆய்ச்சியர்-மத்தினால்-ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
ஆய்ச்சியர்
ஊராகக் கிளர்ந்தது
மத்தினால் ஓசை படுத்த
ஒரு மந்திரத்தாலே கடலைக் படுத்துமா போலே முழங்கா நின்றது –
உத்காய தீ நா மரவிந்த லோசநம் வ்ரஜாங்க நாநாம்-திவமஸ்ப் ருசத் த்வனி –தத் நஸ்ச நிர்மந்த ந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்கலம்
அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் -இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் -குழல்களில் வண்டுகளின் த்வனியும் –
ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று
அங்குள்ளாரை வசைபாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ -என்கிறார்கள் –
விக்ரேது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித்த சித்த வ்ருத்தி தத் யாதிகம் மோஹவசா தவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி-போலே
எம்பெருமான் பக்கலில் பிச்சேறிக் கிடக்கிற பெண்களை இவர்கள் அந்நிய பரதை தீர வேணும் என்று பார்த்து
தயிரும் பாலும் நெய்யும் விற்று வாருங்கோள்-என்று கொடுத்துவிட
விற்கும் போது நெஞ்சில் நினைப்பது கிருஷ்ணனை யாகையாலே கோவிந்தனை கொள்ளுங்கோள் கிருஷ்ணனைக் கொள்ளுங்கோள்
ஸ்ரீயபதியைக் கொள்ளுங்கோள் -என்னா நிற்பார்கள் –

அரவம் கேட்டிலையோ-
வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்பை தண்டயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே –
என்று சொல்லும்படி ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்
தயிர் அரவம் கேட்டிலையோ
இது கேளாதபடி தயிர் கடையா நின்றதோ -என்கை -ப்ரணய ரசம் செல்லா நின்றதோ -என்கை –
இதுக்கு இங்கனே கொடுமை சொல்லுகிறிகோள் -வந்த காரியத்துக்கு உடலானவற்றைச் சொல்ல மாட்டிகோளோ-என்ன
நாங்கள் தவிருமோ நீ பேசாதே கிடந்தால்-என்ன
விடிந்தமைக்கு அடையாளம் தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ – என்பான் என்
பண்டு போலே பசுக்களும் பால்களும் அளவுபட்டு இருந்ததோ –
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே
பசுக்களும் பாலும் பெருத்து கறக்கும் போது அறியாதே கடையும் போது அறியாதே செல்லுகிற ஊரிலே இதுஒரு அடையாளமாக மாட்டாது –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று பேசாதே கிடந்தாள்

நாயகப் பெண் பிள்ளாய் –
சேஷ பூதர் சேஷிகளுக்குச் சொல்லுவார் உண்டோ -அழகிதாக நிர்வாஹகை யானாய்-
உனக்கு இது பரம் அன்று ஆகில் எங்களுக்கோ பரம் என்று -ததோ மவ்நமுபாகமத் -என்கிறபடியே பேசாதே கிடைக்க
உங்கள் அடியேனை இங்கனே சொல்லுவதே என்ன
நீ வாய் திறவா விட்டால் நாங்கள் செய்வது என் என்ன
அவள் துணுக் என்று
புறப்படுகைக்காக கேசி வத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –
நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்
மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –
கேசவனைப் –
கண்ணுக்குத் தோற்றி நின்று பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –
அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும்
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ -தேசமுடையாய்
ஸ்ரோத்ர ஸூகமாய் இருந்தது தானே நீர் வாய்ப்பாக உறங்குகிறாயோ -கர வதத்தினன்று போலே தழுவப் பாராய்
தம் த்ருஷ்ட்வா -இத்யாதி
தம் த்ருஷ்ட்வா
பண்டு மணக் கோலம் இ றே கண்டது -இப்போது வீரக் கோலத்தோடு காணப் பெற்றாள்
சத்ரு ஹந்தாரம்
தமக்கு ஒரு வாட்டம் இன்றிக்கே எதிரிகளை அழியச் செய்யப் பெற்ற படி
மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பிரஜையினுடைய ஆர்த்தி தீர்ந்து ஸூ கிக்கக் காண்கை இறே தாய்க்கு ஸூகம் –
பர்த்தாவானவன் பார்யை பக்கல் முகம் பேரா விட்டால் பிரஜையை எடுத்துக் கொண்டு வருமா போலே பிராட்டி முகம் பெறுகைக்காகப் பச்சையிடும்படி
பபூவ
சரணாகதருடைய ஆர்த்தியாலும் பெருமாளுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தாலும் அழிந்த ஸ்வரூபம்
அவர்களும் அவரும் உளராகப் போருகையாலே இப்போது யுண்டாய்த்து -இரண்டு தலையும் யுண்டாய் இல்லையாகில் இல்லையாமவள் இ றே
ஹ்ருஷ்டா
அதுக்கு மேலே நிரதிசய ப்ரீதி யுண்டாயிற்று
வைதேஹீ
அவதாரம் ச பிரயோஜனமாய்த்து
வைதேஹீ
வீர வாசி அறியும் குடியில் பிறந்தவள் -ஒரு வில் முறிக்க ஐயர் என்றும் உகந்த படிக்கும்
இன்று தனியே பதினாலாயிரம் ராக்ஷஸரைப் பொடி படுத்தி நின்ற பெரிய பராக்ரமம் காணப் பெற்றோம்
பார்த்தாராம் பரிஷஸ்வஜே
பண்டு ஐயர் கொடுத்தார் என்று அந்த மணக் கோலத்தை தர்மத்துக்குத் தழுவினாள்
இப்போது வீரக் கோலம் கண்டு ஆண் என்று தழுவினாள்
அம்புவாய் தெரியாதபடி தனது ஸ்தநோஷ்ம தையாலே வேது கொண்டாள்
இவருக்கு சந்தான கரணியும் விசல்ய கரணியும் அதுவே -ஜகத்துக்குத் தாயும் தமப்பனும்
கேட்டே கிடத்தியோ
இப்பிரமாதம் தப்பப் பெற்றுக் கிடக்கிறாயோ -என்ன இவர்கள் பேசின பேச்சிலே ஈடுபட்டுக் கிடக்கிற பெண் பிள்ளையைத் திரு ஜாலாகத்தாலே
சென்று
எட்டிப் பார்த்து
தேசமுடையாய் திற-என்கிறார்கள்
இவளுடைய நிரவாதிக தேஜஸைக் கண்டு உன்னைக் கண்டு வாழ தேசமுடையாய் திறவாய் -என்கிறார்கள் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -புள்ளும் சிலம்பின காண்– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 26, 2017

ஈராயிரப்படி -அவதாரிகை –

உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதவர்களை எழுப்புகிறார்கள் -இதில் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

புள்ளும் சிலம்பின காண் –
போது விடிந்தது எழுந்திராய் -என்று சிஷ்ட கர்ஹை பண்ணுகிறார்கள் –
நாழிகை வட்டில் நீர் நிரம்பினால் விழுமா போலே இரையறுதியிலே உணரும் புள்ளும் சிலம்பின் காண்-
காலம் உணர்த்துவதாக முன்னே புள்ளும் உணர்ந்தன -என்றுமாம்
புள்ளரையன் கோயிலில்-வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ-
திருப் பள்ளி எழுச்சியில் சங்க த்வனியும் கேட்டிலையோ -திருவாய்ப்பாடியிலே திரு முற்றம் உண்டோ என்னில் -உண்டு
பாலா அபி க்ரீடமா ணா -இத்யாதிப்படியே -ஒரு தோளே -தோள் மாலையே -ஒரு வளப்பமே- ஒரு முறுவலே- ஒரு நோக்கே- என்றால் போலே
சக்கரவர்த்தி திருமகன் பக்கலில் பிள்ளைகளும் அகப்படச் செல்லா நிற்க –
சக பதன்யா விசாலாஷ்யா-என்று அவர் தாமும் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே கிருஷ்ணனையும் கும்பீடு கொள்வான் ஒரு எம்பெருமான் உண்டு
புள்ளரையன்
அவனுக்கு நிரூபிக்க தர்மமாகப் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே இறே
சங்கு வெளுக்கும் காட்டில் போது விடியுமோ -அழைக்கும் காட்டில் நமக்குத் புறப்பட வேணுமோ -உங்களுக்கு எப்போதும் பாவனை இது இறே
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் -என்றும்
பூம் கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்றும் உண்டு இறே
பேர் அரவம்
உணரும்படிக்கு போரும் த்வனி -என்கிறார்கள்
கேட்டிலையோ
இதுவும் கேளாதபடியோ அங்குத்தை அந்நிய பரதை -என்று பழி இடுகிறார்கள் -இவள் அது கேட்டு எழுந்து இருக்கைக்கு –
பிள்ளாய் எழுந்திராய்-
உன்னுடைய இளமை இறே -பகவத் விஷயத்துக்கும் பாகவத விஷயத்துக்கும் வாசி அறியாமை -என்ன –
நீங்கள் அன்றோ பிள்ளைகள் -ஒருக்காலும் பிரிகிலேனே -இத்யாதி வத்
பேய் முலை நஞ்சுண்டு-
போது விடிந்தது ஈண்டென எழுந்து இருக்க வேணும் என்று இவள் துணுக்கு என்று புறப்படுகைக்காக -புகுந்த அபாயம் கேட்டிலையோ -என்கிறார்கள் –
பேய் முலை நஞ்சுண்டு-
பெற்ற தாயும் கூட உதவாத தனிமையில் பாதிக்க வந்த பூதனையை முடித்து
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி-
காவலாக வைத்த சகடமும் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புகை அது கட்டழிந்து சிதறும்படியாகத் திருவடிகளாலே உதைத்து
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
பரப்பை யுடைத்தான திருப் பாற் கடலிலே திருவனந்த ஆழ்வான் மேலே யோக நித்திரையில் மிகவும் அவகாஹித்து
ராமாத்யவதார கந்தமாய் அநிருத்த ரூபியாய்க் கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானை –
உள்ளத்துக் கொண்டு –
ஹிருத்யங்களிலே வைத்துக் கொண்டு -பகவத் குணங்களை நினைத்து
முனிவர்களும் –
ப்ரவ்ருத்தி ஷமர் அன்றிக்கே மனன சீலரான முனிவர்களும்
யோகிகளும்-
நாராயணனை க்ஷண கால விஸ்லேஷத்திலும் சஹியாத யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்-உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–
ஸ்தனந்தய பிரஜையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டு உறங்கின மாதா பிரஜை உணராமல் க்ரமத்தாலே எழுந்து இருக்குமா போலே
அவஹிதராய்க் கொண்டு எழுந்திருந்து -ஹரி ஹரி என்று எம்பெருமானும் உணர்ந்து
கேட்டாரும் வாழும்படி பண்ணின திருநாம சங்கீர்த்தனமானது படுக்கைக்கு கீழே வெள்ளம் கோத்தால் போலே
கிருஷ்ண விஸ்லேஷத்தாலே கமர் பிளந்த எங்கள் ஹ்ருதயங்கள் நனைத்து தேறிக் குளிரும்படி வெள்ளமிட்டது –
அது காண் எங்களை எழுப்பிற்று -என்கிறார்கள் –
வெள்ளம்
திருமேனியில் சவ்குமார்யத்துக்குச் சேரும் படி குளிர்த்தி யுண்டான படி
அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலைக தாமநி/ ஞானம் இருவரையும் அறிகை/ விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை /பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி /
அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை
வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ –
உள்ளத்துக்கு கொண்டு
மதுகைடபாதிகள் இல்லாத இடம்
பனிக்கடலிலே நீராடி உண்டவிடாய் தீர -மனக் கடலிலே கொண்டு –
முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் போலே குணவித்தரும் கைங்கர்ய பரரும்-
இளைய பெருமாளும் பரத ஆழ்வானும் போலே திருவாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்ன –
அவன் இங்கே வந்து அவதரிக்கையாலே அவர்களும் உண்டு
மெள்ள எழுந்து
கர்ப்பிணிகளைப் போலே
ஹ்ருதயே நோத் வஹன் ஹ்ரீம்
அரி என்ற பேர் அரவம்
ஹரி ஹரி என்கை யாவது -ரக்ஷது த்வாம சேஷாணாம்-என்னும்படியே உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை
பேர் அரவம்
பஞ்ச லக்ஷம் குடியில் ஒருத்தி த்வனியாய் எழுந்த இத்திரு நாமம் செவி வழியே புக்கு உடம்பு வவ்வலிட உணர்ந்தோம் –

மற்றை அடையாளம் சொல்லுங்கோள்-என்ன
புள்ளரையன் கோயிலில்-வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ-
திருப் பள்ளி எழுச்சியில் சங்க த்வனி கேட்டிலையோ
திருவாய்ப்பாடியிலும் ஒரு திரு முற்றம் உண்டோ என்ன உண்டு –
பாலா அபி க்ரீடமா ணா -இத்யாதிப்படியே -ஒரு தோளே -தோள் மாலையே -ஒரு வளப்பமே- ஒரு முறுவலே- ஒரு நோக்கே- என்றால் போலே
சக்கரவர்த்தி திருமகன் பக்கலில் பிள்ளைகளும் அகப்படச் செல்லா நிற்க –
சக பதன்யா விசாலாஷ்யா-என்று அவர் தாமும் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே கிருஷ்ணனையும் கும்பீடு கொள்வான் ஒரு எம்பெருமான் உண்டு
புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம்
ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச
அகஸ்திய ப்ராதரம்/ நாராயணன் என்னுமா போலே
வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -என்னக் கடவது இறே

——————————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –

ஒரு விடாயாற்றிக்கு வேண்டும் பெண்கள் திரண்டு சிலர் இழக்கச் சிலர் புசிக்க மாட்டாமையாலும் -எம்பெருமானிலும் இவர்கள் உத்தேச்யராய் இருக்கையாலும்-
இவ்விஷயம் தனி அனுபவிக்க ஒண்ணாதே திரளாக அனுபவிக்க வேண்டும் விஷயமாகையாலும்
மேல் பத்துப் பட்டாலும் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்
இவ்வனுபவம் ஆண்டாள் இங்கே இருந்து அனுபவித்தல் -பரமபதத்தில் உள்ளார் அங்கே இருந்து அனுபவித்தல் செய்யும் அத்தனை –
சம்சாரிகளுக்கு நிலம் அல்ல -சம்சாரிகள் உறங்குகைக்கு ஹேதுவும் வேறே -உணர்ந்தால் அனுபவிக்கைக்கு விஷயமும் வேறே –
தமஸ்ஸூ அபீபவிக்க உறங்கிக் காலம் உணர்த்த உணர்ந்து விஷய ப்ரவணராவர்கள் –
எம்பெருமானுடைய உறக்கமும் உணர்ச்சியும் வேறுபட்டு இருக்கும் எங்கனே என்னில்
ஆஸ்ரித சம்ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகை உறக்கம் -உணருகையாவது அவர்களுடைய ஆர்த்த நாதம் பொறுக்க மாட்டாமை-
உணர்ந்தால் அவர்கள் விரோதியைப் போக்கி அவர்களோடே கலக்கை போகமாய் இருக்கும்
இவர்களுக்கு உறங்கப் பண்ணுவதும் உணரப் பண்ணுவதும் உணர்ந்தால் மறக்கப் பண்ணுவதும் -போய் அனுபவிக்கப் பண்ணுவதும் கிருஷ்ண குணங்களே
சின்னம் பின்னம் -இத்யாதிப்படியே ஜ்ரும்பணாஸ்திரம்-மோஹனாஸ்திரம்-சில மோஹிக்கப் பண்ண சில துடிக்கப் பண்ணுமா போலே –

மநோரதம் முடிந்து ஓலக்கம் கிளம்பின போதே தொடங்கி-ஒருவரை ஒருவர் எழுப்பத் தொடங்கினார்கள் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானும் ஆஸூர ப்ரக்ருதிகள் ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்த்தான் –
இவர்கள் ராவண ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்க்குமவர்கள் -தந்தாம் ஆபத்து பொறுக்க வல்லவர்களோ –
செய்யாதன செய்யோம் -என்று இவர்களுடைய ப்ரதிஜ்ஜை தான் ததியர் முன்னிலையாக எம்பெருமான் பாடே செல்லுகையும் -கூட அனுபவிக்கையும் –
இது ஸ்வரூபம் ஆகையாலும் அவஸ்யம் ஒருவரை ஒருவர் எழுப்ப வேணும் -பரதசைக்கு அகப்பட அனுபவிக்கக் குழாங்கள் வேண்டா நின்றது
திருவாய்ப்பாடி வ்ருத்தாந்தத்தில் தனி இழியப் போமோ / வர்ஷாயுதைரித்யாதி / சதுர்முகாயுரித்யாதி /
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பு அரித்தால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -என்கிறபடியே நித்ய ஸூரிகளும் எத்திறம் என்னும் அத்தனை –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றாரும் எத்திறம் என்னும் அத்தனை —
தான் தன்னை அனுசந்தித்தாலும் ஜென்ம கர்மா ச மே திவ்யம் என்று எத்திறம் என்னும் அத்தனை –

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது
மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது
முதல் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் இளைய பெருமாள்
மத்யம பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ பரத ஆழ்வான்
மூன்றாம் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -அவன் படி இவர்களது
உற்றதும் உன்னடியார்க்கு அடிமை நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்னுமவர்களுடைய பெண் பிள்ளை இறே
ஆகையால் ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை –
உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதார் வாசல்களைப் பற்றி எழுப்புகிறார்கள்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

புள்ளும் சிலம்பின காண் –
பகவத் விஷயத்தில் புதியவளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
போது விடிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே என்று சிஷ்ட கர்ஹை பண்ணுகிறார்கள்
விடிந்தமைக்கு பிரமாணம் என் என்ன
நாங்கள் உணர்ந்து வந்தது போறாது என்ன
உறங்கினார் அன்றோ உணருவார் -அது வார்த்தையோ என்ன
நாங்களே அல்லோம் -நோன்பும் உணர்ச்சியும் அறியாதே காலம் உணர்த்த பூ அலருமா போலேயும்
நாழிகை வட்டில் நீர் நிரம்பினால் விழுமா போலேயும் இரையறுதியிலே உணரும் புள்ளும் சிலம்பிற்றன -என்கிறார்கள்
மின்னலே இடித்தாப் போலே உனக்கு முன்னே உணர்ந்தன கிடாய் -என்றுமாம்
இது திருவாய்ப்பாடி அன்றோ -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே / மரங்களும் இரங்கும் வகை /
பஷினோபி பிரயாசைந்தே சர்வ பூதாநுகம்பிநம் /மம த்வஸ்வா நிவ்ருத்தஸ்ய / விஷய தே மஹாராஜ/ ராமோ ராமோ ராம இதி /
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை –

வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ –
சங்கு வெளுக்கும் காட்டில் போது விடியுமோ -அழைக்கும் காட்டில் நாமாக வேணுமோ -உங்களுக்கு எப்போதும் பாவனை அதுவே இ றே
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் -என்றும்
பூம் கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்றும் உண்டு இ றே
பேர் அரவம்
நீயும் உணருகைக்கு போரும் சங்கின் த்வனி
மஹா ராஜர் வாசலிலே சென்று இளைய பெருமாள் சிறு நாண் ஏற்றி எறிந்தார் என்ன
அனந்தாழ்வான் -தாரையினுடைய ஸ்தநோஷ் மாவைப் பற்றிக் கிடந்த மஹா ராஜர் ஆந்த்யமும் தீருகைக்குப் போரும் த்வனி என்றான் –

கேட்டிலையோ
இதுவும் கேளாதபடியோ அங்குத்தை அந்நிய பரதை -என்று பழி இடுகிறார்கள் -இவள் அது கேட்டு துணுக் என்று எழுந்து இருக்கைக்கு –
போது விடிந்து சங்கூதுகிறார்கள் அல்லர் -பணிக்குக் கடவர்களை அழைக்கிறார்கள் என்ன
தூஷணங்கள் தேடிச் சொல்லிப் போது விடியப் பார்த்து இருப்பதே என்று இவர்கள் சொல்ல
அந்தியம் போதே உணர வேணுமோ -அவர்கள் போது அறியாதே சங்கூதினார் அத்தனை -என்ன
பிள்ளாய் எழுந்திராய் –
இந்நோன்புக்கு புதியையாய் இ றே நீ உறங்குகிறது -உனக்கு இன்னம் இளமை இ றே -அந்தியம் போது தான் இக்கோஷ்டி உத்தேச்யம் அன்றோ
பகவத் சம்ச்லேஷத்துக்கும் பாகவத சம்ச்லேஷத்துக்கும் வாசி அறியாயீ என்ன
நீங்கள் அன்றோ பிள்ளைகள் -அவன் பாடு கார்யம் கொள்ள இ றே புகுகிறது -விடிய வேணும் நீங்கள் உத்த்ஸ்யர்களாகில் உங்கள் பேச்சே அமையும் என்ன
அவளுக்கு இவர்கள் பேச்சே அமையா நின்றது -இவர்களுக்கு அவள் வடிவு காண வேண்டா நின்றது
இன்பமே நாளும் வாய்க்க /ஒருக்காலும் பிரிகிலேனே /என்கிற இது ஆண்டாளுக்கு முதலிலே பிறந்து பிரக்ருதியாய் இருக்கிறது
இது காண்கைக்கு மேலே அவனோடே அனுபவிக்க வேண்டாவோ என்ன மாறி மாறி இரண்டும் உத்தேச்யமாகக் கடவது
பிள்ளாய்
எல்லாரும் -குரவ கிம் கரிஷ்யந்தி என்று போகா நிற்க சிந்தயந்தி குரு தர்சனம் பண்ண
பிரணயித்வத்தில் புதியவள் என்றால் போலே இங்கும் இவளை பிள்ளை என்கிறது –

நானோ புதியை-நீங்கள் அன்றோ -காலம் அறியாதே எழுப்பினிகோள்-உங்களை உணர்த்தினார் யார் -என்ன
தங்களை உணர்த்தினவர்களைச் சொல்லுகிறார்கள்
பேய் முலை நஞ்சுண்டு
போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காக புகுந்த அபாயம் கேட்டிலையோ
பெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்
பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புகை அது கட்டு அழிந்து சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
பரப்பை யுடைத்தானா திருப் பாற் கடலிலே அக்கடல் போலேயாய்-சர்ப்ப ஜாதிக்கு அசாதாரணமான சைத்திய சவ் காந்திய சவ் குமார்ய பிரசுரமான
திருவனந்த ஆழ்வான் மேலே ஜகத் ரக்ஷண சித்தாத்மகமான யோக நித்திரையில் மிகவும் அவகாஹித்து
ராம கிருஷ்ணாத் யவதார கந்தமாய் அநிருத்த ரூபியாய்க் கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானை –
உள்ளத்துக் கொண்டு -முனிவர்களும் யோகிகளும்-
ச பரிகரமாக அடக்கவற்றான ஹ்ருதயங்களிலே கொண்டு -பகவத் குணங்கள் ஸ்ம்ருதமானால் ப்ரவ்ருத்தி ஷமர் அன்றிக்கே சிதில அந்தகரணரான முனிவர்களும்
அவனோடு சேர்ந்து கொண்டு அல்லது நிற்க மாட்டாதே க்ஷண மாத்ர விஸ்லேஷத்திலே மாந்துமவரான யோகிகளும் –
தங்கள் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானைத் திருப் பள்ளி யுணர்த்துகைக்காக அவன் அசலாத படி ஸ்தநந்தய பிரஜையை
மார்பிலே ஏறிட்டுக் கொண்டு உறங்கும் மாதா அந்த பிரஜை உணராமல் க்ரமத்தாலே எழுந்திருக்கும் போலேயும்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானைப் பெரிய கற்களோடே கட்டி மலையிலே நின்றும் கீழே தள்ளுகிற போது -அவன் தன்னுடைய நோவு பாராதே
எம்பெருமானுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தால் தன் கைகளால் மார்வைப் புதைத்துக் கொண்டு பார்த்தருளீர் என்றால் போலேயும்
அவஹிதராய்க் கொண்டு எழுந்திருந்து ஹரி ஹரி என்று எம்பெருமானும் உணர்ந்து கேட்டாராம் வாழும்படி பண்ணின திரு நாம சங்கீர்த்தனம்
உறங்குவாருடைய படுக்கைக்கையிலே வெள்ளம் கோத்தால் போலே
கிருஷ்ண விஸ்லேஷத்தாலே கமர் பிளந்த எங்கள் ஹ்ருதயங்கள் நனைத்து தேறிக் குளிரும்படி வெள்ளமிட்டது –
அது காண் எங்களை எழுப்பிற்று -என்கிறார்கள் –

பேய்முலை நஞ்சுண்டு இத்யாதி –
அவர்கள் பயப்படுகைக்கு சொன்னார்கள் -விரோதி போகப் பெற்றதே என்று இவள் பயம் கெடுகைக்கு உடலாய்த்து
கள்ளச் சகடம்
நம்மை முடிக்க வந்தது என்கை -பேயை ஆராய்ந்து கொள்ளலாம் -தாய் ரக்ஷகமாக வைத்த சகடம் கிடீர் என்று அஞ்சுகை
கலக்கழிய காலோச்சி
அவன் அகப்பட்டுக் கொண்டு நின்றான் -முலை தாழ்த்தது என்று மூரி நிமிர்ந்த திருவடிகள் அத்தை முடித்தது என்கை
அவன் ஆபத்துக்கும் நம் ஆபத்துக்கும் ரக்ஷை அவன் திருவடிகள் -ஆகையால் அன்றோ நம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் அவற்றையே பற்றுகிறது
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த
கீழே பிறந்த ஆபத்துக்கு தப்பிப் போய் திருவனந்த ஆழ்வான் மேலே சாயப் பெறுவதே என்கிறார்கள் –
வெள்ளம்
திரு மேனியில் சவ்குமார்யத்துக்குச் சேர குளிர்த்தி யுண்டான படி –
அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலை கதாமநி/ ஞானம் இருவரையும் அறிகை/ விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
எல்லா அடிமை யாகிறது -சென்றால் குடையாம் இத்யாதி
ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை /பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி /
திருமேனிக்கு உறுத்தாமைக்கு படுத்த பரிமளம் படுக்கை –
பாம்புக்கு நாற்றம் குளிர்த்தி மென்மைகள் ஸ்வ பாவம் -இனி திரு விடையாட்டத்தில் பாம்புக்கு வாசி வைத்துக் கொள்ளும் அத்தனை –
இவன் மூச்சுப் பட்டு மது கைடபர்கள் பொடி பட்டுப் போகையாலே-இப்படுக்கை யுடையவனுக்கு பயப்பட வேண்டா என்கை –
அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை
வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே இருக்கை- காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ -என்கை
இதுக்கு முன்பு பிறந்த பிறவிகள் போராமை இனி பிறக்கைக்கு அடியிட்டு இருக்கிறபடி-

உள்ளத்துக்கு கொண்டு
மதுகைடபாதிகள் இல்லாத இடம்
விடாய் தீர -மனக்கடலில் கொண்டு
முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் போலே குணவித்தரும் கைங்கர்ய பரரும்-
இளைய பெருமாளும் பரத ஆழ்வானும் போலே இருப்பார்
உறங்குகிறவர்களையும் உணர்த்துகிறவர்களையும் போலே இருப்பார்
திருவாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்ன –
அவன் இங்கே வந்து அவதரிக்க-பின்பு இடையர் பசுநிரைக் கொட்டில்களிலே கடுகாடு கிடப்பர்கள் –
மெள்ள எழுந்து
கர்ப்பிணிகளைப் போலே
ஹ்ருதயே நோத் வஹன் ஹ்ரீம்
அரி என்ற பேர் அரவம்
ஹரி ஹரி என்கை யாவது -ரக்ஷது த்வாம சேஷாணாம்-என்னும்படியே உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை
பேர் அரவம்
பேர் அரவமாவது ஒருவர் ஹரி என்ன
பஞ்ச லக்ஷம் குடியிலும் ஒரு த்வணியாய் எழுகை முந்துற —
அத சோ அபயங்க தோ பவதி என்று இத்தலையில் பயம் கேட்டால் பின்னை அத்தலைக்கு பயப்பட்டுத் திருப் பல்லாண்டு பாடும் அத்தனை இ றே
பண்டு இழவு பேறுகள் தன்னளவில் -இப்போது பேறு இழவுகள் அவனளவிலே
ரிஷிகளும் முந்துற நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய–என்று தொடங்கி கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் என்று பயம் கெடுவர்கள்
ஸ்ரீ பரத்வாஜ பகவான் பெருமாள் எழுந்து அருளும் தனையும் வவந்தே நியதோ முநிம் -என்று வயிறு எரிந்த படியே இருந்தான்
உள்ளம் புகுந்து குளிர்ந்து-
படுக்கைக்கு கீழே வெள்ளம் புகுந்தால் போலே இத்திரு நாமம் செவி வழியே புக்கு உடம்பு வவ்வலிட உணர்ந்தோம் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -மாயனை மன்னு வடமதுரை மைந்தனை — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 25, 2017

ஈராயிரப்படி –

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

மாயனை –
தானே தன்னை அமைத்துத் தரும் அத்தனை அல்லது அணுகவும் பேசவும் ஒண்ணாத படி
கரை கட்டாக் காவேரி போலே இருக்கும் பேர் அளவை யுடைய ஸ்ரீ வைகுண்ட நாதன் -என்கை –
மன்னு வட மதுரை மைந்தனை-
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக இங்கே பிறக்கையாலே உளனானான்
வட மதுரை
மதுரா நாம நகரீ
மைந்தனை
பிறந்த போதே கம்சனை முடிக்க வல்ல மிடுக்கன் என்றுமாம்
மாதா பிதாக்களுடைய காலிலே விலங்கு கழலும் படி இருக்கை -என்றுமாம்
பிள்ளை என்றுமாம் –
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
கலங்காப் பெரு நகரை விட்டவர்க்குத் திருவாய்ப்பாடி போலே விரஜையை மறக்க ஆறும் யுண்டான படி
பிரசாதம் நிம் நகா யாதா -கோதாவரியைப் போலே பிராட்டியைக் கும்பீடு கொண்டு சரணாகத காதுகையாய் இராதே
கம்சனுக்கு அஞ்சிப் போகிற போதைக்கு உதவ வற்றியும் –
பெண்களுக்கும் கிருஷ்ணனுக்கும் நீர் விளையாட்டு விளையாடுகைக்குப் பெருகுகையும் இப்படி அடிமைக்குப் பாங்காய் இருந்த படி
தூய
கிருஷ்ணனும் பெண்களும் மாறிமாறிக் கொப்பளித்த தூய்மை என்றுமாம்
பெரு நீர்
ஸ்லாக்யம் என்றுமாம் -கிருஷ்ணனுடையவும் பெண்களுடையவும் களவுக்குப் பெரு நிலை நிற்கும்
பொருநல் சங்கணி துறைவன் -என்னுமா போலே பெண்கள் படும் யமுனைத் துறையை யுடையவன் –
கவி பாடுவார்க்கு ஊரும் பேரும் ஆறும் உடையவன் என்கை –
ஆயர் குலத்தினில் தோன்றும்
மதுரையில் பிறப்பு -பிறவாத ஸ்ரீ வைகுண்டத்தோடு ஒக்கும் -திருவாய்ப்பாடியில் பிறப்பைப் பற்ற
தோன்றும்
தேவகி பூர்வ ஸந்த்யாயாம் / அஜோபிசன் /இத்யாதிப்படியே
மணி விளக்கு
புகையும் எண்ணெயும் இல்லை அங்கு -வெறும் மங்கள தீபம்
தாயைக் குடல் விளக்கம் செய்த
பெற்ற வயிற்றுக்குப் பட்டம் காட்டுகை
கௌசல்யா ஸூ ஸூ பேதேந புத்ரேணாமித தேஜஸா
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
தாமோதரனை
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே -அவனுடைய பந்தமும் அவனாலே அறுக்கப் போகாது
சேஷியினுடைய திரு இலச்சினை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
தூயோமாய்
அவன் இடையனாகக் கொண்டு தங்கள் இடைச்சியான ஸூத்தி -ஷத்ரியன் இடையனானால் போலே ப்ராஹ்மணியும் இடைச்சி யானபடி –
தூயோமாய்
வாயிலும் முகத்திலும் நேரிடாதே வருகை -இருந்தபடியே வருகைக்கு ஸூத்தியும்-அஸூத்தியும் வேண்டா
வந்து நாம்
உபஸ்தே யைருபஸ்தித / பத்ப்யாம் அபிகமாச்சைவ / ஹ்ரீஷோ ஹாய் மமாதுலா –அவன் செய்யுமத்தை நாம் செய்யக் காட்டுவோம்
வந்துன் அடியேன் மனம் புகுந்தாய் -உபேயத்தில் த்வரை பார்த்து இருக்க ஒண்ணாது -அப்படி இருக்கிற நாம்
நாம்
நாமே செய்ய வேணும்
தூ மலர்
இலை வாணிபம் பண்ணாத மலர்
மிக்க சீர்த்தொண்டர் இட்ட பூந்துளவு/ சூட்டு நன் மாலைகள் இத்யாதி
தூவி
பிரணயினுக்குச் சடங்கு வேண்டா
தொழுது
வீரன் தோற்றால் போலே தொழுவித்துக் கொள்ளுமவர்கள் இ றே-தொழுகிறார்கள்
இது மிகையாதலில் -அவன் பொறுக்க மாட்டாதே
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே-என்னப் பண்ணுகை
வாயினால் பாடி
வாய் படைத்த பிரயோஜனம் பெறுகை
மனத்தினால் சிந்திக்க
ஞானம் அனுஷ்டான சேஷம் -அது ஒண்ணாத படி வந்த அடைவு கேடு தோன்றாது
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும்
பூர்வாக உத்தராகங்கள்
தீயினால் தூசாகும்
பூர்வாகம் ஆவது -புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்தவை
உத்தராகமாவது பகவத் ஞானம் பிறந்தால் ப்ரக்ருதி வாசனையால் பிராமாதிகமாகப் பிறந்தவை
செப்பு
சொல்ல அமையும் என்கை
மாயனை இத்யாதி அடைவே செப்பு -என்று அந்வயம்-

——————————-

நாலாயிரப்படி அவதாரிகை –

நாம் இங்கனே இலையகல்படுத்தா நின்றோம் -ஸ்ரேயாம்சி பாஹுவிக்நாநி பயந்து மஹதாமபி-என்கிறபடியே
நாம் அநாதி காலம் பண்ணின பாபங்கள் விக்நப்படுத்தாதோ -சக்ரவர்த்தி திருமகன் திரு வபிஷேகத்துக்கு விசிஷ்டன் முஹூர்த்தம் இடுகிறான்
பாக்யாதிகரான பெருமாள் முடிசூட இருக்கிறார்
ஜகத்தடைய இதுக்கு ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -என்று மங்களா சாசனம் பண்ணுகிறது –
நாராயணம் உபாகமத் -என்று பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்கிறது-
அங்கும் அன்றோ சில விக்னங்கள் வந்தது -என்று சில பெண்பிள்ளைகள் சொல்ல –
எம்பெருமான் சங்கல்பித்த உத்சவத்துக்கு விக்னம் உண்டாவது -அவன் அடியார் சங்கல்பித்த உத்சவத்துக்கு விக்னம் உண்டாகாது -என்றார்கள்
சில பெண்பிள்ளைகள் -எங்கனே என்னில்
தன் சங்கல்பத்தை அழிய மாறி ஸ்ரீ பீஷ்மன் அர்ஜுனன் சங்கல்பத்தை முடிய நடத்துகையாலே
நாம் இம் மஹா உத்சவத்திலே அதிகரித்துச் செல்லா நிற்கவே அதுக்கு விக்னம் பண்ணக் கடவ உத்தர பூர்வாகங்கள் தன்னடையே நசித்துப் போம் என்கிறார்கள்

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

மாயனை –
தானே தன்னை அமைத்துத் தரில் அல்லது தன்னை நினைக்கவும் பேசவும் ஒண்ணாத படி கரை கட்டாக் காவேரி போலே இருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதன் -என்றபடி –
இங்கு ஒருகால் ஒருத்திக்கு உடம்பு கொடுக்குமா போலே எல்லாருக்கும் ஓக்க அங்கு தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் –
சதா பஸ்யந்தி
மாயன் –
அவ்விருப்புக்கு எத்திறம்
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்பவள் இறே
இடைச்சேரியோ பாதி அவ்விடம் கை வந்த படி –
நவநீத சவ்ர்ய நகர ஷோபாதிகளை நினைத்து எத்திறம் என்கிறதாகவுமாம்
இவ்விடத்தில் திரு நாட்டுப் படியை விஸ்தரிப்பது-
அவ்விடத்தில் எம்பெருமான் அபிமானத்தில் ஒதுங்கித் தந்தாமுக்கு என்று அபிமானம் இன்றிக்கே இருக்கும்
இங்கு தனித்தனியே ஈஸ்வரோஹம் என்று இருப்பர்கள்
இங்குள்ளார் அங்குச் செல்லிலும் அடியேன் என்று தெளியப் பண்ணும் –
தெளி விசும்பு அவ்விடம்
அங்குள்ளார் இங்கு வரிலும் என்னது என்று அறிவு கலங்கப் பண்ணும் இருள் தரும் மா ஞாலம் இவ்விடம் –
மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
மன்னு -ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக இங்கே பிறக்கையாலே உளனானான் –
ஆர்த்தருக்கும் ஆஸ்ரிதருக்கும் பிறந்தவாறே-( சம்சாரிகளுக்கு பிராணன் வரும் ) வயிறு எரிந்து மறக்கப் பண்ணாது இருக்கும்
வடமதுரை -மதுரா நாம் -ஸ்ரீ வைகுண்டம் போலே குன்றாங்குறிச்சி யல்ல
நகர் –
விட்டுப் போந்த இடமோ பிறந்து விரும்பின இடமோ நகரியாவது
புண்யா -அவனைத் தருகைக்கு உபாயமாகை
பாப ஹரா-விரோதி நிரசனத்துக்கும் தானே
ஸூபா -அவை இரண்டும் இல்லையாகிலும் விட ஒண்ணாது -பரமபதமும் சம்சாரமும் வேண்டோம் என்னும் படி– ப்ராப்யமும் தானே
யஸ்யாம் ஜாத
இத்தனைக்கும் ஆதி
ஜகந்நாதஸ் சாஷாத் விஷ்ணுஸ் ச நாதன
தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு அவர்கள் இட்ட வழக்காய் -வைகுந்த என்றும் அகர்ம வைஸ்யன் -என்றும் சொல்லுகிறபடியே பிறக்கை
சாஷாத்
அங்கு வைத்து இங்குப் பிறந்த / பூர்வ ஸந்த்யாயாம் ஆவீர்ப்பூதம்-அத்திக்கில் ஆதித்யனுக்குள்ள சம்பந்தம் -ஸ்நேஹத்தில் புரை இல்லை அத்தனை –
மைந்தனை-
பிறந்த போதே கம்சனை முடிக்க வல்ல மிடுக்கன் என்றுமாம்
தாய் தமப்பன் காலில் விலங்கு கழலும்படி இருக்கை என்றுமாம்
பிள்ளை என்றுமாம் / ராஜா என்றுமாம் –
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
கலங்காப் பெரு நகர் விட்டுப் போந்தவனுக்குத் திருவாய்ப்பாடி என்று ஒரு அஞ்சினான் புகலிடம் உண்டானால் போலே
விரஜையை மறப்பிக்க ஒரு ஆறு உண்டான படி
பிரசாதம் நிம் நகா யாதா -கோதாவரியைப் போலே பிராட்டியைக் கும்பீடு கொண்டு சரணாகத காதுகையாய் இராதே
கம்சனுக்கு அஞ்சி எழுந்து அருளின போதைக்கு வற்றியும் -நீர் விளையாட்டு ஆடுகைக்கு பெருகியும்
வ ஸூ தேவோ வஹன் கிருஷ்ணம் ஜானு மாத்ரோ தகோயயவ் –
அடி அறிந்தார் கூடப் போந்து கருத்து அறிந்து பரிமாறினால் போலே அடிக்குப் பாங்காய் இருந்தபடி –
தூய
வல்லவீ வத நோச்சிஷ்ட பவித்ராதரவித் ரும -கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிக் கொப்பளித்த தூய்மை -என்றுமாம்
பெரு நீர்
ஸ்லாக்யதை என்றுமாம்
யமுனாம் சாதி கம்பீராம்
யமுனைத் துறைவனை
யமுனை ஆற்றை யுடையவனை –
கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் களவுக்குப் பெரு நிலை நிற்கும் ஆறு
சங்கணி துறைவன் என்னுமா போலே பெண்கள் படும் துறையை யுடையவன் –
ஆயர் குலத்தினில் தோன்றும்
ஸ்ரீ வைகுண்டத்தில் குணங்கள் மடிந்து கிடக்கும்-இங்கே ஒளி வரும் முழு நலமாய்த்து -அந்தகாரத்தில் விளக்கு போலே-
ஸ்ரீ மதுரையில் பிறப்பு -பிறவாத ஸ்ரீ வைகுண்டத்தோடு ஒக்கும் -திருவாய்ப்பாடியில் பிறப்பைப் பார்க்க -என்கை
ஏக்கத்திலே முலைப்பால் இன்றிக்கே ஒழிந்தது -நாக்கு ஒட்டி அழ மாட்டிற்று இலன் -சிலுகு படாமைக்கு அதுவும் கார்யகரமாய்த்து
முலைப்பால் பெற்று அழுதது இவ்விடத்தில் இறே
தோன்றும்
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மனா -அஜத்வ அவ்யயத்வ ஈஸ்வரத்வங்களுக்கு அழிவு வாராமே பிறக்கையாலே –
கீழ்த் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம் இவனோடும் இவளுக்கு உள்ளது
அணி விளக்கை
புகையும் எண்ணெயும் இல்லை
மணி விளக்கு
அதுக்கு மேலே மங்கள தீபம்
தாயைக் குடல் விளக்கம் செய்த –
பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டுகை-
கௌசல்யா ஸூ ஸூ பே தேந புத்ரேணா மித தேஜஸா
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
தாமோதரனை –
தன் வயிற்றில் தழும்பு கண்டார் இப்படி பவ்யனாவதே-என்று கொண்டாடப்படுகை
பட்டம் கட்டுகை யாவது -நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே அவனுடைய பந்தமும் அவனால் அறுக்க ஒண்ணாது
பக்திக்ரீதோ ஜனார்த்தன
ஷாமத்திலே ஒருபடி தட்டுக்கு எழுதிக் கொடுத்தார் நல்ல காலப் பட்டால் ஸார்வ பவ்மநாம் காட்டில் மீட்கப் போமோ-
தான் எழுத்து வாங்கின தழும்பு காட்டி நம்மை எழுத்து வாங்கிக் கொள்ளும் சேஷியுடைய திரு விலச்சினை -என்று பட்டர் –
தூயோமாய்
அவன் இடையனாய்க் கொண்டு தங்கள் இடைச்சிகளான ஸூத்தி -ஷத்ரியன் இடையனானாப் போலே தாங்களும் இடைச்சிகளான படி
வாயிலும் முகத்திலும் நீரிடாதே வருகை –பாபத்திலே வந்தவாறே சாது ரேவா -என்றான்
புண்யத்தில் வந்தவாறே பரித்யஜ்ய என்றான்
சம்சாரிக்குக் குற்றமாவது தனக்கு நன்மை யுண்டு என்று இருக்கை-மத் வ்ருத்தம சிந்தயித்வா –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் கடலிலே முழுகியோ வந்தது -திரௌபதி தூய்மையாய்க் குளித்தோ பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் பறையர் நடுவே யன்றோ சரம ஸ்லோகம் கேட்டது
இருந்தபடியே வருகைக்கு மேற்பட்ட ஸூத்தியும் தேட வேண்டா -அஸூத்தீயும் தேட வேண்டா
தூயோமாய் வந்தோம்
கையிலே மயில் கற்றை இல்லை -என்றுமாம் -அதாவது
மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்-இவனோடு சம்பந்தம் உடையார்க்கும் அகப்பட
பிரயோஜனாந்தர பரதை இல்லை என்னும்படி அநந்ய ப்ரயோஜனதை தோற்ற வந்தான் என்றால் போலே அநந்ய ப்ரயோஜனைகள் என்னவுமாம்
சக்கரவர்த்தி பற்றச் சொன்ன தர்மத்தை த்யஜித்து விடச் சொன்ன தர்மத்தை அனுஷ்ட்டித்து பற்றச் சொன்ன பலத்தை இழந்து
விடச் சொன்ன பலத்தையே பற்றிப் போந்தான் –
ரிஷிகள் அவனையே உபாயமாகக் கொண்டு பலத்தில் வ்யபிசரித்துப் போனார்கள்
புல்லுக்கும் எறும்புக்கு விலக்குகைக்கு பரிகரம் இல்லாமையால் உபாய உபேயங்கள் இரண்டும் எம்பெருமானேயாய் விட்டது
ஆனுகூல்யம் பேரிட்டு விலக்குவாரும் ப்ராதிகூல்யத்தாலே விலக்குவாருமாய் எல்லாரும் இழந்து போனார்கள் –
இவள் இளைய பெருமாளை போலே இரண்டும் அவனேயாகப் பற்றிச் செல்லுவோம் என்கிறாள்
ஆசும் மாசும் அற்ற படி
வந்து
அவன் திரு உள்ளத்தைப் புண் படுத்தக் கடவோம்-
உபஸ்தே யைரூபஸ்தித /பத்பயாமபிக மாச்சைவ / ஹ்ரேஷோ ஹி மமாதுலா / அவன் செய்யுமத்தை நாம் செய்தோம் -என்கை -/ வந்துனதடியேன் மனம் புகுந்தாய்
நாம்
உபாயத்தில் துணிவு முற்பட ஒண்ணாது / உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒண்ணாது / அப்படியே இருக்கிற நாம்
தூ மலர் –
அயத்ன ஸித்தமாய்-கைக்கு எட்டின பூ வெல்லாம்
ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாத மலர் என்றுமாம்
மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துளவம் -என்னுமா போலே அநந்ய ப்ரயோஜனமான மலர்கள் –
தூவித்
யதா ததா வாபி-என்கிறபடியே க்ரம விவஷை இல்லாமை
பிரணயிகளுக்குச் சடங்கு உண்டோ
தொழுது
தொழுவார் கண்டால் முறை கெட்டார்கள் என்று தோற்றமைக்காக தேவதைகளைத் தொழுமா போலே ஓர் அஞ்சலி பண்ணாதே
தொழுவித்துக் கொள்ளுமவர்கள் இறே இப்போது தொழுகிறார்கள்
இது மிகையாதலால் / ருணம் ப்ரவ்ருத்தமிவ -என்னப் பண்ணுகை –
வாயினால் பாடி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று ப்ரீதி பூர்வகமான குண கீர்த்தனம் பண்ணி
வாயினால் பாடி
மனஸ் சஹகாரம் இல்லாமை / உவாஸ ச / போற்றுதும் /என்னும்படியே அத்தலையை அழிக்கக் கடவோம் என்றுமாம்
மனத்தினால் சிந்திக்கப்
மனசிலே பகவத் குணங்களை விழிநீர் அடைத்துக் கொள்ளுகை
மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும் –
பாலும் கண்ட சக்கரையும் பருகப் பருக பிச்சு தெரியுமா போலே நமக்கு இனிதாக பகவத் அனுபவம் பண்ணா நிற்கப்
பெரு நெருப்புப் பட்ட பஞ்சு போலே பிணமுகம் காண ஒண்ணாத படி நசித்துப் போம்
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூ யந்தே-என்கிறபடியே
பூர்வாகமாவது அநாதி காலம் புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
உத்தராகமாவது ஞானம் பிறந்தால் பிரகிருதி வாசனையால் ப்ராமாதிகமாகப் பண்ணும் பாபம்
பாபங்களாவன -சர்ப்பங்கள் போலே செய்த போதே மிடற்றைப் பிடிக்குமது அல்ல -கிரியை இங்கே நசிக்கும் கர்த்தா அஞ்ஞனாகையாலே மறக்கும்
சர்வஞ்ஞன் உணர்ந்து புஜிப்பிக்கும் -பூர்வாகத்தை நசிப்பிக்கும் உத்தராகத்துக்கு அவ்விஞ்ஞாதா வாம் –
இனி ஆரை அண்டை கொண்டு அவை ஜீவிப்பது
சர்வேஸ்வரன் பொறுத்தோம் என்னத் தீரும் அத்தனை இறே
செப்பேலோர் எம்பாவாய்
மாயனை –மன்னு வட மதுரை மைந்தனை-தூய பெருநீர் யமுனைத் துறைவனை –ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை-
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –செப்பு -என்று அந்வயம் –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -ஆழி மழைக் கண்ணா — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 24, 2017

ஈராயிரப்படி —

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4-

ஆழி மழைக் கண்ணா –
பேர் அளவை யுடைய வர்ஷத்துக்கு நிர்வாஹகனான வருணனே
ஓன்று நீ கை கரவேல்-
தந்தாம் பாக்யத்து அளவில் கார்யம் செய்யும் போது அன்றோ புதைத்து விட வேண்டுவது –
எங்களுடைய பாக்யம் அன்றோ புஜிக்கப் புகுகிறது –
ஆழி யுட்புக்கு –
முன் வாயிலே சகரர் கல்லின குழியில் ஒழிய பெரும் கடலிலே புக்கு
முகந்து கொடு –
பாதாளம் கிட்டி மணலோடே பருக வேணும்
ஆர்த்தேறி-
அநசத்திலே தீஷித்த முதலிகள் திருவடி த்வனியைக் கேட்டு இருந்த போதே எழுந்தாட
பிராட்டியைத் திருவடி தொழுத ப்ரீதி பிரகரக்ஷத்தாலே திருவடி ஆர்த்துக் கொண்டு வந்தால் போலே வர வேணும் –
ஏறி –
விஸ்ரம்ய விஸ்ரம்ய புந ப்ரா யந்தி -கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து பெரிய ஏற்றம் ஏறுமா போலே
மதயானை போல் எழுந்த மா முகில்காள்
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே ஆகாச அவகாசம் அத்தனையும் இடமடையும் படி பாரித்துக் கொண்டு வர வேணும்
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்-
ஸ்ருஷ்ட்டித்தால் இவை பண்ணும் நன்மை தீமைக்குத் தக்கபடி பார்க்கும் பார்வை போல் அன்றிக்கே-ஸ்ருஷ்டிக்கு முன்பு
எல்லாரையும் ஐயோ என்று ஓக்கப் பார்க்குமா போலே -நீயும் இங்குத்தைக்கு ஒத்து இருக்கப் பார்க்க வேணும் என்று கருத்து-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் இறே –
உருவம் போல் –
அகவாயில் நீர்மை உங்களால் தேடப் போகாது
நிறத்தை யாகிலும் கொள்ளுங்கோள்
நாச்சியார் விழி விழிக்கச் சொல்லுகிறார்கள் –
மெய் கறுத்து-
அகவாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பு என்னலாம்-
பாழி-
பஹுச்சாயாம் வஷ்டப்த-ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் –
யம் தோள் –
உழறு பால் -ரக்ஷகமும் தானேயாய் -போக்யமும் தானே யாகை-
சுந்தரத் தோளுடையான் இறே
பற்பநாபன் –
புத்ரஸ் தே ஜாத -என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி
கையில்-ஆழி -போல் மின்னி-
வெறும் புறமே அமையும் -அதுக்கு மேலே திருவாழி-
நெய்யார் ஆழி இ றே
ஆழியோடும் பொன்னார் சாரங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
இவர்களை சேர்க்கைக்குப் பரிகரம் அதுவே
வலம் புரி போல் நின்று அதிர்ந்து
பாரத சமரத்தில் முழக்கம் போலே இருக்கை –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-
கை கழலா நேமியான்
வலம் புரி
உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
தாழாதே –
தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே யன்றிக்கே பகவத் சமாஸ்ரயணம் பண்ணினார் பெறுமா போலே பெற வேணும்
தேவ மாத்ருகம் போல் அன்றிக்கே பகவத் சமாஸ்ரயணம் நதி மாத்ருகம் போலே சரதம் என்கை
சார்ங்கம் உதைத்த –
பெருமாள் கடைக் கணித்துப் பார்க்கும் தனையுமாய்த்துப் பார்ப்பது
பின்னை தானே பராக்ரமிக்கும் -அகம்படி கிளர்ந்தால் அரசனால் விலக்க ஒண்ணாது
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் இறே
சர மழை போல்
சர வர்ஷம் வவர்ஷ ஹ
வாழ உலகினில் பெய்திடாய்
சர வ்ருஷடி பண்ண அன்று ராக்ஷசர் மேல் பட்டாப் போல் அன்றிக்கே லோகம் அடைய வாழும்படி வர்ஷிக்க வேணும்
நாங்களும்-மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–
நாங்களும் கிருஷ்ணனும் மகிழ்ந்து நீராட
ப்ரஹர்ஷயிஷ்யாமி
நாங்கள் வியக்க இன்புறுதும்
ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜனகாத்மஜா உவாச தர்மஸஹிதம் ஹநூமந்தம் யசஸ்வி நீ –

——————————-

நாலாயிரப்படி -அவதாரிகை –

சேஸ்வரமான ஜகத்தடைய இங்கே கிஞ்சித்கரித்துத் தந்தாம் சத்தை பெறா நின்றது –
நம்முடைய சத்தையும் பெறுவோம் -என்று -வர்ஷத்துக்குக் கடவ பர்ஜன்யன் வந்து- நான் செய்ய வேண்டுவது என் -என்ன-
வர்ஷம் பெய்யும்படியை அவனுக்குக் கையோலை செய்து கொடுக்கிறார்கள் –
ராவண வத அநந்தரம் முன்பு மறந்த இந்திரன் தன் பதம் பெறுகைக்காக ஒரு வரம் கொள்ள வேணும் -என்றான் –
அங்கு தப்பினார்க்கு இவர்கள் உளராக அஞ்ச வேண்டா -இங்கு தப்பினார்க்கு விநாசமே இறே யுள்ளது –

இப்படி தேவதைகள் வந்து இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்வார்களோ -என்னில் –
த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா
பரிகார மது ஸூதன ப்ரபந்நான்
இறைஞ்சியும் சாதுவராய்–இத்யாதி
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
உன் தன் தமருக்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்றும் உண்டு இறே
இந்த ஆக்கரான தேவதைகள் அன்றிக்கே சாஷாத் தேவதைகளான அயர்வறும் அமரர்களும் இவர்களைத் தொழா நிற்பார்கள் -எங்கனே என்னில்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார்
மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவையே
விரும்புவர் அமரர் மொய்த்தே
விண்ணுளாரிலும் சீரியர் –என்று சொல்லுகையாலே –

ஆழ்வானை ஒரு பட்டன் -தேவதாந்த்ரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் -என்று கேட்க
சாஸ்த்ர விரோதமாகக் கேளாதே கொள்ளாய் -தேவதாந்த்ரங்கள் உங்களைக் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் -என்றார்
சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி /தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம
எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது
இவர்கள் பெருமைக்கு இடைவிடாதே பண்ணுகிறேன் -எம்பெருமானுக்கு ஒருகால் அமையும் –
ப்ராப்யரான இவர்களுக்கு சர்வ ஸ்வதானமாகத் தன்னைக் கொடுக்கும் அத்தனை இறே-

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-4-

ஆழி மழைக் கண்ணா
சம இதி லோகஹி தாஹிதே நீ யுக்த -என்று யமனை அக்காரியத்துக்கு இட்டால் போலே புண்ய பாப அனுரூபமாக
வேண்டும் அளவிலே வர்ஷிப்பிக்கைக்கு சர்வேஸ்வரனாலே நியமிக்கப் பட்டுப் பேர் அளவுடையையாய் வர்ஷத்துக்கு நிர்வாஹகனானவனே
தேவதை அப்ரஸித்தம் ஆனமையாலும் தங்கள் ராஜ குலத்தாலும் இன்ன பணிக்குக் கடவன் -என்பாரைப் போலே தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள் –
தந்தாம் பாகத்து அளவிலே கார்யம் செய்யும் போதைக்கு அன்றோ புதைத்து விட வேண்டியது
எங்களுடைய பாக்ய பலமன்றோ எல்லாரும் புஜிக்கப் புகுகிறது
சேதனனுடைய நன்மை தீமை கணக்கிட்டுப் படி வைக்கும் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்ட்டியின் படி அன்றியே
வரையாதே பாபமே பச்சையாக ரஷிக்கும் எங்கள் கோஷ்ட்டியில் படியே நடத்தித் தர வேணும்
மித்ர மவ்பயிகம் க்ருத்தம் –விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞா / ஏவ முக்தா ஹநுமதா–இத்யாதி
பாபா நாம் வா / ராஜ ஸம்ஸ்ரயவஸ்யா நாம் / அலமேஷா –இத்யாதி
மஹா பாரதம் தூது போனவன் ஏற்றமான நீர்மையைச் சொல்லுகிறது -ஸ்ரீ ராமாயணம் பிராட்டி நீர்மையைச் சொல்லுகிறது-
ஓன்று நீ கை கரவேல்-
ஆர்த்திகள் கை பெரியன் என்று கொண்டாடுமா போலே உன் படிகள் ஒன்றும் குறையாதபடி வந்து தோற்ற வேணும் என்கிறாள்
என்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் -உங்களுக்கு வர்ஷிக்கைக்கு நீருண்டோ என்னில்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு –
என்கிறார்கள் -இந்த முன்வாயில் சகரர் கல்லின உப்புக் குழி ஒழிய பெரும் கடலிலே புக்கு முகந்து கொண்டு பாதாளம் கிடக்க மணலோடே பருக வேணும்
ஆர்த்தேறி-ஆர்த்து
முதலிகள் அநசனத்திலே தீஷித்துக் கிடந்தவர்கள் த்வனி கேட்ட போதே எழுந்து இருந்து ஆடும் படி திருவடி பிராட்டியைத்
திருவடி தொழுத ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஆர்த்துக் கொண்டு
வந்தால் போலே வர வேணும் –
ஏறி
நாங்களும் ஜகத்தும் கண்ட காட்சியாலே தளிரும் முறியுமாம் படி மின்னி முழங்கி வில்லிட்டுக் கொண்டு வர வேணும்
விஸ்ரம்ய விஸ்ரம்ய புன ப்ரயாந்தி–கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து பெரிய ஏற்றம் ஏறுமா போலே ஏற வேணும்
மத யானை போல் எழுந்த மா முகில்காள்
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே ஆகாச அவகாசம் அத்தனையும் நிறையும்படி பாரித்துக் கொண்டு வர வேணும்
ஊழி முதல்வன்
ஸ்ருஷ்ட்டித்தால் இவை பண்ணும் நன்மை தீமைக்குத் தக்கபடி பார்க்கும் பார்வை அன்றிக்கே-ஸ்ருஷ்டிக்கு முன்பு
எல்லாரையும் ஐயோ என்று ஓக்கப் பார்க்குமா போலே நீயும் இங்குத்தைக்கு ஒத்து இருக்கப் பார்க்க வேணும் என்று கருத்து-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் இறே
உருவம் போல்
அகவாயில் நீர்மை உங்களால் தேடப் போகாது
நிறத்தை யாகிலும் கொள்ளுங்கோள்
நாச்சியார் விழி விழிக்கச் சொல்லுகிறார்கள் -ஈஸ்வரனைப் போல் முகம் தோற்றாமல் நின்று உபகரிக்க ஒண்ணாது
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
கால உபலஷிதமான சர்வ பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று திரு உள்ளத்தில் கொண்டதாகையாலே
கருவடைந்த பயிர் போலே இருக்கும் திரு நிறம் -என்கை –
மெய் கறுத்து
அகவாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பு என்னலாம்-
பாழி-
இடமுடைமை –
பஹுச்சாயாம் வஷ்டப்த-ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் –
யம் தோள் –
உழறு பால் -ரக்ஷகமும் தானேயாய் -போக்யமும் தானேயாகை-
சுந்தரத் தோளுடையான் இறே -படவடித்தாலும் விட ஒண்ணாது-
பற்பநாபன் கையில்
பற்பநாபன் –
புத்ரஸ் தே ஜாத -என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் எம்மனார் -என்று கொப்பூழ் அழகைக் கண்டு கிடக்குமவள் இறே
கையில்-ஆழி -போல் மின்னி-
வெறும் புறமே அமையும் -அதுக்கு மேலே திருவாழி-
ராஜாக்களுக்கு பிள்ளை பிறந்தால் காம்பீர்யத்தால் அவர்கள் தங்கள் பேசாது இருக்க உரிய வடியார் நெய்யாடல் போற்றுமா போலே திருவாழி நின்று ஜ்வலியா நிற்கும்
ஆழியோடும் பொன்னார் சாரங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வெளிச் செறிப்பிப்கைக்கும் அழிக்கைக்கும் பரிகரம் அதுவே
வலம் புரி போல் நின்று அதிர்ந்து
பாரத சமரத்தில் பாஞ்ச ஜன்யம் போலே முழங்கித் தோற்ற வேணும்
ச கோஷா தார்த்தாஷ்ட்ராணாம்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-
கை கழலா நேமியான் –இத்யாதி
ஸ்த்ரீத்வத்துக்கு முலை போலே அவனுடைய பும்ஸத்வத்துக்குத் திருவாழி
வலம் புரி
உண்பது சொல்லில் உலகலந்தான் வாயமுதம் –
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக் கால் -என்று தம் துறையில் உள்ளது இறே
தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே யன்றிக்கே பகவத் சமாஸ்ரயணம் பண்ணினார் பெறுமா போலே பெற வேணும்
தேவ மாத்ருகம் போல் அன்றிக்கே பகவத் சமாஸ்ரயணம் நதி மாத்ருகம் போலே சரதம் என்கை
தாழாதே
தசாரதாத்மஜன் -சரணம் என்று புகுந்தவர்களைக் கொண்டு அல்லது தரியாதாப் போலே வர வேணும் என்கை
சார்ங்கம் உதைத்த –
பெருமாள் கடைக் கணிக்கும் போதும் பெருமாளைப் பார்த்துப் பின்னைத் தானே பராக்ரமிக்கும் என்கை
பின்னை தானே பராக்ரமிக்கும் -அகம்படி கிளர்ந்தால் அரசனால் விலக்கப் போகாது இறே –
அவஷ்டப்ய மஹத் தநு–பெருமாள் தம்மால் அமைக்க ஒண்ணாம் பிடித்துக் கொண்டு நின்று ஊசலாடினார்
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் /
சர மாரி/
ஆழி மழை -வார்த்தை முறைப்பட்டது
சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று
வாழ உலகினில் பெய்திடாய்
சர வ்ருஷடி பண்ண அன்று ராக்ஷசர் மேல் பட்டாப் போல் அன்றிக்கே லோகம் அடைய வாழும்படி வர்ஷிக்க வேணும் –
எங்கள் வடிவைப் பாராய் -மழை வேண்டுவார்க்கு –
இப்படி செய்தால் எனக்கு பிரயோஜனம் என் என்ன -உன் கார்யம் செய்து தருகிறோம்
நாங்களும்-மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–
நாங்களும் கிருஷ்ணனும் மகிழ்ந்து குளித்துத் தருகிறோம் என்கிறார்கள் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி
நாங்கள் வியக்க இன்புறுதும் –
இவர்களுக்கு காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கது காலன்-என்ன வேண்டாவே -கிருஷ்ணனைக் கண்டால் போலே இருக்க அமையும் –
ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜனகாத்மஜா உவாச தர்மஸஹிதம் ஹநூமந்தம் யசஸ்வி நீ –
தஹ பேச -என்றும் -கொள்ளை- கூத்து என்றும் ராம கோஷ்ட்டியில் சொல்லும் வார்த்தையைச் சொல்லாதே
எங்கள் குடிப்பிறப்புக்கும் பிறந்த மண் பாட்டுக்கும் தக்கபடி சத்ருக்களும் வாழ வேணும்
எங்கள் கோஷ்ட்டியில் வார்த்தையைச் சொல் என்று அருளிச் செய்தார் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -ஓங்கி உலகளந்த — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 24, 2017

ஈராயிரப்படி-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-

ஓங்கி –
பிறர் கார்யம் செய்ய என்றால் பணைக்கும்-என்கை –
உவந்த உள்ளதனாய் –இத்யாதி பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்ய கிரணங்கள் பட்டால் எழுமா போலே ஓங்குகை
வெய்யில் -ஆர்த்த நாதம்
உலகளந்த –
ஏக தேசத்தை அன்றியே எல்லாரையும் அடைய குணாகுண நிரூபணம் பண்ணாதே ரஷிக்கை-
உத்தமன் –
தென்றலும் நிலவும் போலே பிறர்க்கேயாய் இருக்கை
ந தே ரூபம் -இத்யாதிப்படியே -நமக்கு பகவத ஏவாஹமஸ்மி போலே அவனுக்கு -ந தே ரூபம் பக்தா நாம் -ஆகையும்-
ஆகையால் உத்தமன் ஆனான்
பேர்
பிறர்க்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-திரு நாமத்துக்கு அவனுக்கும்
கங்கா ஸ்நானம் பண்ணுமவனுக்குப் பூர்வத்தில் ஸ்நானம் வேண்டாதாப் போலே இது தானே எல்லா ஸூத்தியும்
பேர்
இது தான் எல்லா அதிகாரிகளுக்கும் அபேக்ஷிதம் –
கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் -கர்மம் செய்து தலைக் காட்டுகைக்கும்
ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும்
பக்தி யோகிக்கு பக்தி சித்திக்கைக்கும் விரோதி போகைக்கும்
பிரபன்னனுக்குச் சோறும் தண்ணீரும் போலே யாகைக்கும்
திரு நாமம் போலே இல்லை என்றபடி
பாடி
ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல -என்று இறே பாட்டுக்கு லக்ஷணம் –
நாங்கள் –
பாடா விடில் தரியாத நாங்கள் -உபாயம் அவனேயாகும் -தாரகமாம் அத்தனை இறே –
நம் பாவைக்கு –
பெறுவது கிருஷ்ணனையாய் பெறுவிப்பானும் கிருஷ்ணனேயான நோன்புக்கு
சாற்றி நீராடினால்
நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்
தீங்கின்றி நாடெல்லாம் –
எல்லாப் பொல்லாங்குகளும் போக -சேஸ்வரமான ஜகத்தடைய வாழ
திங்கள் மும்மாரி பெய்து
நெடுநாள் மழை இன்றிக்கே வியசனப் பட்டால் போலே வெள்ளத்தால் கேடாகாமே ஒன்பது நாள் வெய்யில் எரித்து
ஒரு நாள் தலைக்கு எண்ணெய் ஊற விட்டால் போலே நன்றாம் படி மழை பெய்ய வேணும் -என்கை
யத்ர அஷ்டாக்ஷர -இத்யாதிப்படியே நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே-என்று சொல்லுகிறபடியே –
ஓங்கு பெரும் செந்நெல்
கவிழ்ந்து நின்று முதலையிட்டு அநந்தரம் அண்ணாந்து பார்க்க வேண்டுகை -மேல் நோக்கி உயரும் என்கை –
ஊடு கயலுகளப்
ஒண் மிதியில் -என்னுமா போலே பயிர் மேல் நோக்கும் தனையும் ஆனைக் கன்றுகள் போலே செருக்கித் திரிகிற கயல்களுக்குத் தாவித் திரியலாம் படி இருக்கை
பூங்குவளைப் போதில்
அழகிய குவளைப் பூவில் -போது என்று காலம் ஆகவுமாம்-கயலினுடைய ஸஞ்சாரத்தாலே பூக்கள் நெகிழ்கிறபடி
பொறி வண்டு –
ரசாயன சேவை பண்ணினால் போலே நரை திரை மாறி இளகிப் பதித்து இருக்கை
கண் படுப்ப
சவ்யக்யத்தாலே உறங்கி நீ எழுப்பிற்று இல்லை- நீ எழுப்பிற்று இல்லை- என்று உணர்ந்து விடுவோறே வெறுத்துத் தன்னில் தான் சீறு பாறு -என்கை
தேங்காதே புக்கிருந்து –
இனி ஊரில் ஸம்ருத்தியைச் சொல்லுகிறது
தேங்காதே
திருவடி சமுத்திர தாரணத்துக்கு ஒறுப்பட்டால் போலே
முத்துக்கு முழுகுவார் கடலுக்கு இறாயாதாப் போலே யாயத்து இறாயாதே புக்க படி
இருந்து
பால் வற்றி எழுந்து இருக்க விரகு இல்லை -ஸ்தாவரப் பிரதிஷ்டை போலே
தீர்த்த முலை பற்றி
விரலாலே பிடிக்க ஒண்ணாதே இரண்டு கையாலே அணைக்க வேண்டும்படி இருக்கை
பற்றி வாங்க-
தொட்டு விட அமையும் –
வாங்கக் குடம் நிறைக்கும்
ஒரு கால் பற்றி வலிக்க இட்ட குடம் நிறைக்கை-வைப்பார் தாழ்வே -வைத்த குடம் எல்லாம் நிறைக்கும் -என்றுமாம்
வள்ளல் –
சிறு பிள்ளைகளும் கட்டிவிடலாய் -கழுத்தைக் கட்டிக்க கொண்டு நாலலாயிருக்கை
பெரும் பசுக்கள்-
கிருஷ்ணனோட்டை ஸ்பர்சம் உண்டாகையாலே ஸ்ரீ சத்ருஞ்சயனைப் போலே இருக்கை
நீங்காத செல்வம் –
ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம்
நிறைந்தேலோ ரெம்பாவாய் –

——————————————————-

நாலாயிரப்படி -அவதாரிகை –

தங்கள் நோன்பாலே லோகத்துக்குப் பலிக்கும் பலம் சொல்லுகிறது –
சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே-என்று தங்களோடு ஒரு கோவையாகக் கூடுகை பரம புருஷார்த்தம் –
அதில்லாத பின்பு ஐஹிக போக்யத்தை யாகிலும் இழவாதே பெற்றிடுவர்கள் என்கை –நம்மார்த்தி தீர நாம் குளிக்க- நாடு வாழப் பெறுவதே -என்கிறார்கள் –
ருஷ்யருங்கன் திருவாயோத்த்யையிலே –அங்க தேசத்திலே ?-புகுந்த பின்பு அநா வ்ருஷடி நீங்கி ஸம்ருத்தமானால் போலே –
ஸ்ரீ பரத ஆழ்வான் வியசனம் தீர -நாடு ப்வ்ரஹ்ருஷ்டம் உதித-ஆய்த்து இறே-
இவர்களும் கிருஷ்ணனும் கூடின பின்பு நாட்டுக்கு வர்ஷ ஸம்ருத்தி இறே -இவர்கள் விஸ்லேஷமே இறே நாட்டுக்கு அநா வ்ருஷடி —

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-

ஓங்கி –
பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே –
உவந்த உள்ளதனாய் யுலகமளந்து அண்டமுற நீண் முடியன்-
பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை –
ஓங்குகைக்கு அடியான வெய்யில் அங்கு -இங்கு ஆர்த்த நாதம் -வளர்ந்த சடக்கு –
கையில் விழுந்த நீரும் ப்ரஹ்மா திருவடி விளக்கினை நீரும் ஓக்க விழும் படியாகை –
உலகளந்த –
ஏக தேசத்துக்கு அன்றியே இருந்ததே குடியாக குணாகுண நிரூபணம் பண்ணாதே ரஷிக்கை-
அகவாயில் வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போலே திருவடிகள் புறம்பு எல்லோரோடும் கலந்த படி –
அந்யத்ர-அநஸ் நந்நந்ய-என்று ஒட்டற்று நின்றான் -இங்கு தனக்கு தாரகமாக நின்றான் –
உறங்குகின்ற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்குமா போலே இவ்விடம் தனக்கு தாரகம் –
இவ்வவதானம் எல்லாம் இணைந்து போருகையாலே கிருஷ்ணாவதாரத்தோடே ஒக்கும் –
இசையாதார் பக்கல் விழுமவன் இசைந்தார் பக்கல் மேல் விழச் சொல்ல வேணுமோ –
உத்தமன் –
தனக்காய் இருத்தல் செய்யாதே- தென்றலும் நிலாவும் போலே பிறர்க்கேயாய் இருத்தல் –
ந தே ரூபம் ந சாகார–நிஷேதம் தன்னது என்கையைத் தவிர்க்கிறது
நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை
உத்தமன்
சர்வாதிகன் -என்கை -தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்- அது தன் பேறாய் இருக்கையும் –
ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே இவனே பரதத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே -ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –
பேர்
பிறர்க்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-திருநாமத்துக்கும் அவனுக்கும் உள்ள வாசி –
ஒருவன் திரு நாமத்தைச் செவியில் சொல்லி உறவை அறிவித்துத் தலையிலே திருவடிகளை வையாமையாலே யன்றோ
எனக்கு உன் திருவடிகள் சம்பந்தம் அந்தராத்மத்தையோடு ஒத்து நிலையில்லாதே போய்த்து
பேர்
அம்மே -என்பற்கு சடங்கு வேண்டா -மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால்- அம்மே என்ன பிராப்தி யுண்டால் போலே சர்வாதிகாரம்
ப்ரயதனாய் சொல்ல வேண்டாவோ என்னில்-கங்கா ஸ்நானம் பண்ணப் போமவனுக்கு – வேறு ஒரு குழியிலே தோய வேண்டாதாப் போலே
இது தானே எல்லா ஸூத்தியையும் பிறப்பிக்கும்
எம்பெருமானை ஒழிந்த ஸூத்திகள் இவனுக்கு துரபிமானத்தைப் பிறப்பித்து எம்பெருமானை அகலப் பண்ணும்
அவன் பண்ணும் ஸூத்தியே ஸூத்தியாக தான் அஸூத்தன் என்று இருக்குமவனுக்கு -தானும் தன்னை விட்டு -பிறரும் தன்னைக் கை விட்டு
எம்பெருமான் பரிக்ரஹிக்கைக்கு உடலாகி விடும்
மத் வ்ருத்தம சிந்தயித்வா-
கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும் திரு நாமம் வேணும்
ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும் விரோதி போகைக்கும்
பக்திமானுக்கு விரோதி போகைக்கும் பக்தி வர்த்திகைக்கும்
பிரபன்னனுக்கு சோறும் தண்ணீரும் போலே தேஹ யாத்ரைக்கும் வேணும்
இப்படி எல்லார்க்கும் திரு நாமம் போக்கி இல்லை
பாடி
ஆர்வத்தால் பாடும் பாட்டு இறே பாட்டுக்கு லக்ஷணமாவது -அல்லாதது பாட்டு அல்ல –
நாங்கள்
பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே
நம் பாவைக்கு
அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி இருக்கை –அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை –
அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே பலத்தில் அழிவில்லாமை
பெறுமதுவும் கிருஷணனேயாய்-பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -என்றுமாம் –
சாற்றி நீராடினால்
நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்-
வ்ருத்த ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் -ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே என்கை –
ந மே ஸ்நானம் பஹுமதம் -இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரக தாபம் தீரும்
தீங்கின்றி நாடெல்லாம் –
எல்லாப் பொல்லாங்குகளும் போகை–தந்தாம் பண்ணின புண்ய பலமென்றே அனுபவிக்கிறது -சேஸ்வரமான ஜகத்தடைய வாழ –
திங்கள் மும்மாரி பெய்து
நெடுநாள் மழை இன்றிக்கே வ்யஸனப் பட்டால் போலே -வெள்ளத்தால் கெடாமே ஒன்பது நாள் வெய்யில் எரித்து
ஒரு நாள் மழை பெய்து தலைக்கு எண்ணெய் ஊற விட்டால் போலே நன்றாம் படி மழை பெய்ய வேணும் என்கை –
யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹா பாகோ மஹியதே-ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா -என்றும்
நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே -என்றும் சொல்லுகிறபடியே –
ஓங்கு பெரும் செந்நெல் –
கவிழ்ந்து நின்று முதலை நட்டு அனந்தரம் அண்ணாந்து பார்க்க வேண்டுகை –
செய் கொள் செந்நெலுயர் -என்னுமா போலேயும்-வரம்புற்ற கதிர்ச் செந்நெல் -என்னுமா போலேயும்
ஓங்கு பெரும் செந்நெல்
சுற்றுடைமையும் -ஊக்கமும் -வரம்புக்கு அவ்வருகே போக ஒண்ணாமையாலே ஒரு முதலே செய் யுள்ளது அடையக் கொண்டு
ஆகாசத்துக்கு எல்லை இல்லாமையால் மேல் நோக்கி உயரா நின்றது -என்கை
ஓங்கு பெரும் செந்நெல்
வ்ருஷே வ்ருஷே
ஊடு கயலுகளப்
பயிர் நெருக்கித் தனையும் ஆணைக் கன்று போலே செருக்கித் திரிகிற கயல்களுக்குத் தாவித் திரியலாம் என்கை –
திரு யுலகு அளந்து அருளின எம்பெருமானைக் கண்டு அனுகூலர் செருக்கி ப்ரீதிக்குப் போக்குவிட்டு சஞ்சரிக்குமா போலே கயல்கள் திரிகிற படி –
பூங்குவளைப் போதில்
அழகிய குவளை பூவிலே –
போது என்று கால பரமாகவுமாம்
கயல்களுடைய சஞ்சாரத்தால் பூக்கள் கட்டு நெகிழ்கிற படி
பொறி வண்டு
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே நரைதிரை மாறி இளகிப் பதித்து இருக்கை
இவர்களுக்கு அங்குள்ளது எல்லாம் உத்தேசியமாய் இருக்கை
கண் படுப்ப-
ஒரு மஹா பாரதத்தை நினைத்து வந்து ஏறிப் படுக்கையிலே ஸூ கத்தாலே உறங்கி விடிந்தவாறே உணர்ந்து
நீ எழுப்பிற்றிலை நீ எழுப்பிற்றிலை என்று தன்னில் தான் சீறு பாறு -என்கை
கிருஷ்ணனும் பெண்களும் படுவது எல்லாம் படா நிற்கும்
பள்ளி கமலத்திடைப் பட்ட இத்யாதி –
தேங்காதே புக்கிருந்து
இனி ஊரில் ஸம்ருத்தி சொல்கிறது
தேங்காதே
திருவடி சமுத்திர தரணத்துக்கு ஒருப்பட்டால் போலே புக்கு -கடலிலே முழுகுவார் கடலுக்கு இறாயாதாப் போலே யாய்த்து இறாயாதே புக்க படி –
தேங்காதே புக்கு
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை -அத்தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீ கரிக்குமா போலே
இருந்து
பால் ஸம்ருத்தி யாலே தேங்கும் அத்தனை -பால் வற்றி எழுந்து இருக்க விரகில்லை-ஸ்தாவர ப்ரதிஷ்டை
தீர்த்த முலை பற்றி
விரலால் பிடிக்க ஒண்ணாது -இரண்டு கையாலும் அணைக்க வேண்டி இருக்கை
பற்றி வாங்க
தொட்டு விட அமையும்
வாங்கக் குடம் நிறைக்கும்
ஒரு கால் பற்றி வலிக்க இட்ட குடங்கள் நிறைக்கை-வைப்பார் தாழ்வே -வைத்த குடம் எல்லாம் நிறைக்கும் என்றுமாம்
வள்ளல் –
சிறு பிள்ளைகளுக்கும் கட்டி விடலாய் கழுத்தைக் கட்டிக் கொண்டு நாலலாம் படி இருக்கை –
பெரும் பசுக்கள்
கண்ணன் குழலோசையை அசையிட்டு வளருகையாலும் -அவனோட்டை ஸ்பர்சம் உண்டாகையாலும் ஸ்ரீ சத்ருஞ்சயனைப் போலே இருக்கை
நீங்காத செல்வம் –
ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி என்று இ றே இவர்கள் பார்த்த இடம் -புண்யம் அடியாக வருதல் ஈஸ்வர கடாக்ஷம் அடியாக வருதல் செய்யுமவை போல் அன்று
அவனுடைய ஐஸ்வர்யத்துக்கு அடியான கடாக்ஷம் உள்ளவர்கள் இறே இவ்வைஸ்வர்யத்துக்கு அடி
நிறைந்தேலோ ரெம்பாவாய் —
உத்தமன் –
பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
கரு மணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று சிறு காலைக் காட்டி இரந்து பெரிய காலைக் கொண்டு அளந்து
நீ பண்ணின ஓரம் உன்னை ஆஸ்ரயித்தார் நிர்ப்பரராகைக்கு அவர்களுக்கு நீ வைத்த சந்தானச் சாபம் இறே –
இவ்வாந்தராளிக த்ருஷ்டா த்ருஷ்டங்களில் ஒருவர்க்கு அஞ்சாதே
யமாதிகளுக்கு முழங்கை காட்டிச் செருக்கராய் இவர்கள் திரிகைக்கு அடி என் என்னில் அறிந்தோம் –
ஒரு பரம தார்மிகன் செவியிலே துரப்பலரான நம்மால் நம் கார்யம் நிர்வஹித்துக் கொண்டு கரையிலே ஏற ஒண்ணாது –
உன்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு பிரபலனை அண்டை கொண்டு
த்ருஷ்டா அதிருஷ்ட விஷயமான உன்னுடைய யத்னங்களை யடைய அவன் வசத்திலே பொகட்டு நிர்ப்பயனாய் இரு என்று சொல்லிப் போம் –
இவனும் அத்தையே விஸ்வஸித்து அப்படியே என்று இருக்கும் –
எம்பெருமான் கழுத்திலே ஓலை காட்டித் தூது போயும் மார்பிலே அம்பேற்றும் சாரத்யம் பண்ணியும்
பகலை இரவாக்கியும் சத்ய ப்ரதிஞ்ஞனாயும் அசத்ய ப்ரதிஞ்ஞனாயும் பொய் சொல்லியும் மெய் சொல்லியும்
வார்க்கொத்துக் குத்தியும் எல்லை நடந்தும் – இங்கன் ஒத்த செயல்களை செய்து இவர்கள் காரியமே நிர்வஹியா நிற்கும் -என்றார் –

மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் மட நெஞ்சமே -என்று திருமந்த்ரத்துக்கு அர்த்தமாக
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் என்று அனுசந்தித்தால் போலே
இவளும்- ஓங்கி உலகளந்த உத்தமன் -என்று திரு நாமத்தினுடைய அர்த்தத்தை முந்துற அனுசந்தித்து
பின்னை அதுக்கு வாசகமான -திரு மந்த்ரத்தை பாடி -என்கிறாள் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -வையத்து வாழ்வீர்காள் — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 23, 2017

ஈராயிரப்படி –

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-

வையத்து வாழ்வீர்காள்-
வழியடி யுண்கிற தேசத்திலே முடி வைத்துக் கொண்டு இருக்கிற பாக்யவதிகாள் –
கிருஷி பண்ணும் பூமியிலே பலம் புஜிக்கப் பிறந்த பாக்யவதிகாள் –
நாமும் –
இந்தப் பலம் நமக்கு ஒரு நாள் கை வரவற்றே என்று இருந்த நாமும்
நம் பாவைக்கு
நம்முடைய நோன்புக்கு
இந்த்ரஜித்து நிகும்பிலையிலே ஹோமம் பண்ணினாலே போலே அன்றிக்கே சக்ரவர்த்தி நாலாஹூதி பண்ணி
நாலு ரத்னங்களைப் பெற்றால் போலே நமக்கும் நோன்பு கூடுவதே -என்று கொண்டாடுகிறார்கள்
செய்யும் கிரிசைகள் –
செய்து தலைக் கட்டும் கிரியைகள்
கேளீரோ
கேட்க்கை தானே உத்தேச்யம் –
ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ராமாயணத்துக்குப் போக்கு விட்டால் போலே சொல்லி அல்லது தரிக்க ஒண்ணாதாய் இறுக்கியபடி
இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டு அன்று
இவர்கள் -சொல்லாய் என்னச்- சொல்லுகிறிலள்-
பாற் கடலுள்-பையத் துயின்ற –
திருப் பாற் கடலிலே ஆர்த்தருடைய ஆர்த்த நாதம் செவிப்படும்படி அவஹிதனாய்க் கொண்டு மெத்தெனக் கண் வளர்ந்து அருளினை படி
ஜகத் ரக்ஷண சிந்தை இறே
துயின்ற பரமன் –
உறக்கத்துக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை –
நம் பாற் கடல் சேர்ந்த பரமன்–திருவாய் -3–7–1- -இ றே –
கிடந்தோர் கிடக்கை இ றே
அநாஸ்ரிதற்கு புலி உறங்கினால் போலே -ஆஸ்ரிதற்கு என்றும் அபயமாய் இருக்கும்
தொட்டில் கால் கடையிலே படுத்துக் கொள்ளும் தாயைப் போலே சம்சார ஆர்ணவத்தின் நடுவே கிடக்கை
பரமன் –
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திருவனந்த ஆழ்வான் மேலே சாய்ந்த பின்பு நிறம் பெற்ற படி
பரமன் அடி பாடி-நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
பாலக் குடித்து வேப்பங்காயைத் தின்ன வேணுமோ
ஆனால் கிருஷ்ணனைச் சொல்லாதே ஷீரார்ணவ சாயியைச் சொல்லுவான் என் என்னில் –
கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின் பேரிட்டுச் சொல்லுகிறார்கள் –
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
திருவடிகளை பாடுகையாலே தெகுட்டி-இவற்றால் கார்யம் இன்றிக்கே இருக்கை –
நெய்யுண்ணோம் -என்கிறது கிருஷ்ணன் பிறந்த பின்பு முதலிலே வ்யுத்பத்தி இல்லாமை –
நெய்யுண்ணோம் –
பாலில் சாரமான நெய்யைத் தவிர்த்தவர்கள் பாலைத் தவிர்க்க கேட்க வேணுமோ –
நாட்காலே நீராடி-
ப்ராஹ்மே முஹுர்த்தே -இத்யாதி படியே ராம விரஹத்தாலே பிறந்த வெக்கையை ஆற்றுகைக்காக ஸ்ரீ பரத ஆழ்வான் நீராட்டுப் போலே
கிருஷ்ணம் விரஹம் தின்ற உடம்பை நீரிலே தோய்க்க வென்கிறார்கள் –
சாத்விக அக்ரேஸர் எழுந்து இருக்குமா போலே எழுந்து இருக்கை –
மை இட்டு எழுதோம் –
அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லை -அஞ்சன பர்வதத்தின் அந்தராத்மாவைப் பிடித்தாய்த்துக் கொள்ளீர் இவள் மை எழுதுவது –
மலரிட்டு நாம் முடியோம்
மாலை முடியோம் -பறப்பதின் குட்டி தவளுமோ
சூடிக் களைந்தன சூடுவார்கள் இறே -மாலா காரர் மகள் இறே
செய்யாதன செய்யோம்
விதி யுண்டே யாகிலும் பூர்வர்கள் ஆசரித்த படியை ஒழிய செய்யக் கடவோம் அல்லோம்
முடி சூடுகை சிஷ்டாசாரம் அல்ல என்று இருந்த ஸ்ரீ பாரத ஆழ்வானைப் போலே பஞ்ச லக்ஷம் குடியிலே உள்ள பெண்களிலே
ஒருத்தி குறையிலும் கிருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள் –
தீக்குறளை சென்று ஓதோம்
நம்மில் நாம் பேய்ப்பெண்ணே என்று சொன்னமே யாகிலும் கிருஷ்ணன் செவி கேட்க ஒரு குறை சொல்லாம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் தோஷம் கண்டால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள்
நெஞ்சோடு கூட்டுகையாவது -அவனுக்குச் சொல்லுகை
என் நெஞ்சகம் கோயில் கொண்ட –இறே
அந்தர்யாமி -இறே
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -இ றே
ஆகையால் நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள் –
ஐயமும் பிச்சையும் –
முகந்து இடுகையும் பிடித்து இடுகையும்
ஐயமாவது யோக்கியருக்கு இடுமது / பிச்சையாவது சன்யாசிகளுக்கு இடுமது
ஆந்தனையும் –
கொள்வாரைப் பெருந்தனையும் -கொடுக்கக் கொள்ளுவார் கொள்ள வல்லார் ஆந்தனையும்
கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் -நாம் கொடுத்தது உண்டோ -என்று அத்தை அநாதரிக்கை -ஓவ்தார்யத்தின் மிகுதி இருக்கிறபடி
உய்யுமாறு எண்ணி –
இப்படிகளாலே பிழைக்கும் விரகு எண்ணி
உகந்து
ப்ரீதைகளாய்
எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
அனுபவிக்கும் படியை மநோ ரதித்து
உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று அந்வயம் –

————————————————–

நாலாயிரப்படி -அவதாரிகை –

விடுமவற்றை விடுகையும் – செய்யுமவற்றை செய்கையும்- இரண்டும் பிரியமாகையாலே- க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-

வையத்து வாழ்வீர்காள் —
கொடு உலகம் -என்ற இவ்விடத்தே வாழப் பெற்ற பாக்யவதிகாள் -இங்கே இருந்து ப்ராக்ருத போகங்களை புஜிக்கிற உங்களுக்கு –
மேல் சொல்லுகிற அப்ராக்ருத போகம் இவ்வுடம்போடே சித்திப்பதே -என்கிறார்கள் –
இங்கே கிருஷ்ண குணங்கள் ஆழ மோழையாய்ச் செல்லா நிற்க வானிலே போய்ச் சிறை இராதே –
அந்த இருப்பு தட்டில் இருப்பாரைப் போலே -இது ராக பிராப்தி போலே –
அவன் காற்கடைக் கொண்ட பரமபதம் ஒழிய இங்கே பிறக்கப் பெற்றிகோளே-என்கிறது
அயோத்யா மடவீம் வித்தி –
வாழ்வீர்காள் –
திரு அயோத்யையிலே உள்ளாரைப் போலே வாழக் கோலிப் பதினாலு ஆண்டு தரைக் கிடை கிடந்தால் போலே கிடத்தல் –
அவர்களைப் போலே வாரிப் பிடியாகப் பிடியுண்டு போய் அநர்த்தப் பட்டால் போலே படுதல் செய்யாதே அவனோடு ஓக்கப் பிறந்த பாக்யவதிகள் அன்றோ
திருவடி -பாவோ நான்யத்ர கச்சதி -என்று இலனோ –
அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும்
வானுயர் இன்பம் -என்றும்
அவ்விடம் இவர்களுக்கு சம்சாரமாய்த்து -அவன் இருந்த இடத்தே வாழலாம் அத்தனை இறே-
சேதனனுக்கு அரிதான இடம் –
இவ்விடம் அவன் தானே வந்து தன்னைப் பெறுகிற விடமான தன்னேற்றம் உண்டு
உயர்வற உயர்நலம் யுடையவன் -என்ற போது தெளிவோடு இருந்தவர் -உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -என்ற போது -எத்திறம் -என்று மோஹித்தார்-
தெளியப் பண்ணும் விஷயமே மோஹிக்கப் பண்ணும் -விஷயமோ சீரியது -அங்கு அவனைத் தொழும் அத்தனை –
இங்கு தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-என்று அவன் தொழவும் காணலாம் –
ஆகையால் அன்றோ இங்குள்ளார் -விண்ணுளாரிலும் சீரியராய்த்து
வாழ்வீர்காள்
என்கிற பன்மையாலே ஒரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே ஊராக இதுவே யாத்திரையாக இருக்கை
அடியோமோடும் நின்னோடும் –வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்-என்று கூட்டுத் தேடினார் தாமப்பனார்
இவளுக்கு இங்கே வாழுகைக்கு குழாங்கள் உண்டான படி –
ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே -என்றுமாம் –
கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே
அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே -என்றுமாம் –
நாமும்
நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு -உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது
வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது –
ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –
நாமும்
அதனாலே அலமருகிற நாமும் –
நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு –இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப்
பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்
நம் பாவைக்கு
அவனையும் அவன் உடைமையையும் அழிக்க நினைத்த இந்திரஜித்தின் நோன்பு போல் அன்றியே
அவனையும் அவனுடையாரையும் உண்டாக்கும் நோன்பு
பெண்களையும் அவனையும் எழுப்பிக் கூட்டி ஓலக்கம் இருத்திக் காண்கையே பிரயோஜனமாய் இருக்கை –
பெரிய திருவடியைப் போலே சாத்தியமே சாதகமாய் இருக்கை –
தூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே –
தர்மம் மேல் பலம் தருமதாய் இருக்கை
ஸூ ஸூகம் கர்த்தும் -கைக்கூலி கொடுக்க வேண்டி இருக்கை –
கரும்பு தின்னக் கருப்புக் கட்டி கூலியாமா போலே -அவ்யயம் -தன்னையும் உபய விபூதியையும் கொடுத்தாலும் போராது
இவன் பண்ணின உபகாரத்துக்கு -என்று இவன் பண்ணின அஞ்சலியை நினைத்து இருக்கை –
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே-/ ந ஜாது ஹீயதே –
செய்யும் கிரிசைகள் –
விஹிதத்திலே ப்ரதிஷேதம் உள்ளது -இச்சைக்கு விதேயத்வம் உண்டோ -நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள் –
செய்யும் கிரிசைகள்
மடல் போலே காட்டி நடுவே விடுவது அல்ல -செய்து தலைக் காட்டியே விட வேணும் –
கேளீரோ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர சம்மபிப்பதே -இதொரு லாபமே -என்று இத்தைக் கொண்டாட
மேய்ச்சல் தரையிலே அசையிடாதே இத்தைக் கொள்ளுங்கோள் -என்கை –
ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி- புருஷார்த்தோய மேவைகோ யத்தகதாஸ்ரவணம் ஹரே -என்னும் அளவும்
மஹா பாரதத்தில் சபாத லக்ஷ க்ரந்தத்திலும் தர்மார்த்த காம மோக்ஷங்களைச் சொல்லி –
இவற்றில் நீ எது புருஷார்த்தமாய் இருந்தாய் -என்று வைசம்பாயன பகவான் தன் சிஷ்யனான ஜனமேஜயனைக் கேட்க
நீ பகவத் குணங்களை சொல்லி நான் கேட்க்கும் அது ஒன்றுமே புருஷார்த்தமாக நினைத்து இருந்தேன் -என்றான்
கேளீரோ
இழிந்த துறை தோறும் ஆழங்கால்-அவர்கள் கேட்க ஷமர் அல்லர் -இவள் சொல்லாது இருக்க ஷமை அல்லள்
இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டது அல்ல -அவர்கள் அறியாது கேட்க்கை யல்ல
போதயந்த பரஸ்பம் பண்ண / ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் –
உங்கள் வயிறு வளர்க்க அமையுமோ என்ன சொல்லீரோ என்றார்கள் –
பாற் கடலுள்-பையத் துயின்ற –
கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது
சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே
நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலைக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி
பையத் துயின்ற
கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல
ஆனைக்குபின் பாடுவாரைப் போலே அநாதரித்து
மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –
துயின்ற
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுகை
பரமன்
சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்
அடி பாடி
அவன் சேஷித்வத்துக்கு சமைத்தால் போலே யாயத்து சேஷத்வத்துக்கு இவர்கள் சமைந்த படி
இத்தை அடைய அழிக்கிறோம் -என்கை
மடலூர்ந்தால் தலைமை கிடைக்கும் -ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்னில் ஸ்வரூபம் அழியும்
அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை -/கூறை சோறு இவை வேண்டுவது இல்லை /எல்லாம் கண்ணன் /
உண்ணோம்
என்கிற இது கிருஷ்ணன் பிறந்த பின்பு உண்ணக் கடவதோ– குடிக்கக் கடவதோ-என்று வியுதப்பத்தி இல்லாமை
இவர்கள் பார்த்தாக்கள் காம ரசம் அறியலாய்த்து இவர்கள் இது அறிவது
இவர்கள் பட்டினி அவளை பட்டினி கொள்கை இ றே
ஆண்களும் அகப்பட- ந மே ஸ்நானம் -என்னக் கடவ அவன் -பெண்கள் மாசுடை யுடம்போடு தலையுலரி –நாச் -1–8- என்று தரிக்க வல்லனோ –
நாட்காலே நீராடி-
நாம் முற்பட்டு அவன் மநோ ரதத்தை அசத் கல்பம் ஆக்குவோம்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் தீர –
மை இட்டு எழுதோம்
மைய கண்ணாள் ஆகையால் மங்களார்த்தமாக இடுமத்தனை -எம்பெருமான் பூர்ணனாய் இருந்து வைத்து இவற்றின் சத்தை யுண்டாக்கைக்காக அடிமை கொள்ளுமா போலே
இவர்களும் அவன் சத்தைக்காக அடிமை செய்வர்கள் -இப்போது அது செய்யோம் -அவனைத் துடிப்பிக்கிறோம் என்று கருத்து –
மலரிட்டு நாம் முடியோம்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் கலைந்த சூடும் இத்தொண்டர்களோம்-என்னுமவர்கள் ஆகையால் சேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம்
நாம் முடியோம்
அவன் சூடி -கட்டி ஒப்பிக்கில் இவர்களுக்கு செய்யலாவது இல்லை –
ப்ருந்தா வனத்தே கொடு புக்கு மாலையைச் சூடி ஆணையிட்டு விரல் கவ்வி -கொண்டையை அவிழாதே கொள்-என்னில் செய்யலாவது இல்லை –
நமக்கு அபேக்ஷை இல்லாமையால் புருஷார்த்தம் அன்று -அவன் தீம்பாலே செய்யில் செய்யும் அத்தனை –
செய்யாதன செய்யோம் –
முன்பு அநீதிகள் செய்து இப்போது தவிர்க்கிறோம் என்கிறார்கள் அல்லர் -ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடுகைக்கு எல்லாப் படியாலும் வழக்குண்டாய் இருக்க
இக்குடியில் செய்து போராதது செய்யேன் -என்றால் போலே பூர்வர்கள் செய்யாதனகள் தவிருகை –
ஆழ்வானை தேவரீர் தேவதாந்த்ர பஜநம் பண்ணாது ஒழிகிற து என் என்ன -எங்கள் பூர்வர்கள் செய்து பொந்திலர்கள் என்றார்
இவர்களுக்கு இவை யல்ல பொருள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் முன்னிலையாக அல்லது எம்பெருமானைப் பாடப் புகோம் -என்று இருக்கை
நிவேதியத மாம் க்ஷிப்ரம்
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் ஸ்ரீ பரத ஆழ்வான் முன்னாகத் திருச் சித்ர கூட பர்யந்ததுக்கு போனால் போலே
தீக்குறளை சென்று ஓதோம்
பிராட்டி ராக்ஷஸிகள் செய்த தப்பு திருவடிக்கு அருளிச் செய்யாதே மறைத்தால் போலே தம்மில் தாம் ப்ரணய ரோஷத்தாலே
ஏதேனும் தப்புப் புகுந்தாலும் எம்பெருமானுக்கு அறிவியாமை
சென்று ஓதோம்
கண்ணால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் -அந்தர்யாமி இறே
நினைக்கை யாவது அவனுக்குச் சொல்லுகை
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியுமவன் இறே
ஐயமும் பிச்சையும்
ஐயம் யோக்யற்கு குருவாகக் கொடுக்குமவை /பிச்சை -சன்யாசிகளுக்கும் ப்ரஹ்மசாரிகளுக்கும் இடுவது
ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லார் ஆந்தனையும்
கை காட்டி
ஒன்றும் செய்ததாய் இராமை
உய்யுமாறு
சந்தமேநம் -என்று உஜ்ஜீவிக்கக் கடவர்கள்-கைங்கர்யம் என்றால் உஜ்ஜீவிக்கச் சொல்ல வேணுமோ
எண்ணி உகந்து-
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் -என்று மநோரத மாத்திரமே இனி தாம் விஷயம்
உய்யுமாறு எண்ணி உகக்கை யாகிறது –
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் . குருந்திடைக் கூறை பணியாய் / என்று தாங்களும் அவனும் இட்டீடு கொள்ளும் படியை மநோ ரதிக்கை
ஏலோர் எம்பாவாய்-

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -மார்கழித்திங்கள் — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 22, 2017

ஈராயிரப்படி -அவதாரிகை –

முதல் பாட்டுக்கு வாக்யார்த்தம் -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே -என்று அருளிச் செய்கிறார் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

மார்கழித் திங்கள் —
கிருஷ்ணனோடு தங்களைக் கூட்டின காலத்தைக் கொண்டாடுகிறார்கள் –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று நிலை நின்ற தர்மத்தைப் பற்றுகிற காலம் –
மழை விழுந்து ஹ்ருதயம் குளிர்ந்து ஸத்வ உத்தரமான காலம்
மலையின் உச்சியில் கிடந்த ஸஸ்யங்களும் நிலத்தில் கிடந்த ஸஸ்யங்களும் ஒக்கப் பருவம் செய்யும் காலம்
சைத்ர ஸ்ரீமான் அயம் மாச -என்று பெருமாளை அனுபவிக்க வந்தவர்கள் சைத்ர மாசத்தைக் கொண்டாடினால் போலே மார்கழி மாசத்தைக் கொண்டாடுகிறார்கள் –
மார்கழித் திங்கள் –
மாசா நாம் மார்க்க சீர்ஷோ அஹம்-என்று எம்பெருமானும் அபிமானித்த மாசமாகையாலே வைஷ்ணவ மாசம்
மதி நிறைந்த –
ஆபூர்ய மாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே -என்று பூர்வ பஷமுமாகப் பெற்றது –
மதி நிறைந்த
பஞ்ச லக்ஷம் குடியில் சந்த்ரர்களும் திரண்ட நாள் -திங்கள் திரு முகத்து சேயிழையார்கள் இறே
மதி நிறைந்த நன்னாள்
அத்யமே சபலம் ஜென்ம ஸூப்ரபாதா ச மே நிசா -என்று கம்ச சம்பந்தத்தால் -விடிவு காணப் புகா நின்றோமே -என்று இருந்த அக்ரூரனுக்கு விடிந்தால் போலே விடிந்த நாள்
நன்னாளால்
ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்த நாள்
நீராடப் –
அவனைப் பிரிந்த காலம் ஆகையால் சீத காலமே கோடைக்கு காலமாய் -விரஹ தாபம் அறக் குளிக்கை-எம் மடுவில் தான் இவர்கள் நீராடுகிறது என்னில்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தில் இறே
தங்கள், குண சேஷ்டிதங்களாலே வயிர வுருக்காக உருக்கி வைத்தார்களாகக் கொள்ளீர் கிருஷ்ணனை
நீராட –
என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே
அதாவது -அப்பன் திருவருள் மூழ்கினாள் -இறே
போதுவீர் –
இச்சா மாத்திரமே அதிகாரம்
போதுவீர் போதுமினோ –
மடுவில் இறங்கும் போது தனி இறங்க ஒண்ணாதாய்க் கொள்ளீர் –
ஏக ஸ்வாது ந புஞ்சித -என்று நல்லது கண்டால் தனி புஜிக்குமவர்கள் அன்று இறே –
போதுவீர் போதுமினோ –
போருகை தானே பிரயோஜனம் –
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இறே
அவ்விஷயத்துக்கு தனி வர்த்தகமானவோ பாதி இவ்விஷயத்துக்குத் திரள் வர்த்தகம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -இறே –
நேரிழையீர்
மார்கழி நீராட வென்று நினைப்பிட்ட பின்பு பெண்கள் உடம்பிலே பிறந்த செவ்வி –
உருவுடையார்–நாச் -1–6- என்றபடி வடிவு அழகு அமைந்து இருக்கிறது
பிரபத்தியை ஆபரணமாக யுடையார் –
சீர்மல்கு ஆய்ப்பாடி –
கண்டவிடம் எங்கும் கிருஷ்ணன் தீம்புகளும் அவன் வார்த்தைகளுமாய்ச் செல்லுகை –
கோவிந்த தாமோதர மாதவேதி–
செல்வச் சிறுமீர்காள்-
பெண்களுக்கு ஸ்ரீ மத்தையாவது -லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று இளைய பெருமாளை போலே இருக்கை
சிறுமீர்காள் –
மறந்தும் புறம் தொழா மாந்தர் –
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்-
நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுவான் ஒருவன்
கூர்வேல்
பெரியாழ்வார் மகள் இறே -அங்குத்தைக்குக் காவல் உண்டு என்று தரித்து இருக்கிறாள் -பிள்ளை பிறந்தவாறே வேலைக் கடைய விட்டான் –
மாணிக்கமே என் மணியே இறே
இது உடையவர்கள் காலிலே இறே லோகமாகக் குனிவது
நந்தகோபன்
நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந தாம் ஜராம் -பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை யுடையனாகவுமாம்-
நரை திரை மாறி இளகிப் பதித்தபடி என்றுமாம் –
குமரன் –
சக்ரவர்த்தி திருமகன் போல் விநயம் பாவித்து இருப்பவன்
ஏரார்ந்த கண்ணி –
சதா பஸ்யந்தி என்று பிள்ளையைக் காண்கைக்குத் திறந்திடு வாசலாக நிலைக் கதவைப் பிடுங்கிப் பொகட்ட கண்கள் –
தாமப்பனார் கையிலே வேல் ஒன்றும் கொண்டு நோக்கும்
அம்பன்ன கண்ணாள் யசோதை ஆகையால் இவள் முகத்தில் அம்பு இரண்டும் கொண்டு நோக்கும்
யசோதை –
அஞ்ச யுரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -அனுமதி பண்ணி நாட்டுக்கும் யஸசை கொடுக்க வல்லள் –
இளஞ்சிங்கம்
அவனுக்குக் குமரன் -இவளுக்கு இளஞ்சிங்கம் -ஒருத்தரும் முடி சூட்ட வேண்டா அதுக்கு -தானே ம்ருகேந்த்ரம் இறே
கம்சனை முடியச் செய்ய வல்ல மிடுக்குண்டாகை-
கார்மேனிச்
நம்முடைய விடாய் எல்லாம் தீரும்படியான அழகிய திருமேனி
கார் மேனி
ஆச்சர்யமான திருமேனி -நீல மேக நிப மஞ்சன புஞ்ச ஸ்யாமகுந்தள-என்று ஆழ்வான் அருளிச் செய்த படியே இருந்த திருமேனி
அவர்கள் நீராடப் புக்கவாறே பின்பு அவன் உடம்பிலே இட்ட செவ்வி
செங்கண்
நம் பக்கல் வாத்சல்ய அதிசயத்தாலே குதறிச் சிவந்த கண்கள் -அஞ்சன கிரியிலே இரண்டு தாமரைப் பொய்கையைப் போலே
கதிர் மதியம் போல் முகத்தான்
தங்கள் ஆபத்துத் தீர அவனைக் கண்டால் நகடு கழற்றின சந்திரனைப் போல் இவர்களைக் கண்ட பின்பு அவன் முகம் குளிர்ந்த படி
கதிர் மதியம்
இவன் முகம் வெய்யிலிலே நிலவை ஊட்டினால் போலே இருக்கை –
சந்த்ர பாஸ்கர வர்ச்சஸம் –முளைக் கதிரை-என்று சொல்லும்படி இருக்கை – ஆஸ்ரிதற்கு நிலவைப் போலே -அநாஸ்ரிதற்கு வெய்யில் போலே
ஆஸ்ரிதற்கு புனலுரு-அநாஸ்ரிதற்கு அனலுருவாய் இருக்கும்
ஆஸ்ரிதற்கு சந்திரன் -அநாஸ்ரிதற்கு ஆதித்யன்
போல் முகத்தான்
நகட்டுச் சந்திரனும் கார்கால ஆதித்யனும் போல் அல்லன்-அம்முகத்தை யுடையவன் என்னும் அத்தனை
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -என்றும் சந்த்ர காந்தாநநம் ராமம் -என்றும் சொல்லுமா போலே –
நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதிகளாலே அபலைகளான பெண்களுக்கும் கூடத் தெரியும்படி ஈஸ்வரத்வம்
இரு பொறியிட்டுக் கொண்டு போருகையாலே இத்திரு நாமத்தைச் சொல்லிற்று –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றார்கள் -இறே
சமிதை பாதி சாவித்ரி பாதியாகை அன்றிக்கே-அவன் தானே செய்யக் கடவன் என்கிறது -நாராயணனே என்ற அவதாரணை–
நமக்கே –
அகிஞ்சனரான நமக்கு –
வெறிதே அருள் செய்வர் என்று இருந்த நமக்கு
ஸ்வ யத்ன சாத்யன் என்று இராத நமக்கு
பறை தருவான்-
நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது
அவனோட்டை சம்ச்லேஷம் அவர்களுக்குப் பறை -நமக்கு கைங்கர்யம் -இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை
பாரோர் புகழப் –
நன்மை தீமை அறியாதார் புகழ -கிருஷ்ணனையும் தங்களையும் சேர ஒட்டாத இடையூறும் இடைச்சிகளும் கொண்டாடும்படி
அனுகூலர் கொண்டாட பிரதிகூலரும் கொண்டாட -இந்த ரசம் அறியார்கள் ஆகிலும் நாமும் கிருஷ்ணனும் சேர்ந்த சேர்த்தி கண்டு நாடு புகழ
படிந்து –
அபி நிவேசித்து முன்பு சொன்ன மடுவில் அவகாஹித்து
படிந்து –நீராடப் போருங்கோள் –
என்று கீழோடே அன்வயம்
ஏலோர் எம்பாவாய்-
இது பாத பூர்ண அர்த்தமான அவ்யயம்
ஏல்–கேள் / ஓர் -இத்தை அறுதி இட்டுக் கொள்/ எம் பாவாய் -எம் பிள்ளாய் -நோன்புக்குச் சந்தஸ் என்றுமாம் –

——————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –
முதல் பாட்டு -பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் -காலத்தைக் கொண்டாடுகிறது என்றும் சொல்லுவார்கள்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

மார்கழித் –
ஒழிவில் காலம் என்றும் –அநாதிர் பகவான் கால -என்றும் காலத்தைக் கொண்டாடினால் போலே மாசத்தைக் கொண்டாடுகிறது
ஸூத்ர விஷயங்களில் புக்கால் சமயம் பண்ணின காலம் அறவற்றே என்று இருக்கும் –
குணாதிக விஷயத்தில் இழிந்தார்க்கு புஜிக்கிற விஷயத்தில் அக்காலம் தன்னைக் கொண்டாட வேண்டும்படி இருக்கும்
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் எம்பெருமானார் கேட்டு அருளி இருக்க -ஒழிவில் காலம் எல்லாம் -என்று இங்கனே
ஒரு நாள் எல்லாம் பாடிப் பாடிக் கண்ண நீரோடே விட்டுப் போம்
மார்கழி –
மழை இன்றிக்கே இட்ட பயிர் தீய்தல் -வெள்ளமாய் இட்ட பயிர் அழிதல் செய்யாத காலம் –
மழை யுச்சியில் கிடந்த பீஜங்களோடு -நிலத்தில் கிடந்த பீஜங்களோடு வாசியற பருவம் செய்யும் காலம்
திங்கள்
ஒரு நாளில் ப்ரஹ்ம முஹூர்த்தம் போலே சம்வத்சரத்தில் ப்ராஹ்ம முஹூர்த்தம் என்கை
ப்ராஹ்மே முஹுர்த்தே சோத்தாய சிந்தயேதாத்மா நோ ஹிதம் -என்று வெளிறு கழிந்து நிலை நின்ற தர்மத்தை இறே இவர்கள் சிந்திக்கிறது
மாசா நாம் மார்க்க சீர் ஷோஹம் -என்று வைஷ்ணவமான மாசம்
திரு வத்யயனம் தொடங்கும் காலம் இறே
சைத்ர ஸ்ரீ மாநயம் மாச -இது ஒரு காலமே என்கிறது -ஜகத்தை யடைய வாழ்விக்கும் காலம்
புண்ய -புண்யமும் தானே -அதாவது அவனை அழைத்துத் தரும் காலம்
புஷ்பித காந ந –படை வீடு போலே நாம் விதானிக்க வேண்டா -தானே அலங்கரித்தது –
வ்யதி ரேகத்தில் -அபி வ்ருஷா பரிம்லாநா -இறே
அன்றிக்கே -பாதகரான இடையர் உறங்கும் காலம் என்றுமாம் —
ஸந்த்யை தப்பிற்று என்று ப்ராஹ்மணரைப் போலே அகரேண ப்ரத்யவாயம் இல்லாமையாலே உணரார்கள்-
மதி நிறைந்த –
கிருஷ்ணனும் பெண்களும் சேர வேணும் என்று நினைப்பிட்ட நாளாகையாலே -நள்ளிருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இருள் தேட வேண்டா காலம் என்கை –
இருளன்ன மா மேனி என்று போலியான இருள் தேட வேண்டா –

அவனைக் காணப் பெறுகையாலே நிலவுக்கு இறாய்க்க வேண்டாக் காலம்
பெண்களுக்கு முகம் கண்டு வாழலாம் காலம்
திங்கள் முகங்கள் திரண்ட காலம்
திங்கள் திருமுகத்து சேயிழையார்கள் இறே
ஞான பலம் பூரணமான காலம் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
நன்னாளால்
தாநஹம் த்விஷத க்ரூரான்-என்று இவற்றின் அபராதத்தை நினைத்து பெற்ற தாய் பசலை அற்று இருக்குமா போலே
குழியைக் கல்லி மண்ணைவிட்டு அமுக்குவேன் என்னுமது தவிர்ந்து
தாதாமி புத்தி யோகம் -என்றும்
ஏஷ சர்வஸ்வ பூதாஸ்து -என்றும் இரங்கப் பண்ணும் நாள்
ஊரார் இசைந்து மேல் எழுத்திட்ட நாள்
வத்யதாம் -என்ற மஹா ராஜர் -அஸ்மாபிஸ் துல்யோ பவது என்றாள் போலே அநாதி காலம் பண்ணிப் போந்த விபரீத ருசி தவிர்ந்த நாள்
துர்லபமான பகவத் ருசி பிறந்த நாள்
ஸூப்ரபாதா ச மே நிசா –கம்சன் சோறுண்டு திரிந்த எனக்கு ஒரு நல்விடிவு உண்டாகப் புகா நின்றதோ என்று இருந்தேன்
இப்படி இருந்த எனக்கு ஒரு காலம் அஸ்தமியாத படி விடிந்தது
ஸூப்ரபாதாத்ய ரஜ நீ மதுரா வாச யோஷிதாம் –வில் விழவன்று ஸ்ரீ மதுரையில் பெண் பிள்ளைகளுக்கு விடிந்தால் போலே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இதுக்கு முன்பு எல்லாம் ராத்ரியாய் இருந்தபடி
உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன் -பாஹ்யமான விடிவு அன்றிக்கே ஆணித்தரமான விடிவு -நாராயண தர்சனம் –
நீராடப் –
அவனைப் பிரிந்த நாளாகையாலே சீத காலமே கோடையாய்த்து-அவ்விரஹ தாபம் தீர எம்மடுவிலேயோ இவர்கள் ஆடப் புகுகிறது
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் —
மெல்லியல் தோள் தோய்ந்தாய் –
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம்-
நீராட்டுமவன் முன்னே சமைந்து நின்றான் -ஆடுவாரை இறே அழைக்க வேண்டுவது
ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும் ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –
நீராட
தம் மகளை நீராட்டினாலும் ஆழ்வார் என்ன வேண்டுமா போலே பகவத் விஷயத்துக்கு அண்ணியாரைத் தோழிமார் என்றும் சிஷ்யர்கள் என்றும் இல்லை –
பூஜ்யராகக் கொண்டாட வேணும் என்கை -இதுக்கு ஒரு சிஷ்டாசாரம் உண்டு -ஆண்டாள் பட்டர் ஸ்ரீ பாதத்தைக் கழுவித் தீர்த்தம் கொள்ளும்
நீராட
கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறி முழுக்கிட –
போதுவீர்
இச்சையே அதிகாரம் -என்கை –
திருவேங்கட யாத்திரை போலே நீராடப் போகையே உத்தேச்யம்
போதுமினோ –
அவர்கள் இரந்தார்கள் அல்லர் -தன செல்லாமையாலே இரக்கிறாள்-
ஸூத்ர விஷயங்களுக்குத் தனி யல்லது ஆகாதாப் போலே இவ்விஷயத்துக்குத் திரள் அல்லது ஆகாது
இவ்விஷயத்தில் இச்சா மாத்திரம் அமைகிறபடி எங்கனே –புறம்பு உள்ளவற்றுக்குப் பெரு நெறிகள் செல்லா நிற்க -என்னில்
இங்கு அபரிச்சேத்யமான விஷயமாகையாலும் -தானே உபாயமாகையாலும் -சேதனான வாசிக்கு இச்சா மாத்திரம் அமைந்தது
போதுமினோ
அவர்கள் முன்னே போகத் தான் பின்னே போக நினைக்கிறாள் -அவர்கள் போக இசைவார்களோ என்னில் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே
இவளுக்கு பிரியம் என்றவாறே அத்தையும் இசைவார்கள்
போகாதே இருந்தால் ஆற்றலாமாகில் தவிருங்கோள் –
நீராட
கிருஷ்ணனும் தாங்களும் மாறி மாறி முழுகக் கூப்பிட ஈடுபாட்டால் அவர்கள் எழுந்து இருக்க ஷமர் அல்லர் -தன் செல்லாமையாலே இவள் இரக்கிறாள்
பிரதிகூலரையும் அகப்பட – தேன மைத்ரீ பவது தே – என்னக் கடவர்களுக்கு அனுகூலரை ஒழியச் செல்லுமோ –
நேரிழையீர்-
அவனோடு கலந்தார்க்கு இறே -அவனோடு கலக்க வேணும் என்று ஆற்றாமை மிகுவது
புனை இழைகள் அணிவும் -ஆபரணங்கள் அடைய மாறாடி இருக்கை –
சவ்ம்ய ரூப-பெரு நாளை -கையார் சக்கரம் என்றால் ஊர் புதுக் கணித்து இருக்குமா போலே -மார்கழி நீராட என்ன இவர்கள் புதுக் கணித்த படி –
பாவனா ப்ரகர்ஷத்தாலே ஒருபடி பூண்டால் போலே இருக்கும் -கிருஷ்ணன் எப்போது பார்க்குமோ என்று எப்போதும் இருந்து கோலம் செய்வர்கள் –
சீர்மல்கு ஆய்ப்பாடி –
பரமபதத்திலும்-திரு அயோத்யையிலும் திருவாய்ப்பாடி சம்பத்து மிக்கு இருக்கை –
உழக்கிலே பதக்கிட்டால் போலே -திருவாய்ப்பாடியிலே ஐஸ்வர்யம் பெருத்த படி எங்கனே என்னில்
ப்ரீதி ரோதம சஹிஷ்ட சா புரீ ஸ்த்ரீவ காந்த பரி போக மாயதம்-என்கிறபடியே
சீர் மல்கும் ஆய்ப்பாடி
பிள்ளைகள் கால் நலத்தாலே நாழிப் பால் நாழி நெய் போருகை –
சீர் மல்குகை யாவது -பகவத் குணங்கள் மாறாதே சீராகக் கிடைக்கை என்றுமாம் –
அதாகிறது ஊரடைய கிருஷ்ணன் தீம்பும் அவன் வார்த்தையுமாய்க் கிடக்கை-
ஆய்ப்பாடி
இக்காலத்துக்கு ஓரூர் நேர் படுவதே -என்கிறாள் –
திரு அயோத்தியை போலே வசிஷ்டாதிகள் புகுந்து நியமியாதே அநாசாரமான ஊர் –
பட்டர் திருப்பாவை அருளிச் செய்யா நிற்க பூணூல் சாத்தாத தொரு ஸ்ரீ வைஷ்ணவர் வர
கூசாதே உள்ளே புகுவீர் இவ்விடம் திருவாய்ப்பாடியாய்க் காணும் செல்லுகிறது என்று அருளிச் செய்தார் –
செல்வம் –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -நாடு எல்லாம் தன்னைப் போலே வாழும்படி வாழப் பிறந்த பாக்யவான்
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் -ராவண சம்பந்தம் அற்ற போதே ஸ்வாபாவிகமான வைஷ்ணவ ஸ்ரீ வந்து மாலையிட்ட படி
ச து நாக வர ஸ்ரீ மான் -என்று தன செயலில் கைவிட்டு அவன் செயலே செயலாக அத்யவசித்த பின்பு
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ஸ்ரீ மான் என்றால் போலே
ராவண சம்பந்தம் அற்றவோபாதி யாய்த்து ஸ்வா தந்தர்யம் அறுகையும்-
அவனுக்கு அந்நிய சேஷத்வமேயாய் ஸ்வா தந்தர்யம் இன்றியே இருந்தது
இவனுக்கு அந்நிய சேஷத்வம் இன்றியே ஸ்வ ஸ்வா தந்தர்யம் யுண்டாய் இருந்தது
இருவருக்கும் இரண்டும் அற்றவாறே லஷ்மி ப்ராபித்தாப் போலே –
செல்வம் –
வலி பாதி -வழக்கு பாதி தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் எச்சில் படுக்கை -என்னவுமாம் –
தர்மமாவது -ஆந்ரு சம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும் படி
வழக்கு மைத்துனமை கொண்டு கலக்கும் படி
வலியாவது-தன்செல்லாமை கொண்டு மேல் விழும்படி
சிறுமீர்காள்-
ஆண்களைக் கண்டால் -நான் என்னது என்று இருப்பாரைக் கண்டால் போலே காணும் –
பருவம் கழிந்த பெண்களைக் கண்டால் தேவதாந்த்ர பஜநம் பண்ணினாரைக் கண்டால் போலே காணும்
பாலைகளைக் கண்டால் உகக்கும் -அது என் என்னில்
பார்த்தாவுக்கு ஸ்நேஹியாத பாலை அறிந்தவாறே பார்த்தாவுக்கு ஸ்நேஹிக்கும்-பார்த்ரந்தர பரிக்ரஹம் பண்ணினவர்கள் பார்த்தாவுக்கு ஆகாதே
சிறுமீர்காள்
அவனுக்கு சத்ருசமான அநந்யார்ஹ சேஷத்வம் யுடையராகை –
எங்களை நீர் இங்கனே கொண்டாடுகிறது என்-நமக்கு இந்நோன்பு தலைக் கட்டித் தருவாரார் -என்ன
நந்த கோபன் குமரன் –
என்கிறார்கள் -அவன் நமக்குச் செய்யுமோ -என்ன -குடிப் பிறந்தவன் அன்றோ -என்கிறாள் –
கூர் வேல் கொடும் தொழிலன் –
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே
இக்குடிக்கு வேலே ஆயுதம்
பிள்ளையைச் சொல்லும் இடத்தில் நின் கையில் வேல் போற்றி -என்று இறே சொல்லுவது –
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் –
சிறியாத்தானைப் போலே பசும் புல் சாவா மிதியாத ஸ்ரீ நந்த கோபர் தெளியக் கடைந்த வேலைக் கொண்டு பிள்ளைகள் தொட்டில் கால் கீழே
சிற்று எறும்பு வரிலும் ஸிம்ஹத்தின் மேலே விழுமா போலே விழுந்து கொல்வர்
சாதுவாய் நின்ற பசு கன்று இட்டவாறே அதின் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால் முன்னின்ற கன்றையும் புல்லிட வந்தவர்களையும்
அகப்படக் கொம்பிலே கொள்ளுமா போலே படுவர்
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே அங்குத்தைக்குக் காவல் உண்டு என்று இருக்கிறாள்
நந்த கோபன்
அம்பரமே தண்ணீரே -என்ற பிராண தாரகங்களைக் கொடுக்குமவர் நம் பேர் இழவுக்கு இரங்கி நம் பிராண தாரகத்தைத் தாராரோ
நந்த கோபன்
பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் –
குமரன் –
வெண்ணெய் களைக் களவு கண்டான் -பெண்களைத் தீம்பு செய்தான் -என்று எல்லாரும் வந்து முறைப்பட கேட்டு –
என் முன்னே தோற்றும் கிடீர் என்று இருந்தவர் முன்னே தோற்றினால் இவனையே குற்றம் சொல்வது என்று அவர்களைக் கோபிக்கும் படி
சக்ரவர்த்தி திருமகனைப் போலே விநயம் பாவித்து இருக்கும் –
ஏரார்ந்த கண்ணி-
அழகார்ந்த கண்ணை யுடையவன் -அவனை சதா பஸ்யந்தியான கண்கள் –
அம்பன்ன கண்ணாள்-என்னுமா போலே ஒரு ஆளும் ஓர் நோக்கும் ஒன்றாய் இருக்கை-
அசோதை
அஞ்ச வுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று அவன் செய்யும் தீம்புக்கும் அவள் அனுமதி பண்ணி இருக்கும் –
இளஞ்சிங்கம்
தமப்பனார்க்கு பவ்யனாய்–தாயார் சந்நிதியில் மூலையடியே திரிகை –
சிங்கக் குருகு -என்று பட்டர் –
அவர்கள் சிறுமியர் -இவன் இளஞ்சிங்கம் –
அநந்யார்ஹ சேஷத்வமும் சேஷித்வமும்
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னுமா போலே இருக்கை –
கார் மேனி
தமப்பனாரும் தாயாரும் ஒளித்து வைத்தாலும் -களவு காண்டாகிலும் காண வேண்டி இருக்கும் விஷயம்
கார் மேனி
தங்கள் ஆடப் போகிற தடாகம்
செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
மடுவிலே பூத்த தாமரை ஓடத்தை விழவிட்டு வடிவைக் காட்டிக் குளிர நோக்கி வாயாலே வினவும் படியை நினைக்கிறார்கள்
செங்கண்
ஸ்ரீ யபதித்தவத்தாலும் -வாத்சல்யத்தாலும் -சிவந்து இருக்கை –
ப்ரசன்னாதித்ய வர்ச்சசம் –சந்திரனுடைய குளிர்த்தியிலே ஆதித்யனுடைய ஒளியை ஊட்டினால் போலே இருக்கை –
கதிர் மதியம்
ஆண்களுக்கு அநபி பவனாய் -பெண்களுக்கு அணைக்கலாய் இருக்கை –
முளைக் கதிரை –
விரியும் கதிரே போல் வானை –
செய்யாதோர் நாயிற்றைக் காட்டி
ஸூர்யமிவோ தயஸ்த்தம்
பிராட்டி வடிவுக்கு -வரவுக்கு -அருணோதயம் போலே மார்கழி நீராட நினைத்த பொது பிறந்த செவ்வி –
நாராயணனே
ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் -இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும்
காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன்
ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இறுக்கிறபடி-
நமக்கே பறை தருவான்
உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மடல் வைக்க வேண்டா என்கை –
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்
நமக்கே –
என்றது என் -நாராயணத்வம் எல்லாருக்குமே என்னில்-அதிகாரி நியமம் பண்ணுகிறது –
ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –
அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -என்றுமாம்
விலக்காமையும் அதுக்கு அடியானை சம்பந்தத்தை உணர்ந்து இருக்கையும் யுடையவர்கள் என்றுமாம் –
அப்படியல்ல வாகில் சர்வ முக்தி பிரசாங்கமாம் –
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம்-
நாராயணனே
குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் –
வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –
பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறே
பறை தருவான்
நாட்டுக்கு நோன்பு -நமக்கு பறை —
த்வ்யர்த்தகம்
பாரோர் புகழ
இந்த சம்ச்லேஷம் அறியார்களாகிலும் இச்சேர்த்தி கண்டு இனியராம் படி படுத்தும் –
படிந்து
அவகாஹித்து
ஏலோர்
இப்படி அர்த்த ஸ்திதி –
இத்தை ஒருங்கோள்
எம்பாவாய்
மேல் காமனை நோர்க்கையாலே அவனகமுடையாளான ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
சந்தஸ் ஸை-என்றுமாம்
நோன்பு என்றும் அருளிச் செய்து போருவது
ஏலோர் எம்பாவாய்
என்று இரண்டு அவ்யயமும் பாத பூரண அர்த்தம் என்றுமாம் –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -அவதாரிகை — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

October 22, 2017

ஸ்ரீ ஆண்டாள் வைபவம் –
கர்க்கடே –ஆஷாடே-பூர்வ பல்குன்யாம் துளஸீ கானன உத்பவாம் -பாண்ட்யே விஸ்வம் பராம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம் –
தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதவ் சோதாம் உபாஸ்மஹே -யன் மவ்லி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீ கரோதி ஸ்வயம் ப்ரபு-
ஸூசி மாசி பாண்ட்ய புவி பூர்வ பல்குநீக நபே நவீன துளஸீ வநாந்தராத் –உதிதாம் உதார குண ரங்க நாயக ப்ரிய வல்லபாம் வஸூ மதீம் உபாஸ்மஹே –
சித்தா நாம் சரதாம் கலாவபகமே வர்ஷே நளாக்யே ரவவ் யாதே கர்க்கடகம் விதாவு பசிதே ஷாஷ்டே அஹநி ஸ்ரீ மதி
நக்ஷத்ரேர்ய மாதேவதே ஷிதி புவோ வாரே சதுரத்யாம் திதவ் கோதா ப்ராதுர பூத சிந்த்ய மஹிமா ஸ்ரீ விஷ்ணு சித்தாத்மஜா –

கலியுகம் 100-வருடங்களுக்கு மூன்று வருடங்கள் கழித்த அளவில் -நள வருஷம் -கடக ராசி -திருவாடிப் பூரம் –
சுக்ல பக்ஷம் -ஆறாவது தேதியில்- செவ்வாய்க் கிழமை- சதுர்த்தி திதியில்- ஸ்ரீ கோதா-சூடிக் கொடுத்த நாச்சியார் – திருவவதாரம்

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் –

————————

திரு நாராயண புரத்து ஆய் என்னும் ஜனனயாச்சார்யார் வைபவம் –

ஆச்சார்ய ஹ்ருதயஸ் யார்த்தா சகலா யேந தர்ஷிதா
ஸ்ரீ சானு தாசமமலம் தேவராஜம் தமாஸ்ரயே–
ஸ்ரீ சானு தாசர்–ஸ்ரீ தாழ்வரைத் தாசர் -ஸ்ரீ தேவராஜர் –மாத்ரு குரு-ஆயி -மற்ற திருநாமங்கள்
ஸ்ரீ யாதவாத்ரி -திருநாராயண புரம் -அஷ்டோத்தர சதா ஸ்தான சாரம் -தக்ஷிண பத்ரி காஸ்ரமம் -வைகுண்ட வர்த்தன க்ஷேத்ரம் -இந்திரா க்ஷேத்ரம் -மேலக்கோட்டை –
திவ்ய ஷேத்ரத்தில் சேனை முதலியார் திருவவதரித்த- ஓங்கு துலாப் பூராட நன்னாளில் உதித்து
பாலமுதமும் புஷ்ப்பமும் செல்லப்பிள்ளைக்கு சமர்ப்பித்துக் கொண்டு நம் தரிசனத்தை நிர்வஹித்துக் கொண்டு இருந்தவர்
ஆஸூரிப் பெருமாள் -74- சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் -திருவம்சம் -இவர் திருத்த தகப்பனார் ஸ்ரீ லஷ்மணாச்சார்யார் –
இவர் திருக் குமாரர் ஸ்ரீ கேசவாச்சார்யர் -சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ கரித்தவர்-

நம்பிள்ளை சிஷ்யர்களில் ஒருவர் -அவர் இடம் இருந்து திருவாய் மொழி யீட்டைப் பெற்றவர்- ஈயுண்ணி மாதவர் -ஈடு ஓராண் வழியாக உபதேசிக்கப் பெற்று வந்தது
இவருடைய குமாரர் -ஈயுண்ணி பத்ம நாதர் -இவருடைய சிஷ்யர் நாலூரப்பிள்ளை என்னும் ஸூமந கோலேஸர்-
இவருடைய குமாரரும் சிஷ்யரும் தேவராஜர் என்னும் நாலூர் ஆச்சான் பிள்ளை -இவருடைய சிஷ்யர்களில் முக்கியமானவர் ஆய் என்னும் ஜனன்யாச்சார்யார்-

தேவராஜர் செல்வப்பிள்ளைக்கு பாலமுத்து காய்ச்சி அமுது செய்யப் பண்ணி வந்தார் -ஒரு நாள் சிறிது தாழ்க்கவே
அது பொறாமல் நம் ஆய் -தாய் எங்கே இன்னம் காணோமே என்று அர்ச்சக முகேந வினவின படியால் ஆய் என்றும் ஜனன்யாச்சார்யார் என்றும் திருநாமம் உண்டாயிற்று –
பகவத் பாகவதருக்கு தாய் போலே பரிவு காட்டி ஆய் என்றும் ஜநநீ என்றும் சிறப்புப் பெயர் பெற்றவர்
இவர் அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷண -ஆச்சார்ய ஹ்ருதய -திருப்பாவைக்கு ஈராயிரப்படியும் நாலாயிரப்படியும் -வியாக்யானங்கள் உள்ளன –
ஆயி சிஷ்யர் -நல்லப்ப நாயன் என்பவரை பிள்ளை லோகம் ஜீயர் உபதேச ரத்ன மாலை -58-பாட்டு வியாக்யானத்தில் கூறி இருக்கிறார் –

மாறில் முடும்பை உலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும் -வல்லிருளைச்
சீறும் படி திருத் தாழ்வரை தாதன் தெரிந்து எனக்குத்
தெரியும்படி யுரைத்தான் திருத் தாள்கள் என் சென்னியதே –

ஞான சதுர்த்திகளின் மேலே இ றே ஆனந்த ஷஷ்டிகளுக்கு உதயம் -என்கிற ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்திகளுக்கு ஆயி ஸ்வாமிகள் பக்கலிலே
கேட்டு அறிய மா முனிகள் வர- ஆய் ஸ்வாமியும் ஜீயருடைய பிரபாவம் கேட்டு ஆசன்னமாக மார்க்க மத்யே –
இருவரும் அன்யோன்யம் வந்தன பரராய்- குசல ப்ரச்னம் பண்ணி நிற்க
பெரிய நம்பியும் எம்பெருமானாரும் எதிர்ப்பட்டால் போலே யாயிற்று என்று மிகவும் உகந்து அருளினார்கள் ஸ்ரீ பாதத்து முதலிகள் –

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ பூங்கமழும்
தாதரு மகிழ் மார்பன் தான் இவனோ -தூதுரைக்க
வந்த நெடு மாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் -என்று ஜீயர் பற்றி இவர் அருளிச் செய்தார் –

மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றோர் தீது அற்ற
ஆசாரிய விதயம் பெற்றார் நம் மாயி யிவர்
தேசாரத் தாள்கள் நெஞ்சே காண்

மாதவத்தோர் வாழ்த்தும் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் நீதியினால்
ஆங்கு அவர் தாள் சேரப் பெற்றார் ஆய் மணவாளன்
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று

பூர்வாஷாடா வதீர்ணாய துலாயாம் யது பூதரே
ஸ்ரீ சானு தாச குரவே தேவராஜாய மங்களம்

ஓங்கு துலா பூராடத் துதித்த செல்வன் வாழியே
ஒண் மதியோன் எதிராசன் ஒண் சரணோன் வாழியே
பாங்குடனே ஞானப் பிரான் பணியுமவன் வாழியே
பஞ்சமத்தின் பொருள் தன்னைப் பரிந்து உரைத்தோன் வாழியே
தேங்கு புகழ் தேவராசர் திரு வருளோன் வாழியே
தென் மறையின் மனப் பொருளைத் தெளிவித்தான் வாழியே
நாங்கு திருக்கை திரி தண்டம் தரித்த வள்ளல் வாழியே
திருத்தாழ்வரை தாதர் திருவடிகள் வாழியே —
பஞ்சமத்தின் பொருள் தன்னைப் பரிந்து உரைத்தோன் -பஞ்சம உபாயமான ஆச்சார்ய அபிமானம் / தேவராசர் -நாலூராச்சான் பிள்ளை –

————————————————-

ஈராயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –

எம்பெருமானாரை -ஓருரு திருப்பாவைக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன –
திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப் பாவைக்கு ஆள் கிடையாது -என்று அருளிச் செய்தார் –
மோவாய் எழுந்த முருடர் கேட்க்கைக்கு அதிகாரிகள் அல்லர் -முலை எழுந்தார் கேட்க வேணும் –
அவர்களிலும் எம்பெருமானைத் தங்கள் அனுபவிக்க வேணும் என்று இருக்கும் பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் அல்ல -பல சொல்லி என் –
பத்து ஆழ்வார்களுடைய சார பூதையான தானே சொல்லித் தானே கேட்க்கும் அத்தனை – என்று அருளிச் செய்தார் –

ஒரு பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் உள்ள வாசி போரும் ரிஷிகளுக்கும் சம்சாரிகளுக்கும் –
அத்தனை வாசி போரும் ஆழ்வார்களும் ரிஷிகளுக்கும்
அப்படியே பெரியாழ்வாருக்கும் ஆழ்வார்களும்
அத்தனை வாசி போரும் பெரியாழ்வாருக்கும் திரு மகளாருக்கும்
பதின்மருடைய ஞானமும் ஸ்த்ரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது
பத்துப் பேர்க்கு ஒரு பெண் பிள்ளை இறே –

ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றனர் -இவள் தான் எம்பெருமானுக்கு மயர்வற மதி நலம் அருளினாள்
இவள் அருளுகையாவது எம்பெருமானை எழுப்பித் தன் குறையை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்கை–

இளைய பெருமாள் படி ஆழ்வார்களது —
ஸ்ரீ பரதாழ்வான் படி பெரியாழ்வாரது –
ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி அவர் திருமகளது –
ஆழ்வார்களும் இளைய பெருமாளும் பகவத் அனுபவத்தை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ பரத ஆழ்வானும் பெரியாழ்வாரும் பகவச் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ சத்ருன ஆழ்வானும் நாய்ச்சியாரும் மதுரகவிகளோடு ஒப்பர்கள் -நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வஸித்து இருப்பர் –
இளைய பெருமாள் -பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த-ரானாப் போலே -இவளும் தொடக்கமே பிடித்து ஸ்னேஹித்துக் போரும் –
இப்படி விலக்ஷணையான நாய்ச்சியார் அருளிச் செய்த பிரபந்தம் இறே திருப்பாவை –
இப்பிரபந்தத்துக்கு கருத்து -மார்கழி நீராட -என்கிற இத்தை ஒரு வ்யாஜமாகக் கொண்டு நோன்பு முன்னாக எம்பெருமானை –
உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மா அநர்த்தப் படாதபடி பண்ணி -இதற்கு ஸ்வரூப அனுகுணமான கைங்கர்யத்தையும் கொடுத்து
அதுதான் யாவதாத்மா பாவியாம் படி பண்ணி யருள வேணும் -என்று அபேக்ஷிக்கிறாள் –

அர்ஜுனன் ஷட்க த்ரயத்தாலும் கூட -மாமேகம் சரணம் வ்ரஜ -என்று அவனைக் கொண்டு உபாயத்தை அறுதியிடுவித்தாப் போலே
இவளும் முதல் பாட்டால் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று உபாயத்தை அறுதியிட்டுச்
சிற்றம் சிறுகாலையிலே உபேயத்தை அறுதியிட்டுக் கொண்டு
நடுவே தேஹ யாத்திரைக்கு உடலாக்கி விடுகிறாள் –
அன்று எனக்கு அவை பட்டினி நாள் -5-1–6-என்னுமவர் மக்கள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் என்றும் உண்டாய் இறே
மாலாகாரர் மகள் இறே –
ஆழ்வார்களுக்கு அந்யாபதேசம் ஆண்களாய் இருக்கச் செய்தே பெண்களாகை –
இவளுக்கு அந்யாபதேசம் -ப்ராஹ்மணியான இவள் இடைச்சி யாகை
குலம் தரும் இறே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -என்றும் உண்டு இறே –

இவளுடைய ஞான பக்திகள் க்ஷணம் தோறும் பகவத் விஷயத்திலே கை வளர -வட பெரும் கோயிலுடையான் முகம் கூடாதே இருக்க
இவளும் ஐஸ்வர்யார்த்திகளுக்காக எல்லை நடந்து கொடுத்து -இளைப்பாலே கிடக்கிறான் என்று புத்தி பண்ணித்
தன் திரு முலைத் தடங்களை யிட்டு நெருக்கினாள் –அத்தாலும் எழுந்து இருந்து பிரதிவசனம் பண்ணக் கண்டிலள் –
காணாமையாலே வ்யசனாதிகளாலே மீளவும் சிசிரோபசாரம் பண்ணினாள் -அத்தாலும் எழுந்து இருக்கக் காணாமையாலே –
இது நோவு -அல்ல –நம் பக்கல் ப்ராணய அபராதத்தாலே கிடக்கிறான் -என்று நினைத்து மிகவும் தளர்ந்து திருவாய்ப்பாடியில்
பெண்பிள்ளைகளை அனுசந்தித்துப் பார்த்தாள்-அது காலாந்தரத்திலே யாகையாலே உதவப் பெற்றிலோம் என்று தளர்ந்து மிகவும் அவசன்னையாய்
நமக்கு தரிகைக்கு விரகு என் -என்று கூப்பிடச் செய்தே சில சாபராணி ப்ரப்ருதிகள் கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணனோடு கலந்து பிரிந்த பெண்கள்
தங்கள் ஆற்றாமையாலே- துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று கிருஷ்ணனை அனுகரித்து தரித்தாப் போலே-
இவளையும் அனுகரித்து தரிக்கச் சொல்ல இவளும் கிருஷ்ணனை அனுகரிப்பதிலும் கிருஷ்ணனை அனுகரித்த பெண்களை அநுகரிக்கை நன்று
என்று பார்த்து அனுகரித்து தரிக்கிறாள் –அவ்வநுகாரம் முற்றி -இடை முடியும் இடை நடையும் இடைப் பேச்சும் முடை நாற்றமுமாய் விட்டது
இப்படி தான் இருந்த ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய்ப்பாடியாகவும் -வட பெரும் கோயில் ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையாகவும் –
வட பெரும் கோயிலுடையானே கிருஷ்ணனாகவும் -தன்னைப் பிராட்டியாகவும் தோழிமாராகவும் அணுகரித்துக் கொண்டு நோற்கிறாள் –

நோன்புக்கு அடி என் என்னில் –மீமாம்ஸையிலே ஹோளாகாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம் –
மேலையார் செய்வனகள் -என்று நோன்பு நோற்க அறுதியிட்ட- வாயாலே எல்லை நிலத்திலே நிற்கிற நாய்ச்சியார் தாமே அருளிச் செய்தார் –
பொய்யே நோற்கிறோம் என்று சொல்லலாமோ என்னில் -விவாஹ சமயத்திலும் ப்ராணாந்திக சமயத்திலும் பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் உண்டு
உண்டு என்று சொல்ல வேணுமோ அனுஷ்டானம் யன்றோ பிரதானம் -இவ்விரண்டுக்கும் கைம்முதல் வேறே தேட வேணுமோ -இவர்களுடைய ஆற்றாமை தான் என் செய்யாது –
அழகிது -இது தான் இங்கு விளைந்தபடி என் என்னில் –
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமநோய் -புருஷோத்தமனாய் -புண்டரீகாக்ஷனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -சாத்விக சேவ்யனாய் இருக்கிற
சர்வேஸ்வரன் தன் கிருபையால் நிர்ஹேதுகமாக பிறந்து அருளி -தன்னுடைய சீலாதிகளாலே ஜனங்களை ஈடுபடுத்தி -வாரிப் பிடித்துக் கொண்டு போவான் ஒருவனாகையாலே –
ததார்த்தமாகத் திருவாய்ப்பாடியிலே வந்து திருவவதரித்துப் பெண்களும் தாணுமாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே
கிருஷ்ணனும் ப்ராப்த யவ்வனனாய் பெண்களும் குமாரிகளாய் இருக்கிற இருப்பைக் கண்டு -இவன் இப்படி தூர்த்தனாய் இரா நின்றான்
இவன் பாடு பெண்கள் சேரக் கடவர்கள் அன்று -ஏன்று எல்லாருமாகத் திரண்டு இப்பெண்பிள்ளைகளை நிலவறைகளிலே அடைத்தார்கள்
இப்படி வெண்ணெயும் பெண்களும் கிருஷ்ணனும் பிரிந்த தர்ம ஹானி கண்டாவது –
இவர்கள் பண்ணின பாக்யமாவது நாடு வர்ஷம் இன்றிக்கே நோவு பட்டுப் பசுக்களுக்கு ஊண் இன்றிக்கே பிராணன் இன்றிக்கே ஸஸ்ய வ்ருத்திகளும் இல்லையாய்த்து –

நாடு வர்ஷம் இன்றிக்கே இருக்கிறபடியைக் கண்டு கோப வ்ருத்தர்கள் எல்லாம் திரண்டு -பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்க விரகு என் என்று விசாரிக்க –
அசரீரி போலே புருஷ வாக்யம் -தேவதை திருப்தனாக வர்ஷமுண்டு -என்று பிறக்க –
இவர்களும் வருஷார்த்தமாக இவ்வூரில் பெண்பிள்ளைகள் அடைய நோற்கக் கடவர்கள்-என்றார்கள் –
இக்க்ரமம்-அபி வ்ருஷா பரிம்லா நா -என்றது போய்-அகால பலிநோ வ்ருஷா-என்று புண்ய காலம் வந்தால் போலே இருந்தது –
அநந்தரம் வர்ஷார்த்தமாக நோர்க்கைக்காக நிலவறைகளிலே அடைத்த பெண்களை புறப்பட விட
நந்தகோபர் வ்ருத்தராகையாலே-எல்லாவற்றுக்கும் கடவானாக கிருஷ்ணனையும்
சாந்த்வ வாதனம் பண்ணிப் பெண்களையும் கிருஷ்ணனையும் சேர விட்டு சரணம் புக-கிருஷ்ணனும்
கோபீ பரிவ்ருதோ ராத்ரிம் சரத் சந்த்ர மநோ ரமாம் -என்று சொல்லுகிறபடியே
தண்டலிட்ட நிலவும் -விள்ளலிட்ட நாண் மலர்ச் செறிவும் -இருந்த சோலையும் -பளிங்குப் பாறையும்- செங்குன்றுத் தாழ்வரையும் –
பரப்பு மாறப் பூத்த காவியோடையும் – நாயடி இட்டுப் புகுந்த தென்றலுமாய் இருக்கிற- யமுனா தீரத்தில் பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையடைய
மெய்க்காட்டிக் கொண்டு கழகம் இருந்து – இனி நாம் வைகல் இருக்கில்- மாதா பிதாக்கள் அதி சங்கை பண்ணுவார்கள் –
உந்தம் அகங்களிலே போய்ச் சேருங்கோள்-என்று தானும் நப்பின்னை பிராட்டி திரு மாளிகை சேர
பெண்களும் தந்தாம் அகங்களிலே போய்ப் படுக்கையிலே சேர- படுக்கை அடி கொதித்து
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாய் மத்திய ராத்ரியிலே எழுந்து இருந்து சிலர் உறங்குகின்ற பெண் பிள்ளைகளை எழுப்புகிறார்கள்
உறங்குகிறவர் யார் எழுப்புகிறவர் யார் என்னில்
குண வித்தர் உறங்குகிறார்கள் -கைங்கர்ய பரர் எழுப்புகிறார்கள்
ராம சரம் ஒருபடிப் பட்டு இராது இறே
சின்னம் பின்னம் -அப்படி கிருஷ்ண குணங்களும் நாநாவாய் இறே இருப்பது
இரண்டு பிரகாரமும் பரமபதத்தில் உண்டு -அமரரும் முனிவரும் – இறே -முனிவரோடு ஒப்பார் உறங்குகிறார்கள் -அமரரோடு ஒப்பார் எழுப்புகிறார்கள் –

ஆக நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
வர்ஷிக்கும் படியை நியமித்து
நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி
மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்
மேல் விசதமாக இருக்கும்

————————————————–

நாலாயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –

அநாதி மாயயா ஸூப்தா யதா ஜீவ ப்ரபுத்யதே-என்கிறபடியே அநாதி காலம் ஒரு போகியாக உறங்கினவன் இனி
அநந்த காலம் ஒரு போகியாக உணர்ந்தே இருக்கும் படி சொல்லுகிறது –
உணர்ந்தது எம்பெருமானை யாகையாலே உணர்த்திக்கு பாதகம் இல்லை -ப்ரக்ருதியைச் செறியச் செறிய இருள் மிகும் -எம்பெருமானைச் செறியச் செறிய உணர்த்தி மிகும் –
ஞான ஆனந்த மயமான ஆத்ம ஸ்வரூபத்துக்குத் திரோதானம் பிறந்த அத்தனை இறே பண்டு செய்தது -ஸ்வரூப சித்தி யன்றோ ப்ராப்யம்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன்
பாஸ்கரேண ப்ரபாயதா/ திருக் கண்டேன் -என்ற பின்பு பொன்மேனி கண்டேன் என்றார் இறே-பிரபையை முந்துறக் கண்டு இறே ஆதித்யனைக் காண்பது –
ஸூப்ரபாதா ச மே நிசா -என்று அக்ரூரனுக்கும் கம்ச சம்பந்தத்தால் விடிவு காண ஒண்ணாத ராத்ரியும் விடிந்து அஸ்தமியாத பகலாய்த்து
கும்பகர்ணனுக்கு உறக்கம் தேட்டம் -விபீஷண ஆழ்வானுக்கு உணர்த்தி தேட்டம்
ராவணனுடைய உணர்த்தியில் கும்பகர்ணனுடைய உறக்கம் நன்றாய் இருந்தது -உணர்ந்தால் எம்பெருமான் பக்கலிலே செல்லுகைக்கு இறாய்க்கும் அத்தனை இறே –
ஆஜகாம முஹுர்த்தேன யத்ர ராம்ஸ ச லஷ்மண – ஸூப்ரபாதாத்ய ரஜநீ மதுராவார யோஷிதாம் -என்று அங்குள்ளார்க்கு
நல் விடிவும் நமக்கு விடியாத ராத்திரியுமாய்த்து என்றார்கள் இறே – ஆதித்யன் உண்டானாலும் கண்ணுள்ளார்க்கு இறே விடிவு உள்ளது –

ஆண்டாளுக்கு பத்துத் தாமப்பன்மாருக்கு உண்டான ஆற்றாமையும் ஸ்த்ரீதனமாகப் பெற்று இவள் பக்கலிலே குடி கொண்டது –
ஆழ்வார்களுக்கு தரிக்கைக்கும் ஒரு பொற்றை யுண்டு -தங்களான தன்மை அழிந்து இருக்கச் செய்தே-நாய்ச்சியார் தசையாக அந்யாபதேசத்தாலே பேசி அனுபவித்தார்கள் –
இவள் பிறந்திட்டாள்-என்னுமா போலே அந்யாபதேசத்தாலே அனுபவிக்க வேண்டாதே
அவனைப் பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வத்தை உடையளாய் இருக்கும் –
அவர்களில் காட்டிலும் ஆற்றாமை தன்னேற்றம் -எம்பெருமான் தன் அழகையும் குணங்களையும் இவளுக்கு கொடுத்தான் –
பிராட்டிமாரும் தங்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களையும் இவளுக்குக் கொடுத்தார்கள் –
தமப்பன்மாரைப் போலே ஏறிட்டுக் கொண்ட பெண்மை என்று -இவளுக்கு ஓர் அந்யாபதேசம் யுண்டு -அதாகிறது
ப்ரமணி இடைச்சியாகை-குலம் தரும் -என்று அவனுக்கு அந்நிய குலம் இறே –
பதிம் சம்யோக ஸூலபம் வாயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசா சாதாப்லவோ யதா -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் பருவமாய்
மானிடவற்கு என்று பேச்சுப் படில் வாழ கில்லேன் என்னும் தன்மையை யுடையளாய்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணிக் கொண்டு
வட பெரும் கோயிலுடையானோடே -தழுவி முழுசிப் பரிமாற்ற வேணும் என்று இவள் செல்ல -இவள் நினைத்த படிகளுக்கு அவன் முகம் காட்டாமையாலே
மிகவும் அவசன்னையாய்- இவனோடு கலந்து பரிமாறப் பெற்றார் உண்டோ இல்லையோ என்று ஆராய்ந்து பார்த்த இடத்திலே
திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகள் யதா மநோ ரதம் இவனோடு அனுபவிக்கப் பெற்றார்கள் என்று கேட்டு -அதுக்கு நாம் உதவப் பெற்றிலோம் -என்று இன்னாதாக
கோவர்த்த நோ கிரிவா -அவன் பொருப்பான பன்னிரண்டும் காட்டின மலை கிடந்தது
யமுநா நதீ சா -அவனும் பெண்களும் புக்குக் கலக்கின நீர் இன்னமும் தெளிந்தது இல்லை -மஞ்சளும் குங்குமாதிகளும் இப்போதும் காணலாம்
அனந்தாழ்வான் திரு முக்குளத்தில் புகுத்தி தடவினார் -இது என் என்ன -அப்பெண் பிள்ளைகள் குளித்த தொரு மஞ்சள் கொழுந்தாகிலும் கிடைக்குமாகக் கருதிக் காண்-என்றார்
பிருந்தாவனம் ச -அவனாலும் பெண்களாலும் பருத்தி பட்ட பன்னிரண்டும் ஸ்ரீ பிருந்தா வனத்தில் திருக் குரவை கோத்த அடிச் சுவடும் இன்னமும் அழிந்தது இல்லை
மதுரா ச புரி புராணி -ஆஸ்ரிதற்கு வயிறு எரித்தலான தேசம் -கொடும் தேசம் என்றுமாம் -ஆனை படும் ஆகரம் போலே சர்வேஸ்வரன் படும் ஆகரம்
அத்யாபி அந்த ஸூலபா கருதி நாம் ஜனா நாம் –கால்நடை பாக்யவான்களுக்கு இப்போதும் காணலாம் கிடீர்-

வைலக்ஷண்யத்துக்கு த்ருஷ்டாந்தம் –
தேஹாத்ம அபிமானத்துக்கு கூனியும் கைகேயியும் –
தார்மிகத்வத்துக்கு சக்ரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்தர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்-
இளைய பெருமாள் படி ஆழ்வார்களது -ஸ்ரீ பரத ஆழ்வான் படி பெரியாழ்வாரது -ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி ஆண்டாளது
பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார் -இவள் பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்டாள்-
முந்துறவே பல்லாண்டு என்றார் அவர் -இவள் நீராடப் போதுவீர் -என்றாள்
இவர்க்கு மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -இவளுக்கு உபாயம் விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க -இவள் தன்னை அழித்து அவர்களை பெறப் பார்க்கிறாள்
நம்மாழ்வார் -நெடுமாற்கு அடிமையிலும் -வேய் மறு தோளிணையிலும் -கடை கோழி -கடைக் கோடி -நிலையிட்ட அர்த்தம் -இவளுக்கு முற்பட்டது –

கிருஷ்ணனைப் பிரிந்த இத்தர்ம ஹானி கண்டு மாரி மறுத்தது -கூடினால் -ப்ரஹ்ருஷ்டமுதிதோ லோக -பிரிந்தாலும் -அபி வ்ருஷா பரிம்லாநா -என்னும்படியாம் இறே
முன்பே மழை பெய்யாமைக்கு நோற்றார்கள் ஆகவுமாம்-மேலையார் செய்வனகள் -என்று வ்ருத்த ஆசாரங்களை நினைக்கிறது ஆழ்வார்களை –
அர்ஜுனன் உபாயத்தை கடைக் கோழி கடைக் கோடி-நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்-
ஸ்ரீ பரத ஆழ்வான் உபேயத்தை நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உபாயத்தை முதலிலே நிலையிட்டு
முடிவிலே உனக்கே நாம் ஆடச்செய்வோம் -என்று உபேயத்தை நிலையிட்டு
நடுவே தேஹ யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள் ஆண்டாள் –

வில்லி புத்தூர் உறைவான் தன பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா -என்பான் என் என்னில்
சத்ப்ரக்ருதி யாகையாலே காணில் மோஹிக்கும் என்று வட பெரும் கோயிலுடையான் திருவடிகளில் புகாதபடி அடக்கிக் கொண்டு இருப்பர்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற போதே -ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைவிட்டு இருப்பர்கள்
இது ஆழ்வார்களும் ஒக்கும் -ஆண்டாளுக்கு ஒக்கும் -எம்பெருமானை ஒழிய அரை க்ஷணமும் தங்களுக்கு தேஹ யாத்திரை நடவாமையாலே கிடந்து
அலமந்து கூப்பிட்ட பாசுரங்கள் இப்பிரபந்தங்கள் -சாஷாத் ப்ரமேயம் இது -அல்லாதது பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் சக்ரவர்த்தித் திருமகனைப் பெறுகைக்கு உடலாக விழுந்தால் போலே
ஆண்டாளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் பெரிய பெருமாள் திருவடிகளை பிராபிக்கைக்கு உடலாய் விழுந்தது –

ஸ்வாபாதேசாதிகளால் பகவத் தியானத்துக்கு எல்லை பெரியாழ்வார் படி -அந்யாபதேசத்துக்கு எல்லை அவர் மகள் படி –

மடல் எடுக்கப் பாராதே நோன்பிலே கையை வைத்தது -கிருஷ்ணன் மடல் எடுக்கக் காணில் நாமும் வீறுடையோம் என்று உபேக்ஷித்து இருக்கும்
இதர உபாயங்களை விட்டு என்னைப் பற்று என்கையாலே நோன்பு என்னில் சஹியான் -இவர்கள் தங்களுக்கு தேஹ யாத்ரையாய்
இருக்கிலும்- நாட்டார் தர்மம் என்று அடுத்துக் கட்டுமதும் பொறுக்க மாட்டான் -அப்போதே கலந்து கொடு நிற்கும் –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-10-

October 21, 2017

கிளரொளி பிரவேசம்
கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –

———————————-

முதல் பாட்டிலே நிரதிசய ஓவ்ஜ்ஜ்வல்ய விசிஷ்டனான சர்வேஸ்வரன் விரும்பின திருமலையே ப்ராப்யம் -என்கிறார் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்–கிளர்ந்து வருகிற ஞான ஓவ்ஜ்ஜ்வல்யத்துக்கு யோக்யதை யுண்டான
யவ்வன ஆரம்ப ரூபமான இளமை -விஷயாந்தர கதமாய்க் கெடுவதற்கு முன்னே
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்–ஆஸ்ரித அர்த்தமாக இங்கே எழுந்து அருளினை பின்பு வளர்ந்து வருகிற
சீல ஸுலப்யாதி குண ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடைய ஆச்சர்ய ரூபனான சர்வேஸ்வரன் பொருந்தி வர்த்திக்கிற திவ்ய ஸ்தானமாய்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை-வளரா நிற்கச் செய்தே இளமை யுடைத்தான பொழில்களாலே சூழப்பட்டு –
அத்தாலே மாலிருஞ்சோலை என்று திருநாமமான திருமலையை
தளர்விலராகில் சார்வது சதிரே –ப்ரயோஜனாந்தர சம்பந்தமாகிற தளர்த்தி அற்று பிராபிக்கும் அதுவே சதிர் –
இது ஒழிய ப்ரயோஜனாந்தரம் உண்டு என்று இருக்கை இளமை என்று கருத்து
சேதனர் பால்யத்தாலே விவேகாத்மாக்களாய்க் கொண்டு அநந்ய பிரயோஜனராய்ப் பற்றும் இது சதிர் இறே -என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து உரைத்தாராய் இருக்கிறது –

—————————————————

அநந்தரம் -அழகருடைய திருமலையோடு சேர்ந்த திருப்பதியை ஏத்துமதே பிரயோஜனம் -என்கிறார் –

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது–அர்த்த அனுரூபமாகவும் ஸ்வ தோஷத்துக்கு ஈடாகவும் ஒதுக்கி உடம்பு கொடுக்கும் சதிரை யுடையராய் –
இளமையாலே மதி மயக்கி செல்லாமை தோன்ற இருக்கும் ஸ்த்ரீகளுடைய தாழ்ச்சி தோற்ற இருக்கும் யுக்தி சேஷ்டிதாதிகளை ப்ரீதி பண்ணாதே
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்-சம்ச்லேஷ ஜெனித ப்ரீதியாலே முழங்குகிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையராகையாலே
நிரதிசய ஸுந்தர்யத்தை யுடைய அழகருக்கு அசாதாரண ஸ்தானமாய்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை-சந்த்ரனானவன் தவழும் படி ஓங்கின சிகர சிகைகளை யுடைத்தான திருமலையில்
பதியது வேத்தி எழுவது பயனே –திருப்பது யாகிற பிரசித்த ஸ்தலத்தை ஸ்தோத்ரம் பண்ணி உச்ச்ரிதராகையே பிரயோஜனம்
இதுவும் நெஞ்சை நோக்கி உரைத்தல் –

————————————————-

பரம உதாரன் வர்த்திக்கிற திருமலையோடு சேர்ந்த அயல்மலையை பிராபிக்கையே கார்யம் -என்கிறார் –

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3–

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே–நெஞ்சே பிரயோஜன ஸூன்யமானவற்றை செய்து பிரயோஜனம் இல்லை
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்-தூறலும் துளியுமான கால மேகம் போலே ஜல ஸ்தல விபாகம் அரா வர்ஷிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்
அபிமுகராய்க் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற வாச ஸ்தானமாய்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை–கண்டார் நெஞ்சு கலங்கும் படி தர்ச நீயமான பொழில் சூழ்ந்த திருமலையினுடைய
அயன்மலை யடைவது அது கருமமே –அருகின மலையை அடைகையாகிற அதுவே கர்த்தவ்யம் -ஸ்வரூப பிராப்தம் –

————————————————————–

அநந்தரம் ரக்ஷகனானவன் வர்த்திக்கிற பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை ஆஸ்ரயிக்குமதுவே செய்யக் கடவபடி -என்கிறார் –

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-பந்தகமான கர்மங்களாகிற -கழற்ற அரிய- பாசங்களை கழற்றி -அடிமை செய்து வ்யாபாரித்து
சேதனர் உஜ்ஜீவிக்கைக்காகவே ஆர்த்தமான கோப கோபீ ஜனங்களுடைய ஆர்த்தி தீர்க்கும்படி
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்-பெரிய மலையை எடுத்து ரஷித்தவன் -தன்னுடைய ரக்ஷண ஐஸ்வர்யம் விளங்கும் படி நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தானமாய்
வருமழை தவழும் மாலிரும் சோலை–வர்ஷ உன்முகமாய் வருகிற மேகங்கள் தவழும்படி மிகவும் உயர்ந்து -பரந்த சோலையை யுடைத்தான
திருமலை யதுவே யடைவது திறமே –திருமலை தன்னையே அடைவதே செய்யும்படி –
மால் -உயர்த்தி /இருமை -பரப்பு /
மாலிருஞ்சோலைத் திருமலை என்கையாலே திருமலையில் சோலையினுடைய ப்ராப்யதை தோற்றுகிறது-

———————————————————-

அநந்தரம் ரக்ஷண உத்யுக்தமான திருவாழியை யுடையவன் வர்த்திக்கிற திருமலையின் புறமலையைக் கிட்டப் போவது நல் விரகு -என்கிறார் –

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது–நாநா விதமான பலங்களாலே அக்ருத்ய கரணாதிகளான கொடிய பாபங்களை வர்த்திப்பியாதே
அற முயலாழிப் படையவன் கோயில்–அஷ்ரிதா ரக்ஷணம் ஆகிற தர்மத்தில் உத்தியோகத்தை யுடைய திருவாழியை
திவ்ய ஆயுதமாக யுடையவனுடைய வாசஸ் ஸ்தானமாய்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை-சைவல கர்த்தமாதிகள் ஆகிற களங்கம் அற்று -கிட்டினார்க்கு சர்வ பிரகார
உப ஜீவ்யமான சுனைகளாலே சூழப்பட்ட திருமலையின்
புறமலை சாரப் போவது கிறியே –புறமலையை கிட்ட போகிறவது நல் விரகு-
கிட்டுமதிலும் கிட்ட பிரவர்த்திகமது நல் விரகு என்று கருத்து –
இப்பாட்டளவும் உபதேசத்தை நெஞ்சோடு கூட்டி மேல் பிறரைக் குறித்து உபதேசிக்கிறார் –

—————————————————————-

அநந்தரம் ஆஸ்ரித வ்யாமுக்தன் வர்த்திக்கிற திருமலைக்குப் போகிற வழியை யுட்பட நினைக்குமதுவே நன்மை -என்கிறார் –

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே-விஷயாந்தரங்களை நோக்கிப் போக நினைக்கும் நீசதையை பண்ணாதே –
இத்தை நல் விரகு என்று நினையுங்கோள் -எது என்னில்
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்-உறியில் பொருந்திச் சேமித்து வைத்த வெண்ணெயை அணுத்து செய்த கிருஷ்ணனுடைய
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை-தன்னுடைய கன்றுகளோடே கூட மான் பேடைகள் சேருகிற திருமலையினுடைய
நெறி படவதுவே நினைவது நலமே –வழியிலே உட்பட வேணும் என்கிற அத்தையே நினைக்கை புருஷார்த்தம்
மறி -குட்டி / பிணை -மான் பேடை –

————————————————————-

அநந்தரம் பிரளய ஆபத்சகன் வர்த்திக்கிற திருமலையில் ஆனுகூல்யமே பிரபலம் -என்கிறார் –

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

நலமென நினைமின் நரகழுந்தாதே–பஹிஷ்டாராய் சம்சார நிரயத்தில் அழுந்தாதே -இத்தை பரம பிரயோஜனம் என்று புத்தி பண்ணுங்கோள் –
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில் -பிரளயம் கொண்ட முற்காலத்திலே பூமியை ஸ்ரீ வராஹ வேஷத்தைக் கொண்டு
இடந்து எடுத்தவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயிலாய்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை –சிகரங்களில் தேய்க்கையாலே களங்க ரஹிதனான சந்திரன் பொருந்துகிற திருமலையை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –சேஷ சேஷி பாவமாகிற முறைப்பாட்டால் உள்ள ஆனுகூல்யத்தை பெற்று பொருந்துகையே பலோத்தரம் –

——————————————————–

அநந்தரம் -ஆஸ்ரித அனுகூலனான கிருஷ்ணன் வர்த்திக்கிற திருமலையில் நிரந்தர அனுகூல வ்ருத்தியே ஸ்வரூப பிராப்தம் -என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே–காரணங்களுக்கு பலத்தை உண்டாக்கி நிரந்தரமாக அந்த பலத்தை இதர விஷயமாக்கிக் கெடாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்–ஆஸ்ரிதர்க்கு பவ்யத்தை யாகிற ஆனுகூல்யத்தை பண்ணும் க்ருஷ்ணனான ஆச்சர்ய பூதனுடைய கோயிலான
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை-பரமபத வாசிகள் அனுகூல வ்ருத்தி பண்ணும் திருமலையைக் குறித்து
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –பிரதஷிணாத் யனுகூல வ்ருத்தியை பண்ணி நிரந்தரம் சம்ச்லேஷம் பண்ணுகை நியாயம் –

—————————————————

அநந்தரம் -பூதநா நிரசனம் பண்ணினவன் வர்த்திக்கிற திருமலையைத் தொழ வேணும் -என்கிற நினைவில் துணிவு வெற்றிக்கு அடி-என்கிறார் –

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது-கடக்க அரிதாம்படி பிரபலமான பாபங்களிலே முழுகாதே -இது ஸ்வரூப அனுரூபம் என்று நினையுங்கோள்
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்-பேயான பெண்ணை நசிப்பித்தவன் பொருந்தி வர்த்திக்கும் அங்குசிதமான கோயிலாய்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை-கன்றுகளான ஆனைத்திரள் சேருகிற திருமலையை
தொழக் கருதுவதே துணிவது சூதே –தொழ வேணும் என்கிற நினைவிலே துணிகையே சம்சாரத்தை வெல்லுகைக்கு ஹேது –
அழன்–பேய் / கொடி -பெண்

———————————————————–

அநந்தரம் -வைதிக ஞான ப்ரவர்த்தகன் வர்த்திக்கிற திருமலையில் பிரவேசிக்கிற இது புருஷார்த்தம் என்று உபக்ரமித்த உபதேசத்தை நிகழித்து அருளுகிறார் –

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

சூதென்று களவும் சூதும் செய்யாதே–ஸூ கரமான அர்த்த சாதனம் என்று நினைத்து -களவு காணுதல் -பார்த்து இருக்க அபஹரித்தல்-செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்-முற் காலத்திலேயே கீதா உபநிஷத் முகத்தாலே -வேதார்த்ததை விவரித்தவன் -விரும்பி வர்த்திக்கிற கோயிலாய்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை–மாதுமை உடைத்தான் மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற ஓங்கி பரந்த சோலைகளில்
போதவிழ் மலையே புகுவது பொருளே –பூவானது மலருகிற திருமலையில் சென்று புகுவதே புருஷார்த்தம்
மாதுமை -மென்மை / மாதுறு என்று பேடையோடே சேர்ந்த என்றுமாம் –

————————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்–ஆஸ்ரித ஆபி முக்யம் பிரயோஜனம் என்று இந்த லோகத்தை ஸ்ருஷ்டித்தவனுடைய
தயா ஷமா ஓவ்தார்யாதி குண ப்ரதை விஷயமாக
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-அஞ்ஞான கந்த ரஹிதராய் விலக்ஷணமான திரு நகரிக்கு நிர்வாஹகராய் மஹா உதாரரான ஆழ்வார்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து-தத்வ ஞானமானது சேதனர் ஸ்வீ கரிக்கும் படி அருளிச் செய்த அத்விதீயமான ஆயிரத்துள் இப்பத்தும்
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –சம்சாரத்தை நசிப்பித்து கிருபா பரிபூர்னரான அழகருடைய திருவடிகளை அடைவிக்கும் –
முடித்து -என்று கர்த்தவ்யங்களைத் தலைக்கட்டி என்றுமாம்
இது கலி விருத்தம் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-10-

October 21, 2017

கிளரொளி பிரவேசம்
இப்படி தம்மோடு கலந்து அருளினை எம்பெருமான் நின்று அருளினை திரு மலையை அனுபவிக்கிறார் –

———————————–

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-

யாது ஒன்றிலே நின்று அருளுகையாலே -அங்குத்தைச் சோலை போலே எம்,பெருமானுடைய திருவுடம்பு அதி சீதளமாய் அதி வரத்திஷ்ணுவான
ஓவ்ஜ்ஜ்வல்ய -யவ்வனாதி கல்யாண குணங்களை யுடைத்தாயிற்று -அங்கனே இருந்த திருமாலிருஞ்சோலையை உங்களுக்கு
கரண பாடவம் உள்ளபோதே உங்களுடைய கிலேசம் எல்லாம் தீரும் படி புஜியுங்கோள்-இது பரம ப்ராப்யம் -என்கிறார் –

——————————————————

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-

ப்ராக்ருத விஷயங்களில் ப்ராவண்யத்தை விட்டு -பிரதிகூல ஹ்ருதய பேதகமான திவ்ய த்வனியை யுடைத்தான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஏந்துகையாலே நிரவதிகமான அழகை யுடையனாய் -அத்தாலே -அழகர் -என்னும் திருநாமத்தை யுடையனான
எம்பெருமானுக்குக் கோயிலாய் -பரிபூர்ண சந்த்ர மண்டலத்தாலே அலங்க்ருதமான சிகரங்களை யுடைத்தான திருமாலிருஞ்சோலைப் பதியை
ஏத்தி எழுங்கள் -அதுவே பரம பிரயோஜனம் -என்கிறார் –

———————————–

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

ப்ரயோஜன ஸூன்யமாய் இருந்த செயல்களை செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை –நெஞ்சே ஆதலால் அவற்றைத் தவிர்ந்து
ஆஸ்ரிதர்க்கு ஆத்ம தானம் பண்ணிக் கொண்டு நிற்கிற கோயிலாய் -தன்னுடைய போக்யதையாலே ப்ரவிஷ்டரையும் மதிப்பியா நின்ற
பொழில்களை யுடைத்தான மாலிருஞ்சோலையினுடைய அயன்மலை அடைவது -அதுவே நமக்கு பரம ஹிதம் -என்கிறார் –

———————————————–

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

நிரஸ்த பிரதிபந்தகராய்க் கொண்டு தன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து உஜ்ஜீவிக்கைக்காகவே
பரம காருணிக்கனான தான் வந்து உறைகின்ற ஸமஸ்த ஸந்தாப நாசகமான திருமலையை அடைகையே அடிமை செய்கைக்கு உபாயம் -என்கிறார்

———————————————–

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

விரகாலும் பலத்தாலும் தீ வினை பெருக்காதே -ஆஸ்ரித ரக்ஷண ஏக ஸ்வ பாவனான திருவாழியை திவ்யாயுதமாக யுடையனானவன் நின்று அருளுகிற
நிர்மலமாய் சர்வ போக்யமாய் இருந்த சுனைகளை யுடைத்தான மாலிருஞ்சோலை மலையினுடைய புறமலை சாரப் போவது பரம ப்ராப்யம் -என்கிறார் –

————————————————–

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

இத்தையே பரம ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யம் என்று நினையாதே –
உறியமர் வெண்ணெய் யுண்டவன் -அச்சுவடு அழியாமே நின்று அருளுகிற சர்வ போக்யமான திருமலையை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு நினைக்கும் அதுவே ப்ராப்யம் -என்கிறார் –

————————————–

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே –
நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு
வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார் –

———————————————————-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

ஹேய விஷயங்களிலே விநியோகித்து அருமந்த பலத்தைப் போக்காதே ஆச்சர்ய பூதனாய் ஆஸ்ரித ஸூலபனாய் இருந்த எம்பெருமானும்
அயர்வறும் அமரர்களும் வலம் செய்து கொண்டு அனுபவிக்கிற திருமாலிருஞ்சோலையை வலம் செய்து நாளும் மருவுகை வழக்காவது -என்கிறார் –

———————————————————

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

வேறு ஒன்றை யுக்தம் என்று பாராதே இதுவே யுக்தம் என்று பார்த்து ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனாய் இருந்தவனுடைய
அபிமதமான திவ்ய ஸ்தானமாய் சர்வாத்ம போக்யமாய் இருந்த திருமலையைத் தொழுவோம் என்று உண்டான
சங்கல்ப உத்யோக மாத்ரத்தைப் பண்ணுகை அவனுக்கு அடிமை செய்கைக்கு நல்ல உபாயம் -என்கிறார் –

—————————————————–

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

புருஷார்த்தமான செயலைச் செய்கிறோம் என்று கொண்டு சவ்ர்ய க்ருத்ரிமங்களைச் செய்யாதே –
சர்வ வேதங்களுக்கும் தானே ப்ரதிபாத்யன் -என்னும் இடத்தை ஸ்ரீ கீதையாலே அருளிச் செய்து அருளினை
அந்த மஹா குணத்தை யுடைய எம்பெருமான் தனக்கும் கூட ஸ்ரூஹணீயமான திருமலையில் போய்ப் புகுவதுவே பரம புருஷார்த்தம் -என்கிறார் –

————————————————–

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

சம்சாரிகளான ஆத்மாக்களினுடைய ஸம்ருத்தியே நமக்கு பிரயோஜனம் -என்று பார்த்து தத் சம்ருத்த்யர்த்தமான ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி அருளினவன்
குணங்களில் ஓர் அஞ்ஞானம் கந்தம் இன்றியே இருந்த -வண் குருகூர் சடகோபன்-எல்லாருக்கும் எம்பெருமானை
ப்ரத்யஷித்தால் போலே அறியலாம் படி சொன்ன இப்பத்து அழகர் திருவடிகளிலே சேர்வித்து முடிக்கும் -என்கிறார் –

———————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-