திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்- திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்-

(இரக்கமே உபாயம் -நிர்ஹேதுகம் -தடுக்காமையே வேண்டுவது –
விசேஷ கடாக்ஷம் -அநந்யார்கர்களுக்கு -அவனையே விரும்புவர்களுக்கு —
தேவதாந்தர உபாயாந்தர உபேயாந்தர சம்பந்த லேசமும் இன்றிக்கே –
வாஸூ தேவ சர்வம் இதி துர்லபம் -உண்ணும் சோறு இத்யாதி
இவை அனைத்தும் ஆச்சார்யர் அபிமானமே -என்று காட்டி அருளி ஆண்டாள் –
அம்பரமே -தண்ணீரே சோறே -அனைத்துமே கண்ணன் -அவனை தந்து அருளும் நந்தகோபன் –
என்னையும் என் உடைமையையும் ஸ்வ கைங்கர்யத்துக்கு உபகரணமாகக் கொண்டு அருள்வாய் -நியாஸ திலகம் –
என்றே பிரார்த்திக்க வேண்டும் -ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –
அவனைக் கொடுத்து அருளும் ஆச்சார்யர் தானே நமக்கு எம்பெருமான் –
இங்கே நந்த கோபனை எம்பெருமான் -என்றே அழைக்கிறார்கள்
யசோதை எம்பெருமாட்டி -ஆறு கால சிறு வண்டே -ஆச்சார்யர் பத்னி புத்ராதிகளும் பூஜ்யர் –
ஷட் பதம் -த்வயம் -வண்டு -இரண்டும் ஆச்சார்ய விஷயம் – )

ஈராயிரப்படி -அவதாரிகை –
கருந்தாளை யுருவித் திரு வாசல் காப்பானும் உள்ளே புகுருங்கோள்-என்று சொல்ல
உள்ளே புக்கவாறே பிள்ளைக்குக் காவலாகப் பெண்கள் களவு காணப் போவர்கள் என்று
நோக்கிக் கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்புகிறார்கள் –
(சித்ர லேகா -கனவில் கண்டு உஷைக்காக அநிருத்த ஆழ்வானை களவு கண்டார்கள் அன்றோ )

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-

நந்தகோபன் எழுந்து இருந்து கார்ய கரம் -யசோதை கண் விழித்தாலே கார்யகரம்
ஊராகத் தொட்டவன் -உலகமாகத் தொட்டவன் –
மாணிக் குறளனே தாலேலோ -வையம் அளந்தானே தாலேலோ -தர்மி ஐக்யம்
உம்பி -உன் தம்பி –
ராமானுஜ-லஷ்மண பூர்வஜ-என்று ராமரை முன்னிட்டே இளைய பெருமாளையும்
லஷ்மணனை முன்னிட்டே பெருமாளையும் -சொல்லுமாறு

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
புடவை தண்ணீர் சோறோடு வாசியற வேண்டுவார்க்கு வேண்டிற்றுத்
தடை இன்றிக்கே கொடுக்கை –

அறம் செய்யும்
பல அபி சந்தி ரஹிதமாக ஆந்ரு சம்சயத்தாலே கொடுக்கை
( ஸ்வயம் பிரயோஜனமாக கொடுக்கை )

எம்பெருமான்
பெண்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்தவன் –
(ஏகைக பல லாபாய )சர்வ லாபாய கேசவ
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே -(6-7-1)
எல்லாமாய் இருக்குமவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்

நந்த கோபாலா
கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் நாங்கள் பெறும்படி பாரீர்
ஹித புத்தி பிதாக்கள் பாடே உண்டாகையாலே புகுருங்கோள்-என்றான் இறே

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
நாங்கள் வரும் தனையும் அன்றோ நீ காப்பது என்கை –
நாரிணாம் உத்தம –என்று பெண்களாய்ப் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே-
(நீயே தலைவி -நாங்கள் வந்து விலக்காமையை அறிவித்த பின்பு நீயே ரஷித்து அருள வேண்டும் –
கொம்பு -இடை சிறுத்து -வைராக்யம் மிக்கு கண்ணனையே நாடும் -கோல் தோன்றி ஓடுமே )

குல விளக்கே
பெண்களாய் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே –
(தன்னையும் பிரகாசித்து மற்றவர்க்கும் பிரகாசிப்பித்து விளக்கு தானே விளங்க வைக்கும் –
ஆத்ம ஸ்வரூபத்தையும் பரமாத்ம ஸ்வரூபத்தையும் விளங்க வைக்கும் -)

எம்பெருமாட்டி
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்து எங்களுக்கு ஸ்வாமிநீ யானவளே –

யசோதா –
கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் உள்ள சேர்த்திக்கு உகக்குமவளே –
சஜாதியை ஆகையாலே நோவு அறியுமே-அவள் –
(ஆழ்வார்களை திரு உள்ளம் கொண்டு சஜாதீயை )

அறிவுறாய்
நீ அறிந்த அன்று எங்களுக்கு ஒரு குறை யுண்டோ –
நீ காவலாக அமையும் என்கை –
(மந்த்ரம் -அவனையும் சொல்லுமே -இருவரையும் ரஷிக்கும் இவள் அன்றோ )
அவள் அனுமதி பண்ணின மாத்திரத்தோடே கிருஷ்ணனை உள்ளே புக்கு எழுப்புகிறார்கள்

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
பரதந்த்ரன் என்று கண் அழிவு சொல்ல ஒண்ணாது –
(நம் ஐயர் சொல்படி அன்றோ செய்வோம் -பெருமாள் –
உலகு அளந்த அன்றோ யார் சொல்லி பண்ணி அருளிற்று )
அவன் அனுமதி கொண்டோம் –
அநந்ய ப்ரயோஜனராய் வந்ததற்கு முகம் கொடுக்க ஒண்ணாதோ
ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்க்கோ கார்யம் செய்யலாவது –
தேவர்களுக்குக் குடியிருப்பைக் கொடுத்த நீ எங்கள் குடியிருப்பை அழிக்கவோ பார்த்தது
(அவர்கள் பிரயோஜனாந்தர பரர்கள் -நாங்கள் அநந்யார்ஹர் -உன்னையே அர்த்தித்து வந்தோம் -)
உறங்குவாரைத் தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தவர்களைத் தழுவலாகாதோ

நம்பி மூத்த பிரானை எழுப்பி நம்மை எழுப்பிற்றிலர்கள்-என்று
கிடக்கிறான் என்று பார்த்து அவனை எழுப்புகிறார்கள்

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –

(பொற் கால் இட்ட ஸ்ரீ மான்
பொய்கையாழ்வார் -நாதமுனிகள் -ஆழ்வார் ஆச்சார்ய அவதாரங்களுக்கு
பொற் கால் இட்டு அருளிய ஸ்ரீ மான்கள் )

அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை –
சந்தேசை சாம மதுரை-ப்ரேம கர்ப்பை ரகர் விதை –
ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச – ( ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
(கோபிகளுக்கு கண்ணனை விட்டுப்பிரிந்து விஸ்லேஷ ஆற்றாமையை
நம்பி மூத்த பிரான் ஆற்றினத்தை விளக்கிய ஸ்லோகம் )

வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ –
சென்றால் குடையும் -இத்யாதியாக வேண்டாவோ –

————————————

ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

இப்பாட்டில் கீழ் எழுப்பின கோயில் காப்பான் அனுமதியால்
திருவாசல் காப்பான் உள்ளே புகுர விட
(உபகார ஆச்சார்யர் உத்தாரக ஆச்சார்யர் போல் இங்கும் இரண்டு காப்பான் )
முந்துற ஆச்சார்யனை எழுப்பி
நம்பி மூத்த பிரான் முன்னாக
ஈஸ்வரனை எழுப்புகிறார்கள் –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-
1-ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்
2-தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்-(நாம் போக்ய வஸ்து என்ற நினைவு )
3-தத் ஹேதுவான கைங்கர்யத்தையும்

ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி
தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே -அறம்
ஸுவயம் புருஷார்த்தமாக-செய்யும்
கொடா நின்றுள்ள
நமக்கு வகுத்த சேஷியாய்-எம்பெருமான்
ஆனந்த நிர்ப்பரனாய்-(நந்த )
ஆஸ்ரித ரஷகனான-கோ பாலன்
ஆசார்யனே -நீ உணர வேணும் –
இப்படி பாதங்கள் ஒவ் ஒன்றுக்கும் வியாக்யானம்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே –
குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
நதி பிரவாஹங்களுக்கு வளைந்து பிழைக்கும் நீர் வஞ்சிக் கொம்பு போலே
சம்சாரிகள் உடைய அபிமானத்துக்கு அனுரூபமாக
தங்களை அமைத்து வைக்கும்
பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய்
(கோபால மந்த்ரம் ஐஸ்வர்யம்
ராம மந்த்ரம் புத்ராதிகள்
கொழுந்து ஸ்ரேஷ்டம் -மந்த்ராணாம் பரமமந்த்ரம் குஹ்ய தமம் -திரு மந்திரமே யசோதை )
பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய்
எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய்-எம்பெருமாட்டி
தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி-யசோதை -குலம் தரும் -கண்ணனுக்கு அருகாமை கொடுக்கும் குலம்
சகல அதிசய பிரதமான
திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை-

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
நிரீஸ்வர வாதம் பண்ணுபவர்களுக்கு
அவகாசம் அறும்படி அபிவிருத்தனாய்-(ஆகாசம் எங்கும் ஓங்கி) –
இவ் விபூதியைத் தன் திருவடிகளின் கீழே சேர்த்துக் கொண்ட
நித்ய ஸூரி நிர்வாஹகன் ஆனவனே-(உம்பர் கோமானே )
சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ
உறங்காது ஒழிய வேணும்

இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே
அவனை எழுப்புகைக்காக
நம்பி மூத்த பிரானை எழுப்பு கிறார்கள்
செம் பொற் கழல் அடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து
ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்பட்ட
வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே
திருவடிகள் விருது பூண்ட-( -அவனே அவனுக்குள் அடக்கம் வெற்றிக் கழல் ) என்றுமாம்
(அநந்தனையே தனது மடிக்குள் கிடத்தி யபடியால் இவனே அநந்தன் -இதுக்கே வீரக் கழல் )

செல்வா பலதேவா –
இப்படி சம்பன்னனான பல தேவனே

உம்பியும் நீயும் உறங்கேல்
(ஆஸ்ரித பாரதந்தர்ய குணத்தால் ) உனக்கு பவ்யனான கிருஷ்ணனும்
(ஸ்வரூபத்தால் ) கிருஷ்ணனுக்கு பவ்யனான நீயும்
உறங்காது ஒழிய வேணும்

———

நாலாயிரப்படி-அவதாரிகை –
கருந்தாளை யுருவித் திரு வாசல் காப்பானும் உள்ளே புகுருங்கோள்-என்று சொல்ல
உள்ளே புக்கவாறே பிள்ளைக்குக் காவலாகப் பெண்கள் களவு காணப் போவர்கள் என்று
நோக்கிக் கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்புகிறார்கள் –
பேரனான அநிருத்த ஆழ்வானை அகப்படக் களவு காணக் கடவ அவர்கள்
சாஷான் மன்மத மன்மதனாய் அழகுக்கு வாய்த்தலையான இவனை விடுவார்களோ -என்று
காத்துக் கொண்டு கிடந்தார் –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
புடவை யோடு தண்ணீரோடு சோற்றோடு வாசியற வேண்டுவார்க்கு வேண்டிற்றுத்
தடை இன்றிக்கே கொடுக்குமவனே என்கிறார்கள்
ஏவகாரத்தாலே இதுவேயோ இவன் கற்றது -என்னும்படி இருக்கை –

அறம் செய்யும்
பாலாபி சந்தி ரஹிதமாக ஆந்ரு சம்சயத்தாலே கொடுக்கை —
சக்ரவர்த்தியைப் போலே
மஹதா தபஸா ராம -என்ன வேண்டுவது இல்லையே –
வைத்த மா நிதி –
இவன் எடுத்த பேராளன் இறே –
எங்கள் தாரக த்ரவ்யத்தையும் தாராய் -என்கிறார்கள்

எம்பெருமான்
பெண்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்தவன் –
ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ -என்றும் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று என்றே –
எல்லாமாய் இருக்குமவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்

நந்த கோபாலா எழுந்திராய்
நந்தகோபன் குமரன் -என்று உம்முடைய ஆந்ரு சம்சயத்தைக் கண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது
குணைர் தசர தோபம்-
கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் குறையும் நாங்கள் பெறும்படி பாரீர் -என்கிறார்கள்
ஹித புத்தி பிதாக்கள் பாடே உண்டாகையாலே புகுருங்கோள்-என்றான் இறே

உணர்ந்து அவரும் அனுமதி பண்ணின படி தோற்றக் கிடந்தார் -அவரை விட்டு
உள்ளே புகுந்து யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள் –
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
நாங்கள் வரும் தனையும் அன்றோ நீ காப்பது என்கை –
யசோதைப் பிராட்டியை எழுப்பி ஸ்ரீ நந்த கோபரை எழுப்பாமல் ஒழிவான் என் என்னில்-
பிள்ளை மேல் சங்கத்தால் அவனுக்கு அணித்தாயும்
பர்த்ரு சம்ச்லேஷத்துக்காக இரண்டுக்கும் நடுவாக உள் காட்டிலே கிடக்கை யாலே
பிற்பட யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்

கொம்பனார் -இத்யாதி
நாரிணாம் உத்தம –என்று பெண்களாய்ப் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவனே
கொம்பு அனார்-வஞ்சிக் கொம்பு போன்றவளே –

குல விளக்கே
பெண்களாய் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே -இக்குடிக்கு மங்கள தீபம் என்னவுமாம் –

எம்பெருமாட்டி
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்து எங்களுக்கு ஸ்வாமிநீ யானவனே –

யசோதா –
கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் உள்ள சேர்த்திக்கு உகக்குமவள் அன்றோ -நீ
அஞ்ச யுரப்பாள் யசோதை -என்றது பற்றாசாக அன்றோ நாங்கள் வந்தது

அறிவுறாய்
நீ அறிந்த அன்று எங்களுக்கு ஒரு குறை யுண்டோ என்கிறார்கள் –
இவர்கள் வந்தது தங்கள் ஆற்றாமை இறே –

உள்ளே புகுருங்கோள் என்று அவள் அனுமதி பண்ண அவள் சம்மானத்தோடே உள்ளே புக்கு
கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
என்கிறார்கள் –
உம்பர் கோமானே
அச்செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி –
நித்ய ஸூரிகளை-என்னவுமாம்

ஐயரும் ஆய்ச்சியும் சொல்ல வேண்டாவோ என்ன
பரதந்த்ரன் என்று கண் அழிவு சொல்ல ஒண்ணாது -அவர்களை அனுமதி கொண்டோம் -எழுந்திராய் என்கிறார்கள்
அநந்ய ப்ரயோஜனராய் வந்ததற்கு முகம் கொடுக்க ஒண்ணாதோ
ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்க்கோ கார்யம் செய்யலாவது –
தேவர்களுக்குக் குடியிருப்பைக் கொடுத்த நீ எங்கள் குடியிருப்பை அழிக்கவோ பார்த்தது
உறங்குவாரைத் தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தவர்களைத் தழுவலாகாதோ –

அண்ணரை எழுப்பிற்றிலர்களோ என்ன
நம்பி மூத்த பிரானை எழுப்ப மறந்தோம் –
இது ஒரு தப்புப் பிறந்தது என்று நம்பி மூத்த பிரானை எழுப்புகிறார்கள்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்
பலை கதா மநி –
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை –
சந்தேசை சாம மதுரை-ப் ரேம கர்ப்பை ரகர் விதை –
ராமேணாஸ் வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ
திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்
சென்றால் குடையும் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: