திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்-

வேதம் வல்லார்கள் -ஸ்தானம் -6-10-பத்து பெண்கள் -கண்ணனே அவர்கள் வசம் –
சொல்லும் அவித்து ஸ்ருதியும் -வேதமே இவர்கள் கைப்பட்டு பின் தொடரும்
இனி விண்ணோர்கள் ஸ்தானம் -கோயில் வாசல் காப்பான் க்ஷேத்ர பாலகர் -த்வார பாலகர் –
18-19-20-நப்பின்னைப் பிராட்டி திருவடிகளில் சரணம் புக்கு புருஷகாரமாக
மேலே -21 -29–நேராக-பிரதான சேஷி – அவனைப் பிரார்த்தித்து
30-தானான தன்மையுடன் அருளிச் செய்கிறாள் –

ஈராயிரப்படி -அவதாரிகை –
கீழ்ப் பத்துப் பாட்டாலுமாக பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும் ஒருவருக்கு ஒருவர்
எழுப்பினமைக்கு உப லக்ஷணமாகையாலே
எல்லாரும் கூட எழுந்திருந்து
ஸ்ரீ நந்த கோபர் வாசலிலே வந்து நின்று
ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்பி
செய்யாதன செய்யோம் என்றபடி முறை தப்பாமே
முதலிகளையும்
பிராட்டியையும் முன்னிட்டுக் கொண்டு
எம்பெருமானை பற்றப் பார்க்கிறார்கள்

(வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் -கடைக்கார -பற்றி –
அலர்மேல் மங்கை -மூலம் உறை மார்பனைப் பற்றியது போல் )

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்–கதவும் நேசம் உள்ளது -பரிவுடன் ரக்ஷிக்குமே –
ஆச்சார்ய முகேன அடைவதையே நீ நீக்கு -நீயே நீக்கு -என்று கொள்ள வேண்டும் –
ஆச்சார்ய நடு நாயகம் -கோதாக்ரஜர் – திரு உள்ளம் கொண்டு அருளிச் செய்த பாசுரம் –
நான்கு திக்குகளிலும் வாசல் கோபுரம் உண்டே
யாக சாலைகளில் இன்றும் பார்க்கலாம் -எட்டு பேர்களின் பெயர்களையும் எழுதி வைப்பார்கள்
தூயோமாய் வந்தோம்-உடல் உள்ளம் ஆத்மா அழுக்கு இல்லாமல் -காம க்ரோதாதிகள் இல்லாமல் –
அவனே உபாயம் உபேயம் -சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானம் உள்ளவர்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
யேஷாம் த்ரீண் யபதாநாநி யோநிர் வித்யா ச கர்மா ச –
தே சேவ்யாஸ் நைஸ் சமாயுக்த –சாஸ்த்ரேப் யோபி விசிஷ்யதே –
வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநு சாரிண –
இவர்கள் சாஸ்த்ர தாத்பர்யங்களை அரைச் சந்தையாலே சொல்லி விடுவார்கள்
வேதம் வல்லார்களைக் கொண்டு இத்யாதி -(4-6-8-)
அவனைப் பெரும் இடத்தில் ததீயர்களை முன்னிட்டுப் பற்ற வேணும் என்கை –

(யோநிர் வித்யா ச கர்மா ச –பிறப்பு ஞானம் அனுஷ்டானம் உள்ளோர் -ஸாஸ்த்ரம் விட வணங்கத் தக்கவர்கள்
வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநு சாரிண-பக்தி மிக்க மனசை வேதமே பின் தொடரும் )

கோயில் காப்பானே –
இவர்கள் லபிக்கிற எம்பெருமான் பக்கல் அன்று நாயகத்வம் –
இவர்கள் தங்கள் பக்கலிலே–
பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய -மத் விருத்தம் அசிந்யத்வாத் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்
புருஷகாரம் கார்யகரம் என்கை –

பட்டர் நஞ்சீயருக்கு -பெருமாளை தஞ்சம் என்று இரும் –
பெருமாள் தஞ்சம் என்று சொல்லுகையாலே நான் தஞ்சம் என்றபடி -என்று அருளிச் செய்தார்
ஆகையாலே ஆச்சார்யர்கள் உபகாரகர் என்று நாயகன் -என்கிறாள் –

(ச பூஜ்யவா யதாஹ்யயம் -என்னை பூஜிக்கும் அளவாவது பாகவதரை பூஜிக்க வேண்டும் -பகவத் வசனம்
உபகரித்த வஸ்துவின் பெருமையால் உபகாரகர் மஹிமை
சமுத்திர இவ காம்பீர்யம் -அவன் சங்கல்பித்து இப்படி ஆச்சார்ய பாகவத வைபவம் வைத்து அருளுகிறார் )

நந்தகோபனுடைய கோயில்
எம்பெருமான் பரதந்த்ரன் ஆகையாலே –
அடியார் நிலாகின்ற வைகுந்தம் இறே -(திருவிருத்தம் –75-)
அங்கு வான் இளவரசு வைகுந்த குட்டன் -(பெரியாழ்வார் –3-6-)
ஸ்ரீ சேனாபதி ஆழ்வானைப் போலே
இங்கும் ஸ்ரீ நந்த கோபர் -சக்கரவர்த்தியும் அப்படியே

(நந்தகோபன் குமரன் என்றும் சக்ரவர்த்தி திருமகன் என்று இருக்கவே அவதாரமும்
அங்கு பெரிய திருவடி சிறகுகளின் கீழேயும்
விஷ்வக் சேனர் கைப் பிரம்பின் கீழேயும்
திரு அனந்தாழ்வான் மடியிலும் இருப்பானே )

கோயில் காப்பானே
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டுப் பேசுகிறார்கள் –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
கோயில் காப்பான் என்று இங்குத்தைக்குமாய் அவன் தன்னையே வாசல் காப்பான் என்கை
அன்றிக்கே-
வேறே திரு வாசல் காப்பானைச் சொல்லிற்று ஆக்கவுமாம்
ஆர் விக்னம் பண்ணுகிறார் என்று அறியாமை பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
(விபீஷண ஆழ்வான் முதலிகள் அனைவரையும் புருஷகாரமாகப் பற்றினால் போல் )

மணிக் கதவம் தாள் திறவாய்
அழகு உள்ளே போவாரை வழி பறிக்கும் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -( பெரிய திருமடல் )
ச ததந்தாபுர த்வாரம் ஸமாதீத்ய ஐநா குலம் –
(சுமந்திரன் அந்தப்புரம் போகும் வழியில் அயோத்யா மக்கள் துவாரம் கடந்து போனால் போல் )
ஒரு வண்ணம் சென்று புக்கு -(6-1-7)

மணிக் கதவம்
இது உள்ளே புகுவாரைக் கால் காட்டும் –
அவன் புக்காரை புறப்படாதபடி கால் காட்டும் –

ஆயர் சிறிமியரோமுக்கு
திரு வாசல் காக்குமவன் –
1-இம் மத்திய ராத்ரிப் போதிலே யார் –
2-திறக்க அழைக்கிற நீங்கள் யார்-
3-பயம் மிக்கு இருக்கிற தேசத்திலே -என்ன

பயம் என் என்ன
சக்கரவர்த்தியும் திரு அயோத்யையும் ஆண் புலிகளும் மந்திரிகளான வசிஷ்டாதிகளும் இல்லையே
இங்கு சாது ஸ்ரீ நந்த கோபரும் சிறு பிள்ளைகளும் இடைச்சேரியுமாய் இருக்கிறதுக்கு மேலே
கம்சன் சத்ருவாயிற்று
ஆன பின்பு பயம் கெட்டு இருக்கலாமோ -என்ன

எங்களுக்கு பயப்பட வேணுமோ -பெண் பிள்ளைகள் அன்றோ -என்ன
சூர்பணகி ராக்ஷஸி அன்றோ என்ன
நாங்கள் இடைப்பெண்கள் என்ன
பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுவது என்ன

நாங்கள் க்ருத்ரிமைகள் இல்லாத கன்யகைகள் அன்றோ -எங்கள் பருவத்தைப் பாராய் என்ன
பருவம் பார்த்துக் கொள்ளுகிறோம் -வார்த்தையிலே அறியலாம் –
நீங்கள் வந்த கார்யம் சொல்லுங்கோள் என்ன

அறை பறை
நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம் என்ன –

அதுவாகில் கேள்வி கேட்க வேணும் என்ன
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
நேற்றே கேட்டு அவனும் தருகிறோம் என்றான் என்கிறார்கள்

மாயன்
கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி

மணி வண்ணன்
தாழ நின்றதிலும் அவன் வடிவே போறும் என்கை
பூ அலரும் போது பிடிக்கும் செவ்வி போலே வார்த்தை அருளிச் செய்யும் போதை அழகு-
வாக்மீ ஸ்ரீ மான் -( சொல்லின் செல்வன் )

நென்னலே
திரு முளையன்று
நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே

நென்னலே
உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ-
அவன் (எங்கள் ) காலைக் கையைப் பிடிக்க இருந்த நேற்றை நாளும் ஒரு நாளே -என்கிறார்கள்

வாய் நேரந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ –
அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே யன்றோ –
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –
சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ –

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
தூய்மை அவனுடைய ரக்ஷையும் -அவன் பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னம் ஸ்வ பிரயோஜனம் இல்லாமல் இருக்கை-
(தூயோமாய் –5 -பாசுரத்தில் உண்டே
சர்வ தர்மான் காமான் பரித்யஜ்ய -உபாயாந்தரமம் உபேயாந்த்ரமும் இல்லாத தூய்மை )

திருவடி திருவாழி மோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே
தன் மிடற்றின் ஓசையைக் காட்டி விஸ்வசிப்பித்தால் போலே
தங்களுடைய ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்
பிரணாதஸ் ச மஹா நேஷ-என்ற ஆர்த்த நாதம் –
(ஸ்ரீ விபீஷணன் த்வனி பெரியதாக உள்ளது -பயந்து பேசுகிறான் -கைக் கொள்ளலாம் –
ஏற்கத் தக்கவன் -ஆர்த்த த்வனியைக் கேட்டு முதலிகள் )
ஆநயையம்-என்னப் பண்ணிற்று இறே
(இப்படி சொல்ல வைத்தது ஆர்த்த த்வனி தானே )

வந்தோம்
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமல் இல்லை

துயில் எழப் பாடுவான்
சமயா போதித ஸூக ஸூப்த பரந்தப -என்று பிராட்டி உறங்குகின்ற படி கண்டு உகந்தாள்
நாங்களும் பெரியாழ்வார் பெண் பிள்ளைகள் –
படுத்த பைந்நாகணைப்பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு (–9-) –
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -(நம்மாழ்வார் )
அரங்கத்தம்மா பள்ளி எழுந்திராய் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே
மனத்தினால் நினைத்தாலும் வாயாலே நெருப்பைச் சொரியாதே கொள்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள்

யம்மா
அரங்கத்தம்மா படியே (தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் )

அம்மா
அவன் வாய் நேர்ந்தாலும் இவர்கள் நடத்தா விடில் கார்யகரம் ஆகாதே –
வத்ய தாம் என்றவாறே
அஸ் மாபிஸ் துல்ய -என்ன வேணும் இறே
(கொன்று விட வேண்டும் அதே வாயால் எங்கள் அனைத்து பேர் இடத்திலும் உள்ள
அன்பைக் காட்டு என்றதுமே கார்யகரம் ஆயிற்று )

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
உள்ளே இருக்கிறவனோ எங்களுக்கு நாயகன் நீ அன்றோ –
வாசா தர்ம நவாப் நு ஹி-பண்ணாயோ ( சீதாபிராட்டி திருவடி இடம் அருளிச் செய்த படி )

இவர்களை தாளை யுருவிக் கதவைத் தள்ளிக் கொடு புகுருங்கோள்-என்ன
அது உன்னிலும் பரிவுடைய கதவு காண்-
எங்களால் தள்ள ஒண்ணாது –
நீயே திற -என்கிறார்கள்

கம்சன் படை வீட்டில் அடைய பிரதிகூலிக்கும் படி
இங்கு எல்லாரும் அனுகூலிக்கும் படி
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே இத்யாதி –

————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –
கீழ்ப் பத்துப் பாட்டாலுமாக பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும்
ஒருவருக்கு ஒருவர் எழுப்பினமைக்கு உப லக்ஷணமாகையாலே
எல்லாரும் கூட எழுந்திருந்து
ஸ்ரீ நந்த கோபர் வாசலிலே வந்து நின்று
ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்பி செய்யாதன செய்யோம் என்றபடி
முறை தப்பாமே
முதலிகளையும்
பிராட்டியையும் முன்னிட்டுக் கொண்டு
எம்பெருமானை பற்றப் பார்க்கிறார்கள் –

வேதம் வல்லார்களைக் கொண்டு இத்யாதி –
காலை நன் ஞானத் துறை படிந்தாடி –
துறையாகிறது இத்துறை
இத்துறை தப்பினால் சூர்பனகை பட்டது படும் அத்தனை –
சீதைக்கு நேராவன் -என்றாள் இறே
உகந்து அருளினை நிலங்களில் புகுவார்க்குத் திருவாசல் முதலிகளை அனுமதி கொண்டு
புக வேணும் என்று சாஸ்திரங்களில் சொல்லுமது –
பருவம் நிரம்பாமையாலே இவர்களுக்கு இரந்து புக வேண்டுகையாலே கோல் விழுக் காட்டிலே
அனுஷ்ட்டித்தாராய் விட்டார்கள்

யேஷாம் த்ரீண்யபாத்தா நாநி யோநிர் வித்யா ச கர்மா ச -தே சேவ்யாஸ் நைஸ் சமாயுக்த —
சாஸ்த்ரேப்யோபி விசிஷ்யதே –
வைஷ்ணவர்கள் ஆசாரத்தை சாஸ்திரங்கள் பின் செல்லும் அத்தனை
வைதிகாஸ் த்வதீய கம்பீரமநோ நு சாரிண -சாஸ்திரத்தை வரியடையே கற்றாலும்
அதில் அர்த்த நிர்ணயத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் நெடும் காலம் செல்லும்
அவர்கள் அதின் தாத்பர்யத்தை அரைச் சந்தையாலே சொல்லிவிடுவார்கள் –
அனந்தரத்திலே அனுஷ்ட்டிக்கலாய் இருக்கும்

கட்டின குளிகையைக் கையிலே கொடுத்தால் அப்போதே இரும்பைப் பொன்னாக்கி விடுமா போலே -என்று
ஜீயர் அருளிச் செய்த வார்த்தை
ஸ்ரீ ராமாயணம் சரணாகத வத்சலன் என்கிறது –
மஹா பாரதம் சரணாகத பக்ஷபாதி என்கிறது
அது சிறை இருந்தவள் நீர்மை சொல்லுகிறது –
இது தூது போனவன் நீர்மை சொல்லுகிறது

திருவனந்த புரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று பிள்ளைகள் ஸ்ரீ ராமாயணம்
அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது
உபநிஷத்தும் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று நின்றது –
அதுக்கு உப ப்ரும்ஹமணமான அபய பிரதானத்துக்கு வாசி
அவனைப் பற்றும் இடத்தில் ததீயரை முன்னிட்டுக் கொண்டு பற்றுவது என்கை

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகனாய் நின்ற கோயில் காப்பானே என்னவுமாம்
எங்களுக்கு நாயகனான நந்த கோபனுடைய கோயில் காப்பானே என்னவுமாம்
இவர்களால் லபிக்கிற எம்பெருமான் பக்கல் அன்று நாயகத்வம் –
இவர்கள் தங்கள் பக்கலிலே

பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் –
தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் இருக்கும்
புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –

வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று பெரியாழ்வாராலே பெருமத்தனையே -என்று அறுதியிலிட்டால் போலே
பாபிஷ்ட க்ஷத்ர பந்துஸ்ச புண்டரீகஸ்ச புண்ய க்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -என்னுமா போலேயும்

பட்டர் நஞ்சீயருக்கு -பெருமாளை தஞ்சம் என்று இரும் –
பெருமாள் தஞ்சம் என்று சொல்லுகையாலே நானும் உமக்குத் தஞ்சம் என்றபடி -என்று அருளிச் செய்தார்
ஆகையாலே ஆச்சார்யர்கள் உபகாரகர் என்று நாயகன் -என்கிறாள்

நந்தகோபனுடைய கோயில்
எம்பெருமான் பரதந்த்ரன் ஆகையாலே -ஸ்ரீ நந்தகோபருடைய கோயில் என்கிறார்கள்
பரமபதத்தில் அப்படியே -அடியார் நிலாகின்ற வைகுந்தம் இறே -அங்கு வான் இளவரசு –
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழும் திருவனந்த ஆழ்வான் மடியிலும் திருவடி சிறகின் கீழும் வளரும்
இத்தனை இத்தத்துவம் போலே

யுவராஜ மம ந்யத -என்று சக்கரவர்த்தி பாரித்துப் போனான்
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் -நந்த கோபாலன் கடைத்தலைக்கே –
ஒரு தண்ணீர் பந்தலைக் கண்டால் இது வைத்த ஸ்ரீ மான் ஆர் என்னக் கடவது இறே
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் இறே
தங்களை சேஷியாக வைக்க இசைவாரோடே பரிமாற இறே இங்கு வருகிறது
இங்குத்தைக்கு ஸ்ரீ சத்யபாமை பிராட்டியை நாடாள விட்டு தான் பாண்டவர்களுக்கு சொல்லிற்று செய்து திரியும்

கோயில் காப்பானே
சேஷத்வ ப்ரயுக்தமான பேர் –
ராதாவுக்கு நிலை நின்ற பேர் -யதோசிதம் சேஷ இதீ ரிதே ஜநை
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டுப் பேசுகிறார்கள் –
இன்னது பிடிப்பான் என்னுமா போலே அவன் உகக்கும் பேராலே சொல்லிற்று ஆகவுமாம் –

இவர்கள் இப்படி தன்னை ஸ்தோத்ரம் பண்ணினவாறே கண்ணாலே உள்ளே புகுருங்கோள்-என்றான்
கொடித் தோன்றும் தோரண-வாசல் காப்பானே
கோயில் காப்பான் என்று இங்குத்தைக்குமாய் அவன் தன்னையே வாசல் காப்பான் என்கை
அன்றிக்கே—
ஷேத்ராதிபதிகளை கோயில் காப்பானே என்று சொல்லி – வேறே திரு வாசல் காப்பானைச் சொல்லிற்று ஆக்கவுமாம்
ஆர் விக்னம் பண்ணுகிறார் என்று அறியாமை பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
திருத் தோரண வாசல் காக்குமவன் பக்கலிலே சென்று -ஆர்த்த த்ராணத்துக்காக தோரணமும் கொடியும் நட்டு வைத்தால் போலே
பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கு வைத்தது

மணிக் கதவம் தாள் திறவாய்
என்கிறார்கள்

மணிக்கதவம்
கதவில் அழகு உள்ளுப் புகுவாரை வழி பறிக்கும் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு –
ச ததந்தா புரத்வாரம் ஸமாதீத்ய ஐநா குலம் –
ஒரு வண்ணம் சென்று புக்கு

மணிக் கதவம்
இது உள்ளே புகுவாரைக் கால் காட்டும் –
அவன் புக்காரை புறப்படாதபடி கால் காட்டும்

ஆயர் சிறிமியரோமுக்கு
திருவாசல் காக்குமவன் -கோயில் காப்பானே கொடுத்த தோன்றும் தோரண வாசல் காப்பானே என்று நம்மை —
இம்மத்திய ராத்ரிப் போதிலே யார் -திறக்க அழைக்கிற நீங்கள் யார் பயம் மிக்கு இருக்கிற தேசத்திலே -என்ன

பயம் என் என்ன
காலமும் நல்லடிக்கலமுமாய் தமப்பனாரும்
சக்கரவர்த்தியாய் -ஊரும் திரு அயோத்யையாய் -தாங்களும் ஆண் புலி களாய் மந்திரிகளான வசிஷ்டாதிகளும் இல்லையே
இங்கு சாது ஸ்ரீ நந்த கோபரும் சிறு பிள்ளைகளும் –
தீம்பர்களாயும் – இடைச்சேரியுமாய் இருக்கிறதுக்கு மேலே கம்சன் சத்ருவாயிற்று –
எழும் பூண்டு எல்லாம் அ ஸூரப் பூண்டாவது
ஆனபின்பு பயம் கெட்டு இருக்கலாமோ -என்ன –
எங்களுக்கு பயப்பட வேணுமோ-நாங்கள் இடைச்சாதி அன்றோ என்ன
சுக சாரணர்கள் ஸ்ரீ சேனையோடே கலந்து புகுந்தால் போலே இடையயரே அ ஸூ ரர்கள் கலந்து புகுரிலும் தெரிய ஒண்ணாது என்ன
அது உண்டோ நாங்கள் பெண்கள் அன்றோ என்ன –
சூர்பணகி பெண் பெண்டாட்டி அன்றோ என்ன
அவள் ராக்ஷஸி –
நாங்கள் இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்குப் பிறந்த இடைச்சிகள் அன்றோ என்ன
பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுவது என்ன
நாங்கள் க்ருத்ரிமைகள் இல்லாத கன்யகைகள் அன்றோ -எங்கள் பருவத்தைப் பாராய் என்ன
பருவம் பார்த்துக் கொள்ளுகிறோம் -வார்த்தையிலே அறியலாம் -நீங்கள் வந்த கார்யம் சொல்லுங்கோள் என்ன

அறை பறை
நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம் என்ன –

அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்தவாறே விண்ணப்பம் செய்து கேள்வி கொள்கிறோம் என்ன
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
அது வேண்டா
நேற்றே கேட்டு அவனும் தருகிறோம் என்றான் என்கிறார்கள்

மாயன்
எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி

மணி வண்ணன்
தாழ நின்றதிலும் அவன் வடிவே போறும் என்கை
பூ அலரும் போது பிடிக்கும் செவ்வி போலே வார்த்தை செய்யும் போதை அழகு –
வாக்மீ ஸ்ரீ மான் -என்னக் கடவது இறே

நென்னலே
திரு முளையன்று
நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே

நென்னலே
உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ-
அவன் காலைக் கையைப் பிடிக்க இருந்த நேற்றை நாளும் ஒரு நாளே -என்கிறார்கள்

வாய் நேரந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
க்ருஷ்னே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –
சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ –

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்-
பத்து எட்டுத் திருமுகம் மறுக்கப் பெற்றுடையோம் –
எங்கள் பணிக்கு அவனோ கடவன் -நாங்கள் ஆராயக் காட்டுவோம் என்ன
உனக்கு ஆராய வேண்டும் பயம் இல்லை -நாங்கள் தூயோமாய் வந்தான் என்கிறார்கள்
தூய்மை அவனுடைய ரக்ஷையும் –
அவன் பிரயோஜனமும் ஒழிய ஸ்வ யத்னம் ஸ்வ பிரயோஜனம் இல்லாமல் இருக்கை
திருவடி திருவாழி மோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே
தன் மிடற்றின் ஓசையைக் காட்டி விசுவசித்தால் போலே தங்களுடைய ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்

பிரணாதஸ் ச மஹா நேஷ-என்ற ஆர்த்த நாதம் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட-என்னப் பண்ணிற்று இறே
பண்டு சொன்ன தூயோமில் -5-பாசுரம் -வார்த்தை யடைய இவ்விடத்துக்கு ஆகரம்

வந்தோம்
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமல் இல்லை –
அவன் செய்யக் கட்டுவதை நாங்கள் செய்தோம்-என்கை
இப்படி பிரமாணம் என் என்று அவன் கேட்க

துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் -உங்கள் ஆற்றாமை பாறையின் அளவுள்ள இன்னம் சொல்லுங்கோள் -என்ன
உறகல் உறகல்-என்று உணர்ந்து இருப்பாரையும் அசிர்க்கும் பெரியாழ்வார் பெண் பிள்ளைகள்
உன்னையும் அசிர்ப்போம் சிலர் என்கிறார்கள்
ச மாயா போதித-என்று பிராட்டி உறங்குகின்ற படி கண்டு உகந்தாள்
இவர்கள் உணரும்படி காண ஆசைப்படுகிறார்கள் –
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு –
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் –
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்னுமவர்கள் பெண் பிள்ளைகள் இறே இவர்கள் –
ஆகில் விடிந்தவாறே பார்த்துக் கொள்கிறோம் இப்போது போங்கோள்-என்றான் –

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா –
மனத்தினால் நினைத்தாலும் வாயாலே நெருப்பைச் சொரியாதே கொள்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள்

யம்மா
அவன் வாய் நேர்ந்தாலும் இவர்கள் நடத்தா விடில் கார்யகரம் ஆகாதே –
வத்ய தாம் என்றவாறே
அஸ் மாபிஸ் துல்ய -என்ன வேணும் இறே
தா நஹம் த்விஷத-என்றவனே
தாதாமி என்றாலும் இவர்களுக்கு வேண்டாவிடில்
ந ஷமாமி கதாசனா -என்னும் அத்தனை
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத

கோயில் காப்பானே
ஏஷ ஸூப் தேஷூ ஜாகர்த்தி என்கிறபடியே இவன் இசைவதற்கு முன்பு அவன் உணர்ந்து இவனை நோக்கும் –
இவன் இசைந்த பின்பு இவன் உணர்ந்து அவனை நோக்க அவன் உறங்கும்

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
உள்ளே இருக்கிறவனோ எங்களுக்கு நாயகன் நீ அன்றோ –
நாங்கள் த்வார சேஷியை ஒழிய பர சேஷியை உடையோம் அல்லோம்
நீ அன்றோ எங்களுக்கு நிர்வாஹகன் –
ஆன பின்பு வா சா தர்ம நவாப் நு ஹி-பண்ணாயோ -என்று இவர்கள் அர்த்திக்க
இவர்களை தாளை யுருவிக் கதவைத் தள்ளிக் கொடு புகுருங்கோள்-என்ன
அது உன்னிலும் பரிவுடைய கதவு காண்-எங்களால் தள்ள ஒண்ணாது -நீயே திற -என்கிறார்கள்

நேச நிலைக்கு கதவம்
கதவும் நிலையும் செறிந்த செறிவாகவுமாம்

கம்சன் படைவீட்டில் அடைய பிரதிகூலிக்கும் படி இங்கு எல்லாரும் அனுகூலிக்கும் படி
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்னுமா போலே –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: