திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்-

உக்தி ப்ரத்யுக்தி இரண்டும் சாப்தமாக இதிலே மட்டும் உள்ளது –
கீழே ஒன்பது பாசுரங்களிலும் அர்த்தமாக அனுமானித்துத் தான் கொள்ள வேண்டும் –
பிரமாதா பிரமாணம் ப்ரமேயம் மூன்றுமே பத்து -உண்டே –

ஈராயிரப்படி -அவதாரிகை –
இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டைக் கொண்டு அசல் திரு மாளிகையிலே
கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளையை
தன்னிலே நுடங்கிப் பாடுகிறபடியைக் கேட்டு -எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –
(நுடங்கு கேள்வி இசை என்கோ -உள்ளே வைத்து பாடும் இசை –
குயில் தானாகப் பாடும் -முன்னோர் மொழிந்த முறை ஓர்ந்து தான் பேச வேண்டுமே ஆகவே கிளி
மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே )

திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் –
(திருவான பேச்சு–வாக்மீ ஸ்ரீ மான் சொல்லின் செல்வன் -)
யாழியிலே இட்டுப் பாடி இனிதானவாறே
மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

இளங்கிளியே-பேச்சிலும் அழகிலும் -கிளி போன்றவள் –
கீழே சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்றதைக் கேட்டு
இவள் மிளற்ற -அத்தை கேட்டு -இந்த விழிச் சொல் –
யின்னம் உறங்குதியோ-நாங்கள் அனைவரும் வந்த பின்பும்
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்-சுருக்கு சுருக்கு என்று மனம் புண் படும் படி பேசுகிறீர்களே –
இவளே முதலில் குத்தி பேசுகிறாள் –
வல்லை-வாய் பேச்சில் சாமர்த்தியம் –
கட்டுரைகள் -கடுமையான சொற்கள்
பண்டே யுன்வாய் அறிதும்-நெடும் காலமாக இரண்டையும் அறிவோமே
வல்லீர்கள் நீங்களே-நீங்களே வாய் சாமர்த்தியம் -எதிர் வாதம் செய்து –

இது வரை வாத பிரதி வாதங்கள்
இனி நிலை மாறும்
பாம்பு தோல் தானே உரிப்பது போல் -கோபம் வந்தேறி என்று உணர்ந்து –
புத்தி ஞானம் ஆத்மா நித்யம் -கர்மா வந்தேறி -ஆகவே புத்தி வலிமை கொண்டது –
தர்ம பூத ஞானமே புத்தி -விவேக ஞானம்
முக்தன் கண் இல்லாமலே காண்பான் -ஞானத்தால்
இங்கு தானே ஞானம் பிரசுரிக்க இந்திரியங்கள் வேண்டும் –
புத்தி தூண்டி -விவேக ஞானம் -பிறந்து -தர்ம சாஸ்திரம் உரை கல்லில் -உரைத்து -உணர்ந்து –
விவேக ஞானம் கொண்ட நான் வேறே -கோபம் கொண்ட நான் வேறே –
ஆத்ம சோதனம் பண்ணி -முன் நின்ற நிலையை சிஷித்து –
நானே தான் ஆயிடுக -என்கிறாள்
மாற்றாரை மாற்றழிக்க வல்லானை -பாகவத சத்ருக்களின் விரோதத்தை அழிக்க வல்லவனை –
ஆத்மாவை அழிக்க முடியாதே -அழுக்கை தானே போக்க வேண்டும் –
மாயனை -மாயனை மன்னு -கீழே 5 பாசுரம் தொடங்கிய மாயன் சப்தம் இங்கு மீண்டும் –

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
இளங்கிளி -என்று கிளியை வ்யாவர்த்தித்த படி -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி
பாட்டில் இனிமையும் அப்படியே –
இதொரு பேச்சே -என்று கொண்டாடுகிறார்கள் —

(கிளியும் இளம் கிளியும் கால ஷேப தலைப்பு -கார்ப்பங்காடு ஸ்வாமி
வேளுக்குடி வரதாச்சார்யரை முதலில் செய்ய சொல்லி அருளினாரே )

இவர்கள் பாட்டுக் கொண்டாடினத்தை –
(எல்லே இளம் கிளியே -முதலில் கொண்டாடி தானே விழிச் சொல் )
பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும் வெளுத்து இருக்க
கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே தன் உடம்பு பசுமை யுண்டாய்
வாயும் சிவந்து இருக்கிறது என்று ஒன்றும் பேசாதே கிடந்தாளாய் இருந்தவாறே

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ
(உத்தேச்யம்-கண்ணனும் -பாகவதர்களும் இருக்க )

சில்லென்று அழையேன்மின் –
தான் அனுசந்திக்கிற அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்நமாகையாலே-
சிலுகிடாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அஸஹ்யமாமாம் போலே
(ஆஜ்ஜா கைங்கர்யம் விதி -செய்யா விட்டால் பிராயச்சித்தம் உண்டு –
அநுஜ்ஜா கைங்கர்யம் இழந்தது இழந்ததே -சந்த்யா வந்தனம் பின்பே செய்து கொள்ளலாமே –கூரத்தாழ்வான் )

நங்கைமீர் போதர்கின்றேன்
இவர்கள் சிவிடுக்கென்ன
நாங்களும் எங்கள் சொல்லும் ஆகாதபடி உன் குறைவறுகை இருந்தபடி என் என்ன
நீங்கள் அன்றோ குறைவற்றீர்கள் –
படுத்தாதே கொள்ளுங்கோள் -புறப்படா நின்றேன் -என்ன
(இப்பாட்டிலும் யுக்தி பிரதி யுக்தி அனுமானித்துக் கொள்ள வேண்டிய அம்சம் இதுவே )

வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்களதே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்
இன்றே யல்ல அறிகிறது –
எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -என்ன
(உன்னுடைய சுண்டாயம் நாம் அறிவோம் -பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
பெருமாள் விஷயம் அங்கு -இங்கு பாகவத விஷயம் )

வல்லீர்கள் நீங்களே
உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன
அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ –
பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன

நானே தான் ஆயிடுக
என்று ஸ்ரீ பரத ஆழ்வான் –
ந மந்தராயா -ந ச மாதராயா -ந ச ராகவஸ்ய -மத் பாபமே வாத்ர – என்றால் போலே –

(இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை செய்யாதே இசைந்து கொள்வதே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் )
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது )

மத் பாக்ய சங்ஷயாத்- – ஸூந்தர –26-இறே
(ப்ராஞ்ஞன் க்ருதஞ்ஞான் ராகவன் இரக்கம் -சத் வருத்தர் -பிரசித்தம் -என்னிடம் மட்டும் இல்லையே –
எனக்கு பாக்ய குறைவே காரணம் )
பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்
(பிறர் ஸ்தோத்ரம் தாழ்வு போலே நம்முடைய குற்றம்
பரனான அவனை ஸ்தோத்ரம் செய்வது க்ருத்யமாமாம் போல் ஸ்வ நிகர்ஷம் அனுசந்திப்பதும்
க்ருத்யமாகுமே -என்றுமாம் –
பட்டர் நிந்தித்தவனுக்கு பரிசு கொடுத்த ஐதிக்யம் )

ஒல்லை நீ போதாய்
அவள் புகுராவிடில் தங்களுக்கு ப்ராண ஹானியாகையாலும்-
அவளுக்கும் அநர்த்தமாகையாலும் –
சடக்கெனப் புறப்பட்டுக் கொடு நில் -என்ன
வைஷ்ணவ கோஷ்ட்டியைப் பிரியாது இருக்கை நன்று –

யுனக்கென்ன வேறுடையை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்து இல்லை –
பெரும் பானை கண்ட பின்பும் -என்கிறார்கள் –
அதாவது மத்யம பதமும் மூன்றாவது பதமும் –
(ஸ்வயம்பாகம் இல்லாமல் –ந ம -நான் எனக்கு உரியன் அல்லன் –
நாராயணாயா ப்ராப்த பந்துத்வம் -பாகவத சேஷத்வமும் அனுசந்தேயம் –
கண்ணனே புருஷார்த்தம் என்பதும் வேறுடையை ஆகுமே )

காட்டில் இளைய பெருமாளுக்கு ஸ்ரீ பரத ஆழ்வானைக் காண்கை அஸஹ்யமானவாறே
பெருமாள் -ஆகில் நீர் ராஜ்யத்தை ஆள வேணும் என்ன –
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே –
இவளும் உனக்கு என்ன வேறுடையை -என்ன அப்படி தரைப் பட்டாள்-
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் – (பெரியாழ்வார் 3-6-11-கண்ணன் உபாயம் இவர்கள் உபேயம் )-என்கை –
புருஷார்த்தம் இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அநர்த்தம் உண்டோ –
விஷயங்களைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஈஸ்வரனைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஆத்மாவைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ச சைன்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந சம்சய –
ராஜ்ய மஸ்மை ப்ரதீயதாம்- ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா –

(சைன்யம் உடன் கூடிய பரதன் இடம் சென்று வெல்வேன்
ராஜ்ஜியம் உனக்கு விருப்பமானால் பரதன் இடம் சொல்லிக் கொடுக்கச் செல்வேன்
பாஷம் -அப்படியே -ஓரே வார்த்தை மட்டுமே பதில் சொல்லுவான்
வெட்க்கி உடம்பு சுருங்கினானே -ராமன் நலத்திலே விருப்பம் –
பாகவத அபசாரம் கூடாது என்பதற்கு அன்றோ இச்சுடு சொல் )

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
உணர அறியாத சிறு பெண்களும் இழக்க ஒண்ணாது –
அவர்களும் உணர்ந்தால் புறப்பட வேணும் என்று கிடந்தேன் –

எல்லாரும் போந்தாரோ – போந்தார் போந்து எண்ணிக் கோள்
அடைய வந்து புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-என்ன
மெய்க்காட்டுகைக்கு பிரயோஜனம் தொட்டு எண்ணுகையும்-
தனித்தனி எல்லாரையும் தழுவுகையும் –

(அவனே உகந்து நெருங்கி வந்தானே இடை கழியிலே
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை திரு முதுகு வியர்வை பார்த்துப் பின்னே போவதே
புருஷார்த்தம் என்று இருந்தார் அன்றோ )

வல்லானை கொன்றானை
இனி உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –
உன் அழகிய மிடற்றாலே –
வல்லானை கொன்றானை -என்னாய் என்கிறார்கள் –
ஒருநாள் செய்த உபகாரம் அமையாதா நமக்கு -என்று கொண்டாடுகிறார்கள்

வல்லானை கொன்றானை
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்-என்று வாசலிலே ஆனையை நிறுத்தி
பிள்ளையை ஆனை நலிந்ததாகக் கேட்ப்போம் இறே என்று
கம்சன் அம்மானாய் இருக்கப் பார்க்க அத்தைக் கொன்று அவ் வூரில் பெண்களையும் நம்மையும்
உளோமாம் படி பண்ணி ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவன்

மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை –
சக்ரவர்த்தி திருமகனைப் போலே -நாளை வா என்னாதே
அக்கணத்திலே கம்சாதிகள் நினைத்த நினைவை
அவர்கள் தங்களோடு போக்கி தாய் தமப்பன் காலிலே விலங்கைப் போக்கி வாழ்வித்தவன்

மாயனைப்
தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்

பாடேலோ ரெம்பாவாய்-
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப் பாட
இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தை –
ஆதலால் தோல்வி விஜயமான இடம் இறே இவ்விடம் –

கீழே கீர்த்திமை பாடி -இங்கு தோற்றது பாடி -இதுக்காக அன்றோ அவன் அவதாரம் –
ஆகவே அவன் உகப்புக்காகவே இவை இரண்டுமே

——————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –
பெண்கள் எல்லாருடையவும் திரளைக் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டான –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்ற பாட்டைக் கேட்டு
அசல் திருமாளிகையிலே கிடந்தாள் ஒரு பெண் பிள்ளை தன்னிலே கிடந்தது நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு
எல்லே இளங்கிளியே
திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் –
யாழியிலே இட்டுப் பாடி இனிதானவாறே
மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
எல்லே என்றது -என்ன ஆச்சர்யம் என்றபடி -சம்போதனம் ஆகவுமாம் –
இளங்கிளி -என்று கிளியை வ்யாவர்த்தித்த படி -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி
பாட்டில் இனிமையால் உறங்கி இவள் பேச்சு கிடையாது என்னும்படி இருக்கை – –
இதொரு பேச்சே -என்று கொண்டாடுகிறார்கள் —
இவர்கள் பாட்டுக் கொண்டாடினத்தை தன் -பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும்
வெளுத்து இருக்க கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே
தன் உடம்பு பசுமை யுண்டாய் வாயும் சிவந்து இருக்கிறது என்கிறார்கள்-
இவ்வளவில் வாய் திறக்கில் பழி இடுவார்கள் என்று நினைத்து நான் இங்கனே பசுகு பசுகு என்று
சிறகுகளும் தாணுமாய் இருந்தேனோ என்று ஒன்றும் பேசாதே கிடந்தாள்

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ
எங்களுக்கு கிருஷ்ண விரஹத்தாலே தளர்வதுக்கு மேல் உறக்கம் இல்லை –
அதுக்கு உன் கடாக்ஷமும் பெறாது ஒழிவதே
உன் பாட்டுக் கேட்கப் பெறாது ஒழிவதாய் உயிர்க் கொலையாக்கி இட்டு வைத்தால் தரிக்க ஒண்ணுமோ –

சில்லென்று அழையேன்மின் –
பிராட்டிமாரோடே கூட எழுந்து அருளி இருந்தாலும் படிக்கத்தோபாதி அந்தரங்கனாய்
இருக்கக் கடவ ஸ்ரீ நாரத பகவானை
ஸ்வேத த்விபத்துக்கு எழுந்து அருளினை போது உள்ளே புகப் புக்கவாறே-
இவன் வெட்டத்தனம் அவர்களுக்குப் பொறாது என்று –
நீ இங்கே நில்லு -என்று எழுந்து அருளினால் போலே
தான் அனுசந்திக்கிற அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்நமாகையாலே-
சிலுகிடாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அஸஹ்யமோ என்னில் திருப் புன்னை கீழே
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அஸஹ்யமாமாம் போலே –

நங்கைமீர் போதர்கின்றேன்
இவர்கள் சிவிடுக்கென்ன நாங்களும் எங்கள் சொல்லும் ஆகாதபடி உன் குறைவறுகை இருந்தபடி என் என்ன
நீங்கள் அன்றோ குறைவற்றீர்கள் -படுத்தாதே கொள்ளுங்கோள் -புறப்படா நின்றேன் -என்ன

வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை
என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -என்ன

வல்லீர்கள் நீங்களே
இன்னம் உறங்குதியோ வல்லை யுன் கட்டுரைகள் -என்னும் வெட்டிமை உங்களதே —
நான் உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன
அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ -பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன-

நானே தான் ஆயிடுக
பதகம் மூட்டினவாறே சிறிது போதாகிலும் பேசாதே இருப்பார்கள் இறே என்று –
நானே தான் ஆயிடுக -என்கிறாள் –
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது

ஸ்ரீ பரத ஆழ்வான் -மத் பாபமே வாத்ர -நிமித்தம் ஆஸீத் -என்றான் – பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்
அது தோஷம் என் தலையிலே கிடக்கிறது -உங்களுக்கு இப்போது செய்ய வேண்டுவது என் என்ன
அரை க்ஷணம் தங்களுக்கு அவளை ஒழியச் செல்லாமையாலும் –
அவளுக்கு தங்களை ஒழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக் கொண்டு நில் என்கிறார்கள்

ஒல்லை நீ போதாய்
உன் படுக்கையிலே கிடக்கிற கிருஷ்ணனை இட்டு வைத்து நீ கடுகப் போராய்
அரை க்ஷணம் வைஷ்ணவ கோஷ்ட்டியைப் பிரிய நின்று வரும் மாத்யஸ்த்யம் எனக்கு என் செய்ய –
என்கிற ஸூப்ராஹ்மண்ய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது –

யுனக்கென்ன வேறுடையை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்து இல்லை-எங்கள் -பெரும் பானை கண்ட பின்பும் -என்கிறார்கள் –
அதாவது மத்யம பதமும் மூன்றாவது பதமும் –

சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-என்னக் கடவது இறே
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் -என்னுமா போலே
இளைய பெருமாள் கைகேயின் மகன் வருகிறான் என்று ஸ்ரீ பரத ஆழ்வானைச் சீறி –
வில்லையோட்டிக் கொல்ல என்ன –
பெருமாளுக்கு அது அஸஹ்யமாய் -பிள்ளைக்குச் சொல்லிக் கொள்கிறோம்
நீ இங்கண் அலமாக்கிறது ராஜ்யத்தை ஆசைப்பட்டு அன்றோ
நீ ராஜ்யத்தைப் பண்ணு-என்று சொன்ன வார்த்தையை கேட்டு
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே -இவளும் உனக்கு என்ன வேறுடையை -என்ன அப்படி தரைப் பட்டாள்-

ச சைன்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந சம்சய -/ ராஜ்ய மஸ்மை ப்ரதீயதாம்/ ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் என்று -புருஷார்த்தமான
இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அநர்த்தம் உண்டோ –
விஷயங்களைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஈஸ்வரனைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம்
ஆத்மாவைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
உணர அறியாத சிறு பெண்களும் இழக்க ஒண்ணாது –
அவர்களும் உணர்ந்தால் புறப்பட வேணும் என்று கிடந்தேன் -இத்தனை –
எல்லாரும் போந்தார்கள் ஆகில் புறப்படுகிறேன் -என்றாள்-
எல்லாரும் போந்தாரோ – போந்தார் போந்து எண்ணிக் கோள்
அடைய வந்து புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-என்ன
மெய்க்காட்டுகைக்கு பிரயோஜனம் தொட்டு எண்ணுகையும்-
தனித்தனி எல்லாரையும் தழுவுகையும்

வல்லானை கொன்றானை
எல்லாரும் வந்தாராகில்
இனி உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –வேறு உண்டோ –
உன் அழகிய மிடற்றாலே -ஒரு கால் -வல்லானை கொன்றானை -என்னாய் என்கிறார்கள் –

வல்லானை கொன்றானை
ஒருநாள் செய்த உபகாரம் அமையாதா நமக்கு -என்று கொண்டாடுகிறார்கள்

வல்லானை கொன்றானை
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்-என்று வாசலிலே ஆனையை நிறுத்தி
பிள்ளையை ஆனை நலிந்ததாகக் கேட்ப்போம் இறே என்று
கம்சன் அம்மானாய் இருக்கப் பார்க்க அத்தைக் கொன்று அவ் வூரில் பெண்களையும் நம்மையும்
உளோமாம் படி பண்ணி ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவன்

மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை –
சக்ரவர்த்தி திருமகனைப் போலே -நாளை வா என்று விடாதே அக்கணத்திலே கம்சாதிகள் நினைத்த நினைவை
அவர்கள் தங்களோடு போக்கி தாய் தம்மப்பன் காலிலே விலங்கைப் போக்கி வாழ்வித்தவன்

மாயனைப்
தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்

பாடேலோ ரெம்பாவாய்-
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப் பாட
இவ்விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தையாய் -தோற்க
அத்தோல்விக்கு அவனைப் பாட வேணும் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: