திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்-

காத்யாயினி மஹா மயி குறித்து அன்று கோபிகள் பாவை நோன்பு –
அநுகாரம் முதிர்ந்து -அனுபவ பரிவாஹம் -பாசுரமாக -வெளி வந்தது –
அபேக்ஷை உள்ள தர்மம் -துணைத் தேட்டம் -தேர் பலரும் இழுக்க வேண்டுமே –
லௌகிக காமத்துக்குத் தான் தனிமை வேண்டும் -கூடி இருந்து குளிர வேண்டுமே –
ரகு குணம் ஜடபரதர் -சம்வாதம் -பாகவதர் ஸ்ரீ பாத தூளி மஹாத்ம்யம் உண்டே –
அஹங்காரம் போக்க இதுவே சிறந்த உபாயம் –

ஈராயிரப்படி -அவதாரிகை –
இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(மண்டோதரி வியத்தமாக தான் உணர்ந்து- சதுஸ்லோகி
ஏஷ மஹா யோகி –ஸ்ரீ வத்ஸ வஷ -சங்கு சக்ர கதா தரா -என்று உணர்த்தினாளே
முனி வராய பராசரர் தத்வ த்ரயம் உணர்ந்து -ஸ்வரூபம் ஸ்வ பாவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் மைத்ரேயர் வியாஜ்யமாக நமக்கு உணர்த்தினார்
வியாச பகவான் -சதுர்வித புருஷார்த்தங்கள் உணர்ந்து -மஹா பாரதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -புராணங்கள் -அருளிச் செய்து உணர்த்தினார் –
ரிஷிகள் உபதேசம் அதிக்ருதா அதிகாரம் -எல்லாரையும் உணர்த்த மாட்டார்கள்
ஆழ்வார்கள் -உணர்ந்து –நம்மாழ்வார் –16- சம்வத்சரங்கள் -ஷோடச கலா -தியானித்து தான் உணர்ந்து -கடாக்ஷம் மூலமாகவே உணர்த்தி –
திருமழிசை ஆழ்வார் சாக்கியம் கற்று -தீர்த்தகரராய் திரிந்து –
வேத வேத்ய வைதிக உபதேசம் ஆவித்யர் அளவிலே ..
அஜ்ஞர் ஜ்ஞானிகள் ஜ்ஞான விசேஷ யுக்தர் சர்வஜ்ஞன் என்னாமல் இவர் திருத்துவர்-
அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும் இக் கரை எறினார்க்கு இன்ப வெள்ளமும்
நிலை அறியாதார்க்கு ஆழங் காலும் கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும் அறிவிக்க வேணும்
உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தோறும் -திருவாய் மொழி மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் —
பதி தோறும் -புக்கு திரியும் குணம் திகழ் கொண்டல் ராமானுஜன்
இங்கு உணர்ந்த மெய் ஞானியர்-ஆழ்வார் -உணர்வு -ஞான விசேஷம் -சேஷி தம்பதி -மிதுனம் –
ஆனந்த மய ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -சர்வ கந்த சர்வ ரஸம் -பரம போக்கிய ஸ்வரூபம் ரூபம் -அறிவதே உணர்வு
அது முதிர்ந்து கனிந்து பக்தியாக பரிமளிக்கும்
உணர்வு எனும் பெரும் பதம் அறிந்தேன் -திருமங்கை
அறிவும் அன்பும் கலந்ததே -பக்தியே -உணர்வு –
யதா வஸ்தித ஞானம் -உண்மை அறிவு -பக்தி முற்ற -பக்தி ஸித்தாஞ்சனம் –
மெய் ஞானம் -உண்மையான அர்த்த பஞ்சக ஞானம் -அறிந்து -அவா உந்த -நமக்கு உணர்த்தி ஆழப் பண்ணுவார்கள் )

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-

இதில் ததீய ஞானம் உடைய -அனுஷ்டானம் இல்லாத ஒருத்தியை உணர்த்துகிறார்கள்
பாடும் பொழுது பங்கயக் கண்ணான் என்றே தான் பாடுவார்கள் –
நங்காய் -குண பூர்த்தி -விபரீத லக்ஷணையால் குத்தல் பேச்சு –
நாணாதாய்-செய்யாமலும் இருந்து -அனுதாபமும் இல்லாமல் -பச்சாத் தாபம் -பஸ்ஸாத் -பின்பு தாபப்படுத்தல் இல்லாமை –
வாவி -வாபி -சமஸ்க்ருதம் -குளம் –
செங்கழு நீர் -பகல் புஷ்பம் -செங்கழு நீர் -தாமரைப் பூ –
ஆம்பல் இரவு புஷ்பம் -கரு நெய்தல் -(அல்லி பூ -மவ்வல் -மல்லி பூ )
வாயைத் திறந்து பேசுவதையும் பேசாததையும் சொன்னவாறு
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-உள்ளே யாவது சத்வம் -ரஜஸ் வெளி விட வேண்டுமே
சைவ சன்யாசிகளையும் த்ரி தண்ட ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள்
திருக் கோயில் சங்கிடுவான்–பாஞ்ச ஜன்யமும் சாவியும்

வாய் நெகிழ்ந்து வாய் கூம்பின காண்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
இப்படி பதங்கள் கூட்டி வியாக்யானம்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாராம் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் வளர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல
உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன
வயலில் அவையும் அப்படியே -என்ன
நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வைத்தீர்கள் -என்ன

தோட்டத்து வாவியும் அப்படியே என்ன
வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன
புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன
அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன
அ ஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன

(நாம் அவனை நோக்கி அத்வேஷம் மாறின உடனே ஆபி முக்கியாதிகளை தானே உண்டு பண்ணி
அருளி கைக்கொள்ளும் அவனைப் போலவே இவர்களும் அலரத் தொடங்கியதுமே -என்றவாறு )

அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று
போது வைகிற்று என்று தபசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்

தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —
சங்கு என்று குச்சியை (சாவியை ) சொல்லுகிறது –

சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்
(இப்பொழுது சொல்வது ஸ்ரீ வைஷ்ணவ திருக்கோயில் )
வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை
ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்

இரண்டு பிரகாரத்தாலும்
சாத்விகரோடே
தமோ அபிபூதரோடு வாசியற உணர்ந்தது என்கிறார்கள்
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச –
(வேதம் அறிந்தவர்கள் அனுஷ்டானம் பிரமாணம் வேதமும் பிரமாணம் அடுத்தது
பெரிய ஜீயர் -இன்றும் -காண்கிறோமே -தங்கள் திருக்கோயில் என்று
திருமலையைச் சொன்னவாறு என்பாராம் பெரிய திருமலை நம்பி -)

எங்களை முன்னம் எழுப்புவான் –
நேற்று எங்களை எழுப்புகிறேன் –
கிருஷ்ணன் பாடு கொடு போகிறேன் -என்றது கண்டிலோமே -என்கிறார்கள்

வாய் பேசும்
பொய் சொல்ல உகக்கும் கிருஷ்ணனோடு இறே பழகுகிறது –
பொய்யாய் நினைத்ததும் மேலே பிறர் அறிய வேணுமோ

நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை
(பேச்சு மட்டும் இருந்து அனுஷ்டானம் இல்லா விடில் நாய் வாழ் போலே வீணாகுமே )

எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு –
எங்கள் குறை தீராய்-

நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை –

நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது –
(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்

(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

சங்கோடு சக்கரம்
இன்னார் என்று அறியேன் -இத்யாதி

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ- நமஸ்தே விஸ்வ பவன -ஜிதந்தே –
சங்கு சக்கரங்களைக் கொண்டு திரு நாபி கமலம் போலே இருக்கை-
தூது செய் கண்கள்-9-9-9- இறே –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -1-7-5-

(பங்கயக்கண்ணன் என்கோ
தாமரைக்கண்ணன் என்றே தளரும்
தாயாய் அளிக்கும் தண் தாமரைக் கண்ணன்
ரக்ஷகமும் போக்யமும் பரத்வமும் தாமரைக்கண்கள் சொல்லுமே )

—————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –
இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாராம் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் வளர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல
உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன
வயலில் அவையும் அப்படியே -என்ன

நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வந்திகோள் -என்ன
தோட்டத்து வாவியும் அப்படியே என்ன
வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன
புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன
அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன
அஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன

அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன
சாத்விகாரோடே தமோ அபிபுத்தரோடே வாசியற உணர்ந்தது பாற் என்கிறார்கள் –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று போது வைகிற்று என்று
அஸூசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்

தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —
சிறு பதத் தூற்றத் துறையிலே ஒரு தபசி பரிசிலே ஏறி ஆற்றினுள்ளே புக்கு
காவேரி தேவிக்குச் சங்கூதுகிறேன் என்று அங்கே ஊத-
பரிசிலே போகிற குதிரை மிதித்து அதில் ஏறின மனிச்சர் அடைய செத்துப் போச்சுது -என்று
எம்பார் அருளிச் செய்த வார்த்தை

சங்கு என்று குச்சியை சொல்லுகிறது -என்றுமாம்
வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்
சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்
தம பிரசுரர் லக்ஷணத்தையோ சத்வஸ் த்தரான நமக்குச் சொல்லுவது
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்று சத்வஸ்த்தர் படியைச் சொல்ல வேண்டாவோ -என்ன
சத்வ ஸ்த்தைகளான நாங்கள் சொன்னபடியையும் செய்கிறிலை என்கிறார்கள் –

நான் செய்தது என் என்ன
எங்களை முன்னம் எழுப்புவான் -வாய் பேசும்
நேற்று எங்களை எழுப்புகிறேன் -கிருஷ்ணன் பாடு கொடு போகிறேன் -என்றது கண்டிலோமே -என்கிறார்கள்

வாய் பேசும்
பொய் சொல்ல உகக்கும் கிருஷ்ணனோடு இறே பழகுகிறது –
பொய்யாய் நினைத்ததும் மேலே பிறர் அறிய வேணுமோ

நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை

எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு -எங்கள் குறையையும் தீராய்-
இப்படிச் சொல்லி வைத்துச் செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் கூட இன்றிக்கே இருப்பதே

நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை

நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது
நா ந் ருக்வேத விநீ தஸ்ய –இத்யாதி இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்

ஏந்தும் தடக்கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாலியையும் சொல்லுகிறது

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: