திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -புள்ளின் வாய் கீண்டானை — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்

விடிந்தமை அடையாளம் -6-7-8-13-14-பாசுரங்களில் உண்டு –
போதரிக்கண்ணாய் இந்தப்பெண்ணின் விழிச் சொல் -ஞான சீர்மை –
அடுத்த பாசுரம் – நாவுடையாய் -பேச்சு வன்மை – வாக்கு வன்மை –
ஆச்சார்ய வைலக்ஷண்யங்கள் இவை இரண்டும்

ஈராயிரப்படி நாலாயிரப்படி-அவதாரிகை
இவளை எழுப்புகிறது -அசலகத்தே கேட்டுக் கிடந்தாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–

புள்ளும் சிலம்பின் காண் -மீண்டும் -இங்கு -6 பாசுரத்தில் உண்டே –
அங்கு கூட்டில் இருந்த த்வனி -இங்கு இறை தேடப் போன இடத்தில் த்வனி –
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று-சுக்ரன் உதித்து குரு அஸ்தமித்தது
போதரிக் கண்ணி-பூவை வெல்லும் -உலாவும் மான் போன்ற கண் -பூவிலே வண்டு இருந்தால் போலே-
பாவாய் -இயற்கையான ஸ்த்ரீத்வம்
நன்னாளால்-ஸ்ரீ கிருஷ்ண சம்ஸ்லேஷம்
ஆல் -இது என்ன ஆச்சார்யம் -தனி அனுபவம் கூடுமோ
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ-கூடி இருந்து குளிராமல் -நாம் முன்பு செய்த சங்கல்பம் படி இருக்க ஒண்ணாவோ
(பகாசுரன் வாயைக் கீண்ட -கண்ணனை சொல்லி மீண்டும் அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்று
மனத்துக்கு இனியான் -ஜடாயுவை சொல்லி- இரண்டுமே ராமனுக்கு என்பாரும் உண்டு )

புள்ளின் வாய் கீண்டானை –
கொக்கின் வடிவு கொண்டு வந்த பகாசூரனைப் பிளந்தவனை

பொல்லா அரக்கனைக்
தாயையும் தாமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன் -( பெரிய திருமொழி -5-7-7-)

பொல்லா
முன்பொலா இராவணன் (திருக் குரும் தாண்டகம் )-இறே –
பிராட்டி த்வம் நீசசசவத்-என்றாள் (முயல் குட்டி-குள்ள நரி- போல் நீ யானை போல் ராமன் -ஸூ உத்தர -21-16)
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை
(இது சூர்ப்பணகை வார்த்தை -பெருமாளும் இவனை இஷ்வாகு வம்சரகா நினைத்து
ராக்ஷசர் பலம் என்ன – -நின்னொடு எழுவரானோம் -என்றாரே )

கிள்ளிக் களைந்தானைக்
மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி –
தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –
குண அம்சம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
(ஆகாசம் கடல் ராம ராவண யுத்தம் மூன்றுக்கும் ஒப்பு அது அதுவே –
இருந்தாலும் பட்ட மஹிஷிக்கு இது அநாயாசேன செய்த கார்யம் )

கீர்த்திமை –
எதிரிகள் நெஞ்சு உளுக்கும் படி இறே பெருமாள் பராக்ரமம் இருக்கும் படி
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சனீயஸ்ய விக்ரமஸ்ய -என்னும்படியான வீர்யம் –
ராவணன் வீரியத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகுக்கு இலக்கானாள்-
தம்பி செல்லத்துக்கு இலக்கானான்

(ராமாவதார பிரதான குணமே ஸுவ்சீல்யம்
தசரதன் -ஸ்நேஹத்துக்கு தோற்றான் -தண்ணீர் பந்தல் வைத்தால் போல் இளைய பெருமாளை வைத்து
பாவம் தர்மம் க்ருதஜ்ஜை அறிந்து கைங்கர்யம்
கௌசல்யை மாத்ருவத் வாத்சல்யம்
கைகேயி ஸத்யவாக்யன் -என்றதும் தோற்றாள்
சுமித்ரை பரத்வம் -பிரபு -கவலைப்படாதே கௌசல்யைக்கு ஆறுதல் சொன்னாளே
பரதன் ஸ்வாமித்வம் –
லஷ்மணன் -சேஷித்வம்
குகப்பெருமாள் -மித்ரத்வம் தோழமை
சுக்ரீவன் -ரக்ஷகத்வம்
சத்ருக்னன் -ஸ்வாமிக்கு ஸ்வாமி
திருவடி -விசேஷமாக வீரம் -கனிவுக்கு தோற்று
வாலி -திரு உருவ அழகுக்குத் தோற்று -ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் –
தாரை -ஆபத் ரக்ஷகத்வம் -நாமி பலத்தால் சுக்ரீவன் அறை கூவுகிறான்
அயோத்யா வாசிகள் -ராமத்வம் -கல்யாண குண கூட்டம் –
கும்பகர்ணன் -அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ -ராமனே அம்ருதம் அறிந்தவன்
விபீஷணன் -சர்வ லோக சரண்யன்
இவையே கீர்த்திமை )

தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –
பரம சேதனன் உபாயமாம் இடத்தில் –
அது ஞான சக்தி கருணாஸூ என்கிற ஞான சக்தி கிருபைகள் வேண்டுகையாலே –
அவற்றை அனுசந்தித்து மார்விலே கை வைத்து உறங்குமவர்கள் இவர்கள்
குணவான் வீர்யவான் -இறே
(வால்மீகி நாரதர் –16- கல்யாண குணங்கள் -குணவான் சீலத்தவம்
கூரத்தாழ்வான் -ஞான சக்தி கருணை கூட்டம் வெல்லுமா பாபக் கூட்டங்கள் வெல்லுமா )

பாடிப் போய்
கால் கொண்டு போய் என்கை –
(பாதேயம் புண்டரீகாக்ஷம் நாம சங்கீர்த்தனம் )

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்-
இன்னமும் உணர்ந்து உணராத சிறு பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு விடிந்தவாறே போகிறோம் -என்ன
அவர்கள் முன்னே உணர்ந்து கிருஷ்ணன் மெய்க்காட்டுக் கொள்ளும் இடம் புக்கார்கள் -என்கிறார்கள் –

பாவைக்களம்-
போர்க்களம் -நெற்களம் -என்பாரைப் போலே
(திருவஞ்சிக் களம் -திரு மூழிக் களம் -பின்னானார் வணங்கும் சோதி ஸ்ரீ ஸூக்தி –
அங்கு திரு மூழிக் குளம் என்பர் )

பிள்ளைகள் எல்லாரும்
எல்லாரும் நாம் சென்று எழுப்ப வேண்டும்படியான பாலைகளும்

பாவைக்களம்
சங்கேத ஸ்தலம் -அவர்கள் போனார்களாகிலும் அக்காலத்திலே போக வேணுமோ –
விடிந்தால் போருங்கோள் -என்ன

வெள்ளி எழுந்து –
நினைக்கிறபடியே வெள்ளி யுச்சிப் பட்டு

வியாழம் உறங்கிற்றுப்
வியாழனும் அஸ்தமித்தது -என்ன
நக்ஷத்திரங்கள் கண்டது எல்லாம் வெள்ளியையும் வியாழமாயும் அன்றே உங்களுக்குத் தோற்றுவது-
அவை புனர்பூசமும் பூசமுமாகக் கொள்ளீர்

மற்ற அடையாளம் உண்டோ -என்ன
நாங்கள் திரண்டு தோன்றுமது அல்லவோ என்ன
(புள்ளும்-உம்மைத் தொகை இருப்பதால் இந்த வியாக்யானம் )

நீங்கள் பிரியல் அன்றோ -திரள வேண்டுவது –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் என்று இருப்பவர்கள் நீங்கள் அன்றோ
மற்ற அடையாளம் உண்டோ என்னில்

புள்ளும் சிலம்பின காண்
புள்ளும் சிதறிப் போந்தன

போதரிக் கண்ணினாய்
இக்கண்ணுடைய எனக்கு ஓர் இடத்தே புறப்பட வேணுமோ என்ன –
என் காலிலே விழுகிறார்கள் -என்று கிடக்கிறாயோ
(ஸ்வரூப ஞானம் உடையவள் -அவன் சேஷி சொத்தை தானே ஸ்வீ கரிப்பான்
என்ற சேஷத்வ ஞானம் உடையவள் )

அரி
வண்டு-
பூவிலே வண்டு இருந்தால் போலே –
அஸி தேஷ்ணை யாகையாலே அவனும் அவன் விபூதியும் கண்ணில் ஒரு மூலைக்குப் போராது-
இக்கண்ணாலே அவனைக் குமிழ் நீர் உண்ணப் பாராய்

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணங்களாலே நீர் வெதும்புவதற்கு முன்னே

குடைந்து நீராடாதே
தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தாங்கள் சம்பந்தத்தாலே கொதிக்கும் என்று அறிகிறிலள்

பள்ளிக் கிடத்தியோ
பிள்ளைகள் தாங்களும் படுக்கையை விட்டுப் போகா நிற்க நீ படுக்கையிலே கிடப்பதே
அவன் கிடந்தது போன படுக்கை என்று மோந்து கொண்டு கிடக்கிறாயோ
பயிர் விளைந்து கிடக்க கதிர் பொருக்கி ஜீவிக்கிறாயோ
(திருக் கோவலூர் பெருமாள் இன்றும் முதல் ஆழ்வார்களை நெருக்கி இருந்த
வாசனையை முகர்ந்து கொண்டு உகந்து நித்ய வாசம் பண்ணி அருளுவது போல் )

பாவாய் நீ
தனிக் கிடக்க வல்லளோ நீ

நன்னாளால்-
அடிக் கழஞ்சு பெற்ற இந்நாளிலே –
இந்நாலு நாளும் போனால் மேலில் நாள்கள் ராவணனைப் போலே பிரிக்கும் நாள்கள்

கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–
சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று தத் வஸ்துவிலும்
த தீய வஸ்துவை அபஹரிக்கை யன்றோ பெரும் களவு

கலந்து குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -என்று கிரியை –

————————

ஈராயிரப்படி நாலாயிரப்படி-அவதாரிகை
இவளை எழுப்புகிறது -அசலகத்தே கேட்டுக் கிடந்தாள் ஒருத்தி-
தன் அபராதத்தை தீர உணர்ந்தாளாய்-
பெண்காள் இங்கும் ராம வ்ருத்தாந்தம் சொல்லி எழுப்பினி கோளோ-என்ன
ராம வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
ஸ்ரீ இராமாயண மஹா பாரதங்கள் இரண்டும் சொன்னோம் –
என்று கண் அழகியாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–

புள்ளின் வாய் கீண்டானை –
கொக்கின் வடிவு கொண்டு வந்த பகாசூரனைப் பிளந்த படி –
பள்ளத்தின் மேயும் –
இத்தலைக்கு இசைவே இறே வேண்டுவது –
விரோதி போக்குகை அவன் படி என்று இருக்கை
நம்முடைய அநீதிகளுக்கு ஈஸ்வரன் பண்ணும் அனுமதி
வைஷம்ய நைர் க்ருண்யத்தில் புகாதாப் போலே இவ்வனுமதி உபாயத்தில் புகாது –
இருவர்க்கும் இரண்டு அனுமதிகளை ஸ்வரூபத்திலே கிடக்கும் அத்தனை –

பொல்லா அரக்கனைக்
தாயையும் தாமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்

பொல்லா
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து -இறே –
பிராட்டி த்வம் நீச சசவத் ஸ்ம்ருத-என்றாள் (குள்ள நரி-முயல் குட்டி போல் நீ யானை போல் ராமன் -ஸூ உத்தர -21-16)
இவள் தானும் அன்று இன்னாதான செய் சிசுபாலன் -என்றாள் –
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை
சீதாயாஸ் சரிதம் மஹத் -என்கிற பிராட்டி வ்ருத்தாந்தம் ஸ்ரீ ராமாயணம் ஆனபடி என் என்னில் –
குணவான் -என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்குமவர்களோடு பரிமாறின படி
வீர்ய வான் -என்றது பிரிக்க நினைத்தார் முடியும்படி
தர்மஞ்ஞ – என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்து இருக்கும் படி –

கிள்ளிக் களைந்தானைக்
மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி–
திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடு மா போலே
ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

கீர்த்திமை
எதிரிகள் நெஞ்சு உளுக்கும் படி இறே பெருமாள் பராக்ரமம் இருக்கும் படி
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய -என்னும்படியான வீர்யம் –
சத்ருக்களும் மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும் வீரம் –
க இதி ப்ரஹ்மணோ நாம -என்று பரரானவர்கள் பகவத் பரத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக்
கொடுக்குமா போலே ஆத்ம அபஹாரிகள் எதிர் அம்பு கோக்கை தவிர்ந்து –
நமோ நாராயணாய -என்று அவனுடைய சேஷத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக் கொடுக்குமா போலே

ரஞ்ச நீயஸ்ய
தோளாலே நெருக்குண்ட பிராட்டிமார் சொல்லுமா போலே சொல்லுவதே –
உகவாதார் க்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்கு விட ஒண்ணாமைக்குச் சொல்ல வேணுமோ –
ராவணன் பெருமாள் வீரியத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகுக்கு இலக்கானாள்-
தம்பி செல்லத்துக்கு இலக்கானான்
தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –
கர்ம ஞான பக்திகள் உபாயமாம் இடத்தில் இவனும் கூட வேணும் –
பரம சேதனன் இவன் தானே
உபாயமாம் இடத்தில் -பாபிய சோ பீத்யாதி –த்வஜ் ஞான சக்தி கருணா ஸூ சாதீஷூ -என்று
ஞான சக்தி கிருபையே சஹகாரம் ஆகையாலே -அவற்றை அனுசந்தித்து
மார்விலே கை வைத்து உறங்குமவர்கள் இவர்கள் –

பாடிப் போய்
இவர்களுக்குக் கால் நடை தருகைக்கு மிடுக்குக்குக் கால் கொண்டு போகை
ஸூ குமாரரான பிள்ளைகள் உண்டு உண்டு வழி போய் என்னுமா போலே —
பரஸ்பரம் தத் குணவாத ஸீது பீயூஷா நிர்யாபி ததேஹ யாத்ரா –
பாதேயம் இத்யாதி –
போழ்து போக உள்ள நிற்கும் புன்மை இல்லாதவர்கள் இவர்கள் –
அவர்களுக்கு வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் அன்றோ -இவர்களுக்குச் சொல்ல வேணுமோ –

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்-
இன்னமும் உணர்ந்து உணராத சிறு பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு விடிந்தவாறே போகிறோம் -என்ன
அவர்கள் முன்னே உணர்ந்து கிருஷ்ணன் மெய்க்காட்டுக் கொள்ளும் இடம் புக்கார்கள் -என்கிறார்கள் –

பாவைக்களம்-
போர்க்களம் -நெற்களம் -என்பாரைப் போலே

பிள்ளைகள் எல்லாரும்
எல்லாரும் நாம் சென்று எழுப்ப வேண்டும்படியான பாலைகளும்

பாவைக்களம்
சங்கேத ஸ்தலம் -அவர்கள் போனார்களாகிலும் அக்காலத்திலே போக ஒண்ணாது –
வெள்ளி எழுந்ததோ பாருங்கோள் என்ன –
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
நீ நினைக்கிற அளவு தப்பி வெள்ளி யுச்சிப் பட்டு
வியாழனும் அஸ்தமித்தது -என்ன
நக்ஷத்திரங்கள் கண்டது எல்லாம் வெள்ளியையும் வியாழமாயும் அன்றே உங்களுக்குத் தோற்றுவது-
அவை புனர்பூசமும் பூசமுமாகக் கொள்ளீர்

மற்ற அடையாளம் உண்டோ -என்ன
நாங்கள் திரண்டு தோன்றுமது அல்லவோ என்ன –
நீங்கள் பிரியில் அன்றோ திரள வேண்டுவது -மற்ற அடையாளம் உண்டோ என்ன

புள்ளும் சிலம்பின காண்
புள்ளும் சிதறிப் போந்தன
பண்டு ஒரு கால் புள்ளும் சிலம்பின் காண் -6-பாசுரத்தில் -என்றது –
அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று–
இப்போது பறந்து போகத் தொடங்கிற்று -என்கை –

போதரிக் கண்ணினாய்
உங்கள் வார்த்தை பழகிறிலன்-என்று பேசாதே கிடக்க
இக்கண்ணுடைய எனக்கு ஓர் இடத்தே புறப்பட வேணுமோ என்ன –
என் காலிலே விழுகிறார்கள் -என்று கிடக்கிறாயோ

போது அரி
பூவும் மானும் போன்ற கண்
வண்டு-பூவிலே வண்டு இருந்தால் போலே என்றுமாம் –
பூவோடு சீறு பாறு என்றுமாம்–
அஸி தேஷ்ணை யாகையாலே புண்டரீகாக்ஷன் பக்கல் போக வேணுமோ -என்னும்
தான் – நெடும் கண் இள மான் –
அவன் அனைத்துலகமுடைய அரவிந்த லோசனன் –
அவனும் அவன் விபூதியும் கண்ணில் ஒரு மூலைக்குப் போராது-

போதரிக் கண்ணினாய் -இத்யாதி
இக்கண்ணாலே அவனைக் குமிழ் நீரூட்டி
அவன் கண்ணிலே நாம் குமிழ் நீருண்ணப் பாராய் -என்கை –

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணங்களாலே நீர் வெதும்புவதற்கு முன்னே புறப்பட்டு –
பெண்களும் புறப்பட்டு நீர் வெதும்புவதற்கு முன்னே என்னவுமாம்

குடைந்து நீராடாதே
தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தாங்கள் சம்பந்தத்தாலே கொதிக்கும் என்று அறிகிறிலள்

பள்ளிக் கிடத்தியோ
பிள்ளைகள் தாங்களும் படுக்கையை விட்டுப் போகா நிற்க நீ படுக்கையிலே கிடப்பதே
அவன் கிடந்தது போன படுக்க என்று மோந்து கொண்டு கிடக்கிறாயோ
பயிர் விளைந்து கிடக்க கதிர் பொருக்கி ஜீவிக்கிறாயோ

பாவாய் நீ
தனிக் கிடக்க வல்லளோ நீ

நன்னாளால்-
அடிக் கழஞ்சு பெற்ற இந்நாளிலே-
இந்நாலு நாளும் போனவாறே பெண்களும் கிருஷ்ணனும் என்று புகுகிறார்கள் கிடாய்
இந்நாலு நாளும் போனால் மேலில் நாள்கள் ராவணனைப் போலே பிரிக்கும் நாள்கள் –

ஆண்டாள் திரு ஏகாதசி பட்டினி விட்டு பட்டரை தீர்த்தம் தாரும் என்ன–
இப்பெரிய திரு நாளிலே இது ஒரு திரு ஏகாதசி
எங்கனே தேடி எடுத்துக் கொண்டி கோள்-என்று அருளிச் செய்தார்

கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–
சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று தத் வஸ்துவிலும்
த தீய வஸ்துவை அபஹரிக்கை யன்றோ பெரும் களவு
என்னுடை நாயகனே -என்னும்படியே ஸ்வாமித்வத்தைச் சொல்லி
சேஷ பூதனுக்கு சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ளலாம்
சேஷிக்குத் தன் சேஷித்வத்தை அபஹரித்தால் க்ஷமை கொள்ளுகைக்குப் பொறுத்தோம் என்பாரும் இல்லையே
குற்றம் நின்றே போம் அத்தனை

கலந்து குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -என்று கிரியை-
தஸ்யோ பவ நஷண்டேஷூ -இத்யாதி –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: