திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்

ஆண்டாளுக்கும் ஆழ்வாருக்கும் தசாரதாதிகளுக்கும் -குகாதிகளுக்கும் சத்ருக்களுக்கும் மனத்துக்கு இனியான் –
(பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஸ்ரீ ராமாவதாரம் -சார்ங்கம் உதைத்த 4- அவ்யக்தம்
இங்கு தென் இலங்கை கோமானைச் பெற்றவன் -பெயர் சொல்லாமலே -மேல் –22-தென் இலங்கை செற்றான் போற்றி
ஓங்கி -உம்பர் கோமான் –17-உலகம் அளந்தாய் போற்றி –
பத்து பத்தாக பிரித்து பார்த்து ஒவ் ஒன்றிலும் ஒரு தடவை இரண்டு அனுபவம் –
மத் சித்தா மத் கத பிராணா போத யந்த பரஸ்பரம் -திரு நெடும் தாண்டகம் மூன்று பத்தாக பிரித்து அனுபவிப்பது போல் இங்கும்
அனந்தலோ –9- பெரும் துயில் -10- இங்கு பேர் உறக்கம் -அவளைப் போல் கும்பகர்ணனை வென்று வாங்காமல் –
எல்லாமே சரணாகதி -ஸூவ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிவது -அவனே கொள்ளுவது பேர் உறக்கம் –
காம்பற தலை சிறைத்து -பரகத ஸ்வீ காரம் -தன்னேற்றம்
கீழே செல்வப்பெண்டாட்டி-பொற் கொடி யானவள் கோவலனைப் பற்றி அங்கு –
இங்கு நற் செல்வன் தங்காய் -அவன் உகப்புக்குக்காக செய்யும் கைங்கர்யமாகிய நற் செல்வம் –
அவனாகவே கைக்கொண்ட இவளது ஏற்றம்
கீழே செல்வம் -இங்கு நல் செல்வம் –
அது ஆஜ்ஜா கர்ம யோக ரூபா பகவத் ஆராதனம் –
இது அநு ஜ்ஜா விதி ப்ரேரித கைங்கர்யம் )

ஈராயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே இவனைக் காக்கைக்கு
இவனைப் பிரியாதே போகிறான் ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –
(இளைய பெருமாளைப் போலவும் நம்பி மூத்த பிரானைப் போலவும் உடையவரைப் போலவும்
உள்ள நற் செல்வன் -இப்பாசுரம் ஸ்ரீ பெரும் புதூரில் இரண்டு தடவை சேவிப்பார்களே )

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்—12-

சினத்தினால் மனத்துக்கு இனியான் -அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று

கனைத்து
கறப்பார் இல்லாமையால் -இவ்வகத்துக்கு கன்று காலியாய் நாம் பட்டதோ -என்று கூப்பிடா நிற்கும்
இளம் கற்று எருமை
இளம் கன்று பாடாற்றாமை

கன்றுக்கிரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே –
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

நினைத்து
கன்றை நினைத்து பாவனா ப்ரகரஷத்தாலே முலையிலே வாய் வைத்தது என்று
பால் சொரியா நிற்கும்

முலை வழியே
கை வழியே தவிர
நின்று பால் சோர
கேட்பார் அன்றியே இருக்க ஆற்றாமையால் பகவத் குணங்களை சொல்லுவாரைப் போலே –
மேகத்துக்கு கடலிலே முகந்து கொண்டு வர வேணும் –இவற்றுக்கு வேண்டா –

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியால் அகம் வெள்ளமிடும்-
அவற்றின் காலிலே துகையுண்டு சேறாகும்-
சேறாய் புகுர ஒண்கிறது இல்லை –

(மேல் பனி வெள்ளம்
கீழே பால் வெள்ளம்
நடுவில் மால் வெள்ளம்
உபய காவேரி வெள்ளம் -குண வெள்ளம் மூன்றையும் தவிர
பெரிய பெருமாள் திருக்கண்கள் கருணை வெள்ளம் தடுமாறாமல் இருக்கவே திரு மணத்தூண்கள்
இவர்கள் இவளது வாசல் கடை பற்றி -பாகவதர் பற்றி உஜ்ஜீவனம் நிச்சயம் அன்றோ )

நற் செல்வன்
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன –
தோற்றி மறையும் செல்வம் அன்று –
(யோகம் க்ஷேமம் வஹாம் அஹம் -கிடைக்காத கண்ணன் கிடைத்து மனத்தில் நிலைப்பது போல்
லஷ்மணன் ஊர்மிளை உடன் சேர்ந்து அக்னி கார்யம் செய்தால் அன்றோ இவனும் பால் கரப்பான் –
நித்யமாகவே கைங்கர்யம் இவர்களுக்கு-செல்வா பலதேவா -மேலே பார்ப்போம் – )
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -(6-7-2 )
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே (3-3-11 )-என்கிறபடியே இவனுடைய வைஷ்ணவ ஸ்ரீ இருந்தபடி –
சவ்மித்ரே புங்ஷவ போகாம் சத்வம் –

தங்காய்
குண ஹானிக்கு ராவணனைப் போலே –
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்னும்படி இக்குணத்திலே தஸ்ய அனுஜனைப் போலே –
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மானுடைய மகளான அனலைப் போலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் இல்லாத பிராட்டிக்குக் கைங்கர்யம் பண்ண உண்டு இறே அனலைக்கு –
(திரிஜடை -விபீஷணன் உடன் பிறந்தவள்
அநலா -பெண்
சரபா -மனைவி -மூவரையும் பிராட்டிக்கு கைங்கர்யம் செய்ய வைத்து அன்றோ வந்தான் )

பனித்தலை வீழ
மேலே பனி வெள்ளம் –
கீழே பால் வெள்ளம் இட
நடு மால் வெள்ளம் இட நின்று அலைந்து –

நின் வாசற்கடை பற்றிச்
தண்டியத்தைப் பற்றி நாலா நின்றோம் –
இத்தர்ம ஹானியை அறிகிறிலை-
இவர்கள் படும் அலமாப்புக் காண்போம் -என்று பேசாதே கிடக்க

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
பறைச் சேரி என்பாரைப் போலே பெருமாளோடே கூடி இருக்கிற பிராட்டியைப் பிரித்த
படு குலைக்காரன் இருக்கிற இடம் இறே

கோமானை
யத் அதர்மோ ந பலவான் -(ஸூந்தர –49 )-என்று திருவடி மதித்த ஐஸ்வர்யம்

செற்ற
ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –
தேரைத் தள்ளி –வில்லை முறித்து -படையைக் கொன்று -ஆயுதங்களை முறித்து –
தான் போலும் என்று எழுந்தான் -( 4-4-)-இத்யாதிப்படியே பின்னைத் தலையை அறுத்த படி –
(அஹோ ராத்ரி ஏழு நாள் யுத்தம் -இப்படி பயமுறுத்தி எப்பொழுதாவது அஹங்காரம் போய்
திருவடியில் விழுவானோ என்கிற நப்பாசை )

மனத்துக் கினியானைப்
வேண்டிற்றுப் பெறா விட்டால் -சொல்லாய் சீமானே-என்னுமா போலே

பாடவும் நீ வாய் திறவாய்
ராம வ்ருத்தாந்தம் கேட்டது உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

வாய் திறவாய்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டாவோ –
தங்கள் ஒரு தலைப் பற்ற வேண்டி இருக்கிறார்கள் –

இனித் தான்
எங்களுக்காக உணரா விட்டால் உனக்காக உணரவும் ஆகாதோ
சூர்ப்பணகி உள்ளிட்டார்க்கு உள்ள இரக்கமும் உன் பக்கலில் கண்டிலோமே

எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
எம்பெருமான் பரார்த்தமாக உணரும்
சம்சாரிகள் ஸ்வார்த்தமாக உணருவார்கள்
இது ஒருபடியும் அன்று –
ஆர்த்தி கேட்டு உணராது ஒழிவதே

பையத் துயின்ற பரமன் –
பகவதஸ் த்வராயை நம -என்னும்படி ஆர்த்தி கேட்டால்
அப்படி படுமவனோடே வர்த்தித்து இங்கனே கிடப்பதே

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-
உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்திராதது எல்லாரும் அறியும்படி யாய்த்து
இனி உணராய் –
ஊரார் அறியாதபடி பகவத் விஷயத்தை அனுபவிக்க வேணும் என்று இராதே கொள்

———————

நாலாயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே —
ஸ்ரீ நந்தகோபர் வ்ருத்தராகையாலும் –
நம்பி மூத்த பிரான் விலக்க மாட்டாதே அவன் வழியே போகையாலும் –
இவனைக் காக்கைக்கு இளைய பெருமாளை போலே இவனைப் பிரியாதே போகிறான்
ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்–12-

கனைத்து
இளைய பெருமாள் அக்னி காரியத்துக்கு உறுப்பாம் அன்று இறே இவன் எருமைகளை விட்டுக் கறப்பது –
தவிர்ந்தவனோடு செய்கிறவனோடு வாசி இல்லை –
இரண்டும் உபாயம் அன்று
யாது ஓன்று பேற்றை சாதித்துத் தருவது -அதுவே உபாயம்
அபிசாரத்தைப் பற்ற காம்யகர்மம் புண்யம் –
ஜ்யோதிஷ்டோமாதிக்கு பக்தி தன்னேற்றம்
எல்லாத்தையும் விட்டு என்னைப் பற்று என்றவன் அடைய த்யாஜ்யமாம்
ஜீயர் பிள்ளை திருநறையூர் அரையருக்கு அருளிச் செய்த வார்த்தை -விடுகையும் உபாயம் அல்ல -பற்றுகையும் உபாயம் அல்ல –
விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் -என்று
ந தேவலோகா க்ரமணம் –
பரித்யக்தா –இத்யாதிப் படியே ப்ராப்ய விரோதிகளிலே நசை அற்றபடி யாகவுமாம்

கனைத்து
கறப்பார் இல்லாமையால் -இவ்வகத்துக்கு கன்று காலியாய் நாம் பட்டதோ -என்று கூப்பிடா நிற்கும்

இளம் கற்று எருமை
இளம் கன்று பாடாற்றாமை

கன்றுக்கிரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே –
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

நினைத்து
கன்றை நினைத்து பாவனா ப்ரகரஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாய்க் கொண்டு பால் சொரியா நிற்கும்

முலை வழியே
கன்றின் வாய் வழியாதல் -கறக்கிறார் கை வழியாதல் அன்றிக்கே முலை வழியே

நின்று பால் சோர
கேட்பார் அன்றியே இருக்க ஆற்றாமையால்-விம்மலாலே- பகவத் குணங்களை சொல்லுவாரைப் போலே –
மேகத்துக்கு கடலிலே முகந்து கொண்டு வர வேணும் –இவற்றுக்கு வேண்டா –

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியால் அகம் வெள்ளமிடும்-அவற்றின் காலிலே துகையுண்டு சேறாகும்-சேறாய் புகுர ஒண்கிறது இல்லை என்ன
அளற்றுப் பொடியிட்டுப் புகுருங்கோள் -அவ்வளவு இன்றிக்கே மேலே மேலே வெள்ளம் இட்டதாகில் ஓடம் ஏறிப் புகுருங்கோள் –

நற்செல்வன்
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -தோற்றி மறையும் நற் செல்வம் அன்று -நிலை நின்ற சம்பத்து
சம்பன்ன –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே -என்கிறபடியே இவனுடைய வைஷ்ணவஸ்ரீ யாலே
ஜகத்துக்கள் அடைய வைஷ்ணவத்வம் உண்டாம் படி இருக்கை –
சவ்மித்ரே புங்ஷவ போகாம் சத்வம் –
யத் விநா பரதம் த்வாம் சத்ருக்நம் சாபி மாநந

தங்காய்
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்னுமா போலே
குண ஹானிக்கு ராவணனைப் போலே குணத்துக்கு அவனில் இவளுக்குத் தன்னேற்றம்-
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு மகளான த்ரிஜடை போலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் இல்லாத பிராட்டிக்குக் கைங்கர்யம் பண்ண உண்டு இறே இவளுக்கு –
அப்படியே இங்கு தமையன் கிருஷ்ணனுக்கு துணையாக திரிய இவள் நப்பின்னைப் பிராட்டிக்கு அடிமை செய்யப் பிறந்தவள் –

பனித்தலை வீழ
மேலே பனி வெள்ளம் -கீழே பால் வெள்ளம் இட நடு மால் வெள்ளம் இட நின்று அலைந்து –

நின் வாசற்கடை பற்றிச்
மேலப் படியையும் தண்டியத்தைப் பற்றி நாலா நின்றோம் –
இத்தர்ம ஹானியை அறிகிறிலை-என்கிறார்கள் –
இவர்கள் படும் அலமாப்புக் காண்போம் -என்று பேசாதே கிடக்க –
தீரா மாற்றமாக நெஞ்சாரல் பண்ணி முகம் காட்டாத கிருஷ்ணன் என்றால்
பெண்கள் சிவடக்கென்று இதொரு பித்து என்பார்கள் என்று பார்த்து
கிருஷ்ணனால் பட்ட நெஞ்சாரல் அடையத் தீர்ந்து நெஞ்சுள் குளிரும்படி பெண் பிறந்தார்க்கு தஞ்சமான
சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுவோம் -இவர்கள் எழுந்திருக்க என்கிறார்கள் –

சினத்தினால்
ஆஸ்ரிதர் கார்யம் செய்யாதானாய் இரான் கிருஷ்ணனைப் போலே இவன் தன் கார்யம் தானாய் இருக்கும் –
தான் தன் சீற்றத்தினை முடிக்கும் –
த்விஷ தன்னம் ந போக்த்வயம் –
ஆஸ்ரிதருடைய சத்ருக்களே தனக்கு சத்ருக்கள் –
பகவத் அபசாரம் பாகவத அபசாரம் என்று இரண்டு இல்லை போலே இருந்தது
மம பக்த பக்தேஷூ ப்ரீதிரப் லத்திகா ந்ருப -என்று ஆஸ்ரிதற்கு நல்லவர்கள் தனக்கு நல்லவர்கள் என்று இருக்கும்
மஹா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் -அவர் அழுத போது கூட அழுதார்
சஞ்ஜாத பாஷ்ப

தென்னிலங்கை
அவன் செய்த அநீதியை நினைத்து -பறைச் சேரி என்பாரைப் போலே-
அத்திக்கும் காண வேண்டாதே இருக்கிற படி
ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி
கொலைக் காரன் இருக்கிற இடம் இறே

கோமானை
யத்ய தரமோ ந பலவான் ஸ்யாதயம் ராஷேஸ்வர ஸ்யாதயம் ஸூரா லோகஸ்ய
ச சக்ரஸ் யாபி ரக்ஷிதா -என்று திருவடி மதித்த ஐஸ்வர்யம்

செற்ற
ஓர் அம்பாலே தலையைத் தள்ளிவிடாதே–மொட்டும் நெம்பும் பாறும் கலங்கும் படி –
தேரைத் தள்ளி –வில்லை முறித்து -படையைக் கொன்று -ஆயுதங்களை அறுத்து –
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் -என்று கிளர்ந்து எழுந்த அபிமானத்தையும் அழித்து-நெஞ்சாரல் படுத்தி
கச்சா நுஜா நாமி என்கிறபடியே படையைச் சிரைத்து விட்ட படியான எளிவரவு மூதலிக்கைக்கு
ஆள் இல்லையாம் என்று கொல்லாதே விட்டார் –
மாதங்க இவ –
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசா நாம் என்று – தஸ்யாபி சங்க்ரம்ய ரதம் ச சக்ரம் சாச்வத்வஜச்ச தர மஹா பதாகம்-
ச சாரதிம் சாஸ நி ஸூ ல கட்கம் ராம பிரசிச்சேத சரைஸ் ஸூ புங்கை
ச ஏவமுக்தோ ஹத தர்ப்பை ஹர்ஷ நிக்ருத்த சாப நிஹாதாஸ்வ ஸூ த சரார்த்தித க்ருத்த மஹா கிரீட விவேச லிங்கம் ஸஹஸா ச ராஜா –

மனத்துக் கினியானைப்
வேண்டிற்றுப் பெறா விட்டால் -சொல்லாய் சீமானே-என்னுமா போலே
வேம்பேயாக வளர்த்தாள்-என்னும் கிருஷ்ணன் அல்லவே –
பெண்களைக் கொன்று துடிக்க விட்டு வைத்துத் துளி கண்ண நீரும் விழ விடாதே நிற்கும் கிருஷ்ணனை ஒழிய
சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்

பாடவும் நீ வாய் திறவாய்
இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் -என்றத்தைக் கேட்டும் –
ராம வ்ருத்தாந்தம் கேட்டதும் – உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

வாய் திறவாய்
ப்ரீதிக்குப் போக்குவிட வேண்டாவோ -தங்கள் ஒருதலைப் பற்ற வேண்டி இருக்கிறார்கள் –
இனித் தான்
எங்களுக்காக உணரா விட்டால் உனக்காக உணரவும் ஆகாதோ
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கவல்லை யாவதே
அகம்பனன் சூர்ப்பணகை உள்ளிட்டார்க்கு உள்ள இரக்கமும் உன் பக்கலில் கண்டிலோமே

எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
எம்பெருமான் பரார்த்தமாக உணரும்
சம்சாரிகள் ஸ்வருத்தமாக உணருவார்கள்
இது ஒருபடியும் அன்று -ஆர்த்தி கேட்டு உணராது ஒழிவதே
கையத்துயின்ற பரமன் –
பகவதஸ் த்வராயை நம -என்னும்படி ஆர்த்தி கேட்டால் அப்படி படுமவனோடே வர்த்தித்து இங்கனே கிடப்பதே
அக்குணங்கள் தானே உன்னை உறங்குகிறதோ

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-
உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்திராதது ஒழிந்தாய்-என்கிற வேண்டற்பாடு எல்லாரும் அறியும்படி யாய்த்து-
அதுவும் செய்தது காண் -இனி உணராய் என்ன
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாத ஊரிலே பதினைந்து நாழிகையில் வந்து எல்லாரும் கேட்டு –
மனத்துக்கு இனியான் என்பது கிருஷ்ணன் என்பது எழுந்திராய் என்பதாய்க் கூப்பிட்டால் நம்மை என் சொல்வார்கள் என்ன
நீயாக நாங்கள் நாங்களாக வந்து போய் ப்ரஸித்தமாயிற்று இனி அத்தை விடாய் என்கிறார்கள்
ரஹஸ்யமாக பகவத் விஷயம் அனுபவிக்கும் அத்தனை ஒழிய புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று இருக்கிறாயாகில்
நீ பிறந்த பின்பு இது ஒரு வ்யவஸ்தை யுண்டோ
எல்லாரும் உன்னைப் போலே யாம்படி அது போய் ப்ரஸித்தமாயிற்றுக் கிடாய் என்றுமாம்
எம்பெருமானார் திரு அவதரித்ததால் போலே காணும் இந்த நாச்சியார் திரு அவதரித்த பின்பு
எல்லாரும் பகவத் விஷயம் அறிந்தது –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: