திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்

ஈராயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய்
ஊருக்கு ஒரு பெண்பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்
விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம் -ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம் )

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–11-

பிஞ்சாய் பழுத்தாள் போல் கன்றுகள் போல் இருக்கும் பசுக்கள்
கறவை -கறவைகள் -கறவைகள் கணம் -கறவைகள் கணங்கள் -கறவைக் கணங்கள் பல
கோவலர் -பன்மை -பலருக்கும் செல்வக் கொழுந்து இவள்
ஆயர் குலக் கொழுந்து அவன் -வேயர் குலக் கொழுந்து இவள் –
கோவலர் தம் பொற் கொடியே-பிறப்பு -அழகு -மதிப்பு மூன்று பெருமைகள்
புற்றரவல்குல் -அவயவ சோபை
புனமயிலே-லாவண்யம் -சமுதாய சோபை
செல்வப் பெண்டாட்டி-கண்ணனையே கையில் கொண்ட செல்வம் –
இவள் திருமாளிகையில் திரு முற்றம் அனைவருக்கும் இடம் கொடுக்கும்
அனைவருக்கும் -செல்வம் போன்றவள் –
சிற்றாதே-அசையாமல் –
பாகவத ஈட்டம் இல்லாமல் அவனைக் கொண்டாலும் அசன்நேவ பொருள் அல்லவே –

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
(வா -முன் அழகு சேவித்து -போகு -பின் அழகு சேவித்து -இத்யாதி -வயஸ்ஸூ கீழ் நோக்கி போனால் போல்
கன்றுகளைப் பிரியாதே இருக்கும் கறவைகள் என்றுமாம் )
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –

கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்–(திரு நெடும் தாண்டகம் -16-இவனும் கரியான் ஒரு காளை )என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி 10-3-10 -என்றும் –
(உகந்த -மாடுகள் இடம் -இனிது உகந்த இங்கு
பிரதமம்-நித்ய ஸூரிகள் ரக்ஷணம் மத்யமம்-பசுக்கள் ரக்ஷணம் சரமம் -கன்றுகள் ரக்ஷணம் )
நித்ய ஸூரி களிலும் பசு மேய்க்க உகக்கும்

அவன் சரணாகத வத்சலன் ஆனால் சரணாகத வத்சலமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா (நிழல் போல் பெருமாளைத் தொடர்ந்து போவது போல் இவனும் இவற்றின் பின் போவான் )
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போல் -( 7-1-1-)
சரணாகத வத்சலா (சீதாபிராட்டி ராவணனுக்கு உபதேசம் )
த்வயி கிஞ்சித் கிம் கார்யம் சீதையா மம (சுக்ரீவன் ராவணன் கிரீடம் பிடுங்கி வந்ததும் பெருமாள் வார்த்தை
(சுக்ரீவனுக்கு கொஞ்சம் அவமரியாதை கூட பொறுக்க ஒண்ணாதவன் -யுத்தம் -41-4–
எனது சரீரத்தாலும் பிரயோஜனம் இல்லை -வாத்சல்யம் )

கணங்கள் பல
நம்முடைய அனாத்மா குணங்களுக்கும்
அவனுடைய ஞான சக்த்யாதி குணங்களும் –
(அசங்க்யேய நிஸ்ஸீம நிரவதிக நிரதிசய கல்யாண குண கணங்கள் )
நார சப்தத்தில் சொன்ன நாரங்களினுடைய சமூகமானாலும் எண்ணலாம்
இவை எண்ணப் போகாது –
ரத குஞ்ஜர வாஜிமாந் (தேர் யானை குதிரைப்படைகள் )-என்னுமா போலே

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –
(நித்யோ நித்யானாம் ஏகோ பஹுனாம் -இத்யாதி –
பர ப்ரஹ்மம் பரமாத்மா பரஞ்சோதி ஒருவனாய் செய்வது போல் )

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம்ப்ராப்த -(சத்ருக்கள் பக்கல் வந்த விபீஷணன் -)என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

திறலழியச்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –

குற்றமொன்றில்லாத
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே
கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

கோவலர் தம் பொற் கொடியே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை
(கர்ம யோக நிஷ்டர் ஜனக மஹா ராஜர் போல் இந்த கோவலர்
ஞான யோகத்தால் ஜட பரதர் -பக்தி யோகத்தால் -பிரகலாதன் )

பொற்கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்
கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ –
எங்களோடு கூடி நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் (திருவாய் -10-10-3-)

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை-
இத்தனை சொல்லலாமோ என்னில்
பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத்யஸ் தா பும்பாவம் மனசா யயு -என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே
(ஆடவர் பெண்ணினை அளாவும் தோளினான் -இடை அழகு ஆசை சுருங்கி வைராக்யம் மிக்கு –
கண் -ஞானம் -முலை -பக்தி )

புன மயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் –
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல அனகபாரத்தை உடையளாய் இருக்கை
(அனகபாரம் குழல் -வாசனை -கந்தம் -சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டை )

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்கப் பண்ணாய் என்கை
(பெருமாள் நுழைந்ததும் ரிஷிகள் ஆனந்தப்பட்டால் போல் )

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன
உத்தரம் தீரமா ஸாத்ய (விபீஷணன் வந்து ஆகாசத்தில் நின்றால் போல் )-என்னும்படியே
எல்லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர் (பெரிய திருமொழி -10-8-5)-என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து -(நாச்சியார் )-என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு பிராப்யம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன
(அரங்கன் திரு முற்றம் போல்
நீணிலா முற்றம் போல் –
திருக்கோவலூர் இடைகழி முற்றம் போல் )

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட –
நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற –
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட –
உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே-உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
கைவல்ய மோக்ஷம் போலே தனி கிடக்கிற கார்யம் அன்றே -என்று –
(அந்தமில் பேர் இன்பத்து அடியவரோடு இருந்தமை வேண்டாவோ )

——————————————-

நாலாயிரப்படி-அவதாரிகை –
கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய் ஊருக்கு ஒரு பெண்பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
அரியதைச் செய்ய வல்ல குடியிலே பிறந்து வைத்து அரியதைச் செய்யாதே கொள் -என்கிறார்கள்
எளியராக வேண்டும் இடத்திலே அரியராக ஒண்ணாதே –

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–11-

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-
அவர்கள் இப்படி இருக்கிறது எம்பெருமானை அனுபவித்து அன்றோ
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
ஸ்பர்சத்தால் வந்த தன்னேற்றம் பார்த்துக் கொள்ளுவது –
திருவாய்ப்பாடியிலே கன்றுகளுக்கு வாசி தெரியாது -பசுக்களுக்கும் வாசி தெரியாது

கற்றுக் கறவை –
பவாமி த்ருஷ்ட்வா ச புனர்யுயேவா
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –
கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும் –
நித்ய ஸூரி களிலும் பசு மேய்க்க உகக்கும்
கன்று மேய்க்கப் போனால் பசுக்களும் நித்ய ஸூரிகளோடு ஓக்க தள்ளுண்ணும் அத்தனை
பசு மேய்க்க உகக்கும் –
கன்று மேய்க்க இனிது உகக்கும் –
அதாவது ஸ்வ ரக்ஷணத்திலே அந்வயம் இல்லாதவரை இனிது உகக்கும் என்றபடி

காளாய்
அவை இளகிப் பதிக்கத் தானும் இளகிப் பாதிக்கும்
யா பூர்வ்யாய வேதஸே நவீயசே ஸூமஜ் ஜாநயே விஷ்ணவே ததாசதி —
யோ ஜாநமஸ்ய மஹதோ மஹிப்ரவத் சேது ஸ்ரவோபிர் யுஜ்யம் சிதப் யசத் –
மைந்தனை மலராள் மணவாளனை –
அவன் சரணாகத வத்சலன் ஆனால் சரணாகத வத்சலாமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்துவம் அநு கச்சேத்
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போலே மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
அபித்வா ஸூர நோநுமோ துக்தா இவ தேநவ
சரணாகத வத்சலா
கன்று இடுகின்ற முன்னாள் கோ மூத்ரமாதல் சாணமாதல் புல்லிலே பதில் மோந்து பார்த்து காற்கடைக் கொள்ளும் –
பிற்றை நாள் கன்றிடில் அக்கன்று சாணத்திலும் கூ மூத்ரத்திலும் புரண்டாலும் அது தன்னையே போக்யமாகக் கொண்டு நக்கா நிற்கும்
முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலே சூடும்
த்வயி கிஞ்சித் சமா பெண்ணே கிம் கார்யம் சீதயா மம
அபாயம் சர்வ பூதேப்யோ தாதாமி

கணங்கள் பல –
தாரா என்னுமா போலே ஸமூஹங்கள் பல வென்னும் அத்தனை

பல
நார சப்தத்தில் நாரங்களினுடைய ஸமூஹங்களையும் அஸந்கயாதமான பகவத் குணங்களையும்
அவற்றையும் கூட வெல்லும்படி
மலிவான நம்முடைய அநாத்ம குணங்களையும் எண்ணிலும் எண்ணப் போகாது
சொல்லும் போது ரத குஞ்ஜர வாஜிமாந் -என்றால் போலே பல வென்னும் அத்தனை
கழியாரும் கன சங்கம் இத்யாதி

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம்ப்ராப்த -என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

திறலழியச்
சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி எலும்பைப் பூண்டு திரியும் ருத்ரனும் –
ஒத்துப் போம் ப்ரஹ்மாவும்
அந்நிய பரனாய் இருக்கிற எம்பெருமானும்
சாது இந்திரனும் எனக்கு எதிரே என்று இருக்கும்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபி யாதா ப்ரஹர்த்தா ச

சென்று
சக்ரவர்த்தித் திருமகனைப் போலே ஊராகச் சக்ரவர்த்தி திருமகனோடு ஒப்பார்கள் வீரத்துக்கு –

சென்று செருச் செய்கை எங்கே கண்டோம் என்னில் –
பசு மேய்க்கிறார் இரண்டு இடையர் குவலயா பீடத்தின் கொம்பைப் பிடுங்கி
விளையாடா நின்றார்கள் என்று கண்டோம் இறே

குற்றமொன்றில்லாத
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
இப்படி அழியச் செய்தார்கள் என்று எம்பெருமானுக்கு முறைப் பட்டால்
செய்தாரேல் நன்று செய்தார் என்னும்படி பிறந்தவர்கள் என்னவுமாம்
சாது ரேவ ச மந்தவ்ய
தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -பகவத் அனுபவமே தேஹ யாத்ரையாய் இருப்பார்க்கு
அநீதிக்குப் பெரு நிலை நிற்கும் –
வஸ்திர அன்ன பானாதிகளோடே ஓக்க பகவத் குணங்களும் கலசி தாரகமாய் இருப்பார்க்கு அநீதி பொறுக்கும்
அல்லாதார் அநீதி எம்பெருமானுக்கு அஸஹ்ய மாய் இருக்கும்
நிரதோஷம் வித்தி தம் ஐந்தும் பிரபாவாத் பரமாத்மந
பகவத் விஷயத்தில் ஓரடி புகுரா நிற்கை இறே ஒருவனுக்கு ஸூத்தி யாவது என்கை –
ஆஸ்ரிதருடைய தோஷத்தை கடலுக்குத் தொடுத்த அம்பை மிருகாந்தரத்திலே விட்டால் போலே அசல் பிளந்து ஏற்றல்
பகதத்தனுடைய அம்பை மார்விலே ஏற்றால் போலே தான் அனுபவித்தல் –
அது தன்னையே புண்யமாகக் கொள்ளுதல் செய்யுமவன்

குற்றம் ஓன்று இல்லாத
அத்தியைவ த்வாம் ஹ நிஷ்யாமி/ ஹந்யா மஹாம்யமாம் பாபாம்-என்று சொல்லுகிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை
அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

கோவலர் தம் பொற் கொடியே
ஜனகா நாம் குல கீர்த்தி மாஹரிஷ்யதி மே ஸூ தா -என்னுமா போலே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை

பொற்கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்
கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ –
எங்களோடு-பெண்களோடு – கூடிக் கொண்டு நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை
இத்தனை சொல்லலாமோ என்னில் பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத் யஸ்தா பும்பாவம் மனசா யயு -என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே –
ஆண்களை பெண்களாக்கும் இவள் பெண்களை ஆண்களாக்கும்

புனமயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் -கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
அனகபாரத்தை உடையளாய் இருக்கை

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்கப்-உள் தளிர்க்கப் பண்ணாய் என்கை –

போதராய்
உன்னுடைய அழகைக் காட்டி எங்களை உண்டாக்காய்

இத்தால் சொல்லிற்று ஆயத்து பகவத் ஸ்பர்சம் உடையாருடைய
தேஹ குணத்தோடு
ஆத்ம குணத்தோடு வாசியற எல்லாம் ஆகர்ஷகமாய் இருக்கிறது என்கிறது –

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன
உத்தரம் தீரமா ஸாத்ய -என்னும்படியே எல்லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர் -என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து -என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு பிறப்பியம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட -நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

சிற்றாதே
முகில் வண்ணன் என்றவாறே வடிவை நினைத்து விடாய் கெட பேசாதே கிடந்தாள்

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே–உன் கைங்கர்யம் -உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
இவ்வளவும் வந்தார்க்கு தனித்து பகவத் அனுபவம் பண்ணுவது குடிப் பழி
எனக்கு இங்கே கூடு பூரித்து இருந்ததோ என்ன இல்லையாகில் எங்கள் பாடு புறப்படாதே
கைவல்ய மோக்ஷம் போலே தனிக் கிடக்கிற கார்யம் என் -என்கிறார்கள் என்றுமாம் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: