திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்

(இந்த்ர லோகம் ஆளும் -ஸ்ரீ வைகுண்டம் போல் இங்கும் ஸ்வர்க்க சப்தம்
ஸ்ரீ வைகுண்ட வாசல் நுழையும் -திருநாளாக அமைந்ததே
அஷ்ட புஜ பெருமாள் கோயிலில் மட்டும் திருக்காஞ்சியில் )

ஈராயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணனுக்கு அசலகமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒரு போகியாக
அனுபவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
(நித்ய விபூதிக்கு தானே கூட்டிச் செல்வான்
ஸித்த உபாயமே நமக்கு என்று -நாம் பற்றினோம் என்ற எண்ணமும் இல்லாதவள் )

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-கதவை திறக்கா விட்டாலும் பதில் வார்த்தை பேசக் கூடாதோ
போற்றப் பறை -போற்றுவதே பறை -கைங்கர்யமே நமக்கு கர்தவ்யம்
புண்ணியன் -நாராயணன் இங்கு -பின்பு கோவிந்தனை புண்ணியம் யாம் உடையோம் –
நீயே அவதரித்து வந்து அருளினாய் -கிருஷ்ணன் தர்மம் சனாதானம்
ஆற்ற வனந்தல் சரணாகதியே அழகான தூக்கம் -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை –
மார்பிலே கை வைத்து -ஸ்வாமி சொத்தைக் கொள்வானே -வாழும் சாம்பாரை உகத்தி போலும்
உபாயமாக ஒன்றுமே செய்யாமல் சர்வ கைங்கர்யங்களும் செய்ய வேண்டுமே –

நோற்றுச் –
சித்த சாதனை -இவனுடையவும் தன்னுடையவும் ஸ்வரூபங்களை யுணர்ந்தால்
யத்னம் பண்ண பிராப்தி இல்லை –
நாராயணனே நமக்கே பறை தருவான் (1) -என்கிறபடியே அவன் தலையிலே பாரத்தைப் பொகட்டோமாகில் –
நமக்கு நீரிலே புக்கு முழுக வேணுமோ -என்று இருக்கிறாள் இவள்
உபேயத்துக்கு அன்றோ உபாயம் –
சித்த உபாய நிஷ்டர்க்கு விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்யத்தில் த்வரை இல்லாதார் சேதனர் என்று இருக்கிறார்கள் அல்லர் –
(புருடன் மணி வரமாக -கௌஸ்துபம் -பரமாத்மா தானே ஜீவனை கூட்டிக் கொண்டு அனுபவிப்பான் அன்றோ )

அம்மனாய் –
ரஷ்ய ரஷக பாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது -அழகிதாக நிர்வாஹகையானாய்

சுவர்க்கம் புகுகின்ற
ஸூகம் அனுபவிக்கை –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்க —
(சீதா பிராட்டி பெருமாள் இடம் ஸ்வர்க்கம் யார் அபிப்ராயத்தாலே என்றாளே
உன்னைப் பிரிந்தால் நாடே சுடுமே )
நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் —
(ஸூ ந்தர –31-திருவடி பேச பிராட்டி மதுரம் வாக்கியம் என்றாளே -செவிக்கு இனிய செஞ்சொல் )
பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

அம்மனாய் –
என்பதே -தங்கள் அடியேனாய் இருக்கிற என்னை –என்று பேசாதே இருந்தால் ஆகவுமாம்
ப்ரஹர் ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன -என்று ப்ரீதியாலே விக்கிப் பேசாதே இருக்கிறாள் ஆகவுமாம்-
(பாகவத சம்பந்தம் கிட்டிற்றே நமக்கு கிருஷ்ண அனுபவம் சித்தம் என்ற ஆனந்தம் ப்ரீதி மண்டுமே
இனிமை
குற்றம்
தலைவி என்பதே
இவர்கள் வாய்ந்ததே இப்படி நான்கு காரணங்கள் )
இவர்கள் பொறுக்க மாட்டாமை

மாற்றமும் தாராரோ –
என்கிறார்கள் -ஏதேனும் ஒருபடியால் இவள் பேச்சே அமையும் இவர்களுக்கு
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளால்- (பெரிய திருமொழி -2-7-2 ) -என்கிறபடியே
இவளுடைய பேச்சு உஜ்ஜீவனமாய் தாரகமாய் இறே இருப்பது
தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்தத்தில்
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே
இவர்களுக்கு இவள் பேச்சு
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ
மதுரா மதுரா லாபா கிமாஹ மம பாமிநீ இறே அங்கு செல்லுகிறது –
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –
(சீதை என்ன சொன்னாள் அங்கு பெருமாள் கேட்டார் -இவர்களுக்கு இவள் வார்த்தை கேட்க பிரார்தனை )

நீங்கள் பழி இடுகிறது என் -இங்கு அவன் உண்டோ என்ன
வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி –
மாளிகைச் சாந்து உன்னால் ஒளிக்கப் போமோ
அந்தியம் போதே வாசலைக் கைக் கொண்டீர்கள் -அவனுக்கு புகுர வழி யுண்டோ -என்ன

நாராயணன் –
அவனுக்கு எங்களை போலே கதவு திறக்கப் பார்க்க வேணுமோ –
புறப்படுகைக்கு வழி தேடும் அத்தனை அன்றோ

நம்மால்-
வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்

போற்றப்
குடிப் பிறப்பால் வந்தது –
உபாயம் அல்ல

பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் –
நாராயணன் அன்றோ பறை தரும் -என்றுமாம்

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சநாதநம்

புண்ணியனால் பண்டொருநாள்
*ராமோ விக்ரஹவான் தர்ம )
முன்பும் உன்னைப் போலே ஒருத்தன் உண்டு காண் -உணராதே படுத்தினான் என்கை –

புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கொடுவினைப் படைகள் வல்லையாய்-(9-2-10)
ததோ ராமோ மஹா தேஜா -என்று
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறுகைக்கு உள்ள அருமை
(அந்த ராமனுக்கு அது வரை கோபம் வரவில்லை -திருவடி அடி பட்டவாறே கோப வஸ்யம் ஆனார் )

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் –
நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்

தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஸ்ரீ பரசுராமன் கையில் வில்லை சக்கரவர்த்தி திருமகன் வென்று வாங்கினால் போலே
கும்ப கர்ணன் நித்திரையை வென்று வாங்கிக் கொண்டாயோ –
(தேவர்கள் இல்லாமை -நிர்த் தேவத்வம் –கேட்க வந்தவன் -நிர்த்தார்த்தம் தப்பாக -கேட்டு தூக்கம் வரம் பெற்றான் )

ஆற்ற வனந்தல் உடையாய் –
இனி கிடங்கில் த்ரோஹிகள் ஆவுதோம்-என்று அஞ்சிப் புறப்பட்டு முகம் காட்டுவோம்
என்று உணர்ந்தபடி தெரிய
கிருஷ்ண கிருஷ்ண -என்றாள்-
நீ உணரும்படி கண்டு வாழ அமையாதா-

அருங்கலமே-
இனித் தெளிவு கண்டு அனுபவிக்க வேணும் –
ஹாரத்தைப் பண்ணினால் -அதுக்கு கல் அழுத்த வேண்டாவோ –
இக் கோஷ்ட்டியை சநாதம் ஆக்காய்-என்றவாறே பதறிப் புறப்படப் புக

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
மேலில் நிலங்களில் நின்றும் தடுமாறி விழாதே தெளிந்து திற
சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதி வத்
(தாரை பரபரத்து வந்தாளே )

—————————–

நாலாயிரப்படி -அவதாரிகை –
கிருஷ்ணனுக்கு அசலகமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒரு போகியாக
அனுபவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-10-

நோற்றுச் –
நோற்கக் கடவ நோன்பும் இவ்விரவிலே நோற்று நோன்பின் பலமான கிருஷ்ணனாகிற
சுவர்க்கமும் உன் கை புகுந்தது ஆகாதே செல்லுகிறது
கிருஷ்ணன் தர்மம் சநாதநம் -என்னுமா போலே
ஆபாச தர்மங்கள் இவளுக்கு அஞ்சிக் கைவிட்டது அத்தனை இறே
இவளுக்கு சாதனமான தர்மம் எம்பெருமானே இறே –

சாதன அனுஷ்டானம் பண்ணாதே இவனே உபாயம் என்று அறுதியிட்டால் பழத்தில் அந்வயிக்கும் அத்தனை இறே
அவனுடைய ஸ்வரூபம் உணர்ந்தார்க்கு யத்னம் பண்ண பிராப்தி இல்லை –
ப்ராப்தியினுடைய சீர்மையை உணர்ந்தார்க்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை
இதர உபாயங்களுக்கும் அவனே வேண்டுகையாலே யத்னம் பண்ண பிராப்தி இல்லை என்று இருந்தாள்
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா –
செய்த வேள்வியர் –
யே ச வேத விதோ விப்ரா –
ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேந பாரத
க்ருதக்ருத்யா -ப்ரதீ ஷந்தே
ரஷ்ய ரஷக பாவம் வியவசிதமானால் ஞானமே இறே வேண்டுவது

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே அவன் தலையிலே பாரத்தைப் பொகட்டோமாகில் –
நமக்கு நீரிலே புக்கு முழுக வேணுமோ -என்று இருக்கிறாள் இவள் –
இவர்களுக்கு உபாயம் என்கிற சப்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கலாமோ
உபேயத்துக்கு அன்றோ உபாயம் -சித்த உபாய நிஷ்டர்க்கு விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்யத்தில் த்வரை இல்லாதார் சேதனர் என்று இருக்கிறார்கள் அல்லர் –
சித்த உபாய நிஷ்டர்க்கு கர்மம் கைங்கர்யத்தில் புக்குப் போம் –

ஞானம் ஸ்வரூபத்திலே புக்குப் போம் –
பக்தி ப்ராப்ய ருசியில் புக்குப் போம்
பேசாதே இருக்க உபாயம் உண்டோ –
சிலர் முழுகி நோற்கவும் சிலர் பலம் அனுபவிப்பதாயேயாய் இருப்பது –
அழகியதாய் இருந்தது உன்படி -என்கிறார்கள் அவர்கள் கிருஷணனோடு பலம் புக்கு இருக்கிலும்
இக் கோஷ்ட்டியில் உள்ளார்க்குத் தனியே அனுபவிக்கை கைவல்யத்தோபாதி குடிப் பழி –

அம்மனாய் –
ரஷ்ய ரஷக பாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது -அழகிதாக நிர்வாஹகையானாய்

சுவர்க்கம் புகுகின்ற
ஸூகம் அனுபவிக்கை -யஸ்த்வயா ஸஹ ச ஸ்வர்க்க —
நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
அனுபவிப்பார் அனுபவிப்பது இடையும் முலையும் ஒழியவோ-
இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் –பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

இவர்கள் பொறுக்க மாட்டாமை -பாடு ஆற்றாமை
மாற்றமும் தாராரோ –
என்கிறார்கள் -ஏதேனும் ஒருபடியால் இவள் பேச்சே அமையும் இவர்களுக்கு
படுகொலை யடித்தால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர் இடவும் ஆகாதோ
வாசலைச் செம்பினால் வாயையும் செம்ம வேணுமோ
துளம்படு முறுவல் -இவர்கள் ஜீவனம் –
ஆசயா யதி வா ராம புநஸ் சப்தா பயேதி தி –
இவர்களுக்குப் புகுருங்கோள்-என்னவுமாம் –
போங்கோள் என்னவுமாம் –
தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்த மத்யத்திலே –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே இவர்களுக்கு இவள் பேச்சு
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ
மதுரா மதுரா லா
நீயும் அவனும் வாழ்ந்து எங்களுக்குப் பரிவட்டம் தருகிறபடியோ இது
நாங்கள் செய்தபடி செய்ய உன் ப்ரீதிக்குப் போக்குவிட்டு தரிக்க வேண்டாவோ
ஸூ க மாஸ்ஸ்வ
ரமஸ்வ ச
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –

நீங்கள் பழி இடுகிறது என் -இங்கு அவன் உண்டோ என்ன
நாற்றத் துழாய் முடி –
உன்னைப் போலே புறப்படாத தத்துவமோ அவன் சூடின தத்வம்
விரை குழுவு நறும் துளவம்
மாளிகைச் சாந்து உன்னால் ஒளிக்கப் போமோ -என்ன –
அந்தியம் போதே வாசலைக் கைக் கொண்டீர்கள் -அவனுக்கு புகுர வழி யுண்டோ -என்ன

நாராயணன் –
அவனுக்கு எங்களை போலே கதவு திறக்கப் பார்க்க வேணுமோ–
புகுகிற வழி தேட வேணுமோ -புறப்படுகைக்கு வழி தேடும் அத்தனை அன்றோ
விடாதார்க்குப் பேர் அன்றோ இது -யுகாவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ -நீ விலக்கிடாய்
பதிம் விஸ்வஸ்ய என்று அவன் அழகிதாகப் பொதுவாய் இருந்தான் –
நாராயண தத்துவத்துக்கு இன்று தொடங்கி நமஸ்காரம்
கௌசல்யா லோக பர்த்தாரம்-
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று துணிந்தார்க்கு இப்படியோ-
ரக்ஷகனாக வேண்டாவோ -பறை தரும் என்று க்ஷேபம்

நம்மால்-
வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்

போற்றப்
குடிப் பிறப்பால் வந்தது -உபாயம் அல்ல

பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் –
நாராயணன் அன்றோ -போற்றாதார் பாடும் புக்கு இருக்கிறவன் அன்றோ -தரும் என்னவுமாம்

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சநாதநம் –
புண்ணியன் ஆகையாவது –
சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –
உன்படிகள் அழகிதாய் இருந்தது -என்ன –
பின்னையும் அவன் பாசுரமாக ஓன்று பிறக்கக் காணாமையாலே அவனை விட்டு
இவள் நம்மில் ஒருத்தியாய் ஓக்க நோன்பு நோற்று ஓக்க அனுபவிக்க இருந்து
நம் திறத்தில் செய்தபடி செல்லாதே மாற்றாராய்ச் செல்வதே –
என்று போம் -என்று அவள் வாய் திறவாதே கிடக்க
உறக்கத்துக்குக் கும்ப கர்ணனையும் ஜெயித்ததாய் இருந்ததீ -என்கிறார்கள் –

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்
இடைப்பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்கள் ஆர்த்திகள் ஆகையாவது போற்றுகை போலே

புண்ணியனால் பண்டொருநாள் கூட்டத்தின் வாய் வீழ்ந்த
எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் –
விளக்கு வீட்டில் போலேயும் சாவுகை

பண்டு ஒரு நாள் –
முன்பும் உன்னைப் போலே ஒருத்தன் உண்டு காண் -உணராதே படுத்தினான் என்கை –

புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
கொடுவினைப் படைகள் வல்லையாய்-
ததோ ராமோ மஹா தேஜா -என்று நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறுகைக்கு உள்ள அருமை

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் -நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஸ்ரீ பரசுராமன் கையில் வில்லை சக்கரவர்த்தி திருமகன் வென்று வாங்கினால் போலே
கும்ப கர்ணன் நித்திரையை வென்று வாங்கிக் கொண்டாயோ –

ஆற்ற வனந்தல் உடையாய் –
இனி கிடங்கில் த்ரோஹிகள் ஆவுதோம்-என்று அஞ்சிப் புறப்பட்டு முகம் காட்டுவோம் என்று உணர்ந்தபடி தெரிய
கிருஷ்ண கிருஷ்ண -என்றாள்-எங்களுக்கு அங்கே போய்த் துயில் எழப் பாட வேணுமோ
நீ உணரும்படி கண்டு வாழ அமையாதா-

அருங்கலமே-
இனித் தெளிவு கண்டு அனுபவிக்க வேணும் -ஹாரத்தைப் பண்ணினால் -அதுக்கு கல் அழுத்த வேண்டாவோ –
இக் கோஷ்ட்டியை சநாதம் ஆக்காய்-என்றவாறே பதறிப் புறப்படப் புக

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
மேலில் நிலங்களில் நின்றும் தடுமாறி-தள்ளம் பாறி – விழாதே தெளிந்து திற –
ஊராகத் திரண்டு வந்து கிடக்கிறது -படுக்கையிலே கிடந்தபடியே வராதே -சதஸ்யை யாய்த் திற -என்றுமாம் –

அரும் கலமே
எம்பெருமானாரைப் போலே –
மஹாதா தபஸா -பெறலாமவள் அல்லள்-
தானே தன்னைப் பெறுமத்தனை-ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலே

தேற்றம்
சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதி வத்-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: