-திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -தூ மணி மாடத்து– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -தூ மணி -நாம் சரணாகதி செய்து அவன் ஆனந்தமயன் என்று அறிகிறோம்
ஏஷ ஹ்யா -அவனே நம்மைப் பற்றி ஆனந்தம் ஊட்டுவது அடுத்த பாசுரம் –

ஈராயிரப்படி -அவதாரிகை
கீழில் பாட்டில் முக்தர் படி போலே இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப்பாட்டில் நித்ய முக்தர் படியே இருப்பார் ஒருத்தியை எழுப்புகிறது –
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்
இட்டவிடத்தே இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே –
(கோது காலமுடைய பாவாயுக்கும் மாமன் மக்களுக்கும் வாசி
நிவ்ருத்தி மார்க்கம் இவளது )

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

தூ மணி மாடத்து -தூய்மையான ரத்னங்களால் -சமைக்கப் பட்ட
ஏமப் பட்டாளோ-காவல் உண்டோ
மந்தரப் பட்டாளோ–
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று–ஸுலப்ய -ஸ்ரீயப்பதித்தவ பரத்வ-சஹஸ்ர நாமங்கள்

தூ மணி மாடம்
துவளில் மா மணி மாடம்-(6-5-1-) -என்று குந்தமுண்டாய் (குற்றமுண்டாய்) எடுத்துக் கழிக்க வேண்டாதே
எல்லா நன்மையுமுடைய மணிகளால் செய்த மாடம்
அது முக்தனுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே –
இது அவனுடைய அபஹத பாப்மாத்வாதிகள் போலே –
திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கழித்தவை கொண்டு செய்தது –
அந்தப்புரத்துக்கு நல்லது இட்டுச் செய்து அங்கு கழிந்தது இறே தந்தாமுக்கு மாளிகை செய்வது

சுற்றும் விளக்கெரியத்
தானுறுமாகில் நோற்று வருகிறான் -என்று இருக்கிறவள் இவள் –
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நின்றது என்கை
ப்ரகாசத்துக்கு பிரகாசம் வேண்டாமையாலே விளக்கு மங்களார்த்தம்
புறம்புள்ள விளக்குகள் புகையா நிற்க என்றுமாம் –

தூபம் கமழத்
பரிமளம் ஸஹ்யமான படி எங்கனே தான் இவளுக்கு –
சீருற்ற வகில் புகை -(மாலைப்பூசல் மல்லிகை கமழ் -9-9-7)-இத்யாதிப்படியே இறே அவர்களுக்குச் செல்லுகிறது
புகை யுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ (சீர் உற்ற என்றதும் விளக்கம் )

துயில் அணை மேல்
மென் மலர்ப் பள்ளி வெம்பள்ளியாய் இறே (9-9-4-) இவர்களுக்கு இருக்கிறது –
இருவருக்குப் படுத்த படுக்கையிலே ஒருவருக்கு படுக்க -உறங்கப் -போமோ

கண் வளரும்
இளைய பெருமாளை போலே உறங்காமைக்குத் தாங்களும்
உறங்குகைக்கும் நீயுமாயிற்றே -என்கிறார்கள்

கண் வளரும்
இங்கனே யாகாதே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவது
படுத்த பைந்நாகணை இத்யாதிப்படியே (திருப்பல்லாண்டு -9-) தமப்பனார் பகவத் விஷயத்தில் சொல்லுவது எல்லாம்
ததீய விஷயத்திலே சொல்லுகிறாள் ( இவர்களும் மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் )

மாமன் மகளே –
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவை சம்பாதிக்கிறான்
(அகஸ்ய ப்ராதர் போல் -பேர் சொல்ல வேண்டாம் )

மணிக்கதவம் -தாள் திறவாய்-
எங்களுக்கு கதவும் சுவரும் தெரிகிறது இல்லை –
நீயே திற -என்கிறார்கள்
தேசிகர்க்கு அல்லது தாள் திறக்கத் தெரியாது என்கை
(ஆச்சார்யர் வழி காட்ட அன்றோ -அர்ச்சகர் மூலமாகவே கர்ப்ப க்ரஹம் செல்கிறோம் )

மாமீர்
அடியார் தம் அடியார் (3-7)
தொண்டர் தொண்டர் (7-1 )-என்று ஆழ்வாருடைய பாகவத சேஷத்வத்தில் எல்லை போலே
இவர்களும் இவளுடைய திருத் தாயாரான இவளை உறவாகச் சொல்லி தரிக்கிறார்கள்

அவளை எழுப்பீரோ
நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள் –
அவளை இவர்களுக்குத் தோற்றமோ என்னில் மாளிகையிலே தெளிவாலே தோற்றும்
தாயார் பாவஞ்ஜை யாகையாலே எழுப்பாள் -ஆகையால்

உன் மகள் தான்-ஊமையோ -என்கிறார்கள்

அன்றிக்கே
அன்றிச் செவிடோ
நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்நிய பரையானாளோ

வனந்தலோ
இரவு எல்லாம் கிருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது

ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
ஆர்த்த நாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு உணராதபடி உறங்குகைக்கு யாரேனும் மந்தரித்தார் உளரோ –
மந்த்ரம் இவளுக்கு பிரசித்தம் இறே
(ரஹஸ்ய த்ரயங்கள் -நமஸ் சபிதார்த்தம் அறிந்தவள் )
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ (நாச்சியார் )-என்று மாயப்பொடி தூவினார் உண்டோ -என்கை

மாமாயன்
பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்
(அடக்கமாய் -இஷ்ட விநியோக அர்ஹனாய் இருப்பானே )

மாதவன்
அதுக்கு குருகுல வாசம் பண்ணினவிடம்

வைகுந்தன்
பெண்களோடு ஓக்க ஆண்களை அடிமை கொள்ளுமவன்

என்றென்று-நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்–
மேன்மைக்கும் நீர்மைக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -என்கிறார்கள்

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ -என்று கிரியையாகவுமாம் –
(மடக்கிளியை கை கூப்பி வணங்கினாள் -திரு நாமம் சொல்லி எழுப்பலாம் –
பாடி மாமீர் அவளை எழுப்பீரோ என்றபடி )

—————————————————–

நாலாயிரப்படி-அவதாரிகை –
கீழில் பாட்டில் முக்தர் போல் இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப்பாட்டில் நித்யர் பொடியையும் மைத்துனர் முறைமையையும் உடையாள் ஒருத்தியை எழுப்புகிறது
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் இட்டிடத்தே கிடக்கும் ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே இருவரும்

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

தூ மணி மாடம்
துவளில் மா மணி மாடம் -என்று குந்தமுண்டாய் குற்றமுண்டாய் -எடுத்துக் கழிக்க வெண்டாதே
எல்லா நன்மையுமுடைய மணிகளால் செய்த மாடம்
அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே –
இது அவனுடைய அபஹத பாப்மாத்வாதிகள் போலே –
திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கழித்தவை கொண்டு செய்தது-ரசிகராய் இருப்பார் –
அந்தப்புரத்துக்கு நல்லது இட்டுச் செய்து அங்கு கழிந்தது இ றே தந்தாமுக்கு மாளிகை செய்வது
நிர்தோஷமாய் உள்ளது எல்லாம் தெரியும்படி இருக்கிற ரத்னமயமான மாடத்திலே-

சுற்றும் விளக்கெரியத்
மாணிக்கங்கள் ஒளியாலே பகல் விளக்குப் பட்டிருக்கச் செய்தேயும் -மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது
புறம்பே நிற்கிறவர்களுக்கு உள்ளுள்ளது எல்லாம் தெரியும்படி எங்கனே என்ன
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நின்றது என்கை

சுற்றும்
என்கிறது -இதஸ் த த -கிருஷ்ணன் கையைப் பிடித்துக் கொண்டு உலாவும் இடம் எல்லாம் எரிகை

எரிய
என்கிறது -எங்கள் ஆக்கங்கள் இருட்டிக் கிடக்க இங்கு
விளக்கு எரிகிறது வெறுமனே அன்று -என்கை
புறம்புள்ள விளக்குகள் புகையா நிற்க உள்ளுள்ள விளக்கு எரியா நின்றது என்கை –

தூபம் கமழத்
உணர்ந்த போதைக்குக் கண்ணுக்கு இலக்கு அன்றியே க்ராண இந்த்ரியத்தாலே அனுபவிக்கும்படி இருக்கிற புகை

கமழ
பரிமளம் ஸஹ்யமான படி எங்கனே தான் இவளுக்கு –
சீருற்ற வகில் புகை -இத்யாதிப்படியே இறே அவர்களுக்குச் செல்லுகிறது

கமழ
புகை யுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ –

துயில் அணை மேல்
கிருஷ்ண விரஹத்தையும் மாற்றவற்றான படுக்கையிலே -கிருஷ்ணன் வரிலும் இடம் பொரும்படியான படுக்கை
மென் மலர்ப் பள்ளி வேம்புள்ளியாய் இ றே இவர்களுக்கு இருக்கிறது –
இருவருக்குப் படுத்த படுக்கையிலே ஒருவருக்கு படுக்க -உறங்க -போமோ
ப்ரஹ்மசாரி படுக்கையில் உறங்க மாட்டார்களே

கண் வளரும்
இளைய பெருமாளை போலே உறங்காமைக்குத் தாங்களும் உறங்குகைக்கும் நீயுமாயிற்றே -என்கிறார்கள்-
ஆர் தொடை குத்த உறங்குகிறது –
அங்குத்தைக்குத் தங்கள் ஒலியல் கொண்டு பரிசர்யை பண்ண ஆசைப்படுகிறார்கள்

கண் வளரும்
இங்கனே யாகாதே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவது
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு – இத்யாதிப்படியே தமப்பனார் பகவத் விஷயத்தில்
சொல்லுவது எல்லாம் ததீய விஷயத்திலே சொல்லுகிறாள்-
தொண்டனூர் நம்பி திருவடிச் சார்ந்தார் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவர் அடிமை செய்து போந்த படியாலே
திரு நாட்டுக்கு நடந்தார் என்னுங்கோள் -என்றால் போலே
நஞ்சீயர் பிள்ளை ஏறு திருவுடையார் தாசரையும் அப்படியே அருளிச் செய்து அருளினார் –

மாமன் மகளே –
ஸ்வாமினியாயும் தோழியாயும் அனுபவித்தது ஒழிய இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவை சம்பாதிக்கிறான்
பெரியாழ்வார் பெண் பிள்ளை திருவாய்ப்பாடியில் தனக்கு உஜ்ஜீவனமாக ஒரு பிராகிருத சம்பந்தமும் உண்டாக்கிக் கொள்ளுகிறாள்

மாமான்
வைஷ்ணவர்களோடு எல்லா உறவும் சிலாக்யமாய் இருக்கிறபடி
மாட மாளிகை சூழ் மதுரைப்பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு -என்று
ஸ்ரீ மதுரையிலே ஓர் உறவும் ஒரு மாளிகையும் சம்பாதித்தாள் இறே
அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –
தானும் ஒரு மாலா காரர் மகள் இறே
கிருஷ்ண ராமவ் முத்தா யுக்தவ் மாலா கார க்ருஹம் கதவ்

மாமன் மகளே
தங்கள் சம்பந்தம் சொல்லாதே தங்கள் ப்ராதான்யத்தைச் சொல்லி இவளை சேவிக்கிறார்கள் –
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகேதி-என்னுமா போலே
அர்ஜுனனுக்கு கிருஷ்ணனோட்டை மைதுனமை போலே இவர்களுக்கு மைத்துனமை
அகப்படச் சொன்னவாறே உணர்ந்து -நீங்களே திறந்து புகுருங்கோள் என்ன
அது மாணிக்கக் கதவு காண் -அப்பியாசம் இல்லாதார்க்குத் தெரியாது காண் -என்று இவர்கள் சொல்ல

மணிக்கதவம் -தாள் திறவாய்-
துரியோதனன் நீருக்கும் பளிங்கு மண்டபத்துக்கு வாசி அறியாதே அகப்பட்டால் போலே அகப்பட ஒண்ணாது
எங்களைச் சிரிக்கவோ பார்க்கிறது –
எங்களுக்கு கதவும் சுவரும் தெரிகிறது இல்லை -நீயே திற -என்கிறார்கள்
தேசிகர்க்கு அல்லது தாள் திறக்கத் தெரியாது என்கை –

இப்படிச் சொல்லவும் இவள் பேசாதே கிடந்தவாறே இவள் திருத் தாயார் இக்காலத்தில் வந்த பெண் பிள்ளைகளுக்கு
இவள் வாய் திறவாதே கிடப்பதே என்று நொந்தமை தோற்ற அவள் உணர்ந்தமையை அறிந்த பெண் பிள்ளைகள்
மாமீர் அவளை எழுப்பீரோ
என்கிறார்கள் –
அடியார் தம் அடியார் / தொண்டர் தொண்டர் -என்று ஆழ்வாருடைய பாகவத சேஷத்வத்தில் எல்லை போலே
இவர்களும்-ஒரு மாதுலனும் ஒரு மாமியாரும் -என்று -வால் சம்பந்த சம்பந்தம் – சொல்லுகிறார்கள் –
அவள் தம் படி அன்னையும் அத்தானும் என்று அடியோமுக்கு இரங்கிற்று இலள்-என்று பொகட்டுப் போவள் –
தாய் என்று பழியிட்டு போக வேணுமோ அடியேனாய் இருக்கிற என்னை என்னும் திருமங்கை ஆழ்வாரை வெட்டிமையர் என்றும்
எம்பெருமானாரை கோயில் அண்ணன் என்றும் ஆண்டாள் அருளிச் செய்யும்
அத்தை எம்பெருமானார் கேட்டருளி நான் அடியேன் அல்லேனோ –
என்னை இப்படி அருளிச் செய்வதே -என்றால் போலே இத்திருவாய்ப்பாடியும்

அவளை எழுப்பீரோ
இவர்கள் தன் வாசலிலே நின்று அழைத்து நோவுபட இவள் பேசாதே கிடப்பதே என்று இவள்
நெஞ்சில் கிடக்கிறது முகத்திலே தோற்றின படியைக் கண்டு
நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள் –
அவளை இவர்களுக்குத் தோற்றமோ என்னில் மாளிகையிலே தெளிவாலே தோற்றும்
தாயார் தான் எழுப்பினாலோ என்னில் பாவஞ்ஜை யாகையாலே எழுப்பாள் –
இவர்கள் ஆற்றாமைக்கு உணராத இவள் இவளுடைய ஆந்ரு சம்ஸ்யத்துக்கு உணருமோ
ஆர்த்த த்வனி கேளாதவள் மத்யஸ்தர் வார்த்தையோ கேட்கப் புகுகிறாள் -என்னவுமாம் –
பின்னையும் உணரக் காணாமையாலே
ஆகையால் சிவிட்கென்று

உன் மகள் தான்-ஊமையோ –
என்கிறார்கள் -வ்யவஹார யோக்யை அன்றோ என்றபடி

அன்றிக்கே
அன்றிச் செவிடோ
நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்நிய பரையானாளோ

வனந்தலோ
இரவு எல்லாம் கிருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது

ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
ஆர்த்த நாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு -உணராதபடி உறங்குகைக்கு யாரேனும் சவித்தார் உண்டோ
மந்த்ரம் இவளுக்கு பிரசித்தம் இறே
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று மாயப்பொடி தூவினார் உண்டோ -என்கை
திருத் தாயார் நீங்கள் இவளை எழுப்பும்படி அறிந்திலிகோள் -திரு நாமத்தை சொல்லுங்கோள் உணரும்படி என்ன
நாங்கள் சொல்லாத ஸ்ரீ சஹஸ்ர நாமம் உண்டோ என்கிறார்கள்

மாமாயன்
பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்

மாதவன்
அதுக்கு குருகுல வாசம் பண்ணினவிடம் -லஷ்மீ பதி

வைகுந்தன்
பெண்களோடு ஓக்க ஆண்களை அடிமை கொள்ளுமவன்-
அப்பெரிய மேன்மை யுடையனாய் ஸ்ரீ யபதியாய் இருக்குமவன் கிடீர் பெண்களுக்கு எளியனாய் இருக்கிறான்

என்றென்று-நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்–
மேன்மைக்கும் நீர்மைக்கும் ஸ்ரீ யபதித்வத்துக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -என்கிறார்கள்
எழுந்திராதாரை எங்களால் செய்யலாவது உண்டோ என்கிறார்கள்
உணராதாரை நீரைச் சொரிந்து உணர்த்துங்கோள் என்னுமா போலே

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ -என்று கிரியையாகவுமாம் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: