திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கீழ்வானம் வெள்ளென்று– திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

ஈராயிரப்படி -அவதாரிகை –
பின்னையும் ஒரு பெண்பிள்ளை வாசலிலே சென்று எழுப்புகிறார்கள் –

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

கீழ்வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தது எழுந்திராய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள்
பாஸ்கரேண ப்ரபாயதா/ திங்கள் திருமுகத்து சேயிழையார் -என்கிறபடியே நீங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி -விடிந்தது இல்லையோ -என்று பார்க்க –
உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது அத்தனை –
இது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன
எருமை சிறுவீடு-மேய்வான் பரந்தன காண் –
சிறுவீடு -பனிப் புல்லு மேய்ச்சலுக்கு காலமே விட்டு அவை மேய்க்கைக்காக எங்கும் பரந்தன காண்
ஸ்ரீ நந்தகோபார்க்கு முத்திறமுண்டு-அவற்றின் பின்னே கிருஷ்ணனும் போம் -பின்னை யாரைக் காண்பது – எழுந்திராய் என்ன
உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரண்டு போகிறது அத்தனை -என்ன
விடிந்தது இல்லை என்று உன்னால் சொல்லலாவது உண்டோ என்ன
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்காக நீங்கள் இத்தனை பேரோ யுள்ளது -அல்லாதார் உணராமையாலே விடிந்தது இல்லை என்ன
மிக்குள்ள பிள்ளைகளும்
அவர்கள் ஆராயாதே போனார்கள்-நீ எழுப்பக் கிடந்தாய் –
போவான் போகின்றாரை
போகை தானே பிரயோஜனமாகப் போனார்கள் என்ன
நாம் இனி அங்கு என் -அவர்கள் போனார்களாகில் -என்ன
போகாமல் காத்து –
அவர்களைக் காற்கட்டச் செய்தோம்-திருவாணை நின் ஆணை -என்ன வேண்டாவே இவர்களுக்கு
உன்னைக் கூவுவான்
நீங்கள் தான் எழுப்புகிறது என் என்ன- இன்னார் வாசலிலே வந்து எழுப்பினார்கள் -என்னும் தரம் பெறுகைக்காக –எங்களுக்கு இதுவே பிரயோஜனம்
வந்து –
உத்தரம் தீரமா ஸாத்ய
நின்றோம்
கஸ்த ஏவ வ்யதிஷ்டத
கோதுகலமுடைய-பாவாய் எழுந்திராய்
எங்கள் திறத்தாரோ மிகுத் தள்ளுண்டார்
கோதுகலமுடைய
இங்கே புகுந்து போகவே எம்பெருமான் கைக் கொள்ள வேண்டும்படி அவனாலே கொண்டாடப் படுமவள்
பாவாய்
நாரீணாம் உத்தம வதூ -என்று நிரூபாதிகமான ஸ்த்ரீத்வம் யுடையளாகை
எழுந்திராய்
நாங்கள் உன்னை உணர்த்த உணர்ந்தாயாகிற பெரிய தரத்தை எங்களுக்குத் தாராய்
ஆத்மாநம் பூஜயந் ராம -இத்யாதி / பட்டர் விடியும் தனையும் கண் வளர்ந்து அருள சிஷ்யர்கள் எல்லாரும் திரு வாசலிலே வந்திருக்குமா போலே
பாடிப் பறை கொண்டு
நாட்டுக்கு நோன்புக்கு பறை -தங்களுக்கு சேவிக்கை பலம் –
மாவாய் பிளந்தானை –
நாம் சென்றால் நம் அபேக்ஷிதம் செய்யுமோ என்னில் நமக்காகக் கேசியைப் போக்கி நம்மையும் தம்மையும் உண்டாக்கித் தந்தவன் அன்றோ
ஸ்ரீ பிருந்தாவனம் கேசியோடே வன்னியம் அற்றது -பின்பு பெண்ணுக்கும் பேதைக்கு பயம் கெட்டு உலாவித் திரியலாய்த்து –
மல்லரை மாட்டிய-தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
இப்போது பெரிய நாகரிகனாய் நமக்கு விநியோகப்பட ஸூலபனாய் இருக்கை
மல்லரை மாட்டிய
ஸக்ய பஸ்யத -என்கிறபடியே அவ் வூரில் பெண்களுக்கு உதவின இது தங்களுக்கும் உதவிற்று என்கிறார்கள்
தேவாதி தேவனை
ஜாதோசி தேவ தேவேச / ஸோஹம் தே தேவதேவேச /அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே /
சென்று நாம் சேவித்தால்
பத்ப் யாமபி க மாச்சைவ -என்றும் விபீஷணம் உபஸ்திதம்-என்றும் /உபஸ்தே யை ருபஸ்தித-என்றும் அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக
அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்
நாம்
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்
ப்ராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய –ப்ரணயித்வம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் விடுமோ
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம -என்று சொல்லி வைத்தும் அது அனுஷ்டியாதே இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை-நம் குறை அத்தனை -கடுகப் புறப்பட வமையும்-என்கிறார்கள் –

——————————————-

நாலாயிரப்படி -அவதாரிகை –
இதுக்கு முன்பு சென்ற காலங்களுக்கு எல்லாம் தப்பிக் கிழக்கு வெளுத்தது கிடாய் -என்று உணர்ந்த பெண் பிள்ளைகளில்
எல்லாரிலும் கொண்டாட்டமுடையாள் ஒரு பெண் பிள்ளை வாசலிலே சென்று எழுப்புகிறார்கள் –

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

கீழ்வானம் வெள்ளென்று –
இடி விழுந்தாலும் கிடந்தது உறங்கும் எத்தனையோ -கிழக்கு வெளுத்தது காண் -எழுந்திருந்து கொள்ளாய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள் -ஆகவுமாம்
வெண்ணிறத்தோய் தயிர் -என்று தயிர் வெளுக்கத் தோய்ந்தவாறே விடிந்தது என்று அறிகையாலே உறங்காதே பலகால் தயிரைப் பாரா நிற்பர்கள் –
அத்தாலே கிழக்கு வெளுத்தது -என்ன
இரவெல்லாம் கிழக்கு நோக்கி விடிந்தது இல்லையோ என்று பார்க்கிற உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி
உங்கள் முகத்திலே வந்து பிரவேசிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது –
அது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன
எருமை சிறுவீடு-மேய்வான் பரந்தன காண் –
சிறுவீடு -பனிப் புல்லு மேய காலத்திலே விட்டு அவை மேய்க்கைக்காக வயல்கள் எங்கும் பரந்தன காண் -என்ன –
ஸ்ரீ நந்தகோபார்க்கு முத்திறமுண்டு-அவற்றின் பின்னே கிருஷ்ணனும் போம் -பின்னை யாரைக் காண்பது – எழுந்திராய் என்ன –
நீங்கள் திங்கள் திரு முகத்து சேயிழையார் ஆகையால் உங்கள் திரு முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரண்டு போகிறது அத்தனை -அந்யதா ஞானம்
அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறிப் போகிறது என்னவுமாம்
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள் -என்று இவள் தாமப்பனார் எம்பெருமானை எழுப்பினார் -இவர்கள்
இடைமுடியும் இடை நடையும் இடைப் பேச்சுமாய் இவற்றின் வாசி அறிவதே –
எருமை பரந்தது அல்ல -ஆதித்ய கிரணங்களுக்கு உளைந்து இருள் சிதறிப் போகிறபடி காண் -என்று இவர்களுக்குச் சொல்ல
நாங்கள் பிரமித்தோம் ஆயிடுக -விடிந்தது இல்லை என்று உன்னால் சொல்லலாவது உண்டோ என்ன
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்காக நீங்கள் ஆயிரம் பெண்கள் இவ்வளவோ யுள்ளது -அல்லாதார்
எல்லாம் உணராமையாலே விடிந்தது இல்லை என்ன
அவர்களோதவதவ நாறுகிறார்கள் உன்னிலும் பிள்ளைகள் –
அவர்கள் ஆராயாதே போனார்கள்-நீ எழுப்பக் கிடந்தாய் –
போவான் போகின்றாரை
போகையே தானே பிரயோஜனமாகப் போனார்கள் என்ன
நாம் இனி அங்கு என் -அவர்கள் போனார்களாகில் -என்ன
போகாமல் காத்து –
அவர்களைக் காவலிட்டோ செய்தது -செய்யாதன செய்தோம் என்ற வார்த்தையை அறிந்திகோளோ -என்று நம்முடைய வ்யவஸ்தையை உணர்த்தி நீ வந்தது இல்லை என்ன
விலங்கு இட்டால் போலே நின்றார்கள் -காலை ஒழிய நடக்கப் போமோ
நீங்கள் அவர்களை ஆணை இட்டுத் தடுத்தி கோளோ-என்ன
வாசம் செய் பூங்குழலாள் திருவாணை -என்ன வேண்டாவே இவர்களுக்கு
நீ வந்திலை என்ன அமையும் -கால் போக மாட்டார்கள் –
நீங்கள் தான் நின்றது என் என்ன
உன்னைக் கூவுவான்
– இன்னார் வாசலிலே வந்து எழுப்பினார்கள் -என்னும் தரம் பெறுகைக்காக –எங்களுக்கு இதுவே பிரயோஜனம்
வந்து –
உத்தரம் தீரமா ஸாத்ய
நின்றோம்
கஸ்த ஏவ வ்யதிஷ்டத
கோதுகலமுடைய-பாவாய் எழுந்திராய்
எங்கள் திறத்தாரோ மிகுத் தள்ளுண்டார்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி / கழக மேறேல் நம்பி என்னும் இங்குத்தைக்கு எங்களோடு அவனோடு வாசி என்
கோதுகலமுடைய
இங்கே புகுந்து போகவே எம்பெருமான் கைக் கொள்ள வேண்டும்படி அவனாலே கொண்டாடப் படுமவள்
அவனிலும் ததீயரை உகக்கும் வேண்டப்பட்டு ஆகவுமாம்
பாவாய்
நாரீணாம் உத்தம வதூ -என்று நிரூபாதிகமான ஸ்த்ரீத்வம் யுடையளாகை
எழுந்திராய்
நாங்கள் உன்னை உணர்த்த உணர்ந்தாயாகிற பெரிய தரத்தை எங்களுக்குத் தாராய்
ஆத்மாநம் பூஜயந் ராம ப்ருச்ச ஸ்யஸ்மாந் ஸூஹ்ருத்தயா -இத்யாதி /
பட்டர் விடியும் தனையும் கண் வளர்ந்து அருள சிஷ்யர்கள் எல்லாரும்–கொண்ட கோலங்களும் தங்களுமாய் திரு வாசலிலே வந்திருக்குமா போலே
பாடிப் பறை கொண்டு
நாட்டுக்கு நோன்புக்கு பறை -தங்களுக்கு சேவிக்கை பலம் –
பாடி
ஹிரண்யாய நம-இ றே பண்டு வாய் காவல் இடுவார்கள் இப்போது அது வேண்டாவே
மாவாய் பிளந்தானை –
நாம் சென்றால் நம் அபேக்ஷிதம் செய்யுமோ என்னில் நமக்காகக் கேசியைப் போக்கி நம்மையும் தம்மையும் உண்டாக்கித் தந்தவன் அன்றோ
ஸ்ரீ பிருந்தாவனம் கேசியோடே வன்னியம் அற்றது -பின்பு பெண்ணுக்கும் பேதைக்கு பயம் கெட்டு உலாவித் திரியலாய்த்து –
மல்லரை மாட்டிய-தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
அவன் பண்டு அன்றோ காணாச் சிறையாய்க் கிடந்தது அவன் இப்போது பெரியவனாய் -மதுராம் ப்ராப்ய -இத்யாதி படியே
நாகரிகனாய் நமக்கு வினைக் கொம்பாய் போனான் -நம் கிருஷ்ணனை இப்போது ப்ராஹ்மணர் அடைய சர்வேஸ்வரன் தேவதேவன் என்று காணும் சொல்லுகிறது என்ன
மல்லரை மாட்டிய
அங்குப் போயும் நம் கார்யம் அன்றோ செய்தது
ஸக்ய பஸ்யத -என்கிறபடியே அவ் வூரில் பெண்களுக்கு உதவின இது தங்களுக்கும் உதவிற்று என்கிறார்கள்
தேவாதி தேவனை
ஜாதோசி தேவ தேவேச / ஸோஹம் தே தேவதேவேச /அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே /-
அவன் வேண்டப்பாட்டோடு இருக்கிலோ -என்னில்
சென்று நாம் சேவித்தால்
அது ஆர்க்கு அழகு -நம் முறையை நாம் பெற்றோம் ஆகிறோம் -அவன் முறை கெடில் அலைந்து இ றே அவர்கள் இருப்பது
சென்று
பத்ப் யாமபி க மாச்சைவ -என்றும் விபீஷணம் உபஸ்திதம்-என்றும் /உபஸ்தே யை ருபஸ்தித-என்றும் -ஸம்ப்ராப்தம் என்றும்
அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக
அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்
நாம்
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்
மாசுடை யுடம்போடு தலை யுலறி/ உபவாச கிருஸாம் தீ நாம்
சேவித்தால்
ஸ்ரீ பரத ஆழ்வான் படுத்துமத்தை நாம் படுத்துகிறோம்
சிரஸா யாசதஸ் தஸ்ய வசனம் ண க்ருதம் மயா–என்னப் பண்ணுகிறோம்
ஏபிஸ் ச சசிவைஸ் சார்த்தம் -பெருமாள் இரங்குகைக்கு ஆர்த்தர் பலரையும் திரட்டிக் கொண்டு போனபடி
அவர்களுக்கு கைகேயீ சம்பந்தம் இல்லையே -இரங்கவுமாமே
சிரஸா யாசிதோ மயா -பசியாற வயிற்றைக் காட்டுமா போலே திருவடிகளில் அடிமை செய்யப் பெறாமையால் உறாவின தலையைக் காட்டுகிறார்
யாவந் ந சரணவ்
ப்ராது
உம்முடைய தம்பி அல்லேனோ
சிஷ்யஸ்ய
உம்மோடே யன்றோ நாம் மந்த்ரங்கள் கேட்டது
தாஸஸ்ய –
உமக்கு விற்கவும் ஒத்தி வைக்கவும் அடியேன் அல்லேனோ
பிரசாதம் கர்த்தும் அர்ஹஸி
கீழ்ச் சொன்னவை ஒன்றுமே இல்லாவிடில் ஆபத்துக்கு கண்டால் காகத்துக்கு இரங்கினால் போலே ஆகிலும் இரங்க வேண்டாவோ
-ப்ரணயித்வம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் விடுமோ
நாம் சேவித்தால்
அத்தலை இத்தலையானால் -ஆர்க்கு அழகு -அவன் ப்ரணயித்தவம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் போமோ

ஆவா வென்று ஆராய்ந்து அருளும்
ப்ரணயித்தவம் குடி போனாலும் சத்தா ப்ரயுக்தமான ஆர்த்த ரக்ஷணம் போமோ
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம என்று சொல்லி வைத்து அனுஷ்டியாதே பேசாது இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை -நம் குறையே புறப்பட்டுக் கொள் -என்கிறார்கள் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: