திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -மாயனை மன்னு வடமதுரை மைந்தனை — திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள் —

ஈராயிரப்படி –

நாலாயிரப்படி அவதாரிகை –
நாம் இங்கனே இலை யகல் படுத்தா நின்றோம் –
ஸ்ரேயாம்சி பாஹுவிக்நாநி பயந்து மஹதாமபி-என்கிறபடியே
நாம் அநாதி காலம் பண்ணின பாபங்கள் விக்நப்படுத்தாதோ –
சக்ரவர்த்தி திருமகன் திரு வபிஷேகத்துக்கு விசிஷ்டன் முஹூர்த்தம் இடுகிறான்
பாக்யாதிகரான பெருமாள் முடிசூட இருக்கிறார்
ஜகத்தடைய இதுக்கு ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -என்று மங்களா சாசனம் பண்ணுகிறது –
நாராயணம் உபாகமத் -என்று பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்கிறது-
அங்கும் அன்றோ சில விக்னங்கள் வந்தது -என்று சில பெண்பிள்ளைகள் சொல்ல –

எம்பெருமான் சங்கல்பித்த உத்சவத்துக்கு விக்னம் உண்டாவது –
அவன் அடியார் சங்கல்பித்த உத்சவத்துக்கு விக்னம் உண்டாகாது -என்றார்கள்
சில பெண் பிள்ளைகள் -எங்கனே என்னில்

தன் சங்கல்பத்தை அழிய மாறி ஸ்ரீ பீஷ்மன் அர்ஜுனன் சங்கல்பத்தை முடிய நடத்துகையாலே
நாம் இம் மஹா உத்சவத்திலே அதிகரித்துச் செல்லா நிற்கவே
அதுக்கு விக்னம் பண்ணக் கடவ உத்தர பூர்வாகங்கள் தன்னடையே நசித்துப் போம் என்கிறார்கள்-

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

மாயனை -செப்பு
வட மதுரை மைந்தனை–செப்பு
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –-செப்பு
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை-செப்பு
தாயைக் குடல் விளக்கம் செய்தவனை -செப்பு
தாமோதரனை-செப்பு

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -போல் இங்கும்
அவன் அனுக்ரஹத்தால் க்ரமம் தப்பி
தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க-

தாயைக் குடல் விளக்கம் செய்த -யசோதையும் தேவகியையும் சொன்னதாக கொள்ளும் படி சப்தம் –
வியாக்யானம் யசோதையை காட்டும்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான் -25-பாசுரம் இருவரையும் சொன்னபடி

உதரம் -வயிற்றுக்கும் இடுப்புக்கும் நடுவில் உள்ள பகுதி –

மாயனை –
தானே தன்னை அமைத்துத் தரும் அத்தனை அல்லது அணுகவும் பேசவும் ஒண்ணாத படி
கரை கட்டாக் காவேரி போலே இருக்கும் பேர் அளவை யுடைய ஸ்ரீ வைகுண்ட நாதன் -என்கை –

மன்னு வட மதுரை மைந்தனை-
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
(க்ருத யுகம் வராஹ -விஸ்ராம் காட் -ஸ்வேத வராஹர் -கருப்பு வராஹர் சந்நிதி -ஒய்வு எடுத்த இடம் –
த்ரேதா யுகம் -சத்ருக்கனன் -லவணாசுரன் முடித்து -12 வருஷம் ராஜ்ஜியம் பரி பாலனம்
த்வாபர யுகம் -கண்ணன் )
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக இங்கே பிறக்கையாலே உளனானான்

வட மதுரை
மதுரா நாம நகரீ

மைந்தனை
பிறந்த போதே கம்சனை முடிக்க வல்ல மிடுக்கன் என்றுமாம்
மாதா பிதாக்களுடைய காலிலே விலங்கு கழலும் படி இருக்கை -என்றுமாம்
பிள்ளை என்றுமாம் –
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -பெரிய திருமொழி –
மைந்தனை மதுரை மணவாளனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
கலங்காப் பெரு நகரை விட்டவர்க்குத் திருவாய்ப்பாடி போலே விரஜையை மறக்க ஆறும் யுண்டான படி
(கலங்கா பெரு நகரம் காட்டுவான் இலங்கா எரி வைத்த பிரான் –
இங்கு கலக்குவாரும் கலங்குவாரும் உண்டு )
பிரசாதம் நிம்நகா யாதா ஜயமானே ஜனார்த்தனே -ஸ்ரீ விஷ்ணு புராணம்
கோதாவரியைப் போலே பிராட்டியைக் கும்பீடு கொண்டு சரணாகத காதுகையாய் இராதே
கம்சனுக்கு அஞ்சிப் போகிற போதைக்கு உதவ வற்றியும் –
பெண்களுக்கும் கிருஷ்ணனுக்கும் நீர் விளையாட்டு விளையாடுகைக்குப் பெருகுகையும்
இப்படி அடிமைக்குப் பாங்காய் இருந்த படி
(ப்ரஹ்ம கிரி -கோதாவரி உத்பத்தி ஸ்தானம் -நாசிக் அருகில் உள்ளது
கோதா ஆவிர்பாவம் ஆனபின்பு மீண்டும் தூய்மை பெற்றது -தேசிகன் -கோதா ஸ்துதி )

தூய
கிருஷ்ணனும் பெண்களும் மாறிமாறிக் கொப்பளித்த தூய்மை என்றுமாம்

பெரு நீர்
ஸ்லாக்யம் என்றுமாம் –
கிருஷ்ணனுடையவும் பெண்களுடையவும் களவுக்குப் பெரு நிலை நிற்கும்
(இதுவே சாக்ஷி -ராஸக்ரீடைக்கும் -அனைத்து லீலைகளுக்கும்
ராஸ மண்டல் -சரக் பூர்ணிமா கூட்டம் இன்றும் -ஹாரத்தி பிரசித்தம் )
பொருநல் சங்கணி துறைவன்-(10-3-) -என்னுமா போலே
பெண்கள் படும் யமுனைத் துறையை யுடையவன் –
கவி பாடுவார்க்கு ஊரும் பேரும் ஆறும் உடையவன் என்கை –

ஆயர் குலத்தினில் தோன்றும்
மதுரையில் பிறப்பு -பிறவாத ஸ்ரீ வைகுண்டத்தோடு ஒக்கும் –
திருவாய்ப்பாடியில் பிறப்பைப் பற்ற தோன்றும்
தேவகி பூர்வ ஸந்த்யாயாம் –
அஜோபிசன் -சம்பவாமி ஆத்ம மாயயா –இத்யாதிப்படியே –
(சந்த்ர வம்சத்தில் ஆவிர்பவித்தாலும் ஆயர்பாடியில் வளர்ந்ததே பிரசித்தம் –
மதுரை நகரம் -ஸ்ரீ வைகுண்டம் போல் –
ஆயர்பாடி தானே எளிமை காட்ட இடையர் இடைச்சிகள் கூட கலந்து அருளினான் )

மணி விளக்கு
புகையும் எண்ணெயும் இல்லை அங்கு –
வெறும் மங்கள தீபம்

தாயைக் குடல் விளக்கம் செய்த
பெற்ற வயிற்றுக்குப் பட்டம் காட்டுகை
கௌசல்யா ஸூ ஸூபே தேந புத்ரேணாமித தேஜஸா –
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்-(பெரியாழ்வார் -2-2-6-)

தாமோதரனை
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே –
அவனுடைய பந்தமும் அவனாலே அறுக்கப் போகாது
சேஷியினுடைய திரு இலச்சினை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
(நமக்கு ஆச்சார்யர் போல் நந்த கோபன் வந்து அன்றோ இவனையும் தாமக் கட்டில் இருந்து விடுவித்து அருளினார்
சிம்ஹாசலம் -வராஹ நரசிம்மர் –தனது வஸ்திரம் நழுவாமல் இருக்க ஒரு திருக்கையால் பிடித்து கொண்டே சேவை )

தூயோமாய்
அவன் இடையனாகக் கொண்டு தங்கள் இடைச்சியான ஸூத்தி –
ஷத்ரியன் இடையனானால் போலே ப்ராஹ்மணியும் இடைச்சி யானபடி –
(நெய் உண்பீர் -பால் உண்பீர் -நூறு பிராயம் புகுவீர்
ஜய விஜயீ பவ -அஸூத்தி வந்ததே -முதலியாண்டான் வார்த்தை –
உறி அடி உத்சவம் பட்டர் இடையர்கள் உடன் சேர்ந்து அனுபவிப்பார் )

தூயோமாய்
வாயிலும் முகத்திலும் நேரிடாதே வருகை –
இருந்தபடியே வருகைக்கு ஸூத்தியும்-அஸூத்தியும் வேண்டா

வந்து நாம்
உபஸ்தே யைருபஸ்தித – (பெருமாள் தண்டகாரண்யத்தில் ரிஷிகளுக்கு )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச்ச –
ஹ்ரீஷோ ஹாய் மமாதுலா —
அவன் செய்யுமத்தை நாம் செய்யக் காட்டுவோம்
வந்துன் அடியேன் மனம் புகுந்தாய் -( பெரிய திருமொழி -3-5-1 )
உபேயத்தில் த்வரை பார்த்து இருக்க ஒண்ணாது –
அப்படி இருக்கிற நாம்

நாம்
நாமே செய்ய வேணும்

தூ மலர்
இலை வாணிபம் பண்ணாத மலர் (மடி தடவாத சோறு இத்யாதி )
மிக்க சீர்த்தொண்டர் இட்ட பூந்துளவு- (பெரிய திருமொழி-11-1-)
சூட்டு நன் மாலைகள்–(திரு விருத்தம் ) இத்யாதி

தூவி
பிரணயினுக்குச் சடங்கு வேண்டா

தொழுது
வீரன் தோற்றால் போலே தொழுவித்துக் கொள்ளுமவர்கள் இறே-தொழுகிறார்கள்
ஓதி நாமம் –இது மிகையாதலில் (பெரிய திருமொழி-9-3-9-)-அவன் பொறுக்க மாட்டாதே
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே-என்னப் பண்ணுகை

வாயினால் பாடி
வாய் படைத்த பிரயோஜனம் பெறுகை

மனத்தினால் சிந்திக்க
ஞானம் அனுஷ்டான சேஷம் –
அது ஒண்ணாத படி வந்த அடைவு கேடு தோன்றாது

போய பிழையும் புகு தறுவான் நின்றனவும்
பூர்வாக உத்தராகங்கள்

தீயினால் தூசாகும்
பூர்வாகம் ஆவது -புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்தவை
உத்தராகமாவது பகவத் ஞானம் பிறந்தால் ப்ரக்ருதி வாசனையால் பிராமாதிகமாகப் பிறந்தவை

செப்பு
சொல்ல அமையும் என்கை
மாயனை இத்யாதி அடைவே செப்பு -என்று அந்வயம்-

——————————-

நாலாயிரப்படி அவதாரிகை –

நாம் இங்கனே இலை யகல் படுத்தா நின்றோம் –
ஸ்ரேயாம்சி பாஹுவிக்நாநி பயந்து மஹதாமபி-என்கிறபடியே
நாம் அநாதி காலம் பண்ணின பாபங்கள் விக்நப்படுத்தாதோ –
சக்ரவர்த்தி திருமகன் திரு வபிஷேகத்துக்கு விசிஷ்டன் முஹூர்த்தம் இடுகிறான்
பாக்யாதிகரான பெருமாள் முடிசூட இருக்கிறார்
ஜகத்தடைய இதுக்கு ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -என்று மங்களா சாசனம் பண்ணுகிறது –
நாராயணம் உபாகமத் -என்று பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்கிறது-
அங்கும் அன்றோ சில விக்னங்கள் வந்தது -என்று சில பெண்பிள்ளைகள் சொல்ல –

எம்பெருமான் சங்கல்பித்த உத்சவத்துக்கு விக்னம் உண்டாவது –
அவன் அடியார் சங்கல்பித்த உத்சவத்துக்கு விக்னம் உண்டாகாது -என்றார்கள்
சில பெண் பிள்ளைகள் -எங்கனே என்னில்

தன் சங்கல்பத்தை அழிய மாறி ஸ்ரீ பீஷ்மன் அர்ஜுனன் சங்கல்பத்தை முடிய நடத்துகையாலே
நாம் இம் மஹா உத்சவத்திலே அதிகரித்துச் செல்லா நிற்கவே
அதுக்கு விக்னம் பண்ணக் கடவ உத்தர பூர்வாகங்கள் தன்னடையே நசித்துப் போம் என்கிறார்கள்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

மாயனை –
தானே தன்னை அமைத்துத் தரில் அல்லது தன்னை நினைக்கவும் பேசவும் ஒண்ணாத படி
கரை கட்டாக் காவேரி போலே இருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதன் -என்றபடி –
இங்கு ஒருகால் ஒருத்திக்கு உடம்பு கொடுக்குமா போலே
எல்லாருக்கும் ஓக்க அங்கு தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் –
சதா பஸ்யந்தி

மாயன் –
அவ்விருப்புக்கு எத்திறம்
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்பவள் இறே
இடைச்சேரியோ பாதி அவ்விடம் கை வந்த படி –
நவநீத சவ்ர்ய நகர ஷோபாதிகளை நினைத்து எத்திறம் என்கிறதாகவுமாம்
இவ்விடத்தில் திரு நாட்டுப் படியை விஸ்தரிப்பது-
அவ்விடத்தில் எம்பெருமான் அபிமானத்தில் ஒதுங்கித் தந்தாமுக்கு என்று அபிமானம் இன்றிக்கே இருக்கும்
இங்கு தனித்தனியே ஈஸ்வரோஹம் என்று இருப்பர்கள்
இங்குள்ளார் அங்குச் செல்லிலும் அடியேன் என்று தெளியப் பண்ணும் –
தெளி விசும்பு அவ்விடம்
அங்குள்ளார் இங்கு வரிலும் என்னது என்று அறிவு கலங்கப் பண்ணும் இருள் தரும் மா ஞாலம் இவ்விடம் –

மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –

மன்னு –
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக இங்கே பிறக்கையாலே உளனானான் –
ஆர்த்தருக்கும் ஆஸ்ரிதருக்கும் பிறந்தவாறே-( சம்சாரிகளுக்கு பிராணன் வரும் )
வயிறு எரிந்து மறக்கப் பண்ணாது இருக்கும்

வட மதுரை –
மதுரா நாம் –
ஸ்ரீ வைகுண்டம் போலே குன்றாங்குறிச்சி யல்ல

நகர் –
விட்டுப் போந்த இடமோ பிறந்து விரும்பின இடமோ நகரியாவது
புண்யா -அவனைத் தருகைக்கு உபாயமாகை
பாப ஹரா-விரோதி நிரசனத்துக்கும் தானே
ஸூபா -அவை இரண்டும் இல்லையாகிலும் விட ஒண்ணாது –
பரமபதமும் சம்சாரமும் வேண்டோம் என்னும் படி– ப்ராப்யமும் தானே
யஸ்யாம் ஜாத
இத்தனைக்கும் ஆதி
ஜகந்நாதஸ் சாஷாத் விஷ்ணுஸ் ச நாதன
தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு அவர்கள் இட்ட வழக்காய் –
வைகுந்த என்றும் அகர்ம வைஸ்யன் -என்றும் சொல்லுகிறபடியே பிறக்கை
சாஷாத்
அங்கு வைத்து இங்குப் பிறந்த –
பூர்வ ஸந்த்யாயாம் ஆவீர்ப்பூதம்-
அத்திக்கில் ஆதித்யனுக்குள்ள சம்பந்தம் –
ஸ்நேஹத்தில் புரை இல்லை அத்தனை –

மைந்தனை-
பிறந்த போதே கம்சனை முடிக்க வல்ல மிடுக்கன் என்றுமாம்
தாய் தமப்பன் காலில் விலங்கு கழலும்படி இருக்கை என்றுமாம்
பிள்ளை என்றுமாம்
ராஜா என்றுமாம் –

தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
கலங்காப் பெரு நகர் விட்டுப் போந்தவனுக்குத் திருவாய்ப்பாடி என்று ஒரு அஞ்சினான் புகலிடம் உண்டானால் போலே
விரஜையை மறப்பிக்க ஒரு ஆறு உண்டான படி
பிரசாதம் நிம் நகா யாதா –
கோதாவரியைப் போலே பிராட்டியைக் கும்பீடு கொண்டு சரணாகத காதுகையாய் இராதே
கம்சனுக்கு அஞ்சி எழுந்து அருளின போதைக்கு வற்றியும் -நீர் விளையாட்டு ஆடுகைக்கு பெருகியும்
வஸூ தேவோ வஹன் கிருஷ்ணம் ஜானு மாத்ரோ தகோயயவ் –
அடி அறிந்தார் கூடப் போந்து கருத்து அறிந்து பரிமாறினால் போலே அடிக்குப் பாங்காய் இருந்தபடி –

தூய
வல்லவீ வத நோச்சிஷ்ட பவித்ராதரவித் ரும –
கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிக் கொப்பளித்த தூய்மை -என்றுமாம்

பெரு நீர்
ஸ்லாக்யதை என்றுமாம்
யமுனாம் சாதி கம்பீராம்

யமுனைத் துறைவனை
யமுனை ஆற்றை யுடையவனை –
கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் களவுக்குப் பெரு நிலை நிற்கும் ஆறு
சங்கணி துறைவன் என்னுமா போலே பெண்கள் படும் துறையை யுடையவன் –

ஆயர் குலத்தினில் தோன்றும்
ஸ்ரீ வைகுண்டத்தில் குணங்கள் மடிந்து கிடக்கும்-
இங்கே ஒளி வரும் முழு நலமாய்த்து –
அந்தகாரத்தில் விளக்கு போலே-
ஸ்ரீ மதுரையில் பிறப்பு -பிறவாத ஸ்ரீ வைகுண்டத்தோடு ஒக்கும் -திருவாய்ப்பாடியில் பிறப்பைப் பார்க்க -என்கை
ஏக்கத்திலே முலைப்பால் இன்றிக்கே ஒழிந்தது –
நாக்கு ஒட்டி அழ மாட்டிற்று இலன் –
சிலுகு படாமைக்கு அதுவும் கார்யகரமாய்த்து
முலைப்பால் பெற்று அழுதது இவ்விடத்தில் இறே

தோன்றும்
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மனா –
அஜத்வ அவ்யயத்வ ஈஸ்வரத்வங்களுக்கு அழிவு வாராமே பிறக்கையாலே –
கீழ்த் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம் இவனோடும் இவளுக்கு உள்ளது

அணி விளக்கை
புகையும் எண்ணெயும் இல்லை

மணி விளக்கு
அதுக்கு மேலே மங்கள தீபம்

தாயைக் குடல் விளக்கம் செய்த –
பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டுகை-
கௌசல்யா ஸூ ஸூ பே தேந புத்ரேணா மித தேஜஸா
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்

தாமோதரனை –
தன் வயிற்றில் தழும்பு கண்டார் இப்படி பவ்யனாவதே-என்று கொண்டாடப்படுகை
பட்டம் கட்டுகை யாவது –
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே அவனுடைய பந்தமும் அவனால் அறுக்க ஒண்ணாது
பக்திக்ரீதோ ஜனார்த்தன
ஷாமத்திலே ஒருபடி தட்டுக்கு எழுதிக் கொடுத்தார்
நல்ல காலப் பட்டால் ஸார்வ பவ்மநாம் காட்டில் மீட்கப் போமோ-
தான் எழுத்து வாங்கின தழும்பு காட்டி நம்மை எழுத்து வாங்கிக் கொள்ளும் சேஷியுடைய திரு விலச்சினை -என்று பட்டர் –

தூயோமாய்
அவன் இடையனாய்க் கொண்டு தங்கள் இடைச்சிகளான ஸூத்தி –
ஷத்ரியன் இடையனானாப் போலே தாங்களும் இடைச்சிகளான படி
வாயிலும் முகத்திலும் நீரிடாதே வருகை –பாபத்திலே வந்தவாறே சாது ரேவா -என்றான்
புண்யத்தில் வந்தவாறே பரித்யஜ்ய என்றான்
சம்சாரிக்குக் குற்றமாவது தனக்கு நன்மை யுண்டு என்று இருக்கை-மத் வ்ருத்தம சிந்தயித்வா –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் கடலிலே முழுகியோ வந்தது –
திரௌபதி தூய்மையாய்க் குளித்தோ பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் பறையர் நடுவே யன்றோ சரம ஸ்லோகம் கேட்டது
இருந்தபடியே வருகைக்கு மேற்பட்ட ஸூத்தியும் தேட வேண்டா -அஸூத்தீயும் தேட வேண்டா

தூயோமாய் வந்தோம்
கையிலே மயில் கற்றை இல்லை -என்றுமாம் -அதாவது
மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்-
இவனோடு சம்பந்தம் உடையார்க்கும் அகப்பட பிரயோஜனாந்தர பரதை இல்லை என்னும்படி
அநந்ய ப்ரயோஜனதை தோற்ற வந்தான் என்றால் போலே அநந்ய ப்ரயோஜனைகள் என்னவுமாம்

சக்கரவர்த்தி
பற்றச் சொன்ன தர்மத்தை த்யஜித்து
விடச் சொன்ன தர்மத்தை அனுஷ்ட்டித்து
பற்றச் சொன்ன பலத்தை இழந்து
விடச் சொன்ன பலத்தையே பற்றிப் போந்தான் –

ரிஷிகள் அவனையே உபாயமாகக் கொண்டு பலத்தில் வ்யபிசரித்துப் போனார்கள்

புல்லுக்கும் எறும்புக்கு விலக்குகைக்கு பரிகரம் இல்லாமையால்
உபாய உபேயங்கள் இரண்டும் எம்பெருமானேயாய் விட்டது
ஆனுகூல்யம் பேரிட்டு விலக்குவாரும் ப்ராதிகூல்யத்தாலே விலக்குவாருமாய் எல்லாரும் இழந்து போனார்கள் –

இவள் இளைய பெருமாளை போலே இரண்டும் அவனேயாகப் பற்றிச் செல்லுவோம் என்கிறாள்
ஆசும் மாசும் அற்ற படி

வந்து
அவன் திரு உள்ளத்தைப் புண் படுத்தக் கடவோம்-
உபஸ்தே யைரூபஸ்தித –
பத்பயாமபிக மாச்சைவ –
ஹ்ரேஷோ ஹி மமாதுலா –
அவன் செய்யுமத்தை நாம் செய்தோம் -என்கை –
வந்துனதடியேன் மனம் புகுந்தாய்

நாம்
உபாயத்தில் துணிவு முற்பட ஒண்ணாது –
உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒண்ணாது
அப்படியே இருக்கிற நாம்

தூ மலர் –
அயத்ன ஸித்தமாய்-கைக்கு எட்டின பூ வெல்லாம்
ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாத மலர் என்றுமாம்
மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துளவம் -என்னுமா போலே அநந்ய ப்ரயோஜனமான மலர்கள் –

தூவித்
யதா ததா வாபி-என்கிறபடியே க்ரம விவஷை இல்லாமை
பிரணயிகளுக்குச் சடங்கு உண்டோ

தொழுது
தொழுவார் கண்டால் முறை கெட்டார்கள் என்று தோற்றமைக்காக தேவதைகளைத் தொழுமா போலே
ஓர் அஞ்சலி பண்ணாதே
தொழுவித்துக் கொள்ளுமவர்கள் இறே இப்போது தொழுகிறார்கள்
இது மிகையாதலால் –
ருணம் ப்ரவ்ருத்தமிவ -என்னப் பண்ணுகை –

வாயினால் பாடி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று ப்ரீதி பூர்வகமான குண கீர்த்தனம் பண்ணி

வாயினால் பாடி
மனஸ் சஹகாரம் இல்லாமை –
உவாஸ ச –
போற்றுதும் -என்னும்படியே அத்தலையை அழிக்கக் கடவோம் என்றுமாம்

மனத்தினால் சிந்திக்கப்
மனசிலே பகவத் குணங்களை விழிநீர் அடைத்துக் கொள்ளுகை
மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும் –
பாலும் கண்ட சக்கரையும் பருகப் பருக பிச்சு தெரியுமா போலே
நமக்கு இனிதாக பகவத் அனுபவம் பண்ணா நிற்கப்
பெரு நெருப்புப் பட்ட பஞ்சு போலே பிணமுகம் காண ஒண்ணாத படி நசித்துப் போம்

இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூ யந்தே-என்கிறபடியே
பூர்வாகமாவது அநாதி காலம் புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
உத்தராகமாவது ஞானம் பிறந்தால் பிரகிருதி வாசனையால் ப்ராமாதிகமாகப் பண்ணும் பாபம்
பாபங்களாவன –
சர்ப்பங்கள் போலே செய்த போதே மிடற்றைப் பிடிக்குமது அல்ல –
கிரியை இங்கே நசிக்கும்
கர்த்தா அஞ்ஞனாகையாலே மறக்கும்
சர்வஞ்ஞன் உணர்ந்து புஜிப்பிக்கும் –
பூர்வாகத்தை நசிப்பிக்கும்
உத்தராகத்துக்கு அவ்விஞ்ஞாதா வாம் –
இனி ஆரை அண்டை கொண்டு அவை ஜீவிப்பது
சர்வேஸ்வரன் பொறுத்தோம் என்னத் தீரும் அத்தனை இறே

செப்பேலோர் எம்பாவாய்
மாயனை –மன்னு வட மதுரை மைந்தனை-தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை-
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –செப்பு -என்று அந்வயம் –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: