ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஆறாம் பாகம் —ஸ்ரீ கயா /ஸ்ரீ வாரணாஸீ-காசீ க்ஷேத்ரம் /பிரயாகை -த்ரிவேணீ சங்கமம் /திரு அயோத்யா /திரு நைமிசாரண்யம் மஹாத்ம்யங்கள் —-

ஜீவதோர் வாக்ய கரணாத் பரத்யப்தம் பூரி போஜநாத்-
கயாயாம் பிண்ட தாநாத் ச த்ரிபி புத்ரஸ்ய புத்ரதா –மகனின் கடமைகளை சொல்லும் வாக்கியம் –
ஷேத்ரத்தின் பெயர்க்காரணம்
மகத நாட்டில் மதுவனம் -சம்பகாரண்யம் -கோலாஹல பர்வதம்-என்னும் இடத்தில் உள்ள க்ஷேத்ரம் கயா -கயன் என்ற அசுரன் இருந்தான் –
அவன் உடல் பத்து சதுர மயில் நீள அகலம் -அவன் பெயரால் அதே பரப்பளவுடன் கயா க்ஷேத்ரம் –
ப்ரம்மாவின் புத்திரர் மரீசி ஒய்வு எடுக்க -அவரது தர்மபத்தினி தர்மவாதி அவர் திருவடிகளை வருட -அங்கு பிரம்மா வர -மரியாதை நிமித்தமாக அவள் எழுந்திருக்க
கோபமுற்ற மரீசி கல்லாக போம்படி சபிக்க -ஆயிரம் ஆண்டுகள் தர்மவாதி தவம் புரிந்து -ஸ்ரீ மன் நாராயணன் திரு உள்ளம் மகிழ்ந்து
அவளுடைய சிலா உருவத்தின் மேலே அனைத்து தேவர்களும் வாழ்வார்கள் என்று வரம் அளித்தார் –
கயன் என்னும் அசுரன் தவம் புரிந்து கொண்டே இருக்க -மகிழ்ந்த திருமால் அவன் உடல் அனைத்து புண்ணிய நதிகளை விட புனிதமானதாக இருக்கும் என்று வரம் அளித்தார் –
பின்னும் கயன் தொடர்ந்து தவம் புரிய உலகமே நடுங்கிற்று -விஷ்ணுவின் ஆலோசனை படி ப்ரஹ்மா தான் யாகம் செய்ய கயனின் புனிதமான உடலை வேண்டினார் –
உடன்பட்ட கயன் தூங்கும் போது ப்ரஹ்மா யாகம் செய்யத் தொடங்க -யாகம் முடிவடைவதற்கு முன்னே கயன் எழுந்திருக்க முற்பட –
தேவர்கள் தர்மவாதி சிலையை அவன் மேல் வைத்து அழுத்த -அவன் உடல் நடுக்கம் அதனாலும் அடங்காமல் இருக்க -கதையை ஏந்தி
விஷ்ணு ஒரு திருவடியால் அந்த சிலையின் மேல் நிற்க -கதாதரப் பெருமாள் நின்றவுடன் கயனின் உடல் நடுக்கம் அடங்கியது –
அவன் உடல் கிடைக்கும் பத்து மைல் பரப்பு தான் இன்று கயா க்ஷேத்ரம் -விஷ்ணுவின் திருவடி வரைய பட்ட தர்மவதி சிலையை நாம்
பிண்ட தானம் செய்ய விஷ்ணு பாதமாக போற்றுகிறோம் -கயா ஷேத்ரத்தில் பிண்ட தானத்தை எங்கு செய்தாலும் -எந்த திதியில் செய்தாலும் -அது புண்ணியமே –

கயா ஸ்ரார்த்தத்தின் மஹிமை –
ஸ்ராத்த பிரகல்பிதா லோகா ஸ்ராத்தே தர்ம ப்ரதிஷ்டித
ஸ்ராத்தே யஜ்ஞாஹி திஷ்டந்தி சர்வ காம பல ப்ரதா–சந்தான உத்பத்தி ஏற்படும் –தான தர்மங்கள் நிலை பெரும் –
ஸ்ராத்தே யத்தியதே கிஞ்சித் தேவ விப்ர அக்னி தர்பணம்
ஸ்ராத்தே தத் விஜானியாத் புறா ப்ரோக்தோ மஹர்ஷிணா–தேவர்கள் பித்ருக்கள் அக்னி திருப்தி அடைகிறார்கள் –
கயாவில் பல்குனி நதி -கயா சிராஸ் -ப்ரம்ம சுரேஷ் -மதங்கவாபி பிரேத சிலா -இடங்கள் ஸ்ரார்த்திருக்கு உரியவை
இவற்றுள் பல்குனி தீர்த்தம் விஷ்ணு பாதம் அக்ஷயவடம் -முக்கியமாக சொல்லப் படுகின்றன –
கயாவில் எட்டு நாட்கள் தங்கி அஷ்ட ஸ்ரார்த்தங்கள் -கூபகயா / மதுகயா / பீம கயா /வைதரணி /கோஷ்பதம்/பல்கு/விஷ்ணு பாதம் /அக்ஷயவடம் -இடங்களில் செய்வது ஸ்லாக்யம்-
தீர்த்த சம்பந்தமான ஷவ்ரம் உபவாசம் கயாவில் இல்லை –
கயாவில் பாயாசம் அன்னம் சத்துமாவு அரிசி இவைகளில் ஒன்றினால் பிண்டதானம் செய்யலாம்
அக்ஷயம் என்று சொல்லி கொஞ்சமாக தரப்பட்டாலும் ஹோம அர்ஹமான அன்னத்தை தந்த பலன் கிட்டும் –
1-தந்தை 2-தாயார் 3-மனைவி 4-சகோதரி 5-பெண் 6-அத்தை -7-தாயின் சகோதரிகள் இந்த ஏழு குடும்பங்களில் -101-தலைமுறைகள் நல்ல கத்தி அடைகிறார்கள்
ஏஷ்ட வ்யா பஹவ புத்ரா யதி ஏகோபி காயம் வ்ரஜத–பத்ம புராணம் –
ததோ காயம் சமாசாத்ய ப்ரஹ்மசாரி ஸமாஹித அஸ்வமேதம் அவாப்னோதி கமனா தேவ பாரத –மஹா பாரதம் -அஸ்வமேத யாக பலன் கிட்டும் –

கயா ஸ்ரார்த்த முறைகள் –
ஸ்ரார்தத்தை கயாவாசிகளை வ்ரித்தே செய்ய வேண்டும்
கணவன் மனைவி சேர்ந்து கயா ஸ்ரார்த்தம் செய்வது சிறந்தது
கருப்பு எல்லையே உபயோகிக்க வேண்டும்
தந்தை தாய் பரம பதித்து ஓர் ஆண்டுக்கு பிறகே கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்
தந்தை பரமபதித்து தாய் ஜீவித்து இருக்கும் போது கயா ஸ்ரார்த்தம் செய்யலாம் -ஆனால் தாய் பரமபதித்து தந்தை ஜீவித்து இருந்தால் செய்ய முடியாது
பார்வண முறைப்படி ஹோமம் செய்பவர் அதற்கென தனியே ஸ்ரார்த்த தளிகை பண்ணி கையாவாசிக்கு போஜனம் இட வேண்டும்
ஹோமம் இல்லாமல் ஸ்ரார்த்தம் செய்பவர்களே சமஷடியாக செய்ய முடியும்
பல்குனி நதியில் ஸ்நானம் விஷ்ணு பாதத்தித்த்தில் ஸ்ரார்த்தம் அக்ஷய வடத்தில் பிண்ட பிரதானம் ஆகியவை முக்கியம்
-13-நாட்களோ -7-நாட்களோ கயையில் தங்கி ஸ்ரார்த்தம் செய்வது விசேஷம்
பிண்ட தானம் கொடுக்கப்படும் உறவினர்கள் -பித்ரு வர்க்கம் 3-/மாத்ரு வர்க்கம் -3-/மாதாமஹ வர்க்கம் -3-/மாதா மஹி வர்க்கம் -3-/
சபத்நீ மாதா/ சிறிய பெரிய தகப்பனார் /பிராதா / பிராதாவின் பத்னீ /அத்தை /தாய் வலி பெரிய சிறிய தாயார்கள் /சகோதரி /சகோதரியின் கணவன் /
மாமா /மாமாவின் மனைவி /பெண் /மாமனார் /மாமியார் /மைத்துனன் /ஆச்சார்யன் /சிஷ்யன் /எஜமானன் /மற்ற பந்துக்கள்
நற்கதி அடைய /துர்மரணம் அடைந்தார்க்கும் நற்கதி அடைய /

பெற்ற தாய்க்கு தனி சிறப்பு -பிரத்யேகமாக -16-பிண்டங்கள் –
1–கர்பஸ்ய தாரணே துக்கம் விஷமே பூமி வர்தமநீ -தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
2–யாவத் புத்ரோ ந பவதி தாவணி மாதுஸ் ச சந்தனம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம் –
3–மாசி மாசி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவவேஷூச தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
4–சம்பூர்ணே தஸமே மாசி ஹ்ருத்யந்தம் மாத்ரு பீடனம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
5–சவ்சில்யம் ப்ரஸவே மாதா விந்த திதுஷ் க்ருதம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
6—பத்ப் யாஸ்து ஜனயேத் புத்ர ஜனன்யா பரிவேதனம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
7—அக்னி நாசோஷயேத் தேஹம் த்ரிராத்ரே உபயோஷநம் ச யத் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
8–பபவ் யா கடுத்ரவ்யானி க்வாதாநி விதித்த நிச தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
9—அஹர்நிசம்ஸ்து யன்மாது ஸ்தனபோடாம் அதாமஹம் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
10–ராத்ரவ் மூத்திர புரீஷாப்யாம் பித்யதே மாத்ரு கம்பபவ் தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
11–மாகே மாசி நிதாகே சசிசிரா ஆதப தூக்கிதா தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
12–ஷூத் த்ருட்ப் யாம் வ்யாகுலஸ் யார்த்தே அன்னாஹாரம் பிரயச்சத்தி தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
13– புத்தரே வியாதி சமாயுக்தே சோகார்தா ஜநநீ ச யா தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
14–அல்பாஹாரா ச யா மாதா யாவத் புத்ரோஸ்த்தி பாலக தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
15—காத்ர பங்கோ பவேந் மாது ம்ருத்யுரேவ ச சம்சய தஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம்
16–யமத்வாரே மஹா கோரேக் யாதா வைதரணீ நதீதஸ்ய நிஷ்க்ரயணார்தாய மாத்ரு பிண்டம் ததாம் யஹம் –

பிண்ட தானம் முடிந்த பின் –
ஆக தோஸ்மி காயம் தேவ பித்ரு கார்யே கதாதர தமேவ சாஷீ பகவான் அந்ருணீஹம் ருணத்ரயாத்–தேவ ரிஷி பித்ரு கடன்கள் நீக்கி அருள பிரார்த்தனை –

பால்குனி நதி -பல்கு நதி என்றும் சொல்வர் –ஆண்டுக்கு ஆறு மாதங்களே தண்ணீர் ஓடும் -மீதமுள்ள மாதங்களில் ஊற்று போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
விஷ்ணு பாதம் -பால்குனி நதிக் கரையில் உள்ள கோயில் -எட்டு கோணங்களில் உள்ள வேதிகையின் மேல் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திருவடி உள்ளது
இக்கோயிலில் வெளியுள்ள சபா மண்டபத்தில் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்
கதாதரன் -விஷ்ணு பாத கோயிலில் வட கிழக்கே சதுர்புஜ மூர்த்தி சந்நிதி
அக்ஷயவடம் -ப்ரம்ம சரோவர் மற்றும் வைதரணி சரோவருக்கு அருகே உள்ள ஆலமரம் இங்கே பிண்ட தானம் கொடுக்கிறோம் –

————————————–
ஸ்ரீ வாரணாஸீ-காசீ க்ஷேத்ர மஹிமை –

முத்தி தரும் ஷேத்ரங்கள் ஏழினுள்ளும் ஓன்று -ரிக் வேதம் ஆப இவ காசிநா சங்க்ருஹீதா -என்றும் –
யஜ்ஞ காசீ நாம் பாரத ஸாத்வதமிவ-என்றும் புகழப்பட்ட புராதீன க்ஷேத்ரம்
இந்த க்ஷேத்ரம் தோன்றிய போது மாதவ புரி என்ற பெயர் –

வrரணாஸ் ஸீச நத்யவ்த்வே புண்யே பாபஹரே உபே
த்வயோர் அந்தர் கதா யா து ஸைஷா வாராணஸீ ஸ்ம்ருதா-

வரணா மற்றும் அஸீ இரண்டு நதிகளுக்கு நடுவே -பனாரஸ் மருவி வந்த பெயர்
காசாயதி ப்ரகாசயதி இதம்சர்வம் யா சா காசீ –சத்விஷயங்கள் அனைத்தையும் ப்ரகாசப்படுத்துகிற படியால் காசீ
காசீ காசீதி காசீதி ஜெபத்தோ யஸ்ய சம்ஸ்திதி அந்யத்ராபி சதஸ் தஸ்ய புரோ முக்தி ப்ரகாஸதே–எங்கு இருந்து காசீ காசீ என்று ஜபித்தாலும் மோக்ஷம் பிரகாசிக்குமே
மற்ற பெயர்கள் -ஆனந்த கானகம் /-மஹா சமாசானம் /ருத்ர வாசம் /காசிகா / தபஸ்தலி /முக்தி பூமி/ சிவபுரீ –

வாராணஸி து புவனத்ரய சார பூதா ரம்யாந்ருணாம் ஸூ கதிதா கில ஸேவ்ய மாநா
அத்ராகதா விவித துஷ்க்ருத காரினோஅபி பாபஷயே விரஜஸ ஸூ மந ப்ரகாசா –ஸ்ரீ நாரத புராணம் –
அந்யாநி முக்தி ஷேத்ராணி காசீ பிராப்தி கராணிச காசீம் ப்ராப்ய விமுச்யேத ந அந்யதா தீர்த்த கோடிபி–ஸ்கந்த புராணம்
-காசீ ஒன்றே நேரே முக்தி மற்ற முக்தி தரும் ஷேத்ரங்கள் காசீ வாழ்வைக் கொடுத்தே முக்தி தருபவை —
ப்ரஹ்ம கபாலம் ஒட்டிக் கொள்ள பல க்ஷேத்ர யாத்திரை செய்ய -பாகீரதி நதிக்கரையில் உள்ள வாராணஸீ க்ஷேத்ரம் அடைந்த உடன் ப்ரஹ்ம ஹத்தி தோஷம் நீங்க
கபாலமும் வெடித்து -இவ்விதமே கபால மோக்ஷ தீர்த்தம் -பின்னர் ஸ்ரீ மஹா விஷ்ணுவிடம் இதையே நித்ய வாசஸ்தானமாக வரம் வேண்ட –
அந்த வரம் அளித்த விஷ்ணுவின் கண்களில் அந்தக் கண்ணீர் துளிர்க்க -அந்த கண்ணீர் விழுந்த இடமே பிந்து சரோவர் -அந்த பெருமாளே பிந்து மாதவன் –
பரமசிவன் விஸ்வநாதர் என்னும் நாமத்துடன் விளங்குகிறார் -ஸ்கந்த புராணம் ப்ருஹன் நாரதீய புராணங்கள் இந்த க்ஷேத்ர மஹாத்ம்யம் கூறும் –

த்வியோஜனம் அத அர்தம் ச பூர்வ பச்சிமத ஸ்திதம் அர்த யோஜனா விஸ்தீரணம் தக்ஷிண உத்தர ஸ்ம்ருதம் -நாரத புராணம்
வரணாசிர் நதீ யாவத் அஸி சுஷுக நதீ சுபே ஈஷா ஷேத்ரஸ்ய விஸ்தார ப்ரோக்தோ தேவேந சம்புனா –அக்னி புராணம்
காசீ க்ஷேத்ரம் கிழக்கு மேற்காக 20-மைல் நீளம்-தெற்கு வடக்காக -4-மைல் அகலம்
இங்கே தீட்டே கிடையாது –

-50-/-60-படித்துறைகள் உண்டு /ஐந்து பிரசித்தம்
1–வரணா சங்கம் காட் -மேற்கில் இருந்து ஓடிவரும் வரணா நதி கங்கையில் கலக்கும் இடம் -இதன் அருகில் படிக்கட்டுக்கள் மேல் ஆதிகேசவன் திருக் கோயில் உண்டு
2–பஞ்ச கங்கா காட் –யமுனா சரஸ்வதி கிரணா மற்றும் தூதபாபா கங்கையோடு கலக்கின்றன –
படிக்கட்டுக்கள் மேல் அக்னி பிந்து என்னும் அந்தணனுக்கு வரம் கொடுத்து அருளிய பிந்து மாதவன் திருக் கோயில் உண்டு
3– மணி கர்னிகா காட் -இந்த காட்டுக்கு மேலே மணிகர்ணிகா குண்டம் உள்ளது -இந்த குண்டத்தின் தண்ணீர் எட்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியேறுகிறது
அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியே தூய தண்ணீர் தானே வந்து இந்த குண்டத்தை நிரப்புகிறது
4–தசை அஸ்வமேத காட் -ப்ரஹ்மா பத்து அஸ்வமேத யாகங்களை செய்தார் -ஜ்யேஷ்ட சுக்ல தசமி அன்று முடியும் கங்கா தசராவின் போது இங்கே நீராட்டம் சிறப்பு
இத காட்டுக்கு மேலே பாலா முகுந்தர் கோயில் உள்ளது
5–அஸீ சங்கம் காட் -இங்கு அஸீ நதி கங்கையில் கலக்கிறாள் –

அஷேஷூ சக்த மதிநாச நிராதரேண வாராணஸீ ஹரபுரி பவதா விதக்தா -அதி மானுஷ ஸ்தவம் -பவ்ண்ட்ரக வாஸூ தேவன் கண்ணன் இடம் அபசாரப் பட
அவனை கண்ணன் அளிக்க -அவன் நண்பன் காசீ ராஜன் கோபமுற்று க்ருத்யையை ஏவ கண்ணன் தன சக்ரத்தை ஏவி க்ருத்யையையும் காசீ நகரத்தையும் எரித்து விட்டதே
பிற்காலத்தில் காசீ நகரம் மீண்டும் நிர்மாணம் செய்யப்பட்டது –

——————————————

பிரயாகை -த்ரிவேணீ சங்கமம் மஹிமை –

அலஹாபாத் –கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் -/ வேணி –பின்னல் -/ ஸ்ரீ மஹா லஷ்மியின் மூன்று பின்னல்கள் இவை –
தேவ ப்ரயாக் / நந்த ப்ரயாக்/ கர்ண ப்ரயாக் /ருத்ர ப்ரயாக் / கேசவ ப்ரயாக்/ விஷ்ணு ப்ரயாக் / உண்டே -இவற்றுக்குள் இதுவே பிரதானம் –
ப்ரக்ருஷ்டோ யாகோ யத்ர யத்ர யஜ்ஞா பிரகர்ஷேண பவதி இத்யர்த்த –எங்கு சிறப்பாக யாக யஜ்ஞங்கள் நடை பெருகின்றனவோ அந்த தீர்த்த ஸ்தானமே பிரயாகை –
ப்ரஹ்மா இத்தலத்தில் யாகம் செய்தே ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கினார் –

ப்ராஹ்மீ ந புத்ரீ த்ரிபதாஸ் த்ரிவேணீ சமாகமேன அஷத யோக மாத்ரான்–என்றும்
யாத்ராப் லுதான் ப்ரஹ்ம பதம் நயந்தி ச தீர்த்த ராஜோ ஜயதி பிரயாக–ஸ்ரீ பாத்ம புராணம் –ப்ரஹ்ம பாதத்தை நல்கும் ராஜ பிரயாகை இது
க்ரஹாணாஞ்ச யதா ஸூர்யா நக்ஷத்ராணாம் யதா ஸசீ தீர்த்தானாம் உத்தமம் தீர்த்தம் ப்ரயாகாக்யம் அநுத்தமாம் –

1–அக்ஷய வடம் –திரிவேணி சங்கமத்தின் அருகில் இந்த ஆலமரம் உள்ளது -இதன் இலையில் தான் பிரளயத்தில் பால முகுந்தன் சயனம் –
ஆதி வட சமாக்யாத கல்பாந்தேபி ச த்ருச்யதே சேதே விஷ்ணுர் யஸ்ய பத்ரே அதோயம் அவ்யய ஸ்ம்ருத –
2–வேணி மாதவன் -ஆதி காலத்தில் தொடங்கி தீர்த்த ரூபத்தில் ஸ்ரீ வேணி மாதவர் எழுந்து அருளி உள்ளார்
மாதவாக்ய தத்ர தேவ ஸூகம் திஷ்டாதி நித்யாச தஸ்ய வை தர்சனம் கார்யம் மஹா பாபை ப்ரமுச்யதே –மாதவனை தரிசிக்க தீது ஒன்றும் அடையா ஏதமும் சாராவே –
3–சங்கமம் -கங்கை ஒரு வண்ணம் / யமுனை ஒரு வண்ணம் / சரஸ்வதி அந்தர்வாஹினி -அந்தணர் நித்யம் பூஜிக்கும் மூன்று அக்னி ஸ்தானங்கள் இவை
கங்கை யமுனை சேரும் மையைப் பகுதி கார்ஹபத்யாக்நி/ தனியே கங்கை ஓடி வரும் பகுதி ஆஹவனீய அக்னி /தனியே யமுனை ஓடி வரும் பகுதி தக்ஷிணாக்கினி
4—பரத்வாஜ ஆஸ்ரமம் -ஸ்ரீ ராமர் பரத்வாஜரை சந்தித்த இடம்– இவர் இடம் வழி கேட்டு இங்கு இருந்து சித்திர கூடத்திற்கு சென்றார்
5—கும்ப மேளா –பிரயாகை / ஹரித்வார் –கங்கை உஜ்ஜைன் ஷிப்ரா நதி சங்கமம் / நாசிக் -கோதாவரி நதி ஆகிய இடங்களில் நடைபெறும்
அமுதக் கும்பம் – தன்வந்திரி -தோன்றி -இந்த நான்கு இடங்களில் சிந்த -இங்கு நடப்பதே சிறந்தது என்பர் –
2-ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் /ப்ருஹஸ்பதி வ்ருஷப ராசியிலும் ஸூர்யன் மகர ராசியிலும் இருக்கும் போது கும்ப மேளா நடைபெறும்
சாந்த்ரமான மாக மாதத்தில் -தை மாதத்தில் பிரயாகையில் கும்பமேளா நடைபெறும் -ஆண்டு தோறும் தை மாதம் நீராடல் சிறப்பு ஆகும்
ப்ரயாகேது நரோ யாசித்து மாக ஸ்நானம் கருதி ச ந தஸ்ய பல சங்க்யானி ஸ்ருணு தேவர்ஷி சத்தம–பாத்ம புராணம் –

இங்கே நீராடி கொத்தலர் பூங்குழலாள் கூந்தல் மலர் மங்கையான ஸ்ரீ மஹா லஷ்மியின் அருள் பெறுவோம் –

——————————————————-

திரு அயோத்யா மஹாத்ம்யம் —

சரயு நதிக்கரையில் தென்கரையில் அமைந்துள்ள க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட அம்சம் -ஸ்வாயம்புவ மனுவுக்கு ஸ்ரீ மன் நாராயணன் கொடுக்க –
அதை அவர் மனுவுக்கு கொடுக்க -அவரால் சரயூ நதிக் கரையில் அமைக்கப்பட்டது -முத்தி தரும் ஏழு ஷேத்ரங்களுள் முதன்மை பெற்றது
ஸூர்ய வம்சத்தவர்களான இஷுவாகு தொடக்கமான மன்னர்களின் தலைநகரம் -சாகேதம் என்னும் பெயர் பெற்றது -சராசரங்களை வைகுந்தத்துக்கு கொண்டு சென்று அருளியதால்
குசனாலே புனர் நிர்மாணம் பண்ணப்பட்ட க்ஷேத்ரம் -ஐந்து ஆழ்வார்கள்–பெரியாழ்வார்-3-9-6/3-9-8/3-9-10/3-10-4/3-10-8/4-7-9-ஆகிய ஆறு பாடல்கள்
-குலசேகரர் -8-6/8-7-/10-1/10-8-ஆகிய இரண்டு பாடல்கள் -தொண்டர் அடிப்பொடியார்-திருப்பள்ளி -4/ -நம்மாழ்வார் –7-5-1/திருமங்கை ஆழ்வார் 10-3-8/
ஆகியோரால் மொத்தம் -13-பாடல்களால் – மங்களாசாசனம் -ஸ்ரீ ரெங்க ப்ரணவாகார விமானம் பெரிய பெருமாளோடு இஷுவாக்குவாள்ஸ்தாபிக்கப்பட்டு
ஸ்ரீ ராமபிரான் வரை ஆராதிக்கப்பட்டு வந்தது –
தர்சன ஸ்தானங்கள் –
1–ஸ்ரீ ராம ஜென்ம பூமி -த்ரேதா யுகத்தில் திருவவதாரம்
2–அரண்மனைகள் -தசரதர் கௌசல்யா ஆகியோர்கள் -கைகேயி கோபம் கொண்டு கிடந்த கோப புவனமும் உண்டு -தர்சனேஸ்வர் மஹாலும் உண்டு
3–கனக பவன் -ஸ்ரீ சீதா ராமர்களின் அந்தப்புரம் -ப்ராசீனமான
சிறிய மூர்த்திகள் சிங்காதனத்தில் பெரிய மூர்த்திகள் தர்சனம்-
4– பரத்பவன் -தசரதன் புத்ர காமேஷிடி பண்ணிய இடம் இன்றும் ஹோம குண்டத்துடன் காட்சி
5–லஷ்மண காட் -ஸ்ரீ வைகுண்டத்துக்கு புறப்பட்ட இடம்
6–குப்தார்காட் -15-கி மி தூரம் -சராசரங்களை சாந்தா நிக்க லோகத்துக்கு உய்த்துப் புறப்பட்ட இடம்
7–தசரத தீர்த்தம் -அந்திமச் சடங்குகள் செய்யப்பட இடம்
8—ஹனுமான் கடீ-60-படிகள் கொண்ட சிறிய குன்றின் மேல் திருவடி அமர்ந்த திருக் கோலம்
9–சரயூ -கோ தானத்துக்கு பிரசித்தி
10–வால்மீகி பவன் –வால்மீகி லவ குசர்கள் தர்சனம் -24000-ஸ்லோகங்களையும் தரிசிக்கலாம் –
11–அம்மாஜி மந்திர் -தென் திசை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிர்மாணித்த ஸ்ரீ ராமர் திருக் கோயில்
12–நந்திக்கிராமம் –பரத குண்டம் -25-கி மி தெற்கே -அலஹாபாத் மார்க்கத்தில் உள்ள இடம் -திருவடி பரதன் ஆலிங்கனம் தர்சனம் –
பெருமாள் இங்கே வந்து சடைமுடி கழித்து பின்பே திரு அயோத்யைக்குள் பிரவேசித்தார்

——————————————-

திரு நைமிசாரண்யம் மஹாத்ம்யம் –

திரு அயோத்யைக்கு வடமேற்கு திசையில் -200-கி மி தூரம் /பெரிய திருமொழி -1-6-மங்களா சாசனம் -சரணாகதி அனுஷ்டிக்கிறார் திருமங்கை ஆழ்வார் இங்கே –
காடுகளின் இன்றியாமையை உணர்த்தி அருள அரண்யம் காடு ரூபி /ப்ரஹ்ம வனம் –ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் -பத்ம நாபோ அமர பிரபு மர பிரபு –
கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்துடன் ஸ்ரீ தேவ ராஜர் ஸ்ரீ புண்டரீக வல்லி -சேவை சாதிக்க -ஸ்ரீ ஹரி விமானம் /
கோமுகி அல்லது கோமதி நதி திவ்ய விஸ்ராந்தி தீர்த்தம் மற்றும் சக்ர தீர்த்தம்-
இந்திரன் சுதர்மன் மற்றும் தேவ ரிஷிகளுக்கு பிரத்யக்ஷம் –

ரிஷிகளுக்கு தொல்லை கொடுத்த அசுரர்களை திருமால் ஒரு நிமிஷத்தில் நிரசனம் -அதனால் நைமிசாரண்யம் –
நிமிஷாந்த மாத்ரேண நிஹதம் ஆஸூரம் பலம் யத்ர தத தத்து நிமிஷம் அரண்யமிதி -என்றவாறு
தவம் புரிய விரும்பிய ரிஷிகள் இடம் நான்முகன் ஒரு சக்கரத்தைக் கொடுத்து அது உருண்டு அதன் வெளிப்பகுதி நேமி எவ்விடத்தில் தட்டி நிற்கிறதோ
அதுவே தவம் புரிய சிறந்த இடம் என்று கூற -நேமி நின்ற அரண்யம் நைமிசாரண்யம் -என்றுமாம் –
ப்ராம்மணா விஸ்ருஷ்டஸ்ய மநோ மய சக்ரஸ்ய நேமி சீர்யதே யத்ர இதி நைமிசம் தாதாக்யம் அரண்ய இதை போத்யம் -என்றவாறு
நிமிஷம் என்னும் ஒரு வகையான தர்பம் புள் வளர்ந்து இருக்கும் அரண்யம் நைமிசாரண்யம் என்றுமாம் –

தர்சிக்க வேண்டிய ஸ்தலங்கள் –
1–சக்ர தீர்த்தம் -நேமி பூமியில் புகுந்த இடம் -மையப் பகுதியில் ஊற்றுப் போலே தண்ணீர் வலிந்து கொண்டே இருக்கிறது -இதன் வெளிப்பகுதியில் நீராட வேண்டும்
2—வ்யாஸ சுக தேவ மந்திர் -கோயிலுக்குள் சுகதேவரின் திரு உருவமும் வெளியில் வியாசரின் பீடமும் உள்ளன –
இங்கு இருக்கும் ஆலமரத்தின் நிழலிலே -18-புராணங்களும் முற்காலத்தில் ஒத்தப்பட்டன –
3—ஸூத பவ்ராணிக ஸ்தானம் -ரோமா ஹர்ஷணர் இங்கே அமர்ந்து புராணம் சொல்ல -பலராமர் வர -அவரைக் கவனிக்காமல் இருக்க
கோபமுற்ற பலராமர் கலப்பையால் தட்ட அவர் இறக்க -பக்தர்கள் துன்பப்பட பலராமர் ரோமா ஹர்ஷனரின் புதல்வரான ஸூதர் என்பவருக்கு
எளிமையாக புராணக்கதை சொல்லும் வல்லமையை அளித்தார் -இங்கே அமர்ந்து சவ்நகர் முதலான ரிஷிகளுக்கு -18- புராணங்களை உபதேசித்தார் –
4–அஹிமஹி ராவண ஸ்தானம் -உத்தர பாரதத்தில் உள்ள வ்ருத்தாந்தம் –
இந்திரஜித்தை லஷ்மணன் கொன்றதும் ராவணன் தன சகோதரனான அஹி ராவணனை அணுகினான் -பாதாள உலக அரசன் மஹி ராவணனின் உதவியோடு
ராம லஷ்மணரை கடத்திச் செல்ல அகஸ்தியர் இந்த ரஹஸ்யம் வெளியிட திருவடி விரைந்து பாதாள லோகத்துக்கு சென்று
அஹி மஹி ராவணர்களை அளித்து ராம லஷ்மணர்களை மீட்டார் -இங்கே பெரிய வடிவத்தில் இருக்கும் திருவடியை தரிசிக்கலாம்
5—கோமதி நதி -இந்த நதிக் கரையில் தான் -88000-ரிஷிகள் நேமி தட்டிய இடத்தில் இருந்து ஞான சத்திரம் புரிந்தனர்

இந்த க்ஷேத்ரத்தைத் தான் ஸ்ரீ ராமர் தனது யஞ்ஞ சாலையாகக் கொண்டு அஸ்வமேத யாகம் புரிந்தார் –

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: