Archive for September, 2017

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-4-

September 25, 2017

ஆடியாடி -பிரவேசம் –
நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————————————————-

முதல் பாட்டில் -பிரகலாதனுக்கு உதவினால் போலே வந்து உதவுகிறிலன்-என்று இவள் தளரா நின்றாள் என்கிறாள் –

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

இவ்வாணுதல் ஆடியாடி யகம் கரைந்து -ஒளி விடுகிற நெற்றியை யுடையளான இவள் -வல்லார் ஆடினால் போலே தர்ச நீயமாம் படி தன் ஆற்றாமையால்
நின்ற இடத்திலே நில்லாதே பல காலும் உலாவி -மனஸ் ஸைதில்யாம் பிறந்து –
இசைபாடிப்பாடி கண்ணீர் மல்கி –அந்த கிலேசம் அடியாக இசையில் பலகாலும் பாடுவாரைப் போலே பிரலாபித்து -கரைந்த நெஞ்சு ப்ரவஹிக்குமா போலே கண்கள் நீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடிவாடும் –சர்வ தேசத்திலும் அவன் வரவை ஆராய்ந்து பலகாலும் பார்த்து -எங்கும் தோற்ற வல்ல
நரஸிம்ஹ ரூபத்தை யுடையவன் என்று -அவ்வளவிலும் வரக் காணாமையாலே வாட்டத்தின் மேல் வாட்டமாம் படி தளரா நிற்கும் –

———————————————————

அநந்தரம் அநிருத்தனை நிரோதித்த பாணனைத் தோள் மிடுக்கு அறுத்த நீர் இவளுக்கு இரங்குகிறிலீர் -என்கிறாள் –

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

வாணுதல் இம்மடவரல் உம்மைக்காணும் ஆசையுள் நைகின்றாள் –ஒளி விடுகிற நுதலை யுடையளாய் -மடப்பத்தால் விஞ்சின இவள் -தர்ச நீயரான உம்மை
காண வேணும் என்கிற ஆசையிலே சிதிலை யாகா நின்றாள்
விறல்வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் –பெரு மிடுக்கனான பாணனுடைய ஆயிரம் தோள் துணித்தவரே
உம்மைக்காண நீர் இரக்கமிலீரே–உம்மை காண்கைக்கு நீர் இரக்கம் இல்லாமையாய் இரா நின்றேர் –
இவள் ஆசைப்பட்டாலும் பசையில்லை -உம்முடைய இரக்கம் இ றே காட்டுவது என்று கருத்து –

———————————————————

அநந்தரம் பிராட்டிக்காக ராவணனையும் லங்கையையும் அழித்த நீர் இரங்குகிறிலீர் -இதற்குச் செய்வது என் -என்கிறாள் –

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்–கிலேச உத்தரமான நெஞ்சோடு இவள் சிக்கென்ற அரக்கும் மெத்தென்ற மெழுகும்
அக்னி சகாசத்தில் ஓக்க உருகுமா போலே கற்பும் மடமும் கட்டுக் குலையா நின்றாள் –
இரக்கமிலீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே –நீர் இரக்கம் தோற்ற இருக்கிறிலீர் -இது நிமித்தமாக
ராக்ஷசனான ராவணனுடைய லங்கையை அழித்த உமக்கு எத்தை செய்வேன் –
இல்லாத இரக்கத்தை உண்டாக்கவோ –
இவள் ஸைதில்யத்தை -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்றவள் நெஞ்சு போலே சிக்கெனப் பண்ணவோ -என்று கருத்து –

——————————————–

அநந்தரம் -நாட்டுக்கு உதவினபடியைச் சொல்லி கிளேசியா நின்றாள் -என்கிறாள் –

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இவள் பின்னும் இலங்கை செற்றவனே யென்னும் –இவள் முன்புத்தை கிலேசத்து அளவன்றியே பின்னையும் –
மாலி ப்ரப்ருதிகள் இருந்த லங்கையை செறுத்தவனே என்னும் –
அதுக்கு உறுப்பாக
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் -பலவானான பெரிய திருவடியை வாஹனமும் த்வஜமுமாக உடையவனே என்னும் –
அப்படி தனக்கு வந்து தோற்றாமையாலே
உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -நெஞ்சு அலமாக்கும் படி வெவ்விதாக மூச்சு விடும்
கண்ணீர் மிகக்கலங்கிக் கை தொழும் நின்றிவளே –கண்ணீரானது மேலிட அறிவு கலங்கி -வருகிறானாக நினைத்து அஞ்சலி பண்ணா நிற்கும் –

——————————————————

அநந்தரம் -ஸூத்த பாவரான உம்முடைய ஸ்வபாவம் இருந்தபடி என் -என்கிறாள் –

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –விலக்ஷணையான இவள் -இரவோடு பகலோடு வாசியற –
திருத் துழாயை வாய் வெருவி -அது கிடையாமையாலே தன்னுடைய நெய்தல் போலே அழகியவான கண்களிலே சோகஸ்ருவை உடையளானாள்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே– வண்டுகள் மதுபானம் பண்ணி ரசாயன சேவை பண்ணினாரைப் போலே படிந்து
ஒளி விடும்படியான திருத் துழாயை கொடுக்கிறிலீர் –
ஆஸ்ரித விஷயத்தில் ஸூத்த ஸ்வபாவரான உம்முடைய கிருபாதி ஸ்வ பாவங்கள் என்னென்னவாய் இருக்கின்றன –
வாய் வெருவினதற்கு இரக்கம் அற்று -கண்ண நீர்க்கு இரக்கம் அற்று –இவளுக்கு கொடுக்க வேணும் -என்று இரக்கம் அற்று —
வண்டுகளுக்குக் கொள்ளை கொடுத்தது என்ன ஸ்வ பாவம் -என்று கருத்து –

———————————————————–

அநந்தரம் -தன்னிலே சித்திலையாய் உம்முடைய போக்யத அதிசயத்தைப் பேசி வாய் புலற்றா நின்றாள் -என்கிறாள் –

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

உள்ளம் உகவுருகி உள்ளுளே–நின்று -தகவுடையவனே யென்னும் பின்னும்–தன் நெஞ்சு அழியும்படி ஸ்வரூபம் நீராய் உருகி தன்னிலே தன்னிலே நின்று –
என்னை புஜிப்பைக்கைக்கு அடியான க்ருபாதி ஸ்வ பாவங்களை உடையவனே என்னும் –அவ்வளவில் நில்லாதே –
மிக விரும்பும் பிரான் என்னும் எனது -அகவுயிர்க்கு அமுதே என்னும்–மேன்மேலும் விரும்பும்படியான உபகாரகனே என்னும் –
என்னுடைய அந்தராத்மாவுக்கு நித்தியமான நிரதிசய போக்யமே என்னா நிற்கும் –
மிக விரும்பும் -என்று தன்னை அவன் விரும்பின படியாகவுமாம் –

—————————————————————

அநந்தரம் -அபேக்ஷித்தார்க்கு அபகரிக்க அணித்தாக வர்த்திக்கிறவனே -என்னா நின்றாள் -என்கிறாள் –

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

கள்வி தான் பட்ட வஞ்சனையே –எனக்கு -தன் நெஞ்சில் விகாரம் தோன்றாதபடி மறைக்கும் -களவையுடைய இவள் -தான் அகப்படும்படி அவன் செய்த வஞ்சனைகள் இருந்த படி –
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து –ஹ்ருதய ஸ்தானத்துக்கு உள்ளே நிற்கிற அசோஷ்யமான அந்தராத்மா வானது-உலர்த்தி மேல் உலர்த்தியாம் படியாய் –
என் வள்ளலே கண்ணனே என்னும் –எனக்கு உன்னை முற்றூட்டாகத் தந்த மஹா உதாரனே -அது தான் உன் பேறாம்படியான
தாழ்ச்சியை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே -என்னும் -பின்னும்–அதுக்கும் மேலே -வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் -பரிபூர்ண ஜலமான கடலிலே
கண் வளர்ந்து அருளினவனே என்னும் -அப்படுக்கை தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் –

—————————————————–

அநந்தரம் -ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதி நிவர்த்தகரான உம்மை விஸ்வஸித்து இவள் பட்ட பாடுகள் என் -என்கிறாள் –

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

வஞ்சனே என்னும் -உட் புகுந்தாரைப் போலே பவ்யத்தையைக் காட்டி வஞ்சித்தவனே -என்னும்
கை தொழும் –அவ் வஞ்சனத்துக்குத் தொழ வேண்டாவோ -என்று பிரணய ரோஷத்தாலே கை எடுத்துத் தொழா நிற்கும் –
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை நினைத்து –
தன்நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் –தன் நெஞ்சானது தக்தமாம் படி நெடு மூச்சு எறியும்
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் -பெரு மிடுக்கனான கம்சனை அவன் வஞ்சனை அவனோடே போம்படி பண்ணினவரே –
உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –மதுரையில் பெண்களுக்கு உதவின உம்மை தனக்குத் தஞ்சம் என்று இவள் பட்ட வெள்ளம் என் –
இப்படி கரண த்ரயமும் சிதிலமாம் படி பண்ண வேணுமோ -என்று கருத்து –

——————————————————

அநந்தரம் இவ்வளவில் ரக்ஷண உபகரணவத்தையை யுடைய உம்முடைய நினைவு ஏதாய் இருக்கிறது -என்கிறாள் –

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

பட்டபோது எழுபோது அறியாள் –உறங்காமையாலும் -உணர்ந்து தெளிவுடையளாய் இராமையாலும் அஸ்தமித்த போதும் உதித்த போதும்
அறிகிறிலள்-அறிகிறது நெஞ்சத்திலே யாகையாலே –
விரை மட்டலர் தண் துழாய் என்னும் –பரிமளமும் மதுவும் பரம்பின-செவ்வித் திருத் துழாய் என்னா நிற்கும் –
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர் –ஜ்வாலைகளை யுடைய வட்டமான வாயையும் கூர்மையையும் யுடைய திருவாழியை யுடையவரே-
நும் திட்டமென் கொல் இவ்வேழைக்கே–நுமது -பிரதிபந்தகத்தைக் கழித்துக் கிட்டப் பரிகரமுடையீரான உம்முடைய நினைவானது
-பற்றிற்று விட மாட்டாத இச் சபலைக்கு ஏதாயிருக்கிறது -சத்தைக்கு உறுப்பாய் இருக்கிறதோ -முடிவுக்கு உறுப்பாய் இருக்கிறதோ -என்று கருத்து –

————————————————————

அநந்தரம் -விரோதி மிக்கால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையுடைய நீர் –
இவள் நோக்கு ஒன்றும் ஒழியச் சென்று அற்றது -இத்தை முடியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

ஏழை பேதை இராப்பகல் –கிட்டாது ஒழி யிலும் விடாத சபலையுமாய் -என் சொல் கேளாத பேதையுமான இவள் இரவோடு பகலோடு வாசியற
தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் –தன் ஒப்பு இல்லாத அழகிய கண்கள் நீர் கொள்ளும்படி யானாள் –
கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் –மிக உயர்த்திய யுடைத்தாய் -பரபீடா பலமான ராவண ஐஸ்வர்யம் அக்னி சாத்தாம் படி இலங்கையை அழியச் செற்றவனே
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –அவளுக்கு உதவினால் போலே இவளுடைய முக்தமான மானின் நோக்குப் போலே இருக்கிற
நோக்கை ஒன்றையுமாகிலும் க்ஷயிப்பியாது ஒழிய வேணும் –
இவள் நோக்குக் கிடீர் எல்லார்க்கும் உஜ்ஜீவன ஹேது என்று கருத்து –

————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் ஆராதன ரூப கைங்கர்யத்தை அருளிச் செய்கிறார் =-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

வாட்டமில் புகழ் வாமனனை –நோக்கு வாடாதபடி தன் குறைவு தோன்ற அத்தியாய வந்து முகம் காட்டினபடியாலே வாட்டம் இல்லாத
குண பிரதையை யுடைய வாமனனைக் குறித்து –
இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டோராயிரத்து–உதாரரான ஆழ்வார் இசையோடு கூட்டி சொன்ன லக்ஷண பூர்த்தியாலே
அமைதியை யுடைய அத்விதீயமான பாட்டுக்கள் ஆயிரத்திலும்
இப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே –இப்பத்தான் -அந்த வாமனன் அடியிலே அழகிய மாலையை சூட்டலாம் –
இது வஞ்சி விருத்தம் –

—————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-4-

September 25, 2017

ஆடியாடி -பிரவேசம் –
இப்படி நித்ய புருஷர்களோடே கூட எம்பெருமானை அனுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வார் -அப்போதே அப்படி அனுபவிக்கப் பெறாமையாலே வந்த
நிரதிசய அவசாதத்தாலே ஒரு க்ஷண மாத்திரம் ஆத்ம தாரணம் பண்ண ஒண்ணாத தயநீய தசா பன்னராய் -அந்த தசா அனுகுணமாக
எம்பெருமானைக் குறித்துத் தாம் சொல்லுகிற வார்த்தைகளையும் செய்கிற சேஷ்டிதங்களையும் கண்டு தம்மோடு சமான சோகரான தம்முடைய பந்துக்கள்
எம்பெருமானை நோக்கித் தம்முடைய தசையை விண்ணப்பம் செய்து சொல்லுகிற படியை அனுசந்தித்து –
இப்பொருளை -எம்பெருமானை ஆசைப்பட்டு அத்யந்தம் அவசந்தனையாய் இருந்தால் ஒரு பிராட்டியுடைய திருத் தாயார் அவளுடைய தசையை
விண்ணப்பம் செய்து கொண்டு -இவள் முடிவதற்கு முன்பே ஈண்டென வந்து விஷயீ கரித்து அருள வேணும் என்று கொண்டு
எம்பெருமானை அபேக்ஷிக்கிற வாக்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார் –

———————————————-

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

எம்பெருமானைப் பிரிந்த வ்யஸனத்திலே தன்னைக் கொண்டு தரிக்க மாட்டாமையாலே -தன்னுடைய ஆச்வாஸ அர்த்தமாக அவனுடைய குண சேஷ்டிதங்களைப்
பாடி யாடின விடத்திலும் அது தனக்கு ஆச்வாஸ கரமாகாதே அவசாத கரமேயாக -இனி அவனைக் கண்டால் அல்லது தரிக்க முடியாது -என்று பார்த்து –
அவனை எங்கும் தேடி -ஆஸ்ரிதருடைய துர் தசைகளில் ஸஹ ஸைவ தோன்றிக் கொண்டு நிற்கும் ஸ்வ பாவனானவனே -என்று அழைத்து –
பின்னையும் கண்டாலும் தேறாததொரு படி அற வாடிப் போய் -அற வாடினாள் இவ்வாணுதல் -என்று திருத் தாயார் ப்ரஸாபிக்கிறாள் —

————————————————————–

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

உம்மைக் காண வேணும் -என்னும் ஆசையாலே இவள் நையா நின்றாள் -உம்மைக் காணும் படி இவள் பாக்கள் கிருபை பண்ணுகிறிலீர் —
பிரதிகூலர் திறத்தில் அன்றோ இப்படி நைர்க்ருண்யம் பண்ணுவது -உம்மை ஆசைப் பட்டார் நிறத்திலும் இப்படி நைர்க்ருண்யம் பண்ணலாமா -என்கிறாள் –

—————————————————————

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

அவசன்னமான மனசை யுடையளாய் எரியணை அரக்கும் மெழுகும் போலே விரஹ அக்னியாலே-தஹ்யமாநையான இவள் பக்கல்
கிருபையும் கூடப் பண்ணுகிறிலீர் -இதற்கு என் செய்கேன் -கெட்டேன் -ஓ கொடுமையே இது -என்கிறாள் —

———————————————————–

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இப்படி நான் அவனுடைய கொடுமையை நினைத்து இலங்கை செற்றீர் -என்று சொல்லும் அளவில் -தான் அத்தைக்கு கேட்டு அவனுடைய பிரணயித்வத்தையே நினைத்து
இலங்கை செற்றவனே -என்னும் -பின்னையும் -பெரிய திருவடி மேலே ஏறி அருளி வந்து தோன்றாய்-என்னும் -என்றால் அப்போதே வரக் காணாமையாலே
உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்கலங்கி இவள் நின்று கை தொழா நிற்கும் -என்கிறாள் –

————————————

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இலங்கை செற்றவனே என்றும் -வலம் கொள் புள்ளுயிர்த்தாய் என்றும் -இப்படி இராப் பகல் வாய் வெருவி-தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்–
இப்படி தயநீய தசை வரச் செய்தேயும் வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடுக்ககிறிலீர் –
பரம காருணிகரான உம்முடைய காருண்யம் இருக்கும் படி இதுவோ -என்கிறாள் –

———————————————-

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

இப்படி இவளுடைய பிரசங்கத்தாலே அவனுடைய கிருபையை நினைத்து பரம காருணிகனே-என்று கூப்பிடும் -இப்படி கிருபையை யுடையவன் நம்மைக் கை விடான் -என்று
பார்த்துப் பின்னையும் மிகவும் ஆசைப்படும் -ஆசைப்பட்ட அப்போதே பெறாமையாலே வந்த அவசாதத்தாலே நெஞ்சு உருகும் படி உருகி நின்று –
கேட்க்கச் சொல்ல க்ஷமை அல்லாமையாலே போய்த் தன்னுள்ளுள்ளே பிரானே என்றும் என்னுடைய போக்யம் என்றும் சொல்லா நிற்கும் -என்கிறாள் –

——————————————————

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

எம்பெருமானை பிரிகையாலே பரிதப்தையாய்–அந்தப் பரிதாபத்தைப் பொறுக்க மாட்டாமையாலே விடாய் பட்டார் -தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே
என் வள்ளலே என் கண்ணனே -என்னும் -பின்னும் -வெள்ள நீர்க் கிடந்தாய் -என்னும் -எம்பெருமானையும் கூட
வசீகரிக்கும் அழகுடையாளான இவள் அவனுடைய குணங்களில் இங்கனே அகப்பட்டாள்-என்கிறாள் –

—————————————————————-

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

உன்னுடைய குணங்களில் என்னை அகப்படுத்தினவனே -என்னும் -பின்னைத் தன் திரு வாயால் ஒன்றும் சொல்ல மாட்டாமையாலே தன் கையாலே தொழுது இருக்கும் –
அப்போதே அவனைக் காணாமையாலே தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்-உம்மை -தன்னுடைய ஆபத்துக்குத் துணை -என்று
விஸ்வஸித்து இருந்த இவளும் உமக்கு பிரதிகூலனான கம்சன் பட்டது படுவதே -என்கிறாள் –

——————————————

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாகத் திருவாழியை ஏந்திக் கொண்டு இருக்கிற நீர் உம்மோடு ஸம்ஸ்லேஷிக்கையில் உள்ள அபி நிவேசத்தாலே
மற்று ஒன்றும் அனுசந்திக்க க்ஷமை யன்றிக்கே இருக்கிற இவள் திறத்தில் செய்ய நினைத்து அருளிற்று என் -என்கிறாள் –

————————————

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

உம்மை ஆசைப்படும் ஸ்வ பாவையாய் -உம்முடைய துர்லபத்வத்தை அறிய மாட்டாத பால்ய தசா பன்னையாய் இருந்த இவள் –
உம்மை ஆசைப்பட்டுப் பெறாத வ்யசனத்தாலே அத்யந்தம் அவ சன்னை யானாள்-இவள் முடிவதற்கு முன்னே –
பிரதிபந்தகங்களையும் நீரே போக்கிக் கொண்டு ஈண்டென வந்து ரஷித்து அருள வேணும் -என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறாள் –

—————————————————-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

ஆழ்வார் இப்படி அவசன்னரான இடத்தில் அவருடைய அவசாதம் எல்லாம் போம்படி வந்து தோன்றி அருளுகையாலே வாட்டமில்லாத —
பிரணயித்வ –காருண்ய –ஸுசீல்யாதி-கல்யாண குணங்களை யுடையனாய் இருந்த எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழி அவன் திருவடிகளில் அழகியதொரு திருமாலையாகச் சூட்டலாம் -என்கிறார் –

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-3-

September 25, 2017

ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –
இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத பொடியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

————————————————-

முதல் பாட்டில் -சர்வ ரசமான வஸ்துவோடு தமக்கு உண்டான சம்ச்லேஷம் தம்முடைய திரு உள்ளமடியாக வந்ததால் நெஞ்சைப் பார்த்து உகக்கிறார்

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஊனில் வாழுயிரே நல்லை போ -சரீரத்தில் -இந்தளத்தில் தாமரை போலே பகவத் அனுபவத்தை பெற்று வாழுகிற நெஞ்சே -நல்ல காண்-எங்கனே என்னில்
உன்னைப் பெற்று– வானுளார் பெருமான் மது சூதன் -உன்னை -எனக்கு விதேயமாகப் பெறுகையாலே பரமபத வாசிகளான நித்ய ஸூரி களுக்கும்
மேலான மேன்மையை யுடையனாய் -தன்னை அனுபவிக்கப் பாரித்த என்னுடைய பிரதிபந்தகத்தை மதுவை முடித்தால் போலே முடித்து
என்னம்மான் தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்–என்னை அடிமை கொண்டு அருளின தன்மையை யுடைய அவனும் –
அவனை அனுபவிக்க ஆசைப்பட்டு அடிமை புக்க நானும் -தனக்குள்ளே எல்லா இனிமையுமாம் படி
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –தேனும் தேனும் -பாலும் பாலும் -நெய்யும் நெய்யும் -கன்னலும் கன்னலும் -அமுதும் அமுதும் போலே கலந்து விட்டோம் –
இத்தால் -ஏக ஜாதி த்ரவ்யம் கலந்தால் போலே என்ற படி –
அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் -ஸர்வவித சாரஸ்யமும் தோற்றுகைக்காக-
தேன் என்று -சர்வ ரஸ சமவாயம் –பால் என்று ஸ்வாபாவிக ரசம் -ணெய் என்று ப்ரும்ஹண ரசம் -கன்னல் என்று கரும்பாய் -அதனுடைய பாகஜ ரசத்தை நினைக்கிறது –
அமுது என்று நித்ய ரசம் -உயிர் என்று பிராண ஆச்ரயமான நெஞ்சைச் சொல்லுகிறது -போ வென்று சாதரமான சம்புத்தி ஸூசகம் –

———————————————————–

அநந்தரம் ஏவம் வித சாரஸ்ய யுக்தன் தம் விஷயத்தில் பண்ணின உபகாரம் அபரிச்சேதயம் -என்கிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

ஒத்தார் மிக்கார் இலையாய -இந்த சா ரஸ்ய அதிசயத்துக்கு சமாப்யதிக தரித்ரனாய்-
மா மாயா-பிரதி க்ஷணம் அனுபவியா நின்றாலும் அபூர்வவத் விஸ்மய அவஹமான மஹா ஆச்சர்ய யுக்தனாய் –
ஒத்தாய் எப் பொருட்கும் -சர்வ பதார்த்த சஜாதீயனாய் வந்து அவதரித்து -அனுபவிப்பிக்குமவனாய் –
உயிராய் -ஆத்மா சரீரத்துக்கு தாரகனாமோ பாதி சர்வ பதார்த்த தாரகனாய்
என்னைப் பெற்ற அத்தாயாய் தந்தையாய்த் -என்னை உபபாதித்த அந்த அசாதாரண சம்பந்தத்தை யுடைய -தாயாம் படி ப்ரிய பரனாய் –
தத் அவித்தோபத்தி ஹேது வான பிதாவாம் படி ஹித பரனுமாய் -ஆச்சார்யனோ பாதி
அறியாதன யறிவித்து அத்தா –அஞ்ஞாதமான அனுபாவாதிகளை அறிவிப்பதும் செய்து -இவ்வுபகாரங்களுக்கு அடியான சம்பந்தத்தையும் யுடையவன் –
நீ செய்தன அடியேன் அறியேனே –சோபாதிகரான அவர்களை போல் அன்றியே நிருபாதிக்க சம்பந்த யுக்தனான நீ செய்து அருளிய உபகாரங்களை
அடியேனான உறவால் என்று இருக்குமது ஒழிய அளவிட்டு அறிய மாட்டுகறிலேன்-
ஸர்வவித பந்துவான நாராயணன் இ றே மாதாவும் பிதாவும் குருவும் என்று கருத்து –

———————————————————

அநந்தரம் -தன் பக்கலிலே அவன் தம்மை அபிநிவேசிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை -பிறர் தன்னை அறியாதபடி வடிவழகாலே மதி மயக்கின வாமனனானவனாய் -நிலம் மாவலி மூவடி என்று
அநந்வித பதமாய் அபரிஸமாப்த்தமான வாக்யத்தாலே -இவன் ஈஸ்வரன் என்று அறிவிக்கிற ஸூக்ராதிகள் பாசுரமும் நெஞ்சிலே படாதபடி
வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –அவன் தன்னது என்று இருந்த ஜகத்தை வஞ்சித்துக் கொண்டவனே –
இவ்வபதாநத்தை எனக்கு பிரகாசிப்பித்து என் நெஞ்சுக்குள்ளே கலந்து -அக்கணக்கிலே
அறியா மா மாயத்து அடியேனை –அறியாமையை விளைப்பதாய்-துஸ்தரமான பெருமையை யுடைத்தாய் மாயா கார்யமான சம்சாரத்திலே –
ஸ்வ தஸ் ஸித்தமான சேஷத்வ சம்பந்தம் பற்றாசாக என்னை –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால்–அந்த சேஷத்வம் அறிக்கைக்கு சம்பாவனை இல்லாத காலத்திலேயே
தத் பலமான சேஷ வ்ருத்தியிலே ஆதரத்தை பிறப்பித்து வைத்தாய் இறே
இது உன்னுடைமையை நழுவ விடாமைக்கு இறே என்று கருத்து –

———————————————

அநந்தரம் -இவ்வுபகாரத்துக்கு ப்ரத்யுபகாரம் இல்லை -என்கிறார் –

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

பொழில் எழும் உண்ட எந்தாய்–பிரளயத்தில் அழியப் புகை திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளின ஸ்வாமியே -அப்படி நானும் அழிந்து போகாத படி
எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு-அத்யந்த ஹேயமான என் ஆத்மாவுக்குள்ளே ஒரு நீராகக் கலந்த -அது தன் பேறாம் படி பெருத்து –
நிர்ஹேதுகமாகையாலே நன்றான உதவிக்கு பிரதியுபகாரமாக
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ -என் ஆத்மாவை உனக்குத் தந்தே விட்டேன் -இனி அதுக்கு மீட்சி என்பது ஓன்று இல்லை -இது தான் யாரது என்று ஆராய்ந்தால்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –என் ஆத்மாவுக்கும் ஆத்மா நீ -ஆதலால் தரப்படுகின்ற என் ஸ்வரூபத்தினுடைய கர்மத்வமும் நான் இட்ட வழக்கு அல்ல –
தருகிற என்னுடைய கர்த்ருத்வமும் நான் இட்ட வழக்கு அல்ல -தாத்ருத்வ கர்த்ருத்வாதி விசிஷ்டமான இவ்வ்வஸ்துவினுடைய சத்தையை
அடியிலே உண்டாக்கிக் தந்த நீ தானே பின்னையும் ஸ்வீகரித்தாய் –
ஆதலால் உனக்கே சேஷம் என்று இட்டு எனக்கு சமர்ப்பணத்தில் கர்மத்வமும் இல்லை -கர்த்ருத்வமும் இல்லை –
கைம்மாறு -ப்ரத்யுபகாரம் –

———————————————————

அநந்தரம் -உன்னுடைய அப்ராக்ருத போக்யதையைக் காட்டி ருசி ஜனகனான படியால் உன் திருவடிகளைப் பெற்றேன் அல்லனோ -என்கிறார் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

யார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்-எத்தனையேனும் அதிசயிதரானவர்களுடைய ஞானங்களால் -எடுக்கைக்கு எடுப்புண்ணாத ஸ்வாமியாய் –
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே–உன் பாக்கள் ஸ்நேஹத்தாலே பரிபக்குவ ஹ்ருதயரானவர்களுக்கு மோக்ஷ ஆனந்த பூதனாய் –
உபய வ்யாவருத்தனான எனக்கு மத நாதி யத்னத்தாலே கடலிலே உண்டாக்காத அப்ராக்ருதமான அம்ருதமாய் –
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்-சம்சாரத்தில் பொருந்தாமையாலே தனியனாக என்னுடைய த்வத் அனுபவ ரூபமான
வாழ்வுக்கு ருசி ஜனகத்வாதியாலே பிரதம ஹேது பூதனாய் -என்னை சம்சார ஆர்ணவத்தில் நின்றும் எடுக்கைக்கு ஸூசகமாக –
சப்த த்வீப யுக்தமான ஜகத்தை அத்விதீயமான மஹா வராஹமாய்க் கொண்டு
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –கூர்மை மிக்க கொம்பிலே வைத்தவனே-
இனி -நீயே ஹேது பூதனாய் நிர்வஹிக்கிற பின்பு உன் திருவடிகளை ப்ராப்பித்தேனே யன்றோ –
ஏகாரம் -தேற்றம் /எடுக்கல -தம் வசமாக்குதல் –

————————————————–

அநந்தரம் -இந்த பிராப்தி ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி சித்தம் அன்றோ -என்கிறார் –

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் –உன்னை அடைந்தவர்களுடைய குரூரமான பாபங்களுக்கு ஆற்ற வரிய நஞ்சாய் –
திண் மதியைத்–திண்ணிதான மதியாகிற வ்யவசாயந்தானாய் நிற்கிறான் எண்ணலாம் படி இதுக்கு உத்பாதகனாய்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை-சோர்ந்தே போகல் கொடாச் சுடரை-அந்த அத்யாவசாயத்தை யுடையவர்களுடைய மனசிலே விடாதே அவர்கள் ஆத்மவஸ்துவை
என்றும் விஷயாந்தரங்களிலே புக்குச் சோர்ந்து போகல் கொடாதே -தன் வடிவையே அவர்களுக்கு விஷயமாகும் உஜ்ஜ்வல ஸ்வ பாவனாய் -அவர்கள் விஷய ருசியை –
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை -சூர்ப்பணகையை அழித்தால் போலே அழித்துக் கொடுக்க வல்ல உன்னை
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –உனக்கு சேஷபூதமான ஸ்வரூபத்தை யுடைய நான் -முதலுக்கு முன்னே அடைந்தேன் அல்லவோ –
மயர்வற மதிநலம் அருளுவதற்கு முன்னே பிராப்தி உண்டு அல்லவோ என்று கருத்து –

—————————————————————–

அநந்தரம் -இப்படி உபகரித்த நிரதிசய போக்யனான உன்னை ஒழிந்தால் எனக்கு சத்தை யுண்டோ என்கிறார் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே-அநாதியாய்-வி லக்ஷணமாய் -யாழைப் பற்றி இருப்பதாய் -வ்யுத்பித்ஸூக்களாலே பயிலப் படுவதான-
ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்திலே லக்ஷணம் தப்பாத -நரம்பிலே கிளர்ந்த -முதிர்ந்த ஸ்ரீ கீதா ரசம் போலே நிரதிசய போக்ய பூதனாய் –
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே-இந்த ரசஞ்ஞராய் -பஹு விதராய் இருக்கிற அஸகலித ஞானாதி வைலக்ஷண்யத்தை யுடையார் நித்ய அனுபவம்
பண்ணுவதற்கு மேலாய் இருக்குமவனாய் -இந்த ரசஞ்ஞர் அல்லாதார்க்கும் அஞ்ஞானாதி தோஷங்களை போக்கி புஜிப்பிக்கும் பாவன பூதனாய்
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா–இஷூ ரசம் போலே பர்வம் தோறும் நிரதிசய போக்ய பூதனாய் -அழிந்தாரையும் ஆக்குவதற்கான அம்ருத ரசமாய் –
ஏவம்வித சாரஸ்யத்துக்கு ஆஸ்ரயமான கார் காலத்திலேயே மேகம் போலே உதார விக்ரஹ யுக்தனாய் –
அவ்வடிவு அழகோடு எனக்கு அனுபாவ்யன் ஆகைக்கு ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனே
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–இப்படி நிரதிசய போக்ய பூதனான உன்னை ஒழிந்தால் எனக்கு சத்தை இல்லை காண் –
வ்யதிரேகத்தில் அழியும்படியான என்னை -வ்யதிரேகத்தில் அழிக்கும் படியான போக்யதையை யுடைய நீ -இரண்டு தலையையும் அறிந்து திரு உள்ளம் பற்ற வேணும் –

——————————————————-

அநந்தரம் – இவ்வனுபவம் தமக்குக் கைவந்த படியை அருளிச் செய்கிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் –உறியில் சேமித்து வைத்துக் கொண்ட வெண்ணெயையும் பாலையையும்
உடையவர்கள் அறியாமல் க்ருத்ரிமத்தாலே புக்கு அமுது செய்த செயலாலே அடிமை கொண்ட ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –பின்னே -அவ்வபதானத்துக்குத் தோற்று -அவன் போன வழியே போய்த் திரிகிற
நெஞ்சை யுடையேனாய் -ஜென்ம ப்ரயுக்த துரிதங்களை காற்கடைக் கொண்டு அநாதரித்து –
குறிக் கொள் – -கர்த்ருத்வாதி தியாகத்தாலும் யம நியமாதிகளாலும் குறிக் கொள்ளப் படுவதான
ஞானங்களால்—வேதன த்யான உபாசனை ரூப பாவ பேதங்களாலும் சத் வித்யா தஹர வித்யாதி வ்யக்தி பேதங்களாலும் பல வகைப்பட்ட ஞான யோகங்களால் –
எனை யூழி செய்தவமும்-ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -என்றும் -பஹு நாம் ஜென்ம நாமந்தே-என்கிறபடியே அநேக காலங்களிலே செய்யப்பட
பக்தி யோகமாகிற தபஸ்ஸினுடைய பலத்தை
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்–பகவத் கிருபையாகிற நல் விரைகைக் கொண்டு இஜ் ஜென்மத்தில்
அல்ப காலத்திலேயே அனுபவத்துக்கு அடைவில்லாத நான் கிட்டப் பெற்றேன் –
கிறி -விரகு –

————————————————————————-

அநந்தரம் இப்படி அவன் குணங்களை அனுபவித்து ஆனந்தி யானேன் -என்கிறார் –

டிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

டிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் –பரிமளம் ப்ரவஹியா நிற்கிற செவ்வித் திருத் துழாயை யுடையனாய்க் கொண்டு -ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனாய் –
விண்ணவர் பெருமான்—இவ் வடிவு அழகை அனுபவிக்கிற பரமபத வாசிகளுக்கு அவ்வருகான மேன்மையுடைய தனக்கு
படிவானம் இறந்த பரமன் –வானம் படி இறந்த -பரமபதத்தில் ஒப்பு இல்லையாகையாலே -பரமன் -தனக்கு மேல் இல்லையான்னு பெரியவனாய் –
பவித்ரன் -இப்பெருமை அறியாதார் அறிவு கேட்டையும் போக்கி அனுபவிப்பிக்கும் பாவன பூதனுடைய
சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி–பரதவ ஸுலப்ய போக்யத்வ பாவானத்வ ப்ரகாசகமான குணங்களில் -ஒன்றோடு ஓன்று மிடைந்து
தூறு மண்டினால் போலே இருக்கிற விஷய ருசி தொடக்கமான மஹா வியாதிகள் வசிக்கும் படி -கிட்டி –எங்கும் உடப்புக்கு-முழுகி –
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –அவனை ஒழியச் செல்லாதபடி அநந்யார்ஹனான நான் பூஜிக்கைக்கு உபகரணமான அபி நிவேசமாகிற
வாயை மடுத்து பெரு விடாயான் தண்ணீர் குடித்தால் போலே நிரம்ப பூஜித்து நிரதிசயமான ஆனந்தத்தைப் பெற்றேன் –
படி வானம் இறந்த -என்று வடிவு அழகுக்கு மேகம் ஒப்பு அல்ல -என்றுமாம் –

————————————–

அநந்தரம் -ஏவம்வித போக ஆனந்தத்துக்கு முக்கிய போக்தாக்கள் ஸூ ரி களாகையாலே அவர்களோடு கூடுகையை அர்த்திக்கிறார்-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று–விஷய லாபத்தில் களிப்பும் -தத் அலாபத்தில் அபி நிவேசமும் அற்று -அதுக்கு அடியான
ஜென்ம வியாதி ஜரா மரணங்களும் அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் –ஆவிர்பூ தமான ஞானாதிகள் ஆகிற ஒளிகளுக்கு ப்ரகாசகமான ஜ்யோதிர்மய விக்ரஹத்தை யுடையோமாய்க் கொண்டு –
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி–வர்ஷிக்கிற ஆகாசத்தையும் பாத்தாலே தரிக்கிற பூமியையும் -பாதக ரஹிதமாம்படி
பேர் ஒளியையுடைய திரு வாழியையும் திருச் சங்கையும் ஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -ரஷித்து அருளுகிற மஹா உபகாரகனுடைய நித்ய தாஸ்ய ஏக நிரூபணீயரான ஸூரி களுடைய சங்கங்களை –
உடன் கூடுவது என்று கொலோ–ஒரு நீராம்படி உடன்பட்டு கூடுவது என்றோ –
ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வ பாவரானவர்க்கு ப்ராப்யம் அடியாராக ஸூரி கள்-என்று கருத்து –

——————————————–

அநந்தரம் -இத்திருவாய் மொழியைப் பாடி பரஸ்பர சங்கதராய் சங்கீ பவித்து -ப்ரீதி பிரேரிதராய் அர்த்தியுங்கோள் -என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்–பாதகரான ராக்ஷஸரைத் திரள் திரளாக உடையனாய் இருக்கிற
பெருமையை யுடையனான ராவணன் ஆகிற ராக்ஷஸனுடைய குலம் அகப்பட வசிக்கும் படி முனிந்து அருளினவனை –
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த–ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளை யுடைதான திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் ஆராய்ந்து அருளிச் செய்த –
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி–பத்தான திரள்களை வடிவாக யுடைத்தான ஆயிரம் திருவாய் மொழியிலும் –
இவை பத்தையும் அர்த்தத்தோடு உடன் பட்டு -ப்ரீதிக்குப் போக்கு வீடாகப் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –பரஸ்பர சம்ஸ் லிஷ்டராய்க் கொண்டு பல திரளாய் அடியீரான உங்கள் ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாம் படி ஏக கண்டராய்
ஸம்ஸலேஷித்து இடைவிடாதே நின்று ச சம்ப்ரமநிருத்தம் பண்ணப் பாருங்கோள் —
இது கலி விருத்தம் –

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-3-

September 25, 2017

ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –
இப்படி ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமாக வந்து தோற்றி அருளினவன் தம்மோடு கலந்து அருளின படியைச் சொல்லுகிறார் –

—————————

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக போகனாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் எனக்கு ஸ்வாமியாய் இருந்த எம்பெருமான் தானும் -யானும் -எல்லாப் படியாலும்
இந்தக் கலவியினுள்ளே எல்லா ரசனைகளும் யுண்டாம்படி கலந்து ஒழிந்தோம் –திரு நாட்டிலே சென்றால் ரசிக்கக் கடவ பகவத் ஏக போகத்வத்தை இந்த ப்ரக்ருதியிலே
இருந்து வைத்தே பெற்று வாழுகிற நெஞ்சே உன்னைப் பெற்றே இந்த ஸம்ருத்தி எல்லாம் விளைந்தது -நல்லை நல்லை -என்று நெஞ்சைக் கொண்டாடுகிறார் –

——————————————

இப்படி நெஞ்சைக் கொண்டாடி எம்பெருமான் தமக்குச் செய்து அருளின ஸம்ருத்தியை அவன் தனக்குச் சொல்லிக் கொண்டு அனுபவிக்கிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

நிரஸ்த சாமாப்யதிகனாய் -ஆச்சர்ய பூதனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித ஜனங்கள் எல்லோரோடும் சஜாதீயனாய் வந்து பிறந்து அருளி -அவர்களுக்கு அத்யந்த ஸூலபனாய் இருந்து
எனக்கு அவ்வளவு அன்றியே ஒருவன் தான் தனக்குச் செய்யும் நன்மையையும் -மாதா புத்ரனுக்குச் செய்யும் நன்மையும்-பிதா புத்ரனுக்குச் செய்யும் நன்மையும்
ஆச்சார்யன் சிஷ்யனுக்குச் செய்யும் நன்மையும் செய்து அருளினாய் -இன்னம் அடியேன் திறத்து நீ செய்து அருளினவற்றுக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்கிறார் –

——————————————————-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

தம் திறத்தில் எம்பெருமான் செய்து அருளின நன்மைகளை பேசுகிறார் –

——————————————-

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

இப்படி எம்பெருமானோடு கலந்த கலவியால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே அறிவு அழிந்து -இவ்வாத்மா தம்முடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல்லுதவிக் கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா அடிமையாகக் கொடுத்து பின்னையும் –
தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -தருகிற நான் ஆர் -தரப் புகுந்த இவ்வாத்மா ஆர் –
பண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டு அருளினாய் அத்தனை இ றே -என்கிறார் –

———————————————

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

அநாஸ்ரிதர் எத்தனையேனும் உத்க்ருஷ்டரே யாகிலும் அவர்களுடைய ஞானங்களுக்கு அகோசரனாய் –அநந்ய பக்திகளாய் இருப்பார்க்குப் பரம ஸூலபனாய் –
தாதருச பக்தி ஹீனனாய் இருக்கச் செய்தே-எனக்கு அத்யந்த சித்த போக்யனாய் சமுத்ரத்திலே அழுந்திக் கிடக்கிற ஆத்ம வர்க்கத்தை
நிர்ஹேதுகமாக எடுத்து உஜ்ஜீவிப்பித்தால் போலே உன்னுடைய கிருபையாலே அநந்ய கதியாய் இருந்த என்னுடைய உஜ்ஜீவன ஹேது பூதனானவனே –
உன் திருவடிகளை இனி ஒரு நாளும் பிரியாது ஒரு படி சேர்ந்தேன் -என்கிறார் –

————————————————

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

போன காலமும் ஸம்ஸ்லேஷித்தோம் -என்று தமக்குத் தோற்றும்படி எம்பெருமானோடே தாம் ஸம்ஸ்லேஷிக்கையாலே –ஆஸ்ரிதருடைய ஸ்வ விஷய திவ்ய ஞான
விரோதி பாபங்களுக்கு நஞ்சாய் -அவர்களுக்கு ஸ்வ விஷய த்ருட ஞான பிரதனாய் -இப்படி தன்னுடைய ப்ரஸாதத்தாலே லப்த ஞானராகையாலே –
சம்யக் வியவஸ்திதராய் இருந்தவர்களை சம்சாரத்தில் புகை விடாதே அவர்களோடு பிரியாதே ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –
ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வபாவனுமாய் இருந்த உன்னோடு இன்றோ அடியேன் ஸம்ஸ்லேஷிக்கப் பெற்றது -இவ்வாத்மா உள்ளவன்றோ பெற்றேன் அன்றோ -என்கிறார் –

—————————————————–

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

சர்வ கரணங்களுக்கும் நிரவதிக போக்ய பூதனாய் -உன் திருவடிகளுக்கு நல்லராய் இருப்பார் எல்லாருக்கும் உன்னைக் கொடுக்கும் ஸ்வ பாவனாய் –
அவர்களுடைய த்வத் அனுபவ விரோதி சர்வ தோஷ நிராசன ஸ்வ பாவனாய் இருந்த உன்னை எனக்கு நிர்ஹேதுகமாகத் தந்து அருளினாய் –
நீ அல்லது எனக்கு ஒரு தாயகம் இல்லை -இனி என்னைக் கைவிடாதே கிடாய் -என்று கொண்டு –
எம்பெருமானோடு தமக்கு வ்ருத்தமான சம்ச்லேஷத்துக்கு பங்கம் வருகிறதோ என்னும் அதி சங்கையாலே எம்பெருமானை அபேக்ஷிக்கிறார் –

———————————————–

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

தாம் இப்படி எம்பெருமானை அபேக்ஷிக்க -அவனும் -நாம் விஸ்லேஷிக்க பிரசங்கம் என் -என்று அருளிச் செய்ய
தாமும் நிவ்ருத்தாதி சங்கராய்க் கொண்டு அதி துஷ்கரமாய் அநேக கால ஸாத்யமான கர்ம யோக ஞான யோக சஹ்ருத பக்தி யோக ஸாத்யமான
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் அனுபவத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலேயே அயத்நேந நான் பெற்றேன் -என்று
தாம் பெற்ற ஸம்ருத்தியைச் சொல்லி அனுபவிக்கிறார் –

—————————————

டிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

நிரவதிக போக்ய பூதனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- திரு நாட்டிலும் கூடத் தன்னோடு ஒத்தாரையும் மிக்காரையும் உடையவன் அல்லாமையாலே -பராமனாய் –
ஸ்வ ஆஸ்ரிதருடைய ஸ்வ சம்ச்லேஷ விரோதி சர்வ தோஷங்களையும் போக்கும் ஸ்வ பாவனாய் இருந்த எம்பெருமானுடைய கல்யாண குணங்கள் ஆகிற
அம்ருத வெள்ளத்திலே என்னுடைய விடாய் எல்லாம் கெடும்படி போய்ப் புக்குப் படிந்து குடைந்தாடி வாய் மடுத்துப் பருகிக் களித்தேன் -அடியேன் -என்கிறார் –

————————————————————–

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

இப்படி எம்பெருமானுடைய குணங்களாகிற அம்ருதத்தை புஜிக்கிற ஆழ்வார்-இந்த அம்ருதத்தை நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகனாய்க் கொண்டு
பகவத் குணைக போகரான நித்ய சித்த புருஷர்களுடைய திவ்ய பரிஷத்திலே சென்று அவர்களோடே கூட நான் புஜிப்பது என்றோ -என்கிறார் –

————————————————

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

சா புத்ர ஜன பாந்தவமாக ராவணன் மடியும் படி சிவந்தவனை உள்ளபடி கண்டு சொன்ன இத்திருவாய் மொழியை
பகவத் ஏக போகராய் இருப்பார் எல்லாரும் கூடி புஜ்ஜியுங்கோள் என்கிறார் –

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-2-

September 24, 2017

திண்ணன் வீடு -பிரவேசம் –
இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –

————————————

முதல் பாட்டில் -ஸ்ரீ கிருஷ்ணனே சர்வ நிர்வாஹகன் -என்கிறார் –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்–திண்மையை யுடைத்தாய் -விலக்ஷணமான மோக்ஷம் முதல் -சகல ப்ரயோஜன நிர்வாஹகனாய் –
எண்ணின் மீதியன் எம்பெருமான்–நினைவுக்கு அவ்வருகான அபரிச்சின்ன ஸ்வ பாவனாய் -இம் மேன்மையைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியாய் –
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட –பூமியும் ஊர்த்தவ லோகமும் ஓன்று ஒழியாமல் தாரதம்யம் இல்லாத படி ஏக உத்யோகத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளி –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –நம் ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவாவதரித்து நமக்கே தன்னைத் தந்து அருளிய ஸூலபனே –
ஜகத்துக்கு நிர்வாஹகன் -அல்லது ஒரு நிர்வாஹக வஸ்து இல்லை –
கண் –களைகண் / திண்ணன் -என்றது திண் -நல் என்றும் நிச்சிதம் என்றுமாம் –

———————————————–

அநந்தரம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேது ஸ்ரீ கிருஷ்ணனே -என்கிறார் –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-அறப் பெரிதான குரு பாதகம் விட்டுப் போம்படி ருத்ரனுக்கு பிஷா பிரதானம் பண்ணினவனாய் –
கோபால கோளரி யேறன்றியே –கோப குலத்திலே பிறந்தார்க்குள் ஸிம்ஹ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ கிருஷ்ணன் அன்றி-
யேழு லகும்-ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார் -சர்வ லோகத்தையும் நசித்த பாபத்தை யுடைத்தாம்படி பண்ணி –
தன் கிருபையாலே அபிமதங்களைக் கொடுத்து ரஷிப்பார் ஆர் –
ஏ பாவம் பரமே-என்ன பாவம் இருந்த படி -இவனுடைய சர்வாதிகத்வம் சொல்லுதல் நமக்கு பரமாவதே —
ஏ -என்று வெறுப்பைக் காட்டுகிறது –

————————————————————–

அநந்தரம் -இவனே சர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை-ருஷப வாஹனான ருத்ரனையும் -கமல ஆஸனனான ப்ரஹ்மாவையும் -பத்ம வாஸினியாய் தனக்கு அசாதாரணமான பிராட்டியையும்
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து–தன் திரு மார்பில் வைத்ததில் காட்டில் வேறு தோன்றாத படி தன் திருமேனிக்குள்ளே –
இந்த சீலம் அறிந்த பரமபத வாசிகள் தன்னைத் தொழும் படி வைத்து –
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட–ஊர்த்வ லோகத்தை கீழ்த்தும் படி வளர்ந்து பூமியை அளந்து கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–-பெரியவனை மிகுத்து இருப்பது ஒரு தேவதா தத்துவமும் உண்டோ –
ஏகாரம் -வினா –

———————————————-

அநந்தரம் -ஆராத்யதைக்கு ஈடான ஆதிக்யம் அவனுக்கு ஒழிய இல்லை -என்கிறார் –

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தேவும் எப்பொருளும் படைக்க-தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டிக்கைக்காக –
பூவில் நான்முகனைப் படைத்த–திரு நாபி கமலத்திலே சதுர்முகனான ப்ரஹ்மாவை படைத்த –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்-பரதேவதையான ஏன் நாயகனுக்கு அல்லது –
பூவும் பூசனையும் தகுமே –புஷபாத் யுபகாரமும் -ஆராதன யுபகாரமும் -வேறு சிலர்க்குத் தகுமோ –தகாது -என்று கருத்து –

———————————————-

அநந்தரம் -இப்பரத்வ ஸூசுகமான புண்டரீகாக்ஷத்வத்தை அருளிச் செய்கிறார் –

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

தகும் சீர்த் –ஸ்ருஷ்ட்டி யாதிகளுக்கு தகுதியான -ஞான சக்தி யாதிகளை யுடையனான –
தனி முதலினுள்ளே- தன்னுடைய அத்விதீயமான ஜகத்துக்கு மூலமான சங்கல்பத்துக்குள்ளே –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க-ஈஸ்வரன் என்று சங்கிக்கலாம் படி மிக்க -ப்ரஹ்ம ருத்ராதி தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் -ஸ்ருஷ்டிக்க –
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்–இவன் தனக்குத் தகும்-என்ன ஸூசகமான அழகிய தாமரை போன்ற கண்களை யுடைய என் ஸ்வாமியானவனைக் காட்டிலும்
மிகும் சோதி மேலறிவார் யவரே –பரஞ்சோதிஸ்ஸூ இதுக்கு மேல் ஒரு தத்துவம் உண்டு எண்டு வைதிகரிலும் அறியார் ஆர் –
உண்டு என்று அறிவார் அவைதிகர் என்று கருத்து –

——————————————————————–

அநந்தரம் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினார் -என்றுமாம் –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–எல்லா சேதனரும் எல்லா அசேதனங்களுமாகிற ஸமஸ்த பதார்த்தங்களும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற–சோர்வின்றி தன் ஸ்வரூப ஏக தேசத்திலே அடங்கும்படியாக நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி-பரப்பை யுடைத்தான ஞான வெள்ளத்தை தனக்கு ப்ரபையாக யுடைய ஸ்வாமிகளான
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –சர்வாதிகாரனவர் நமக்கு போக்யமாய் தர்ச நீயமான ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளுகிறார் –
கவர்வு -சோர்வு / பவர்வு-பரப்பு / சுடர் மூர்த்தி -விக்ரஹமாகவுமாம் –

———————————————–

அநந்தரம் வட தள ஸாயித்வ ரூபமான -அகடிதகடநா சாமர்த்யத்தாலே அவன் பரத்வம் துர் அவபோதம் -என்கிறார் –

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்-படுக்கை ஆலிலையாக எல்லா லோகத்தையும் கொள்ளுகைக்கு இடம் கொடுக்கும் –
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்–உதார குணத்தையும் சக்தியையும் யுடைத்தான திரு வயிறையும் யுடைய சர்வாதிகனானவனுடைய
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்-கள்ள மாய மனக் கருத்தே –ஒருவருக்கும் தோன்றாதே ஆச்சர்யமான மானஸ வியாபாரம் –
ஜெகதர்த்தமான ரக்ஷண சிந்தா வியாபாரம் -மானஸ வியாபாரத்தாலே அறியுமாவார்கள் ஆர் –
எவர்க்கும் அறிய அரிது -என்று கருத்து –

———————————————

அநந்தரம் -சர்வ பிரகார ரக்ஷகன் அவனே -என்கிறார் –

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்–வருத்தித்த- மாயப்பிரானை யன்றி யாரே– தன் நினைவாலே தேவ வர்க்கமும் மனுஷ்யாதி சகல பதார்த்தங்களும்
சத்தை பெற்று அபி வ்ருத்தமாம் படி உண்டாக்கின -ஆச்சர்ய சக்தியாதிகளை யுடைய ஈஸ்வரனை ஒழிய ஆர் தான்
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்-இருத்திக் காக்கும் இயல்வினரே –ஸமஸ்த லோகத்தையும் திண்ணிதான நிலையை யுடைத்தாம் படி
அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளாலே திருந்தச் செய்து தம் நினைவுக்குள்ளே அவற்றை ப்ரதிஷ்டித்தமாக்கி ரசிக்கும் ஸ்வ பாவத்தை யுடையார் –
ரக்ஷண ஏக ஸ்வ பாவன் அவனே என்று கருத்து

————————————————

அநந்தரம் -இந்த ரக்ஷணத்தோ பாதி ஜகத் உத்பத்தி சம்ஹாரங்களும் தததீனம் -என்கிறார் –

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்–ரக்ஷணத்தை ஸ்வ பாவமாக யுடைய ஸ்ரீ கிருஷ்ணனான சர்வேஸ்வரன் –
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே–ஸம்ஹ்ருதி சமயத்திலே நாம ரூப விபாக ரஹிதமாய் -தம ஏகீ பவதி-என்கிறபடியே சேரும்படி பண்ணி தன் திரு நாபிக்குள்ளே –
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்–ஸ்ருஷ்டிக்கு வாய்த்த சதுர் முகன் இந்திரன் தேவர்கள் –
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –அவர்களுக்கு வாசஸ் ஸ்தானமான திவ்ய லோகங்கள் -இவற்றை உண்டாக்கிப்பினான் –
உந்தியுள்ளே பிறந்த திசைமுகன் -என்றுமாம் –

————————————————-

அநந்தரம் சர்வ ஸ்மாத் பரனாகையாலே சர்வ தேவதா ஸமாச்ரயணீயன் அவனே -என்கிறார் –

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ என்று–அவதார முகத்தால் ஆதிக்யத்தை மறைக்கும் க்ருத்ரிமனே –
எம்மையும் ஸமஸ்த லோகங்களையும் உன்னுடைய சங்கல்பத்துக்குள்ளே தோன்றுவித்த ஸ்வாமியே
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்-புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–வெளுத்த ஏற்றையுடைய ருத்ரனும் சதுர்முகனும் இந்த்ரனும்-
ஸ்வர்க்க வாசிகளும் கருட வாஹனனுடைய திருவடிகளை ப்ரணாமம் பண்ணி ஸ்துதியா நிற்பர்கள் –
இத்தால் தர்ம பர்யாய வ்ருஷ வாஹநத்வத்தாலே ருத்ரனுடைய கர்ம வஸ்யத்தையும் -வேத மயமான கருடன் வாஹனமாகையாலே
ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது-

——————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலமாக சர்வ பிரகார வைக்ல்யா ராஹித்யத்தை அருளிச் செய்கிறார் –

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்-லௌகீகர் ஏத்துகிற இதுவே விளை நீராக ஸமஸ்த லோகத்தையும் அளந்து கொண்ட
வடிவழகையும் வல்லார் ஆடினால் போலே அளந்து -அநாயாசத்தையும் உடையவனை -ஆழ்வார் அருளிச் செய்த
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்-ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –லோகத்துக்கு அலப்ய லாபமான ஆயிரத்தில் இவை பத்தையும்
அர்த்தத்தோடு உடன்பட்டு ஸ்துதி ரூபமாகச் சொல்ல வல்லவர்க்கு -தேவதாந்த்ரங்களினுடைய உத்கர்ஷ புத்தியும் -அவர்களோடு உண்டான சாம்யா புத்தியும் –
அவர்களில் நிகர்ஷ புத்தியுமாகிற குறைவுகள் ஒன்றும் -இல்லை
ஊனம்-குறைவு / சொல் வாய்ந்த -என்று அர்த்த ப்ரதிபாதன சாமர்த்தியம் ஆகவுமாம் /ஏழுலகு என்று கீழும் மேலும் கூட்டுகிறது
இது கலி விருத்தம் –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-2-

September 24, 2017

திண்ணன் வீடு -பிரவேசம் –
இப்படி ப்ரஸ்துதமான ஸர்வேச்வரத்வத்தை தம்முடைய ப்ரீதி அதிசயத்தாலே சஹேதுகமாக உபபாதிக்கிறார் –

—————————

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

மோஷாத் அசேஷ புருஷார்த்த பிரதனாய் வாங்மனஸ அபரிச்சேத்ய கல்யாண குணங்களை யுடையனாய் -எனக்கு ஸ்வாமியாய் -சர்வாத்ம சம்ரக்ஷகனாய் இருந்த
வண் துவரைப் பெருமாளே-4–6–10- இஜ் ஜகத்தில் ஈஸ்வரன் -மற்று ஈஸ்வரன் இல்லை -இதில் ஒரு சம்சயம் இல்லை -என்கிறார் –

———————————————

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

இஜ் ஜகத்துக்கு வேறு ரக்ஷகன் இல்லையோ -என்னில்-நஹி பாலான சாமர்த்யம்ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்-என்று கொண்டு -ருத்ரனுடைய மஹா பாபத்தைப் போக்கி
அவனை ரஷித்து அருளின பரம காருணிகனாய் இருந்த கோபால கோளரியேறு அன்றி -இந்த சர்வ லோகங்களிலுடைய பாபத்தைப் போக்கி
ரஷிப்பார் உளரோ -ரஷிக்க வல்லார் தான் உளரோ -இது உபபாதிக்க வேணுமோ -என்கிறார் –

——————————————-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

அயர்வறும் அமரர்கள் தன்னுடைய ஸுசீல்ய குணத்தைக் கண்டு தொழுகைக்காக சர்வேஸ்வரியான பெரிய பிராட்டியாரோடு ஓக்க அத்யந்தம் அபக்ருஷ்டரான
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன்னை ஆஸ்ரயமாகக் கொடுத்துக் கொண்டு இருக்கையாலும்-சர்வ லோகங்களும் திருவடிகளினுள்ளே அடங்கும் படி
அளந்து அருளுகையாலும் இவனே சர்வேஸ்வரன் -மற்று இல்லை –என்கிறார் –

————————————————-

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

சதுர்முகாதி சகல பதார்த்த ஸ்ருஷ்ட்டி லீலனாய் -தன்னுடைய ஸுந்தர்ய குணத்தால் எனக்கு ஸ்வாமியாய் இருந்த
எம்பெருமான் அல்லது சர்வேஸ்வரனும் -அழகியாரும் -உளரோ -என்கிறார் –

—————————————————————-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு உசிதமான கல்யாண குணங்களை யுடையனாய் ஸ்வ சங்கல்ப கல்பித நிகில ஜகத்தை யுடையனாய் –
தன்னுடைய சர்வேஸ்வரத்வ உசிதமான அழகிய திருக் கண்களை யுடையனாய் இருந்த
எம்பெருமானுடைய திருமேனியின் அழகு ஒருவர்க்கு நினைக்க நிலமோ -என்கிறார் –

————————————————————

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

அசம்பாதகமாகத் தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தையும் யுடையனாய் ஸ்வாபாவிக சார்வஞ்ஞத்தை யுடையனாய்
ஷீரார்ணவ நிகேதனான வண் துவரைப் பெருமானே சர்வேஸ்வரன் -என்கிறார் –

———————————————–

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-

சர்வ லோக அவகாச பிரதத்வ பரம உதார குணத்தை யுடைத்தாய் -சர்வ லோக பரண சமர்த்தமாய் இருந்த தன் வயிற்றிலே சர்வ லோகத்தையும்
வைத்துக் கொண்டு ஆலிலையில் கண் வளர்ந்து அருளுகிற இவனுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு யுண்டோ -என்கிறார் –

—————————————

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்கள் பின்ன கர்த்ருகம் அல்லவோ -இவற்றைப் பரம புருஷ ஏக கர்த்ருகமாகச் சொல்லுவாருண்டோ என்னில் –
பெற்ற மாதாவே புத்ர ரக்ஷணம் பண்ணுகிறாப் போலே-ஸ்ருஷ்டித்தவனே ரஷிக்க பிராப்தம் -ஆதலால் ரசிக்கிறான் பரம புருஷனே –
ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்கள் இரண்டும் பரம புருஷ ஏக கர்த்ருகம் -என்கிறார் –

———————————————-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

கேவலம் ஸ்ருஷ்ட்டி மாத்திரமே அன்று -பரம புருஷ கர்த்ருகம் -ப்ரஹ்மாதி ஸ்தம்ப பயந்த சர்வ ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும்
பரம புருஷ கர்த்ருகம் -ஆதலால் அவனே சர்வேஸ்வரன் -என்கிறார் –

———————————————-

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

இப்படி சதுர்முக பஸூபதி சதா முக ப்ரப்ருதி தேவர்களுக்கும் எம்பெருமானே காரண பூதனுமாய் ஈஸ்வரனுமாய் இருக்கும்
என்னும் இடத்தில் பிரமாணம் என் என்னில் -அவர்கள் தங்களுடைய வாக்யமே பிரமாணம் -என்கிறார் –

———————————-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

சர்வ லோகங்களும் தன்னுடைய விஜயத்தைச் சொல்லிக் கொண்டு நின்று ஏத்த ஏழுலகும் கொண்டருளின இது தொடக்கமாக யுள்ள திவ்ய சேஷ்டிதங்களாலே
எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை ப்ரதிபாதிக்கிற இந்தத் திருவாய் மொழியை இந்த பாவனையோடே கூட
ஏத்த வல்லார்க்கு இனி ஒரு நாளும் எம்பெருமானோடு விஸ்லேஷம் இல்லை -என்கிறார் –

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-1-

September 22, 2017

வாயும் திரையுகளும்-பிரவேசம் –
இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
இது தன்னுடை யாறெய்திடு கிளவி-என்பர் –

————————————————————————

முதல் பாட்டில் -மணியை வானவர் கண்ணனை -1–10–11-என்று கீழே ப்ரஸ்துதமான போக்யதா அதிசயத்துக்கு வர்த்தகமாய் உள்ள ஸ்ரீ மஹா லஷ்மீ சம்ச்லேஷத்தை
அனுசந்தித்து ஈடுபட்ட நாயகி -கடற்கரைக்கு அருகான தன் உத்யானத்திலே இருந்ததொரு நாரையைப் பார்த்து -நீயும் அவனாலே நெஞ்சு பரியுண்டாயோ -என்கிறாள் –

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்–மேன்மேலும் கிட்டுகிற திரையில் அமுங்கி கிடப்பதாய் -கடற்கரையிலே -உன் நினைவு கைவரும் தனையும் -ஓங்கி இருக்கிற நாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்–உறக்கம் இல்லாத தாயும் -உறங்காமை நித்யமான தேவ லோகமும் -உறங்கிலும் நீ உறங்குகிறிலை –ஆதலால் –
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்-உள்ளே நோவும் உண்டாய் அதின் கார்யமான புயலையும் ஆகிற உடம்பில் வெளுப்பு மேலிட்டு வர
அபிமத விஷயமாய் அகப்பட்ட எங்களைப் போலே
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –அதுக்கு அடைவற்று இருக்கிற நீயும் -ராசாத்தி மாத்ரமே ஹேதுவாக ஸ்ரீ யபதியால் நெஞ்சு பறித்துக் கொள்ளப் பட்டாயே –
ஏ -என்னும் அசை -வினா –
இத்தால் -சாம்சாரிக கல்லோலத்தை மதியாது இருப்பார்க்கு உறங்காமையும் ரூப விபர்யாஸமும் பகவத் விஸ்லேஷ ஜெனிதம் என்று இருக்கை –

———————————————

அநந்தரம் ஓர் அன்றிலைப் பார்த்து நீயும் சேஷ சாயியான அவன் திருவடிகளிலே திருத் துழாயை ஆசைப் பட்டாயோ -என்கிறாள் –

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே–பறியுண்ட நெஞ்சை உடையையாய்க் கொண்டு அந்த ஆர்த்தி அடியாக
கத்கதமாகையாலே செறிந்த குரலை யுடைத்தான அன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்–நெடிதான யாமங்கள் -சேர்க்கையில் சேராதே துக்கியா நின்றாய் –ஆதலால் –
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்-அடிமைப்பட்ட எங்களை போலே பிரிவாற்றாமை தோற்றி இருக்கிற நீயும்
திரு அரவு அணையைத் தனக்கு நிரூபகமாக உடையவனுடைய
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –திருவடிகளிலே போக தசையில் மிதி யுண்ட செவ்வியை யுடைய திருத் துழாய் மாலையை -ஆசைப் பட்டாயோ-
வாய் என்று -வாய்மையாய் -குரலைச் சொல்லுகிறது –
கூர்தல் -செறிவு -அன்றியே
கூர்ந்த வாய் -என்று பிரிந்தாரை ஈரும் குரல் -என்றுமாம் –
இத்தால் -ஆர்த்த த்வனி யுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் -என்று இருக்கை —

———————————————

அநந்தரம் -கத்துகிற கடலைப் பார்த்து விரோதி நிவர்த்தகனான அவனுடைய திருவடிகளை ஆசைப்பட்ட என்னைப் போலானாயோ -என்று சொல்லுகிறாள் –

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்-நீ -காமிக்கப் பட்ட போகங்கள் -கைபடாத இழவோடே கூடினால் போலே நீ இராப் பகல்
முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்–முழுக்க கண் உறங்குகிறிலை -அகவாயும் நீராய் -ஏங்கின குரல் இறங்காமல் முழுக்கக் கூப்பிடா நின்றாய் -ஆதலால் –
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த–தென் இலங்கையை முற்ற தீயூட்டினவன் திருவடிகளை ஆசைப்பட்ட –
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –நாங்கள் பட்டது பட்டாயோ -இரைக்கிற கடலே -உன் கிலேசம் தீர்ந்து வாழ்வாயாக –
எல்லே -என்று கடலுக்கு சம்பத்தி யாதல் /என்னே-என்னும் வெறுப்பு ஆதல் –
இத்தால் -மஹத்தையை யுடையார் வாய்விட்டு அலறுவது அவனை பிரிந்தால் என்று இருக்கை –

——————————————

அநந்தரம் விரோதி நிராசன பரிகாரத்தை உடையவனைக் காண வேணும் என்னும் வ்யாசனத்தை
நீ யுற்றனையோ-என்று ஒரு வாடையைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

தண் வாடாய்-ஸந்நிபதித சரீரம் போலே குளிர்ந்து இருக்கிற வாடாய் –
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்–கடலும் மலையும் விசும்பும் தடவிக் கொண்டு –
அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே -என்று ஷீராப்தியிலும் திருமலையிலும் பரமபதத்திலேயும் அவனை ஆராய்கிற-எங்களை போலே
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் –சந்த்ர ஆதித்ய தேஜஸ்ஸூக்களை நிரூபகமாக யுடைய இரவும் பகலும் ஓர் இடத்திலே பர்யவாசித்து உறங்குகிறிலை -ஆதலால் –
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ–மஹா பாராத யுத்தத்தில் ஆயுதம் எடேன் என்று வைத்து எடுத்த திரு வாழியை யுடைய சர்வேஸ்வரனை –
அந்த பீஷ்மர் கண்டால் போலே காண நினைத்து -சர்வ உபகாரகமான நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –கல்ப பேதங்கள் பிறந்து நடந்தாலும் காலமுள்ளதனையும் அவனை ஒருப்பட்டு-
சரீரம் உள்ளதனையும் வ்யாப்தமான வ்யாதியைக் கொண்டாயோ –
உபகார சீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப் பெறாமல் -என்று கருத்து –

———————————————-

அநந்தரம் நீயும் அவன் சக்தி யோகத்தில் அகப்பட்டு சிதிலமாகிறாயோ -என்று ஒரு மேகத்தைக் கண்டு உரைக்கிறாள் –

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

தோழியரும் யாமும் போல்-ஸமான துக்கைகளான தோழிமாரும் துக்கோத்தரைகளான நாங்களும் போலே –
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு-லோகம் நிரம்ப வேண்டும் நீரைக் கொண்டு காலமுள்ளதனையும்
நீராய் நெகிழ்கின்ற வானமே நீயும் மதுசூதன்-ஜலமயமாய் இற்று விழுகிற மேகமே உதார செல்லமான நீயும் -மதுமர்த்தனுடைய
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே-பேறு மிடுக்கிலே அகப்பட்டு அவன் பக்கல் ஸ்நேஹத்தாலே சிதிலமாகிறாயே –
வாழிய-இந்த ஸைதில்யம் தீர்ந்து வாழ்வாயாக –
இத்தால் -உதார ஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத் விரஹ ஜெனிதம் -என்கிறாள் –

————————————————-

அநந்தரம் எங்களைப் போலே அவன் சத்யவாதித்வத்திலே -அகப்பட்டாயோ -என்று ஷீணனான சந்த்ரனைக் குறித்துச் சொல்லுகிறாள் –

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்–நைகையே ஸ்வ பாவமான எங்களை போலே கலா மாத்ரமான சந்திரனே -தேஜோ ரூபமான நீ -இக்காலத்திலே
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்–மாய் போலே இருக்கிற ஆகாசத்தில் இருளை போக்குகிறிலை -மழுங்கி குறையா நின்றாய் -ஆதலால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்–பொய்மைக்குப் பல முகமும் இரண்டு நாவுமுடைய திரு அரவணை மேற்கொண்டு –
பொய்க்குப் பெரு நிலை நிற்கும் திரு வாழியை யுடையராய் -இவர்களைப் பொய் கற்பிக்கும் பெருமையை யுடையவருடைய
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-பெறும் பொய்யான வார்த்தையை கேட்டு உன் வடிவில் உஜ்ஜ்வல ஸ்வ பாவத்தை இழந்தாயோ –
நாண் மதி -புது மதி –
மேய்வான் இருள் -கருத்த பெரிய இருள் -என்றுமாம் –
மாழாந்து -மழுங்கி
இத்தால் -உஜ்ஜ்வல ஸ்வபாவடைய ஓளி மழுக்கம் அவனுடைய யுக்தி வையர்த்ய சங்கா வஹமான விளம்பம் -என்று கருத்து –

————————————————-

அநந்தரம் -நிருபாதிக சம்பந்த யுக்தனானவனைப் பிரிந்து ஆர்த்தையான என்னை உன் ஈடுபாட்டைக் காட்டி நலிவதே -என்று
இருளைக் கண்டு ஈடுபட்டு உரைக்கிறாள் –

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

எம்பெருமான் நாரணற்கு–மட நெஞ்சம்–தோற்றோம் -எங்கள் ஸ்வாமியான நாராயணனுக்கு எங்களுக்கு விதேயமான நெஞ்சை இழந்தோமாய்-அதடியான
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே-எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி அழுகிற எங்களைப் பற்ற –
நீ பாத்ய பாதக சம்பந்தம் அற்று இருக்க -நடுவே புகுந்து –
வேற்றோர் வகையில் கொடியதாய் -சத்ருக்கள் படியிலும் கொடிதாம்படி –
எனையூழி மாற்றாண்மை நிற்றியே -காலமுள்ளதனையும் எங்கள் நோவுக்கு மறுதலையான ஆளாகையாலே நிலை நிற்கிறாயோ –
வாழி கனையிருளே –திணுங்கின இருளே உன் சந்நிதியைக் காட்டி நலியாதே கிலேசம் தீர்ந்து வாழ வேண்டும் –
கனை இருள் -திணுங்கின இருள் –
இவள் நோவுக்கு மறுதலையான ஆளாகையாவது -இருள் தானும் ஈடுபடுகை–
இதன் கருகுதல் விரஹத்தாலே என்று நினைத்து பொறுக்க மாட்டாமல் உரைத்தால் ஆயிற்று –
இத்தால் தமஸ் ப்ரக்ருதிகளுடைய மாலினியமும் சர்வேஸ்வரனைப் பிரிந்து என்று இருக்கை –

——————————————

அநந்தரம் -அவன் காருணிக்கவத்திலே நசை பண்ணி ஆழங்கால் பட்டாயோ -என்று கழியைப் பார்த்துக் கலங்கி உரைக்கிறாள் –

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே–இருளினுடைய செறிந்த நிறத்தை யுடைத்தான பெரிய நீரை யுடைய கழியே-
போய் மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-மிகவும் அறிவு கெட்டு அஹோராத்ர ரூபமான காலமும் முடியிலும் நீ உறங்குகிறிலை -ஆதலால் –
உருளும் சகடம் உதைத்த பெருமானார்-உருளுதலை யுடைத்தான சங்கடத்தை திருவடிகளாலே உத்தரித்த பெரியவருடைய
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –கிருபா குணத்திலுண்டான பெரிய ஆசையால் ஆழங்கால் பட்டு நொந்தாயோ –
மா நீர் -என்றது கருத்த நீர் -என்றுமாம்
இத்தால் -ஜல-ஜட -ப்ரப்ருதிகளும் -அவன் கிருபா குணத்திலே அகப்பட்டால் கால் தாழ்வர்-என்று கருத்து –

————————————————————-

அநந்தரம் காம நீய விக்ரஹனானவனுடைய போக்யதா விஷயமான ஆசையால் வெதும்புகிறாயோ -என்று ஒரு விளக்கை உரைக்கிறாள் –

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்–ஒன்றாய் வீவற்ற விளக்கே இப்படி வி லக்ஷணமான நீயும் –
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த-ஈடுபட்டு இருக்கச் செய்தேயும் ஈடுபடுத்துகிறதால் வயிறு நிறையாத காதலாகிற நோயானது
உன் மேனி போலே மெல்லிதான பிராணனையும் உள்ளே உலர்த்தும்படியாக
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்-சிவந்த தாமரை போன்ற பெரிய கண்களையும் -சிவந்த கனி போன்ற வாயையும் யுடையனான
என் ஸ்வாமியானவனுடைய
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –அழகிய திருத் துழாய் மாலையில் யுண்டான ஆசையாலே பரிதபிக்கிறாயோ –
அளியத்தாய்–என்று அருமந்த -எண்ணுமா போலே நன்மையைக் காட்டுகிறது –
இத்தால் -அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் -என்கை –

——————————————————-

அநந்தரம் -இவ்வார்த்தியைக் கண்டு சந்நிஹிதனான சர்வ காரண பூதனாய் யுள்ள ஈஸ்வரனை -நீ என்னை நழுவாதே ஒழிய வேணும் -என்று அபேக்ஷிக்கிறார்

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த–வேவித்து திருப்தமாகாத ஆசையாகிற நோயானது விரஹத்தாலே
பல ஹீனமான ஆத்மாவை கருத்து வற்றாக வற்றுவிக்க
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்-இராப்பகல் இடை விடாதே உன் ஸ்வ பாவங்களில் தாழ்ந்து அகப்படும் படி பண்ணினவனாய் –
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த–உன்னைக் கிட்டுவார்க்கு விரோதியான கேசியாகிற குதிரையின் வாயை பிளந்து –
த்வந்த்வமான பூமியை அளந்து கொண்டு -அத்தாலே
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –இளகிப் பதித்த சர்வ காரண பூதனே -இனி ஒரு காலமும் எங்களை நழுவா விடாது ஒழிய வேணும் –
மூவா முதல்வா -என்றது -நித்ய யவ்வன ஸ்வ பாவனான உத்பாதகன் -என்றுமாம் –
இத்தால் -தம்முடைய அநிஷ்டங்களைப் போக்கி சத்தியை உண்டாக்கின படியை அனுசந்தித்தாறாயிற்று –
இதில் ஏகாரம் -தேற்றம் –

—————————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலம் பரமபத பிராப்தி என்று அருளிச் செய்கிறார் –

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே–ஒன்றும் சோராதபடி எல்லாப் பொருள்களுக்கும் காரண பூதனான பரஞ்சோதிஸ் சப்த வாச்யனுக்கே –
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்–ஒரு காலும் திருப்தி பிறவாத அபி நிவேசத்தை யுடைய ஆழ்வார்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்-அத்விதீயமான ஆயிரமாக சொன்னவற்றுக்குள்ளே அதி ப்ரேம ப்ரகாசகமான இவை பத்தையும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –நழுவ நில்லாதவர்கள் பரமபதத்தை அறுதியாக விடாதவர்கள் கிடீர் –
இது கலி விருத்தம் -நாலடித் தாழிசையுமாம் –

—————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-1-

September 22, 2017

வாயும் திரையுகளும்-பிரவேசம் –
இப்படி நிரவதிக ஸுந்தர்யாதி கல்யாண குண கண பரிபூர்ணனாய் இருந்த எம்பெருமானை ப்ரத்யஷித்தால் போலே தம்முடைய திரு உள்ளத்தாலே அனுபவித்து
பாஹ்ய சம்ச்லேஷத்தில் உள்ள அபேக்ஷையாலே அதிலே ப்ரவ்ருத்தராய் அது கை வராமையாலே அத்யந்தம் அவசன்னராய் அந்யாபதேசத்தாலே ஸ்வ தசையைப் பேசுகிறார் –
பகவத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கையாய் தத் விஸ்லேஷத்தினாலே அத்யந்தம் அவசன்னையாய் இருந்தாள் ஒரு பிராட்டி
ஸ்வ த்ருஷ்ட்டி கோசாரமான பதார்த்தங்களினுடைய ப்ரவ்ருத்தி விசேஷங்களை பகவத் விஸ்லேஷ ஜெனித துக்க ஹேது கமாக ஸ்வ ஆத்ம அனுசந்தானத்தாலே
அனுசந்தித்து -அந்தச் சேதன அசேதன பதார்த்தங்களைக் குறித்து நீங்களும் நான் பட்டது பட்டிகள் ஆகாதே -என்கிறாள் –

———————————–

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரைகள் உகளுகிற கழியிலே வர்த்திக்கிற மட நாராய் -நீ உறங்கிலும் உறங்காத உன்னுடைய தாய்மாரும்
ஸ்வபாவத ஏவ உறங்காத தேவா லோகமும் உறங்கிலும் நீ உறங்குகிறிலை–ஆதலால் விரஹ வ்யாஸன வைவர்ண்யத்தாலே
அபிபூதையான என்னைப் போலே நீயும் எம்பெருமானை ஆசைப் பட்டாய் ஆகாதே -என்கிறாள் –

———————————————-

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கூர்வாய அன்றிலே–அபஹ்ருதமான நெஞ்சை யுடையையாய் நீளியவான ராத்ரிகளில் உறங்காதே இரங்கா நின்றாய் –
நீயும் என்னைப் போலே பெரியபெருமாள் திருவடிகளில் திருத் துழாயை ஆசைப்பட்டாய் யாகாதே -என்கிறாள் –

———————————————-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

எம்பெருமானை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நீ இரவு பகல் எல்லாம் கண் துயிலாதே நெஞ்சுருகி ஏங்கா நின்றாய்-
தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினவன் திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே -ஐயோ கடலே -என்கிறாள் –

——————————————

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

என்னைப் போலே -எங்குற்றாய் எங்குற்றாய் எம்பெருமான் -என்று கடலும் மலையும் விசும்பும் துழாவி இராப் பகல் உறங்குகிறிலை –
நீயும் எம்பெருமானுடைய திரு வாழியும் கையையும் காண ஆசைப்பட்டுப் பெறாமையாலே
காலதத்வம் எல்லாம் உடலம் நோயுற்றாய் யாகாதே -தண் வாடாய் -என்கிறாள் –

——————————————————–

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

லோகம் எல்லாம் நிறையும்படி இக்காலம் எல்லாம் நின்று நீராய் உருகுகிற வாழிய வானமே -நீயும் எங்களை போலே
எம்பெருமானுடைய குண சேஷ்டிதங்களிலே அகப்பட்டு -அவன் பக்கலுள்ள சங்கத்தாலே இப்படி நைந்தாயாகாதே -என்கிறாள் –

——————————————–

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

நாண் மதியே -நீ இந்நாள் வழிதான் இருளை அகற்றுகிறிலை–மழுங்கித் தேயா நின்றாய் -நைவும் தானாய் இருந்த என்னைப் போலே நீயும் –
பேதை நின்னைப் பிரியேன் -பெரிய திரு மொழி -9–3–3-என்றும் -ஏதத் விரதம் மம-என்றும் -மா ஸூச -என்றும் -எம்பெருமான்
அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு -திருவனந்த ஆழ்வான் தொடக்கமாக யுள்ள திவ்ய புருஷர்களோடே பழகி வர்த்திக்கிற இவன்
மெய்யல்லது சொல்லான் -என்று கொண்டு அவ்வார்த்தையை விஸ்வஸித்து அகப்பட்டாயாகாதே -என்கிறாள் –

——————————————————–

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

எம்பெருமானுடைய ஆஸ்ரித ஸூலபத்வாதி குணங்களாலே அவனுக்குத் தோற்று அடிமையானோம் -ஆதலால் -அவனைப் பிரிந்த வ்யசனத்தை
ஒன்றும் பொறுக்க மாட்டுகிறிலோம்-என்று சொல்லிக் கொண்டு அழுகிற எங்களை நீ
நடுவே சத்ருக்களிலும் கொடியையாய் நின்று எத்தனை காலம் பாதிக்கக் கடவை-கனை இருளே -என்கிறாள் – –

——————————-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்-அறிவழிந்து இராப்பகல் முடியிலும் நீ உறங்குகிறிலை -நீயும் என்னைப் போலே
உருளும் சகடம் உதைத்த பெருமானாரோடே ஸம்ஸலேஷிக்கையில் உள்ள அபி நிவேசத்தாலே ஆழாந்து நொந்தாயாகாதே -என்கிறாள் –

———————————————-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நந்தா விளக்கே -இப்பாட்டு படுகைக்கு ஈடு அன்றியே இருந்த நீயும் -என்னைப் போலே கால தத்வம் எல்லாம் அனுபவித்தாலும் ஆராத காதல் நோயானது
உன்னுடைய மெல்லாவியை உள்ளுலர்த்த -செந்தாமரைத் தடம் கண் செங்கனி வாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாயினுள்ளே ஆசை யாகிற மஹா அக்கினியால் வேவா நின்றாய் ஆகாதே -என்கிறாள் –

————————————-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

அதாஹ்யமான என்னுடைய மெல்லாவி முடிந்தாலும் தவிராதே நின்று வேட்க்கை நோயானது தஹிக்கும் படி உன்னுடைய குண சேஷ்டிதங்களாலே என்னை ஓவாதே
இராப்பகல் உன் பக்கலிலே விழுந்து கிடக்கும் படி பண்ணினாய் -இனி அடியேனைச் சொர விடாது ஒழிய வேணும் -என்கிறார் –

——————————————–

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

இப்படி எம்பெருமானைப் பிரிந்த வ்யசனத்தாலே முடியப் புகுகிற தம்மை உஜ்ஜீவிப்பைக்காக வந்து தோற்றி அருளின எம்பெருமானைக் கண்டு தாமும் உஜ்ஜீவித்து
ஸ்வ உஜ்ஜீவனத்தாலே எம்பெருமான் ஸர்வேஸ்வரத்வம் அவிகலமான படியைக் கண்டு ப்ரீதராய் -அடியேன் இவனுடைய ஸர்வேஸ்வரத்வம்
அவிகலமாகப் பெற்றேன் ஆகாதே -என்று உகந்து கொண்டு எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை அனுபவித்து இப்படி சர்வேஸ்வரனாய் இருந்த
எம்பெருமான் பக்கலுள்ள நிரவதிகமான ஆசையாலே சொன்ன இத்திருவாய் மொழியை விடாதார் ஒரு நாளும் எம்பெருமானைப் பிரியார் -இது நிச்சிதம் -என்கிறார் –

——————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -1-10-

September 21, 2017

பொரு மா நீள் படை -பிரவேசம் –
பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி -அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து
அதுக்கு உபபாதகமாக-1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –4-நிரந்தர அனுபாவயதையும்–5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் -7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் -8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்

———————————————————–

முதல் பாட்டில் -தரை விக்ரம அபதானத்தாலே சர்வ லோகத்துக்கு உபகரித்தால் போலே அவ்வடிவை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் -என்கிறார் –

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு–விரோதி நிரசன ஸீலமாய் -அத்தாலே அதிசயித உத்ருஷ்டமாய்-வடிவோடு ஓக்க வளரக் காட்டுவதாய் யுள்ள
ஆயுதமான சங்க சக்ரங்களோடே கூட
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ–ஸ்ரீ யபதித்தவ சிஹ்னங்களை யுடைத்தான உதகர்ஷ யுக்தமாய் ஆஸ்ரிதர் அளவும் செல்வதாக திருவடிகளை –
ஞான அஞ்ஞான விபாகம் அற சகல லோகமும் சேஷத்வ அனுரூப வ்ருத்தியைப் பண்ணி அனுபவிக்கும் படியாக
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த -அத்விதீயமான அர்த்தித்தவ அனுரூப ப்ரஹ்மசாரி வாமனத்வத்தை உடையனாய்க் கொண்டு –
காரியசித்தி சமனந்தரம் வளர்ந்து அருளின –
அக்கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –அந்த வைபவத்தை யுடைய நீல ரத்னம் போலே
தர்ச நீய விக்ரஹனானவன் என் கண்ணுக்கு விஷயம் ஆகா நிற்கும் –

————————————————————–

அநந்தரம் -சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் சர்வாத்மக பஜனத்தோடு ஸத்பாவ அபி சந்தியோடு வாசியற சந்நிஹிதனாம் என்கிறார் –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் -ப்ருதிவ்யாதி பூதங்களையும் பிரகாரமாக உடையனாய்க் கொண்டு
விரியும் எம் பிரானையே –ஜகத் ஆகாரேண விஸ்த்ருதனாகிற-என்னுடைய ஸ்வாமியை –
காதன்மையால் தொழில்-அபி நிவேச ஆத்மக பக்தியாலே ப்ரணமா அர்ச்சா நாதிகளைப் பண்ணில் –
கண்ணுள்ளே நிற்கும் –தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் -என்று அவர்கள் கண் வட்டத்தை விடாமல் நித்ய சந்நிதி பண்ணும் –
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத-என்று ஸத்பாவ சிந்தா மாத்ரத்திலும் அவன் வசத்திலே வரும்படியாய் இருக்கும் –
இப்படி துஷ்கர ஸூகரங்களான உபாய த்வயத்திலும் ஸூலபனான பின்பு -அநந்ய கதிகளான நமக்குச் செய்ய வேண்டுவது உண்டோ –
காரணத்வம் -உபய உபாய சாதாரணம் –
எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-
எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும் -என்றுமாம்
நல் வாயு -தாரகத்வ வைலக்ஷண்யம் –

——————————————————

ஸ்ரீ யபதித்வாதிகளான அனுபாவ்ய ஸ்வ பாவங்களை உடையவனை அனுபவி -என்று நெஞ்சை நியோகிக்கிறார் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

மட நெஞ்சமே –சொல் வழி வரும் பவ்யத்தையை யுடைய நெஞ்சே –
எம்பிரானை -தன் பக்கலிலே அத்வேஷ அபி முக்யாதிகளைத் தரும் உபகாரகனாய்
எந்தை தந்தை தந்தைக்கும்–தம்பிரானைத் –நம் அளவில் நில்லாதே நம் குலத்துக்கு எல்லாம் நாதனாய்
தண் தாமரைக் கண்ணனை-இஸ் சம்பந்தம் அடியாக குளிர நோக்கும் புண்டரீகாக்ஷத்வத்தை யுடையனாய்
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை-எம்பிரானைத் தொழாய் -வஞ்சிக் கொம்பிலும் -இரவிலும் -நுண்ணிதான நேர்மையையுடைய
இடையையுடையளான ஸ்ரீ மஹா லஷ்மியை திரு மார்பிலே யுடையனான ஸ்வாமியை தொழும்படி பார்-
ஸ்ரீ யபதித்தவம்-இதில் சொன்ன ஸ்வ பாவங்களுக்கு எல்லாம் மூலம் என்று கருத்து –
அராவு -அரவு -அராவுதல் குறைத்தலாய் -கொம்பை இழைத்ததாகவுமாம் –

————————————————-

அநந்தரம் தம்முடைய நியோகத்துக்கு ஈடாக நெஞ்சு இசைந்தவாறே உகந்து இனி ஒருக்காலும் விடாதே அனுபவிக்கப் பார் -என்கிறார் –

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்–என் செய்யோம்-அறிவுக்கு ஆஸ்ரயமான நெஞ்சே நி செய்தபடி நன்று நன்று –
உன்னைப் பெற்றால் எக்காரியம் செய்து தலைக் கட்டோம்
இனி என்ன குறைவினம்–உன் இசைவு பெற்ற பின்பு அஸாத்யமாய் குறை கிடப்பது ஒன்றை உடையோமோ -ஆனபின்பு
மைந்தனை மலராள் மணவாளனைத்–நித்ய யவ்வன ஸ்வ பாவனாய் நிரதிசய போக்ய பூதையான ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டிக்கு போக்தாவானவனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–நாம் குடியும் அளவிலும் விடாதே நிரந்தர அநு வ்ருத்தி பண்ணப் பார் –
துஞ்சுதலாவது -நிகர்ஷ அநு சந்தானத்தாலே வந்த விஸ்லேஷம் என்று கருத்து –

————————————————

அநந்தரம் -நாம் நினைவற நமக்கு கார்யம் பலிக்கிறபடி -நீயும் அவனைக் கிட்டும்படி யாயிற்றே -என்கிறார் –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்–மனஸ்ஸே -அத்வேஷம் ஆபிமுக்யம் ஆஸ்ரயணம் அறிவு நலம் தொடக்கமான காரியங்கள் பலிக்கிறவை
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு–நினைவு தானும் இன்றியிலே நமக்கு கைவந்து நடக்கிற பிரகாரம் கண்டாயே –
எங்கனே என்னில் அபேஷா நிரபேஷமாக –
உண்டானை உலகேழுமோர் மூவடி–கொண்டானை–உலகம் எல்லாவற்றையும் பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து
அத்விதீயமான த்ரிவிக்ரம அபதா நத்தாலே அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை –
கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –

—————————————

அநந்தரம் இப்படி ஏக கண்டராய் நிற்கில் அசாதாரண பந்த விசிஷ்டனானவன் ஒரு கிலேசப் படக் கொடான்–என்கிறார் –

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்–மாத்ருவத் ப்ரிய பரனாயும் –பித்ருவத் ஹித பரனாயும் -தன் வரிசை அறியாத இந்த லோகத்திலே
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –திரு வவதரித்து வந்து -தன் நிருபாதிக ஸ்வாமித்வமே அடியாக நீல ரத்னம் போலே இருக்கிற
வடிவை எனக்கு அபகரித்து -அவ்வழியாலே என்னை அடிமை கொண்ட ஸ்வாமி யானவன் –
நெஞ்சமே நீயும் நானும் இந்நேர் நிற்கில் -நெஞ்சமே -தொழு என்று நியமிக்கலாம் படி பவ்யமான நீயும் -உன்னைக் காரணமாக வுடைய நானும் –
கீழ்ச் சொன்ன ப்ரக்ரியையாலே -விமுக வ்யாவ்ருத்தியை யுடையோமாய் நிற்கில் -மேலுள்ள காலம் எல்லாம்
ஸ்வ அனுபவத்தை ஒழிய மற்றும் நோயாய் இருப்பது ஒன்றையும் அணுகக் கொடான் -இப்பரம அர்த்தத்தை உனக்குச் சொன்னேன் –
நோய் -என்று அஹங்கார அர்த்த காமங்கள்-அதுக்கு அடியான சரீர சம்பந்தம் -கர்ம சம்பந்தம் தொடக்கமானவை –
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானம் அடியான விஸ்லேஷமுமாம் –

————————————————-

அநந்தரம் -ஏவம்விதனுடைய ஸூரி போக்யத்வ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து -ஸ்வ நிகர்ஷம் அடியாக அகலத் தேடுகிறார் –

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

வானவர் -பரமபத வாசிகளானவர்கள்
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்–சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே-எங்கள் சத்தாதி ஹேது பூதனானவன் என்றும்- -எங்களுக்கு பரம சேஷி என்றும் –
அனுசந்தானம் பண்ணி சொல்லும் படியான அனுசந்தானம் பண்ணி சொல்லும்படியான ஐஸ்வர்யத்தை யுடையவனை
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்–பாபிஷ்டனான நான் எனக்கு ஹித பரனே என்றும் என்னுடைய சேஷியானவனே என்றும்
நெஞ்சுக்குள்ளேயும் வைத்து சொல்லுவதும் செய்யா நின்றேன் –

———————————————

அநந்தரம் -இப்படி அகல நினைத்து இருக்கச் செய்தேயும் -திரு நாம ஸ்ரவணத்தாலே மேல் விழும்படி என்னைப் பரிபூர்ணனான அவன் விடுகிறிலன் -என்கிறார் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்–ஸ்ரீ மன நாராயணன் என்கிற திரு நாமத்தை கேட்ட அளவிலே –
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே-கண்ணானது நீர் மல்கா நின்றது -எங்கனே என்று தேடா நின்றேன் -இது ஒரு ஆச்சர்யமாய் இருக்கிறதே –
நம்பி -பரிபூர்ணனான நம்பியானவன்
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி–நல் -தன்னைக் கிட்டுக்கைக்கு அடியான நன்மையையுடைய இரவும் பகலும் -விச்சேத ரஹிதமாக
நல்கி என்னை விடான் நம்பியே –ஸ்னேஹித்து என்னை -ஸ்வ கீயத்வ பிரதிபத்தி பண்ணி விடுகிறிலன் –
நம்புதல் -தன்னுடையவனாக விஸ்வசித்தல்

—————————————–

அநந்தரம் -அவனுடைய உபகாரகத்வம் மறக்கப் போமோ -என்கிறார் –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற –திருக் குறுங்குடியிலே நிற்கையாலே ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாய் –
அச்செம்பொனே திகழும் திரு மூர்த்தியை–ஒப்பமிட்ட செம் போன் போலே உஜ்ஜவலமான திருமேனியை யுடையனாய் –
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை–மேலான நித்ய ஸூறி களுக்கு சத்தாதி ஹேது பூதனாய் -சதா தர்ச நீயமான பரஞ்யோதி சப்த வாச்யனாய்
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –தாதிருச்சமான வடிவை என்னை அனுபவிப்பித்து அடிமை கொண்டவனை எத்தைச் சொல்லி மறப்பது —
அபூர்ணன் -என்று மறக்கவோ –
அஸூலபன்-என்று மறக்கவோ –
அநுஜ்ஜ்வலன் -என்று மறக்கவோ –
அவிலக்ஷண போக்யன் என்று மறக்கவோ –
ஸூசீலன் அன்று என்று மறக்கவோ -என்று கருத்து –

——————————————

அநந்தரம் -மறவாதபடி -அவனே யத்னம் பண்ணா நிற்க மறக்க விரகு உண்டோ -என்கிறார் –

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்–மறப்பு என்றும் -அறிவு என்றும் -ஒன்றை அறிந்திலேனாய் இருக்க -தன் விஷயத்திலே அறிவை உண்டாக்கி –
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு-இத்தை இவன் மறக்கும் -என்று நினைத்து -கடாஷிக்கைக்கு அடியான சிவந்த தாமரை போன்ற கண்ணோடு
மறப்புப் புகுராதபடி
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை-மறப்பனோ இனி யான் என் மணியையே –என் நெஞ்சுக்குள்ளே நிரந்தர வாசம் பண்ணி
நீல ரத்னம் போலே முடிந்து ஆளலாம் படி எனக்கு ஸூலபனானவனை இனி நான் மறக்கும் படி என் –

——————————-

இத்திருவாய் மொழிக்குப் பலம் -இதினுடைய கல்வியே கைங்கர்யம் என்று அருளிச் செய்கிறார் –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

மணியை வானவர் கண்ணனைத் -உஜ்ஜவலமான மாணிக்கம் போன்ற வடிவை யுடையனாய் -அந்த வடிவாலே-பரமபத வாசிகளுக்கு நிர்வாஹகானாய் –
அவ் வழகுக்கு ஒப்பு இல்லாமையால்
தன்னதோர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்-தனக்குத் தான் அலங்காரமாம் படி அத்விதீயனானவனை -கட்டளை பட்ட
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல்லாலே
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்-தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –பணி செய்த ஆயிரத்துள் இவை பத்தையும் அபிப்ராயத்தோடே உடன்பட்டு
ஆறுதல் அற்று-ஆராத அபி நிவேசத்தோடே ஓர் ஆச்சார்ய முகத்தாலே அப்யசிப்பார்கள் ஆகில் அந்த கல்வி கைகர்ய ரூப பலத்தோடு சேரும் –
சொற் பணி செய் –என்றது -சொல் எடுத்துக் கை நீட்டின -என்றுமாம் –
அன்றியே –
சடகோபன் சொல் -என்று கூட்டி -பணி செய் ஆயிரம் -என்றது கைங்கர்ய ரூபமான ஆயிரம் -என்றுமாம் –
இது கலி விருத்தம் –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-10-

September 21, 2017

பொரு மா நீள் படை -பிரவேசம் –
இப்படி எம்பெருமான் தம்மோடு கலந்த கலவையால் தமக்குப் பிறந்த நிரவதிகமான நிர்வ்ருதியாலே அக்கலவியைப் பேசுகிறார் –

———————————

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

விரோதி நிரசன சமயத்தில் அவர்களுக்குத் தக்கபடி அன்றியே அதிகமாக்க கிளர்ந்து கொண்டு செல்லும் ஸ்வபாவமான திரு வாழி திருச் சங்கு முதலான
திவ்ய ஆயுதங்களை ஏந்தின அவ்வழகையும் -அளவிறந்த அழகை யுடைத்தான தன் திருவடிகளையும் -சர்வாத்மாக்களும் கண்டு தொழும்படியாக
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் என் கண்ணுள்ளே இருந்தது -என்கிறார் –

————————————————-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படி
என்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –

——————————————-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

இப்படி தம்மோடு கலந்து அருளின எம்பெருமான் பிராட்டியும் தானுமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பையும் -தன் திருக் கண்களால்
தம்மைக் குளிர பார்த்து அருளுகிறபடியையும் கண்டு ப்ரீதராய் -எம்பிரான் -என்றும் -எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரான் -என்றும் –
அவனை ஏத்திக் கொண்டு தமக்குத் துணையாக –
எம்பெருமானைத் தொழாய் மட நெஞ்சமே -என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————————————-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

இப்படி தாம் அருளிச் செய்வதற்கு முன்பே தம்முடைய திரு உள்ளம் அவனுடைய திருவடிகளிலே விழும்படியைக் கண்டு உகந்து –
நல்லை நல்லை உன்னைப் பெற்றால் நமக்கு முடியாதது என் -இனி நமக்கு என்ன குறை யுண்டு -என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் கொண்டாடி இனி ஒரு தசையிலும் அவனை விடாதே கிடாய் -என்கிறார் –

—————————————

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

உண்டானை உலகேழுமோர் மூவடி-கொண்டானை நீயும் நானும் காணப் பெற்றோம் –நெஞ்சமே நமக்கு
அசிந்தமாக வந்து ஸம்ருத்திகள் விளைகிற படி கண்டாயே -என்று தம்முடைய திரு உள்ளத்தோடு கூட அனுபவிக்கிறார் –

—————————————

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

இப்படி இருவரும் ஒரு வண்ணம் எம்பெருமானைக் காணப் பெற்றோம் -இனி அவன் நம்மை விடில் செய்வது என் என்னில் -நீயும் நானும் இப்படி
அவனை விடாதே நிற்கில் சர்வாத்மாக்களுக்கும் தாயும் தந்தையாய் – சர்வ ஸ்வாமியாய் –ஆஸ்ரித ஸூலபனாய் –
இப்படி சம்ஸ்லிஷ்டனாய் இருந்தவன் ஒரு நாளும் நம்மை விடான் -நெஞ்சமே -என்னை விசுவாசித்து இரு -என்கிறார் –

————————————————

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

இப்படித் தம்முடைய திரு உள்ளத்தோடு எம்பெருமானை அனுபவிக்கிற ஆழ்வார் -அவனுடைய உத்கர்ஷத்தையும்-தம்முடைய நிகர்ஷத்தையும் -பார்த்து –
அயர்வறும் அமரர்கள் தங்கள் சிந்தை யுள்ளே வைத்துச் சொல்லும் அந்த ஸ்ரீ மானை நான்
தரித்ரன் ஆக்கினேன் அத்தனை -என்ன நிக்ருஷ்டனோ -என்று தம்மை கர்ஹிக்கிறார் –

————————————————————-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

இப்படி என்னுடைய அயோக்யதையைப் பார்த்து -அவன் திறத்துப் படுவேன் அல்லேன் -என்று இருக்கச் செய்தேயும் -செல்வ நாரணன் -செல்வன் நாரணன் -என்ற
சொல்லக் கேட்க்கும் அளவில் என்னுடைய சர்வ கரணங்களும் என் வசம் இன்றியே இழுத்துக் கொண்டு அவன் பக்கலிலே விழா நின்றன –
நானும் அதி சபலனாய் -எங்குற்றாய் எம்பெருமான் –திரு நெடும் தாண்டகம் –9-என்று அவனை நாடுவன்-இது என்ன ஆச்சர்யம் -இப்படி நான்
அதி சபலனாயத் தன்னை விட மாட்டாது ஒழிந்தால் அவன் என்னை விடலாம் இறே -அவன் என்னில் காட்டிலும் அபி நிவிஷ்டனாய் என் பக்கலிலே
அதி பஹு மானத்தைப் பண்ணிக் கொண்டு என்னை விடுகிறிலன்-நான் என் செய்வன்-என்று நோகிறார் –

————————————————–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

தன்னுடைய சாபலத்தாலே நம்மை விடாது ஒழிந்தால் அவனுடைய குண ஸ்ரவணாதி களைப் பண்ணாதே அந்நிய பரனாய் அவனை மறந்து இருந்தாலோ -என்னில் –
தத் குண ஸ்ரவண மாத்திரத்தாலே சபலனாய்த் தன் பக்கலிலே விழா நிற்கச் செய்தே அதின் மேலே அயர்வறும் அமரர்களோடே கூடத் திருக் குறுங்குடியிலே
நின்று அருளி தன்னுடைய நிரவாதிகமான அழகைக் காட்டி என்னைத் தோற்பித்துத்
தன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டான் -இனி எங்கனே நான் அவனை மறக்கும் படி -என்கிறார் –

——————————————————

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

வருந்தி யாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை – நிவர்த்திப்பித்து அவனை மறந்து இருந்தாலோ -என்னில் -இப்படி தன் அழகை எனக்குக் காட்டி அருளி –
ஒரு நாள் தன்னைக் காட்டிப் போக்கில் -ஞான அஞ்ஞானங்கள் இரண்டுக்கும் ஆஸ்ரயம் இல்லாமையால் அசித் கல்பனான இவன் நம்மை மறக்கும் -என்று
பார்த்து அருளி -தன்னை நான் மறவாமைக்காக அசேதனத்தைச் சேதனமாக்க வல்ல தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து
எனக்குப் பரம ஸூலபனாய்க் கொண்டு — இனிப் பேரேன்-என்று இருந்து அருளினான் –
இவனை நான் மறப்பேன் என்று வருந்தினாள் மறக்க முடியுமோ -என்கிறர் –

————————————-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

வானவர் கண்ணனாய் இருந்து வைத்து எனக்கு எளியனாய் -தனக்குத் தானே பூஷணமாய் இருந்த எம்பெருமானுக்கு
சேஷ வ்ருத்தி ரூபமாகச் சொன்ன இத்திருவாய் மொழியைக் கற்று ஆராது இருக்குமவர்களுக்கு அக்கல்வி தானே வாயும் -என்கிறார் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-