ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது -முதல் பாகம்-ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -படி —

ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சன கிரீம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ்
ஸ்ரீ கூர்மம் –புருஷோத்தமம்–ச பதரீ நாராயணம் –நைமிசம்-
ஸ்ரீ மத் த்வாரவதீ — பிரயாக–மதுரா -அயோத்யா -கயா -புஷ்கரம் –
ஸ்ரீ சாளக்ராம கிரீம்–நிஷேவ்ய ரமதே ராமானுஜோ அயம் முநி —
தார்ஷ்யாத்ரி — திரு அஹோபிலம் -/

—————

அயோத்யா மதுரா மாயா காஸீ காஞ்சீ அவந்திகா
புரீ த்வாரவதீ சைவ சப்தைதா மோக்ஷ தாயகா—-முத்தி தரும் சப்த திவ்ய ஷேத்ரங்கள்
மாயா என்கிற ஸ்ரீ ஹரித்வார் /அவந்திகா -என்கிற உஜ்ஜயினி –

——————-

ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -படி –

உடையவரை முதலிகள் எல்லாம் தண்டனை இட்டு தேவரீர் இதர சமய நிராகரண பூர்வகமாக தரிசன ஸ்தாபனம் பண்ணி அருளிற்று –
இனி -தீதில் நன்னெறி காட்டித் தேசம் எங்கும் திரிந்து -திக் விஜயம் பண்ணி அங்குள்ள திவ்ய தேசங்களையும் சேவித்து எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
உடையவரும் முதலிகளுமாக நம்பெருமாள் திரு முன்பே சென்று தண்டனை சமர்ப்பித்து இச்செய்தியை விண்ணப்பம் செய்ய –
பெருமாளும் அப்படியே செய்யீர் -என்று திரு உள்ளமாய் -அங்கு நின்றும் புறப்பட்டு அருளி -சோழ மண்டலத்திலே எழுந்து அருளித்
திருக் குடந்தை முதலான திருப்பதிகளையும் சேவித்து -அங்குண்டான இதர சித்தாந்த வித்வான்களை தர்க்கித்து -ஜெயித்து -அங்கு நின்றும் புறப்பட்டுத்

தெற்கு ஏற எழுந்து அருளி -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை முதலான திருப்பதிகளையும் சேவித்து –
பாண்டி மண்டலத்தில் உண்டான பரவாதிகளையும் ஜெயித்து -திருப் புல்லாணியையும் சேவித்து சேது தர்சனம் பண்ணி –
திரு நகரி ஏறச் சென்று -கன்னி நுண் சிறுத் காம்பை அனுசந்தித்து நம்மாழ்வாரை சேவித்து நிற்க -ஆழ்வாரும் மிகவும் கிருபை பண்ணி அருளித்
தம் தீர்த்தம் பிரசாதமும் திரு மாலை பிரசாதமும் ஸ்ரீ சடகோப பத த்வயமான ஸ்ரீ மதுர கவிகளை ப்ரசாதிக்க -இராமானுசனும் –
வகுளத வளமாலா வக்ஷஸம் வேத பாஹ்ய ப்ரபல சமய வாதச்சேதனம் பூஜ நீயம்
விபுல குருக நாதம் காரிஸூநும் கவீசம் சரண முபகதோ அஹம் சக்ர ஹஸ்தேப சக்ரம் –என்று அனுசந்தித்து தண்டனை சமர்ப்பித்துப் புறப்பட்டுத்
திருப் புளியாழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் திருவடி தொழுது புறப்பட்டு
மற்றும் சுற்றிலும் உண்டான திருப் பதிகளையும் சேவித்து அங்குள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளையும் ஜெயித்து புறப்பட்டுத்

திருக் குறுங்குடிக்கு எழுந்து அருளிக் கோலத் திருக் குறுங்குடி நம்பியை சேவித்துத் தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து நிற்கிற அளவிலே நம்பியும் அர்ச்சக முகேந
நாம் ராம கிருஷ்ணாத் யாவதார முகேந -ஜன்மம் பல பல செய்து வந்து பிறந்து சேதனரைத் திருத்தப் பார்த்த இடத்திலே -அவர்கள் ஆஸூர ப்ரக்ருதிகளாய் –
ஒருவரும் நம்மை வந்து சேர்ந்தார்கள் இல்லை -நீர் இத்தனை பேரையும் எங்கனே திருத்தினீர் -என்று கேட்டு அருள –
உடையவரும் -தேவரீர் கேட்க்கும் கிரமத்திலே கேட்டால் சொல்லும் அடைவிலே சொல்லுகிறோம் -என்ன –
நம்பியும் தம் திவ்ய சிம்ஹாசனத்தின் நின்றும் இறங்கி அருளி -ரத்ன கம்பளத்திலே இருந்து இவருக்கு ஒரு திவ்ய சிம்ஹாசனத்தை இட்டு அருள –
அதிலே ஸ்வ ஆச்சார்யரான பெரிய நம்பி எழுந்து அருளி இருக்கிறாய் பாவித்துக் கொண்டு தாம் நிலத்திலே இருந்து நம்பி திருச் செவியிலே-
ஸர்வேஷா மேவ மந்த்ராணாம் மந்த்ர ரத்னம் ஸூபா வஹம் —
ஸக்ருத் ஸ்மரண மாத்ரேண ததாதி பரமம் பதம் –
மந்த்ர ரத்னம் த்வயம் ந்யாஸ பிரபத்திஸ் சரணா கதி-
லஷ்மீ நாராயணா யேதி ஹிதம் சர்வ பல ப்ரதம் -என்கிற மஹாத்ம்யத்தை யுடைய த்வயத்தை உபதேசிக்க –
நம்பியும் போர யுகந்து -இராமானுஜனை யுடையோம் -என்று அருளிச் செய்ய -உடையவரும் அவருக்கு
ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -என்று தாஸ்ய நாமம் பிரசாதித்து அருள -நம்பியும் இவரை ப்ரஹ்ம ரதம் ஏற்று உபலாளித்து அருளினார்-
உடையவரும் நம்பியை சேவித்து நின்று -அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம -என்று விண்ணப்பம் செய்து -இங்கு நின்றும் புறப்பட்டுத் –
திரு வண் பரிசாரத்தையும் -திரு வாட்டாற்றையும் திருவடி தொழுது -திருவனந்த புரத்திலே-எழுந்து அருளிப்
படமுடை வரவில் பள்ளி பயின்ற பத்ம நாபாப் பெருமாளையும் த்வார த்ரயத்தாலே பாதாதி கேச அந்தமாக சேவித்து அருளி –
அங்குள்ள- பிரதிவாதிகளையும் ஜெயித்து ஸ்ரீ ராமானுஜ மதத்தையும் உண்டாக்கி -புறப்பட்டு மலையாள தேசத்தில் உண்டான திருப்பி பதிகளையும் சேவித்து
அத்தேசத்தில் அந்நிய சித்தாந்திகளையும் ஜெயித்து -மேலை சமுத்திர கரை வழியே உத்தர தேசத்தில் எழுந்து அருளி –

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுண்ட ஸ்தான த்வாரவதீ அயோத்தி உத்தர பதரிகாச்ரமம் நைமிசாரண்யம் புஷ்கரம் -என்று சொல்லப் பட்ட
திவ்ய தேசங்களையும் மற்றும் உண்டான திருவாய்ப்பாடி ஸ்ரீ கோவர்த்தனகிரி ஸ்ரீ பிருந்தாவனம் முதலான திருப்பதிகள் எல்லாவற்றையும் சேவித்துக் கொண்டு
அவ்விடங்களில் உள்ள குத்ருஷ்ட்டி வித்வான்களை ஜெயித்து -பட்டி மண்டபத்தைக் கிட்டி -ஸரஸ்வதீ பண்டாரத்து ஏற எழுந்து அருளின அளவிலே –
ஸரஸ்வதீ தானே வாசல் திறந்து கொண்டு வந்து எதிரே புறப்பட்டு நின்று
உடையவரைப் பார்த்து -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷணீ -என்கிற ஸ்ருதிக்குப் பொருள் சொல்லிக் காணீர் -என்ன -இவரும் –
கபிஸ் த்வாதி த்ய கம் பிபதி கிரணைரித்யபி கபிர் பப ஸ்தீத் யாம் நாதஸ் சா கபிர முநா அஸ்தம் யதி ஹதத்
ப்ரதீம கப்யாஸம் தி வசகரதே ஜோவிகசிதம் ஸூ பத்மம் ஸ்ரீமத் த்வாத கனி பகவச்ச ஷூ ருபமா–என்று
கம் -என்று ஜலமாய்-கிரணங்களாலே அத்தைப் பணம் பண்ணுகையாலே கபி சப்த வாச்யனான ஆதித்யனாலே
அஸூ ஷேபணே-என்று விகாச வாசகமாய் அலர்த்தப் பட்ட தாமரைப் பூப் போலே இருக்கும் பரம புருஷன் திருக் கண்கள் என்று
கப்யாஸத்திற்குப் பொருள் அருளிச் செய்ய சரஸ்வதியும் கேட்டு சந்துஷ்டையாய் இவர் இட்டு அருளின -ஸ்ரீ பாஷ்ய க்ரந்தத்தையும் சிரஸா வகித்துத்
தன் கையை நீட்டு உடையவர் திருக் கையைபி பிடித்துக் கொண்டு போய் இது ப்ரஷிப்தம் அன்று ஸூத்தமாய் இருந்தது -என்று அங்கீ கரித்து-
இவருக்கு ஸ்ரீ பாஷ்ய காரர் என்று திரு நாமம் சாத்தி -ஸ்ரீ ஹயக்ரீவரையும் எழுந்து அருளுவித்துக் கொடுத்து மிகவும் ஸ்லாகிக்க –
ஸ்ரீ பாஷ்ய காரரும் -நம்மை இத்தனை ஆதரிக்கைக்கு அடி என்-என்று கேட்டு அருள அவளும் முன்பு இங்கு வந்த சங்கரனை இஸ் ஸ்ருதிக்கு அர்த்தம் கேட்ட அளவிலே
அவனும் குரங்கு பிருஷ்டம் போலே இருக்கும் என்று அபஹாஸ்யமான அர்த்தம் சொன்னான் -நீர் என் கருத்து அறிந்து பொருள் சொல்லுகையாலே நான் ஆதரித்தேன் -என்றாள் –

இத்தை இத்தேசத்தில் உள்ள பிரதிபக்ஷ சித்தாந்திகள் கேட்டு வந்து உடையவருடன் தர்க்கிக்க -அவர்கள் எல்லாரையும் ஜெயித்துத்
தம் சித்தாந்தத்தை ஸ்தாபித்த படியை அத்தேசத்தின் ராஜா கேட்டு இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் -என்று வந்து உடையவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த அவனையும்
கிருபை பண்ணி எழுந்து அருளி இருக்கும் அளவிலே அங்குள்ள அஸூ யாளுக்களான வித்வான்கள் இவரை அபிசாரிக்கத் தேட உடையவரும் கேட்டருளி
இத்தைக் காணக் கடவோம்-என்று திரு உள்ளம் பற்றி இருக்க
அவ்வளவில் வித்வான்கள் பித்தேறித் தாங்களைத் தாங்களே மோதிக் கொண்டு பேய்களாய் ஓடித் திரிய ராஜாவும் இத்தைக் கண்டு உடையவரை தண்டனிட்டு
தேவரீர் இப்படி செய்து அருளலாமோ -என்று வேண்டிக் கொண்டு அவர்களையும் ஸ்வஸ் தராம்படி பண்ணுவித்து அவருடைய திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்து
தன் சர்வ பரிகரத்துடன் இரு காத வழி சேவித்துக் கொண்டு வந்து வழி விட்டு மீண்டு போக –

உடையவரும் வாரணாஸீ வழியாக எழுந்து அருளிக் கங்கையைக் கிட்டி -கங்கை கங்கை என்ற வாசகத்தாலே எழுமையும் கூடி ஈண்டிய பாவம் எல்லாம் –
இறைப் பொழுது அளவினால் கழுவிடும் பெருமையை யுடைய கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்து -என்கிறபடியே -நீராடிக் –
கபாலி ஸ்பர்ச தோஷத்தையும் கழித்து -கேசவாதி த்வாதஸ ஊர்த்வ புண்டரங்களையும் தரித்துக் கொண்டு –
ஸ்ரீ கண்டம் என்னும் கடிநகரில் எம்பெருமானையும் கை தொழுது -கழலிணை பணிந்து புறப்பட்டு
ஸ்ரீ புருஷோத்தமத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஜெகந்நாதனையும் திருவடி தொழுது அங்குள்ள பிரச்சன்ன புத்த வித்வான்களை ஜெயித்து –
அங்கே ராமானுஜ மேடம் ஓன்று உண்டாக்கி -அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ கூர்மத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ கூர்ம நாதனையும் சேவித்து –
ஸ்ரீ சிம்ஹாத்ரி ஏற எழுந்து அருளி -ஸ்ரீ ஸிம்ஹகிரி அப்பனையும் சேவித்து -அவ்விடத்தில் அந்நிய சமயங்களையும் தர்க்கித்து ஜெயித்து
அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ அஹோபிலத்து ஏறச் சென்று ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹனையும் சேவித்துப் புறப்பட்டு –

தெழி குரல் அருவித் திருவேங்கட மலை ஏறித் திருவேங்கட முடையானையும் சேவித்து நிற்க -அவ்வளவிலே-
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன்னாணும் தோன்றுமால்
சூழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து -என்று ஆழ்வார் அனுபவித்த
ஹரி ஹார ஆகாரம் ஒத்து இருக்கையாலே சைவர் கண்டு எங்கள் நாயனார் -என்று பிணங்கி வர -உடையவரும் –
உங்கள் தம்பிரானுக்கு அசாதாரண சிஹ்னமான த்ரி ஸூல டமருகத்தையும் -எங்கள் பெருமாளுக்கு அசாதாரண சிஹ்னமான திரு வாழி திருச் சங்கு ஆழ்வார்களையும்
பண்ணித் திருவேங்கடமுடையான் திரு முன்பே வைப்போம் -அவர் எத்தை எடுத்து தரித்துக் கொள்ளுகிறாரோ அத்தை இட்டு அவர் ஸ்வரூப நிரூபணம் பண்ணக் கடவது -என்று
அவ்வாயுதங்களைப் பண்ணி அவர் சந்நிதியில் வைத்து கர்ப்ப க்ருஹத்தில் ஒருத்தரும் இல்லாதபடி சோதித்துத் திருக் காப்பைச் சேர்த்துக் கொண்டு புறப்பட்டு வந்து
ப்ராத காலம் ஆனவாறே ‘திருக் காப்பை நீக்கி சேவிக்கிற அளவிலே –
கூராராழி வெண் சங்கு ஏந்தி த்ரி ஸூல டமருகங்களைக் காற்கடைக் கொண்டு இருக்க கண்டு ஆனந்தாஸ்ருக்கள் பனிப்பக் கொந்தளித்துக்
குணாலைக் கூத்தடித்துக் கொண்டு சைவரை அடித்தோட்டி விட்டு –
பொன்னை-மா மணியை அணி ஆர்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு -என்கிறபடியே -வர்ஷூகவலாகம் போலே
அகில தாபத்தையும் போக்கி அகில அபேக்ஷிதா பிரதரான திருவேங்கடத்து எந்தையைத் திருவடி தொழுது அப்போதே
திருமலையில் இறங்கித் திருத் தாழ்வரையில் ஆழ்வார்களையும் திருவடி தொழுது புறப்பட்டு –

பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளிப் பேர் அருளாளரையும் சேவித்து -புறப்பட்டுத்
திருவல்லிக்கேணி திரு நீர்மலை முதலான கிழக்கில் திருப்பதிகளையும் சேவித்து –
ஸ்ரீ மதுராந்தகத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஏரி காத்த பெருமாளையும் சேவித்து -ஸ்ரீ பெரிய நம்பி தம்மை கிருபை பண்ணி அருளிய திரு மகிழ் அடியை தண்டனிட்டு
தொண்டை மண்டத்தில் உண்டான மாயாவாதிகளையும் ஜெயித்து
திரு வயிந்த்ர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனையும் திருவடி வணங்கி -புறப்பட்டு வீர நாராயண புரத்தே சென்று ஸ்ரீ மன் நாத முனி மன்னனாரையும் சேவித்து
ஸ்ரீ மன் நாத முனிகள் யோகத்தில் எழுந்து அருளி இருந்த இடத்தையும் சேவித்து –

இப்படி பூ பிரதக்ஷிணம் பண்ணி மடங்கித் திருவணை யாடி திருவரங்கம் பெரிய கோயிலிலே எழுந்து அருளிப் பெரிய பெருமாளை
அமலனாதி பிரானில் படியே திருவடி முதல் திருமுடி அளவாக -முடிவில்லா தோர் எழில் நீல மேனியையும் -அனுபவித்து அஞ்சலித்துக் கொண்டு ஜெயஸ்ரீ யுடன் நிற்க –
பெருமாளும் -பவளவாய் திறந்து உமக்கு ஒரு குறையும் இல்லையே -என்ன -ஸ்ரீ பாஷ்ய காரரும் –
திருமால் உருவொடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே -என்கிறபடியே
அங்கும் தேவரீரையே சிந்தித்து எங்கும் திரிந்து வந்த அடியேனுக்கும் ஒரு குறை உண்டோ என்று விண்ணப்பம் செய்ய
பெருமாளும் உக்காந்து தீர்த்த பிரசாதம் ப்ரசாதிப்பிக்க ஸ்வீ கரித்து புறப்பட்டு மட்டுமே எழுந்து அருளி
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்களின் இன்பம் மிகு பெரும் குழுவு கண்டு உகந்து அவர்களை கிருபை பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: