பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-8-

அணைவது அரவணை மேல் -பிரவேசம் –
தாமோதரனை -என்ற பாட்டில் ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தைத் தம்முடைய ப்ரீதி அதிசயத்தாலே
ஸ ஹேதுகமாக உபபாதித்து -இப்படி சர்வேஸ்வரனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்று பிறரை நோக்கி அருளிச் செய்கிறார் –

————————————–

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

நாக பர்யங்க சாயியாகையாலும் –ஸ்ரீ யபதியாகையாலும் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகன் ஆகையாலும்- சர்வாத்ம சஜாதீயதயா
அவத்தீர்ணனாய்க் கொண்டு சர்வ ஜகத் ரக்ஷகனாகையாலும் -முமுஷூக்களுக்கு பிரதிபந்தக நிவர்த்தகனாய்க் கொண்டு மோக்ஷ ப்ரதன் ஆகையாலும் –
நாராயணனே சர்வேஸ்வரன் -என்கிறார் –

———————————————————————————

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

வீடு முதலாம் -என்கிற பதத்தை விவரிக்கிறது -ஜென்ம ஜரா மரணாத் அபரிமித ஸமஸ்த துக்க ரஹிதமான மோக்ஷத்துக்குக் காரணம்
எம்பெருமானோடு உள்ள சம்பந்தம் -அது எங்கே கண்டோம் என்னில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே கண்டோம் -என்கிறார் –

————————————————–

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் -தன் உந்தியை ஆஸ்ரயமாகக் கொடுத்து வைக்கும் –
ஜகத் சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் தன் திரு உடம்பை ஆஸ்ரயமாகக் கொடுத்து வைக்கும் –
சர்வ லோக ஈஸ்வரியான பிராட்டிக்கு தன் திரு மார்வைக் கொடுத்து வைக்கும் -திரு வனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும் –
இப்படி எம்பெருமானுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூதமான திவ்ய சேஷ்டிதங்கள் எங்கும் பிரத்யஷிக்கலாம் -என்கிறார் –

—————————————–

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

பிரகிருதி பந்த விநிர்முக்தராய்க் கொண்டு நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் -இப்படி சர்வேஸ்வரனாய் இருந்த
எம்பெருமானுடைய நிரதிசய போக்யமான கல்யாண குணங்களில் ஓவாதே படியுங்கள் என்கிறார் –

——————————————-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

சம்சார சக்ர ப்ரவர்த்தகன் ஆகையாலும் -ப்ரஹ்ம ஈஸா நாதி தேவர்களுக்குக் காரண பூதனாய் -அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யாகையாலும் –
அசேஷ தோஷ ப்ரத்ய நீகன் ஆகையாலும் -தேவ மனுஷ்யாதி வியாபாரங்களைப் பண்ணிக் கொண்டு சர்வ ஜகத் ரக்ஷகன் ஆகையாலும் –
அவனே சர்வேஸ்வரன் –என்கிறார் –

————————————————————

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

யாவன் ஒருவனுடைய பாத உதகத்தை சிரஸா வஹிக்கையாலே ருத்ரன் பரி ஸூத்தனானான் —
யாவன் ஒருவன் திருவடிகளிலே சாத்தின பூந்தாமம் ருத்ரன் தலையிலே காணப் பட்டது –
அங்கனே இருந்த பைந்துழாயான் பெருமை ஸூ பிரசித்தம் அன்றோ -சொல்ல வேணுமோ –என்கிறார் –

——————————————————-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

எம்பெருமான் தனக்கு இந்த ஜகத்தானது இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் இருக்கையாலே அவனுக்கே சேஷம் -என்கிறார் –

———————————————-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

சர்வ ஜெகன் நிகரண சமர்த்தனான எம்பெருமானுடைய ஸர்வேஸ்வரத்வம் ஒருவருக்கு அரிக்கைக்கு பூமியோ -என்கிறார் –

————————————

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னுடைய சர்வ அந்தராமித்வத்தை ப்ரத்யக்ஷமாக்கி யருளின எம்பெருமானுடைய
சர்வேஸ்வரத்வ மஹிமை ஒருவர்க்கு ஆராய நிலமோ -ஆனபின்பு இங்கனே இருந்த இவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –

—————————————–

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

ஸ்வர்க்க அபவர்க்காத் அசேஷ புருஷார்த்தங்களுக்கும் -நரகாத் புருஷார்த்தங்களுக்கும் -இவற்றுக்கு போக்தாக்களான
தேவாதி ஸ்தாவர அந்தமான் சகல ஆத்ம வர்க்கத்துக்கும் தாரகனாய் -பிராண பூதனாய் -நியாந்தாவாய் -ஸ்வ இதர ஸமஸ்த விஸஜாதீய அப்ராக்ருத
மஹா விபூதியை யுடையனாய் நின்ற எம்பெருமானை நான் காணப் பெற்றேன் -என்று கொண்டு ஸ்வ லாபத்தைப் பேசி முடிக்கிறார் –

—————————————————

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

இத் திருவாய் மொழியை வல்லார் இட்ட வழக்காம் திரு நாடு -என்கிறார் –

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: