அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-8-

அணைவது அரவணை மேல் -பிரவேசம் –
எட்டாம் திருவாய் மொழியில் —
மேவும் தன்மையமாக்கினான் -2–7–4-என்று ஸ்வ சம்பந்தி ஜனங்களுக்கும் பிராப்தி பர்யந்த பல ரூப மோக்ஷ பிரதனாய்க கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும் –
அதுக்கு அடியான பரத்வத்தையும் அனுசந்தித்து -இத்தை சம்சாரிகள் இழக்க ஒண்ணாது -என்று உபதேசிப்பாராய்க கோலி –
1–அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் –2-சம்சார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ பிரதத்வத்தையும் —
3—அதுக்கு உறுப்பான சேஷடித்த வை லக்ஷண்யத்தையும் –4-இந்த வியாபார பிரகாசித்தமான ஸுலப்யாதி குணங்கள் நித்ய அனுபாவ்யம் என்னும் இடத்தையும் –
5–அந்த குண ப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும் –6-அவதார திசையிலும் பரத்வம் அதி பிரசித்தம் என்னும் இடத்தையும் –
7–அவ தீர்ணனானவன் ரக்ஷண வ்யாமோஹத்தால் பண்ணும் வியாபாரம் அநேகம் என்னும் இடத்தையும் –
8-அவதீர்ணனனுடைய பரத்வ உபயுக்தமான அதிசயித ஆகாரங்கள் அறிய வல்லார் இல்லை என்னும் இடத்தையும்
9– அவனுடைய ஆஸ்ரித ஸுலப்யம் அபரிச்சின்னம் என்னும் இடத்தையும் -10-ஏவம் விதனைத் தாம் அனுபவிக்கப் பெற்றமையும் –
அருளிச் செய்து -உபதேச அந் நிவ்ருத்தராய் -ஸ்வ லாபத்தோடே தலைக் கட்டுகிறார் –

இதில் சொல்லுகிற பரத்வம் -முதல் திருவாய் மொழி போலே ஸ்வரூப கதமாய் அன்றியே –
திண்ணன் வீட்டிலே-2–2- போலே -மனுஷ்யத்தவே பரத்வமும் அன்றியே
மோக்ஷ பிரதத்வ உபயுக்தமாய் இருக்கிறது –

————————————————-

முதல் பாட்டில் இத்திருவாய் மொழியில் அர்த்தத்துக்கு ஸங்க்ரஹ ரூபமான சர்வ நிர்வாஹகத்வத்தை அருளிச் செய்கிறார் –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணை மேல் –திருவனந்த ஆழ்வான் ஆகிற அணை மேலே அபிமதமாகச் சேர்வது
பூம்பாவை யாகம் புணர்வது –பூவிலே பரிமளம் வடிவு கொண்டால் போலே போக்ய பூதையான-பிராட்டியின் திருமேனியை போக்யமாக ஸம்ஸ்லேஷிப்பது –
இது நித்ய விபூதி நிர்வாஹகத்வம் -லீலா விபூதி நிர்வஹணத்தில்
இருவரவர் முதலும் தானே–காரண ஈஸ்வரராக ப்ரசித்தரான ப்ரஹ்ம ருத்ரர்கள் இவருடைய உத்பத்தி ஸ்தித் யாதிகளுக்கும் தானே ஹேதுவாய் இருக்கும் –
இணைவனாம் எப்பொருட்கும் –ரஷ்யமான ஜகத்தில் ஸமஸ்த பதார்த்தங்களும் அவதார முகத்தால் சஜாதீயனாய் இருக்கும் –
வீடு முதலாம் புணைவன் –ரக்ஷணத்துக்கு மேல் எல்லையான மோக்ஷத்துக்கு ஹேதுவாய் இருக்கும் -இத்தால் சர்வ முக்தி பிரசங்கியாமைக்காக –
பிறவிக்கடல் நீந்துவார்க்கே –சம்சாரமாகிற கடலை நீந்திக் கரையேற வேண்டுவார்க்கு தெப்பம் ஆவனாய் இருக்கும் –
புணைவன் -தெப்பமாமவன்

——————————————-

அநந்தரம் -சம்சார நிஸ்தரண பூர்வகமான மோக்ஷத்துக்கு ஹேது அவனுடைய சம்பந்தம் -என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

இஸ் சம்சார நிவ்ருத்திக்கு நிதர்சனம் என்னலாம் படி –
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த–பூவை யுடைத்தாய் -குளிர்ந்த புனலை யுடைய பொய்கையிலே யானைக்கு முதலையால் வந்த இடரைப் போக்கின
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –செவ்வியை யுடைத்தாய் குளிர்ந்த திருத் துழாயை யுடையனாய் –
அத்தாலே எனக்கு அதிவீதிய நாயகன் ஆணவனுடைய சம்பந்தமானது –
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-இச் சேதனனுக்கு நீந்தா நிற்கும் படி துஸ் தரமாய் துக்க உத்தரமான பிறவி உட்பட
மற்றும் நீந்தும் படியான ஜரா மரணாதி களான -எவ்வகைப் பட்ட –
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்–துக்கமும் ஸ்பர்சியாது மோக்ஷ ஆனந்தத்துக்கு ஹேது வாம் –
முதல் பாட்டில் -வீடு முதலாம் -என்றத்தை விவரித்தது –

———————————————————

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

அநந்தரம் அவனுடைய திவ்யமான சேஷ்டிதங்கள் ஸர்வத்ர பிரசித்தம் -என்கிறார் –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி–தன்னை உத்பாதித்த திரு நாபியோடே கூட -திரு மேனியில் ஒரு பார்ஸ்வத்திலும் –
நித்ய வாசம் பண்ணி -லோக ஸ்ருஷ்ட்டி பண்ணுகிற அஜனுமாய்-சம்ஹரிக்கிற ஹரனுமாய் -இப்படி தத் தத் அந்தராத்மத்தையாலே ததாத் மகனாய் –
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்–புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –தன் மார்விலே நிரூபகமாம் படி
சேர்த்துக் கொள்ளப் பட்ட திருவுடையனாய் -தானே -தனக்குத் தகுதியான -திவ்ய வ்யாபாரங்களானவை எங்கும் கண்டு அனுபவிக்கலாம் படி பிரசித்தம் –
முதல் பாசுரத்தில் – இருவரவர் முதலும் தானே -என்றத்தை விவரித்தது –

——————————————————

அநந்தரம் சம்சார நிவ்ருத்தி பூர்வகமான பரமபத ப்ராப்திக்கு ஏவம்விதனுடைய குணங்களில் நித்ய அவகாஹனம் பண்ணுங்கோள்-என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி–நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்–புலப்படும் விஷயங்கள் ஐந்திலும் பொருந்தி- பொறி போலே இவனை அகப்படுத்திக்
கொள்ளும் ஐந்து இந்திரியங்களின் வாசத்தின் நின்றும் அகன்று ஆனந்தம் அளவிறந்து இருப்பதாய் -அத்விதீயமான தேசத்திலே போய்ப் புகை வேண்டி இருப்பீர் –
அலமந்து வீய அசுரரைச் செற்றான்-பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –அலமந்து நசிக்கும் படி அசுரரை கொன்றவனுடைய ஆரம்பமே தொடங்கி
இனிமையாலே பலம் என்னலாம் படியான குணங்களில் என்றும் ஓக்க அவகாஹியுங்கோள்-
ரசாயனமான பயஸ் பாநநை ரந்தைர்யத்தாலே பித்த சாந்தியும் -இனிமையும் பிறக்குமா போலே போக்ய குணங்களில் நிறைந்த அனுபவம் பண்ணவே
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் தன்னடையே வரும் என்று கருத்து –
புலனும் பொறியும் என்கிற இவை இரண்டும் -விஷயங்களுக்கும் இந்திரியங்களுக்கும் கலந்து பேராய் வரும் –

——————————————————

அநந்தரம் -ஸமஸ்த காரண பூதனானவன் கார்ய பூத ஜகத் ரக்ஷண அர்த்தமாகப் பண்ணின அவதாரங்களில் வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-அவிச்சின்னமான துக்கத்தைத் தருவதான ஜென்ம சம்பந்த ரூபமான ஸ்ருஷ்ட்டி அகப்பட
மற்ற ஸ்திதி சமஹாராதிகளான எல்லா வியாபாரங்களும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்-மூத்துச் சோம்பிவிடாத சஹாயாந்தர நிரபேஷ காரண பூதனாய்க் கொண்டு –
ஸ்ருஜ்யமான லோகத்தினுடைய ரக்ஷணத்தை யுடையவனாய்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்–ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் அவ்வருகாம் படி
ஆதி தேவர்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் -எனக்கு அவகாஹிக்கும் துறையாம் படி ஸூலபனானவன் —
புராண ப்ரவர்த்தக கூர்ம மத்ஸ்ய ரூபியாய் -கீதா உபநிஷத் ஆச்சார்யனுமான மநுஷ்யனுமாம் –
முதல் பாட்டில் –இணைவனாம் எப்பொருட்க்கும் –என்கிற பதத்தை விவரிக்கிறது –

———————————————–

அநந்தரம் -இவ்வவதார தசையில் யுண்டான பரத்வம் அதி பிரசித்தம் -என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்–பாவன பூதனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய பூர்வ அவதாரத்திலே-
லோக த்ரயத்தையும் -அளந்து கொண்ட செவ்வையையுடைய திருவடிகளிலே அழகிய மாலைகளை சமர்ப்பித்து –
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு–அவற்றையே சிவனுடைய ஜடா மகுடத்திலே தானே கண்டு அர்ஜுனன் அறுதியிட்ட-அந்த
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை-பசுத்த திருத் துழாயை யுடையவனுடைய பரத்வமானது -இப்பார்த்தனை ஒழிய வேறு ஒருவராலும்
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –உபபாதித்துச் சொல்ல வேண்டும்படி தெரியாது கிடந்த அம்சம் உண்டோ -ஸூ பிரசித்தம் அன்றோ என்று கருத்து –

———————————————

அநந்தரம் ரஷ்யமான ஜகத்தைப் பற்றத் தன் வாத்சல்யத்தாலே அநேக வியாபாரங்களைப் பண்ணும் -என்கிறார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கிடந்து -ரக்ஷண அர்த்தமாக -பிரதி சிஸ்யே மஹா ததிம் -என்று கடற்கரையிலே வழி வேண்டிக் கிடந்தும்
இருந்து -உடஜே ராமமாசீநம் -என்று திருச் சித்ரா கூடத்தில் இருந்தும் –
நின்று -அவஷ்டாப்ய ச திஷ்டந்தம் -என்றும் -ராவண வத அநந்தரம் -தேவதா சந்நிதியில் வில்லை நடுக்கொத்துப் பிடித்து நின்றும் –
அன்றியே
புளிங்குடிக் கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று -9–2–4-என்கிறபடியே அர்ச்சாவதார ஸ்தலத்தில் கிடந்தும் இருந்தும் நின்றும் –
அளந்து –த்ரி விக்ரமனாய் அநந்யார்ஹமாம் படி அளந்தும்
கேழலாய்க் கீழ்ப் புக்கு-இடந்திடும் -வராஹ ரூபியாய் பிரளய ஜலத்துக்கு கீழே புக்கு அண்ட கடாஹத்தின் நின்றும் ஓட்டு விடுவித்து எடுத்ததும்
தன்னுள் கரக்கும் –மஹா பிரளயத்தில் வடதளி சாயியாய் வயிற்றுக்குள்ளே தெரியாதபடி கரந்தும்
உமிழும் -வெளிநாடு காணும்படி உமிழ்ந்தும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் –இடமுடைத்தானா பெரிய திருத் தோள்கள் நிரம்பும் படி அசாதாரண விக்ரஹத்தோடே தழுவியும் -இப்படி
பார் என்னும்-மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –பூமி என்று சொல்லப் படுகிற மடந்தையை சர்வாதிகனான ஈஸ்வரன் பண்ணுகிற வ்யாமோஹத்தை
அறிய வல்லார் ஆர்-அதிசயித ஞானர்க்கும் அறிய ஒண்ணாது என்று கருத்து –

————————————————

அநந்தரம் -அவன் எனக்கு பிரகாசிப்பித்த அதிசயித ஆகாரங்கள் துர் அவபோதம் -என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு-எனக்கு ஸ்வாமியாய் -ஸூல பனானா கிருஷ்ணனை அறிய வல்லார் ஆர் –
அவன்படி இதுவானால் -அறியும் படி எங்கனே -அவனுக்கு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா-ஊண் சொல்லப் பார்க்கில் -அத்தா சராசர க்ரஹணாத்-என்கிறபடியே –
சராசராத்மகமான சகல லோகமும் ஒரு பிடிக்கும் போராது
சேண் பால் வீடோ -அவனுக்கு இருப்பிடமான வீடானது -விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வதே ப்ருஷ்டேஷூ -என்கிறபடியே –
சர்வ லோகத்துக்கும் அவ்வருகான பரமபத பிரதேசத்தில் இலது
வுயிரோ மற்று எப்பொருட்கும்–அவனோ தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் அந்தராத்மா –
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –ஒரு ரேகா மாத்ரமும் சோர விடாதவனாய்க் கொண்டு எல்லா பிரதேசத்திலும் பரந்து நில்லா நிற்கும் –
சர்வ ஜகத் க்ராஸ் சீலனாய் -பரமபத நிலயனாய் -சர்வ பதார்த்தங்களிலும்ம் அந்தர் பஹிச்ச வ்யாப்தனானவனை -எங்கனே பரிச்சேதித்து அறிவது -என்று கருத்து –
ஏண்-என்று வரையாய் -ரேகையைக் காட்டுகிறது –
ஓ -என்கிற அசைவு வினாவைக் காட்டுகிறது –

——————————————-

அநந்தரம் -அவனுடைய ஆஸ்ரித ஸுசீல்ய அதிசயம் அபரிச்சேதயம் -என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து–சர்வம் வ்யாபியா ஸ்திதா -என்கிறபடியே சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரன் –
ஸர்வதா ஸந்நிஹிதன்–என்ற புத்ரனை கோபித்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப–இவ்விடத்தில் இல்லை என்று தான் அறுதியிட்ட தூணை ஹிரண்யன் தட்ட
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என் சிங்கப்பிரான்-அத்தூணிலே அக்காலம் தன்னிலே
ஹிரண்யன் நசிக்கும் படி தோற்றின என்னுடைய நரஸிம்ஹ ரூபியான மஹா உபகாரகனுடைய
பெருமை யாராயும் சீர்மைத்தே –ஆஸ்ரித பக்ஷபாத மஹாத்ம்யம் நெஞ்சால் பரிச்சேதித்து ஆராயும் தன்மைத்தோ-

————————————————————

அநந்தரம் -இப்படி சர்வ பிரகார உபகாரகனாய் -மோக்ஷ பிரதனானவனை நான் அனுபவிக்கப் பெற்றேன் -என்று ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா–புண்ய பாப காரிதமாகை அன்றிக்கே பகவத் கிருபை ஏக ஸாத்யமான
சீர்மையை யுடைய மோக்ஷமும் -புண்ய பாப பல ரூபமான ஸ்வர்க்க நரகங்களும் -மேல் எல்லையாக –
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்–பல பிரதத்வ நிபந்தமான ஈரப் பாட்டை யுடைய தேவர்கள் -சாதனா பலன்களுக்கு நடுவாகவும் –
ப்ரதமபாவியான சாதனாதி ஸமஸ்த பதார்த்தங்களும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற–சஹகாரியுமாய் -நிமித்தமுமாய் -உபாதானமுமாய்க் கொண்டு
ஸர்வத்ர வ்யாப்தனாய் வைத்து -வ்யாப்ய பதார்த்தங்களில் வ்யாவ்ருத்தனாய் நிற்பானாய் –
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –கார்காலத்தில் மேகம் போன்ற வடிவை யுடையனாய்க் கொண்டு
எனக்கு ஸூலபனான கிருஷ்ணனை நான் அனுபவிக்கப் பெற்றேன் -என்று கொண்டு ஸ்வ லாபத்துக்கு ஹ்ருஷ்டராகிறார் –
ஈர்மை கொள் தேவர் -என்று உபய பாவ நிஷ்டர் -என்றுமாம் –

——————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக ஸ்வ ராஜ்ய நிர்வாஹகத்வத்தை அருளிச் செய்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை–கண்ணில் பரப்பு எங்கும் சிவந்து -அதுக்கு பரபாகமாய் ஸ்யாமளமான திருமேனியையுடைய சர்வ ஸ்வாமியை –
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-வண்டுகள் மது வெள்ளத்திலே அலைகிற சோலைகளையுடைய திருவழுதி வள நாட்டையுடைய ஆழ்வார் –
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்–பண் தான் தளமாம் படி அதின் மேலே அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலே இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –பரம ஆகாசத்தில் மேலே ச ஸ்வராட் பவதி -என்கிறபடியே வ்யாவிருத்தமாக இருந்து –
சர்வ பிரகார விசிஷ்டமாய் நிரதிசய போக்யமான மோக்ஷ ஆனந்தத்தை ஸ்வாதீநாமாக அனுபவிப்பார்கள் –
என்னோடு என் அனுபந்திகளோடு வாசியற எங்களுக்குத் தருவதாக இருக்கிற பெரிய வீடு என்றுமாம் –
இது கலி விருத்தம் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: