பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-5-

அந்தாமத்து அன்பு -பிரவேசம் –
இப்படி தோற்றி அருளின எம்பெருமான் தம்மோடு கலந்த கலவியையும் -அக்கலவியால் தமக்குப் பிறந்த ஸம்ருத்தியையும் சொல்லுகிறார் –

————————————————-

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

நித்ய நிர்த்தோஷ நிரதிசய கல்யாண திவ்ய தாமத்தில் பண்ணும் ப்ரேமத்தை என் பக்கலிலே பண்ணிக் கொண்டு –
சர்வ திவ்ய பூஷண ஆயுத பூஷிதமாய் -நிரதிசய ஸுந்தர்யாதி கல்யாண குண விசிஷ்டமாய் -ஸூத்த ஜாம்பூநத ப்ரபமான –
திவ்ய ரூபத்தோடே வந்து என்னோடே கலந்து அருளினான் -என்கிறார் –

——————————————————

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

என்னோடே கலந்து அருளுகிறான் -சர்வேஸ்வரியான பெரிய பிராட்டியாரோடும் ஆஸ்ரிதரான ப்ரஹ்ம ருத்ராதிகளோடும் கலந்து அருளினால் போலே அன்றியே –
தன்னுடைய நிரதிசய தேஜோ மயமான திரு உடம்பில் ஒரு தேசம் ஒழியாமே ஸமஸ்த பிரதேசத்தாலும் கலந்து அருளினான் -ஒருவனுடைய அபி நிவேசமே இது -என்கிறார் –

———————————————————-

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

நிரதிசய கல்யாண குண திவ்ய ரூபத்தை யுடையனாய் -ஸ்வ சங்கல்ப அதீன ஸமஸ்த வஸ்து ஸ்வரூப ஸ்திதி
ப்ரவ்ருத்திகனாய் இருந்தவன் என்னுள்ளே கலந்து அருளினான் -என்கிறார் –

—————————————

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

சர்வ அந்தராத்மா பூதனாய் அளவிறந்த அழகை யுடையனாய் இருந்த இவன் அலகால் சர்வ காலமும் பிரதி க்ஷணம் எனக்கு
அபூர்வத் போக்யமாய் இரா நின்றான் -ஒருவனுடைய அழகு இருக்கும் படியே ஈது -என்கிறார் –

—————————————————–

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

நிரூபமமான ஸுந்தர்யத்தை யுடையனாய் -அபரிமித திவ்ய பூஷண உபபேதனாய் -சர்வ காலமும் அனுபவித்தாலும்
ஆராத போக்யமாய் இருந்தவன் -அத்யந்தம் அவஸ்து பூதனாய் இருந்த என்னுள்ளே கலந்து அருளினான் -என்கிறார் –

———————————————

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

அசங்க்யேய திவ்ய பூஷணங்களையும் -அசங்க்யேய கல்யாண குணங்களையும் -அசங்க்யேய தேஜோ மாயா கல்யாண திவ்ய ரூபங்களையும்-
அசங்க்யேய திவ்ய போகங்களையும் -அசங்க்யேய திவ்ய ஞானங்களையும் உடையனாய் -நாக பாருங்க சாயியாய் இப்படி பரிபூர்ணனாய்
இருந்து வைத்து என்னோடே கலந்து அருளினான் -என்கிறார் –

——————————————

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

தன்னுடைய சர்வ சேஷ்டிதங்களையும் எனக்கே போக்யமாகச் செய்து அருளினான் -என்கிறார் –

——————————————–

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

வாங்மனஸ அபரிச்சேத்ய நிரதிசய கல்யாண ஸ்வரூப குண விபூதியை யுடையனாய் இருந்து வைத்து என்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ குண வ்ருத்தாதி களினுடைய
நிஹீநதையைப் பாராதே என்னுள்ளே கலந்த இஸ் ஸுசீல்யத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் -ஆனபின்பு எத்தைச் சொல்லுவது சொல்லீர் -என்கிறார் –

————————————————-

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

சர்வ பதார்த்த விஸஜாதீயனாய் இருந்து வைத்து -தன் அழகாலே எனக்குத் தாரகனாய் -என்னுள்ளே புகுந்து கலந்து அருளின எம்பெருமானுடைய
இந்த ஸுசீல்யாதி குணங்களை நீங்களும் சொல்லி கோள்-என்று ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————————————————–

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஸ்த்ரீ புந்ந பும்ஸகாதி சர்வ பதார்த்த விஸஜாதீயனாதலால்-தத் கோசார ப்ரமாணங்களுக்கு அகோசரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித ஸூலபனாய் –
ஆஸ்ரிதருடைய விவஷ அனுகுணமான திவ்ய ரூப சேஷ்டிதங்களை யுடையனாய் அநாஸ்ரிதர்க்கு துர் லபனாய் இருந்த எம்பெருமான்
என்னோடு கலந்த இக்குணம் சொல்ல நிலம் அன்று ஆகிலும் சொல்லாது ஒழிய முடிகிறது இல்லை -என்கிறார் –

—————————————————

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

காலதத்வம் எல்லாம் சொன்னாலும் ஆராத குண சேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழியைச் சொல்ல வல்லார் திரு நாட்டிலே போய் எம்பெருமானை அனுபவிக்கப் பெறுவார் -என்கிறார் –

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: