அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-6-

வைகுந்தா-பிரவேசம் –
ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்

—————————————————-

முதல் பாட்டில் -நிரதிசய போக்யனாய் -அநிஷ்ட நிவர்த்தகனான உன்னை -நான் சிக்கெனைப் பற்றி இருக்கிறேன் என்று திரு உள்ளம் பற்று -என்கிறார் –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா –பரமபத நிலயத்வத்தாலே -அசாதாரண சேஷியாய் நீல ரத்னம் போன்ற வடிவை யுடையனாகையாலே ஸூ லபனாய் –
தர்ச நீயமான வாமன விக்ரஹத்தை யுடையனாகையாலே போக்யனாய் -இவ்வாகார த்ரயத்தையும் பிரகாசிப்பித்துக் கொண்டு –
என்னுள் மன்னி–வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே-என் நெஞ்சுக்குள்ளே ஸ்திர சம்ச்லேஷம் பண்ணி -இருக்கிற காலம் தோறும் நித்ய போக்யமாய்க் கொண்டு
நித்ய ஸூரி சமானமாம் படி அனுபவிப்பிக்கிற மேன்மையை யுடையனாய்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து -தானே செய்து கொள்ளப் பட்டு பல பிரதானத்திலே குந்தாதே பரிஹரிக்க அரிதான கொடிய பாபங்களை
உன்னோடு சேஷத்வ சம்பந்தம் யுடையார்க்கு தீர்த்து -அவை பிரதிகூலரான அசுர ப்ரக்ருதிகள் பக்கலிலேயாம்படி
அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -அவர்களுக்கு அனர்த்தத்தை விளைக்கும் குந்தமாகிற ஆயுதத்தை யுடையவனே
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –இப்படி போக்ய பூதனாய் அநிஷ்ட நிவர்த்தகனாய் ஆஸ்ரித பக்ஷபாதியான உன்னை –
உன் இனிமையை அறிந்து உன்னை ஒழியச் செல்லாத நான் -இனி -விடாதபடி ஸ்திரமாக பற்றினேனாக திரு உள்ளம் பற்று –
செய்கும்-தாவரும் -என்று சொல்லாய் -செய்யப்பட்டுக் கடக்க வரிய என்றுமாம் –
குந்தம் என்று மரமாய் -அதின் வெளுப்பையிட்டு ஸூதிதியைக் காட்டுகிறது என்றும் சொல்லுவார் –
பொல்லா -என்று விபரீத லக்ஷணையால் அழகைச் சொல்லுகிறது –
என் பொல்லா -என்று தம்மை அநந்யார்ஹர் ஆக்கிற்று அவ் வழகாலே-என்று கருத்து –

———————————————-

அநந்தரம் தம்முடைய பக்கல் கலந்து அவன் உஜ்ஜ்வல ஸ்வரூபனாய்க் கொண்டு ஓர் இடத்தில் அந்நிய பரத்தை யற்று இரா நின்றான் -என்கிறாள் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் –அல்பமான தேசமும் புறம்பு போகாதபடி -உலகுகளை
தன் சங்கல்பத்துக்குள்ளேஏக பிரகாரமாக அடக்கி இனி ஒரு காலும் புறப்படாத படி என்னுள்ளே புகுந்தான் –
புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –புகுந்த பின் மிகுத்து வருகிற ஞான பூர்த்தியாகிற ப்ரபைக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபமாகிற தேஜோ த்ரவ்யமாய் –
துளக்கற்ற அமுதமாய் –நான் சிக்கெனைப் பிடித்த பின்பு விஸ்லேஷ அதி சங்கையால் வந்த நடுக்கமும் தீர்ந்து நிரதிசய போக்ய பூதனாய்
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –என்னையே பார்த்து இருக்கிற அழகிய
தாமரை போன்ற கண்ணை யுடையவன் ஓர் இடத்திலும் பக்கத்தில் நோக்க அறிகிறிலன் –
என் பக்கல் அபி நிவேசம் பத்னீ பரிஜநாதிகள் பாக்களிலும் காண்கிறிலன்-என்று கருத்து –
ஸ்வரூபாதிகளில் அவனுக்கு யுண்டான ஸ்புரித பிரகாசமும் ஸ்வ சம்ச்லேஷம் அடியாக என்று நினைக்கிறார் –

———————————————————-

அநந்தரம் தன்னைக் கரண த்ரயத்தாலும் நிரந்தர அனுபவம் பண்ணுவித்த மஹா உதாரணானவன் என்னை ஒழிய அறிகிறிலன் -என்கிறார் –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –தாமரை போன்ற கண்களை யுடையவனாய் -அவ்வழகாலே-நித்ய ஸூரிகள்
நிரந்தரமாக புகழும்படியான மேன்மையை யுடையவனாய் –
துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை–விரையும் பூவும் மருவிய துழாய் மாலையை யுடையனாய்க் கொண்டு -எங்களுக்கு ஸ்வாமியாய் –
எங்களோட்டைச் சேர்த்தியால் பொன்மலை போல் ஓங்கி உஜ்ஜவலனான தன்னை –
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட –நாங்கள் நிகர்ஷம் பார்த்து அகலாதே -மருவி -ஸூரிகளோபாதி அங்குத்தைக்குத் தகுதியாம்படி
நன்றாக ஏத்தி –அவர்கள் சிந்தையுள் வைக்குமா போலே நினைத்து -வணங்கி வழிபாடும் –1-6–4-என்கிறபடியே திருவடிகளில் விழுந்து –
இப்படி கரண த்ரயத்தாலும் யுண்டான அனுபவத்தால் நாங்கள் ஆனந்திகளாய் ச சம்ப்ரம நிருத்தம் பண்ணும் படியாக –
நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –நாவிலே அலருகிற பாவிலே மருவி திருவாயமொழி பாடி நிற்கும் படி உபகரித்த
ஸ்வபாவத்துக்கு பொருந்தின உதார குண விசிஷ்டனானவன் -எங்கும் பக்க நோக்கு அறியான் -2–6–2-என்று அந்வயம்
பான்மை -ஸ்வ பாவம் –

—————————————————–

அநந்தரம் -சர்வ பிரகார உபகாரகனான உன்னை விடப் போமோ -என்கிறார் –

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே –அர்த்தித்தவ நிறபேஷமாக உபகரிக்கும் மஹா உதாரனாய்-உபகாரம் கொள்ளுகிற என் விரோதியை
மதுவை அழித்தாப் போலே அழிக்குமவனாய்-நிவ்ருத்த விரோதிகனான எனக்கு உத்துங்கமாய் உஜ்ஜவலமான மரகத மலை போலே இருக்கிற வடிவை
அனுபவிப்பிக்குமவனாய் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே –
உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் –உன்னை அனுசந்தித்து இதர விஷயங்களை இகழும் ஸ்வ பாவத்தை தந்த ஸ்வாமியே –
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து–பெரும் கடல் போலே அபரிச்சின்னமான உன்னுடைய குணங்களை அவகாஹித்து அனுபவித்து –
அந்த ப்ரீதியாலே ஆடுவது பாடுவதாய் களித்து -அது ஓரளவில் நில்லாதே -மேன்மேல் என உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே–அஹங்கார அர்த்த சமன்கள் அனுபவ விஸ்லேஷம் நிகர்ஷ அனுசந்தானம் முதலாக உள்ள
நோய்கள் எல்லாம் -தூரப் போம்படி அகற்றி -லப்த சத்தாகனாய் -சம்சார ஸ்திதி குலைந்து உன்னளவும் போந்து -சாம காயன் நமஸ்தே -என்று
அனுபவித்துக் கொண்டு இருக்கப் பெற்று வைத்து
உன்னை எங்கனம் விடுகேன்– இப்படி உபகாரகனான உன்னை எங்கனே விடுவேன் –

———————————————–

அநந்தரம் -த்வத் அனுபவ ஜெனித கைங்கர்ய போகத்தைப் பெற்ற நான் விடும்படி என் -என்கிறார் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை-திருப் பாற் கடலிலே -ஐந்து வகையாய் விரிந்த தலை -பணங்களை யுடையனாய் –
அசைந்து வருகிற திரு அரவணையின் மேலே -பொருந்திக் கண் வளர்ந்து -ஜகத் ரக்ஷண யோகத்தில் நிப்ருதையாலே உறங்குவாரைப் போலே –
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –ரக்ஷண பிரகார சிந்தை பண்ணின என் ஸ்வாமியே –
இப்படி ரக்ஷகத்வத்தை பிரகாசிப்பித்த உன்னை -நிரந்தர அனுசந்தானம் பண்ணி
உய்ந்து போந்து- லப்த ஸ்வரூபனாய் அந்நிய பரரான சம்சாரிகளில் வ்யாவருத்தனாய் –
என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து -நானே எனக்குத் தெடிக் கொண்டு அசங்கக்யாதமாய் -க்ரூரமாய் அக்னி கல்பமான பாபங்களை நசிக்கும் படி பண்ணி –
உனது-அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ–ப்ராப்தனான உன்னுடைய அபரிச்சின்னமான கைங்கர்ய போகத்தை கிட்டப் பெற்ற நான் விட ஷமன் அல்லன்-
1-ஆஸ்ரித விஷயத்தில் உனக்குப் பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ –
2-அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தை இல்லாமல் விடுகிறேனோ –
3-உன் அனுபவத்தில் எனக்கு சீலனாம் இல்லாமல் விடுகிறேனோ –
4-என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடுகிறேனோ –
5-விஷயாசக்தரான சம்சாரிகளோடு பொருத்தம் யுண்டாய் விடுகிறேனோ –
6-பிரதிபந்தகமான பாபம் யுண்டாய் விடுகிறேனோ –
7-ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ –
இப்படி லப்த அபீஷ்டனான நான் விடுவேனோ -என்று கருத்து –

———————————————————-

அநந்தரம் இந்தக் கைங்கர்ய லாபத்தாலே தம்முடைய சர்வ அபீஷ்டமும் தலைக் கட்டிற்று -என்கிறார் –

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் –வகுத்த ஸ்வாமியுமாய் உபகாரகனுமான உன்னை -நெஞ்சால் அநாதரித்த ஹிரண்யனுடைய
அகல் மார்வம் கீண்ட -பேரிடம் யுடைத்தான மார்வை -அநாயாசேன கிழித்தவனாய்
என் முன்னைக் கோளரியே –விரோதி நிவ்ருத்திக்கு நிதர்சன பூதனாய் -ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் நினைவுக்கு முற்கோலின நரஸிம்ஹமானவனே-
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி -இப்படி ஆபத்சகானாய் -ப்ராப்தனாய் -போக்யனான உன்னை –
நிரந்தர அனுசந்தானம் பண்ணி -அந்த ப்ரீதியாலே உத்துங்கமான உன்னுடைய குண வாசகமான திருவாய் மொழியை –
அவ்விஷயத்துக்கு ஈடான பெருமையுடைய இசையோடு பாடி -அப்பாட்டுக்கு ஈடான அபிநயம் தோற்றும்படி ஆடி -இப்படி கரண த்ரயத்தாலும் உண்டான போகத்தாலே
என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் -என்னுடைய அநாதி கால ஆர்ஜித பாபங்களை -நோ பஜனம் ஸ்மரந் -என்னும் கணக்கிலே
நான் ஓன்று ஒழியாமல் வேரோடே அரிந்தேன்-
போக்த்ருத்வம் இத்தலையிலே ஆணாவோபாதி விரோதி நிவர்த்தகமும் இங்கேயாகக் குறையில்லை இறே -ஸ்வரூபம் தத் பிரகாரமான பின்பு –
முடியாதது என் எனக்கே –எனக்கு தலைக்கு காட்டாதது எது தான் -சர்வ அபீஷ்டமும் சித்தம் அன்றோ -என்று கருத்து –

————————————————-

அநந்தரம் என் பக்கல் பண்ணின உபகாரம் என் குலத்தில் சம்பந்தித்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி யாயிற்று -என்கிறார் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

முழு ஏழ் உலகும் உண்டான் –ஸமஸ்த லோகமும் -தன் செல்லாமையாலே தனக்கு உள்ளேயாம் படி அவற்றை அமுது செய்தவன் –
உகந்து-அச் செல்லாமை தனக்கு என் பக்கலிலே உண்டாய் -அதுக்கு மேலே ஆதார அதிசயத்தை யுடையனாய்க் கொண்டு
அடியேனுள் வந்து புகுந்தான் -என்னுடைய சேஷத்வ சம்பந்தமே பற்றாசாக உள்ளே வந்து புகுந்தான்
அகல்வானும் அல்லன் இனி–இனி -அந்த லோகங்கள் போலே புறம்பு போமவனும் அல்லன் -இது அடியாக
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்–கீழும் -மேலும் -ஏழு பிறப்பிலும் -என்னோடு சம்பந்த முடையார்
செடி போலே செறிந்த -அவித்யா கர்ம வாச நாதிகளான-ஸமஸ்த வியாதிகளையும் -கடக்க ஒட்டி –
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –ஒருகால் முடிந்து வெளிச் சிறப்பது இன்றியே -நிரதிசய தாப கரமான சம்சாரமாகிற
நிரயத்திலே யாவதாத்மா பாவி கிட்டுகை தவிர்ந்தார்கள்–
முடியாதது என் எனக்கேல் இனி -இப்படி குல சம்பந்தி பர்யந்தமாக என்னைப் பக்ஷபதித்த பின்பு -எனக்காக்கில் முடியாதது உண்டோ –
என்னோடு அநுபந்தித்ததாகில் எல்லாக் காரியமும் தலைக் கட்டும் -என்று கருத்து –

——————————————————–

அநந்தரம் இப்பேறு எனக்கு விச்சேதியாது ஒழிய வேணும் -என்கிறார் –

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து –தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளான நாநா ஜென்மங்களிலும் –
ஒரு கால் பிறந்ததில் மீண்டும் மீண்டும் பிறந்து போரச் செய்தே
அடியை யடைந்து உள்ளம் தேறி-உன் திருவடிகளைக் கிட்டி -சேஷத்வ ஞானத்தை யுடையேனாய் -நீயே உபாய பபூ தன் என்கிற
நெஞ்சில் தேற்றத்தை யுடையேனாய் -உன்னுடைய அனுபவத்தால் ஜெனிதமான
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்–முடிவு இல்லாத ஆனந்தமாகிற பெரிய வெள்ளத்திலே -அஹமர்த்த பூதனான நான் அவகாஹித்தேன் –
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் –அசூரர்களுடைய பலவகைப்பட்ட குழாங்களானவை பஹு முகமாக சிதிலமாய் தூளியாய் கிளரும்படி-
அவர்களுடைய சேனா மத்யத்திலே பாயக் கடவனான
பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய் –அத்விதீயனான பெரிய திருவடியின் மேலே ஏறி உன் மேன்மை தோன்றும்படி இருந்த என் நாதனே –
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –-ப்ராப்தனுமாய் -சரண்யனுமாய் -போக்யனுமாய் -விரோதி நிவர்த்தகனுமான – உன்னை –
உனக்கு சர்வ பிரகார பர தந்த்ரனான என்னுள்ளின் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –

——————————————————-

அநந்தரம் -நீயே கிருஷி பண்ணிக் கலந்து இனி எங்கே ஏறப் போவது -என்கிறார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –எனக்கு நிருபாதிக ஸ்வாமியாய் -ஸ்ரமஹரமான திருமலையிலே எழுந்து அருளி நின்று ஸூலபனாய்-
இலங்கை செற்றாய் –ஆஸ்ரித விரோதிகளுக்கு வாஸஸ் ஸ்தானமான இலங்கையை அழித்தவனாய்-
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா–மரா மரங்களினுடைய பருத்த அடி ஏழும் உருவும்படி ஒரு வாளியை அநாயாசேன கோத்த வில்லை யுடையனாய் –
கொந்தார் தண் அம் துழாயினாய்-எம் அமுதே –கொத்தாய் செறிந்து குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதனாய் -நித்ய போக்யனாய்க் கொண்டு
உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –ஏவம்விதனான உன்னை என்னுள்ளே ஏகாத த்ரவ்யமாம் படி கலசின
நித்ய யவ்வன ஸ்வ பாவனாய் -இந்நிலையாலே -ஸூரிகளுக்கும் செருக்கனாம் படி நின்றவனே —
அசாதாரண சம்பந்தத்தையும் –ஸுலப்யத்தையும் –விரோதி நிவர்த்தகத்வத்தையும் -காட்டி மஹா ராஜரைப்போலே என்னையும் விஸ்வசிப்பித்து-
ஒப்பனை அழகைக் காட்டி எனக்கு நித்ய போக்யனாய் பிரிக்க ஒண்ணாத படி கலந்து அத்தாலே இளகிப் பதித்து –
இத்தாலே நித்ய விபூதிக்கும் மேலான மேன்மையை யுடைய நீ
இந்த சம்ச்லேஷத்தை விட்டு எங்கே போகிறது -இனிப் போகாதே என்று கருத்து –

————————————————–

அநந்தரம் -உன் உபகாரங்களைக் கண்ட நான் -உன்னைப் பெற்று வைத்து விட ஷமனோ-என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் –வர்த்தமானமாயும் -பூதமாயும் -ஆகாமியாயும் உள்ள காலத்திலும் –
தாயும் தந்தையும் தன் ஆத்மாவும் தனக்குப் பண்ணும் பரிவைப் பண்ணா நிற்பானாய் –
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா –இப்படி சர்வதோ முகமான ரக்ஷணத்தாலே பரக்கிற-அநாதி ஸித்தமான குண பிரதையை யுடையனாய்க் கொண்டு
த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் நாதனாய் -இப்பெருமைக்குத் தனக்கு மேல் இல்லாதவனாய் -இம்மேன்மை யன்றியே
தண் வேங்கட மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே–ஸ்ரமஹரமான திருமலையிலே மேவி நிற்கிற ஸுலப்யத்தை யுடையனாய் —
இப்பரத்வ ஸுலப்யங்களுக்கும் போக்யத்தைக்கும் ஸூசகமாய் -குளிர்ந்த திருத் துழாயை யுடைத்தாய் -பரிமளம் ப்ரவஹிக்கிற மாலையை யுடையவனே
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ–ஏவம்விதனான உன்னை ஸம்ஸ்லேஷிக்கப் பெற்ற நான் விட ஷமனோ –

——————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவச் சேஷத்வ சித்தியை அருளிச் செய்கிறார் –

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ் நண்ணித்–மாலா காரமாய் -குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியையும் -\
கமலம் போலே தர்ச நீயமாய் -விசாலமாய் நீண்ட திருக் கண்களை யுடையவனை –அவனுடைய ஆஸ்ரித சம்ச்லேஷ காரிதமான குண பிரதையை கிட்டி –
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன-அழகிய திரு நகருக்கு நிர்வாஹகராய் -மாறன் -என்கிற குடிப் பேரை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்–பகவத் அபிப்ராயத்தை தப்பாத அந்தாதியாய் -அடைவு குலைக்க ஒண்ணாத –
ஆயிரத்தில் அத்விதீயமான இவை பத்தையும் இசையோடு கூட
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –பண்ணிலே பாட வல்லரான அவர்கள் சர்வாதிகனான சர்வேஸ்வரனோடு அவ்யவஹித சம்பந்த யுக்தராவார்கள் –
எண்- என்று ஞானமாய் -தத்வ ஞானத்தைத் தப்பாத ஆயிரம் -என்றுமாம் –
பான் -என்று ஸ்வரம் / இசை என்று கீதி பிரகாரம் /
இது முதல் அடியும் மூன்றாம் அடியும் அறு சீராய் அயல் அடியும் ஈற்று அடியும் நாற்சீரான ஆசிரியத் துறை –

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: