அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-5-

அந்தாமத்து அன்பு -பிரவேசம் –
அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –

———————————————————————

முதல் பாட்டில் -பூஷணாதி விசிஷ்டமான விக்ரஹ சோபையை அனுபவிக்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு–பரமபதத்தில் -விருப்பத்தை பண்ணி -ஹேயனான என்
நெஞ்சுக்குள்ளே பொருந்தின நிருபாதிக ஸ்வாமியானவனுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள–சேஷித்வ ஸூசகமான அழகிய மாலையை யுடைத்தான உஜ்ஜவலமான திரு அபிஷேகம் திவ்ய ஆயுதங்கள் –
திரு யஜ்ஜோபவீதம் -திரு வாரம் –இவரை ஸ்புரித்து தோன்றா நின்றன –
செந்தாமரைத் தடங்கண் –திருக் கண்கள் சிவந்த தாமரைத் தடாகமாய் இரா நின்றன
செங்கனிவாய் செங்கமலம்–சிவந்த பக்வ பலம் போன்ற ஆதாரம் சிவந்த தாமரையாய் இரா நின்றது
செந்தாமரை யடிக்கள் –திருவடிகள் சிவந்த தாமரையாய் இரா நின்றன –
செம்பொன் திருவுடம்பே –திரு உடம்பு செம் பொன்னாய் இரா நின்றது –
இப்பாட்டு -அந்தராதித்ய வித்யையில் சொன்ன ஹிரண்மய விக்ரஹ யோகத்தையும் –புண்டரீகாக்ஷத்வ அவயவ சோபையையும் —
கிரீட மகுடாத் யாபரண சோபையையும் -த்ருத சங்க சகரத்வத்தையும் சொல்லி -இப்படி ஆதித்ய மண்டல அந்தர்வர்த்தியானவன்-
சா யஸ்சாயம் புருஷே யஸ்ஸாஸா வாதித்யே ச ஏக –என்கிறபடியே -அழகிய ஆதித்ய மண்டலத்தில் பண்ணும் விருப்பத்தை என் நெஞ்சிலே பண்ணிப் புகுந்து –
அந்த வ்யக்த ஐக்கியம் இங்கே ஸ்புரிக்கும் படி அத்யுஜ்வலனாய் இரா நின்றான் -என்றும் சொல்லும் –

———————————————————-

அநந்தரம் -இவ்வவயவ சோபையை யுடையவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளான விபூதி பூதர்க்கும் பிராட்டியோபாதி
திரு மேனியில் இடம் கொடுத்த உஜ்ஜ்வல்யத்தை அருளிச் செய்கிறார் –

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே -எந்தை பெருமாற்கு –ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஒன்றும் சோராத படி -என்னுள் கலந்த என் குல நாதனுக்கு –
திருவுடம்பு வான்சுடர் -ஸ்லாக்கியமான வடிவு ஆதித்ய வர்ணமாய் இரா நின்றது –
செந்தாமரைக் கண் கை கமலம்-திருக் கண்ணும் திருக் கையும் சிவந்த தாமரை போலே செவ்வி பெற்றது –
திருவிடமே மார்வம் –திரு மார்பு ஸ்ரீ மஹா லஷ்மீ ஸ்தானமே ஆயிற்று –
அயனிடமே கொப்பூழ்–கொப்பூழ் ப்ரஹ்மாவுக்கு
ஒருவிடமும் அரனேயோ–நீக்கியுள்ள இடம் ருத்ரனேயாய் இரா நின்றது -இது என்ன ஆச்சர்யம் –
ஒருவுதல் -நீங்குதல் –
தன் திரு உள்ளத்திலே அவன் கலந்த பின்பு ரூப உஜ்ஜ்வல்யமும் அவயவ உஜ்ஜ்வல்யமும் உண்டானாவோபாதி விபூதி உஜ்ஜ்வல்யமும் உண்டாயிற்று -என்று கருத்து –

————————————————-

அநந்தரம் தன்னுள் இராத வஸ்துவுக்கு சத்தை இல்லையாமோபாதி என்னுள் தான் கலவாத போது
தனக்கு சத்தை இல்லையாக நினைத்து என்னுள்ளே கலந்து உஜ்ஜவலன் ஆனான் என்கிறார்

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

என்னுள் கலந்தவன் மின்னும் சுடர் மலைக்குக் –என்னுள்ளே கலந்தவனாய் பாத்தாலே விளங்கின சுடரையுடைய மலை போன்றவனுக்கு
செங்கனிவாய் செங்கமலம் கண் பாதம் கை கமலம்–முன்பு சொன்ன அவயவ சோபையும் யதா பூர்வம் அத்யுஜ்வலமாய் இரா நின்றது
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள–சித்திரமாய் பூரணமான சகல லோகங்களும் அவன் திரு வயிற்றிலேயாய் சத்தை பெறா நின்றன –
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –தனக்குள்ளே சம்பந்தியாது இருப்பது ஏதேனும் ஒரு பொருளும் இல்லை –
சர்வ வஸ்துவுக்கும் தத் வ்யாதிரேகத்தில் சத்தா ஹானி ஸ்வரூப பிரயுக்தை-
ஈஸ்வரனுக்கு இவருடைய வ்யதிரேகத்தில் சத்தை இல்லை என்று நினைக்கிற இடம் சீலக்ருதம் என்று கருத்து –

———————————————–

அநந்தரம் நிரதிசய போக்ய பூதனானவன் என்னுள்ளே புகுந்த பின்பு ஸ்திர ஸ்வ பாவன் ஆனான் -என்கிறார் –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்–எல்லா க்ஷணம் -எல்லா நாள் -எல்லா மாசம் -எல்லா ஆண்டு -எல்லா வகைப்பட்ட ஊழி தோறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –அவ்வோ காலங்களிலே-என்னுள்ளே கலந்து அத்ருப்திகரமான அம்ருதமானவன் –
பாத்தாலே வந்த தன்னுடைய ப்ரீதி அதிசயத்தாலே
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்-எல்லா பொருளும் தானான சர்வாத்ம பாவமும் நிறம் பெற்று -மரகத மலை போல் உயர்த்தியும் நிறமும் உரமும் உடையனானான் –
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்–அப்போது அலர்ந்த தாமரை போலே கண்ணும் அப்போதைக் கமலம் போலே பாதமும் கையும் புதுமை பெற்றன –

——————————————————

அநந்தரம் தம்முடைய திரு உள்ளத்திலே கலந்தவனுடைய அவயவ சோபைக்கு உபமை இல்லை -என்கிறார் –

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த–நிரதிசய போக்ய பூதனாய் -ஓன்று அல்லாத என் நெஞ்சுக்குள்ளே கலந்து -அத்தாலே
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு–கார் காலத்திலே பூரணமான காளமேகம் போலே இருக்கிற என் நாதனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு –
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்–சிவந்த பவளம் அதரத்தை ஒவ்வாது –கமலங்கள் கண் பாதம் கைகளை ஒவ்வா -அதுக்கு மேலே
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –பெரிய ஆரமும் உயர்ந்த முடியும் நானும் முதல் மற்றும் உண்டான ஆபரணங்களும் அசங்க்யாதங்கள் –

——————————————

அநந்தரம் பூஷணாத் அபரிச்சேதத்தை அனுபவிக்கிறார் –

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பாம்பணை மேலாற்கேயோ–திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டால் போலே என்னோடு கலந்தவனுக்கு –
பண்பு எண்ணில்-ஸ்வ பாவ நிரூபணம் பண்ணில்
ஆபரணம் பல பல -ஆபரணம் -க்ரீடாதி ரூப பேதத்தாலும் ஓர் ஒன்றில் ஸம்ஸ்தான பாஹுள்யத்தாலும் -பல பலவாய் இருக்கும் –
பேரும் பல பல -நாமமும் வ்யக்தி பேதத்தாலும் -நிர்வசன முகத்தாலும் ஓர் ஓன்று அநேக நாமாத்மகமாகையாலே பல பலவாய் இருக்கும் –
சோதி வடிவு பல பல -ஜ்யோதி ரூபமான அப்ராக்ருத விக்ரஹமும் பாரா வ்யூஹத்தி பேதத்தாலும் அவாந்தர பேதத்தாலும் பல பலவாய் இருக்கும் –
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்- பலபலவே –இந்த்ரியத்வாரா தத் தத் விஷய சம்யோகத்தால் வருகிற ஸூகமும் –
வ்யக்தி பேதத்தாலும் அவாந்தர பேதத்தாலும் பல பலவாய் இருக்கும் –
ஞானமும் பல பல –தத்த்வாரா பதார்த்தங்களில் பிறக்கிற ஞானமும் அப்படியே பல பலவாய் இருக்கும் –
இந்த்ரியத்வாரா வருகிற ஸூக ஞானங்களில் ஈஸ்வரனுக்கு யதாக்ரமத்தாலும் வ்யுத்க்ரமத்தாலும் வரும் அநியமத்தாலே பன்மை சொல்லவுமாம் –

—————————————————–

அநந்தரம் -தம்மோட்டை சம்ச்லேஷத்தாலே அவனுடைய திவ்ய சேஷ்டிதங்கள் தமக்கு பிரகாசித்து நிறம் பெற்ற படியை அனுபவிக்கிறார் –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்–பாற் கடலிலே பாம்பணையில் மேலே கண் வளர்ந்து அருளுகையை பொருந்தினதும் –
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்–மூங்கில் போன்ற தோளையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக ஏறு ஏழையும் ஏக உத்யோகத்திலே கொன்றதுவும் –
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்–தேனையும் -பணையையும் யுடைய -அத்தாலே சோலையாகத் தழைத்த மாறாமரம் ஏழு எய்ததுவும் –
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –அழகிய தொடையை யுடைத்தாய் குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமாய்
அத்யுஜ்ஜ்வலமான முடியை யுடைத்தாய் தர்ச நீயமாய் விரோதி நிரசன உத்யோக செல்லமாய் செருக்கை யுடைத்தான ருஷபம் போன்ற வஸ்து –
ஏறு -என்ற சொற்கு ஈடாக -அமர்ந்ததுவும் செற்றதுவும் எய்ததுவும் என்று அஃறிணை –

——————————————————

அநந்தரம் சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையை அருளிச் செய்கிறார் –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

பொன் முடியம் போரேற்றை எம்மானை –உஜ்ஜவலமான அபிஷேகத்தை யுடைய பெரும் செருக்கனாய் -அந்த ஸ்வாதந்தர்யச் செருக்கைக் காட்டி
என்னை அடிமை கொண்ட நாதனாய்-
நால் தடம் தோள்–நாலு வகைப்பட்ட பெரிய திருத் தோளை யுடையனாய்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை–தன் பெருமைக்கு குடிவு இல்லாதவனாய் இந்த மேன்மைக்கும் போக்யத்தைக்கும் ஸூசகமான
குளிர்ந்த திருத் துழாய் மாலையை யுடையனாய் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை–தன் உதகர்ஷத்துக்கு எல்லை காணாதவோபாதி என் நிகர்ஷத்தின் முடிவு காணாதே என் நெஞ்சுக்குள்ளே கலந்தவனை –
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –நான் -ஸ்வ சம்வேத்யமாக அறியுமது ஒழிய பாசுரம் இட்டுச் சொல்லும் பிரகாரம் காண்கிறிலேன் –
நீங்கள் அனுபவித்த விஷயம் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுமோபாதி இங்குச் சொல்லுவது ஏது-உண்டாகில் சொல்லுங்கோள்–என்று லௌகீகரைக் குறித்து உரைக்கிறார் –
லோக வ்யாவ்ருத்தனுடைய சம்ச்லேஷ சாரஸ்யம் வாசா மகோசரம் என்று கருத்து –
விஸ்லேஷ தசையில் என் முடிவு காணாதே -என்றுமாம் –

—————————————————————

அநந்தரம் -நிரதிசய போக்ய பூதனானவனைச் சொல்ல வல்லி கோளாகில்-சொல்லுங்கோள்-என்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

என் அம்மானை என்னாவி யாவி தனை–எனக்கு ஸ்வாமியாய் -என் ஆத்மாவுக்கு ஆத்மாவாய் –
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-எல்லையில்லாத ஸுகுமார்யாதி குன்ங்களை யுடைத்தான நீல ரத்ன ஜ்யோதிஸ்ஸூ போலே
இருக்கிற வடிவை என்னை அனுபவிப்பித்தவனை –
சொல்லீர் -எல்லாரும் சேர்ந்து சொல்லலாமாகில் சொல்லுங்கோல் -சொல்ல ஒண்ணாமைக்கு அடி என் என்னில்
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்–லௌகிக அம்ருதத்தில் வி லக்ஷணமான நித்ய போக்ய அம்ருதமுமாய் -பரம யோகிகளுக்கும் பெறுதற்கு அரிதான
மோக்ஷ ஸ்தான நிர்வாஹகனுமாய்-
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் -லௌகிக பெண் அல்லன் –தாமரைப் பூவில் பரிமளம் போலே நிஷ்க்ருஷ்ட போக்ய ரூபனாய்
பும்ஸத்வத்தாலே ஸ்த்ரீகளில் வ்யாவ்ருத்தனான வோபாதி-புருஷோத்தமதவத்தாலே ஸமஸ்த புருஷ வ்யாவருத்தனாய் இருக்கும் –
ஆதலால் சொல்ல அரிது -என்று கருத்து –

——————————————————

அநந்தரம் -அவன் ஸ்வ பாவத்தைச் சொல்லுகை மிகவும் அரிது -என்கிறார் –

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்–ஆணும் அன்றியே -பெண்ணும் அன்றியே பிரயோஜனவத்தல்லாத அழியும் அன்றியே –
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்–அவற்றைக் காணும் ப்ரமாணத்தால் காணவும் ஒண்ணாதே
பிரதிகூலர்க்கு உளன் அன்றியே அனுகூலர்க்கு இலன் அன்றியே –
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்–ஆஸ்ரிதராய் ஆதரித்த காலத்தில் அவர்கள் ஆதரித்த வடிவை யுடையனாய் –
ஆதாரம் இல்லாத அளவில் அப்படி அல்லனாய் இருக்கும் –
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –என் ஸ்வாமியை இப்பிரகாரம் அவன் காட்டக் கண்ட நான் கூறும் இடத்து மிகவும் மிறுக்குடைத்து-
கோணை-மிறுக்கு/ சர்வ விசஜாதீயனாகையாலே-ஏவம் விதன்-என்று சொல்ல அரிது என்று கருத்து –

—————————————————-

அநந்தரம் – இத்திருவாய் மொழிக்கு பலமாக பரமபத பிராப்தியை அருளிச் செய்கிறார் –

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை-ஒரு குணத்தைச் சொல்லிலும் சொல்லி முடிய ஒண்ணாத குடக் கூத்து முதலான சீலாதி குணங்களை யுடைய ஸ்வாமியை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்-உள்ளபடியே சொல்லுவதாக உத்யோகித்து அவனாலே லப்த ஞான ப்ரேமரான ஆழ்வார்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்-அருளிச் செய்த அந்தாதி யாகையாலே அடைவு குலைக்க ஒண்ணாத அத்விதீயமான ஆயிரத்தில் இப்பத்தையும் –
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –சொல்ல வல்லார் உண்டாகில் பரமபதத்தை கூடுவர் –
இது கலிவிருத்தம் –

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: