அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-3-

ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –
இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத பொடியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

————————————————-

முதல் பாட்டில் -சர்வ ரசமான வஸ்துவோடு தமக்கு உண்டான சம்ச்லேஷம் தம்முடைய திரு உள்ளமடியாக வந்ததால் நெஞ்சைப் பார்த்து உகக்கிறார்

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஊனில் வாழுயிரே நல்லை போ -சரீரத்தில் -இந்தளத்தில் தாமரை போலே பகவத் அனுபவத்தை பெற்று வாழுகிற நெஞ்சே -நல்ல காண்-எங்கனே என்னில்
உன்னைப் பெற்று– வானுளார் பெருமான் மது சூதன் -உன்னை -எனக்கு விதேயமாகப் பெறுகையாலே பரமபத வாசிகளான நித்ய ஸூரி களுக்கும்
மேலான மேன்மையை யுடையனாய் -தன்னை அனுபவிக்கப் பாரித்த என்னுடைய பிரதிபந்தகத்தை மதுவை முடித்தால் போலே முடித்து
என்னம்மான் தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்–என்னை அடிமை கொண்டு அருளின தன்மையை யுடைய அவனும் –
அவனை அனுபவிக்க ஆசைப்பட்டு அடிமை புக்க நானும் -தனக்குள்ளே எல்லா இனிமையுமாம் படி
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –தேனும் தேனும் -பாலும் பாலும் -நெய்யும் நெய்யும் -கன்னலும் கன்னலும் -அமுதும் அமுதும் போலே கலந்து விட்டோம் –
இத்தால் -ஏக ஜாதி த்ரவ்யம் கலந்தால் போலே என்ற படி –
அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் -ஸர்வவித சாரஸ்யமும் தோற்றுகைக்காக-
தேன் என்று -சர்வ ரஸ சமவாயம் –பால் என்று ஸ்வாபாவிக ரசம் -ணெய் என்று ப்ரும்ஹண ரசம் -கன்னல் என்று கரும்பாய் -அதனுடைய பாகஜ ரசத்தை நினைக்கிறது –
அமுது என்று நித்ய ரசம் -உயிர் என்று பிராண ஆச்ரயமான நெஞ்சைச் சொல்லுகிறது -போ வென்று சாதரமான சம்புத்தி ஸூசகம் –

———————————————————–

அநந்தரம் ஏவம் வித சாரஸ்ய யுக்தன் தம் விஷயத்தில் பண்ணின உபகாரம் அபரிச்சேதயம் -என்கிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

ஒத்தார் மிக்கார் இலையாய -இந்த சா ரஸ்ய அதிசயத்துக்கு சமாப்யதிக தரித்ரனாய்-
மா மாயா-பிரதி க்ஷணம் அனுபவியா நின்றாலும் அபூர்வவத் விஸ்மய அவஹமான மஹா ஆச்சர்ய யுக்தனாய் –
ஒத்தாய் எப் பொருட்கும் -சர்வ பதார்த்த சஜாதீயனாய் வந்து அவதரித்து -அனுபவிப்பிக்குமவனாய் –
உயிராய் -ஆத்மா சரீரத்துக்கு தாரகனாமோ பாதி சர்வ பதார்த்த தாரகனாய்
என்னைப் பெற்ற அத்தாயாய் தந்தையாய்த் -என்னை உபபாதித்த அந்த அசாதாரண சம்பந்தத்தை யுடைய -தாயாம் படி ப்ரிய பரனாய் –
தத் அவித்தோபத்தி ஹேது வான பிதாவாம் படி ஹித பரனுமாய் -ஆச்சார்யனோ பாதி
அறியாதன யறிவித்து அத்தா –அஞ்ஞாதமான அனுபாவாதிகளை அறிவிப்பதும் செய்து -இவ்வுபகாரங்களுக்கு அடியான சம்பந்தத்தையும் யுடையவன் –
நீ செய்தன அடியேன் அறியேனே –சோபாதிகரான அவர்களை போல் அன்றியே நிருபாதிக்க சம்பந்த யுக்தனான நீ செய்து அருளிய உபகாரங்களை
அடியேனான உறவால் என்று இருக்குமது ஒழிய அளவிட்டு அறிய மாட்டுகறிலேன்-
ஸர்வவித பந்துவான நாராயணன் இ றே மாதாவும் பிதாவும் குருவும் என்று கருத்து –

———————————————————

அநந்தரம் -தன் பக்கலிலே அவன் தம்மை அபிநிவேசிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை -பிறர் தன்னை அறியாதபடி வடிவழகாலே மதி மயக்கின வாமனனானவனாய் -நிலம் மாவலி மூவடி என்று
அநந்வித பதமாய் அபரிஸமாப்த்தமான வாக்யத்தாலே -இவன் ஈஸ்வரன் என்று அறிவிக்கிற ஸூக்ராதிகள் பாசுரமும் நெஞ்சிலே படாதபடி
வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –அவன் தன்னது என்று இருந்த ஜகத்தை வஞ்சித்துக் கொண்டவனே –
இவ்வபதாநத்தை எனக்கு பிரகாசிப்பித்து என் நெஞ்சுக்குள்ளே கலந்து -அக்கணக்கிலே
அறியா மா மாயத்து அடியேனை –அறியாமையை விளைப்பதாய்-துஸ்தரமான பெருமையை யுடைத்தாய் மாயா கார்யமான சம்சாரத்திலே –
ஸ்வ தஸ் ஸித்தமான சேஷத்வ சம்பந்தம் பற்றாசாக என்னை –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால்–அந்த சேஷத்வம் அறிக்கைக்கு சம்பாவனை இல்லாத காலத்திலேயே
தத் பலமான சேஷ வ்ருத்தியிலே ஆதரத்தை பிறப்பித்து வைத்தாய் இறே
இது உன்னுடைமையை நழுவ விடாமைக்கு இறே என்று கருத்து –

———————————————

அநந்தரம் -இவ்வுபகாரத்துக்கு ப்ரத்யுபகாரம் இல்லை -என்கிறார் –

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

பொழில் எழும் உண்ட எந்தாய்–பிரளயத்தில் அழியப் புகை திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளின ஸ்வாமியே -அப்படி நானும் அழிந்து போகாத படி
எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு-அத்யந்த ஹேயமான என் ஆத்மாவுக்குள்ளே ஒரு நீராகக் கலந்த -அது தன் பேறாம் படி பெருத்து –
நிர்ஹேதுகமாகையாலே நன்றான உதவிக்கு பிரதியுபகாரமாக
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ -என் ஆத்மாவை உனக்குத் தந்தே விட்டேன் -இனி அதுக்கு மீட்சி என்பது ஓன்று இல்லை -இது தான் யாரது என்று ஆராய்ந்தால்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –என் ஆத்மாவுக்கும் ஆத்மா நீ -ஆதலால் தரப்படுகின்ற என் ஸ்வரூபத்தினுடைய கர்மத்வமும் நான் இட்ட வழக்கு அல்ல –
தருகிற என்னுடைய கர்த்ருத்வமும் நான் இட்ட வழக்கு அல்ல -தாத்ருத்வ கர்த்ருத்வாதி விசிஷ்டமான இவ்வ்வஸ்துவினுடைய சத்தையை
அடியிலே உண்டாக்கிக் தந்த நீ தானே பின்னையும் ஸ்வீகரித்தாய் –
ஆதலால் உனக்கே சேஷம் என்று இட்டு எனக்கு சமர்ப்பணத்தில் கர்மத்வமும் இல்லை -கர்த்ருத்வமும் இல்லை –
கைம்மாறு -ப்ரத்யுபகாரம் –

———————————————————

அநந்தரம் -உன்னுடைய அப்ராக்ருத போக்யதையைக் காட்டி ருசி ஜனகனான படியால் உன் திருவடிகளைப் பெற்றேன் அல்லனோ -என்கிறார் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

யார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்-எத்தனையேனும் அதிசயிதரானவர்களுடைய ஞானங்களால் -எடுக்கைக்கு எடுப்புண்ணாத ஸ்வாமியாய் –
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே–உன் பாக்கள் ஸ்நேஹத்தாலே பரிபக்குவ ஹ்ருதயரானவர்களுக்கு மோக்ஷ ஆனந்த பூதனாய் –
உபய வ்யாவருத்தனான எனக்கு மத நாதி யத்னத்தாலே கடலிலே உண்டாக்காத அப்ராக்ருதமான அம்ருதமாய் –
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்-சம்சாரத்தில் பொருந்தாமையாலே தனியனாக என்னுடைய த்வத் அனுபவ ரூபமான
வாழ்வுக்கு ருசி ஜனகத்வாதியாலே பிரதம ஹேது பூதனாய் -என்னை சம்சார ஆர்ணவத்தில் நின்றும் எடுக்கைக்கு ஸூசகமாக –
சப்த த்வீப யுக்தமான ஜகத்தை அத்விதீயமான மஹா வராஹமாய்க் கொண்டு
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –கூர்மை மிக்க கொம்பிலே வைத்தவனே-
இனி -நீயே ஹேது பூதனாய் நிர்வஹிக்கிற பின்பு உன் திருவடிகளை ப்ராப்பித்தேனே யன்றோ –
ஏகாரம் -தேற்றம் /எடுக்கல -தம் வசமாக்குதல் –

————————————————–

அநந்தரம் -இந்த பிராப்தி ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி சித்தம் அன்றோ -என்கிறார் –

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் –உன்னை அடைந்தவர்களுடைய குரூரமான பாபங்களுக்கு ஆற்ற வரிய நஞ்சாய் –
திண் மதியைத்–திண்ணிதான மதியாகிற வ்யவசாயந்தானாய் நிற்கிறான் எண்ணலாம் படி இதுக்கு உத்பாதகனாய்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை-சோர்ந்தே போகல் கொடாச் சுடரை-அந்த அத்யாவசாயத்தை யுடையவர்களுடைய மனசிலே விடாதே அவர்கள் ஆத்மவஸ்துவை
என்றும் விஷயாந்தரங்களிலே புக்குச் சோர்ந்து போகல் கொடாதே -தன் வடிவையே அவர்களுக்கு விஷயமாகும் உஜ்ஜ்வல ஸ்வ பாவனாய் -அவர்கள் விஷய ருசியை –
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை -சூர்ப்பணகையை அழித்தால் போலே அழித்துக் கொடுக்க வல்ல உன்னை
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –உனக்கு சேஷபூதமான ஸ்வரூபத்தை யுடைய நான் -முதலுக்கு முன்னே அடைந்தேன் அல்லவோ –
மயர்வற மதிநலம் அருளுவதற்கு முன்னே பிராப்தி உண்டு அல்லவோ என்று கருத்து –

—————————————————————–

அநந்தரம் -இப்படி உபகரித்த நிரதிசய போக்யனான உன்னை ஒழிந்தால் எனக்கு சத்தை யுண்டோ என்கிறார் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே-அநாதியாய்-வி லக்ஷணமாய் -யாழைப் பற்றி இருப்பதாய் -வ்யுத்பித்ஸூக்களாலே பயிலப் படுவதான-
ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்திலே லக்ஷணம் தப்பாத -நரம்பிலே கிளர்ந்த -முதிர்ந்த ஸ்ரீ கீதா ரசம் போலே நிரதிசய போக்ய பூதனாய் –
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே-இந்த ரசஞ்ஞராய் -பஹு விதராய் இருக்கிற அஸகலித ஞானாதி வைலக்ஷண்யத்தை யுடையார் நித்ய அனுபவம்
பண்ணுவதற்கு மேலாய் இருக்குமவனாய் -இந்த ரசஞ்ஞர் அல்லாதார்க்கும் அஞ்ஞானாதி தோஷங்களை போக்கி புஜிப்பிக்கும் பாவன பூதனாய்
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா–இஷூ ரசம் போலே பர்வம் தோறும் நிரதிசய போக்ய பூதனாய் -அழிந்தாரையும் ஆக்குவதற்கான அம்ருத ரசமாய் –
ஏவம்வித சாரஸ்யத்துக்கு ஆஸ்ரயமான கார் காலத்திலேயே மேகம் போலே உதார விக்ரஹ யுக்தனாய் –
அவ்வடிவு அழகோடு எனக்கு அனுபாவ்யன் ஆகைக்கு ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனே
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–இப்படி நிரதிசய போக்ய பூதனான உன்னை ஒழிந்தால் எனக்கு சத்தை இல்லை காண் –
வ்யதிரேகத்தில் அழியும்படியான என்னை -வ்யதிரேகத்தில் அழிக்கும் படியான போக்யதையை யுடைய நீ -இரண்டு தலையையும் அறிந்து திரு உள்ளம் பற்ற வேணும் –

——————————————————-

அநந்தரம் – இவ்வனுபவம் தமக்குக் கைவந்த படியை அருளிச் செய்கிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் –உறியில் சேமித்து வைத்துக் கொண்ட வெண்ணெயையும் பாலையையும்
உடையவர்கள் அறியாமல் க்ருத்ரிமத்தாலே புக்கு அமுது செய்த செயலாலே அடிமை கொண்ட ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –பின்னே -அவ்வபதானத்துக்குத் தோற்று -அவன் போன வழியே போய்த் திரிகிற
நெஞ்சை யுடையேனாய் -ஜென்ம ப்ரயுக்த துரிதங்களை காற்கடைக் கொண்டு அநாதரித்து –
குறிக் கொள் – -கர்த்ருத்வாதி தியாகத்தாலும் யம நியமாதிகளாலும் குறிக் கொள்ளப் படுவதான
ஞானங்களால்—வேதன த்யான உபாசனை ரூப பாவ பேதங்களாலும் சத் வித்யா தஹர வித்யாதி வ்யக்தி பேதங்களாலும் பல வகைப்பட்ட ஞான யோகங்களால் –
எனை யூழி செய்தவமும்-ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -என்றும் -பஹு நாம் ஜென்ம நாமந்தே-என்கிறபடியே அநேக காலங்களிலே செய்யப்பட
பக்தி யோகமாகிற தபஸ்ஸினுடைய பலத்தை
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்–பகவத் கிருபையாகிற நல் விரைகைக் கொண்டு இஜ் ஜென்மத்தில்
அல்ப காலத்திலேயே அனுபவத்துக்கு அடைவில்லாத நான் கிட்டப் பெற்றேன் –
கிறி -விரகு –

————————————————————————-

அநந்தரம் இப்படி அவன் குணங்களை அனுபவித்து ஆனந்தி யானேன் -என்கிறார் –

டிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

டிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் –பரிமளம் ப்ரவஹியா நிற்கிற செவ்வித் திருத் துழாயை யுடையனாய்க் கொண்டு -ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனாய் –
விண்ணவர் பெருமான்—இவ் வடிவு அழகை அனுபவிக்கிற பரமபத வாசிகளுக்கு அவ்வருகான மேன்மையுடைய தனக்கு
படிவானம் இறந்த பரமன் –வானம் படி இறந்த -பரமபதத்தில் ஒப்பு இல்லையாகையாலே -பரமன் -தனக்கு மேல் இல்லையான்னு பெரியவனாய் –
பவித்ரன் -இப்பெருமை அறியாதார் அறிவு கேட்டையும் போக்கி அனுபவிப்பிக்கும் பாவன பூதனுடைய
சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி–பரதவ ஸுலப்ய போக்யத்வ பாவானத்வ ப்ரகாசகமான குணங்களில் -ஒன்றோடு ஓன்று மிடைந்து
தூறு மண்டினால் போலே இருக்கிற விஷய ருசி தொடக்கமான மஹா வியாதிகள் வசிக்கும் படி -கிட்டி –எங்கும் உடப்புக்கு-முழுகி –
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –அவனை ஒழியச் செல்லாதபடி அநந்யார்ஹனான நான் பூஜிக்கைக்கு உபகரணமான அபி நிவேசமாகிற
வாயை மடுத்து பெரு விடாயான் தண்ணீர் குடித்தால் போலே நிரம்ப பூஜித்து நிரதிசயமான ஆனந்தத்தைப் பெற்றேன் –
படி வானம் இறந்த -என்று வடிவு அழகுக்கு மேகம் ஒப்பு அல்ல -என்றுமாம் –

————————————–

அநந்தரம் -ஏவம்வித போக ஆனந்தத்துக்கு முக்கிய போக்தாக்கள் ஸூ ரி களாகையாலே அவர்களோடு கூடுகையை அர்த்திக்கிறார்-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று–விஷய லாபத்தில் களிப்பும் -தத் அலாபத்தில் அபி நிவேசமும் அற்று -அதுக்கு அடியான
ஜென்ம வியாதி ஜரா மரணங்களும் அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் –ஆவிர்பூ தமான ஞானாதிகள் ஆகிற ஒளிகளுக்கு ப்ரகாசகமான ஜ்யோதிர்மய விக்ரஹத்தை யுடையோமாய்க் கொண்டு –
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி–வர்ஷிக்கிற ஆகாசத்தையும் பாத்தாலே தரிக்கிற பூமியையும் -பாதக ரஹிதமாம்படி
பேர் ஒளியையுடைய திரு வாழியையும் திருச் சங்கையும் ஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -ரஷித்து அருளுகிற மஹா உபகாரகனுடைய நித்ய தாஸ்ய ஏக நிரூபணீயரான ஸூரி களுடைய சங்கங்களை –
உடன் கூடுவது என்று கொலோ–ஒரு நீராம்படி உடன்பட்டு கூடுவது என்றோ –
ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வ பாவரானவர்க்கு ப்ராப்யம் அடியாராக ஸூரி கள்-என்று கருத்து –

——————————————–

அநந்தரம் -இத்திருவாய் மொழியைப் பாடி பரஸ்பர சங்கதராய் சங்கீ பவித்து -ப்ரீதி பிரேரிதராய் அர்த்தியுங்கோள் -என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்–பாதகரான ராக்ஷஸரைத் திரள் திரளாக உடையனாய் இருக்கிற
பெருமையை யுடையனான ராவணன் ஆகிற ராக்ஷஸனுடைய குலம் அகப்பட வசிக்கும் படி முனிந்து அருளினவனை –
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த–ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளை யுடைதான திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் ஆராய்ந்து அருளிச் செய்த –
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி–பத்தான திரள்களை வடிவாக யுடைத்தான ஆயிரம் திருவாய் மொழியிலும் –
இவை பத்தையும் அர்த்தத்தோடு உடன் பட்டு -ப்ரீதிக்குப் போக்கு வீடாகப் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –பரஸ்பர சம்ஸ் லிஷ்டராய்க் கொண்டு பல திரளாய் அடியீரான உங்கள் ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாம் படி ஏக கண்டராய்
ஸம்ஸலேஷித்து இடைவிடாதே நின்று ச சம்ப்ரமநிருத்தம் பண்ணப் பாருங்கோள் —
இது கலி விருத்தம் –

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: