அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-2-

திண்ணன் வீடு -பிரவேசம் –
இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –

————————————

முதல் பாட்டில் -ஸ்ரீ கிருஷ்ணனே சர்வ நிர்வாஹகன் -என்கிறார் –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்–திண்மையை யுடைத்தாய் -விலக்ஷணமான மோக்ஷம் முதல் -சகல ப்ரயோஜன நிர்வாஹகனாய் –
எண்ணின் மீதியன் எம்பெருமான்–நினைவுக்கு அவ்வருகான அபரிச்சின்ன ஸ்வ பாவனாய் -இம் மேன்மையைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியாய் –
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட –பூமியும் ஊர்த்தவ லோகமும் ஓன்று ஒழியாமல் தாரதம்யம் இல்லாத படி ஏக உத்யோகத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளி –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –நம் ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவாவதரித்து நமக்கே தன்னைத் தந்து அருளிய ஸூலபனே –
ஜகத்துக்கு நிர்வாஹகன் -அல்லது ஒரு நிர்வாஹக வஸ்து இல்லை –
கண் –களைகண் / திண்ணன் -என்றது திண் -நல் என்றும் நிச்சிதம் என்றுமாம் –

———————————————–

அநந்தரம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேது ஸ்ரீ கிருஷ்ணனே -என்கிறார் –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-அறப் பெரிதான குரு பாதகம் விட்டுப் போம்படி ருத்ரனுக்கு பிஷா பிரதானம் பண்ணினவனாய் –
கோபால கோளரி யேறன்றியே –கோப குலத்திலே பிறந்தார்க்குள் ஸிம்ஹ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ கிருஷ்ணன் அன்றி-
யேழு லகும்-ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார் -சர்வ லோகத்தையும் நசித்த பாபத்தை யுடைத்தாம்படி பண்ணி –
தன் கிருபையாலே அபிமதங்களைக் கொடுத்து ரஷிப்பார் ஆர் –
ஏ பாவம் பரமே-என்ன பாவம் இருந்த படி -இவனுடைய சர்வாதிகத்வம் சொல்லுதல் நமக்கு பரமாவதே —
ஏ -என்று வெறுப்பைக் காட்டுகிறது –

————————————————————–

அநந்தரம் -இவனே சர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை-ருஷப வாஹனான ருத்ரனையும் -கமல ஆஸனனான ப்ரஹ்மாவையும் -பத்ம வாஸினியாய் தனக்கு அசாதாரணமான பிராட்டியையும்
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து–தன் திரு மார்பில் வைத்ததில் காட்டில் வேறு தோன்றாத படி தன் திருமேனிக்குள்ளே –
இந்த சீலம் அறிந்த பரமபத வாசிகள் தன்னைத் தொழும் படி வைத்து –
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட–ஊர்த்வ லோகத்தை கீழ்த்தும் படி வளர்ந்து பூமியை அளந்து கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–-பெரியவனை மிகுத்து இருப்பது ஒரு தேவதா தத்துவமும் உண்டோ –
ஏகாரம் -வினா –

———————————————-

அநந்தரம் -ஆராத்யதைக்கு ஈடான ஆதிக்யம் அவனுக்கு ஒழிய இல்லை -என்கிறார் –

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தேவும் எப்பொருளும் படைக்க-தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டிக்கைக்காக –
பூவில் நான்முகனைப் படைத்த–திரு நாபி கமலத்திலே சதுர்முகனான ப்ரஹ்மாவை படைத்த –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்-பரதேவதையான ஏன் நாயகனுக்கு அல்லது –
பூவும் பூசனையும் தகுமே –புஷபாத் யுபகாரமும் -ஆராதன யுபகாரமும் -வேறு சிலர்க்குத் தகுமோ –தகாது -என்று கருத்து –

———————————————-

அநந்தரம் -இப்பரத்வ ஸூசுகமான புண்டரீகாக்ஷத்வத்தை அருளிச் செய்கிறார் –

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

தகும் சீர்த் –ஸ்ருஷ்ட்டி யாதிகளுக்கு தகுதியான -ஞான சக்தி யாதிகளை யுடையனான –
தனி முதலினுள்ளே- தன்னுடைய அத்விதீயமான ஜகத்துக்கு மூலமான சங்கல்பத்துக்குள்ளே –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க-ஈஸ்வரன் என்று சங்கிக்கலாம் படி மிக்க -ப்ரஹ்ம ருத்ராதி தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் -ஸ்ருஷ்டிக்க –
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்–இவன் தனக்குத் தகும்-என்ன ஸூசகமான அழகிய தாமரை போன்ற கண்களை யுடைய என் ஸ்வாமியானவனைக் காட்டிலும்
மிகும் சோதி மேலறிவார் யவரே –பரஞ்சோதிஸ்ஸூ இதுக்கு மேல் ஒரு தத்துவம் உண்டு எண்டு வைதிகரிலும் அறியார் ஆர் –
உண்டு என்று அறிவார் அவைதிகர் என்று கருத்து –

——————————————————————–

அநந்தரம் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினார் -என்றுமாம் –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–எல்லா சேதனரும் எல்லா அசேதனங்களுமாகிற ஸமஸ்த பதார்த்தங்களும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற–சோர்வின்றி தன் ஸ்வரூப ஏக தேசத்திலே அடங்கும்படியாக நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி-பரப்பை யுடைத்தான ஞான வெள்ளத்தை தனக்கு ப்ரபையாக யுடைய ஸ்வாமிகளான
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –சர்வாதிகாரனவர் நமக்கு போக்யமாய் தர்ச நீயமான ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளுகிறார் –
கவர்வு -சோர்வு / பவர்வு-பரப்பு / சுடர் மூர்த்தி -விக்ரஹமாகவுமாம் –

———————————————–

அநந்தரம் வட தள ஸாயித்வ ரூபமான -அகடிதகடநா சாமர்த்யத்தாலே அவன் பரத்வம் துர் அவபோதம் -என்கிறார் –

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்-படுக்கை ஆலிலையாக எல்லா லோகத்தையும் கொள்ளுகைக்கு இடம் கொடுக்கும் –
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்–உதார குணத்தையும் சக்தியையும் யுடைத்தான திரு வயிறையும் யுடைய சர்வாதிகனானவனுடைய
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்-கள்ள மாய மனக் கருத்தே –ஒருவருக்கும் தோன்றாதே ஆச்சர்யமான மானஸ வியாபாரம் –
ஜெகதர்த்தமான ரக்ஷண சிந்தா வியாபாரம் -மானஸ வியாபாரத்தாலே அறியுமாவார்கள் ஆர் –
எவர்க்கும் அறிய அரிது -என்று கருத்து –

———————————————

அநந்தரம் -சர்வ பிரகார ரக்ஷகன் அவனே -என்கிறார் –

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்–வருத்தித்த- மாயப்பிரானை யன்றி யாரே– தன் நினைவாலே தேவ வர்க்கமும் மனுஷ்யாதி சகல பதார்த்தங்களும்
சத்தை பெற்று அபி வ்ருத்தமாம் படி உண்டாக்கின -ஆச்சர்ய சக்தியாதிகளை யுடைய ஈஸ்வரனை ஒழிய ஆர் தான்
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்-இருத்திக் காக்கும் இயல்வினரே –ஸமஸ்த லோகத்தையும் திண்ணிதான நிலையை யுடைத்தாம் படி
அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளாலே திருந்தச் செய்து தம் நினைவுக்குள்ளே அவற்றை ப்ரதிஷ்டித்தமாக்கி ரசிக்கும் ஸ்வ பாவத்தை யுடையார் –
ரக்ஷண ஏக ஸ்வ பாவன் அவனே என்று கருத்து

————————————————

அநந்தரம் -இந்த ரக்ஷணத்தோ பாதி ஜகத் உத்பத்தி சம்ஹாரங்களும் தததீனம் -என்கிறார் –

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்–ரக்ஷணத்தை ஸ்வ பாவமாக யுடைய ஸ்ரீ கிருஷ்ணனான சர்வேஸ்வரன் –
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே–ஸம்ஹ்ருதி சமயத்திலே நாம ரூப விபாக ரஹிதமாய் -தம ஏகீ பவதி-என்கிறபடியே சேரும்படி பண்ணி தன் திரு நாபிக்குள்ளே –
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்–ஸ்ருஷ்டிக்கு வாய்த்த சதுர் முகன் இந்திரன் தேவர்கள் –
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –அவர்களுக்கு வாசஸ் ஸ்தானமான திவ்ய லோகங்கள் -இவற்றை உண்டாக்கிப்பினான் –
உந்தியுள்ளே பிறந்த திசைமுகன் -என்றுமாம் –

————————————————-

அநந்தரம் சர்வ ஸ்மாத் பரனாகையாலே சர்வ தேவதா ஸமாச்ரயணீயன் அவனே -என்கிறார் –

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ என்று–அவதார முகத்தால் ஆதிக்யத்தை மறைக்கும் க்ருத்ரிமனே –
எம்மையும் ஸமஸ்த லோகங்களையும் உன்னுடைய சங்கல்பத்துக்குள்ளே தோன்றுவித்த ஸ்வாமியே
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்-புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–வெளுத்த ஏற்றையுடைய ருத்ரனும் சதுர்முகனும் இந்த்ரனும்-
ஸ்வர்க்க வாசிகளும் கருட வாஹனனுடைய திருவடிகளை ப்ரணாமம் பண்ணி ஸ்துதியா நிற்பர்கள் –
இத்தால் தர்ம பர்யாய வ்ருஷ வாஹநத்வத்தாலே ருத்ரனுடைய கர்ம வஸ்யத்தையும் -வேத மயமான கருடன் வாஹனமாகையாலே
ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது-

——————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலமாக சர்வ பிரகார வைக்ல்யா ராஹித்யத்தை அருளிச் செய்கிறார் –

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்-லௌகீகர் ஏத்துகிற இதுவே விளை நீராக ஸமஸ்த லோகத்தையும் அளந்து கொண்ட
வடிவழகையும் வல்லார் ஆடினால் போலே அளந்து -அநாயாசத்தையும் உடையவனை -ஆழ்வார் அருளிச் செய்த
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்-ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –லோகத்துக்கு அலப்ய லாபமான ஆயிரத்தில் இவை பத்தையும்
அர்த்தத்தோடு உடன்பட்டு ஸ்துதி ரூபமாகச் சொல்ல வல்லவர்க்கு -தேவதாந்த்ரங்களினுடைய உத்கர்ஷ புத்தியும் -அவர்களோடு உண்டான சாம்யா புத்தியும் –
அவர்களில் நிகர்ஷ புத்தியுமாகிற குறைவுகள் ஒன்றும் -இல்லை
ஊனம்-குறைவு / சொல் வாய்ந்த -என்று அர்த்த ப்ரதிபாதன சாமர்த்தியம் ஆகவுமாம் /ஏழுலகு என்று கீழும் மேலும் கூட்டுகிறது
இது கலி விருத்தம் –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: