அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -1-10-

பொரு மா நீள் படை -பிரவேசம் –
பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி -அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து
அதுக்கு உபபாதகமாக-1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –4-நிரந்தர அனுபாவயதையும்–5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் -7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் -8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்

———————————————————–

முதல் பாட்டில் -தரை விக்ரம அபதானத்தாலே சர்வ லோகத்துக்கு உபகரித்தால் போலே அவ்வடிவை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் -என்கிறார் –

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு–விரோதி நிரசன ஸீலமாய் -அத்தாலே அதிசயித உத்ருஷ்டமாய்-வடிவோடு ஓக்க வளரக் காட்டுவதாய் யுள்ள
ஆயுதமான சங்க சக்ரங்களோடே கூட
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ–ஸ்ரீ யபதித்தவ சிஹ்னங்களை யுடைத்தான உதகர்ஷ யுக்தமாய் ஆஸ்ரிதர் அளவும் செல்வதாக திருவடிகளை –
ஞான அஞ்ஞான விபாகம் அற சகல லோகமும் சேஷத்வ அனுரூப வ்ருத்தியைப் பண்ணி அனுபவிக்கும் படியாக
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த -அத்விதீயமான அர்த்தித்தவ அனுரூப ப்ரஹ்மசாரி வாமனத்வத்தை உடையனாய்க் கொண்டு –
காரியசித்தி சமனந்தரம் வளர்ந்து அருளின –
அக்கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –அந்த வைபவத்தை யுடைய நீல ரத்னம் போலே
தர்ச நீய விக்ரஹனானவன் என் கண்ணுக்கு விஷயம் ஆகா நிற்கும் –

————————————————————–

அநந்தரம் -சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் சர்வாத்மக பஜனத்தோடு ஸத்பாவ அபி சந்தியோடு வாசியற சந்நிஹிதனாம் என்கிறார் –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் -ப்ருதிவ்யாதி பூதங்களையும் பிரகாரமாக உடையனாய்க் கொண்டு
விரியும் எம் பிரானையே –ஜகத் ஆகாரேண விஸ்த்ருதனாகிற-என்னுடைய ஸ்வாமியை –
காதன்மையால் தொழில்-அபி நிவேச ஆத்மக பக்தியாலே ப்ரணமா அர்ச்சா நாதிகளைப் பண்ணில் –
கண்ணுள்ளே நிற்கும் –தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் -என்று அவர்கள் கண் வட்டத்தை விடாமல் நித்ய சந்நிதி பண்ணும் –
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத-என்று ஸத்பாவ சிந்தா மாத்ரத்திலும் அவன் வசத்திலே வரும்படியாய் இருக்கும் –
இப்படி துஷ்கர ஸூகரங்களான உபாய த்வயத்திலும் ஸூலபனான பின்பு -அநந்ய கதிகளான நமக்குச் செய்ய வேண்டுவது உண்டோ –
காரணத்வம் -உபய உபாய சாதாரணம் –
எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-
எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும் -என்றுமாம்
நல் வாயு -தாரகத்வ வைலக்ஷண்யம் –

——————————————————

ஸ்ரீ யபதித்வாதிகளான அனுபாவ்ய ஸ்வ பாவங்களை உடையவனை அனுபவி -என்று நெஞ்சை நியோகிக்கிறார் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

மட நெஞ்சமே –சொல் வழி வரும் பவ்யத்தையை யுடைய நெஞ்சே –
எம்பிரானை -தன் பக்கலிலே அத்வேஷ அபி முக்யாதிகளைத் தரும் உபகாரகனாய்
எந்தை தந்தை தந்தைக்கும்–தம்பிரானைத் –நம் அளவில் நில்லாதே நம் குலத்துக்கு எல்லாம் நாதனாய்
தண் தாமரைக் கண்ணனை-இஸ் சம்பந்தம் அடியாக குளிர நோக்கும் புண்டரீகாக்ஷத்வத்தை யுடையனாய்
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை-எம்பிரானைத் தொழாய் -வஞ்சிக் கொம்பிலும் -இரவிலும் -நுண்ணிதான நேர்மையையுடைய
இடையையுடையளான ஸ்ரீ மஹா லஷ்மியை திரு மார்பிலே யுடையனான ஸ்வாமியை தொழும்படி பார்-
ஸ்ரீ யபதித்தவம்-இதில் சொன்ன ஸ்வ பாவங்களுக்கு எல்லாம் மூலம் என்று கருத்து –
அராவு -அரவு -அராவுதல் குறைத்தலாய் -கொம்பை இழைத்ததாகவுமாம் –

————————————————-

அநந்தரம் தம்முடைய நியோகத்துக்கு ஈடாக நெஞ்சு இசைந்தவாறே உகந்து இனி ஒருக்காலும் விடாதே அனுபவிக்கப் பார் -என்கிறார் –

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்–என் செய்யோம்-அறிவுக்கு ஆஸ்ரயமான நெஞ்சே நி செய்தபடி நன்று நன்று –
உன்னைப் பெற்றால் எக்காரியம் செய்து தலைக் கட்டோம்
இனி என்ன குறைவினம்–உன் இசைவு பெற்ற பின்பு அஸாத்யமாய் குறை கிடப்பது ஒன்றை உடையோமோ -ஆனபின்பு
மைந்தனை மலராள் மணவாளனைத்–நித்ய யவ்வன ஸ்வ பாவனாய் நிரதிசய போக்ய பூதையான ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டிக்கு போக்தாவானவனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–நாம் குடியும் அளவிலும் விடாதே நிரந்தர அநு வ்ருத்தி பண்ணப் பார் –
துஞ்சுதலாவது -நிகர்ஷ அநு சந்தானத்தாலே வந்த விஸ்லேஷம் என்று கருத்து –

————————————————

அநந்தரம் -நாம் நினைவற நமக்கு கார்யம் பலிக்கிறபடி -நீயும் அவனைக் கிட்டும்படி யாயிற்றே -என்கிறார் –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்–மனஸ்ஸே -அத்வேஷம் ஆபிமுக்யம் ஆஸ்ரயணம் அறிவு நலம் தொடக்கமான காரியங்கள் பலிக்கிறவை
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு–நினைவு தானும் இன்றியிலே நமக்கு கைவந்து நடக்கிற பிரகாரம் கண்டாயே –
எங்கனே என்னில் அபேஷா நிரபேஷமாக –
உண்டானை உலகேழுமோர் மூவடி–கொண்டானை–உலகம் எல்லாவற்றையும் பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து
அத்விதீயமான த்ரிவிக்ரம அபதா நத்தாலே அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை –
கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –

—————————————

அநந்தரம் இப்படி ஏக கண்டராய் நிற்கில் அசாதாரண பந்த விசிஷ்டனானவன் ஒரு கிலேசப் படக் கொடான்–என்கிறார் –

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்–மாத்ருவத் ப்ரிய பரனாயும் –பித்ருவத் ஹித பரனாயும் -தன் வரிசை அறியாத இந்த லோகத்திலே
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –திரு வவதரித்து வந்து -தன் நிருபாதிக ஸ்வாமித்வமே அடியாக நீல ரத்னம் போலே இருக்கிற
வடிவை எனக்கு அபகரித்து -அவ்வழியாலே என்னை அடிமை கொண்ட ஸ்வாமி யானவன் –
நெஞ்சமே நீயும் நானும் இந்நேர் நிற்கில் -நெஞ்சமே -தொழு என்று நியமிக்கலாம் படி பவ்யமான நீயும் -உன்னைக் காரணமாக வுடைய நானும் –
கீழ்ச் சொன்ன ப்ரக்ரியையாலே -விமுக வ்யாவ்ருத்தியை யுடையோமாய் நிற்கில் -மேலுள்ள காலம் எல்லாம்
ஸ்வ அனுபவத்தை ஒழிய மற்றும் நோயாய் இருப்பது ஒன்றையும் அணுகக் கொடான் -இப்பரம அர்த்தத்தை உனக்குச் சொன்னேன் –
நோய் -என்று அஹங்கார அர்த்த காமங்கள்-அதுக்கு அடியான சரீர சம்பந்தம் -கர்ம சம்பந்தம் தொடக்கமானவை –
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானம் அடியான விஸ்லேஷமுமாம் –

————————————————-

அநந்தரம் -ஏவம்விதனுடைய ஸூரி போக்யத்வ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து -ஸ்வ நிகர்ஷம் அடியாக அகலத் தேடுகிறார் –

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

வானவர் -பரமபத வாசிகளானவர்கள்
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்–சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே-எங்கள் சத்தாதி ஹேது பூதனானவன் என்றும்- -எங்களுக்கு பரம சேஷி என்றும் –
அனுசந்தானம் பண்ணி சொல்லும் படியான அனுசந்தானம் பண்ணி சொல்லும்படியான ஐஸ்வர்யத்தை யுடையவனை
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்–பாபிஷ்டனான நான் எனக்கு ஹித பரனே என்றும் என்னுடைய சேஷியானவனே என்றும்
நெஞ்சுக்குள்ளேயும் வைத்து சொல்லுவதும் செய்யா நின்றேன் –

———————————————

அநந்தரம் -இப்படி அகல நினைத்து இருக்கச் செய்தேயும் -திரு நாம ஸ்ரவணத்தாலே மேல் விழும்படி என்னைப் பரிபூர்ணனான அவன் விடுகிறிலன் -என்கிறார் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்–ஸ்ரீ மன நாராயணன் என்கிற திரு நாமத்தை கேட்ட அளவிலே –
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே-கண்ணானது நீர் மல்கா நின்றது -எங்கனே என்று தேடா நின்றேன் -இது ஒரு ஆச்சர்யமாய் இருக்கிறதே –
நம்பி -பரிபூர்ணனான நம்பியானவன்
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி–நல் -தன்னைக் கிட்டுக்கைக்கு அடியான நன்மையையுடைய இரவும் பகலும் -விச்சேத ரஹிதமாக
நல்கி என்னை விடான் நம்பியே –ஸ்னேஹித்து என்னை -ஸ்வ கீயத்வ பிரதிபத்தி பண்ணி விடுகிறிலன் –
நம்புதல் -தன்னுடையவனாக விஸ்வசித்தல்

—————————————–

அநந்தரம் -அவனுடைய உபகாரகத்வம் மறக்கப் போமோ -என்கிறார் –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற –திருக் குறுங்குடியிலே நிற்கையாலே ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாய் –
அச்செம்பொனே திகழும் திரு மூர்த்தியை–ஒப்பமிட்ட செம் போன் போலே உஜ்ஜவலமான திருமேனியை யுடையனாய் –
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை–மேலான நித்ய ஸூறி களுக்கு சத்தாதி ஹேது பூதனாய் -சதா தர்ச நீயமான பரஞ்யோதி சப்த வாச்யனாய்
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –தாதிருச்சமான வடிவை என்னை அனுபவிப்பித்து அடிமை கொண்டவனை எத்தைச் சொல்லி மறப்பது —
அபூர்ணன் -என்று மறக்கவோ –
அஸூலபன்-என்று மறக்கவோ –
அநுஜ்ஜ்வலன் -என்று மறக்கவோ –
அவிலக்ஷண போக்யன் என்று மறக்கவோ –
ஸூசீலன் அன்று என்று மறக்கவோ -என்று கருத்து –

——————————————

அநந்தரம் -மறவாதபடி -அவனே யத்னம் பண்ணா நிற்க மறக்க விரகு உண்டோ -என்கிறார் –

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்–மறப்பு என்றும் -அறிவு என்றும் -ஒன்றை அறிந்திலேனாய் இருக்க -தன் விஷயத்திலே அறிவை உண்டாக்கி –
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு-இத்தை இவன் மறக்கும் -என்று நினைத்து -கடாஷிக்கைக்கு அடியான சிவந்த தாமரை போன்ற கண்ணோடு
மறப்புப் புகுராதபடி
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை-மறப்பனோ இனி யான் என் மணியையே –என் நெஞ்சுக்குள்ளே நிரந்தர வாசம் பண்ணி
நீல ரத்னம் போலே முடிந்து ஆளலாம் படி எனக்கு ஸூலபனானவனை இனி நான் மறக்கும் படி என் –

——————————-

இத்திருவாய் மொழிக்குப் பலம் -இதினுடைய கல்வியே கைங்கர்யம் என்று அருளிச் செய்கிறார் –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

மணியை வானவர் கண்ணனைத் -உஜ்ஜவலமான மாணிக்கம் போன்ற வடிவை யுடையனாய் -அந்த வடிவாலே-பரமபத வாசிகளுக்கு நிர்வாஹகானாய் –
அவ் வழகுக்கு ஒப்பு இல்லாமையால்
தன்னதோர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்-தனக்குத் தான் அலங்காரமாம் படி அத்விதீயனானவனை -கட்டளை பட்ட
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல்லாலே
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்-தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –பணி செய்த ஆயிரத்துள் இவை பத்தையும் அபிப்ராயத்தோடே உடன்பட்டு
ஆறுதல் அற்று-ஆராத அபி நிவேசத்தோடே ஓர் ஆச்சார்ய முகத்தாலே அப்யசிப்பார்கள் ஆகில் அந்த கல்வி கைகர்ய ரூப பலத்தோடு சேரும் –
சொற் பணி செய் –என்றது -சொல் எடுத்துக் கை நீட்டின -என்றுமாம் –
அன்றியே –
சடகோபன் சொல் -என்று கூட்டி -பணி செய் ஆயிரம் -என்றது கைங்கர்ய ரூபமான ஆயிரம் -என்றுமாம் –
இது கலி விருத்தம் –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: