பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-2-

வீடுமின் முற்றவும் -அவதாரிகை –
இப்படி பரம புருஷ யாதாம்யா அனுபவ ஜெனித நிரவதிக ப்ரீதியானது பகவத் ஏக போகராய் இருப்பார் பலரோடு கூட
பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டித்த வைபவங்களை சொல்லியும் கேட்டும் அனுபவிக்க வேணும் என்னும் அபேக்ஷியைப் பிறப்பிக்கையாலே
அந்த அபேஷா அனுகுணமாக அனுபவிக்கைக்கு இந்த லோகத்தில் ஆத்மாக்களில் பகவத் ஏக போகராய் இருப்பார் இல்லாமையால் இவர்களை
பகவத் ஏக போகராக்கிக் கொண்டாகிலும் அனுபவிக்க வேணும் என்று இந்த ஆத்மாக்களைக் குறித்து
பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை பகவத் வியதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார் –
————————–
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-

பகவத் வியதிரிக்த சர்வ விஷய சங்கத்தையும் விட்டு இவ்வாத்மாவை சேஷத்வந சமர்ப்பியுங்கோள்-
சமர்ப்பிக்கும் இடத்தில் இத்தை யுடையவன் பக்கலிலே சமர்ப்பியுங்கோள்-
சமர்ப்பணமாவது -இவ்வாத்மா அவனுக்கு சேஷம் என்று சம்வதிக்கை -என்கிறார் –
————————————
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2-

சிரகால வாசிதமான விஷயங்களை விட முடியுமோ -என்னில்-இவ்வாத்மா சம்பந்தியான சரீராதி பிராகிருத விஷயங்களினுடைய
அஸ்திரத்வாதி தோஷங்களை நீங்களே ஆராய்ந்து உணருங்கோள் -உணரவே எளிதாக விடலாம் -என்கிறார் –
—————————–
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3-

ஆத்ம நாசகரமான அஹங்கார மமகாரங்களை சவாசனமாக விட்டு சர்வேஸ்வரனை ஆஸ்ரயின்கோள்-
இவ்வாத்மாவுக்கு அத்தோடு ஒத்த சீரியது ஒன்றும் இல்லை என்கிறார் –
———————————-
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-

த்யாஜ்யமாகச் சொல்லப் படுகிற பிராகிருத விஷயங்களில் காட்டில் சமாஸ்ரயணீயமாகச் சொல்லப் படுகிற விஷயம் நன்றாய் இருக்கில் அன்றோ
இத்தை விட்டு அத்தைப் பற்றலாவது என்னில்
ஹேய ப்ரத்ய நீகதயா கல்யாணைகதாநதயா இந்தச் சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலக்ஷண ஸ்வரூபனாய் நிரவதிக கல்யாண குண விசிஷ்டன்
ஆகையாலே நிரவதிக போக்ய பூதனாயாயிற்று அவன் இருப்பது -ஆதலால் இந்த ஹெயமான விஷயங்களில் சங்கத்தை விட்டு அவனைப் புல்கு -என்கிறார் –
———————————–
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

விஷயத்தில் சங்கத்தை விடும் அளவில் ப்ரக்ருதி விநிர்முக்தமாய் ஸூக ரூபமாய் இருந்த ஆத்மா தோன்றும் –
அதில் அகப்படாதே பகவச் சேஷதைக ரஸமான உன்னுடைய ஸ்வரூபத்தைப் பெற்று நிலை நிற்க வேண்டியிருக்கில் முதலிலே விஷய சங்கத்தை
விடும் போதே எம்பெருமானைப் பற்றிவிடுவது என்கிறார் –
————————————-
பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

எம்பெருமானை நாம் பற்றினால் அவன் நம்மை விஷயீ கரிக்குமோ -அவன் சர்வேஸ்வரன் அல்லனோ -என்னில்
சர்வேஸ்வரனே யாகிலும் ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் ஓக்க ஸ்னேஹ ஸ்வபாவனாய் இருக்கும் -ஆதலால் நீயும் அவன் பக்கலிலே
ஸ்னேஹ ஸ்வபாவனாய் அவனுடைய சர்வ சேஷ வ்ருத்தியிலும் புகு என்கிறார் –
——————————
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-

ஸ்நேஹ ஸ்வபாவனாய் இருந்தானே யாகிலும் இந்த லீலா உபகரணமான ஜகத் விபூதியையும் போக உபகரணமான
அப்ராக்ருத மஹா விபூதியையும் உடையனாய் இருக்கிற இருப்பைக் கண்டால் சென்று அணுகலாய் இருக்குமோ என்னில்
அந்த சம்பத் எல்லாம் என் ஸ்வாமியினுடைய சம்பத் என்று அனுசந்திக்கவே கூசாதே சென்று அணுகலாம் –
அப்படி அனுசந்தித்துக் கொண்டு கூசாதே போய் அடிமை செய்யுங்கோள் என்கிறார் –
——————————-
உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

என்ன உபகரணங்களைக் கொண்டு அடிமை செய்வது என்னில் சம்பாதிக்க வெண்டாதே பாண்டே சம்பன்னமாய் இருந்த வாக் மனஸ் காயங்கள் மூன்றையும்
பகவத் பரிசர்யா கரணார்த்தமாகப் பரிகல்பிதம் என்னும் இடத்தை அனுசந்தித்து தத் வியதிரிக்த விஷயங்களில் நின்றும் நிவர்த்திப்பித்து பகவத் விஷயம் ஆக்குவது என்கிறார்
——————————
ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

இப்படி அவன் பக்கலிலே கரணங்களை ஒடுங்கப் பண்ணவே பகவத் கைங்கர்ய பிரதிபந்தகங்கள் எல்லாம் போம் –
பின்னையும் இவ்வர்த்தமான சரீரம் போந்தனையும் பார்த்திரு அத்தனையே விளம்பம் உள்ளது -என்கிறார் –
—————————————
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

இப்படி சகல சமாஸ்ரயணீயனாகச் சொல்லப்பட்ட ஈஸ்வரன் தான் ஆர் என்னில் அசங்க்யேயராய் ஞானா நந்த ஸ்வபாவராய் இருந்த சர்வாத்மாக்களையும்
நித்ய சித்த கல்யாண குணங்களையும் உடையனாய் இருந்த நாராயணன் –
அவனுடைய ஆஸ்ரிதரை ஒருக்காலும் கைவிடாதே ரஷிக்கும் ஸ்வபாவமான திருவடிகளை ஆஸ்ரயி என்கிறார் –
————————–
சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

பகவத் குண ப்ரதிபாதகமாய் இருந்த இவ்வாயிரத்திலும் இத்திருவாய் மொழி எம்பெருமானை உணர்ந்து சொல்லிற்று –
————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: