Archive for September, 2017

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –இரண்டாம் பாகம் -ஸ்ரீ அஹோபிலம் -மஹாத்ம்யம் -/ஸ்ரீ பத்ராசலம் -மஹாத்ம்யம் —

September 30, 2017

ஸ்ரீ அஹோபிலம் -மஹாத்ம்யம் –

அஹோ வீர்யம் -அஹோ ஸுர்யம் அஹோ பாஹு பராக்ரம-நாரஸிம்ஹம் பரம் தைவம் அஹோ பலம் அஹோ பலம் –
கருடாத்ரி -தார்ஷ்யாத்தி-என்று கொண்டாடப்படும் நவ நரசிம்ம க்ஷேத்ரம் -பாவ நாசினி நதிக்கரையில் -சிங்க வேள் குன்றம் -பெரிய திருமொழி -1–7-பதிகம் மங்களா சாசனம் –
அஹோபிலம் -அஹோபிலம்–என்ன ஒரு வலிமை என்று தேவர்கள் வியந்து ஸ்துதித்த திரு நாமம் /
அஹோ -அகன்ற குகை பிலம்- சேவை சாதித்ததால் அஹோ பிலம் என்றுமாம் –
பெரிய திருவடி -வினதா ஸூதன் -வைநதேயன் -பஷி ராஜன் -தவம் இருந்து ஸ்வயம்பு மூர்த்தியாக காட்சி பெற்ற ஸ்தலம் –
ஜ்வாலா நரஸிம்ஹமாகவும் காட்சி கொடுத்து அருள -அஹோ பிலமே அஹோ பலம் அடியேனுக்கு -என்று ஸ்துதிக்க
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்க வேழ் குன்றம் -ஸ்ரீ ஸூ க்திக்கு ஏற்ப அமைந்த திவ்ய ஸ்தலம் –
கருடன் தவம் செய்ததால் கருடாசலம் –
சோமகன் அசுரன் பிரமன் இடம் இருந்து நான்மறைகளைக் கவர்ந்து செல்ல அவற்றை மீட்க வேண்டி நான்முகன் வேண்ட
அவ்வசுரனைக் கொன்று மீட்டுக் கொடுத்ததால் வேதாசலம் -என்ற பெயரும் ஏற்பட்டது என்பர் –
உக்ரமான பெரு வெப்பம் வெளிப்பட கல் பாறைகளால் அடைக்கப் பட்டது என்று கர்ணன் பரம்பரைச் செய்தி –
சிங்க வேழ் குன்றம் / நவ நரஸிம்ஹ க்ஷேத்ரம் / பஞ்ச க்ரோஸ க்ஷேத்ரம் -பத்து மைல் -16-கி மீ சுற்றளவுள்ள பிரதேசம் /வேதாசலம் /கருடாசலம் /வீர க்ஷேத்ரம் –
ஆந்திரா- கர்நூல் தொடங்கி-சித்தூர் வரை நெடுக விரிந்த -நல்லமலா -மலைத் தொடர் -ஆதிசேஷ வடிவாய் –
நல்ல மலை –ஆதிசேஷன் -சென்றால் குடையாம் -கருடாத்ரி –சேராத இரண்டையும் சேர்த்து அருளிய பெருமாள் அன்றோ -பையுடை நாகப் படைக் கொடியான் அன்றோ –
திருமலை திருப்பதியைத் தன் தலைப் பகுதியாகவும் -ஸ்ரீ அஹோபிலத்தைத் தன் மையைப் பகுதியாகவும் –
ஸ்ரீ ஸைலத்தைத் தன் வால் பகுதியாகவும் கொண்டது -என்று புராணப் பிரசித்தி –
சென்னை -மும்பை மார்க்கத்தில் -கடப்பா ரயில் நிலையத்தில் இருந்து -64-கி மீ தூரம் -அர்ல கட்டா –
ஆந்திரா -நந்தியால் ரயில்வே நிலையத்தில் இருந்து -68-கி மீ தூரம் /அர்ல கட்டா தாலுகா தலையிடத்தில் இருந்து -24-கி மீ தூரம் –

பேத அபேத ஸ்ருதிகளை கடக ஸ்ருதிகள் கொண்டு-நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற -ஒருங்கே சேர விட்டார் ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ நரசிம்மர் திரு அருளால் –
சர்வ அந்தர்யாமித்வத்தையும் -சர்வ வ்யாபகத்வத்தையும் ஓன்று சீராக காட்டி அருளினான்
பக்த பிரஹ்லாத ஆழ்வான் மேலே கருணா கடாக்ஷம் பொழிந்தும் ஹிரண்யாசுரன் மேலே உக்ரமான பார்வை ஒன்றாலேயே உருக்குலைய வைத்தும் அருளினான் –
அகடி தகடநா சாமர்த்தியம் -அன்றோ -எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று அழைத்து உருகுவார் ஆழ்வார் –
சத்யம் விதாதும் நிஜப் ருத்ய பாஷிதம் -என்பர் ஸ்ரீ ஸூகற் ஸ்ரீ மத பாகவதத்தில் –
நாரஸிம்ஹ வபு -ஸ்ரீ மான் –/ அழகியான் தானே அரியுருவன் தானே /கோளரி மாதவன் /அரிமுகன் அச்சுதன் /
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் -காலே ந்ருஸிம்ஹ -என்று-தன் திரு உள்ளத்தில் திகழும் சிங்கப் பிரானை நினைத்தே ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்து
பக்தனுக்காக சடக்கென தோன்றி காத்து அருளியது போலே காலம் தாழ்த்தாது கடிதோடி வந்து கைக் கொள்ள பிரார்த்திக்கிறாள் –
வேத வேத்யனான சர்வேஸ்வரனின் வ்யூஹ மூர்த்தியான சங்கர்ஷண ஸ்வரூபமே நரசிம்மனாய்த் தோன்றியதை ஸ்ரீ ந்ருஸிம்ஹ பூர்வதாபிநீ உபநிஷத் பரக்க உரைக்கின்றது –

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –ஸ்ரீ நரசிம்ஹ அனுஷ்டுப் மந்த்ரம் -நான்முகனுக்கு பிரசாதித்து
உலக ஸ்ருஷ்டிக்கு இத்தைக் கொண்டு தவம் செய்து ஆதாரமான நான்மறைகளை பெரும் திறலடைய உபதேசித்து அருளினான் சர்வேஸ்வரன் –
எண்ணிறந்த திருக் கல்யாண குணங்களில் ஒன்பது மஹா குணங்களை உணர்த்தும் வண்ணம் இந்த அனுஷ்டுப் மந்த்ரம்
1-உக்ர நரஸிம்ஹர்/2- வீர நரஸிம்ஹர் /3-சர்வ வியாபக நரஸிம்ஹர் /4-ஜ்வாலா நரஸிம்ஹர் /5-சர்வஞ்ஞ நரஸிம்ஹர் /-6-ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் /
7-பீஷண நரஸிம்ஹர் /8-மங்கள நரஸிம்ஹர் /9-சம்சார நிவர்த்தக நரஸிம்ஹர் –ஆகிய நவ நரஸிம்ஹர்களை நம் கண் முன்னே எழுந்து அருளச் செய்யும் மந்த்ரம் –
பின்னானார் வணங்கும் சோதியாய் -அர்ச்சா மூர்த்தியாய் இந்த நவ நரசிம்ம மூர்த்திகளும் இந்த திவ்ய தேசத்தில் சேவை சாதித்து அருள்கின்றனர் –

சிம்ஹாசல மஹாத்ம்யம் -ஸ்தல புராணமும் இப்பூ உலகில் மிகுந்த முக்யத்வம் வாய்ந்த நான்கு திவ்ய க்ஷேத்ரங்களில் அஹோபிலமும் ஓன்று என அறுதியிடுகிறது –
பிரம்மாண்ட புராணம் பத்து அத்தியாயங்களில் -1-இந்த திவ்ய தேச மேன்மை /-2-பகவத் தரிசனத்திற்காக கருடன் செய்த தவம் /
-3-ஷேத்ரத்தில் உள்ள தீர்த்தங்களைப் பற்றிய விவரணங்கள் /-4-இந்த ஷேத்ரத்தில் ப்ரஹ்மா பரத்வாஜ கோபில ரிஷிகள் -பரசுராமர் ஆகியோர் செய்த தவம் -/
-5-ஜய விஜயர்கள் ஹிரண்யாக்ஷ ஹிரண்ய கசிப்புக்களாக அசுர பிறப்பு எடுத்த வரலாறு /-6-ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானின் பிறப்பு -ஹிரண்யன் இழைத்த துன்பங்கள்
-7-ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானின் உறுதியான பகவத் பக்தி -அவனுக்கா தூணில் இருந்து வெளிப்பட்டமை ஹிரண்யம் மார்வம் கீண்டமை /
-8-சிவனுடைய சரப ரூபத்தை சிங்கப் பெருமாள் அழித்தமை/
-9-பாவ நாசினி புண்ய நதியினை இந்த திவ்ய ஷேத்ரத்துக்கு கொண்டு வர பைரவ மூர்த்தியுடைய கடும் முயற்சி /
-10-சாஸ்த்ர விதிகளைக் கடைப்பிடிக்க இயலாத சாமான்யனும் கூட பக்தியுடன் இங்குள்ள ஸ்ரீ லஷ்மீ நரசிம்மனை வழி பட
மோக்ஷம் அடைய முடியும் என்ற பேருண்மை -ஆகியவற்றை விளக்கும் –
ஸ்ரீ கூர்ம புராணமும் -ஸ்ரீ பாத்ம புராணமும் -ஸ்ரீ விஷ்ணு புராணமும் -ஸ்ரீ மஹா பாரதமும் இந்த க்ஷேத்ர வைபவம் கூறும் –
வாள் எயிற்று அவுணன் ஆணவத்தால் தூண் புடைப்ப- அங்கோர் ஆளுகிர்ச் சிங்க யுருவாய் சினத்தீ பரக்கச் சீறி வந்து அந்தியம்போதில்
அரண்மனைப் படியில் கோளரி தன் மடிமேல் இட்டுக் கூர் நகம் கொண்டு அவன் மார்வகம் கீண்ட வரலாறும் அனைவரும் அறிந்ததே –

திருமலை அடிவாரத்தில் -ஸ்ரீ ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப் பெருமாள் சந்நிதி -சின்ன அஹோபிலம் -திகுவ திருப்பதி -என்பர் இத்தையே –
இங்கு இருந்து -8-கி மீ தொலைவில் மேலே அஹோபிலம் /கடல் மட்டத்தில் இருந்து -2800-அடிக்கு மேல் உள்ளது /
நகரி நிதிநி — எகுவ திருப்பதி -பெத்த -பெரிய அஹோபிலம் என்பர் இத்தையே –
செழுமையும் வனப்பும் மிக்க வேதாத்ரி கருடாத்ரி இரண்டு மலைச் சிகரங்களின் இடையே பாவ நாசினி -புண்ய தீர்த்தம் அந்தர்வாஹினியாகப் பாய்கிறது –

கீழ் அஹோபிலத்தில் உக்ர நரஸிம்ஹர் பத்து திருக் கரங்களுடன் சேவை -அகன்ற விழிகளில் கோபம் கொந்தளிக்க –
ஒரு கரத்தால் ஹிரண்யன் தலையையும் -மறு கரத்தால் இரு கால்களையும் நெருக்கிப் பிடிக்க -மற்ற இரு கரங்கள் அவன் வயிற்றினைக் கிழிக்க –
அடுத்த இரு கரங்கள் குருதியைக் குடிக்க –மேல் எழுந்த இரு கரங்கள் சங்க சக்ரங்களைத் தாங்கி இருக்க –
மீதமுள்ள இரு கரங்கள் துஷ்ட நிக்ரஹ திவ்யாயுதங்கள் தரித்து இருக்கக் காட்சி தந்து நம்மிடத்தே யுள்ள அநாதி கால பாப வாசனைகள் ஆகிற அசுரனை ஒழித்து அருள்கிறார் –

1–ஸ்ரீ ப்ரஹ்லாத வராத நரஸிம்ஹப் பெருமாள் –
திருமலை அடிவாரத்தில் -ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் கிழக்கு நோக்கி சேவை /
மூலவர் இடப்புறத்தில் பாவன நரஸிம்ஹரும்–முன் புரத்தே உபய நாச்சிமார்களுடன் கூடிய ஸ்ரீ ப்ரஹ்லாத வராத பெருமாளும் உத்சவ மூர்த்திகளாக சேவை –
அவர்களுக்கு முன்புறம் புறப்பாடு கண்டு அருளும் மூர்த்தியாக பத்து திருக் கரங்களுடன் ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமாள் ஸ்ரீ தேவி பூ தேவி சமேதராக சேவை –
ஸ்ரீ ஆதி வண் சடகோப ஜீயர் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை –
2–ஸ்ரீ பார்க்கவ நரஸிம்ஹப் பெருமாள் –
மேலே -2-கி மீ தூரத்தில் -அமைந்துள்ளது – பார்க்கவ தீர்த்தமும் உண்டு -பரசுராமனுக்காக சேவை –
3–ஸ்ரீ யோகானந்த நரஸிம்ஹப் பெருமாள் –
தென் கிழக்கே -2 .5-கி மீ தூரம் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு த்யானம் கற்பித்த பெருமாள்
4–மேல அஹோபில நரஸிம்ஹப் பெருமாள் –
கீழ் அஹோபிலத்தில் இருந்து -8-கி மீ தொலைவில் -ஸ்வயம்பு மூர்த்தியாக மலை குகையின் உட் பாறையில் புடைப்புச் சிற்ப வடிவில் சேவை –
மலையின் உட் புறமே கர்ப்பக்ருஹம் -சக்கரத் தாழ்வாரும் சேவை -ஸ்ரீ செஞ்ச லஷ்மி அருளில் இடை கழியில் சேவை -வேடர்களின் குல தெய்வம் –
இந்த நரஸிம்ஹப் பெருமாளே இந்த திவ்ய தேச பிரதான மூர்த்தி – இவருடைய உத்சவ மூர்த்தி கீழ் அஹோபில லஷ்மீ நரஸிம்ஹப் பெருமாள் சந்நிதியில் சேவை –
5—ஸ்ரீ க்ரோட கர நரஸிம்ஹப் பெருமாள் –
க்ரோட சொல் ஸ்ரீ வராஹத்தை குறிக்கும் -மேல் அஹோபில பிரதான கோயிலில் இருந்து -1-கி மீ தூரம் –
ஸ்ரீ வராஹ வைத்தனத்துடன் பெரிய பிராட்டியார் உடன் சேவை –
6–ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹப் பெருமாள் –
மேல் அஹோபிலத்தில் இருந்து -1-கி மீ தூரம் -காரஞ்ச விருஷத்தின் கீழ் சேவை -ஒரு திருக் கரத்தில் சார்ங்கமும்
மாற்று ஒரு திருக் கையில் ஸூ தர்சன சக்கரமும் தரித்து சேவை –
பைரவ குண்டம் தீர்த்தம் அருகில் -துர்வாசரால் சபிக்கப்பட்ட கோபில ரிஷி தவம் செய்து பெற்ற சேவை –
7–ஸ்ரீ மாலோல நரஸிம்ஹப் பெருமாள் –
மேல் அஹோபிலத்தில் இருந்து -2-கி மீ தூரம் -மா பெரிய பிராட்டி / லோலன் -லீலா ரசம் அனுபவிப்பவன் –
இந்த உத்சவரை ஸ்ரீ ஆதி வண் சடகோப ஜீயர் நித்ய திருவாராதனம் /ஸ்ரீ அழகிய சிங்கர்கள் யாத்ரீகளில் கூடவே எழுந்து அருளி வழுவிலா அடிமைகளை பெற்று அருளுகிறார் –
8–ஸ்ரீ ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமாள் –
மேல் அஹோபிலத்தில் இருந்து -4-கி மீ தூரம் -அசலசாயா மேரு மலை என்று அழைக்கப் படும் இந்த மலையில் தான்
வெஞ்சினம் அனலாய்க் கிளர்ந்து எழ ஆளரியாய் தோன்றி அருளினான்
உக்ர நரஸிம்ஹர் மூன்றடி உயர மூல மூர்த்தி -பத்து திருக் கரங்களுடன்-இடது திருவடியை மடித்தும் வலது திருவடியைத் தொங்க விட்டும் சேவை –
அருகில் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் கூப்பிய கரங்களுடன் வணங்கி நிற்கும் படி சேவை
9–ஸ்ரீ பாவனா நரஸிம்ஹப் பெருமாள்
மேலே கபிலத்தில் இருந்து -6-கி மீ தூரம் -பாவன நதிக் கரையில் அமைந்துள்ள சந்நிதி –
உக்ர ஸ்தம்பம் –
மேல் அஹோபிலத்தில் இருந்து -9-கி மீ தூரம் -தூண் போன்ற பெரும் பாறை -மலையை இரண்டாகப் பிளப்பது போலே அமைந்துள்ளது
சங்கம் சக்ரம் திரு மண் காப்பு ஆகியவை இந்தப் பாறைத் தூணில் பொறிக்கப் பெற்றுள்ளன –
ப்ரஹ்லாத மேடு –
உக்ர ஸ்தம்பத்துக்கும் மேல் அஹோபிலத்துக்கும் நடுவே குகை ஒன்றில் ப்ரஹ்லாதன் சந்நிதி யுடன் சேவை –

தீர்த்தங்கள் –
1–ரக்த குண்டம் -சிங்க பிரான் ஹிரண்யனை கொன்று ஒழித்த பின்னர் தன் திருக் கரங்களை இத்தடாகத்தில்
அமிழ்த்தி சுத்தம் செய்து கொடுத்தாய்க் கருதப் படும் –
இன்றளவும் சிவந்தே காணப் படுகிறது –
2–லாஞ்ச கோனேரி -பார்க்க நரஸிம்ஹப் பெருமாள் சந்நிதிக்கு வாடா கிழக்கில் -3-கி மீ தூரம் -முன் காலத்திய ராஜ சபை நடன மாது
தன் பாபங்களை மன்னிக்க வேண்டி பிரார்த்திக்க எம்பெருமான் ஆணைப் படி ஏற்படுத்திய தடாகம் –
3—ராம தீர்த்தம் –கீழ் அஹோபிலத்தில் இருந்து -8-கி மீ தூரம்
4–பவ நாசினி தீர்த்தம் -பிரதான தீர்த்தம் -சம்சாரமாகிற பவத்தை நாசம் செய்து முக்தி அடைய வைக்கும் தீர்த்தம்
இதில் -13-புண்ய தீர்த்தங்களும் கலந்துள்ளன -அவை -நரஸிம்ஹ தீர்த்தம் -ராம தீர்த்தம் -லஷ்மண தீர்த்தம் -பீம தீர்த்தம் -சங்க தீர்த்தம் –
வராஹ தீர்த்தம் -ஸூத தீர்த்தம் -தோர தீர்த்தம் -கஜ குண்டம் -விநாயக தீர்த்தம் -பைரவ தீர்த்தம் -ரஜத குண்டம் -ஆகியவை –

ஏழாம் பட்ட அஹோபில ஜீயர் செஞ்சு வல்லி தாயாருக்கும் எம்பெருமானுக்கு நடந்த திருக் கல்யாணத்தை –
வாசந்திகா பரிணயம் -சமஸ்க்ருத நாடகத்தில் விவரித்துள்ளார் –
இந்த க்ஷேத்ர எம்பெருமான் ப்ரஹ்மாவாலும் -ஸ்ரீ ராம பிரானாலும் வணங்கப் பெற்ற பெருமை உண்டு –நரஸிம்ஹ பஞ்சாம்ருதம் ஸ்தோத்ரம் –
ஹரி வம்சம் மோக்ஷ தர்மம் ஆகியவற்றில் உண்டு -சீதா பிராட்டி பற்றிய விவரங்கள் ஸ்துதியால் ஸ்ரீ ராம பிரான் பெற்றார்
-ஸ்ரீ திருவேங்கடேசப் பெருமானாலும் வணங்கப் பெற்று ஸ்ரீ பத்மாவதித் தாயாரை திருக் கல்யாணம் செய்து கொண்ட பெருமை உண்டு –

மேல்கோட்டையில் கிடாம்பி கேசவாச்சார்யர் ஸ்வாமியின் திருக் குமாரர் -ஸ்ரீநிவாஸாச்சார்யார் -கிருஷ்ண தேவ ராயரது ராஜசபை வாத ஸ்தஸில்
விசிஷ்டாத்வைத தரிசனத்தை நிலை நாட்டிப் புகழ் பெற்றார் -அவருக்கு இந்த எம்பெருமானே அந்தணர் வடிவில் வந்து சந்யாச தீக்ஷை அளிக்க
அவரே முதல் ஆதி வண் சடகோப ஜீயரானார் –
பிரதாபருத்ரன் என்ற காகதீய மன்னன் -1295–1323-பல திருப் பணிகள் செய்தான் /
விஜய நகர பேரரசர்களும் -ஹரிஹரர் தொடங்கி கிருஷ்ண தேவராயர் அச்சுத தேவ ராயர் -போன்றாரும் பணி செய்துள்ளார்கள் –

ஸ்ரீ அஹோபில நவ நரஸிம்ஹ மங்கள ஸ்லோகங்கள்
ஹிரண்ய ஸ்தம்ப ஸம்பூதா ப்ரக்யாத பரமாத்மனே
ப்ரஹ்லாதர் திமுஷே ஜ்வாலா நரஸிம்ஹாய மங்களம் -1-
கருடாத்ரி குஹே கே ஹே கஜ குண்ட சரித்தடே
ஹிரண்ய தனு சம்ஹார ஹரி ஸிம்ஹாய மங்களம் –2-
வாரிஜா வாரித பயை வாணீ பதிமுகைஸ் ஸூ ரை
மஹிதாய மஹோதாரா மாலோலா யாஸ்து மங்களம் –3-
வராஹ குண்டே மேதின்யை வாஞ்சிதார்த ப்ரதாயிநே
தந்தலக் ந ஹிரண்யாக்ஷ தம்ஷ்ட்ரா ஸிம்ஹாய மங்களம் -4-
கோ பூ ஹிரண்ய நிர்விண்ண கோபில ஜ்ஞானதா யிநே
பிரபஞ்ச ந ஸூ தா ஸீந காரஞ்சாயாஸ்து மங்களம் -5-
பார்க்க வாக்ய தஹபீ சாந பாவநா பா விதாத்மநே
அக்ஷயா தீர்த தீரஸ்த பார்கவா யாஸ்து மங்களம் -6-
சதுராநந சேதோப் ஜ சித்ரபா நு ஸ்வரூபிணே
வேதாத்ரி க ஹ்வரஸ்தா யா யோகா நந்தாய மங்களம் –7-
ஹா ஹா ஹூஹ் வாக்ய கந்தர்வ ந்ருத்தகீ ஹ்ருதாத்ம நே
பவ ஹந்த்ரு பதச் சன்ன வடு ஸிம்ஹாய மங்களம் –8-
பாரத்வாஜ மஹா யோகீ ஹ்ருத் பத்ம பாநவே
தாபநீய ரஹஸ்யார்த பாவனா யாஸ்து மங்களம் -9-
ஸ்ரீ சடாரி யதீந்த்ராதி யோகி ஹ்ருத் பத்ம பாநவே
ஸர்வத்ர சம்பூர்ணாயா ஹோபி லேசா யாஸ்து மங்களம் –
மங்களா சாசனம் இதம் மா நிவாஸ முநீ ரிதம்
மஹ நீயம் படம் ஸ்ருண்வன் மங்களாய தனம் பவேத்

—————————————————–

ஸ்ரீ பத்ராசலம் -மஹாத்ம்யம் –

தம்மை சேவித்த ஸ்ரீ ராமபிரானுக்கு -திவ்யமான ஸ்ரீ வைஷ்ணவ வில் -அஸ்திரம்-மந்திரத்தால் புனிதப் பட்ட பாணம் -ஆகியவற்றை அகஸ்தியர் வழங்க –
கோதாவரீ சலசலத்து ஓடும் பஞ்சவடியில் தங்கவும் வழி காட்டினார் -அங்குள்ள சிறிய குன்றில் சீதா பிராட்டி உடன் பெருமாள் இளைப்பாற
அந்த குன்றே அடுத்த ஜென்மத்தில் பத்ர மஹ ரிஷியாய் மேரு மலைக்கும் மேரு தேவிக்கும் மகனாய்ப் பிறந்தார் –
அவனுக்கு ஸ்ரீ ராம தாரக மந்த்ரத்தை நாரதர் உபதேசித்தார் –
தன் முற் பிறவியின் ரஹஸ்யம் அறிந்த பத்ரன் கௌதமி நதிக் கரையை அடைந்து தவம் புரிய –
எம்பெருமான் பிராட்டி கருடன் ஆதி சேஷன் விஷ்வக் சீனர் நாரதர் முதலான ரிஷிகள் உடன் சேவை –
இதை அறிந்த அனுமனும் கந்த மாதன மலையில் இருந்து விரைந்து அவரை வர வேற்றார் –
ஸ்ரீ மன் நாராயணன் -மேல் வலது திருக் கரத்தில் பாஞ்சஜன்யம் -மேல் இடது திருக் கரத்தில் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வார்
கீழ் இடது திருக் கரத்தில் வில் -கீழ் வலது திருக் கரம் அபய ஹஸ்தத்துடன் கூடிய அம்புடன் சேவை –

காம் ததாதி கோதாவரி தண்ணீர் ஸ்வர்க்கம் -இரண்டு அர்த்தங்கள் -ஹேமா சந்திரிகா நூல் தீர்த்த மஹிமை -ப்ரஹ்ம கிரி தொடங்கி கிழக்கே சங்கமம் –

ஸ்ரீ வைகுண்ட ராமன் -பிராட்டி சீதையாக சேர இடது திருத் தொடையில் -ஆதி சேஷன் வில் அம்பு இளையபெருமாள் -ஓங்கார ராமன் -அகார உகார மகார சேர்த்தியால் –
இந்த சேவையுடன் தான் தலை மேல் தாங்கி இருக்க பிரார்த்திக்க -பத்ராசலமாக உருவெடுத்தார் –
முதலில் த்வாபர யுகத்தில் நாரதர் பாஞ்சராத்ர ஆகமம் படி திருவாராதனம் -தேவ சிற்பி விஸ்வ கர்மா தங்கமயமாக ஆலயத்தை கட்டி முடித்தார் –
பெரிய திருமொழியில் இருந்து இன்றும் சில பாசுரங்கள் இங்கே சேவிக்கப் படுகின்றன -திருமங்கை ஆழ்வாரும் இப்பெருமானை சேவித்ததாக சொல்லுவார்கள் –
காலப் போக்கில் திருக் கோயில் மறைய –17-நூற்றாண்டில் -போகல தம்மக்க -என்ற மலை ஜாதி பெண் கனவில் சேவை சாதிக்க –
புற்றுக்குள் எம்பெருமான் இருப்பதை அறிந்து அவரை வெளியே எடுத்து கோதாவரீ தீர்த்தத்தால் திரு மஞ்சனம் செய்வித்தாள்
பனை ஓலைகளால் மேல் கூரை அமைத்து காய்கனிகள் சமர்ப்பித்து ஆராதித்தாள்-
தானீஷா என்ற துருக்க ராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக இருந்தது -அவருக்கு அக்கண்ணா மாதண்ணா இரண்டு முக்கிய மந்திரிகள் –
அவர்களுக்கு உறவினர் கஞ்சொல கோபண்ணா -அவரை வரி விதிக்க நியமித்தான் அரசன்
கோபண்ணா அங்கு வர தம்மக்கா திருக் கோயில் கட்ட வேண்டி கொள்ள கோபண்ணாவும் தாசரதி சதகம் -என்ற நூலை இங்கேயே இயற்றிக் கோயிலும் கட்ட இசைந்தார் –

தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ ரகுநாத பட்டரை வரவழைத்தார் -பிரம்மா புராணத்தில் கௌதமீ மஹாத்ம்ய காண்டத்தில் பத்ராசல மஹாத்ம்யம் கண்டு அறியப் படுகிறது –
ஸ்வயம் வ்யக்த பெருமாள் -இந்த மலை தான் பத்ரன் என்று அறிந்து இதற்கு பத்ராசலம் என்று பெயர் இட்டார் –
எம்பெருமானை ஸ்ரீ பத்ராதரி ராமன் ஸ்ரீ பத்ராதரி நாதன் என்று கொண்டாடினார் -திருக் கோயிலின் நிர்மாணம் கோபண்ணாவின் தலைமையில் வேகமாக நடை பெற்றது –
திருவாராதனம் திரு நாம சங்கீர்த்தனங்களும் நடை பெற்றன –
திருவரங்கத்தில் இருந்து ஐந்து பாஞ்சராத்ர ஆகம வித்வான்கள் அழைக்கப் பட்டனர் –
விசித்ரமான பகவத் சங்கல்பத்தால் ஆலயத்தின் மேல் வைக்கப்பட்ட ஸ்ரீ ஸூதர்சன சக்ரம் காணாமல் போக
கோபண்ணா தம் மேல் குற்றம் என்று நினைத்து கோதாவரி நதியில் விழுந்து தற்கொலைக்கு முயல -தலையில் வாஸ்து ஓன்று பட பார்த்த கோபண்ணார்
அது ஸ்ரீ ஸூதர்சன சக்ரம் என்று அறிந்து கொண்டார் -யாரோ ஒருவர் தம்மை கரைக்கு இழுத்துச் செல்வத்தையும் உணர்ந்தார் –
கரையில் ஒதுங்கிய அவரை யாவரும் வியந்து ஸ்ரீ ராம தாசர் என்று போற்றினார்கள் -அன்று முதல் கோபண்ணா பக்தி ராம தாசராகவே புகழ் பெற்றார் –
நித்ய அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்தார் -பல்லாயிரக் கணக்கான பாடல்களை ஸ்ரீ ராமபிரான் மேல் இயற்றினார் –
அவை திரு நாம சங்கீர்தன மஹிமை -சரணாகதி தத்வம் தாயாரின் பெருமை அடியார்களின் பெருமை ஆகிவற்றை விளக்கும் –
ஒரு நாள் திடீர் என்று ராமதாஸரின் மகன் குளத்தில் தவறி விழுந்து உயிர் பிரிய ராமபிரானை இவர் பிரார்த்திக்க -ஆகாசத்தில் அபய ஹஸ்தம் தோன்றி
ஒளிக்கற்றை குழந்தையின் மேல் பட்டு உயிர் பிழைக்க ராமதாஸரின் புகழ் மேலும் பரவியது –
விஷமிகள் தானீஷா நவாப் இடம் புறம் கூற ராமதாசரைச் சிறைப் பிடித்து விசாரிக்க -திருக் கோயில் மக்கள் இடம் திரட்டிய பணத்தால் கட்டப்பட்டது
தாம் கொடுக்க வேண்டிய வரி பணத்துக்கு கால அவகாசம் கேட்க -செவி சாய்க்காமல் -12-வருடம் சிறை வாசம் விதித்தான் –
தண்டனை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் மானஸ ஸ்ரீ ராம அனுபவம் தொடர்ந்தது –
ஒரு நாள் இரவு ஓர் அற்புதம் நடந்தது -ஸ்ரீ ராமபிரானும் இலக்குவனும் காவலாளிகள் வேடத்தில் கோட்டைக்கு வந்து
திருக் கோயில் கட்ட செலவழித்த ஆறு லட்ச்சம் வெள்ளிக் காசுக்களுக்காக ‘
அந்த அளவு -ஒவ் ஒன்றிலும் பத்ராச ராமர் திரு உருவம் பொறிக்கப்பட்ட -தங்கக் காசுக்களைக் கொடுக்க-
இன்றும் அவற்றில் இரண்டு காசுகள் உள்ளன -தங்கள் பெயர் ராமோஜி லஷ்மோஜி -என்று கூறி ராமதாசரை விடுதலை செய்ய ஆணை இட்டனர் –
அவற்றில் உள்ள உருவத்தை பார்த்து ராம தாஸரின் பக்தியை உணர்ந்து -மன்னிப்பு கேட்டான் –
அன்று முதல் பத்ராசலம் முதலிய இடங்கள் உங்கள் வசம் -கப்பம் கட்ட வேண்டாம் என்றும் கூறினான்
ஆசுகவியான ஸ்ரீ ராமதாசர் -24-அக்ஷரங்கள் கொண்ட காயத்ரி மந்த்ரம் போலே -24000-ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீ ராமாயணத்தை
-24-ஸ்லோகங்களில் சுருக்கமாகப் பாடியுள்ளார் –

சங்கு சக்கரம் திருக் கைகள் மாறி -ஞானம் கொடுப்பதே பிரதானம் -பகைவர்கள் நிரசனத்தை விட –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது -முதல் பாகம்-ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -படி —

September 30, 2017

ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சன கிரீம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ்
ஸ்ரீ கூர்மம் –புருஷோத்தமம்–ச பதரீ நாராயணம் –நைமிசம்-
ஸ்ரீ மத் த்வாரவதீ — பிரயாக–மதுரா -அயோத்யா -கயா -புஷ்கரம் –
ஸ்ரீ சாளக்ராம கிரீம்–நிஷேவ்ய ரமதே ராமானுஜோ அயம் முநி —
தார்ஷ்யாத்ரி — திரு அஹோபிலம் -/

—————

அயோத்யா மதுரா மாயா காஸீ காஞ்சீ அவந்திகா
புரீ த்வாரவதீ சைவ சப்தைதா மோக்ஷ தாயகா—-முத்தி தரும் சப்த திவ்ய ஷேத்ரங்கள்
மாயா என்கிற ஸ்ரீ ஹரித்வார் /அவந்திகா -என்கிற உஜ்ஜயினி –

——————-

ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -படி –

உடையவரை முதலிகள் எல்லாம் தண்டனை இட்டு தேவரீர் இதர சமய நிராகரண பூர்வகமாக தரிசன ஸ்தாபனம் பண்ணி அருளிற்று –
இனி -தீதில் நன்னெறி காட்டித் தேசம் எங்கும் திரிந்து -திக் விஜயம் பண்ணி அங்குள்ள திவ்ய தேசங்களையும் சேவித்து எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
உடையவரும் முதலிகளுமாக நம்பெருமாள் திரு முன்பே சென்று தண்டனை சமர்ப்பித்து இச்செய்தியை விண்ணப்பம் செய்ய –
பெருமாளும் அப்படியே செய்யீர் -என்று திரு உள்ளமாய் -அங்கு நின்றும் புறப்பட்டு அருளி -சோழ மண்டலத்திலே எழுந்து அருளித்
திருக் குடந்தை முதலான திருப்பதிகளையும் சேவித்து -அங்குண்டான இதர சித்தாந்த வித்வான்களை தர்க்கித்து -ஜெயித்து -அங்கு நின்றும் புறப்பட்டுத்

தெற்கு ஏற எழுந்து அருளி -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை முதலான திருப்பதிகளையும் சேவித்து –
பாண்டி மண்டலத்தில் உண்டான பரவாதிகளையும் ஜெயித்து -திருப் புல்லாணியையும் சேவித்து சேது தர்சனம் பண்ணி –
திரு நகரி ஏறச் சென்று -கன்னி நுண் சிறுத் காம்பை அனுசந்தித்து நம்மாழ்வாரை சேவித்து நிற்க -ஆழ்வாரும் மிகவும் கிருபை பண்ணி அருளித்
தம் தீர்த்தம் பிரசாதமும் திரு மாலை பிரசாதமும் ஸ்ரீ சடகோப பத த்வயமான ஸ்ரீ மதுர கவிகளை ப்ரசாதிக்க -இராமானுசனும் –
வகுளத வளமாலா வக்ஷஸம் வேத பாஹ்ய ப்ரபல சமய வாதச்சேதனம் பூஜ நீயம்
விபுல குருக நாதம் காரிஸூநும் கவீசம் சரண முபகதோ அஹம் சக்ர ஹஸ்தேப சக்ரம் –என்று அனுசந்தித்து தண்டனை சமர்ப்பித்துப் புறப்பட்டுத்
திருப் புளியாழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் திருவடி தொழுது புறப்பட்டு
மற்றும் சுற்றிலும் உண்டான திருப் பதிகளையும் சேவித்து அங்குள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளையும் ஜெயித்து புறப்பட்டுத்

திருக் குறுங்குடிக்கு எழுந்து அருளிக் கோலத் திருக் குறுங்குடி நம்பியை சேவித்துத் தீர்த்த பிரசாதமும் ஸ்வீ கரித்து நிற்கிற அளவிலே நம்பியும் அர்ச்சக முகேந
நாம் ராம கிருஷ்ணாத் யாவதார முகேந -ஜன்மம் பல பல செய்து வந்து பிறந்து சேதனரைத் திருத்தப் பார்த்த இடத்திலே -அவர்கள் ஆஸூர ப்ரக்ருதிகளாய் –
ஒருவரும் நம்மை வந்து சேர்ந்தார்கள் இல்லை -நீர் இத்தனை பேரையும் எங்கனே திருத்தினீர் -என்று கேட்டு அருள –
உடையவரும் -தேவரீர் கேட்க்கும் கிரமத்திலே கேட்டால் சொல்லும் அடைவிலே சொல்லுகிறோம் -என்ன –
நம்பியும் தம் திவ்ய சிம்ஹாசனத்தின் நின்றும் இறங்கி அருளி -ரத்ன கம்பளத்திலே இருந்து இவருக்கு ஒரு திவ்ய சிம்ஹாசனத்தை இட்டு அருள –
அதிலே ஸ்வ ஆச்சார்யரான பெரிய நம்பி எழுந்து அருளி இருக்கிறாய் பாவித்துக் கொண்டு தாம் நிலத்திலே இருந்து நம்பி திருச் செவியிலே-
ஸர்வேஷா மேவ மந்த்ராணாம் மந்த்ர ரத்னம் ஸூபா வஹம் —
ஸக்ருத் ஸ்மரண மாத்ரேண ததாதி பரமம் பதம் –
மந்த்ர ரத்னம் த்வயம் ந்யாஸ பிரபத்திஸ் சரணா கதி-
லஷ்மீ நாராயணா யேதி ஹிதம் சர்வ பல ப்ரதம் -என்கிற மஹாத்ம்யத்தை யுடைய த்வயத்தை உபதேசிக்க –
நம்பியும் போர யுகந்து -இராமானுஜனை யுடையோம் -என்று அருளிச் செய்ய -உடையவரும் அவருக்கு
ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -என்று தாஸ்ய நாமம் பிரசாதித்து அருள -நம்பியும் இவரை ப்ரஹ்ம ரதம் ஏற்று உபலாளித்து அருளினார்-
உடையவரும் நம்பியை சேவித்து நின்று -அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம -என்று விண்ணப்பம் செய்து -இங்கு நின்றும் புறப்பட்டுத் –
திரு வண் பரிசாரத்தையும் -திரு வாட்டாற்றையும் திருவடி தொழுது -திருவனந்த புரத்திலே-எழுந்து அருளிப்
படமுடை வரவில் பள்ளி பயின்ற பத்ம நாபாப் பெருமாளையும் த்வார த்ரயத்தாலே பாதாதி கேச அந்தமாக சேவித்து அருளி –
அங்குள்ள- பிரதிவாதிகளையும் ஜெயித்து ஸ்ரீ ராமானுஜ மதத்தையும் உண்டாக்கி -புறப்பட்டு மலையாள தேசத்தில் உண்டான திருப்பி பதிகளையும் சேவித்து
அத்தேசத்தில் அந்நிய சித்தாந்திகளையும் ஜெயித்து -மேலை சமுத்திர கரை வழியே உத்தர தேசத்தில் எழுந்து அருளி –

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுண்ட ஸ்தான த்வாரவதீ அயோத்தி உத்தர பதரிகாச்ரமம் நைமிசாரண்யம் புஷ்கரம் -என்று சொல்லப் பட்ட
திவ்ய தேசங்களையும் மற்றும் உண்டான திருவாய்ப்பாடி ஸ்ரீ கோவர்த்தனகிரி ஸ்ரீ பிருந்தாவனம் முதலான திருப்பதிகள் எல்லாவற்றையும் சேவித்துக் கொண்டு
அவ்விடங்களில் உள்ள குத்ருஷ்ட்டி வித்வான்களை ஜெயித்து -பட்டி மண்டபத்தைக் கிட்டி -ஸரஸ்வதீ பண்டாரத்து ஏற எழுந்து அருளின அளவிலே –
ஸரஸ்வதீ தானே வாசல் திறந்து கொண்டு வந்து எதிரே புறப்பட்டு நின்று
உடையவரைப் பார்த்து -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷணீ -என்கிற ஸ்ருதிக்குப் பொருள் சொல்லிக் காணீர் -என்ன -இவரும் –
கபிஸ் த்வாதி த்ய கம் பிபதி கிரணைரித்யபி கபிர் பப ஸ்தீத் யாம் நாதஸ் சா கபிர முநா அஸ்தம் யதி ஹதத்
ப்ரதீம கப்யாஸம் தி வசகரதே ஜோவிகசிதம் ஸூ பத்மம் ஸ்ரீமத் த்வாத கனி பகவச்ச ஷூ ருபமா–என்று
கம் -என்று ஜலமாய்-கிரணங்களாலே அத்தைப் பணம் பண்ணுகையாலே கபி சப்த வாச்யனான ஆதித்யனாலே
அஸூ ஷேபணே-என்று விகாச வாசகமாய் அலர்த்தப் பட்ட தாமரைப் பூப் போலே இருக்கும் பரம புருஷன் திருக் கண்கள் என்று
கப்யாஸத்திற்குப் பொருள் அருளிச் செய்ய சரஸ்வதியும் கேட்டு சந்துஷ்டையாய் இவர் இட்டு அருளின -ஸ்ரீ பாஷ்ய க்ரந்தத்தையும் சிரஸா வகித்துத்
தன் கையை நீட்டு உடையவர் திருக் கையைபி பிடித்துக் கொண்டு போய் இது ப்ரஷிப்தம் அன்று ஸூத்தமாய் இருந்தது -என்று அங்கீ கரித்து-
இவருக்கு ஸ்ரீ பாஷ்ய காரர் என்று திரு நாமம் சாத்தி -ஸ்ரீ ஹயக்ரீவரையும் எழுந்து அருளுவித்துக் கொடுத்து மிகவும் ஸ்லாகிக்க –
ஸ்ரீ பாஷ்ய காரரும் -நம்மை இத்தனை ஆதரிக்கைக்கு அடி என்-என்று கேட்டு அருள அவளும் முன்பு இங்கு வந்த சங்கரனை இஸ் ஸ்ருதிக்கு அர்த்தம் கேட்ட அளவிலே
அவனும் குரங்கு பிருஷ்டம் போலே இருக்கும் என்று அபஹாஸ்யமான அர்த்தம் சொன்னான் -நீர் என் கருத்து அறிந்து பொருள் சொல்லுகையாலே நான் ஆதரித்தேன் -என்றாள் –

இத்தை இத்தேசத்தில் உள்ள பிரதிபக்ஷ சித்தாந்திகள் கேட்டு வந்து உடையவருடன் தர்க்கிக்க -அவர்கள் எல்லாரையும் ஜெயித்துத்
தம் சித்தாந்தத்தை ஸ்தாபித்த படியை அத்தேசத்தின் ராஜா கேட்டு இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் -என்று வந்து உடையவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த அவனையும்
கிருபை பண்ணி எழுந்து அருளி இருக்கும் அளவிலே அங்குள்ள அஸூ யாளுக்களான வித்வான்கள் இவரை அபிசாரிக்கத் தேட உடையவரும் கேட்டருளி
இத்தைக் காணக் கடவோம்-என்று திரு உள்ளம் பற்றி இருக்க
அவ்வளவில் வித்வான்கள் பித்தேறித் தாங்களைத் தாங்களே மோதிக் கொண்டு பேய்களாய் ஓடித் திரிய ராஜாவும் இத்தைக் கண்டு உடையவரை தண்டனிட்டு
தேவரீர் இப்படி செய்து அருளலாமோ -என்று வேண்டிக் கொண்டு அவர்களையும் ஸ்வஸ் தராம்படி பண்ணுவித்து அவருடைய திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்து
தன் சர்வ பரிகரத்துடன் இரு காத வழி சேவித்துக் கொண்டு வந்து வழி விட்டு மீண்டு போக –

உடையவரும் வாரணாஸீ வழியாக எழுந்து அருளிக் கங்கையைக் கிட்டி -கங்கை கங்கை என்ற வாசகத்தாலே எழுமையும் கூடி ஈண்டிய பாவம் எல்லாம் –
இறைப் பொழுது அளவினால் கழுவிடும் பெருமையை யுடைய கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்து -என்கிறபடியே -நீராடிக் –
கபாலி ஸ்பர்ச தோஷத்தையும் கழித்து -கேசவாதி த்வாதஸ ஊர்த்வ புண்டரங்களையும் தரித்துக் கொண்டு –
ஸ்ரீ கண்டம் என்னும் கடிநகரில் எம்பெருமானையும் கை தொழுது -கழலிணை பணிந்து புறப்பட்டு
ஸ்ரீ புருஷோத்தமத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஜெகந்நாதனையும் திருவடி தொழுது அங்குள்ள பிரச்சன்ன புத்த வித்வான்களை ஜெயித்து –
அங்கே ராமானுஜ மேடம் ஓன்று உண்டாக்கி -அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ கூர்மத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ கூர்ம நாதனையும் சேவித்து –
ஸ்ரீ சிம்ஹாத்ரி ஏற எழுந்து அருளி -ஸ்ரீ ஸிம்ஹகிரி அப்பனையும் சேவித்து -அவ்விடத்தில் அந்நிய சமயங்களையும் தர்க்கித்து ஜெயித்து
அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ அஹோபிலத்து ஏறச் சென்று ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹனையும் சேவித்துப் புறப்பட்டு –

தெழி குரல் அருவித் திருவேங்கட மலை ஏறித் திருவேங்கட முடையானையும் சேவித்து நிற்க -அவ்வளவிலே-
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன்னாணும் தோன்றுமால்
சூழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து -என்று ஆழ்வார் அனுபவித்த
ஹரி ஹார ஆகாரம் ஒத்து இருக்கையாலே சைவர் கண்டு எங்கள் நாயனார் -என்று பிணங்கி வர -உடையவரும் –
உங்கள் தம்பிரானுக்கு அசாதாரண சிஹ்னமான த்ரி ஸூல டமருகத்தையும் -எங்கள் பெருமாளுக்கு அசாதாரண சிஹ்னமான திரு வாழி திருச் சங்கு ஆழ்வார்களையும்
பண்ணித் திருவேங்கடமுடையான் திரு முன்பே வைப்போம் -அவர் எத்தை எடுத்து தரித்துக் கொள்ளுகிறாரோ அத்தை இட்டு அவர் ஸ்வரூப நிரூபணம் பண்ணக் கடவது -என்று
அவ்வாயுதங்களைப் பண்ணி அவர் சந்நிதியில் வைத்து கர்ப்ப க்ருஹத்தில் ஒருத்தரும் இல்லாதபடி சோதித்துத் திருக் காப்பைச் சேர்த்துக் கொண்டு புறப்பட்டு வந்து
ப்ராத காலம் ஆனவாறே ‘திருக் காப்பை நீக்கி சேவிக்கிற அளவிலே –
கூராராழி வெண் சங்கு ஏந்தி த்ரி ஸூல டமருகங்களைக் காற்கடைக் கொண்டு இருக்க கண்டு ஆனந்தாஸ்ருக்கள் பனிப்பக் கொந்தளித்துக்
குணாலைக் கூத்தடித்துக் கொண்டு சைவரை அடித்தோட்டி விட்டு –
பொன்னை-மா மணியை அணி ஆர்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு -என்கிறபடியே -வர்ஷூகவலாகம் போலே
அகில தாபத்தையும் போக்கி அகில அபேக்ஷிதா பிரதரான திருவேங்கடத்து எந்தையைத் திருவடி தொழுது அப்போதே
திருமலையில் இறங்கித் திருத் தாழ்வரையில் ஆழ்வார்களையும் திருவடி தொழுது புறப்பட்டு –

பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளிப் பேர் அருளாளரையும் சேவித்து -புறப்பட்டுத்
திருவல்லிக்கேணி திரு நீர்மலை முதலான கிழக்கில் திருப்பதிகளையும் சேவித்து –
ஸ்ரீ மதுராந்தகத்து ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஏரி காத்த பெருமாளையும் சேவித்து -ஸ்ரீ பெரிய நம்பி தம்மை கிருபை பண்ணி அருளிய திரு மகிழ் அடியை தண்டனிட்டு
தொண்டை மண்டத்தில் உண்டான மாயாவாதிகளையும் ஜெயித்து
திரு வயிந்த்ர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனையும் திருவடி வணங்கி -புறப்பட்டு வீர நாராயண புரத்தே சென்று ஸ்ரீ மன் நாத முனி மன்னனாரையும் சேவித்து
ஸ்ரீ மன் நாத முனிகள் யோகத்தில் எழுந்து அருளி இருந்த இடத்தையும் சேவித்து –

இப்படி பூ பிரதக்ஷிணம் பண்ணி மடங்கித் திருவணை யாடி திருவரங்கம் பெரிய கோயிலிலே எழுந்து அருளிப் பெரிய பெருமாளை
அமலனாதி பிரானில் படியே திருவடி முதல் திருமுடி அளவாக -முடிவில்லா தோர் எழில் நீல மேனியையும் -அனுபவித்து அஞ்சலித்துக் கொண்டு ஜெயஸ்ரீ யுடன் நிற்க –
பெருமாளும் -பவளவாய் திறந்து உமக்கு ஒரு குறையும் இல்லையே -என்ன -ஸ்ரீ பாஷ்ய காரரும் –
திருமால் உருவொடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே -என்கிறபடியே
அங்கும் தேவரீரையே சிந்தித்து எங்கும் திரிந்து வந்த அடியேனுக்கும் ஒரு குறை உண்டோ என்று விண்ணப்பம் செய்ய
பெருமாளும் உக்காந்து தீர்த்த பிரசாதம் ப்ரசாதிப்பிக்க ஸ்வீ கரித்து புறப்பட்டு மட்டுமே எழுந்து அருளி
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் தங்களின் இன்பம் மிகு பெரும் குழுவு கண்டு உகந்து அவர்களை கிருபை பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-8-

September 29, 2017

அணைவது அரவணை மேல் -பிரவேசம் –
எட்டாம் திருவாய் மொழியில் —
மேவும் தன்மையமாக்கினான் -2–7–4-என்று ஸ்வ சம்பந்தி ஜனங்களுக்கும் பிராப்தி பர்யந்த பல ரூப மோக்ஷ பிரதனாய்க கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும் –
அதுக்கு அடியான பரத்வத்தையும் அனுசந்தித்து -இத்தை சம்சாரிகள் இழக்க ஒண்ணாது -என்று உபதேசிப்பாராய்க கோலி –
1–அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் –2-சம்சார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ பிரதத்வத்தையும் —
3—அதுக்கு உறுப்பான சேஷடித்த வை லக்ஷண்யத்தையும் –4-இந்த வியாபார பிரகாசித்தமான ஸுலப்யாதி குணங்கள் நித்ய அனுபாவ்யம் என்னும் இடத்தையும் –
5–அந்த குண ப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும் –6-அவதார திசையிலும் பரத்வம் அதி பிரசித்தம் என்னும் இடத்தையும் –
7–அவ தீர்ணனானவன் ரக்ஷண வ்யாமோஹத்தால் பண்ணும் வியாபாரம் அநேகம் என்னும் இடத்தையும் –
8-அவதீர்ணனனுடைய பரத்வ உபயுக்தமான அதிசயித ஆகாரங்கள் அறிய வல்லார் இல்லை என்னும் இடத்தையும்
9– அவனுடைய ஆஸ்ரித ஸுலப்யம் அபரிச்சின்னம் என்னும் இடத்தையும் -10-ஏவம் விதனைத் தாம் அனுபவிக்கப் பெற்றமையும் –
அருளிச் செய்து -உபதேச அந் நிவ்ருத்தராய் -ஸ்வ லாபத்தோடே தலைக் கட்டுகிறார் –

இதில் சொல்லுகிற பரத்வம் -முதல் திருவாய் மொழி போலே ஸ்வரூப கதமாய் அன்றியே –
திண்ணன் வீட்டிலே-2–2- போலே -மனுஷ்யத்தவே பரத்வமும் அன்றியே
மோக்ஷ பிரதத்வ உபயுக்தமாய் இருக்கிறது –

————————————————-

முதல் பாட்டில் இத்திருவாய் மொழியில் அர்த்தத்துக்கு ஸங்க்ரஹ ரூபமான சர்வ நிர்வாஹகத்வத்தை அருளிச் செய்கிறார் –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணை மேல் –திருவனந்த ஆழ்வான் ஆகிற அணை மேலே அபிமதமாகச் சேர்வது
பூம்பாவை யாகம் புணர்வது –பூவிலே பரிமளம் வடிவு கொண்டால் போலே போக்ய பூதையான-பிராட்டியின் திருமேனியை போக்யமாக ஸம்ஸ்லேஷிப்பது –
இது நித்ய விபூதி நிர்வாஹகத்வம் -லீலா விபூதி நிர்வஹணத்தில்
இருவரவர் முதலும் தானே–காரண ஈஸ்வரராக ப்ரசித்தரான ப்ரஹ்ம ருத்ரர்கள் இவருடைய உத்பத்தி ஸ்தித் யாதிகளுக்கும் தானே ஹேதுவாய் இருக்கும் –
இணைவனாம் எப்பொருட்கும் –ரஷ்யமான ஜகத்தில் ஸமஸ்த பதார்த்தங்களும் அவதார முகத்தால் சஜாதீயனாய் இருக்கும் –
வீடு முதலாம் புணைவன் –ரக்ஷணத்துக்கு மேல் எல்லையான மோக்ஷத்துக்கு ஹேதுவாய் இருக்கும் -இத்தால் சர்வ முக்தி பிரசங்கியாமைக்காக –
பிறவிக்கடல் நீந்துவார்க்கே –சம்சாரமாகிற கடலை நீந்திக் கரையேற வேண்டுவார்க்கு தெப்பம் ஆவனாய் இருக்கும் –
புணைவன் -தெப்பமாமவன்

——————————————-

அநந்தரம் -சம்சார நிஸ்தரண பூர்வகமான மோக்ஷத்துக்கு ஹேது அவனுடைய சம்பந்தம் -என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

இஸ் சம்சார நிவ்ருத்திக்கு நிதர்சனம் என்னலாம் படி –
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த–பூவை யுடைத்தாய் -குளிர்ந்த புனலை யுடைய பொய்கையிலே யானைக்கு முதலையால் வந்த இடரைப் போக்கின
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –செவ்வியை யுடைத்தாய் குளிர்ந்த திருத் துழாயை யுடையனாய் –
அத்தாலே எனக்கு அதிவீதிய நாயகன் ஆணவனுடைய சம்பந்தமானது –
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-இச் சேதனனுக்கு நீந்தா நிற்கும் படி துஸ் தரமாய் துக்க உத்தரமான பிறவி உட்பட
மற்றும் நீந்தும் படியான ஜரா மரணாதி களான -எவ்வகைப் பட்ட –
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்–துக்கமும் ஸ்பர்சியாது மோக்ஷ ஆனந்தத்துக்கு ஹேது வாம் –
முதல் பாட்டில் -வீடு முதலாம் -என்றத்தை விவரித்தது –

———————————————————

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

அநந்தரம் அவனுடைய திவ்யமான சேஷ்டிதங்கள் ஸர்வத்ர பிரசித்தம் -என்கிறார் –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி–தன்னை உத்பாதித்த திரு நாபியோடே கூட -திரு மேனியில் ஒரு பார்ஸ்வத்திலும் –
நித்ய வாசம் பண்ணி -லோக ஸ்ருஷ்ட்டி பண்ணுகிற அஜனுமாய்-சம்ஹரிக்கிற ஹரனுமாய் -இப்படி தத் தத் அந்தராத்மத்தையாலே ததாத் மகனாய் –
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்–புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –தன் மார்விலே நிரூபகமாம் படி
சேர்த்துக் கொள்ளப் பட்ட திருவுடையனாய் -தானே -தனக்குத் தகுதியான -திவ்ய வ்யாபாரங்களானவை எங்கும் கண்டு அனுபவிக்கலாம் படி பிரசித்தம் –
முதல் பாசுரத்தில் – இருவரவர் முதலும் தானே -என்றத்தை விவரித்தது –

——————————————————

அநந்தரம் சம்சார நிவ்ருத்தி பூர்வகமான பரமபத ப்ராப்திக்கு ஏவம்விதனுடைய குணங்களில் நித்ய அவகாஹனம் பண்ணுங்கோள்-என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி–நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்–புலப்படும் விஷயங்கள் ஐந்திலும் பொருந்தி- பொறி போலே இவனை அகப்படுத்திக்
கொள்ளும் ஐந்து இந்திரியங்களின் வாசத்தின் நின்றும் அகன்று ஆனந்தம் அளவிறந்து இருப்பதாய் -அத்விதீயமான தேசத்திலே போய்ப் புகை வேண்டி இருப்பீர் –
அலமந்து வீய அசுரரைச் செற்றான்-பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –அலமந்து நசிக்கும் படி அசுரரை கொன்றவனுடைய ஆரம்பமே தொடங்கி
இனிமையாலே பலம் என்னலாம் படியான குணங்களில் என்றும் ஓக்க அவகாஹியுங்கோள்-
ரசாயனமான பயஸ் பாநநை ரந்தைர்யத்தாலே பித்த சாந்தியும் -இனிமையும் பிறக்குமா போலே போக்ய குணங்களில் நிறைந்த அனுபவம் பண்ணவே
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் தன்னடையே வரும் என்று கருத்து –
புலனும் பொறியும் என்கிற இவை இரண்டும் -விஷயங்களுக்கும் இந்திரியங்களுக்கும் கலந்து பேராய் வரும் –

——————————————————

அநந்தரம் -ஸமஸ்த காரண பூதனானவன் கார்ய பூத ஜகத் ரக்ஷண அர்த்தமாகப் பண்ணின அவதாரங்களில் வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-அவிச்சின்னமான துக்கத்தைத் தருவதான ஜென்ம சம்பந்த ரூபமான ஸ்ருஷ்ட்டி அகப்பட
மற்ற ஸ்திதி சமஹாராதிகளான எல்லா வியாபாரங்களும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்-மூத்துச் சோம்பிவிடாத சஹாயாந்தர நிரபேஷ காரண பூதனாய்க் கொண்டு –
ஸ்ருஜ்யமான லோகத்தினுடைய ரக்ஷணத்தை யுடையவனாய்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்–ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் அவ்வருகாம் படி
ஆதி தேவர்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் -எனக்கு அவகாஹிக்கும் துறையாம் படி ஸூலபனானவன் —
புராண ப்ரவர்த்தக கூர்ம மத்ஸ்ய ரூபியாய் -கீதா உபநிஷத் ஆச்சார்யனுமான மநுஷ்யனுமாம் –
முதல் பாட்டில் –இணைவனாம் எப்பொருட்க்கும் –என்கிற பதத்தை விவரிக்கிறது –

———————————————–

அநந்தரம் -இவ்வவதார தசையில் யுண்டான பரத்வம் அதி பிரசித்தம் -என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்–பாவன பூதனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய பூர்வ அவதாரத்திலே-
லோக த்ரயத்தையும் -அளந்து கொண்ட செவ்வையையுடைய திருவடிகளிலே அழகிய மாலைகளை சமர்ப்பித்து –
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு–அவற்றையே சிவனுடைய ஜடா மகுடத்திலே தானே கண்டு அர்ஜுனன் அறுதியிட்ட-அந்த
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை-பசுத்த திருத் துழாயை யுடையவனுடைய பரத்வமானது -இப்பார்த்தனை ஒழிய வேறு ஒருவராலும்
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –உபபாதித்துச் சொல்ல வேண்டும்படி தெரியாது கிடந்த அம்சம் உண்டோ -ஸூ பிரசித்தம் அன்றோ என்று கருத்து –

———————————————

அநந்தரம் ரஷ்யமான ஜகத்தைப் பற்றத் தன் வாத்சல்யத்தாலே அநேக வியாபாரங்களைப் பண்ணும் -என்கிறார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கிடந்து -ரக்ஷண அர்த்தமாக -பிரதி சிஸ்யே மஹா ததிம் -என்று கடற்கரையிலே வழி வேண்டிக் கிடந்தும்
இருந்து -உடஜே ராமமாசீநம் -என்று திருச் சித்ரா கூடத்தில் இருந்தும் –
நின்று -அவஷ்டாப்ய ச திஷ்டந்தம் -என்றும் -ராவண வத அநந்தரம் -தேவதா சந்நிதியில் வில்லை நடுக்கொத்துப் பிடித்து நின்றும் –
அன்றியே
புளிங்குடிக் கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று -9–2–4-என்கிறபடியே அர்ச்சாவதார ஸ்தலத்தில் கிடந்தும் இருந்தும் நின்றும் –
அளந்து –த்ரி விக்ரமனாய் அநந்யார்ஹமாம் படி அளந்தும்
கேழலாய்க் கீழ்ப் புக்கு-இடந்திடும் -வராஹ ரூபியாய் பிரளய ஜலத்துக்கு கீழே புக்கு அண்ட கடாஹத்தின் நின்றும் ஓட்டு விடுவித்து எடுத்ததும்
தன்னுள் கரக்கும் –மஹா பிரளயத்தில் வடதளி சாயியாய் வயிற்றுக்குள்ளே தெரியாதபடி கரந்தும்
உமிழும் -வெளிநாடு காணும்படி உமிழ்ந்தும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் –இடமுடைத்தானா பெரிய திருத் தோள்கள் நிரம்பும் படி அசாதாரண விக்ரஹத்தோடே தழுவியும் -இப்படி
பார் என்னும்-மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –பூமி என்று சொல்லப் படுகிற மடந்தையை சர்வாதிகனான ஈஸ்வரன் பண்ணுகிற வ்யாமோஹத்தை
அறிய வல்லார் ஆர்-அதிசயித ஞானர்க்கும் அறிய ஒண்ணாது என்று கருத்து –

————————————————

அநந்தரம் -அவன் எனக்கு பிரகாசிப்பித்த அதிசயித ஆகாரங்கள் துர் அவபோதம் -என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு-எனக்கு ஸ்வாமியாய் -ஸூல பனானா கிருஷ்ணனை அறிய வல்லார் ஆர் –
அவன்படி இதுவானால் -அறியும் படி எங்கனே -அவனுக்கு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா-ஊண் சொல்லப் பார்க்கில் -அத்தா சராசர க்ரஹணாத்-என்கிறபடியே –
சராசராத்மகமான சகல லோகமும் ஒரு பிடிக்கும் போராது
சேண் பால் வீடோ -அவனுக்கு இருப்பிடமான வீடானது -விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வதே ப்ருஷ்டேஷூ -என்கிறபடியே –
சர்வ லோகத்துக்கும் அவ்வருகான பரமபத பிரதேசத்தில் இலது
வுயிரோ மற்று எப்பொருட்கும்–அவனோ தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் அந்தராத்மா –
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –ஒரு ரேகா மாத்ரமும் சோர விடாதவனாய்க் கொண்டு எல்லா பிரதேசத்திலும் பரந்து நில்லா நிற்கும் –
சர்வ ஜகத் க்ராஸ் சீலனாய் -பரமபத நிலயனாய் -சர்வ பதார்த்தங்களிலும்ம் அந்தர் பஹிச்ச வ்யாப்தனானவனை -எங்கனே பரிச்சேதித்து அறிவது -என்று கருத்து –
ஏண்-என்று வரையாய் -ரேகையைக் காட்டுகிறது –
ஓ -என்கிற அசைவு வினாவைக் காட்டுகிறது –

——————————————-

அநந்தரம் -அவனுடைய ஆஸ்ரித ஸுசீல்ய அதிசயம் அபரிச்சேதயம் -என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து–சர்வம் வ்யாபியா ஸ்திதா -என்கிறபடியே சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரன் –
ஸர்வதா ஸந்நிஹிதன்–என்ற புத்ரனை கோபித்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப–இவ்விடத்தில் இல்லை என்று தான் அறுதியிட்ட தூணை ஹிரண்யன் தட்ட
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என் சிங்கப்பிரான்-அத்தூணிலே அக்காலம் தன்னிலே
ஹிரண்யன் நசிக்கும் படி தோற்றின என்னுடைய நரஸிம்ஹ ரூபியான மஹா உபகாரகனுடைய
பெருமை யாராயும் சீர்மைத்தே –ஆஸ்ரித பக்ஷபாத மஹாத்ம்யம் நெஞ்சால் பரிச்சேதித்து ஆராயும் தன்மைத்தோ-

————————————————————

அநந்தரம் -இப்படி சர்வ பிரகார உபகாரகனாய் -மோக்ஷ பிரதனானவனை நான் அனுபவிக்கப் பெற்றேன் -என்று ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா–புண்ய பாப காரிதமாகை அன்றிக்கே பகவத் கிருபை ஏக ஸாத்யமான
சீர்மையை யுடைய மோக்ஷமும் -புண்ய பாப பல ரூபமான ஸ்வர்க்க நரகங்களும் -மேல் எல்லையாக –
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்–பல பிரதத்வ நிபந்தமான ஈரப் பாட்டை யுடைய தேவர்கள் -சாதனா பலன்களுக்கு நடுவாகவும் –
ப்ரதமபாவியான சாதனாதி ஸமஸ்த பதார்த்தங்களும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற–சஹகாரியுமாய் -நிமித்தமுமாய் -உபாதானமுமாய்க் கொண்டு
ஸர்வத்ர வ்யாப்தனாய் வைத்து -வ்யாப்ய பதார்த்தங்களில் வ்யாவ்ருத்தனாய் நிற்பானாய் –
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –கார்காலத்தில் மேகம் போன்ற வடிவை யுடையனாய்க் கொண்டு
எனக்கு ஸூலபனான கிருஷ்ணனை நான் அனுபவிக்கப் பெற்றேன் -என்று கொண்டு ஸ்வ லாபத்துக்கு ஹ்ருஷ்டராகிறார் –
ஈர்மை கொள் தேவர் -என்று உபய பாவ நிஷ்டர் -என்றுமாம் –

——————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக ஸ்வ ராஜ்ய நிர்வாஹகத்வத்தை அருளிச் செய்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை–கண்ணில் பரப்பு எங்கும் சிவந்து -அதுக்கு பரபாகமாய் ஸ்யாமளமான திருமேனியையுடைய சர்வ ஸ்வாமியை –
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-வண்டுகள் மது வெள்ளத்திலே அலைகிற சோலைகளையுடைய திருவழுதி வள நாட்டையுடைய ஆழ்வார் –
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்–பண் தான் தளமாம் படி அதின் மேலே அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலே இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –பரம ஆகாசத்தில் மேலே ச ஸ்வராட் பவதி -என்கிறபடியே வ்யாவிருத்தமாக இருந்து –
சர்வ பிரகார விசிஷ்டமாய் நிரதிசய போக்யமான மோக்ஷ ஆனந்தத்தை ஸ்வாதீநாமாக அனுபவிப்பார்கள் –
என்னோடு என் அனுபந்திகளோடு வாசியற எங்களுக்குத் தருவதாக இருக்கிற பெரிய வீடு என்றுமாம் –
இது கலி விருத்தம் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-8-

September 29, 2017

அணைவது அரவணை மேல் -பிரவேசம் –
தாமோதரனை -என்ற பாட்டில் ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தைத் தம்முடைய ப்ரீதி அதிசயத்தாலே
ஸ ஹேதுகமாக உபபாதித்து -இப்படி சர்வேஸ்வரனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்று பிறரை நோக்கி அருளிச் செய்கிறார் –

————————————–

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

நாக பர்யங்க சாயியாகையாலும் –ஸ்ரீ யபதியாகையாலும் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகன் ஆகையாலும்- சர்வாத்ம சஜாதீயதயா
அவத்தீர்ணனாய்க் கொண்டு சர்வ ஜகத் ரக்ஷகனாகையாலும் -முமுஷூக்களுக்கு பிரதிபந்தக நிவர்த்தகனாய்க் கொண்டு மோக்ஷ ப்ரதன் ஆகையாலும் –
நாராயணனே சர்வேஸ்வரன் -என்கிறார் –

———————————————————————————

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

வீடு முதலாம் -என்கிற பதத்தை விவரிக்கிறது -ஜென்ம ஜரா மரணாத் அபரிமித ஸமஸ்த துக்க ரஹிதமான மோக்ஷத்துக்குக் காரணம்
எம்பெருமானோடு உள்ள சம்பந்தம் -அது எங்கே கண்டோம் என்னில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே கண்டோம் -என்கிறார் –

————————————————–

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் -தன் உந்தியை ஆஸ்ரயமாகக் கொடுத்து வைக்கும் –
ஜகத் சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் தன் திரு உடம்பை ஆஸ்ரயமாகக் கொடுத்து வைக்கும் –
சர்வ லோக ஈஸ்வரியான பிராட்டிக்கு தன் திரு மார்வைக் கொடுத்து வைக்கும் -திரு வனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும் –
இப்படி எம்பெருமானுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூதமான திவ்ய சேஷ்டிதங்கள் எங்கும் பிரத்யஷிக்கலாம் -என்கிறார் –

—————————————–

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

பிரகிருதி பந்த விநிர்முக்தராய்க் கொண்டு நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் -இப்படி சர்வேஸ்வரனாய் இருந்த
எம்பெருமானுடைய நிரதிசய போக்யமான கல்யாண குணங்களில் ஓவாதே படியுங்கள் என்கிறார் –

——————————————-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

சம்சார சக்ர ப்ரவர்த்தகன் ஆகையாலும் -ப்ரஹ்ம ஈஸா நாதி தேவர்களுக்குக் காரண பூதனாய் -அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யாகையாலும் –
அசேஷ தோஷ ப்ரத்ய நீகன் ஆகையாலும் -தேவ மனுஷ்யாதி வியாபாரங்களைப் பண்ணிக் கொண்டு சர்வ ஜகத் ரக்ஷகன் ஆகையாலும் –
அவனே சர்வேஸ்வரன் –என்கிறார் –

————————————————————

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

யாவன் ஒருவனுடைய பாத உதகத்தை சிரஸா வஹிக்கையாலே ருத்ரன் பரி ஸூத்தனானான் —
யாவன் ஒருவன் திருவடிகளிலே சாத்தின பூந்தாமம் ருத்ரன் தலையிலே காணப் பட்டது –
அங்கனே இருந்த பைந்துழாயான் பெருமை ஸூ பிரசித்தம் அன்றோ -சொல்ல வேணுமோ –என்கிறார் –

——————————————————-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

எம்பெருமான் தனக்கு இந்த ஜகத்தானது இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் இருக்கையாலே அவனுக்கே சேஷம் -என்கிறார் –

———————————————-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

சர்வ ஜெகன் நிகரண சமர்த்தனான எம்பெருமானுடைய ஸர்வேஸ்வரத்வம் ஒருவருக்கு அரிக்கைக்கு பூமியோ -என்கிறார் –

————————————

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னுடைய சர்வ அந்தராமித்வத்தை ப்ரத்யக்ஷமாக்கி யருளின எம்பெருமானுடைய
சர்வேஸ்வரத்வ மஹிமை ஒருவர்க்கு ஆராய நிலமோ -ஆனபின்பு இங்கனே இருந்த இவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –

—————————————–

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

ஸ்வர்க்க அபவர்க்காத் அசேஷ புருஷார்த்தங்களுக்கும் -நரகாத் புருஷார்த்தங்களுக்கும் -இவற்றுக்கு போக்தாக்களான
தேவாதி ஸ்தாவர அந்தமான் சகல ஆத்ம வர்க்கத்துக்கும் தாரகனாய் -பிராண பூதனாய் -நியாந்தாவாய் -ஸ்வ இதர ஸமஸ்த விஸஜாதீய அப்ராக்ருத
மஹா விபூதியை யுடையனாய் நின்ற எம்பெருமானை நான் காணப் பெற்றேன் -என்று கொண்டு ஸ்வ லாபத்தைப் பேசி முடிக்கிறார் –

—————————————————

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

இத் திருவாய் மொழியை வல்லார் இட்ட வழக்காம் திரு நாடு -என்கிறார் –

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-7-

September 28, 2017

கேசவன் தமர் -பிரவேசம் –
ஏழாம் திருவாய் மொழியில் –
ஸ்வ சம்பந்தி பரம்பரா பர்யந்தமாக -ஈஸ்வரன் பண்ணின பக்ஷ பாதத்தாலே-தம்மளவில் அவனுடைய அபி நிவேச அதிசயத்தைக் கண்டு உகந்து-
-1-ஸ்வ சந்தாநிக விஷயத்தில் அவனுடைய பிரசாத விசேஷத்தையும் -2-அதுக்கு அடியான தம்மளவில் பக்ஷ பாதத்தையும் -3–தத் கார்யமான உபகாரத்தையும் –
-4-அவ் உபகாரம் தம் குலத்தில் உல்லார்க்கும் பிராப்தி பர்யந்தமான படியையும் -5-இது அடியாக ஈஸ்வரனுக்குப் பிறந்த உஜ்ஜ்வல்யத்தையும் –
-6-இதுக்கடைய ஹேதுவான க்ருபா பாரவஸ்யத்தையும் –7-அனுபவிக்கைக்கு உறுப்பாக ஸத்வோத்தரமான சித்த பிரதானத்தையும் –
-8-பொல்லா நெஞ்சைப் போக்கினை படியையும் –9-ப்ரேம யுக்தமான நல்ல நெஞ்சிலே புகுந்த படியையும் –
-10-அந்த நெஞ்சு அவனை விடாது ஒழிய வேணும் என்கிற அபேக்ஷையையும் –11-இன்னின்ன படியாக அவன் தன்னை முழுக்க கொடுத்த உதார குணத்தையும் –
-12-இவ் உதார அதிசயம் அதிசயித்த ஞானர்க்கும் அபரிச்சேதயம் –என்னும் இடத்தையும் அருளிச் செய்து –
ஸ்வ விஷயத்தில் ஆதாரம் ஈஸ்வரனுக்கு சம்பந்தி த்ரய சந்தான சம்ரக்ஷண பர்யந்தம் ஆனபடியை
அவனுடைய ஆஸ்ரித ரக்ஷண அர்த்த குண சேஷ்டித பிரகாசகங்களான திருத் துவாதச நாமங்களோடே கூட அருளிச் செய்கிறார் –

———————————————-

முதல் பாட்டிலே -தம்முடைய குலத்தில் உள்ளார் பகவத் அபிமான அந்தர்கதரான படியை அருளிச் செய்கிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –சர்வ சாதாரணமான ஸ்வாமித்வத்தை யுடையவனாய் -அப்படியே பொது வன்றியே –
நீல ரத்னம் போன்ற வடிவை எனக்கு காட்டி
அவ்வடிவுக்கு பரபாகமாம் படி சிவந்த அழகிய திருக் கண்களாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கி
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–பரமபத வாசிகளோபாதி அங்கீ கரித்து -என்னை அன்பவிப்பித்து –
எனக்கு நாத பூதனான உறவு அடியாக நிரதிசய வாத்சல்ய யுக்தனான நாராயணனாலே –
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்–கீழ் மேல் ஏழு ஏழு பிறப்பும் சர்வாதிகனான கேசவன் தமரான எமரானவர்கள்-
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா–நிர்ஹேதுக பகவத் அங்கீ காரமாகிற இந்த பெரிய சதிரைப் பெற்று –
அத்தாலே நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவத்வ ஸ்ரீ யானது வளருகிற படியே —

—————————————

அநந்தரம் -கீழ் யுக்தமான நாராயண சப்தார்த்தத்தை உபபாதியா நின்று கொண்டு ஸ்வ விஷய பக்ஷ பாதத்தை அருளிச் செய்கிறார் –

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்–நாராயண சப்த வாச்யனாய் -அதினுடைய அர்த்தமான -ஸமஸ்த லோகத்துக்கும் ஸ்வாமியாய் –
அந்த சப்தத்தையே பிரதானமாக ப்ரதிபாதிக்கிற வேத பிரதி பாத்யனாய்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் -கிரியா ஹேது -கிரியை -கிரியா பலமான கர்மம் -இவற்றுக்கு காரண பூதனாய் –
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று–குணோத்தரராய் -திவ்யரான தேவர்களும் ரிஷிகளும் மனுஷ்யாதிகளுமான எல்லாரும்
வணங்கி ஸ்தோத்ரம் பண்ணும் படியாக நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –எந்தை-குவலயா பீடத்தை கொம்பை முறித்த மஹா உபகாரகனாய் —
இப்படி நார சப்தார்த்தங்கள் தமக்கு விபூதியான படியை எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ யாபதியான ஸ்ரீ கிருஷ்ணன் என்னை அநந்யார்ஹன் ஆக்கின சேஷி –
சீர் அணங்கு -என்று ஸ்ரீ மஹா லஷ்மி யாகவுமாம் –

——————————————–

அநந்தரம் -இப்பஷபாதம் அடியாக ஸ்வ விஷயத்தில் யுக்தி மாத்ரத்தையே பற்றாசாகக் கொண்டு பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

என் கோவிந்தனே மாதவன் என்றதே கொண்டு என்னை -எனக்காக ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்த என்னுடைய ஸ்வாமியானவன் –
ஸ்ரீ மான் -என்று நான் சொன்ன அஹ்ருதய உக்தியையே பற்றாசாகக் கொண்டு -உக்தியில் வாசி அறியாத என்னை –
இனி இப்பால் பட்டது-யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து-உக்த்ய அநந்தரமாக மேலுள்ள காலம் எல்லாம்
அவித்யாதிகளான குறைகள் -ஏதேனும் ஒன்றையும் -சேர் கொடேன் -என்று சங்கல்பித்து -அதுக்கு ஈடாக என் நெஞ்சுக்குள்ளே புகுந்து அநந்ய பரனாய் இருந்து –
தீதவம் கெடுக்கும் அமுதம் –புத்தி பூர்வகமான தீமையையும் -ப்ரமாதிகமான அவத்தையும்-கெடுக்கும்படியான நித்ய போக்ய பூதனாய் -இஸ் சம்ச்லேஷத்தாலே
செந்தாமரை கட்குன்றம்-சிவந்த தாமரை போல் இருக்கிற திருக் கண்களையும் -ஸூ ஸ்திரமாய் வளர்ந்த வடிவையும் அனுபவிப்பித்து –
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான்–கொத்தும் ஆர்வமும் இல்லாத கன்னல் கட்டி போலே எனக்கு இனியனானான் –
கன்னல் கட்டி -கருப்புக் கட்டி -அதுக்கு கொத்தும் ஆர்வமும் -நீரசமான வஸ்த்வந்த்ர சம்சாரக்கமும் -பாக தோஷமும் –
ஈஸ்வரனுக்கு கோதும் அவமுமாவது -உபகாரத்தினுடைய ஹேது சா அபேக்ஷத்வமும்-ஸ்வ ப்ரயோஜன அர்த்தத்வமும் –

————————————————-

அநந்தரம் இவ்வுபகாரம் ஸ்வ சம்பந்தி குல பர்யந்தமாம் படி பண்ணின சாமர்த்தியத்தை அருளிச் செய்கிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்தது செய்ய வல்ல சக்திமானாய் -ஸமஸ்த பதார்த்தங்களையும் வியாபித்து –
ஊரை வளைத்து ஒருவனைப் பிடிக்குமா போலே -என்னை அங்கீ கரித்த ஸ்வாமியானவன் –
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து–ஜாதி உசிதமான கோ ஸம்ருத்தியை யுடையவன் -அந்த ஸம்ருத்தி உசிதமான ஹர்ஷ வ்யாபாரமாயுள்ள
குடக் கூத்தை யுடையவன் -இந்த ஐஸ்வர்யா சேஷ்டிதங்களுக்கு அனுரூபமான கோபால ஜென்மத்தை யுடையவன் -என்று என்று
இவற்றைத் தனித் தனியே சொல்லி -ப்ரீதியாலே கூத்தாடி
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்–இந்த ஸுலபயத்துக்கு அடியான பரத்வத்தையும் -தனக்கு அசாதாரணமான நீர்மையையும்
ப்ரீதிக்கு போக்குவீடாகப் பாடி சஞ்சரிக்கும் படி -இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே நித்ய ஸூரி சமானமாம் படி திருத்தி –
தன்னுடையவனாகக் கைக் கொண்டு -ஸ்வ அங்கீகார விரோதியான என்னுடைய
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் –பாபங்களையும் ஓடிப் போம்படி துரத்தி –
என்னோடு அன்வயமுடையார் ஏழு ஏழு ஜென்மமும் தன்னைப் பிறப்பிக்கும் தன்மையை யுடையோராம் படி பண்ணினான் –
இது ஒரு சக்தி யோகம் இருந்தபடபி என் -என்று கருத்து –
பாற– ஓட

————————————————————–

அநந்தரம் ச பரிகரமாகத் தம்மை அங்கீ கரித்த படியாலே அவனுக்குப் பிறந்த உஜ்ஜ்வல்யத்தை அருளிச் செய்கிறார் –
இப்பாட்டில் முதல் அடியில் -விட்டு என்று திரு நாமமாகப் பிரித்து -விட்டிலங்கு முடியம்மான் என்று நாலாம் அடியோடு அன்வயித்துக் கிடக்கிறது –
அல்லாத போது திரு நாமம் முதலாய் எழுகிற பாட்டுக்கள் மரியாதை குலையும் –
விட்டு -என்னும் இவ்விடத்தில் உகரம் குற்றியலாகக் கொள்க –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –விஷ்ணுவாய் -பரந்து விளங்குகிற அபிஷேகத்தை யுடையனாய் -ஸ்வாமியான மது ஸூதனன் தனக்கு –
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்–இலங்கி சிவந்த ஒளியையுடைய தாமரை போன்றன திருவடிகளும் -திருக் கைகளும் -திருக் கண்களும் -விகசிதமாய்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு–விளங்கா நிற்கிற நீளமான பிரபையை யுடைத்தான மலை போன்றது -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி–அழகிய சங்கு பரம்பி விளங்குகிற சந்திரனைப் போன்றது சக்ரம் –
விட்டிலங்கு பரிதியே -அப்படிப்பட்ட -ஆதித்யனைப் போன்றது-
சாமா நாதி கரண்யம் உபமான உபமேய பாவத்தால் –

——————————————–

அநந்தரம் கீழ்ச் சொன்ன உபகாரத்துக்கும் தத் க்ருத உஜ்ஜ்வல்யத்துக்கும் ஹேதுவான கிருபா பாரவஸ்யத்தை அருளிச் செய்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

மது சூதனை யன்றி மற்றிலேன் -என் விரோதியைப் போக்கினை மது ஸூ தனனை அன்றி மற்று ப்ராப்யம் உடையேன் அல்லேன்-என்று
எத்தாலும் கருமமின்றி-துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்று – ஏதேனும் ஒரு பதார்த்தத்தாலும் ஒரு கார்யம் அற்று –ஸ்தோத்ர ரூபத்தாலே
அவன் குண கணாதிகளைச் சூழ்ந்த பாடல்களை -பிரயோஜனாந்தரம் இன்றியே ஸ்வயம் பிரயோஜனமாக நின்று பாடி ஆடும்படி
ஊழி யூழி தொறும்-எனைத்தோர் பிறப்பும் -கல்பம் தோறும் கல்பம் தோறும் அநேகங்களாய் அத்விதீயங்களான பிறப்புக்கள் தோறும் –
எதிர் சூழல் புக்கு எனக்கே யருள்கள் செய்ய-எனக்கு அபிமுகனாகைக்கு ஈடான சூழ்ச்சியோடே அவதரித்து எனக்கே அசாதாரணமாக
பிரதம கடாக்ஷம் தொடங்கி பரபக்தி பர்யந்தமான உபகாரங்களை பண்ணுகைக்கு
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –எனக்கு உறுப்பான ஏன்று கோளை யுடையனாய் ஸ்வாமியான
த்ரி விக்ரமனை தப்ப ஒண்ணாத விதி என்னலாம் படியான கிருபையானது சூழ்ந்து கொண்டது –
ஏறுதல் -கொள்கை யாதல் -தகுதி யாகவுமாம் –

————————————————-

அநந்தரம் -ஸ்வ அனுபவத்துக்கு உறுப்பாக சத்வ உத்தரமான மனசைத் தந்தான் என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என்–த்ரை விக்ரம அபதானத்தாலே-லோகத்தை அநந்யார்ஹம் ஆக்கினவனாய் –
அது போலே -சிவந்த தாமரை போன்ற கண்ணாலே ஜிதம் -என்னும் படி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவன் –
என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் –சிவந்த கனி போலே இருக்கிற திருப் பவளத்தை
வடிவிலே பரம்பி வளர்ந்து வருகிற வெளுத்த பளிங்கு போலே இருக்கிற திரு முத்தின் நிறத்தை எனக்கு அனுபவிப்பித்தவன் –
என்று என்று உள்ளி பரவிப் -பணிந்து -என்று என்று தனித் தனியே சேஷ்டிதத்தையும் கண் அழகையும் முறுவல் அழகையும் நெஞ்சால் அனுபவித்து –
அது உள் அடங்காமையாலே அக்ரமமாகப் பரவி –அந்த ப்ரீதி பிரேரிதனாய்க் கொண்டு திருவடிகளில் விழுந்து
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே –பல்வகைப்பட்ட கல்ப விபாகத்தை யுடைத்தான கால தத்வம் உள்ளதனையும் -ப்ராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகளில் –
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு பொருந்தி அடிமை செய்யும் மனஸ்ஸையே தந்தாய் –
என் வாமனன் வல்லை காண் -மஹா பலியினுடைய நெஞ்சை வஞ்சித்து அனுகூலமாக்கின நீ என் நெஞ்சையும் அணுகூலிப்பிக்க சக்தன் என்று கருத்து-

—————————————-

அநந்தரம் -அனுபவத்துக்கு உறுப்பு அல்லாத பொல்லாத நெஞ்சைப் போக்கின உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரம் உண்டோ -என்கிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்–சர்வ ஸூலபனான வாமனனே-எனக்கு அனுபாவ்யமான மரகதம் போன்ற வடிவு அழகை யுடையவனே —
போக்தாக்களைக் கண்டு உகந்து பூர்ணமாக நோக்கும் -தாமரை போலும் கண்ணை யுடையவனே –
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து–எல்லாரும் ஆசைப்படும் அழகை யுடைய
காமனுக்கும் உத்பாதகன் ஆனவனே -என்று என்று சொல்லி
உன் திருவடிகளை பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க –ப்ரயோஜனாந்தரங்களில் போகாத ஸூத்த மனஸ்ஸை யுடையேனாய் -ஞான ப்ரயுக்தமான அலமாப்பு தீரும்படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –விஷயாந்தரங்களிலே அந்நிய பரமான தீய மனம் கெட்டுப் போம்படி பண்ணினாய் –
இப்படி எனக்கு உபகாரகனான ஸ்ரீ மானே பரிபூர்ணனான உனக்கு எத்தை செய்கேன் –
ஸ்ரீ யபதியாகையாலே–பூர்ணனான உனக்குச் செய்யலாவது ஒரு ப்ரத்யுபகாரம் இல்லை -என்று கருத்து –

——————————————————-

அநந்தரம் -விஸ்லேஷ துக்கம் தீர்க்கும்படி என் நெஞ்சுக்குள்ளே புகுந்து நான் ஹ்ருஷ்டானாம் படி அனுபவிப்பித்தான் -என்கிறார் –
தூ மனத்திலே தோற்றுவித்த பக்திக்கு விஷயமாய்க் கொண்டு நான் உய்க்கும் படி புகுந்தான் -என்கிறார் -என்றுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் –ஸ்ரீயபதியானவன் –அவ்ளோட்டை சம்ச்லேஷ ப்ரீதியால் செவ்வி பெற்ற தாமரை போலும் கண்ணை யுடையவன்
என்று என்று இராப்பகல் வாய் வெரீ இ –என்று என்று -இவள் இராப் பகல் வாய் வெரீஇ -2–4–5- என்கிறபடியே -இரவும் பகலும் வாய் வெருவி
அலமந்து கண்கள் நீர் மல்கி –எங்கும் நாடி நாடி –2–4–1-என்கிறபடியே அலமந்து -குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்–2–4–5-என்றும் –
கேழில் ஒண் கண்ண நீர் கொண்டாள் –2–4–10–என்கிற படியே கண்ண நீர் மல்கி
வெவ்வுயிர்த்து உயிர்த்து–உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -2–4–4-என்றும் -நெஞ்சம் வேவ நெடுது உயிர்க்கும் -2–4–8-என்கிறபடியே
பலகாலும் வெவ்விதாக நெடு மூச்சு எறிந்து
மரீ இய தீ வினை மாள –இப்படி ஆடியாடியிலே-2–4- மருவின தீவினை போம்படியாக
இன்பம் வளர -அந்தாமத்து அன்பு -2–5-தொடங்கி இன்பம் வளரும்படி
வைகல் வைகல்-சர்வ காலமும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –இந்திரியங்களுக்கு நியாமகன் ஆகையால் உனக்கு விதேயமான என் நெஞ்சிலே
நியாந்தாவாய் போக்யனான உன்னை -பக்க நோக்கு அறியான் –2–6–2-என்கிறபடியே இருத்தி -வைத்தாய் –
பக்தி பாரவசயத்தாலே வந்த விகாரத்தை -வெவ்வுயிர்த்து உயிர்த்து-அறுதியாகச் சொல்லி -பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தி பிறந்து
அனுபவ ஆனந்தம் வளரும்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை சொல்லிற்று ஆகவுமாம் –

——————————————-

அநந்தரம் -இப்படி சர்வ பிரகார உபகாரகனை விடாமையில் உண்டான அபேக்ஷையை அருளிச் செய்கிறார் –

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

இருடீகேசன் எம்பிரான் -தசை இந்த்ரியா நநமான என்னுடைய மானஸ இந்திரியத்தை நியமித்து -எனக்கு உபகாரகனாய் -அதுக்கு உதாஹரணம் என்னலாம் படி
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று–இலங்கையில் ராக்ஷஸ குலத்துக்கு
முருடான ராவணனை அழித்து நாட்டுக்கு உபகரித்தவன் –
நித்ய ஸூரி களோபாதி என்னை அனுபவிப்பித்த ஸ்வாமியானவனே -என்று பலபடியும் அனுசந்தித்து நெஞ்சே
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து–அறிவுடையையாகில் அவனை வணங்கும் படி பார் –
இத்தை சிக்கென புத்தி பண்ணு -இவ்வறிவுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –
கலக்கம் வந்ததே யாகிலும் குண பரிபூர்ணனாய் காரண பூதனான திரு நாபி கமலத்தை யுடைய
இம் மஹா உபகாரகனை விடாதே கிடாய் என்று நெஞ்சை அபேக்ஷிக்கிறார் –

——————————————————–

அநந்தரம் இப்படி அறிவு பிறந்த நெஞ்சை உடைய எனக்கு அவன் சர்வ பிரகார உபகாரகன் ஆனான் -என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்-எற்பரன்–ஜகத் உத்பத்தி ஹேது வான திரு நாபி கமலத்தை யுடையனாய் –
உத்பன்ன ஜகத் ரக்ஷண அர்த்தமாக மிகவும் உயரா நின்ற அபரிச் சின்னையான சக்தியை யுடையனாய் -இம்மேன்மையோடே என் பக்கலிலே தத் பரனாய்
என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த-கற்பகம் –அது அடியாக என்னை உண்டாக்கி அங்கீ கரித்து
எனக்கே அசாதாரணமாம் படி தன்னை தந்த கால்பக்கமாய் –
என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்வெற்பன் -எனக்கு போக்யமாய் -தரம் பாராமல் உபகரிக்கும் காள மேக சத்ருசனாய் –
அதுக்கு யோக்ய ஸ்தலமான விலக்ஷணமான திரு வேங்கடம் என்ற பேராய -இந்நிலையிலே
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –நித்ய ஸூரி களை அனுபவிப்பிக்கிற ஆஸ்ரித பவ்யத்தையை யுடையனான தாமோதரன் –
என்னை அடிமை கொண்டான் –
கல்பகத்தில் காட்டிலும் இவனுக்கு வாசி -அர்த்தியை உண்டாக்குகையும் -அவனைத் தானே ஸ்வீகரிக்கையும் -அவன்
அபேக்ஷிதத்தை கொடுக்கை அன்றிக்கே தன்னைக கொடுக்கையும் -தானே போக்யமாகையும்-

——————————————————-

அநந்தரம் -தம்மளவில் அவன் பண்ணின உபகாரம் அதிசயித்த ஞானர்க்கும் அளவிட ஒண்ணாது -என்கிறார் –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை–ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் ஸமஸ்த ஜகத் ஏக காரணத்வத்தையும் –
பிரளய ஆபத் ஸகாத்வத்தையும் உடையவனை –
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்-பரிச்சேதித்து அறிய ஒருவர்க்கும் போமோ என்று தொழுமவர்களாய் –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்–அந்த தாமோதரனுக்கு ப்ரகாரத்தயா சேஷ பூதரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் –
கடுகிலே கடலை மடுத்தால் போலே
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –என் பக்கலிலே தன் குண ஆரணவத்தை வைத்து
என்னை அடிமை கொண்ட ஸ்வாமியை அளவிட்டு அறியப் போமோ –
சாமான்யமான உபகாரங்களை அறிந்தாலும் -என் பக்கல் பண்ணின விசேஷ உபகாரம் அறிய அரிது -என்று கருத்து –

———————————————

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலமாக பகவத் ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

வண்ண மா மணிச் சோதியை -நிறத்தை யுடைத்தாய் -பெரு விளையனான நீல மணியினுடைய ஓளி போலே இருக்கிற தேஜஸ்ஸை யுடையனாய் –
அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலைத் –இவ்வழகு-நித்ய ஸூரி களுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெரியவனாய் -ஆஸ்ரிதரைத் தானே
அனுபவிப்பிக்குமவனாய் -அதுக்கு அடியான நிரதிசய வ்யாமோஹத்தை உடையனானவனைப் பற்ற
தென் குருகூத்ச் சடகோபன் பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்–அழகிய திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
செய்தவையாய் சர்வாதிகாரமாக திராவிட சந்தர்ப்ப ரூபமான ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளும் –
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–பண்ணிலே வர்த்திப்பதாய் -திரு துவாதச நாமத்தைப் பற்றி
வருகிற பாட்டான இவை பன்னிரண்டும் -சர்வேஸ்வரன் திருவடிகளை ப்ராபிப்பிக்கும்-
இது கலித் துறை –

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-7-

September 28, 2017

கேசவன் தமர் -பிரவேசம் –
என் பக்கலுள்ள அபி நிவேசத்தாலே என்னோடு சம்பந்தித்தாரையும் கூட விஷயீ கரித்து அருளினான் -என்று ப்ரஸ்துதமான பொருளை விஸ்தரிக்கிறது –

————————————

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

சர்வேஸ்வரனாய் -நிரதிசய ஸுந்தர்யாதி கல்யாண குணகனாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -எனக்கு ஸ்வாமியாய் இருந்த நாராயணனாலே –
யேந கேநாபி பிரகாரேண சாஷாத் வா -பரம்பரயா வா என்னோடு சம்பந்தம் யுடையார் எல்லாரும் பகவத் ஏக போகரானார்கள் –
தத் சம்பத்தினாலே பகவத் ஏக போகத்வ லக்ஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நமக்கு விளையும் படியே இது -என்கிறார் –

——————————————————–

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

ஈசன் -என்று ப்ரஸ்துதமான ஈச்வரத்வத்தை உபபாதிக்கிறது -சர்வ அந்தராத்மா பூதனாய்– சர்வ லோக ஈஸ்வரனாய்– சர்வ வேத வேத்யனாய்-
காரணத்துக்கும் க்ரியைக்கும் காரியத்துக்கும் நிர்வாஹகானாய் இருந்து வைத்து -எனக்கு போக்யமாகைக்காக-
பெரிய பிராட்டியாரும் அயர்வறும் பாமரர்களும் தொழுது ஏத்த அதினாலே சம்வர்த்தித்த பலனாய் நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் மாதவனாலே எமர் ஏழு ஏழு பிறப்பும் கேசவன் தமராயிற்று -என்கிறார் –

—————————————

இப்படி எம்பெருமான் என்னோடு சம்பந்தித்தாரையும் கூட விஷயீ கரிக்கும் படி என்னை வைஷ்ணவன் ஆக்குகைக்கு
ஹேதுவான என் பக்கலுள்ள சதிராகிறது என் என்னில் -அது இன்னது என்று சொல்லுகிறது –

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

யாதிருச்சியா பிராட்டி பரிக்ரஹித்தார் சொல்லுவதொரு சொல்லைச் சொல்ல -அச்சொல் மாத்ரத்தையே கொண்டு மெய்யே பிராட்டி பரிக்ரஹமாய் இருப்பாரைப் பார்த்து
அருளும் பார்வையாலே என்னைப் பார்த்து அருளி -இவரை யாகாதே தான் நெடும் காலம் எல்லாம் இழந்தது -என்று இழந்த காலத்தை அனுசந்தித்து மோஹித்து
பின்னை நெடும் பொது கூட பிரபத்தனாய் போன காலத்தை இனிச் செய்யலாவது இல்லை இ றே- இனி இப்பாலுள்ள காலமாகிலும் என்னை விட்டேன் என்று
நிரதிசய ஸுந்தர்யத்தை யுடையனாய் நிரதிசய போக்ய பூதனாய் -ஆஸ்ரித ஸூ லபனாய் -பரம காருணிகனாய் இருந்த எம்பெருமான் என்னுள் புகுந்திருந்து-
என் பக்கலுள்ள ஸ்வ சம்ச்லேஷ விரோதியான ஸ்வரூப ப்ரயுக்த தோஷத்தையும் -ஹேது க்ருதமான தோஷத்தையும் போக்கி எனக்கு பரம போக்யனானான் -என்கிறார் –

————————————————–

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

இப்படி என்னுள்ளே புகுந்து இருந்து தன்னுடைய குண சேஷ்டிதங்களை ஏத்திக் களிக்கும் படியாகவும் -தன்னுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும் –
ஆஸ்ரித பராதீனத்வம் ஆகிற தன்னுடைய ஸ்வரூபத்தையும் பாடி ஆடும்படியாகவும் என்னைத் திருத்தி இப்படி என்னை விஷயீ கரித்து பின்னை
என் பக்கலுள்ள பிரதிபந்தகங்களை எல்லாம் போக்கி அவ்வளவில் பர்யவாசியாதே என்னோடு சம்பந்தித்தாரையும் கூட என்னைப் போலே
தன் திருவடிகளை ஸம்ஸ்லேஷிக்கும் -ஸ்வபாவராக்கினான் –
வல்லன் வல்லன் எம்பிரான் –வல்லன் வல்லன் என் நாயகன் –வல்லன் என் அப்பன் –வல்லன் என்று என்று அவனைப் புகழுகிறார் –

————————————————

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

இப்படி என்னை வைஷ்ணவன் ஆக்குகைக்குத் தன் அழகை உபகரணமாகக் கொண்டு என்னுள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் –

—————————————————–

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

அநாதி காலம் தொடங்கி இன்று அளவும் வர நான் பிறந்த பிறவிகள் தோறும் என்னை வசீகரிக்கைக்கு ஈடான வடிவுகளைக் கொண்டு வந்து பிறந்து அருளி
என்னை வசீகரித்து -மது ஸூதனன் அல்லது எனக்கு மாற்று ஒரு ப்ராப்யம் இல்லை என்று அத்யாவசித்து -தத் வ்யதிரிக்தங்களை எல்லாம் விட்டு -சர்வ காலமும் நின்று
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி யாடுகை யாகிற இஸ் ஸம்ருத்தியை எனக்கே தந்து அருளுகைக்காக திரி விக்ரமனை எனக்காகவே கிருபையாகிற விதி சூழ்ந்தது என்கிறார் –

—————————————————

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

ஆச்சர்ய திவ்ய சேஷ்டிதன்–பிரபுத்த முக்த அம்புஜ சாரு லோசனன் -அழகிய திருப் பவளத்தை யுடையவன் -ஸூசிஸ்மிதன் -இவற்றால்
என்னை அடிமை யாக்கினவன் என்று என்று உள்ளிப் பரவிப் பணிந்து இப்படியே சர்வ காலமும் உன்னுடைய பாத பங்கயமே மருவித் தொழும்
மனமே தந்தாய் -வல்லை காண் -எம்பிரான் வல்லை காண் —
ஒருவர்க்கும் செய்ய முடியாதன வெல்லாம் -செய்ய வல்லன் ஒருவன் அல்லையோ -என்கிறார் –

—————————————————–

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

நிரதிசய ஸுந்தர்ய ஜென்ம பூமியாய் இருந்த உன்னுடைய வடிவையும் -அழகையும் -அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு பாடி –
உன் திருவடிகளைப் பணிந்து கொண்டு பிரதிபந்தகங்களைப் போக்கும் படி என்னுடைய மனஸ்ஸை
உன் திருவடிகள் அல்லது மற்று ஓன்று அறியாதபடி பண்ணினாய் -ஸ்ரீ மானே -உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வது -என்கிறார் –

—————————————————

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-

ஸ்ரீ தரனாகையாலே செய்ய தாமரைக்கு கண்ணன் என்று என்று இராப் பகல் வாய் வெருவி அலமந்து-கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து-
மருவி இருந்த தீ வினைகள் மாள-இன்பம் வளர எப்போதும் உன்னை என்னுள்ளே இருத்தி வைத்து அருளினாய் –
இப்படி உன் அழகாலே என்னுடைய கரணங்களையும் தோற்பித்தவனே -உனக்கு என் செய்கேன் -என்கிறார் –

—————————————————

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

தன் அழகாலும் செயலாலும் என்னை அடிமை கொண்டவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று என்று அவனை ஏத்தி -நினைந்து -வணங்கு –
இத்தை அழகியதாகக் கைக் கொள்ளக் கொண்டு மறந்தும் நம்பி பற்ப நாபனை விடாதே கிடாய் நெஞ்சே –
என்று கொண்டு தம்முடைய நெஞ்சைக் குறை கொள்ளுகிறார் –

—————————————————

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

அவன் நம்மை விடில் செய்வது என் என்னில் -அளவிறந்த அழகை யுடையனாய் -நிரவதிக தேஜஸ் ப்ரப்ருதி கல்யாண குணங்களை யுடையனாய் –
என்னை ஸ்வ இதர சர்வ விஷய வைராக்ய பூர்வக ஸ்வ அனுபவ ஏக போகனாக்கிக் கொண்டு -எனக்கே தன்னைத் தந்த பரம உதாரனாய் –
என்னுடைய போக்யமாய் -நிரதிசய ஸுந்தர்ய பரிபூரணமான திருமலையோடு உள்ள ஸம்பந்தத்தாலே லப்தமான இந்த உதார குணத்தை யுடையனாய் –
திரு நாட்டில் திவ்ய புருஷர்களுக்கு நாதனாய் -எனக்கு ஸ்வாமியாய் -ஆஸ்ரித பராதீனனான எம்பெருமான் என்னை அல்லது அறியான் –
ஆதலால் அவன் என்னை விடான் -என்கிறார் –

———————————————-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-

ஆஸ்ரித பரதந்த்ரனாய் -சர்வ ஜகத் ஏக காரணமாய் -சர்வ ஜகத் ரக்ஷகனாய் இருந்த எம்பெருமானை ஒருவருக்கும் தான் அறியலாமோ -என்று தொழுகின்ற
பரம புருஷ சேஷத ஏக ஸ்வ பாவரான சிவற்கும் திசை முகர்க்கும் -எம்மானை என்னாழி வண்ணனைத் தரம் அறியலாமோ என்று கொண்டு
அவனுடைய அபரிச்சேத்ய மஹத்வத்தைச் சொல்லி ஏவம் பூதனானவன் கிடீர் ஏற்பரனாய் இருக்கிறவன் -என்கிறார் –

———————————————

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

இத்திருவாய் மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவார் -என்கிறார் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-6-

September 26, 2017

வைகுந்தா-பிரவேசம் –
ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்

—————————————————-

முதல் பாட்டில் -நிரதிசய போக்யனாய் -அநிஷ்ட நிவர்த்தகனான உன்னை -நான் சிக்கெனைப் பற்றி இருக்கிறேன் என்று திரு உள்ளம் பற்று -என்கிறார் –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா –பரமபத நிலயத்வத்தாலே -அசாதாரண சேஷியாய் நீல ரத்னம் போன்ற வடிவை யுடையனாகையாலே ஸூ லபனாய் –
தர்ச நீயமான வாமன விக்ரஹத்தை யுடையனாகையாலே போக்யனாய் -இவ்வாகார த்ரயத்தையும் பிரகாசிப்பித்துக் கொண்டு –
என்னுள் மன்னி–வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே-என் நெஞ்சுக்குள்ளே ஸ்திர சம்ச்லேஷம் பண்ணி -இருக்கிற காலம் தோறும் நித்ய போக்யமாய்க் கொண்டு
நித்ய ஸூரி சமானமாம் படி அனுபவிப்பிக்கிற மேன்மையை யுடையனாய்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து -தானே செய்து கொள்ளப் பட்டு பல பிரதானத்திலே குந்தாதே பரிஹரிக்க அரிதான கொடிய பாபங்களை
உன்னோடு சேஷத்வ சம்பந்தம் யுடையார்க்கு தீர்த்து -அவை பிரதிகூலரான அசுர ப்ரக்ருதிகள் பக்கலிலேயாம்படி
அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -அவர்களுக்கு அனர்த்தத்தை விளைக்கும் குந்தமாகிற ஆயுதத்தை யுடையவனே
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –இப்படி போக்ய பூதனாய் அநிஷ்ட நிவர்த்தகனாய் ஆஸ்ரித பக்ஷபாதியான உன்னை –
உன் இனிமையை அறிந்து உன்னை ஒழியச் செல்லாத நான் -இனி -விடாதபடி ஸ்திரமாக பற்றினேனாக திரு உள்ளம் பற்று –
செய்கும்-தாவரும் -என்று சொல்லாய் -செய்யப்பட்டுக் கடக்க வரிய என்றுமாம் –
குந்தம் என்று மரமாய் -அதின் வெளுப்பையிட்டு ஸூதிதியைக் காட்டுகிறது என்றும் சொல்லுவார் –
பொல்லா -என்று விபரீத லக்ஷணையால் அழகைச் சொல்லுகிறது –
என் பொல்லா -என்று தம்மை அநந்யார்ஹர் ஆக்கிற்று அவ் வழகாலே-என்று கருத்து –

———————————————-

அநந்தரம் தம்முடைய பக்கல் கலந்து அவன் உஜ்ஜ்வல ஸ்வரூபனாய்க் கொண்டு ஓர் இடத்தில் அந்நிய பரத்தை யற்று இரா நின்றான் -என்கிறாள் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் –அல்பமான தேசமும் புறம்பு போகாதபடி -உலகுகளை
தன் சங்கல்பத்துக்குள்ளேஏக பிரகாரமாக அடக்கி இனி ஒரு காலும் புறப்படாத படி என்னுள்ளே புகுந்தான் –
புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –புகுந்த பின் மிகுத்து வருகிற ஞான பூர்த்தியாகிற ப்ரபைக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபமாகிற தேஜோ த்ரவ்யமாய் –
துளக்கற்ற அமுதமாய் –நான் சிக்கெனைப் பிடித்த பின்பு விஸ்லேஷ அதி சங்கையால் வந்த நடுக்கமும் தீர்ந்து நிரதிசய போக்ய பூதனாய்
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –என்னையே பார்த்து இருக்கிற அழகிய
தாமரை போன்ற கண்ணை யுடையவன் ஓர் இடத்திலும் பக்கத்தில் நோக்க அறிகிறிலன் –
என் பக்கல் அபி நிவேசம் பத்னீ பரிஜநாதிகள் பாக்களிலும் காண்கிறிலன்-என்று கருத்து –
ஸ்வரூபாதிகளில் அவனுக்கு யுண்டான ஸ்புரித பிரகாசமும் ஸ்வ சம்ச்லேஷம் அடியாக என்று நினைக்கிறார் –

———————————————————-

அநந்தரம் தன்னைக் கரண த்ரயத்தாலும் நிரந்தர அனுபவம் பண்ணுவித்த மஹா உதாரணானவன் என்னை ஒழிய அறிகிறிலன் -என்கிறார் –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –தாமரை போன்ற கண்களை யுடையவனாய் -அவ்வழகாலே-நித்ய ஸூரிகள்
நிரந்தரமாக புகழும்படியான மேன்மையை யுடையவனாய் –
துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை–விரையும் பூவும் மருவிய துழாய் மாலையை யுடையனாய்க் கொண்டு -எங்களுக்கு ஸ்வாமியாய் –
எங்களோட்டைச் சேர்த்தியால் பொன்மலை போல் ஓங்கி உஜ்ஜவலனான தன்னை –
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட –நாங்கள் நிகர்ஷம் பார்த்து அகலாதே -மருவி -ஸூரிகளோபாதி அங்குத்தைக்குத் தகுதியாம்படி
நன்றாக ஏத்தி –அவர்கள் சிந்தையுள் வைக்குமா போலே நினைத்து -வணங்கி வழிபாடும் –1-6–4-என்கிறபடியே திருவடிகளில் விழுந்து –
இப்படி கரண த்ரயத்தாலும் யுண்டான அனுபவத்தால் நாங்கள் ஆனந்திகளாய் ச சம்ப்ரம நிருத்தம் பண்ணும் படியாக –
நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –நாவிலே அலருகிற பாவிலே மருவி திருவாயமொழி பாடி நிற்கும் படி உபகரித்த
ஸ்வபாவத்துக்கு பொருந்தின உதார குண விசிஷ்டனானவன் -எங்கும் பக்க நோக்கு அறியான் -2–6–2-என்று அந்வயம்
பான்மை -ஸ்வ பாவம் –

—————————————————–

அநந்தரம் -சர்வ பிரகார உபகாரகனான உன்னை விடப் போமோ -என்கிறார் –

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே –அர்த்தித்தவ நிறபேஷமாக உபகரிக்கும் மஹா உதாரனாய்-உபகாரம் கொள்ளுகிற என் விரோதியை
மதுவை அழித்தாப் போலே அழிக்குமவனாய்-நிவ்ருத்த விரோதிகனான எனக்கு உத்துங்கமாய் உஜ்ஜவலமான மரகத மலை போலே இருக்கிற வடிவை
அனுபவிப்பிக்குமவனாய் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே –
உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் –உன்னை அனுசந்தித்து இதர விஷயங்களை இகழும் ஸ்வ பாவத்தை தந்த ஸ்வாமியே –
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து–பெரும் கடல் போலே அபரிச்சின்னமான உன்னுடைய குணங்களை அவகாஹித்து அனுபவித்து –
அந்த ப்ரீதியாலே ஆடுவது பாடுவதாய் களித்து -அது ஓரளவில் நில்லாதே -மேன்மேல் என உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே–அஹங்கார அர்த்த சமன்கள் அனுபவ விஸ்லேஷம் நிகர்ஷ அனுசந்தானம் முதலாக உள்ள
நோய்கள் எல்லாம் -தூரப் போம்படி அகற்றி -லப்த சத்தாகனாய் -சம்சார ஸ்திதி குலைந்து உன்னளவும் போந்து -சாம காயன் நமஸ்தே -என்று
அனுபவித்துக் கொண்டு இருக்கப் பெற்று வைத்து
உன்னை எங்கனம் விடுகேன்– இப்படி உபகாரகனான உன்னை எங்கனே விடுவேன் –

———————————————–

அநந்தரம் -த்வத் அனுபவ ஜெனித கைங்கர்ய போகத்தைப் பெற்ற நான் விடும்படி என் -என்கிறார் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை-திருப் பாற் கடலிலே -ஐந்து வகையாய் விரிந்த தலை -பணங்களை யுடையனாய் –
அசைந்து வருகிற திரு அரவணையின் மேலே -பொருந்திக் கண் வளர்ந்து -ஜகத் ரக்ஷண யோகத்தில் நிப்ருதையாலே உறங்குவாரைப் போலே –
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –ரக்ஷண பிரகார சிந்தை பண்ணின என் ஸ்வாமியே –
இப்படி ரக்ஷகத்வத்தை பிரகாசிப்பித்த உன்னை -நிரந்தர அனுசந்தானம் பண்ணி
உய்ந்து போந்து- லப்த ஸ்வரூபனாய் அந்நிய பரரான சம்சாரிகளில் வ்யாவருத்தனாய் –
என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து -நானே எனக்குத் தெடிக் கொண்டு அசங்கக்யாதமாய் -க்ரூரமாய் அக்னி கல்பமான பாபங்களை நசிக்கும் படி பண்ணி –
உனது-அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ–ப்ராப்தனான உன்னுடைய அபரிச்சின்னமான கைங்கர்ய போகத்தை கிட்டப் பெற்ற நான் விட ஷமன் அல்லன்-
1-ஆஸ்ரித விஷயத்தில் உனக்குப் பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ –
2-அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தை இல்லாமல் விடுகிறேனோ –
3-உன் அனுபவத்தில் எனக்கு சீலனாம் இல்லாமல் விடுகிறேனோ –
4-என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடுகிறேனோ –
5-விஷயாசக்தரான சம்சாரிகளோடு பொருத்தம் யுண்டாய் விடுகிறேனோ –
6-பிரதிபந்தகமான பாபம் யுண்டாய் விடுகிறேனோ –
7-ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ –
இப்படி லப்த அபீஷ்டனான நான் விடுவேனோ -என்று கருத்து –

———————————————————-

அநந்தரம் இந்தக் கைங்கர்ய லாபத்தாலே தம்முடைய சர்வ அபீஷ்டமும் தலைக் கட்டிற்று -என்கிறார் –

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் –வகுத்த ஸ்வாமியுமாய் உபகாரகனுமான உன்னை -நெஞ்சால் அநாதரித்த ஹிரண்யனுடைய
அகல் மார்வம் கீண்ட -பேரிடம் யுடைத்தான மார்வை -அநாயாசேன கிழித்தவனாய்
என் முன்னைக் கோளரியே –விரோதி நிவ்ருத்திக்கு நிதர்சன பூதனாய் -ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் நினைவுக்கு முற்கோலின நரஸிம்ஹமானவனே-
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி -இப்படி ஆபத்சகானாய் -ப்ராப்தனாய் -போக்யனான உன்னை –
நிரந்தர அனுசந்தானம் பண்ணி -அந்த ப்ரீதியாலே உத்துங்கமான உன்னுடைய குண வாசகமான திருவாய் மொழியை –
அவ்விஷயத்துக்கு ஈடான பெருமையுடைய இசையோடு பாடி -அப்பாட்டுக்கு ஈடான அபிநயம் தோற்றும்படி ஆடி -இப்படி கரண த்ரயத்தாலும் உண்டான போகத்தாலே
என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் -என்னுடைய அநாதி கால ஆர்ஜித பாபங்களை -நோ பஜனம் ஸ்மரந் -என்னும் கணக்கிலே
நான் ஓன்று ஒழியாமல் வேரோடே அரிந்தேன்-
போக்த்ருத்வம் இத்தலையிலே ஆணாவோபாதி விரோதி நிவர்த்தகமும் இங்கேயாகக் குறையில்லை இறே -ஸ்வரூபம் தத் பிரகாரமான பின்பு –
முடியாதது என் எனக்கே –எனக்கு தலைக்கு காட்டாதது எது தான் -சர்வ அபீஷ்டமும் சித்தம் அன்றோ -என்று கருத்து –

————————————————-

அநந்தரம் என் பக்கல் பண்ணின உபகாரம் என் குலத்தில் சம்பந்தித்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி யாயிற்று -என்கிறார் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

முழு ஏழ் உலகும் உண்டான் –ஸமஸ்த லோகமும் -தன் செல்லாமையாலே தனக்கு உள்ளேயாம் படி அவற்றை அமுது செய்தவன் –
உகந்து-அச் செல்லாமை தனக்கு என் பக்கலிலே உண்டாய் -அதுக்கு மேலே ஆதார அதிசயத்தை யுடையனாய்க் கொண்டு
அடியேனுள் வந்து புகுந்தான் -என்னுடைய சேஷத்வ சம்பந்தமே பற்றாசாக உள்ளே வந்து புகுந்தான்
அகல்வானும் அல்லன் இனி–இனி -அந்த லோகங்கள் போலே புறம்பு போமவனும் அல்லன் -இது அடியாக
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்–கீழும் -மேலும் -ஏழு பிறப்பிலும் -என்னோடு சம்பந்த முடையார்
செடி போலே செறிந்த -அவித்யா கர்ம வாச நாதிகளான-ஸமஸ்த வியாதிகளையும் -கடக்க ஒட்டி –
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –ஒருகால் முடிந்து வெளிச் சிறப்பது இன்றியே -நிரதிசய தாப கரமான சம்சாரமாகிற
நிரயத்திலே யாவதாத்மா பாவி கிட்டுகை தவிர்ந்தார்கள்–
முடியாதது என் எனக்கேல் இனி -இப்படி குல சம்பந்தி பர்யந்தமாக என்னைப் பக்ஷபதித்த பின்பு -எனக்காக்கில் முடியாதது உண்டோ –
என்னோடு அநுபந்தித்ததாகில் எல்லாக் காரியமும் தலைக் கட்டும் -என்று கருத்து –

——————————————————–

அநந்தரம் இப்பேறு எனக்கு விச்சேதியாது ஒழிய வேணும் -என்கிறார் –

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து –தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளான நாநா ஜென்மங்களிலும் –
ஒரு கால் பிறந்ததில் மீண்டும் மீண்டும் பிறந்து போரச் செய்தே
அடியை யடைந்து உள்ளம் தேறி-உன் திருவடிகளைக் கிட்டி -சேஷத்வ ஞானத்தை யுடையேனாய் -நீயே உபாய பபூ தன் என்கிற
நெஞ்சில் தேற்றத்தை யுடையேனாய் -உன்னுடைய அனுபவத்தால் ஜெனிதமான
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்–முடிவு இல்லாத ஆனந்தமாகிற பெரிய வெள்ளத்திலே -அஹமர்த்த பூதனான நான் அவகாஹித்தேன் –
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் –அசூரர்களுடைய பலவகைப்பட்ட குழாங்களானவை பஹு முகமாக சிதிலமாய் தூளியாய் கிளரும்படி-
அவர்களுடைய சேனா மத்யத்திலே பாயக் கடவனான
பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய் –அத்விதீயனான பெரிய திருவடியின் மேலே ஏறி உன் மேன்மை தோன்றும்படி இருந்த என் நாதனே –
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –-ப்ராப்தனுமாய் -சரண்யனுமாய் -போக்யனுமாய் -விரோதி நிவர்த்தகனுமான – உன்னை –
உனக்கு சர்வ பிரகார பர தந்த்ரனான என்னுள்ளின் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –

——————————————————-

அநந்தரம் -நீயே கிருஷி பண்ணிக் கலந்து இனி எங்கே ஏறப் போவது -என்கிறார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –எனக்கு நிருபாதிக ஸ்வாமியாய் -ஸ்ரமஹரமான திருமலையிலே எழுந்து அருளி நின்று ஸூலபனாய்-
இலங்கை செற்றாய் –ஆஸ்ரித விரோதிகளுக்கு வாஸஸ் ஸ்தானமான இலங்கையை அழித்தவனாய்-
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா–மரா மரங்களினுடைய பருத்த அடி ஏழும் உருவும்படி ஒரு வாளியை அநாயாசேன கோத்த வில்லை யுடையனாய் –
கொந்தார் தண் அம் துழாயினாய்-எம் அமுதே –கொத்தாய் செறிந்து குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதனாய் -நித்ய போக்யனாய்க் கொண்டு
உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –ஏவம்விதனான உன்னை என்னுள்ளே ஏகாத த்ரவ்யமாம் படி கலசின
நித்ய யவ்வன ஸ்வ பாவனாய் -இந்நிலையாலே -ஸூரிகளுக்கும் செருக்கனாம் படி நின்றவனே —
அசாதாரண சம்பந்தத்தையும் –ஸுலப்யத்தையும் –விரோதி நிவர்த்தகத்வத்தையும் -காட்டி மஹா ராஜரைப்போலே என்னையும் விஸ்வசிப்பித்து-
ஒப்பனை அழகைக் காட்டி எனக்கு நித்ய போக்யனாய் பிரிக்க ஒண்ணாத படி கலந்து அத்தாலே இளகிப் பதித்து –
இத்தாலே நித்ய விபூதிக்கும் மேலான மேன்மையை யுடைய நீ
இந்த சம்ச்லேஷத்தை விட்டு எங்கே போகிறது -இனிப் போகாதே என்று கருத்து –

————————————————–

அநந்தரம் -உன் உபகாரங்களைக் கண்ட நான் -உன்னைப் பெற்று வைத்து விட ஷமனோ-என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் –வர்த்தமானமாயும் -பூதமாயும் -ஆகாமியாயும் உள்ள காலத்திலும் –
தாயும் தந்தையும் தன் ஆத்மாவும் தனக்குப் பண்ணும் பரிவைப் பண்ணா நிற்பானாய் –
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா –இப்படி சர்வதோ முகமான ரக்ஷணத்தாலே பரக்கிற-அநாதி ஸித்தமான குண பிரதையை யுடையனாய்க் கொண்டு
த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் நாதனாய் -இப்பெருமைக்குத் தனக்கு மேல் இல்லாதவனாய் -இம்மேன்மை யன்றியே
தண் வேங்கட மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே–ஸ்ரமஹரமான திருமலையிலே மேவி நிற்கிற ஸுலப்யத்தை யுடையனாய் —
இப்பரத்வ ஸுலப்யங்களுக்கும் போக்யத்தைக்கும் ஸூசகமாய் -குளிர்ந்த திருத் துழாயை யுடைத்தாய் -பரிமளம் ப்ரவஹிக்கிற மாலையை யுடையவனே
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ–ஏவம்விதனான உன்னை ஸம்ஸ்லேஷிக்கப் பெற்ற நான் விட ஷமனோ –

——————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவச் சேஷத்வ சித்தியை அருளிச் செய்கிறார் –

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ் நண்ணித்–மாலா காரமாய் -குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியையும் -\
கமலம் போலே தர்ச நீயமாய் -விசாலமாய் நீண்ட திருக் கண்களை யுடையவனை –அவனுடைய ஆஸ்ரித சம்ச்லேஷ காரிதமான குண பிரதையை கிட்டி –
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன-அழகிய திரு நகருக்கு நிர்வாஹகராய் -மாறன் -என்கிற குடிப் பேரை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்–பகவத் அபிப்ராயத்தை தப்பாத அந்தாதியாய் -அடைவு குலைக்க ஒண்ணாத –
ஆயிரத்தில் அத்விதீயமான இவை பத்தையும் இசையோடு கூட
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –பண்ணிலே பாட வல்லரான அவர்கள் சர்வாதிகனான சர்வேஸ்வரனோடு அவ்யவஹித சம்பந்த யுக்தராவார்கள் –
எண்- என்று ஞானமாய் -தத்வ ஞானத்தைத் தப்பாத ஆயிரம் -என்றுமாம் –
பான் -என்று ஸ்வரம் / இசை என்று கீதி பிரகாரம் /
இது முதல் அடியும் மூன்றாம் அடியும் அறு சீராய் அயல் அடியும் ஈற்று அடியும் நாற்சீரான ஆசிரியத் துறை –

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-6-

September 26, 2017

வைகுந்தா-பிரவேசம் –
ஆழ்வார் தம்மோடு கலந்த கலவியால் எம்பெருமானுக்கு வந்த ப்ரீதியைப் பேசுகிறார் –

——————————–

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்– ஆஸ்ரித ஸூலபனாய் -நிரவாதிக ஸுந்தர்யத்தை யுடையனாய் -என்னுள்ளே புகுந்து இருந்து -எனக்கு அபூர்வவத் பரம போக்ய பூதனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ஆஸ்ரிதருடைய அனுபவைக விநாஸ்யமான ஸமஸ்த பாபங்களையும் போக்கி -பிரதிகூலர்க்கு துக்கங்களையும் –
விளைவிக்கும் ஸ்வ பாவனாய் நிர்மலனாய் இருந்த உன்னைப் பரம ப்ராப்யமாகப் பற்றினேன் -என்கிறார் –

———————————————————————-

இப்படி தம்முள்ளே புகுந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைப் பேசுகிறார் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

ஜகத் ஸ்ருஷ்ட்யாத் யன்ய பரதையைப் போக்கிக் கொண்டு என்னுள்ளே புகுந்தான் -புகுந்ததற் பின் அளவிறந்த ஞானாதி சகல கல்யாண குண விசிஷ்டனாய்-
விஜ்வரனாய் -ப்ரமுதிதனாய்-ஹர்ஷ அதிசயத்தாலே புதுக் கணித்த திருக் கண்களை யுடையனாய் -என்னை யல்லது எங்கும் பக்க நோக்கு அறியான் -என்கிறார் –

——————————————————–

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-

நிரதிசய ஸுந்தர்ய லாவண்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் நிரதிசய ஸூகந்த திவ்ய மால்ய அலங்க்ருதனாய் –
சேஷ சேஷாசன வைநதேயாதி திவ்ய புருஷர்களாலே ஸம்ஸதூயமானனாய் இருந்தவனை நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நா மகிழ்ந்து ஆடும்படி
நம்முடைய நாவிலே அலருகிற சொற்களுக்குத் தன்னை விஷயமாகத் தருகையே ஸ்வ பாவமாய் இருப்பதே -என்ன வதாந்யனோ -என்கிறார் –

————————————————————

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

ஆஸ்ரிதர்க்கு ஆத்ம தானம் பண்ணும் ஸ்வ பாவனை -தத் விரோதி நிரசன ஸ்வ பவனே-என்னுடைய பரம போக்யமே –
உன்னை நினைத்தால் நீராய் யுருகும் ப்ரக்ருதியாக என்னைப் பண்ணினவனே -உன்னுடைய ஏவம்விதமான கல்யாண குணங்கள் ஆகிற
அம்ருத வெள்ளத்தைக் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து
உய்ந்து போந்திருந்து உன்னை எங்கனே விடும்படி -என்கிறார் –

————————————————————

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

த்வத் அனுபவ ஜெனிதமான ப்ரீதியாலே களித்து ஆடுகிற திருவனந்த ஆழ்வான் மேலே உன்னுடைய திவ்ய ரூப குணங்களை அனுபவித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற உன்னை அனுபவித்து உந்து போந்திருந்து என்னுடைய முடிவில்லாத மஹா துக்கங்களைப் போக்கி
உன் அந்தமில் அடிமை அடைந்தேன் -இனி விடுவேனோ -என்கிறார் –

———————————-

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

இப்படி உன்னை சர்வ கரணங்களாலும் அனுபவித்து என்னுடைய ஸமஸ்த பிரதிபந்தகங்களையும் போக்கினேன் –
ஆஸ்ரிதன் உன்னைக் கோலுவதற்கு முன்பு அவனுடைய இஷ்டத்தை முடித்துக் கொண்டு இருக்கும் ஸ்வ பாவனானவனே –
எனக்கு முடியாதது என் -இந்த ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ப்ரஸாதத்தாலே விளைந்தது -என்கிறார் –

——————————————————

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

சர்வேஸ்வரனாய் இருந்த எம்பெருமானுக்கு -என் பக்கல் அபி நிவேசம் என்னளவில் பர்யவசியாதே -என்னோடு சம்பந்தித்தார் பக்கலும் கூட வெள்ளம் கோத்தது –
ஆதலால் அவன் என்னை அகல நினைக்கிறிலன் -இனி முடியாதது ஓன்று உண்டோ -என்கிறார் –

——————————————————

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

உன்னோடு ஸம்ஸ்லேஷிக்கைக்கு விரோதியான சம்சாரத்தில் வர்த்திக்கிற நான் -நிர்ஹேதுகமாக உன் திருவடிகளையே ப்ராப்யமாகப் பெற்று -அதிலே உள்ளம் தேறி
முடிவில்லாத அழகிய இன்ப வெள்ளத்திலே மூழ்கினேன் -ஆஸ்ரிதருடைய அபேக்ஷித்ங்களை செய்யும் ஸ்வ பாவனாய் இருந்த நீ
இனி என்னைக் கைவிடாது ஒழிய வேணும் -என்று அபேக்ஷிக்கிறார் –

——————————————————-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

திருமலையில் புகுந்து நின்று அருளின படியையும் -உன்னுடைய திரு வவதாரங்களையும் -உன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களையும் –
உன்னுடைய அழகையும் -ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருந்து அருளும் படியையும் -மற்றும் உள்ள படியை யடங்க எனக்கு போக்யமாகக் காட்டி யருளி
உன்னை என்னுள்ளே ஒன்றாகக் குழைத்து அருளின நீ இனி எங்கே போவது -போவேன் என்றால் தான் போக முடியுமோ -என்கிறார் –

———————————————————–

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

சர்வ ஆத்மாக்களுக்கும் மாதா செய்யும் நன்மையும் -பிதா செய்யும் நன்மையும் -தான் தனக்குச் செய்யும் நன்மையும் –
சர்வ காலமும் எனக்குச் செய்து அருளும் ஸ்வ பாவனாய் –
நிரவதிக நித்ய சித்த கல்யாண குண விசிஷ்டனாய் சர்வ லோக ஈஸ்வரனாய் -நிரஸ்த சாமாப்யதிகனாய் -திருமலையிலே புகுந்து அருளி –
எனக்கும் கூட பரம ஸூலபனாய் பரம போக்யனாய் இருந்த உன்னை நான் அடைந்தேன் -இனி விடுவேனோ -என்று கொண்டு
தாம் எம்பெருமானோடு கலந்த கலவிக்குத் தம்மால் அவனாலும் ஹேத்வந்தரத்தாலும் ஒழிவு இல்லை -என்கிறார் –

————————————

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதியை உள்ளபடியே அனுபவித்த படியே சொன்ன இத்திருவாய் மொழியை
இசையோடும் பண்ணிலே பாட வல்லார்க்கு -கேசவன் தமர் -என்னும் இவ்வாகாரம் அல்லாத ஆகாராந்தரம் இல்லை -என்கிறார் –

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -2-5-

September 26, 2017

அந்தாமத்து அன்பு -பிரவேசம் –
அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –

———————————————————————

முதல் பாட்டில் -பூஷணாதி விசிஷ்டமான விக்ரஹ சோபையை அனுபவிக்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு–பரமபதத்தில் -விருப்பத்தை பண்ணி -ஹேயனான என்
நெஞ்சுக்குள்ளே பொருந்தின நிருபாதிக ஸ்வாமியானவனுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள–சேஷித்வ ஸூசகமான அழகிய மாலையை யுடைத்தான உஜ்ஜவலமான திரு அபிஷேகம் திவ்ய ஆயுதங்கள் –
திரு யஜ்ஜோபவீதம் -திரு வாரம் –இவரை ஸ்புரித்து தோன்றா நின்றன –
செந்தாமரைத் தடங்கண் –திருக் கண்கள் சிவந்த தாமரைத் தடாகமாய் இரா நின்றன
செங்கனிவாய் செங்கமலம்–சிவந்த பக்வ பலம் போன்ற ஆதாரம் சிவந்த தாமரையாய் இரா நின்றது
செந்தாமரை யடிக்கள் –திருவடிகள் சிவந்த தாமரையாய் இரா நின்றன –
செம்பொன் திருவுடம்பே –திரு உடம்பு செம் பொன்னாய் இரா நின்றது –
இப்பாட்டு -அந்தராதித்ய வித்யையில் சொன்ன ஹிரண்மய விக்ரஹ யோகத்தையும் –புண்டரீகாக்ஷத்வ அவயவ சோபையையும் —
கிரீட மகுடாத் யாபரண சோபையையும் -த்ருத சங்க சகரத்வத்தையும் சொல்லி -இப்படி ஆதித்ய மண்டல அந்தர்வர்த்தியானவன்-
சா யஸ்சாயம் புருஷே யஸ்ஸாஸா வாதித்யே ச ஏக –என்கிறபடியே -அழகிய ஆதித்ய மண்டலத்தில் பண்ணும் விருப்பத்தை என் நெஞ்சிலே பண்ணிப் புகுந்து –
அந்த வ்யக்த ஐக்கியம் இங்கே ஸ்புரிக்கும் படி அத்யுஜ்வலனாய் இரா நின்றான் -என்றும் சொல்லும் –

———————————————————-

அநந்தரம் -இவ்வவயவ சோபையை யுடையவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளான விபூதி பூதர்க்கும் பிராட்டியோபாதி
திரு மேனியில் இடம் கொடுத்த உஜ்ஜ்வல்யத்தை அருளிச் செய்கிறார் –

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே -எந்தை பெருமாற்கு –ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஒன்றும் சோராத படி -என்னுள் கலந்த என் குல நாதனுக்கு –
திருவுடம்பு வான்சுடர் -ஸ்லாக்கியமான வடிவு ஆதித்ய வர்ணமாய் இரா நின்றது –
செந்தாமரைக் கண் கை கமலம்-திருக் கண்ணும் திருக் கையும் சிவந்த தாமரை போலே செவ்வி பெற்றது –
திருவிடமே மார்வம் –திரு மார்பு ஸ்ரீ மஹா லஷ்மீ ஸ்தானமே ஆயிற்று –
அயனிடமே கொப்பூழ்–கொப்பூழ் ப்ரஹ்மாவுக்கு
ஒருவிடமும் அரனேயோ–நீக்கியுள்ள இடம் ருத்ரனேயாய் இரா நின்றது -இது என்ன ஆச்சர்யம் –
ஒருவுதல் -நீங்குதல் –
தன் திரு உள்ளத்திலே அவன் கலந்த பின்பு ரூப உஜ்ஜ்வல்யமும் அவயவ உஜ்ஜ்வல்யமும் உண்டானாவோபாதி விபூதி உஜ்ஜ்வல்யமும் உண்டாயிற்று -என்று கருத்து –

————————————————-

அநந்தரம் தன்னுள் இராத வஸ்துவுக்கு சத்தை இல்லையாமோபாதி என்னுள் தான் கலவாத போது
தனக்கு சத்தை இல்லையாக நினைத்து என்னுள்ளே கலந்து உஜ்ஜவலன் ஆனான் என்கிறார்

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

என்னுள் கலந்தவன் மின்னும் சுடர் மலைக்குக் –என்னுள்ளே கலந்தவனாய் பாத்தாலே விளங்கின சுடரையுடைய மலை போன்றவனுக்கு
செங்கனிவாய் செங்கமலம் கண் பாதம் கை கமலம்–முன்பு சொன்ன அவயவ சோபையும் யதா பூர்வம் அத்யுஜ்வலமாய் இரா நின்றது
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள–சித்திரமாய் பூரணமான சகல லோகங்களும் அவன் திரு வயிற்றிலேயாய் சத்தை பெறா நின்றன –
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –தனக்குள்ளே சம்பந்தியாது இருப்பது ஏதேனும் ஒரு பொருளும் இல்லை –
சர்வ வஸ்துவுக்கும் தத் வ்யாதிரேகத்தில் சத்தா ஹானி ஸ்வரூப பிரயுக்தை-
ஈஸ்வரனுக்கு இவருடைய வ்யதிரேகத்தில் சத்தை இல்லை என்று நினைக்கிற இடம் சீலக்ருதம் என்று கருத்து –

———————————————–

அநந்தரம் நிரதிசய போக்ய பூதனானவன் என்னுள்ளே புகுந்த பின்பு ஸ்திர ஸ்வ பாவன் ஆனான் -என்கிறார் –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்–எல்லா க்ஷணம் -எல்லா நாள் -எல்லா மாசம் -எல்லா ஆண்டு -எல்லா வகைப்பட்ட ஊழி தோறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –அவ்வோ காலங்களிலே-என்னுள்ளே கலந்து அத்ருப்திகரமான அம்ருதமானவன் –
பாத்தாலே வந்த தன்னுடைய ப்ரீதி அதிசயத்தாலே
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்-எல்லா பொருளும் தானான சர்வாத்ம பாவமும் நிறம் பெற்று -மரகத மலை போல் உயர்த்தியும் நிறமும் உரமும் உடையனானான் –
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்–அப்போது அலர்ந்த தாமரை போலே கண்ணும் அப்போதைக் கமலம் போலே பாதமும் கையும் புதுமை பெற்றன –

——————————————————

அநந்தரம் தம்முடைய திரு உள்ளத்திலே கலந்தவனுடைய அவயவ சோபைக்கு உபமை இல்லை -என்கிறார் –

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த–நிரதிசய போக்ய பூதனாய் -ஓன்று அல்லாத என் நெஞ்சுக்குள்ளே கலந்து -அத்தாலே
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு–கார் காலத்திலே பூரணமான காளமேகம் போலே இருக்கிற என் நாதனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு –
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்–சிவந்த பவளம் அதரத்தை ஒவ்வாது –கமலங்கள் கண் பாதம் கைகளை ஒவ்வா -அதுக்கு மேலே
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –பெரிய ஆரமும் உயர்ந்த முடியும் நானும் முதல் மற்றும் உண்டான ஆபரணங்களும் அசங்க்யாதங்கள் –

——————————————

அநந்தரம் பூஷணாத் அபரிச்சேதத்தை அனுபவிக்கிறார் –

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பாம்பணை மேலாற்கேயோ–திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டால் போலே என்னோடு கலந்தவனுக்கு –
பண்பு எண்ணில்-ஸ்வ பாவ நிரூபணம் பண்ணில்
ஆபரணம் பல பல -ஆபரணம் -க்ரீடாதி ரூப பேதத்தாலும் ஓர் ஒன்றில் ஸம்ஸ்தான பாஹுள்யத்தாலும் -பல பலவாய் இருக்கும் –
பேரும் பல பல -நாமமும் வ்யக்தி பேதத்தாலும் -நிர்வசன முகத்தாலும் ஓர் ஓன்று அநேக நாமாத்மகமாகையாலே பல பலவாய் இருக்கும் –
சோதி வடிவு பல பல -ஜ்யோதி ரூபமான அப்ராக்ருத விக்ரஹமும் பாரா வ்யூஹத்தி பேதத்தாலும் அவாந்தர பேதத்தாலும் பல பலவாய் இருக்கும் –
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்- பலபலவே –இந்த்ரியத்வாரா தத் தத் விஷய சம்யோகத்தால் வருகிற ஸூகமும் –
வ்யக்தி பேதத்தாலும் அவாந்தர பேதத்தாலும் பல பலவாய் இருக்கும் –
ஞானமும் பல பல –தத்த்வாரா பதார்த்தங்களில் பிறக்கிற ஞானமும் அப்படியே பல பலவாய் இருக்கும் –
இந்த்ரியத்வாரா வருகிற ஸூக ஞானங்களில் ஈஸ்வரனுக்கு யதாக்ரமத்தாலும் வ்யுத்க்ரமத்தாலும் வரும் அநியமத்தாலே பன்மை சொல்லவுமாம் –

—————————————————–

அநந்தரம் -தம்மோட்டை சம்ச்லேஷத்தாலே அவனுடைய திவ்ய சேஷ்டிதங்கள் தமக்கு பிரகாசித்து நிறம் பெற்ற படியை அனுபவிக்கிறார் –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்–பாற் கடலிலே பாம்பணையில் மேலே கண் வளர்ந்து அருளுகையை பொருந்தினதும் –
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்–மூங்கில் போன்ற தோளையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக ஏறு ஏழையும் ஏக உத்யோகத்திலே கொன்றதுவும் –
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்–தேனையும் -பணையையும் யுடைய -அத்தாலே சோலையாகத் தழைத்த மாறாமரம் ஏழு எய்ததுவும் –
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –அழகிய தொடையை யுடைத்தாய் குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமாய்
அத்யுஜ்ஜ்வலமான முடியை யுடைத்தாய் தர்ச நீயமாய் விரோதி நிரசன உத்யோக செல்லமாய் செருக்கை யுடைத்தான ருஷபம் போன்ற வஸ்து –
ஏறு -என்ற சொற்கு ஈடாக -அமர்ந்ததுவும் செற்றதுவும் எய்ததுவும் என்று அஃறிணை –

——————————————————

அநந்தரம் சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையை அருளிச் செய்கிறார் –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

பொன் முடியம் போரேற்றை எம்மானை –உஜ்ஜவலமான அபிஷேகத்தை யுடைய பெரும் செருக்கனாய் -அந்த ஸ்வாதந்தர்யச் செருக்கைக் காட்டி
என்னை அடிமை கொண்ட நாதனாய்-
நால் தடம் தோள்–நாலு வகைப்பட்ட பெரிய திருத் தோளை யுடையனாய்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை–தன் பெருமைக்கு குடிவு இல்லாதவனாய் இந்த மேன்மைக்கும் போக்யத்தைக்கும் ஸூசகமான
குளிர்ந்த திருத் துழாய் மாலையை யுடையனாய் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை–தன் உதகர்ஷத்துக்கு எல்லை காணாதவோபாதி என் நிகர்ஷத்தின் முடிவு காணாதே என் நெஞ்சுக்குள்ளே கலந்தவனை –
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –நான் -ஸ்வ சம்வேத்யமாக அறியுமது ஒழிய பாசுரம் இட்டுச் சொல்லும் பிரகாரம் காண்கிறிலேன் –
நீங்கள் அனுபவித்த விஷயம் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுமோபாதி இங்குச் சொல்லுவது ஏது-உண்டாகில் சொல்லுங்கோள்–என்று லௌகீகரைக் குறித்து உரைக்கிறார் –
லோக வ்யாவ்ருத்தனுடைய சம்ச்லேஷ சாரஸ்யம் வாசா மகோசரம் என்று கருத்து –
விஸ்லேஷ தசையில் என் முடிவு காணாதே -என்றுமாம் –

—————————————————————

அநந்தரம் -நிரதிசய போக்ய பூதனானவனைச் சொல்ல வல்லி கோளாகில்-சொல்லுங்கோள்-என்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

என் அம்மானை என்னாவி யாவி தனை–எனக்கு ஸ்வாமியாய் -என் ஆத்மாவுக்கு ஆத்மாவாய் –
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-எல்லையில்லாத ஸுகுமார்யாதி குன்ங்களை யுடைத்தான நீல ரத்ன ஜ்யோதிஸ்ஸூ போலே
இருக்கிற வடிவை என்னை அனுபவிப்பித்தவனை –
சொல்லீர் -எல்லாரும் சேர்ந்து சொல்லலாமாகில் சொல்லுங்கோல் -சொல்ல ஒண்ணாமைக்கு அடி என் என்னில்
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்–லௌகிக அம்ருதத்தில் வி லக்ஷணமான நித்ய போக்ய அம்ருதமுமாய் -பரம யோகிகளுக்கும் பெறுதற்கு அரிதான
மோக்ஷ ஸ்தான நிர்வாஹகனுமாய்-
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் -லௌகிக பெண் அல்லன் –தாமரைப் பூவில் பரிமளம் போலே நிஷ்க்ருஷ்ட போக்ய ரூபனாய்
பும்ஸத்வத்தாலே ஸ்த்ரீகளில் வ்யாவ்ருத்தனான வோபாதி-புருஷோத்தமதவத்தாலே ஸமஸ்த புருஷ வ்யாவருத்தனாய் இருக்கும் –
ஆதலால் சொல்ல அரிது -என்று கருத்து –

——————————————————

அநந்தரம் -அவன் ஸ்வ பாவத்தைச் சொல்லுகை மிகவும் அரிது -என்கிறார் –

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்–ஆணும் அன்றியே -பெண்ணும் அன்றியே பிரயோஜனவத்தல்லாத அழியும் அன்றியே –
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்–அவற்றைக் காணும் ப்ரமாணத்தால் காணவும் ஒண்ணாதே
பிரதிகூலர்க்கு உளன் அன்றியே அனுகூலர்க்கு இலன் அன்றியே –
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்–ஆஸ்ரிதராய் ஆதரித்த காலத்தில் அவர்கள் ஆதரித்த வடிவை யுடையனாய் –
ஆதாரம் இல்லாத அளவில் அப்படி அல்லனாய் இருக்கும் –
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –என் ஸ்வாமியை இப்பிரகாரம் அவன் காட்டக் கண்ட நான் கூறும் இடத்து மிகவும் மிறுக்குடைத்து-
கோணை-மிறுக்கு/ சர்வ விசஜாதீயனாகையாலே-ஏவம் விதன்-என்று சொல்ல அரிது என்று கருத்து –

—————————————————-

அநந்தரம் – இத்திருவாய் மொழிக்கு பலமாக பரமபத பிராப்தியை அருளிச் செய்கிறார் –

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை-ஒரு குணத்தைச் சொல்லிலும் சொல்லி முடிய ஒண்ணாத குடக் கூத்து முதலான சீலாதி குணங்களை யுடைய ஸ்வாமியை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்-உள்ளபடியே சொல்லுவதாக உத்யோகித்து அவனாலே லப்த ஞான ப்ரேமரான ஆழ்வார்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்-அருளிச் செய்த அந்தாதி யாகையாலே அடைவு குலைக்க ஒண்ணாத அத்விதீயமான ஆயிரத்தில் இப்பத்தையும் –
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –சொல்ல வல்லார் உண்டாகில் பரமபதத்தை கூடுவர் –
இது கலிவிருத்தம் –

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –2-5-

September 26, 2017

அந்தாமத்து அன்பு -பிரவேசம் –
இப்படி தோற்றி அருளின எம்பெருமான் தம்மோடு கலந்த கலவியையும் -அக்கலவியால் தமக்குப் பிறந்த ஸம்ருத்தியையும் சொல்லுகிறார் –

————————————————-

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

நித்ய நிர்த்தோஷ நிரதிசய கல்யாண திவ்ய தாமத்தில் பண்ணும் ப்ரேமத்தை என் பக்கலிலே பண்ணிக் கொண்டு –
சர்வ திவ்ய பூஷண ஆயுத பூஷிதமாய் -நிரதிசய ஸுந்தர்யாதி கல்யாண குண விசிஷ்டமாய் -ஸூத்த ஜாம்பூநத ப்ரபமான –
திவ்ய ரூபத்தோடே வந்து என்னோடே கலந்து அருளினான் -என்கிறார் –

——————————————————

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

என்னோடே கலந்து அருளுகிறான் -சர்வேஸ்வரியான பெரிய பிராட்டியாரோடும் ஆஸ்ரிதரான ப்ரஹ்ம ருத்ராதிகளோடும் கலந்து அருளினால் போலே அன்றியே –
தன்னுடைய நிரதிசய தேஜோ மயமான திரு உடம்பில் ஒரு தேசம் ஒழியாமே ஸமஸ்த பிரதேசத்தாலும் கலந்து அருளினான் -ஒருவனுடைய அபி நிவேசமே இது -என்கிறார் –

———————————————————-

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

நிரதிசய கல்யாண குண திவ்ய ரூபத்தை யுடையனாய் -ஸ்வ சங்கல்ப அதீன ஸமஸ்த வஸ்து ஸ்வரூப ஸ்திதி
ப்ரவ்ருத்திகனாய் இருந்தவன் என்னுள்ளே கலந்து அருளினான் -என்கிறார் –

—————————————

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

சர்வ அந்தராத்மா பூதனாய் அளவிறந்த அழகை யுடையனாய் இருந்த இவன் அலகால் சர்வ காலமும் பிரதி க்ஷணம் எனக்கு
அபூர்வத் போக்யமாய் இரா நின்றான் -ஒருவனுடைய அழகு இருக்கும் படியே ஈது -என்கிறார் –

—————————————————–

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

நிரூபமமான ஸுந்தர்யத்தை யுடையனாய் -அபரிமித திவ்ய பூஷண உபபேதனாய் -சர்வ காலமும் அனுபவித்தாலும்
ஆராத போக்யமாய் இருந்தவன் -அத்யந்தம் அவஸ்து பூதனாய் இருந்த என்னுள்ளே கலந்து அருளினான் -என்கிறார் –

———————————————

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

அசங்க்யேய திவ்ய பூஷணங்களையும் -அசங்க்யேய கல்யாண குணங்களையும் -அசங்க்யேய தேஜோ மாயா கல்யாண திவ்ய ரூபங்களையும்-
அசங்க்யேய திவ்ய போகங்களையும் -அசங்க்யேய திவ்ய ஞானங்களையும் உடையனாய் -நாக பாருங்க சாயியாய் இப்படி பரிபூர்ணனாய்
இருந்து வைத்து என்னோடே கலந்து அருளினான் -என்கிறார் –

——————————————

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

தன்னுடைய சர்வ சேஷ்டிதங்களையும் எனக்கே போக்யமாகச் செய்து அருளினான் -என்கிறார் –

——————————————–

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

வாங்மனஸ அபரிச்சேத்ய நிரதிசய கல்யாண ஸ்வரூப குண விபூதியை யுடையனாய் இருந்து வைத்து என்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ குண வ்ருத்தாதி களினுடைய
நிஹீநதையைப் பாராதே என்னுள்ளே கலந்த இஸ் ஸுசீல்யத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் -ஆனபின்பு எத்தைச் சொல்லுவது சொல்லீர் -என்கிறார் –

————————————————-

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

சர்வ பதார்த்த விஸஜாதீயனாய் இருந்து வைத்து -தன் அழகாலே எனக்குத் தாரகனாய் -என்னுள்ளே புகுந்து கலந்து அருளின எம்பெருமானுடைய
இந்த ஸுசீல்யாதி குணங்களை நீங்களும் சொல்லி கோள்-என்று ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————————————————–

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஸ்த்ரீ புந்ந பும்ஸகாதி சர்வ பதார்த்த விஸஜாதீயனாதலால்-தத் கோசார ப்ரமாணங்களுக்கு அகோசரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித ஸூலபனாய் –
ஆஸ்ரிதருடைய விவஷ அனுகுணமான திவ்ய ரூப சேஷ்டிதங்களை யுடையனாய் அநாஸ்ரிதர்க்கு துர் லபனாய் இருந்த எம்பெருமான்
என்னோடு கலந்த இக்குணம் சொல்ல நிலம் அன்று ஆகிலும் சொல்லாது ஒழிய முடிகிறது இல்லை -என்கிறார் –

—————————————————

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

காலதத்வம் எல்லாம் சொன்னாலும் ஆராத குண சேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழியைச் சொல்ல வல்லார் திரு நாட்டிலே போய் எம்பெருமானை அனுபவிக்கப் பெறுவார் -என்கிறார் –

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-