பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-1-

அவதாரிகை–

அப்ராக்ருத ஸுவ அசாதாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மகிஷிகள் பரிஜனம் ஸ்தான விசிஷ்டன் –
நிகில ஜகத் உதயம் விபவம் லயம் லீலனாய் -பரம் புருஷனை -உள்ளபடியே ஆழ்வார் தாம் தம்முடைய திரு உள்ளத்தாலே அனுபவித்து –
அவ்வனுபவ ஜனிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்தபடியே பேசுகிறார்-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

அசேஷ தோஷ ப்ரத்ய நீகமாய்–தே யே சதம் – இத்யனுக்ரமத்தினாலே நிரதிசயத ஸாசிரஸ்கமாக அப்யஸ்யமானமாய் இருந்த ஆனந்தாதி அஸங்யேய
கல்யாண குண மஹோததியாய் -இந்த ஆனந்தாதி கல்யாண குணங்களை உடையனான தான் மேலே பொன்னுமாய் நாறினாப் போலே
நிர்ஹேதுகமாக எனக்குத் தன் திறத்தில் அஞ்ஞான கந்தம் இல்லாததொருபடி தன்னை உள்ளபடி அறிவித்துத் தன் திருவடிகளில் நிரவாதிக பக்தியை உண்டாக்கின
இம்மஹா குணத்தை உடையனாய் -இந்தக் கல்யாண குணங்களை யுடையனான தன்னை -ஸ்வபாவத்தை ஏவ நிரஸ்த ஸமஸ்த தோஷராய் அஸ்கலித ஞானராய்
இருந்துள்ள சேஷ சேஷாசன வைநதேய ப்ரப்ருத்யஸங்யேய திவ்ய புருஷர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிற பரம உதார குணத்தை உடையனாய் இருந்த
எம்பெருமானுடைய ஆச்ரித ஜன ஸமஸ்த துக்காப நோதந ஸ்வபாவமான திருவடி மலர்களில் சர்வதேச சர்வகால சர்வ அவஸ்தோசித
சர்வ சேஷ வ்ருத்தியைப் பண்ணி உஜ்ஜீவி என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
——————————
இந்த குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்ய நீகதயா கல்யாணைகதாநதயா உள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது —

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

பாஹ்ய இந்த்ரிய ஜன்ய ஞான விஷயமான அசேதனத்தில் காட்டில் யாதொருபடி விலக்ஷணமாய் இருக்கும் –
அப்படியே யோக அப்யாஸ பரி ஸூத்த அந்தகரண ஜன்ய ஞாநைக விஷயமான பரி ஸூத்தாத்ம ஸ்வரூபத்தில் காட்டிலும் விஸஜாதீயனாய்
கால த்ரயத்திலும் ஒரு படியாலும் ஒப்பில்லாதவனாய் சமாப்யதிக ரஹிதனாய் பரிபூர்ண ஞான ஆனந்த ஸ்வரூபனாய் எனக்கு தாரகனுமாய் இருந்த
எம்பெருமானுடைய துயரறு சுடரடியைத் தொழுது எழு என் மனனே என்கிறார் –
—————————————————————-
இப்படி ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகத் ஐஸ்வர்யம் சொல்லுகிறது –
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

ப்ருதிவ்யந்தரிஷாதி சர்வ லோக வார்த்தையான சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துக்களும் சேஷியாய் சர்வ ஜகத் ஆத்மபூதனாய்
தத்கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்ட னாய்-சர்வ சரீரபூத ஜெகன் நியமன ஐஸ்வர்யத்தை யுடையவனாய்
ஸ்வ இதர ஸமஸ்த விசஜாதியனுமாய் இருந்த எம்பெருமானை நாம் பெற்றோம் -அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே என்கிறார் —
————————————-
இனி இத்திருவாய்மொழி குறையும் இப்பாட்டை விஸ்தரிக்கிறது –

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

விவித நிர்தேசங்களாலே நிரதிசயமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் ஆதீனம் என்று சொல்லுகிறது –
———————————–
கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

ஸ்வர்க்காதி சாதன பூத ஜ்யோஷிஷ்டோமாதி கர்ம நிஷ்டரான அவ்வவ புருஷர்கள் தந்முதாடைய ஞான அநு குணமாக அவ்வவ இந்த்ராதிகளைத்
தந்முதாடைய கர்மங்களுக்கு ஆராத்யராகவும் ஸ்வ அபி லஷித பல பிரதராகவும் அநு சந்தித்துக் கொண்டு -அந்தக் கர்மங்களாலே ஆஸ்ரயிப்பார்கள் –
ஆஸ்ரயிக்கப் பட்ட அவ்வவ இந்த்ராதி தேவதைகளும் தத் சமாராதாக அபி லஷித பல பிரதானத்திலே குறை யுடையரும் அல்லர் -எத்தாலே என்னில்
சாஸ்த்ரா யுக்த மார்க்கத்தாலே -அந்தவந்தப் புருஷர்கள் இந்த்ராதிகளை ஆஸ்ரயித்து ஸ்வ அபி லஷிதா பலங்களைப் பெறும்படி பரம புருஷன் தானே
அந்த இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தராத்மதயா நின்று சகல கர்ம பல ப்ரதனாய் சர்வ கர்ம சமாராத்யானாய் இருக்கையாலே —

இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில் -இஷ்டாபூர்த்தம் பஹுதா ஜாதம் ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவ நஸ்ய நாபி -என்றும்
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவை -என்றும்
யோ யோ யாம் யாம் தநும் பக்தஸ் ஸ்ரத்தயார்ச் சிதும் இச்சதி -என்றும்
அஹம் ஹி சர்வ யஞ்ஞா நாம் போதா ச பிரபுரேவச -என்றும்
போக்தாரம் யஞ்ஞா தபஸாம் -என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான்-என்றும் தொடக்கமாய் யுள்ள சுருதி ஸ்ம்ருதி யாதிகள் –

ஆக இப்பாட்டாலே சொல்லிற்று யாயிற்று ஏது என்னில் -எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா சர்வ கர்ம சமாராதனாய்
சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —
—————————-
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

சேதன அசேதனாத்மக ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் பரம புருஷ சங்கல்ப அதீனம் என்று சொல்லுகிறது –
—————————–
கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்னும் இடத்தை சாமா நாதி கரண்யத்தாலே சொல்லிற்று –
இனி இந்த சாமா நாதி கரண்யமானது ஜெகதீஸ்வரயோக சரீராத்ம நிபந்தம் என்று சொல்லுகிறது –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இந்த சரீரத்தை இவ்வாத்மா நியந்தருதயா வியாபித்து இருந்தால் போலே எம்பெருமானும் அபாதித பிராமண ஸித்தமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகங்களையும்
தத் ஆராப்தங்களான ஸமஸ்த வஸ்துக்களையும் நியந்தருதயா வியாபித்து இருக்கும் -இப்படி காரிய காரண உபய அவஸ்திதா சித்தவஸ்துவில் காட்டிலும்
பத்த முக்த நித்ய சித்த த்ரிவித சேதனரில் காட்டிலும் விலக்ஷண ஞான ஆனந்த அமல ஸ்வரூபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந அபரிமித குண விபூதிகனாய்
அகில புவனா நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் சர்வ ஜகத் ஆத்மாவாய் -சர்வ ஜகச் சரீரனாய் ஸ்வதா ஏவ அகர்ம வச்யனாகையாலே
ஸ்வ சரீர பூத சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துகத ஸூக துக்க விகாராதி சர்வ தோஷைரா சம்ப்ருஷ்டனாய் இருந்த பரம புருஷன் –

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம/ ஆனந்தோ ப்ரஹ்ம / எஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் / பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச /
மநோமய பிராண சரீரோபாரூபஸ் சத்யா சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாமஸ் சர்வ கந்தஸ் சர்வ ரஸஸ் ஸர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர/
தஸ்ய நாம மஹத் யஸ /அத பரா ஸ்ரோத்ரம் தத் பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூஷ்மம் தத் ஸ்வயம் யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா /
அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்சோ அபிபாஸஸ் சத்யகாமஸ் சத்யா சங்கல்ப /
ய ஏஷ அந்த்ராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ/
சர்வே நிமேஷா ஐஜ்ஞிரே வித்யுத புருஷாததி/ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் /ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே /
நீல தோயத மத்யஸ்தா வித்யுலேகே வபாஸ்வாரா /மஹா ரஜநம் வாச /அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்னீ /ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம்/
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா /யத்ரர்ஷப பிரதமஜா யே புராணா/தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் /
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய/ யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமன் /பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச /
ஷரம் பிரதானம் அம்ருதாசாரம் ஹாரா ஷராத்மாநாவீசதே தேவ ஏக /ச காரணம் கரணாதி பாதிப
/த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பர்ஷஸ்வ ஜாதே-தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந்யோ அபிசாக சீதி/
சமாநே வ்ருஷே புருஷோ நிமக்நோ அநீசயோ சோசதி முஹ்யமாந ஜுஷ்டம் யதா பஸ்யத் யன்யமீசமஸ்ய மஹிமாநமிதி வீத சோக /
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா/போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா /
ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க்ரம்ய /ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தீ பவதி /ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி /
சோஸ்நுதே சர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதேதி /
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் –ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்த ரோயம் ஆத்மா ந வேத
யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத/
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண /அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஐநாநாம் சர்வாத்மா /ச தேவ சோம்யேதமக்ர ஆஸீத் /
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே /ப்ரஹ்ம வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / சர்வானி ஹவா இமாநி பூதாந் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே /
ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாநோ நேமே த்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி /
ந தஸ்யேசே கஸ்ஸந /பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் / யச்ச கிஞ்சிஜ் ஜக தயஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித/
ச ப்ரஹ்மா ச சிவா சேந்த்ர சோஷர பரம ஸ்வராட் –இத்யாதியாய்
அவிகாரய ஸூத்தாய /ஸூத்தே மஹா விபூதியாக்யே /ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் /ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் /
சமஸ்தா சக்த யஸ் சைநா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர் மஹத் /
பூஷணாஸ்த்ரா ஸ்வரூபஸ்தம் /ந பூத சங்க சமஸ்தா நோ தேஹோஸ்ய பரமாத்மன/தமஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீவத்ச வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய ஸாஸ்வதோ த்ருவ/
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ /தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய/
திவ்யம் ஸ்தானம் அஐரஞ்சாப்ரமேயம் துர் விஜ்ஜேயஜ் சாகமைர்கம்ய மாத்யம் /
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுரா சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ/
கலா முஹுர்த்தாதி மயஸ்ச கால /காலம் ச பசதே/ பூ பிராணிந சர்வ ஏவ குஹாச யஸ்ய/ சர்வம் ஸமாப்நோஷி ததோ அசி சர்வ /தாநி சர்வானி தத்வபு /
தத் சர்வம் வை ஹரேஸ்தநு /ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூப யதோ அவ்யய / ஜகத் சர்வம் சரீரம் தே /ஜகாத் வியாபார வர்ஜம் பிரகரணாத சந்நிஹிதத் வாச்ச/
போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச /ஜகத் வியாபார வர்ஜம் சமாநோ ஜ்யோதிஷா/ இதம் ஞானம் உபாச்ரித்ய மாமா சாதரம்யா மாகதா சரக்கேபி நோப ஜா யந்தே பிரளயே ந வ்யதந்தி ச /விஷ்ணோஸ் ஸகாசா நுத் பூதம் —
இத்யாதி ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –
ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின —
—————–
இப்படி ஸ்ருதி ப்ரசித்தனாகிற சர்வேஸ்வரன் ஆகிறான் ப்ரஹ்மாவாக அடுக்கும் ஜகத் ஸ்ருஷ்ட்டி ஷமன் ஆகையாலே என்றாதல் –
ருத்ரனாக அடுக்கும் சம்ஹார ஷமன் ஆகையாலே என்றாதல் சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிராகரிக்கிறது –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

எங்கனே எண்ணில் -தஸ்மிந் நண்டே பவத் ப்ரஹ்மா சர்வலோக பிதா மஹ/
கல்பாத வாத்ம நஸ் துல்யம் ஸூதம் ப்ரத்யாய தஸ்தத ப்ராது ராஸீத் ப்ரபோரங்கே குமாரோ நீல லோஹித /
யஸ்ய ப்ரஸாதா தஹமச்யு தஸ்ய பூத பிரஜா ஸ்ருஷ்ட்டி கரோ அந்தகாரீ க்ரோதாச்ச ருத்ர ஸ்திதி ஹேது போதோ யஸ்மாச்ச மத்யே புருஷ பரஸ்மாத்/
ஏதவ் த்வவ் விபூதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ராதஐவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் /
யம் ந தேவா ந முநயோ ந சாஹம் ந ச சங்கர ஜாநந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் /
அஹம் பாவோ பவந் தஸ்ச சர்வம் நாராயணாத்மகம் /தவாந்த ராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்ஜி ஞிதா –இத்யாதி வாக்கியங்கள்
அண்டத்துக்கு உள்ளே ப்ரஹ்மா பிறந்தான் என்றும் அந்த ப்ரஹ்மாவின் பாக்களில் ருத்ரன் பிறந்தான் என்றும் சொல்லுகையாலே
அண்டாந்தரகதரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அண்டாத் பஹிர் பூதமான பிரகிருதி மஹத் அஹங்காராதி பதார்த்தங்களை அறிய மாட்டாமையாலும்
அவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களைப் பண்ண மாட்டாமையாலும் அவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களை எம்பெருமான் பண்ணுகையாலும்
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் என்றும் விஷ்ணு ராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-என்றும் இப்படி பிரமாணங்களாலே
சதுர்முக ருத்ர அந்தர்பூதானாய்க் கொண்டு அமர ஜன ஞான பிரதானமும் திரிபுர தஹனமும் பண்ணினாப் போலே
அண்டாந்தர் கதமான பதார்த்தங்களினுடைய ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களையும் முன்பு சொன்ன ந்யாயத்தாலே சதுர்முக ருத்ர அந்தர் பூதனாய்
அத ஏவ தத் வாசக சப்த வாச்யனாய்க் கொண்டு அவர்களுக்கும் தெரியாதபடி நின்ற எம்பெருமான் தானே செய்து அருளுகையாலும்
எம்பெருமானே ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஈஸ்வரன் -என்கிறார் –
——————————–
இப்படி வேதாவலம்பி குத்ருஷ்டிகளை நிராகரித்து பிரமாணமும் இல்லை ப்ரமேயமும் இல்லை சர்வமும் ஸூந்யம் –
ஆகையாலே வேதமும் வேத வேத்யனான ஈஸ்வரனும் அவனுடைய ஐஸ்வர்யமான ஜகாத்தும் இல்லை என்கிற ஸூந்யவாதியை நிராகரிக்கிறது –

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

ஸூந்யவாதியான உன்னைக் கேட்ப்போம்-ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ ஈஸ்வரன் உளன் என்றோ இலன் என்றோ ப்ரதிஞ்ஜை பண்ணுவது –
இவை இரண்டு பிரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை சம்பவியாது -எத்தாலே என்னில்-லோகத்தில் பாவ அபாவ சப்தங்களும் பாவ அபாவ ப்ரதீதிகளும்
வித்யமாந வஸ்துவினுடைய அவஸ்தா விசேஷ கோசாரமாகக் காண்கையாலே-ஆதலால்
ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
இப்படி ஈஸ்வர வ்யதிரிக்த பதார்த்தங்களையும் உளவென்னில் இவையும் அஸ்தித்வ தர்ம விசிஷ்டங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்
தத் வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லை என்னிலும் அவை நாஸ்தித்வ தர்ம விசிஷ்டங்கள் என்று சொல்லிற்றாய் வரும்
அந்த அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப பதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாய் இருக்கும் -கீழ்ச் சொன்ன பிரமாணங்களாலே –
இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் ஆகிற குணங்களை யுடையவன் என்று சொல்லுகையாலே அஸ்தி என்னிலும் உளன் -நாஸ்தி என்னிலும் உளன்
உளனாம் இடத்து சர்வாந்தராத்மாவாய்க் கொண்டு உளன் என்கிறார் -இப்படி ஸூந் யவாதியை நிரசித்தது –
—————————————
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

சமுத்திர ஜல பரமாணுக்களிலும் ப்ருத்வ்யந்தரிஷாதி லோகாந்தர வர்த்திகளாய் அதி ஸூஷ்மமாய் இருந்த அசித் வஸ்துக்களிலும் வியாபித்து
அவற்றுன் உள்ளே பிரகாசிக்கிற சித் வஸ்துக்களிலும் ஸ்தூலமான அண்டத்தில் வியாபித்தால் போலே அநாயாசத்தாலே அசங்குசிதனாய்
அந்யைரத்ருஷ்டனாய்க் கொண்டு ஜகத் சம்ஹர்த்தாவுமாய்
ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது ஏழு ஏன் மனனே -என்கிறார் –
—————————-
கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

லீலா உபகரண போக உபகரண உபாயவித விபூதி விசிஷ்டனான எம்பெருமானை ப்ரதிபாதிக்கிறது
இத்திருவாய் மொழி என்கிற இப்பொருளை -ஒவ்சித் யத்தாலே அவன் திருவடிகளை பிரதிபாதிக்கிறது -என்கிறார் –
இத்திருவாய் மொழியின் சீர்கள் அழகையும் சந்தர்ப்பத்தின் அழகையும் பொருளின் சீர்மையையும் இசையின் அழகையும் இச்சேர்த்திகளினுடைய நிரதிசய
ப்ரேம கர்ப்பத்தவத்தையும் -இவை பொய்யில் பாடலாய் இருக்கிறபடியையும் பார்த்து இப்படியாலே தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி நிரதிசய கல்யாணமாய் இருப்பன
எம்பெருமானுக்கு இப்பர்யந்தமாக வேணும் என்று தம்முடைய அபி நிவேசத்தாலே ஆயிரம் என்று அருளிச் செய்கிறார் –
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: