ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான்-நேராக –ஸ்லோகம் 2-/ ஷோடச ஆயுதமாகவே –ஸ்லோகம் -18-/மற்ற திவ்ய ஆயுதங்கள் மீதி ஸ்லோகங்களில்
அருளும் போதும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வார் கடாக்ஷமும் ரக்ஷகமும் அனைத்திலும் உண்டே-
-16-திவ்ய ஆயுதங்கள் –1 -சக்ரம் /-2- பரசு-கோடாலி /-3-குந்தம் -ஈட்டி /-4-தண்டம் /-5-அங்குசம் /-6-சத முக அக்னி /-7-நந்தகம் -வாள்/-8-சக்தி வேல் /
-9-சங்கு /-10-சார்ங்கம் /-11-பாசம் -கயிறு / -12-கலப்பை /-13-வஜ்ராயுதம் /-14-கதை -15-/முஸலம்/ -16-த்ரி சூலம்
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியில் சேவை உண்டே இந்த -16-திவ்ய ஆயுதங்களும்
முதல் எட்டும் வலது திருக்கரத்தில் -அடுத்த எட்டும் இடது திருக் கரத்திலும் –
இந்த -16-திவ்யாயுதங்களும் ஸ்ரீ பரமார்த்த பங்கம் -ஸ்லோகத்திலும் அருளிச் செய்வார் –
திருப் புட் குழி திவ்ய தேச அடியார்கள் விஜ ஜ்வரத்தால் பீடிக்கப் பட -இந்த ஸ்தோத்ரம் அருளி அதை போக்கி ரஷித்து அருள சாதித்தார் என்பர் –

-19-ஸ்லோகங்கள் –ஹேதி ராஜர் -ஸ்ரீ ஸூ தர்சன-பிரதானம் -சோபனம் தர்சனம் -பார்க்கவே அழகு -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி –
ரதாங்கம் -ஸர்வ பிரகரண– க்ருதங்களை செய்வதாலும் ஸூ மார்க்கம் காட்டுவதாலும் –
பரபஷ நிரசனார்த்தம் தர்க்க ஸிம்ஹம் / பொழுது போக்கு அருளிச் செயல்களில் –
திருவஹீந்திர புரத்தில்-என்றும் திரு புட் குழியிலும் -அருளிச் செய்ததாக வும் சொல்வர் -ஜுரம் தீண்ட அத்தை போக்கி கைங்கர்ய ஸ்ரீ வளர்க்க -என்பர்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் /
பரமத பங்கம் -ஸ்ரீ ஸூ தர்சன சதகம் ஸ்ரீ கூர நாராயண ஜீயர்-80 -ஒரே பாசுரத்தில் -16-திவ்யாயுதம் பற்றி உண்டு
கோலார்ந்த நெடும் சார்ங்கம் –கருடனும் சேர்ந்து ரஷிக்க-ஸ்ரீ குலசேகரர் -உறகல் -உறகல்-பள்ளியறைக் குறிக்கொள்மின் -பெரியாழ்வார்

எண் தல அம்புயத்துள் இலங்கும் அறு கோண மிசை
வண் பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம்
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே–1–

எழில் ஆழி இறையவனே—உஜ்ஜவலமாக நிற்கும் ஸ்ரீ ஸூ தர்சன -ஸ்ரீ ஹேதி ராஜன்
எண் தல அம்புயத்துள் இலங்கும்–எட்டு இதழ்களை உடைய தாமரை புஷபத்திலே பிரகாசிக்கும்
அறு கோண மிசை-ஆறு கோணம் உடைய சக்கரத்தின் மேலே
வண் பணிலம் திகிரி -வெளுத்த ஸூந்தர ஸ்ரீ சங்கம் -சக்கரம் –
வளைவில் வளைவாய் முசலம்-வளைந்ததான -நுனியை யுடைய பரசு -உலக்கை
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்-சிலாக்கியமாய் பிரகாசிக்கும் கதை -செந்தாமரை புஷ்பம் பத்மாயுதம் –
எண் படை ஏந்தி நின்றான்-ஆகிய எட்டு ஆயுதங்களை தரித்து சேவை சாதிக்கிறார் –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே -54- திருவாழி யாழ்வானுடைய திருக்கைகளின் பெருமை –

பரமதங்களைக் கண்டிக்கும் போது திருவாழி யாழ்வானது திரு வருள் பெறுவதற்காக இப்பிரபந்தத்தில்
உபக்ரமத்திலும் உப சம்ஹாரத்திலும் அவர் பெருமையையே பேசப்படுகிறது –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும் –திருச் சக்கரமும் மழுவும் மேன்மை பொருந்திய ஈட்டியும்
தண்டாயுதமும் மாவெட்டியும் தீப் பொறிகளை சிதறுகின்ற சத்தமுக அக்னியும் வாளும் வேலும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பொருந்திய இடமும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்-திரிசூலம் திசூலம் என்று மருவியுள்ளது ஒலிக்கின்ற சங்கமும்
வில்லும் பாசமும் கலப்பையும் சிவந்த வஜ்ராயுதமும் செழுமையான கதையும் உலக்கையும் திரிசூலமும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பிரகாசிக்கும் இடமும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும் –சகல லோகங்களும் ஒரு மாலையில் மணிகளாய்
முழுவதும் வரிசையாக பிரகாசிக்கும்படி குற்றம் இல்லாது நின்ற இடமும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும் -திருவடிநிலை -திருப் பாதுகையும்
பக்கத்தே சாய்ந்து கொள்ளும் அணையுமாகின்ற ஆதிசேஷன் போல் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர் என்னும்படி நின்று திருவடிகளை சரணம் அடையும்
பாகவதர்களை அவர்கள் இடம் உள்ள அன்பினால் அஞ்ச வேண்டாம் என்று அபாய பிரதானம் செய்வனவும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும் -மகிழ்வுள்ள தேவர் கூட்டங்களின் ஸ்வர்க்க லோகத்தைக்
கொள்ளையிடுவதற்காக ஓன்று குடித்த திரண்ட அசுரர்கள் செய்த மாய்ச செய்கைகளை ஒழித்தனவும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும் -நிறைந்துள்ள திவ்ய ஆபரணங்களில் உள்ள
ரத்தினங்கள் பிரகாசிக்க -அந்த பிரகாசத்தால் ஆகாசம் செவ்வானம் கொண்டால் போலேயாக வேதம் வகை வகையாகப் போற்றி வணங்கி நிற்க
பகைவர் மீதமின்றி ஜெயித்தனவும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும் –அக்னியையும் சூரியனையும் சந்திரனையும்
கக்குகின்ற தேஜஸை வீசி எறிதலால் எட்டுத் திக்குகளிலும் அடர்ந்த அஞ்ஞானம் ஒழியும்படி செய்ய மனம் கொண்டு உலகிற்கு ஷேமங்களைச் செய்தனவும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே–பிரகாசிக்கின்ற ஆதிசேஷனாகிய படுக்கையையுடைய
ஸ்ரீ ரெங்கநாதருடைய தேஜஸ் வடிவு எடுத்து வந்தது என்னும்படி சித்திரமாய் இருந்து சுழல்கின்ற
திருவாழி வாழ்வானுடைய சிவந்த பதினாறு திருக்கைகளும் ஆகும்
அவற்றின் பெருமை பேசற்பாலது அன்று என்றவாறு —

ஜ்வாலை -நேமி –அரங்கள்–நாபி –அக்ஷம்-ஐந்து பாகங்கள் ஸ்ரீ ஸூ தர்சனர்
அஸ்திர பூஷண அதிகாரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் –சங்கல்பத்தாலே ரக்ஷணம் –
சிதறல் -16-திவ்ய ஆயுதங்கள் -சித்த ஆலம்பன ஸுஹர்யத்துக்காக
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவாத்மா / ஸ்ரீ வத்சம் —
புருடன் மணி வரமாக –மறையின் பொருளாம் கண்ணன் –

—————————-

ஸ்வ சங்கல்ப கலா கல் பைராயுதை ராயுதேஸ்வர -ஜுஷ்ட ஷோடச பிர்த்திவ்யைர் ஜூஷதாம் வ பர புமான் –1-

ஸ்வ சங்கல்ப கலா –பெருமாள் சங்கல்ப ரூபமான ஞானமே -இச்சா விசேஷம் -ஸத்யஸங்கல்பம் -மழுங்காத ஞானமே படையாக –
கலா -16-பாகங்களில் ஓன்று –ஸ்ரீ ராமசந்திரன் கல்யாண குணங்கள் -கோன்வஸ்மின்–அமலன் ஆதி பிரான் –
கல் பைராயுதை ராயுதேஸ்வர -திவ்யம் -அப்ராக்ருதம் –
ஜுஷ்ட ஷோடச பிர்த்திவ்யைர் -கூடி இருக்கும் பரமாத்மா -விசிஷ்ட ப்ரஹ்மம்
ஜூஷதாம் வ பர புமான் –பரம புருஷன் -ப்ரீதி விஷயமாகட்டும் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் அருளட்டும்

——————————-

யதா யத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாஸ்வதம் பாது வஸ்தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண–2-

யதா யத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாஸ்வதம் –ஜகத்தின் சுழற்சியும்-பிறந்து உழன்று கர்ம அனுபவம் – கால சுழற்சியும் -யுகங்கள் மாறி வருவதும் –
மாறி மாறி பல பிறவிகள் உண்டு -பிரளயங்கள் ஸ்ருஷ்டிகளும் மாறி மாறி வருமே -சதுர் யுகங்களும் மீண்டும் மீண்டும் சுழன்று –
சாஸ்வதம் -நிலையாக சுற்றிக் கொண்டே இருக்கும் -மாறுதலுக்கு தானே மாற்றம் இல்லாமல் இருக்கும் –
கால சக்கரத்தாய் –நிர்வாஹன் / விட்டு பிரிந்த காலத்தை திரும்பி கொண்டு வர முடியாதே –
பெருமாளாலும் -சீதா பிராட்டி இடம் அருளிச் செய்தார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
பாது வஸ்தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண–ஹேதி ராஜனையும் பரம புருஷனையும் சொன்னவாறு
நம்மை ரக்ஷிக்கட்டும் -ஆரோக்யம் -ஜுரம் நீங்கி –
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி -எல்லாம் நின்று உலகில் கடிவான் நேமிப்படையான் அடியார்கள் வந்தார்கள் –
தொட்ட படை எட்டும் –சென்று நின்று ஆழி தொட்டான் -கை கழலா நேமியான் -கருதும் இடம் பொருது-

—————————————-

யத் ப்ரஸூதி சதை ராசன் ருத்ரா பரஸூலாஞ்ச நா ச திவ்யோ ஹேதி ராஜஸ்ய பரஸூ பரி பாது வ –3-

யத் ப்ரஸூதி சதை ராசன்
ருத்ரா பரஸூலாஞ்ச நா ச –மழு ஆயுதம் ருத்ரன் ஜெனித்தது இந்த திவ்ய ஆயுதத்தில் இருந்து
திவ்யோ ஹேதி ராஜஸ்ய
பரஸூ பரி பாது வ –ஸூ தன்வா கண்ட பர ஸூ உடைந்த பரசு திவ்யாயுதம் -மழு-
விபூதி அத்யாயம்–11- -ருத்ரன் -திரு நாங்கூர் திவ்ய தேசங்களில் உண்டே
வடிவாய மழு ஏந்தி உலகமாண்ட –ராமன் உலகம் ஆண்டு -மழு ஏந்தி பெயர்ச் சொல் /
பற்றின்மை கோடரி கொண்டே சம்சாரம் தொலைக்க முடியும் -திடமான வைராக்யம் -பரசு

———————————————

ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மின் தைத்யா சமுத்த்ருதே சகுந்தா இவை தாவந்தி ச குந்த பாலயேத வ –4-

சகுந்தா இவ தாவந்தி –அசுரர்கள் இந்த ஈட்டி திவ்ய ஆயுதம் கண்டதுமே பறவைகள் போலே பறந்து ஓடி விடுவார்களே –

ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மின் -ஹேலம் விளையாட்டாக எடுத்த பாங்கில்
தைத்யா சமுத்த்ருதே சகுந்தா இவை தாவந்தி -தூக்கப்பட்ட காட்ஷியாலே அசூரர்கள் மாய்ந்தே போனார்கள் -தேவ ஜாதி -/
மனுஷ்யர்ஜாதி -அனைத்தும் நான்கு வர்ணங்களில்
ராவணன் ராக்ஷஸன் ப்ராஹ்மண ஜாதி –
ச குந்த பாலயேத வ —அப்படிப்பட்ட ஈட்டி நம்மை ரக்ஷிக்கட்டும்
வேல் காம்பு குட்டியாய் இருக்கும் -ஆனால் – -ஈட்டி -தண்டு நீளம் -குந்தம் திவ்ய ஆயுதம் -சகுந்த பறவை போலே விரோதி போகும்
தாண்டா பூப நியாயம்-அபூபம் வடை – -எடுத்ததுக்கே இப்படி -எறிந்தால்-சொல்ல வேண்டாமே –
பிரயோக சக்கரத்துடன் சில திவ்ய தேசங்களில் சேவை
வைகுந்தா மணி வண்ணா என் பொல்லா குறளா-பசும் கூட்டம் -பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் —
அசுரர்களுக்கு தீமைகள் செய் குந்தா உன்னைப் பிடித்தேன் சிக்கெனவே
ஆழ்வார் அவனுக்கு மாஸூ ச அருளிச் செய்கிறார் /
குந்தா -குருந்த -வெண்மை சத்வ குண ஸ்வ பாவம் -இடை குறைத்தல் /முகுந்தா -முதல் குறைத்தல் மோக்ஷ ப்ரதன்/
குந்தம் திவ்யாயுதம் தரித்தவன் என்றுமாம் –
ஆஸ்ரித பக்ஷ பாதி அன்றோ -வைஷம்யம் நைர்க்ருண்யம் இல்லாதவன் -சமோஹம் ஸர்வ பூதா நாம்
காஸ்யப பிரஜாபதி – திதி-அதிதி -பிள்ளைகள் -தேவ அஸூரர்கள்

————————————

தைத்ய தாநவ முக்யாநாம் தண்டயாநாம் யேந தண்டநம் ஹேதி தண்டேச தண்டோ அசவ் பவதாம் தண்டயேத் த்விஷ–5-

தைத்ய தாநவ முக்யாநாம் -தையர்களையும் தானவர்களையும்
தண்டயாநாம் -தண்டிக்கப்பட வேண்டியவர்களை
யேந தண்டநம் ஹேதி தண்டேச -ஹேதி ராஜனே –
தண்டோ அசவ் பவதாம் தண்டயேத் த்விஷ–எதிரிகளை போக்கி கொடுக்கட்டும் -தண்டால்
அனைத்து பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவான்

—————————————

அநந்ய அந்வய பக்தாநாம் ருந்தந் நாசா மதங்க ஜான் அநங்குச விஹாரோ வ பாது ஹேதீஸ் வராங்குச–6-

அநந்ய அந்வய பக்தாநாம் –வேறு இடங்களில் ஈடுபாடு அற்று இருக்கும் பக்தர்கள்
ருந்தந் நாசா மதங்க ஜான் -ஆசா மதங்கள் -வித்யா தனம் ஆபி ஜாதியம் அழகு –போன்ற குறும்புகள்
திரு மங்கை ஆழ்வார் -நான்கு யானைகள் உலகம் ஏத்தும் தென் ஆனாய் -ஓட முடியாமல் தடுக்க இந்த யானைகள் பற்றி இல்லாமல்
யாதானும் பற்றி நீங்கும் விரதம் –ருந்த ந் -தடுத்து நிறுத்தம் -இவை அனைத்தையும் –
குரங்கு கள் குடித்து தேள் கொட்டி பைத்தியம் பிடித்து -நான்காலும் மதம் பெருக –
வஞ்ச முக்குறும்பாம் குழிகள் -அன்றோ இவை –
அநங்குச விஹாரோ வ –தடுப்பில்லாத அங்குசம்
பாது ஹேதீஸ் வராங்குச–ஹே தீஸ்வரனுடைய அங்குசம் ரக்ஷிக்கட்டும்
ஆசா பெரும் யானைகள் போன்றவற்றுக்கும் அங்குசம் என்றவாறும்-
பராங்குசர் -பிறருக்கு அங்குசம் / அங்கே அறுபத்தே கருமம் கண்டாய் -/ பரனான அவனுக்கும் அங்குசம் கவிகளின் ஓர்
பாதத்துக்கு முன் செல்ல மாட்டானே

—————————————

சம்பூய சலபா யந்தே யத்ர பாபாநி தேஹிநாம் ச பாது சத வக்த்ராக்நி ஹேதிர் ஹேதீஸ் வரஸ்ய வ -7-

விட்டில் பூச்சிகள் விழுந்து மாயுமா போலே சேதனர்கள் உடைய சகல வினைகளும் ஓயுமே இந்த சத முக அக்னி திவ்ய ஆயுதத்தாலே –

சம்பூய சலபா யந்தே யத்ர பாபாநி தேஹிநாம் –அடியார் கூட்டும் இரு வல்வினைகளை / தேகம் யுடையவர்களை வைத்தே சப்தம்
கர்மங்கள் சேர்க்க தேகம் –
பாபாநி -பஹு வசனம் -க்ருதான் கிரியா–கரிஷ்யமான –அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்களும்
நா நா வித அபசாரங்களும் உண்டே -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் -அல் வழக்குகள் பலவும் உண்டே
ச பாது சத வக்த்ராக்நி ஹேதிர் -கூட்டம் கூட்டமாக இருந்தாலும் வீட்டில் பூச்சி விழுந்து அழிவது போலே நாசம் பண்ணும் -நூறு முக அக்னி
ஹேதீஸ் வரஸ்ய வ -நம்மை ரக்ஷிக்கட்டும் பொறி சிதறு சத முக அக்னி –
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு தானே
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -/
சாய்ந்த இரு வல் வினைகளையும் சரித்து -மாயப் பற்று அறுத்து -தன் பால் மனம் வைக்கத் திருத்தி -வீடு நிறுத்துவான் /
நானே நாநா விதம் நரகம் புகும் பாபம் செய்தேன் -அருளைப் பார்த்தால் இருக்கும் வீடு போதாதே –
தொழுமின் -அவனை தொழுதால் -துர்லபம் அன்றோ – வழி நின்ற வல்வினை மாய்வித்து -அழிவின்றி ஆக்கம் தருமே –

—————————————

அவித்யாம் ஸ்வ பிரகாசேந வித்யா ரூபஸ் சிநத்தி ய ச ஸூ தர்சன நிஸ்த்ரிம் ச சவ்து வஸ்தத்த்வ தர்சனம் —8-

ஞான தேவதை -நிஸ்த்ரிம்-வாள் -என்னும் திவ்ய ஆயுதம் -நம் அஞ்ஞானங்களை வாசனை ருசிகள் உடன் போக்கி யாதாம்ய தத்வ த்ரய ஞானம் அளிக்கும் –

அவித்யாம் -பிரகிருதி சம்பந்தம்
ஸ்வ பிரகாசேந -தனது -ஒளியாலாயே
வித்யா ரூபஸ் சிநத்தி ய ச ஸூ தர்சன -அந்தகாரம் போக்கி -சினத்தை வெட்டி விடும் –
நிஸ்த்ரிம் ச சவ்து வஸ்தத்த்வ தர்சனம் —பரதத்வ சாஷாத்காரம் -அஞ்ஞானம் போனதும் இந்த நிலை தானே
இதுவும் அடுத்த இரண்டும் வலது திரு கை திவ்ய ஆயுதங்கள் -கட்கம் -குத்து வாள்-சிறியது – -நந்தகம் -நீண்ட வாள் -வேறே -ஆனந்தம் கொடுக்கும்
ஞானம் வாள் / அஞ்ஞானம் உறை -ஞானக் கை தா – காலக் கழிவு செய்யாமல்
காருணிகனான சர்வேஸ்வரன் வேதம் ஓளி விளக்கு -வேத நான்காய் -சாஸ்திரம் பிடித்த திரு அவதாரம் –
ஞானம் தலை கொண்டு நாரணனுக்கு ஆவோம்-அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே -காருண்யன் சாஸ்த்ர பாணினா
அஸீ -கட்கம் – நந்தகம் -கொற்ற ஒள் வாள் –தத்வ த்ரய ரகசிய த்ரய அர்த்த பஞ்சக ஞானம் -தர்சனம் பேத ஏவ ச –

————————————-

க்ரியா சக்தி குணோ விஷ்ணோர்யோ பவத்யதி சக்திமான் அகுண்ட சக்தி சா சக்திர சக்திம் வாரயேத வ –9-

க்ரியா சக்தி கல்யாண குணம் மிக்க வேல் -அகுண்ட சக்தி -குறையாத -சக்தி நம் அசக்திகளை எல்லாம் போக்கும் –

க்ரியா சக்தி குணோ விஷ்ணோர்யோ –படைத்து காத்து அழிக்கும் சக்தி -ஸர்வ வ்யாபி விஷ்ணு -சக்தி வேலாயுதம்
பவத்யதி சக்திமான் அகுண்ட சக்தி -தடையில்லாத -சக்தி -வைகுண்டம் -தடை இல்லா ஞானம் உள்ள திவ்ய தேசம்
சா சக்திர சக்திம் வாரயேத வ –நமது சக்திகளை போக்கி ரக்ஷிக்கட்டும்
நின் கையில் வேல் போற்றி / கூர் வேல் கொடும் தொழிலன்
சேராதவற்றை சேர்க்கும் சக்தி -அவிகாராயா ஸ்வ ரூபமாய் இருந்தே உபாதான காரணமாயும் -இருந்து —

—————————————–

தாரத்வம் யஸ்ய சம்ஸ்தாநே சப்தே ச பரித்ருஸ்யதே –ப்ரபோ – ப்ரஹரணேந்த்ரஸ்ய பாஞ்ச ஜன்ய ச பாது வ –10-

தாரத்வம் யஸ்ய சம்ஸ்தாநே -வடிவத்திலும் –தாரம் -சம்சாரம் தாண்டுவிக்கும் பெருமான் தாரம் –
தாரயதி -பிரணவம் -பர ப்ரஹ்மத்தையும் குறிக்கும்
சப்தே ச பரித்ருஸ்யதே –சப்தத்திலும் -பிரணவம்-நன்றாக காணப்படும் இரண்டாலும் -பேர் அரவம் கேட்டிலையோ –
பொய்கை ஆழ்வார் -பாஞ்ச ஜன்ய அம்சம்
தார்த்தராஷ்ட்ரன் -ஹிருதயம் உலுக்கும் -அனுகூலர் வாழும்படியும் –
ப்ரபோ – ப்ரஹரணேந்த்ரஸ்ய –ஆயுத அதிபதி
பாஞ்ச ஜன்ய ச பாது வ –இடது திருக் கைகள் -திவ்ய ஆயுதங்கள் இது முதல் -நம்மை ரக்ஷிக்கட்டும்
கடலில் பிறந்து -கருதாது பஞ்ச ஜன்யன் உடலில் வளர்ந்து -சாந்தீபன் புத்ரனை ரஷித்து அருளிய பொழுது
கடல் வண்ணன் கைத்தலத்தில் குடி பெயர்ந்தார்

———————————

யாம் சாத்த்விக மஹங்காரம் ஆமனந்த்யஷ சாயகம் அவ்யாத் வஸ் சக்ர ரூபஸ்ய தத்தநு சார்ங்க தன்வன –11-

சாத்விக அகங்கார ஸ்வரூபம் -திரு சார்ங்கம் -இந்திரியங்களை மால் பால் செலுத்தச் செய்து அருளும் –

யாம் சாத்த்விக மஹங்காரம்
ஆமனந்த்யஷ சாயகம் அவ்யாத்–அஷா-இந்திரியங்களுக்கு காரணம் சாத்விக அஹங்காரம்
வஸ் சக்ர ரூபஸ்ய
தத்தநு சார்ங்க தன்வன –11—தன்வீ –கையிலே பிடித்த –நம்மை ரக்ஷிக்கட்டும்
செருவிலே அரக்கர் கோனை செற்ற சேவகனார் -ஒரு வில்லால் /
தாமச அஹங்காரம் பிரதிநிதி -சாத்விக அஹங்காரம் சார்ங்கம் அம்சம் -இறுதி -திருமங்கை ஆழ்வார்
அமோக பானம்-வில்லிறுத்து மெல்லியல் தோள் புணைந்தான்-
சாபம் தநுஸ் வில் சிலை பொது பெயர்கள் – கோதண்டம் சார்ங்கம்
சப்த மராமரங்கள்–ஏழு இலக்காயிற்றோ என்று நடுங்கும்படி -வில்லாண்டான் தன்னை –
ஆனை ஆயிரம் தேர் பதினாராம் –ஆயிரம் கபந்தங்களோட வில் ஒரு மணி ஒழிக்க -ஏழரை நாழிகை ஒலித்தன –

—————————————-

ஆயு தேந்த்ரேண யேநைவ விஸ்வ சர்க்கோ விரச்யதே ச வ சவ்தர்சந குர்யாத் பாச பாச விமோசனம் —12-

சம்சார பாசங்களை போக்கி அவன் இடம் பாசம் மிக்கு இருக்கும் படி அருளும் திருப் பாசம் என்னும் திவ்ய ஆயுதம் –

ஆ யு தேந்த்ரேண யேநைவ விஸ்வ சர்க்கோ -ஜகத்தின் படைப்பு யாதொரு ஆயுதத்தால் –
விமுச்யதே ச வ சவ்தர்சந -ஸூ தர்சன சம்பந்தி -கையில் உள்ள பாசக்கயிறு
குர்யாத் பாச பாச விமோசனம் —ஆசா பாசங்களில் இருந்து விடுவிக்கட்டும் / புற சமய வாசங்களாகிற பாசங்களிலும் அகப்படாமல்
மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் —அரையர் -அபிநயம் –
திருக் கடாக்ஷம் -கமலக் கண் என்னும் நெடும் கயிறு —
உற்ற நல் நோய் இது தேறினோம்
நியாய சாஸ்திரம் தலை குனிவு -பாசம் கொண்டு பாசம் விலகுவது -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய
-கட்டுண்ண பண்ணிய பெரிய மாயன்
பாதம் அடைவதில் பாசத்தால் –மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -கோதில் புகழ் கண்ணன் கழல் மேல் -தீதிலராகி –

————————————————-

விஹாரோ யேந தேவஸ்ய விஸ்வ க்ஷேத்ர க்ருஷீ வல வ்யஜ்யதே தேந ஸீரேண நாஸீர விஜயோ அஸ்து வ –13-

விஹாரோ யேந தேவஸ்ய -இன்புறும் இவ்விளையாட்டுடைய -தேவர் -திருக் கலப்பையால் விஹாரா -ஸ்ருஷ்ட்டி இத்யாதிகள்
விஸ்வ க்ஷேத்ர க்ருஷீ வல –உலகமாகிய கழனி-பக்தி உழவன்-உழுது பயிரிட்டு போகம் அனுபவிப்பவன் – -இதம் சரீரம் கௌந்தேய -விளை நிலம்
கழினியிலே வீடு கட்டி வாசம் செய்யுமா போலே அந்தர்யாமியாக இருந்து -அஹம் அன்னம் அஹம் அந்நாதா பர்யந்தம் -படும் பாடு இவனது –
வ்யஜ்யதே தேந ஸீரேண –காணப்படும் திருக் கலப்பை
நாஸீர விஜயோ அஸ்து வ –படை முகத்தில் வெற்றி கிடைக்கட்டும்-
ஸீரத்தால் நாஸீர-சப்த பிரயோகம் -கவி ஸிம்ஹம் அன்றோ
யமுனை -ராம் காட் -பலராமன் -வளைத்த இடம் கலப்பை கொண்டு
உழவுக்கும் சீதா -கலப்பை -நுனி -சம்பந்தம் உண்டே பிராட்டிக்கு வாசஸ் ஸ்தானம் அன்றோ
உழவன் -விதை -இடம் -களை பறித்து -நாற்று நட்டு –களை எடுத்து -விளைத்து –அனுபவம் –
கரக்ஷகன்-சேதனன் விதை -சேஷத்வம் நிலம் -விதைத்து -புழு பூச்சி கடிக்காமல் -விபரீத ஞானாதிகள் -இல்லாமல் போக்கி -பாகவத அபசாரம் படாமல்
அல்வழக்குகளை போக்கி -மடை -கைங்கர்ய அநுவர்த்தனம்-விவேக ஞானமாகிய நீரைப் பாய்ச்சி -தயாஜ்ஜிய உபாத்தேய ஞானம் பகுத்து அறிவதே நீர்
பகவத் விஷயமாகிற களை கொத்து -அகங்கார மமகாரங்கள் களை போக்கி
கொந்து மாடு உள்ளே வந்து -விபரீத அஹங்காரம் – விஷயாந்தர பேய் காற்று வீசாமல் -சரணாகதி வேலி கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவத்வம் மழை-மும்மாரி -பெய்து நன்கு வளர்த்து –ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்தது
பரம ஏகாந்தி மாலையை சாத்திக் கொண்டு மற்றது கையதுவே என்று வீறுடன் எழுந்து அருளி இருப்பானே

—————————————

ஆயுதானாம் அஹம் வஜ்ராயுதம் –இதி யத அத்தீயத -ததீசி அஸ்தி சாயம் ஹேதீஸ்ய வஜ்ரா வாகா அப்யாது -14

ஸ்ரீ கீதையில் தானே ஸ்ரேஷ்ட பதார்த்தம் என்று அருளிச் செய்யும் பொழுது நானே திவ்ய ஆயுதங்களில் வஜ்ராயுதம் என்றானே –

இந்திரன் -பிராகிருதம் -இவனது அப்ராக்ருதம் -வஜ்ர ரேகையும் திருக் கரங்களில்-திருவடிகளில் உண்டே
சங்க -ரங்க -கற்பக -த்வஜ -அரவிந்த -அங்குச -வஜ்ரா ஏழும் லாஞ்சனம் உண்டே-
அதிதி வஜ்ரா பாணியுடன் இந்திரனை பெற்று மகிழ்ந்தது போல கௌசல்யை -அதீந்த்ரன் -என்றே கொள்ள வேண்டும் –
வஜ்ர பாணி திருக் -கையிலே ரேகை உண்டே

———————————————

-விஸ்வ சம்ஹ்ருதி சக்திர்யா விஸ்ருதா புத்தி ரூபிணீ சா வ சவ்தர்சநீ பூயாத் கத பிரசமநீ கதா –15-

ஸ்ரீ கதை -மஹான் தத்வம்சம்-அனைத்தையும் –சம்ஹார சக்தி –

விஸ்வ சம்ஹ்ருதி சக்திர்யா -விஷ்வா ஸம்ஹ்ருதி சக்தியை அருளும்
விஸ்ருதா புத்தி ரூபிணீ –புத்தி ரூபம்
சா வ சவ்தர்சநீ பூயாத் -ஸூ தர்சன சம்பந்தம்
கத பிரசமநீ கதா –மநோ வியாதி தொலைக்கட்டும் -கதை -மான் தண்டாக -மஹான் தத்வம் –
மனசு கரணம் -நினைக்க உறுப்பு -மனத்தால் நினைக்கிறோம் –
நினைத்து உறுதி கொள்வது புத்தி -மனஸ் கடிவாளம் இந்திரியங்கள் புலன்கள் குதிரைகள் –
ராக க்ரோதம் பயம் கோபம் தவிர்ந்து -மனஸ் சாந்தி –சமம் தமம்-

———————————–

யாத்யதி ஷோத சாலித்வம் முஸலோ யேந தேந வ ஹேதீச முஸலேநாஸூ பித்யதாம் மோஹ மவ்லசம் –16-

யாத்யதி ஷோத சாலித்வம் -உலக்கை நெல் தூள் ஆகுமா போலே
முஸலோ யேந தேந வ -விரோதிகள் அனைத்தையும் பொடி பொடியாகும்
ஹேதீச முஸலேநாஸூ —
பித்யதாம் மோஹ மவ்லசம் –மோஹமாகிற மவ்லசம் பர்வதம் யாதவ குலம் அழியும் –
உலக்கை கொண்டு அடித்துக் கொண்ட மயக்கம் -தொலையட்டும்
செருக்கு ஏறி மது குடித்து -அழிந்தார்களே –
சாம்பன் -பெண் கர்ப்பம் என்று போய் சொல்லி விசுவாமித்திரர் அறிந்து சபித்து உலக்கை பிறந்து உங்கள் வம்சம் அழியட்டும்
முஸலம் கிலேசம்- உலக்கை கொழுந்து -வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -பெரியவாச்சான் பிள்ளை சிஷ்யர்
நம் மூட மயக்கம் -மாயையால் ஆசூரா ஸ்வபாவம் போக்கி அருளும் திவ்யாயுதம் –

————————————–

ஸூலி த்ருஷ்ட மநோர் வாச்யோ யேந ஸூலயதி த்விஷ பவதாம் தேந பவதாத் த்ரி ஸூலேந விஸூலதா –17-

ஸூலி த்ருஷ்ட மநோர் வாச்யோ –சிவனால் காணப்பட்ட மந்த்ர பொருள் திருவாழி ஆழ்வான்
யேந ஸூலயதி த்விஷ –சூல வியாதி விரோதிகளுக்கு
பவதாம் தேந பவதாத்
த்ரி ஸூலேந விஸூலதா –பீடை இல்லாமல் உண்டாகக் கடவது –அஹிர்புத்நா சம்ஹிதையில் ருத்ரன் சக்கரத்தாழ்வார் வைபவம் சொல்லி
ராமநாமம் –ஸ்ரீ ராம வைபவம் சொல்லி -மகேசன் உன் பெயரின் பெருமை அறிந்தான்
அஷ்டா ஷர ஹரியில் ரேபம் -ரகாரம் -சிவ பஞ்சாக்ஷர மகாரம் சேர்த்து ராம /சஹஸ்ர நாம தத் துல்யம்

———————————————–

அஸ்த்ர க்ராமஸ்ய க்ருதஸ் நஸ்ய ப்ரஸூதிம் யம் ப்ரசஷதே சோவ்யாத் ஸூ தர்சநோ விஸ்வம் ஆயுதை ஷோடச ஆயுத –18-

அஸ்த்ர க்ராமஸ்ய க்ருதஸ் நஸ்ய –உலகம் முழுவதும் ஆயுத கூட்டங்களுக்கு ப்ரஸூதிம் யம் ப்ரசஷதே –பிறப்பிடம் ஸ்ரீ ஸூ தர்சனம்
சோவ்யாத் ஸூ தர்சநோ விஸ்வம் ஆயுதை ஷோடச ஆயுத -உலகு அனைத்தையும் ரக்ஷிக்கட்டும்
சர்வ பிரகராணா யுத

————————————————-

ஸ்ரீ மத் வேங்கட நாதேந ச்ரேயஸே பூயசே சதாம் க்ருதேயமாயு தேந்த்ரஸ்ய ஷோடச ஆயுத சம்ஸ்துதி –19-

ஸ்ரீ மத் வேங்கட நாதேந –ஸ்ரீ மானான என்னால் -ஆச்சர்ய சம்பந்தம் -அபிமான துங்கம்- சாத்விக அஹங்காரம் கொள்ளத் தக்கதே –
ச்ரேயஸே பூயசே சதாம் க்ருதேயம்-சத்துக்களை ஸ்ரேயசுக்காகவும் பூயஸூ க்காகவும்
ஆயு தேந்த்ரஸ்ய ஷோடச ஆயுத சம்ஸ்துதி –அருளிச் செய்யப்பட பிரபந்தம்

————————————

இதி ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: