ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேஸரீ -வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி —
திலகம் போன்ற அழகான பிரபத்தி-அபய முத்திரை காட்டி அஞ்சேல் -என்று அருளிச் செய்யும் ஸ்ரீ ரெங்க நாதன் திருவடிகளில் சரண் அடைந்து அருளிச் செய்கிறார் –
முதல் -22-ஸ்லோகங்களில் -பிரபத்தி பற்றியும் -அடுத்த -10-ஸ்லோகங்களில் பிரபன்னன் பற்றியும் –
அநந்யார்ஹத்வ ப்ரீதி காரித கைங்கர்யம் -ஒன்றுமே பரம புருஷார்த்தம் என்பதையும் -அருளிச் செய்கிறார் –
ஸ்வாமி திருக் குமாரர் -ஸ்ரீ குமார வரதாச்சார்யர் -இந்த ஸ்தோத்ர கிரந்தம் ஒன்றுக்குமே முழு வியாக்யானம் அருளிச் செய்துள்ளார்
குருப்ய ஸ்தத் குருப்யஸ் ஸ நமோ வாக மதீமஹே –வ்ருணீமஹே ஸ தத் ராத்யவ் தம்பதீ ஜகதாம் பதீ—1-
ஸ்ரீ லஷ்மி நாதன் -குரு பரம்பரை முதல் இடம் விரும்பி அடைந்தான் அன்றோ –
ப்ராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந் –ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்துர் மாம் அவ்யாத பய முத்ரித–2-
உனது அடிகள் அடைகின்றேன் என்று ஒரு கால் உரைத்த வாறே அமையும் இனி என்பவர் போல் அஞ்சல் எனக் கரம் வைத்து –அடைக்கலப் பத்து
நிரதிசய ஆனந்தம் அளித்த பின்பும் மீண்டும் பிரபத்தி செய்தால் இன்னும் தர ஒன்றும் இல்லையே என்று அன்றோ திரு உள்ளம் மருகுவான் –
அநா நேர்நி ஸீம்நோ துரித ஜலதேர் யந்நிருபமம் –விது பிராயச்சித்தம் யது ரகு துரீணாசய வித
ததாரம்பே தஸ்யா கிரமவததாநேந மனஸா ப்ரபத்யே தாமேகாம் ஸ்ரியமகில நாதஸ்ய மஹிஷீம்—-3-
மஹேந்த்ராக்நா விஷ்ணு ப்ரப்ருதிஷூ மஹத்த்வ ப்ரப்ருதிவத் பிரபத்தவ்யே தத்தவே பரிணமித வைசிஷ்ட்ய விபவாம்
அத்ருஷ்யத்வம் தூத்வா கமிதுரபி கம்யத்வ ஜனநீம் ஸ் ரீயம் சீதா பாங்கா மஹம சரணோ யாமி சரணம் —4-
மஹேந்த்ரனுக்கு யாகம் செய்யும் பொழுது மஹா இந்திரன் சேர்ந்தே செய்கிறோம் -பிராட்டிக்கு பெருமானுக்கும் சேர்ந்தே பிரபத்தி –
குணங்களையும் குணியையும் பிரிக்க முடியாதே -நாம் செய்யும் பாபக் குவியலை போக்க பிரபத்தி ஒன்றே பிராயச்சித்தம்
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திரு அவதாரங்கள் மூலமும் பூர்வாச்சார்யார்கள் ஸ்ரீ ஸூ க்திகளாலும் பிராட்டி புருஷாகாரமாக செய்து அருளுவதை உணர்கிறோம்
ஸ்ரீ லஷ்மி தந்திரம் –பிராயச்சித்த பிரசங்கே து சர்வ பாப ஸமுத்பவே மாம் ஏகம் தேவ தேவஸ்ய மஹிஷிம் சரணம் ஸ்ராயத் –
ஸ்வாதந்த்ரனை நேராக பற்றக் கூடாதே -புருஷகார பிரபத்தி செய்த பின்பே அவன் இடம் பிரபத்தி -ஸ்ரீ கத்யத்திலும் அருளிச் செய்தார் அன்றோ –
ஸ்வத ஸித்த ஸ்ரீ மாநமித குண பூமா கருணயா விதாய ப்ரஹ்மாதீந் விதரதி நிஜா தேசமபி ய
பிரபத்த்யா சாஷாத் வா பஜந சிரஸா வா அபி ஸூலபம் முமுஷூர்த்தே வேசம் தமஹமதி கச்சாமி சரணம் –5-
ப்ருந்தாநி ய ஸ்வ வசயன் வ்ரஜ ஸூந்தரீணாம் ப்ருந்தா வநாந்தர புவாம் ஸூலபோ பபூவ
ஸ்ரீ மாந சேஷ ஜன சங்க்ரஹணாய ஸேதே ரங்கே புஜங்க சயநே ஸ மஹா புஜங்க –6-
தயா ஸுலப்யம் அடியாகவே நீர்மையினால் வேதங்களை உபகரித்து-நான்முகனையும் படைத்து நாட்டை படை என்று அருளி
தானே விரும்பி -வேண்டித் தேவர் இரக்க -கோப கோபீ வல்லவனாகவும் -ஸ்ரீ கிருஷ்ணாதி திருவதாரங்களிலும்
பின்னானார் வணங்கும் ஜோதியாக அர்ச்சா மூர்த்திகளாகவும் நின்று அருளுகிறான் –
ரங்காஸ் தீர்ண புஜங்க புங்கவ வபுஸ் பர்யங்க வர்யம் கதவ் சர்க்க ஸ்தித்யவசாந கேளி ரசிகவ் தவ் தம்பதீ ந பதீ
நாபீ பங்கஜ சாயிந ஸ்ருதி ஸூகைரந் யோந்ய பத்த ஸ்மிதவ் டிம்பஸ்யாம் புஜ சம்பவஸ்ய வசநைரோந்தத் சதித்யாதிபி –7-
கந கருணா ரஸவ்க பரிதாம் பரிதாப ஹராம் நயந மஹஸ்சடாம் மயி தரங்கய ரங்க பதே
துரித ஹூதாஸந ஸ்புரித துர்த்தம துக்க மஷீ மலிநித விஸ்வ ஸவ்த துரபஹ் நவ வர்ண ஸூதாம் –8-
அவன் திருக்கண் கடாக்ஷம் ஒன்றாலேயே நாம் அநாதி காலம் சேர்த்த பாப குவியலை போக்கிக் கொள்ள முடியும் –
துர்மோசோத் பட கர்ம கோடி நிபிடோ அப்யாதேச வஸ்ய க்ருத–பாஹ்யைர் நைவ விமோஹிதோ அஸ்மி குத்ருஸாம் பஷைர்ந விஷோபித
யோ மாஹாநஸிகோ மஹாந் யதிபதேர் நீதஸ் ஸ தத் பவ்த்ரஜான் ஆசார்யா நிதி ரங்க துர்ய மயி தே ஸ்வல் பாவ சிஷ்டோ பர –9-
அவன் கிருபை அடியாகவே நாம் ஆச்சார்யர் திருவடி சம்பந்தம் பெறுகிறோம் -மோக்ஷ பிரதத்துக்கு இதுவே அவன் செய்து அருளும் முதல் உபகாரம்
ஆச்சார்யர் லக்ஷணங்கள் நியாஸ விம்சதியில் அருளிச் செய்கிறார் –
ஆர்த்தேஷ் வா ஸூபலா ததந்ய விஷயே அப்யுச்சின்ந தேஹாந்தரா-வஹ்ந் யாதேரந பேஷாணாத் தநுப்ருதாம் சத்யாதிவத் வ்யாபி நீ
ஸ்ரீ ரெங்கேஸ்வர யாவதாத்ம நியத த்வத் பாரதந்தர்ய உஸிதா -த்வய்யேவ த்வதுபாய தீரபிஹித ஸ்வ உபாய பாவா அஸ்து மே —10-
பிரபத்தி சர்வாதிகாரம் -கால விளம்பம் இல்லாமல் சரீர அவசானத்திலே -மரணம் அடைந்தால் வைகுந்தம் அளிக்கும் பிரான் –
அப்ஹித ஸ்வ உபாய பாவம் -ஸித்த உபாயம் அன்றோ –
த்வய்யா சார்யைர் விநிஹித பராஸ்தாவக ரங்க நாத த்வத் கைங்கர்ய ப்ரவண மநஸ ஸ்த்வத் குணாஸ்வாத மத்தா
த்வய்யேக கஸ்மின் நபி விஹஜதோ முக்தவத் சாதநத்வம் த்வச் சேஷத்வ ஸ்வரஸ ரசிகா ஸூரயோ மே ஸ்வதந்தாம் –11-
யானும் நீ என் உடைமையும் நீயே என்று அனைத்தையும் சமர்ப்பித்ததே அவன் குண அனுபவத்துக்காகவும்
ப்ரீதி காரித பகவத் கைங்கர்யத்துக்காகவும் தானே
ஆச்சார்யர் நமக்காக உபாய பாவத்தை எரித்துக் கொண்ட பின்பு ஸ்வாதந்தர்யம் கலசாத ததேக பாரதந்த்ரயமே நமக்கு வேண்டியது
கல்ப ஸ்தோமே அப்ய பாஸ்த த்வதிதர கதயோஸ் சக்தி தீ பக்தி பூம்நா-ரங்கேச பிராதி கூல்ய ஷரண பரிணமந் நிர்விகாத அநு கூல்யா
த்ராதாரம் த்வாம பேத்யாச் சரண வரணதோ நாத நிர்விக்ந யந்த த்வந் நிஷிப் தாத்ம ரஷாம் ப்ரதி ரபச ஜூஷ ஸ்வ ப்ரவ்ருத்திம் த்யஜந்தி–12-
பிரபன்னன் -அகிஞ்சன்யம் -கார்ப்பண்யம் -அநந்ய கதித்வம் -அறிந்து கோப்த்ருத்வ வரணம் செய்து மஹா விச்வாஸத்துடன் –
பிரதிகூல்யங்களில் இழியாமல் -அநு கூல்ய சங்கல்பம் கொண்டு மோக்ஷ பிராப்திக்கு -தன்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்று உணர்ந்து
மார்பிலே கை வைத்து உறங்கி அதிகாரி விசேஷணங்களை மட்டும் காட்டுவான் –
த்யக்த உபாய வ்யபாயாம்ஸ்தத் உபய கரணே சத்ரபான் சாநுதாபாந் -பூயோ அபி த்வத் பிரபத்த்யா ப்ரஸமித கலுஷான் ஹந்த சர்வம் சஹஸ்த்வம்
ரங்கிந் ந்யாஸ அந்தரங்க அகில ஜன ஹிததா கோஸர த்வன் நிதேச-ப்ரீதி ப்ராப்த ஸ்வ வர்ணாஸ்ரம ஸூப சரிதான் பாசி தன்யான் அநந்யாந் —13-
சோகாஸ் பதாம்ச மதன ச்ரயதாம் பவாப்தவ் ராகாஸ் பதாம்ஸ சகஜம் ந ருணத்ஸி துக்கம்
நோ சேதமீ ஜகதி ரங்க துரீண பூய ஜோதிஷ்ட போக ரசிகாஸ்தவ ந ஸ்மரேயு –14-
இவ்வாறு பிராதி கூல்யங்களில் இழியாமல் அநு கூல்யங்களையே செய்வதில் உறுதி கொண்டு இருந்தாலும் இருள் தரும் மா
ஞாலத்தில் இந்த பிராகிருத சரீரத்துடன் இருப்பதால் செய்யும் தவறுகளுக்கு –
பரம காருணிகனை க்ஷமை திருக் குணம் காட்டி அருள -பிராயச்சித்த பிரபத்தி செய்து
சம்சார அழுந்தலில் ஆழ்ந்து அவனை மறந்து இருக்காமல் அவன் இடம் உடனே சேர்ந்து சேஷத்வ அனுரூபமாக கைங்கர்யம் செய்ய த்வரிப்பானே-
ஹேதுர்வைதே விமர்ஸே பஜனவதி தரத் கிம் த்வநுஷ்டாந காலே -வேத்ய த்வத் ரூப பேதோ விவித இஹ ஸ தூபாயதாந் யாநபேஷா
ரங்கிந் பிராரப்த பங்காத் பலமதிகமநா வ்ருத்தி ருக்தேஷ்டிவத் ஸ்யாத் -நாநா சப்தாதி பேதாத் ப்ரபதன பஜநே ஸூஸிதே ஸூத்ர காரை —15-
பக்தி யோக நிஷ்டனுக்கு பல வித்யைகள் –குண அனுபவம் மூலம் காட்டி அருளி -பிரபன்னனுக்கு அவன் ஸ்வயம் ஸித்த உபாயம் என்று உணர்ந்து
திருவடிகளில் அநந்யார்ஹ சரணம் அடைவது ஒன்றாலே மோக்ஷம் அளிக்கும் பிரான் அன்றோ
-வேதன த்யான உபாசன –ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் பக்திக்கு
பிரபன்னனுக்கு -சரணம் ஒன்றே என்பதை சரணாகதி பிரபதனம் தியாகம் ஆத்ம நிஷேபனம் ந்யாஸ -சப்தங்களால் சொல்லுமே
நாநா சப்தாதி பேதாத் –3–3–56-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –
பக்தவ் ரங்க பதே யதா கலு பசச் சாகாதிவத் வேதந த்யான உபாசன தர்சனாதி வசசா மிச்சந்த்ய பிந்நார்த்ததாம்
வ்யக்த்யைக்யாச் சரணா கதி ப்ரபதன த்யாகாத்ம நிக்ஷேபண ந்யாசாத் யேஷூ ததைவ தந்த்ர நிபுணை பர்யாயதா ஸ்மர்யதே— 16-
விச்வாஸாயாசா பூம் நோர்ந் யஸந பஜநயோர் கௌரவே கோ விசேஷ -தத் சத் பாவே அபி தர்மாந்தர இவ கடதே கர்த்ரு பேதாத் விகல்ப
தத்பேதோ ரங்க சாயின் நநிதர கதிதா த்யுத்த சோகாதி ரேகாத் -ஸத்வித்யா தவ் விகல்பஸ் த்வபிமதி பிதயா தேந தத்ரைக ராஸ்யம்—17-
த்ருவ மதிக்ருதி பேதாத் கர்மவத் ரெங்கசாயின் பலதி பலமநேகம் த்வத் பதே பக்தி ரேகா
சரண வரண வாணீ சர்வ ஹேதுஸ் ததா அசவ் க்ருபண பஜன நிஷ்டா புத்தி தவ்ர்ப் பல்ய காஷ்டா –18-
பக்தி யோகத்துக்கு சக்தன் இல்லாதவனுக்கு பிரபத்தி -அது அகங்கார கர்ப்பம் என்பதால் இதுவே பிராப்தி சக்தி உள்ளவனுக்கும்-
கர்த்தவ்யம் சக்ருதேவ ஹந்த கலுஷம் சர்வம் ததோ நஸ்யதி -ப்ரஹமே சாதி ஸூ துர்லபம் பதமபி ப்ராப்யம் மயா த்ராகிதி
விசுவாஸ பிரதிபந்தி சிந்த நமிதம் பர்யஸ்யதி ந்யஸ்ததாம் ரங்கா தீச ரமா பதித்வ ஸூபகம் நாராயணத்வம் தவ –19-
நாம் செய்த பாபக் கூட்டங்களை அனுசந்தித்தாலும் -ப்ரஹ்மாதிகளாலும் அடைய முடியாத பேற்றின் கனத்தை அனுசந்தித்தாலும் மஹா விச்வாஸம்
பெறுவதில் சிரமம் அறிவோம் -அவாப்த ஸமஸ்த காமன் நிராங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ அவனும் –
வசிஷ்டர் சண்டாளன் விபாகம் இல்லாமல் அனைத்து சேதனர்களும் பிரபதிக்கு அதிகாரிகள் ஆவது எவ்வாறு என்றும் சங்கை வருமே –
ஸ்ரீமன் நாராயணன் திருநாமம் அனுசந்தித்தாலே இந்த சங்கைகள் எல்லாம் தீருமே —
பிராட்டியுடைய புருஷகாரத்வமும் -/ ஸ்வாமித்வம் -சொத்து -நாம் என்ற அனுசந்தானத்தாலும் /
நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை யன்றி இல்லையே / உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது
எந்த வியாஜத்தால் நம்மை கொள்வோம் என்று எதிர் சூழல் புக்கு திரியும் அவன் அன்றோ / யானைக்கு அன்று அருளை ஈந்த ஆதி மூலம் அன்றோ –
இசைவித்து நம்மை தாளிணை கீழ் இருத்தும் அம்மான் -அவாப்த ஸமஸ்த காமன் -சரணம் என்பதே அதிகாரி விசேஷணம் அன்றோ
அவன் திரு உள்ளம் என்றுமே நம்மை கை கொள்ள -அது கார்ய கரம் ஆவது நம் உள்ளத்தில் நினைவு அவன் பக்கம் விலக்காமல் இருப்பதுவே —
தன் பேறாக அன்றோ -முகில் வண்ணன் -விபாகம் அன்றி அனைவரையும் -சரணாகதர்களைக் கைக் கொள்ளுகிறான்-
தீ கர்ம பக்தி ரஹிதஸ்ய கதாப்ய சக்த்யா ரங்கேச பாவ கலுஷ ப்ரணதி த்வயோக்தே
மன்யே பலம் பிரபல துஷ்க்ருத சாலிநோ மே த்வன் மூல தேசிக கடாக்ஷ நிபாத மாத்யம் —20-
கர்மா குவியலில் எழுந்து உள்ள சேதனனுக்கு கர்மா ஞான பக்தி யோகங்களில் இழிய முடியாத ஆரம்ப விரோதிகளை ஆச்சார்யர்
தம் கடாக்ஷம் ஒன்றாலயே போக்கி அருளி பிரபத்தி மார்க்கமும் காட்டி அருளி மோக்ஷமார்க்கமும் காட்டி அருளுகிறார் –
ஞானம் அனுஷ்டானம் உள்ள குருவை அடைந்தக்கால் திரு மகள் கொழுநன் –தானே வைகுந்தம் தரும் –
அந்தோ அநந்த கிரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத் பங்குர் நவ்கா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந
புங்க்தே போகாநவிதித ந்ருப சேவகஸ்யார் பகாதி த்வத் ஸம்ப்ராப்தவ் ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு —21-
ஆச்சார்யர் செய்து அருளும் உபகாரங்களை விளக்கி அருள மூன்று உதாரணங்கள் காட்டி அருளுகிறார்
கண் இல்லாத ஒருவனை கண் உள்ள ஒருவன் நடத்திச் செல்வது போலேயும்-ஞானக் கண் இல்லாத நம்மை ஞானம் உள்ள ஆச்சார்யர்
பிரபத்தி மார்க்கங்களை காட்டி அருளி -முடவன் ஒருவனை- அக்கரை நடாத்தி செல்லும் -நம்மால் முயலவும் முடியாமல் இருக்க –
தானே தூக்கி நாவாயில் அமர்த்தி கூட்டிச் செல்வது போலேயும் ராஜ சேவகன் பெரும் பரிசு பொருள்களை அவன் குடும்பத்தார் அனுபவிப்பது போலேயும் –
இந்த ஸ்லோகத்தை ரஹஸ்ய த்ரய சாரத்திலும் எடுத்துக் காட்டி அருளுகிறார் –
உக்த்யா தனஞ்ஜய விபீஷண லஷ்யயா தே ப்ரத்யாய்ய லஷ்மண முநே பவத விதீர்ணம்
ஸ்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –22-
பிரபத்தி செய்த அனந்தரம் -பிரக்ருதியில் இருப்பதால் விரக்தியும் அவன் குணங்களை இங்கேயே இருந்து அனுசந்தித்து பேர் ஆனந்தமும்
மாறி மாறி உண்டாகுமே-இந்த எண்ணங்களை தம் திரு உள்ளத்துக்கு அறிவிக்கும் முகமாக நமக்கும் அருளிச் செய்கிறார் மேலே –
சக்ருதபி விநநாநாம் சர்வதே சர்வதேஹிநி உபநிஷதபிதேயே பாகதேயே விதேயே
விரமதி ந கதா சின் மோஹதோ ஹா ஹதோ அஹம் விஷம விஷய சிந்தா மேதுரா மே துராசா —23-
நின்றவா நில்லா நெஞ்சு அன்றோ -சரம ஸ்லோகங்களில் அவன் அருளிச் செய்த வற்றை கேட்டேயும்
இந்திரிய பயன்களால் ஆழ்வார் திருவேங்கடமுடையான் இடம் சரண் அடைந்த உடன் அருளிச் செய்தால் போலேயும்
அஷ்ட புஜ அஷ்டகத்தில் ஸ்வாமி அருளிச் செய்தால் போலேயும் விரக்தியும் பேர் ஆனந்தமும் மாறி மாறி வரும் அன்றோ -இங்கே –
யாவஜ் ஜீவம் ஜகதி நியதம் தேஹ யாத்ரா பவித்ரீ த்யக்தா சர்வே த்ரி சதுர திந க்லாந போகா நபோகா
தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷீ கிம் தே சிந்தே பரமபிமதம் கித்யஸே யத் புனஸ்த்வம் —24-
ஆச்சார்யர் மூலம் பெற்ற சரணாகதனை நழுவ விட மாட்டான் அன்றோ -இருக்கும் நாள்களில் அனுபவிக்கும் கர்மா அனுகுணமான ஸூக துக்கங்களால்
கவலை கொள்ளாமல் பகவத் கைங்கரிய ரூபமாகவே இவற்றை அனுபவித்து மோக்ஷ அனுபவம் வரும் நாள் என்றோ என்று இருக்கக் கடவன் –
அபி முஹுரபரா தைரப் ராகம்ப்யா நுகம்பே வஹதி மஹதி யோக ஷேம ப்ருந்தம் முகுந்தே
மத கலுஷ மநீஷா வஜ்ர லேபாவலேபாந் அநுகுணயிதுமீஹே ந ப்ரபூந ப்ரபூதாந் –25-
மாதர்பாரதி முஞ்ச மானுஷ சடூன் ஹே தேஹ லப்தைரலம் லுப்த த்வார துராசிகா பரிபவைச தோஷம் ஜூஷேத மந
வாச ஸீமநி ரங்க தாமநி மஹாநந்தோந் நமத்பூமிநி ஸ்வாமி நியாத்மனி வேங்கடேஸ்வர கவே ஸ்வே நார்ப்பிதோயம் பர –26-
தாஸ்யம் லாஸ்ய வதா அநு மத்ய மனஸா ரங்கேஸ்வர த்வத் பதே நித்யம் கிம் கரவாண்யகம் ந து புன குர்யாம் கதர் யாஸ்ரயாம்
மீலச் சஷூஷி வேல்லித ப்ருணி முஹுர்தத்வா வமாநாஷரே பீமே கஸ்யசி தட்ய கஸ்ய வதநே பிஷாவிலஷாம் த்ருசம் —27-
த்வய்யேகாஞ்ஜலி கிங்கரே தநுப்ருதாம் நிர் வ்யாஜ சர்வம் சஹே கல்யாணத்மநி ரங்க நாத கமலா காந்தே முகுந்தே ஸ்திதே
ஸ்வாமிந் பாஹி தயஸ்வ தேவ குசலின் ஜீவ ப்ரபோ பாவயேதி ஆலாபா நவலேபி ஷூ பிரலபிதும் ஜிஹ்ரேதி ஜிஹ்வா மம–28-
த்வயி சாதி ரங்க துர்ய சரணாகத காமதுகே நிருபதிக ப்ரவாஹ கருணா பரிணாஹவதி
பரிமித தேச கால பலதான் பல தாக்ருதிக்காந் கதமதி குர்மஹே விதி சிவ ப்ரமுகாந முகாந் –29-
ஓமித்யப்பு பகம்ய ரங்க ந்ருபதே அந்நயோஸிதாம் சேஷதாம் -ஸ்வாதந்தர்யாதி மயீமபோஹ்ய மஹதீ மாத்யாம வித்யாஸ்திதாம்
நித்யா சங்க்ய விஸீமாபூதி குண யோர்யாயா மநாயாஸத சேவா சம்பத மிந்திரேச யுவயோரை காந்தி காத் யந்தி கீம் —30-
1–பரம புருஷார்த்தமே ப்ரீதி காரித கைங்கர்யம் -பிராட்டிக்கு அவனுக்கும் செய்வதுவே /2—அப்ருத்க் சித்தம் என்று உணராமல் இருப்பதே பரம அஞ்ஞானம் /
3—திவ்ய தம்பதிகள் ஸமஸ்த கல்யாண குணங்களை கொண்ட வைத்த மா நிதி என்ற உணர்வும் /
4–மிதுனத்தில் திருவடிகளில் -நித்ய கைங்கர்யம் நித்ய விபூதியில் செய்து இருப்பதே குறிக்கோள்
ஆச்சார்யாத் ரங்க துர்ய த்வய சமதிகமே லப்த சத்தம் ததாத்வே விஸ்லிஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர துரித பரம் யாபிதா ரப்த தேஹம்
நீதம் த்வத்கைஸ் த்வயா வா நிரவதிக தயோத்பூத போதாதிரூபம் த்வத் போகைக ஸ்வபோகம் தயிதமநுசரம் த்வத்க்ருதே மாம் குருஷ்வ –31-
ஆச்சார்யர் மூலம் ஸமாச்ரயணம் செய்யப் பெற்று – ரஹஸ்ய த்ரய ஞானம் பெற்று / சஞ்சித கர்மாக்கள் தொலைய பெற்று
மேலே அறியாமல் செய்யும் கர்ம பலன்களை ஓட்ட விடாமல் பகவான் செய்து அருளி /
பிராரப்த கர்மம் சரீர அவசானத்திலே போக்க்கப் பெற்று -பிரபன்னனை அர்ச்சிராதி மார்க்கம் மூலம்
தன்னுடை சோதிக்கு கூட்டி அருளி -ப்ரீதி காரித கைங்கர்யம் ஏற்றுக் கொண்டு சாயுஜ்யம் அளிக்கிறான் —
விதானம் ரஙகேசா ததிகதவதோ வேங்கட கவே ஸ்புரத் வர்ணம் வக்த்ரே பரிகலயதாம் ந்யாஸ திலகம்
இஹா முத்ராப்யேஷ ப்ரணத ஜன சிந்தாமணி கிரி ஸ்வ பர்யங்கே சேவாம் திசதி பணி பரியங்க ரசிக –32-
இந்த ப்ரீதி காரித கைங்கர்யம் கொண்டு அருளவே ஸ்ரீ ரெங்க நாதன் அர்ச்சா ரூபமாக இங்கும் பல திவ்ய தேசங்களிலும் சேவை சாதித்து அருளுகிறான் –
ஸ்ரீ ரெங்க நாதன் அருளாலேயே பிரபத்தி பற்றி இந்த ந்யாஸ திலகம் தான் அருளிச் செய்ததாக சாதித்து நிகமிக்கிறார் –
இனி ந்யாஸ திலகம் சம்பூர்ணம் —
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே -ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply