ஸ்ரீ நியாஸ விம்சதி —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ-வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

-28 -ஸ்லோகங்களுக்குள் இது ஒன்றுக்கும் மட்டும் ஸ்வாமி தேசிகன் வியாக்யானமும் அருளிச் செய்து இதன் முக்யத்வத்தை காட்டி அருளுகிறார் –

சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூ யாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் சுயம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
கு ரு –கு -இருட்டை தொலைக்கும் / அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
-உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –
1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் / மகன் -யதிராஜ சம்பத்குமாரார் -செ ல்ல /செல்வப் பிள்ளை /
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் /
4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
6–சத்யவாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் /
ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் / சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் /சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை /சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
வாங்கி கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் /
10–ஜித விஷயி கணம்
11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
12–தயாளும் –கிருபை பொழிந்து/ கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது /
13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
14—ஸ்வ பர ஹித பரம்
தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்
-14-லக்ஷணங்கள் /
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் – / சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் -/ ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

அஞ்ஞான த்வாந்த ரோதா தக பரிஹரணாத் ஆத்ம சாம்யாவஹத்வாத்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம ப்ரத கரிமதயா திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்
நிஷ் ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யான் நியதி ரஸதயா நித்ய சேஷித்வ யோகாத்
ஆச்சார்ய சத் ப்ரப் ரத யுபகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய–2-

சிஷ்யன் ஆச்சார்யரையே பகவானாக கொள்ள வேண்டிய -8-காரணங்களை அருளிச் செய்கிறார் இதில் –
/பிரதியுபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய –3-

சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —

ஸ்வ அதீந அசேஷா சத்தா ஸ்திதி யத்ன பலம் வித்தி லஷ்மீ சமேகம்
ப்ராப்யம் நாந்யம் ப்ரதீயா ந ச சரணதயா கஞ்சி தந்யம் வ்ருணீயா
ஏதஸ்மா தேவ பும்ஸாம் பயமிதரதபி ப்ரேஷ்யா மோஜ்ஜீஸ் ததாஜ்ஞாம்
இத்யே காந்தோபதேச ப்ரதமமிக குரோர் ஏக சித்தேன தார்ய —4-

மோஷோ பாயார்ஹ தைவம் பவதி பவ ப்ருதாம் கஸ்யசித் க்வாபி காலே
தத்வத் பக்தி ப்ரபத்யோரதி க்ருதி நியமஸ் தாத்ருஸா ஸ்யாந் நியத்யா
சக்தா சக்தாதி தத்தத் புருஷ விஷயத ஸ்தாப்யதே தத் வ்யவஸ்தா
யச்சாஹூஸ் தத் விகல்ப சம இதி கதிஸித் தத் பல ஸ்யா விசேஷாத் –5-

முமுஷு –இச்சை -காயசித் -சிலருக்கு சில வேளைகளில் ஆச்சார்யர் இடம் உபதேசம் பெற -கஸ்யசித் க்வாபி காலே –
பஹு நாம் சன்மானம் –ஞானவான் மாம் ப்ரபத்யே -ஸ்ரீ கீதா

சாநுக்ரோசே சமர்த்தே ப்ரபதநம் ருஷிபி ஸ்மர்த்யே அபீஷ்ட ஸித்த்யை
லோகே அப்யேதத் பிரசித்தம் ந ச விமதிரிஹ ப்ரேஷ்யதே க்வாபி தந்த்ரே
தஸ்மாத் கைமுத்ய சித்தம் பகவதி து பர ந்யாச வித்யா நுபாவம்
தர்ம ஸ்தேயாஸ்ச பூர்வே ஸ்வ க்ருதிஷூ பஹுதா ஸ்தாப யாஞ்சக் ருரேவம் —6-

ஸ்ம்ருதிகளும் சரணாகதி மூலம் சுக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் காகாசூரன் போன்றோர் பயன் அடைந்ததை சொல்லுமே —
பலரும் பல பலன்களுக்கு சரணாகதி செய்தமை ஸ்ம்ருதிகள் சொல்லும் -கைமுதிக நியாயத்தால் அவனை அடைய சரணாகதி உதவுமே –
பரம காருணிகன் சர்வசக்தன் தன்னையே ஓக்க அருள் செய்வான் சரணாகதர்களுக்கு என்பதை பூர்வர்கள் பலரும் காட்டி அருளி உள்ளார்கள் –

சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ நநு விதி விஷயே நிர்விசங்கோ அதிகாரீ
விச்வாஸஸ் யாங்க பாவே புநரிஹ விதுஷா கிம் மஹத்வம் ப்ரஸாத்யம்
மைவம் கோராபராதை சபதி குரு பலே ந்யாஸ மாத்ரேண லப்யே
சங்கா பார்ஷ்ணி க்ரஹார்ஹா சமயிதுமுஸிதா ஹேது பிஸ் தத் ததர்ஹை –7-

மஹா விச்வாஸம்-முக்கிய அங்கம் –செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமை – நம் பாபங்கள் தண்மை அதிசயம்
பேற்றின் பலன் -மூன்றையும் பார்த்தால் மஹா விசுவாசத்தின் அருமை அறியலாம் –
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே அடைய முடியும்

நேஹாபிக் ராந்தி நாஸோ ந ஸ விஹதிரிஹ ப்ரத்யவாயோ பவேதிதி
உக்தம் கைமுத்ய நீத்யா ப்ரபதந விஷயே யோஷிதம் சாஸ்த்ர வித்பி
தஸ்மாத் க்ஷேத்ரே ததர்ஹே ஸூவிதத சமயைர் தேசிகை சம்ய குப்தம்
மந்த்ராக்யம் முக்தி பீஜம் பரிணதி வசத கல்பதே ஸத்பலாய–8-

பிரபத்தி அங்கங்களை ஆச்சார்யர் உபதேசம் மூலம் -உணர்ந்து -மஹா விசுவாசம் அடைய வேண்டுமே –
ரஹஸ்யத்ரய ஞானம் -ஆச்சார்யர் மூலம் பெற்று -ஸ்ரீமன் நாராயணனே அசேஷ ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமி -நியாம்யன்–
அவனே பரம ப்ராப்யம் –அவனே பிராபகம்-சாஸ்திரங்கள் அவனது ஆஜ்ஞா ரூபம் -விதி நிஷேதங்களை மாறாமல் இருக்க வேண்டுமே –

ந்யாஸ ப்ரோக்தோ அதிரிக்தம் தப இதி கதித ஸ்வத் வரஸ் சாஸ்ய கர்த்தா
அஹிர்புத்ந்யோ அப்யன்வவா தீத கணி திவிஷதாம் உத்தமம் குஹ்ய மேதத்
சாஷான் மோஷாய சாஸவ் ஸ்ருத இஹ து முதா பாத சங்கா குணாட்யே
தன்நிஷ்டோ ஹ்யந்ய நிஷ்டான் ப்ரபுரதி ஸயிதும் கோடி கோட்யம் சதோ அபி –9-

பிரபத்தி சர்வாதிகாரம் -தபஸுக்களில் சிறந்ததாக சுருதி சொல்லுமே –
பிரபன்னன் சிறந்த யாகம் செய்தவனாக கருதப்படுகிறான் -குஹ்ய தமமான உபாயம் /
தஸ்மாத் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அத்ரிக்தம் ஆஹு–தைத்ரியம் /
சமிதி சாதனகா தீனம் யஜ்ஜானாம் .ந்யாஸம் ஆத்மனா நமஸாயோ கரோத் தேவ ஸ சவ்தவாரா –அஹிர்புத்ன்ய சம்ஹிதை
யதாத்வை மஹோபநிஷதம் தேவானாம் குஹ்யம் –தைத்ரியம்

நாநா சப்தாதி பேதாதிதி து கதயதா ஸூத்ர காரேண சம்யக்
ந்யாஸ உபாஸே விபக்தே யஜந ஹவ நவச் சப்த பேதாத பாக்தாத்
ஆக்யா ரூபாதி பேத ஸ்ருத இதர சம கிம் ஸ பின்ன அதிகார
ஸீக்ர ப்ராப்த்யாதிபி ஸ்யாஜ்ஜ குரிதி ஸ மதூபாச நாசவ் வ்வஸ்தாம் —10-

பக்தி பிரபத்தி -இரண்டும் மோக்ஷ உபாயங்கள் –
பிரபத்திக்கு -பக்திக்கு அங்கமாகவும் -சாஷாத் உபாயமாகவும் -இரண்டு ஆகாரங்கள் உண்டே
பக்திக்கு அங்கங்கள் -வர்ணாஸ்ரம கர்ம ஞான யோகங்கள்
பிரபதிக்கு அங்கமாக ஆநு கூல்ய சங்கல்பம் -கார்ப்பண்யம் -மஹா விசுவாசம் போன்றவைகள் உண்டே –
பக்திக்கும் பிரபத்திக்கும் தேவையானவைகளை வேறே வேறே -மோக்ஷம் அடையும் கால விளம்பத்திலும் வாசி உண்டே –
சர்வ லோக சரண்யன் -ஸர்வஸ்ய சரணம் ஸூஹ்ருத் –
சரணாகதி -ஆறாவது அங்கம் -பக்திக்கு அஷ்டாங்கங்களில் சமாதி எட்டாவது அங்கம் போலவே –
அநு கூல்ய சங்கல்பமே ஒரு அங்கம் -செய்ய உறுதி கொண்டாலே செய்து முடிப்போம் -/பிராயச்சித்த பிரபத்தி -என்பது அங்கங்களில் பிரபத்தி
பண்ணிய பின்பு குறைகள் வந்தால் போக்கிக் கொள்ள என்பர் -பிரபத்தி செய்த அதிகாரி குற்றம் தானாகவே செய்ய மாட்டான்
-இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பதால் இவனை அறியாமல் செய்ய நேர்ந்தால் -அதற்காக இந்த பிராயச்சித்த பிரபத்தி –
ப்ரஹ்மாஸ்திரம் போலே -மீண்டும் ஒரே பலனுக்காக பண்ணினால் தான் -குறை வரும் –

யத் கிஞ்சித் ரக்ஷணீயம் ததவந நிபுணே ந்யஸ்தோ அகிஞ்ச நஸ்ய
ப்ரஸ்பஷ்டம் லோக த்ருஷ்ட்யா அப்யவகமித இஹ ப்ரார்த்தநாத் யங்க யோக
தஸ்மாத் கர்மாங்க கத்வம் வ்யபநயதி பரா பேஷணாபாவ வாத
சாங்கே த்வஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத ஷட்விதத் வோபசார–11-

பஞ்சாப் யங்காந்யபிஜ்ஞா ப்ரணிஜகுரவிநா பாவ பாஞ்ஜி ப்ரபத்தே
கைஸ்சித் சம்பா விதத்வம் யதிஹ நிகதிதம் தத் ப்ரபத்த் யுத்தரம் ஸ்யாத்
அங்கேஷ் வங்கித்வ வாத பல கதநமிஹ த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ
ப்ராஸஸ் த்யம் தத்ர தத்ர ப்ரணிதததி தத சர்வ வாக்யைக கண்ட்யம் –12-

ரஷாபேஷா ஸ்வசாஹ்ய ப்ரணயவதி பர ந்யாஸ ஆஜ்ஞாதி தஷே
த்ருஷ்டா நாத்ர பிரபத்தி வ்யவஹ்ருதிரிஹ தந் மேளநே லக்ஷணம் ஸ்யாத்
கேஹாகத்யாதி மாத்ரே நிபதது சரணா கத்ய பிக்யோ பசாராத்
யத்வா அநேகார்த்த பாவாத் பவதி ஹி விவித பாலநீ யத்வ ஹேது –13-

அநந்யார்ஹம் முக்கியம் –ந்யாஸம் -சரணாகதி -மஹா விச்வாஸம்

ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம நுகதம் யாவதர்த்தம் முமுஷோ
தத்வ ஜ்ஞான நாத்மகம் தத் ப்ரதமமத விதே ஸ்யாதுபாயே ஸமேதம்
கைங்கர்யாக்யே புமர்த்தே அப்யநுஷஜதி ததப்யர்த்தநா ஹேது பாவாத்
ஸ்வாபீஷ்டா நந்ய ஸாத்யாவதிரிஹ து பர ந்யாஸ பாகோ அங்கி பூத –14-

ஸ்வரூப சமர்ப்பணம் -யானும் நீ என் உடைமையும் நீயே -/ பர சமர்ப்பணம் பல சமர்ப்பணம் –ப்ரீதி காரித்த கைங்கர்யமே -பரம புருஷார்த்தம் என்ற நினைவு /
நம் புத்திரர் பார்யையாதிகள் உடன் சேர்ந்தே சமர்ப்பனமோ என்னில் இவர்களும் நம் சொத்து இல்லையே -எல்லாம் அவனது அன்றோ

ந்யாஸா தேசேஷூ தர்ம த்யஜந வசநதோ அகிஞ்ச நாதிக்ரி யோக்தா
கார்ப்பண்யம் வா அங்க முக்தம் பஜநவதிதரா பேஷணம் வா அப்யபோடம்
துஸ் சா தேச் சோத்யமவ் வா க்வசிது பசமிதா வந்ய சம்மேளந வா
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்தஸ் ததிஹ ந விஹதோ தர்ம ஆஜ்ஞாதி சித்த –15-

சர்வ தர்மான் பரித்யஜ்ய -வர்ணாஸ்ரம தர்மங்களை விட கூடாதே -பக்தியில் அசக்தனுக்கு இது -என்றவாறு
-இதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

ஆதேஷ்டும் ஸ்வப்ரபத்திம் தத் அநு குண குணாத் யந்விதம் ஸ்வம் முகுந்தோ
மாமித் யுகத்வைக சப்தம் வததி ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் ப்ராப்ய ப்ராப கைக்யம் சகல பல ததாம் ந்யாஸதோ அந்யாந பேஷாம்
ப்ராதான் யாத்யம் ஸ கிஞ்சித் ப்ரதயதி ஸ பரம் ஸ்ரீ ஸகே முக்த்யுபாயே –16-

ஏகம்-அவன் ஒருவனே சித்த உபாயம் -பிரபத்தியும் அவனே செய்விக்கிறான் என்ற எண்ணம் வேண்டும்
-அப்படி இல்லை யாகில் பிரபத்தியும் சாதனா உபாயங்களிலே சேரும்

ஸ்வா பீஷ்ட ப்ராப்தி ஹேது ஸ்வயமிஹ புருஷை ஸ்வீக்ருத ஸ்யாத் உபாய
சாஸ்த்ரே லோகே ஸ சித்த ஸ புநருபயதா சித்த ஸாத்ய ப்ரபேதாத்
சித்த உபாயஸ்து முக்தவ் நிரவதிக தய ஸ்ரீ சக சர்வ சக்தி
ஸாத்ய உபாயஸ்து பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் தத்வ ஸீகார ஸித்த்யை–17-

அத்யந்த அகிஞ்சன அஹம் த்வதப சரணத சந்நி வ்ருத்தோத்ய நாத
த்வத் சேவை காந்த தீ ஸ்யாம் த்வமஸி சரணமித் யத்ய வஸ்யாமி காடம்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் த்வயி நிஹிதபரோ அஸ்ம் யேவமித்யர்ப்பி தாத்மா
யஸ்மை ஸ ந்யஸ்த பார சக்ருதத து சதா ந ப்ரயஸ்யேத் ததர்த்தம்–18–

ஐந்து அங்கங்களையும் சேர பிடித்து அருளிச் செய்கிறார் இதில் /
1–கார்ப்பண்யம் –அகிஞ்சன்யன் என்ற எண்ணம் -சரணாகதியை தவிர வேறே உபாயாந்தரங்களில் சக்தன் இல்லாதவன் – பிராப்தி இல்லாதவன்
2–பிரதி கூல்ய வர்ஜனம் -திரு உள்ளம் சேராதவற்றை செய்யாமல் இருக்க வேண்டுமே
3—ஆனுகூல்ய சங்கல்பம் –திரு உள்ளம் உகந்த கைங்கர்யங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமே
4—மஹா விச்வாஸம் –அவனே ரக்ஷகன் -களை கண் மற்று இலேன் -என்னும் உறுதி வேண்டுமே
5—கோப்த்ருத்வ வர்ணம் –நீயே ரசித்து அருள வேண்டும் என்று ஸ்வீ கரிக்க வேண்டுமே
6—ஆத்ம சமர்ப்பணம் –இதுவே சரணாகதி -மோக்ஷ பலனுக்காக ஒரே தடவை தான் பண்ண வேண்டும் –
பக்தி யோகம் போலே அன்று –

த்யக்த்வ உபாய அநபாயா நபி பரம ஜஹன் மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்
ப்ராயச் சித்தம் ஸ யோக்யம் விகத ருணததிர் த்வந்த்வ வாத்யாம் திதிஷூ
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணான் சத் ஸம்ருத்திம் ஸ யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ் தஸ்ய யத்வாஸ் அப்த வர்க்காத் –19-

பிரபன்னன் லோக யாத்திரை இருக்கும் விதம் பற்றி அருளிச் செய்கிறார் இதில் –
1—ஸ்வாரத்தமாக எத்தையும் செய்யாமல் இருக்க வேண்டுமே
2—சாஸ்த்ர ஆஜ்ஜை படியே -க்ருத்ய கரணங்கள் -அக்ருத்ய அகரணங்கள் -செய்து வாழ வேண்டும் –
3—நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம கர்மங்களை செய்தும் காம்ய கர்மாக்களை செய்யாமலும் இருக்க வேண்டுமே
4—பிராமாதிகமாக செய்த தவறுகளுக்கு பிராயச்சித்த பிரபத்தி செய்ய வேண்டும் –
5—சரணாகதனுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் தீரும் -பிரபத்தி தானே சிறந்த தபஸ் -பகவத் ஆராதனம் ஒன்றே குறிக்கோள்

ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷ் வநக குருஜந ப்ரக்ரியா நேமி வ்ருத்தி
ஸ்வார்ஹா நுஜ்ஞாத சேவா விதிஷூ ஸ ஸகேந யாவதிஷ்டம் ப்ரவ்ருத்த
கர்ம பிராரப்த கார்யம் ப்ரபதந மஹிம த்வஸ்த சேஷம் த்விரூபம்பு
க்த்வா ஸ்வாபீஷ்ட காலே விசதி பகவத பாத மூலம் ப்ரபந்ந –20-

பிரபன்னன் சுக துக்கங்களை சமமாக கொண்டு -த்ரிவித தியாகங்கள் -நினைவுடன் பகவத் ஆராதனை ரூபமாக கர்மங்களை செய்து கொண்டு இருப்பான்
-தனக்கு பக்தி ஞான வைராக்யங்கள் வளருவதற்கு மட்டுமே பிரார்திப்பான் –
விஷ்வக் சேனர் பெரிய திருவடி திரு வந்த ஆழ்வான் -ஆச்சார்ய குரு பரம்பரை இவர்களை மட்டுமே வனங்கள் கடவன்
பாகவதர் ஸம்ருத்திக்கும் பகவத் ஆராதனை உபகரணங்கள் ஸம்ருத்திக்கும் பிரார்த்திக்க கடவன்
1-வர்ணாஸ்ரம கர்மங்களை விடாமல் அனுசந்திக்கக் கடவன் –
2–திவ்ய தேசங்களில் சாத்துப்பொடி புஷபங்கள் சமர்ப்பித்து -உத்ஸவாதிகளை நடத்தி கண்டு களிக்கக் கடவன் –

ஸ்ருத்யா ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ ஸ்வயமிஹ பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ சித்தாம்
ஸ்வாதந்தர்யே பாரதந்தர்யே அப்யநிதர கதிபி சத் பிராஸ்தீய மாநாம்
வேதாந்த சார்ய இத்தம் விவித குரு ஜன க்ரந்த சம்வாத வத்யா
விம்சத்யா ந்யாஸ வித்யாம் வ்யவ் ருணத ஸூதியாம் ஸ்ரேயஸே வேங்கடேச–21-

சம்சார வர்த்த வேக பிரசமந ஸூ பத்ருக் தேசிக ப்ரேஷிதோ அஹம்
ஸந்த்யக்தோ அந்யை ரூபாயைர நுஸித சரி தேஷ் வத்ய சாந்தாபிஸந்தி
நி சங்கஸ் தத்வ த்ருஷ்ட்யா நிரவதிகதயம் ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் த்வாம்
ந்யஸ்த த்வத் பாத பத்மே வரத நிஜ பரம் நிர்பரோ நிர்பயோஸ்மி–22-

தம்முடைய ஆச்சார்யர் கிருபையால் -தாம் பெற்ற ஞானம் -பக்தி யோகத்தில் சக்தன் ஆலன் -பிரபத்தி ஒன்றே உபாயம்
-ஒரு தடவை மட்டுமே பண்ண வேண்டும் -என்றும் -பிரபத்தியின் மகிமைகளையும் அறிந்தமையையும் –
பெரிய பிராட்டியார் பேர் அருளாளன் இடம் சரண் அடைந்தமையையும் -நிர்ப்பரராய் கைங்கர்யங்களிலே கால ஷேபம் செய்து
நிரதிசய ஆனந்தம் இங்கேயே இந்த சரீரத்துடன் பெற்றதை அருளிச் செய்து நிகமிக்கிறார் –

இதி ந்யாஸ விம்சதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: