ஸ்ரீ வர வர முனி தினசர்யா–ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது -ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் உரை —

ஸும்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட்பதம் தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞாந பிரதம சுபம் —

மா முனிகள் திருவடித் தாமரை மலரில் வந்து போன்றவர் -அடியார்களுக்கு திவ்யமான ஞானம் அளிப்பவர்
-ஷேமங்கரர் -ஸ்ரீ தேவராஜாசார்யார் -திருநாமம் பூண்ட ஸ்ரீ எறும்பி அப்பாவைத் தொழுகிறேன் -என்றபடி –

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே திண்டில் அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் —
திருக்கடிகை அருகில் எறும்பி-ஸ்ரீ எறும்பி அப்பா -திரு ஆராதனை பெருமாள் -சக்ரவர்த்தி திருமகன் –திருவனந்த ஆழ்வான் தானே வந்து திருவவதரித்தார் –
என்று திரு உள்ளத்தில் உணர்ந்து -அத்தாணி சேவகத்துக்கு ஆட்படுத்திக் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்தித்து
அனுக்ரஹமும் திரு இலச்சினையும் பெற்று சகல அர்த்தங்களும் சிஷிக்கப் பெற்று -தம்முடைய பரம பக்தி பரிவாக ரூபமாக
மா முனிகள் விஷயமாக பல ஸ்தோத்திரங்கள் பணித்தார் -அவற்றுள் முந்துற முன்னம் பணித்தது இந்த தின சர்யா திவ்ய க்ரந்தமாகும் –
பகலில் நடை பெறக் கண்ட அனுஷ்டான க்ரமங்கள் -பூர்வ தின சரியையினால் பேசி -சாயம் ஸந்த்யைக்கு பிறகு
நடை பெறக் கண்ட அனுஷ்டான க்ரமங்களை உத்தர தின சரியையினால் பேசுகின்றார் -பூர்வ தின சரியையில் -முதல் -13-வரை உபோத்காதம் –

அங்கே கவேர கன்யாயாஸ் துங்கே புவன மங்களே ரங்கே தாம்நி ஸூகா ஸீநம் வந்தே வர வரம் முனிம் –1-

மங்களா சரண ரூபம் -திருக் காவேரியின் பரிசரத்திலே சகல லோக ஷேமங்கரமாயும் -திருவரங்க திருப்பதியில் இனிது வாழ்கின்ற மணவாள மா முனிகளை அடி பணிகின்றேன் –
சகல விபத்துக்களும் நீங்கி சேம வாழ்ச்சி ஸ்வாமிகள் திருவடி இட்டது முதலாக இருந்ததால் ஸூகாஸீநம் -என்கிற விசேஷணம் –

மயி பிரவிசதி ஸ்ரீ மன் மந்திரம் ரங்க சாயிந பத்யு பதாம் புஜம் த்ரஷ்டும் ஆயாந்த மவி தூரத–2-

பெருமாள் நியமித்த படியே இவர் மா முனிகளை சேவிக்க விரும்பி அவர் சந்நிதானத்தை நோக்கி செல்ல -மா முனிகளும் தம் சன்னிதானம் விட்டு
சந்நிதியில் மங்களாசானம் அர்த்தமாக புறப்பட்டு எழுந்து அருளா நின்றது -என்கிறார் இதில்
ஸ்வாமின் தேவரீரை சேவிக்க அடியேன் நெடும் தூரத்தில் நின்று ஆர்த்தி உடன் ஓடி வாரா நிற்க தேவரீர் தாமே நிர்ஹேதுகமாக அடியேனை விஷயீ கரிக்கத்
திரு உள்ளம் பற்றி என்னைத் தேடித் புறப்பட்டு வந்து அருளுவது போலே இருக்கிறதே -என்கிற உகப்பு தோற்ற –
-மயி ப்ரவிசதி- என்றும்- ஆயாந்தம் அவி தூர -என்றும் அருளிச் செய்கிறார் -அவி தூரதா –அதிக சமீபத்தில் இன்றிக்கே அதிக தூரத்திலும் இன்றிக்கே-
நடுத்தரமான இடத்திலே திரு மடத்தின் உள்ளேயே சேவை சாதித்து அருளினமை சொன்ன படி –
இந்த ஸ்லோகம் தொடக்கி -13-ஸ்லோகம் பவேயம் பவது காநாம் அஸஹ்யா நாம் அநாஸ் பதம் – வரை ஏக அன்வயமாய் இருக்கும் –
-12-ஸ்லோகத்தில் பவந்தம்- முநே வர வர ஸ்வாமிந் –4- ஸ்லோகத்தில் -பவத் ப்ரியவ்-சம்போதானம் –ஸ்வாமியை முன்னிலை படுத்தியே பேசுவதாய் இருக்கும் –

ஸூதா நிதி மிவ ஸ்வைரஸ் வீக்ருதோ தக்ர விக்ரஹம் – பிரசந் நார்க்க ப்ரதீகாச பிரகாச பரி வேஷ்டிதம்–3-

அமுதக்கடல் தானே இப்படி ஒரு திவ்ய மங்கள விக்ரஹ பரிக்ரஹம் பண்ண ஆசைப்பட்டு மா முனிகள் -இச்சா க்ருஹீதாபி மதோரு தேஹ -அப்ராக்ருதம் –
கண் கூசாமல் காணத்தக்க ஸூர்யன் ஒருவன் போன்ற ஒளி யுடையவர் -அபூத உவமை -சந்திரன் தண்ணளி யூட்டப் பெற்ற ஸூர்யன் போலே -பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –

பார்ச்வத பாணி பத்மப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியவ் விந்யஸ் யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலவ் மேதிநீதலே -4-

கீழே ஆயாந்தம் அவி தூரத-என்று மா முனிகள் எழுந்து அருளுகிற சந்நிவேசம்-செந்தாமரை திருக் கைகளால் அந்தரங்க ப்ரீதி பாத்ர சிஷ்யர்கள்
கோயில் அண்ணன்-அவர் திருத் தம்பியார் / கோயில் அண்ணன் வான மா மலை ஜீயர் -என்றுமாம் -பரிக்ருஹ்ய -ஸ்வீகரித்து -என்றுமாம்
பறைவேறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்டபின் /லஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் /அனுக்ரஹம் என் மீது இருக்க வேணும் -என்றபடி –
மேலே -22-ஸ்லோகத்தில் தத்ஸ சார்த்தம் விநிர் கத்ய ப்ருத்யைர் நித்ய அநபாயிபி ஸ்ரீ ரெங்க மங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேசயம் -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை மங்களாசானம் செயறகு அருள வெளியே புறப்பட்டு அருளும் படியை அருளிச் செய்கிறார் –
ஸ்தநந்த்ய பிரஜை தாயின் முளையிலே முந்துற முன்னம் வாய் வைக்குமா போலே ஸ்வாமியின் திருவடிகளில் கண் வைத்த படி -அங்க்ரீ ம்ருதுலவ் மேதிநீதலே

ஆம்லாநா கோமலாகாரம் ஆதாம் ரவிமலாம் பரம் -ஆபீ நவி புலோரஸ்கம் ஆஜாநு புஜ பூஷணம் –5-

பரம ஸூந்தர திரு மேனி -திருவரையில் சிவந்த ஆடை -உத்துங்க விசால வக்ஷஸ் ஸ்தலம் -திரு முழம் தாள் அளவும் தொங்கும்
திருக் கைகளையே திவ்ய பூஷணமாக கொண்டு விளங்கா நின்றேர் -என்று முன்னிலையாக அருளிச் செய்கிறார் –

ம்ருணால தந்து சந்தான ஸம்ஸ்தான தவலத்விஷா-சோபிதம் யஜ்ஞ ஸூத்ரேண நாபிபிம்ப சநாபிநா –6-

தாமரைக் கொடியின் உள்ளே யுள்ள நூற்களின் தொகுதி யுடைய சந்நிவேசம் போலே வெளுத்த ஒளியை யுடையதாய் –
திரு நாபி மண்டலத்து அளவும் தொங்குகின்ற திரு யஜ்ஜோபவீதத்துடன் திகழா இருந்தீர் –

அம்போஜ பீஜ மாலாபி ரபிஜாத புஜாந்தரம் ஊர்த்வ புண்ட்ரை ருபச் லிஷ்டம் உசிதஸ்தாண லக்ஷணை–7-

தாமரை மணிகளினால் அமைக்கப்பட்ட மலைகளினால் அழகிய திரு மார்பை யுடையீர்–திரு நெற்றி முதலான ஸ்தான பொருத்தமும் -லக்ஷண சவ்ஷ்டவமும்-
வாய்ந்த துவாதச ஊர்த்வ புண்டரங்கள் திரு மேனியில் இயற்கையாகவே தோன்றினவோ -என்னலாம் படி பொருத்தப் பெற்று இரா இருந்தீர் –

காஸ்மீர கேஸரஸ்தோம கடார ஸ்நிக்தா ரோஸிஷா கௌசேயேந சமிந்தானம் ஸ்கந்த மூலா வலம்பிநா –8-

குங்குமப் பூக்களின் திரட்சி போல் சிவந்தும் பளபளத்தும் விளங்கும் காந்தியை யுடைத்தாய் -திருத் தோள்களில் தொங்க விடப்பட்டிருப்பதான
காஷாய உத்தரீயத்தினால் பரபாக சோபை பெற்று பிரகாசியா இருந்தீர் -என்கை –
உத்தம ஆச்ரமிகளுக்கு உத்தரீய தாரணம் கூடாது என்கிற நிஷேதம் திவ்ய தேச ப்ராவண்யம் இன்றிக்கே வர்ணதர்மைக நிஷ்நாதர்களான யுத்திகளை நோக்கியது அன்று –

மந்த்ர ரத்ன அநு சந்தான சந்ததஸ் புரிதா தரம் -ததர்த்த தத்த்வ நித்யாந சன்னத்த புல கோத்கமம் –9-

த்வய மந்த்ரம் இடைவீடில்லாமல் அநு சந்தித்து துடிக்கும் திருப்பவளாம் -அதன் ஆழ்ந்த பொருளை செவ்வனே சிந்திப்பதால் புளகாங்கிதமான திருமேனி –
ஸர்வேஷாம் ஏவ மந்த்ராணாம் மந்த்ர ரத்னம் த்வயாஹ்வயம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம் –
த்வயம் அர்த்த அநு சந்தாநேந ஸஹ சதா ஏவம் வக்தா –ஸ்ரீ கத்ய ஸ்ரீ ஸூக்தி –ஸ்ரீ பராசரர் வசனம் –
தத் அர்த்த தத்வ நித்யான –அர்த்தம் மட்டும் இல்லாமல் அர்த்த தத்வம் -ஸ்ரீமன் நாராயண சரணவ் -என்று நம்மாழ்வாரும்
-மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானாரும் விவஷிதம் –
ஆக ஆழ்வார் எம்பெருமானார் இரண்டு திரு நாமங்களையும் சிந்தனை செய்வதே அர்த்த தத்வ நித்யானம் ஆகும் –

ஸ்மயமாந முகாம் போஜம் தயமாந த்ருகஞ்சலம் மயி பிரசாத ப்ரவணம் மதுரோதார பாஷணம் –11-

புன்முறுவல் பூத்து விளங்குகின்ற முகாரவிந்தம் -திரு உள்ளத்தில் க்ருபாதிசயத்தை கோள் சொல்லும் கடாக்ஷ வீக்ஷணம் –
இன்று அளவும் அடி பணியாத அடியேன் பால் ஆதாரம் பெருக இருந்தீர் –
அநுக்ரஹமே வடிவு எடுத்தால் போன்ற சப்த புஷ்டியும் அர்த்த புஷ்டியும் கொண்ட இனிய திரு வாசகங்கள் –

பவந்த மேவ நீரந்தரம் பஸ்யன் வஸ்யேன சேதஸா மூனே வர வர ஸ்வாமின் முஹுஸ் த்வாமேவ கீர்த்தயன் —12-
த்வத் அந்நிய விஷய ஸ்பர்ச விமுகைரகி லேந்த்ரியை-பவேயம் பாவ துக்கா நாம் அஸஹ்யா நாம நாஸ் பதம் –13-

கீழே -அருளிச் செய்த த்வதீ யாந்த விசேஷணங்கள் எல்லாம் இந்த ஸ்லோகத்தில் உள்ள பவந்தம் என்கிற விசேஷ பதத்தில் அந்வயம்-
கீழ் சொன்ன பெருமைகள் எல்லாம் வாய்ந்த தேவரீரையே இடைவிடாமல் கண்ணாரக் கண்டு கொண்டு இருப்பேனாய் –
தேவரீருடைய கடாக்ஷ விசேஷத்தினாலே எனக்கு ஸ்வ அதீனமாகப் பெற்ற மனத்தைக் கொண்டு -யானும் என்னெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்றபடி
மற்ற விஷயாந்தரங்களில் சிறிதும் பற்று இல்லாத சகல இந்திரியங்களை கொண்டு -சம்சாரிக தாபங்களுக்கு ஆஸ்ரயம் அல்லேனாய் ப்ரஹ்ம ஆனந்த சாலியாகக் கடவேன்-
இதுவரை உபோத்காத ரூபம் -மேலே தினசர்யா விசேஷ ப்ரதிபாதன பிராரம்பம் –

பரேத்யு பச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்திதே-பிரபுத்தீய சரணம் கத்வா பராம் குரு பரம்பராம் —14-
த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்வ யாதாம்ய தர்ப்பணம் -பர வ்யூஹாதி காந் பத்யு பிரகாரான் ப்ரணிதாய ச –15-

இது தொடங்கி தாம் கண்டா நித்ய அனுஷ்டானவை கரிகளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார் –
அபரயாமம் அணித்தானவாறே -திருக் கண் விழித்து அருளி -குரு பரம்பரையை தஞ்சமாக நினைத்து அனுசந்தித்து அருளி –
ரஹஸ்ய த்ரயத்தையும் சிந்தனை செய்து -பரத்வாதி பஞ்சகம் -நிலைகளையும் சிந்தனை செய்து அருளி –
மேலே பல ஸ்லோகங்களிலும் அருளிச் செய்து –21-ஸ்லோகத்தில் மந்த்ர ரத்ன பிரயச்சந்த -என்கிறதிலே அன்வயித்து முடிவு பெறும் –

தத் ப்ரத்யுஷசி ஸ்நாத்வா க்ருத்வா பவ்ர்வாஹ்ணிகீ க்ரியா யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவனே நைவ சேதஸா –16-

திரு முத்து விளக்குதல் -அருணோதய காலத்தில் நீராட்டம் -எம்பெருமானார் திருவடிகளில் பரமபக்தி யுக்தமான திரு உள்ளத்துடன்
பெறாத காலத்தில் செய்து அருள வேண்டிய ஆஹ்னிகங்களை எல்லாம் செய்து அருளி –

அத ரங்கநிதிம் சம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் ஸ்ரீ நிதாநம் ச நைஸ் தஸ்ய சோதயித்வா பத த்வயம் –17-

ப்ராத கால க்ருத்யங்களை முடித்துக் கொண்டு மடத்துக்கு எழுந்து அருளி தமக்கு
ஆராத்ய தேவதை ஸ்ரீ அரங்க நகர் அப்பனுக்கு அர்க்க்ய பாத்ய சமநீ யாதிகள் சமர்ப்பித்து –

ததஸ் தத் சந்நிதிஸ் தம்பமூல பூதல பூஷணம் –ப்ராங்முகம் ஸூகமாஸீநம் பிரசாத மதுர ஸ்மிதம் –18-

அரங்க நகர் அப்பன் சந்நிதியில் ஒரு ஸ்தம்பத்தின் அடிக்கு அலங்காரமாகக் கிழக்கு நோக்கி இனிது வீற்று இருந்து
திரு உள்ளம் பிரசன்னமாய் இருப்பது தோன்ற மதுர ஸ்மிதம் கொண்டு அருளி –

ப்ருத்யை ப்ரிய ஹிதை காக்ரை ப்ரேம பூர்வம் உபாஸிதம் தத் ப்ரார்த்தநாநு சாரேண ஸம்ஸ்காரான் ஸம்விதாய மே –19-
அநு கம்பா பரீவாஹை அபிஷேச நபூர்வகம் திவ்யம் பத த்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம –20-
சாஷாத் பலைக லஷ்யத்வ பிரதிபத்தி பவித்ரிதம் மந்த்ர ரத்னம் பிரயச்சந்தம் வந்தே வர வரம் முனிம் –21-

ஸ்வரூப அனுரூப வ்ருத்தியிலே ஊன்றி இருக்கும் -ஸ்ரீ வானமா மலை ஸ்வாமி -ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்ரீ கந்தாடை அண்ணன் போன்ற சிஷ்யர்கள் புடை சூழ
அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அடியேனுக்கு பஞ்ச ஸம்ஸ்கார பிரதானம் பண்ணி அருளி –
க்ருபா ப்ரவாஹ பரிவாக ரூபங்களான கடாக்ஷ வீக்ஷணங்களை அடியேன் மீது செலுத்தி -சாஷ்டாங்க பிராணாயாமம் செய்து நின்ற
அடியேனுக்கு என் சென்னிக்கு அணியாக -தம் திருப் பாதார விந்த யுகளத்தை தந்து அருளி -மங்களா சாசனத்திலேயே ஊன்றி இருக்கும் படி
அனுக்ரஹம் செய்து அருளி மந்த்ர ரத்னத்தை உபதேசித்து அருளிய மா முனிகளை தொழுகின்றேன்
சாஷாத் பலைக லஷ்யத்வ பிரதிபத்தி பவித்ரிதம்-சாஷாத் பலமும் ஆசார்யத்வமும் சித்திக்கிற படி -என் என்னில் -தன நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் சித்திக்கும் –
சாஷாத் பலமாவது உபதேச பாத்திரமான இவன் திருத்தி மங்களா சாசனத்துக்கு ஆளாகை-
இது தன நினைவாலே சித்திக்கை யாவது -உபதேஷடாவான தான் விப்ரதிபதிகள் ஒன்றும் இன்றி இதுவே பலமாக நினைத்து உபதேசிக்கவே
அவன் அப்படி திருந்தி மங்களா சாசன அதிகாரியாகை -வேறு ஒரு எண்ணம் இன்றிக்கே யுபதேசித்து அருளினை படி சொல்லிற்று –

ததஸ் ஸார்த்தம் விநிர்கத்ய ப்ருத்யைர் நித்ய அநபாயிபி-ஸ்ரீ ரங்க மங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜ கேசயம் –22-
மதி ஸ்ரீ மதி த்வாரே கோபுரம் சதுரா நநம் ப்ரணி பதிய சதை அந்த ப்ரவிஸந்தம் பஜாமி தம் –23-

அதன் பிறகு அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் அரங்கனை மங்களா சாசனம் செய்து அருள்வதற்காக தம்மை ஒரு நொடிப் பொழுதும் அகலகில்லாத
சிஷ்ய வர்க்கங்கள் உடன் புறப்பட்டு அருளிப் பெரிய திரு வாசலிலே நான்முகன் கோட்டை வாசல் என்னும் ப்ரஸித்தியை யுடைய
திருக் கோபுர நாயனாரைத் தெண்டன் இட்டு எழுந்து அருளா நின்ற மணவாள மா முனிகளை வணங்குகின்றேன் –
பிரகார கோபுராதிகளின் வைலக்ஷண்ய அநு பாவத்தில் திரு உள்ளம் உன்று அவற்றை தனித்தனியே அனுபவித்துக் கொண்டே
உள்ளுப் புக வேண்டி இருப்பதனால் -சநை ரத்ன ப்ரவிஸந்தம்-என்னப்பட்டது-

தேவி கோதா யதிபதி சடத் வேஷிணவ் ரங்க ஸ்ருங்கம் சேநா நாதோ விஹக வ்ருஷப ஸ்ரீ நிதிஸ் சிந்து கன்யா –
பூமா நீளா குரு ஜந வ்ருத பூருஷஸ் சேத்ய மீஷாம் அக்ரே நித்யம் வர வர முநேரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே –24-

தேவி கோதா–ஆண்டாள் / யதிபதி சடத் வேஷிணவ் –எம்பெருமானார் நம்மாழ்வார் / ரங்க ஸ்ருங்கம் -ஸ்ரீ ரெங்க விமானம் /
சேநா நாதோ சேனை முதலியார் / விஹக வ்ருஷப -பக்ஷிராஜனான பெரிய திருவடி /ஸ்ரீ நிதிஸ் சிந்து கன்யா –ஸ்ரீ ரெங்க நாச்சியார் ஸ்ரீ ரெங்க நாதன் /
பூமா நீளா குரு ஜந வ்ருத பூருஷஸ் ச -பூ தேவி ஸ்ரீ தேவி நீளா தேவி ஆழ்வார்கள் ஆகிய இவர்களால் சோள பட்ட பரமபத நாதன் –
இதி அமீஷாம் அக்ரே–என்னும் இவர்கள் திரு முன்பே -மங்களாசாசன அர்த்தமாக எழுந்து அருளி இருந்து சேவை சாதிக்கும்
நித்யம் வர வர முநேரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே-ஸ்ரீ மணவாள மா முனிகளின் திருவடியிணைகளை நித்யமும் தொழுகின்றேன் –
ஸ்வாமி நித்யம் மங்களா சாசனம் செய்து அருளும் கிராமம் -இதே ஸ்லோகம் ஸ்ரீ வர வர முனி சதகத்திலும் உள்ளது –

மங்களா சாசனம் க்ருத்வா தத்ர தத்ர யாதோசிதம் தாம் நஸ் தஸ்மாத் விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதனம் –25-

கீழ் ஸ்லோகத்தில் தெரிவித்த முறைப்படியே ஆங்காங்கு தம்முடைய ப்ரேமத்துக்குத் தகுதியாக மங்களா சாசனம் செய்து அருளி
சந்நிதியில் இருந்து புறப்பட்டு மீண்டும் தம்முடைய திரு மடத்து என்ற எழுந்து அருளி -இதற்கு மேல் இரண்டு ஸ்லோகங்களிலும் அந்வயம் –

அத ஸ்ரீ சைல நாதார்ய நாம்நி ஸ்ரீ மதி மண்டபே ததங்கரி பங்கஜ த்வந்த்வச் சாயா மத்ய நிவாஸிந நாம் –26-

திருமலை ஆழ்வார் திரு மண்டபத்தில் சித்ரா ரூபியாக எழுந்து அருளி இருக்கும் ஸ்வாசார்யாரது திருவடித் தாமரை இணையின் நிழலிலே எழுந்து அருளி இருந்து
சிஷ்யாணாம்-விசேஷ பதம் அத்யாஹரித்து கொண்டு -கால ஷேப அர்த்தமாக ஸ்ரோதாக்கள் குழுமி இருந்தபடியே சொல்லிற்றாகக் கொள்வது –

தத்த்வம் திவ்ய பிரபந்தா நாம் சாரம் சம்சார வைரிணாம் சரசம் ச ரஹஸ்யா நாம் வ்யாஸ ஷாணம் நமாமி தம் –27-

வானின் மீது ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே என்றும் -மீட்சியின்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றும்
சொல்லுகிறபடியே ப்ரக்ருதி சம்பந்தத்தை போக்கித் திருநாடு சேர்ப்பிக்க வல்ல அருளிச் செயல்களின் சாரமான தத்வத் பொருளை
ரஹஸ்யார்த்தங்களோடு சேர்த்துப் பரம போக்யமாக வியாக்யானித்து அருளா நின்ற அந்த மணவாள மா முனிகளை வணங்குகின்றேன் –

தத ஸ்வ சரணாம் போஜ ஸ்பர்ச சம்பந்த ஸுரபை பாவநை ரர்த்தி நஸ் தீர்த்தைர் பாவயந்தம் பஜாமி தம் –28-

அத்யாத்ம சாஸ்திரம் பிரவசனம் செய்து அருளி தலைக்கு கட்டின பிறகு சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் -ப்ரசாதித்து அருளா நின்ற ஸ்வாமியை தொழுகின்றேன்

ஆராத்ய ஸ்ரீ நிதிம் பச்சாத் அநு யாகம் விதாய ச பிரசாத பாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் –29-

அனந்தரம் ஸ்வ ஆராத்ய தேவதையான அரங்க நகர் அப்பனுக்குத் திருவாராதனம் கண்டு அருள பண்ணி பகவத் பிரசாத பிரதிபத்தி ரூபமான பிரசாத
ஸ்வீகாரத்தைச் செய்து அருளி போனகம் செய்த சேடம் தந்து அருளி அடியேனைக் கடாக்ஷித்து அருளின மா முனிகளைச் சிந்தனை செய்கின்றேன் —

ததச் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரேஷனே உத்தம்சித கரத்வந்த்வம் உபவிஷ்ட முபஹ்வரே –30-

அமுது செய்து அருளின பிறகு புண்டரீகாக்ஷனான புருஷோத்தமன் பாக்களில் திரு உள்ளத்தை ஊன்ற வைத்து
மத்தகத்திடைக் கூப்பிய கையராய் ஏகாந்தமாக எழுந்து அருளி இருந்து சிந்தனை செய்து அருளா நின்ற
மா முனிகளை சேவிக்கின்றேன் -கிரியா பதம் மேல் ஸ்லோகத்தில் உள்ளது -அனுயாகத்துக்கு பிறகு யோக நிஷ்டை -பரத்வாஜர்
-க்ருத்வா அநு யாகம் குர்வீத ஸ்வாத்யாயம் வைஷ்ணவம் பரம் ததோ யுஞ்ஜீத ச ஆத்மாநாம் புருஷே புஷ்கரேஷனே –என்றபடி -யோகிகளின்
உள்ளத்து உள்ளே எம்பெருமான் விக்ரஹ விசிஷ்டானாய்க் கொண்டு சந்நிதி பண்ணி அருளுகிறார் -சாஸ்த்ரார்த்தம் -புஷ்கரேஷனே -பதத்தால் ஸூசகம் –

அபிஜாஸ நஸ்த மவதாத ஸூஜாதா மூர்த்திம் ஆமீலிதாஷ மனுசம்ஹித மந்த்ர ரத்னம்
ஆநம்ர மௌலி பிருபாசித மந்தரங்கை நித்யம் முனிம் வரவரம் நிப்ருதோ பஜாமி –31-

யோகார்த்தமாக பத்மாசனம் எழுந்து அருளி -பரம பரிசுத்த ஸூந்தர திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையராய்
சுபாஸ்ரய வஸ்து தியானத்தினால் சிறிது மூடின திருக் கண்களை யுடையராய் -த்யான அநு சந்தான நிரதராய் -விநயமே வடிவெடுத்த ஸ்ரீ வானமா மலை ஸ்வாமிகள்
முதலான அந்தரங்க சிஷ்யர்களால் அத்தாணிச் சேவகம் செய்யப் பட்டவரான மணவாள மா முனிகளை ஏகாக்ர சித்தனாய் எஞ்ஞான்றும் அனுபவம் செய்யா நின்றேன் –

தத சுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மன யதீந்த்ர ப்ரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் –32-

யோக அப்யாஸத்திற்குப் பிறகு அந்த சுபாஸ்ரய வஸ்துவில் லயித்து நிச்சயமாய் இருக்கின்ற திரு உள்ளத்தை மீட்டு
எம்பெருமானார் இடத்தில் ஊன்ற வைப்பதற்கு முயற்சி செய்து அருளா நின்ற அந்த மணவாள மா முனிகளைத் தொழுகின்றேன் –
ஹேய ப்ரத்ய நீகத்வே சதி சித்த ஆகர்ஷகத்வம் சுபாஸ்ரயத்வம் –சுபாஸ்ரய லக்ஷணம் –
யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவனே நைவ சேதஸா –16-என்றாரே கீழே -யதீந்த்ர பிரவணர் என்றே நிரூபகம்
இடையில் – புருஷே புஷ்கரேஷனே சேதஸ் சமாதானம் -30-ப்ராப்தமான படியால் அந்த நிலையில் நின்றும் மீண்டும் பழைய படியே
யதீந்த்ர பிரவண ஹ்ருதயரானமை சொல்லிற்று ஆயிற்று –
எம்பெருமானார் திருவடிகளான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு கலந்து பரிமாறப்ப புகுந்த படியை மேலே உத்தர தினசரியைக்கு அவதாரிகை போலே அருளிச் செய்தபடி
அபராஹ்நத்தில் ஸ்ரீ வசன பூஷணாதி திவ்யாக்ரந்த காலஷேபம் அடுத்தபடியாக அருளிச் செய்யப்படுகிறது அன்றோ- -அதற்கு இந்த ஸ்லோகம் அவதரணிகை போலும் –

———————————————-

உத்தர தின சர்யா —

இதி யதிகுல துர்ய மேதமாநை சுருதி மதுரை ருதிதை ப்ரஹர்ஷயந்தம் வர வர முனி மேவ சிந்த யந்தீ மதிரிய மேதி நிரத்யயம் பிரசாதம் —

இத்தால் யதிராஜ விம்சதியின் அனுசந்தானம் தெரிவிக்கப் பட்டதாயிற்று –இவ்விதமாக செவிக்கு இனிய சஞ்சொற்கள் நிறைந்த ஸ்துதியினால்
எம்பெருமானாரை ஸ்துதித்து திரு உள்ளம் உகந்து அருளா நின்ற மா முனிகளையே சிந்தனை செய்யும் என் மதியானது நிகரற்ற தெளிவு பெற்று விளங்குகின்றது –

அத கோஷ்டீம் கரிஷ்டா நாம் அதிஷ்டாய ஸூ மேதஸாம் வாக்யா லங்க்ருதி வாக்யாநி வியாக்கியாதாரம் நமாமி தம் —1-

யோக நிலையை விட்டு வெளியே எழுந்து அருளியான பின்பு மேதாவிகள் நிறைந்த திரு வோலக்கத்தில் எழுந்து அருளி இருந்து
ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய ஸூ க்திகளை வியாக்யானித்து அருளா நின்ற மா முனிகளைத் தொழுகின்றேன்
-வியாக்கியாதாரம் நமாமி தம் -ப்ரவசனத்தையே சொல்லிற்று ஆகிறது -வாக்யா லங்க்ருதி-என்றது ஸ்ரீ வசன பூஷணம் என்றபடி –

சாயந்தனம் தத க்ருத்வா சமய காரா தனம் ஹரே -ஸ்வைராலாபைச் சுபைச் ஸ்ரோத்ரூன் நந்த யந்தம் நமாமி தம் -2-

சாயம் சந்த்யா அனுஷ்டானங்களைத் தலைக்கு கட்டி அருளி அரங்க நகர் அப்பனுடைய திருவாராதனத்தையும் செய்து அருளி அழகிய
வார்த்தைகளினால் ஸ்ரோத்தாக்களை உகப்பித்து அருளா நின்ற மா முனிகளை வணங்குகின்றேன் –
ஸ்வைராலாபைச்-சொல்லும் அவித்து சுருதியாம் –ஸ்வாமி திருவாய் திறந்து எதை அருளிச் செய்தாலும் அத்தனையும் சாஸ்த்ர அர்த்தமாயேயாய் இருக்குமே –

தத கநக பரவி பர்யங்கே தருண த்யுமணித் யுதவ் விசால விமலச் லஷ்ண தூங்க தூளா ச நோஜ்ஜ் வலே-3-
சமக்ர சவ்ர போத்கார நிரந்தர கந்தரே சோபதானே ஸூகாஸீநம் ஸூகுமாரே வராசனே -4-

அர்த்த பஞ்சக விசேஷ ப்ரகாசகங்களான ஸ்வ யுக்தி விசேஷங்களாலே அந்தே வாசிகளை உகப்பித்து அருளின பிறகு பால ஸூர்யன் போலே
விளங்கும் காந்தியை யுடையதாய் -பரந்து வெளுத்து நிகு நிகு என்ற உயர்ந்த பஞ்சணையினால் அலங்க்ருதமாய் நிரவதிகமான நறு மணக் கிளர்ச்சியினால்
வ்யாப்தமான நான்கு பக்கங்களையும் யுடையதாய் -தலையணையோடு கூடியதாய் ஸ்வர்ண மயமாய் இருந்துள்ள மஞ்சத்தில் யோக யோக்யமாய்
ஸூ குமாரமான உத்தம ஆசனத்தில் இனிதாக எழுந்து அருளி இருக்கின்ற –ஆதாரஅதிசயம் தோற்ற அதிச யுக்தியாகச் சொல்லும் வார்த்தை –
செம் போன் மாடத்தி திருக் குருகூர் -என்றும் -படியிடை மாடத்தி தடியிடைத் தூணில் பதித்த பான் மணிகளின் ஒளியால் விடி பகல் இரவு என்று
அறிவரிதாய திரு வெள்ளி யான்குடி யதுவே -போல அருளிச் செய்த கட்டளை –
விவிக்த தேசே ச ஸூக ஆசனஸ்த -என்று யோக அப்யாஸத்திற்கு சொல்லி இருப்பதை அடி ஒற்றி இவ்வதிசய யுக்தி உத்தமம் யாகும் –

உன்மீலத் பத்மகர்ப்ப த்யுதி தலமுபரி ஷீரா ஸங்காத கௌரம்-ராகா சந்த்ர பிரகாச பிரசுர நக மணி த்யோத வித்யோதமா நம்
அங்குல்யக்ரேஷூ கிஞ்சின் நத மதிம் ருதுலம் ரம்ய ஜாமாத்ருயோகீ திவ்யம் தத பாத யுக்மம் திசது சிரஸி மே தேசிகேந்த்ரோ தயாளு –5-

இது முதல் -11-ஸ்லோகம் வரை அடியார்கள் பரம பரவசர்களாய் ஸ்துதி செய்யும் படிகளைச் சொல்லுகிறது –
பரம காருணிக்கராய் பரமாசார்ய ஸார்வ பவ்மரான ஸ்வாமியுடைய பரம விலக்ஷணமான திவ்ய திருவடித் தாமரை இணையை
அடியேன் முடி மீது வைத்து அருள வேண்டும் என்ற பிரார்த்தனை இதில் –
உன்மீலத் பத்மகர்ப்ப த்யுதி தலம் -அப்போது அலர்ந்த தாமரையின் உள்ளே விளங்குகின்ற காந்தி போன்ற காந்தியை யுடைய
உட்புறம் -புறவடி செந்தாமரை போலே செவ்வியதாயும் -என்றபடி –
உபரி ஷீர ஸங்காத கௌரம்-திருவடியின் மேல் பாகம் பால் திரளை போலே வெண்ணிறம்
முன்னலோர் வெள்ளிப் பெரு மழைக் குட்டன் மொடு மொடு விரைந்தோடப் பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப் பல தேவன் என்னும் தன்னம்பியோடப் பின்கூடச் செல்வான் தளர் நடை நடவானோ –சேஷ அம்சம் –
இங்கும் மா முனிகள் ஆதிசேஷ அவதாரம் -என்பதால் –ஷீர ஸங்காத கௌரம்
இதையே பிரதிவாதி பயங்கர அண்ணா -வர வர முனி சதகத்தில்–துக்தோ தன்வத் தவள மதுரம் சுத்த சாத்விக ரூபம் ரூபம்
யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணீந்திர அவதாரம் –என்று அருளிச் செய்கிறார் –
ராகா சந்த்ர பிரகாச பிரசுர நக மணித் யோத வித்யோதமா நம் –பூர்ண சந்திரனுடைய பிரகாசம் போன்ற பிரகாசம் விஞ்சிய திரு நகங்கள் ஆகிற
ரத்னங்களின் ஒளியினால் விளங்கப் பெற்றது -இதுவும் திருப் பாத யுக்மதுக்கு விசேஷணம்
அங்குல்யக்ரேஷூ கிஞ்சின் நதம்–திரு விரல்களின் நுனி சிறிது வணங்கி இருப்பது உத்தம புருஷ லக்ஷணம் -பாதாவராளரங்குளீ -என்பர் மஹா கவிகளும் –
அதிம் ருதுலம்-பரம ஸூ குமாரமான அப்படிப்பட்ட திவ்ய பாதாரவிந்த யுகளத்தை அடியேனுடைய முடி மீது வைத்து அருள வேணும் என்று பக்தர்களின் பிரார்த்தனை –

த்வம் மே பந்துஸ் த்வமஸி ஜனகஸ் த்வம் சகா தேசிகஸ் த்வம் வித்யா வ்ருத்தம் ஸூக்ருத மதுலம் வித்தமப் யுத்தமம் த்வம்
ஆத்மா சேஷீ பவசி பகவன் ஆந்தாச் சாஸீதா த்வம் யத்வா சர்வம் வர வர முநே யத்யதாத்மாநு ரூபம் –6-

ஸ்வாமியே தேவரீர் அடியேனுக்கு உறவினர் ஆகிறீர் – தேவரீர் தந்தை ஆகிறீர் தேவரீர் துணைவர் ஆகிறீர் -தேவரீர் ஆச்சார்யர் ஆகிறீர் –
விதியையோ அனுஷ்டானமோ சிறந்த ஸூக்ருதமோ உத்தமமான செல்வமோ -எல்லாமேமே தேவரீர் ஆகிறீர்
உடலுக்கு உயிராக நிற்பவருக்கு தேவரீரே-
அடியேனுக்கு கைங்கர்ய பிரதிசம்பந்தியும் தேவரீரே-உள்ளே நின்று நியமித்துப் பொருமவரும் தேவரீரே–பல சொல்லி என் –
ஆத்ம ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான பொருள் எல்லாம் அடியேனுக்கு தேவரீரே -என்று இப்படி சில சிஷ்யர்கள் விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –

அக்ரே பச்சாதுபரி பரிதோ பூதலம் பார்சவதோ மே மவ்லவ் வக்த்ரே விபூஷி சகல மானஸ அம் போருஹே ச
தர்சம் தர்சம் வர வர முநே திவ்யம் அங்கரி த்வயம் தே நித்யம் மஜ்ஜன் அம்ருத ஜல தவ் நிஸ்த ரேயம் பவாப்திம் –7-

மா முனிகளே -மிக விலக்ஷணமான தேவரீருடைய திருவடி இணையை முன் புறத்திலும் பின் புறத்திலும் மேலேயும் நிலத்தில் நான்கு பக்கங்களிலும்
என்னுடைய பக்கங்களிலும் சிரசிலும் முகத்திலும் எல்லா அவயவங்களிலும் ஹ்ருதய புண்டரீகத்திலும் பாவனா பிரகார்ஷத்தினால்
ப்ரத்யக்ஷ சாமானாகாரமாக ஸ்ம்ருதி விஷயமாகி ஆனந்த அமுதக்கடலில் எஞ்ஞான்றும் ஆழ்ந்தவனாகி சம்சார சாகரத்தை கடக்கக் கடவேன் –

கர்மா தீனே வபுஷி குமதி கல்பயன் ஆத்ம பாவம் துக்கே மக்ந கிமிதி ஸூ சிரம் தூயதே ஜந்துரேஷ –
சர்வம் த்யக்த்வா வர வர முநே சம்பிரதி த்வத் ப்ரஸாதாத் திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸூப்ரபாதம் –8-

ஸ்வாமியே -அந்யதா அஞ்ஞான யுக்தனான இந்த ஒரு பிராணி -அடியேன் – பூர்வ கர்மாயத்தமான சரீரத்தில் ஆத்ம பிரதிபத்தியை ஏறிட்டுக் கொண்டவனாகி
தேஹாத்ம பிரமசாலியாய்-ஆத்யாத்மீகம் முதலிய தாப த்ரயத்தில் மூழ்கினவனாய் நெடும் காலமாக ஏதுக்குப் பரிதாபிக்கப் கடவேன்
-இந்த பரிதாபத்தை போக்கி அருளத் திரு உள்ளம் பற்ற வேணும் -என்று சேஷ பூரணம் செய்வது –
இப்போதே தேவரீருடைய திருவருளால் புறம்பு உண்டான பற்றுகளை அடைய வாசனையோடு விட்டு தேவரீருடைய திவ்ய பாதார விந்தத்தை
அடையும் படி ஒரு நல் விடிவு தந்து அருள வேணும் என்று சில பக்தர்கள் பிரார்த்தியா நிற்பார்கள் –

யா யா வ்ருத்திர் மனசி மம சா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ் தே யோ யோ ஜல்பஸ் ச பவது விபோ நாம சங்கீர்த்தனம் தே
யா யா சேஷ்டா வபுஷி பகவான் சா பவேத் வந்தனம் தே சர்வம் பூயாத் வர வர முநே சம்யகாரா தனம் தே –9-

ஸ்வாமியே அடியேனுக்கு உண்டாகிற மநோ வ்ருத்தி எல்லாம் தேவரீருடைய சம்ஸ்மரண ரூபமாகவே யாகக் கடவது –
அடியேனுடைய வாக்கில் வருகிற ஜல்ப்பிதங்கள் எல்லாம் தேவரீருடைய திரு நாம சங்கீர்த்தனம் யாகக் கடவது –
அடியேன் பக்கலிலே தோன்றும் சகல வியாபாரங்களும் தேவரீருடைய திருவாராதனம் யாகக் கடவது -என்று சில சிஷ்யர்கள் விஞ்ஞாபனம் செய்யா நின்றார்கள் –

அபகத மத மாநைர் அந்திமோபாய நிஷ்டை-அதி கத பரமார்த்தைர் அர்த்த காமா நபேஷை –
நிகில ஜன ஸூஹ்ருத்பிர் நிர் ஜித க்ரோதா லோபை வர வர முனி ப்ருத்யைர் அஸ்து மே நித்ய யோக –10-

விஷய போகக் களிப்பும் செருக்கும் அற்றவர்களாயும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம உபாயமாக நிஷ்கர்ஷிக்கப் பட்ட
அந்திம உபாயத்தில் ஊற்றம் உடையவர்களாயும் சகல சாஸ்த்ர சாரார்த்தங்களும் கை வந்தவர்களாயும் -தர்ம மோக்ஷங்கள் தவிர அர்த்த காமங்களில்
விருப்பம் அற்றவர்களாயும் -ஒருவர் இடத்திலும் மாத்சர்யம் கொள்ளாதே சர்வ பூத ஸூஹ்ருத்துக்களாயும் க்ரோதம் லோபம் இரண்டையும் வென்றவர்களாயும்
இருக்கின்ற மா முனிகளின் அடியாரோடு அடியேனுக்கு நித்ய சகவாசம் உண்டாகக் கடவது -என்று விஞ்ஞாபனம் செய்வார் சில பக்தர்கள்-

இதி ஸ்துதி நிபந்த்தே ந ஸூசி தஸ்வம நீஷிதான் ப்ருத்யாத் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா சிஞ்சந்தம் சிந்தயாமி தம் –11-

கீழே -5-ஸ்லோகம் தொடங்கி-11-ஸ்லோகம் வரை – ஆறு ஸ்லோகங்களால் ஸ்துதி மொழிகளை விஞ்ஞாபனம் செய்து தம் தம் கருத்தை
வெளியிட்டுக் கொண்டு இரா நின்ற அடியார்களைக் குளிர நோக்கி அருளா நின்ற மா முனிகளைச் சிந்தனை செய்யா நின்றேன் –

அத ப்ருத்யாந நுஜ்ஞாப்ய க்ருத்வா சேதச் சுபாஸ்ரயே சய நீயம் பரிஷ்க்ருத்ய சயாநம் ஸம்ஸ்மராமி தம் –12-

இங்கனம் சிஷ்ய அநுக்ரஹமான பிறகு அவரவர்களுக்கு விடை கொடுத்து அருளி தம் திரு உள்ளத்தைச் சிந்தனைக்கு இனிய ஸ்வாராத்ய தேவதையின்
இடத்தே ஊன்ற வைத்து திருப் பள்ளியைப் பரிஷ்கரித்துத் திருக் கண் வளர்ந்து அருளா நின்ற மா முனிகளை ஸ்மரிக்கின்றேன் –

தின சர்யாமிமாம் திவ்யாம் ரம்யா ஸுமய ஜாமாத்ரு யோகிந பக்த்யா நித்யம் அநு த்யாயன் ப்ராப்நோதி பரமம் பதம் –13-

மணவாள மா முனிகள் விஷயமாய் அமைந்த திவ்யமான இந்த தினசர்யா பிரபந்தத்தை அன்போடு நிச்சலும் சிந்தை செய்பவர்
ஸத்கதி ப்ராப்திக்கு உரியவர் ஆவர் என்று பலன் அருளிச் செய்து தலைக்கட்டுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: