ஸ்ரீ நம்மாழ்வார் விஷயமாக -ஸ்ரீ ஜீயர் நாயனார் -அருளிச் செய்த -ஸ்ரீ நக்ஷத்ர மாலிகை–ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் உரையுடன் —

அஸ்மா ஸூ வத்சலதயா க்ருபயா ச பூயஸ் ஸ்வேச்சாவ தீர்ணமிவ -ஸும்ய வரம் முநீந்த்ரம் –
ஆச்சார்ய பவ்த்ரம் அபிராமவரர்பிதாநம் அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி -தனியன் –

மா முனிகளே வாத்சல்யம் கிருபை அடியாக நித்ய விபூதியில் இருந்து மீண்டும் திருவாவதரித்தாரோ என்று சங்கிக்க வேண்டும் படி –
அவரோடு ஓக்க ஞான அனுஷ்டானங்கள் உடையவராய் -அவருடைய திருப் பேரனார் -பரம காருணிகராய்-அபிராமவராச்சார்யர் என்று வட மொழியிலும்
ஜீயர் நாயனார் என்று தென் மொழியிலும் -வழங்கப் பெற்ற ஆசிரியரை வணங்குகின்றேன் –

——————————————–

சப்த புஷ்ட்டி -அர்த்த புஷ்ட்டி -நிறைந்த -முத்ரா அலங்கார ரீதியில் ஸ்லோகம் தோறும் -27-நக்ஷத்ரங்களையும் வரிசையாக அமைத்து –
நக்ஷத்ர மாலிகை -அக்ஷர அந்தாதி -முன் நின்ற ஸ்லோக முடிந்த அக்ஷரமே அடுத்த ஸ்லோக ஆரம்ப அக்ஷரம் –
மேலும் முதலில் எட்டு எழுத்து பாதம் கொண்ட அனுஷ்டுப்பில் ஆரம்பித்து -13-ஸ்லோகம் வரை க்ரமேண ஒவ் ஒரு எழுத்தாக கூட்டிக் கொண்டு –
நடுவில் உள்ள -14-ஸ்லோகம் -21-எழுத்துக்கள் கொண்ட பாதம் -ஸ்ரக்தரா -வ்ருத்தத்தில்-அமைத்து –
மேலும் முதல் ஸ்லோகமும் -27-ஸ்லோகமும் ஒரே வ்ருத்தம்/ இரண்டாவதும் –26-ஸ்லோகமும் ஒரே வ்ருத்தம் —
இப்படியே -13-ஸ்லோகமும் -15-ஸ்லோகமும் ஒரே வ்ருத்தம் -மாலையாக சேர்ப்பதற்கு ஏற்ற படி –

—————————–

ஸ்ரீ மான் பராங்குச முநிர் ஜீயாத் யத் ஜ்ஞான முத்ரயா –இந்திரிய அஸ்வ யுஜ்வ் நிரூணாம் நித்யம் விஷய வீதய –1-அஸ்வினி நக்ஷத்ரம் ஸூசகம் –

யாவர் ஒரு நம்மாழ்வாருடைய ஞான முத்திரையினால் விஷயாந்தர க்ராமங்கள் ஆகிற குதிரைகளின் சேர்க்கையைப் பெறுகின்றன இல்லையோ –
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மலிந்த நம்மாழ்வார் பல்லாண்டு வாழ்ந்திடுக –
திரு ஞான மாத்திரையால் சம்சாரிகளையும் ஈடுபடுத்த வல்லரான ஆழ்வாருக்கு மங்களா சாசனம் –

————————-

யதுரசி பரணீயா ஸ்ரக் விகசித வகுலா நத்தா -ச ஜயதி மஹிமா நாதோ முரரிபுபத சக்தோ ந –2–பரணீ நக்ஷத்ர ஸூசகம் –

–யத் உரசி -யாவர் ஒரு நம்மாழ்வாருடைய திரு மார்பிலே அணிந்து கொள்ளத் தக்கமாலை -மலர்ந்த
மகிழம் பூக்களினால் கட்டப்பட்டதோ-
எம்பெருமான் திருவடிகளில் பிரவணராய் -மகிமையே வடிவு எடுத்தவரான -ப்ரபந்ந ஜன கூடஸ்தராய் -சர்வ உத்காரஷராய் வாழ்கின்றார் –
மஹிமவான் -என்று சொல்லாமல் மஹிமா -என்றது -தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச பிராஜ்ஞவத் –ஸ்ரீ பிரம்மா ஸூத்ர -கட்டளை படி –

—————————————-

நந்தா அனந்த அங்க்ரி நளின யுக்மே கர்த்தா லோகார்த்தி கபாளாநா நாம் -பத்ராய திராவிட நிகமா நாம் த்ரஷ்டா புஷ்டாய வகுள ப்ருத் ஸ்யாத் —3—

கார்த்திகா நக்ஷத்ரம் ஸூசகம் -திராவிட நிகமா நாம் த்ரஷ்டா புஷ்டாய பத்ராய–ஸ்யாத்-என்று அன்வயம் –
எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையில் வணங்குவதே தொழிலாக இருப்பவரும் –துயர் அறு சுடரடி தொழுது ஏழு என் மனனே –
உலகோர்களின் ஆர்த்தியை எல்லாம் கபளீ கரிப்பவரும்
தமிழ் வேதமான திவ்ய பிரபந்தங்களை சாஷாத் கரித்தவரும் -நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
மகிழ் மாலை மார்பினருமான நம்மாழ்வார் -நமக்கு மிகுந்த மங்களங்களை அளிப்பவராக ஆக வேணும் –

————————————————————–

ஸ்யாதேவ சா மே பணிதிச் சடாரேர் யயா உதிதா உச்சைஸ் சரணிர் ஜநாநாம் ஆரோஹிணீ நா
அப்யவரோஹிணீ ஹி வேதோதிதா து த்வயம் அப்யுபைதி –4—ரோஹிணீ நக்ஷத்ரம் ஸூ சகம் –

யாதொரு நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்தி-பிரபன்ன ஜனங்களுக்கு உஜ்ஜீவனமே அன்றி அவரோகணம் -கீழே தள்ளுவதாக இல்லையோ –
வேதம் -இரண்டுக்கும் -அன்றோ-த்ரை குண்ய விஷயா வேதா -முமுஷூ புபூஷூ சாதாரணமாய் இருக்குமே
-அது போலெ அல்லவே அருளிச் செயல்கள்-மோக்ஷ ஏக ஹேது அன்றோ –இவையே எனக்கு வாசோ விதேயமாக கடவது –

————————————————————–

திலக மஹா ந காசிதபி ச்ருதவ் த்ரிஜகதா ம்ருகசீர்ஷ சமுத்திதா -ஸ்புடதரம் வகுளா பரணீயவாக் புருஷமாதிம சேஷ பதைரபி —-5—ம்ருகசீர்ஷம் ஸூ சகம் –

வேதம் தன்னில் தலையான வேதாந்தத்தில் உள்ளது அன்றிக்கே கர்மா காண்டம் -ஒரு வாக்கியமும் உலகுக்கு திலக பூதனான எம்பெருமானை சொல்லிற்று இல்லையே –
நம்பெருமாள் அருளிச் செய்தவையோ எல்லா பதங்களினாலும் ஆதி புருஷனான எம்பெருமானையே மிக விளக்கமாக தெரிவிக்கும் –
திருமாலவன் கவி யாது கற்றேன் -/மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத்த பிரான் அடி மேல் / உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேர்க்கு –
சகல பதங்களாலும் சாஷாத்தாகவும் ஸூ ஸ்பஷ்டமாகவும் எம்பெருமானையே ப்ரதிபாதிக்கை யாகிற ஏற்றம் பெற்றது
சீர்ஷம் -தலை -வேதாந்தத்தை சொன்னபடி –
வேதைஸ் ச சர்வைரஹமேவ வேத்ய–ஸ்ரீ கீதை / வேத்யோ வேதைஸ் ச சர்வைரஹமிதி பகவான் ஸ்வேந ச வ்யாஸகர்த்த –ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்திகள்/
வேதம் ஸ்புடம் / அருளிச் செயல்களோ ஸ்புட தரம் –

—————————————————————

பித்ராதிஸ் சகல விதோபி பந்து வர்க்கோ யஸ்யா ஸீத் சரஸிஜவாசி நீ ஸஹாய ஆவிஸ்ஸ்யுர் கந கருணாரசாவசேகை ரார்த்ரா மே வகுள ப்ருத கடாஷபாதா–6–ஆர்த்ரா நக்ஷத்ரம் ஸூசிதம்

யாவரொரு நம்மாழ்வாருக்கு தந்தை தாய் முதலான சகல வித பந்து வர்க்கமும் திருமகள் கொழுநனான எம்பெருமானே ஆயினானோ –
சேலேய் கன்னியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே-
அந்த நம்மாழ்வாருடைய இடையறாத கருணா ரஜப் பெருக்கினால் குளிர்ந்த திருகி கண் நோக்கங்களானவை என் பொருட்டு ஆக வேணும்
-ஆழ்வார் -அடியேனை குளிரக் கடாக்ஷித்து அருள வேணும் என்றபடி -அருள் வெள்ளம் நம்மை ஆழ்த்த வேண்டுமே –

——————————————————–

தாமஸ்ரயாமி கருணாம் வகுளாபிராமம் யாசவ் புநர்வஸூ மதீவலயே வதீர்ணா -ப்ரஜ்ஞாத்ருசா
உந்மிஷிதயா ப்ரதித அநுபாவா ஜ்யோதி பரம் யதநித்தம் ததிதம் சகார–7—புநர்வஸூ–நக்ஷத்ரம் ஸூசிதம் –

நம்மாழ்வார் என்கிற கருணா மூர்த்தி -பூ மண்டத்தில் திருவவதரித்து -எங்கும் பிரசித்தி பெற்ற பெருமையையுடைய
நன்றாக மலர்ந்த ஞானக் கண்களால் -ஒருவர் கண்ணுக்கும் எட்டாத பரஞ்சோதியை சாஷாத்காரித்தாரோ –
என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும் உட்கண்ணால் காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி –
கண் காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாதபடி நிற்கும் பரஞ்சோதியை கண்ணாரக் கண்டு களித்தவர் அன்றோ ஆழ்வார் –
-மகிழ் மாலையினால் அழகு பெற்ற அந்த கருணா மூர்த்தியை பணிகின்றேன்-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான்
அவ்வருமறையின் பொருள் -அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
கருணாம் -அப்ரமேயம்

———————————————————-

ரசிதவதி ரமாயா நாயகஸ் யாங்கிரி புஷ்யத் ப்ரணயரச ஸூதாப்தி ஸ்ரோதசி ஸ்வைரேகாஹம் பிரபவதி கலி
கர்மா ப்ராவ்ருஷேண்ய அம்புவாஹே வகுள தர முநீந்த்ரே தாப வார்த்தா கதம் ந –8—புஷ்ய நக்ஷத்ரம் ஸூசகம்

திருமகள் கொழுநனான எம்பெருமானுடைய திருவடிகளில் வளர்கின்ற அன்பாகிற அமுத வெள்ளத்திலே யதேஷ்டமான
அவகாஹ நத்தை செய்து கலி ஸந்தாபத்தைப் போக்க வல்ல கார் முகிலாய் இரா நின்ற நம்மாழ்வார்
நமக்கு இறைவராய் இருக்கும் பொது நமக்கு தாபம் என்கிற பேச்சுக்கு இடம் உண்டோ —
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–கார்காலத்து எழும் கார் முகில் ஆழ்வார்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறும் முகில் –
ரமாயா நாயகஸ் யாங்கிரி புஷ்யத்–ப்ரணயரச ஸூதாப்தி ஸ்ரோதசி ஸ்வைரேகாஹம் -ரசிதவதி-காதல் கடல் புரிய விளைவித்த காரமார் மேனி
–காதல் கடலில் மிகப் பெரிதால் –திருமால் விஷயமான காதல் கடலில் அவகாஹிக்கப் பெற்றது இந்த காள மேகம் –
உப்பு கடலில் இல்லாமல் அமுத கடலில் படிந்த மேகம் என்பதால் -ஸூதாப்தி ஸ்ரோதசி-
பக்தி ஸ்ருங்கார வ்ருத்தயா பரிணமதி -நாயகி சமாதியாலே அனுபவிக்கவும் அமைந்ததால் -ப்ரணயரச ஸூதாப்தி-என்கிறார்
கலி ஸந்தாபத்தை போக்க வல்ல ஆழ்வார் ஆகிற காள மேகம் -என்பதால் கலி கர்மா ப்ராவ்ருஷேண்ய அம்புவாஹே-என்கிறார் –
வர்ஷா காலத்தில் தோன்றுமது – ப்ராவ்ருஷேண்யம் எனப்படுமே –
இப்படிப்பட்ட ஆழ்வார் நிழலிலே வார்த்தைக்கும் நமக்கு ஒரு நாளும் தாபங்கள் இல்லை என்றதாயிற்று –

—————————————————————————–

நமஜ் ஜநஸ்யா சித்த புத்தி பக்தி சித்ர தூலிகா பவாஹி வீர்ய பஜ்ஜநீ நரேந்திர மந்த்ர யந்த்ரணா
ப்ரபந்ந லோககைரவ பிரசன்ன சாரு சந்திரிகா சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –9—
பவாஹி -அஹி பதத்தினால் ஆச்ரேஷா நக்ஷத்ரம் ஸூ சிதம் -ஆஸ்ரேஷா நக்ஷத்ரம் சார்பா தேவதா -வேத வாக்கியம் –
தேவதையை சொல்லும் முகத்தால் நக்ஷத்ரத்தை ஸூசிபிக்கிற புடையும் உண்டு -மேலே அனுராதா நக்ஷத்ரத்தையும்-17-ஸ்லோகத்தில் –
அனுராதா நக்ஷத்ரம் மித்ரோ தேவதா -என்றும் வரும் –

ஆழ்வாருடைய ஹஸ்த முத்திரையை வர்ணிக்கிறார் -தம்மை வணங்கும் அடியார்களின் ஹிருதயமாகிற சுவரில் -பக்தியாகிற சித்தரத்தை எழுதும் கருவி –
பக்தியை கூட்ட வல்லதாய் இருக்குமே –
ஆழ்வார் சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாது -ஆகையால் -சம்சாரசர்ப்ப வீர்யம் தணிக்கும் விஷ வைத்யனுடைய மந்த்ர பிரயோக சிட்டிகை போன்றதாயும்
-சம்சார ஸ்ப்ருஹைதையை அறுக்க வல்லதாய் இருக்குமே -ஹடாத்-என்பதால் தமஸ் ஸூ பூக்க அரிதாய் இருக்கும் என்றதாயிற்று –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலா போன்றதாயும் -பிரபன்னர்களை பரவசராக்க வல்லதாயும் இருக்குமே –

—————————————————————–

மநஸ் ஸ்படிக தர்ப்பண ப்ரதிபலத் பர ப்ரஹ்மண -பிரதர்சன மிவாஸரந் ப்ரதித போத முத்ராங்கித
சதாம் அபய ஸம்ஸிதா பவபயா பிதப்தாத் மநா மகாநீ ஸமயேத நச் சடாரி போரவாம கர —10—
மகா நக்ஷத்ரம் ஸூசிதம் -கவர்க்க சதுர்த்தமாகவே வேதத்தில் இந்த நக்ஷத்ரம் உள்ளதே –

கீழே ஹஸ்த முத்திரை வர்ணனை இதில் முத்ராஞ்சிதமான ஸ்ரீ ஹஸ்தத்தை வர்ணிக்கிறார் –
ஹிருதயத்துக்கு நேராக இருப்பதால் -தமது திரு உள்ளம் ஆகிற ஸ்படிக கண்ணாடியிலே பிரதிபலித்து தோன்றுகிற
பர ப்ரஹ்மத்தை காட்டா நின்றது போல் இருப்பதும் -புகழ் பெற்ற ஞான முத்திரையினால் அடையாளம் பெற்றதும்
சம்சார பீதியினால் தப்பிக்கும் நெஞ்சினரான சாத்விகர்களுக்கு அபயம் அளிக்க வல்லதுமான
நம்மாழ்வாருடைய வலது திருக் கையானது நம்முடைய பாவங்களைத் தொலைக்கக் கடவது –
பிரதித்த போத முத்ராங்கித -என்று விசேஷணம் -ஞான முத்ரையததே -அது எங்கனம் -சதாம் அபாய ஸம்ஸிதா -என்னும் அபய முத்திரையை காட்டும்
என்னில் -ஞான முத்திரையின் சன்னிவேசம் தானே அபய முத்திரை போலவும் காணக் கூடியதாகையாலே அப்படி சொல்லக் குறையில்லை –

————————————————————————————–

ரமயது சட சத்ரு அதியுன்னத ஆசார யுக்தைர் ஜனை அவநத பத பத்ம யுக்ம அநுகம்பா அம்ருத அம்போநிதி –
பஹு வித க்ருத பூர்வ பல்குனயகாசார சிந்தா ஆகுலம் ஹ்ருதயம் அஸத்ருச ஆத்ம பாதாரவிந்த அநு ஷங்காத் மம—11—பூர்வ பல்குனி நக்ஷத்ரம் ஸூசகம் —

மிகச் சிறந்த அனுஷ்டானம் உள்ள சாத்விக ஜனங்களால் வாங்கப் பட்ட திருவடித் தாமரையிணையை யுடையவரும் —
அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையன் -/ மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -ஸ்ரீ மதுரகவிகள் போல்வார் ஆழ்வார் திருவடிவாரத்தில் படுகாடு கிடப்பரே
கருணை யாகிற அமுதக் கடலாய் இருப்பவருமான நம்மாழ்வார் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -முற் பிறவிகளில் செய்த பல வகைப்பட்ட
இழி தொழில்களைப் பற்றிக் கவலையினால் கலங்கி இருக்கின்ற என் மனத்தை ஒப்பற்ற தமது திருவடித் தாமரைகளின் சம்பந்தத்தினால் கலக்கம் நீங்கிக் களிக்கச் செய்திடுக-
பல்கு-அசாரம்/ ந்யகாசார-நீசமான நடத்தை -ந்யக் நீச கர்வ ஹ்ரஸ்வாஸ் ஸ்யு –அமர கோசம்
அஸத்ருச -விசேஷணம் பாதாரவிந்தத்திலும் -அநுஷங்கத்திலும் அன்வயம் -கருத்து ஒன்றே

———————————————————————

மக்நம் மாநச மாஸ்ம பூச் சடரிபோ அவ்யாஜ சித்தா தயா நவ்கா காசந நாவிக அபி ச புநஸ் சந்தாரகக்ராமணீ-
ஏதேந உத்தர பல்குநீரஸ பரிக்லிஷ்ட உபயோக ஊர்மிகம் -துக்க ஆவர்த்த துரந்த பார கமநம் சம்சார வாராகரம் —12—உத்தர பல்குநீ – நக்ஷத்ரம் ஸூ சகம்

கீழ் சிந்த்தாகுலம் மம ஹ்ருதயம் -என்றவர் தாமே தம் ஹ்ருதயத்திற்கு அபாயம் அளிக்கிறார் –
வாராய் மட நெஞ்சே -சம்சார சாகரத்தில் ஆழ்ந்து வருந்திக் கிடவாதே –நல் விரகு சொல்கிறேன் -நம்மாழ்வாருடைய நிர்ஹேதுகமான
தொரு திருவருளானது பிறவிக்கு கடலுக்குப் படகாகும்–அக்கறை சேர்ப்பவர்கள் தலைவராகி அவ்வோடத்தை ஓட்டுபவரும் அவ்வாழ்வாரே ஆவார் –
அல்பங்களாய் சுவை அற்றவைகளாய் பலவகை கிலேசங்கள் பொருந்தியவையாய் இருக்கிற விஷய போகங்கள் ஆகிற அலைகளை யுடையதும்
பலவகை துன்பங்கள் ஆகிற சுழிகளை யுடையதும் கரை என்ற முடியாததுமான பிறவி என்னும் கடலை இவ்வாழ்வார் ஆகிய நாவிகனைக் கொண்டு கடந்து செல்வாயாக –
ஆழ்வார் திருவடிகளை பற்றினவர்களுக்கு சம்சார சாகரம் முழம் தாள் அளவாகும் என்று தெரிவித்தபடி –

——————————————————————————-

ரத்ந தீபிகாயமாந ஹஸ்த முத்ரிகா க்ருத த்ரயீ கிரீந்த்ர கந்தர அந்தராள காட ரூடா ரூடி நிதான ஸூசநேந –
த்ராவிடாகம உபகீதி மூலஸேக சீத வீத நித்ர பத்ர திவ்ய தீந்த்ரிணீ சமீபகேந நாதவான் அஹம் பராங்குசேந –13- ஹஸ்த நக்ஷத்ரம் ஸூசகம் –

மணி விளக்குப் போன்ற ஸ்ரீ ஹஸ்த முத்திரையினால் வேதங்கள் ஆகிற மலை முழஞ்சுகளின் உள்ளே திடமாக அழுந்தி கிடக்கின்ற -பேர்க்கவும் பேராத நிதியான
பரம் பொருளை ஸூசிப்பிக்கின்றவரும் -ஆழ்வார் திருக் கைத்தல முத்திரை ரத்ந தீபம் போன்றது – வேர்ப் பற்றில் திருவாய்மொழியின் இசை பாடுவதாகிய
தீர்த்த அபிஷேகத்தினால்–தீர்த்தங்கள் ஆயிரம் – குளிர்ந்து உறங்காத இலைகளை யுடையதான திருப்புளி அடியிலே வீற்று இருப்பவருமான நம்மாழ்வாரையே
அடியேன் ஸ்வாமியாக யுடையேன் –
-உறங்காப் புளி-ஒரு போதும் இல்லை மூடுவது இல்லை -என்பதால் -வீத நித்ர பத்ர-/ லோக யாத்திரை ஒன்றும் அறியாமல் திருப் புளி ஆழ்வார் அடியிலே
திரு அவதரித்த உடனே போந்து -வீடு பெரும் அளவும் வீற்று இருந்தார் –

—————————————————–

நத்யா நத்யாககாரீ க்ஷணம் அபி சித்த அசித் த்ராயக அமேய காமே ச்சந்தஸ் சந்த ஸ்வரூபே மஹசி கமலயா பாசமாநே அசமாநே –
ஸ்ரேய ஸ்ரேயஸ் விசங்கை பரிசய ஸூரபி கைசராணாம் சராணாம் பாதாத் பாதாத் பவாப்தவ் சடரிபுரிஹா நோ வீக்ஷணேந ஷணேந —14-
சித்ரா நக்ஷத்ரம் ஸூ சகம் -நடுநாயக நக்ஷத்ரம் -அதிக அக்ஷர வ்ருத்தத்தில்–21-அக்ஷரம் ஒவ் ஒரு பாதத்திலும் – – அமைக்கப் பட்ட ஸ்லோகம் –

சேதன அசேதனங்களை எல்லாம் ரஷிக்க வல்ல அப்ரமேயமான சங்கல்பத்தை யுடையதும் -வேதங்களின் தாத்பர்யமே வடிவு எடுத்ததும் -பிராட்டியோடே கூடி
விளங்கா நிற்பதுமான -ஒப்பற்ற எம்பெருமான் என்னும் பரஞ்சோதி -இடம் எப்பொழுதும் இறைப் பொழுதும் நமஸ்காரத்தை விடாமல் இருப்பவரும்
நத்யாககாரீ-விடாதவர்-எத்தை என்றால் -நத்யா-நமஸ்காரத்தை –
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதொரு -அப்ரமேயம் ஹி தத் தேஜ-
எம்பெருமானை மஹஸ் -என்று மறைத்து அருளிச் செய்து இருப்பது காண்க
ச்ரேயஸைப் பெற்றுள்ள சாத்விகர்களின் திரள் களினால் ஆச்ரயிக்கத் தகுந்தவரும்-ஸ்ரீ மதுரகவிகள் -ஸ்ரீ மன் -நாதமுனிகள் போல்வார் பணிய நின்றவர் –
-மகிழம் பூ மாலைகள் அணிந்து கொண்டு இருப்பதனால் -பரிமள பிரசுரருமான நம்மாழ்வார் ஒரு நொடிப் பொழுது கடாக்ஷித்து அருளி
இவ்வுலகில் உள்ள நம்மைப் பிறவிக்கு கடலில் விழுந்து போவதில் நின்றும் காத்து அருளக் கடவர்

——————————————————————————-

ந பிரபத்தி வர்த்தமன ப்ரவர்த்தந அபதாந வாஸந அநுசாரி நவ்யபேத சர்வ தாஜலாசய அன்வயம் கதம் சமம் சரோஜம்
ஸ்வ அதிகாமி யோகிப்ருந்த சித்த பத்ம பத்த ஸுஹ்ருத அநு ரக்த ரூபயோச் சடாரி பாதயோர் யுகேந சன்னத ஆர்த்தி பஞ்சநேந–15- –ஸ்வாதி நக்ஷத்ரம் ஸூசகம் –

இது முதல் -26-ஸ்லோகம் அளவும் ஆழ்வாருடைய-திருவடி தொடக்கி திருமுடி ஈறாக — திவ்ய அவயவ ஸுந்தர்ய வர்ணனம் –
அடி பணிந்தாருடைய ஆர்த்தியை எல்லாம் அகற்றுமதான -தம்மை மிகவும் விரும்புகின்ற யோகி சமூகத்தின் ஹ்ருதய புண்டரீகத்தில்
அன்புடையவைகளாய் -அத ஏவ–அநு ராக பரிதமான திரு உள்ளத்தில் அன்புடன் உறைந்து -மிகச் சிவந்து இருக்கின்ற நம்மாழ்வார் திருவடிகளின் இணையோடு
பிரபத்தி மார்க்கத்தை ப்ரவர்த்திப்பித்தல் ஆகிற சரிதையின் வாசனையையும் அறியாததும் ஜலாசய சம்பந்தத்தை ஒரு காலும் விடாமல் எப்போதும்
ஜடாசய சம்பந்தத்தையே கொண்டு இருப்பதுமான தாமரைப் பூவானது எப்படி ஒப்புமை பெற்றதாகும் –
லடயோரபேத–லகாரத்துக்கும் டகாரத்துக்கும் பேதம் இல்லை –தாமரை பக்ஷம் லகாரம் -ஜலம் -நீர் நிலைக்கு வாசகம் -ஆழ்வார் பக்ஷத்தில் மந்த புத்தி நீசர் -அன்வயம் அற்றது என்றபடி
ஆர்த்தியை தொலைக்கும் திருவடிகளுக்கு தாமரை உவமை சொல்ல யுரியது அல்லவே –

——————————————————-

நத்வா யாம் குஸூமாயுத இஷூதி ருசி வ்யாகாதம் ஆதந்வதீம் சேமுஷ்யா மஹதாம் அஹாயி தருணீ ஜங்காஸூ ஜங்காலதா –
விஸ்தீர்ணச் சவி சாகயா சடஜித வ்ருத்த ஆநுபூர்வீ ஜுஷோ ஜங்கா கல்பதரு ச்ரியா ஸூரபிதம் சிந்தாவநம் மா மகம் –16—விசாகா நக்ஷத்ரம் ஸூ சகம் –

ஆழ்வாருடைய திருக் கணைக் கால் அழகில் ஈடுபட்டு பேசுகிறார் –
-ஜங்கை ஆகிற கற்பக வருஷம் அழகினால் -என்னுடை சிந்தை ஆகிற பொழில் நறு மணம் மிக்கு -நாறு நறும் பொழில் ஆயிற்று –
மன்மதனுடைய அம்பறாத் துணியின் அழகையும் வென்று விளங்கும் –
இதில் கண் வைக்கும் மஹான்கள் -விஷயாந்தரங்களில் சங்கத்தை நெஞ்சாலும் நினையாதவர்கள் ஆவார்
வேகமாக ஓடும் தன்மை ஜங்காலதா -அது விடப்பட்டது -ஆழ்வாருடைய ஜங்கைகளை சேவித்த மகான்களின் சேமுஷி -மதி –அவற்றை விட்டு
இதிலே ஆழம் கால் பட்டு இருக்கும் என்றபடி –
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்ததும் -பரந்த தேஜஸ் புஞ்சங்கள் ஆகிற சாகைகளை யுடையதும் -காந்தி பரம்பரைகள் -சாகையாக உருவகம் –
உருண்டை வடிவு நன்கு அமைந்து இருக்கப் பெற்றதும்–வ்ருத்த அநு பூர்வீ விசிஷ்டம் -நல்ல நடத்தை யுடையது என்றபடி –

———————————————————–

கநத் அவயவ லோல சோபா அவதாத ஆபகா ஸ்ரோதசஸ் சமுதித குரு புத்புத ஆகார ஸந்தேஹ சந்தாயினோ
ககுத் அதிகத மித்ர பாவம் ஸ்வபாவாத் யுகம் ஜானுனோ மம ஹ்ருதி சடரிவைநாம்ந முநீந்த்ரஸ்ய சந்தீவ்யது –17-
மித்ர பாதத்தால் அனுராதா நக்ஷத்ரம் ஸூ சகம் -அனுராதா நக்ஷத்ரம் மித்ரோ தேவதா –கீழே ஆஸ்ரேஷா நக்ஷத்ரம் -9- ஸ்லோகம் போலே இங்கும் –

அழகு மிக்க திவ்ய அவயவங்கள் தள தள என்று சோபையாகிற நிர்மல நதியின் வெள்ளத்தில் நின்றுந் உண்டான பெரிய நீர்க்க குமிழியின் வடிவு தானோ இவை
-என்று சந்தேகிக்கும் படியான ஆழ்வாரது திரு முழம் தாள்களின் இயற்கையாகவே எருதுகளின் முசுப்போடு தோழமை பெற்று இருக்கும்
இணையானது என் உள்ளத்திலே விளங்க வேணும் –

—————————————————-

துலா சரணி ஸீமநி ப்ரதிதரூபயா ஹஸ்தி நாம் கரேண கரபேண வா கதளிகாபிரகாண்டேந வா
ததோபரி ச பச்யதாம் நயன பந்த நஜ்யேஷ்டயா சமத் க்ருதி மதீ மதிச் சடரிபு ஊரு லஷ்மயா மம –18- –ஜ்யேஷ்டா நக்ஷத்ரம் ஸூ சகம் –

திருத் துடைகள் -அடி பருத்து நுனி சிறுத்து மத மத என்று மாம்சளங்களாய் விளங்கும் திருத் துடை அழகில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யானைகளின் துதிக்கையோடும் -கரபம் என்னும் புறம் கையினோடும்–மணிக்கட்டு தொடக்கி சுண்டு விரல் அளவும் உள்ள புறம்பு பாகம் –
-சிறந்த வாழைத் தண்டினோடும் ஒப்பிடுகையில் பரம காஷ்டையிலே -புகழ் பெற்ற யுருவத்தை யுடையதும் -அதற்கு மேலே பார்ப்பவர்களின்
கண்களைப் பிணிப்புண்ணப் பண்ணுமத்தில் தலைமை பெற்றதுமான திருத் துடைகளின் அழகினால் என்னெஞ்சகம் அழகு பொலியப் பெற்றது –
வீற்று இருந்த அழகில் திருத் துடைகளின் கீழ் அழகு சேவிக்கப் போகாதே -மேல் அழகு சேவித்த மாத்திரத்திலே கண்களை பிணிப்புண்ணச் செய்யுமே –

——————————————————————

மகா ப்ரரோஹ மஞ்ஜரீ மனோஜ்ஞ ரத்ந மேகலா கலாப புஷ்பிதா கடீ தடீ படீ சடத்விஷ-உரஸ்ஸ்ரவத் ப்ரபாஜரீ
நிபாத நிம்ந நாபிகா அவட யுத்த பேத மண்டலீ விதர்க்க மூலம் ஏவ ந –19—மூல நக்ஷத்ரம் ஸூ சகம் –

நம்மாழ்வாருடைய தேஜஸ் புஞ்ஜ மஞ்ஜரிகளாலே மனோஹரமான மணி மேகலாகலாபம் பூத்து இருக்கப் பெற்ற திருவரைப் பீதகவாடையானது
அதில் ஈடுபாடுள்ள நமக்கு திரு மார்பில் நின்றும் பெருகுகின்ற காந்தி வெள்ளம் விழுந்து பள்ளமான
திரு நாபித் தலத்தில் உண்டான நுரையின் திரளோ என்கிற சங்கையைத் தோற்றுவிக்கிறது-
விதர்க்கம் -உத்ப்ரேக்ஷை–பீதகவாடை மெல்லியதாகவும் வெண்ணிறமாகவும் இருப்பதால் நுரையாக உத்ப்ரேஷித்தல் பொருந்தும் –

—————————————————–

நயன ஸூபக நாபீம் உத்தி சந்தீ சடாரே சர இதி பரி பாஷா டவ்கதே சார்த்த கத்வம்-சந்த இதரதா ந ஸம்ஹதா
நேத்ர மீநா கதம் இஹ விஹரேயு கௌதுக உதிர்க்க யுக்தா –20—பூர்வாஷாடா நக்ஷத்ரம் ஸூ சகம்

கண்ணுக்கு அழகிய திருநாபீ -பற்றி உண்டான இது ஒரு குளம் -என்கிற பிரவாதம் உண்மைத் தன்மையை அடைகின்றது –
ஆழ்ந்து இருப்பதால் திரு நாபியை தடாகம் என்பது கவி மரபு -அப்படி இல்லாவிடின் நம்முடைய கண்கள் ஆகிற மீன்கள்
திரண்டு கொண்டு மிக்க குதூஹலத்தோடே கூடினவைகளாய் இந்த திரு நாபியில் எப்படி விளையாடும் –

——————————————-

தாம் மத்ய தேச ஸூஷமாம் அவலோகயாமி ரோமாவலீ த்ரி வளிகா ருசிராம் சடாரே ரேகா உத்தரா யத் உபமாம்
அதிக அபிலாஷாஸ டவ்கேத வா யதி வா ந வடபத்ர சோபா –21—உத்தராஷாடா நக்ஷத்ரம் ஸூ சகம் –

ரேகைகளினால் சிறந்து விளங்குகின்ற ஆலிலையின் அழகானது மிகுந்த விருப்பம் யுடையதாய் யாதொரு இடை அழகோடு ஒப்புமையைப் பெறுமோ
அல்லது பெறாதோ -அப்படிப்பட்ட ஆழ்வாருடைய ரோமாவளியினாலும் மும்மடிப்பினாலும் அழகு பொழிந்த இடையின் அழகை இடைவிடாது சேவிக்கின்றேன் –

——————————————————————–

பாஸா ந வ்யதிபி ரீ பவந்தி ப்ருங்கா ஹாரஸ்தாத் உரசி ஹரிந் மனேச் சடாரே ஆரூடா வகுளமயீம்
ஸ்ரஜம் ஸூகந்திம் சப்தேந ஸ்ரவண ஸூகேந யாந்தி பேதம் –22—ஸ்ரவண நஷ்ரத்ரம் ஸூசகம் –

ஆழ்வாருடைய மகிழம் பூக்களினால் பரிமள பிரசுரமான மாலையில் எறியுள்ள வண்டுகள் தமது ஒளியினால் திரு மார்பில் ஹாரத்தில் இருக்கும்
மரகத பச்சையில் காட்டிலும் வேற்றுமை பெறுகின்றன அல்ல -ஆனாலும் செவிக்கு இனிய இசையினால் வண்டுகள் எண்ணலாம் படி வேற்றுமை எய்துகின்றன –
வண்டின் அழகையும் திருமார்பில் அணிந்து இருக்கும் -ஹரின் மணி -மரகத பச்சை அழகையும் சேர்த்து அனுபவிக்கிறார் -இரண்டுமே மனோஹரமாய் இருக்குமே –

———————————————————–

தமவத குருதே மதந உத்ததான் ஸூகடயதி அபுதான் புத நிஷ்டயா -பிரதித முத்ரம் அநித்ர
சரோருஹ பிரணயி பாணி தலம் சடஜின் முநே –23- –தநிஷ்டா -அவிட்டம் நக்ஷத்ரம் ஸூசகம்

விளக்கமுற்ற திரு முத்திரையை யுடையதும் ஒரு காலும் மூடிக் கொள்ளுதல் இல்லாத தாமரை மலரோடு தோழமை கொண்டதுமான திருக் கைத்தலமானது
காம வெறி கொண்டவர்களை அடக்கமுற்றவர்களாக செய்கின்றது -விவேகமற்றவர்களை விவேக உறுதியோடு நன்கு கூட்டுகின்றது –
ஞான முத்திரையை சேவித்து -அடக்கம் உண்டாக்கி -விவேகத்தையும் உண்டாக்கி -சம தமாதி குண சம்பத்தைப் பெறுவோம் என்பது பரம தாத்பர்யம் –

——————————————————————-

நேஹ சம்சரண ரோக ஸம்ஹ்ருதிர் ஜாயதே சதபிஷக் சிகித்சயா அந்தரேண சடைவைரி கந்தரா லம்பமாந வகுள ஸ்ரஜாம் ரஜ—24- -சதபிக்ஷன் நக்ஷத்ரம் ஸூசகம் –

திருக் கழுத்தில் தொங்கும் வகுள மாலைகள் துகளை -விட்டு நூறு மருத்துவர்கள் சிகித்ஸை பண்ணினாலும் பிரவிபி பிணி தீராதே –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -வைத்தியோ நாராயணோ ஹரி -புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் –
வகுள மாலையின் ஏக தேசமே பிறவித துயர் போக்க வல்ல அரு மருந்து –
கவளக் கடாக் களிறு டபிரான் திரு நாமத்தால் தவள பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியும் -என்று முந்துறச் சொல்லி -உடனே
மாயன் தமர் அடி நீறு கொண்டு அணி-ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத ரேணுவே ஒப்பற்ற மருந்து -என்று அருளிச் செய்தார் –

———————————————————-

ஜன்ம த்வம்சம் திசதி ஜனாநாம் வக்த்ரம் தீப்ரா ஓஷ்டபத மநோஜ்ம் மந்த ஸ்மேரம் மதுர கடாக்ஷம் ஸூப்ரூ ரோகம் ஸூபக கபோலம்–25—ப்ராஓஷ்டபதம் -பூரட்டாதி நாஷ்த்ரம் ஸூ சகம்

ஒளி பெற்று விளங்கும் ஓஷ்ட பிரதேசத்தினால் அழகியதும் புன்முறுவலையுடையதும் இனிமையான கடாக்ஷத்தை யுடையதும்
அழகிய புருவக் கொடியை யுடையதும் -அழகிய திருக் கபோலங்களை யுடையதுமான திருமுக மண்டலம் சம்சாரி ஜனங்களுக்கு சம்சாரம் போக்கி
முக்தி சாம்ராஜ்யம் அளிக்கும் –

————————————————–

லஸதி ஹி பஜதாம் பத்ரோத்தர பத கரண ஆரூடம் சடரிபு மகுடம் பாஸா பரிஹ்ருத துரிதத்வாந்தம் –26—உத்தராபாத்ரா நக்ஷத்ரம் ஸூசகம்

பக்த ஜனங்களுக்கு ஸ்ரேயஸ் கரமான சிறந்த பதவியை அளிப்பதற்காக திருமுடி மீது ஏறி இருப்பதும் –
ஒளியினால் தீவினை இளைத்த தொலைக்க வல்லதுமான திரு அபிஷேகமானது விளங்கா நின்றது –
நிரதிசய தீபத்தை யுக்தமாக மணி மகுடத்தில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

—————————————

அந்தரேண சடாராதிம் கஸ் சம்சா ரேவதீஹ ந ததஹம் ஹ்ருதயே நித்யம் நிததே தத்வ புச்சரியம் –27—ரேவதி நக்ஷத்ரம் ஸூசகம் –

இவ்விருள் தரும் மா ஞாலத்தில் நம்மாழ்வாரைத் தவிர்த்து வேறு யார் நம்மை ரஷிக்க வல்லவர் -அவரே நமக்கு பரம ரக்ஷகர் –
-வேறு யாரும் இல்லாமையினால் அடியேன் அவரது திரு மேனி அழகையே நெஞ்சினுள் நிச்சலும் உறைய வைக்கின்றேன்
அவருடைய வடிவு அழகையே எஞ்ஞான்றும் உள்ளத்துள் சிந்தனை செய்யா நின்றேன் என்று நிகழித்து அருளினார் ஆயிற்று –

———————————————————————-

தனித் தொங்கல் —
வாசிகீ வரிவஸ்யா மே தாருகா மாலிகாத்மிகா –பராங்குச பதாப்ஜேந பரிஷ்க்காரவதீ பவேத் —

நக்ஷத்ர மாலிகை யாகிற எனது வாசிக கைங்கர்யமானது நம்மாழ்வாரது திருவடித் தாமரையினால் பரிஷ்க்ருதமாகக் கடவது –
ஆழ்வார் திருவடித்தாமரையிலே சாத்தி அழகு பெறுவித்துக் கொண்டேன் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: