ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ-வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
————
ந்யாஸ தசகம் ந்யாஸ விம்சதி ந்யாஸ திலகம் -ந்யாஸ த்ரய ஸ்தோத்திரங்கள்-
28 -ஸ்லோகங்களுக்குள் இது ஒன்றுக்கும் மட்டும் ஸ்வாமி தேசிகன் வியாக்யானமும் அருளிச் செய்து இதன் முக்யத்வத்தை காட்டி அருளுகிறார் –
தத்வ முக்த கலாபம் இதுக்கும் ஸ்வாமி அருளிச் செய்த வியாக்யானம் உண்டு –
அதிகரண சாராவளி -இதுக்கும் வியாக்யானம் செய்துள்ளார் என்றும் இப்பொழுது இது கிட்ட வில்லை என்றும் சொல்வர்
நிக்ஷேப ரக்ஷை -அடைக்கல பத்து -சரணாகதி தீபிகை
ஸ்தோத்ர பாஷ்யம் -கத்ய பாஷ்யம் -ரஹஸ்ய த்ரய சாரம் -இவற்றிலும்
சரணாகதியைப் பற்றி பலவும் அருளிச் செய்துள்ளார்-
சரணாகதி -தன்னை ப்ரஹ்மத்தின் பொருளாக இருப்பதை நினைத்து அதன் படி நடத்தல்
தத்வம் ஹிதம் புருஷார்த்தங்களை ஆச்சார்யரால் உபதேசிக்கப் பெற்று அடையும் மன நிலையே இது
————-
சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-
சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்யவாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூ யாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப் தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்
ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –
1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத்குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை /
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
6–சத்யவாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை /சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
10–ஜித விஷயி கணம்
11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
14—ஸ்வ பர ஹித பரம்
தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்
14-லக்ஷணங்கள்
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் – சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —
ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்
அநகம்–
அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்
ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை
ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு
தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்
தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்
பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே
——————
அஞ்ஞான த்வாந்த ரோதா தக பரிஹரணாத் ஆத்ம சாம்யாவஹத்வாத்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம ப்ரத கரிமதயா திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்
நிஷ் ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யான் நியதி ரஸதயா நித்ய சேஷித்வ யோகாத்
ஆச்சார்ய சத் ப்ரப் ரத யுபகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய–2-
அஞ்ஞான த்வாந்த ரோதாத் -அறிவின்மை என்னும் அருளை அகற்றுவதாலும்
அக பரிஹரணாத் -கீழ் ஸ்லோகத்தில் காட்டிய பாபம் துக்கம் வியசனம் -மூன்றுவிதமான அகத்தை நீக்குவதாலும்
ஆத்ம சாம்யாவஹத்வாத்–பிறரையும் தன்னைப் போலவே ஆக்குவதாலும்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம -மறு பிறவியைத் தீர்க்கும் வித்யா ஜென்மத்தை
ப்ரத -கொடுத்து அருளுபவர் என்கிற
கரிமதயா -பெருமையாலும்
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்–ஞானக் கண்ணின் மஹிமையாலும்
நிஷ் ப்ரத்யூஹா ஆந்ருசம்ஸ்யான் -ஆந்ரு சம்ஸ்யம் -பிறருக்குத் தீங்கு செய்யாது இருப்பதையே தடை இன்றி நடத்தப்படுவதாலும்
நியதி ரஸ தயா -என்றும் மாறாத சுவை பொருந்தியதாலும்
நித்ய சேஷித்வ யோகாத்-ஒழிக்க முடியாத சேஷித்வம் கூடி இருப்பதாலும்
ஆச்சார்ய –ஆச்சார்யன்
சத் -ஸத்துக்களால்
அப்ரத் யுபகரண தியா -அவன் செய்து அருளும் உபகாரத்துக்கு சத்ருசமாக செய்ய ப்ரத்யுபகாரம் செய்ய முடியாது என்ற எண்ணம் கொண்டவனும்
தேவவத் -தேவனைப் போல்
ஸ்யாத் உபாஸ்ய-உபாஸிக்கத் தக்கவனாக இருக்க வேணும் -உபாஸிக்க வேணும் என்றபடி –
சிஷ்யன் ஆச்சார்யரையே பகவானாக கொள்ள வேண்டிய -8-காரணங்களை அருளிச் செய்கிறார் இதில் –
பிரதியுபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே
ஆச்சார்ய தேவோ பவ -ஸ்ருதி
மயர்வற மதிநலம் அருளுபவர் -நிர்ஹேதுகமாக அஞ்ஞான கந்தமே இல்லாதபடி -அறியாக் காலத்துள்ளே -அறியாதது அறிவித்த அத்தன்
நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தாதி நடை விளங்கவே
வேதம் அரண்மனைக்கு விளக்கு போன்ற அருளிச் செயல்கள்
ஸாஸ்த்ர பாணிநா ஸ்வயமேவ வந்து அவதரிக்கிறான் அன்றோ
பாபம் பிரஞ்ஞாம் நாசயதி -அஞ்ஞானத்துக்கு மூல காரணம் தொல்லைப் பழ வினையே -அவற்றை முதலறித்து
தாபத்ரயங்களைப் போக்கி அருளி -செடியாய வல் வினைகளைத் தீர்க்கும் திருமால் போலவே பண்டை வல்வினை பாற்றி அருளுகிறாரே ஆச்சார்யர்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் அன்றோ
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
—————
சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய –3-
சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்கமாக தண்டன் இடும் பழக்கம் யுடையவனாயும்
ப்ரஸ்ன கால ப்ரதீஷ-ஆச்சார்யன் இடம் தக்க காலம் எதிர்பார்த்து கேள்வி கேட்டு சங்கைகளைப் போக்கிக் கொள்பவனாயும்
சாந்தோ -மனத்தை அடக்கி வைப்பவனாயும்
தாந்தோ -வெளி இந்திரியங்களை அடக்கி வைப்பவனாயும்
அநஸூயு -பொறாமை இல்லாதவனாயும்
சரணமுபகத -ஆனு கூல்ய சங்கல்பாதி ஐந்து அங்கங்களோடே கூடிய விதிப்படி ஆச்சார்யன் இடம் சரணாகதி செய்பவனாயும்
சாஸ்த்ர விசுவாஸ சாலீ–ஸாஸ்த்ரங்களிலே விஸ்வாஸம் கொண்டவனாயும்
ப்ராப்த பரீஷாம் -ஒரு வருஷமா ஆறு மாதங்களோ தக்கபடி ஆச்சார்யனால் பரீக்ஷிக்கப் பட்டவனாயும்
க்ருதவித் -நன்றி யுடையவனாயும்
ஆகிய
சிஷ்ய-சிஷ்யன்
அபிமதம் தத்த்வத –தத்வ அர்த்தங்களில் விரும்பியதை -இஷ்டப்பட்டவற்றை
சிக்ஷணீய -உபதேசிக்கத் தக்கவன்
அல்லது அபிமதமாம்படி இருக்கும் படி தத்வார்த்தங்களைப் போதிக்கத் தகுந்தவன் –
சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —
சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம் -அடிபணிந்து போக்கற்ற நிலையை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன் போன்றவனே நல்ல சீடன்
————————
ஸ்வ அதீந அசேஷா சத்தா ஸ்திதி யத்ன பலம் வித்தி லஷ்மீ சமேகம்
ப்ராப்யம் நாந்யம் ப்ரதீயா ந ச சரணதயா கஞ்சி தந்யம் வ்ருணீயா
ஏதஸ்மா தேவ பும்ஸாம் பயமிதரதபி ப்ரேஷ்யா மோஜ்ஜீஸ் ததாஜ்ஞாம்
இத்யே காந்தோபதேச ப்ரதமமிஹ குரோர் ஏக சித்தேன தார்ய —4-
இஹ -இந்த சந்தர்ப்பத்தில்
ப்ரதமம் -முதன் முதலிலே
ஸ்வ அதீந –தனக்கு அதீனமான
அசேஷ-ஸகல வஸ்துக்களுடையவும்
சத்தா -இருப்பு
ஸ்திதி -அநேக காலம் தொடர்தல்
யத்ன -பிரயத்தனம் செய்தல்
பலம் -இவற்றின் பலன்களையும் யுடையவனாய்
லஷ்மீஸம் -ஸ்ரீமன் நாராயணனை
ஏகம் -முக்யமாகவும் -ஏகமேவம் அத்விதீய ப்ரஹ்மம் -முதல்வன் -ஒப்பில்லா அப்பன் -என்று
வித்தி -அறியக் கடவாய்
அந்யம்-வேறு ஒருவனை
ப்ராப்யம் -நாம் அடையத் தக்கவனாக
ப்ரதீயா ந -கருதாதீர் -நம்பாதீர்
அந்யம் கம்சித் -வேறு ஒருவனையும் ஒரு பொருளையும்
சரணதயா -சரணமாக
ந வ்ருணீயா-வரிக்காதீர் -வேண்டாதீர்
பும்ஸாம்–ஜீவ ராசிகளுக்கு
பயம் -அச்சமும்
இதரதபி-மற்றதும்-அதாவது நற் கதியும்
ஏதஸ்மா தேவ -இவன் இடமிருந்தே ஏற்படுகிறது என்று
ப்ரேஷ்ய–கண்டு அறிந்து
ததாஜ்ஞாம்-அவனது கட்டளையை
மோஜ்ஜீஸ் -கை விடாதீர்
இதி -இவ்விதமான
குரோர்-குருவின்
ஏகாந்தோபதேச –ஏகாந்தத்தில் செய்யப்பட உபதேசம் -ப்ரஹ்மம் ஒருவனே ப்ராப்யம் என்றும் ப்ராபகம் என்ற உபதேசம்
ஏக சித்தேன -ஊற்றமுள்ள -ஊன்றிய மனத்தால்
தார்ய -தரிக்கத் தக்கது
———–
மோஷோ பாயார்ஹ தைவம் பவதி பவ ப்ருதாம் கஸ்யசித் க்வாபி காலே
தத்வத் பக்தி ப்ரபத்யோரதி க்ருதி நியமஸ் தாத்ருஸா ஸ்யாந் நியத்யா
சக்தா சக்தாதி தத்தத் புருஷ விஷயத ஸ்தாப்யதே தத் வ்யவஸ்தா
யச்சாஹூஸ் தத் விகல்ப சம இதி கதிஸித் தத் பல ஸ்யா விசேஷாத் –5-
பவ ப்ருதாம்–ஸம்ஸாரிகளுக்குள்
கஸ்யசித்-ஒருவனுக்கு
க்வாபி காலே-ஒரு காலத்தில்
ஏவம் -கீழ் ஸ்லோக உபதேசம் பெற்ற பலனாக
மோஷோ பாயார்ஹ -மோக்ஷ உபாயத்தில் அதிகாரம்
பவதி-ஏற்படுகிறது
தாத்ருஸா-அப்படிப்பட்ட
நியத்யா-தைவ வசத்தால்
தத்வத் -அதைப் போலவே
அதாவது -அநேக கோடி ஜீவ ராசிகளில் ஒருவனுக்கு ஒரு காலத்தில் மோக்ஷ உபாய அதிகாரம் ஏற்பட்டது போலவே
பக்தி ப்ரபத்யோ-பக்தி ப்ரபத்திகளில்
அதி க்ருதி நியமஸ் -அதிகார வ்யவஸ்தை
அதாவது இன்னானுக்கு இன்னது தான் என்ற ஏற்பாடு உண்டாகக் கூடும்
தத் வ்யவஸ்தா-அந்த வியவஸ்தை -சக்தி உள்ளவன் என்றும் சக்தி அற்றவன் என்றும் இது முதலான அந்த அந்த புருஷர்களின் விஷயமாக
ஸ்தாப்யதே –நிலை நிறுத்தப் படுகிறது
கதிஸித்-சிலர்
தத் விகல்ப-அவ்விரண்டில் ஓன்று என்றது
சம-மேன்மை தாழ்மை இல்லாதது
இதி- என்று
யஹூஸ் யத் -சொல்லுகின்றனர் -என்பது யாது ஓன்று உண்டோ
தத் -அது
பல ஸ்யா விசேஷாத் -பலனில் வித்யாஸம் இல்லாதது கொண்டு என்று அறிய வேண்டும் –
முமுஷு –இச்சை -காயசித் -சிலருக்கு சில வேளைகளில் ஆச்சார்யர் இடம் உபதேசம் பெற -கஸ்யசித் க்வாபி காலே –
பஹு நாம் சன்மானம் –ஞானவான் மாம் ப்ரபத்யே -ஸ்ரீ கீதா
பக்தி பிரபத்தி இரண்டு உபாயங்களை வேறே வேறே அதிகாரிகளுக்கு
மநோ நிக்ரஹம் -ஞான வைராக்யாதி ஸாமக்ரியைகள் நிறைய பெற்ற வ்யாஸாதிகளுக்கு பக்தி
அதி அசக்தர்களான நம் போல்வாருக்கு சரணாகதி -ப்ரபத்தியே உபாயம்
இரண்டு உபாயங்களுக்கும் பலம் துல்யம் ஒன்றே என்றவாறு –
————-
சாநுக்ரோசே சமர்த்தே ப்ரபதநம் ருஷிபி ஸ்மர்த்யே அபீஷ்ட ஸித்த்யை
லோகே அப்யேதத் பிரசித்தம் ந ச விமதிரிஹ ப்ரேஷ்யதே க்வாபி தந்த்ரே
தஸ்மாத் கைமுத்ய சித்தம் பகவதி து பர ந்யாச வித்யா நுபாவம்
தர்ம ஸ்தேயாஸ்ச பூர்வே ஸ்வ க்ருதிஷூ பஹுதா ஸ்தாப யாஞ்சக் ருரேவம் —6-
அபீஷ்ட ஸித்த்யை–இஷ்டம் பெறுவதற்கு
சாநுக்ரோசே -தயை யுள்ள
சமர்த்தே -வல்லவன் இடத்திலே
ப்ரபதநம் -அடைக்கலம் புகுதல்
ருஷிபி ஸ்மர்த்யே -ரிஷிகளால் விதிக்கப்படுகிறது
ஏதத் -இவ்விஷயம்
லோகே பிரசித்தம் -உலக நடத்தைகளிலும் ப்ரஸித்தமானது
இஹ -இவ்விஷயத்தில்
விமதிர் -அபிப்ராய பேதமானது
க்வாபி தந்த்ரே-ஒரு சாஸ்திரத்திலும்
ந ப்ரேஷ்யதே -காணப்படுகிறது இல்லை
தஸ்மாத் –ஆதலால்
கைமுத்ய சித்தம் -கை முத்யம் நியாயத்தால் ஸித்தமான
பர ந்யாச வித்யா நுபாவம்-பர ந்யாஸம் என்னும் வித்யையின் மஹிமையை
தர்ம ஸ்தேயாஸ்–தர்மங்களை நிர்ண யிக்கிறவர்களான
பூர்வே –ஆளவந்தார் முதலான முன்னோர்
ஏவம் -முன் கூறியபடியே
ஸ்வ க்ருதிஷூ -தாங்கள் அருளிச் செய்த நூல்களிலே
ஸ்தாப யாஞ்சக்ருர் -விசாரித்து முடிவு செய்துள்ளனர்
ஸ்ம்ருதிகளும் சரணாகதி மூலம் சுக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் காகாசூரன் போன்றோர் பயன் அடைந்ததை சொல்லுமே —
பலரும் பல பலன்களுக்கு சரணாகதி செய்தமை ஸ்ம்ருதிகள் சொல்லும் -கைமுதிக நியாயத்தால் அவனை அடைய சரணாகதி உதவுமே –
பரம காருணிகன் சர்வ சக்தன் தன்னையே ஓக்க அருள் செய்வான் சரணாகதர்களுக்கு என்பதை பூர்வர்கள் பலரும் காட்டி அருளி உள்ளார்கள் –
லகு உபாயமான பிரதிபதிக்கும் அதே உயர்ந்த பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் யுக்திகள் காட்டி அருளுகிறார்
வானரம் புலி மனுஷ்ய வ்ருத்தாந்தம் -காகாசூரன் -விபீஷணன் –திரௌபதி -சுமுகன் -கஜேந்திரன் –திரிசங்கு –
சுனஸ்ஸேபன்-ரிஷி குமாரன் யாக பசுவாக விற்கப்பட விச்வாமித்ரரை சரண் அடைய தபோ மந்த்ர பலத்தால் ரக்ஷித்து அருளினார் –
சாதாரண ஜனங்கள் இடமே சரணாகத ரக்ஷணம் காணும் இடத்தில் கைமுதிக நியாயத்தால் பகவான் விஷயத்திலே ஸித்தம் அன்றோ என்கிறார் –
ஆகவே மஹா விஸ்வாசமே வேண்டியது -என்கிறார் –
————-
சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ நநு விதி விஷயே நிர்விசங்கோ அதிகாரீ
விச்வாஸஸ் யாங்க பாவே புநரிஹ விதுஷா கிம் மஹத்வம் ப்ரஸாத்யம்
மைவம் கோராபராதை சபதி குரு பலே ந்யாஸ மாத்ரேண லப்யே
சங்கா பார்ஷ்ணி க்ரஹார்ஹா சமயிதுமுஸிதா ஹேது பிஸ் தத் ததர்ஹை –7-
சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ –ஸாஸ்த்ரம் பிரமாணம் ஆகும் முறையை நன்கு அறிந்த
அதிகாரீ-ப்ரபந்ந அதிகாரியானவன்
விதி விஷயே -சரணாகதியை விதித்ததில்
நிர்விசங்கோ நநு–ஸந்தேஹம் இல்லாதவன் அல்லவா
புநரிஹ–புநர் இஹ -பின்னேயும் இந்த சரணாகதியில்
விஸ்வாஸஸ்ய -மஹா விஸ்வாசம்
யங்க பாவே -அங்க பாவமாக இருக்கையிலே
விதுஷா -தெரிந்தவனால்
மஹத்வம் ப்ரஸாத்யம்–மஹத் பெரியது என்ற விசேஷணத்தால் ஸாதிக்கக் கூடியது –
கிம் -எது
மைவம் –அப்படி அல்ல
கோராபராதை -அதிகம் குற்றம் செய்தவர்களால்
ந்யாஸ மாத்ரேண-சரணாகதியை மாத்ரமே கொண்டு
சபதி -தத் க்ஷணத்தில்
குரு பலே -பெரியதொரு பலன்
லப்யே–அடையப்பட இருக்கையிலே
பார்ஷ்ணி க்ரஹார்ஹா –பின் தொடரக் கூடிய
சங்கா -ஸந்தேஹம்
தத் ததர்ஹை -அவ்வவற்றுக்கு ஏற்ற
ஹேது பிஸ் –ஹேதுக்களால்
சமயிதும் உஸிதா -போக்கப் படுவதற்குத் தக்கது
மஹா விஸ்வாஸம்-முக்கிய அங்கம் –செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமை – நம் பாபங்கள் தண்மை அதிசயம்
பேற்றின் பலன் -மூன்றையும் பார்த்தால் மஹா விஸ்வாசத்தின் அருமை அறியலாம் –
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே அடைய முடியும்
பகவத் குணக் கடலிலே ஆழ்ந்து மஹா விஸ்வாஸம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே
விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி.–இத்யாதி ஸ்லோகத்தால் பிராட்டி ராவணனுக்கும் உபதேசம்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய –மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தானே அருளிச் செய்தானே அன்றோ –
—————-
நேஹாபிக் ராந்தி நாஸோ ந ஸ விஹதிரிஹ ப்ரத்யவாயோ பவேதிதி
உக்தம் கைமுத்ய நீத்யா ப்ரபதந விஷயே யோஷிதம் சாஸ்த்ர வித்பி
தஸ்மாத் க்ஷேத்ரே ததர்ஹே ஸூவிதத சமயைர் தேசிகை சம்ய குப்தம்
மந்த்ராக்யம் முக்தி பீஜம் பரிணதி வசத கல்பதே ஸத்பலாய–8-
இஹ –இந்த கர்ம யோகத்தில்
அபி க்ராந்தி –ஆரம்பத்துக்கு
நாஸோ ந -பயன் தராமல் வீணாகப் போவது இல்லை
விஹதி மதி -முடிவதற்கு முன்பு தடை பட்டு நின்று போய் விட்டால்
ப்ரத்யவாயோ -பெரும் குற்றமும்
ந பவேதிதி-உண்டாகாது
இதி -இவ்வாறு
யுக்தம் -கர்ம யோகத்தில் சொன்னது
ஸாஸ்த்ர வித்பி –சாஸ்திரம் அறிந்தவர்களால்
ப்ரபதந விஷயே-சரணாகதியின் விஷயத்தில்
கைமுத்ய நீத்யா –கை முதிதம் நியாயத்தைக் கொண்டு
யோஷிதம் –இணைக்கப் பட்டது
தஸ்மாத் –ஆதலால்
ஸூவிதத சமயைர்–காலம் அறிந்த
தேசிகை–ஆச்சார்யர்களால்
ததர்ஹே–அதற்குத் தகுந்த
க்ஷேத்ரே –பூமியில் இடத்தில் -அதாவது குணம் நிறைந்த சிஷ்யன் இடத்தில்
சம்யக்-நன்றாக
உப்தம்-விதைக்கப்பட்ட
மந்த்ராக்யம் –மந்த்ரம் என்னும்
முக்தி பீஜம் –முக்தியின் விதை
பரிணதி வசத -முதிர்ச்சி அடைவதால்
கல்பதே ஸத் பலாய-நல்ல பழம் கொடுக்க ஏற்படுகிறது
பிரபத்தி அங்கங்களை ஆச்சார்யர் உபதேசம் மூலம் -உணர்ந்து -மஹா விஸ்வாஸம் அடைய வேண்டுமே –
ரஹஸ்யத்ரய ஞானம் -ஆச்சார்யர் மூலம் பெற்று -ஸ்ரீமன் நாராயணனே அசேஷ ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமி -நியாம்யன்–
அவனே பரம ப்ராப்யம் –அவனே பிராபகம்-சாஸ்திரங்கள் அவனது ஆஜ்ஞா ரூபம் -விதி நிஷேதங்களை மாறாமல் இருக்க வேண்டுமே –
பகவத் திரு நாம சங்கீர்த்தனம் -பிரபத்தி மந்த்ர உச்சாரணம் –போன்றவை பிரபத்தியிலே மூட்டி அதன் மூலமாக பயன் தர வல்லது
எனவே பிரபத்தி அனுஷ்ட்டிக்க வேண்டியது அவஸ்யமே என்றதாயிற்று –
———–
ந்யாஸ ப்ரோக்தோ அதிரிக்தம் தப இதி கதித ஸ்வத் வரஸ் சாஸ்ய கர்த்தா
அஹிர்புத்ந்யோ அப்யன்வவா தீத கணி திவிஷதாம் உத்தமம் குஹ்ய மேதத்
சாஷான் மோஷாய சாஸவ் ஸ்ருத இஹ து முதா பாத சங்கா குணாட்யே
தன்நிஷ்டோ ஹ்யந்ய நிஷ்டான் ப்ரபுரதி ஸயிதும் கோடி கோட்யம் சதோ அபி –9-
ந்யாஸ –பர ந்யாஸம் சரணாகதி
அதிரிக்தம்-மற்ற எல்லாவற்றாலும் உயர்ந்ததான
தப இதி-தபஸ் இது என்று
ப்ரோக்தோ –கூறப் பட்டது
அஸ்ய கர்த்தா–இத்தைச் செய்தவன்
ஸ்வத் வரஸ் –நல்ல யாகங்களைச் செய்தவன் ஆகிறான்
இதி -என்று
கதித -உரைக்கப் பட்டு இருக்கிறான்
அஹிர்புத்ந்யோ –ருத்ரனும்
யன்வவா தீத் -இதைத் தொடர்ந்து பேசினான்
ஏதத் -இந்த சரணாகதி
திவிஷதாம்–தேவர்களுடைய
உத்தமம் குஹ்யம் –உத்தமமான ரஹஸ்யமாக
அகணி –மதித்து உரைக்கப் பட்டது
அசவ்-இது
ஸாஷாத் –நேராகவே -மற்ற ஒன்றை இடையிடாமலேயே
மோஷாய –மோக்ஷத்துக்குக் காரணமாக
ஸ்ருத –வேதங்களில் கூறப்பட்டது
து -இதுக்கு விபரீதமாக
குணாட்யே-நற் குணம் வாய்ந்த
இஹ –இந்த சரணாகதி விஷயத்தில்
பாத சங்கா -விரோதத்தை சங்கிப்பது
முதா –வீண்
ஹி -ஏன் எனில்
தன்நிஷ்டோ –இந்த சரணாகதியைக் கைப் பற்றினவன்
யந்ய நிஷ்டான் –மற்ற உபாயங்களை ஸ்வீ கரித்தவர்களை
கோடி கோட்யம் சதோ அபி -கோடியிலும் கோடி பங்கைக் கொண்டு
அதி ஸயிதும் –மீறி இருக்க
ப்ரபு -சக்தி யுள்ளவன் ஆகிறான் –
பிரபத்தி சர்வாதிகாரம் -தபஸுக்களில் சிறந்ததாக ஸ்ருதி சொல்லுமே –
பிரபன்னன் சிறந்த யாகம் செய்தவனாக கருதப்படுகிறான் -குஹ்ய தமமான உபாயம்
தஸ்மாத் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அத்ரிக்தம் ஆஹு–தைத்ரியம்
சமிதி சாதனகா தீனம் யஜ்ஜானாம் .ந்யாஸம் ஆத்மனா நமஸாயோ கரோத் தேவ ஸ சவ்தவாரா –அஹிர்புத்ன்ய சம்ஹிதை
யதாத்வை மஹோபநிஷதம் தேவானாம் குஹ்யம் –தைத்ரியம்
ஓம் இத் யாத்மாநம் யுஞ்ஜீத -என்பதால் இது சர்வாதிகாரம் ஆகாதே
அநாதிகாரிகளுக்கு ப்ரணவ உச்சாரணம் கூடாதாயினும் ஆகமத்தில் விதிக்கப்பட்ட த்வய மந்த்ரத்தைக் கொண்டு
சரணாகதி பிரயோகம் சர்வாதிகாரமே யாகும்
ஸ்வ தந்திரமாக மோக்ஷம் தர வல்லதே-பக்தி யோக நிஷ்டனை விட மிகவும் உயர்ந்து -மிகுந்த கௌரவம் வாய்ந்தவன் என்றதாகும்-
—————–
நாநா சப்தாதி பேதாதிதி து கதயதா ஸூத்ர காரேண சம்யக்
ந்யாஸ உபாஸே விபக்தே யஜந ஹவ நவச் சப்த பேதாத பாக்தாத்
ஆக்யா ரூபாதி பேத ஸ்ருத இதர சம கிம் ஸ பின்ன அதிகார
ஸீக்ர ப்ராப்த்யாதிபி ஸ்யாஜ்ஜ குரிதி ஸ மதூபாச நாசவ் வ்வஸ்தாம் —10-
சப்தாதி பேதாத் -பரமாத்மாவின் விசேஷங்களைக் கூறும் -ஸத் -பூமா -ஜகத் காரணன் -அபஹத பாப்மா -போன்ற சொற்கள் வெவ்வேறாக இருப்பதால்
நாநா –ஸத் வித்யா தஹர வித்யா முதலான ப்ரஹ்ம வித்யைகளும் வெவ்வேறு
இதி -என்று
கதயதா –சொல்லுகின்ற
ஸூத்ர காரேண –ப்ரஹ்ம ஸூத்ர காரரால்
ந்யாஸ உபாஸே–சரணாகதியும் பக்தி யோகமும்
யஜந ஹவந வத் –யாகத்தைக் கூறும் இடத்தில் யஜனம் என்றும் ஹவனம் என்றும் தானம் என்றும் இவை போன்ற
அபாக்தாத்–ஒவபசாரிகம் அல்லாத -அதாவது வெளிப் பொருளைக் காட்டிலும் வேறான உட் பொருளைக் கொள்ளாத
ஸப்த பேதாத் -சொற்களின் வேற்றுமையால்
ஸம்யக் –நன்றாகவே -அதாவது யாதொரு சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல்
விபக்தே பிரிக்கப் பட்டு இருக்கின்றன
ஆக்யா ரூபாதி பேத –ஆக்யா ந்யாஸ வித்யா எனப் பெயரிலும்
ரூப –பரம காருணிகன் ஆகையாலே நிர்ஹேதுகமாக ரக்ஷிப்பவன் என்ற ரூபத்தாலும்
ஆதி -அங்கங்கள் ப்ரகரணங்கள் இவற்றாலும்
பேத -வேற்றுமையானது
இதர சம-மற்ற வித்யைகளுக்கு ஒப்பாகவே
ஸ்ருத –இங்கும் கூறப்படுகின்றது
கிஞ்ச -இன்னமும்
ஸீக்ர ப்ராப்த்யாதிபி –சீக்கிரம் பயன் அளிக்கும் முதலான வற்றால்
பின்ன அதிகார-அதிகாரம் வேறு பட்டதகாக
ஸ்யாத் –இருக்கலாம்
இதிச–இவ்விதமே
மதூபாச நாதள –மது வித்யை முதலான இடத்திலும்
வ்யவஸ்தாம் —நிபந்தனையை
ஜகு–சொன்னார்கள் –
பக்தி பிரபத்தி -இரண்டும் மோக்ஷ உபாயங்கள் –
பிரபத்திக்கு -பக்திக்கு அங்கமாகவும் -சாஷாத் உபாயமாகவும் -இரண்டு ஆகாரங்கள் உண்டே
பக்திக்கு அங்கங்கள் -வர்ணாஸ்ரம கர்ம ஞான யோகங்கள்
பிரபதிக்கு அங்கமாக ஆநு கூல்ய சங்கல்பம் -கார்ப்பண்யம் -மஹா விசுவாசம் போன்றவைகள் உண்டே –
பக்திக்கும் பிரபத்திக்கும் தேவையானவைகளை வேறே வேறே -மோக்ஷம் அடையும் கால விளம்பத்திலும் வாசி உண்டே –
சர்வ லோக சரண்யன் -ஸர்வஸ்ய சரணம் ஸூஹ்ருத் –
சரணாகதி -ஆறாவது அங்கம் -பக்திக்கு அஷ்டாங்கங்களில் சமாதி எட்டாவது அங்கம் போலவே –
அநு கூல்ய சங்கல்பமே ஒரு அங்கம் -செய்ய உறுதி கொண்டாலே செய்து முடிப்போம் -பிராயச்சித்த பிரபத்தி -என்பது அங்கங்களில் பிரபத்தி
பண்ணிய பின்பு குறைகள் வந்தால் போக்கிக் கொள்ள என்பர் -பிரபத்தி செய்த அதிகாரி குற்றம் தானாகவே செய்ய மாட்டான்
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பதால் இவனை அறியாமல் செய்ய நேர்ந்தால் -அதற்காக இந்த பிராயச்சித்த பிரபத்தி –
ப்ரஹ்மாஸ்திரம் போலே -மீண்டும் ஒரே பலனுக்காக பண்ணினால் தான் -குறை வரும் –
ப்ரஹ்ம ஸூத்ரத்தில் -ஸப்தாதி பேத அதிகரணத்தில் –நாநா ஸப்தாதி பேதாத் -ஸூத்ரம் உண்டே
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாமே சேர்ந்து ஒரே வித்யையா வெவ்வேறா என்கிற சங்கை வர அத்தை நீக்குகிறது –
ஒரே பொருளைக் கூறும் பர்யாய பதங்கள்
வேத உபாஸீத போன்ற பதங்களால் விதிக்கப்பட்ட பொருள் ஒன்றே யாகும்
பர்யாய பதங்களாயினும் உபாசிக்கப்பட வேண்டிய ப்ரஹ்ம குணங்கள் -அபஹத பாப்மத்வாதி குணங்கள் -காரணத்வம்
போன்றவை வெவ்வேறே வானபடியால் வித்யைகளும் வெவ்வேறெவே
விசேஷணம் வேறுபாட்டால் விசேஷ்யமும் வேறுபாடும் என்கிற நியாயத்தால் –
கீதையிலும் பக்தியோகத்தை பஜஸ்வ மாம் என்றும் ப்ரபத்தியை சரணம் வ்ரஜ என்று விதித்து உள்ளானே
பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மாதிகள் -பிரபதிக்குக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் அங்கங்கள் என்ற வாசியும் உண்டே
ஆகவே இந்த ஸூத்ரம் பக்தியையும் ப்ரபத்தியையும் கூறுவதாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ பாஷ்யத்தில் பிரபத்தியை விளக்க வில்லையே –
————-
யத் கிஞ்சித் ரக்ஷணீயம் ததவந நிபுணே ந்யஸ்தோ அகிஞ்ச நஸ்ய
ப்ரஸ்பஷ்டம் லோக த்ருஷ்ட்யா அப்யவகமித இஹ ப்ரார்த்தநாத் யங்க யோக
தஸ்மாத் கர்மாங்க கத்வம் வ்யபநயதி பரா பேஷணாபாவ வாத
சாங்கே த்வஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத ஷட்விதத் வோபசார–11-
யத் கிஞ்சித் –யாது ஒரு வஸ்து
ரக்ஷணீயம் –ரஷிக்கத் தக்கதோ
தத் -அதை
அவந நிபுணே -ரக்ஷிக்க சக்தி யுள்ளவன் இடத்தில்
ந்யஸ்தோ -அடைக்கலமாய்க் கொடுக்கின்ற
அகிஞ்ச நஸ்ய–ஏழைக்கு
ப்ரார்த்தநாதி -பிரார்த்தனை முதலான
அங்க -அங்கங்களின்
யோக -சேர்க்கை
இஹ–இந்த சரணாகதி விஷயத்தில்
லோக த்ருஷ்ட்யா –உலக வழக்கத்தாலும்
அவகமித–அறிவிக்கப் பட்டது
தஸ்மாத்–ஆதலால்
பரா பேஷணாபாவ வாத-மற்ற ஒன்றை அபேக்ஷிப்பது இல்லை என்று கூறுவது
கர்மாங்க கத்வம் –கர்மங்களை அங்கமாகக் கொண்டு இருப்பதை
வ்யபநயதி –விலக்குகின்றது
து -ஆனால்
சாங்கே-அங்கங்களோடு கூடின ப்ரபத்தியில்
அஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத –அஷ்டாங்க யோகம் என்று சொல்லுவது போலே
ஷட்விதத் வோபசார–ஆறு விதம் என்று கூறியது
ஒவபசாரிகம் -அதாவது கௌவணப் பொருளாகும் –
தத் ஏக உபாய தாயாஞ்ச பிரபத்தி –
பிரபத்தே க்வசித் அப் யேவம் பர அபேஷா ந வித்யதே
வர்ணாஸ்ரம தர்மங்களை அபேக்ஷிப்பது இல்லை என்றவாறு
ஆனால் ஷட் விதா சரணாகதி -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -அங்கங்கள் ஐந்தும் அங்கியான ப்ரபத்தியும் சேர்த்துச் சொன்னவாறு
அஷ்டாங்க யோகத்திலும் யமம் -நியமம் -ஆஸனம் -ப்ராணாயாமம் -ப்ரத்யாஹாரம் -த்யானம் -தாரணா ஆகிய
ஏழு அங்கங்களுடன் சேர்த்து சமாதி என்கிற அங்கியையும் சேர்த்தே சொன்னால் போலவே இங்கும் –
நியாஸ பஞ்சாங்க ஸம் யுத -என்றும் உண்டே
ஐந்து அங்கங்களாவன
1-ஆனுகூல்ய சங்கல்பம்
2-பிரதிகூல்ய வர்ஜனம்
3-ரஷித்தே தீருவான் என்கிற மஹா விச்வாஸம்
4-நீயே ரக்ஷிக்க வேணும் என்கிற பிரார்த்தனை
5-அநந்ய கதித்வம் –
———
பஞ்சாப் யங்காந்யபிஜ்ஞா ப்ரணிஜகுரவிநா பாவ பாஞ்ஜி ப்ரபத்தே
கைஸ்சித் சம்பா விதத்வம் யதிஹ நிகதிதம் தத் ப்ரபத்த் யுத்தரம் ஸ்யாத்
அங்கேஷ் வங்கித்வ வாத பல கதநமிஹ த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ
ப்ராஸஸ் த்யம் தத்ர தத்ர ப்ரணிதததி தத சர்வ வாக்யைக கண்ட்யம் –12-
யபிஜ்ஞா -வித்வான்கள்
பஞ்சாப் யங்காந்–ஆனுகூல்யாதி ஐந்து அங்கங்களையும்
ப்ரபத்தே–ப்ரபத்திக்கு
அவிநா பாவ பாஞ்ஜி –விட்டுப் பிரியாமல் இருப்பதாக -அவஸ்யம் இருக்க வேண்டியவைகளாக
ப்ரணிஜகுர் -கூறினார்கள்
யதிஹ-யாது ஓன்று இந்த ஐந்து அங்கங்களுக்குள்
கைஸ்சித் –சில அங்கங்களால்
சம்பா விதத்வம் –தன்னடையாகவே நேர்ந்தமை -அதாவது அவஸ்யம் இல்லாமல் தானாகவே நேரக் கூடியவையாய் இருக்கை
நிகதிதம் -சொல்லப் பட்டதோ
தத் –அது
ப்ரபத்த் யுத்தரம் -பிரபத்திக்குப் பின்
ஸ்யாத்-இருக்கக் கூடும்
இஹ -இந்த சரணாகதியில்
அங்கேஷு –அங்கங்களில் சிலவற்றை
வங்கித்வ வாத–அங்கியாகக் கூறியதும்
பல கதநம் -சில அங்கங்களாலே மோக்ஷம் பலம் என்பதையும்
த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ–ஐந்தில் இரண்டு மூன்று மாத்ரம் கூறியதும்
தத்ர தத்ர-அந்த அந்த அங்கங்களில்
ப்ராஸஸ் த்யம் –மேன்மையை பெருமையை
ப்ரணிதததி –பொருளாகக் கொண்டன
தத –ஆதலால்
சர்வ வாக்ய ஏக கண்ட்யம் –எல்லா வாக்யங்களுக்கும் ஒற்றுமை உண்டு
———
ரஷாபேஷா ஸ்வசாஹ்ய ப்ரணயவதி பர ந்யாஸ ஆஜ்ஞாதி தஷே
த்ருஷ்டா நாத்ர பிரபத்தி வ்யவஹ்ருதிரிஹ தந் மேளநே லக்ஷணம் ஸ்யாத்
கேஹாகத்யாதி மாத்ரே நிபதது சரணா கத்ய பிக்யோ பசாராத்
யத்வா அநேகார்த்த பாவாத் பவதி ஹி விவித பாலநீ யத்வ ஹேது –13-
ரஷாபேஷா
ஸ்வ–தனக்கு
சாஹ்ய –ஸஹாயம் செய்ய வேணும் என்று
ப்ரணயவதி –யாசிப்பவன் இடத்தில்
ரஷா அபேஷா -ரக்ஷிக்க வேணும் என்று வேண்டுவது இருக்கிறது
ஆஜ்ஞாதி தஷே–ஏவல் செய்யும் ஊழியக் காரனிடம்
பர ந்யாஸ -பர ந்யாஸம் என்ற சொல் இருக்கிறது
அத்ர–இவ்விரண்டிலும் தனித்தனியே
பிரபத்தி வ்யவஹ்ருதி–பிரபத்தி என்ற சொல்
ந த்ருஷ்டா –காணப் பட வில்லை
இஹ -இப்பிரபத்தி விஷயத்தில்
தந் மேளநேம் -அந்த ரஷா அபேக்ஷை -பர ந்யாஸம் இவ்விரண்டின் சேர்க்கை
லக்ஷணம் ஸ்யாத்-இலஷணையால் இருக்கலாம்
சரணா கத்ய பிக்யோ -சரணாகதி என்ற பெயர்
கேஹாகத்யாதி மாத்ரே –வீட்டுக்கு வருவது முதலான பொருளில் மாத்ரம்
உபசாராத்-முக்யப்பொருள் அல்லாத இலக்ஷணைப் பொருளாகவே
நிபதது –ஏற்படக் கூடும்
யத்வா –அல்லது
அநேகார்த்த பாவாத் –சரணம் என்ற சொல்லுக்கு அநேகப் பொருள் உண்டு ஆகையாலே
பாலநீ யத்வ ஹேது-ரக்ஷிக்கப்பட வேண்டியதற்குக் காரணம்
பவதி ஹி விவித -பலவிதமாக இருக்கின்றது –
அநந்யார்ஹம் முக்கியம் –ந்யாஸம் -சரணாகதி -மஹா விச்வாஸம்
சரணம் -வீடு ரக்ஷிப்பவன்
சரணாலயம் -பர ந்யாஸம் செய்தவனை ரக்ஷிக்க வேண்டியது போலவே
வீடு என்ற பொருளிலும் வீட்டுக்கு வந்தவரை ரக்ஷிக்க வேண்டும் என்றவாறு
————
ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம நுகதம் யாவதர்த்தம் முமுஷோ
தத்வ ஜ்ஞான நாத்மகம் தத் ப்ரதமமத விதே ஸ்யாதுபாயே ஸமேதம்
கைங்கர்யாக்யே புமர்த்தே அப்யநுஷஜதி ததப்யர்த்தநா ஹேது பாவாத்
ஸ்வாபீஷ்டா நந்ய ஸாத்யாவதிரிஹ து பர ந்யாஸ பாகோ அங்கி பூத –14-
முமுஷோ–முமுஷுவுக்கு
ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம் -தன்னையும் தன்னைச் சேர்ந்த பொருள்களையும் பரமாத்மாவிடம் ஒப்படைப்பது
யாவதர்த்தம் -எவ்வளவு பொருள்கள் உண்டோ அவ்வளவிலும்
அநுகதம் -தொடர்ந்து நிற்கும்
தத் -இந்த கார்யமானது
ப்ரதமம் -முதன் முதலில்
விதே-உபாயத்தை விதிக்கின்ற வசந ஸ்வ பாவத்தாலே
உபாயே–மோக்ஷ உபாயத்திலே
ஸமேதம்-சேர்ந்ததாக
ஸ்யாத் -இருக்கும்
ததபி -மேலும்
யர்த்தநா ஹேது பாவாத்–முமுஷுவால் செய்யப் பட்ட பிரார்த்தனையின் காரணமாக
கைங்கர்யாக்யே-பகவத் கைங்கர்யம் என்ற
புமர்த்தே அபி -புருஷார்த்தத்திலும் -பலனிலும்
யநுஷஜதி –தொடர்கின்றது
இஹ -இந்த பிரபத்தி விஷயத்தில்
அங்கி பூத –அங்கியாக இருக்கின்ற
பர ந்யாஸ பாகோ -பர ந்யாஸம் என்ற அம்சம்
ஸ்வாபீஷ்டா நந்யஸா த்யாவதி–தன்னால் விரும்பப்பட்டது -மற்ற ஒன்றால் சாதிக்க முடியாதது எவ்வளவோ அவ்வளவில் நிற்கும் –
ஸ்வரூப சமர்ப்பணம் -யானும் நீ என் உடைமையும் நீயே – பர சமர்ப்பணம் பல சமர்ப்பணம் –ப்ரீதி காரித கைங்கர்யமே -பரம புருஷார்த்தம் என்ற நினைவு –
நம் புத்திரர் பார்யையாதிகள் உடன் சேர்ந்தே சமர்ப்பணமோ என்னில் இவர்களும் நம் சொத்து இல்லையே -எல்லாம் அவனது அன்றோ
கீழ் எல்லாம் புபுஷு முமுஷு இருவருக்கும் பொதுவான பிரபத்தி
இதில் முமுஷு -அதிலும் அநந்யார்ஹ சேஷ பூதரானவருக்கு
யானும் நீயே என்னுடைமையும் நீயே என்று இருப்பவர்களுக்கு
தத்வ ஞானம் ஏற்பட்டு அதனாலேயே இந்த எண்ணம் உபாயத்திலும் புருஷார்த்தத்திலும் சேர்ந்தே இருக்குமே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அவனது ஆனந்தத்துக்காகவே இருப்பார்களே
————-
ந்யாஸா தேசேஷூ தர்ம த்யஜந வசநதோ அகிஞ்ச நாதிக்ரி யோக்தா
கார்ப்பண்யம் வா அங்க முக்தம் பஜநவதிதரா பேஷணம் வா அப்யபோடம்
துஸ் சா தேச் சோத்யமவ் வா க்வசிது பசமிதா வந்ய சம்மேளந வா
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்தஸ் ததிஹ ந விஹதோ தர்ம ஆஜ்ஞாதி சித்த –15-
ந்யாஸா தேசேஷூ –சரணாகதியை விதிக்கும் இடங்களில்
தர்ம த்யஜந வசநதோ –ஸர்வ தர்மங்களை விடச் சொல்லி இருப்பதால்
அகிஞ்ச நாதிக்ரியா -வேறு வழி இல்லாதவன் இதுக்கு அதிகாரி என்பது
யுக்தா-சொல்லப்பட்டது
வா -அல்லது
கார்ப்பண்யம் –கார்ப்பண்யம் என்ற அதாவது வேறு போக்கற்று இருக்கும் நிலையை நினைப்பது –
கர்வம் இல்லாமை முதலான பகவத் கிருபை தன் மேல் உண்டாகும் படி செய்கிற கார்யம்
அங்க முக்தம் -அங்கமாகச் சொல்லப்பட்டது
வா -அல்லது
பஜநவத் -பக்தி யோகத்தைப் போலே
இதரா பேஷணம் –வர்ணாஸ்ரம தர்மாதிகளை அங்கமாக அபேக்ஷித்து இருத்தல்
அப்யபோடம்-விலக்கப் பட்டது
வா -அல்லது
க்வசித் -பேராசை கொண்டு -அஸக்யமான விஷயத்தில் முயலுகின்றவன் இடத்தில்
துஸ்சாதேச் சோத்யமவ் –அஸக்யமானத்தில் ஆசையும் முயற்சியும்
உப சமிதவ்–தடுக்கப்பட்டன
வா -அல்லது
அந்ய சம்மேளந –பிரபதிக்கு அங்கம் அல்லாதவற்றை பிரபத்திற்கு கைக்கொண்டால்
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய -நம்பிக்கை குறைந்து மற்றவற்றைக் கூட்டினால் தானே விலகிவிடும் என்பது
உக்தஸ் –உரைக்கப் பட்டது
தத் -தர்மங்களை விடுவது பிரபதிக்கு அங்கம் இல்லாததாலும்
தர்மங்களை பிரபதிக்கு அங்கமாகக் கூறாமையாலும்
ஆஜ்ஞாதி சித்த –ஆஜ்ஜையாலும் அநுஜ்ஜை யாலும் ஏற்பட்ட
தர்ம -தர்மம்
இஹ ந விஹதோ –இந்தப் பிரபத்தியில் விலக்கப்பட வில்லை –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -வர்ணாஸ்ரம தர்மங்களை விடக் கூடாதே -பக்தியில் அசக்தனுக்கு இது -என்றவாறு
இதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
அகிஞ்சனனாய் -வேறு உபாயந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தன் இல்லாமல் இருக்க வேண்டுமே
பரித்யஜ்ய -கார்ப்பண்யம் சொல்லப்பட்டது
கார்ப்பண்யமாவது -ஆகிஞ்சனயாதிகளுடைய அனுசந்தானமாதல்
அது அடியாக வந்த கர்வ ஹானியாதல்
கிருபா ஜனக க்ருபண வ்ருத்தியாதல்
கைங்கர்ய புத்தியாக வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்யவே வேண்டும்
மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னம் அதில் ஆசை தனை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயன் அஸ்திரம் போல் வெள்கி நிற்கும்
நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின்றனிமை துணையாக என் தன் பாதம்
பூண்டால் யுன் பிழைகள் எல்லாம் பொறுப்பேன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழுவோமே
————
ஆதேஷ்டும் ஸ்வப்ரபத்திம் தத் அநு குண குணாத் யந்விதம் ஸ்வம் முகுந்தோ
மாமித் யுகத்வைக சப்தம் வததி ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் ப்ராப்ய ப்ராப கைக்யம் சகல பல ததாம் ந்யாஸதோ அந்யாந பேஷாம்
ப்ராதான் யாத்யம் ஸ கிஞ்சித் ப்ரதயதி ஸ பரம் ஸ்ரீ ஸகே முக்த்யுபாயே –16-
முகுந்த-ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்வப்ரபத்திம்-தன்னிடம் சரண் அடைவதை
ஆதேஷ்டும் -விதிப்பதற்காக
தத் அநு குண -அதற்கு ஏற்ற
குணாத் யந்விதம் -நற் குணங்கள் முதலியவற்றோடு கூடி இருக்கிற
ஸ்வம் -தன்னை
மாம் இதி -என்னை என்று
யுக்த்வா -சொல்லி
ஏக சப்தம் வததி -ஒருவனை என்ற சொல்லையும் பேசுகிறான்
ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் -ஆதலால்
விதிக்குத் தக்க பொருள் கொள்ள வேண்டி இருப்பதால்
தத்ர -அந்த ஏக ஸப்தத்தால்
தாத்பர்யம் -கருத்து
ஊஹ்யம் -ஊஹிக்கத் தக்கது
ஸ -அந்த ஏக ஸப்தமானது
முக்த்யுபாயே -முக்திக்கு உபாயமாக இருக்கிற
ஸ்ரீ ஸகே பரம் -எம்பெருமான் இடத்தில் மாத்ரம்
தத் -அப்படிப்பட்ட வேதாந்த ஸாஸ்த்ரங்களில் -அங்காங்கு ப்ரஸித்தமான என்றபடி
ப்ராப்ய ப்ராப கைக்யம் -உபாய உபேயம் ஒருவனே என்பதையும்
சகல பல ததாம் -ஸமஸ்த பல ப்ரதாதாவும் ஒருவனே என்பதையும்
ந்யாஸதோ அந்யாந பேஷாம்–சரணாகதியைத் தவிர்ந்த வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத தன்மையையும்
ப்ராதான் யாத்யம் ஸ –முக்கியமாக இருப்பது முதலான
கிஞ்சித் ப்ரதயதி ஸ -சிலவற்றையும் வெளிப்படுத்து கின்றது
ஏகம்-அவன் ஒருவனே சித்த உபாயம் -பிரபத்தியும் அவனே செய்விக்கிறான் என்ற எண்ணம் வேண்டும்
அப்படி இல்லை யாகில் பிரபத்தியும் சாதன உபாயங்களிலே சேரும்
இத்தால் பிரபத்தியும் உபாயம் அன்று என்றதாயிற்று
பகவான் இடம் நம்மிடத்தில் அனுக்ரஹ புத்தி உண்டாக பிரபத்தி தேவை -அதிகாரி விசேஷணம் மாத்ரமே
நிர் விசேஷ ப்ரஹ்மம் அத்வைத மதமும் நிரஸனம்
———-
ஸ்வா பீஷ்ட ப்ராப்தி ஹேது ஸ்வயமிஹ புருஷை ஸ்வீக்ருத ஸ்யாத் உபாய
சாஸ்த்ரே லோகே ஸ சித்த ஸ புநருபயதா சித்த ஸாத்ய ப்ரபேதாத்
சித்த உபாயஸ்து முக்தவ் நிரவதிக தய ஸ்ரீ சக சர்வ சக்தி
ஸாத்ய உபாயஸ்து பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் தத்வ ஸீகார ஸித்த்யை–17-
இஹ –இந்தப் பிரபஞ்சத்திலே
சாஸ்த்ரே–ஸாஸ்த்ரத்திலும்
லோகே ஸ-உலக நடப்பிலும்
சித்த -பழக்கத்தில் இருந்து வருகிறதும்
புருஷை-ஜனங்களாலே
ஸ்வயம் -தானாகவே -பிறர் தூண்டுதல் இல்லாமலேயே
ஸ்வீக்ருத-அங்கீ கரிக்கப் பட்டதுமான
ஸ்வா பீஷ்ட –தனது விருப்பத்தை
ப்ராப்தி-பெறுவதற்கு
ஹேது -காரணம் எதுவோ அதுவே
உபாய-உபாயம் என்று பெயர் பெற்றதாக
ஸ்யாத் –இருக்க வேண்டும்
ஸபுந-அவ்வுபாயம் பின்னேயும்
சித்த ஸாத்ய ப்ரபேதாத்-உபயதயா -ஸித்த ஸாத்ய என்னும் இரண்டு பிரிவால் -இரண்டு விதமாக
முக்தவ்-மோக்ஷ விஷயத்தில்
சித்த உபாயஸ்து –ஸித்த உபாயமானவன்
நிரவதிக தய -அளவில்லாக கருணை கொண்ட
ஸ்ரீ சக சர்வ சக்தி–ஸர்வ வல்லமை யுள்ள ஸ்ரீ மன் நாராயணனே
ஸாத்ய உபாயஸ்து –ஸாத்ய உபாயமோ என்னில்
தத் வஸீகார ஸித்த்யை–அந்த எம்பெருமானை வசமாக்குவதன் பொருட்டு ஏற்பட்டவையான
பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் -பக்தி என்பதும் சரணாகதி என்பதும் தனிப்பட்டவையே -வெவ்வேறானவையே –
———–
அத்யந்த அகிஞ்சன அஹம் த்வதப சரணத சந்நி வ்ருத்தோத்ய நாத
த்வத் சேவை காந்த தீ ஸ்யாம் த்வமஸி சரணமித் யத்ய வஸ்யாமி காடம்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் த்வயி நிஹிதபரோ அஸ்ம் யேவமித்யர்ப்பி தாத்மா
யஸ்மை ஸ ந்யஸ்த பார சக்ருதத து சதா ந ப்ரயஸ்யேத் ததர்த்தம்–18–
நாத-ஓ நாதனே
அத்ய-இப்போது
அஹம்-நான்
அத்யந்த அகிஞ்சன -மிகவும் புகல் ஒன்றும் இல்லாதவன்
த்வத் அப சரணத -உனக்கு விரோதம் செய்வதில் இருந்து
சந்நிவ்ருத்த-ஒழிந்தவன்
த்வத் சேவை காந்த தீ -உனக்குப் பிரியம் செய்வதிலேயே நோக்கம் உள்ளவனாக
ஸ்யாம் –இருக்கிறேன்
த்வம் சரணம் அஸி -நீயே உபாயமாக இருக்கிறாய்
இதி யத்ய வஸ்யாமி காடம்-என்று தீர்மானமாக அறுதி இடுகிறேன்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் -நீயே அடியேனை ரக்ஷிப்பவனாக இருக்க வேண்டும்
த்வயி நிஹித பரோ –உன்னிடத்திலேயே சுமையை ஒப்படைத்தவனாக
அஸ்மி –இருக்கிறேன்
ஏவம் இதி -இவ்வண்ணமாக
யர்ப்பி தாத்மா-தன்னை ஒப்புக் கொடுத்தவனான
ஸ –அந்த சரணாகதன்
யஸ்மை –எந்தப் பிரயோஜனத்தின் பொருட்டு
ந்யஸ்த பார –தனது பாரத்தைப் ஒப்புவித்தானோ
ததர்த்தம்-அதற்காக
அத -அதற்குப் பின்
சதா –எக் காலத்திலும் -பயன் பெறும் அளவும் என்றபடி
ந ப்ரயஸ்யேத் –பிரயாசப் படக் கூடியவன் அல்லன்-
ஐந்து அங்கங்களையும் சேர பிடித்து அருளிச் செய்கிறார் இதில்
1–கார்ப்பண்யம் –அகிஞ்சன்யன் என்ற எண்ணம் -சரணாகதியை தவிர வேறே உபாயாந்தரங்களில் சக்தன் இல்லாதவன் – பிராப்தி இல்லாதவன்
2–பிரதி கூல்ய வர்ஜனம் -திரு உள்ளம் சேராதவற்றை செய்யாமல் இருக்க வேண்டுமே
3—ஆனுகூல்ய சங்கல்பம் –திரு உள்ளம் உகந்த கைங்கர்யங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமே
4—மஹா விச்வாஸம் –அவனே ரக்ஷகன் -களை கண் மற்று இலேன் -என்னும் உறுதி வேண்டுமே
5—கோப்த்ருத்வ வர்ணம் –நீயே ரசித்து அருள வேண்டும் என்று ஸ்வீ கரிக்க வேண்டுமே
6—ஆத்ம சமர்ப்பணம் –இதுவே சரணாகதி -மோக்ஷ பலனுக்காக ஒரே தடவை தான் பண்ண வேண்டும் –
பக்தி யோகம் போலே அன்று –
ஸக்ருத் -ஒரு தடவை பர ந்யாஸம் செய்தவன் என்றதால்
பக்தி யோகம் போல் ஆவ்ருத்தி அனுஷ்டானம் இல்லை என்றதாயிற்று
தைத்ரிய உபநிஷத் -தஸ்யை வம் விதுஷ -என்று தொடங்கி புருஷ வித்யையிலே ப்ரபன்னனை யாக ரூபியாகக் காட்டி
யாகத்துக்கு உரிய அங்கங்கள் எல்லாம் இவன் சரீரம் ஜீவன் வாக்கு மார்பு முதலிய அங்கங்களாக நிரூபித்து
ஆயுஷ் காலம் தீக்ஷையாகவும்
மரணம் அவப்ருதம் -யாக பூர்த்தியாகவும் நிரூபித்து உள்ளது –
இந்த ஸ்லோகத்தில் ஆத்ம நிக்ஷேபத்தை அங்கியாகக் கூறி
இனி இவன் நிர்பயன் நிர்பரன்-என்று அருளிச் செய்கிறார்-
———–
த்யக்த்வ உபாய அநபாயா நபி பரம ஜஹன் மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்
ப்ராயச் சித்தம் ஸ யோக்யம் விகத ருணததிர் த்வந்த்வ வாத்யாம் திதிஷூ
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணான் சத் ஸம்ருத்திம் ஸ யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ் தஸ்ய யத்வாஸ் அப்த வர்க்காத் –19-
உபாயாந் –மோக்ஷ உபாயத்தையும் -நித்ய நைமித்திகங்களையும் ஒழிந்த காம்ய தர்மங்களையும்
அபாயா நபி –பகவத் நிக்ரஹ ஹேதுக்களான அபராதங்களையும்
த்யக்த்வ -விட்டு
பரம் -பிரபத்திக்குப் பின்
மத்யமாம்-முன் சொன்ன உபாயங்களில் சேராத நடுத்தரமான
ஸ்வார்ஹ வ்ருத்திம்-நித்ய கர்ம ரூபமாயும் அதே போல் விட முடியாத நைமித்திக கர்ம ரூபமாயும் இருக்கிற தனது நிலைமைக்கு ஏற்ற செயலையும்
யோக்யம்-ப்ரபன்னனுக்கு உரியதான
ப்ராயச்சித் தம்ஸ புன பிரபத்தி ரூபமான ப்ராயச்சித்தத்யையும்
அஜஹத் -விடாதவனாய்
விகத ருணததிர் -தேவக்கடன் பித்ரு கடன் ரிஷி கடன் -போன்ற கடன்களில் துவக்கு அற்றவனாய்
த்வந்த்வ வாத்யாம் –சீத உஷ்ணம் ஸூக துக்கம் போன்ற த்வந்தங்கள் என்னும் சுழல் காற்றை –
அத்தால் உண்டாகும் பீடையை என்றபடி
திதிஷூ-பொறுத்தவனாய்
அநந்யஸ்-எம்பெருமானை விட்டு மாற்றத்தில் துவக்கு அற்றவனாய்
பரிசரண குணான்-பகவத் கைங்கர்யத்துக்குத் தேவையான கருவிகளை -அதாவது
சந்தனம் -புஷ்பம் முதலிய உப கரணங்களையும்
மற்றும் பல தியாகம் சங்க தியாகம் முதலியவற்றையும்
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் –பகவத் பக்தி -அதற்கு ஏற்ற அறிவு இவற்றின் வளருதலையும்
யுக்தாம்-தனது நிலைக்கு அனுகுணமான
சத் ஸம்ருத்திம் ஸ -சான்றோர்களின் சிறப்பையும்
யாசேத் -அபேக்ஷிக்கக் கடவன்
ததபி-அந்த யாசனையும்
பகவதஸ்-பகவானிடம் இருந்தோ
யத்வாஸ்-அல்லது
தஸ்ய -அந்த பகவானுடைய
ஆப்த வர்க்காத்-பக்தர்களிடம் இருந்தோ
ஸ்யாத் –இருக்க வேணும் –
பிரபன்னன் லோக யாத்திரை இருக்கும் விதம் பற்றி அருளிச் செய்கிறார் இதில் –
1—ஸ்வாரத்தமாக எத்தையும் செய்யாமல் இருக்க வேண்டுமே
2—சாஸ்த்ர ஆஜ்ஜை படியே -க்ருத்ய கரணங்கள் -அக்ருத்ய அகரணங்கள் -செய்து வாழ வேண்டும் –
3—நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம கர்மங்களை செய்தும் காம்ய கர்மாக்களை செய்யாமலும் இருக்க வேண்டுமே
4—பிராமாதிகமாக செய்த தவறுகளுக்கு பிராயச்சித்த பிரபத்தி செய்ய வேண்டும் –
5—சரணாகதனுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் தீரும் -பிரபத்தி தானே சிறந்த தபஸ் -பகவத் ஆராதனம் ஒன்றே குறிக்கோள்
வேத அத்யயனத்தால் ரிஷிகள் கடன் தீரும்
யாகாதிகளால் தேவக்கடன் தீரும்
சந்ததி வ்ருத்தியால் பித்ரு கடன் தீரும்
இவை தீர்ந்த பின்பே உபாசகன் மோக்ஷ மார்க்கத்தில் ஈடுபட வேண்டும்
ப்ரபன்னனுக்கு இந்த தேவை இல்லை –
———-
ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷ் வநக குருஜந ப்ரக்ரியா நேமி வ்ருத்தி
ஸ்வார்ஹா நுஜ்ஞாத சேவா விதிஷூ ஸ ஸகேந யாவதிஷ்டம் ப்ரவ்ருத்த
கர்ம பிராரப்த கார்யம் ப்ரபதந மஹிம த்வஸ்த சேஷம் த்விரூபம்பு
க்த்வா ஸ்வாபீஷ்ட காலே விசதி பகவத பாத மூலம் ப்ரபந்ந –20-
ப்ரபந்ந–ப்ரபன்னன்
ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷு -ஆஜ்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்
அநக-குற்றம் அற்ற
குருஜந ப்ரக்ரியா -பெரியோர்களின் அனுஷ்டானத்தை
நேமி வ்ருத்தி-வண்டி வட்டை போல் தொடர்ந்து செல்லுபவனாய்
ஸ்வார்ஹ-தனக்கு உரிய -ப்ரபந்ந நிலைக்கு ஏற்றதான
அநுஜ்ஞாத சேவா –அநுஜ்ஞா கைங்கர்யங்களுடைய
விதிஷூ -அனுஷ்டானம் செய்யும் முறைகளில்
ஸகேந –சக்தி இருக்குமாகில்
யாவதிஷ்டம் -இஷ்டத்தை அனுசரித்து
ப்ரவ்ருத்த–ஊக்கம் கொண்டவனாய்
த்விரூபம்-புண்யம் பாபம் என்ற இரு வகையான
ப்ரபதந மஹிம-ப்ரபத்தியின் மஹிமையால்
த்வஸ்த சேஷம் -அழிந்தது போக மீதியான
கர்ம பிராரப்த கார்யம் -பயன் கொடுக்காத தொடங்கிய செய் வினையை
புக்த்வா -அனுபவித்து
ஸ்வாபீஷ்ட காலே –தான் விரும்பிய காலத்திலேயே
விசதி பகவத பாத மூலம் -பகவானுடைய திருவடி நிழலில் புகுகிறான்
பிரபன்னன் சுக துக்கங்களை சமமாக கொண்டு -த்ரிவித தியாகங்கள் -நினைவுடன் பகவத் ஆராதனை ரூபமாக கர்மங்களை செய்து கொண்டு இருப்பான்
தனக்கு பக்தி ஞான வைராக்யங்கள் வளருவதற்கு மட்டுமே பிரார்திப்பான் –
விஷ்வக் சேனர் பெரிய திருவடி திரு வந்த ஆழ்வான் -ஆச்சார்ய குரு பரம்பரை இவர்களை மட்டுமே வணங்கக் கடவன்
பாகவதர் ஸம்ருத்திக்கும் பகவத் ஆராதனை உபகரணங்கள் ஸம்ருத்திக்கும் பிரார்த்திக்கக் கடவன்
1-வர்ணாஸ்ரம கர்மங்களை விடாமல் அனுசந்திக்கக் கடவன் –
2–திவ்ய தேசங்களில் சாத்துப்பொடி புஷ்பங்கள் சமர்ப்பித்து -உத்ஸவாதிகளை நடத்திக் கண்டு களிக்கக் கடவன் –
———-
ஸ்ருத்யா ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ ஸ்வயமிஹ பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ சித்தாம்
ஸ்வாதந்தர்யே பாரதந்தர்யே அப்யநிதர கதிபி சத் பிராஸ்தீய மாநாம்
வேதாந்த சார்ய இத்தம் விவித குரு ஜன க்ரந்த சம்வாத வத்யா
விம்சத்யா ந்யாஸ வித்யாம் வ்யவ் ருணத ஸூதியாம் ஸ்ரேயஸே வேங்கடேச–21-
வேதாந்த சார்ய -வேதாந்த சார்யன் என்ற விருது பெற்ற
வேங்கடேச-வேங்கட நாதன் என்ற கவி
ஸ்ருத்யா –ஸ்ருதியாலும்
ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ –ஸ்ம்ருதி இதிஹாச புராண ஆகமாதிகளாலும்
ஸ்வயமிஹ – நேராகவே நின்று சொன்ன இவ்விஷயமான
பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ -பகவானே அருளிச் செய்த வாக்யத் தொகுதிகளாலும்
சித்தாம்–தீர்மானிக்கப் பெற்ற
ஸ்வாதந்தர்யே -மோக்ஷத்துக்கு தனியே உபாயமாக இருப்பதிலும்
பாரதந்தர்யே -மற்ற ஒன்றில் உள்ளடங்கி இருப்பதிலும்
அநிதர கதிபி -வேறு கதி இல்லாத
சத் –சத்துக்களால்
பிராஸ்தீய மாநாம்-ப்ரகாசப் படுத்தப் பட்டதுமான
ந்யாஸ வித்யாம் –சரணாகதி வித்யையை
இத்தம் விவித -கீழில் சொன்னபடி நாநா விதமான
குரு ஜன க்ரந்த –ஆச்சார்யர்களுடைய ஸ்தோத்ர ரத்னம் கத்ய த்ரயம் முதலான கிரந்தங்களோடே
சம்வாத வத்யா-ஒற்றுமை வாய்ந்த
விம்சத்யா -இந்த 20 ஸ்லோகம் அடங்கிய ந்யாஸ விம்சதி நூலால்
ஸூதியாம்-நற் புத்திக் காரர்களுக்கு
வ்யவ் ருணத ஸ்ரேயஸே -நன்மை யுண்டாகும் பொருட்டு விளக்கினார் –
———–
சம்சார வர்த்த வேக பிரசமந ஸூ பத்ருக் தேசிக ப்ரேஷிதோ அஹம்
ஸந்த்யக்தோ அந்யை ரூபாயைர நுஸித சரி தேஷ் வத்ய சாந்தாபிஸந்தி
நி சங்கஸ் தத்வ த்ருஷ்ட்யா நிரவதிகதயம் ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் த்வாம்
ந்யஸ்த த்வத் பாத பத்மே வரத நிஜ பரம் நிர்பரோ நிர்பயோஸ்மி–22-
ஹே வரத–ஓ வரதனே
அஹம்-அடியேன்
சம்சார ஆவர்த்த வேக –சம்சாரம் என்னும் நீர்ச் சுழலின் வேகத்தை
பிரசமந –அடக்குகின்ற
ஸூ பத்ருக் -ஷேம காரமான கடாக்ஷம் அருளுபவர்களான
நற் கதிக்கு மூல காரணமான கடாக்ஷம் பெற்றவனாய்
தேசிக ப்ரேஷிதோ –ஆச்சார்யர்களால் கடாக்ஷித்து அனுக்ரஹம் பெற்றவனாய்
அந்யைர் உபாயைர் –மற்ற உபாயங்களாலே
ஸந் த்யக்த-நன்றாக விடப்பட்டவனாய்
அநுஸித சரி தேஷு -தகுதி அற்றவைகளான நடத்தைகளால் -அதாவது நிஷித்த காம்ய கர்மங்களில்
சாந்தாபிஸந்தி–கருத்து ஒழிந்தவனாய்
அத்ய –இப்போது -இந்த நிலையில்
தத்வ த்ருஷ்ட்யா–தத்வ ஞானத்தால்
நிஸ் சங்கஸ் -சந்தேகம் அற்றவனாய்
நிரவதிக தயம் –அளவில்லாக் கருணை கொண்ட
த்வாம்-உன்னை
ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் -ரக்ஷிப்பவனாக அடைந்து -அதாவது -என்னை ரக்ஷிக்கக் கடவாய் என்று பிரார்த்தித்து
த்வத் பாத பத்மே -உனது திருவடித் தாமரையில்
நிஜ பரம் ந்யஸ்த -எனது பாரத்தை அடைக்கலம் செய்து
நிர்பரோ நிர்பயோஸ்மி–சுமை கழிந்தவனாய் பயம் அற்றவனாகவும் இருக்கிறேன்
தம்முடைய ஆச்சார்யர் கிருபையால் -தாம் பெற்ற ஞானம் -பக்தி யோகத்தில் சக்தன் அல்லன் -பிரபத்தி ஒன்றே உபாயம்
ஒரு தடவை மட்டுமே பண்ண வேண்டும் -என்றும் -பிரபத்தியின் மகிமைகளையும் அறிந்தமையையும் –
பெரிய பிராட்டியார் பேர் அருளாளன் இடம் சரண் அடைந்தமையையும் -நிர்ப்பரராய் கைங்கர்யங்களிலே கால ஷேபம் செய்து
நிரதிசய ஆனந்தம் இங்கேயே இந்த சரீரத்துடன் பெற்றதை அருளிச் செய்து நிகமிக்கிறார் –
தம்முடைய அனுஷ்டானத்தையே த்ருஷ்டாந்தம் ஆக்கி நிகமிக்கிறார்
இங்கு மிகச் சுருக்கமாக அருளிச் செய்து
ரஹஸ்ய த்ர்ய சாரத்தில் -அர்த்த அனுசந்தான பாகம் என்ற முதல் பாதத்தில் உபோத்கார அதிகாரம் முதல்
ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் வரை -22அதிகாரங்களால் விரிவாக அருளிச் செய்துள்ளார்
அங்கு விலக்கியவற்றையும் ஒரு ஸ்லோகத்தால் சுருக்கி அருளிச் செய்துள்ளார் –
ஏறி எழில் பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி அடிமையில் நம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே —
அவிஸ்ராந்த ஸ்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா
மம ஆவிர்பூயா ஸூ மனஸி முனி சித்தாத்தி ஸூ லபா
மது ஷீர நியாய ஸ்வ குண விபவ ஆசஜ்ஜன கநத்
மஹாநந்த ப்ரஹ்ம அனுபவ பரிவாஹா பஹூ விதா —
————-
இதி ந்யாஸ விம்சதி சம்பூர்ணம்
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –