ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —

கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –
விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

—————————–
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந்மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி / 31 –கர்ம யோகம் –53 வரை / 72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —

—————————————————-

ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ருபயா விஷ்டம் அஸ்ரு பூர்ணாகுலேக்ஷணம்.–
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந—-৷৷2.1৷৷

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
தம் = அவனிடம்
ததா = இவ்வாறு
க்ரிபயா = தன்னிரக்கத்துடன்
அவிஷ்டம் = நிறைந்த
அஸ்²ரு = கண்ணீர்
பூர்ணா = நிறைந்த
ஆகுல = குழம்பிய
இலேக்ஷணம் = தோற்றம்
விஷீத³ந்தம் = கவலை கொண்ட
இதம் = இந்த
வாக்கியம் = வாக்கியம்
உவாச = கூறினான்
மது⁴ஸூத³ந: = மதுசூதனன்

சஞ்சயன் சொன்னான்
அவ்விதம் இரக்கம் நிறைந்து நீர் நிரம்பிக் கலங்கிய கண்களுடன் சோகத்தோடு கூடிய
அந்த அர்ஜுனனிடம் பகவான் மது ஸூதனன் இவ்வாறு கூறினான்
தேவை இல்லா இடத்தில் கிருபை -கண்ணீர் விட்டு உடம்பு நடுங்கி —
மது சூதனன் -பிரதிபந்தகம் நீக்கி அருள –

ஸ்ரீ பகவாநுவாச
குதஸ்த்வா கஸ்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம்.—
அநார்யஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்திகரம் அர்ஜுந—৷৷2.2৷৷

ஸ்ரீ பகவான் சொன்னார்
அர்ஜுனா -அறிவற்றவர்களால் அடையப்படுவதும் -மறுமைக்குத் தடையாய் இருப்பதும் –
பழிக்குக் காரணதுமான இந்த வருத்தம் தகாத இடத்தில் எதற்க்காக உன்னை வந்து அடைந்தது
மநோ வியாதி போக்க –கஷ்மலம்–இதம் -தாழ்ந்த அபிப்ராயம் –வரக் கூடாத இடத்தில் –
உனக்கா இப்படி – சிறந்த வில்லாளி –பெரியவர்கள் மனஸ் கெட –கீர்த்தியும் வராது –
சுவர்க்கமும் கிட்டாது -எதனால் இப்படி

க்லைப்யம் மா ஸ்ம கம பார்த்த நைதத்த்வய் யுப பத்யதே.—
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப—৷৷2.3৷৷

க்லைப்³யம் = ஆண்மையற்ற
மா ஸ்ம = இல்லாத
க³ம: = நீ சென்ற
பார்த² = பார்த்த
ந = இல்லை
ஏதத் = இந்த
த்வய் = உன்னிடம்
யுபபத்³யதே| = பொருந்தியது ?
க்ஷுத்³ரம் = கீழான
ஹ்ருத³ய = மன
தௌ³ர்ப³ல்யம் = தளர்ச்சி
த்யக்த்வ = கைவிட்டபின்
உத்திஷ்ட = எழுந்து நில்
பரந்தப = எதிரிகளை அழிப்பவனே

குந்தியின் மகனே -பயன்கொள்ளித் தனத்தை அடையாதே –இத்தன்மை உன்னிடத்தில் பொருந்த வில்லை
எதிரிகளை அழிப்பவனே-மிகத் தாழ்ந்ததான மநோ பலமின்மையை விட்டு எழுந்திரு -என்று பகவான் கூறினான்
அலி போன்ற தன்மை –மனஸ் ஒடிந்து உள்ள தன்மை உன்னிடம் சேராதே -தொலைத்து -எழு-
உன்னையே இப்படி தப்பிக்கச் செய்யலாமோ –

அர்ஜுந உவாச
கதம் பீஷ்மமஹம் சங்க்யே த்ரோணம் ச மதுஸூதந.—
இஷுபி ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந–৷৷2.4৷৷

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்
கதம் = எப்படி ?
பீ⁴ஷ்மம் = பீஷ்மர்
அஹம் = நான்
ஸங்க்யே = போரில்
த்³ரோணம் = துரோணர்
ச = மேலும்
மது⁴ஸூத³ந| = மதுசூதனா
இஷுபி⁴: = அம்புகளால்
ப்ரதியோத்ஸ்யாமி = எதிர்த்து போர் புரிவேன்
பூஜார்ஹாவ = பூஜைக்குரியவர்களை
அரிஸூத³ந = அரிசுதனா

அர்ஜுனன் சொன்னான் –
எதிரிகளை அழிப்பவனே -மது என்னும் அரக்கனை அழித்தவனே -பூஜிக்கத் தகுந்த வர்களான
பீஷ்மரையும் த்ரோணரையும் குறித்து எப்படி நான் அம்பு ஏய்த்து யுத்தத்தில் சண்டை புரிவேன்
இங்கும் மது சூதன -சப்தம் –பூஜைக்கு உரியவர் பீஷ்மரையும் த்ரோணரையும் –
சாந்தீபன் சூதனன் இல்லையே உனக்கு பெயர்-

குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந்–ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே–
ஹத்வார்தகாமாம் ஸ்து குரூநிஹைவ–புஞ்ஜீய போகாந் ருதிர ப்ரதிக்தாந்—৷৷2.5৷৷

மதிக்கத் தக்கவர்களான பெரியவர்களைக் கொல்லாமல் இவ்வுலகில் பிச்சை எடுத்து உண்பதும் சிறந்தது அன்றோ
பெரியவர்களைக் கொன்று விட்டு அவர்களுடைய ரத்தத்தால் நனைந்து இருக்கும் செல்வம் காமம் முதலிய
போகங்களை இங்கேயே எப்படி அனுபவிப்பேன்
ஷத்ரியன் இப்படி -அலி பேச்சு –
குருக்களுக்கு அர்த்தம் பொருளில் ஆசையால் என்னை எதிர்க்கிறார் –
காட்டுக்கு ஓடுகிறேன் -இருந்து என்ன பிரயோஜனம் -மனஸ் உடைந்து எதிர்மறையாக செயல் பட வைக்கும் –
தக்ஷிணை கொடுக்க வேன்டும் -ராஜ்யம் கொடுப்பேன் -ரத்த கரை உடன் ராஜ்யம் ஆளவா-

ந சைதத்வித்ம கதரந்நோ கரீயோ–யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு–
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம–ஸ்தேவஸ்திதா ப்ரமுகே தார்தராஷ்ட்ரா—৷৷2.6৷৷

ந = இல்லை
ச = மேலும்
எதத் = இந்த
வித்³ம: = நாம் அறிந்த
கதரந் = இரண்டில்
நோ = நமக்கு
க³ரீயோ = சிறந்தது
யத்³வா = அல்லது
ஜயேம = வெற்றி
யதி³ வா = அல்லது
நோ = நம்
ஜயேயு:| = வெற்றியா
யா = அவர்கள்
எவ = நிச்சயமாக
ஹத்வா = கொன்ற பின்
ந = இல்லை
ஜிஜீவிஷாமஸ் = வாழ விருப்பம்
தே = அவர்கள்
அவஸ்தி²தா: = அணி வகுத்து நிற்கும்
ப்ரமுகே²= எதிர்த்து நிற்கும்
தா⁴ர்தராஷ்ட்ரா: = திருதராஷ்ட்ர கூட்டத்தார்

நாங்கள் வெற்றி கொள்வோமோ அல்லது வெல்லப் படுவோமோ என்னும் இவ்விரண்டினுள் எது
நமக்குச் சிறந்தது என்னும் இதையும் நாம் அறியோம்
நாம் எவர்களைக் கொன்று வாழ விரும்ப வில்லையோ அந்த துரியோத நாதியரே நமக்கு முன்னால் நிற்கிறார்கள்
ஓடினாலும் உன்னை கொல்லுவார்களே-என்று கேட்டதாக -கொண்டு பதில் –யுத்தம் முடிவு நான் அறியேன் –
யாரைக் கொன்று நான் ஜீவிக்க முடியாதோ அவர்கள் அன்றோ எதிரில்

கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் -ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா–
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே—ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—৷৷2.7৷৷

கார்பண்ய = கோழைத்தனமாக
தோஷோ பஹத = தோஷம், குற்றம், குழப்பம்
ஸ்வபா⁴வ: = குணத்துடன்
ப்ருச்சா²மி = நான் கேட்கிறேன்
த்வாம் = நீ
த⁴ர்ம = தர்மம், அறம்
ஸம்மூட = அறியாமல்
சேதா:| = அறிவு
யச் = அது, அந்த
ச்²ரேய: = உயர்ந்த, சிறந்த
ஸ்யாந் = இருக்கும்
நிஸ்²சிதம் = நிச்சயமாக, உறுதியாக
ப்³ரூஹி = சொல்
தந் = இந்த
மே = என்னிடம்
ஸி²ஷ்யஸ் = சீடனான
தே = உன்
அஹம் = நான்
ஸா²தி⁴ = கட்டளை
மாம் = எனக்கு
த்வாம் = நீ
ப்ரபந்நம் = சரண் அடைகிறேன்

மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் -தர்ம விஷயத்தில் மயங்கின
நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் -இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ
அதை எனக்குக் கூறுவாயாக -நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –
உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக
நல்லது சொல் கேட்க்கிறான் இதில் –மனஸ் துர்பலமான நிலை –தர்மம் எது அதர்மம் எது குழம்பி உள்ளேன் —
சிஷ்யன்-பிரபன்னன் -அடி பணிந்து கேட்க்கிறேன்
எது எனக்கு சிறந்தது -என்று நான் நிச்சயமாக அறியும் படி சொல்லி அருள் -ஒரே கேள்வி -700-ஸ்லோகங்கள் –
தெரிந்த அத்தனை நல்லதையும் சொல்லி
வள்ளல் தன்மை -பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் இவன் தன்மையால் தானே –
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தோர்க்கும் இந்த பரம காருண்யம் உண்டே –
ஸ்ரீ கீதாச்சார்யனை பின் பற்றி இவர்கள் –

ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷண மிந்த்ரியாணாம்.–
அவாப்ய பூமாவஸ பத்நம் ருத்தம்–ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்—-৷৷2.8৷৷

ந = இல்லை
ஹி = அதனால்
ப்ரபஸ்²யாமி = நான் காண்கிறேன்
மமா = என்
அபநுத்³யாத்³ = விட்டு விலகி
யட் = அது
சோ²கம் = சோகம்
உச்சோஷணம் = தீர்ந்து போதல்
இந்த்³ரியாணாம்|= புலன்களை
அவாப்ய = அடைந்த பின்
பூமா = பூலோகம்
அஸபத்நம் = பொறாமை படும் படி, உயர்ந்த
ருத்³த⁴ம் = சிறக்கும்
ராஜ்யம் = இராஜ்யம்
ஸுராணாம் = தேவர்கள்
அபி = மேலும்
சா = மேலு
அதி⁴பத்யம் = ஆண்டாலும்

எதிரிகள் அற்றதும்-தன தானியங்களால் நிறைந்ததுமான பூ உலகில் ராஜ்யத்தையும் –
தேவர்களுக்கு அதிபதியாக இருப்பதையும் -அடைந்தாலும் கூட என்னுடைய இந்திரியங்களை மிகவும்
உலர்த்துவதான வருத்தத்தை யாது ஓன்று போக்குமோ அத்தை நான் காண வில்லை -என்று அர்ஜுனன் கூறினான் –
கண்ணுக்கு பட வில்லை -என்கிறான் -வேறே உபாயம் உண்டா கண்ணன் கேட்டதாக கொண்டு – சோகம் தீர்க்க -ஓடுவதை விட –
இந்திரியங்களை வற்ற அடிக்கும் சோகம் –மூன்று லோகம் கிடைத்தாலும் இந்த கேள்விக்கு பதில் இல்லையே -என்கிறான்

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ பரந்தப–
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ—-৷৷2.9৷৷

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ஏவம் = இவ்வாறு
உக்த்வா = (அர்ஜுனன்) சொன்ன பின்
ஹ்ருஷீகேஸ²ம் = ரிஷிகேசன் என்ற கண்ணன்
கு³டா³கேஸ²: = தூக்கத்தை வென்ற
பரந்தப:| = எதிரிகளை அழிக்கும்
ந = இல்லை
யோத்ஸ்ய = சண்டை இடுதல்
இதி = இந்த
கோ³விந்த = கோவிந்தா
உக்த்வா = கூறிய பின்
தூஷ்ணீம் = அமைதியாக
ப³பூ⁴வ = அமர்ந்தான்
ஹ = உறுதியாக

சஞ்சயன் சொன்னான் –
அரசே உறக்கத்தை வென்ற அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணன் இடம் இவ்வாறு கூறி
நான் போர் புரிய மாட்டேன் என்று கூறி விட்டுப் பேசாமல் இருந்தான்
ஹா ஆச்சர்யம் –தூக்கம் சோம்பல் வென்ற அர்ஜுனன் சோம்பி –
கோவிந்தன் இடம் சொல்லி -கோழை போலே சொல்கிறானே –

தமுவாச ஹ்ருஷீகேஷஸம் ப்ரஹ ஸந்நிவ பாரத–
ஸேநயோருபயோர் மத்யே விஷீந்தமிதம் வச—৷৷2.10৷৷

தம் = அவனிடம் (அர்ஜுனனிடம்)
உவாச = கூறினான் (கண்ணன்)
ஹ்ருஷீகேஸ²: = ஹிரிஷிகேச
ப்ரஹஸந் = புன்னகை பூத்து
இவ = இவ்வாறு
பா⁴ரத| = பாரத குல தோன்றலே
ஸேநயோ = சேனைகளின்
உப⁴யோர் – இரண்டு
மத்⁴யே = மத்தியில்
விஷீத³ந்தம் = துக்கத்துடன் இருக்கும்
இதம் = இவ்வாறு
வச: = பேசினான்

பரத குலத்து உதித்த த்ருதராஷ்ட்ரனே-கண்ணன் இரண்டு சேனைகளுக்கும் நடுவில் வருந்துகின்றவனான
அர்ஜுனனைக் குறித்து சிரிப்பவன் போலே இவ்வார்த்தையைக் கூறினான்
சிரித்துக் கொண்டே -மந்த ஸ்மிதம் -பதில் சொல்கிறான் -உபதேசம் -சொல்கிறவர் அழுது சொல்லக் கூடாதே –
ஆழ்ந்த விஷயம் – மாய சிரிப்பு -வியாஜ்யமாக ஸ்ரீ கீதை தரப் போகிறேன் –
தேஹாத்ம விபாகம் இல்லாத ஷத்ரியன் – சங்கை உருவாக்கி -பீஷ்மர் துரோணர் நிறுத்தி
கை காட்டி -வருத்தம் வர வைத்து -சிரிப்பு வருமே -விளையாட்டு பொம்மை தானே நாம்

ஸ்ரீ பகவாநுவாச-
அஷோச்யா நந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே.—
கதாஸூநகதா ஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா—-৷৷2.11৷৷

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
அஸோ²ச்யந் = வருந்தாதே
அநந்வஸோ²சஸ் = வருந்துபவனே
த்வம் = நீ
ப்ரஜ்ஞா = ப்ர + ஞானம் = உயர்ந்த ஞானம்
வாதா³ம் = வாதம், சொற்கள்
ச = மேலும்
பா⁴ஷஸே| = நீ சொல்கிறாய்
கதாஸூந் = மூச்சு விடுபவர்கள் போய் விட்டார்கள் (இறந்தவர்கள்)
ந = இல்லை
கதாஸூம்ஸ் = மூச்சு விடுபவர்கள்
ச = மேலும்
நா = இல்லை
அநுஸோ²சந்தி = வருத்தம்
பண்டி³தா: = ஞானிகளுக்கு

கண்ணன் கூறினான்
அர்ஜுனா நீ வருந்தத் தகாதவர்களைக் குறித்து வருந்தினாய் -மிகவும் அறிவுள்ளவன் போல் பேசுகிறாய் –
அறிவாளிகள் உயிர் அற்ற உடல்களைக் குறித்தும் உயிருள்ள ஜீவர்களைக் குறித்தும் வருந்துவது இல்லை
பண்டிதர் வருத்தம் படக் கூடாத விஷயம் -இவர்களை பார்த்து வருத்தப் பட கூடாதே –
ஞானி போல சில சமயம் பேசுகிறாய் -நீ எந்த கோஷ்ட்டி அறிய முடிய வில்லையே
சோகம் படக் கூடாத இடத்தில் சோகம் பட்டு -அஞ்ஞானி – பித்ரு பிண்டம் இல்லாமல் -சொல்லி ஞானி போலவும் பேசி
குல ஷயம் குல நாசம் அறிந்தவன் சாஸ்த்ர ஞானம் அறிந்தவன் -போலவும் பேசி -வாழ்வதே பரமாத்மாவுக்கு தானே
ஆத்ம தேஹம் வாசி அறிந்தவர் துக்கம் அடைய மாட்டார்களே -இதுவே ஞானம் -பண்டிதன் போலே நடந்து கொள்-

சிற்றத்தின்-செற்றத்தின்- வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் -இந்த ஸ்லோகத்தை கொண்டே பிறந்தது
அடியேன் சிறிய ஞானத்தன்-சிறியது – -ஜீவாத்மா-ஆக்கையின் வழி உழல்வோம் —

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷

ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = நான்
ஜாது = எப்போதும்
நா = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –
எப்போதும் நான் உள்ளவனே யாவேன்
நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்
இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே
நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –
நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –
நான் நேற்றைக்கு இருந்தேன் இல்லை என்பது இல்லை –அஹம் ஜாது–ந ஆஸம் இது ந
நீ இன்று இருக்கிறாய் அல்ல என்பது இல்லை –
இரட்டை இல்லை சொல்லி திடமாக -தன்னை -அவனை -ராஜாக்களை -ஜனாதிப –
ஆத்ம நித்யம் –மற்ற புற மதங்களை போக்கி –
சஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் –
த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம்
நித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான்
நாராயணனே நமக்கே பறை தருவான் –

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷

தேஹிநா = உடலை உடையவன்
அஸ்மிந் = இந்த
யதா = அப்படியே
தேஹே = உடல்
கௌமாரம் = குழந்தைப் பருவம்
யௌவநம் = இளமைப் பருவம்
ஜரா = முதுமை பருவம்
ததா = எப்படியோ
தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவைத்தைப் போல
தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்
தத்ர = அது போல
ந = இல்லை
முஹ்யதி = குழப்பம

இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் எப்படி ஏற்படுகின்றனவோ அப்படியே
இந்த உடலை விட்ட வுடன் மற்றொரு உடலை அடைவதும் ஏற்பட்டே தீரும் –
அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை -தீரர் சோகப் பட மாட்டார்

மாத்ரா ஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக துக்கதா–
ஆகமாபாயிநோ நித்யாஸ்தாம் ஸ்திதி க்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷

மாத்ரா = பொருள்கள், இயற்கை
ஸ்பர்ஸா = உணர்ச்சி
து = அது
கௌந்தேய = குந்தி புத்திரனே
ஸீ²த = குளிர்ச்சி
உஷ்ண = சூடு
ஸுக = சுகம்
து³:க²தா³: = துக்கம்
ஆக³ம் = வரும்
அபாயிநோ = போகும்
அநித்யாஸ் = நிரந்தரம் இல்லாதது
தாம் = அவை
ஸ்திதிக்ஷஸ்வ = பொறுத்துக் கொள்ள வேண்டும்
பா⁴ரத = பாரத குல தோன்றலே

குந்தீ புத்திரனே தந் மாத்ரா கார்யமான -சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களோடும் -அவற்றை உடைய பொருள்களோடும்-
இந்திரியங்களின் சேர்க்கைகள் குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன –
இவை உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக் கூடியவை -அவற்றைப் பொறுத்துக் கொள்

யம் ஹி ந வ்யத யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப—
ஸம துக்க ஸுகம் தீரம் ஸோம் அருதத்வாய கல்பதே—৷৷2.15৷৷

யம் = அவன்
ஹி = அதனால்
ந = இல்லை
வ்யத²யந்த் = சேர்ந்திருது
யேதே = அவை
புருஷம் = மனிதன்
புருஷர்ஷப = புருஷ + ரிஷப = காளை போல உயர்ந்தவன்
ஸம துகஸுகம் = துக்கத்தையும் சுகத்தையும் சமமாக
தீ⁴ரம் = வீரம் உள்ளவன்
ஸோ = அவன்
அம்ருதத்வாய = நிரந்தரமாக, இறப்பு இல்லாதவனாக
கல்பதே = காலம் தோறும் இருப்பான்

புருஷர்களுள் சிறந்தவனே-ஸூக துக்கங்களை சமமாக எண்ணுபவனாய் -தைர்யம் உடையவனாக எந்தப் புருஷன்
இவைகள் -புலன்கள் -மற்றும் போகங்களின் சேர்க்கைகள் -கலங்க வைப்பது இல்லையோ
அந்த மனிதனே மோக்ஷத்தை அடைய வல்லவனாவான்

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்வ தர்ஸிபி–৷৷2.16৷৷

ந = இல்லை
அஸதோ = சத் என்றால் உள்ளது. அ+சத்து என்றால் இல்லாதது
வித்³யதே = உள்ளது
பா⁴வோ = இருப்பது
ந = இல்லை
அபாவோ = இல்லாதது
வித்³யதே = அது
ஸத:| = உண்மையில்
உப⁴யோ = இரண்டிலும்
அபி = அது அன்றி
த்³ருஷ்டோ = பார்த்தல், அறிதல்
அந்த = அந்தம், முடிவு, இறுதி
து = ஆனால்
அநயோ = அந்த இரண்டில்
தத்த்வத³ர்ஸி²பி⁴:= தத்துவம் + அர்சிபி = தத்துவத்தை அறிந்தவர்கள். உண்மையை அறிந்தவர்கள்.

இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளத்தின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது -உடல் அநித்யமானது
உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லத்தின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது
உடல் ஆத்மா இவ்விரண்டையும் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப் பட்டுள்ளது

அவிநாஷி து தத் வித்தி யேந ஸர்வமிதம் ததம்.–
விநாஸ மவ்யயஸ் யாஸ்ய ந கஸ்சித் கர்துமர்ஹதி—৷৷2.17৷৷

அவிநாஸி = நாசி, நாசம், அவி + நாசம் = அழிக்க முடியாதது
து = ஆனால்
தத்= அது
வித்³தி= நீ உணர்வாய்
யேந = அதன் மூலம்
ஸர்வம் = அனைத்தும்
இதம் = இது
ததம் = பரந்து பட்ட, வியாபித்துள்ள
விநாஸம் = அழியும்
அவ்யயஸ்யா = மாறாத
அஸ்ய = அதன்
ந = இல்லை
கஸ்²சித் = அவன்
கர்தும் = செய்பவன்
அர்ஹதி = இயலும் , முடியும்

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஃ ஸரீரிண–
அநாஸிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத—৷৷2.18৷৷

அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய
இமே = இவை
தே³ஹா = வடிவங்கள்
நித்யஸ்ய = நிரந்தரமான
உக்தா: = சொல்லப் பட்டது
ஸ²ரீரிண:| = வடிவங்களை தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்
அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற
அப்ரமேயஸ்ய = அளவற்ற
தஸ்மாத் = எனவே
யுத்⁴யஸ்வ = போர் செய்
பா⁴ரத = பாரத குல தோன்றலே

தோற்றம் இல்லாதவனும் அழிவற்றவனும் அனுபவிக்கப்படும் அசேதனத்திலும் வேறுபட்டு அனுபவிப்பவனாயும்
இருப்பவனுமான ஆத்மாவின் இந்தஉடல்கள் கர்மம் கழிந்த உடன் அழிந்து விடுகின்றன என்று
சாஸ்திரங்களில் சொல்லப் படுகின்றன-எனவே போர் செய்வாயாக
நித்யம் –ஞான மயம்/ -கர்மம் அனுபவிக்கும் கருவி -/அறியப்படும் பொருள்/ சூஷ்மம்/
ஐந்து வாசிகள் ஆத்மாவுக்கும் தேகத்துக்கும்-

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்-
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே–৷৷2.19৷৷

ய = அவன்
ஏநம் = இந்த
வேத்தி = அறிபவன் (அறிவதாக நினைப்பவன்)
ஹந்தாரம் = கொலை செய்வதாக
ய = அவன்
ஸ்அ = மேலும்
ஏநம் = இந்த
மந்யதே = நினைக்கிறான்
ஹதம்| = கொன்றதாக
உபௌ = இருவரும்
தௌ = இரண்டு
ந = இல்லை
விஜாநீதோ = அறிவது
ந = இல்லை
அயம் = அவன்
ஹந்தி= கொல்லப் படுவது
ந = இல்லை
ஹந்யதே = கொல்வதும்

எவன் ஒருவன் ஆயுதம் நெருப்பு முதலானவற்றால் ஏதாவது ஒன்றை இந்த ஆத்மாவைக் கொல்லுபவனாகவோ-
அல்லது இந்த ஆத்மாவைக் கொல்லப் படுபவனாகவோ நினைக்கிறானோ
அவ்விருவரும் ஆத்மாவை அறிகிறார்கள் அல்லர் –
ஆயுதம் நெருப்பு முதலியவை ஆத்மாவைக் கொல்லுவது இல்லை -ஆத்மாவானது கொல்லப் படுவதும் இல்லை –
கொல்லுபவனாக நினைத்தாலோ கொல்லப் பட்டதாக நினைத்தாலோ– ஞானி இல்லையே –

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே—৷৷2.20৷৷

ந = இல்லை
ஜாயதே = பிறப்பது
ம்ரியதே = இறப்பது
வா = மாறாக
கதா³சிந் = எப்போதும்
ந = இல்லை
அயம் = அவன்
பூ⁴த்வா = தோன்றிய பின்
ப⁴விதா= நிலைத்து இருத்தல்
வா = மேலும்
ந = இல்லை
பூ⁴ய:| = மறுபடியும்
அஜோ = பிறப்பது இல்லை
நித்ய: = நிரந்தரமான
ஸா²ஸ்²வத = அநாதியான
அயம் = அவன்
புராணோ = பழமையானது
ந = இல்லை
ஹந்யதே = கொல்லப் படுவது
ஹந்யமாநே = கொல்வதும்
ஸ²ரீரே = உடல்

ஆத்மா ஒரு போதும் உண்டாவதும் இல்லை -அழிவதும் இல்லை –
இவ்வாத்மா கல்பத்தின் தொடக்கத்தில் உண்டாகி மறுபடியும் கல்பத்தின் முடிவில் அழிவான் என்பதும் இல்லை –
இவன் உத்பத்தி அற்றவன் -அழிவற்றவன் -பரிணாமம் அற்றவன் -பழையவனாயினும் புதியவனாய் இருப்பவன் –
எனவே உடல் அழிக்கப்படும் போதும் இவ்வாத்மா அழிக்கப் படுவது இல்லை
விகாரங்கள் -சரீரத்துக்கு -வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை –
கல்ப ஆதியில் தோற்றம் பிரமனுக்கு -கல்ப -முடிவில் அவனுக்கு –
1000 சதுர் யுகம் அவனுக்கு பகல் / அவனுக்கும் அழிவு காட்ட மீண்டும் சப்தம் –
நித்ய / நைமித்திக்க பிரளயம்-மூன்று லோகம் அழியும்- / பிராகிருத பிரளயம் பிரமனுக்கும் முடிவு –
ஆத்யந்திக பிரளயம் -சரணாகதன் திரும்ப மாட்டானே
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன் /un usual as usual மாறுவதே பழக்கம் –

வேதாவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்.–
கதம் ஸ புருஷ பார்த்த கம் காதயதி ஹந்தி கம்—৷৷2.21৷৷

வேத = அறிந்தவன் (வித்தை, அதில் இருந்து வேதம், அதில் இருந்து வேதா)
அவிநாஸிநம் = நாஸி என்றால் நசிப்பது, அழிவது. அவி + நாஸி என்றால் அழியாதது
நித்யம் = நிரந்தரமானது
ய = அவன்
ஏநம் = இது
அஜம் = பிறக்காதது
அவ்யயம் = மாறாதது
கதம் = எவ்வாறு
ஸ = அவன்
புருஷ: = ஆள், அவன், செய்பவன்
பார்த = பார்த்தனே
கம் = எவன்
காதயதி = கொல்பவன்
ஹந்தி = கொலை செய்வது
கம் = யார்

அர்ஜுனா எவன் இவ்வாத்மாவை அழிவற்றவனாகவும் பிறப்பற்றவனாகவும் குறைவற்றவனாகவும் இருப்பதால்
என்றும் இருப்பவனாக அறிகிறானோ அந்த மனிதன் ஒரு ஆத்மாவை எப்படிக் கொல்வான்-
ஓர் ஆத்மாவை எப்படித் தான் மாற்று ஒருவனைக் கொண்டு கொல்விப்பான்
நித்யம் என்று அறிந்தவன் -கொல்ல முயலுவானோ –கொல்ல முடியாதே சண்டை போடலாம் -அது உன் ஷத்ரிய கர்மம்

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷

வாஸாம்ஸி – உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.
ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்
யதா = எவ்வாறு
விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ
நவாநி = புதிய
க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது
நரோ = மனிதன்
அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை
ததா = அது போல
ஸ²ரீராணி = உடல்
விஹாய = அனுபவம் தீர்ந்த பின்
ஜீர்ணாந் = பழையது ஆன பின்
அந்யாநி = மற்றது
ஸம்யாதி = அடைகிறது
நவாநி = புதிய
தே³ஹீ = உடலை உடைய அது

மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ
அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் –
அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே –
நல்ல சரீரம் தான் கிட்டும் –

நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷

ந = இல்லை
ஏனம் = இந்த
சி²ந்த³ந்தி = வெட்டினாலும்
ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்
ந = இல்லை
ஏனம் = இந்த
த³ஹதி = எரிதல்
பாவக:| = தீயில்
ந = இல்லை
ச = மேலும்
ஏனம் = இந்த
க்லேத³யந்த்தி = நனைவது
அபா = தண்ணீரில்
ந = இல்லை
ஸோ²ஷயதி = உலர்வது
மாருத: = காற்றில்

இவ்வாத்மாவை ஆயுதங்கள் வெட்டுவது இல்லை -நெருப்பு எரித்து அழிப்பது இல்லை –
நீர் கரைத்து அழிப்பது இல்லை -காற்று உலர்த்தி அழிப்பது இல்லை
வெட்ட முடியாதே -கொழுத்த முடியாதே -நனைக்க முடியாதே -உலர்த்த முடியாதே –

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷

அச்சே²த்³யோ = வெட்ட முடியாது
அயம் = அது
அதாஹ்யோ = எரிக்க முடியாது
அயம் = அது
அக்லேத்³யோ = நனைக்க முடியாது
அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நித்ய: = நிரந்தரமான
ஸர்வக³த:= எங்கும் நிறைந்த
ஸ்தா²ணு = உறுதியாக
அலோயம் = நகராத
ஸநாதந: = புராதனமானது

இவ்வாத்மா வெட்டப்பட முடியாதவன் எரிக்கப்பட்ட முடியாதவன் -கரைக்கவும் முடியாதவன் -உலர்த்தப்படவும் முடியாதவன் –
இவ்வாத்மா எல்லா அசேதனங்களிலும் பரவி இருப்பவன் -நித்தியமாக இருப்பவன் -நிலையான தன்மை உடையவன் –
அசைக்க முடியாதவன் -பழமையானவன் -அந்தராத்மாவா இருப்பவன் -ஒரே மாதிரியாக இருப்பவன்

அவ்யக்தோயம் அசிந்த்யோயம் அவிகார்யோயமுச்யதே.—
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதும் அர்ஹஸி—৷৷2.25৷৷

அவ்யக்தோ = வெளிப்படாத , புலன்களுக்கு எட்டாத
அயம் = அது
அசிந்த்யோ = சிந்தனைக்கு எட்டாத
அயம் = அது
அவிகார்யோ = மாற்ற முடியாத
அயம் = அது
உச்யதே = சொல்லப் பட்டது
தஸ்மாத் = அதனால்
ஏவம் = எனவே
விதி³த்வ = அதை அறிந்த பின்
ஏனம் = அது
ந = இல்லை
அநுஸோ²சித் = அறிந்த பின்
அர்ஹஸி = நீ இருக்கக் கடவாய்

இவ்வாத்மா அழிவுடையவனாக அறியப்படாதனாகவும் -இவனே அழிவு உடையவற்றின் தன்மைகளை
உடையவனாக நினைக்கவும் தகாதவனாகவும் -இவனே மாறுபாடு அற்றவனாகவும் கூறப்படுகிறான் –
ஆகையால் இவனை இவ்வண்ணமாக அறிந்து கொண்டு நீ வருந்தக் கூடாது
அழிவு உடையவன் நினைப்பவன் முட்டாள் -விகாரம் இல்லையே -கவலை பட வேண்டாம் –

அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்.—
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஸோசிதுமர்ஹஸி৷৷2.26৷৷

அத = அது மட்டும் அல்ல
ச = மேலும்
ஏனம் = இது
நித்யஜாதம் = எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது
நித்யம் = எப்போதும்
வா = அல்லது
மந்யஸே = நீ நினைத்தால்
ம்ருதம் = இறந்து கொண்டே இருக்கிறது
ததா = அப்படியே இருந்தாலும்
அபி = அதனால்
த்வம் = நீ
மஹாபா³ஹோ = பெரிய கைகளை கொண்டவனே
ந = இல்லை
ஏனம் = இது
ஸோ²சிதும் = வருந்துதல்
அர்ஹசி = நீ தகாது

நீண்ட கைகளை உடையவனே முற்கூறியபடி அல்லாமல் இவ்வாத்மாவை என்றும் உண்டாகிறது என்றும்
இறக்கிறதுமான உடலாகவே நினைக்கிறாயாகில் -அப்படி நினைத்தாலும் நீ இவ்வாறு
வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை
ஆத்மாவே தேகம் பிறக்கும் இறக்கும் என்று கொண்டாலும் நீ சோகப் பட வாய்ப்பில்லை —
லோகாயுதன் -கண்டதே கோலம் கொண்டதே காட்சி
ஜாபாலி -வாதம் /ஆத்மாவே தேகம் என்றால் பாபம் புண்ணியம் கவலையே வேண்டாமே-

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச.–
தஸ்மாதபரிஹார்யேர்த்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.27৷৷

ஜாதஸ்ய = பிறந்தவன்
ஹி = அதனால்
த்⁴ருவோ = நிச்சயமாக
ம்ருத்யுர் = இறப்பதும்
த்⁴ருவம் = நிச்சயம்
ஜந்ம = பிறப்பும்
ம்ருதஸ்ய = இறந்தவனும்
ச| = மேலும்
தஸ்மாத³ = அதனால்
அபரிஹார்யே = தவிர்க்க முடியாது
அர்தே = உண்மையில்
ந = இல்லை
த்வம் = நீ
ஸோ²சிதும் = வருந்துதல்
அர்ஹஸி = தகாது

உண்டாவதற்கு அழிவு தவிர்க்க முடியாதது -அழிந்ததற்கு மறு பிறப்பும் தவிர்க்க முடியாதது –
ஆகையால் தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் நீ வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை
சோகிக்க அர்ஹதை இல்லை -பிறந்தது என்றால் இறக்க வேன்டும் -இறந்தவை பிறக்கவும் செய்ய வேன்டும் –
பரிகாரம் இல்லாமல் இருக்க எதற்கு சோகிக்க வேன்டும் —
லிபி மாத்த ஒருவனே -திருவடி மகரந்த தூள் தானே மாத்த முடியும் -கிருபை ஒன்றே கர்மம் போக்கும் –
ஜோதிஷம் பரிகாரம் சொல்லாது -இன்னது நடக்கும் என்றே சொல்லும்
அர்ஜுனன் இதனாலே தான் ஓடுகிறேன் – வென்றால் -பிறக்கும் ஜெயம் -பின்பு இறப்பு தோல்வி -ஸூஷ்மமான அர்த்தம்
குடம் தன்மை மரணம் -மண்ணான தன்மைக்கு ஜனனம் –பானை பண்ணும் பொழுது -மண் அவஸ்தை மரணம் -கூட அவஸ்தை பிறப்பு –
வீர ஸ்வர்க்கம் பிறக்கும் பீஷ்மர் மரணம் -இது தான் பிறந்தால் இறப்பு -என்றது –

அவ்யக்தாநி பூதாநி வ்யக்த மத்யாநி பாரத—
அவ்யக்த நிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா–৷৷2.28৷৷

அவ்யக்தாதீநி = அதன் மூலம் வெளிப்படாதது
பூதாநி = உயிர்கள்
வ்யக்தமத்யாநி = நடுவில் வெளிப்பட்டு இருப்பது
பா⁴ரத = பாரதா
அவ்யக்தநித⁴நாந் = அதன் முடிவு வெளிப்படாதது
யேவ = நிச்சயமாக
தத்ர = இதில்
கா = ஏன்
பரிதே³வநா |= வருத்தப் படுகிறாய்

அர்ஜுனா தேவர் மனிதர் முதலான உடல்கள் காணப்படாத முன் நிலையை உடையனவாகவும்-
காணப்படாத பின் நிலையை உடையனவாகவுமே உள்ளன -அவ்விஷயத்தில் வருந்துவது எதற்காக
பூத காலம் அறிய முடியாது நிகழ் காலம் மட்டும் தெரியும் -மேலே வருவதையும் தெரியாமல் –
கவலை படக் காரணம் இல்லையே -துக்கப் பட எந்த வழியிலும் காரணம் இல்லையே –

ஆஸ்சர்யவத் பஸ்யதி கஸ்சிதேந—-ஆஸ்சர்யவத் வததி ததைவ சாந்ய–
ஆஸ்சர்யவத்யை நமந்ய ஸ்ருணோதி–ஸ்ருத்வாப்யேநம் வேத ந சைவ கஸ்சித்—৷৷2.29৷৷

ஆஸ்²சர்யவத் = ஆச்சரியப் படுதல்
பஸ்²யதி = பார்ப்பவன்
கஸ்²சித் = எவனோ
ஏனம் = அவன்
ஆ ²சர்யவத் = ஆச்சரியப் படுகிறான்
வத³தி= பேசுபவன்
ததா = அதைப் போல
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அந்ய: = மற்றவன்
ஆஸ்²சர்யவச் = ஆச்சரியப் படுகிறான்
ச = மேலும்
ஏனம் = அவன்
அந்ய: = மற்றவன்
ஸ்²ருணோதி = கேட்பவன்
ஸ்²ருத்வா = கேட்டபின்
அபி = மேலும்
ஏனம் = அவன்
வேத = அறிந்தவன்
ந = இல்லை
ச = மேலும்
கஸ்²சித் = யாரோ ஒருவன்

ஆச்சர்யமாக இருக்கும் இவ்வாத்மாவை பல கோடியில் ஒருவனே காண்கிறான் –
அப்படியே ஆச்சர்யமாக இருக்கும் இவனை பல கோடியிலே ஒருவனே பேசுகிறான் –
ஆச்சர்யமாக இருக்கும் இவனை பல கோடியிலே ஒருவனே கேட்கிறான்-
கேட்டும் ஒருவனும் இவனை அறிகிறான் அல்லன்
ஆத்ம ஞானி உடைய பெருமை-பார்க்க பேச- கேட்க–அறிய -துர்லபம் —
ஓர் ஒருவர் உண்டாகில் –எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –

தேஹீ நித்யமவத்யோயம் தேஹே ஸர்வஸ்ய பாரத.–
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.30৷৷

தே³ஹீ = உடலை உடையவன்
நித்யம் = நிரந்தரமாக
அவத்யோ = வதைத்தல் என்றால் கொல்லுதல். அ + வதை என்றால் கொல்லப் பட முடியாதது
அயம் = அது
தேஹே = உடலில்
ஸர்வஸ்ய = எங்கும் நிறைந்து இருக்கிறது
பாரத = பாரத குலத் தோன்றலே
தஸ்மாத் = அதனால்
ஸர்வாணி = அனைத்து
பூதாநி = உயிர்களிலும்
ந = இல்லை
த்வம் = நீ
ஸோசிது = கவலைப் படுவது
மர்ஹஸி = தகாது

தேவர் மனிதர் முதலிய அனைவருடைய உடல்களும் கொல்லப் பட்ட போதிலும்
அவ்வுடலில் இருக்கும் ஆத்மா எப்போதும் கொல்லப் பட முடியாதவன் –
பரத குலத்தில் உதித்தவனே-எனவே எல்லா உயிர்களைக் குறித்தும் நீ வருந்துவதற்கு உரியன் அல்லன்
பல்லவி அநு பல்லவி போலே சோகப் படாதே -கடைசி வரை தாயார் போலே -வாத்சல்ய தரம் –
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –உந்தியில் புகுந்து -ஆதரம் பெறுக வைத்து –
எல்லா தேகத்துக்குள்ளும் ஆத்மா நித்யம் தான் -எந்த ஜீவ ராசிகளை பற்றியும் கவலைப் பட வேண்டாம்

அஸ்தான காருண்யம் விலக்கினது இது வரை-
தர்ம அதர்ம கலக்கம் -மேலே -4 –ஸ்லோகங்களில் சொல்லி
அஸ்தானே ஸ்நேஹம் மேலே–3–ஸ்லோகங்களில் சொல்லப் போகிறான் –

ஸ்வ தர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி—
தர்ம்யாத்தி யுத்தாச் ச்ரேயோந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே–৷৷2.31৷৷

ஸ்வத⁴ர்மம் = சுய தர்மம்
அபி = அதை நினைத்து , அதனால்
சா = மேலும்
அவேக்ஷ்ய = அவசியம்
ந = இல்லை
விகம்பிதும் = நடுங்குதல் , தடுமாறுதல்
அர்ஹஸி = உனக்குத் தகாது
த⁴ர்ம்யாத்³தி⁴ = தர்மமப் படி
யுத்³தா⁴ச் = யுத்தம் செய்யாமல் இருப்பது
ச்ரேயோ = நல்லது, உயர்ந்தது
அந்யத் = மற்றது
க்ஷத்ரியஸ்ய = க்ஷத்ரியனின்
ந = இல்லை
வித்³யதே = அங்கே

மேலும் போர் செய்தலாகிய உன்னுடைய தர்மத்தை நோக்கினாலும் போரில் இருந்து நீ நழுவுதற்கு உரியன அல்லை
அரசனுக்கு தர்மத்தை மீறாத போரைக் காட்டிலும் நன்மை பயப்பது வேறு ஓன்று இல்லை அன்றோ –
ஷத்ரியன் ஸ்ரேயஸ் மோக்ஷம் போக தர்ம யுத்தம் -கிடைக்காத வாய்ப்பு கிட்டும் பொழுது சோகிப்பாயோ–
அந்தணன் -ஞானம் -வேறே வழியால் மோக்ஷம் இல்லை போலே -ஷத்ரியனுக்கு தர்ம யுத்தம்
சண்டை போடாமல் கர்மம் நழுவி நீ நரகம் -துரியோதனன் வென்று அதர்ம ராஜ்யம் நடத்தி அவனும் நரகம் போவான் –

யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்க த்வார மபாவ்ருதம்.–
ஸுகிந க்ஷத்ரியா பார்த்த லபந்தே யுத்தமீத்ருஸம்–৷৷2.32৷৷

யத்³ருச்ச²யா = சந்தர்ப்ப வசத்தால்
சா = மேலும்
உபபந்நம் = கிடைத்தல்
ஸ்வர்க³ த்வாரம் = சொர்க்கத்தின் நுழை வாயில்
அபாவ்ருதம்| = திறந்து இருக்கிறது
ஸுகி²ந: = மகிழ்ந்து இருப்பவனே
க்ஷத்ரியா: = க்ஷத்ரியா
பார்த² = பார்த்தா
லப⁴ந்தே = அடைகிறார்கள்
யுத்³தம் = போர்
இத்³ருஸ²ம் = இந்த மாதிரி

குந்தியின் மகனே தானாகவே வந்து அடைந்து இருப்பதும் தடை நீங்கப் பெற்ற மோக்ஷ சாதனமாக
இருப்பதுமான இந்தப் போரை பாக்யமுள்ள அரசர்களே அடைகிறார்கள்

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி.–
தத ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாப மவாப்ஸ் யஸி—৷৷2.33৷৷

அத = மேலும்
சேத் = ஆனால்
த்வம் = நீ
இமம் = இந்த
த⁴ர்ம்யம் = சரியான
ஸங்க்³ராமம் = படை, யுத்தம்
ந கரிஷ்யஸி = செய்யவில்லை என்றால்
தத: = அதன் பின்
ஸ்வத⁴ர்மம் = ஸ்வதர்மம்
கீர்திம் = புகழ்
ச = மேலும்
ஹித்வா = விட்டபின்
பாபம் = பாவம்
அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்

இப்படி அல்லாமல் நீ இந்த அறப் போரைச் செய்யவில்லை யானால் அக்காரணத்திலேயே
உன் வர்ணத்தின் பயனையும் புகழையும் கை விட்டு பாவத்தை அடைவாய் –
தர்ம யுத்தம் ஒரு வேளை பண்ணாமல் ஓடினால் -தர்மமும் விட்டவனாக -சுவர்க்கமும் கீர்த்தியும் இழந்து போவாய்-

அகீர்த்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்.–
ஸம்பாவிதஸ்ய சாகீர்த்திர் மரணாத ரிச்யதே—৷৷2.34৷৷

அகீர்திம் – கீர்த்தி என்றால் புகழ். அ + கீர்த்தி என்றால் புகழ் இல்லாதது. இகழ்
சா – மேலும்
அபி – அது மட்டும் அல்லாமல்
பூ⁴தாநி – மக்கள்
கத²யிஷ்யந்தி – கூறுவார்கள்
தே – உன்னை
அவ்யயாம்| – நீண்ட காலம் இருக்கக் கூடிய
ஸம்பா⁴விதஸ்ய – புகழுடைய
சா – மேலும்
அகீர்தி – இகழ்
மரணாத³தி – மரணத்தை விட
அரிச்யதே = கொடுமையானது

எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக் கூடிய பழியை எல்லாரும் உனக்குக் கூறுவார்கள் –
வீரம் முதலிய நற் குணங்கள் உடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு
பழிச் சொல் என்பது மரணத்தைக் காட்டிலும் கொடியதாகிறது
அகீர்த்தி உலகம் எங்கும் பரவும் –இதிஹாச புராணம்-எழுதுவோர்க்கு வாய்ப்பு –
வீர்யம் மிகுந்த நீ -அகீர்த்தி மரணம் விட மோசமாகும் –

பயாத்ரணாது பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா—
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்—৷৷2.35৷৷

ப⁴யாத் = பயத்தினால்
ரணாது = போர்க் களத்தை
உபரதம் = நீ விட்டு விலகி விட்டாய் என்று
மம்ஸ்யந்தே = அவர்கள் நினைப்பார்கள்
த்வாம் = உன்னை
மஹாரதா²: = மஹா இரதர்கள்
யேஷாம் = அவர்களின்
ச = மேலும்
த்வம் = உன்னை
பஹுமத் = பெருமை மிக்க
பூத்வா = செய்த பின்
யாஸ்யஸி = நீ அடைவாய்
லாக⁴வம் = சிறுமை

பெரு வீரர்களான எதிரிகள் உன்னை அச்சத்தினால் போரில் புற முதுகு இட்டவனாக நினைக்கப் போகிறார்கள்
எந்தப் பெரு வீரர்களுக்கு நீ இதுவரை மதிக்கத் தக்கவனாக இருந்தாயோ அவர்களுக்கு எளியவனாக ஆகப் போகிறாய்
பயத்தால் ஓடினால் -மகா ரதர்கள் கேலி பேச –யாரால் நீ மதிக்கப் பட்டாயோ அவர்களே உன்னை இகழும் படி –
வீரன் -எதிரி -இரண்டாகும் இருந்து -செய்வதை -கேலி பண்ணுவார்கள் –
ஸ்நேஹம் -வேறே கோழை வேறே -பொறுமை வேறே -வாசி ஸூஷ்மம் –

அவாச்யவாதாம்ஸ்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா–
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ துக்கதரம் நு கிம்—৷৷2.36৷৷

அவாச்யவாதா = சொல்லத்தகாத
ச = மேலும்
பஹூந் = பல
வஷ்யந்தி = சொல்லுவார்கள்
தவா = உன்னை
அஹிதா:| = எதிரிகள்
நிந்த³ந்தஸ் = நிந்தனை செய்வார்கள்
தவ = உன்
ஸாமர்த்²யம் = சாமர்த்தியத்தை, திறமையை
ததோ = அதை விட
து³:க²தரம் = துன்பமானது
நு = இப்போது

உன் எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்திப்பவர்களாய் பேசத் தகாத பல வகைச் சொற்களையும்
சொல்லப் போகிறார்கள் -அவற்றைக் கேட்பதில் காட்டிலும் கொடிய துன்பம் வேறு ஓன்று உண்டோ –
வாயாலே பேசிக் கூடாத -கோழை போலே -ஹிதம் விரும்பாதவர்கள் –நீ யோகி அல்ல வீரன் –
சகிக்க முடியாதே துக்கம் தரும் -மரணம் விட மோசம் -காண்டீபம் -தர்ம புத்திரர் கேலி பண்ணுவார் –
ஒரே நாளில் முடிப்பேன் என்று சொல்லி ஆரம்பித்து -தீ வைத்து கொள்ளுவேன் என்று போனான்
இப்பொழுது யுத்த ரங்கம் விட்டு போகிறாய் -என்று ஸூசகம்

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்–
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய கரித நிஸ்சய–৷৷2.37৷৷

ஹதோ = கொன்றால்
வா = மறுபக்கத்தில்
ப்ராப்ஸ்யஸி = நீ அடைவாய்
ஸ்வர்க³ம் = ஸ்வர்கம்
ஜித்வா = வென்ற பின்
வா = மறுபக்கம்
போ⁴க்ஷ்யஸே = அனுபவிப்பாய்
மஹீம் = இந்த உலகை
தஸ்மாது = எனவே
உத்திஷ்ட = எழுந்து நில்
கௌந்தேய = குந்தி புத்திரனே
யுத்³தா⁴ய = யுத்தம் செய்யவாய்
க்ருதநிஸ்²சய: = துணிந்து,

குந்தியின் மகனே அறப் போரில் கொல்லப் பட்டாலும் மோக்ஷத்தை அடையப் போகிறாய் –
போரில் வென்றாலும் பூமியை அனுபவிக்கப் போகிறாய்
ஆகையால் போரில் உறுதி உடையவனாக எழுந்து இருப்பாயாக
வீர சுவர்க்கமா ராஜ்யமோ கிட்டும் –ஆத்ம சாஷாத்காரம் -உனக்கு ஏற்பட்ட கர்ம யுத்தமே –
இடப பட்ட பாணி இதுவே -அதனால் எழுந்து இரு -யுத்தமே மோக்ஷ சாதனம் என்று நிச்சயப்படுத்து என்றவாறு –
அஸ்தானே ஸ்நேக விஷயம் சொல்லி முடித்து மேலே கர்ம் யோகம் -53-ஸ்லோகங்கள் வரை –

ஸுகதுக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.–
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி—৷৷2.38৷৷

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்
ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு
லாபா⁴லாபௌ⁴ = இலாபம் – அ இலாபம்
ஜயாஜயௌ| = ஜெயம் – அ ஜெயம்
ததோ = பின்
யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய
யுஜ்யஸ்வ = தயாராவாய்
ஏவம் = இவாறு
பாபம் = பாவம்
அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

இன்ப துன்பங்களையும் லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாக நினைத்து
அதற்குப் பிறகு போரில் முன் நிற்பாயாக -இவ்வாறு செய்தாயாகில் நீ பாவத்தை அடைய மாட்டாய்
ஆத்ம சாஷாத்காரம் பெற– ஞான யோகம் –ஞான யோகம் பண்ண –மனஸ் சுத்தி -பற்று அற்ற கர்ம யோகம் –படிக்கட்டு –
மேலே கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் என்பான் மூன்றாம் அத்யாயம் –
பாபம் -சம்சாரம் கிடந்தது -ஸூகம் துக்கம் / லாபம் நஷ்டம் / வெற்றி தோல்வி -இரட்டைகளை சமமாக -நினைத்து –
பலம் -இவை -இவற்றை மறந்து –யுத்தத்துக்காக செய்ய வேன்டும் —
ஸ்ரீ ராமனாக அவதரித்து நடத்தி காட்டியதை ஸ்ரீ கண்ணன் உபதேசிக்கிறார் இங்கு –
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதே ராஜ்யம் இல்லை என்றதும் –

ஏஷா தேபிஹிதா சாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு.–
புத்த்யா யுக்தோ யயா பார்த்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி—৷৷2.39৷৷

ஏஷா = இதை
தே = உனக்கு
அபிஹிதா = கூறினேன்
ஸாங்க்²யே = சாங்கிய கோட்பாடுகளின் படி
புத்தி = அறிவு
யோகே = யோகத்தில்
து = நீ
இமாம் = இந்த
ஸ்²ருணு| = கேட்பாய்
புத்த்யா = புத்தியுடன்
யுக்தோ = சேர்ந்து
யயா = அதன் மூலம்
பார்த = பார்த்தனே
கர்மப³ந்த⁴ம் = கர்ம பந்தம்
ப்ரஹாஸ்யஸி = நீ விடுபடுவாய்

பார்த்தனே அறியத் தக்க ஆத்ம தத்வ விஷயத்தில் இந்த புத்தி உனக்கு உபதேசிக்கப் பட்டது
கர்மங்களுக்குச் சொல்லப்படும் புத்தி யோக விஷயத்தில் -அடுத்த படி சொல்லப் பட இருக்கும் –
புத்தியைக் கேட்பாயாக -எந்த புத்தியோடு கூடிய நீ கர்மத்தினால் ஏற்படும் சம்சார பந்தத்தை விடுவாயோ –
அத்தைக் கேள்
சாங்க்யம் ஆத்ம விஷயம் -கர்ம யோகம் பண்ணும் புத்தி -சொல்கிறேன் –
புத்தி உடன் சேர்த்து கர்ம யோகம் செய்பவன் சம்சாரம் தொலைக்கிறான் –
பிரகரணம் மாறுவதால் ஸ்ருணு- கேளாய் என்கிறான் –
யோகம் -கர்மா யோகம் என்றவாறு -சாதனம் -என்றவாறு -யோகம் கூடியது -என்றுமாம்
கர்ம யோக புத்தி வந்தால் -அவன் கூட சேருவோமே

நேஹாபி க்ரம நாஸோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே–
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்–৷৷2.40৷৷

ந = இல்லை
இஹ = இங்கு
அபி க்ரமநாஸோ = அபி+கர்ம +நாச = கர்மங்களில் இருந்து விடுபட
அஸ்தி = இருக்கிறது
ப்ரத்யவாயோ = எதிர்வினை, குறைவு,
ந= இல்லை
வித்³யதே| = இருக்கிறது
ஸ்வல்பம் = கொஞ்சம்
அபி = இப்போது
அஸ்ய = இதன் மூலம்
த⁴ர்மஸ்ய = தர்மத்தின் மூலம்
த்ராயதே = காக்கிறது
மஹதோ = பெரிய
பயாத் = பயத்தில் இருந்து

கர்ம யோகத்தில் தொடங்கியதற்கு அழிவு இல்லை -தொடங்கி விட்டு விட்டாலும் தோஷம் கிடையாது –
கர்மயோகம் எனப்படும் இந்த தர்மத்தின் சிறு பகுதியும் பெரிதான சம்சார பயத்தில் இருந்து காப்பாற்றுகிறது –
நடுவில் நழுவினாலும்-கர்ம யோகம் – -அடுத்த ஜென்மம் விட்ட இடத்தில் தொடரும் -தப்பானாலும் தோஷம் இல்லை
ஞான யோகம் பக்தி யோகம் அப்படி இல்லையே -கொஞ்சம் பண்ணினாலும் -முடிந்த அளவு செய்து தொடரலாம்-

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குரு நந்தந—
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோவ்யவஸாயிநாம்—৷৷2.41৷৷

வ்யவஸாயாத்மிகா = உறுதியான
பு³த்³தி = புத்தி
ஏக = ஒன்று
இஹ = இங்கே
குருநந்த³ந = குரு குல தோன்றலே
ப³ஹுஸா²கா² = பல கிளைகளை
ஹி = அதனால்
அநந்த = அநேக
சா = மேலும்
பு³த்³த⁴யோ = புத்தி
அவ்யவஸாயிநாம் = மன உறுதி இல்லாதவர்கள்

அர்ஜுனா கர்மயோக விஷயத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயத்தை முன்னிட்ட அறிவு மோக்ஷ ரூபமான
ஒரே பலனைப் பற்றியது ஆகையால் ஒரு படிப்பட்டது
ஆத்ம ஸ்வரூபம் நிச்சயம் மற்றவர்களுடைய காம்ய கர்ம விஷயமான புத்திகள் கணக்கற்ற பலன்களைப் பற்றியவை
ஆகையால் கணக்கற்றவை -பல பிரிவுகளை உடையவை –
உயிரான ஸ்லோகம் -ஆத்ம சாஷாத்காரம் -குறியாக கொண்டு -கர்ம யோகம் -ஒரே நேர் பார்வை –
நிறைய கிளைகள் -மற்ற பலத்தில் ஆசை வைத்து -ஒன்றுமே கிட்டாமல் -காம்ய கர்மங்கள் கூடாதே -ஏகாக்ர புத்தி-
நித்ய நைமித்திக காம்ய கர்மாக்கள் உண்டே -காம்ய கர்மாக்கள் கூடாதே -பலத்தில் ஆசை இல்லாமல் – –
கர்ம யோகத்துக்கு நித்ய நைமித்திக கர்மாக்கள் உதவும் –

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபஸ்ஸித–
வேதவாதரதா பார்த்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷

யம் = அது
இமம் = இந்த
புஷ்பிதாம் = மலர்ந்தது
வாசம் = உரை
ப்ரவத³ந் = சொல்கிறார்கள்
அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்
வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்
பார்த² = பார்த்தா
ந = இல்லை
அந்ய = மற்றவை
அஸ்தி = இருக்கிறது
இதி = எனவே
வாதி³ந: = சொல்பவர்கள்

காமாத்மாந ஸ்வர்கபரா ஜந்ம கர்ம பல ப்ரதாம்.–
க்ரியா விஷேஷ பஹுளாம் போகைஸ்வர்ய கதிம் ப்ரதி–৷৷2.43৷৷

காமாத்மாந: = ஆசையில் அகப்பட்டவர்கள், ஆசையில் மூழ்கியவர்கள்
ஸ்வர்க³பரா = ஸ்வர்கம் வேண்டும் என்று மிக விரும்புவார்கள்
ஜந்ம = பிறப்புக்கும்
கர்ம = செய்கின்ற தொழிலுக்கும்
ப²லப்ரதா³ம் = பலனை பிரதானமாக எதிர்பார்ப்பவர்கள்
க்ரியா = கிரியைகள். யாகம், பூஜை போன்றவை
விஸே²ஷ = சிறப்பான, விசேஷமான
ப³ஹுலாம் = பல விதமான
போ⁴கை = போகம் (வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவை)
³ஸ்²வர்யக³திம் = ஸ்வர்கத்தை அடைய வேண்டும் என்று
ப்ரதி = நோக்கத்துடன்

போகைஸ்வர்ய ப்ரஸக்தாநாம் தயாபஹ்ருத சேதஸாம்–
வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷

போ⁴கை = போகம், ஆடம்பரம்
ஐஸ்²வர்ய = ஐஸ்வர்யம் என்றால் அதிகாரம், ஆட்சி.
ஈசன் = தலைவன்.
ஈஸ்வர = தலைமை பீடம்.
ஐஸ்வர்யம் = அதிகாரம், தலைமை பொறுப்பு, ஆட்சி.
ப்ரஸக்தாநாம் = ஆட்பட்டு, உந்தப்பட்டு , ஆசைப்பட்டு
தயா = அதனால்
அபஹ்ருத = அபகரிக்கப்பட்டு, களவாடி, தொலைந்து போய்
சேதஸாம் = மனம், இதயம், புத்தி
வ்யவஸாயாத்மிகா = உறுதிப்பாட்டில் இருந்து, நிலைத்த தன்மையில் இருந்து
பு³த்³தி⁴ = புத்தி
ஸமாதௌ⁴ = நிலை நின்ற, உறுதியுடன் நின்ற, சம நிலைப் பட்ட
ந = இல்லை
விதீ⁴யதே = விதிக்கப்பட்டு இருக்கிறது

பார்த்தனே வேதங்களில் கூறப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களை பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய் –
காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் -சுவர்க்கத்தை விரும்புவர்களாய் –
சுவர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த பலன் இல்லை என்று பேசுகின்றவர்களான சிற்று அறிவாளர்கள்
ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பதாகிய செல்வத்தை அடைவது குறித்து காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது
அழகாக உள்ளதாய் -மறு பிறப்பு முதலிய கர்மங்களாகிய பலன்களை அளிப்பதாய் -பல செய்கைகளை யுடைத்தான
யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ -அந்தப் பேச்சுக்களால் அழிக்கப் பட்ட அறிவை உடையவர்களாய்
ஸ்வர்க்காதி செல்வங்களில் ஈடுபட்டவர்களான அப் புல்லறிவாளர்களுக்கு மனத்தில் ஆத்ம ஸ்வரூப நிச்சயத்தை
முன்னிட்டுக் கொண்டு இருக்கும் கர்ம யோக புத்தி உண்டாவது இல்லை –

காம்ய கர்மாக்கள் கூடாது என்றால் வேதம் சொல்வது எதனால் –சிற்று அறிவு கொண்டு -பூ பூத்தால் போலே பேசி –
காய் கனி –இல்லாமல் -வாதம் பண்ணுபவர்கள் –ஸ்வர்க்கம் ஒன்றே பலம் என்பர் –
காமிய கர்மங்கள் ஜென்மம் மீண்டு மீண்டு கொடுக்கும் -கிரியா விசேஷங்கள் பல உண்டு
அனுபவத்தில் மனஸ்–புத்தி தப்பான வழியில் –செல்பவர்களுக்கு இந்த ஏகாக்ர புத்தி விளையாது –

த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.–
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவாந்—-৷৷2.45৷৷

த்ரை = மூன்று
குண்ய = குணங்களின்
விஷயா = விசேஷ தன்மை பற்றி
வேதா = வேதங்கள்
நிஸ் = விலகி, தாண்டி, ஒட்டாமல்
த்ரை = மூன்று
குண்யோ = குணங்களில் இருந்து
ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா
நிர் = இல்லாமல்
த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை
நித்ய = எப்போதும்
ஸத்த்வ = சத்வ
ஸ்தோ = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்
நிர் = இல்லமால்
யோக = ஆடம்பரங்களில்
க்ஷேம = சுகங்களில்
ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி

வேதங்கள் முக்குணங்களை உடையவர்களுக்கு நன்மையைக் கூறுபவை
அர்ஜுனா முக்குணங்களையும் உடையவன் ஆகாமல் இரு
ஸூகம் துக்கம் முதலிய இரட்டைகளைப் பொறுத்துக் கொள்பவனாகவும் –
தினம் தோறும் வளரும் சத்வ குணத்தை உடையவனாகவும் –
பொருள்கள் அடைவதாகிய யோகம் -அடைந்தவற்றைக் காப்பதாகிய க்ஷேமம் -ஆகியவற்றில் முயற்சி அற்றவனாகவும்
ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டவனாகவும் ஆவாய் –
இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று –மகா க்ரமன் -மஹதி அனுபூதி படிக்கட்டு வைப்பான் தன்னிடம் சேர்க்க
வேத நூல் ஒதுகின்றது உண்மை -த்வந்தம் -சுக துக்கம் -இத்யாதி –
யோகம் -கிடைக்காதது கிடைப்பது -க்ஷேமம் -கிடைத்தது நிலைக்கும் -ஆத்மா சாஷாத்காரம் கிட்டி தங்க வேன்டும்

யாவாநர்த உதபாநே ஸர்வத ஸம்ப்லுதோதகே.–
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத—৷৷2.46৷৷

யாவாந் = அதுவரை, அந்த அளவு
அர்த = பயன், உபயோகம், தேவை
உத³பாநே = குளம், குட்டை, ஏரி
ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்
ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது
தாவாந் = அந்த அளவு
ஸர்வேஷு = அனைத்து
வேதே³ஷு = வேதங்களில்
ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு
விஜாநத: = அறிந்தவனுக்கு (வி ஞான த் )

எல்லாப் புறத்திலும் நிறைந்த நீரை உடைய நீர் நிலையிலே -அந்த நீரை உபயோகிக்க விரும்புவனுக்கு
எவ்வளவு மட்டும் பயன் உள்ளதோ அவ்வளவே கைக் கொள்ளப் படுகிறதோ
அப்படியே எல்லா வேதங்களிலும் வைதிகனாய் அறிவாளியான முமுஷுக்கு மோக்ஷ சாதனமாய் இருப்பது
எவ்வளவோ அவ்வளவே ஏற்றுக் கொள்ளத் தக்கது –
அதாவது எல்லா வேத பாகமும் ஏற்றுக் கொள்ளத் தக்கது அன்று என்று கருத்து
நமக்கு வேண்டிய தண்ணீரை தானே குடிப்போம் -வேதத்தில் நமக்கு உள்ளதை மட்டும் கொள்ள வேன்டும் –

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

கர்மணி = வேலை செய்வதில்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = ‘பல்’ என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்
அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் —
கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை –
கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் – மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-

யோகஸ்த குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய.–
ஸித்த்யஸித்த்யோ ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே৷–৷৷2.48৷৷

யோக³ஸ்த²: = யோகத்தில் இருப்பவன்
குரு = செய்வான்
கர்மாணி = காரியங்களை
ஸங்க³ம் = தொடர்பு
த்யக்த்வா = விட்டுவிட்டு
த⁴நஞ்ஜய = தனஞ்சய
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: = சித்தி , அசித்தி (வெற்றி , தோல்வி)
ஸமோ = சமமாக
பூ⁴த்வா = அடைந்தபின்
ஸமத்வம்= ஒன்றாக
யோக³ =யோகம் என்பது
உச்யதே = இதுவே

அர்ஜுனா ராஜ்ஜியம் உறவினர் முதலானவற்றில் பற்றைக் கை விட்டு -வெற்றி முதலானவை கிடைத்தாலும்
கிடைக்கா விட்டாலும் ஒருபடிப்பட்டவனாய் -யோகத்தில் இருப்பவனாய் -கர்மங்களைச் செய்வாயாக –
வெற்றி முதலானவை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் ஒருபடிப் பட்டு இருத்தல் யோகம் என்று சொல்லப்படுகிறது –
சமத்துவம் புதிய கருத்து –சித்தியோ அசித்தியோ -வெற்றியோ தோல்வியோ ஒன்றாக நினைத்து —
யோகத்தில் நிலை நின்று கர்ம யோகம் செய்து -பற்றுதல்களை தொலைத்து -தனத்தை வெல்லுவாய் –
சங்கம் வெல்வது அரிது என்பதால் தனஞ்சயன் -ஒரு சிஷ்யனும் சரண் என்று சொல்ல வில்லையே –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் இடமே பலித்தது –கர்ம யோகி -சுக துக்கம் சமமாக பார்ப்பார்களே –

தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தநஞ்ஜய.–
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா பலஹேதவ—৷৷2.49৷৷

தூ³ரேண = ரொம்ப தூரத்தில்
ஹை = நிச்சயமாக
அவரம் = தாழ்ந்தது
கர்ம = கர்மம், வினை, தொழில்
புத்தி யோகாத் = புத்தி யோகத்தில் இலயித்து
தநஞ்ஜய = தனஞ்சய
புத்தௌ = புத்தியை
ஸரணம் = சரணம்
அந்விச்ச = அடை
க்ருபணா: = லோபிகள்
பல = பலனை
ஹேதவ: = எதிர்பார்ப்பவர்கள்

அர்ஜுனா, புத்தி யோகத்தை விட பலனை எதிர்பார்த்து செய்யும் காரியங்கள் பல மடங்கு தாழ்ந்தவை.
புத்தியை சரணடை. பயன் கருதி காரியம் செய்பவர்கள் கீழானவர்கள்

அர்ஜுனா புத்தியோடு கூடிய கர்மத்தைக் காட்டிலும் அந்த புத்தி அற்ற காம்ய கர்மம் மிகவும் தாந்தது அன்றோ –
ஆகையால் முன் கூறிய புத்தியில் புகல் அடைவாயாக -காம்ய பலனில் விருப்பம் வைப்பவர்கள் சம்சாரிகள் ஆகின்றனர் –
தரித்ரர்கள் -தாழ்ந்த பலத்துக்காக பண்ணுபவர்கள் —
புத்தி யோகம் விட கர்ம யோகம் மிகவும் தாழ்ந்தது –என்கிறான் இல்லை -53-ஸ்லோகம் மேல் தான் ஞான யோகம்
தியாக புத்தி உடன் செய்யும் கர்ம யோகமே உயர்ந்தது என்றவாறு —
புத்தியில் புகலிடமாக ஆஸ்ரயிப்பாய் -புத்தியை முதலில் சம்பாதித்து கொள் என்றவாறு –

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதே—
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக கர்மஸு கௌஷலம்—৷৷2.50৷৷

பு³த்³தி⁴ = புத்தி
யுக்தோ = இணைந்து, சேர்ந்து
ஜஹாதி = விட்டு விட்டு , விலகி
இஹ = இங்கு
உபே = இரண்டும்
ஸுக்ருத = நல்லதும்
துஷ்க்ருதே= தீயதும்
தஸ்மாத் = எனவே
யோகா³ய = யோகத்தின் மூலம்
யுஜ்யஸ்வ = சேர்ந்து, இணைந்து
யோக³: = யோகம்
கர்மஸு = கர்ம வினைகளின்
கௌஸ²லம் = சிறப்பானது, உயர்ந்தது ||2-50||

கர்மம் செய்கின்ற போது முன் கூறிய பக்தியோடு கூடிய புருஷன் புண்ய பாபங்கள் இரண்டையும் விடுகிறான்
ஆகையால் முன் கூறிய புத்தி யோகத்தின் பொருட்டு முயற்சி கொள்வாயாக –
கர்மங்கள் செய்யப்படும் போது இந்தப் புத்திச் சேர்க்கை மிகுந்த சாமர்த்தியத்தால் ஏற்படுவது –
சாமர்த்தியமாக -எல்லாம் செய்து -நம்மது இல்லை –தியாக உணர்வுடன் செய்தால் -இரண்டையும் விட்டு –
இங்கேயே -ஸூஹ்ருதம் -ஈஸ்வர ப்ரீதியும் அப்ரீதியும் -இதுவே புண்ய பாபங்கள் —
தாழ்ந்த பலன்களை கொடுக்கவும் ஈஸ்வர ப்ரீதியால் -வேறே வழியில்லாமல் கொடுக்கிறேன் -என்றவாறு –
ஆத்ம சாஷாத்கார பலத்துக்காக செய்தால் மட்டுமே உண்மையான ப்ரீதியுடன் வழங்குவான் –

கர்மஜம் புத்தி யுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண–
ஜந்ம பந்த விநிர்முக்தா பதம் கச்சந்த்யநாமயம்—৷৷2.51৷৷

கர்மஜம் = கர்மத்தில் இருந்த ஜனித்த, பிறந்த
பு³த்³தி⁴யுக்தா = புத்தியுடன் சேர்ந்த
ஹி = அதனால்,
ப²லம் = பலன்கள்
த்யக்த்வா = தியாகம் செய்து, துறந்து
மநீஷிண:| = அறிவுள்ளவர்கள்
ஜந்மப³ந்த⁴ = பிறவித் தொடர்பு
விநிர்முக்தா: = விடு படுகிறார்கள்
பத³ம் = ஒவ்வொரு அடி
க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்
அநாமயம் = துன்பத்தை விட்டு

அறிவாளிகள் முன்பு கூறிய புத்தியோடு கூடியவர்களாய் காம்ய கர்மத்தினால் உண்டாகும் ஸ்வர்க்காதி பலன்களை
விட்டு கர்மத்தைச் செய்வதன் மூலம் பிறப்பாகிற கட்டில் இருந்து நன்கு விடுபட்டு
துன்பம் அற்ற பரம பதத்தை அடைகின்றனர் அன்றோ
மூன்று வித தியாகம் சேர்ந்த புத்தி -மீண்டும் மீண்டும் இதை சொல்லி -திட புத்தி வர –கர்ம யோகம் ஒரே பலனுக்காக –
ஜென்மம் பந்தம் இல்லாமல் -மோக்ஷ பதம் பெற்று -வியாதி அற்ற பரமபதம் -அடைகிறான் –

யதா தே மோஹகலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி.–
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச–৷৷2.52৷৷

எப்போது உன் அறிவு விபரீத ஞானம் ஆகிற கலக்கத்தை கடக்கப் போகின்றதோ அப்போது –
இதற்கு முன் என்னால் கை விடத் தக்கதாகச் சொல்லப்பட்ட பலன் முதலியவற்றைக் குறித்தும்
இனிச் சொல்லப்பட போகின்றதைக் குறித்தும் நீயே உன்னை இகழ்ந்து கொள்ளப் போகிறாய்
மயக்கத்தால் -கலங்கி -மோகம் -தேஹாத்ம பிரமம் –உபதேசம் கேட்டு வெளியில் வந்து –வெறுப்பு அடைந்து —
சொல்வதையும் சொல்லப் போவதையும் –
தேகம் -நஸ்வரம் அறிந்த பின்பு வெறுப்பு வருமே -நித்தியமான ஆத்மா பற்றி அறியாமல் -இருந்தோம் –
பழுதே பல காலம் போயின என்று அஞ்சி அழுவோமே –
நிர்வேதமே முதல் அடையாளம் -திருந்துவதற்கு -குல பாம்சனம் -திரும்பி விபீஷணன் -முதல் அடி –

ஸ்ருதி விப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா.—
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி—-৷৷2.53৷৷

என்னிடம் கேட்டதால் விசேஷமாக அறியப் பட்டதாய் -ஒருபடிப்பட்டதாய் இருக்கும் உன்னுடைய அறிவானது
மனத்தில் எப்பொழுது அசைக்க முடியாதது ஆகிறதோ அப்போது ஆத்ம சாஷாத் காரத்தை அடையப் போகிறாய்
யோகம் -ஆத்மசாஷாத்காரம் -இங்கு -ஸ்ருதி -இது வரை கேட்டு -நல்ல விசேஷ ஞானம் பெற்று –
ஒரு முகப் பட்ட புத்தி -அசலா புத்தி — மனஸ் -சமாதி -அசைக்க மாட்டாத ஞானம் வந்து இருக்கும் –
ஞான யோகம் பிறக்கும் என்றவாறு -ஆத்ம சாஷாத்காரம் கிடைக்கும் -என்றவாறு –

அர்ஜுந உவாச-
ஸ்தித ப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ.–
ஸ்திததீ கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்—৷৷2.54৷৷

அர்ஜுனன் கேட்கிறான்
கேசவனே சமாதியில் இருக்கும் ஞான யோக நிஷ்டனைச் சொல்லும் சொல் எது
அந்த ஞான யோக நிஷ்டன் என்ன பேசுவான் -மனத்தால் என்ன செய்வான் -உடலால் எவற்றைச் செய்வான்
ஞான யோகி -அசைக்க மாட்டாத ஞானம் படைத்தவன் -வேறு பலனுக்கு குறி இல்லாமல் –
ஆத்ம சாஷாத்காரம் -எப்படி விளக்குவார்கள் —
என்ன பேசுவான் -அவன் மானஸ காயிக- செயல்கள் என்ன -மூன்றையும் பற்றி கேட்க்கிறான் –
மேலே நான்கால்–நான்கு நிலைகள் —
முதல் படிக்கட்டு -58–யத்னம் முயலுவது முதல் நிலை / வ்யதிரேக / ஏகேந்த்ர / வசீகரா சமஞ்ஞா –
இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி -பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் –
வ்யதிரேகம் அடுத்து மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம் / வசீகரம் அனைத்தையும் அடக்குவது

ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோ கதாந்.–
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷

ஸ்ரீ பகவான் சொன்னான்
அர்ஜுனா ஆத்மாவையே பற்றி நிற்கும் மனத்தினால் ஆனந்த ரூபமான தன் ஆத்மாவிலேயே ப்ரீதி உடையவனாய்
மனத்தினில் இருக்கும் மற்ற பலன்களைப் பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும் எப்பொழுது கை விடுகிறானோ
அப்போது ஸ்திதபிரஞ்ஞன் என்று கூறப்படுகிறான்
வசீகரம் -கடைசி நிலை -சர்வ ஆசைகளையும் விட்டு -ஆத்ம சாஷாத்காரம் தவிர —
மனசால் ஆத்மா இடமே செலுத்தி ஸந்தோஷம் அடைகிறான்

துக்கேஷ்வநுத் விக்நமநா ஸுகேஷு விகத ஸ்ப்ருஹ-
வீத ராக பய க்ரோத ஸ்திததீர் முநிருச்யதே–৷৷2.56৷৷

துன்பம் தருமவை வந்து அடைந்த போதிலும் துன்பம் அடையாதவனாய் –
இன்பம் தருமவை வந்த போதிலும் அவற்றில் ஆசை அற்றவனாய் –
ஆசை பயம் கோபம் முதலியவை அற்றவனாய் -ஆத்மாவைப் பற்றியே மனனம் செய்பவனாய்
இருப்பவன் ஸ்தித பிரஞ்ஞன் எனப்படுவான்
ஏகேந்த்ரம் -மனன சீலன் முனி -ஆத்மா இடமே மனசை செலுத்தி -துக்கம் வந்தால் கலங்காமல் -சுகம் வந்தால் மகிழாமல் —
கீழே சுகம் துக்கம் -இங்கு சுக காரணம் -துக்க காரணம் –
ராகம் பயம் க்ரோதம் மூன்றையும் விட்டு –அநாகதேஷூ ஸ்ப்ருஹ ராகம் -வர போகும் நல்லது பற்றி
இனம் புரியாத ஆசை வருமே அது தான் ராகம் –
பிரிய விஸ்லேஷம் அப்ரிய ஆகாத —பயம் முதல் நிலை -அப்புறம் துக்கம் –எதிர்பார்க்கும் நிலையில் –
க்ரோதம் -பயம் -வந்து -செய்யும் செயல்கள் தானே -ஆசை மாறி கோபம் -ஆசை இருந்தால் தானே கோபம் வரும் –

ய ஸர்வத்ராநபி ஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய ஸூபாஸூபம்.–
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—–৷৷2.57৷

எவன் ஒருவன் இனிய பொருள்கள் அனைத்திலும் மிகுந்த ஈடுபாடு அற்றவனாய் –
அந்த அந்த நன்மை தீமைகளை அடைந்தும் -நன்மையைப் புகழ்வது இல்லையோ –
தீமையை இகழ்வது இல்லையோ -அவனுடைய அறிவு நிலையானது
வ்யதிரேகம் -ஆசையை திருப்புவது –இவன் தான் ஞான யோகி –
எங்கும் இருந்து -ஆசை காட்டாமல் உதாசீனனாக -பற்று அற்று –
ஸூபம் அஸூபம் -இன்பமோ துன்பமோ படாமல் -பக்குவப்பட்டு -புகழுவதும் இகழுவதும் இல்லாமல்-

யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷

எப்போது இந்த ஞான நிஷ்டன் இந்திரியங்களை ஆமை அவயவங்களை இழுத்துக் கொள்வது போலே
எல்லாப் படியாலும் விஷயங்களில் நின்றும் இழுத்துக் கொள்கிறானோ அவனுடைய அறிவு நிலையாக நிற்கிறது
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா–அவனுடைய ஞானம் நிலை பெற்றது -மீண்டும் மீண்டும் வரும் –
ஆமை -போலே சுருக்கிக் கொண்டு -விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்து —
பகவத் விஷயம் மட்டுமே -கண்டு பேசி கேட்டு -சப்த்தாதிகளில் இருந்து இழுத்து –
அப்பொழுது தான் மனசை ஆத்மா இடம் செலுத்த முடியும் —

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை
ஞானயோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம்
ஆசை தவிர விஷயங்கள் -சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர எல்லாம் போகும் –
ஆசை கூட ஆத்ம சாஷாத்காரம் வந்தால் போகும் –

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

குந்தீ புத்திரனே
அறிவாளியாயும் -ஆத்மாவைக் காண்பதற்கு முயற்சி செய்பவனாயும் இருந்த போதிலும்
மனிதனுடைய வலிமையான இந்திரியங்கள் நெஞ்சை வலிந்து இழுக்கின்றன
இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –பிரத்யனம் செய்தாலும் —
இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.61৷৷

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –
எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –
குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் –
சித்த சமாதானம் உடன் அவன் இடமே நிலை பெற செய்து
ஜிஹ்வே கேசவ கீர்த்தி -படைத்த பலன் -மயில் கண்ணுக்கும் நம் கண்ணுக்கும் வாசி இருக்க வேண்டுமே
பாம்பு பூத்து ஓட்டைக்கும் காது ஓட்டைக்கும் -பிணம் கைக்குக்கும் நம் கைகளுக்கும் – மரம் வேருக்கும் நம் காலுக்கும் –
ஈஸ்வராயா நிவேதிது–முக்கரணங்களாலும் கைங்கர்யம் பண்ண வேண்டுமே –

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -காப்பாற்றினால் காமம் ஏற்படுகிறது –
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது
இதிலும் அடுத்ததிலும் -படிக்கட்டு -அவரோகணம் -தலை குப்புற விழ –
ஈஸ்வரனை நினைக்காமல் –விஷயாந்தரங்கள் –சங்கம் -பற்று முதலில் பிறக்கும் -சங்கம் காமமாக மாறும்
ஆசை பிறக்கும் -கிடைக்காமல் தடுத்தவன் பேரில் க்ரோதம் –

க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது -பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது -அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்
க்ரோதம் -வந்தால் பகுத்து அறிவு போகும் –ஸ்ம்ருதி நினைவு போகும் –இருக்கும் ஞானமும் அற்று போகும் –
புத்தி நாசம் ஆனால் பிணம் போலே தானே -இப்படி படிக்கட்டு -கீழே விழ –

ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷

ஆசை வெறுப்பு முதலியவை நீங்கப் பெற்றவையாய் தனக்கு வசப்பட்டு இருக்கின்ற இந்த்ரியங்களால்
சப்தாதி விஷயங்களைக் கடந்து நிற்பவனாய் மனத்தை அடக்கிய புருஷன் மனத்தெளிவை அடைகிறான் –
நினைத்தால் அருளுவான் -பிரசாதம் -மனஸ் தெளிவு அடைகிறான் -வசப்பட்ட இந்த்ரியங்களால் விஷயம் தாண்டி –
ராகம் த்வேஷம் இல்லாமல் – தெளிந்த மனசில் ஞான யோகம் பிறக்கும் –
ஒரே படிக்கட்டு வேறு வேறு விதமாக அருளிச் செய்கிறான் –

ப்ரஸாதே ஸர்வ துக்காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே.–
ப்ரஸந்ந சேதஸோ ஹ்யாஸூ புத்தி பர்யவதிஷ்டதே–৷৷2.65৷৷

இவனுக்கு மனத்தெளிவு ஏற்பட்டவுடன் எல்லாத் துன்பங்களின் அழிவு ஏற்படுகிறது –
மனத்தெளிவு ஏற்பட்டவனுக்கு விரைவில் அறிவித் தெளிவு ஏற்படுகிறது அன்றோ
அவனுக்கு தானே -ஞான யோகம் பிறக்கும் –

நாஸ்தி புத்திர யுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா.–
ந சாபாவயத ஸாந்திர் அஸாந்தஸ்ய குத ஸுகம்–৷৷2.66৷৷

என்னிடம் ஈடுபடாதவனுக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவு உண்டாகாது –
அறிவு அற்றவனுக்கு ஆத்மத்யானம் கைகூடாது
ஆத்மத்யானம் அற்றவனுக்கு விஷயங்களில் ஆசையின்மை ஏற்படாது –
விஷயங்களில் ஆசையின்மை அற்றவனுக்கு பேரின்பம் எப்படிக் கிடைக்கும்
இன்னும் ஒரு படிக் கட்டு –
ஆத்மா அறிவு இல்லாமல் -புத்தி இல்லாமல் -கண்ணனை நினைக்காமல் -த்யானம் பண்ண மாட்டான் –
விஷய ஆசை போகாதே -பாவனா -த்யானம் -ஷாந்தி ஏற்படாதே -சுகம் -சாஷாத்காரம் கிடைக்காதே

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநுவிதீயதே—
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவமி வாம்பஸி—৷৷2.67৷৷

விஷயங்களில் ஈடுபடும் இந்திரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி செய்யப்படுகிறதோ அந்த மனம்
இவனுடைய அறிவை காற்றானது கப்பலை இழுப்பது போலே விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்லுகிறது அன்றோ
மனசை இந்திரியங்கள் பின்னே போக விட்டால் -பட்டி மேய்ந்தால் -மனம் -ஆத்ம விஷய ஞானத்தை இழுக்கும் –புத்தி வளர விடாமல்
எதிர்த்து வீசும் காற்று படகை தத்தளிக்க விடுவது போலே -ஆகுமே -பகவானை நோக்கி செலுத்துவதே ஒரே வழியாகும்

தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—৷৷2.68৷৷

நீண்ட கைகளை உடையவனே
ஆகையால் எவனுடைய இந்திரியங்கள் விஷயங்களில் இருந்து எல்லாப் படியாலும் இழுக்கப் பட்டனவோ
அவனுக்கு ஆத்ம விஷயமான அறிவு நிலை நிற்கிறது
அதனால் -எல்லா வற்றில் நின்றும் விலக்கி -விஷயங்களில் இருந்து இந்திரியங்களை அடக்க வேண்டும்
இது வரை இந்திரியங்களை அடக்குவது பற்றி அருளிச் செய்தான்

யா நிஸா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ.
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே–৷৷2.69৷৷

யாதொரு ஆத்ம விஷயமான அறிவு எல்லா ஜீவ ராசிகளுக்கும் இரவு போலே இருந்து இருக்கிறதோ –
அவ்வறிவு விஷயத்தில் இந்திரியங்களை அடக்கியவன் விழிப்புடன் இருக்கின்றான்
யாதொரு சப்தாதி விஷயமான அறிவில் உலகோர் விழித்து இருக்கிறார்களோ அவ்வறிவு
ஆத்மாவைப் பார்ப்பவனாய் அதையே மனனம் செய்பவனுக்கு இரவு போல் இருந்து கிடக்கின்றது
முதிர்ந்த நிலை –ஞானிக்கு பகல் இரவு -உலோகோருக்கு மாறி -ஆத்ம விஷய ஞானம் வெளிச்சம் -இவனுக்கு –
உலக விஷயம் இவனுக்கு இரவு–மஹாத்ம்யம் தெரிவிக்கிறான் –

ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை
நடு நிலை –இதில் -சமுத்திரம் உதாரணம் -தானே நிறைந்து -கலக்க முடியாதே -நதிகள் வந்து நிறைக்க வேண்டாம் –
நதிகள் ஓடி சமுத்திரத்தில் சேருமோ அதே போலே -ஞான யோகி -தானே மனனம் பண்ணி நினைவு –
நல்லது கண்டு ஆனந்தம் -கெட்டது கண்டு துக்கம் இல்லை -நதிகள் சேர்ந்து கடல் உயராதது போலே
இந்திரியங்கள் விஷய அனுபவம் மனஸ் உள்ளே வந்தாலும் -ஸூகமோ துக்கமோ இல்லாமல் –
விகாரம் இல்லாமல் -என்றவாறு
கீழே உள்ளேயே வர விட மாட்டாதவன் நிலை -உயர்ந்தது

விஹாய காமாந் யஸ் ஸர்வாந் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ—.
நிர்மமோ நிரஹங்கார ஸ ஸாந்தி மதிகச்சதி–৷৷2.71৷৷

எந்த மனிதன் சப்தாதி விஷயங்கள் அனைத்தையும் விட்டு -அவற்றில் ஆசை அற்றவனாய் –
மமகாராம் அஹங்காரம் அற்றவனாய் வாழ்கிறானோ அவன் சாந்தியை அடைகிறான்
முயல்பவன் நிலை –ஸாந்தி அடைகிறான் –பகவானையே நினைந்து –விஷயங்களை விலக்கி- –
ஆசையை விலக்கி -என்னது இல்லை –
அஹங்காரம் தொலைத்து -மமகாராம் -இப்படி ஒரு படிக் கட்டு -அநஹத்தை அஹமாக நினைப்பது –
நான் அல்லாத சரீரத்தை ஆத்மா நினைப்பது அஹங்காரம் –
தான் அல்லாததை தான் என்று நினைப்பது அஹங்காரம் -தன்னது அல்லாததை தன்னது என்று நினைத்தால் மமகாராம் –
முதலில் மமகாராம் தொலைத்து -தேகம் உடன் சம்பந்தம் பெற்றதை விலக்குவோமே -அஹங்காரம் போகும் –

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி பார்த்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி–.
ஸ்தித்வாஸ்யாமந்த காலேபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி—৷৷2.72৷৷

அர்ஜுனா இப்படிப்பட்ட நிலை ப்ரஹ்மம் எனப்படும் ஆத்மாவை அடைவிக்கிறது –
இதை அடைந்து மனிதன் மயக்கம் அடைவது இல்லை –
ஆயுளின் கடைசிப் பகுதியிலாவது இதில் நிலை நின்று ஆத்மாவை அடைகிறான்
சுகமான ஆத்மா தர்சனம் -அசங்க கர்மத்தை ஆத்ம ஞானம் உடன் அனுஷ்ட்டித்து –
பற்று அற்ற கர்ம யோகம் ஞானத்துடன் –சோகப்பட மாட்டான் –
கர்ம யோகத்தில் இருந்து கடைசி காலத்தில் ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: