ஸ்ரீ மாண்டூக்ய உபநிஷத் —

வேதத்தினால் மட்டுமே -சொல்லப்படுகிறேன் -அஹம் வேத்ய ஏவ ச -வேதங்கள் ப்ரஹ்மத்தை -சொல்லாமல் நிற்காது -சொல்லி முடிக்க முடியாது /
ப்ரஸ்ன உபநிஷத் – முண்டக உபநிஷத் போலே -அதர்வண வேதத்தில் மாண்டூக்ய சாகையில் -இந்த உபநிஷத் /
மாண்டூக்ய ரிஷி புத்திரர் வெளியிட்டு அருளிய உபநிஷத் –

வராரோராக —மஹா தப –ஸஹிஷ்ணு -வரைக்கும் -24-
முதல் ஆறும் -ஜனார்த்தன வரை -இரண்டு இரண்டாக –கொண்டு ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்
வைகுண்ட வாஸூ தேவன் -வ்யூஹ வாஸூ தேவன் -/ சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தினன் -/மூன்றும் என்றும் நான்கும் -வ்யூஹம் உண்டே
சதுராத்மா –சதுர் புஜ–இத்யாதி உண்டே /
ஞானம் பலம் –சங்கர்ஷனுக்கு -சம்ஹாரம் -வேத பிரசாரம் –ஆத்மா தத்வ அபிமானி -மகா தப
ஐஸ்வர்ய வீர்யம் -ப்ரத்யும்னனுக்கு -ஸ்ருஷ்ட்டி -தர்ம ப்ரவர்த்தனம் -மனாஸ் தத்வ அபிமானம்
சக்தி தேஜஸ் -அநிருத்னனுக்கு-பாலனம் -வேதம் படி அனுஷ்ட்டித்து –பலம் தருபவர் -அஹங்காரம் அபிமானம் -விஷ்வக்ஸேன ஜனார்த்தன /
வைச்வானவர் இத்யாதி நான்கும் வேறே உண்டு
அகார உகார மகார அர்த்த மாத்திரம் -20-விளக்கும் இந்த உபநிஷத்
மரம் -நான்கு கிளைகள் வைத்து அனைத்தையும் விளக்கும் –
ஜாக்ரத் தசை -கீழ் தசை -கிழக்கே வா ஸூ தேவன் -மனம் இந்திரியங்கள் விழித்து
வீசாக யூக ஸ்தம்பம் –நான்கையும் விளக்கும்
அதுக்கு மேலே- ஸ்வாப தசை – ஸ்வபனம் காணும் நிலை -மனஸ் அடங்க வில்லை வெளி இந்திரியங்கள் அடங்கி
ஸூஷூப்தி தசை அடுத்து -ஆழ்ந்த உறக்கம் -மனசும் தூங்கும் நிலை
மூர்ச்சா தசை மயங்கி -த்யான தசை -துரியா தசை
அநிருத்தினன் விழிக்கும் பொழுது நிர்வாகம் -அகாரத்தால் சொல்லப்படுபவர் –
-ஸ்வப்னம் பிரத்யும்ன நிர்வாகம் -/ உகார
ஸூ ஷூ ப் தி சங்கர்ஷணன் நிர்வாகம் / மகார
அப்புறம் வ்யூஹ வா ஸூ தேவன் நிர்வாகம் –மூன்றும் அரை மாத்திரை -கான ரூபம்
வெளி புலன்களையும் மனசையும் அடக்கி அலை பாயாமல் ஏகி பவிக்க அறிந்த ஒன்றை வைத்து இப்படி விளக்கும் -த்ருஷ்ட்டி விதி என்பர் இத்தை
உபய லிங்க பாதம் -மூன்றாவது அத்யாயம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் விளக்கும் –
சம்சாரம் மரம் வேர் மேலே நான்முகன் நாம் கீழ் -அத்தை வெட்டுவது வைராக்யம் கோடாலி வைத்து புருஷோத்தம வித்யை அறிந்து -ஸ்ரீ கீதை சொல்லும்

———————————–

ஹரி ஓமித்யேததக்ஷரமித் ஸர்வம் தஸ்யோபவ்யாக்யாநம் பூதம் பவத்பவிஷ்யதிதி
ஸர்வமோங்கார ஏவ யச்சாந்யத்த்ரிகாலாதீதம் ததப்யோங்கார ஏவ ৷৷ 1.1.1 ৷৷

ஹரிஃ . ஓமித்யேததக்ஷரமித் ఁ ஸர்வஂ -சொற்கள் எல்லாம் பிரணவத்தில் இருந்து -பொருள்களும் சொற்களும் பிரிக்க முடியாத படி -ஸ்ரீ ஹரியும் அனைத்தும்
தஸ்யோபவ்யாக்யாநம் -பிரணவமே பர ப்ரஹ்மம் -ப்ரஹ்மத்தை அடையும் வழியும் ப்ரஹ்மமே -உப வியாக்யானம் -பிரணவம் ஸ்ரீ ஹரியின் அருகிலே -இதுவே உபாயம் –
பூதஂ பவத்பவிஷ்யதிதி ஸர்வமோங்கார ஏவ. -முக்காலத்தில் -உள்ள சர்வமும் பிரணவமே
யச்சாந்யத்த்ரிகாலாதீதஂ ததப்யோங்கார ஏவ –கால வஸ்யம் இல்லாத அனைத்துமே பிரணவமே
அஷ்டாக்ஷரமே பர ப்ரஹ்மம் என்றபடி -உபய விபூதியும் -பிரணவத்தில் அடங்கும் –

நான் கண்டு கொண்டேன் நாராயணாய நாமம் -பிரகர்ஷேன-பூர்யா நன்றாக ஸ்துதித்தல் -எத்தால் இறைவன் -இதனால் -பிரணவம் தாது அர்த்தம்
அகாரம் -தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய -பிரகிருதி ப்ரத்யயம் -மா தவ -ஆண் பால் ஒருமை -பிரத்யயம் சொல்லும் -அர்த்தம் கொடுக்கும் தாது பிரகிருதி –
பிரக்ருதியில் ப்ரஹ்மம் உள்ளான் -உலகம் அவன் இடம் லயம் அவன் அகாரத்தில் லயம் -அகத்தின் ஏற்றம் –
வேத ஆரம்பம் முடிவில் ஓங்காரம் -அர்த்தங்கள் நழுவாமல் இருக்க -திருப்பல்லாண்டு அருளிச் செயல் -உள்ளத்துக்கு எல்லாம் சுருக்கு -தான் மங்களம் ஆதலால்

——————————

ஸர்வ் ஹ்யேதத்ப்ரஹ்மாயமாத்மா ப்ரஹ்ம ஸோயமாத்மா சதுஷ்பாத் ৷৷ 1.1.2 ৷৷

ஸர்வ் ஹ்யேதத்ப்ரஹ்மாயமாத்மா ப்ரஹ்ம ஸோயமாத்மா சதுஷ்பாத் -சர்வமும் புராணமும் -பர ப்ரஹ்மமே -அயம் ஆத்மா ப்ரஹ்மம்
அயம் என்று மார்பில் கை வைத்து -சைகையால் காட்டி -நான்கு பாதங்கள் -விஸ்வம் –தேஜஸ் -பிரஞ்ஞா -துரியா –

அயம் ஆத்மா ப்ரஹ்மா -அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்டவை -சரீராத்மா பாவம் -வியாபகத தோஷம் தட்டாதே –
அந்த ப்ரஹ்மம் நான்கு பிரிவுகள் -பாதங்கள் -அறிமுகம்
அகாரம் உகாரம் மகாரம் அர்த்த மாத்திரை -இப்படியும் நான்கு பிரணவம்
ப்ரத்யகாத்மா–பராக் -இரண்டும் உண்டே -தனக்கு தோற்றுவதும் பிறருக்கு தோற்றுவதும்
ப்ரஹ்மத்தை காரணம் -சரீரமாக -ப்ரஹ்மாத்மகம் -சூழப்பட்டு அனைத்தும்

————————————-

ஜாகரிதஸ்தாநோ பஹிஷ்ப்ரஜ்ஞ ஸப்தாங்க ஏகோநவிம் ஷதிமுக ஸ்தூலபுக்வைஷ்வாநர ப்ரதம பாத ৷৷ 1.1.3 ৷৷

ஜாகரிதஸ்தாநோ–வைஸ்வ நர -ஜாக்ரத ஸ்தானம்
பஹிஷ்ப்ரஜ்ஞஃ –தன்னில் வெளிய உள்ள விஷயங்களை பற்றிய ஞானம் அறிவு உள்ள தசை
ஸப்தாங்க -சப்த அங்கங்கள் -அக்னி ஹோத்ரம் -கல்பித்து
ஸ்ரீ வைகுண்டம் திரு தலை /ஸூ ரியன் திருக் கண்கள் /பிராணன் /ஆகாசம் நடுப்பாகம் / நீர் / பிருத்வி இரண்டு கால்கள்
அஹ்வானிய அக்னி -கல்பிக்கப் பட்ட அக்னி ஹோத்ரம்
ஏகோநவிஂஷதிமுகம் –19- முக வாய்கள் -பஞ்ச கர்மேந்த்ரியங்கள் ஸ்பர்சாதி பஞ்சமம் -பஞ்ச பிராணன் -மனஸ்-புத்தி -அஹங்காரம் -மஹான் -ஆகியவை
முகம் என்பது அனுபவ துவாரம் என்றவாறு
ஸ்தூலபுக்வைஷ்வாநர- ப்ரதமம் பாதம் – விஸ்வ நர இப்படி அனுபவிக்கிறான் -முதல் பாதம் என்றவாறு –

விழிக்கும் நிலை – அநிருத்தினன்-அஹங்காரத்துக்கு அபிமானி தேவதை –அகாரம் -பிரதம பாதம் -வைச்வானரர் –காப்பவர் –

——————————-

ஸ்வப்நஸ்தாநோந்த ப்ரஜ்ஞ ஸப்தாங்க ஏகோநவிம் ஷதிமுக ப்ரவிவிக்தபுக்தைஜஸோ த்விதீய பாத ৷৷ 1.1.4 ৷৷

இரண்டாவது ஸ்வப்ன தசை -அவித்யா கர்மா வாசனை ருசி –
ஸ்வப்ன தசையில் ஞானம் அந்தக பிரஞ்ஞ உள்ளுக்குள்ளே -பதிவாலே உணர்தல் –

பாஹ்ய விஷய அனுபவம் இல்லை -மனஸ் மட்டும் -ஸ்வப்ன தசை -ஆத்மா இங்கு தான் -ப்ரஹ்மம் தர்ம பூத ஞானம் மூலம் ஸ்வப்ன ஸ்ருஷ்ட்டி –
ப்ரவிவிக்தபுக்-விசேஷ அனுபவம் -என்றவாறு / கீழே ஸ்தூல புக் -/ஸ்வப்னத்தில் கூட சின்ன பாப புண்யம் தொலைக்கலாம் /
ப்ரத்யும்னன் –

—————————————-

யத்ர ஸுப்தோ ந கம் சந காமம் காமயதே ந கம் சந ஸ்வப்நம் பஷ்யதி தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தாந ஏகீபூத
ப்ரஜ்ஞாநகந ஏவாநந்தமயோ ஹ்யாநந்தபுக்சேதோமுக ப்ராஜ்ஞஸ்தரிதீய பாத ৷৷ 1.1.5 ৷৷

யத்ர ஸுப்தோ ந கம் சந காமம் காமயதே ந கம் சந ஸ்வப்நம் பஷ்யதி தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தாந ஏகீபூத-
மூன்றாவது நிலை -ஆழ்ந்த உறக்கம் -ஸூ ஷூப் தம் -யோக நித்திரை —
ப்ரஜ்ஞாநகந ஏவாநந்தமயோ ஹ்யாநந்தபுக்சேதோமுக ப்ராஜ்ஞஸ்தரிதீய பாதம்
ஆனந்த மயனாக இருக்கிறான் -பிரஞ்ஞா அவஸ்தை மூன்றாவது -என்றவாறு –

சங்கர்ஷணன்-ப்ரஜ்ஞாநகந ஏவாநந்தமயோ -ஞான மாத்திரம்/ஆனந்த புக் -ஆனந்தம் அனுபவித்து

————————————————-

ஏஷ ஸர்வேஷ்வர ஏஷ ஸர்வஜ்ஞ ஏஷோந்தர்யாம்யேஷ யோநி ஸர்வஸ்ய ப்ரபவாப்யயௌ ஹி பூதாநாம்৷৷ 1.1.6 –

நான்காவது நிலை -சர்வேஸ்வரன் -சர்வஞ்ஞன் -சர்வ அந்தர்யாமி -சர்வ நியாந்தா -சர்வ ஸ்ரஷ்டா-சர்வ சம்ஹாரகன் –
பிரமமும்-கயிறு பாம்பு -உண்மை -சில ஆகார சாம்யத்தாலே தானே பிரமிக்கிறோம்
துரிய தசையில் -ஆத்ம பரமாத்மா சாம்யாபத்தி போலே ஆனந்த மயமாக இருக்கும் –

ப்ரஹ்ம சாஷாத்காரம் இந்த நிலை –

——————————————————–

நாந்த ப்ரஜ்ஞம் ந பஹிஷ்ப்ரஜ்ஞம் நோபயத ப்ரஜ்ஞம் ந ப்ரஜ்ஞாநகநம் ந ப்ரஜ்ஞம் நாப்ரஜ்ஞம்-
அதரிஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணமசிந்த்யமவ்யபதேஷ்யமேகாத்மப்ரத்யயஸாரம்
ப்ரபஞ்சோபஷமம் ஷாந்தம் ஷிவமத்வைதம் சதுர்தம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய ৷৷ 1.1.7 ৷৷

வெளி வாசனை உள் வாசனையும் இல்லை -மூர்ச்சா தசை -இவ்வளவு அடை மொழி நான்காவது
அத்ரிஷ்டம் -அவ் வ்யவாஹர்யம் நாம ரூபம் இல்லை -அக்ராஹ்யம் -லக்ஷணம் -அசைத்யம் –
அறிவினால் மட்டுமே உணர முடியும் -அனைவரும் இங்கே லயம் சாந்தம் -ஷாடூரமி இல்லாமல் -தன்னிகர் அற்ற

——————————————

ஸோயமாத்மாத்யக்ஷரமோம் காரோதிமாத்ரம் பாதா மாத்ரா மாத்ராஷ்ச பாதா அகார உகாரோ மகார இதி ৷৷ 1.1.8 ৷৷

மூன்று மாத்திரைகள் -ஓங்காரம் -அதிமாத்ரா -மாத்திரையில் வசிப்பவர் -உபதேசம் பெற்று அறிய வேண்டும் குலம் தரும் இத்யாதி
மாத்திரைகள் பாதங்கள்

————————————-

ஜாகரிதஸ்தாநோ வைஷ்வாநரோகார ப்ரதமா மாத்ராப்தேராதிமத்த்வாத்வாப்நோதி ஹ வை
ஸர்வாந்காமாநாதிஷ்ச பவதி ய ஏவம் வேத৷৷ 1.1.9 ৷৷

பிரதம மாத்திரை அகாரம் அநிருத்தினன் பாலனம் -ஆப் நோதி

—————————————

ஸ்வப்நஸ்தாநஸ்தைஜஸ உகாரோ த்விதீயா மாத்ரோத்கர்ஷாதுபயத்வாத்வோத்கர்ஷதி ஹ வை ஜ்ஞாநஸம் ததிம்
ஸமாநஷ்ச பவதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே பவதி ய ஏவம் வேத ৷৷ 1.1.10 ৷৷

உகாரம் -பிரத்யும்ன ஆழ்வான்-ஸ்ருஷ்ட்டி -உதகர்ஷம் உத்க்ருஷ்ட உயர்ந்த தசை -மனஸ் மட்டும் த்யானத்தில் இருப்பதால் –
இந்த நிலை ப்ரஹ்ம ஞானம் பெற்று குலத்தில் உள்ளார் அனைவரும் ப்ரஹ்ம ஞானம் பெறுவார்

——————————————

ஸுஷுப்தஸ்தாந ப்ராஜ்ஞோ மகாரஸ்தரிதீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி
ஹ வா இத் ஸர்வமபீதிஷ்ச பவதி ய ஏவம் வேத ৷৷ 1.1.11 ৷৷

ஆழ்ந்த நிலை -மகாரம் -துக்கம் அனைத்தும் நாசம்

—————————————

அமாத்ரஷ்சதுர்தோவ்யவஹார்யஃ ப்ரபஞ்சோபஷம ஷிவோத்வைத ஏவமோம் கார ஆத்மைவ ஸம் விஷத்யாத்மநாத்மாநம் ய ஏவம் வேத ৷৷ 1.1.12 ৷৷

அரை மாத்திரை -கான ரூபம் -மிகச் சிறந்தது -வாஸூ தேவ நிலை –மங்கள நிலை -தன்னிகர் அற்ற -ப்ரஹ்மத்தின் அனுக்ரஹத்தால் ப்ரஹ்மம் அடைகிறான்

৷৷ இதி மாண்டூக்யோபநிஷத்ஸஂபூர்ணா ৷৷

பத்ரம் கர்ணேபி ஷ்ரரிணுயாம தேவா பத்ரம் பஷ்யேமாக்ஷபிர்யஜத்ரா ஸ்திரைரங்கைஸ்துஷ்டுவா் ஸஸ்தநூபிர்வ்யஷேம
தேவஹிதம் யதாயு ஸ்வஸ்தி ந இந்த்ரோ வரித்தஷ்ரவா ஸ்வஸ்தி ந பூஷா விஷ்வவேதா-
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமிஃ ஸ்வஸ்தி நோ பரிஹஸ்பதிர்ததாது ৷৷

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: