ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -18-ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –22-

1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்டச் செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே –18-17-வரை –
2–சத்த்வோ பாதே யதாந்தி மே—சத்வ உபாதேயதா அந்தி மே-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் – சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
-இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ –ஞானம் உள் அடக்கிய கர்மா யோகத்தால் –18-44—18-54-வரை –
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
-18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து -சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –

———————————–

அர்ஜுந உவாச-
ஸந்யாஸஸ்ய மஹா பாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்–
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ ப்ருதக் கேஸி நிஷூதந–৷৷18.1৷৷

அர்ஜுனன் கேட்டான் -தடக்கையனே -இந்திரியங்களை நியமிக்கும் ஹ்ருஷீ கேசனே -கேசி என்னும் அரக்கனைக் கொன்றவன் –
உபநிஷத்துக்களில் மோக்ஷ சாதனமாகக் குறிக்கப்படும் ஸந்யாஸத்தைப் பற்றியும் த்யாகத்தைப் பற்றியும்
உண்மையை தனித் தனி யானவையா அல்லது ஒன்றா என அறிய விரும்புகிறேன்

ஸ்ரீ பகவாநுவாச-
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்யாஸம் கவயோ விது–
ஸர்வ கர்ம பல த்யாகம் ப்ராஹுஸ் த்யாகம் விசக்ஷணா–৷৷18.2৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் –சில அறிவாளிகள் ஒரு பலனை விரும்பிச் செய்யப்படும் காம்ய கர்மங்களுடைய
ஸ்வரூப தியாகமே சன்யாசம் எனப்படுவதாகக் கூறுகிறார்கள்
மற்றும் சில அறிவாளிகள் எல்லாக் கர்மங்களின் பலனையும் கை விடுவதே தியாகம் எனப்படுவதாகக் கூறுகிறார்கள் –

த்யாஜ்யம் தோஷ வதித்யேகே கர்ம ப்ராஹுர் மநீஷிண–
யஜ்ஞ தாந தப கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே–৷৷18.3৷৷

சில அறிவாளிகள் தோஷங்களோடு கூடிய யாகம் முதலான கர்மம் முமுஷுக்களால் கை விடத் தக்கது என்று கூறினார்கள்
வேறு சில அறிவாளிகள் யஜ்ஞம் தானம் தாபம் ஆகிய கர்மம் முமுஷுக்களாலும் கை விடத்தக்கது அன்று என்று கூறினார்கள்

நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரத ஸத்தம–
த்யாகோ ஹி புருஷ வ்யாக்ர த்ரிவித ஸம் ப்ரகீர்தித–৷৷18.4৷৷

பரத குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே -இப்படி கருத்துக் வேற்றுமைகளுக்கு உட்பட்ட தியாக விஷயத்தில்
நிர்ணயத்தை என்னிடம் இருந்து கேட்பாயாக-
மனிசர்களில் புலி போன்றவனே -மனிதர் தலைவனே -கர்மங்களைச் செய்யும் போது அனுசந்திக்கப்படும் த்யாகமானது
மூன்று வகைப்பட்டது என்று முன்னமே சொல்லப் பட்டது அன்றோ –
தியாக விஷயத்தில் -நிர்ணய விஷயம் பிரமம் இல்லாமல் – பிரமாதம் கவன குறைவு இல்லாமல் –
விப்ரலிப்ஸை -குழப்ப சொல்வது இல்லையே
தியாகம் என்னில் ஹி பிரசித்த அர்த்தம் –மூன்றாம் அத்யாயம் -30-ஸ்லோகம் -எல்லா கர்மங்களையும் என்னிடம்
கர்த்ருத்வ பல மமக புத்தி தவிர்ந்து -மூன்றையும் நிறைய தரம் பார்த்து உள்ளோம்-

யஜ்ஞ தாந தப கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்–
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம்–৷৷18.5৷৷

யாகம் தானம் தவம் முதலான வைதிக கர்மம் முமுஷுக்களால் கை விடத்தக்கது அன்று –
அக்கர்மம் கடைசி வரை அனுஷ்ட்டிக்கத் தக்கதே யாகும் – ஏன் எனில் யாகம் தானம் தவம் முதலிய கர்மம்
மோக்ஷத்தை விரும்பும் உபாசகர்களுக்கு உபாசனம் நிறை வடைவதற்குத் தடையான
பழ வினையைப் போக்கும் பாவந கர்மங்கள் யாகும்
தானம் தபஸ் போன்றவற்றை ஒரு காலும் விடக் கூடாது–முமுஷுக்களும் செய்ய வேண்டும் –நித்ய நைமித்திக கர்மாக்கள்
கடைசி வரை செய்தே இருக்க வேண்டும் -ஆ பிரயானாத் -பிரயாணம் வரை -அர்ச்சிராதி கதி – வர்ணாஸ்ரமம்-விடாமல் செய்வதே அவனுக்கு பிரியகரம்
முமுஷுக்களும் செய்ய வேண்டும் என்னில் -எந்த பயனுக்கு -தானம் தாபம் யாகம் முன் வினைகளை போக்கி -மனஸ் சுத்தி அடைவிக்கும்
இதில் தான் பலனை அருளிச் செய்கிறான் –பக்தி நிஷ்டனுக்கும் -இங்கே இருப்பதால் -களை போலே -இருக்குமே
நித்ய நைமித்திக கர்மம் செய்ய பாபங்கள் எரிக்கப் படும் -பக்தி செய்ய தடங்கல் இல்லாமல் சுத்தி கிட்டும்

ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச–
கர்தவ்யாநீதி மே பார்த்த நிஸ்ஸிதம் மதமுத்தமம்–৷৷18.6৷৷

குந்தீ புத்திரனே -உபாசனத்தைப் போலே இந்த கர்மங்களும் என்னுடையது என்னும் எண்ணத்தையும் –
பலத்தில் விருப்பத்தையும் -விட்டு முமுஷுக்களால் அனுஷ்ட்டிக்கப்பட வேண்டியவையே என்பது
என்னுடைய உறுதியானதும் மிக மேலானதுமான நிர்ணயம் –
சாஸ்திரம் -ஹிம்சை தோஷம் கிடையாது -உபாசனம் போலே இந்த கர்மங்களும் -சங்கம் -பற்றுதலை அழித்து
பலத்திலும் ஆசை இல்லாமல் -கர்தவ்யம் -பகவத் ஆராதனம் ரூபமாக செய் -இது தான் உத்தம மதம் என்னுடைய மதம் –
இவன் சொல்வது எல்லாம் உத்தமம் -ஆராதனை ரூபம் என்றாலே மூன்று வித தியாகங்களும் உண்டு
அவன் முக விகாசமே உத்தேச்யம்

நியதஸ்ய து ஸந்யாஸ கர்மணோ நோபபத்யதே–
மோஹாத் தஸ்ய பரித்யாகஸ் தாமஸ பரிகீர்த்தித–৷৷18.7৷৷

நித்யம் நைமித்திகம் முதலான கர்மத்தினுடைய தியாகம் -கை விடுதல் -பொருந்தாது —
கர்மம் குற்றமுடையது என்னும் மயக்கத்தால் அக்கர்மத்தை விடுவது –
தமோ குணத்தால் விளைவது என்று சொல்லப்படுகிறது
கர்மம் விடுபவன் தமோ குணம் தூண்ட செய்கிறான் -நியதம் -நித்ய நைமித்திக கர்மங்கள் –
சந்யாச தியாக சப்தங்கள் மாறி மாறி உபயோகித்து இரண்டும் ஒன்றே என்று காட்டி அருளுகிறார் –
விடுவது ஒவ்வாது -மயக்கத்தால் -குற்றம் இருக்கும் என்ற மயக்கம் -விட்டால் தமோ குண கார்யம் என்பர்
பஞ்ச மகா யாகங்கள் -நிச்சயம் கர்ம யோகம் செய்தே இருக்க வேண்டும் -பகவத் ஆராதனம் -சரீர யாத்திரைக்கு வேண்டும்
திருவாராதனம் செய்யாமல் உண்டால் பாப உருண்டைகள் தானே

துக்கமித்யேவ யத் கர்ம காய க்லேஸ பயாத் த்யஜேத்–
ஸ க்ருத்வா ராஜஸ த்யாகம் நைவ த்யாக பலம் லபேத்–৷৷18.8৷৷

உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தாலும் துன்பமயமாய் இருக்கிறது என்னும் காரணத்தாலும்
நித்யம் நைமித்திகம் முதலான கர்மங்களை ஒருவன் கை விட்டானாகில் அவன் ரஜோ குணத்தினால் விளையும்
தியாகத்தைச் செய்தவன் ஆகையால் ஸாத்விகமான தியாக பலனாக ஞானத்தை அடையவே மாட்டான் –
கீழே விபரீத ஞானத்தால் விடுவது -இங்கு அந்யதா ஞானத்தால் -கீழ் அதர்மம் என்று நினைத்து –
இங்கு காய கிலேசம் பயத்தால் -குதப-கு – பூமி சுட்டால் தான் -வயிறு சுட்டால் தான் -ஸ்ரார்த்தம் பண்ண ஆரம்பிக்க வேண்டும் –
மநோ பலமே தேக ஆரோக்யம் கொடுக்கும் -மனசுக்கும் துக்கம் கொடுக்கும் உடம்பை வருத்தும்
என்று விட்டால் ராக்ஷஸ குணத்தால் விட்டதாகும் -ராக்ஷஸ தியாகம் ஆகும் –
தியாக பலம் -சாத்விக தியாக தியாகத்தால் தான் ஞானம் வரும்
ஆர்ஜிததுக்கும் – கொண்ட சொத்தை ரஷிக்கவும் காய கிலேசம் -என்பான் -ஆஜ்ஜை சாஸ்திரம் படி நடக்க வேண்டுமே

கார்யமித்யேவ யத் கர்ம நியதம் க்ரியதேர்ஜுந–
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாகஸ் ஸாத்த்விகோ மத–৷৷18.9৷৷

அர்ஜுனா நித்ய நைமித்திக கர்மமானது -கர்மம் என்னுடையது என்னும் பற்றையும் –
கர்மத்துக்கு உரிய பலனையும் விட்டு ஸ்வயம் பிரயோஜனமானது என்று எண்ணி செய்யப்பட்டதாகில்
அந்த தியாகம் சத்வ குணத்தால் உண்டாவது என்று சொல்லப்படுகிறது –
சாத்விக தியாகம் -நியத கர்மங்கள் -பகவத் ஆராதனை ரூபமாக -சங்கம் பற்று இல்லாமல் –
பல மமதா தியாகம் செய்து -சாத்விக சப்தம் -இங்கு இருந்து -எத்தை செய்தாலும் சாத்விக குணம் வேண்டுமே –
பகவத் முக விலாசம் பலன் -சாத்விக தியாகம் ஞானம் ஏற்படுத்தும்

ந த்வேஷ்ட்ய குஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே-
த்யாகீ ஸத்த்வ ஸமாவிஷ்டோ மேதாவீ சிந்ந ஸம்ஸய–৷৷18.10৷৷

முன் கூறியபடி சத்வ குணத்தோடு கூடியவனாய் -அதனாலேயே -தத்வங்களைப் பற்றிய உண்மை அறிவை உடையவனாய் —
அதனாலேயே ஐயம் நீங்கப் பெற்றவனாய் -நான் செய்யும் கர்மங்களில் -பல சங்க கர்த்ருத்வ -தியாகத்தை யுடையவனாய் இருப்பவன் –
தான் விரும்பாத பலனைத் தரும் பாப கர்மத்தை வெறுப்பது இல்லை –
தான் விரும்பும் பிராகிருத பலன்களைத் தரும் புண்ய கர்மத்தில் ப்ரீத்தி அடைவது இல்லை
கர்மங்களை ஸ்வரூபேண விடக் கூடாது -மீண்டும் வலியுறுத்தி அருளிச் செய்கிறான் –
சத்வ குணங்கள் உடன் கூடி நல்ல ஞானவான் ஆகிறான் -சம்சயன்கள் போக்குகிறான் -எல்லா பலன்களையும் விடுகிறான் –
படிப் படியாக -கர்மங்களை வெறுக்காமலும் விரும்பாமலும் –அகுசல -விரும்பாத பாபம் தரும் கர்மங்கள் –
விரும்பிய புண்ணியம் தரும் கர்மங்கள் -இதுவே கிடையாதே -பலனில் ஆசை இல்லாமல் இருக்கிறான்
வெறுக்காமல் என்றால் பண்ணி கொண்டே இருக்கலாமோ -சங்கை -மோக்ஷம் போகிறவன் -பாப கர்ம தெரிந்து செய்ய மாட்டானே
தெரியாமல் செய்தாலும் கவலை வேண்டாம் -நான் கணக்கில் கொள்ள மாட்டேன் -என்றபடி –
புண்ணியம் கொடுக்கும் கர்மாக்களை விரும்ப மாட்டானே -பலன்களில் விருப்பம் இல்லாமை கர்மங்களைச் செய்கிறான் –

ந ஹி தேஹ ப்ருதா ஸக்யம் த்யக்தும் கர்மாண்ய ஸேஷத–
யஸ்து கர்ம பல த்யாகீ ஸ த்யாகீத் யபி தீயதே–৷৷18.11৷৷

தேகத்தைத் தரிக்கும் ஜீவனாலே செயல்களை அடியோடு கை விடுவதற்கு இயலாது அன்றோ
எவன் ஒருவன் கர்மத்தின் பலத்தை கை விடுகிறானோ அவனே தியாகீ என்று கொல்லப்படுகிறான்
ஒன்றும் மிச்சம் இல்லாமல் -எல்லா கர்மங்களையும் -தேஹ தாரணத்துக்கு -செய்தே –
சாஸ்திரம் விதி மீறாமல் பொருள் ஈட்டி -வர்ணாஸ்ரம தர்மம் விரோதிக்காமல்
யார் பலத்தை விட்டு உள்ளானோ அவனே தியாகி -தியாகத்தினாலேயே அம்ருத தன்மை -மோக்ஷம் அடைகிறான் -வேத வாக்கியம்
தியாகம் என்றது கர்மங்களை விடச் சொல்ல வில்லை -பல த்யாகத்தையே சொல்லிற்று

அநிஷ்டமிஷ்டம் மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண பலம்–
பவத்ய த்யாகீநாம் ப்ரேத்ய ந து ஸந்யாஸிநாம் க்வசித்–৷৷18.12৷৷

கர்மம் செய்பவனுக்குத் துன்பம் தரும் நரகம் முதலானவையும் -இன்பம் தரும் ஸ்வர்க்கம் முதலானவையும் –
இன்ப துன்பங்களைக் கலந்து தரும் பிள்ளை பசு அன்னம் முதலான செல்வங்களுமாகிய மூன்று வகைப்பட்ட பயனும் –
மூன்று வகைப்பட்ட தியாகத்தை செய்யாதவர்களுக்கே கர்மத்தைச் செய்த பின் உண்டாகிறது –
முன் சொன்ன மூன்று வகைப்பட்ட தியாகத்தைச் செய்பவர்களுக்கோ என்னில் ஒரு போதும் அந்தக் கர்ம பலம் உண்டாக மாட்டாது –
கர்மங்களுக்கு மூன்று வித பலம் -நரகம்-அநிஷ்டம் – ஸ்வர்க்கம் -இஷ்டம் -இந்த லோக பலன் -மிஸ்ரம் -இதுவே
தியாகம் செய்யாதவர்களுக்கு –இவை தியாகம் செய்தவர்களுக்கு இவை கிட்டாதே – த்ரிவித தியாகம் -முக்கியம் –
விநியோக பிரததக்த நியாயம் –ஒரே கர்மா -மோக்ஷம் -ஸ்வர்க்கம் -ஆசை வைத்து நான் செய்தென் -என்ற எண்ணம் ஸ்வர்க்கம்
இல்லை என்றால் மோக்ஷம் -எதைப் பொருட்டு பண்ணுகிறோம் அதே ஸ்வதந்த்ர போராட்டம் -கொண்டாடுகிறோம் –
ஒரே செயல் பேர் பெற்று கொடுக்கும் -மற்றவருக்கு சிறைச் சாலை போலே –

பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே–
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வ கர்மணாம்–৷৷18.13৷৷

தடக்கையனே -வேதத்தை ஒட்டி இருக்கும் உண்மை அறிவாலே பெரும் நிர்ணயத்தில் எல்லாக் கர்மங்களும்
உண்டாவதன் பொருட்டு – சொல்லப்படுகிற இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிவாயாக –
வேதத்தில் முடிவான பொருள் இதுவே -நான் தூண்டியே செய்கிறாய் -நான் கர்த்தா இல்லை என்ற தன்மை நினைத்து –
பண்ண வேண்டும் -பண்ணினேன் என்ற எண்ணமே விட வேண்டும் -ஐந்து பேர் சேர்ந்தே செயல்கள் –

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்–
விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்–৷৷18.14৷৷

ஸரீர வாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர–
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ—৷৷18.15৷৷

சாஸ்திரத்தில் சித்திப்பதாகவோ -சாஸ்திரத்தில் தடுக்கப்பட்டதாகவோ உலா யாதொரு கர்மத்தை
உடலாலும் வாக்காலும் மனதாலும் மனிதன் தொடங்குகிறானோ அந்தக் கர்மத்துக்கு இந்த ஐந்தும் காரணங்கள் ஆகின்றன –
அவை யாவன – சரீரம் -அடுத்தபடியாக ஜீவாத்மா -அது போலவே பலவிதமான செயல்களை யுடைய
மனத்தோடு கூடிய ஐந்து கர்ம இந்திரியங்கள் -அவ்வண்ணமே ஐந்து வகைப்பட்ட செயல்களை யுடைய ப்ராணன்கள் –
இக்கர்மங்களுக்கு காரணமானவற்றில் ஐந்தாவதாயும் முக்கியமான காரணமாயும் இருக்கும் பரமாத்மாவுமேயாகும்
சரீரம் ஜீவாத்மா பற்றுக் கொம்பாக – ஜீவாத்மா – கருவிகள் இந்திரியங்கள் –ஐந்து வகை உண்டே -சேஷ்டை செய்யும் ஐவர்
பஞ்ச பிராணங்கள்-வேறே வேறே வேலை இவற்றுக்கு பிராணன் அபானன் சாமான வாயு இவற்றுக்கு வேலை வேறே வேறே
தெய்வம் பரமாத்மா -ஐந்து பெரும் சேர்ந்தே கார்யம்
தெய்வம் முக்கியம் மற்றை நாலையும் தூண்டுவித்து கார்யம் -கட்டை விரலை போலே –

சாஸ்திரம் சம்மதித்த கர்மம் -தொடங்கும் பொழுது -சரீர வாக் மனஸ் மூவகை பட்ட கர்மாக்கள் –
சம்மதிக்காதவையும் உண்டே – இந்த ஐந்தும் இருந்தால் தான் –
முக்கிய அர்த்தம் -கர்த்தா சாஸ்த்ரார்த்தவாத் –ஜீவாத்மா தான் கர்த்தா -விதிக்கிற படியால் -பரமாத்மாவை விதிக்காதே
சாஸ்திரம் அர்த்தம் ஆக வேண்டுமே
ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை –
அடுத்து -பரார்த்த் து -ஈஸ்வராதீனம் —
ஈஸ்வர ஆணைக்கு உட்பட செய்தால் கர்ம பலன் ஜீவாத்மாவுக்கு சேரலாமோ -சங்கை வருமே
க்ருத ப்ரத்யநா அபேஷாத் -பிரயத்தனம் எதிர்பார்த்து –
உதாசீனம் அனுமந்தா -தூண்டி விடும் மூன்று நிலைகள்
முதல் நிலை உதாசீனம் -சாஸ்திரம் கொடுத்து ஞானம் கொடுத்து -முதல் முடிவு ஜீவாத்மா –
அனுமதி அளிக்கும் இரண்டாம் நிலை -நல்ல செயலோ தீய நிலையோ -அதிலேயே தூண்டி விடுகிறான் -குற்றம் வருமோ என்னில் –
தாய் குழந்தை விழும் பொழுது தடுக்காமல் -குற்றம் வருமோ -என்னில் –
ஸ்வாதந்திரம் கொடுத்ததால் -இவன் ஆட்டு வாணியன் இல்லையே -ஞானமும் கொடுத்தானே-
ஆழ்வார் நீ தான் சம்சாரத்தில் -தூராக் குழி தூர்த்து வைத்தாய் -என்றது -பரதந்த்ர நிலையில் இருந்தே -சொன்னார்கள் –
எல்லா பொறுப்பும் அவன் இடமே
சர்வாத்மனா ஸ்வாதந்தர்யம் விட வேண்டுமே -அந்த நிஷ்டை வந்தால் நாமும் இப்படி சொல்லலாம் –

தத்ரைவம் ஸதி கர்த்தார மாத்மாநம் கேவலம் து ய–
பஸ்யத் யக்ருத புத்தித்வாந் ந ஸ பஸ்யதி துர்மதி—৷৷18.16৷৷

இவ்வண்ணமாக உண்மையில் பரமாத்மாவின் அனுமதியை முன்னிட்டுக் கொண்டே ஜீவாத்மாவின் கர்த்ருத்வம்
இருக்கும் போது தான் செய்யும் செயலில் தன்னை மாத்திரமே செயல் புரிபவனாக எவன் காண்கிறானோ –
உள்ளதை வேறாகக் காணும் அவன் -அக்ருத புத்தி -ஆத்மாவைப் பற்றிய சாஸ்த்ரங்களாலே உண்டாகாத
அறிவை உடையவன் ஆகையால் -செயல் புரிபவனை உள்ளபடி அறிவது இல்லை –
உண்மையில் செய்பவன் சர்வேஸ்வரன் -என்று உணராத துர்மதிகள் -இதுவே அகர்த்ருத்வ நினைவு இல்லாதவன்
செய்து விட்டு நான் செய்ய வில்லை என்ற நினைவு வேண்டுமே

யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர் யஸ்ய ந லிப்யதே–
ஹத்வாபி ஸ இமாந் லோகாந் ந ஹந்தி ந நிபத்யதே–৷৷18.17৷৷

எவனுடைய நினைவு -நானே செய்கிறேன் என்னும் அபிமானத்தால் விளையாமல் இருக்கிறதோ –
எவனுடைய அறிவானது -இக்கருமத்தின் பலன் என்னுடையது -இக்கருமம் என்னுடையது -என்னும்
நினைவுகள் அற்று இருக்கிறதோ -அவன் இந்த உலகம் முழுவதில் உள்ள உயிர்களைப் போரில் கொன்றாலும்
கொன்றவனாக மாட்டான் -கொன்றதின் பலனாக சம்சாரத்தில் கட்டுப்பட மாட்டான்
அகங்கார பாவம் -நானே செய்கிறேன் -இந்த பாவம் இல்லாதவன் -புத்தி செயலுக்கு ஆசைப்படாமல் -கர்த்ருத்வ பல தியாகம் கொண்டு –
கொலையே செய்தாலும் -யுத்தம் -ராஜ்ய பலம் இல்லாமல் -லோகத்தில் உள்ள அனைவரையும் –யாரையும் கொன்றவனாக ஆவது இல்லை –
பாபங்களும் வராதே – பண்ணும் தப்புக்கு நாம் பொறுப்பு இல்லையா -தர்ம யுத்தத்தில் கொன்றாலும் என்றபடி -ஷத்ரிய தர்மம் என்பதால்
தர்மம் வழியில் தர்ம யுத்தம் தர்மம் காக்க -இந்த கர்த்ருத்வ அனுசந்தானம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றபடி –

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்ம சோதநா–
கரணம் கர்ம கர்த்தேதி த்ரிவித கர்ம ஸங்க்ரஹ—৷৷18.18৷৷

ஜ்யோதிஷ்டோமம் முதலான கர்மங்களைப் பற்றிய வேத விதியானது -செய்ய வேண்டிய கர்மத்தைப் பற்றிய அறிவு –
அறிந்து செய்யத் தக்கதான அந்தக் கர்மம் -அந்தக் கர்மத்தை அறிபவன் -என்ற மூன்றுடன் கூடியது –
இம் மூன்றில் இடைப்பட்டதான கர்மத்தின் வகையானது -கர்மத்துக்கு ஸாதனமாய் இருக்கும் த்ரவ்யம் முதலானது –
யாகம் முதலான அந்தக் கர்மம் – அந்தக் கர்மத்தைச் செய்பவன் – என்று மூன்று ஆகும் –
கர்மம் செய்ய தூண்டும் வேத வாக்கியங்கள் -அறிவும் கர்மங்களும் கர்த்தா -மூன்று வகை -பற்றிச் சொல்லும்
கர்ம வகை பற்றி இதில் சொல்லுகிறேன்-
இந்த வர்க்கம் -கரணம் யாகங்கள் செய்யும் த்ரவ்யம் -கர்மா -யாகம் – கர்த்தா -செய்யும் கர்த்தா –

ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குண பேதத–
ப்ரோச்யதே குண ஸங்க்யாநே யதாவச் ஸ்ருணு தாந்யபி–৷৷18.19৷৷

சத்வம் முதலான மூன்று குணங்களின் விளைவுகளைக் கணக்கிடும் போது -அந்த குணங்களின் வேறுபாட்டையிட்டு
செய்ய வேண்டிய கர்மத்தைப் பற்றிய அறிவு -செய்யப்படும் கர்மம் – செய்பவனான கர்த்தா – ஆகிய மூன்றும்
மூன்று வகையாகவே சொல்லப்படுகிறது – அவைகளையும் உள்ளபடி கேட்பாயாக –
இங்கும் முக்குணம் -பேதத்தால் -ஞானம் -கர்ம கர்த்தா -மூன்றுமே மாறுமே -சத்வ குணம் பயனில் பற்று வைத்து சாஸ்த்ர விதி
என்பதால் செய்வதே -உண்மை நிலையை கேள் -பராக் பார்க்காமல் கேள் என்றபடி

ஸர்வ பூதேஷு யேநைகம் பாவ மவ்யய மீக்ஷதே–
அவிபக்தம் விபக்தேஷு தஜ் ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்–৷৷18.20৷৷

எந்த அறிவாலே -குணத்தால் பலவகைப்பட்ட எல்லா உயிர்கள் இடத்தும் வேறுபடாததாய் -விகாரம் அற்றதாய் –
ஒரு படிப்பட்ட ஆத்ம வஸ்துவானது காணப் படுகிறதோ அந்த அறிவை -சாத்விக ஞானம் என்று அறிவாயாக –
எந்த ஞானத்தால் -பிரம்மா முதல் பீபீலிகா வரை ஒன்றாக சம தர்சனம் -விகாரம் இல்லா தன்மையை –
எந்த ஞானத்தால் பார்க்கிறானோ -அந்த அறிவை சாத்விக ஞானம் –
ஏகம் பாவம் ஜாதி வேறுபாடு -நிறம் வேறுபாடு இல்லாமை -அவிபக்தம்

ப்ருதக்த்வேந து யஜ் ஜ்ஞாநம் நாநாபாவாந் ப்ருதக் விதாந்–
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ் ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்–৷৷18.21৷৷

முன் கூறிய எல்லா உயிர்கள் இடத்தும் தனித்தன்மையாக இட்டும் -முதலான குணங்களாலும் வேறு பட்டவர்களாக
ஜீவ சமூகங்களை எந்த அறிவு அறிகிறதோ அந்த அறிவை ரஜோ குணத்தால் உண்டாகும் ராஜஸ ஞானமாக அறிவாய் –
ராக்ஷஸ ஞானம் -எதனால் ஜாதி முதலான வேறுபாடுகள் —உயரம் நிறம் போன்றவை- நாநா பாவம் ஜீவ சமூகம் –
சரீரத்தால் வேறுபாடு -என்று அறியாமல் –
பசு பல வர்ணம் பால் வெண்மை -புல்லாங்குழல் -வேறே வேறே ஸ்வரம் ஒரே காத்து -ஆத்மா சரீரம் -இதே போலே

யத்து க்ருத்ஸ்நவதே கஸ்மிந் கார்யே ஸக்தமஹைதுகம்–
அதத்த்வார்த்த வதல்பம் ச தத் தாமஸ முதாஹ்ருதம்–৷৷18.22৷৷

யாதொரு அறிவானது மிகக் குறைந்த பலனையுடைய ஒரு செயலில் நிறைந்த பலனை அளிக்கும் செயலில் போலே ஈடுபடுவதாய் —
இப்படி ஈடுபடக் காரணம் அற்றதாய் -ஆத்மாக்களை வேறுபாடு உடையதாகக் காண்கையாகிற பொய்யைப் பற்றி நிற்பதாய் -மி
க தாழ்ந்ததாய் இருக்கிறதோ -அந்த அறிவு தாமச ஞானம் என்று சொல்லப்படுகிறது
தாமஸ ஞானம் -இறந்தவர்கள் பூத கணங்களையும் பூஜித்து -கர்மங்கள் பண்ணி -செயலும் தப்பு -சாதிக்கவும் முடியாது –
காரணமே இல்லாமல் -அல்பமாக -சரீரம் தானே எல்லாம் என்று நினைத்து செய்பவர்கள்

நியதம் ஸங்க ரஹிதம் அராக த்வேஷத க்ருதம்–
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத் ஸாத்த்விக முச்யதே–৷৷18.23৷৷

யாதொரு கர்மமானது -தத்தம் வர்ணாஸ்ரமங்களுக்கு உரியதாய் இருக்கிறதோ -நான் கர்த்தா -என்னுடைய கர்மம் –
என்னும் பற்று அற்று இருக்கிறதோ – புகழில் விருப்பத்தாலோ – இகழ்வில் வெறுப்பாலோ செய்யப்படாததாய் இருக்கிறதோ –
பலனில் விருப்பம் இல்லாதவனால் செய்யப்பட்டதோ -அந்தக் கர்மம் சாத்விக கர்மம் எனப்படுகிறது –
சாத்விக கர்மம் -சங்க ரஹிதம்-பற்று இல்லாமல் -கர்த்ருத்வ புத்தி -நியதம் க்ருதம் வர்ணாஸ்ரம கர்மங்கள் செய்து
பலனில் ஆசை இல்லாமல் -த்ரிவித தியாகம் -புகழோ பழிப்போ என்று நினையாமல் -செய்யத் தகுந்தது என்பதற்காகவே செய்வது –

யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந–
க்ரியதே பஹுலாயாஸம் தத் ராஜஸ முதாஹ்ருதம்–৷৷18.24৷৷

யாதொரு கர்மம் பலனை விரும்பியும் நான் செய்பவன் என்னும் அபிமானத்துடன் பெரு முயற்சியோடு
செய்யப்படுகிறதோ அந்தக்கரமாம் ராஜஸ கர்மம் என்று சொல்லப்படுகிறது –
ராக்ஷஸ கர்மம் -ஆசை வைத்து -பலனை விரும்பி -அகங்காரத்துடன் -பெரு முயற்சி உடன் செய்து –
ஹிரண்ய கசிபு ஆயிரம் ஆண்டு தபஸ்-ராவணன் தலையை வெட்டி தபஸ் –
இயற்கையில் ஏற்புடைய பகவல் லாபார்த்திக்கு சிரமம் இல்லையே -பரிவத்தில் ஈசனை பாடி -ஸூ ஆராதன் அன்றோ –

அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸா மநபேக்ஷ்ய ச பௌருஷம்–
மோஹா தாரப்யதே கர்ம யத் தத் தாமஸ முச்யதே–৷৷18.25৷৷

யாதொரு கர்மம் கூடவே வரும் துன்பத்தையும் பொருள் அழிவையும் – உயிர்களுக்குப் பீடையையும்
தன்னுடைய செயல் முடிக்கும் திறனையும் ஆராயாமல் -பரம புருஷனே செய்விக்கிறான் என்று அறியாமல் –
தொடங்கப் படுகிறதோ அக்கர்மம் தாமச கர்மம் என்று சொல்லப் படுகிறது –
தாமஸ -பின் தொடர்ந்து -துக்கம் வருமே -கர்மம் செய்வதால் பொருள்கள் அழியும் -ஜீவ ராசிகள் ஹிம்சை –
இவற்றில் கண் வைக்காமல் -தனக்கு உள்ள செயல் திறனையும் நினைக்காமல்
எம்பெருமான் செய்விக்கிறான் என்ற எண்ணம் இல்லாமல் –

முக்த ஸங்கோநஹம் வாதீ த்ருத்யுத் ஸாஹஸமந்வித–
ஸித்த்யஸித்த்யோர் நிர்விகார கர்த்தா ஸாத்த்விக உச்யதே–৷৷18.26৷৷

பலனில் விருப்பம் அற்றவனாய் –நான் செய்கிறேன் -என்னும் அபிமானம் அற்றவனாய் -தவிர்க்க ஒண்ணாத –
துன்பத்தைப் பொறுக்கும் -தன்மையாகிற தகுதி -முயற்சி யுடைய மனமுடையவனாய் இருக்கையாகிற
உத்ஸாஹம் ஆகியவற்றோடு கூடியவனாய் -பயன் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் விகாரம் அற்றவனாய் –
உள்ள செயல் புரிபவன் சாத்விக கர்த்தா என்று சொல்லப் படுகிறான் –
பலத்தில் ஆசை இல்லாமல் -நான் செய்ய வில்லை -அஹம் அவாதீ-பொறுமை செயல் திறன் -தடங்கல் வந்தாலும் தவிர்க்க ஒண்ணாத
துன்பம் பொறுத்து கொண்டு -மனம் சோர்வு அடையாமல் -திருவடி இலங்கை நிலையில் போலே -உத்ஸாகம் அடைந்து -அவன் செயல்பாடு
என்ற எண்ணம் கொண்டு –சித்தி அடைவான் -ஜெயம் தோல்வி பாதிப்பு இல்லாமல் – பலத்தில் ஆசை வைக்கவில்லையே –

ராகீ கர்ம பல ப்ரேப்ஸுர் லுப்தோ ஹிஂஸாத்மகோ ஸூசி–
ஹர்ஷ ஸோகாந்வித கர்த்தா ராஜஸ பரிகீர்தித–৷৷18.27৷৷

புகழை விரும்புகின்றவனாய் -கர்மத்தின் பலனை விரும்புகின்றவனாய் -கர்மம் செய்வதற்கு வேண்டிய பணத்தைச்
செலவிடுவதில் கருமியாய் இருப்பவனாய் -பிறரைத் துன்புறுத்திக் கர்மங்களைப் புரிபவனாய் -பரிசுத்தி அற்றவனாய் –
போர் முதலான கர்மங்களில் வெற்றி தோல்விகள் காரணமாக ஆனந்தமும் வருத்தமும் அடைகிறவனாய்
உள்ள செயல் புரிகிறவன் ராஜஸ கர்த்தா என்று கொல்லப்படுகிறான் –
ராக்ஷஸ கர்த்தா -புகழில் ஆசை -பலனில் விருப்பம் – கருமி – ஹிம்சை செய்தே கார்யம் –
தேக சுத்தி இல்லாமல் – ஆனந்தம் துக்கம் கொண்டு –

அயுக்த ப்ராக்ருத ஸ்தப்தஸ் ஸடோ நைஷ்க்ருதி கோலஸ–
விஷாதீ தீர்க்க ஸூத்ரீ ச கர்த்தா தாமஸ உச்யதே–৷৷18.28৷৷

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதி இல்லாதவனாய் -சாஸ்திரங்களைக் கல்லாத சாமான்யனாய் –
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைத் தொடங்கும் இயல்வே இல்லாதவனாய் அபிசாரம் முதலான தாழ்ந்த
கர்மங்களில் ஈடுபாடு உடையவனாய் -வஞ்சிக்கும் இயல்வு யுடையவனாய் -தொடங்கிய கர்மங்களிலும் மந்தமாகச் செயல்படுபவனாய் –
மிகுந்த மன வருத்தத்தை இயல்பாக யுடையவனாய் – நீண்ட காலமாகப் பிறர்க்குத் தீங்கைச் சிந்திக்கும்
இயல்பு யுடையவனான செயல் புரிபவன் -தாமச கர்த்தா என்று சொல்லப்படுகிறான் –
தாமஸ கர்த்தா -சேராதவன் -தகுதி இல்லாதவன் -என்றபடி -சாமான்யன் -சாஸ்த்ர ஞானம் இல்லாதவன் -லௌகிக விஷயங்களில் உழன்று –
மனு -ஷத்ரிய வம்சம் -சூர்ய குலம் -மனு தர்ம சாஸ்திரம் மூட நம்பிக்கை இல்லையே -ஸ்தாப்த்தன் ஒன்றும் தெரியாமல் நிற்பவன்
சட புத்தி -அபிசார கர்மங்கள் வைப்பு எடுப்பு – ராகு கால பூஜைகள் போல்வன -வஞ்சிக்கும் புத்தி – மந்த புத்தி –
மன வருத்தம் –தீர்க்க ஸூத்ரீ-நீண்ட நாள் பிறருக்கு தீங்கு நினைத்து –

புத்தேர் பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ் த்ரிவிதம் ஸ்ருணு–
ப்ரோச்யமாந மஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய–৷৷18.29৷৷

அர்ஜுனா -ஆராய்ந்து உறுதி கொள்ளுகை யாகிற புத்தியினுடையவும் -தொடங்கிய கர்மத்துக்கு இடையூறு ஏற்பட்டாலும்
தரித்து நிற்கையாகிற த்ருதியினுடையவும் முக் குணங்களை யிட்டு மூன்று வகையாக இருக்கும் வேறுபாட்டை தனித்தனியாக
நான் கூறுவதை உள்ளபடி முழுவதும் கேட்பாயாக
புத்தி –விவேக பூர்வக நிச்சய -உறுதியானவற்றில் அறிவு ஞானம் -அனுஷ்டானம் -உறுதி அறிவு அனுஷ்டானம் -மூன்று நிலைகள்
புத்தியின் வேறுபாடுகள் -த்ருதி விடா முயற்சி உடன் தடங்கலை தாண்டி முடிக்கும் திட உணர்வு –

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே–
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்த்விகீ–৷৷18.30৷৷

குந்தீ புத்திரனே -இவ்வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும் மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும் –
இந்த தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும் பயத்துக்கும் பயமின்மைக்கும்
இடமாய் இருப்பவற்றையும் சம்சாரத்தில் கட்டுப்படுவது -அதிலிருந்து விடுபடுவது -ஆகியவை பற்றிய உண்மையையும்
எந்த அறிவு அறிகிறதோ -அந்த அறிவு சத்வ குணத்தால் உண்டானதாகும்
சாத்விக புத்தி -பிரவ்ருத்தி மார்க்கம் இவ்வுலக இன்பம் ஸ்வர்க்கம் வரை -நிவ்ருத்தி மோக்ஷம் விஷயம் –
பயப்பட- வேண்டாதது -பந்தம் எது மோக்ஷம் -என்ற உறுதியான புத்தி –
இதனால் சாத்விக ஞானம் -அதனால் சாத்விக கர்மா -அதனால் சாத்விக பலன்

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ–৷৷18.31৷৷

குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –
தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –
தர்மம் அதர்மம் மயங்கி -ராக்ஷஸ புத்தி -செய்யத் தக்கவை தகாதவை தெரியாமல் மயங்கி –
புத்தி -உறுதி -தர்ம பூத ஞானம் தான் புத்தி என்பர் –

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷

குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –
சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –
அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –
தாமஸ புத்தி -அதர்மமே தர்மம் என்று உறுதி -கீழே மயக்கம் தான் -இங்கு அதர்மமே தர்மம் -என்று திட புத்தி —
எத்தனை அழிந்தாலும் மாற்றிக் கொள்ளாத புத்தி -தமோ குணத்தால் சூழ்ந்து -விபரீதமாக –
சித்தம் சாத்தியம் தப்பாக புரிந்து பூதம் பிரேத குணம் சாத்தியம் என்று கொண்டு -சூழல்

த்ருத்யா யயா தாரயதே மந ப்ராணேந்த்ரிய க்ரியா–
யோகே நாவ்யபி சாரிண்யா த்ருதி ஸா பார்த்த ஸாத்த்விகீ–৷৷18.33৷৷

குந்தீ புத்திரனே – வேறு பயன் கருதாத பகவத் உபாசனத்தாலே -மனம் பிராணன் இந்திரியம் – ஆகியவற்றின் செயல்கள்
எந்த த்ருதியினால் ஒருவன் தரிக்கிறானோ -அந்த த்ருதி சத்வ குணத்தால் உண்டானது –
த்ருதி -எடுத்த செயலை நிறைவேற்றுதல் -சாத்விக -மனஸ் பிராணன் இந்திரியங்கள் மூன்றையும் –
வேறு பயனை கருதாமல் –உபாசனத்தில் நிலை நிறுத்தி –

யயா து தர்ம காமார்தாந் த்ருத்யா தாரயதேர்ஜுந–
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதிஸ் ஸா பார்த்த ராஜஸீ–৷৷18.34৷৷

குந்தியின் பிள்ளையான அர்ஜுனா -மோக்ஷம் தவிர்ந்த பயனை விரும்பும் மனிதன் -மிகவும் பற்றுடன்
அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று புருஷார்த்தங்களுக்கும் சாதனமான செயல்களை
எந்த த்ருதியினால் தரிக்கிறானோ அந்தத் த்ருதி ரஜோ குணத்தினால் உண்டானது
ராக்ஷஸ த்ருதி -தர்மம் காமம் அர்த்தம் மட்டும் -கீழே மோக்ஷ பலன் -மனஸ் இந்திரியங்களை பலனை குறித்து இங்கு –

யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ ச–
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதிஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.35৷৷

குந்தீ புத்திரனே – தீய அறிவுள்ள ஒருவன் -கனவு தூக்கம் மதம் -ஆகியவற்றை விளக்கும் மனம் பிராணன்
முதலானவற்றின் செயல்களையும் -அச்சம் வருத்தம் கவலை ஆகியவற்றை விளக்கும் விஷயங்களுக்குக் காரணமான
மனம் பிராணன் முதலானவற்றின் செயல்களையும் எந்த த்ருதியால் தரிக்கிறானோ –
அந்த த்ருதி தமோ குணத்தால் விளைவது –
தாமஸ த்ருதி -அதிக தூக்கம் பயம் அச்சம் கவலை -இவற்றுடன் செய்து -விரோதம் கொண்டு அஞ்சி சோகம் –
கவலை கர்வம் விடாமல் செய்யும் கர்மங்கள் -இதுவரை சாதனங்களைச் சொல்லி மேலே பலன்களை சொல்லுகிறார்

ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப–
அப்யாஸாத் ரமதே யத்ர துக்காந்தம் ச நிகச்சதி–৷৷18.36৷৷

யத்த தக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்–
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்–৷৷18.37৷৷

பரதர் குலத்தலைவனே -இப்போது ஸூகமானது -முக் குணங்களை யிட்டு மூன்று வகைப்பட்ட இருப்பதை
என்னிடம் இருந்து கேட்பாயாக –
எந்த ஸூகத்தில் நீண்ட நாள் பழகுவதால் ஒப்பற்ற ஆனந்தத்தை அடைகிறானோ -எல்லா சம்சாரத் துன்பங்களின்
முடிவையும் அடைகிறானோ -எந்த ஸூகம் யோகத்தைத் தொடங்கும் காலத்தில் பழகாத ஆத்ம விஷயத்தில்
மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கையாலே துன்பம் போல் தோன்றுகிறதோ -யோகத்தின் இறுதியில் ஆத்ம ஸ்வரூபத்தை
அனுபவிக்கையால் அமுதத்தைப் போலே இனிதாய் இருக்கிறதோ மற்ற விஷயங்களில் இருந்து நீங்கி ஆத்மாவையே
அனுபவிக்கையாலே உண்டானதான அந்த ஸூகமானது சத்வ குணத்தால் உண்டானது என்று சொல்லப்படுகிறது –
சுகத்தையும் மூன்று -சாத்விக கர்மாக்களால் சாத்விக சுகம் -பத்து ஸ்லோகங்கள் பின்பு ஸ்ருணு பராக் பார்க்காமல் -கேள் –என்கிறான் –
நீண்ட நாள் பயிற்சியாய் -ஆனந்தம் பட்டு -சுகம் அனுபவிக்க சம்சார துக்கம் குறைந்து -போகுமே
ஆத்ம புத்தி -ஆத்மா இடமே செலுத்திய மனஸ் -அதனாலே பிறந்த சுகம் —
ஆரம்பத்தில் விஷம் போலே இருந்தாலும் -மேலே சுகம் அமிருதம் –

விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத்த தக்ரே அம்ருதோபமம்–
பரிணாமே விஷமிவ தத் ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்–৷৷18.38৷৷

அன்னம் பானம் முதலான விஷயங்களுக்கு இந்த்ரியங்களோடு சேர்த்தி ஏற்படுக்கையால் -அந்த விஷயங்களை
அனுபவிக்கும் ஆரம்ப காலத்தில் யாதொரு ஸூகம் அமுதம் போல் இருக்கிறதோ –
அந்த விஷய அனுபவத்தின் பலனை அனுபவிக்கும் கடைசிக் காலத்தில் விஷத்தைப் போலே துன்பத்தைத் தருகிறதோ
அந்த ஸூகம் ரஜோ குணத்தால் உண்டாவது என்று சொல்லப்படுகிறது –
ஆரம்பம் அம்ருதம் -மேலே விஷம் ஆகுமே -ராக்ஷஸ சுகம் -நீடித்த இன்பம் கொடுக்காதே -ஆத்ம பந்துக்கள் உத்தேச்யம் நீண்ட சுகத்துக்கு —
விஷயாந்தரங்கள் -சம்யோகத்தால் வந்த சுகம் -நாள் பட நாள் பட துக்கம் –

யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந–
நித்ராலஸ்ய ப்ரமாதோத்தம் தத் தாமஸ முதாஹ்ருதம்–৷৷18.39৷৷

யாதொரு ஸூகமானது தொடக்கத்திலும் நாளடைவில் ஆத்மாவிற்கு மயக்கத்தை விளைக்கிறதோ
தூக்கம் சோம்பல் கவனமின்மை ஆகியவற்றால் உண்டாவதான அந்த ஸூகம்
தாமஸ ஸூகம் என்று சொல்லப்படுகிறது
தாமஸ சுகம் –முதலிலும் முடிவிலும் -விஷம் -மோகம் -நித்ரா சோம்பல் -கவனம் இன்மை -தூண்ட –

ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தே வேஷு வா புந–
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர் முக்தம் யதேபி ஸ்யாத் த்ரபிர்குணை–৷৷18.40৷৷

இந்த பூமியில் உள்ள மனிதர்களிலோ தேவ லோகத்தில் உள்ள தேவர்களிலோ இந்த ப்ராக்ருதமான
மூன்று குணங்களில் இருந்து விடுபட்டதான யாதொரு பிராணி உண்டோ
அத்தகைய உயிர் எதுவும் இல்லை
முக்குணம் -முக்தி அடைந்த தத்துவமே இல்லையே -எல்லாம் அகப்பட்டவை -அவன் திருவடி பற்றியே வெளி வர முடியும் –

ப்ராஹ்மண க்ஷத்ரிய விஸாம் ஷூத்ராணாம் ச பரந்தப —
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவ ப்ரபவைர் குணை–৷৷18.41৷৷

எதிரிகளை வெல்கின்றவனே -பிராமணன் ஷத்ரியன் வைசியன் ஆகியவர்களுடையவும் சூத்ரர்களுடையவும் –
அவரவருக்கு உரிய முன் வினையால் உண்டான குணங்களோடு கூட செயல்களும் பிரித்துக் கூறப்படுகின்றன
முன் வினையால் விளையும் குணங்கள் -பிரித்து விடப்பட்ட நான்கு வகைகள் -செயல்களையும்-குணம் அடிப்படையில் –
பிரித்து கொடுக்கப் பட்டன –குணம் வர்ணம் செயல் -மூன்று குணங்கள் நான்கு வர்ணங்கள்

ஸமோ தமஸ் தபஸ் ஷௌசம் க்ஷாந்திர் ஆர்ஜவமேவ ச–
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஆஸ்திக்யம் ப்ரஹ்மம் கர்ம ஸ்வபாவஜம்–৷৷18.42৷৷

வெளி இந்திரியங்களை அடக்குதல் – மனத்தை அடக்குதல் சாஸ்திரங்களை ஒட்டி சரீரத்தை வருந்துதல் –
சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதியை உண்டாக்கிக் கொள்ளுதல் –
பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் மனம் வேறுபாடு அடையாமல் இருத்தல் –
பிறர் இடம் மனம் மெய் மொழிகளில் ஒருபடிப் பட நடத்தல் –
பர தத்துவத்தையும் மற்ற தத்துவங்களையும் உள்ளபடி அறிதல் -பரதத்வத்திடம் இருக்கும் தனித்தன்மைகளை அறிதல் –
வேதத்தில் சொல்லியது அனைத்தும் உண்மையானது என்று அசைக்க முடியாதபடி உறுதி கொள்ளுதல் –
ஆகிய இவை முன் வினையால் ஏற்பட்ட பிராமணனுக்கு உரிய செயல்களாகும் –
சமம் வெளி இந்திரியங்கள் அடக்கி – தமம் மனஸ் அடக்கி -சாந்த சம தமாதி குணங்கள் -தபஸ் சாஸ்த்ர உபாசனம் ஏகாதசி –
தகுதி -உடம்பு சுத்தி -ஷாந்தி ஆர்ஜவம் -தத்வ ஞானம் பகவத் விஞ்ஞானம் -வேத உறுதி ஆஸ்திகம் வேதம் பிரமாணம் என்று ஒத்துக் கொள்பவன்
ப்ராஹ்மணர் கர்மாக்கள் இவை -சாத்வீகம் பூர்ணன் என்றபடி –

ஷௌர்யம் தேஜோ த்ருதிர் தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்–
தாநமீஸ்வர பாவஸ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்–৷৷18.43৷৷

போர்க்களத்தில் அச்சமின்றி நுழையும் தன்மையாகிற சூரத்தன்மை -பிறரால் வெல்ல முடியாமை –
தொடங்கிய செயலில் இடையூறு நேர்ந்தாலும் தரித்து நின்று அதை நிறைவேற்றும் திறமை –
போர்க்களத்தில் தனக்கு மரணம் உறுதியானாலும் பின்வாங்காமல் இருத்தல் -தன் பொருளைப் பிறருக்கு அளித்தல் –
தன் குடிமக்கள் அனைவரையும் நியமிக்கும் திறமை ஆகிய இவை அனைத்தும்
முன் வினையால் உண்டான ஷத்ரியனுக்கு உரிய செயலாகும் –
பெரிய படைக்குள் நுழைந்து -வெல்ல முடியாத தேஜஸ் – த்ருதி உறுதி உடைமை -செயல் திறமை -யுத்தம் புற முதுகு காட்டாமை
தானம் – நியமிக்கும் திறல்-ஷத்ரியன் ரஜஸ் குணம் கார்யங்கள் –

க்ருஷி கௌரக்ஷ்ய வாணிஜ்யம் வைஸ்யம் கர்ம ஸ்வபாவஜம்–
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்–৷৷18.44৷৷–( கோ ரக்ஷ்ய 0

உழவு செய்து பயிர் விளைத்தலும் -பசுக்களைக் காத்தலும் -வியாபாரம் செய்வதும் –
முன் வினையால் உண்டான வைச்யனுடைய செயலாகும்
நாலாவது வர்ணத்தைச் சேர்ந்த ஸூத்ரனுக்கும் முன் வினையால் உண்டானது முதல் முற்று வர்ணத்தவருக்கும்
மெய் வருந்திக் கைங்கர்யம் செய்யும் தொழில் ஆகும்
வைசியன் -ரஜஸ் தமோ குணம் கலவை – வியாபாரம்
மூவருக்கு உதவி சூத்ரன் -கர்மங்கள் பண்ணி மெய் வருந்தி- சோகம் இருப்பவன் சூத்ரன்
முதல் மூவருக்கும் இவன் வேண்டும் -அவர்கள் சோகத்தை போக்குவதால் சூத்ரன் –
போதனம் ரக்ஷணம் போஷணம் சேவகம் நால்வருக்கும் –
சர்மா வர்மா குப்தா தாஸ்யன் பேர் வாசி -பேர் குணம் வியாபாரம் வாசி
தாசர் பிள்ளை உறங்கா வல்லி தாசர் சூத்ர வர்ணம் -பரம வைஷ்ணவர் -பிரபன்னன் -இவை தாண்டி -ராமானுஜ தாசன்
குலம் தங்கு சாதிகள் -நான்கையும் தாங்கும் குலம்-ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் –

ஸ்வே ஸ்வே கர்மண்ய பிரதஸ் ஸம்ஸித்திம் லபதே நர–
ஸ்வ கர்ம நிரதஸ் ஸித்திம் யதா விந்ததி தச் ஸ்ருணு–৷৷18.45৷৷

தம் தம் வர்ணத்துக்கு உரிய செயலில் ஈடுபாடுடைய மனிதன் மோக்ஷ சித்தியை அடைகிறான் –
தன் வர்ணத்திற்கு உரிய செயலில் ஈடுபட்டு அனுஷ்டிப்பவன் எப்படி மோக்ஷ சித்தியை அடைகிறான்
என்னும் விஷயத்தை கேட்பாயாக
கேள் -தங்கள் தங்கள் கர்மங்களில் ஆசை நிலை நின்று மோக்ஷம் அடைகிறார்கள் –
கர்மங்களில் நிலை நின்றவன் சித்தி அடைவது எப்படி -2-அத்யாயம் தொடங்கிய இடம்
மீண்டும் இங்கு -கர்மா யோகம் பண்ணி –

யதம் ப்ரவ்ருத்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்.–
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ—৷৷18.46৷৷

எந்தப் பரம புருஷனிடம் இருந்து எல்லாப் பொருள்களுக்கும் உத்பத்தி முதலான செயல்கள் அனைத்தும் விளைகின்றதோ-
எந்தப் பரம புருஷனாலே இந்தப் பொருள்கள் அனைத்தும் வியாபிக்கப் பட்டுள்ளதோ அந்தப் பரம புருஷனை
தனக்கு உரிய வர்ணாஸ்ரம கர்மத்தால் ஆராதனம் செய்து மேலான ப்ராப்யமான என்னை அடைகிறான் –
முக்தி -அடைகிறான் -எவன் இடம் இருந்து ஜீவ ராசிகள் உத்பத்தியோ அடைகின்றனவோ வியாபிக்க பட்டு இருக்கிறதோ
அந்த பரம் பொருளை -அர்ச்சனை பண்ணி -வர்ணாஸ்ரம கர்மாக்களில் புஷபம் அர்ச்சனை -பிரித்து விட்டு –

ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்–
ஸ்வபாவ நியதம் கர்ம குர்வந் நாப்நோதி கில்பிஷம்–৷৷18.47৷৷

சரீரத்தோடு கூடிய மனிதனுக்கு இயற்கையில் கை வரக்கூடிய உபாயமாய் இருக்கும் கர்ம யோகம் குறையுடையதாய்
இருந்தாலும் சில காலம் தனக்கு அனுஷ்ட்டிக்கப்பட்ட பிறருக்கு உரிய உபாயமான ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
இயல்பாகவே பொருந்தி இருக்கும் கர்மத்தைச் செய்பவன் பாபத்தை பலமான சம்சாரத்தை அடைய மாட்டான்
வர்ணாஸ்ரமமே கர்ம யோகம் -14-வகை கீழே பார்த்தோம் தீர்த்த யாத்திரை போல்வன -பரிணமித்து பரம பக்தி வரை -உயர்ந்தது
தன் கர்மா உயர்ந்தது -குறைவாக செய்யப் பட்டாலும் இதுவே உயர்ந்தது –
பர தர்மம் ஞான யோகம் -நன்றாக அனுஷ்ட்டிடிக்கப் பட்டத்தை விட -இதுவே பழகியது —

ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்–
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக் நிரிவா வ்ருதா–৷৷18.48৷৷

குந்தீ புத்திரனே இயல்வானதான கர்ம யோகம் குற்றம் உள்ளதாயினும் அதைக் கை விடக் கூடாது -ஏன் எனில்
புகையினால் நெருப்பு சூழப் பட்டு இருப்பது போலே கர்மயோகம் ஞானயோகம் ஆகிய எதைச் செய்வதும்
குற்றத்தால் சூழப் பட்டது தோஷம் –
இங்கு உடம்பு வருத்தம் ஞான யோகம் இந்திரியம் அடக்குவது கஷ்டம் -இதுவே சகஜம் -ஆயாசம் வந்தாலும் விட முடியாதே
எதை ஆரம்பித்தாலும் கர்ம ஞான -அக்னியில் புகை போலே ஆயாசம் இருக்குமே

அஸக்த புத்திஸ் ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ் ப்ருஹ–
நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்யாஸே நாதி கச்சதி–৷৷18.49৷৷

கர்மத்திலும் அதன் பலத்திலும் பற்று அற்றவனாய் – மனத்தை வென்றவனாய் -தன் கர்த்ருத்வத்தில் ஆசை அற்றவனாய் –
முன் கூறிய மூ வகைப்பட்ட தியாகத்தோடே கூடியவனாய் கர்மம் செய்பவன் மேலான தியான நிஷ்டையை அடைகிறான்
ஞான யோகம் மூலம் அடையும் தியான நிஷ்டையும் கர்மா யோகத்தால் கிட்டும் -கர்மா யோகத்துக்குள் ஞான பாகம் உண்டே
கர்மா என்னது இல்லை பலன் என்னது இல்லை ஞானமே தியானத்தின் மூட்டும் —
நைஷ்கர்ம்யஸித்திம் -தியாகத்தால் கிட்டும் -த்ரிவித தியாகம் -சந்நியாசம் –

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே–
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா–৷৷18.50৷৷

புத்த்யா விஸூத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச–
ஸப்தாதீந் விஷயாம் ஸ்த்யக்த்வா ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச–৷৷18.51৷৷

விவிக்த ஸேவீ லக்வாஷீ யத வாக் காய மாநஸ–
த்யாந யோக பரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித–৷৷18.52৷

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்–
விமுச்ய நிர்மமஸ் ஸாந்தோ ப்ரஹ்ம பூயாய கல்பதே–৷৷18.53৷৷

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷

குந்தீ புத்திரனே த்யான சித்தியை அடைந்தவன் எந்த உபாயத்தால் ப்ரஹ்மம் எனப்படும்
ஆத்ம ஸ்வரூபத்தை அடைவானோ
அந்த உபாயத்தை சுருக்கமாக என்னிடம் இருந்து கேட்பாயாக -அந்த ப்ரஹ்மம் எத்தகையது என்றால்
த்யான ரூபமான ஞானத்திற்குப் பரம ப்ராப்யமாய் இருப்பது அந்த ப்ரஹ்மமே

ஆத்ம தத்வ விஷயமான உண்மை அறிவோடு கூடியவனாய் – முன் கூறிய சாத்விக த்ருதியாலே
நெஞ்சை விஷயங்களில் இருந்து மீட்டு -சப்த ஸ்பர்ச ரஸ ரூப கந்தங்கள் ஆகிற புலன்களை விட்டு –
விருப்பு வெறுப்புக்களைக் கை விட்டு – த்யான விரோதிகளோடு தொடர்பு இல்லாத ஏகாந்தமான இடத்திலே
இருப்பவனாய் -அளவோடு உண்பவனாய் -மநோ வாக் காயங்களை தியானத்தில் ஈடுபடுத்தினவனாய் –
இறுதி வரையில் தினம் தோறும் த்யான யோகத்தை அனுஷ்டிப்பவனாய் –
ஆத்மா தவிர்ந்த விஷயங்களில் வைராக்கியத்தை வளர்ப்பவனாய் -தேகத்தில் ஆத்மா என்னும் அபிமானத்தையும்
அவ்வபிமானத்தை வளர்க்கும் வாசனா பலத்தையும் -அது காரணமாக வரும் கர்வத்தையும் -பேராசையையும் கோபத்தையும் –
உறவினரையும் கை விட்டு தன்னது அல்லாதது அனைத்திலும் தன்னது என்னும் நினைவு அற்றவனாய் –
ஆத்ம அனுபவத்தையே இனியதாகக் கொண்டவனாய்-த்யான யோகத்தைச் செய்பவன்
ஆத்மாவை உள்ளபடி அனுபவிக்கிறான் –

ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி கண்டவன் கலங்காத மனத்தை உடையவனாய் –
என்னைத் தவிர்ந்த வேறு எப்பொருளைப் பற்றியும் வருந்துவது இல்லை – வேறு ஒன்றை விரும்புவதும் இல்லை –
என்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பிராகிருதப் பொருள்களிலும் பற்று அற்று இருக்கையில் ஒத்தவனாய்
மேலான என் விஷயமான பக்தியை அடைகிறான் –

ஆத்மதியானத்துக்கு -சுருக்கமாக சொல்கிறேன் கேள் —
ஆத்ம சாஷாத்காரம் பற்றி -புத்தி -உண்மையான கலக்கம் அற்ற புத்தி சாத்விக த்ருதி
சப்தாதி விஷயாந்தரங்கள் -விருப்பு வெறுப்பு தொலைத்து -ஏகாந்தமான இடத்தில் -குறைந்த உணவு உண்டு
அடக்கப்பட்ட வாக்கு காயம் மனஸ்-த்யான யோகம் -நித்ய வைராக்யம் கொண்டு அஹங்காரம் பலம் வாசனை –
கர்வம் பேராசை கோபம் உறவுகளை விட்டு-நிர்மம -சாந்தமாக ஆத்மாவே இனியது ப்ரஹ்மம் ஆத்ம அனுபவம் பெறுகிறான் –
என்னை தவிர வேறு ஒன்றில் விருப்பம் இல்லாமல் -சம புத்தி கொண்டு என் பக்தியையும் பெறுகிறான் –
ஆத்ம சாஷாத்காரம் -உண்மை அறிவை பெற்று த்யானம் -பரமாத்மாவுக்கு சரீரம் சேஷ பூதன் நினைக்க நினைக்க -மாறுவான்
ஞான ஆனந்த மயன் விட சேஷத்வமே பிரதானம் -இது முதல் படி -பக்தியில் மூட்டும் –
என் விஷயமான உயர்ந்த பக்தியை அடைகிறான் -மனஸ் கலங்காமல் -என்னையே நினைத்து –
மற்றவை பற்றி நினைக்காமல் விரும்பாமல் -சமமாக ஜீவராசிகளை நினைத்து
எட்டு காரணங்கள்-
1-ஈஸ்வரன் என்று புரிந்து -ஆட்சி செலுத்துபன் அவனே —
2-காரண வஸ்துவை த்யானம் பண்ண சுருதிகள் சொல்லுமே -நிகில ஜகத் உதயலய லீலா –
3-நிரஸ்த நிகில தோஷ அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாண ஏக குணாத்மகம்-
பரம பாவ்யம் பவித்ராணாம் -மங்களங்களுக்கு இருப்பிடம்
4- அனவதிக அதிசய -இதம் பூர்ணம் -சர்வம் பூர்வம் –
5-அழகுக்கு குறை இல்லையே அம்ருத லாவண்ய சாகரம் அன்றோ
6-ஸ்ரீ யபதி -மூவர் ஆளும் உலகமும் மூன்று -நடுவாக வீற்று இருக்கும் நாயகன்
7-புண்டரீக நாயகன் -கீழே லாவண்யம் இங்கு ஸுந்தர்யம்-
அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் -தூது செய் கண்கள் -ஜிதந்தே புண்டரீகாஷா
8-ஸ்வாமி -இந்த காரணங்களால் –
தன்னடையே பரமாத்மா சிந்தனைக்கு கூட்டி செல்லும் -தேகமே எல்லாம் என்ற நினைவு மாறுவது தான் கஷ்டம் —

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் நான் எத்தகையவனோ -குணத்தாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவனோ
அத்தகைய என்னை முன் கூறிய பரபக்தியாலே உள்ளபடி அறிகிறான் –
என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பிறகு பரம பக்தியால் என்னைப் பரிபூர்ணமாக அடைகிறான் –
மேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும்
பர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க
பரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும்
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
யஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-இரண்டையும் அறிகிறான் பர பக்தி
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் –
ஞான பல -இத்யாதி இணையான் -அறிந்து கொண்டு
என்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்
ஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை –
மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –

ஸர்வ கர்மாண்யபி ஸதா குர்வாணோ மத் வ்யபாஸஂரய–
மத் ப்ரஸாதாத வாப்நோதி ஸாஸஂவதம் பதமவ்யயம்–৷৷18.56৷৷
எல்லாக் கார்ய கர்மங்களையும் என்னிடத்தில் கர்த்ருத்வம் முதலானவற்றை சமர்ப்பித்தவனாய் -எப்போதும் செய்பவன்
என் அருளாலே என்றும் இருப்பதாய் குறையில்லாததான ப்ராப்யமான என்னை அடைகிறான் –
யுத்தம் செய்தால் எப்படி கர்மா யோகம் —
சாஸ்வதம் பதமவ்யயம்-குறைவற்ற அழிவற்ற ஸ்ரீ வைகுண்டம் அடைகிறான் -என்னுடைய பிரசாதத்தாலே –
முக்தி யுத்தமோ பக்தியோ கொடுக்காதே -பரம சேதனன் சர்வேஸ்வரன் -கொடுப்பவன் கண்ணன் என்கிற எண்ணமே வேண்டும்
கத்ய த்ரயம் -சர்வ அபதாரம் க்ஷமஸ்வ -ஏதோ பிரகாரத்தில் த்வயம் -சரண் என்னுடைய தயை ஒன்றாலே
மதியே ஏவ தயையா கேவலம் -சங்கைக்கு இடம் இல்லாமல் -என்னுடைய -தயை மட்டுமே உமக்கு கொடுக்கும்
வர்ணாஸ்ரமம் செய்ய செய்ய அவனுக்கு ப்ரீதி -தயை கிட்டுமே-
பக்தி யோகத்தில் பக்தி பண்ணினால் கிருபையால் முக்தி -பிரவ்ருத்தி மார்க்கம் -பிரபத்தி நிவ்ருத்தி மார்க்கம் –
யுத்தம் காம்ய கர்மம் எப்படி பலனை கொடுக்கும் சங்கை –
த்ரிவித த்யாகத்துடன் செய்வதால் -கர்த்ருத்வம் அவன் இடம் சமர்ப்பித்து -பலன் பெறுகிறான்

சேதஸா ஸர்வ கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத் பர–
புத்தி யோக முபாஸ்ரித்ய மச் சித்த ஸததம் பவ–৷৷18.57৷৷

ஆத்மா என்னுடையது -என்னால் நியமிக்கப்படுகிறது என்னும் நினைவோடு எல்லாக் கர்மங்களையும்
என்னிடத்தில் சமர்ப்பித்து என்னையே பலனாக நினைப்பவனாய் -முன் கூறப்பட்ட பரித்யாகங்களை யுடையவனாய் –
எப்போதும் என்னிடமே நெஞ்சு செலுத்துபவனாக ஆவாயாக –
யுத்தத்தில் மூட்டுகிறார் -சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிய பின்பு -மனசால் புத்தியால் -அவன் நடத்துகிறான் என்ற நினைவுடன்
கர்ம பலன் அவன் இடம் -அவன் முக விலாசம் பலன் –அவன் இடம் நெஞ்சை செலுத்து -சர்வ துர்க்கங்களையும் கடந்து
ஜல துர்க்கம் போலே சம்சார ஆர்ணவம் தாண்டி -புத்தி யோகம் -த்ரிவித த்யாகத்துடன் –

மச் சித்த ஸர்வ துர்காணி மத் ப்ரஸாதாத் தரிஷ்யஸி–
அத சேத் த்வமஹங்காராந்ந ஷ்ரோஸ்யஸி விநங்க்ஷ்யஸி–৷৷18.58৷৷

என்னிடம் நெஞ்சு வைத்தவனாய் -முன் கூறியபடி எல்லாக் கர்மங்களையும் செய்தாயானால் –
சம்சாரத்தில் கட்டி வைக்கும் எல்லாத் தடைகளையும் என் அருளாலே தாண்டி விடுவாய் -அப்படி அல்லாமல்
நீ நானே எல்லாம் அறிந்தவன் என்னும் எண்ணத்தால் நான் சொன்னதைக் கேட்காமல் இருப்பாயாகில் அழிந்து விடுவாய்
சர்வ தியாகம் இல்லாமல் -வீணாக போகிறாய் -என் இடம் நெஞ்சை செலுத்தி -என் பிரசாதத்தாலே தாண்டுகிறாய் –
தாண்டுவிக்கிறான் நாம் செய்வதில் ப்ரீதி அடைந்து –
ஒரு வேலை அஹங்காரத்தால் -நானே செய்கிறேன் என்று -நான் சொல்வதை காது கொடுத்து கெடுக்காமல் இருந்தால் –
சம்சாரத்தில் மாறி மாறி உழல்வாய்

யதஹங்கார மாஸ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே–
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதி ஸ்த்வாம் நியோக்ஷ்யதி–৷৷18.59৷৷

நன்மை தீமைகளை அறிவதில் நானே வல்லவன் என்னும் எண்ணத்தை மேற்கொண்டு என்னுடைய ஆணையை மீறி
நான் போர் புரிய மாட்டேன் என்று நினைப்பாயாகில் இந்த உன்னுடைய உறுதி பொய்யாகவே யாகிவிடும் -ஏன் எனில்
மூலப்பிரக்ருதியின் கார்யமான உன் சரீரம் உன்னைப் பொறு புரியும்படி செய்து விடும்
நான் சொல்வதை கேட்காமல் இருந்தாலும் யுத்தம் செய்வாய் -சம்சாரம் கிட்டும் -நான் சொல்வதை கேட்டு செய்தால் மோக்ஷம் –
விவசாயம் உறுதி -மித்யையாகும் -உன்னை பிரகிருதி தூண்டுவிக்கும் -இயற்க்கை -ஷத்ரியம் ரஜோ குணம் சண்டை போட வைக்கும் –
உன் ஸ்வ பாவமே உன்னை சண்டை போட வைக்கும் ஓடினால் பேடி என்பர் -கேட்டதும் நீ என்ன செய்வாய் –
காண்டீபம் தர்மர் குறை சொல்ல பொறுக்காதவன் அன்றோ நீ
கர்ணன் துரியோதனன் கேலி பண்ண ரஜோ குணம் தூண்ட -ராஜ்ஜியம் வேண்டும் இவர்களை தண்டிப்போம் என்ற புத்தியுடன் செய்வாய்
இதில் எது என்பதை நீயே முடிவு பண்ணு

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த ஸ்வேந கர்மணா–
கர்தும் நேச்சஸி யந்மோஹாத் கரிஷ்யஸ்ய வஸோ அபி தத்–৷৷18.60৷৷

குந்தீ புத்திரனே -உன் முன் வினையால் உண்டான ஸுவ்ர்யமாகிற உனக்கு உரிய கர்மத்தால் -கட்டுப்பட்டவனாய் –
அதனாலேயே உன் சரீரத்துக்கு வசப்பட்டவனாய் -யாதொரு போரை அறிவின்மையால் நீ செய்யாது இருக்கிறாயோ –
என் ஆணையை மீறினாலும் -வேறொரு காரணத்தால் நீ செய்யத்தான் போகிறாய்
ஸ்வ பாவம் -முன் வினையால் -வாசனை ருசி -கட்டுப்பட்டு -உனது சாதுர்யம் வீரம் கர்மம் -சம்சாரத்தில் கட்டுண்டு -மோகத்தால்
யுத்தம் செய்யாமல் நீ விலகி இருந்தாலும் -நீ நினைத்தால் கூட உன்னை அறியாமல் யுத்தம் செய்வாய் -ரஜோ குணம் தூண்ட செய்வாய் –

ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா–৷৷18.61৷৷

வாஸூ தேவன் எல்லா உயிர்களுக்கும் அறிவு உதயமாகும் ஹ்ருதயமாகிற இடத்தில்
ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா உயிர்களையும்
சர்வ ரஜஸ் தமோ குண மயமான மாயையால் அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்
நானே செய்வேன் என்றால் நீ தூண்டுகிறாய் என்று எதனால் சொன்னாய் -ஈஸ்வரன் -நியமிக்கிறவன் –
சர்வ ஜீவ ராசிகளுக்கு ஹிருதய பிரதேசம் -சிந்தனம் உதயம் ஆகும் இடம் -நானே உள்ளேன் —
இருந்து ஞானம் ஸ்மரணம் மறதி மூன்றையும் நானே செலுத்துகிறேன் முன்பே சொன்னேன் —
யந்த்ரம் -பிரகிருதி கார்யமான சரீரம் -அதில் ஏற்றி வைத்த ஆத்மா -மாயா சக்தியால் -முக்குணங்களில் ஈடுபடுத்தி –
முக்குணம் தகுந்த படி நடத்துகிறேன் -எத்தை செய்தாலும் என் ஆட்சியால் -சாமான்ய காரணம் பகவான் தான் –
விசேஷ கார்யம் கர்மா அன்றோ

தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்–৷৷18.62৷৷

அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே
எல்லா வகையாலும் பின்பற்றுவாய் –
அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –
நானே விடுவிக்க வேண்டும் -செய்ய வேண்டியதை சொல்கிறேன் -இது தான் சரம ஸ்லோகம் –
தெளிந்த நீரோட்டம் போலே உபதேசம் இது வரை –
அதன் படி நடக்க வில்லை -மாற்றி மேலே –18–64-வந்தது –
தமேவ -அந்த என்னையே -சரணமாக பற்றி விடு —
ஸர்வபாவேந- எல்லா பாவத்தாலும் என்னையே உபாயம் உபேயம் தாரக போஷக போக்யம் அந்தர்யாமியாக பற்று
சித்த உபாயம் அன்றோ –அவனாலே அவனை அடைகிறோம் –அந்த அனுக்ரஹத்தாலே பரமமான சாந்தி கர்மா பந்தம் விடு பட்டு
ஸ்ரீ வைகுண்டம் அடைவாய் –
சாஸ்வதம் -நித்ய விபூதி -சரணாகதி முக்கிய கருத்து இது தானே –
பலத்தின் சமீபத்தில் அழைத்து செல்வது உபாயம் -தாது -அர்த்தம்– பக்தி உபாயம் சாத்ய உபாயம் -பகவானே உபாயம் சித்த உபாயம் –
மோக்ஷம் பலன் கொடுப்பது அவனே -பக்தி யோகத்தால் ப்ரீதி அடைந்து பலத்தை அவன் தானே அளிக்க வேண்டும் —
நான் செய்து பதிலுக்கு அவன் செய்தால் வியாபாரம் -ஆகுமே -பிதா பிராப்தி ஸ்வாமி -ஸ்வரூபம் இருவருக்கும் கொத்தை ஆகுமே
ரஷிப்பது ஸ்வ பாவம் -பிரபாவம் இல்லையே -இயற்கை என்றவாறு –
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் -ஸ்வாதந்திரம் தலை தூக்கக் கூடாதே
அசித்வத் பாரதந்தர்யம் வேண்டுமே – பக்தி யோகம் செய்யத் தக்கது இல்லை இதனாலே –
மேம் பொருள் போக விட்டு -வாழும் சோம்பரை யுகத்தி போலும் –
நீயே உபாயமாக இருப்பாய் என்ற பிரார்த்தனையை சரணாகதி –
தமேவ சரணம் கச்ச-சரணம் உபாயம் க்ருஹம் ரக்ஷணம் -சரணாலயம் க்ருஹம் இல்லம் வீடு
உபாயம் -பலத்துக்கு அருகில் அவரே கூட்டிப் போவார் -ஸ்வரூப அனுரூபம் சரணாகதி -சரணம் இதி கதி –
சரணம் என்று வந்து விடுவது தானே –கத்யர்த்த புத்யர்த்த
உபாயம் அனுஷ்ட்டிக்க வேண்டிய பொறுப்பும் உம்மது–விலக்காமை அத்வேஷம் -தடுப்பை நீக்கினால் போதுமே
அவன் நினைவு எப்பொழுதும் உண்டு -அது கார்யகரம் ஆவது இவன் நினைவு மாறினால் தானே –
பர்த்ரு போகத்தை விலைக்கு உறுப்பு ஆக்குமா போலே –
தடுப்பை நீக்குவதே சரணாகதி -ப்ரஹ்மமே உபாயம் என்ற நினைவு வேண்டும் என்னில்-நினைவும் உபாயம் இல்லை -பக்தி பிராப்ய ருசியில் மூட்டும் –
சரணாகதர்களுக்கும் பக்தி வேண்டும் –பக்தி உபாயம் என்ற எண்ணத்தை மட்டும் விடடார்கள் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி உண்டு என்றவாறு –
வனத்திடை ஏரியாம் இயற்றி இது வல்லால் –மழை பெய்விப்பார் யார் -மேகத்தின் கருணையால் மழை போலே —
சம்சார பயம் கண்டு சோகம் -அதிகாரிக்கு லக்ஷணம் -பலன் சோகம் நிவ்ருத்தி -சோகம் இல்லை என்றால் பலிக்காது
பின் சோகம் இல்லாமல் இருப்பதும் சரணாகதி லக்ஷணம் –
இதோ சரணம் -என்று சொல்லி இருந்தால் ஸ்ரீ கீதை முடிந்து இருக்கும் -சொல்ல வில்லையே –

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா–
விம்ருஸ்யை தத ஸேஷேண யதேச்சஸி ததா குரு–৷৷18.63৷৷

இவ்வண்ணமாக ரஹஸ்யங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ரஹஸ்யமான மோக்ஷத்திற்கு உறுப்பான
அறிவு உனக்கு என்னாலே சொல்லப்பட்டது –
இதை முழுவதும் ஆராய்ந்து -உன் தகுதிக்கு ஏற்றவாறு எதை விரும்புகிறாயோ அதை அனுஷ்டிப்பாயாக –
என்னால் ரஹஸ்யங்களில் ரஹஸ்ய சாஸ்திரம் -மோக்ஷ சாதனம் என்னால் சொல்லப் பட்டது –2–12-வரை இது வரை
சொன்னதை ஆராய்ந்து நீ உன் செயல்பாட்டை முடிவு செய்து கொள்- உன் தகுதிக்கு தக்க படி செய் -ஆசைப்பட்ட படி செய் என்றால்
யுத்த பூமியில் இருந்து ஓடுவது தானே -என்னில் நான் சொன்ன வழிகளில் ஒன்றை தானே தேர்ந்து கொள்ள வேண்டும் –
சொல்லி மௌனமாக கண்ணன் -இருக்க -சரணாகதியைப் பண்ண அர்ஜுனனுக்கு ருசி இல்லை
சோகம் வேண்டும் என் கையில் ஒன்றும் இல்லை ஸ்வாதந்த்ர லேசம் கூடாதே -ஷத்ரியன் ஒன்றும் பண்ணாமல் இருக்க முடியாதே
முகத்தை பார்த்து பக்தி யோகம் தான் இவனுக்கு -சரணாகதி இல்லை என்று உணர்ந்து மேலே அருளிச் செய்கிறான்

ஸர்வ குஹ்ய தமம் பூயஸ் ஸ்ருணு மே பரமம் வச–
இஷ்டோஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்–৷৷18.64৷৷

இந்த ரஹஸ்யங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ரஹஸ்யமாய் இருக்கும் பக்தி யோகத்தைப் பற்றிய என்னுடைய
மேலான வார்த்தையை மறுபடியும் கேட்பாயாக -எனக்கு மிகவும் இனியவனாய் இருக்கிறாய் என்னும் காரணத்தால்
உனக்கு நன்மையைச் சொல்லுகிறேன் ஹிதமானதை சொல்கிறேன் –
மிக நெருங்கிய இனியவனாக உள்ளாய் -ரஹஸ்யம் -மறுபடியும் சொல்கிறேன்
இந்த பக்தி யோகத்தை -9-அத்யாயம் கடைசி ஸ்லோகம் -முன்பே சொன்னேன்
அதனால் பூய -மறுபடியும் -சொல்கிறேன் என்கிறான்

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே
சோகப் படாதே –சரணாகதி விரிவாக கீழே பார்த்தோம் -என்னை ஒருவனையே பற்று-
சர்வ தடங்கலாக உள்ள எல்லா பாபங்களில் இருந்தும் விடுவிப்பேன் சோகப் படாதே –
பாபங்கள் இருந்ததே என்று தானே சோகப் பட்டு இருக்க வேண்டும் -பக்தி பண்ண -ஆரம்ப விரோதிகள் இருக்குமே
ஆரம்பிக்கவே முடியாதே –அதைக் கண்டு பயந்து சோகம் –
வர்ணாஸ்ரம கர்மங்கள் பண்ணிக் கொண்டே பலன்களை விட்டு -சர்வ தர்ம பல பரித்யாகம் -என்னையே கர்த்தா -ஆராதனாக பற்று -என்றவாறு –
பாபங்களை போக்கும் பிராயச்சித்த தர்மங்களையும் கண்டு பயப்பட்டு சோகம் -இங்கு அவற்றையும் விட்டு -அந்த ஸ்தானத்தில் சரணாகதி என்றவாறு –
பக்தி தான் ஸ்ரீ கீதா சாஸ்திரம் உபாயம் -அர்ஜுனனுக்கு ஏற்ற உபதேசம் -அங்க பிரபத்தி என்றவாறு -பிரதான உபாயம் பக்தி யோகம் –
தடங்கலை போக்கி பக்தி தொடங்கி-பக்தி ஒன்றினால் அடையப் படுகிறேன் -ஸ்ரீ கீதா வாக்கியம் –
ரஹஸ்ய த்ரயம் -அர்த்தம் ஸ்வ தந்த்ர பிரபத்தி –
கர்ம ஞான பக்தி யோகங்களை விட்டு -என்னைச் சரண் அடைந்து –
பண்ணின எண்ணத்தையும் உபாயமாக எண்ணாமல் -என்னை அடைய தடங்கலாக
உள்ள எல்லா பாபங்களையும் கண்டு சோகப் படாதே -இங்கு சோகம் –
இவன் சர்வாத்மா -ஞானம் வந்த பின்பு -ஆராய்ந்த பின் உனக்கு எது சரி -அத்தை செய் –
இது தான் பொறுப்பை தலையில் வைத்த சோகம்
நான் ஸ்வரூப அனுரூபமாக அன்றோ பண்ண வேண்டும் –
பிராரப்த கர்மாக்கள் பக்தி யோகனுக்கு முடிக்க மாட்டார் -பிரபன்னனுக்கு அனைத்தையும் -இந்த சரீரம் தான் கடைசி சரீரம்
சீக்கிரம் பலம் -பஹு ஆனந்தம் -அன்றோ –
கர்மா ஞான பக்தி யோகங்கள் கைங்கர்ய ரூபமாக செய்வான் பிரபன்னன் -உபாய புத்தியால் இல்லை
மாம் -ஸுலப்ய பரம்-ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் –
அஹம் -பரத்வ பரம்- -ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள் –

இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந–
ந சாஸூஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷

பரம ரஹஸ்யமாக என்னால் சொல்லப்பட்ட இந்த சாஸ்திரம் உன்னாலே
தவம் செய்யாதவனுக்குச் சொல்லப்படலாகாது
என்னிடமும் உன்னிடமும் பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் சொல்லப்படலாகாது
கேட்பதில் விருப்பம் இல்லாதவனுக்கு சொல்லப்படலாகாது
எவன் ஒருவன் என்னை துவேஷிக்கிறானோ அவனுக்கும் சொல்லப்படலாகாது
தபம் இல்லாதவனுக்கு சொல்லாதே –பக்தி இல்லாதவன் -ஆசை இல்லாதவன் -சொல்லாதே
அஸூயை உள்ளவனுக்கு சொல்லாதே –
திரௌபதி விரிந்த குழல் முடிப்பதே இவனுக்கு லஷ்யம் -அதனால்
ரஹஸ்யம்-ரத்னத்தை- முற்றத்தில் கொட்டி விட்டு பதண் பதண் என்கிறான் –

ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷ்வபி தாஸ்யதி-
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய ஸம்ஸய–৷৷18.68৷৷

எவன் ஒருவன் மேலான ரஹஸ்யமான இந்த சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களிடம் வியாக்யானம் செய்கிறானோ
அவன் என்னிடத்தில் மேலான பக்தியைச் செய்து என்னையே அடைகிறான் -இதில் ஐயம் இல்லை
குஹ்யம் -சாஸ்திரம் -பக்தர்கள் இடம் வியாக்யானம் செய்தால் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி இதுவே உண்டாக்கும் –
ஐந்தாவது உபாயம் இது
சரம தமமான உபாயம் அன்றோ இது -சங்கை இல்லாமல் -நான் சொல்லியபடி சொல்லி பலன் கெடுபவர் பெறுவார்

ந ச தஸ்மாந் மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரிய க்ருத்தம–
பவிதா ந ச மே தஸ்மாதந்ய ப்ரிய தரோ புவி–৷৷18.69৷৷

இவ் வுலகில் மனிதர்களில் இந்த சாஸ்திரத்தை வியாக்யானம் செய்பவனைக் காட்டிலும் வேறு ஒருவன்
எனக்கு மிகவும் இனியது செய்பவன் இருந்தது இல்லை –
அவனைக் காட்டிலும் வேறு ஒருவன் எனக்கு வரும் காலத்தில் மிகவும் இனியவனாக உண்டாக்கப் போவதும் இல்லை
ஸ்ரீ கீதா சொல்பவனை விட யாரும் எனக்கு பிரிய தமன் இல்லை -நேற்றும் நாளையும் இதுவே –

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாத மாவயோ–
ஜ்ஞாந யஜ்ஞேந தேநாஹ மிஷ்டஸ் யாமிதி மே மதி–৷৷18.70৷৷

நம் இவர்கள் இடையே நிகழ்ந்த மோக்ஷ உபாயங்களைப் பற்றிய இந்த சம்வாத ரூபமான யோக சாஸ்திரத்தை
எவன் ஓதுகின்றானோ -அவனால் இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஞான யஜ்ஞத்தினால்
நான் ஆராதிக்கப் பெற்றவன் ஆவேன் என்பது என் அபிப்ராயம்
இது என் மதி -அத்யயனம் பண்ணுபவன் -உனக்கும் எனக்கும் நடந்த வார்த்தா லாபம் –
ஞான யாகம் தான் இது -நான் பூஜிக்கப் பட்டவன் ஆகிறேன் –

ஸ்ரத்தாவாந் அநஸூயஷ்ச ஸ்ணு யாதபி யோ நர–
ஸோபி முக்தஸ் ஸூபாந் ல்லோகாந் ப்ராப்நுயாத் புண்ய கர்மணாம்–৷৷18.71৷৷

கேட்பதில் விருப்பம் யுடையவனாய் -பொறாமை அற்றவனாய் எந்த மனிதன்
இந்த சாஸ்திரத்தைக் கேட்பது மட்டும் செய்கிறானோ -அந்த மனிதனும் -என்னிடம் பக்தி தொடங்குவதற்குத்
தடையான பாபங்களில் இருந்து விடுபட்டவனாய்
மிகுந்த புண்யங்கள் செய்த என்னுடைய அடியார்களுடைய மங்களமான கூட்டங்களை அடைவான்
கேட்பவனும் சம்சாரக் காட்டில் இருந்து முக்தன் ஆகிறான் –
புண்ய கர்மாக்கள் பண்ணும் பக்தர் கூட்டங்கள் -அடியார் குழாங்கள் இடம் சேர்ந்து பரம புருஷார்த்த மோக்ஷம் பெறுவார்கள்

கச்சிதேதத் ஸ்ருதம் பார்த த்வயை காக்ரேண சேதஸா–
கச்சித ஜ்ஞாந ஸம்மோஹ ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய–৷৷18.72৷৷-

குந்தீ புத்திரனே -என்னால் சொல்லப்பட்ட இந்த சாஸ்திரம் உன்னாலே ஒரு முகப்பட்ட மனத்தோடு கேட்கப் பட்டதா –
தனஞ்சயனே உன்னுடைய அறிவின்மையால் விளைந்த மயக்கம் அழிந்து விட்டதா –
பார்த்தா தனஞ்சயன் ஒரு நிலை பட்ட மநஸால் கேட்டாயா -அறிவின்மையால் பெற்ற மயக்கம் போனதா –

அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷

அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது –
உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று
நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் –
மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது –
ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்
உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன்
உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்ககு தானே இவ்வளவும் அருளினான் –

ஸஞ்ஜய உவாச-
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்த்தஸ்ய ச மஹாத்மந–
ஸம்வாத மிமமஸ்ரௌஷம் அத்புதம் ரோம ஹர்ஷணம்–৷৷18.74৷৷

சஞ்சயன் கூறினான் -இவ்வண்ணமாக வஸூ தேவ புத்திரனான கண்ணனுக்கும் பேர் அறிவாளான
அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த மயிர்க் கூச்செறியச் செய்யும் ஆச்சர்யமான
இந்தக் கலந்துரையாடலை நான் கேட்டேன்
அத்புதம் -மயிர் கூச்சு எரிந்து உள்ளேன் -கேட்டேன் -வாஸூ தேவனும் பார்த்தனும் பேசிய தெய்வத் தன்மை மிக்க சம்வாதம்
வேத வியாசர் பிரசாதத்தால் கேட்கப் பெற்றேன்

வ்யாஸ ப்ரஸாதாத் ஸ்ருதவாநே தத் குஹ்ய மஹம் பரம்–
யோகம் யோகேஸ்வராத் க்ருஷ்ணாத் ஸாக்ஷாத் கதயத ஸ்வயம்–৷৷18.75৷৷

வ்யாஸருடைய அருளாலே திவ்யமான கண்ணையும் செவியையும் பெற்று இந்த மேலான யோகம் எனப்படும்
ரஹஸ்யத்தை நேரே பேசிய கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனிடம் இருந்து நான் நேரே கேட்டேன்
வியாச பிரசாதத்தால் -கேட்க்கும் பாக்யம் பெற்றேன் -மிக ரஹஸ்யமான -இத்தை யோகங்களை
யோகேஸ்வரன் அவனே அருளிச் செய்ய அன்றோ கேட்க பெற்றேன்

ராஜந் ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத மிமமத்புதம்–
கேஸவார்ஜுநயோ புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு–৷৷18.76৷৷

திருதராஷ்ட்ர மஹா ராஜனே -கேசவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நிகழ்ந்த இந்தப் புனிதமாய்
ஆச்சர்யமான கலந்துரை யாடலை நினைக்கும் தோறும் மறுபடியும் மறுபடியும்
நான் பேர் ஆனந்தம் அடைகிறேன்
கேள்விக்கு எனக்கு தகுதி இல்லை -நினைத்து நினைத்து அத்புதம்
கேசவன் அர்ஜுனன் -புண்யம் தெய்வ தன்மை மிக்க சம்வாதம் -நினைக்க நினைக்க மிக்க ஆனந்தப் படுகிறேன்

தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே–
விஸ்மயோ மே மஹாந் ராஜந் ஹ்ருஷ்யாமி ச புந புந–৷৷18.77৷৷

திருதராஷ்ட்ர மஹா ராஜனே-கண்ணனுடைய அந்தப் பேர் ஆச்சர்யமான விஸ்வ ரூபத்தை
நினைக்கும் தோறும் எனக்கு பெரு வியப்பு உண்டாகிறது –
மறுபடியும் மறுபடியும் பேர் ஆனந்தம் அடைகிறேன்
உயர்ந்த விஸ்வரூபம் ஒன்றையே நினைக்க ஆனந்தம் -எதுவும் பண்ண வேண்டாம் -நினைத்து நினைத்து
அதி அத்புத ரூபம் -விராட் ஸ்வரூபம் -ஆனந்தப் படுகிறேன்

யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர–
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம–৷৷18.78৷৷

எவ்விடத்தில் சிறப்புகளை எல்லாம் ஆளுபவனான கண்ணன் இருக்கிறானோ –
எவ்விடத்தில் வில்லை ஏந்திய அர்ஜுனன் இருக்கிறானோ -அவ்விடத்திலேயே
எல்லாச் செல்வமும் வெற்றியும் வைபவங்களை தர்மமும் நிலையாக உள்ளன -என்பது
எனது கருத்தாகும் என்று சஞ்சயன் கூறினான் –
முதல் கேள்விக்கு இங்கு பதில் -யார்க்கு வாழ்ச்சி -நேராக சொல்லாமல் எங்கு கண்ணனோ அர்ஜுனனோ அங்கே வெற்றி
காண்டீபம் தரித்த -யோகேஸ்வரன் சேர்த்தி இங்கு தான் வெற்றி நிச்சயம்
தர்மங்கள் வெற்றி வைபவம் செல்வம் இங்கு தான் இது என்னுடைய அபிப்ராயம் –
ஸ்ரீ கிருஷ்ண அனுக்ரஹம் தான் வெற்றி கொடுக்கும்
அது இல்லாமல் நீ கெட்டே போகிறாய் என்று த்ருதராஷ்ட்ரனுக்கு சொல்லி நிகமிக்கிறார்

ஸ்ரீ கீதா சாஸ்திரம் கேட்டால் தேர் கடாவிய கனை கழல் பெறப் பெறுவோம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: