ஸ்ரீ கட உபநிஷத் —

ஸ்ரீ கிருஷ்ண யஜுர் வேத உபநிஷத் -கட உபநிஷத்-கட வல்லி -என்றும் இத்தை சொல்வர் –
நைச்சிகேதஸ் –உபாக்யானம் -மஹா பாரதத்திலும் உண்டு -கொஞ்சம் மாறி
கௌதமர் பிள்ளை இவன் -அருணன் -உத்தாலகர் பிள்ளை –
யாகம் கோ தானம் பண்ண -மெலிந்த பசுவாக இருக்க -பிள்ளை நல்ல மாடு கொடுக்க வேண்டாமா -மூன்று தரம் கேட்டு
என்னை யாருக்கு கொடுக்க -மிருத்யு தேவதைக்கு வெறுப்பில் சொல்ல -மூன்று நாள் பட்டினி விட்ட யமன் மூன்று வரம் -பிராயச்சித்தம்
அப்பா கோபிக்காமல் முதல் / அக்னி வித்யா சொல்லி தர இரண்டாவது -இவன் பெயரிலே அக்னி -உபாசனம் /
மரணம் அடைந்த பின்பு போகும் கதி -மறு பிறவி பற்றி சொல்ல கேட்டான் -மூன்றாம் வரம்
இது தவிர வேறே கேட்க சொல்ல -ஸ்திரமான இந்த ஒன்றே -உறுதி கண்டு நீண்ட உபன்யாசம் -ஸ்திரம் -ஸ்திரம் மருத்தவம் -நிதானமாக சொல்லி
மூன்று வல்லி-ஒவ் ஒரு அத்தியாயத்திலும் – இரண்டு அத்தியாயங்கள் -மொத்தம் -ஆறு வல்லிகள்-

————————

தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ৷৷ 1.1.1 ৷৷-

வஜ்ரஸ்ரவா -மகன்-உசன் என்ற -வஜ்ரஸ் ரவாசா –விஸ்வஜித் யாகம் பண்ணி அனைத்தையும் தியாகம் பண்ணி
-பலனை அனுபவிக்க ஆசை கொண்டான் -அவன் புத்ரன் நசிகேத –

த் ఁஹ குமார் ఁஸந்தஂ தக்ஷிணாஸு நீயமாநாஸு ஷ்ரத்தாவிவேஷ ஸோமந்யத ৷৷ 1.1.2 ৷৷
தம் குமாரம் சந்தம் -அவன் குமாரனாக இருந்தும்
ஷ்ரத்தா அவிவேச –ஸ்ருதிகளில் விசுவாசம் மிக்கு இருந்தான்
தக்ஷிணாஸு நீயமாநாஸு –பசுக்களை தானம் கொடுக்க அழைத்து கொண்டு செல்லும் பொழுது
அமன்யத-நினைத்தான் –

பீதோதகா ஜக்ததரிணா துக்ததோஹா நிரிந்த்ரியாஃ .
ஆநந்தா நாம தே லோகாஸ்தாந் ஸ கச்சதி தா ததத் ৷৷ 1.1.3 ৷৷

பிதம் உதகம் -தண்ணீரை குடித்து -நிறைய காலம் / ஜகதம் த்ருணம் -புல்லை உண்டு-நிறைய காலம் /
ஜகத் தரிணா துக்ததோஹா-உலகம் தரிக்க பாலை கறந்து
நிரிந்த்ரியா-இனி மேல் கன்றுகளை பெற முடியாத நிலையில் தானம் பண்ணி
ஆநந்தா நாம தே லோகாஸ்தாந் ஸ கச்சதி-ஆனந்தம் இல்லாத லோகங்களுக்கு போகிறான் –

ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .
த்விதீயஂ தரிதீயஂ த் ఁஹோவாச மரித்யவே த்வா ததாமீதி ৷৷ 1.1.4 ৷৷

ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .–தன்னை யாருக்கு தானமாக கொடுப்பாய் என்று
த்விதீயஂ தரிதீயஂ த்ஹோவாச-இரண்டாவது மூன்றாவது தடவையும் கேட்டான்
மரித்யவே த்வா ததாமீதி -யமனுக்கு கொடுப்பேன் என்றான் –

பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யமஃ .
கி் ఁஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி ৷৷ 1.1.5 ৷৷

பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யம–சிஷ்யர்களுக்குள்ளும் மகன்களுக்கும் பிரமம் மத்யமாகவும் அன்றோ நான் இருக்கிறேன்
-குருவின் ஆஞ்ஜை படி அன்றோ நடந்து உள்ளேன் என்றபடி
கி் ஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி-இப்படி என்னை எமனுக்கு தானம் கொடுத்து என்ன அடைய போகிறார் –
பிள்ளை நேர்மையாக சிந்திக்கிறான்

அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .
ஸஸ்யமிவ மர்த்யஃ பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புநஃ ৷৷ 1.1.6 ৷৷

அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .–முன்பு உள்ள அனைவர்களும் பார்த்தாய் ஆனால்
ஸஸ்யமிவ மர்த்யம் பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புந–தானியங்கள் போலவே நசிந்து மரித்து-மீண்டும் உருவாக்கி
-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து-இப்படி இருக்க -நீர் சொன்ன படி என்னை எமன் இடமே அனுப்பு என்றவாறு –

வைஷ்வாநரஃ ப்ரவிஷத்யதிதிர்ப்ராஹ்மணோ கரிஹாந் .
தஸ்யைதா் ఁஷாந்திஂ குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம் ৷৷ 1.1.7 ৷৷

வைஷ்வாநர-அக்னி பகவான் போலே – ப்ரவிஷத்யதிதிர்ப்ராஹ்மணோ கரிஹாந் -நம் க்ரஹம் வந்த ப்ராஹ்மணன் -நம் விருந்தாளி அன்றோ இவன்
தஸ்யைதா் ஷாந்தி குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம் -இவனுக்கு ஸ்ரீ பாதம் விளக்கி நீர் கொடுக்க வேண்டும் –
அர்க்கியம் கொடுக்காமல் நம் க்ருஹம் நெருப்பு போலே என்று தர்ம பத்னி சொல்ல –

ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் ఁஸூநரிதாஂ ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ఁஷ்ச ஸர்வாந் .
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே ৷৷ 1.1.8 ৷

ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் -ஆசையும் எதிர்பார்ப்பும் பலமும்
ஸூநரிதா ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ஷ்ச ஸர்வாந் .–நல்ல உபதேசமும் -புத்ர பசு போன்ற சகல இஷ்டங்களையும் தருவதாயும் உள்ள அனைத்தையும்
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ -அல்ப புத்தி உடையவர்கள் இழக்கிறார்கள்
யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே -தங்கள் க்ரஹத்தில் வந்த ப்ராஹ்மணருக்கு உணவு கொடுக்காமல் அன்றோ இவற்றை இழக்கிறார்கள் –
யமன் ரிஷி சாபத்தால் விதுரராக பிறந்த விருத்தாந்தம் உண்டே

திஸ்ரோ ராத்ரீர்யவாத்ஸீர்கரிஹே மேநஷ்நந் ப்ரஹ்மந்நதிதிர்நமஸ்யஃ .
நமஸ்தேஸ்து ப்ரஹ்மந் ஸ்வஸ்தி மேஸ்து தஸ்மாத்ப்ரதி த்ரீந்வராந்வரிணீஷ்வ ৷৷ 1.1.9 ৷৷

ஓ ப்ராஹ்மணரே என் க்ரஹத்தில் விருந்தாளியாக வந்தும் மூன்று நாட்கள் உண்ணாமல் இருக்கும் படி வைத்தேனே
உனக்கு நலம் உண்டாகட்டும் -உனக்கு வேண்டிய மூன்று வரங்களை கேள் இதற்கு பிராயச்சித்தமாக -என்றவாறு –

ஷாந்தஸங்கல்பஃ ஸுமநா யதா ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .
த்வத்ப்ரஸரிஷ்டஂ மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதமஂ வரஂ வரிணே ৷৷ 1.1.10 ৷৷

ஷாந்தஸங்கல்பம் ஸுமநா யதா -ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .–முதலில் என்னுடைய தகப்பனார் கௌதமர் மனஸ்
என்னைப் பற்றிய கவலை அற்று சாந்தமாக என்னை
த்வத்ப்ரஸரிஷ்ட மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதம வர வரிணே-யமன் இடம் வந்தவன் என்று உபேக்ஷிக்காமல்
முன்பு இருந்த பிரியமான மகனாக ஏற்றுக் கொண்டு அவர் திருப்தி அடையும் படி பண்ண வேண்டும் –

யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத ஔத்தாலகிராருணிர்மத்ப்ரஸரிஷ்டஃ .
ஸுக் ఁராத்ரீஃ ஷயிதா வீதமந்யுஸ்த்வாஂ ததரிஷிவாந் மரித்யுமுகாத் ப்ரமுக்தம் ৷৷ 1.1.11 ৷৷

யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத -ஔத்தாலகிராருணிர்மத்ப்ரஸரிஷ்டம் -முன்பு போலவே ப்ரீதராக -உன் மேல் பாசம் வைத்து -என் பிரசாதத்தால்
ஸுக் ராத்ரீம் ஷயிதா வீதமந்யுஸ்த்வாஂ ததரிஷிவாந் மரித்யுமுகாத் ப்ரமுக்தம் -நன்றாக இரவில் தூங்குவார் -ஷாந்தமான மனஸுடன்
சந்தோஷமாக இருப்பார் -கோபம் இல்லாமல் யமன் இடம் திரும்பி வந்தான் என்று உன் மேல் அதிக பிரியமாக இருப்பார் –

ஸ்வர்கே லோகே ந பயஂ கிஂசநாஸ்தி ந தத்ர த்வஂ ந ஜரயா பிபேதி .
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே ৷৷ 1.1.12 ৷৷

ஸ்வர்கே லோகே ந பய கிசநாஸ்தி ந தத்ர த்வ ந ஜரயா பிபேதி .–ஸ்வர்க்க லோகத்தில் நோய்கள் போன்ற
பயம் இல்லை -மூப்பு இல்லை -எம பயமும் இல்லை
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே -பசி தாகம் இல்லாததால்
-துக்கங்கள் இல்லாததால் -ஸ்வர்க்க இன்பம் அனுபவிக்கிறார்கள் –
இங்கு ஸ்வர்க்க லோகம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தையே -பயமே இல்லாமல் -உன் ஆதிக்யம் இல்லாமல் –
ஷீனே புண்ய தலை குப்புற தள்ளும் பயம் இந்திர லோகத்தில் இருக்குமே -கர்மங்கள் தொலைந்தால் தானே பயம் இல்லாமல் இருக்கும்
அபஹத பாப்மா விஜர –இத்யாதி அஷ்ட குணங்கள் நித்ய மண்டலத்தில் தானே –

ஸ த்வமக்நி் ఁஸ்வர்க்யமத்யேஷி மரித்யோ ப்ரப்ரூஹி த் ఁஷ்ரத்ததாநாய மஹ்யம் .
ஸ்வர்கலோகா அமரிதத்வஂ பஜந்த ஏதத் த்விதீயேந வரிணே வரேண ৷৷ 1.1.13 ৷৷

-ஸ்ரத்தை உடன் நான் ஸ்ருதிகளில் விசுவாசம் கொண்டவன் -அக்னி உபாசனத்தால் சுவர்க்கம் பெற்று இந்த
இன்பம் அடைந்து அமரத்துவம் பெற –அக்னி உபாசனம் -இரண்டாவது வரம் / பர ப்ரஹ்மம் ஞானம் சாஷாத்காரம் மூன்றாவது வரம்
கச்ச லோகம் -பெருமாள் ஜடாயுவுக்கு -சத்யத்தால் அணைத்து உலகும் வென்றவர் –
ஆஹிதாகினி-அக்னி மஹாத்ம்யத்தால்-செல்லும் இடம் -அங்கே போம் -‘இந்த அக்னி உபாசனம் இரண்டாவது வரத்தில் அறிய கேட்க்கிறான்

ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத ஸ்வர்க்யமக்நிஂ நசிகேதஃ ப்ரஜாநந் .
அநந்தலோகாப்திமதோ ப்ரதிஷ்டாஂ வித்தி த்வமேதஂ நிஹிதஂ குஹாயாம் ৷৷ 1.1.14 ৷৷

ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத ஸ்வர்க்யமக்நி நசிகேதஸ் ப்ரஜாநந் -அந்த அக்னி உபாசனம் பற்றி நான் சொல்வதை கவனமாக கேள்
அநந்தலோகாப்திமதோ ப்ரதிஷ்டா வித்தி த்வமேதஂ நிஹித குஹாயாம் -இதன் மூலம் பரமபதம் பெறலாம் -இதுவே பர ப்ரஹ்மம்
-ஞானிகள் ஹிருதய புண்டரீகாக்ஷத்தில் வாசம் செய்பவன் -நித்ய வாசம் செய்யும் இடம் –

லோகாதிமக்நிஂ தமுவாச தஸ்மை யா இஷ்டகா யாவதீர்வா யதா வா .
ஸ சாபி தத் ப்ரத்யவதத் யதோக்தமதாஸ்ய மரித்யுஃ புநரேவாஹ துஷ்டஃ ৷৷ 1.1.15 ৷৷

லோகாதிமக்நிஂ தமுவாச தஸ்மை யா இஷ்டகா யாவதீர்வா யதா வா .–அக்னி குண்டத்துக்கு வேண்டிய செங்கல்கள் எத்தனை எப்படி வைக்கவேண்டும் –
அக்னி எப்படி வைக்க வேண்டும்
ஸ சாபி தத் ப்ரத்யவதத் யதோக்தமதாஸ்ய மரித்யு புநரேவாஹ துஷ்ட–போன்றவற்றை உபதேசிக்க நசிகேதஸ் நன்றாக கேட்டு
ஓன்று விடாமல் மீண்டும் சொல்ல திருப்தி அடைந்த யமன் அதிகமாக ஒரு வரம் தருவதாக சொன்னான் –

தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா வரஂ தவேஹாத்ய ததாமி பூயஃ .
தவைவ நாம்நா பவிதாயமக்நிஃ ஸரிங்காஂ சேமாமநேகரூபாஂ கரிஹாண ৷৷ 1.1.16 ৷৷

தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா வர தவேஹாத்ய ததாமி பூய–சிஷ்யன் மேலே அதிக பிரியம் உடையவனாய் இனி மேல்
இந்த உபாசனம் நசிகேத வித்யை என்றே இனிமேல் வழங்கப் படட்டும்
தவைவ நாம்நா பவிதாயமக்நி ஸரிங்கா சேமாமநேகரூபா கரிஹாண–ஸ்ருங்கம் நெக்ல்ஸ் ஒன்றையும் அவனுக்கு அணிவித்தான்
/அன்றிக்கே-ஸ்ருங்கம்- கர்மா யோக விளக்கம் என்றுமாம் –

த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திஂ த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .
ப்ரஹ்மஜஜ்ஞஂ தேவமீட்யஂ விதித்வா நிசாய்யேமா் ఁஷாந்திமத்யந்தமேதி ৷৷ 1.1.17 ৷৷

த்ரிணாசிகேதஸ் -இந்த நசிகேத உபாசனம் பற்றி அறிந்து -உணர்ந்து உபாசிப்பவர்கள் –
த்ரிபிரேத்ய ஸந்திம் -தாய் தந்தை ஆச்சார்யர் மூவர் / வேதம் ஸ்ம்ருதி ஆச்சார்யர் என்றுமாம் /இவற்றால் வந்த ஞானங்களைக் கொண்டு
த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .-த்ரிவித தியாகங்கள் உடன் செய்து ஜென்ம சூழலில் இன்றும் நீங்கி -மேலும்
ப்ரஹ்மஜஜ்ஞம்- தேவமீட்ய விதித்வா நிசாய்யேமா் ஷாந்திமத்யந்தமேதி -ப்ரஹ்மத்தை அடைந்து அந்தமில் பேரின்பம் பெற்று
நித்யர்கள் உடன் ஒரு கோவையாக ப்ரீதி காரித கைங்கர்யம் செய்து உகக்கிறான் –
யாகம் அத்யயனம் த்யானம் மூன்று கர்மாக்களை செய்து அக்னி உபாசனம் -ஜென்மம் தாண்டுகிறார்கள்
கர்மபாகத்துக்கே மேல் ஞான பாகமும் இருக்க வேண்டும் -ப்ரஹ்மஜஜ்ஞம்—ப்ரஹ்மம் -பிறந்த ஜீவன் -ஞானியான ஜீவன் -அறிந்து கொள்ள வேண்டும்
ஸ்வாமி சேஷி சேஷ பாவம் அறிய வேண்டுமே

த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத் விதித்வா ய ஏவஂ வித்வா் ఁஷ்சிநுதே நாசிகேதம் .
ஸ மரித்யுபாஷாந் புரதஃ ப்ரணோத்ய ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே ৷৷ 1.1.18 ৷৷

இந்த வித்யை நன்கு அறிந்து உபாசனம் செய்பவன் இங்கே இருக்கும் பொழுது பேரின்பம் பெற்று –
விஷயாந்தர பிராவண்யம் இல்லாமல் இருந்து அங்கு சென்று ப்ரஹ்ம பரி பூர்ண அனுபவம் பெறுகிறான் –
மரித்யுபாஷாந்-ராக த்வேஷம் விருப்பு வெறுப்பு -கர்மங்கள் தீண்டாது

ஏஷ தேக்நிர்நசிகேத ஸ்வர்க்யோ யமவரிணீதா த்விதீயேந வரேண .
ஏதமக்நிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜநாஸஸ்தரிதீயம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ ৷৷ 1.1.19 ৷৷

நிச்சிகேதனுக்கு-அக்னி உபாசனை வித்யை -அளித்து -அது உன் பேராலே உலகில் வழங்கப்படும் —
என்றும் சொல்லி மூன்றாவது வரம் கேள் -என்கிறது –

யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷ 1.1.20 ৷৷

யேயம் ப்ரேதே-மரணம் அடைந்தவர் பற்றி
விசிகித்ஸா -அறிய ஆசை
மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .-சிலர் அஸ்தி நாஸ்தி என்கிறார்கள் –
மேலே பிறவி பற்றியா -இல்லை -ஆத்மாவுக்கு பிறவி உண்டு அறிந்தவன் -பசு மாடு தானம் பற்றி கவலை பட்டவன் தானே –
புண்ய பாப லோகங்கள் உண்டு என்று அறிந்தவன் –
முமுஷு -ஆசைப்பட்டு எங்கே போகிறார் –திரும்பி பிறக்காமல் போக என்ன வழி
சாஸ்திரம் மறைத்து சொல்லும் அர்த்தம் பற்றி கேட்க்கிறான்
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷
சிறந்த வரம் -கேள்வி சங்கை போக்க -இது –கொடுமை ஆபத்து சந்தேகம் -ப்ரஹ்ம ஞானம் இல்லாமை தானே
பதில் சொல்லாமல் பரீஷை -இவனது உறுதியை சோதிக்க மேலே -நான்கு மந்திரங்களில் இந்த பரீஷை

தேவைரத்ராபி விசிகித்ஸிதம் புரா ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம-
அந்யம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸரிஜைநம் ৷৷ 1.1.21 ৷৷

தேவைரத்ராபி விசிகித்ஸிதம் -தேவதைகளுக்கும் இந்த சங்கை உண்டே
புரா ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம–மண்டபத்தில் யானை எங்கே -குண்டூசி எங்கே போலே அதி ஸூஷ்மம் இது
ஆத்மா அணு ஸ்வரூபம் –
அந்யம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸரிஜைநம்
கடன் கொடுத்தவன் -போலே தொந்தரவு -இத்தை கேட்க்காமல் வேறே கேள் -கண்ணுக்கு தெரியும் விஷயம் பற்றி –

தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில த்வம் ச மரித்யோ யந்ந ஸுவிஜ்ஞேயமாத்த .
வக்தா சாஸ்ய த்வாதரிகந்யோ ந லப்யோ நாந்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஷ்சித் ৷৷ 1.1.22 ৷৷

நீர் சொன்னன காரணங்களால் தானே இத்தையே உம்மிடம் கேட்க்கிறேன்

ஷதாயுஷ புத்ரபௌத்ராந் வரிணீஷ்வ பஹூந் பஷூந் ஹஸ்திஹிரண்யமஷ்வாந் –
பூமேர்மஹதாயதநம் வரிணீஷ்வ ஸ்வயம் ச ஜீவ ஷரதோ யாவதிச்சஸி ৷৷ 1.1.23 ৷৷

பசு -தங்கம் -குதிரை யானை -என்ன வேண்டுமானாலும் கேள்

ஏதத்துல்யம் யதி மந்யஸே வரம் வரிணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம் ச –
மஹாபூமௌ நசிகேதஸ்த்வமேதி காமாநாம் த்வா காமபாஜம் கரோமி ৷৷ 1.1.24 ৷৷

சமமான எந்த பணமோ சுகமோ ஆசையோ கேள்

யே யே காமா துர்லபா மர்த்யலோகே ஸர்வாந் காமா் ஷ்சந்தத ப்ரார்தயஸ்வ –
இமா ராமா ஸரதா ஸதூர்யா ந ஹீதரிஷா லம்பநீயா மநுஷ்யை .
ஆபிர்மத்ப்ரத்தாபி பரிசாரயஸ்வ நசிகேதோ மரணம் மாநுப்ராக்ஷீ ৷৷ 1.1.25 ৷৷

துர்லபம் -இத்தை விட்டு வேறே கேள் –

ஷ்வோபாவா மர்த்யஸ்ய யதந்தகைதத் ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ-
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ தவைவ வாஹாஸ்தவ நரித்யகீதே ৷৷ 1.1.26 ৷৷

அப்சரஸ் குதிரை -அல்பம் அஸ்திரம் இவை -கொடுத்து ஏமாற்ற பார்க்காதீர்
அஸ்வத்த -நாளையே இல்லை -குதிரை ஓடுவது நாளைக்கு இல்லை என்று ஓடும் –

ந வித்தேந தர்பணீயோ மநுஷ்யோ லப்ஸ்யாமஹே வித்தமத்ராக்ஷ்ம சேத்த்வா –
ஜீவிஷ்யாமோ யாவதீஷிஷ்யஸி த்வம் வரஸ்து மே வரணீய ஸ ஏவ ৷৷ 1.1.27 ৷৷

இதனால் திருப்தி வராதே -நான் கேட்டதை கொடுத்தால் அனைத்தையும் பெற்றதாகும்
ஆத்மஞானம் வேணும்

அஜீர்யதாமமரிதாநாமுபேத்ய ஜீர்யந் மர்த்யஃ க்வத ஸ்த ப்ரஜாநந் –
அபித்யாயந் வர்ணரதிப்ரமோதாநதிதீர்கே ஜீவிதே கோ ரமேத ৷৷ 1.1.28 ৷৷

அமிருதம் -அஜீர்யம் -கேள்வி பட்டுள்ளேன் -துக்கம் சுகம் கலந்த பூமியில் இருக்கும் ஞானம் முதலில் அறிந்து -மாறி மாறி பிறக்கிறோம்

யஸ்மிந்நிதம் விசிகித்ஸந்தி மரித்யோ யத் ஸாம் பராயே மஹதி ப்ரூஹி நஸ்தத் –
யோயம் வரோ கூடமநுப்ரவிஷ்டோ நாந்யம் தஸ்மாந்நசிகேதா வரிணீதே ৷৷ 1.1.29 ৷৷

சம்சாரங்களில் அழுந்தும் வரங்களை நான் கேட்க மாட்டேன் -உயர்ந்த ஒன்றிலே ஆசைப் படுவேன்
ஸாம் பராயே-நன்றாக மரணத்துக்கு பின் அடையும் இடம் பரமபதம் –

৷৷ இதி ப்ரதமேத்யாயே ப்ரதமா வல்லீ ৷৷

———————————————–

அந்யச்ச்ரேயோந்யதுதைவ ப்ரேயஸ்தே உபே நாநார்தே புருஷ் ஸிநீத–
தயோ ஷ்ரேய ஆததாநஸ்ய ஸாதுர்பவதி ஹீயதேர்தாத்ய உ ப்ரேயோ வரிணீதே ৷৷ 1.2.1 ৷৷

பரீஷை பண்ணி -இவன் உறுதி அறிந்து பின் உபதேசம்-
-இரண்டு மார்க்கம் –
ஸ்ரேயஸ் -சாஸ்திரம் -சொல்லும் அளவில்லா பேரின்பம் -நமக்கு நினைக்கவும் அரியதாகுமே
பிரேயஸ் -ஆனந்தம் -தங்கள் நினைத்த அளவு –
ப்ரஹ்மானந்தம் அறிய உபநிஷத் -மனுஷ்ய ஆனந்தம் பித்ரு தேவர் கர்ம தேவர் இந்திரன் பிரஜாபதி சதுர்முக ப்ரம்மா -மேலே மேலே நூறு
உயர்வற உயர்நலம் -யாதோ வாசோ நிவர்த்தந்தே –
நீ ஸ்ரேயஸ் கோஷ்டியில் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி

ஷ்ரேயஷ்ச ப்ரேயஷ்ச மநுஷ்யமேதஸ்தௌ ஸம் பரீத்ய விவிநக்தி தீர- .
ஷ்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வரிணீதே ப்ரேயோ மந்தோ யோகக்ஷேமாத்வரிணீதே ৷৷ 1.2.2 ৷৷

மந்த புத்திமான் பிரேயஸ் தேடி கஷ்டமான வழி -அல்ப இன்பம் / ஸ்ரேயஸ் தேடினால் அனுபவம் பேர் ஆனந்தம் – சுலபமான வழியுமாகும்

ஸ த்வம் ப்ரியாந் ப்ரியரூபா் ஷ்ச காமாநபித்யாயந் நசிகேதோத்யஸ்ராக்ஷீ–
நைதா் ஸரிங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி பஹவோ மநுஷ்யா ৷৷ 1.2.3 ৷৷

சம்சார கடலில் உழலாமல் நீ மேலே வரப் பார்க்கிறாய் -இயற்க்கை -இக்கரை அக்கரை-

தூரமேதே விபரீதே விஷூசீ அவித்யா யா ச வித்யேதி ஜ்ஞாதா .
வித்யாபீப்ஸிநம் நசிகேதஸம் மந்யே ந த்வா காமா பஹவோலோலுபந்த ৷৷ 1.2.4 ৷৷

எத்தனை ஆசை காட்டினாலும் சபல புத்தி இல்லாமல்- இருந்தாய் -லோலுபன் இல்லாமல் –

அவித்யாயாமந்தரே வர்தமாநா ஸ்வயம் தீரா பண்டிதம் மந்யமாநா–.
தந்த்ரம்யமாணா பரியந்தி மூடா அந்தேநைவ நீயமாநா யதாந்தாஃ ৷৷ 1.2.5 ৷৷

உலக இன்பம் -கண் தெரியாதவன் கண் இழந்தவனுக்கு உதவுவது போலே -அவித்யைக்கு நடுவிலே வாழ்ந்து

ந ஸாம் பராய ப்ரதிபாதி பாலம் ப்ரமாத்யந்தம் வித்தமோஹேந மூடஂ —
அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புந புநவர்ஷமாபத்யதே மே ৷৷ 1.2.6 ৷৷

திரும்ப திரும்ப என்னிடம் நரகம் -வருகிறவர்கள் இவ்வாறு லோலோபனாக -திரிகிறவர்கள்

ஷ்ரவணாயாபி பஹுபிர்யோ ந லப்ய ஷ்ரரிண்வந்தோபி பஹவோ யம் ந வித்யு–
ஆஷ்சர்யோ வக்தா குஷலோஸ்ய லப்தாஷ்சர்யோ ஜ்ஞாதா குஷலாநுஷிஷ்ட ৷৷ 1.2.7 ৷৷

ஆயிரத்தில் ஒருவன் நம்பிக்கை வைக்கிறான்- அதில் -ஆயிரத்தில் ஒருவன் ஆராய்கிறான் –
அதில் -ஆயிரத்தில் ஒருவன் முயல்கிறான் -அதில் -ஆயிரத்தில் ஒருவன் நெருங்கி அடைகிறான் –

ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ ஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமாந-
அநந்யப்ரோக்தே கதிரத்ர நாஸ்த்யணீயாந் ஹ்யதர்க்யமணு ப்ரமாணாத் ৷৷ 1.2.8 ৷৷

இதில் ஆசை உள்ளவர்கள் ஆத்ம பரமாத்மா உபதேசம் செய்தால் பலன் இல்லை-சொல்லுவதும் பிரேயஸ் அடைய தான் சொல்லுவான் –
சொல்ல நிறைய பேர் வருவார்கள் –
ஸ்ரேயசில் விருப்பம் உள்ளவன் பிரேயஸ் பிடிக்காது சொல்ல மாட்டான் -அத்யயனம் கால ஷேபம் உடுக்கை ஆசாரம் வேண்டுமே –
உள் அடையாளம் வெளி அடையாளம் இரண்டும் வேண்டுமே
ஆத்ம குணங்கள் சமதமாதி வேண்டுமே –

நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந்யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட –
யா த்வமாப ஸத்யதரிதிர்பதாஸி த்வாதரிங்நோ பூயாந்நசிகேத ப்ரஷ்டா ৷৷ 1.2.9 ৷৷

உன்னைப் போலே சிஷ்யனை ஆசையுடன் தேடிக் கொண்டு இருந்தேன் -எனது பாக்யம் –
சாஸ்திரம் தர்க்கம் படித்தாலும் இந்த உறுதி சின்ன வயசில் உனக்கு இருக்கிறதே –
ஞானம் பிரார்த்தித்தாய் -ஆத்மஞானம் பரமாத்மா ஞானம் இரண்டையும் உனக்குச் சொல்லுகிறேன்

ஜாநாம்யஹ் ஷேவதிரித்யநித்யம் ந ஹ்யத்ருவை ப்ராப்யதே ஹி த்ருவம் தத் –
ததோ மயா நசிகேதஷ்சிதோக்நிரநித்யைர்த்ரவ்யை ப்ராப்தவாநஸ்மி நித்யம் ৷৷ 1.2.10 ৷৷

அநித்யமான த்ரவ்யத்தால் அநித்ய பலமே கிட்டும்
நித்தியமான உபாசனத்தால் நித்தியமான ப்ரஹ்மம் அடைகிறோம்

காமஸ்யாப்திம் ஜகத ப்ரதிஷ்டாம் க்ரதோராநந்த்யமபயஸ்ய பாரம் –
ஸ்தோமம் மஹதுருகாயம் ப்ரதிஷ்டாம் தரிஷ்ட்வா தரித்யா தீரோ நசிகேதோத்யஸ்ராக்ஷீஃ ৷৷ 1.2.11 ৷৷

குதிரை இத்யாதி இந்திர சத்ய லோகங்கள் வேண்டாம் என்றாயே -இவையும் அநித்தியம் என்று உணர்ந்தாயே –
அநந்தம் ஸ்திரம் இரண்டும் -ப்ரஹ்மத்துக்கு /அல்பம் அஸ்தரம் இவற்றுக்கு /
ஸ்தோத்ர ரத்னம் -ப்ரஹ்மா பதவி வேண்டாம் தவ தாஸ்ய ரசம் அறிந்த குடில் மண் புழுவாக பிறந்தாலும் அதுவே வேண்டும்

தம் துர்தர்ஷம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் –
அத்யாத்மயோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷஷோகௌ ஜஹாதி ৷৷ 1.2.12 ৷৷

ப்ரத்யக் –தனக்கு தானே -பராக் வெளி விஷயம் –ஆத்மாவை நோக்கி மனஸ் புத்தி செலுத்தி
ஹர்ஷம் சோகம் புண்யம் பாபம் இரண்டையும் தொலைத்து -பகவத் பிராப்திக்கு
முதல் நிலை பாபம் தவிர்த்து புண்யம் -மேலே இதுவும் மோக்ஷத்துக்கு பிரதிபந்தகம் உணர்ந்து
பல தியாகம் செய்ய வேண்டும் -சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்மி-
அதி ஸூஷ்மம் -கரந்த பாலுள் நெய்யே போலே -அறிய முடியாதே
குஹாஹிதம் கஹ்வரேஷ்டம்-ஹிருதய புண்டரீகம் – யோக சித்தியால் பிரிந்து அறிகிறான்

ஏதச்ச்ருத்வா ஸஂபரிகரிஹ்ய மர்த்ய ப்ரவரிஹ்ய தர்ம்யமணுமேதமாப்ய –
ஸ மோததே மோதநீய் ஹி லப்த்வா விவரித் ஸத்ம நசிகேதஸம் மந்யே ৷৷ 1.2.13 ৷৷

தேகம் ஆத்ம விவேகம் –கட்டை கல் பாஷாணம் முக்தி சொல்வார் உண்டே -ஒன்றுமே தெரியாத நிலை –
அணு மாத்திரம் ஆத்மா ப்ரஹ்மத்தை அடைந்து -அடைந்து ஆனந்திக்கிறான் -ஆனந்தமயன் தானே கர்மத்தால் சிக்கி இழந்து இருந்தான்
ஆனந்தம் ப்ரஹமே திவ்ய ஞானாத்
சுகம் துக்கம் அசேதனத்துக்கு இல்லையே -சரீரமாக இருந்தாலும் அறிய முடியாதே ஜடமும் அஜடமும் / முடியாதே ஜடமும் அஜடமும் /

அந்யத்ர தர்மாதந்யத்ராதர்மாதந்யத்ராஸ்மாத் கரிதாகரிதாத் –
அந்யத்ர பூதாச்ச பவ்யாச்ச யத் தத்பஷ்யஸி தத் வத ৷৷ 1.2.14 –

தர்மம் அதர்மம் -முக்காலத்தையும் வேறு பட்ட சநாதனமான மார்க்கம் -லோக தர்ம மார்க்கம் இல்லை
பகவத் அருளாலே முக்தி -அவர் ஆசைப்பட்டப் படி தான தர்மம் -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்கள்
உலக சாமான்ய தர்மம் இல்லை -என்றதும் அதர்மமா கேள்வி வருமே அதுவும் இல்லை

ஸர்வே வேதா யத் பதமாமநந்தி தபா் ஸி ஸர்வாணி ச யத் வதந்தி —
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத் தே பத் ஸம் க்ரஹேண ப்ரவீம்யோமித்யேதத் ৷৷ 1.2.15 ৷৷

ஸர்வே வேதா யத் பதமாமநந்தி -முக்தி பதம் அணைத்து வேதமும் சொல்லும்
தபா் ஸி ஸர்வாணி ச யத் வதந்தி –தபசாதிகள் எங்கே கொண்டு சேர்க்குமோ
யதிச்சந்தோ -ஆசை யுடன்
ப்ரஹ்மசர்யம் சரந்தி -ப்ரஹ்மசர்ய விரதம் இருக்கிறார்களோ
தத் தே பதம் -அந்த பதத்தை இடத்தை -அடையும் பதம் -அடைவிக்கும் பதம் ৷
ஸம் க்ரஹேண ப்ரவீம்யோ சுருக்கமாக சொல்கிறேன் -ஓம் -பதம் கொண்டு -இந்த அக்ஷரா பதம் மூலம் அந்த மோக்ஷம் பெறலாம் –

ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம்-
ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத் ৷৷ 1.2.16 ৷৷

பிரகர்ஷம் நிறைய ஸ்தூதயே ஸ்தோத்ரம் பண்ணப் படுகிறான் அதுவே பிரணவம்
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் -இத்யாதி
இதுவே அக்ஷரம் இதுவே ப்ரஹ்மம் -இதுவே ஸ்ரேஷ்டம் -காட்டிக் கொடுக்கும் -உபாயம் -சிறந்த ஜெபிக்கும் திரு மந்த்ரம்
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே பலன் பெறலாம் -விரும்பிய அனைத்தையும் கொடுக்கும்

ஏததாலம்பந் ஷ்ரேஷ்டமேததாலம்பநம் பரம் –
ஏததாலம்பநம் ஜ்ஞாத்வா ப்ரஹ்மலோகே மஹீயதே ৷৷ 1.2.17

பற்றுக் கொம்பு -ஆலம்பனம் -உபாசானம் த்யானம் தாண்டி ஸ்ரேஷ்டம்-

ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் —
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே ৷৷ 1.2.18 ৷৷

ஸ்ரீ கீதையில் இத்தையே அருளுகிறார்
ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்–ஆத்மா பிறக்கவும் இறப்பதும் இல்லை -யமனை பார்த்து மிருத்யு பயம் எதனால்
உடம்பு எடுத்துக் கொண்டால் ஜனனம் விட்டால் மரணம் /கதா சித் கீதை- இங்கு விபச்சித்
நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் –யார் இடம் உத்பத்தி இல்லை யாரையும் உத்பத்தி பண்ணாதே -மண் குடம் போலே இல்லை
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ -பிறப்பிலி நித்யம் -சாஸ்வதம் -ஏக ரூபம் –அநாதி
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே -கொல்ல முடியாதே -நித்யம் அழியும் சரீரத்துக்குள் இருந்தாலும் –
சுக துக்கம் அனுபவிக்கிறான் ஸூஷ்மம் தானே -பண்டிதர் இத்தை பற்றி கவலை படாதவர்-நித்யம் புரிந்து கோள் -கீதை -2-12-ஆரம்பம்

ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ்சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷ 1.2.19 ৷৷

இதுவும் கீதா ஸ்லோகம்
ஹந்தா சேந்மந்யதே ஹந்து்ம் -கொல்ல போக சங்கல்பம் கொண்டால் முட்டாள்
ஹதஷ்சேந்மந்யதே ஹதம் -கொல்ல படுவேன் என்று நினைத்தாலும் முட்டாள்
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே -ஆத்மா அழியாதே -எனக்கு நாசம் இல்லை –
என் சரீரத்துக்கு தலை வலி வயிற்று வலி அழிவு இதுக்கு நினைவு வேண்டுமே

அணோரணீயாந் மஹதோ மஹீயாநாத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ குஹாயாம் –
தமக்ரது பஷ்யதி வீதஷோகோ தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந ৷৷ 1.2.20 ৷৷

மேலே பிரத்யாகாத்மாவில் இருந்து பரமாத்மஞானம் உபதேசம் –நான் ஸ்வ தந்த்ரன் இல்லை —
இரண்டையும் நியமனம் பண்ணும் பரமாத்மா உண்டே -என்று உணர வேண்டும் –
அணோரணீயாந் -ஆத்மாவுக்குள்ளும் இருக்கிறான் -நெல் மணி விட -கடுகை விட சிறியது –
மஹதோ மஹீயான் –மிக பெரியவன் –
ஆத்மாஸ்ய ஜந்தோர்-நிஹிதோ குஹாயாம் –ஹிருதய புண்டரீகத்துக்குள் -அந்தர் பாகிஸ்தா தத் சர்வம்
தமக்ரது பஷ்யதி -காம்ய கர்மங்களில் விருப்பம் இல்லாதவனே இவனை அறிய முடியும் -தியாகம் பண்ணினவனே அமிர்தம் பெறுகிறான்
வைராக்யம் வேண்டுமே
வீதஷோகோ -ராகம் சோகம் இல்லாமல் -ப்ரஹ்ம ஞானம் ஒன்றே அடைவிக்கும்
தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந -அவன் பிரசாதம் அடியாகவே இவை இந்த ப்ரஹ்ம ஞானம் -பெறலாம்
மனம் உணர்வு பொறி உணர்வு அப்பால் –
சத்வ குணம் உள்ள மனசாலே அவன் அனுக்ரஹம் அருள வரும் பொழுது விலக்காமல் இத்தை பெற முடியும்

ஆஸீநோ தூரம் வ்ரஜதி ஷயாநோ யாதி ஸர்வத-
கஸ்தம் மதாமதம் தேவம் மதந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ৷৷ 1.2.21 ৷৷

ஆஸீநோ தூரம் வ்ரஜதி -அமர்ந்தது ஸ்ரீ வைகுண்டம் -நடந்தது ராமனாக –
ஷயாநோ யாதி ஸர்வத-உறங்குவான் -யோகு செய்து -அனைத்தையும் நிர்வகிக்கிறான்
கஸ்தம் மதாமதம் தேவம் மதந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ৷৷
என்னை தவிர யார் அறிவார் -அவன் அனுக்ரஹத்தால் அன்றோ பெற்றேன் என்ற சாத்விக அஹங்காரம்

அஷரீர் ஷரீரேஷ்வநவஸ்தேஷ்வவஸ்திம் –
மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 1.2.22 ৷৷

அஷரீர் -சரீரம் அற்றவன்
ஷரீரேஷ்வநவஸ்தேஷ்வவஸ்திம் -அநித்தியமான சரீரத்துக்குள் நித்தியமான அவன் உள்ளான்
மஹாந்தம் –
விபும் -எங்கும் நிறைந்து / அணு–அளவில் சிறியது ஸ்தூலம் -கண்ணுக்கு புலப்படும் —
ஸூஷ்மம்–கண்ணுக்கு தெரியாமல் ஆனால் விபு -நான்கையும் அறிய வேண்டும் –
நீக்கமற -கரந்து எங்கும் பரந்துளன்
துணி -நனைத்து -புளிந்து-நீர் ஸூ ஷ்மம் ஆனால் துண்டு முழுவதும் விபு அதே போலே –
ஆத்மாநம் மத்வா –உயர்ந்த தத்வம் கேட்டாலே பயம் சோகம் போகுமே
தீரோ ந ஷோசதி- அறிந்த தீரன் -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் துக்கம் இல்லாமல் இருப்பான்

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந —
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் ৷৷ 1.2.23 ৷৷

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ –வேத அத்யயனம் பண்ணியோ அடைய முடியாது
ந மேதயா -புத்திசாலியாக இருந்தாலோ அடைய முடியாது
ந பஹுநா ஷ்ருதேந –நிறைய கேட்டாலும் அடைய முடியாதே
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ–தேர்ந்து எடுத்து யாரோ ஒருவருக்கு தன்னைக் காட்டுகிறான்
தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் -அவன் அருளுக்காக காத்து இருக்க வேண்டும்
சரணாகதி -ஆச்சார்யர் திருவடி ஒதுங்கி –பாகவத சமாஹம் வழிகள்/
தேவிமாராவார் — -ஆவியே அமுதே அலை கடல் கடைந்த -அப்பனே -காணுமாறு அருளாய்-
பிராப்யம்- பிராப்பகம்
காணுமாறு -புருஷார்த்தம் / அருளாய் -உபாயம்
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -ஏக சிந்தனையாய் -காணுவது புருஷார்த்தம் -அதுக்கு வழியும் நீயே கண்ணே
கோல மேனி காண -ப்ராப்யம் –வாராய் -உபாயம்

நாவிரதோ துஷ்சரிதாந்நாஷாந்தோ நாஸமாஹித–
நாஷாந்தமாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் ৷৷ 1.2.24 ৷৷

நித்ய வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள் விடாமல் இருக்க வேண்டும் -அனுக்ரஹத்துக்கு தகுந்த பாத்திரமாக இருக்க வேண்டும் –
நாவிரதோ துஷ்சரிதாந்—தீய நடத்தையில் இருந்து விலகாமல் இருந்தால் கிடைக்காது -அடைந்து அனுபவிக்க ஆசை ருசி இருக்க வேண்டுமே
நா ஷாந்தோ நாஸமாஹித-சாந்தி இல்லாமல் -இந்திரியங்கள் மனஸ் அடக்காமல் இருந்தால் கிடைக்காது
நாஷாந்தமாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் -அருள் இருந்தால் பெறலாம் – சரணாகதியாலே பெறுகிறான்

யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதந–
மரித்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ ৷৷ 1.2.25 ৷৷

யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதந–மிக பெரியவன் -ப்ராஹ்மண வர்க்கம் க்ஷத்ரியர் –
நான்கு வர்ணங்களும் -சோறு உண்ணுவது போலே ப்ரஹ்மம் திரு வயிற்றில் வைத்து
மரித்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ -என்னை வைத்து மற்றவர்களை அழித்து என்னையும் அழித்து-
சாப்பிட பயன்பட்டு தானும் சாப்பிடப்படும் ஊறுகாய் போலே -நானும் -என்று யமன் சொல்லி அருளுகிறார்
நீ கேட்டு நான் சொல்லும் படி வைத்து உள்ளான் பரம காருணிக்கன் -யார் அறியப் போகிறான் -இவன் பெருமையை

৷৷ இதி ப்ரதமேத்யாயே த்விதீயா வல்லீ ৷৷

———————————————————–

றதம் பிபந்தௌ ஸுகரிதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்தே .
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா ৷৷ 1.3.1 ৷৷

றதம் பிபந்தௌ- சத்யம் -இருவரும் கர்ம பலம் -சங்கல்ப பலம் அவனுக்கு கர்ம பலம் ஆத்மா /
குஹாம் ப்ரவிஷ்டௌ ஹிருதயகுஹைக்குள் இருவரும்
சாயாதபௌ- ஓன்று வெய்யில் ஓன்று நிழல்
ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா-ஒன்றை பஞ்சாக்கினி வித்யை மூலம் –
ஒன்றை த்ரிநாசிகேத அக்னி வித்யை மூலம் அடையலாம்
அருகிலே உள்ளான்-இருந்தாலும் அறிய முடியாதே – -இந்திரிய ஜெயம் பற்றி இந்த வல்லி உபதேசம்

ய ஸேதுரீஜாநாநாமக்ஷரம் ப்ரஹ்ம யத்பரம் .
அபயம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேத் ஷகேமஹி ৷৷ 1.3.2 ৷৷

நமக்கு அந்த பாக்யம் சக்தி ஏற்படட்டும் -சேர்த்து இருவருக்கும் பிரார்த்தனை

ஆத்மாந் ரதிநம் வித்தி ஷரீர் ரதமேவ து .
புத்திம் து ஸாரதிம் வித்தி மந ப்ரக்ரஹமேவ ச ৷৷ 1.3.3 ৷৷

தேரில் இருவர்-முதலாளி ஆத்மா – தேரோட்டி -புத்தி ஞானம் உறுதி தேரோட்டி -சரீரம் தேர் -இந்திரியங்கள் குதிரை -மனஸ் கடிவாளம் –
ஒழுங்காக ஓட்ட வேண்டுமே -மனஸ் இந்திரியங்கள் வேண்டும் இல்லாமல் ஆக்க முடியாது –
சரியான இடங்களில் செலுத்த வேண்டும் -பரமாத்மா இடம் சேர வேண்டும் -இவற்றை எல்லாம் விட்டு ஆத்மா அவனையே அனுபவிக்கும்
ஆத்மா புத்தி மனஸ் இந்திரியங்கள் -ஒன்றை அடுத்து நியமிக்கும்

இந்த்ரியாணி ஹயாநாஹுர் விஷயா் ஸ்தேஷு கோசராந் –
ஆத்மே ந்த்ரிய மநோயுக்தம் போக்தேத்யாஹுர்மநீஷிண ৷৷ 1.3.4 ৷৷

போக்த்ரு போக்தா சம்பந்தம் -இந்திரியங்கள் குதிரை -விஷயாந்தரங்கள் சப்தம் இத்யாதி
கண் ரூபம் -காது சப்தம் -தோள் ஸ்பர்சம் நாக்கு ரசம் மூக்கு கந்தம்

யஸ்த்வ விஜ்ஞாநவாந் பவத்யயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாண்ய வஷ்யாநி துஷ்டாஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.5 ৷৷

யார் ஒருவன் விவேக ஞானம் பெற்று -விபரீத ஞானம் இல்லாமல் –
மனசால் இந்திரியங்களை அடக்கி இருக்கிறானோ அவனே அடைகிறான்

யஸ்து அவிஜ்ஞாநவாந் பவதி அயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாணி அவஷ்யாநி ஸதஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.6 ৷৷

தேரோட்டி ஒழுங்காக இருந்தால் தான் சரியாக போகும் இடத்துக்கு போவான்

யஸ்த்வவிஜ்ஞாநவாந் பவத்யமநஸ்க ஸதாஷுசி-
ந ஸ தத் பதமாப்நோதி ஸம் ஸாரம் சாதி கச்சதி ৷৷ 1.3.7 ৷৷

சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான்

யஸ்து விஜ்ஞாநவாந் பவதி ஸ மநஸ்க ஸதா ஷுசி–
ஸ து தத் பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே ৷৷ 1.3.8 ৷৷

சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான் –
பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே பரமபதம் அடைகிறான் -திரும்பி வராமல் ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான்

விஜ்ஞாந ஸாரதிர்யஸ்து மந ப்ரக்ரஹவாந் நர–
ஸோத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ৷৷ 1.3.9 ৷৷

இங்கு தான் தெளிவாக விஷ்ணு லோகம் -பரம பதம் புத்தி நிலை மட்டுமே ஸ்தான விசேஷம் இல்லை என்பர் அறியாதவர்

இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா அர்தேப்யஷ்ச பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்புத்தேராத்மா மஹாந் பர ৷৷ 1.3.10 ৷৷

ஒன்றுக்கு ஓன்று யார் வலிமை -புலன்களை விட சப்தம் இத்யாதி வலிமை -இவற்றை இழுக்கும் –நாக்கை விட ருசிக்கு -சக்தி அதிகம் –
விஷயங்களை விட மனஸ் சக்தி மிக்கது –மனசை விட புத்தி வலிமை கொண்டது –மனம் சிந்திக்க கருவி -புத்தி ஞானம் முடிவு எடுக்கும் –
புத்தியை விட ஆத்மா வல்லமை -புத்தியையும் அடக்கலாம்

மஹத பரமவ்யக்தமவ்யக்தாத் புருஷ பர–
புருஷாந்ந பரம் கிம் சித் ஸா காஷ்டா ஸா பரா கதி ৷৷ 1.3.11 ৷৷

பர ப்ரஹ்மம் வலிமை -பரம புருஷனுக்கு மேலே யாரும் இல்லை -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ

ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோத்மா ந ப்ரகாஷதே .
தரிஷ்யதே த்வக்ர்யயா புத்த்யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்ஷிபி ৷৷ 1.3.12 ৷৷

சுலபமாக அறிய முடியாது -சரீரம் தடை -மறைக்கும் -திரோதானம் -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி -ஏகாக்ர புத்தி வேண்டும்

யச்சேத்வாங்மநஸீ ப்ராஜ்ஞஸ்தத்யச்சேஜ்ஜ்ஞாந ஆத்மநி .
ஜ்ஞாநமாத்மநி மஹதி நியச்சேத்தத்யசேச்சாந்த ஆத்மநி ৷৷ 1.3.13 ৷৷

இந்திரியங்கள் மனசில் -அத்தை புத்தியில் -அத்தை மனசில் -அத்தை ஆத்மாவில் -அத்தை பரமாத்வா இடம் நியமிக்க வேண்டும்

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத .
க்ஷுரஸ்ய தாரா நிஷிதா துரத்யயா துர்கம் பதஸ்தத் கவயோ வதந்தி ৷৷ 1.3.14 ৷৷

அனைவரையும் எழுப்புகிறார் -கத்தி மேல் நடப்பது போலே -விஷய சுகம் தூங்க வேண்டாம் –
ப்ராப்ய வராந் நிபோதத ஆச்சார்யர் மூலம் -அபிமானம் கொண்டே அறியலாம்

அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் நித்யமகந்தவச்ச யத் –
அநாத்யநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே ৷৷ 1.3.15 ৷৷

அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் -அசப்தம் அஸ்பர்சம் -அரூபம் -அவ்யயம் -தத் ரசம் – -சாந்தி
நித்யமகந்தவச்ச யத் – அநாத்யநந்தம் -ஆதி அந்தம் இல்லை
மஹத பரம் த்ருவம் – -மஹத் ப்ரஹ்மம்
நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே -ப்ரஹ்மம் ஞானம் பெற்றவன் சம்சாரம் தாண்டுகிறான்

நாசிகேதமுபாக்யாநம் முத்யுப்ரோக்த் ஸநாதநம் –
உக்த்வா ஷ்ருத்வா ச மேதாவீ ப்ரஹ்மலோகே மஹீயதே ৷৷ 1.3.16 ৷৷

பலன் சொல்லி நிகமிக்கிறார் -மீளா லோகம்

ய இமம் பரமம் குஹ்யம் ஷ்ராவயேத் ப்ரஹ்மஸஂஸதி –
ப்ரயத ஷ்ராத்தகாலே வா ததாநந்த்யாய கல்பதே –
ததாநந்த்யாய கல்பத இதி ৷৷ 1.3.17 ৷৷

ப்ரஹ்ம ஞானிகள் -ரஹஸ்யம் -ஸ்ரார்த்த காலம் பாராயணம் -ப்ரஹ்ம பிராப்தி -அதுவே ஆனந்தம் கொடுக்கும்

৷৷ இதி ப்ரதமேத்யாயே தரிதீயா வல்லீ ৷৷

———————————–

வைதிக த்ருஷ்ட்டி -ப்ரஹ்மம் -ஸாஸ்த்ர யோநித்வாத்-வேதைக சமைதி கம்யன் —
அபசாரத்துக்கு தக்க மறு பிறவி -மானஸ -வாசிக காகித அபசாரம் -வாசி போலே ஜங்கம ஸ்தாவர இத்யாதி –
ஒன்றை பார்த்தால் மூன்றையும் அறிய வேண்டும் -பொருள் ஆத்மா பரமாத்மா வரை பர்யவசிக்க வேண்டுமே –
யோகி நிஷ்டை -வளர வளர -சரீரம் பார்க்காமல் ஆத்மா ப்ரஹ்மம் மட்டும் – அதுக்கும் மேலே ப்ரஹ்மம் மட்டும் –
ஐந்து நிலைகள் -இதுக்கும் மேலே -எல்லா ப்ரஹ்மமும் ஒன்றே என்று அறிவது ஆறாவது நிலை -ஒன்றாகவே இருக்கும் ப்ரஹ்மமே -அனைத்துமாக
பண்டித சம தர்சன–அத்விதீயம் -ப்ரஹ்மம் -ஏகமேவ -சதேவ -பல விஷயங்களை பொருட்டாகவே நினைக்காமல் –
ப்ரஹ்ம தரிசனமே யோகம் -ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -இந்த த்ருஷ்ட்டி வரும் -அம்ருதத்வம் அடைகிறான் –
தேக ஆத்ம விவேகம் / ஆத்ம பரமாத்மா விவேகம் -ஆத்மா பரதந்த்ரன் -மூன்றையும் மேலே மூன்று வல்லிகளும் சொல்லும் –
உன் முயற்சி இல்லை -ஸ்வாமி சொத்தை ஸ்வீ கரிப்பான் -விலக்காமை ஒன்றுமே வேண்டும் -நாய மாத்மா–பார்த்தோம்

பராஞ்சி காநி வ்யதரிணத் ஸ்வயம்பூஸ்தஸ்மாத் பராங்பஷ்யதி நாந்தராத்மந் –
கஷ்சித்தீர ப்ரத்யகாத்மாநமைக்ஷதாவரித்தசக்ஷுரமரிதத்வமிச்சந் ৷৷ 2.1.1 ৷৷

வெளியில் பார்ப்பவர் -உள்ளே பார்ப்பவர் -இரண்டு வகை -இந்திரியங்கள் கானி-/விஷய சுகம்-பராஞ்சி காநி-/
மனசில் லயித்து –ஆத்மாவில் லயம் உள்ளே பார்ப்பது -த்யானம் அறிமுகம் இதில் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -ஸ்வயம்பூ-
பாத பங்கயம் நண்ணிலா வகை எண்ணுகின்றாய் -ஐவரும் குமைக்க -அந்தராத்மாவை பார்க்காமல்
உள்ளே நோக்கி பிரத்யாகாத்மாவை பார்க்க வேண்டுமே -/ யோக காலம் -வளர்த்து கொள்ள வேண்டும் –
ஆத்மா தனக்கு நான் என்று அறிவதால் பிரத்யக் -கண்ணாடி பராக் -தனக்கு தானே தெரியாதே
தீரன் ஆத்ம தேகம் அறிந்தவன் -உள்ளே நோக்கி செலுத்துவார் -அம்ருதம் இச்சிப்பவன் இப்படி உள்ளே பார்க்க வேண்டுமே –

பராச காமாநநுயந்தி பாலா-
ஸ்தே மரித்யோர்யந்தி விததஸ்ய பாஷம் .
அத தீரா அமரிதத்வம் விதித்வா
த்ருவமத்ருவேஷ்விஹ ந ப்ரார்தயந்தே ৷৷ 2.1.2 ৷৷

வாசி அறிந்து -அசேதனம் -தாண்டி -சேதனம் -கண்ணுக்கு நேராக தெரிவது அசேதனம் –
பாலர்கள்-ஸாஸ்த்ர ஞானம் இல்லாமல் -பொருளை மட்டும் பார்த்து -சம்சாரம் -மிருத்யு -உழன்று -நரகத்தை நகு நெஞ்சே –
பாசத்துக்கு வலைப்பட்டு கமலக் கண் பாசத்துக்கு தானே அகப்பட வேண்டும் -கண் வலை படாமல் அக வலை பட வேண்டும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்தாமல்–சாஸ்வதமாக இருக்க இந்த லோகம் விரும்ப மாட்டார்கள்

யேந ரூபம் ரஸம் கந்தம் ஷப்தாந் ஸ்பர்ஷா் ஷ்ச மைதுநாந் .
ஏதேநைவ விஜாநாதி கிமத்ர பரிஷிஷ்யதே ஏதத்வை தத் ৷৷ 2.1.3 ৷৷

ப்ரஹ்மம் அடையாளம் –அனுக்ரஹத்தால் சப்தாதி அறிகிறோம் -ரஸோஹம்-ப்ரஹ்மம் -தண்ணீர் தாக்கம் போக்க
அன்னம் பசி போக்க -சங்கீதம் இனிமை -நெருப்பு சுடும் தன்மை -எல்லா தன்மைகளும் ப்ரஹ்மமே -அறிய வேண்டும் –
நெருக்கமாக நம்மை பிடித்துக் கொண்டு ப்ரஹ்மம் இருப்பதை அறிய வேண்டுமே –
அனைத்தும் அவர் வசம் -காற்றாக வாயு பகவானை நியமித்து -அனைவரையும் திருவடி கீழ் சேர்க்க யோக நித்திரை அவன் கர்தவ்யம்
அனைத்தையும் சங்கல்ப மாத்திரம் -நமக்கு மோக்ஷ ஆசை விளைக்கவே தவம் -எதிர் சூழ் புக்கு -நான்கு யானைகள் –
ஈர வேஷ்ட்டி -த்வம் மே -நாம் அவனுக்கு மேலே சாமர்த்தியமாக ஏதேனும் விரகு பார்த்து விலகுகிறோம் –
பரமாத்மாவை சத்யா ப்ரதிஜ்ஜை பண்ண வைக்கும் சாமர்த்தியம் நமக்கு –

ஸ்வப்நாந்தம் ஜாகரிதாந்தம் சோபௌ யேநாநுபஷ்யதி –
மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 2.1.4 ৷৷

ஸ்வப்னம் பதார்த்தங்களும் பரமாத்மாவே ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாகவே -ஸ்வப்னத்தில் பயப்படுத்தி பாபம் போக்கும் பரம காருணிகன்-
விழித்து இருக்கும்தசையில் கேட்க வேண்டாமே -மஹான் விபு -அனைத்தும் இவனால் அறிய வேண்டுமே

ய இமம் மத்வதம் வேத ஆத்மாநம் ஜீவமந்திகாத் .
ஈஷாநம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத் ৷৷ 2.1.5 ৷৷

ப்ரஹ்மம் கொஞ்சம் அறிந்து -ஆசை கொண்டவன் -தப்பாக செயல்பட்டாலும் வெறுக்காதே –
ரொம்ப நல்லவன் ப்ரஹ்ம ஞானம் இல்லாமல் இருந்தால் கிட்டாதே

ய பூர்வம் தபஸோ ஜாதமத்ப்ய பூர்வமஜாயத .
குஹாம் ப்ரவிஷ்ய திஷ்டந்தம் யோ பூதேபிர்வ்யபஷ்யத ஏதத்வை தத் ৷৷ 2.1.6 ৷৷

அப்பு -தண்ணீர் -முதலில் -பெரிய நீர் படைத்து -நாபி கமலம் -சதுர்முக ப்ரம்மா -நான்முகனை நாராயணன் படைத்தான்
எங்கும் வியாபித்து -உபாதானம் நிமித்த சஹகாரி த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே –
அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் -காரணமே அவன் என்று உணர்ந்து நெருக்கம் கொள்ள வேண்டுமே

யா ப்ராணேந ஸம் பவத்யதிதிர்தேவதாமயீ –
குஹாம் ப்ரவிஷ்ய திஷ்டந்தீம் யா பூதேபிர்வ்யஜாயத ஏதத்வை தத் ৷৷ 2.1.7 ৷৷

அதிதி -ஆத்மா -இங்கு -பிராணன் உடன் -இந்திரியங்கள் உடன் -சரீரம் -ஆத்மாக்குள்ளும் வியாபித்து
க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் -ஸ்ரீ கீதை –அனைத்தும் ப்ரஹ்ம சரீரம் –நான் சரீரமா -சதஸ் -சொல்லி -சமாளிக்க ப்ரஹ்மம் சரீரீ -தானே

அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா கர்ப இவ ஸுபரிதோ கர்பிணீபி–
திவே திவ ஈட்யோ ஜாகரிவத்பிர்ஹவிஷ்மத்பிர்மநுஷ்யேபிரக்நி ஏதத்வை தத் ৷৷ 2.1.8 ৷৷

அக்னிக்குள்ளும் ப்ரஹ்மமே

யதஷ்சோதேதி ஸூர்யோஸ்தம் யத்ர ச கச்சதி .
தம் தேவா ஸர்வே அர்பிதாஸ்தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.1.9 ৷৷

சூரியனுக்குள்ளும் ப்ரஹ்ம -ப்ரஹ்ம ஞானம் வேண்டுமே -பழுதே பல பகலும் போயின என்று அஞ்ச வேண்டுமே

யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததந்விஹ –
மரித்யோ ஸ மரித்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஷ்யதி ৷৷ 2.1.10 ৷৷

இங்கு இருக்கிறது அது -அங்கு எதுவோ அது இது தான் -வைகுண்ட பெருமாளே இங்கும் அங்கும் வியாபித்து
ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே
இரண்டாவது உண்டு என்று பார்த்தால் மிருத்யு அடைகிறாய்
ப்ரஹ்மத்தால் வியாபித்து பட்டு தான் அனைத்தும்
ஒரே ப்ரஹ்மம் தான் -இந்த இரண்டையும் அறிய வேண்டும்

மநஸைவேதமாப்தவ்யம் நேஹ நாநாஸ்தி கிம் சந –
மரித்யோ ஸ மரித்யும் கச்சதி ய இஹ நாநேவ பஷ்யதி ৷৷ 2.1.11 ৷৷

சுத்தமான மனசாலே அறிய முடியும் இந்த ப்ரஹ்மாத்மாக விஷயம் -ஸாஸ்த்ர வாசனையால் சம்ஸ்காரம் பண்ணப் பட்ட மனஸ்
பல கிடையாது -ஒன்றே -இஹ இங்கே -நானாத்வம் இல்லை -ஒரே ப்ரஹ்மமே அந்தராத்மா

அங்குஷ்டமாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி –
ஈஷாநம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத் ৷৷ 2.1.12 ৷৷

ப்ரஹ்மம் இவ்வளவு அருகில் -கட்டை விரல் அளவில்-சுருக்கிக் கொண்டு கருணையால் -புத்திக்கு பிடிக்கும் படி
பெரியவர் -அனைத்தைக்கும் ஸ்வாமி -வெறுப்பு இல்லாமல் -விஜுகுப்ஸதே -அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து

அங்குஷ்டமாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக .
ஈஷாநோ பூதபவ்யஸ்ய ஸ ஏவாத்ய ஸ உ ஷ்வ ஏதத்வை தத் ৷৷ 2.1.13 ৷৷

மூன்று காலங்களிலும் இவனே சர்வேஸ்வரன் –ஜ்யோதிரிவாதூமக . -புகை இல்லாத ஜோதி

யதோதகம் துர்கே வரிஷ்டம் பர்வதேஷு விதாவதி –
ஏவம் தர்மாந் பரிதக் பஷ்யம் ஸ்தாநேவாநுவிதாவதி ৷৷ 2.1.14 ৷৷

மலைக்கு மேலே மழை பெய்து – நீர் அருவிகள் கிளை -ஒன்றாக -இருந்தும் பெயர்கள் ரூபங்கள் மாறும் –
அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர்–புத்தி வாசி மதங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –சர்வ தேவ நமஸ்காரம் கேசவனையே சேரும்

யதோதகம் ஷுத்தே ஷுத்தமாஸிக்தம் தாதரிகேவ பவதி –
ஏவம் முநேர்விஜாநத ஆத்மா பவதி கௌதம ৷৷ 2.1.15 ৷৷

தண்ணீர் தண்ணீர் கலந்தது போலே ப்ரஹ்ம ஞானம் அறிந்து சாம்யா பாதி மோக்ஷம் –
அஷ்ட குண சாம்யம் -குண அனுபவம் பண்ணி ஆனந்தம்

৷৷ இதி த்விதீயோத்யாயே ப்ரதமா வல்லீ ৷৷

—————————————————–

புரமேகாதஷத்வாரமஜஸ்யாவக்ரசேதஸ–
அநுஷ்டாய ந ஷோசதி விமுக்தஷ்ச விமுச்யதே ஏதத்வை தத் ৷৷ 2.2.1 ৷৷

அறிய அறிய விளக்கம் -அனுபவத்துக்கு அசை போட்டு -அனுஷ்டானம்
ஏகாதச துவாரம் -11-வாசல் கதவு -சரீரம் – உள்ளே இருப்பது ஆச்சர்யம்
முகத்தில் ஏழு -நாபி மலம் ஜலம் ப்ரஹ்ம யந்த்ரம் -ஆக 11-திறந்தே இருக்குமே
விமுக்தஷ்ச விமுச்யதே -ஞானத்துடன் வெளியில் போனால் முத்தனாகிறான்-அறிந்து கொள்ள வேண்டும்

ஹ் ஸ ஷுசிஷத் வஸுரந்தரிக்ஷஸத்தோதா வேதிஷததிதிர்துரோணஸத் –
நரிஷத் வரஸதரிதஸத்வ்யோமஸதப்ஜா கோஜா றதஜா அத்ரிஜா றதா பரிஹத் ৷৷ 2.2.2 ৷৷

அக்னி வாயு -அதிதி -தண்ணீர் பசு மாட்டில் மலையில் இருந்து பிறந்ததாக எதுவாக இருந்தாலும் ப்ரஹ்மமே –
ஐததாத்ம்யம் ஏக ஆத்மா -ப்ரஹ்மத்தால் வியாபகம் ஒன்றே அனைத்துக்கும் பொதுவான விசேஷணம் —

ஊர்த்வம் ப்ராணமுந்நயத்யபாநம் ப்ரத்யகஸ்யதி –
மத்யே வாமநமாஸீநம் விஷ்வே தேவா உபாஸதே ৷৷ 2.2.3 ৷৷

பிராண வாயு அபான வாயு கீழே -ஹிருதய கமலத்தில் இருந்து நியமனம் –
விஷ்வே தேவா உபாஸதே- அனைவரும் ஆராதிக்கிறார்கள் –

அஸ்ய விஸ்ரம் ஸமாநஸ்ய ஷரீரஸ்தஸ்ய தேஹிந–
தேஹாத் விமுச்யமாநஸ்ய கிமத்ர பரிஷிஷ்யதே ஏதத்வை தத் ৷৷ 2.2.4 ৷৷

ஜீவன் -வாழ்ந்து -விலகி -புகுந்து -மூன்றுக்குள்ளும் அதே ப்ரஹ்ம -இத்தை அறிந்தால் போதும்

ந ப்ராணேந நாபாநேந மர்த்யோ ஜீவதி கஷ்சந –
இதரேண து ஜீவந்தி யஸ்மிந்நேதாவுபாஷ்ரிதௌ ৷৷ 2.2.5 ৷৷

பிராண வாயு -அபான வாயு -ப்ரஹ்மத்துக்கு வசம் –

ஹந்த த இதம் ப்ரவக்ஷ்யாமி குஹ்யம் ப்ரஹ்ம ஸநாதநம் .
யதா ச மரணம் ப்ராப்ய ஆத்மா பவதி கௌதம ৷৷ 2.2.6 ৷৷

கௌதம -பிள்ளை இவன் -நசிகேஷத் -ரஹஸ்ய ப்ரஹ்ம ஞானம் சொல்கிறேன் –

யோநிமந்யே ப்ரபத்யந்தே ஷரீரத்வாய தேஹிந –
ஸ்தாணுமந்யேநுஸம் யந்தி யதா கர்ம யதா ஷ்ருதம் ৷৷ 2.2.7 ৷৷

ஒரு சிலர் கர்மம் தக்க வேறே பிறவி -அந்நியன் -உன்னை போலே இல்லாத புபுஷுக்கள் -அநாதரவு சப்தம்
அசரீரீயாகவும் சுற்றி இருக்கலாம் –

ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண–
ததேவ ஷுக்ரம் தத்ப்ரஹ்ம ததேவாமரிதமுச்யதே-
தஸ்ம ல்லோகா ஷ்ரிதா ஸர்வே தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.2.8 ৷৷

ஒருவனே முழித்து -அனைவரும் தூங்கும்பொழுது -மோக்ஷம் ஆசை தூண்ட -முனியே நான் முகனே முக்கண் அப்பா -மனன சீலன்
தேஜஸ் ப்ரஹ்மம் அம்ருதம் நித்யம் -ஐந்து விரல்கள் -பத்த முக்த நித்ய -அசேதனம் கட்டை விரல்
சேர்ந்தால் தான் நாலும் வேலை செய்யும் -ஒரே சரண்யன்

அக்நிர்யதைகோ புவநம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ –
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிஷ்ச ৷৷ 2.2.9 ৷৷

சுக துக்கம் -ஒரே ப்ரஹ்மம் என்றால் ஓன்று போலே இல்லையே சங்கை –
நெருப்பு கொழுத்த -பதார்த்தம் உருவத்தில் எரியும் அதே போலே
கர்மத்துக்கு தகுந்த சுக துக்கம் -அசேதனங்களுக்கும் சேதனங்களுக்கும் வேறுபாடு -ஸ்வரூபம் ஸ்வ பாவம் மாறும்

வாயுர்யதைகோ புவநம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ –
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிஷ்ச ৷৷ 2.2.10 ৷৷

வாயுவும் -பொதிகை மலை- தென்றல் -வேனல் காற்று வாசி உண்டே –

ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷைர்பாஹ்யதோஷை–
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தாராத்மா ந லிப்யதே லோகது கேந பாஹ்ய ৷৷ 2.2.11 ৷৷

கண்ணுக்குள்ளே ஸூ ர்யன்-தோஷம் தட்டாதே -வியாபகத தோஷம் அவனுக்கு இல்லை –

ஏகோ வஷீ ஸர்வபூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய கரோதி –
தமாத்மஸ்தம் யேநுபஷ்யந்தி தீராஸ்தேஷாம் ஸுகம் ஷாஷ்வதம் நேதரேஷாம் ৷৷ 2.2.12 ৷৷

ஒருவனே -அனைத்தையும் தன் வசம் -பக்தர்களுக்கு வசப்படுபவன் –
மூல பிரகிருதி கொண்டே அனைத்தும் ஸ்ருஷ்டிக்கிறான்

நித்யோநித்யாநாம் சேதஷ்சேதநாநாமேகோ பஹூநாம் யோ விததாதி காமாந் –
தமாத்மஸ்தம் யேநுபஷ்யந்தி தீராஸ்தேஷாம் ஷாந்தி ஷாஷ்வதீ நேதரேஷாம் ৷৷ 2.2.13 ৷৷

ப்ரஹ்மம் நித்யம் -ஜீவனும் நித்யம் -அவன் ஒருவன் நாம் பலர் -சர்வஞ்ஞன் அவன் நாம் கொஞ்சம் -சகல பல பிரதன்
நாராயணனே நமக்கே பறை தருவான் -ப்ரஹ்மம் ஒருவனே -ஜீவர் பலர் –

ததேததிதி மந்யந்தேநிர்தேஷ்ய பரமம் ஸுகம் –
கதம் நு தத்விஜாநீயாம் கிமு பாதி விபாதி வா ৷৷ 2.2.14 ৷৷

பிள்ளை -கேள்வி -அது இது -யோகிகள் ப்ரஹ்மம் அறிகிறார்கள் -பரமம் சுகம் -அடையாளம் காட்ட முடியாதே

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி–
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ৷৷ 2.2.15 ৷৷

ப்ரஹ்மம் தேஜஸ் முன்னால் ஸூர்யனோ சந்தரனோ நக்ஷத்திரங்கள் ஒளி விடாதே -அக்னியை சொல்ல வேண்டுமே
அவன் தேஜஸால் இவை ஒளி விடுகின்றன -ஒளி மாயம் பரஞ்சோதி நல்ல யோகிகள் தான் அறிகிறான் –
அத்தை தானே நான் உனக்கு உபதேசித்தேன்
யாரும் ஓர் நிலைமை என அறிவரிய எம்பெருமான் அறிவு எளிய எம்பெருமான் போலே

৷৷ இதி த்விதீயேத்யாயே த்விதீயா வல்லீ ৷৷

————————————————–

ஊர்த்வமூலோவாக்ஷாக ஏஷோஷ்வத்த ஸநாதந–
ததேவ ஷுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாமரிதமுச்யதே –
தஸ்ம ல்லோகா ஷ்ரிதா ஸர்வே தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.3.1 ৷৷

இதே ஸ்லோகம் -15-அத்யாயம் ஆரம்பம் -மரத்தை தலை கீழே -வேர் மேலே -ப்ரம்மா மேலே -காய் கனி நாம் கீழே
சம்சாரம் மரம் -நன்றாக இருந்து நினைப்பவன் பிறந்தே -ஆழ்ந்து இருப்பான்
கோடரி -அசங்க-சத்ரேண -வைராக்யம் -திடமான சித்தம் -பற்றின்மை ஒன்றாலே வெட்ட முடியும் –

யதிதம் கிம் ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி ஸரிதம்-
மஹத்பயம் வஜ்ரமுத்யதம் ய ஏதத்விதுரமரிதாஸ்தே பவந்தி ৷৷ 2.3.2 ৷৷

ப்ரஹ்மம் -எங்கும் வியாப்யம் -பயந்தே -கார்யங்கள் ஸூர்ய உதயம் இத்யாதி

பயாதஸ்யாக்நிஸ்தபதி பயாத்தபதி ஸூர்ய-
பயாதிந்த்ரஷ்ச வாயுஷ்ச மரித்யுர்தாவதி பஞ்சம ৷৷ 2.3.3 ৷৷

ப்ரஹ்மம் பார்த்து நடுங்கி யமன் வேலை -வாயு –

இஹ சேதஷகத்போத்தும் ப்ராக் ஷரீரஸ்ய விஸ்ரஸ-
தத ஸர்கேஷு லோகேஷு ஷரீரத்வாய கல்பதே ৷৷ 2.3.4 ৷৷

சரீரம் விழும் முன் ப்ரஹ்ம ஞானம் அடையைப் பார்
அடுத்த பிறவி எது என்ன தெரியாதே –
ஏடு நிலத்து இடுவதன் முன்னம் -இழந்தால் எங்கேயோ உழன்று இருக்க வேண்டுமே

யதாதர்ஷே ததாத்மநி யதா ஸ்வப்நே ததா பிதரிலோகே-

இந்த்ரியாணாம் பரிதக்பாவமுதயாஸ்தமயௌ ச யத் –
பரிதகுத்பத்யமாநாநாம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 2.3.6 ৷৷

இந்திரியங்கள் தேகம் உத்பத்தி விநாசம் -அறிந்து உணர வேண்டும்

இந்த்ரியேப்ய பரம் மநோ மநஸ ஸத்த்வமுத்தமம் –
ஸத்த்வாதபி மஹாநாத்மா மஹதோவ்யக்தமுத்தமம் ৷৷ 2.3.7

இந்திரியங்களை விட விஷயங்கள் பலமானவை – முன்பு போலே இதுவும் –
ஆத்மா புத்தி சத்துவம் சப்தத்தால் இங்கு மனஸ் –இத்யாதி

அவ்யக்தாத் து பர புருஷோ வ்யாபகோலிங்க ஏவ ச –
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்துரமரிதத்வம் ச கச்சதி ৷৷ 2.3.8 ৷৷

பிரகிருதி-சூழ்ந்து அகன்று அளந்து உயர்ந்த மிக பெரும் பாழ்-அத்தையும் தாண்டி ப்ரஹ்மம்

ந ஸம் தரிஷே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஷ்யதி கஷ்சநைநம் –
ஹரிதா மநீஷா மநஸாபிக்லரிப்தோ ய ஏதத் விதுரமரிதாஸ்தே பவந்தி ৷৷ 2.3.9 ৷৷

கண்ணால் பார்க்க முடியாது காதால் கேட்க முடியாது -பக்தி ஒன்றாலே -ஹரிதா மநீஷா-சுத்தமான மனசால் -ஒன்றாலே முடியும்
யாவர்க்கும் உன்னை இன்னதோர் தன்மை என்று தெரிய அரியையாய் உள்ளாய் –

யதா பஞ்சாவதிஷ்டந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ –
புத்திஷ்ச ந விசேஷ்டதே தாமாஹு பரமாம் கதிம் ৷৷ 2.3.10 ৷৷

ப்ரஹ்மம் ஒன்றையே மீண்டும் மீண்டும் நினைந்து -வெளி விஷயம் பற்று இல்லாமல் -பரமாம் கதி அடையலாம்

தாம் யோகமிதி மந்யந்தே ஸ்திராமிந்த்ரியதாரணாம் –
அப்ரமத்தஸ்ததா பவதி யோகோ ஹி ப்ரபவாப்யயௌ ৷৷ 2.3.11 ৷৷

இது தான் யோகம் -விழிப்பு உடன் இருக்க வேண்டும்-ஸ்திரமாக இந்திரியங்களை வசப்படுத்தி

நைவ வாசா ந மநஸா ப்ராப்தும் ஷக்யோ ந சக்ஷுஷா –
அஸ்தீதி ப்ருவதோந்யத்ர கதம் ததுபலப்யதே ৷৷ 2.3.12 ৷৷

சாஸ்திரம் ஒன்றே ப்ரஹ்மம் அறிய வழி
அஸ்தி அஸ்தி -சாஸ்திரம் படி எல்லாமாக இருக்கிறார் எப்படி என்று சொல்ல முடியாது –
எல்லாமாக இருப்பதால் சொல்ல முடியாதே

அஸ்தீத்யேவோபலப்தவ்யஸ்தத்த்வபாவேந சோபயோ-

யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய ஹரிதி ஷ்ரிதா-
அத மர்த்யோமரிதோ பவத்யத்ர ப்ரஹ்ம ஸமஷ்நுதே ৷৷ 2.3.14 ৷৷

மனசால் அஸ்தி நினைக்க நினைக்க பிடி படுவான் -நம்பிக்கை உடன் த்யானம் ஆரம்பம்
ஆசை மற்ற இடங்களில் விட்டு அவன் இடம் கொண்டு

யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹரிதயஸ்யேஹ க்ரந்தய-
அத மர்த்யோமரிதோ பவத்யேதாவத்த்யநுஷாஸநம் ৷৷ 2.3.15 ৷৷

விருப்பு வெறுப்பு முடிச்சுக்கள் போகும் த்யானம் பண்ண -இது தான் நீ கேட்ட மூன்றாவது வரம் -உனக்கு உபதேசம்

ஷதம் சைகா ச ஹரிதயஸ்ய நாட்யஸ்தாஸாம் மூர்தாநமபிநி ஸரிதைகா –
தயோர்த்வமாயந்நமரிதத்வமேதி விஷ்வங்ங்ந்யா உத்க்ரமணே பவந்தி ৷৷ 2.3.16 ৷৷

-நூறுக்கு மேல் ஓன்று 101-நாடி -மூர்த்தன்யா நாடி -மூலம் வெளியில் சென்று அர்ச்சிராதி கதி –

அங்குஷ்டமாத்ர புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹரிதயே ஸந்நிவிஷ்ட-
தம் ஸ்வாச்சரீராத் ப்ரவரிஹேந்முஞ்ஜாதிவேஷீகாம் தைர்யேண –
தம் வித்யாச்சுக்ரமமரிதம் தம் வித்யாச்சுக்ரமமரிதமிதி ৷৷ 2.3.17 ৷৷

கட்டை விரல் அளவு -அத்தனை பேர் இடம் உள்ளான் -பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் -ஸூஷ்மம்
த்யானம் மூலம் அறிந்து -சரணாகதி மூலம் -இரட்டிப்பு சொல்லி நிகமிக்கிறார் – பரஞ்சோதி அம்ருதம் அவன்

மரித்யுப்ரோக்தாம் நசிகேதோர்த லப்த்வா வித்யாமேதாம் யோகவிதிம் ச கரித்ஸ்நம் –
ப்ரஹ்மப்ராப்தோ விரஜோபூத்விமரித்யுரந்யோப்யேவம் யோ விதத்யாத்மமேவ ৷৷ 2.3.18 ৷৷

மிருத்யுவால் உபதேசம் -பரமாத்மா வித்யையம் யோக விதியையும் அறிந்து -பர ப்ரஹ்ம ஞானம் பெற்று
அனுஷ்ட்டித்து -ப்ரஹ்மம் அடைந்தான் -கேட்டத்தை யார் கேட்டாலும் ப்ரஹ்ம பிராப்தி இது சத்யம் –

৷৷ இதி கடோபநிஷத்ஸமாப்தா ৷৷

——————————————————–

ஸஹ நாவவது ஸஹ நௌ புநக்து ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ৷৷

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: