ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -17-ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்–

அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—21-

சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால் பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் –
இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்

1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -இது தான் கேள்விக்கு பதில் –
2– சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
-சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே -ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய– ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்

———————————————————

அர்ஜுந உவாச-
யே ஸாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்ரத்தயாந்விதா–
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ் தமஸ்—৷৷17.1৷৷

அர்ஜுனன் கேட்டான் –
கண்ணா -எவர்கள் -சாஸ்த்ர விதியைக் கை விட்ட போதிலும் -ஸ்ரத்தை உடன் கூடியவர்களாய் யாகம் செய்கிறார்களோ –
அவர்களுடைய நிலை எதில்-சத்வ குணத்திலா -அல்லது ரஜோ குணத்திலா -அல்லது தமோ குணத்திலா –
இல்லாத ஒன்றை வைத்து மூன்றில் எது என்று கேட்க்கிறான் –
து -அனுஷ்டுப் ஸ்லோகங்கள் இவை எட்டு எழுத்துக்கள் ஒரு பாதத்தில் -இங்கு து -அதுவோ என்னில் -அர்த்தம் -சுரம் சேர்த்து
மீறி செய்யக் கூடாது -மனம் போன படி செய்யக் கூடாது இரண்டும் சொல்லி -ஸ்ரத்தை உடன் சாஸ்த்ர விதி படி செய்யாமல் -என்றபடி –
து சப்தம் கீழ் சொன்ன படிக்கு மாறு பாடு -தோற்ற -சப்தம் – கிருஷ்ணா பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் –என்றபடி –
சஸாபி ராம –தன் கதையை கேட்க மக்கள் உடன் தொடை தட்டி கேட்டான் -அபி சப்தம் போலே –
அந்த ராமனோ என்னில் -ஹா -என்ன ஆச்சர்யம் வால்மீகி –

ஸ்ரீ பகவாநுவாச-
த்ரிவிதா பவதி ஸ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா–
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்ருணு–৷৷17.2৷৷

ஸ்ரீ பகவான் கூறினான்-ப்ராக்ருதமான தேகத்தை உடையவர்களுக்கு -அந்தந்த விஷயங்களில் ருசியினால் விளையும்
அந்த ஸ்ரத்தை ஸாத்விகம் ராஜஸம் தாமசம் என்று மூன்று வகைப் பட்டதாகிறது –
அந்த ஸ்ரத்தையைப் பற்றிய ஸ்வ பாவத்தைக் கேட்பாயாக -சொல்வதை கேட்டு கோள் -ஸ்ரத்தை மூவகை பட்டு இருக்கும் –
தேஹி–தேகத்தை உடைய ஆத்மா -ஸ்வபாவம் -ஜா -இயற்க்கை குணத்தில் இருந்து பிறந்து –
விஷய ருசி -மாறுபடும் -ருசிக்கு அனுகுணமாக ஸ்ரத்தை வரும் – ஸ்வ பாவம் -ருசி என்றவாறு –
பண்ணும் தப்பை ஏற்று கொண்டே உள்ளாய் எதனால்
தண்ணீர் குளிர்ந்து இருப்பது போலே இதுவும் என் ஸ்வபாவம் என்று காட்டினான் –
ஸ்ரத்தை -விசுவாசம் நம்பிக்கையும் பலனில் -எதிர்பார்ப்பும் -தானே –
மூன்று வகைப் பட்டு இருக்கும் -ஸ்ரத்தை -சாஸ்த்ர விதியை பற்றி இதில் இல்லையே –
ஆத்மாவுக்கு தர்மபூத ஞானம் உண்டே -அதிலே தான் வாசனை ருசி ஸ்ரத்தை -மூன்றும்–
ஸ்ரத்தை என்பது நம்பிக்கை எதிர்பார்ப்பு -ஞானத்தால் தானே -ருசி ஆசையும் இதனாலே
பிறந்த குழந்தை அழுவதும் வாசனையால் -பதிவு -என்றபடி -சரீர வஸ்யத்தையால்-இந்த மூன்றும் -த்ரிதா –
தர்ம பூத ஞானம் காரியத்தால் என்று நேராகச் சொல்ல வில்லை –த்ரிவித குணங்கள் சரீரம் பற்றியவை தானே –
ஆத்மா சரீரத்தில் சிறைப் பட்டு இருப்பதால் -அநாதி காலம் -இருந்த காரணத்தால் இவை -பாதிக்கும் –
காயை நெருப்பினால் போட்டு வாட்டினால் -பக்குவம் ஆவது போலே -விஷய ருசி வாசனை ஸ்ரத்தை –
முக்குணங்கள் ஆத்மா உடன் போகாது -அடுத்த சரீரம் கொள்ளும் பொழுது -உண்டாகும் –
சத்வ குணம் வளர்க்க வேண்டும் -அது வளர வளர சம்சாரம் ரசிக்க ஆரம்பிக்கும் -இது மிக பெரிய ஆபத்து ஆகுமே –
மோக்ஷ ஆசையே வராதே –
சத்வம் வளர வளர மற்றவை போகும் -இதை கொண்டு பகவானை பிடித்து இத்தையும் அழிக்க வேண்டும் –
ஊறுகாய் கொண்டு மற்றவை உண்டு -பின்பு அதை உண்பது போலே
ஸ்ரீ வைகுண்டத்திலும் சத்வம் உண்டு -அது வேறே -இங்கு போலே மிஸ்ர சத்வம் இல்லையே –
சுத்த சத்வம் -தோஷம் நீக்கி–தூ மணி மாடம் -துவளில் மணி போலே
அவன் திருமேனி திவ்ய கோபுரம் எல்லாமே சுத்த சத்வம் –பார்த்தால் ஞானம் வளரும் அஞ்ஞானம் போகும் இதுவே அடையாளம் –

ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத–
ஸ்ரத்தாமயோயம் புருஷோ யோ யச்ச்ரத்த ஸ ஏவ ஸ–৷৷17.3৷৷

பரத குலத்து உதித்தவனே-எல்லா மனிதனுக்கும் தனது மனத்துக்கு அனுகுணமாகவே சிந்தை விளைகிறது –
இந்த மனிதனின் ஸ்ரத்தையின் பரிணாமமே யாவான் – எந்த மனிதன் எந்த ஸ்ரத்தையோடு கூடி இருக்கிறானோ அந்த
ஸ்ரத்தையின் பரிணாமமாகவே யுள்ளான் –
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -சத்வ அனு ரூபம் -இங்கு சத்வம் மனஸ் -மனசுக்கு தக்க ஸ்ரத்தை என்றபடி–
சரீரம் உடன் விட்டு பிரியாத முக்குணங்கள் அன்றோ -ருசி வாசனை ஸ்ரத்தை ஞானம் -பயனின் பரிணாமம் உடன் புருஷன் ஆத்மா –
ஸ்ரத்தைக்கு முக்கியத்துவம்

யஜந்தே ஸாத்த்விகா தேவாந் யக்ஷ ரக்ஷாம்ஸி ராஜஸா–
ப்ரேதாந் பூத கணாம் ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா–৷৷17.4৷৷

எந்த தேவதையை சேவிக்கிறான் -சாத்விகர் தேவர்களை வணங்குவார் -அவர்கள் இடம் இருப்பதை எதிர்பார்ப்பார்கள் -அதிலே ருசி
ஸ்ரீ மன் நாராயணன் -பரம சாத்வீகன் -தேவர்க்கும் தேவாவோ -மாக வைகுந்தம் அடைய எண்ணுவார்கள்
ராக்ஷஸர்கள் யஜ்ஜர்கள் ராக்ஷஸர்களை – அன்யா -வேறு பட்ட தாமஸர்கள் பூத கணங்கள் பிரேதங்களை
வணங்கி சா லோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் அடைய

அஸாஸ்த்ர விஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா–
தம்பாஹங்கார ஸம் யுக்தா காம ராக பலாந்விதா—৷৷17.5৷৷

கர்ஸயந்த ஸரீரஸ்தம் பூதக்ராம மசேதஸ–
மாம் சைவாந்த ஸரீரஸ்தம் தாந்வித்த்யா ஸுர நிஸ்சயாந்–৷৷17.6৷৷

எந்த மனிதர்கள் சாஸ்திரங்களில் விதிக்கப்படாதததாய் மிகக்கடுமையான தவத்தையும் யாகத்தையும் செய்கிறார்களோ –
டம்பம் அஹங்காரம் ஆகியவற்றோடு கூடியவர்களாய் -காமத்தோடும் ராகத்தோடும் கூடிய பலத்தை உடையவர்களாய் –
அறிவற்றவர்களாய் -தம் சரீரத்தில் இருக்கும் பஞ்ச பூதங்களையும் வருந்தச் செய்கிறவர்களாய் –
சரீரத்தினுள் இருக்கும் எனது அம்சமான தமது ஜீவ ஸ்வரூபத்தையும் வருந்தச் செய்கிறவர்களாய் –
எவர்கள் தவத்தையும் யாகத்தையும் செய்கிறார்களோ -அவர்கள் எனது ஆணையை மீறுதலாகிற
ஆஸூரமான உறுதியை உடையவர்கள் என்று அறிவாய்
கேள்விக்கு பதில் இதிலும் அடுத்ததிலும் -சாஸ்திரம் விதிக்கப் படாததாய் -கோரம் வருத்தி கொண்டு கோரமான
தபஸ் -தானம் யாகம் அனைத்துக்கும் -டம்பத்தோடும் அஹங்காரத்தோடும் செய்து –
ஹிரண்ய கசிபு யாகம் ராவணன் யஜ்ஜம் போலே -காமம் ராகம் இருந்து பலசாலிகளாக –
ஆசை இல்லாதவன் இடம் பலம் இருந்தால் லோகத்துக்கு நன்மை உண்டாகும்
அறிவிலிகள் -சாஸ்திரம் மீறி -இம்மை பயனைக் கூட கொடுக்காது என்று அறியாதவர்கள் –
சரீரத்தில் உள்ள பஞ்ச பூதங்கள் துன்பத்துக்கு உள்ளாக்கி-சமுத்திரம் -மலை -காயோடு நீடு கனி உண்டு –
கதிக்கு பதறி -வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் -செய்வார்கள் –
என்னுடைய அம்சமான ஆத்மாவை வேற -வருந்துகிறான் -பரமாத்மாவை வறுத்த முடியுமா -சரீர அம்சம் தானே –
ஜீவாத்மாக்குள் இருந்தாலும் வியாப்யகத தோஷம் தட்டாது அவனுக்கு -ஜீவாத்மா சரீரத்துக்குள் அகப்பட்டது கர்மாதீனம் –
இவன் இருப்பது கிருபாதீனம் -அவகாசம் பார்த்து உய்ய வைக்க தானே இவன் நம்முள் உள்ளான் –
மாம் -என் அம்சமான ஜீவாத்மாவை -என்றபடி -ஆஸூர தன்மையில் நிச்சய புத்தி கொண்டு
என்னுடைய ஆணை சாஸ்திரம் மீறுபவர்கள் தானே -அசாஸ்த்ர விகிதம் -ஆஸூர நிச்சயம் –

ஆஹாரஸ் த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய–
யஜ்ஞஸ் தபஸ் ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஸ்ருணு–৷৷17.7৷৷

உயிருடைய எல்லாப் பொருள்களுக்கும் உணவும் -சத்வம் முதலான முக்குணங்களில் ஒன்றின் மிகுதிக்கு ஏற்ப
மூவகைப்பட்டதே இனியதாகிறது –
அவ்வண்ணமாகவே யாகமும் மூவகைப்பட்டதாகிறது -தானமும் மூவகைப்பட்டதாகிறது –
ஆகாரம் யஜ்ஞம் தவம் தானம் ஆகியவற்றின் சத்வாதி குணங்களையிட்டு மூவகைப்பட்டு இருக்கும் –
இந்த வேறுபாட்டை நான் சொல்லக் கேட்பாயாக –
மூவகை –ஆகாரம் -அவரவர்களுக்கு பிரியமான – யஜ்ஞம் தபஸ் தானம் -இவற்றை சொல்லி –
ஒவ் ஒன்றுக்கும் மூன்று ஸ்லோகங்கள்
சத்வ குணம் வளர -நிலையான சிந்தனை -த்யானம் -சர்வ முடிச்சுகள் அவிழும்-

ஆயுஸ் ஸத்த்வ பலாரோக்ய ஸுக ப்ரீதி விவர்தநா–
ரஸ்யா ஸ்நிக்தா ஸ்திரா ஹரித்யா ஆஹாராஸ் ஸாத்த்விக ப்ரியா–৷৷17.8৷৷

ஆயுள் அறிவு பலம் ஆரோக்யம் ஸூக ப்ரீதிகள் ஆகியவற்றை வளர்ப்பவையாய் -இனிப்புச் சுவை நிறைந்தவையாய் –
வழ வழப்பு யுடையவையாய் நிலையான நற் பயனை விளைப்பவையாய் காண்பதற்கு இனியவையான உணவுகள்
சாத்விகர்களால் விரும்பப் படுகின்றன
நீண்ட ஆயுள் -சத்தான மனஸ் வளர்க்கும் -பிராண வாயு ஸ்திரம் -இதுவே பலம் – தாதுக்கள் ஸ்திரம் தாதுக்கள் சுகம் –
சாப்பிட்ட பின்பு உள்ள சுகத்தை வளர்க்கும் -ப்ரீதியையும் வளர்க்கும் -நல்ல எண்ணம் -மங்கள கார்யம் -சமுதாயம் பிரியம் –
ஆயுசு வளர -இனி இனி கதறுகிறார்கள் -ஆழ்வார் நிலைக்கு வந்த பின்பு அது -படிப்படியாக -ஸ்ரீ கீதை அருளிச் செயல்கள் ஸ்ரீ பாஷ்யம்
கைங்கர்யம் பண்ணி குண அனுசந்தானம் பண்ணி வாழ –
பொருந்திய தேசம் –செல்வமும் சேரும் -குலம் தரும் செல்வம் தரும் -பிரபன்ன குலம் கைங்கர்ய செல்வம் –
சாத்விகர் பிரியமான ஆகாரம் -அனைத்துக்கும் அடிப்படை -இனிப்பு சுவை மிகுந்து -அன்ன மயம் மனஸ்–அறுசுவை மதுரம் மிக்கு –
வேகமாகவும் கூடாது அசை போட்டு உண்ணவும் கூடாது
சுவைத்து நக்கி கடித்து குடித்து விழுங்கி -சாத்விக ஆகாரம் – நிலை நின்று நன்மை பயக்கும்

கட்வம் லலவணாத் யுஷ்ண தீக்ஷ்ண ரூக்ஷ விதாஹிந–
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா துக்க ஸோகாமய ப்ரதா–৷৷17.9৷৷

மிகுதியான துவர்ப்பு -புளிப்பு -உவர்ப்பு -மிகுந்த சூடு மிகுந்த காரம் -கடுமை எரிக்கும் தன்மை ஆகியவற்றை
உடைய உணவுகள் ரஜோ குணம் மிகுதியாக உடையவர்களால் விரும்பப்படுபவையாய்
துன்பம் வருத்தம் நோய் ஆகியவற்றை விளைக்கின்றன –
ராக்ஷஸ ஆகாரம் – துக்கம் சோகம் -ஆரோக்ய கேடு வரும் -அழ வைக்கும்
துவர்ப்பு அதிகம் -சுக்கு மிளகு திப்பிலி -புளிப்பு -நெல்லிக்காய் புளி உப்பு –
அதி உஷ்ண -காரம் -வாதம் கிளப்பும் – எரிச்சலும் கிளப்பும் – கிழங்கு வகைகள் –
உப்பை நேராக உண்டால் பசு மாம்சம் சமம் –

யாத யாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்–
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸ ப்ரியம்–৷৷17.10৷৷

நீண்ட நேரமானதும் இயற்கை சுவை இழந்ததும் கெட்ட நாற்றம் உடையதும் நெடும் காலமானதால்
சுவை வேறு பட்டதும் ஆச்சார்யர் முதலான பெரியவர்கள் தவிர மற்றவர்கள் உண்டு மிகுந்த கலத்தில்
உள்ள எச்சிலும் யாக சேஷம் அல்லாத யாதொரு உணவு உள்ளதோ
அது தமோ குணம் மிகுதியாக உள்ளவர் விரும்புகின்றதாகும்
ஒரு ஜாமம் ஆனாலும் உண்ண கூடாது – இயற்க்கை ருசி மாறாக கூடாது -கந்தம் -ஊசினது உண்ண கூடாது
குரு முதலானோர் உச்சிஷ்டம் தவிர – பிதா ஜ்யேஷ்ட பிராதா பர்த்தா-ஆச்சார்யர் -போனகம் தருவரேல் உண்டே –
ராமன் எச்சில் உண்பேன் என்றார் இளைய பெருமாள் தாரை இடம் -அமேத்யம் -கண்டு அருளப் பண்ணாத உணவு

அபலா காங்க்ஷிபிர் யஜ்ஞோ விதி த்ருஷ்டோ ய இஜ்யதே–
யஷ்டவ்ய மேவேதி மந ஸமாதாய ஸ ஸாத்த்விக—৷৷17.11৷৷

பலனில் விருப்பம் இல்லாத புருஷர்களாலே சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி எம்பெருமானுக்கு ஆராதனமாய் –
ஸ்வயம் பிரயோஜனமாய் இருப்பதாகையாலே இந்த யாகத்தை செய்தேயாக வேண்டும் என்று நெஞ்சில் உறுதி கொண்டு
யாதொரு யாகம் அனுஷ்ட்டிக்கப் படுகிறதோ அந்த யாகம் சாத்விக யாகம் எனப்படும் –
சாத்விக யஜ்ஜம் -பலத்தை உத்தேச்யமாக செய்து -ஈஸ்வர முக விலாசம் தவிர வேறு ஒன்றுமே கூடாதே
சாஸ்திரம் சொன்னதை மட்டுமே -ஸ்வயம் பிரயோஜனமாக – –
இந்த யாகம் செய்யத் தக்கதே மனசை சமாதானம் செய்து செய்பவன்

அபி ஸந்தாய து பலம் தம்பார்த மபி சைவ யத்–
இஜ்யதே பரத ஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்–৷৷17.12৷৷

பரத குலத்தவர்களில் சிறந்தவனே-பிராகிருத பலன்களில் விருப்பத்தோடு டம்பம் காரணமாக
எந்த யாகம் அனுஷ்ட்டிக்கப் படுகிறதோ -அது ராஜசமான யாகம் என்று அறிவாயாக –
ராக்ஷஸ யாகம் -பலத்தை எதிர்பார்த்து -டம்பத்துக்காக -இம்மை பலனை -டம்பம் ஸ்வர்க்காதி எதிர்பார்த்து –
ஜ்யோதிஷட ஹோமமும் ராக்ஷஸ யாகம்

விதிஹீநம ஸம்ருஷ்டாந்நம் மந்த்ரஹீந மதக்ஷிணம்–
ஸ்ரத்தா விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே–৷৷17.13৷৷

அந்தணர்கள் அனுஜ்ஞா வாக்கியத்தை பெறாததும் நியாயமான வழியில் சம்பாதிக்கப்படாத த்ரவ்யங்களை யுடையதும்
உரிய மந்த்ரங்கள் இல்லாததும் தக்ஷிணை இல்லாததும் ஸ்ரத்தையோடு செய்யப்படாததுமான யாகத்தை
தாமச யாகம் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்
தாமஸ யாகம் -சாஸ்திரம் சொல்லாதது -பிராமணர் அனுமதி இல்லாமல்
அநியாய வழியால் பெற்ற சம்பத் கொண்டு -மந்த்ரங்கள் இல்லாமை -தக்ஷிணை கொடுக்காமல் ஸ்ரத்தை இல்லாமல்

தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம் ஸூவ்சம் ஆர்ஜவம்–
ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே–৷৷17.14৷৷

தபஸ் -ஆறு ஸ்லோகங்கள் —
தேவர்கள் -இரு பிறப்பாளர்கள் -ஆச்சார்யர் -அறிவாளிகள் -ஆகியவர்களை ஆதரிப்பது -புண்ய தீர்த்தமாடுவது -முதலான
பரிசுத்தியை விலைக்கும் செயல்கள் -மனத்தில் எண்ணியபடியே கார்யம் செய்தல் –
பெண்கள் இடம் காமச் செயல்களை புரியாது இருத்தல் -உயிர்களைத் துன்புறுத்தாமல் இருத்தல் –
ஆகியவை சரீரத்தினால் செய்யப்படும் தவமாகச் சொல்லப்படுகிறது –
சரீரத்தால் -தெய்வம் பிராமணர் குரு பாகவதர்களை எழுந்து நமஸ்கரித்து சரீரத்தால் பண்ணும் தபஸ் –
பெரியவர் வந்தால் நம் பிராண வாயு கிளம்பும் -அதை உள்ளே அடக்கி நீ நமஸ்காரம் பண்ணு என்கிறதே சாஸ்திரம்
ஸுசம் புண்ய தீர்த்தம் நீராடல் – நேர்மை -மனஸ் காயம் வாய் ஒன்றாக
ப்ரஹ்மசர்யம் போக்யமாக நினைக்காமல் -அஹிம்சா சரீர தபஸ் இவை –

அநுத்வேக கரம் வாக்யம் ஸத்யம் ப்ரிய ஹிதம் ச யத்–
ஸ்வாத்யா யாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே–৷৷17.15৷৷

பிறருக்கு வெறுப்பை விளைக்காததாகவும் உண்மையானதாகவும் இனியதாகவும் நன்மை விளைவிப்பதாகவும்
இருக்கும் வார்த்தையை விடாது ஓதலுமே வாக்கினால் செய்யப்படும் தவம் என்று சொல்லப்படுகிறது
பேசினால் வெறுப்பு வராமல் உண்மை இனிதாக நல்லதாக -இரண்டும் -வேதம் விடாமல் ஓதி -வாக்கு தபஸ்

மந ப்ரஸாத ஸௌம்யத்வம் மௌநமாத்ம விநிக்ரஹ–
பாவ ஸம்ஸூத்திரித்யேதத் தபோ மாநஸ முச்யதே–৷৷17.16৷৷

மனத்தில் கோபம் முதலான தீய குணங்கள் அற்று தெளிவாய் இருக்கை-மனத்தில் பிறருக்கு நன்மையை எண்ணுகை-
மனத்தால் வாக்கின் செயலை அடக்குவது -மனத்தை பிராகிருத விஷயங்களில் இருந்து அடக்கித் த்யானிக்கத் தக்க
விஷயங்களில் நிலை நிறுத்துதல் -ஆத்மாவைத் தவிர்ந்த விஷயங்களைப் பற்றிய நினைவு இல்லாமல் இருத்தல் –
என்னும் இவை மனத்தால் செய்யப்படும் தவம் என்று சொல்லப்படுகிறது
மனஸ் தபஸ் -கோபம் இல்லாமல் தெளிந்து இருப்பது -பிறர் நன்மையை நினைந்தே -மௌனம் மனசால் வாக்கை அடக்குவது
மௌனம் ரஹஸ்யமாக நான் இருக்கிறேன் கண்ணன்
புன்சிரிப்பு ஆயிரம் அர்த்தம் கொடுக்கும் -பிராகிருத விஷயங்களில் மீட்டு ஆத்ம சிந்தனை உடனே இருப்பது மானஸ தபஸ் –

ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ் தத்த்ரவிதம் நரை–
அபலாகாங்க்ஷிபிர் யுக்தைஸ் ஸாத்த்விகம் பரிசக்ஷதே–৷৷17.17৷৷
பலனில் விருப்பம் இல்லாதவர்களாய் பரமாத்மாவின் ஆராதனம் இது என்னும் நினைவை யுடையவர்களான மனிதர்களால்
மேலான ஸ்ரத்தையோடு முன் கூறியபடியே மூ வகைப்பட்ட யாதொரு தவம் செய்யப்படுகின்றதோ
அதை சாத்வீகமான தவம் என்று அறிவாளிகள் கூறுகிறார்கள்
பலத்தில் ஆசை வைக்காத -சாத்விக தபஸ் -சாஸ்திரம் சொல்வதற்காக ஸ்ரத்தை உடன் –பிராகிருத பலன்களை கருதாமல்

ஸத்கார மாந பூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்–
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்–৷৷17.18৷৷

மனத்தில் கொள்ளப்படும் மதிப்பு புகழ் மொழிகள் நமஸ்காரம் முதலான பூஜைகள் ஆகியவைகளின் பொருட்டு
டம்பத்திற்க்காகவே யாதொரு தவம் செய்யப்படுகிறதோ -அந்தத் தவம் இவ்வுலகில்
ரஜோ குணத்தால் உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது –
அது பலனையிட்டு நழுவக் கூடியதாகவும் நிலை நில்லாததாகவும் இருப்பது –
ராக்ஷஸ தபஸ் -நழுவும் நிலை நிற்காமல் மதிப்பு புகழ் பூஜைக்கு க்யாதி லாப பூஜைக்காக –
ஸ்வர்க்காதி அல்ப அஸ்திர பலன்களுக்கு –

மூடக்ராஹேண ஆத்மநோ யத்பீடயா க்ரியதே தபஸ்–
பரஸ்யோத் ஸாதநார்தம் வா தத் தாமஸ முதாஹ்ருதம்–৷৷17.19৷৷

அறிவிலிகளால் தங்கள் பிடிவாதத்தால் தம்மைத் தாமே துன்புறுத்துவதாக யாதொரு தவம் செய்யப்படுகிறதோ
அத்தவம் தமோ குணத்தால் விளைவது என்று சொல்லப்படுகிறது
தாமஸமான தபஸ் -மூடர்கள் – பிடித்த முயலுக்கு மூன்று கால் -தங்களையும் வருத்தி -பிறருக்கு பீடை –
வைப்பு இத்யாதி -சக்திக்கு மீறி செய்பவர்

தாதவ்யமிதி யத் தாநம் தீயதே அநுபகாரிணே–
தேஸே காலே ச பாத்ரே ச தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்–৷৷17.20৷৷

தனக்கு உதவி செய்யாதவனுக்கு கொடுப்பதையே பயனாகக் கருதி யாதொரு தானம் கொடுக்கப்படுகிறதோ
அந்த தானம் ஸாத்விகம் என்று சொல்லப்படுகிறது –
சாத்விக தானம் -கொடுக்கப் பட வேண்டியதே -சாஸ்திரம் சொல்லி இருப்பதால் -உபகாரம் செய்யாதவனுக்கு –
அவனுக்கு செய்தால் பிரதியுபகாரம் ஆகும் தானம் -சரியான தேசத்தில் காலத்தில் அதிகாரிக்கு கொடுக்க வேண்டும்

யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந–
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்–৷৷17.21৷৷

கைம்மாறு கருதியோ -அல்லது மறுமையில் ஒரு பலனைக் கருதியோ -மனத்தில் கிலேசத்துடன்
யாதொரு தானம் அளிக்கப்படுகிறதோ -அந்த தானம் ராஜஸ தானம் எனப்படுகிறது
ராக்ஷஸ தானம் -பிரதியுபகாரம் எதிர்பார்த்து ஸ்வர்க்கத்துக்காக -மனஸ் வருந்தி கொடுக்க வேண்டி இருக்கிறதே –
கெட்டதை கொடுப்பார் செலவு சந்தனம் போலே –

அதேஸகாலே யத் தாநம் அபாத்ரேப்யஷ்ச தீயதே–
அஸத் க்ருத மவஜ்ஞாதம் தத் தாமஸ முதாஹ்ருதம்–৷৷17.22৷৷

தகாத தேசத்திலும் காலத்திலும் தகாத பாத்திரங்களுக்கும் வணங்குபவனை மதிக்காமலும் அவமதித்தும்
யாதொரு தானம் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம் என்று சொல்லப்படுகிறது
தாமஸ தானம் -கொடுக்கக் கூடாத தேசம் -கலிங்க தேசம் புத்தர்கள் உள்ள இடம் கூடாது
காலம் இரவில் கொடுக்க கூடாதே அஸ்தமனம் ஆனபின்பு பண்ண கூடாதே
பாத்திரம் அறியாமல் -முட்டாள் தூஷிகன் போல்வாருக்கு -மரியாதை இல்லாமல் ஸத்காரம் பண்ணாமல் கொடுப்பது
நம்ம கை கீழே இருந்து அவரை எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும் –

ஓம் தத் ஸத் இதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ் த்ரிவித ஸ்ம்ருத–
ப்ராஹ்மணாஸ் தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா புரா–৷৷17.23৷৷

ஓம் தத் சத் என்னும் மூன்று விதமான சப்தங்கள் வைதிக கர்மத்திற்கு சேர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது –
அந்த மூன்று வகைப்பட்ட சப்தத்தோடு கூடியவர்களாகவே அதிகாரமுடைய
மூன்று வர்ணத்தவர்களும் வேதங்களும் யஜ்ஞங்களும் ஸ்ருஷ்ட்டி காலத்தில் என்னால் படைக்கப்பட்டார்கள் –
மேலே ஓம் -தது -சது -மூன்றையும் -வேதங்கள் -ஓதுபவர்கள் யாகங்கள் -நிர்தேசம் சப்தம் –
பிராமணர்கள் வேதங்கள் யாகங்கள் மூன்றுக்கும் -என்னால் படைக்கப் பட்டன

தஸ்மாத் ஓம் இத் யுதாஹ்ருத்ய யஜ்ஞ தாந தபஃக்ரியா–
ப்ரவர்தந்தே விதாநோக்தா ஸததம் ப்ரஹ்ம வாதிநாம்–৷৷17.24৷৷

இப்படி என்னாலேயே வைதிக கர்மாக்கள் முதலானவை இந்த மூன்று சப்தங்களோடு கூடவே படைக்கப்படுகையால்
வேதத்தை ஓதும் மூன்று வர்ணத்தவர்களால் அனுஷ்ட்டிக்கப் படுபவையும் -வேத வாக்கியங்களில் விதிக்கப் படுபவையுமான
யாகம் தானம் தவம் முதலான வைதிக கர்மங்கள் முதலில்
ஓம் என்று உச்சரித்த பின்பே எப்போதும் அனுஷ்ட்டிக்கப் படுகின்றன
ப்ரஹ்மம் அறிந்து சாஸ்திரம் ஓதுபவர்கள் வேதம் விதித்த படி ஓம் என்று சொல்லி தானம் தபஸ் யஜ்ஜம் செய்கிறார்கள் –
எல்லா கர்மாக்களுக்கும் பொது பிரணவம் என்றபடி

தத் இத்யநபி ஸந்தாய பலம் யஜ்ஞ தப க்ரியா–
தாந க்ரியாஸ்ச விவிதா க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷி–৷৷17.25৷৷

மோக்ஷத்தை விரும்பும் மூ வர்ணத்தவர்களாலே பல விதமான யாக கர்மங்களும் தவ கர்மங்களும் தான கர்மங்களும்
ப்ரஹ்மத்தின் பெயரான தத் என்னும் சப்தத்தைச் சொல்லி மோக்ஷம் தவிர்ந்த பலன்களைக் கருதாமல் அனுஷ்ட்டிக்கப் படுகின்றன
ஓம் தது மோக்ஷம் – ஓம் சது இந்த லோக ஐஸ்வர்யம் -ஓம் பொது -மோக்ஷம் விரும்புவர் தாது சேர்த்து –
வேறே பலம் எதிர்பார்க்காமல் கிரியை- வேறே வேறே வகை தபஸ் யாகங்கள் செய்கிறார்கள்
மூன்றும் ப்ரஹ்மம் சொல்லும் சப்தங்கள் -இங்கு கர்மா செய்யும் பொழுது சேர்த்து சொல்வதைச் சொல்கிறது

ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே–
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த பார்த்த யுஜ்யதே–৷৷17.26৷৷

குந்தீ புத்திரனே சத் என்னும் இச்சொல் இருக்கும் பொருள் என்னும் அர்த்தத்திலும் – நல்ல பொருள் என்னும் அர்த்தத்திலும்
உலகிலும் வேதங்களிலும் வழங்கப்படுகிறது – அவ்வண்ணமே நல்ல லௌகிக கர்மா விஷயங்களிலும்
சத் என்னும் சொல் வழங்கப் படுகிறது
சத் சப்தம் -லோகத்தில் சத் உணவு சத் பிள்ளை இருக்கிறது -சத் நன்றாக இருக்கிறது என்ற அர்த்தமும் உண்டே –
நல்ல லௌகிக கர்மங்களும் சத் சப்தம் சொல்வர் -சத் பிரயோகம் எதற்கு இந்த ஸ்லோகம்

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி ஸதிதி சோச்யதே–
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபி தீயதே–৷৷17.27৷৷

யாகத்திலும் தவத்திலும் தானத்திலும் மூ வர்ணத்தவர்கள் நிலை நிற்பதும் சத் என்று சொல்லப்படுகிறது –
அந்த மூ வர்ணத்தவர்களுக்காகவே ஏற்பட்ட யஜ்ஞம் தானம் முதலான கர்மமும் சத் என்றே சொல்லப்படுகிறது
யஜ்ஜம் தானம் தாபஸ் -சத் சொல்லி செய்கிறார்கள் சத் ஓம் சேர்ந்தே -ஓம் பொது தானே -கர்மத்தை –
லௌகிக பலத்தை ஆசைப்பட்டு ஓம் சத்

அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ் தப்தம் க்ருதம் ச யத்–
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத் ப்ரேத்ய நோ இஹ–৷৷17.28৷৷

குந்தீ புத்திரனே -ஸ்ரத்தை இல்லாமல் செய்யப்படும் யாதொரு ஹோமமும் தானமும் யாதொரு தவமும் அனுஷ்ட்டிக்கப்படுகிறதோ –
அது – அசத் -என்று சொல்லப்படுகிறது – மோக்ஷத்தின் பொருட்டும் ஆவது இல்லை –
இவ்வுலகப் பலங்களின் பொருட்டும் ஆவதில்லை
அஸ்ரத்தையால் -இங்கு தான் இவன் கேள்விக்கு நேராக பதில் -சாஸ்த்ர விதி -இருந்தும் ஸ்ரத்தை இல்லா விடில் பலன் இல்லையே –
இது வரை ஸ்ரத்தையால் பண்ணினாலும் சாஸ்திரம் விதிக்கா விடில் வீண்
ஸ்ரத்தை இல்லா விடில் சத்தாகும் -மோக்ஷம் கொடுக்காது இந்த லோக ஐஸ்வர்யமும் கிடையாது -நோ இஹ -பிரத்ய –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: