ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -15—-

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாப நாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேத நாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம் / ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் / இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –
புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் -பத்தன் முக்தன் நித்யன் -மூவர் / புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே /
அபுருஷன் -அசித் -வர்க்கம்- / புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் /அவதார ரஹஸ்ய ஞானம் போலே
– நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் -/பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

————————————————————

ஸ்ரீ பகவாநுவாச–
ஊர்த்வமூலமதஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்–சந்தாம் ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்–৷৷15.1৷৷
அஸ்வத்த மரம் -அரச மரம் -த்ருஷ்டாந்தம் -தலை கீழே -/கடோ உபநிஷத் –ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்க -வேராக கொண்டு -கர்மம் அடியாக -கீழே விழுந்த விதை
இந்த கர்மம் அடியாக பிறப்பது -மேலே வேற மரம் அருகில் -சம்சாரம் ஆகிய பெரிய மரம் வேர் சத்யலோகம் / கீழே தேவாதி கிளைகள் -/
அஸ்வத்தம் -நாளை இருக்காது -அதனால் அஸ்வத்தம் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -சதத பரிணாமம் -ஷட் பாவ விகாரங்கள் உண்டே –
அவ்யயம் பிரவாஹ ரூபமாக அழியாமல் -சந்தஸ் வேத வாக்கியங்கள் இலைகள் என்கிறான் -மரத்துக்கு இலை தானே ஸூர்ய ஒளி மூலம் பிராணன்
-அதே போலே யாகங்கள் இவை வேத வாக்கியங்கள் கொண்டே – மறை புரிய வைக்காமல் மயக்கும் – / பூர்வ காண்டம் -த்யானம் உபாசனம் -/
உபநிஷத் வேதாந்தம் -ப்ரஹ்ம பாவம் /
சந்தஸ் -மறைக்கும் -வேதம் மட்டும் பிடித்து கொண்டு ஸ்வர்க்காதி அல்ப -முக்குணத்தவர்களுக்கு /சம்சாரம் மரத்தை அறிந்தவனே அதிகாரி -சொல்லி அடுத்து

அதஷ்சோர்த்வம் ப்ரஸரிதாஸ்தஸ்ய ஷாகா–குணப்ரவரித்தா விஷயப்ரவாலா–அதஷ்ச மூலாந்யநுஸந்ததாநி–கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே–৷৷15.2৷৷
மேலும் கீழும் பரவி உள்ள கிளைகள் கர்மா -உயர்ந்த தாழ்ந்த யோனிக்கு இரண்டுக்கும் -இதுவே காரணம் -முக்குணங்கள் வளர்க்கப் பட்ட மரம்
-நீரும் உரமும் இவையே -கர்மம் வளர -விழுது விழுந்து மேலும் கீழும் -மரம் சூழல்- பிரவாஹா ரூபம் -/ தளிர்கள் பஞ்ச பூத ஸூ ஷ்மங்கள் உடைய சம்சாரம்
-சப்தாதிகளை தளிர்கள் -முதலில் நைமித்திக ஸ்ருஷ்ட்டி – அடுத்து நித்ய ஸ்ருஷ்ட்டி -பிராட்டி புருவ நெறிப்பே
-பெரிய பெருமாளுக்கு வேதம் -மேலே உயர்த்தினால் உயர்ந்த யோனி / பிரமாணம் இதுவே இவனுக்கு –
கர்மம் என்னும் கட்டுக்கள் -மனுஷ்ய லோகத்திலும் -சேரும் –

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே–நாந்தோ ந சாதிர்ந ச ஸம் ப்ரதிஷ்டா–அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூல-மஸங்கஷஸ்த்ரேண தரிடேந சித்த்வா–৷৷15.3৷৷
இந்த சம்சாரி இந்த விஷயம் அறியாமல் -முடிவையும் தெரிந்து கொள்ளாமல் -முடிவு முக்குணங்களை தாண்டினால் தானே -நீர் கொட்டாமல் இருந்தால்
-தண்ணீர் அற்று பட்டு போகுமே -ஆதியும் -அறியாமல் -ஆதி குண சங்கம் -வேர் இது தானே -சம்சார மரம் -அஞ்ஞானம் என்னும் ஆதாரம் -என்றும் அறியாமல்
-தேஹாத்ம பிரமம் தானே -அதுவும் அறியாமல் -/ விவேக ஞானம் என்னும் கோடரியால் வெட்ட வேண்டுமே –
குடும்ப மரம் வம்ச வருஷம் மட்டுமே அறிந்து சம்சாரத்தில் உழல்கின்றான் —
இந்த அரச மரத்தை -நன்றாக பதிந்த மரம் -ஸூ= நன்கு நின்று -வி= விசித்திர விவித -ஸூ விருட மூலம் -இரண்டையும் சொல்லி /
சுலபமாக கண்டு கொள்ள முடியாத மரம் -கோடரி -அசங்கம் -பற்று அற்ற -முக்குணங்களில் பற்று வைக்காத தன்மை /
திடமாக இருக்க வேண்டும் –எப்பொழுதும் இருக்க வேண்டும் -ஞானத்தின் அடிப்படையில் அசங்கம் வேண்டும் –

தத பதம் தத்பரிமார்கிதவ்ய–யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய–தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே–யத ப்ரவரித்தி ப்ரஸரிதா புராணீ–৷৷15.4৷৷
அதனால் -ஆத்ம பிராப்தியை -உயர்ந்த -தேடத் தக்கத்தை -தேடுவாய் –திடமான பற்று அற்ற தன்மையால் –
இதற்கு உபாயம் என்ன என்னில்-திருவடிகள் தானே –மூல புருஷனான எம்பெருமானை பற்று -அந்த -படர்க்கையில் சொல்கிறான் -அஹம்-சொல்லாமல் -தமேவ –
பிரபத்யே -பற்றுகிறேன் -யத–பற்றி அதனால் அஞ்ஞானம் தொலைத்து –
புருஷோத்தமன் -அரையன் சிறையன் இருவரும் சிறை சாலையில் -சிறை கதவை திறந்து விடுவேன் –
வைப்பான் என் திறப்பான் என் -கர்மாதீனம் —யதாக எவன் இடம் இருந்து -பிரவ்ருத்தி முக்குணங்கள் சேர்க்கை கிடைத்ததோ அவன் திருவடிகளை பற்றி –
தம் -இல்லை தமேவ -அவனையே -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக காரணன்

நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா–அத்யாத்மநித்யா விநிவரித்தகாமா–த்வந்த்வைர்விமுக்தா ஸுக துக்கஸம்ஜ்ஞை–ர்கச்சந்த்யமூடா பதமவ்யயம் தத்–৷৷15.5৷৷
பற்றினால் கிட்டும் பலன்கள் –போகிறார்கள் -ஆத்ம பிராப்தி அடைகிறார்கள் -அசங்கம் கோடரி கிட்டும் -பிறவி நீங்கி -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
தேஹாத்ம மயக்கம் இல்லை -முக்குணம் பற்று அற்று -ஆத்மசிந்தனையில் ஈடுபடுவான் -வேறு எதிலும் ஆசை இல்லை -இரட்டையில் இருந்து விடுபடுவார்
-மயக்கம் இல்லாமல் உயர்ந்த பிராப்தி பெறுகிறான் –

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக–யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம–৷৷15.6৷৷
பரிசுத்தமான ஆத்மா -/ஆத்ம சாஷாத்காரம் பெற்று -ஞானம் தேஜஸ் -மிக்கு -ஸூரியன் கொண்டு ஒளி பெற வேண்டாம் சந்திரன் அக்னி -இல்லாமல் தானே விளங்கும்
எத்தை அடைந்த பின் திரும்பி வர வேண்டாமோ -தாமம் தேஜஸ் -இந்த சொத்து மம -சேர்த்தே சொல்லுவான் /
எதனால் விளங்குகிறான் -யோகத்தால் -ஞான சஷூஸ்-கர்மா விலகியதும் யோகம் வளரும் -திருவடி பற்றி பற்று அறுக்க பிரார்த்திக்க வேண்டுமே –

மமைவாம் ஷோ ஜீவலோகே ஜீவபூத ஸநாதந–மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரகரிதிஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷
கீழே முக்தாத்மா தன்னுடைய உடைமை -இதில் பத்தாத்மாவும் என்னுடைய உடைமை -என்னுடைய அம்சமே -மிகவும் பழையவன்
-பிரகிருதி பரிணாமம் சரீரம் -வியாபாரம் செய்து -இந்திரியங்கள் செயல்பாட்டை செய்து கொண்டு இருக்கிறான் –

ஷரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஷ்வர–கரிஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர்கந்தாநிவாஷயாத்–৷৷15.8৷৷
அடுத்த சரீரம் போகும் பொழுது பூத ஸூ ஷ்மங்களை எடுத்து கொண்டே -காற்று மணம் -வண்டு தேன்களை கிரஹிக்குமா போலே
-ருசி வாசனைகள் உடனே -இந்திரியங்களையும் சப்தாதி விஷயங்களையும் -கொண்டே புகுகிறான்

ஷ்ரோத்ரம் சக்ஷு ஸ்பர்ஷநம் ச ரஸநம் க்ராணமேவ ச–அதிஷ்டாய மநஷ்சாயம் விஷயாநுபஸேவதே–৷৷15.9৷৷
விஷம் தோய்ந்த தேனை பருகுகிறான் -காது கண் –இத்யாதி மனஸ் -சப்தாதிகளிலே மேய விட்டு -அறியாமல் அனுபவிக்கிறான்

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்.விமூடா நாநுபஷ்யந்தி பஷ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ–৷৷15.10৷৷
ஆத்ம அபகாரம் திருட்டை பற்றி சொல்கிறான் இதில் -சரீரத்தில் புறப்படும் பொழுதும் இருக்கும் பொழுதும் புகும் பொழுதும்
-ஆத்மாவை பிரித்து பார்க்க தெரியாமல் மூடர்களாக -ஞானம் அறிய ஞான கண் கொண்டே பார்க்க முடியும் -சூழலிலே சிக்கி உழல்கின்றான்

யதந்தோ யோகிநஷ்சைநம் பஷ்யந்த்யாத்மந்யவஸ்திதம்–யதந்தோப்யகரிதாத்மாநோ நைநம் பஷ்யந்த்யசேதஸ–৷৷15.11৷৷
என்னை சரண் அடைந்து -கர்மங்களில் இருந்து முயன்றால் -உண்மை நிலையை அறிந்தவனாக -ஆகிறான் -/
பற்றாமல் முயல்வாருக்கு மனஸ் சுத்தி ஏற்படாமல் -இழக்கிறார்கள் –கைங்கர்யம் திருவடி சரண் அடைந்தே -செய்ய வேண்டும் –
சம்பந்தம் புரிந்தே முயல வேண்டும் -ஆத்மாவை தெரிந்து கொள்ள -மனஸ் சுத்தி வேண்டுமே

யதாதித்யகதம்- தேஜோ ஜகத்பாஸயதேகிலம்–யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்–৷৷15.12৷৷
இங்கு அனைத்தும் தன்னதே -கீழே முக்தாத்மா பத்தாத்மா சொல்லி -பிராசங்கிக்கமாக மூன்று ஸ்லோகங்கள் –
ஆதித்யன் -இடம் உள்ள தேஜஸ் -உலகம் அகிலம் ஒளி பெற -சந்திரன் -அக்னி தேஜஸ் -இந்த தேஜஸ் எல்லாம் என்னுடையதே என்று அறிந்து கொள் –

காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா–புஷ்ணாமி சௌஷதீ ஸர்வா ஸோமோ பூத்வா ரஸாத்மக–৷৷15.13৷৷
பூமியை அடைந்து -தரித்து -திறல்/ அமர்த்த ரசம் சந்திரனாக இருந்து போஷித்து சேதுபவனும் நானே /அனைத்து சக்திகளும் என்னது –

அஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித–ப்ராணாபாநஸமாயுக்த பசாம்யந்நம் சதுர்விதம்–৷৷15.14৷৷
ஜாடராக்னியாகவும்-இருந்து -பிராணிகள் தேகம் அடைந்து -பிராண வாயு அபான வாயு -நான்கு வித அன்னம் -கடித்து நக்கி உறிஞ்சி குடிக்கும் நான்கு விதம்
/நானே தளிகை பண்ணுகிறேன் -ஜீரணம் என்றவாறு -ஸமஸ்த வஸ்துக்களும் அவன் உடைமை என்றவாறு -/
அன்னம் -பிராமணனுக்கு -சொல்லி வஸ்திரம் கொடுத்ததாக வஸ்திர தானம் -ஐந்து வாயுக்களும் சரியான நிலையில்
சமான வாயு உடன் பிராண அபான வாயு சேர்ந்து –சாப்பிடட பதார்த்தங்கள் சக்தி பிரிந்து இந்திரியங்களுக்கு போக வேண்டுமே –

ஸர்வஸ்ய சாஹம் ஹரிதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்மரிதிர்ஜ்ஞாநமபோஹநம் ச–வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்தகரித்வேதவிதேவ சாஹம்–৷৷15.15৷৷
ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே –கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே /
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-/பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே /வேறு வேறு பிரயோஜனத்துக்காக வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா /ஸ்ம்ருதியும் / ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் /
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறிய படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது /வேதம் எத்தை சொல்ல போனாலும் -இவனது சரீரமே /
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச–க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷
லோகே வேதத்தில் சொல்லப் பட்ட படி -ஷரன் அழிவுக்கு உட்பட்ட சரீரம் உடன் உள்ள பத்தாத்மா / அஷரன் -முக்தாத்மா -/
பூத ராசிகள் எல்லாம் ஷரன் -உயர்ந்த முக்தாத்மா அஷரன் -/ இருவரும் வேதத்தில் சொல்லப்பட்டன

உத்தம புருஷஸ்த்வந்ய பரமாத்மேத்யுதாஹரித–யோ லோகத்ரயமாவிஷ்ய பிபர்த்யவ்யய ஈஷ்வர–৷৷15.17৷৷
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் -சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
-ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் -/ மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும் /

யஸ்மாத்க்ஷரமதீதோஹமக்ஷராதபி சோத்தம–அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷
எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி
-வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும் / ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல்

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத–৷৷15.19৷৷
யார் -என்னையே -சந்தேகம் இடம் இல்லாமல் -மயக்கம் இல்லாமல் -புருஷோத்தமன் என்று -அம்சமா அங்கமா அவயவமா ஐக்கியமா -சங்கை இல்லாமல்
அந்த ஆத்ம ஞானி -புருஷோத்தம வித்யை கை வந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான் –அவனை அடையும் உபாயங்கள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்
-என்னை பக்தி செய்யும் எல்லா முறைகளாலும் பக்தி பண்ணுகிறான் -கண்ணன் அபிப்பிராயம் இது -இவற்றால் எனக்கு ஏற்படும் ஆனந்தம்
-புருஷோத்தம வித்யை அறிந்தவன் தெரிவதால் அடைகிறேன் என்றபடி

இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரமிதமுக்தம் மயாநக–ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்கரிதகரித்யஷ்ச பாரத–৷৷15.20৷৷
புருஷோத்தம வித்யை அறிந்தவன் அனைத்தையும் அனுஷ்டித்தவன் ஆகிறான் -புனர் யுக்தி தோஷம் இல்லை -இதில் தான் அறிந்து அனுஷ்ட்டித்து அடைந்து
–செய்த வேள்வியர் – பூவை –யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -வியாக்யானம் போலே -பேர் வைத்து ஆனந்தம் இல்லை
திருநாமங்கள் சொல்லி பெற்ற ஆனந்தம் உலக குழந்தைகள் இவை கொண்டு விளையாடும் ஆனந்தம் பராங்குச நாயகி பெற்றாள்-
அதே போலே இங்கும் முந்திய ஸ்லோகங்களும் அர்த்தம் -குஹ்ய தமமான சாஸ்திரம் —ரஹஸ்யமாக வைத்து கொள் -குற்றம் அற்ற அர்ஜுனன்-

————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: