ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -14—-ஸ்ரீ குண த்ரய விபாக யோகம்:

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

முக்குண சேர்க்கை பிறவி காரணம் -அறிய படிக்கட்டு —
ஆச்சார்ய ஹிருதயம் சொல்லுமே இந்த ஏழையும் -இது சூழல் -ஆதி அந்தம் காண முடியாதே –
7-படிகள் – நிரதிசய ஆனந்தம்-ஸ்ரீ வைகுண்டம் – -அனந்த கிலேச பாஜனம்-சம்சாரம் -கடைசி படிகள்
6-ஞாதவ்ய பஞ்சக ஞான அஞ்ஞானங்கள் -அடுத்த படி -ஞானம் ஏற்பட்டால் ஸ்ரீ வைகுண்டம் -இல்லாவிட்டால் சம்சாரம்
அர்த்த பஞ்சக -ஞானம் வருவதற்கு என்ன வேணும்
5–இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-அதாவது – சத்வா சத்வங்கள் –
சத்வ குணம் இருந்தால் வரும் -ரஜஸ் தமஸ் களால் அஞ்ஞானம் -ஞானான் மோக்ஷம் அன்றோ –
அதற்கு என்ன பண்ணனும் -சத்வ குணம் வளர –
4–ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் -பிறப்பால் -ரஜஸ் தமஸ் -ஜாயமான கால கடாக்ஷம் -இவற்றுக்கு மூலம் –
3-இரு நல்லருள் நல் வினைகள் -கர்மமும் கிருபையும் -என்றபடி -இவற்றுக்கு அடி-
2–கர்மா க்ருபா பீஜம் பொய்ந்நின்ற ஞானம் – -அவித்யா ஸுஹார்த்தங்கள்-அருள் புரிந்த – ஏதன் நிமித்தம்
1 முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -இது தான் கீழ் படிக்கட்டு
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே
ஒண் பொருள் பொருள் அல்லாத என்னாதே நானில்லாத யானும் உளனாவான் என்கிற
சாம்யம் பெறத் தின்று ஊதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும் –
பரமாத்மா அசித் சாம்யம் சம்பந்திப்பவர்களை சாம்யம் ஆக்குவதில் சாம்யம்
சித் அசித் இரண்டும் சொத்து -என்பதில் சாம்யம் -சித் பரமாத்மா ஞானம் சாம்யம் –
பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் —ஜென்மம் -பபம் புண்ணியம் -எதனால் -உதங்க பிரஸ்னம் -உத்திரம் இல்லையே –
கர்மா ஆதி அற்றது -அந்தம் உண்டு –கிருபையால் வெட்டி விட முடியும் –
மேக மண்டலம் -வ்ருஷடி மழையாகி -பயிர் -தானியம் / அன்னம் / புருஷன் /
ரேதஸ் சோணிதம் -கர்ப்பம் -/பூர்வ க்ருத கர்மா தான் நிர்ணயிக்கும் -/
கர்மா –ஜென்ம -அசத்வ குணம் –எதிர் நீச்சல் போட்டு சத்வ குணம் வளர்க்க –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே –
இதை விளக்க இந்த அத்யாயம் -25 ஸ்லோகம் விவரித்து சொல்லி –26-ஸ்லோகம்- திருவடி பற்றி
போக்கிக் கொள் என்கிறான்

—————————————————————-

ஸ்ரீ பகவாநுவாச-
பரம் பூய ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்–
யஜ்ஜ்ஞாத்வா முநய ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா–৷৷14.1৷৷

ஸ்ரீபகவான் உவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
பரம் = உயர்ந்த
பூய: = மீண்டும், மேலும், அதிகம்
ப்ரவக்ஷ்யாமி = ப்ர வாக் க்ஷியாமி = சொல்கிறேன்
ஜ்ஞாநாநாம் = ஞானங்களில்
ஜ்ஞாநம் உத்தமம் = உயர்ந்த ஞானத்தை
யஜ்ஜ்ஞாத்வா = அதை உணர்ந்த பின்
முநய: = முனிவர்கள்
ஸர்வே = அனைத்து
பராம்= உயர்ந்த
ஸித்தி = சித்தியை
இதோ = இங்கிருந்து, இன்றிலிருந்து
கதா: = அடைந்தார்கள்

இதம் ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா–
ஸர்கேபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2৷৷

ஸ்ரீ பகவான் கூறுகிறார் -முன் கூறியதை விட வேறுபட்டதாய் அறிவுகளில் சிறந்ததாக அறிவைப்
பற்றி மறுபடியும் உரைக்கப் போகிறேன் –
எந்த அறிவைப் பெற்று எல்லா முனிவர்களும் இந்த சம்சாரத்துக்கு அப்பால் பட்டதான பேற்றைப் பெற்றனரோ –
சொல்லபோகும் அறிவைப் பெற்று என்னுடைய சாம்யத்தைப் பெற்றவர்
ஸ்ருஷ்ட்டி காலங்களில் பிறக்கவும் மாட்டார்கள் – பிரளய காலங்களில் ஞான சங்கோசாதிகளைப் பெற்று
சிரமப்படவும் மாட்டார்கள் –
உயர்ந்த அர்த்தம் மறுபடியும் சொல்கிறேன் – -மிக வேறு பட்ட உயர்ந்த -இதை அறிந்தே
எல்லா முனிவர்களும் சம்சாரம் தாண்டி ஆத்ம பிராப்தி மோக்ஷம் அடைந்தார்களோ அத்தை உன்னிடம்
அன்பினால் சொல்கிறேன் -முனி மனன சீலர் -இது நானே சொன்னது இல்லை -சர்வே முனிகளும் –

இரண்டாவது ஸ்லோகம்-முக்கிய ஸ்லோகம் – இந்த ஞானம் மூலம் -ஸ்ருஷ்ட்டி காலத்திலும் பிறப்பது இல்லை –
பிரளய காலத்தில் அழிவதும் இல்லை– முக்தன் ஆகிறான் -கிடைக்கும் பயனை சொல்லிய பின்பு
உபாயம் சொல்லுவான் -ஐக்கியம் மோக்ஷம் இல்லை –
அபஹத பாப்மா –பாபங்கள் தீண்டாமல் விஜர–சத்யகாமம் ஸத்யஸங்கல்பம் அஷ்ட குணங்களில் சாம்யம் –
அப்பும் அப்பும் அப்பும் உப்பும் -வாதம் –

மம யோநிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்பம் ததாம்யஹம்–
ஸம் பவ ஸர்வ பூதாநாம் ததோ பவதி பாரத–৷৷14.3৷৷

மம = என்
யோநி = ஆரம்பம், தொடக்கம்
மஹத்= பெரிய, உயர்ந்த
ப்ரஹ்ம = பிரமம்
தஸ்மிந் = அதில்
கர்பம் = கர்பம்
ததாமி = நான் செலுத்துகிறேன்
அஹம் = நான்
ஸம்பவ: = சம்பவிக்க, பிறக்க, தோன்ற
ஸர்வ பூதாநாம் = அனைத்தையும்
ததோ = அதன் பிறகு
பவதி = வந்தன
பாரத = பாரத வம்சத்தவனே

உலகுக்கு காரணமாய் பெரிதான ப்ரஹ்மம் எனபெரும் பிரகிருதி என்னுடையது –
அதன் இடத்தில் நான் ஜீவ ராசியைச் சேர்க்கிறேன் –
பரத வம்சத்தில் உதித்தவனே-அதில் இருந்து எல்லாப் பிராணிகளுக்கும் பிறவி ஏற்படுகிறது
பிரகிருதி ஆத்ம சம்பந்தம் -புருஷ -ஜீவாத்மா –நைமித்திக ஸ்ருஷ்ட்டி இதில் -என்னுடைய மூல பிரகிருதி –
மம-சொல்லிக் கொள்வதில் பெருமை இவனுக்கு -இது மிக பெரியது –
ஏ பாவம் பரமே -ஆழ்வார் இவனை-யானை மண்டபத்தில் தேடி கண்டு பிடிப்பது போலே –
உலகம் ஏத்தும் தென் ஆனை இத்யாதி
ஜீவ சமஷ்டியை கர்ப்பமாக புகுத்துகிறேன் -ஆத்மாக்கள் சேர்ந்து -சமஷ்டி-கர்ப்பமாக -சப்தம் -கர்ப்பம் கர்ப்ப பையா -சிசுவா –
கர்ப்ப பைக்குள் சிசு இருந்தால் தானே -இணை பிரியாத –சப்தம் இங்கும் உபயோகம் –
சரீரமா ஆத்மாவா என்று மயங்கும் படி அன்றோ ஸூசகம் –
கர்ப்பம் -ஜன்மா கொடுத்து கர்மா தொலைக்க -அதே போலே இங்கும் –
ததா-அதனாலே -எல்லா ஜீவா ராசிகள் பிறப்பும் -நான்முகன் தொடக்கி எறும்பு வரை

ஸர்வ யோநிஷு கௌந்தேய மூர்தய ஸம்பவந்தி யா–
தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோநி ரஹம் பீஜ ப்ரத பிதா–৷৷14.4৷৷

ஸர்வ = அனைத்தின்
யோநிஷு = ஆதி, மூலம், தோற்றம்
கௌந்தேய = குந்தி புத்திரனே
மூர்தய: = வடிவங்கள் , தோற்றங்கள்
ஸம்ப⁴வந்தி = உதிகின்றன
யா: = அவை
தாஸாம்= அவைகளில்
ப்³ரஹ்ம மஹத் = உயர்ந்த பிரம்மத்தின்
யோநி = தோற்றத்தில், மூலத்தில்
அஹம் = நான்
பீஜப்ரத = விதைக்கும், தோன்றவைக்கும்
பிதா = தகப்பன்

குந்தியின் புதல்வனே – அந்த அந்த யோனியில் என்ன உடல்கள் உண்டாகின்றனவோ
அந்த மூர்த்திகளுக்கு பெறும் பிரக்ருதியே காரணமாகும் -நான் ஜீவர்களாகிய விதைகளை அங்கே சேர்க்கும் தந்தை யாகிறேன்
தன்னை தந்தை -பீஜப்ரத பிதா— சொல்லிக் கொள்கிறான் -அவனை பிரார்த்தித்து தானே வெளி வர வேண்டும்
சரீரம் உடன் பல யோனிகளில் -அவை அத்தனைக்கும் மஹத் மூல பிரகிருதி கர்ப்பம் தரிக்கும் -நான் பிதா

ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா ப்ரக்ருதி ஸம் பவா–
நிபத்நந்தி மஹா பாஹோ தேஹே தேஹிநமவ்யயம்–৷৷14.5৷৷

ஸத்த்வம் = சத்வம்
ரஜஸ் = ரஜஸ்
தம = தமஸ்
இதி = என
குணா: = குணங்கள்
ப்ரக்ருதி = பிரக்ரிதியில்
ஸம்ப⁴வா: = சம்பவிக்கின்றன
நிபத்⁴நந்தி = பிணைக்கின்றன
மஹாபாஹோ = பெரிய தோள்களை உடையவனே
தேஹே = உடலையும்
தேஹிநம் அவ்யயம் = உடலைக் கொண்டதையும் பிணைக்கின்றன

நீண்ட கைகளை உடையவனே – பிரக்ருதியில் ஒன்றோடு ஓன்று சேர்ந்து இருக்கும்
சத்வம் ரஜஸ் தமஸ் என்கிற குணங்கள்
இயற்கையில் எவ்வித மாறுபாடும் இல்லாத ஜீவனை உடலில் இருக்கிறான் என்கிற காரணத்தினாலேயே
சம்சாரத்தில் பிணைத்து வைக்கின்றன
முக்குணங்கள் கட்டுப்படுத்துகின்றன -நேரே விஷயம் -அவதாரிகை மிக பெரியது –
பிரகிருதி உடன் விட்டு பிரியாத -இவையும் சப்தாதி குணங்களும் -பிரகிருதி உடன் சேர்ந்தே தானே இருக்கும்
மண் கந்தவாதி பிருத்வி -நெருப்பு ரூபம் – தண்ணீர் ரசம் -வாதம் கபம் பித்தம் சமமாக இருந்தால் ஆரோக்யம் –
ஆயுர் வேதம் சமமாக ஆக்கவே மருந்து
கபம் முதலில் இளைமையில் -நடுவில் பித்தம் தலை சுத்தும் -அப்புறம் வாதம் முட்டு வலிகள் போல்வன .
முக்குணங்கள் சமம் -பிரளயம் -தேகத்தில் தேஹினாம் ஆத்மாவை இயற்கையில் அழிவற்றவன் –
நன்றாக கட்டுப் படுத்தி வைக்கும்

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸக மநா மயம்–
ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந ச அநக–৷৷14.6৷৷

தத்ர = இவற்றுள்
ஸத்த்வம் = சத்வ குணம்
நிர்மலத்வாத் = தூய்மையானது
ப்ரகாஸ²கம் = ஒளி பொருந்தியது
அநாமயம் = ஆரோக்கியமானது
ஸுக= மகிழ்ச்சியானது
ஸங்கேந = இணைக்கக் கூடியது
ப³த்⁴நாதி = பிணைத்தல்
ஜ்ஞாந = ஞானம்
ஸங்கேந = இணைத்தல்
சா = மேலும்
அநக = பாவம் அற்றவனே ( அர்ஜுனா )

குற்றம் அற்றவனே-அந்தக் குணங்களில் சத்துவ குணம் மற்றக் குணங்களின் ஸ்வ பாவமான அழுக்கு அற்றது ஆகையால்
தெளிவான ஞானத்தை உண்டு பண்ணும் ஆரோக்கியத்துக்குக் காரணம் ஆகும் –
ஸூகத்தின் பற்றுதலை அளித்தும் -ஞானத்தில் பற்றுதலை அளித்தும் அது சம்சாரத்தில் ஜீவனைப் பிணைக்கிறது
அநக -குற்றம் அற்ற -நிர்மலம் குற்றம் அற்ற -ஞானம் ஆனந்தம் தடை பண்ணாமல் -சத்வ குணம் அப்படி —
ரோகம் அற்ற வாழ்வும் உண்மையான அறிவைக் கொடுக்கும் சத்வ குணம் -யதார்த்த ஞானம் —
சத்வ குணம் வளர்த்தாலும் பந்தம் -முக்குணங்களும் கட்டுப்படுத்தும் -முதல் படி சத்வம் வளர்ப்பது
சுகம் கொடுக்கும் -ஆசை ஏற்படுத்தி கட்டுப்படுத்தும் -ஞானம் கொடுத்து கட்டுப் படுத்தும் —
செயல் பாட்டில் மூட்டும் -பொன் விலங்கு போலே -லௌகிக கார்யம் பண்ண வைக்கும் –

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம்–
தந் நிபத்நாதி கௌந்தேய கர்ம ஸங்கேந தேஹிநம்–৷৷14.7৷৷

ரஜோ = ரஜோ குணம்
ராகா³த்மகம் = ஆர்வத்துடன் கூடிய விருப்பம்
வித்³தி = அறிந்து கொள்
த்ருஷ்ன = தாகம்
ஸங்க = சேர்தல் , கூடுதல்
ஸமுத்³ப⁴வம் = உருவாகிறது
தந் = அது
நிபத்நாதி = கட்டுதல், பிணைத்தல்
கௌந்தேய = குந்தியின் மகனே
கர்மஸங்கேந = செயல்களோடு சேர்வதனால்
தேஹிநம் = யார் உடலை கொண்டு இருக்கிறானோ

ரஜோ குணத்தை ஆண் பெண்களுக்குப் பரஸ்பரம் ஏற்படும் காமத்துக்குக் காரணமானதாகவும்
சப்தாதி விஷயங்களில் இருக்கும் ஆசை புத்ர மித்ராதிகளுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்கிற சாபல்யம்
இவற்றுக்குக் காரணமானதாகவும் அறிவாய் -குந்தீ புத்திரனே -அந்த ரஜோ குணம்
ஜீவனை செயல்களில் பற்றுதலை உண்டாக்கிப் பிணைக்கிறது
ரஜோ குணம் -காமம் தூண்டு வித்து -விஷயாந்தர ஆசைகளை – சங்கம் -பத்னி புத்ராதிகள் இடம் ஆசை –
ஆசைகளை நிறைவேற்ற செயல்பாட்டில் மூட்டும்

தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வ தேஹிநாம்–
ப்ரமாதாலஸ்ய நித்ராபிஸ் தந்நிபத்நாதி பாரத–৷৷14.8৷৷

தம = தமோ குணம்
து = மேலும்
அஜ்ஞாநஜம் = அறிவீனத்தில் இருந்து பிறக்கிறது
வித்தி = அறி
மோஹநம் = மயக்கம், குழப்பம்
ஸர்வ = அனைத்து
தேஹிநாம் = இணைந்துள்ள, பிணைத்துள்ள, சேர்ந்துள்ள
ப்ரமாதா = பித்து பிடித்து, மனக் குழப்பம் அடைந்து,
அலஸ்ய = சோம்பேறித்தனத்தில்
நித்ராபி = தூக்கத்தில்
தந் = அது
நிபத்நாதி = பிணைக்கிறது
பாரத = பாரத குலத் தோன்றலே

தமோ குணத்தையோ என்னில் விபரீத ஞானம் மூலம் பாபத்தினால் உண்டானதாகவும்
எல்லாப் பிராணிகளுக்கும் விபரீத ஞானத்துக்கு காரணமானதாகவும் அறிவாயாக
பரத வம்சத்தில் உதித்தவனே -அந்தத் தமோ குணம் கவனக் குறைவு -சோம்பல் உறக்கம் –
இவற்றின் மூலம் பிணைக்கிறது –
தமஸ் -பிரமாதம் கவனக் குறைவு -கவனம் இன்மை -ஆலஸ்யம் சோம்பல்-நித்திரை தூக்கம்-மூன்றும் கொடுக்கும் —
அஞ்ஞானம் -விபரீத ஞானம் -தர்மத்துக்கு புறம்பாக மோஹிக்க வைக்கும் –
அறிவு ஆசை மயக்கம் -சத்யம் -ரஜஸ் தமஸ் -மூன்றும்

ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜஸ் கர்மணி பாரத–
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத–৷৷14.9৷৷

ஸத்த்வம் = சத்வ குணம்
ஸுகே = சுகத்தில்
ஸஞ்ஜயதி = பிணிக்கிறது
ரஜ: = ரஜோ குணம்
கர்மணி = செயல்களில்
பா⁴ரத = பாரதக் குலத் தோன்றலே
ஜ்ஞாநம் = ஞானம்
அமாவ்ருத்ய = சூழ்கிறது
து = ஆனால்
தம: = தமோ குணம்
ப்ரமாதே = குழப்பத்தில்
ஸஞ்ஜயத் யுத = பிணைக்கிறது

பரத வம்சத்தில் தோன்றினவனே -சத்வ குணம் ஸூகத்தில் பற்றுதலை உண்டாக்கும்
ரஜோ குணம் கர்மத்தில் பற்றுதலை உண்டாக்கும் –
தமோ குணமோ என்றால் தெளிவை வராதபடி செய்து விபரீதச் செயலில் பற்றுதலை விளைவிக்கும் –
சத்வம் சுகம் தோற்றுவிக்கும் -ரஜஸ் செயல்பாட்டில் தூண்டும் -அசாஸ்த்ர விஷயங்களில் -தூண்டும் –
உள்ள படி அறிய வேண்டிய ஞானத்தை தமோ குணம் மூடி விடும் –
விதிக்கப்பட்ட கர்மாவை செய்யாமல் -நிந்தித்த கர்மங்களை செய்ய வைக்கும் –

ரஜஸ் தமஸ் சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத–
ரஜஸ் ஸத்த்வம் தமஸ் சைவ தம ஸத்த்வம் ரஜஸ் ததா–৷৷14.10৷৷

ரஜஸ் = ரஜோ குணம்
தமஸ் = தமோ குணம்
சா = மேலும்
அபிபூய = மேற்செல்கிறது
ஸத்த்வம் = சத்வ குணம்
பவதி = ஆகிறது
பாரத = பாரத குலத் தோன்றலே
ரஜ:= ரஜோ குணம்
ஸத்த்வம் = சத்வ குணத்தையும்
தமஸ் = தமோ குணத்தையும்
ச = மேலும்
எவ = ஆகிறது
தம: = தமோ குணம்
ஸத்த்வம் = சத்வ குணம்
ரஜஸ் = ரஜோ குணம்
ததா = மேலும்

பரத குலத்தில் பிறந்தவனே -சத்வ குணம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி -தான் வளர்கிறது
மற்றொரு சமயம் ரஜோ குணம் அந்த சத்வ தமோ குணங்களை அடக்கித் தான் வளர்கிறது
வேறொரு சமயம் தமோ குணம் சத்வம் ரஜஸ் இவற்றை அடக்கித் தான் வளர்கிறது
காலையில் சத்யம் -தேவ குணம் -பிடித்து மேலே ஏறி ஏணியை தள்ளி அவனை அடைய வேண்டும் –
ரஜஸ் தமோ குணம் சூழ்ந்து கொண்டு சத்வ குணம் மேலோங்கி இருக்கும் –எல்லாம் புரியும் -ஆசை மிக்கு இருந்தால் -ரஜஸ்
தூக்கம் வந்தால் தமோ குணம் ஓங்கி இருக்கும் நமக்கே தெரியுமே – மூன்றும் மூன்று சமயங்களில் ஓங்கி இருக்கும்

ஸர்வத்வாரேஷு தேஹேஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே–
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத் விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத—৷৷14.11৷৷

ஸர்வ = அனைத்து
த்வாரேஷு = வழிகளிலும்
தேஹே = தேகமுடைய
அஸ்மிந் = இதில்
ப்ரகாஸ = பிரகாசம்
உபஜாயதே = வெளிப் படுமானால்
ஜ்ஞாநம் = அறிவு , ஞானம்
யதா = அப்போது
ததா = அதனால்
வித்யாத் = அறிவு
விவ்ருத்தம் = மேலதிகமாகி
ஸத்த்வம் = சத்வ குணம்
இதி = எனவே
யுத = நிச்சயமாக

கண் முதலான ஞான மார்க்கங்களில் எப்பொழுதும் தெளிவான விவகாரத்துக்கு உறுப்பான அறிவு உண்டாகிறதோ
அந்த சமயம் அறிவு உண்டான உடலில் சத்வ குணம் வளம் பெற்றதாக அறியலாம்
சத்வ குணம் வளர்ந்து இருக்கும் -தேகத்தில் ஞான பிரசுர ஆறு த்வாரங்களிலும் –
ஞான இந்திரியங்களும் மனசும் –ஞானம் ஏற்பட்டால் சத்வ குணம் ஓங்கி இருக்கும் –
குருடன் செவிடனுக்கும் சத்வ குணம் உண்டு –வேலை செய்தால் தான் என்பது இல்லை –
பிரசாதத்தால் குருடன் பார்க்கிறான் -கூரத் தாழ்வான -யார் எதை கேட்டாலும் கொடுக்கும் -காண் தகு தோள் அண்ணல்

லோப ப்ரவ்ருத்திராரம்ப கர்மணாம் அஸமம் ஸ்ப்ருஹா–
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப–৷৷14.12৷৷

லோப: = பேராசை
ப்ர வ்ருத்தி = சிறந்தவற்றை பெருக்குவது.
ஆரம்ப: = தொடங்குவது
கர்மணாம் = வேலை செய்வது
அஸ²ம: = சம நிலை குலைவது (சமம், அசமம்)
ஸ்ப்ருஹா = பொறாமை, ஏக்கம்
ரஜஸ் = ரஜோ குணத்தின்
யேதாநி = இவையே
ஜாயந்தே = பிறக்கின்றன (ஜன் = பிறப்பது)
விவ்ருத்தே = பெருகும்போது, அதிகமாகும் போது
பரதர்ஷப =பாரதக் காளையே

பரத வம்ச ஸ்ரேஷ்டனே -செலவழிக்க மனம் வராமை -பயன் அற்ற செயலில் முனைதல் –
பலனைக் கருதி செயல் படுதல் -புலன் அடக்கம் இல்லாமை -விஷயங்களில் பற்று -இவை
ரஜோ குணம் வளர்ந்த போது உண்டாகின்றன
ரஜஸ் –கருமி தனம் உயர்ந்து -எனக்கே என்று -விசித்ரா தேக சம்பந்தி
கரணங்கள் அவனுக்கும் அடியாருக்கு தொண்டு செய்யவே – பயன் அற்ற செயல்களில் மூட்டும்
இந்திரியங்களை அடக்காமல் -அஸமம் ஸ்ப்ருஹா-விஷயாந்தரங்களில் ஆசைகளை மூட்டும் –

அப்ரகாஸோ ப்ரவ்ருத்திஸ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச–
தமஸ்யேதாநி ஜாயந்தே விவவ்ருதே குருநந்தந–৷৷14.13৷৷

அப்ரகாஸ = அ + பிரகாஸ. = பிரகாசம் இல்லாமல்; வெளிச்சம் இல்லாமல்
அப்ரவ்ருத்தி = அ + ப்ரவர்த்தி = முயற்சி இன்றி.
ச = மேலும்
ப்ரமாதோ = உன்மந்தம் அடைந்து
மோஹ = மயக்கம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
தமஸ் = தமோ குணத்தின்
யேதாநி = அதுவே
ஜாயந்தே = உருவாகிறது
விவ்ருத்தே = பெருகி
குருநந்தந = குருகுலத்தவனே

குரு வம்சச் செல்வமே -அறியாமை -செயல் படாமை -கவனக்குறைவு – புத்தி மாறாட்டம் என்ற
இவை எல்லாம் தமோ குணம் வளர்ந்த போது உண்டாகும் –
இருள் மூடி –படிப்பது காலையில் மிக பயன் கொடுக்கும் -ராக்ஷஸ வேளையில் ராஷஸ புத்தி தானே வரும்
அந்யதா ஞானம் விபரீத ஞானம் மோஹம் விளைவிக்கும் –

யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்–
ததோத்தம விதாம் லோகாநமலாந் ப்ரதிபத்யதே৷৷14.14৷৷

யதா= எப்போது
ஸத்த்வே = சத்வ குணம்
ப்ரவ்ருத்தே = மிகுந்து இருக்கும் போது
து = அப்போது
ப்ரலயம் = முடிவு,
யாதி = சென்று சேர்கிறான்
தேஹப்ருத் = உடலை உடையவன்
ததா = அப்போது
உத்தம விதாம் = உயர்ந்தவற்றை அறிந்தவர்கள், ஞானிகள்
லோகா = உலகை
அமலாந் = எ+ மலம் = குற்றம் இல்லாத, தூய்மையான
ப்ரதிபத்யதே = அடைவார்கள்

எந்த சமயம் சத்வ குணமே வளர்ந்து இருக்க உடலைத் தங்கி நிற்கும் ஜீவன் மரணம் அடைகிறானோ –
அப்பொழுது அவன் ஜீவாத்மா பரமாத்மா என்ற உயர்ந்த விஷயங்களை அறிவோரின்
அழுக்கற்ற குலங்களை அடைகிறான்
சத்யம் வளர்ந்த தசையில் -பிராணன் போனால் சத்ய குண நிஷ்டர்கள் இடம் மீண்டும் பிறந்து -உயர்கிறான் –
உத்தம வித்துக்கள் –ஆத்ம ஞானம் படித்த சமூகம் –

ரஜஸி ப்ரலயம் கத்வா கர்ம ஸங்கிஷு ஜாயதே–
ததா ப்ரலீநஸ் தமஸி மூடயோநிஷு ஜாயதே–৷৷14.15৷৷

ரஜஸி = ரஜோ குணம் மிகுந்துள்ள ஒருவன்
ப்ரலயம் = முடிவில்
கத்வா = செல்வான்
கர்ம ஸங்கி ஷு = கர்மத்தில் பற்று உள்ளவர்களுடன்
ஜாயதே = பிறப்பான், சேருவான்
ததா = அதே போல்
ப்ரலீநஸ் = முடிவில்
தமஸி = தமோ குணம் மிகுந்துள்ளவன்
மூட = அறிவற்றவர்களுடன்
யோநி ஷு ஜாயதே = தோன்றுவான், சேருவான்

ரஜோ குணம் விருத்தி அடைந்த போது மரணம் பெற்றால் பல பயணிகளுக்காக உழைப்பவர்களிடையே உண்டாகிறான்
எப்பொழுது தமோ குணம் வளர்ந்த சமயம் மரிக்கிறானோ அப்பொழுதே செடி கொடிகளாகப் பிறக்கிறான்
ரஜஸ் -கர்மங்களிலே மூட்டும் -அங்கே சேர்கிறான் –
தமஸ் -ஸ்தாவரங்கள் யோனியில் -ஜங்கமாக ஞானம் அற்ற ஜென்மம் –

கர்மண ஸுக்ருதஸ்யாஹு ஸாத்த்விகம் நிர்மலம் பலம்—
ரஜஸஸ்து பலம் துக்கமஜ்ஞாநம் தமஸ பலம்–৷৷14.16৷৷

கர்மண: = செயல்களின்
ஸுக்ருதஸ்ய = சுக்கிரதசை = சு + க்ர + தஸ்ய = ‘சு’ என்றால் உயர்ந்த, சிறந்த.
க்ர என்றால் காரியம். உயர்ந்த நல்ல (செயல்களின்)
ஆஹு: = சொல்லப் படுகிறது
ஸாத்த்விகம் = சாத்வீக குணம்.
நிர்மலம் = தூய்மையான
பலம் = பலன்
ரஜஸஸ் து = ரஜோ குணத்தின்
பலம் = பலன்
து:கம் = துக்கம்
அஜ்ஞாநம் = அறிவீனம்
தமஸ: = தமோ குணத்தின்
ப²லம் = பலன்

சத்வ குணத்திலான பிறவியில் பலனைக் கருதாமல் செய்யும் செயலுக்கு வளர்ந்த
சத்வ குண மூலமான பலனைச் சொல்கின்றனர்
ரஜோ குண மூலமான பிறவியில் செய்யும் செயலின் பலனை துக்க மயமாகவே கூறுகின்றனர்
தமோ குண மூலமான பிறவியில் செய்யுமவற்றுக்குப் பலன் அறிவின்மையே என்று கூறுகின்றனர்
தமஸ் -அஞ்ஞானம் வளர்த்து கொள்கிறான்

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷

ஸத்த்வாத் = சத்வ குணம்
ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது
ஜ்ஞாநம் = ஞானம்
ரஜஸோ = ரஜோ குணம்
லோப = பேராசை
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ப்ரமாத = மயக்கமும்
மோஹௌ = குழப்பமும்
தமஸோ = தமோ குணத்தின்
பவதோ = ஒன்றாகிறது
அஜ்ஞாநம் = அறிவீனம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்

சத்வ குண வளர்ச்சியால் ஆத்ம சாஷாத்காரம் ஆகிற ஞானம் உண்டாகும்
ரஜோ குணம் வளர்வதனால் உலோபித்தனம் தான் உண்டாகும்
வளர்ச்சி பெற்ற தமோ குணத்தினால் கவனக்குறைவு விபரீத ஞானமும்
அறிவின்மையுமே உண்டாகின்றன –
சத்வம் -ஆத்ம சாஷாத்காரம் – பலன்களில் ஆசை மூட்டும்

ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா–
ஜகந்ய குண வ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா–৷৷14.18৷৷

ஊர்த்வம் = மேல் நோக்கி
க³ச்ச²ந்தி = செல்வார்கள்
ஸத்த்வஸ்தா = சாத்வீக குணம் கொண்டோர்
மத்யே = நடுவில்
திஷ்ட²ந்தி = இருப்பார்கள்
ராஜஸா: = ராஜச குணம் உடையோர்
ஜகந்ய கு³ண வ்ருத்தி ஸ்தா = கீழான குணத்தை கொண்டோர்
அதோ = கீழ்நோக்கி
க³ச்ச²ந்தி = செல்வர்கள்
தாமஸா: = தமோ குணம் உடையவர்கள்

முன் கூறியவாறு சத்வத்திலேயே நிலை பெற்றவர் மிக உன்னதமான மோக்ஷத்தையே பெறுகின்றனர்
ரஜோ குணத்திலேயே நிலை நின்றவர் -நடுத்தரமாக -அதாவது பலனைக்கருதி கர்மாவைச் செய்து
ஸ்வர்க்காதி பலனை அனுபவிப்பது -அதை இழந்து பிறப்பது -மறுபடியும் கர்மாவைச் செய்வது -என்ற
நிலையில் போவதும் வருவதுமாக இருப்பார்கள்
தமோ குணத்தையே பெருக்கிக் கொண்டவர்கள் மிக மிக ஈனமான தமோ குணத்தின் செயல்களில்
நிலை பெற்றவர்களாய் மிகவும் கீழ்மையையே பெறுகின்றனர்
சத்வ குண நிஷ்டர் மேல் லோகம் -ரஜஸ் நடுவில் உழன்று -தமஸ் குண நிஷுடன் கீழே நரகில்

நாந்யம் குணேப்ய கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஸ்யதி–
குணேப்யஸ்ச பரம் வேத்தி மத் பாவம் ஸோதிகச்சதி—৷৷14.19৷৷

அறிவுள்ள ஜீவன் எப்பொழுது முற்று குணங்களைக் காட்டிலும் வேறானதை -கார்யங்களைச் செய்வதாக
காணாமல் இருக்கிறானோ -ஆத்மாவை குணங்களைக் காட்டிலும் விலக்ஷணனாகவும் அறிகிறானோ –
அவன் என்னைப் போல் குணங்களுக்கு வசமாகாமையைப் பெறுகிறான் –
முக்குணங்களில் வேறுபட்டவன் ஆத்மா –கர்மாதீனம் -என்று அறிந்து –ஆத்மாவை கர்த்தா இல்லை
குணங்கள் செயல் புரிய வைக்கின்றன -அறிந்தவன் அவன் நிலையை அடைகிறான் –

குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹ ஸமுத்பவாந்—
ஜந்ம ம்ருத்யு ஜரா துக்கைர் விமுக்தோ அம்ருதமஸ்நுதே—৷৷14.20৷৷

கு³ணா = குணங்களை
எதத் = அவைகளை
அதீத்ய = தாண்டி
த்ரீந் = மூன்று
தேஹீ = தேகத்தை உடையவன்
தேஹ ஸமுத் பவாந் = உடலில் இருந்து பிறக்கும்
ஜந்ம = பிறப்பு
ம்ருத்யு = இறப்பு
ஜராது = மூப்பு
துகை²ர் = துக்கம், துன்பம்
விமுக்தோ = விடுதலை அடைகிறான்
அம்ருதம் = அமிர்தம், இறவா நிலையை
அஸ்நுதே = அடைகிறான்

உடம்பு சம்பந்தமுள்ள ஜீவன் உடலாகிய பிரக்ருதியில் இருக்கும் இந்த சத்வாதி முக்குணங்களைக் கடந்து
கர்த்தாக்களான குணங்களை விடத் தன்னை வேறாக அறிந்து பிறவி மரணம் மூப்பு துக்கம் இவற்றில் இருந்து
விடப்பட்டவனாய் அழியாத ஆத்ம நிலையைப் பெறுகிறான் –
முக்குணத்தினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று -இறுதியில் மூன்றையும் தாண்ட வேண்டும் —
தேகம் உடன் சேர்ந்தே உள்ள முக்குணங்களை தாண்டி ஆத்ம பிராப்தி அம்ருதம் அடைகிறான் –
ஜென்மாதிகளை தாண்டுகிறான் –

அர்ஜுந உவாச
கைர்லிங்கை ஸ்த்ரீந் குணாநேதா நதீதோ பவதி ப்ரபோ–
கிமாசார கதம் சைதாம் ஸ்த்ரீந் குணாநதிவர்ததே–৷৷14.21৷৷

அர்ஜுந உவாச = அர்ஜுனன் கேட்கிறான்
கை = எந்த
லிங்கை = அடையாளங்களோடு இருப்பான் ?
த்ரீந் = மூன்ற
கு³ணா = குணங்களை
ஏதன் = இந்த
அதீதோ = கடந்தவன்
பவதி =அவன்
ப்ரபோ= பிரபுவே
கிம் = எப்படி, எதனால், எங்கு
ஆசார = நியதிப்படி , ஒழுக்கத்தில்
கதம் = எப்படி ?
சா = மேலும்
ஏதம் = இந்த
த்ரீந் = மூன்று
கு³ணா = குணங்களை
அதி வர்ததே = கடந்து போகிறான்

அர்ஜுனன் கூறுகிறான் – எம்பெருமானே இந்த மூன்று குணங்களைக் கடந்தவன் அதற்கான என்ன
அடையாளங்களுடன் கூடியவனாக ஆகிறான் –
அவன் நடவடிக்கை எத்தகையது –
எந்த உபாயத்தால் மூன்று குணங்களைக் கடக்கிறவனும் ஆகிறான் –
அடையாளம் காட்டு இப்படி முக்குணங்களை தாண்டி இருப்பார்களே என்ன –நீயாவது ஆவாய் என்று பார்க்கிறேன் –
லிங்கம் -உள் அடையாளங்களும் வெளி அடையாளங்களும் உடன் இருப்பான் -எப்படி தாண்டுகிறான் –

ஸ்ரீ பகவாநுவாச
ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ–
ந த்வேஷ்டி ஸம் ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி–৷৷14.22৷৷

ஸ்ரீபகவாந் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ப்ரகாஸம் = ஒளி
ச = மேலும்
ப்ரவ்ருத்திம் = தொழில்
ச = மேலும்
மோஹமேவ = மயக்கம்
ச = மேலும்
பாண்டவ = பாண்டவனே
ந = இல்லை
த்வேஷ்டி = துவேஷம் கொள்வது இல்லை. பகை கொள்வது இல்லை. வெறுப்பது இல்லை
ஸம்ப்ரவ்ருத்தாநி = தோன்றும் போது
ந = இல்லை
நிவ்ருத்தாநி = நீங்கிய போது
காங்க்ஷதி = விரும்புவதும் இல்லை

ஸ்ரீ பகவான் கூறுகிறான் -அர்ஜுனா சத்வ கார்யமான அறிவையும் -ரஜஸ்ஸின் கார்யமான செயலையும் –
தமஸ்ஸின் கார்யமான விபரீத ஞானத்தையும் அநிஷ்ட விஷயங்களில் வருமவற்றை அவை நேர்ந்த போதே
வெறுப்பது இல்லை -இஷ்ட விஷயங்களில் அவை விலகிய போது எதிர்பார்ப்பது இல்லை
முக்குண கார்யம் பிரகாசம் பிரவ்ருத்தி மோஹம் மூன்றையும் சொல்லி -தம் கார்யம் செய்யட்டும் –
நமக்கு இவற்றுடன் ஒட்டு இல்லை -நான் கர்த்தா இல்லை என்ற நினைவுடன் –
அநிஷ்டம்-அநிஷ்ட காரணங்கள் வந்தால் வெறுக்காமல்
இஷ்டம் இஷ்ட காரணங்கள் -வந்தால் விரும்பாமல் -இருந்து -உதாசீனனாக இருப்பான்

உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே–
குணா வர்தந்த இத்யேவ யோவதிஷ்டதி நேங்கதே–৷৷14.23৷৷

உதாஸீநவத் = உதாசீனம் செய்பவனைப் போல
அஸீநோ = அமர்ந்து இருப்பான்
குணை = குணங்களால்
யோ = எவன் ஒருவன்
ந = இல்லை
விசால்யதே = அலைகழிக்கப் படுவதில்லை, சலிப்படைவதில்லை
குணா =குணங்கள்
வர்தந்த = நிகழும்
இதி = இப்படித் தான்
யேவ = நிச்சயமாக
யோ = அவன்
அவ திஷ்டதி = ஸ்த = நிலையாக. அவ திஷ்டதி = ஸ்திரமாக இருப்பான்
இங்கதே = சலனம் அடையாமல்

ஆத்மாவைக் காண்பதில் திருப்தியுற்ற எவன் வேறு விஷயங்களில் கவனமற்று இருக்கிறானோ –
சத்வாதி குணங்களால் விருப்பு வெறுப்பு வற்றின் மூலம் அசைக்கப்படாது இருக்கிறானோ –
சத்வாதி குணங்கள் அவற்றின் கார்யங்களைச் செய்கின்றன என்றே எண்ணி வாளா இருக்கின்றானா –
அவற்றின் செயலுக்குத் தக்கவாறு நடவாமல் இருக்கிறானோ –
அவன் முக்குண மாயயைக் கடந்தவனாகப் பேசப் பெறுகிறான்
எப்படி இருப்பான் -உதாசீனனாக -பக்கத்து வீட்டில் நடப்பது போலே -இருக்கலாம் -எல்லாம் அவன் சம்பந்தம் -விகாரம் அடையாமல் –
குணங்கள் இருக்கும் அவற்றின் காரியம் செய்யும் -நான் கர்த்தா இல்லை என்று இருப்பானே

ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஸ்ம காஞ்சந–
துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி–৷৷14.24৷৷

ஸம துக ஸுக = துக்கத்தையும் இன்பத்தையும் சுகமாக பார்ப்பான்.
ஸ்வஸ்த = தன்னிறைவு கொண்டான்
ஸம லோஷ்டாஸ்ம காஞ்சந: = மண்ணாங் கட்டியையும் தங்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்
துல்ய ப்ரிய அப்ரியோ = மனதிற்கு பிடித்ததையும் பிடிக்காததையும் ஒரே அளவாக பார்ப்பான்
தீர = உறுதியுடன் இருப்பான்
துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி: = நிந்தனையையும் புகழ்ச்சியையும் ஒன்றாகப் ஏற்றுக் கொள்வான்

ஸூகம் துக்கம் இவற்றில் எது நேர்ந்தாலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பவன் –
தன் ஆத்மாவிலேயே நிலைத்து இருப்பவன் -மண்கட்டி கல் ஸ்வர்ணம் இவற்றை சமமாக -அதாவது
விடத்தக்க பொருளாக நினைப்பவன் –
ஸூகத்துக்கு காரணமான இஷ்டமான வஸ்துவையும் துக்கத்துக்குக் காரணமான அநிஷ்டமான வஸ்துவையும்
சமமாகக் கொண்டவன் -ஆத்ம விவேகம் உள்ளவன் –
தன்னைப் பழிப்பதையும் புகழ்வதையும் சமமாக நினைப்பவன்
கீழே உள் அடையாளம் -சுகம் துக்கம் சமம் –ஆத்மாவில் ஈடுபாட்டுடன் இருப்பான் இதுவே அடிப்படை –
மண் கட்டி கல் பொன் அனைத்திலும் துல்ய பிரிய அப்ரியமாக இருப்பான் –
இவற்றை விட ஆத்மா உயர்ந்தது என்ற உண்மை அறிவு வந்தால் இது நடக்கும் -இது முதல் படி -அப்புறம் பரமாத்மா நோக்கி –
இனியது இனிமை இல்லாதது இரண்டிலும் துல்யமாக – வெளி அடையாளம் -வைதாலும் ஸ்தோத்ரம் பண்ணினாலும் சமம்

மாநாபமாநயோஸ் துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–
ஸர்வாரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷

மாநாபமாநயோஸ்துல்ய = மான அவமானங்களை ஒன்றாகக் கருதுவான்
ஸ்துல்யோ = ஒன்றாகக் கருதுவான்
மித்ராரிபக்ஷயோ: = நண்பனுக்கும் பகைவனுக்கும் இடையில்
ஸர்வாரம்பபரித்யாகீ = அனைத்து தொழில் முயற்சிகளையும் விடுத்து
குணாதீத: ஸ உச்யதே = குணங்களை கடந்தவனென்று கூறப்படுகிறான்

பிறர் மனத்தாலும் உடலாலும் செய்யும் கௌரவ அகௌரவங்களை சமமாகக் கருதுபவன் –
நண்பன் விரோதி இருவர் பக்கலிலும் ஒரே மாதிரி இருப்பவன் -ஆத்மாவைத் தவிர மற்ற விஷயங்களைப்
பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் விட்டவன் எவனோ அவன் குணங்களைக் கடந்தவனாகக் கூறப்படுகிறான் –
மானம் அவமானம் -விரோதி மித்ரன் சமம் -பிரகலாதன் -எங்கு பார்த்தாலும் அவனே –
தேக கார்யம் செய்யாமல் ஆத்ம கார்யம் மட்டுமே
ஆஸ்ரம தர்மங்களை விடாமல் -இப்படி முக்குணம் தாண்டி

மாம் ச யோவ்யபிசாரேண பக்த யோகேந ஸேவதே–
ஸ குணாந் ஸமதீத்யைதாந் ப்ரஹ்ம பூயாய கல்பதே–৷৷14.26৷৷

மாம் = என்னை
ச = மேலும்
யோ = எவன்
அவ்யபிசாரேண = மாறாத
பக்தியோகேந = பக்தி யோகத்தில்
ஸேவதே = சேவை செய்கிறானோ
ஸ = அவன்
குணாந் = குணங்களின்
ஸமதீத்யை = தாண்டி , கடந்து
எதத் = இவை
ப்ரஹ்ம பூயாய = பிரம்மத்தின் நிலையை
கல்பதே = அடையத் தகுந்தவன்

எவன் வேறு ஓன்று கலசாத பக்தி யோகம் -அதன் அங்கங்கள் இவற்றைக் கொண்டு என்னை உபாசிக்கிறானோ
அவன் இந்த முக்குணங்களையும் கடந்து ஆத்மாவின் உண்மை நிலையைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறான்
அசக்தனுக்கு -மாம் -பரம காருணிகம் உனக்கு நன்மை செய்ய காத்து இருக்கிறேன்-
அந்ன்ய பக்தி யோகம் -பிரயோஜனாந்த சம்பந்தம் இல்லாமல்
சேவை பஜனம் பண்ணி முக்குணங்களை எளிதில் தாண்டுகிறான் –

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம் அம்ருதஸ்யாவ்ய யஸ்ய ச–
ஸாஸ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யை காந்திகஸ்ய ச—৷৷14.27৷৷

ப்ரஹ்மணோ = பிரம்மமும்
ஹி = என்றால்
ப்ரதிஷ்டா = அடிப்படை, மூலம்,
அஹம் = நான்
அம்ருதஸ்யா = நிலைத்த, அழிவற்ற
அவ்யயஸ்ய = மாற்றம் இல்லாத
ச = மேலும்
ஸாஸ்வதஸ்ய = நிலைத்த
ச =மேலும்
தர்மஸ்ய = தர்மத்தின் படி, தாங்கிப் பிடிக்கும் (திர் = தாங்கிப் பிடிப்பது)
ஸுகஸ்யை = சுகம்
ஆகாந்திகஸ்ய / ஏகாந்திகஸ்ய = தனிமை, ஏகாந்தம்
ச = மேலும்

ஏன் என்றால் நான் அழியாததும் ஞான சங்கோசம் அற்றதுமான ஜீவ நிலைக்கும் -அதாவது கைவல்யத்துக்கும்
வெகு காலம் நீடிக்கும் தர்ம பலமான ஐஸ்வர்யத்துக்கும் பரிபூர்ண ப்ரஹ்மம் ஒன்றின் அனுபவமே யாகிற
மோக்ஷ ஆனந்தத்துக்கு ஆதாரம் ஆகிறேன் —
அதாவது அந்த மூன்று புருஷார்த்தங்களையும் அளிப்பவன் நானே
கதி த்ரயம் -மூன்றுக்கும் அவனே – அம்ருதம் மரணம் அற்ற அழிவற்ற ஆத்ம பிராப்திக்கு கைவல்யார்த்திக்கு நானே உபாயம்
ஸாஸ்வத பக்தி செய்து ஐஸ்வர்யம் கேட்டாலும் -என்னையே கேட்டாலும் நானே உபாயம் –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: