ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -13—-

கீதா ஸூ கீதா கர்தவ்ய கிம் அந்யகி சாஸ்த்ர சங்க்ரஹி –யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் வினிஸ்ரயா —
ஸ்ரீ கீதை இனிமை -ஸ்ரீ கீதாச்சார்யன் தானே சோதி வாய் திறந்து அருளிச் செய்தது -இத்தை அறிந்தால் வேறே சாஸ்திரம் அறிவு வேண்டாமே –

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோஅந்தி மோதித –4-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும் மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் / அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் -சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்மவிசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்மவிசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

——————————————

அர்ஜுந உவாச-
ப்ரகரிதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச–ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஷவ—৷৷13.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே–ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித—-৷৷13.2৷৷
இதம் -சுட்டி காணும் பொருள் -வஸ்து நிர்தேசம் -ஆத்மாவை பார்த்து இதம் சொல்ல முடியாதே -இதுவே வாசி –கண்ணால் பார்க்கும் பொருள்கள் அழியும்
-அழியாத ஆத்மா நித்யம் குந்தி புத்ரன் -ப்ருதா பிள்ளை பார்த்தா -க்ஷேத்ரம் -விளை நிலம் சரீரம் என்று சொல்லப் படுகிறது
-தான் சொன்னேன் என்பதை விட- உபநிஷத் வேதம் ரிஷிகள் -சொல்வதை உயர்த்தி சொல்வான் –
பயிர் என்ன -கேள்வி வருமே -நல்ல குணங்களை வளர்க்க கொடுத்தேன் -நாமோ சரீரம் போகும் படி -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியில் உழல்வேன் –
போகத்துக்கு விளைச்சல் –இத்தை யார் க்ஷேத்ரம் என்று அறிந்து கொள்பவன் -ஷேத்திரஞ்ஞன்-ஆத்மாவுக்கு -பெயர்-உழவன் என்றபடி –
சரீரமே தான் இல்லை -தன்னுடைய சரீரம் என்று உணர வேண்டுமே -சாருவாக மதம் -வாய் பந்தல் போலே பேசி-ஜாபாலி வசனம் –
அநஹம் -அஹம் என்று மயங்குவது தேஹாத்ம பிரமம் -லோகாயத மதம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் –
நீ பார்க்காதது எல்லாம் பொய்யாகாதே-ஆத்ம தத்வம் வேறு தான் சரீரம் வேறு தான் -பகுத்து அறிவு -தேஹம் ஆத்மா பகுத்து அறிவதே இது –
ஆத்ம ஷேமத்துக்கு என்ன செய்ய வேன்டும் -என்ற எண்ணம் வர வேண்டுமே -வல்லப தேவன் -பெரியாழ்வார் பரத்வ நிர்ணயம் –
ஸூஷ்மமான வஸ்து தானே முக்கியமாக இருக்கும் –மூடர்கள் அறியாமல் இழக்கிறார்கள் -ஞான கண் தியானம் மூலமே அறியலாம் –
நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே -அவகாசம் பார்த்து -உள்ளுவார் உள்ளத்து உடன் இருந்து –

க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத–க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம–৷৷13.3৷৷
என்னுடைய மதம் -இதுவே ஞானம் -ஷேத்ரஞ்ஞானாகவும் என்னை அறிந்து கொள் -உம்மை -என்றது சரீரமும் அவன் உடைமை -யானும் நீ என் உடைமையும் நீ
-ச அபி மாம் வித்தி –தத்வ த்ரய சம்ப்ரதாயம் -விசிஷ்ட ப்ரஹ்மம் -விசிஷ்டா த்த்வைதம் –விசிஷ்டா அத்வைதம் -கூடி உள்ள ப்ரஹ்மம் ஒன்றே –
சித்துடனும் அசித்துடனும் கூடிய ப்ரஹ்மம் ஒன்றே இரண்டாவது இல்லை -இரண்டும் இவன் சொத்து –நிலமாகவும் உள்ளவனாகவும் என்னை தெரிந்து கொள்
-பரம சேதனன் -நிலத்துக்கு ஒன்றாக படிக்கலாமா -சரீரம் உடன் ஜீவாத்மா கூடி இருக்க சரீரத்தை சொல்வது ஆத்மா அளவும் போகுமே
-சரீரத்துக்கு பெயர் தனது என்று தெரியாது -சரீரம் உடையவன் என்று ஆத்மா அறிகிறான் -அடை பற்ற தன்மை பத்தாத்மா -நீங்கி முக்தாத்மா
-செயற்கை – வந்தேறி கழிந்து ஸ்வரூப ஆவிர்பாவம் -அப்ருதக் சித்தி –தனித்து இல்லாமை -கூடியே இருக்கும் –
சரீராத்மா பாவம் -இல்லத்துக்கு அல்லதும் அவன் உரு – ஐ ததாத்மம் இதம் சர்வம் -/இதம் சர்வம் -இங்கும் சுட்டிக் காண்பிக்கிறான்

தத்க்ஷேத்ரம் யச்ச யாதரிக் ச யத்விகாரி யதஷ்ச யத்–ஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ரரிணு–৷৷13.4৷৷
க்ஷேத்ரம் பற்றியும் -எத்தனால் செய்யப்பட்டதோ எவற்றுக்கு இருப்பிடமோ ஏதுவாக பரிணாமம் -என்ன பிரயோஜனம் -ஆத்மா சிறப்புக்களையும் சொல்கிறேன் கேள் –

றஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை பரிதக்–ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சதை—-৷৷13.5৷৷
கற்பனை இல்லை -ரிஷிகள் முன்பே சொல்லி -வேத வேதாந்தங்கள் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -யுக்தி போன்றவற்றால் பகுத்து சொல்லப் பட்டன –

மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச–இந்த்ரியாணி தஷைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா–৷৷13.6৷৷
எத்தால் -செய்யப்பட்டது -பிரகிருதி மஹான் அஹங்காரம் -சாத்விக/ ராஜஸ /தாமச -பஞ்ச பூதங்களும் தன்மாத்திரைகளும் -தாமசம் இருந்து –
பூதாதி -இந்திரியங்கள் கர்ம ஞான மனஸ் -தன்மாத்திரைகள் –சப்தாதிகள் ஸாத்வீகத்தில் இருந்து / பொங்கு ஐம் புலனும் இத்யாதி –
புத்தி என்றது மஹான் -அவ்யக்தம் -மூல பிரகிருதி என்றவாறு /தஸ்ய ஏகஞ்ச மனஸ் உயர்ந்தது என்பதால் –

இச்சா த்வேஷ ஸுகம் துக்கம் ஸங்காதஷ்சேதநாதரிதி–ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹரிதம்—৷৷13.7৷৷
இவை சேர்ந்ததால் படும் பாட்டை -விருப்பம் த்வேஷ சுகம் துக்கம் -பூதங்கள் கூட்டரவால் -அனுபவிக்க -விகரித்து கொண்டே இருக்கும் -ஆத்மா மாறாதே –
சரீரம் கலப்படம் -என்பதால் பரிணாமம் -ஆகும் -அனுபவம் ஆத்மாவுக்கு தானே -சரீரத்துக்கு சொல்லுவான் என் -ஆத்மா இருந்தால் தானே
இவை அனுபவம் -இயற்கையில் ஆத்மாவுக்கு இல்லை -சரீரம் சம்பந்தம் இருப்பதால் தானே -அதனால் சொல்லலாமே –
தர்ம பூத ஞானத்தின் காரணம் தான் இவை –

அமாநித்வமதம்பித்வமஹிம் ஸா க்ஷாந்திரார்ஜவம்–ஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ–৷৷13.8৷৷
மேல் -ஐந்து ஸ்லோகங்களால் -20-குணங்கள் -இதில் -9-/–
-1-அமானித்வம் மரியாதை உடன் பெரியோர் இடம் -மானம் உடையவன் மாநி-கிம் கரோ -பெருமாள் விசுவாமித்திரர் –வயோ வ்ருத்தர் திருவடிகளில் தலையை வைத்து /
-2-அதம்பித்தவம் தம்பம் இல்லாமை -எல்லாம் அவன் சொத்து தானே
–3-அஹிம்சா -பூதங்கள் மேல் வாக்காலும் மனசாலும் கரணங்களாலும்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் தாழ்வான் சம்வாதம் –
மானஸ பாகவத அபசாரம்-யாருக்கும் தெரியாமல் -ராமானுஜர் இடம் சமர்ப்பித்தால் அடையலாம் /-
4- ஷாந்தி-கலங்காமல் பொறுத்து -5-ஆர்ஜவம்-முக்கரணங்கள் நேர்மை /-6-ஆச்சார்ய உபாசனம்-கைங்கர்யம் /
-7-க்ஷவ்சம் -சுத்தி முக்கரணங்களாலும்-வர்ணாசிரமம் விடாமல் / -8-ஸ்தைர்யம்–கலங்காமல் -உறுதியாக -அசஞ்சலமான பக்தி வேண்டுமே
-9-ஆத்ம விநிக்ரஹம் -மனஸ் அடக்கம் -/

இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச—ஜந்மமரித்யுஜராவ்யாதிதுகதோஷாநுதர்ஷநம்–৷৷13.9৷৷
10–இந்திரியங்கள் ஓடுவதை இழுத்து வைராக்யம் வளர்த்து -சப்தாதிகளில் வைராக்யம்–11 -அஹம் அல்லாத தேகத்தை அஹமாக
நினைக்காமல் –12/ஜன்மா இறப்பு மூப்பு வியாதி துக்க தோஷ தர்சனம்

அஸக்தரநபிஷ்வங்க புத்ரதாரகரிஹாதிஷு–நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு–৷৷13.10৷৷
13–அசக்தி -பற்று அற்ற தன்மை -ஆத்ம விஷயத்தை தவிர வேறு ஒன்றிலும் ஆசை இல்லாமை /14–புத்ரன் தாரம் வீடு இவற்றில் மிகுந்த ஆசை வைக்காமல்
-இவை அநித்தியம் -நித்தியமான உறவு -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவனே /ஆத்மசிந்தனை பண்ணும் உறவினர்கள் இடமே பற்று வைத்து /
கர்ணன் விபீஷணன் வாசி உண்டே – /15–நித்தியமாக சம சித்தம் இஷ்டங்கள் அநிஷ்டங்கள் -ஹர்ஷ கோபம் இல்லாமல் /

மயி சாநந்யயோகேந பக்தரவ்யபிசாரிணீ–விவிக்ததேஷஸேவித்வமரதிர்ஜநஸம் ஸதி–৷৷13.11৷৷
16–அவன் இடமே அநந்ய அசையாத பக்தி செலுத்தி /17–தனிமையிலே இருக்கும் ஆசை கொண்டு சிந்தனைக்கு ஏற்ற /
18–ஜனக் கூட்டங்கள் கண்டாலே ஓடி -பாம்பை கண்டால் போலே /

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்–ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோந்யதா–৷৷13.12৷৷
–19-ஆத்ம சிந்தனம் ஈடுபாடு /20— தத்வ ஞானம் தியானம் சிந்தனை -இவையே ஞானம்-மற்றவை எல்லாம் அஞ்ஞானங்கள்

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாமரிதமஷ்நுதே–அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே–৷৷13.13৷
இது முதல் ஆத்ம ஸ்வரூபம் -விசாரம் -யத்தை அறிந்து கொண்டு சம்சாரம் தொலைத்து -அம்ருதம் -ஆத்ம பிராப்தி -அந்த ஞானம் உபதேசிக்கிறேன்
-ஆத்ம சாஷாத்காரம் பற்றியும் ஆத்மாவின் ஏற்றமும் -சொல்கிறேன் -அநாதி -பிறப்பு இறப்பு இல்லை
-மத் பரம் -எனக்கு அடிமை -சேஷத்வம் தானே முதலில் அறிந்து கொள்ள வேன்டும் /ப்ரஹ்மம் -பெரியது என்றபடி -ஸூஷ்மம்-இருந்தாலும் ப்ரஹ்மம் சப்தம்
-ஒரே வார்த்தை பல அர்த்தங்களில் வரும் -ஆத்மா ஆகாரம் ஸ்வரூபம் ரூபத்தால் பெரியது இல்லை -தர்ம பூத ஞானத்தால் பரந்து இருக்குமே /
ஆத்ம ஸ்வரூபம் ஞான மாயம் -ஞானத்தால் ஆனந்தத்தால் பண்ணப் பட்டு -இல்லாத வஸ்து தானே பண்ணப்படும்-அதனால் இப்படி சொல்ல கூடாது
– நித்யம் -ஞானமயம் ஆனந்தமயம் -என்றவாறு -ஞானமயமான ஆத்மா ஞானம் உடையவனாயும் இருக்கும் -இதுவே தர்ம பூத ஞானம் -என்னுடைய ஞானம் என்றபடி -/
நான் என்று அறிவது தர்மிக் ஞானம் தூங்கினாலும் நன்றாக தூங்கினேன் என்பது போலே -/ஞான குணகத்வம் ஞான மயம் இரண்டும் உண்டே /
உடம்பு எங்கு வலித்தாலும் உணர்வது தர்ம பூத ஞானத்தால்
கார்ய தசையில் சத் இருக்கிறது என்றும் சொல்ல முடியாது /காரண தசையில் இல்லை என்றும் சொல்ல முடியாதே -சத் அசத்-என்றும் சொல்ல முடியாது

ஸர்வத பாணிபாதம் தத்ஸர்வதோக்ஷிஷிரோமுகம்–ஸர்வத ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவரித்ய திஷ்டதி–৷৷13.14৷৷
ஜகத் உள்ள பதார்த்தங்கள் எங்கும் ஞானத்தால் வியாபித்து இருக்கிறான் -தர்ம பூத ஞானம் -எங்கும் பரவும் -சக்தி வளர்க்க உடம்பை விட்டு
வெளியிலும் பரவும் -ஞானம் வளர்த்தால் முக்த ஆத்மா ஆகிறான்
கையும் காலும் எத்தை செய்யுமோ அவை இல்லாமல் பண்ணுகிறான் -கண்ணும் தலையும் முகமும் லோகத்தில் பண்ணுவதையும் இவை இல்லாமலே செய்கிறான்
-சங்கல்ப சக்தியால் செய்வான் -இந்திரிய வஸ்யத்தை பத்தாத்மாவுக்கு தானே –
இத்தனை அடியாரானார்க்கு -சிறிய அளவு பக்திக்கு இரங்கும் அரங்கன் பித்தன் -அன்றோ -பித்தனை பெற்றும் அன்றோ பிறவியில் பிணங்குமாறே-
லோகத்தில் காது கொண்ட கார்யம் -எங்கும் நீக்கமற நிறைந்து உள்ள முக்தாத்ம ஸ்வரூபம் விளக்குகிறான்

ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்–அஸக்தம் ஸர்வபரிச்சைவ நிர்குணம் குணபோக்தரி ச–৷৷13.15৷৷
எல்லா இந்த்ரியங்களாலும் அறிய வேண்டியதை அறிந்து அனுபவிக்கிறான் –பத்த தசையில் இது –துரந்து விலகி விட்டான்-ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்– -முக்த தசையில் –
சங்கல்ப சக்தி ப்ரஹ்மம் போலே முக்தாத்மாவுக்கும் உண்டே -ஜகத் வியாபாரம் வர்ஜம் –அடிப்படை ஞானம் சேஷ பூதன் இருக்கும் பொழுது செய்ய மாட்டானே –
அசக்தம் -தேவாதி சரீரங்களில் சேராமல் இருப்பான்-முக்த தசையில் /எல்லா சரீரங்களையும் தானே தங்குகிறான் பக்த தசையில்
-நிர்குணம் -முக்த தசை / குணம் தாக்குதல் பத்த தசையில் -வேறுபாட்டை அறிந்து அதை அடைய ஆசை வருமே –
ச ஏகதா பார்வதி –சஹஸ்ரதா பவதி —காம ரூப்யன் சஞ்சரன் -ஒளியில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்வான் –

பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச–ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்–৷৷13.16৷৷
வெளியில் உள்ளே பூதங்களுக்கு -வியாபித்து -அசையாதவனாயும் -முக்த -தசை / அசைபவன் -பத்த தசை -ஓடி ஆடி வாழ வேன்டும் -முக்த தசையில் வேண்டாமே
/ஸூஷ்மாக இருப்பதால் பகுத்து அறிவது துர்லபம் -/ வெகு தூரத்தில் -கிட்டத்தில் -அணியன் சேயன் போலே / அகலில் அகலும் -தள்ளிப் போனால் தள்ளி போவான் -/
-20-குணங்களை அப்யசித்தால் கிட்டே / இல்லை என்றால் தூரஸ்தன் -/நான் -தள்ளி இருந்தால் என்று
உணர உணர குணங்களை வளர்ப்போம் –நீ நீயாக இருக்க அப்பியாசம் வேன்டும்

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்–பூதபர்தரி ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச–৷৷13.17৷৷
பண்டிதர்கள் – நிஷ்க்ருஷ்ட வேஷம் பார்த்து சமமாக -ஞான மயன் ஆனந்த மயன் சேஷ பூதன்-என்றே பார்த்தால் சமம் தானே —
-ரகு குணன் -ஜட பரதர் -சரித்திரம் பல்லக்கு -தூக்கி /
ஆத்மாவுக்கு தண்டனை கொடுக்க முடியாதே -சரீரத்துக்கு தானே -ஆத்மா உன்னை தூக்க வில்லையே -/ நீர் யார் -எங்கு இருந்து வந்தீர் எதற்க்காக வந்தீர்
-கர்மா தொலைக்க தானே நீயும் நானும் -கிருபா பலன் கொண்டே கர்மம் தொலைக்க முடியும் — அருள் என்னும் ஒள் வாள் வெருவியே தீர்க்க முடியும் -/
வேறுபாடு -சரீர விசிஷ்டமாக இருக்கும் பொழுது -ஞான சஷூஸால் பார்த்தால் தானே ஒன்றாக தெரியும்
பூதங்கள் தாங்கி -அன்னம் புஜித்து -ரேதஸ் கர்ப்பம் இவற்றுக்கு காரணம் போலே தோன்றும் -சரீர சம்பந்தம் தானே -இதற்கு காரணம் –

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ பரமுச்யதே–ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹரிதி ஸர்வஸ்ய விஷ்டிதம்–৷৷13.18৷৷
எல்லாருடைய ஹிருதயத்தில் நிலை நின்று -தர்ம பூத ஞானம் பிரகிருதி இருளை விட மேம்பட்டது -ஜோதிஷ பதார்த்தங்கள் எல்லாம் இருள் போலே இதன் ஏற்றம் பார்த்தால்
-விளக்கு எரிவதை நம் ஞானத்தால் அறிகிறோம் -அதே போலே ஸூரியன் ஒளியையும் நம் ஞானத்தால் தானே அறிகிறோம் /
ஞானம் என்று அறிந்து ஜடத்தை விட வேறுபட்டவன் -சரீரம் வேறு ஆத்மா வேறு -/ சரீர சம்பந்தத்தால் தானே இந்த பாடு
-மீண்டும் மீண்டும் சொல்லி -/-20-சாதனங்களால் அறிய படுகிறான் –

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத–மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே–৷৷13.19৷৷
இது காறும் சொன்ன ஸ்லோகங்களால் -சொன்னதை தொகுத்து -பலனையும் அருளிச் செய்கிறான் -சரீரம் பற்றியும் -ஆத்மா அடைய -20-குணங்களை பற்றியும்
-ஆத்மாவை பற்றியும் -சொல்லி மேலே என் பக்தன் இவற்றை அறிந்து என் நிலையை அடைகிறான் –சம்சாரம் ஒட்டு அற்ற தன்மை -என்றவாறு -மத் பாவம் –

ப்ரகரிதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி–விகாராம் ஷ்ச குணாம் ஷ்சைவ வித்தி ப்ரகரிதிஸம் பவாந்–৷৷13.20৷৷
நான்கு ஸ்லோகங்களால் பிரக்ருதி ஆத்மா சேர்வதை பற்றி விளக்குகிறான் -எதனால் பந்தம் எப்படி பந்தம் -விவேக ஞானம் வளர்க்க -அருளிச் செய்கிறான் –
மூல பிரகிருதி காரணமான சரீரம் -ஜீவன் -அநாதி காலமாக பந்தப் பட்டு உள்ளார்கள் என்று உணர்ந்து கொள் —
விகாரம் -சரீரத்தால் ஏற்படும் தீய குணங்கள் -நல்ல -20-குணங்கள் -பிரகிருதி சம்பந்தத்தால் என்று உணர்ந்து கொள் –

கார்யகாரணகர்தரித்வே ஹேது ப்ரகரிதிருச்யதே–புருஷ ஸுக துக்காநாம் போக்தரித்வே ஹேதுருச்யதே–৷৷13.21৷৷
சேர்க்கையால் -என்ன பயன் -/கர்த்ருத்வம் -போக்த்ருத்வம் -செயல்பாடு சக்தி -அனுபவிக்கும் சக்தி -செய்பவனும் அனுபவிப்பவனும் ஜீவாத்மா
-விதைத்தவன் வினை அறுப்பான் கார்யம் -சரீரம் -கரணங்கள் இந்திரியங்கள் மனஸ் –இவற்றின் வியாபாரம் -காரணம் பிரகிருதி
-சரீரம் -கர்த்ருத்வம் சரீரத்தின் தலையில் வைக்கிறான் -இயற்கையில் ஆத்மாவுக்கு குற்றம் இல்லையே -புருஷ ஜீவாத்மா போக்தாவாக
-சுகம் துக்கம் -கர்ம பலன் அனுபவிக்கிறான் -இப்படி பிரித்து -ஆத்மாவால் தானே செய்ய முடியாதே -சரீரம் அனுபவிக்க முடியாதே –
ஜீவாத்மாவால் அதிஷ்டான சரீரத்துக்கு கர்த்ருத்வம் -சேர்க்கையின் பயனே இது தானே -/

புருஷ ப்ரகரிதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரகரிதிஜாந்குணாந்–காரணம் குணஸங்கோஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு–৷৷13.22৷৷
ஜீவன் சரீரத்தில் இருந்து உண்ணுகிறான் -அனுபவிக்கிறான் -பிரகிருதி சம்பந்தத்தால் பிறந்த சத்வ ரஜஸ் தமஸ் குணங்களை அனுபவிக்கிறான் –
–ஹி -ஆச்சர்யம் -இயற்கையில் இல்லையே -அனுபவிக்க தேவை இல்லாதவன் அன்றோ இப்படி படுகிறான் /
சேரக் காரணம் –ஆசையே -இதனால் பிறந்து –பீஜாங்குர நியாயம் -விதை முளை -/ துக்க சுழலை/ சத் -தேவாதி அசத் திர்யக்காதிகள்-பற்றுதல் காரணம் –
செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும் அத்தை தின்று அங்கே கிடக்கும் -இதன் -அர்த்தமே பிரக்ருதியிலே கிடக்கும் –

உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர–பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேஸ்மிந்புருஷ பர—৷৷13.23৷৷
பார்க்கிறான் -அனுசந்திக்கிறான்- தரிக்கிறான் -அனுபவிக்கிறான் -தேக இந்திரியங்களை விட உயர்ந்து -நியமித்து –
-இப்படி வாசி இருக்கும் பொழுது உழல்கின்றார்களே

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரகரிதிம் ச குணைஸஹ–ஸர்வதா வர்தமாநோபி ந ஸ பூயோபிஜாயதே–৷৷13.24৷৷
மேல் விவாக ஞானம் –பலத்தை சொல்லி அப்புறம் எப்படி -ஆசை இருக்க வேண்டுமே -உயர்ந்த பலனை நினைக்க நினைக்க வேலைக்கு வருவோம்
–34-ஸ்லோகத்தில் சொல்ல வேண்டியதை விவேகித்து -உணர்ந்தவன் -புருஷன் பிரகிருதி -குணங்களை பிரித்து அறிபவன் -சரீரத்துக்கு உள்ளே இருந்தாலும்
-மறு படியும் பிறப்பது இல்லை -பிறகு எடுக்க யோக்யதை இல்லாமல் ஆத்ம பிராப்தி அடைகிறான்
-அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -பற்று அற்றது -என்றால் -வாசி அறிந்து -வீடு உற்றது

த்யாநேநாத்மநி பஷ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா–அந்யே ஸாம் க்யேந யோகேந கர்மயோகேந சாபரே–৷৷13.25৷৷
மூன்று ஸ்லோகங்களில் யோகம் -மேலே மேலே கொஞ்சம் கீழ் நிலைகள் -இதில் அசக்தனுக்கு அது –
யோகம் கை கூடிய நிலை -முதலில் சொல்லி -இதிலே -கர்ம ஞான யோகம் அனுஷ்டானம் செய்பவன்
ஆத்ம -சப்தம் -சரீரம் மனஸ் ஜீவாத்மா மூன்று -அர்த்தங்கள்
மனசால் சரீரம் ஸ்தானம் உள்ள ஆத்மா விஷயம் அறிந்து -தியானத்தால் -ஆத்மாவை மனசு என்னும் கருவியால் பார்க்கிறான் -விவேகித்து அறிகிறான் என்றபடி
யாரோ சிலர் தான் இந்த நிலையில் இருப்பர் -அது முடியாதவர் -ஞான யோகத்தால் -இன்னும் சிலர் கர்ம யோகத்தால் அறிய பார்ப்பார்கள் –

அந்யே த்வேவமஜாநந்த ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே–தேபி சாதிதரந்த்யேவ மரித்யும் ஷ்ருதிபராயணா–৷৷13.26৷৷
மூன்றாம் நிலை இன்னும் சிலர் -உபதேசம் காது கொடுத்து -கேட்டு -உபாஸிக்க பார்க்கிறார்கள் கர்ம யோகம் ஆரம்பிக்க வில்லை ஸ்ரத்தை உள்ளவர்கள்
இன்னும் சிலர் ஸ்ருதி பராயணர் -கேட்பதில் மட்டும் இச்சை கொண்டு -தே பி -இவர்களும் கூட -சம்சாரம் கடலை தாண்டுகிறான் –
இவனே தாண்டினால் மற்றவர்கள் தாண்டுவார்கள் சொல்ல வேண்டாமே -சங்கை இல்லை -மிருத்யு -சம்சாரம்

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்–க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம் யோகாத்தத்வித்தி பரதர்ஷப–৷৷13.27৷৷
விவேகிக்கும் உபாயம் -பரத குலத்தில் மிக உயர்ந்தவன் -தாழ்ந்து இருந்தால் இந்த அர்த்தங்கள் அறிய முடியாதே –ஜந்துக்கள் –
யாவத் –தாவத் -ஓன்று விடாமல் எல்லாம் -ஸ்தாவர ஜங்கமங்கள் மனுஷ்யர் தேவர்கள் – எல்லாம் -பிரகிருதி ஜீவன் சம்பந்தமே காரணம் -என்று
அறிந்து கொள் –கர்மம் வலிய கயிறு தானே கட்டுவிக்கும்

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்–விநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய பஷ்யதி ஸ பஷ்யதி–৷৷13.28৷৷
வித்யாசம் இரண்டுக்கும் -பகுத்து அறிய —சமம் முதல் –ஜீவாத்மா -விஷமம் சரீரம் வாசிகள் உண்டே -எல்லா பூதங்களிலும் ஆத்மா சமம் தானே
-கங்கா தீர்த்தம் தங்க வெள்ளி மண் பாத்திரம் -தன்மை மாறாதது போலே /அடுத்து -பரமேஸ்வரன் நியமிப்பவன் ஆத்மா -சரீரம் நியமிக்கப் படும்
–இயற்க்கைக்கு மாறாக சரீரம் சொல்லி ஆத்மா போவது துர்த்தசை / விநாசம் அடைவதற்குள்ளே விநாசம் அடையாமல் ஆத்மா இருக்கும் –

ஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்–ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்—৷৷13.29৷৷
லத்தை அருளிச் செய்கிறான் -எங்கும் சமமாக பார்ப்பவன் -எப்பொழுதும் -ஈஸ்வரனான ஆத்மா -மனசால் வெட்டி விடுவது இல்லை –
பிரிந்து அறியாமல் இருந்தால் ஆத்மாவுக்கு தீங்கு -என்றபடி

ப்ரகரித்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ–ய பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி–৷৷13.30৷৷
கிரியைகளுக்கு இருப்பிடம் சரீரம் என்று அறிந்து கொள் -ஆத்மாவை கர்த்தா அல்லன் என்று அறிந்து உண்மை அறிவு பெற்று –

யதா பூதபரிதக்பாவமேகஸ்தமநுபஷ்யதி–தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா–৷৷13.31৷৷
தேவாதி சரீரங்கள் -ஆத்மா சரீரம் -சேர்ந்து கர்தவ்யம் -காரணம் பிரகிருதி தானே -இயற்கையில் ஆத்மாவுக்கு இல்லை -சரீரம் பிரதான காரணம் –
பிரகிருதி விஸ்தாரத்தால் தானே பிள்ளை உறவுகள் இத்யாதி -என் பிள்ளை -ஆத்மாவுக்கு பிள்ளை இல்லை -சரீரத்தின் விஸ்தாரம் தானே

அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய–ஷரீரஸ்தோபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே–৷৷13.32৷৷
சரீரம் சம்பந்தம் இல்லாமல் -அழிவற்ற அநாதி ஆத்மா -அனாதையாய் இருப்பதால் அழிவற்றவன் -முக்குண சம்பந்தம் இல்லை
-செயல்பாட்டுக்கு காரணம் இல்லை -தேகம் விட வேறு பட்டவன் பரமாத்மா -சப்தம் ஆத்மாவை குறிக்கும்

யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே–ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே–৷৷13.33৷৷
உப்பு சாறு–கட்டை பாத்திரம் மாற்றும் என்று ஆக்ஷேபிக்க -ஆகாசத்துக்கு நாற்றம் தீண்டாது -ஸூஷ்மம்–
ஆத்மா ஆகாசம் விட ஸூஷ்மம் -தேகத்துக்கு உள்ளே இருந்தாலும் தீண்டாமல் இருக்கும் –

யதா ப்ரகாஷயத்யேக கரித்ஸ்நம் லோகமிமம் ரவி–க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா கரித்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத–৷৷13.34৷৷
சரீரத்துக்கு அவயவங்கள் பல -ஆத்மா அவயவம் இல்லாமல் -ஒளி கொடுக்க –ஒரே ஸூர்யன் லோகத்துக்கு பிரகாசம் தருவது போலே –

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா–பூதப்ரகரிதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்–৷৷13.35৷৷
ஞான கண்களால் -சரீரம்- ஜீவாத்மா-இவற்றின் ஸ்வரூபங்களை அறிந்து -விமுக்தனாக -20-குணங்களையும் அறிந்து முக்த ஆத்மா ஆகிறான் –

——————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: