ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -12– ஸ்ரீ பக்தி யோகம்:

பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–16-

1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை —
கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
2-உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் -இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து–12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு -கோதுகுலம் உடைய பாவாய் போலே

ஆத்ம அனுபவத்துக்கு பக்தி யோகம் வேண்டாம் –
கர்ம ஞான யோகம் மட்டும் கொண்டு கைவல்ய அனுபவம் -பக்தி பண்ண சேஷ பூதன்
பர ப்ரஹ்மம் மஹிமை தெரிந்து இருக்க வேண்டுமே —
பக்தி யோகம் அனுஷ்ட்டிக்க சக்தி இல்லை என்றால் -ஆத்ம உபாசனம் பண்ணு –கர்ம யோகம் பண்ணு சொல்ல வில்லை-
கர்ம யோகம் பண்ணி சித்த சுத்தி அடைந்து ஞான யோகம் -பண்ணி -மேலே பக்தி யோகம் –என்றவாறு -குழம்ப கூடாது –
பிரித்து பிரித்து அலகு அலகாக வியாக்யானம் உண்டு
கர்ம யோகம் வார்த்தைக்கு ஆத்ம உபாசனம் வார்த்தை –

—————————————————————–

அர்ஜுந உவாச-
ஏவம் ஸதத யுக்தா யே பக்தாஸ் த்வாம் பர்யுபாஸதே.–
யேசாப்யக்ஷர மவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா–৷৷12.1৷৷

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ஏவம் = அப்படியாக
ஸததயுக்தா யே = எப்போதும் அதில் இலயித்து இருப்பவர்கள்
பக்தாஸ் = பக்தர்கள்
த்வாம் = உன்னை
பர்யுபாஸதே = வழிபடுபவர்கள் |
யே சாப் = அவர்கள்
அக்ஷரம் = அழியாத , என்றும் நிலைத்து இருக்கும்
அவ்யக்தம் = வெளிப்படாத
தேஷாம் = அவர்களில்
கே = யார்
யோகவித்தமா: = யோகத்தில் மேம்பட்டவர் யார்

அர்ஜுனன் கூறினான் -முன் ஸ்லோகத்தில் சொன்னபடியே உன்னோடு எப்போதும் கூடி இருக்க நினைப்பவர்களாய் –
எந்த பக்தர்கள் உன்னைப் பரி பூர்ணமாக உபாசிக்கிறார்களோ –
எவர்கள் இந்த்ரியங்களால் அறியப் படாத ஜீவாத்ம ஸ்வரூபத்தை உபாசிக்கிறார்களோ –
இவ்விருவருக்குள்ளும் எவர் தமது பலனை விரைவில் அடைபவர்
யாருக்கு சீக்கிரம் -இரண்டும் சமம் என்ற எண்ணம் -அது ஸூ கந்தமான பகவத் அனுபவம் -இது சிற்றின்பம் –
மேலும் இது சீக்கிரமாகவும் அடையலாம் –
உயர்ந்த பலனுக்கு உயர்ந்த முயற்சி வேண்டுமே -என்னில் அதையும் கொடுப்பது நானே –
பிடித்தத்தை கேட்டால் -சீக்கிரம் அளிப்பான் -குழந்தை போலே பதில் -திருவடி பலத்தால் தான் மேலே வர வேன்டும் –
ஏவம் -இப்படி பக்தியால் மட்டுமே அடைய முடியும் -உன்னையே அடைய வேண்டிய பலமாக –
த்வாம் -கல்யாண குணங்கள் உடைய உன்னை –
அவ்யக்தம் -இந்த்ரியங்களால் புலப்படாத ஆத்ம தத்வம் அக்ஷரம் -உபாசித்து –
தேஷாம் இவர்கள் இருவருக்குள் -யோக பலன் யார் சீக்கிரம் அடைவார்

ஸ்ரீ பகவாநுவாச-
மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே.–
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா—৷৷12.2৷৷

ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
மயி = என்னில்
ஆவேஷ்ய = முழுவதும் ஆழ்ந்து
மநோ = மனம்
யே = அவர்கள்
மாம்= என்னை
நித்யயுக்தா = எப்போதும் என்னை நினைத்து
உபாஸதே = உபாசனை செய்து
ஸ்ரத்தயா = சிரத்தையுடன்
பரயோ = உயர்ந்த
உபேதாஸ்தே = கூடியவர்களாக
மே யுக்ததமா மதா: =என்னால் யோகிகளில் சிறந்தவர்களாக கொள்ளப் படுவர்

ஸ்ரீ பகவான் கூறுகிறான் -தமது நெஞ்சை என்னிடம் வைத்து மேலான ஸ்ரத்தையோடே கூடினவர்களாய் –
என்னோடே எப்போதும் சேர்ந்தே இருக்க விரும்புகின்றவர்களாய்
எவர்கள் என்னை ப்ராப்யமாக உபாசிக்கிறார்களோ அவர்கள் என்னால் சிறந்த யோகிகளாக எண்ணப் படுகிறார்கள்
தே -அவர்கள் எனக்கு நல்ல யோகிகள் -பக்தி யோக நிஷ்டர்கள் -என்னிடமே மனசை வைத்து –
என்னுடன் எப்பொழுதும் சேர்ந்தே இருக்க ஸ்ரத்தை உடன் -உபாசித்து -அவர்கள் எனக்கு சிறந்த யோகிகள் –
இருவரும் அவன் இடம் வருவார்கள் பிராபகம் உபாயம் ஹேது அடைவிக்கும் வழியோ என்னில் இருவருக்கும் ஓன்று தானே
புருஷார்த்தம் தானே மாறும் -இவன் விடை கொள்பவன் –
அவனோ உண்ணும் சோறு பெருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீயம் சரணம் மதியம் -இங்கும் அங்கும் ஆச்சார்யர் திருவடிகளே-
ஏறி வந்த ஏணியே அனுபவிக்கும் போக்யம் -தோள் மாறாமல் –

யே த்வக்ஷரம நிர்தேஸ்ய மவ்யக்தம் பர்யுபாஸதே.–
ஸர்வத்ரக மசிந்த்யம் ச கூடஸ்த மசலம் த்ருவம்৷৷12.3৷৷

யே து = எவர்
அக்ஷரம் = அழியாததும்
அநிர்தேஸ்யம் = விளக்க முடியாததும், கருத முடியாததும் (அ + நிர் + தேச்யம் = காண்பிக்க முடியாதது)
அவ்யக்தம் = வெளிப்பட்டுத் தெரியாததும், புலன் படாததும்.
பர்யுபாஸதே = பர் + உபாசிதே = வழிபடுகிறார்களோ
ஸர்வத்ரகம் = எல்லா இடத்திலும் இருப்பதும் (சர்வத்ர கம் )
அசிந்த்யம் = சிந்தனைக்கு கட்டுப் படாததும்
ச = மேலும்
கூடஸ்த = அனைத்திற்கும் மேலானதும், அனைத்திற்கும் அடிப்படையானதும்
அசலம் = சலனம் இல்லாததும்
த்ருவம் = நிலையானதும்

ஸந்நியம் யேந்த்ரிய க்ராமம் ஸர்வத்ர ஸம புத்தய–
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வ பூத ஹிதே ரதா–৷৷12.4৷৷

ஸந்நியம் = சம் + நியம் = கட்டுப்படுத்திய பின்
யே = அவர்கள்
இந்த்ரியக்ராமம் = இந்திரியங்களை, புலன்களை
ஸர்வத்ர = எல்லா இடத்திலும், எல்லா சமயத்திலும்
ஸமபுத்தய = சம புத்தியுடன்
தே = அவர்கள்
ப்ராப்நுவந்தி = ப்ராப்தி அடைகிறார்கள்.
மாம் = என்னை
எவ = உறுதியாக
ஸர்வபூதஹிதே = அணைத்து உயிர்களுக்கும் நன்மையே கருதி
ரதா: = மகிழ்ந்து இருப்பார்களோ, இரசித்து மகிழ்ந்து இருப்பார்களோ

க்லேஸோதி கதரஸ்தேஷா மவ்யக்தா ஸக்த சேதஸாம்.–
அவ்யக்தா ஹி கதிர் துகம் தேஹவத் பிரவாப்யதே–৷৷12.5৷৷

க்லேஸோ = வலி, துன்பம்
அதிகதர = அதிகமானது
தேஷாம் = அவர்களுக்கு
அவ்யக்தாஸக்தசேதஸாம் = அவ்யக்த + அசக்த + சேதாஸ் = வியக்த என்றால் தெரிவது.
அவ்யக்த என்றால் தெரியாதது. கண்ணுக்கும் புலன்களுக்கும் தெரியாத.
அதனோடு மனதால் (சேதாஸ் ) தொடர்புகொள்வது (அசக்த )
அவ்யக்தா = வெளிப்படாத
ஹி = அதனால்
கதி = வழி, பாதை
துர்துகம் = கடினமாக
தேஹவத்பி = தேகத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள்
அவாப்யதே = அடைவது

தேகத்தைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கையாலே தேவாதி சப்தங்களால் குறிப்பிடத் தகாததாய்
கண் முதலிய இந்த்ரியங்களால் காணப்படாததாய்
எல்லா தேஹங்களில் இருந்த போதிலும் -அந்த அந்த தேஹ ஸ்வரூபமாக நினைத்ததற்கு அரியதாய்
தன் ஸ்வரூபத்தில் இருந்து நழுவாதத்தாய்
நித்யமானதான தம் ஜீவாத்ம ஸ்வரூபத்தை கண் முதலான இந்திரியங்களைத் தம் தம் தொழில்களில் ஈடுபடாதபடி அடக்கி –
எல்லா தேஹங்களில் இருக்கும் ஆத்மாக்கள் இடமும் ஞானத்தால் ஒத்தவை என்னும் நினைவு யுடையவர்களாய்
எல்லா ஜீவ ராசிகளுக்கும் தீங்கு இழைப்பதில் ஈடுபடாதவர்களாய்
எவர்கள் பிராப்யமாக உபாசிக்கிறார்களோ அவர்களும் என்னோடு சமமான ஞான ஸ்வரூபத்தை யுடைய
தம் முக்தாத்ம ஸ்வரூபத்தை அடையவே செய்கிறார்கள்
தம் ஜீவாத்ம ஸ்வரூபத்தில் ஈடுபட்ட அந்த கைவல்ய நிஷ்டர்களுக்கு சிரமம் ஞானிகளுக்கு உள்ளதைக் காட்டிலும் மிகுந்தது
ஜீவாத்ம ஸ்வரூபத்தில் ஈடுபடும் மனா நிலை தேஹாத்ம அபிமானிகளாலே மிகவும் சிரமப்பட்டு அடையப் படுகிறது அன்றோ

அடுத்த இரண்டால் கைவலர்கள் உடைய கீழ்மை -அருளிச் செய்கிறான் -தோஷமும் கண்ணில் பட வேண்டுமே –
தான் கொடுத்த சரீரம் சாஸ்திரம் கொண்டு அவன் இடமே வேறே ஒன்றையோ கேட்டு விலகினால் கோபம் வரணுமே-
யே -உயர் ஒருத்தன் –சுட்டி இது என்று சொல்ல முடியாத ஆத்மா -தேக வியதிரிக்த ஆத்மா பற்றியே தானே உபாசிக்கிறான் —
அவ்யக்தம் -மனன் உணர் அவை இலன் -பொறி உணர் அவை இலன் -அக்ஷரம் -அழிவற்ற -குறித்து -உபாசித்து
ஸர்வத்ரகம் -எல்லா சரீரத்துக்குளே புகுந்து இருக்கும் ஆத்மா -மாறி மாறி பல பிறவி பிறந்து –
அசிந்த்யம் -புத்தியால் தெரிந்து கொள்ள முடியாத -சிந்தனைக்கு அப்பால்
கூடஸ்தர் -பழைமை பொதுவான என்றபடி -கொல்லன் பட்டறை கீழே உள்ள கூடஸ்தம் -மாறாதே -தனக்கு விகார இல்லையே
இங்கு பொது-எல்லா சரீரங்களிலும் ஆத்மா உண்டு என்றே அர்த்தம் –
சலிக்காத -ஸ்வரூபம் மாறாதே -தேகம் தானே ஸ்வரூப விகாரங்கள் -துருவம் -நிலை நிற்குமே

இப்படிப் பட்ட ஆத்மா பற்றி -உபாசனம் -இளைப்பினை இயக்கம் நீக்கி -இருந்து -பஞ்ச பிராணன் அடக்கி ஆசனத்தில் இருந்து
பத்மாசனம் -27000-நரம்புகள் கட்டுப்பாட்டில் வருமே -தேக ஆரோக்யம் கிட்டும் –
முன் இமையை கூட்டி –மூக்கு நுனியை பார்த்து -அழைப்பில் ஐம்புலன் அடக்கி -அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து
விளக்கினை விதியில் காண்பார் -மெய்மையை காண்பிப்பார் -காண மாட்டார்களே இவ்வளவு சிரமம் பட்டாலும் –
இந்திரிய கிராமம் கூட்டம் கட்டுப்படுத்தி -சமமான புத்தி -சர்வ பூத ஹிதம் -ரதி ஆசை –
ஜீவ ராசிகளின் நன்மையில் ஆசை கொண்டு -என்னையே அடைகிறார்கள் –
இங்கு என்னைப் போலே ஞானம் கொண்ட ஆத்மாவை அடைகிறார்கள் -தேக விநிர் முக்த ஆத்மா ஞானம் -அன்றோ –

தேகத்துடன் அனைத்தும் செய்து இல்லாதது செய்து பழக்கம் இல்லையே -தேகத்துடன் கைங்கர்யம் செய்யலாமே பக்தி நிஷ்டர் –
மிக வருத்தம் –கிலேச -தர -ஒன்றை காட்டிலும் -பகவத் உபாசனத்தை காட்டிலும் —
அவ்யக்த ஆசக்த நிலை நின்ற மனசை படைத்தவர்களுக்கு
ஆத்மாவே கதி என்று இருப்பவனுக்கு -துக்கம் -நிறைய -துக்கத்துடன் ஆத்மா சாஷாத்காரம் –
அனுபவம் இருவருக்கும் சுகம் -உபாயம் இதில் ஸூகரம் இல்லையே -பக்தி போலே –

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத் பரா–
அநந்யேநைவ யோகே ந மாம் த்யாயந்த உபாஸதே—৷৷12.6৷৷

யே = அவர்கள்
து = மேலும்
ஸர்வாணி = அனைத்து
கர்மாணி = செயல்களையும்
மயி = எனக்கு
ஸந்ந்யஸ்ய = அர்பணித்து
மத்பரா: | = என்னையே பரம் என்று கொண்டு
அநந்யேந = வேறு எதிலும்
எவ = நிச்சயமாக
யோகேந = யோகத்தில் இருந்து
மாம் = என்னில், என்னை
த்யாயந்த = தியானித்து
உபாஸதே = வழிபடுகிறார்களோ

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்—-
பவாமி நசிராத் பார்த்த மய்யா வேஸித சேதஸாம்—৷৷12.7৷৷

தேஷாம் = அவர்களை
அஹம் = நான்
ஸமுத்தர்த = கரை ஏற்றுகிறேன்
ம்ருத்யு = மரணம்
ஸம்ஸார = மாறும், தொடர்ந்து செல்லும்
ஸாகராத் = விழுங்கும், கடல்
பவாமி = நான்
நசிராத் = வேகமாக
பார்த்த = பார்த்தனே
மய்யா = என்னை
அவேஸித = அடைகிறார்களோ
சேதஸாம் = மனதால்

அர்ஜுனா எவர்களோ என்னில் -உண்ணல் யாகம் செய்தல் முதலிய எல்லாக் கர்மங்களையும்
என்னிடத்திலேயே சமர்ப்பித்து என்னையே பயனாகக் கொண்டவர்களாய் -வேறு பயன் கருதாத யோகத்தினால்
என்னைக் குறித்து த்யானம் அர்ச்சனம் முதலானவற்றைச் செய்து கொண்டு உபாசிக்கிறார்களோ –
என்னிடத்தில் செலுத்தப்பட்ட நெஞ்சை உடைய அவர்களுக்கு நான் என்னை அடையத் தடையாய் இருக்கையாலே
ஆத்ம நாசத்தை விளைக்கும் சம்சாரம் என்னும் கடலில் இருந்து விரைவிலேயே கை தூக்கி விடுபவன் ஆகிறேன்
யார் ஒருவனோ எனில் -எல்லா கர்மங்களையும் என்னிடம் சமர்ப்பித்து -என்னையே புருஷார்த்தமாக கொண்டு -இங்கு
யோகம் -பக்தி -ஸ்வயம் பிரயோஜன பக்தி -என்றபடி -பக்தி பண்ணும் இன்பத்துக்காக
குழந்தை தாய் கொஞ்சுவது போலே அன்றோ பக்தி –த்யானம் அர்ச்சனம் மூலம் உபாசித்து
அவர்களுக்கு -நான் -அஹம் -என்னிடம் நெருக்கமாக மனஸ் கொண்டவர்கள் –தூக்கி –
மிருத்யு சம்சார சாகரம் –தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இல்லாமல் -சம்சாரிகள் –
கை பிடித்து தூக்கி விடுபவனாக நான் இருக்கிறேன்
சடக்கென –எப்பொழுது சரண் அடைவாய் என்று அநாதி காலம் காத்து அன்றோ உள்ளேன்
சரண்ய முகுந்தத்வம் உத் பலாவதாக- மாம்சம் ஆசை துரந்த யோகிகளுக்கு –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
அவனுக்கு பல ஜென்மங்களும் தெரியுமே –மாறி மாறி பல பிறவியும் பிறந்து —ஈறில் இன்பம் பெற்றேன் இன்று –

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஸய.–
நிவஸிஸ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஸ்ய—৷৷12.8৷৷

மய் = ;என்னில்
யேவ = உறுதியாக
மந = மனதை
ஆதத்ஸ்வ = நிலை நிறுத்தி
மயி = என்னில்
புத்திம் = புத்தியை
நிவேஸய = செலுத்தி
நிவஸிஷ்யஸி = இருந்தால் , குடி இருந்தால்,
மய் = என்னில்
யேவ = உறுதியாக
அத = இனி
ஊர்த்வம் = மேலே
ந = இல்லை
ஸம்ஸ²ய = சந்தேகம்

இக்காரணத்தாலே என்னிடம் நெஞ்சைச் செலுத்து -என்னிடம் பரம ப்ராப்யம் என்னும் உறுதியைக் கொள்வாய் –
இப்படிக்கு கொண்ட யுடனேயே என்னிடம் வாழ்வாய் இதில் ஐயம் இல்லை
இதில் பக்தி விதி -என்னிடமே மனசை செலுத்தி -என்னிடமே உறுதியான புத்தி கொள்வாய் –
நம்பிக்கை வந்த பின்பு அதற்கு மேலே -என்னிடமே வாழ்வாய் -சங்கை வேண்டாம் —
நிர்ப்பரோ நிர்பயோஸ்மி முக்த ஆத்ம ஸ்வரூபம் அடைகிறான் -கவலை அற்று இருந்து –
இது முதல் –நான்கு ஸ்லோகங்களால் -ஓன்று ஒன்றாக குறைத்து –
அசக்தனுக்கு செய்ய வேண்டியவற்றை அருளிச் செய்கிறான்

அத சித்தம் ஸமாதாதும் ந ஸக்நோஷி மயி ஸ்திரம்—-
அப்யாஸ யோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய—৷৷12.9৷৷

அத= இப்போது
சித்தம் = சித்தம்
ஸமாதாதும் = செலுத்த
ந = முடியாது போனால்
ஸக்நோஷி = உன்னால் முடிந்த
மயி = என் மேல்
ஸ்தி²ரம் = உறுதியாக
அப்⁴யாஸயோகே³ந = அப்யாச + யோகேன = அப்யாசம் என்றால் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது. யோகத்தை
ததோ = அதன் பின்
மாம் = என்னில்
இச்சா = விருப்பம்
அப்தும் = அடைவாய்
தநஞ்ஜய = தனஞ்சயனே (தனம், செல்வத்தை வென்றவனே)

அர்ஜுனா -என் இடத்தில் உறுதியாக நெஞ்சை வைக்க இயலவில்லையாகில் அது காரணமாகவே –
சகல கல்யாண குணங்களையும் உடைய என்னிடம் ஒப்பற்ற அன்புடன் கூடிய நினைவைப் பழகுவதால் மூலம்
உறுதியாக நெஞ்சு செலுத்துதலைப் பெற்று என்னை அடைய விரும்புவாய்
பழக்கமே இல்லையே -சப்தாதி விஷயங்களில் பழகி வாழ்ந்த பின்பு -என்னில் –
ஸ்திரமான சித்தம் வைக்க சக்தி இல்லாமல் போனால் –
உடன் அடியாக பண்ண முடியாமல் போனால் -அப்பியாசம் -யோகம் -கல்யாண குணங்களில்
மனசை செலுத்தி -என்னை அடைய இச்சிப்பாய் –
பழக்கம் படுத்துக்கோ -என்னிடம் குணங்களோ பல -உனக்கு அல்ப அஸ்திர இந்திரியாதி தானே தெரியும் –
அன்புடன் மனசை நினைத்து நினைத்து பழக்கி -இச்சிப்பாய் -கல்யாண குணங்களை அனுசந்தித்து மனசை பழக்கி –
கொஞ்சமாக மேல் நிலைக்கு வர படிக்கட்டுக்கள்
இப்படி நான்கு ஸ்லோகங்களில் –
எந்த கல்யாண குணங்கள் -ஸுந்தர்ய –மாதுர்ய –வீர்ய குணங்கள் ஸத்ய ஸங்கல்ப இத்யாதி ஸ்ரீ ராமானுஜர் -18-
1-ஸுந்தர்யம் –நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -இனி யாரை கொண்டு உஸாக -அடிமை பட்டு சாசனம் எழுதிக் கொடுக்க வைக்கும் அழகன்
2-ஸுசீல்யம்–நின்னோடும் ஐவரானோம் -கை விட மாட்டார் நம்பிக்கை வளரும் –
3- ஸுஹார்த்தம் -சர்வ போதானாம் —
4-வாத்சல்யம் -தோஷ போக்யத்வம்
5 -காருண்யம் கிருபையா பரிபாலயத் –
6-மாதுர்யம் -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -எண்ணிலும் வரும் — ஓர் எண் தானும் இன்றியே
7-காம்பீர்ய -தன் அடியார் திறக்கத்து -கலக்க முடியாதவன் –அசக்தன் அஞ்ஞான -பாபங்களை காண அறியாதவன் -கை விட சக்தி இல்லாதவன்
8–உதாரன் -வரம் ததாதி -அர்த்திதார்த்த-பரிதான தீஷிதம் -அபீஷ்ட வரதன்
9-ஸுர்ய–
10- வீர்ய –
11-பராக்ரமம்-
12-சர்வஞ்ஞன்-
13-சத்யகாமத்வம்-
14–ஸத்யஸங்கல்பம்
15–ஸர்வேஸ்வரத்வம் —
16–சகல காரணத்வ –

அப்யாஸேப்ய ஸமர்தோஸி மத் கர்ம பரமோ பவ.–
மதர்தமபி கர்மாணி குர்வந் ஸித்தி மவாப்ஸ்யஸி—৷৷12.10৷৷

அப்யாஸே = பயிற்சி செய்வது
அப் அஸமர்தோ = சமர்த்தோ; அசமர்த்தோ. இப்போது முடியவில்லை என்றால்
அஸி = நீ
மத் = எனக்காக, என்னில்
கர்ம = வினைகளை
பரமோ = உயர்வாக, சமர்பணமாக
பவ = நீ செய்
மத் = எனக்காக
அர்த = நோக்கம், செல்வம், பலன்
அபி = அதனால்
கர்மாணி = வினைகள்
குர்வந் = செய்யும் பொழுது
ஸித்தி = சித்தி
அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்

என்னிடம் நினைவைப் பழகுவதில் வல்லமை இல்லாதவனாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில்
பேர் அன்புடன் ஈடுபடுவாய் –
இவ்வண்ணமாக என் விஷயமான கர்மங்களை செய்வதாலும் விரைவிலேயே
அப்பியாச யோகத்தினால் என்னிடத்தில் உறுதி பெற்ற நெஞ்சை அடைந்து என்னை அடைவாய் –
மநோ வியாபாரம் கஷ்டம் தானே -கையாலே எதையும் செய்யலாம் -மனசால் நினைத்து -செய்வது வேண்டாம் –
சக்தி இல்லை என்னில்– அப்பியாசம்
கைங்கர்யம் -திரு விளக்கு -மாலை இடுதல் -திருவடி விளக்கி–என் விஷய கர்மாக்கள் இங்கு -செய்தால் -பண்ணப் பண்ண
அருகாமை கிட்டும் -மனஸ் தானே ஈடுபடும் -உறுதி படும் -பக்தி வரும் -இதே பாதையில் போக வேன்டும் –

அதைத தப்ய ஸக்தோஸி கர்தும் மத்யோக மாஸ்ரித–
ஸர்வ கர்ம பல த்யாகம் ததஸ் குரு யதாத்மவாந்–৷৷12.11৷৷

இனி என் விஷயமான பக்தி யோகத்தைப் பற்றியவனாய் -பக்தி யோகத்தின் தொடக்க நிலையான
என் விஷயமான இக் கர்மத்தையும் செய்ய இயல வில்லை யானால்
அப்போது கர்ம யோகத்தாலே மனம் அடங்கப் பெற்றவனாய் -பரபக்தியை உண்டாக்குவதாய்
ஆத்மாவைச் சிந்திப்பதாகிற ஞான யோகத்தைச் செய்பவனாய் அதற்கு உறுப்பாக
சர்வ கர்ம பல தியாகத்தைச் செய்வாய்
மத் கர்மா -உன் கர்மா -இதுவும் பழக்கம் இல்லையே -இதற்கும் அசக்தனாக இருந்தால் –
பக்தி யோகம் தொடங்கிய நீ -மத் யோகம் -கர்ம யோகத்தால் மனத்தை அடக்கி –
எல்லா பலத்தையும் -சர்வ கர்ம பல தியாகம் -கீழே சொல்லிய கர்த்ருத்வ மமதா பல தியாகம் -அதே சப்தம் இங்கும்
ஆத்ம உபாசனம் -பிரதம ஷட்கத்தில் சொல்லப் பட்டது –
கர்ம யோகம் நமக்காத் தானே -ஆத்ம சாஷாத்காரம் நமக்காகத் தானே -உன் கார்யம் பண்ணினதாகும் –
ஆத்ம சாஷாத்காரம் வந்திடும் -வந்தால் சேஷ பூதன் என்று அறிவாய் -பண்ணப் பண்ண மேல் படிகளுக்கு வருவாய் —
கைவல்ய உபாசனம் இல்லை -5 ஸ்லோகத்தில் நன்றாக இகழ்ந்தான்–7 -8–9- அத்தியாயத்தில் சொல்லியதை –
இங்கு முதல் ஆறு அத்தியாயங்களில்த்தை சொல்லிய ஆத்ம உபாசனம் -வாசியை நன்றாக உணர வேன்டும் –

ஸ்ரேயோ ஹி ஜ்ஞாந மப்யாஸாத் ஜ்ஞாநாத் த்யாநம் விஸிஷ்யதே.-
த்யாநாத் கர்ம பல த்யாகஸ் த்யாகாச் சாந்திரநந்தரம்–৷৷12.12৷৷

ஸ்ரேயோ = சிறந்தது
ஹி = அது
ஜ்ஞாநம் = ஞானம்
அப்யாஸா = பயிற்சியை விட
ஜ்ஜ்ஞாநாத் = ஞானத்தை விட
த்யாநம் = தியானம்
விஸிஷ்யதே = சிறந்தது
த்யாநாத் = தியானத்தை விட
கர்ம = வினைகளின்
பல = பலன்களை
த்யாக = துறந்து விடுவது
ஸ்த்யாகாச் சாந்திர அ நந்தரம் = அந்தத் துறவை காட்டிலும் சாந்தி உயர்ந்தது

அன்பில்லாத குண அனுசந்தானத்தைக் காட்டிலும் -அதற்கு உபாயமான ஆத்மாவை
நேரே காண்பதாகிற அறிவே சிறந்தது அன்றோ
நிறைவடையாத அந்த ஆத்ம சாஷாத்காரத்தைக் காட்டிலும் அதற்கு உபாயமான
ஆத்மாவை தியானிப்பது சிறந்தது அன்றோ
நிறைவடையாத ஆத்ம த்யானத்தைக் காட்டிலும் அதற்கு உபாயமான பல த்யாகத்தோடே
அனுஷ்ட்டிக்கப்படும் கர்மமே சிறந்தது அன்றோ –
பலனில் விருப்பத்தை விட்டு அனுஷ்ட்டிக்கப்படும் கர்ம யோகத்தில் இருந்து அடுத்தபடியாக
மனச் சாந்தி உண்டாகிறது
பக்தி யோகம் -முடியாது அப்பியாசம் –மத் கர்ம -உன்னுடைய கர்மா -கீழே கீழே சொல்லி -அனைத்தும் நானே விதித்தேன் –
என் திருப்தியே உனக்கு நோக்கம் -சமாதானப் படுத்துகிறான் -திரு உள்ளம் இந்த ஸ்லோகம் நன்றாக காட்டும் –
எப்படியாவது நம்மை கை தூக்கி விட அன்றோ பார்க்கிறான்
இதுவே சிறந்தது என்றும் சொல்வான் -வாதங்கள் பல வைத்து –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் நாம் -அவன் யாதானும் செய்து நம்மை கொள்ளுவான்
அப்பியாசம் -முற்று பெறா விட்டால் -கல்யாண குணங்கள் -அதை விட ஞானம் -ஆத்ம சாஷாத்காரம் –கீழ் படி –
அது கை கூடா விட்டால் த்யானம் -அது முடியா விட்டால் கர்ம பல தியாகம் –
இதுவே உயர்ந்தது ஷாந்தி கொள்வாய் -மேலே -7-ஸ்லோகங்கள் -தத் பிரகாரம் –

அத்வேஷ்டா ஸர்வ பூதாநாம் மைத்ரஸ் கருண ஏவ ச.–
நிர்மமோ நிரஹங்காரஸ் ஸம துக்க ஸுகஸ் க்ஷமீ—৷৷12.13৷৷

அத்வேஷ்டா = அ + துவேஷ்ட = வெறுப்பு இல்லாமல்
ஸர்வ பூதா நாம் = அனைத்து உயிர்களிடத்தும்
மைத்ர: = நட்புடன்
கருண = கருணையுடன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நிர்மமோ = நான் எனது என்று எண்ணாமல்
நிரஹங்கார: = நிர் + அஹங்கார = ஆணவம் இல்லாமல் (அஹம் = நான், எனது. கர் = செய்வது, செயல்.
அஹம் + கார = நான் செய்தேன், என்னால் நடக்கிறது என்ற எண்ணம்.அகம்பாவம்)
ஸமது³:க²ஸுக²:= சம + துக்க + சுக = துக்கத்தையும்,சுகத்தையும் சமமாக எண்ணி
க்ஷமீ = பொறுமையுடன் , பொறுப்பவன்

ஸந்துஷ்டஸ் ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷஸ்சய—
மய்யர்பித மநோ புத்திர்யோ மத்பக்தஸ் ஸ மே ப்ரிய—৷৷12.14৷৷

ஸந்துஷ்ட: ஸததம் = எப்போதும் மகிழ்வுடன்
யோகீ³ = யோகி
யதாத்மா = தன்னடக்கத்துடன்
த்ருட நிஸ்சய: = திட நிச்சயத்துடன்
மய் = என்னில்
அர்பித = அர்ப்பணம் செய்து
மநோ = மனம்
புத்திர் = புத்தி
யோ = அவன்
மத்பக்த: = என் பக்தன்
ஸ = அவன்
மே = எனக்கு
ப்ரிய: – பிரியமானவன்

எல்லா ஜீவ ராசிகளையும் வெறுக்காதவனாய் -அவர்கள் இடத்து நட்புக் கொண்டவனாய் –
அவர்கள் துன்புறும் போது கருணை காட்டுபவனாய் -மமகாராம் அற்றவனாய் -அஹங்காரம் அற்றவனாய் –
இன்ப துன்பங்களை ஓக்க நோக்குகின்றவனாய் பொறுமை யுடையவனாய் -திருப்தி பெற்றவனாய் –
எப்போதும் ஆத்ம ஸ்வரூபத்தை அனுசந்திப்பவனாய் மனத்தை அடக்கியவனாய் -சாஸ்திரங்களில் சொன்ன அர்த்தங்களில்
உறுதியான ஞானத்தை உடையவனாய் என்னிடத்திலே செலுத்தப்பட்ட நெஞ்சையும் துணிந்த அறிவையும் உடையவனாய்
எவன் ஒருவன் கர்ம யோகத்தைச் செய்து என்னிடம் அன்பு செலுத்துகிறானோ அவன் எனக்கு இனியவன்

த்வேஷம் இல்லாமல் -எல்லா பூதங்களிலும் -பிரகலாதன் நிஷ்டை —
குற்றம் செய்தவர் பக்கல் பொறையும்–உபகார ஸ்ம்ருதியும் —
இங்கும் அபசாரம் பெற்றவர்கள் இடம் அத்வேஷம் -என்று கொள்ள வேன்டும் –
மேலே மைத்ரேயர் -கை குலுக்கி -நண்பனாக -நமஸ்காரம் நம் பண்பாடு –
கையில் ஒன்றும் இல்லை என்று காட்ட கை குலுக்கி மற்றவர்
தோள் அணைத்தும் உள்ளே கத்தி இல்லையா பார்த்து நண்பன் –
மேலே கருணையும் காட்டி – மமகாராம் அஹங்காரம் இல்லாமை –
பொறுத்து கொண்டு சுகம் துக்கங்களை -இவை எல்லாம் கர்ம யோகத்துக்கு வேண்டுமே
மனசை அடக்கி -சாஸ்திரம் நம்பி -மம பிரியன் -இதற்க்காகவாவது செய்ய வேண்டுமே –
இத்தை எல்லா ஸ்லோகங்களிலும் சொல்லுவான்
என்னிடமே சமர்ப்பிக்கப் பட்ட மனஸ் புத்தி அவனே பலன் -கர்ம யோகம் பண்ணுபவன் பிரியமானவன்

யஸ்மாந் நோத்விஜதே லோகோ லோகாந் நோத்விஜதே ச ய-
ஹர்ஷா மர்ஷபயோத் வேகைர் முக்தோ யஸ் ஸ ச மே ப்ரிய—৷৷12.15৷৷

யஸ்மாந் = எதிலிருந்தும்
ந = இல்லையோ
உத்விஜதே = சலனம்
லோகோ = மக்கள்
லோகாந் = உலகிலிருந்து , மக்களிடம் இருந்து
ந = இல்லையோ
உட்விஜதே = சலனத்தை தருவது
ச = மேலும்
ய: = அவன்
ஹர்ஷா = களியாலும் , அதீத இன்பத்தாலும்
அமர்ஷ = கோபத்தாலும்
பயோ = பயத்தாலும்
உத்வேகை = நடுக்கத்தாலும்
முக்தோ = விடுபட்டு இருக்கிறானோ
ய: = அவன்
ஸ = அவன்
ச = மேலும்
மே = எனக்கு
ப்ரிய: = பிரியமானவன்

எந்த கர்ம யோக நிஷ்டன் இடம் இவ்வுலகம் அஞ்சி நடுங்காதோ -எந்த கர்ம யோக நிஷ்டன்
இவ்வுலகத்தில் அஞ்சி நடுங்க மாட்டானோ -எவன் அதனாலேயே ஒருவனைக் குறித்து ஆனந்தமும்
ஒருவனைக் குறித்து கோபமும் ஒருவனைக் குறித்து பயமும்
ஒருவனைக் குறித்து நடுக்கமும் நீங்கப் பெற்றவனோ அவனும் எனக்கு இனியவன் –
உலகில் உள்ளார் -அனைவரும் –இவனை கண்டு பயப்பட மாட்டார்கள்
சாத்வீகன் -ஆசையும் இல்லை இவனுக்கு -இவனும் லோகம் கண்டு பயப்பட மாட்டான் –
ஸந்தோஷம் கோபம் பயம் நடுக்கம் இல்லாதவன் -கிடைத்தது கொண்டு பிரியம் கொள்பவன் —

அநபேக்ஷஸ் ஸூசிர் தக்ஷ உதாஸீநோ கதவ்யத–
ஸர்வாரம்ப பரித்யாகீ யோ மத் பக்தஸ் ஸ மே ப்ரிய–৷৷12.16৷৷

அநபேக்ஷ: = எதையும் சார்ந்து இராமல் , சுதந்திரமாக
ஸுசிர் = தூய்மையுடன்
தக்ஷ = திறமையுடன்
உதாஸீநோ = பற்றுதல் அற்று
க³தவ்யத²: = | கவலை இன்றி, நடுக்கம் இன்றி
ஸர்வாரம்ப = சர்வ + ஆரம்ப = அனைத்து தொடக்கங்களையும்
பரித்யாகீ = தியாகம் செய்து
யோ = அவன்
மத்ப⁴க்த = என் பக்தன்
ஸ = அவன்
மே = எனக்கு
ப்ரிய: = பிரியமானவன்

ஆத்ம தவிர்ந்த எல்லா வஸ்துக்களையும் விரும்பாதவனாய் -ஆஹார சுத்தியை உடையவனாய் –
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கிரியைகளைச் செய்வதில் வல்லவனாய் –
மற்ற கிரியைகள் விஷயத்தில் உதா சீனனாய் -சாஸ்திரீய கிரியைகள் செய்வதனால் தவிர்க்க முடியாமல்
ஏற்படும் துன்பங்களினால் துன்புறாதவனாய் -சாஸ்திரீய கர்மங்கள் தவிர்ந்த மற்ற கர்மங்கள் அனைத்தையும்
தொடங்காமலே விடுபவனாய் -எந்த கர்ம யோக நிஷ்டன்
என்னிடம் அன்பு செலுத்துகிறானோ அவன் எனக்கு இனியவன்
கர்ம யோகி பிரியமானவன் -ஆத்ம விஷயமே நோக்கு -ஆகார சுத்தி -சத்வ குணம் -தியானம் வளரும் -ஆத்ம சாஷாத்காரம்
துன்பம் அற்று -சாஸ்திரம் சொல்வதை மட்டும் செய்த பக்தன் பிரியன்

யோ ந ஹருஷ்யதி ந த்வேஷ்டி ந ஸோசதி ந காங்க்ஷதி.–
ஸூபாஸூப பரித்யாகீ பக்தமாந் யஸ்ஸ மே ப்ரிய—-৷৷12.17৷৷

யோ = எவன்
ந ஹ்ருஷ்யதி = மகிழ்வது (களிப்புடன் கூடிய மகிழ்வு) இல்லையோ
ந த்வேஷ்டி = வெறுப்பு கொள்வது இல்லையோ
ந ஸோசதி = வருந்துவது இல்லையோ
ந காங்க்ஷதி = ஆசை கொள்வது இல்லையோ
ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ = சுப + அசுப + பரித்யாகி = நல்லதையும் கெட்டதையும் துறந்து
பக்திமாந் = பக்தி கொண்டவன்
ய: ஸ = அவன்
மே = எனக்கு
ப்ரிய: = பிரியமானவன்

எந்த கர்ம யோக நிஷ்டன் இனிய விஷயங்களைப் பார்த்து உகப்பது இல்லையோ –
இனியது அல்லாதவற்றைப் பார்த்து வெறுப்பது இல்லையோ –
இனியவற்றை இழந்த போது வருந்துவது இல்லையோ –
இனியவற்றைப் புதிதாகப் பெற விரும்புவது இல்லையோ –
எவன் புண்ய பாப செயல்களைக் கை விட்டவனாய் என்னிடம் அன்பு செலுத்துகிறானோ அவன் எனக்கு இனியவன்
சப்தம் ஸ்பர்சம் ரூபம் -இவற்றால் ஆனந்தம் த்வேஷம் இல்லை வருத்தம் விருப்பம் கொள்ளாமல்
புண்ய பாபங்கள் விட்டவன் எனக்கு இனியவன்

ஸமஸ் ஸத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ—
ஸீதோஷ்ண ஸுக துக்கேஷு ஸம ஸங்க விவர்ஜித—৷৷12.18৷৷

ஸம: = சமமாக
ஸத்ரௌ ச மித்ரே = சத்ரு, மித்ரு = பகைவனிடத்தும், நண்பனிடத்தும்
ச = மேலும்
ததா = அதே போல
மாநாபமாநயோ: = மானத்திலும், அவமானத்திலும்
ஸீதோஷ்ண = சீத + உஷ்ண = சீதம் என்றால் குளிர்ச்சி; உஷ்ணம் என்றால் சூடு. குளிரிலும், வெப்பத்திலும்
ஸுக துகே ஷு = சுகத்திலும், துக்கத்திலும்
ஸம: = சமமாக
ஸங்க³விவர்ஜித: = பற்று இல்லாதவனோ . சங்கம் என்றால் சேர்த்தல், பற்று கொள்ளுதல்.
விவர்ஜித என்றால் விலகுதல். பற்றில் இருந்து விலகி இருப்பவன். பற்றில்லாதவன்

துல்ய நிந்தா ஸ்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித்.–
அநிகேதஸ் ஸ்திர மதிர் பக்தமாந் மே ப்ரியோ நர—৷৷12.19৷৷

துல்ய = துல்யமாக, சமமாக
நிந்தா = நிந்தனைகளை
ஸ்துதி = துதிகளை,பாராட்டுகளை
மௌநீ = மெளனமாக
ஸந்துஷ்டோ = முழுதும் திருப்தி அடைந்து
யேந கேநசித் = எதை அடைந்தாலும், அதன் மூலம்
அநிகேத: = அ + நிகேத = வீடு இல்லாமல்
ஸ்தி²ரமதிர் = ஸ்திர + மதி = உறுதியான புத்தியுடன்
பக்திமாந் = பக்திமான்
மே = என்
ப்ரியோ நர: = பிரியமானவன்

அருகில் இருக்கும் எதிரியிடமும் நண்பன் இடமும் ஒத்த மனத்தை உடையவனாய் -அவ்வண்ணமே –
மதிப்பிலும் அவமதிப்பிலும் ஒத்த மனத்தினனாய் -குளிர் உஷ்ணம் இன்பம் துன்பம் ஆகியவற்றிலும்
ஒத்த மனத்தினனாய் -இதற்கு காரணம் ஏது எனில் – எதிலும் பற்று அற்று இருப்பவனாய் –
பழிப்பிலும் புகழிலும் ஒத்த மனத்தனனாய் இருப்பவனாய் -பிறர் புகழ்ந்த போதும் இகழ்ந்த போதும்
பதில் குறைக்காமல் இருப்பவனாய் -தற்செயலாகக் கிடைத்த அற்பப் பொருள்களிலும் திருப்தி அடைபவனாய் –
வீடு முதலானவற்றில் பற்று அற்றவனாய் -ஆத்மாவில் உறுதிப்பாட்டை உடையவனாய்
என்னிடம் அன்பு செலுத்தும் மனிதன் எனக்கு இனியவன்

சமமாக -விரோதிகள் நண்பர்கள் -பட்டம் பெற்றாலும் அவமானம் பண்ணினாலும் –
குளிர் வெப்பம் இன்ப துன்பங்கள் சமம் -பற்று இல்லாமல்
நிந்தனை ஸ்தோத்ரம் பண்ணினாலும் –வைதாலும் அவனுக்கு -என் கண்ணன் எனக்கு -கிடைத்தது கொண்டு ஸந்தோஷம்
வீட்டிலே ஆசை இல்லாமல் -ஆத்ம விஷயம் ஸ்திர புத்தி உள்ளவன் -இப்படி பிரகாரங்களை சொல்லி

யே து தர்ம்யாம் ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–
ஸ்ரத்ததாநா மத் பரமா பக்தாஸ் தேதீவ மே ப்ரியா—৷12.20৷৷

யே = அவர்கள்
து = மேலும்
தர்ம்யாம்ருத = தர்மம் என்ற அமிர்தத்தை
இதம் = இந்த
யதோக்தம் = இங்கே சொல்லப் பட்ட
பர்யுபாஸதே = பரி + உபாசதே = வழிபட்டு
ஸ்ரத்த தாநா = நம்பிக்கையுடன்
மத்பரமா = என்னையே பரமாகக் கொண்டு
பக்தாஸ் = பக்தர்கள்
தே = அவர்கள்
அதீவ = மிக அதிகமான
மே = அவன்
ப்ரியா: = பிரியமானவன்

எவர்கள் ப்ராபகமாகவும் ப்ராப்யமாகவும் இருக்கும் இந்த பக்தி யோகத்தை இந்த அத்தியாயத்தில்
இரண்டாம் ஸ்லோகத்தில் சொன்னபடி நன்கு அனுஷ்டிக்கிறார்களோ -ஸ்ரத்தையை உடையவர்களாய் –
எப்போதும் என்னோடே சேர்த்தியை விரும்புவர்களான அந்த பக்தர்கள் எனக்கு மிகவும் இனியவர்கள்
பக்தர்கள் மிகவும் இனியவர் -இவர்களோ என்னில் -து —
யார் எல்லாம் மனசை என்னிடம் லயிக்கும் 2-ஸ்லோகத்தில் கொண்டாடப் பட்ட பக்தி யோக நிஷ்டர்களை —
கர்ம யோகங்களை சொல்லியது -8-பக்தி யோக நிஷ்டர் அசக்தர்களுக்கு -சொல்லி –
உயர்ந்த பக்தி யோக நிஷ்டர் -பக்தியே தர்மம் அமிர்தம் பிறப்பபாம் பிராப்யாம் —
நன்றாக உபாசித்து -என்னிடமே நெஞ்சை செலுத்தி இருப்பவன் மிகவும் பிரியவன் -என்று நிகமிக்கிறான் இதில் –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: