ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் — -5—-ஸ்ரீ கர்ம சந்யாச யோகம் —

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

கர்த்ருத்வ புத்தியை விடுதல் சன்யாசம் —
என்னுடையது அல்ல -பலன் எனக்கு இல்லை -அகர்த்ருத்வ அனுசந்தானம் வேண்டுமே –

கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத் விதா
ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -9-

1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு –
விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
4-ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் –
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷ பூதன்-ஒன்றே –

————————————-

அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம் ஸஸி–
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்–৷৷5.1৷৷

அர்ஜுனன் கேட்டான் -கர்ம யோகத்தை விட்டுச் செய்வதான ஞான யோகத்தையும் –
மறுபடியும் கர்ம யோகத்தையும் புகழ்கிறாய் –
இவ்விரண்டினுள் யாது ஓன்று சிறந்தது என்று உன்னால் உறுதியாக எண்ணப் படுகின்றதோ
அதை எனக்குக் கூறுவாயாக
கர்ம சன்யாசம் -ஞான யோகம் -கர்மம் அனுஷ்டானம் வேண்டாமே –
ஞான யோகமும் பேசி கர்ம யோகத்தில் ஞான பாகமும் பேசி
பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவனாய் இருந்து என்னை குழப்புகிறாய்
இரண்டுக்கும் எனக்கு எதை ச்ரேயஸை கொடுக்குமோ அத்தை அருளுவாய் -நிச்சயப்படுத்தி —
கர்ம சன்யாசம் ஞான யோகமா -கர்ம யோகமா -சாத்தியம் கைப் பட்டால் சாதனம் மறப்பது தானே இயல்பு –
ஏணியை எட்டி உதைப்போமே –
கர்ம யோகம் சாதனம் -ஞான யோகம் சாத்தியம் என்றால் -இதை தொடர வேண்டுமோ –
கர்ம யோகமே நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றானே முன்னமே –
அத்தை திடப் படுத்தி -கர்ம யோகத்தின் ஏற்றம் சொல்லி ஞான யோகம் பண்ணும் சிரமங்களையும் அருளிச் செய்கிறான் –
சக்தி உள்ளவர் -லோக சங்க்ரஹம் இல்லாதவர் மட்டுமே ஞான யோகத்துக்கு அதிகாரிகள் –

ஸ்ரீ பகவாநுவாச
ஸந்ந்யாஸ கர்மயோகஸ்ச நிஸ் ஸ்ரேயஸ கராவுபௌ—-
தயோஸ்து கர்ம ஸந்ந்யாஸாத் கர்ம யோகோ விஸிஷ்யதே—৷৷5.2৷৷

பகவான் கூறினான் -ஞான யோகமும் கர்ம யோகமும் ஆகிய இரண்டுமே சிறந்தவை ஆயினும்
அவ்விரண்டினுள் ஞான யோகத்தைக் காட்டிலும் கர்ம யோகமே சில காரணங்களால் சிறப்புறுகிறது –
இரண்டும் ஆத்ம சாஷாத்காரம் கொடுக்கும் -சன்யாசம் என்றது ஞான யோகம் -யோகம் -கர்ம யோகம் –
இரண்டுக்குள்ளும் கர்ம யோகம் சிறப்புடையது
பழகியது -இதுவே -ஞான யோகம் தேவை இல்லை – இதுவே நேராக சாஷாத்காரம் கொடுக்கும் –
ஞான யோகியும் கர்ம யோகம் விட முடியாதே -மேலும் எனக்கு பிடித்தது -ஆகையால் செய்வாய் –
ஆயர் பிள்ளைகள் -கோவர்தனம் -கண்ணன் சொல்வதை கேட்டு செய்தார்களே –
நீ சொல்வதைச் செய்வேன் சொல்ல வைக்க -700-ஸ்லோகங்கள் வேண்டி இருந்ததே –

ஜ்ஞேய ஸ நித்ய ஸந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி—–
நிர் த்வந்த்வோ ஹி மஹா பாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே—৷৷5.3৷৷

தடக் கையனே -கர்ம யோகம் செய்யும் எவன் ஒருவன் சப்தாதி விஷயங்களை விரும்பாமல் இருக்கிறானோ
அவ்விஷயங்களைத் தடை செய்பவர்கள் இடம் வெறுப்பு அற்று இருக்கிறானோ
சுகம் துக்கம் முதலிய இரட்டைகளைப் பொறுத்துக் கொள்கிறானோ
அவன் எப்பொழுதும் ஞான நிஷ்டனே ஆவான் –
அவனே அன்றோ சம்சாரக் கட்டின் நின்றும் எளிதில் நன்கு விடுபடுகின்றான்
சந்நியாசி -கர்ம யோகியை இங்கே குறிக்கும் -அந்த சந்நியாசி -மிக உயர்ந்தவன் –
கர்த்ருத்வ ஸந்யாஸத்தை -இதுவே இந்த அத்யாயம் –
அகர்த்ருத்வ புத்தி -நான் செய்ய வில்லை -என்னுடையது இல்லை -பலனும் எனக்கு இல்லை –
பற்று அற்ற நிலை -ஆசை சங்கம் இல்லாதவன் –
இந்திரியங்களை பட்டி மேய விடாமல் -துவேஷமும் இருக்காதே ஆசை விட்ட படியால் -த்வந்தம் சுக துக்கம் அற்று –
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் –
செய்கை பயன் உண்பேனும் நானே என்னும் –
செய்வாரைச் செய்விப்பேனும் யானே என்னும் –

சாங்க்ய யோகௌ ப்ருதக் பாலா ப்ரவதந்தி ந பண்டிதா—-
ஏகமப்யாஸ்தித ஸம்யகுபயோர் விந்ததே பலம்—৷৷5.4৷৷

அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களாய் -நிறைந்த அறிவைப் பெறாதவர்களாய் இருப்பவர்கள்
ஞான யோகத்தையும் கர்ம யோகத்தையும் பலத்தில் வேறு பட்டவையாகக் கூறுகிறார்கள்
அவ்விரண்டின் உள்ளும் ஒன்றையே நன்கு பற்றி இருப்பவன் இரண்டின் பலத்தையும் அடைகிறான்
சாங்க்யம் ஞான யோகம் / யோகம் -கர்ம யோகம் -/ வேறு வேறு பலன் கொடுக்கும் என்பர் அஞ்ஞர்-
இரண்டுக்கும் ஒன்றை பற்றி -இரண்டாலும் பெரும் பலனை பெறலாம் –
சமமாக இரண்டையும் அருளிச் செய்கிறான் இதில் –

யத் சாங்க்யை ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே—
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய பஸ்யதி ஸ பஸ்யதி—-৷৷5.5৷৷

யாதொரு ஆத்ம தர்சன ரூபமான பலம் ஞான யோக நிஷ்டர்களால் அடையப் படுகிறதோ
அப்பலனே கர்ம யோக நிஷ்டர்களாலும் அடையப் படுகிறது –
இவ்வாறு ஒரே பலனை விளைப்பதாய் இருக்கையாலே ஞான யோகத்தையும் கர்ம யோகத்தையும்
ஒன்றாக எவன் காண்கிறானோ அவனே அறிவாளியாவான்
அபி சப்தம் -நீ நினைக்கும் ஞான யோக பலன் கர்ம யோகத்தால் கிட்டும் – ஒன்றாக நினைப்பவன்
ஒரே பலனை கொடுக்கும் என்று அறிந்தவன் -வேறு வேறு சாதனங்களாக இருந்தாலும் –
தான் உண்மையை அறிந்தவன் ஆகிறான் –

ஸந்யாஸஸ்து மஹா பாஹோ துக்கமாப்தும யோகத—–
யோக யுக்தோ முநிர் ப்ரஹ்ம நசிரேணாதி கச்சதி—-৷৷5.6৷৷

தடக் கையனே ஞான யோகமோ என்னில் கர்ம யோகத்தை முதலில் அனுஷ்ட்டிக்காமல் அடைய அரிதாகும்
கர்ம யோகத்தை அனுஷ்டிப்பவன் தானே ஆத்மாவை மனனம் செய்து
சிறிது காலத்திலேயே பெரிதான ஆத்மாவை எளிதில் அடைகிறான்
தடக்கையன் -கர்ம சன்யாசம் புரிந்து சன்யாசம் பற்று அற்ற தன்மை விடப் பாராய் –
ஞான யோகம் கர்ம யோகம் இல்லாமல் பலன் தராதே —
கர்ம யோகம் -முனி -மனன சீலன் -ஆத்ம சாஷாத் காரம் பற்றி நினைவு உடன் செய்பவன் –
குறைவான காலத்தில் ஆத்ம சாஷாத்காரம் சுலபமாக அடைகிறான் –

யோக யுக்தோ விஸூத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய—-
ஸர்வ பூதாத்ம பூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே—৷৷5.7৷৷

கர்ம யோகத்தை அனுஷ்டிப்பவனாய் -அதனாலேயே பரி சுத்தி பெற்ற நெஞ்சை உடையவனாய் –
அதனாலேயே எளிதில் வெல்லப்பட்ட மனசை உடையவனாய் -அதனாலேயே இந்திரியங்களை வென்றவனாய்
தேவாதி எல்லா பூதங்களுடைய ஆத்மாக்களோடே ஸமான ஆகாரமாய் இருக்கையாலே
ஒன்றாக அனுசந்திக்கப்பட்ட தன் ஆத்மாவை உடையனாய் இருப்பவன் எல்லாக் கர்மங்களையும் அனுஷ்ட்டித்து
வந்த போதிலும் சரீராத்ம மயக்கம் முதலானவற்றால் கட்டுப்படுவது இல்லை
சரீராத்மா அபிமானம் இவற்றால் தீண்டப்படுவது இல்லை -ஆத்மாவில் அழுக்கு -கர்ம வாசனை இருக்காதே —
த்ரிவித தியாகமே -இத்தை போக்க – அழுக்கு போவது சாஸ்திரம் படி நடக்கிறோம் என்ற ஹர்ஷத்தாலே –
இதுவே இந்திரிய ஜெயம் கொடுக்கும் –
எல்லாம் ப்ரஹ்மாத்மகம் என்று உணருகிறான் -சம தர்சனம் -கர்மம் அனுஷ்டித்துக் கொண்டே இருந்தாலும்
தேஹாத்ம அபிமானம் தீண்டாதே –
தர்ம சாஸ்திரம் சொன்ன படி வாழ்கிறோம் என்ற எண்ணம் -உடன் செய்கிறான் –
கர்த்தாவாக இருந்தாலும் கர்த்ருத்வ புத்தி இல்லையே

நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்.—
பஸ்யந் ஸ்ருண்வந் ஸ்ப்ருஸந் ஜிக்ரந் அஸ்நந் கச்சந் ஸ்வபந் ஸ்வஸந்—-৷৷5.8৷৷

ப்ரலபந் விஸ்ருஜந் க்ருஹ்ணந் உந்மிஷந் நிமிஷந் நபி—
இந்த்ரியா ணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்—৷৷5.9৷৷

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய—
லிப்யதே ந ஸ பாபேந பத்ம பத்ர மிவாம்பஸா—-৷৷5.10৷৷

ஆத்மாவை உள்ளபடி அறிந்தவனான கர்ம யோக நிஷ்டன் கண்ணால் உருவத்தைக் கண்டாலும் –
காதால் ஒலியைக் கேட்டாலும் -இந்த்ரியத்தால் தொடுதலை உணர்ந்தாலும் -மூக்கால் நாற்றத்தை உணர்ந்தாலும் –
காலால் நடந்தாலும் -தூங்கினாலும் மூச்சு விட்டாலும் -கையாலே எடுத்தாலும் -கண்களைத் திறந்தாலும் –
கண்களை மூடினாலும் -இந்திரியங்களுக்கு விஷயமான சப்தாதிகளாலே அந்த அந்த இந்த்ரியங்களே ஈடுபடுகின்றன
என்று உறுதி கொண்டவனாய் -நான் இங்கு கூறப்படும் இந்திரிய வியாபாரங்களில்
எதையுமே செய்கிறேன் அல்லேன் என்று எண்ணக் கடவன் –
கர்த்ருத்வத்தை இந்த்ரியங்களிலே ஏறிட்டுத் தன்னை அகர்த்தாவாக அனுசந்திக்கக் கடவன் -என்று கருத்து –

எவன் ஒருவன் பெரிதான பிரகிருதியின் பரிணாமமான இந்த்ரியங்களில் தான் செய்யும் காண்பது முதலான
கர்மங்களை -முன் கூறிய முறையில் வைத்து -அவற்றிலேயே கர்த்ருத்வத்தை அனுசந்தித்து –
பல சங்கத்தை விட்டு -நானாக ஒன்றும் செய்கின்றேன் அல்லேன் என்னும் அனுசந்தானத்துடன்
கர்மங்களைச் செய்கின்றானோ -அவன் தண்ணீரால் தாமரை இலை தொடப்படாதது போலே
தேகம் இந்திரியம் முதலானவற்றை ஆத்மாவாக அபிமானிப்பதாகிய பாபத்தினால் தொடப்பட மாட்டான் –

உண்மை அறிந்தவன் -ஒன்றுமே நான் செய்வது இல்லை -என்றுமே – பார்க்கிறான் கேட்க்கிறான் தொடுகிறான் முகருகிறான் –
மூச்சு விடுகிறான் தூங்குகிறான் -கண்ணை திறக்கிறான் -மூடு கிறான் -இந்திரியங்களின் கார்யம் –
பெருமாள் தூண்டச் செய்தன -என்னால் செய்யப் பட வில்லை —
முக்குணங்கள் அவன் தூண்டுதல் -என்ற எண்ணம் உண்டே இவனுக்கு -நமக்கு அன்வயம் இல்லை –
இந்திரியங்களின் மேல் – கபிலர் நொண்டி குருடன் -சேர்ந்து கார்யம் -நிரீஸ்வர சாங்க்ய மதம் –
ஆத்மா சரீரம் -கர்த்ருத்வம் ஞாத்ருத்வம் மட்டும் -உள்ளவை போதுமே -ஆத்மா வழி காட்ட சரீரம் கார்யம் என்பான் –
நொண்டிக்கும் ஞாத்ருத்வம் வேணுமே -நடக்கும் வழி கேட்டு நடக்க –
மேல் உள்ளவனுக்கு கர்த்ருத்வம் வேண்டுமே தப்பாக போனால் தோளை தட்டி சரி பண்ண –
கர்த்தா சாஸ்த்ராத்வத் -ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை -பற்றுதலை விட்டு பலத்தில் ஆசை இல்லாமல் –
தாமரை இலை தண்ணீர் போலே-சம்சாரத்தில் வாழ்ந்தாலும் ஒட்டாமல் -இருக்கிறான் என்றபடி -பாபங்கள் தீண்டாது

காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி.–
யோகிந கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வா ஆத்ம ஸூத்தயே—৷৷5.11৷৷

கர்ம யோக நிஷ்டர்கள் ஸ்வர்க்காதி பலன்களில் பற்று இல்லாமல் -ஆத்மாவுக்கு ப்ராசீன கர்மங்கள் நீங்கி
மனத்தாலும் உறுதியாலும் மமகார விஷயம் ஆகாத -எனது என்று அபிமானிக்கப் படாத
இந்த்ரியங்களாலும் கர்மங்களைச் செய்கின்றனர்
ஆத்ம சுத்தி அடைய -கர்ம யோகம் -அநாதி கர்ம வாசனை தொலைய -ஞானத்தின் வேறு வேறு நிலை –
கர்மம் அடியாக ஞான விகாசம் சுருக்கம் -ஜன்மா –
மணிவரம் -ரத்னம் சேற்றில் விழுந்தால் -கௌஸ்துபம் -அஞ்ஞானம் -மறைக்கப் பற்று –
சங்கம் த்யக்த்வா — ஸ்வர்க்கம் போன்ற தாழ்ந்த பலன்களில் பற்று அற்று -கர்ம யோகம் செய்து
இந்திரியங்கள் புத்தி மனஸ் சரீரம் -என்னுடையது என்ற எண்ணம் இல்லாமல் -கேவல சப்தம் அனைத்துக்கும் -சேர்த்து –
அபிமானம் இல்லாமல் பண்ணி -ஆத்ம சுத்தி பெற்று -மமகாராம் அஹங்காரம் இல்லாமல்
கர்ம பலன்கள் தீண்டாமல் -பாப புண்யங்கள் அற்று -சரீர விமுக்தனாக நினைக்க நினைக்க -இவற்றால் பாதிப்பு வராதே –

யுக்த கர்ம பலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்—-
அயுக்த காம காரேண பலே ஸக்தோ நிபத்யதே—৷৷5.12৷৷

மற்ற விஷயங்களில் சாபல்யம் அற்று ஆத்மாவில் ஈடுபட்டவன் கர்மங்களுக்கு உள்ள ஸ்வர்க்காதி பலன்களை விட்டு –
கர்மத்தை அனுஷ்டிப்பதன் மூலம் நிலையான ஆத்ம அனுபவம் ஆகிற ஆனந்தத்தை அடைகிறான் –
மற்ற விஷயங்களில் ஈடுபட்டு ஆத்மாவில் ஈடுபாடு அற்று இருப்பவன் சப்தாதி விஷய காமத்தால் உண்டாகும்
முயற்சியால் ஸ்வர்க்காதி பலன்களில் ஈடுபட்டவனாய் கர்மங்களை அனுஷ்ட்டித்து சம்சாரி ஆகிறான்
ஒரே இந்திரியங்கள் சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு கெட்டதாகவும் இருக்குமோ –
பட்டர் திரு மேனி அலங்காரம் -அவன் உள்ளே எழுந்து இருக்கும் திருக் கோயில் என்ற எண்ணம் –
ஒரே சரீரம் நினைவால் ஆகாரம் மாறிற்றே –
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் -அம்மாவை நன்கு அறிந்தனன்–
ஆசை இல்லாமல் -பற்றுதல் இல்லா -மனசே -பந்த மோக்ஷ காரணம் —
தொழுது எழு என் மனனே -முன்புற்ற நெஞ்சே -நல்லை நல்லை நெஞ்சே உன் பெற்றால் என் செய்யோம்
யோக யுக்தன் -நெஞ்சை பழக்கி -பண்படுத்தி -இந்திரியங்கள் மனஸ் உதவும் – அவை போன வழியில் போகாமல் -அவற்றை அடக்கி –
ஓ மண் அளந்த தாளாளா–அளந்த திருவடிகளை காட்ட தான் பிரார்த்திக்கிறேன் –
நாங்கள் கொள்வான் அன்று -ஓன்று நூறாயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வோம் –
ஸ்வயம் பிரயோஜனம் -திரு நாம சங்கீர்த்தனம் -திரு விளக்கு ஏற்றுதல் -கைங்கர்யம்
அல்ப பலன்கள் கேட்டு சம்சாரத்தில் மக்நராய் ஆழ்ந்தே போகிறார்களே-

ஸர்வ கர்மாணி மநஸா ஸந்ந்யஸ் யாஸ்தே ஸுகம் வஸீ.—-
நவ த்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயந்—-৷৷5.13৷৷

தேகத்தை உடையவனாய் -ஸ்வரூபத்தாலே தன் வசத்தில் இருப்பவனான ஜீவன்
ஒன்பது வாசலுடைய பட்டணமான சரீரத்தில் எல்லாக் கர்மங்களையும் மனத்தினால் நன்கு விடுத்து
தானும் செய்யாமலும் தேஹத்தையும் செய்விக்காமலும் இருந்து கொண்டு இன்பமாய் வாழ்கிறான்
ஆத்மா பண்ணவும் பண்ணி வைக்கவும் இல்லாமல் -வசீ -எல்லாம் மனசால் துரந்து -விவேக ஞானம் பெற்று –
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம் அறிந்து -சுகம் பெறுகிறான்
உறவுகள் சரீர சம்பந்தத்தால் தானே –ஒன்பது த்வாரங்கள் உள்ள பட்டணம் –சரீரம் –
கொப்பூழ் தலை பகுதி சேர்த்து -11-என்பர் குழந்தைக்கு –
திறந்த கூண்டு -வரும் கஷ்டங்கள் -அவயவங்கள் உடன் கூடிய சரீர கஷ்டம் -ஆத்மா அப்படி இல்லையே
ஆத்மாவில் மனசை செலுத்தி -மனஸ் இந்திரியங்கள் முற்றுகை -சரீரத்தை தானே ஆத்மாவை முடியாதே –
கர்ம பாரதந்தர்யம் -சரீரம் ஆத்மா இல்லையே -பெரியதாய் பராமரிப்பது கஷ்டம் –பல வித வைத்தியர்கள் வேன்டும் –
நிறைய தடவை போக வேன்டும் -ஆத்மா அணு-கௌஸ்துபம் -ரத்னம் போலே –
ஒரே வியாதி -சம்சாரம் -ஒரே வைத்தியர் வைத்தியோ நாராயணோ ஹரி -ஒரே மருந்து சரணாகதி -ஒரே தடவை ஸக்ருத் போதுமே
ஊன் இடை சுவர் வைத்து என்பு தோல் உரோமம் கூரை வேய்ந்து –ஒன்பது வாசல் —
தானுடை குரம்பை -கலியன் -நைமிசாரண்யம் -சரணாகதி

ந கர்த்த்ருவம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு–
ந கர்ம பல ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே—-৷৷5.14৷৷

கர்ம வசப்படாததான ஜீவ ஸ்வரூபம் -விசித்திரமான ஜன சமூகத்திற்கு கர்த்தாவாய் இருக்கும் தன்மையை
உண்டாக்குவது இல்லை -செயல்களையும் உண்டாக்குவது இல்லை –
தேவர் முதலானவர்க்கு உரிய கர்ம பலன்கள் அனுபவத்தையும் உண்டாக்குவது இல்லை –
ப்ரக்ருதி வாசனையே இவை அனைத்தையும் உண்டாக்குகிறது
இயற்கையில் அகர்த்ருத்வம் –பிரகிருதி சம்பந்தத்தால் -பிரபு -ஜீவாத்மா –கர்மாவும் இல்லை கர்த்ருத்வமும் இல்லை
லோகஸ்ய -லோகத்தில் உள்ள ஜனங்கள் -ஆகு பெயர் -ஸ்வபாவஸ்து-பிரகிருதி – இதுவே பூர்வ வாசனை –

நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு—
அஜ்ஞாநே நாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ—৷৷5.15৷৷

பல இடங்களில் பரவக் கூடிய இந்த ஜீவன் தனக்கு வேண்டியவனாக நினைக்கப்படும் புத்ரன் முதலான
எவனுடைய துக்கத்தையும் நீக்கி விடுவது இல்லை –
தனக்கு வேண்டாதவனாக நினைக்கப்படும் சத்ரு முதலான எவனுடைய ஸூகத்தையும் போக்கடிப்பது இல்லை –
இவனுடைய அறிவு -இவ்வறிவுக்கு விரோதியான முன் செய்த வினைகளால் மறைக்கப் பட்டுள்ளது
தேவாதி சரீரங்கள் இருக்கும் ஜீவர்கள் அந்த முன் செய்த வினைகளால் தேஹாத்ம மயக்கம்
முதலான வற்றால் மயங்குகின்றனர்
ரொம்ப வேண்டியவர்கள் இடம் -பாபத்தை நீக்க முடியாதே -வேண்டாதவர் இடம் புண்ணியம் நீக்கவும் முடியாதே
விபு -ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தை சொன்ன படி
பல ஜென்மங்களில் வேறு வேறு சரீரங்களில் புகுகுவதால் விபு –
ஆத்ம பந்துவை பார்க்காமல் -தேக பந்துவை நினைத்து -தேஹாத்ம பிரமம் அஞ்ஞானம் பூர்வ ஜன்ம பாப வாசனை –

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந–
தேஷாமாதித்யவத் ஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்—৷৷5.16৷৷

எந்த ஜீவர்களுக்கு ஆத்ம விஷயமான ஞானத்தால் அந்த கர்மம் அழிக்கப் பட்டதோ அவர்களுக்கு
மேலான அவ்வாத்மா ஞானம் ஸூர்யனைப் போலே எல்லாவற்றையும் பிரகாசப் படுத்துகிறது
விலக்க உபாயம் -அநாதி பாப கர்ம வாசனை -ஆத்ம யாதாம்யா ஞானம் கொண்டே -வளர்த்து -அப்பியாசம் முக்கியம் –
ஆதித்யன் ஒளியால் பொருள்கள் விளங்குவது போலே ஞானம்-மேகம் மூட்டம் போலே அஞ்ஞானம் –

தத்புத்தயஸ் ததாத்மாநஸ் தந்நிஷ்டாஸ் தத்பராயணா—-
கச்சந்த்ய புநராவ்ருத்திம் ஜ்ஞாந நிர்தூத கல்மஷா—৷৷5.17৷৷

முன் கூறிய ஆத்ம தர்சனத்தாலேயே உறுதி பூண்டவர்களாய் -அதிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் –
அதின் பயிற்சியிலே ஊன்றி நிற்பவர்களாய் -அதுவே பரம பிரயோஜனம் என்று நினைத்து இருப்பவர்களாய்
இந்த ஆத்ம ஞானத்தாலேயே முன் செய்த வினைகள் அழியப் பெற்றவர்கள்
திரும்பி வருதல் இல்லாத ஆத்மாவை அடைகிறார்கள்
படிக்கட்டுகள் -ஞானம் கத்தியால் வெட்டிக் களையப் பட்ட பாப -கர்ம -வாசனை–ஆத்ம விஷயத்தில் –
உறுதி முதலில் -கேட்க கேட்க –உபதேசம் அனுஷ்டானம் இவற்றால் -பெற்று -அதன் பின்னே நெஞ்சு அதில் சென்று –
அடுத்து –பயிற்சி -அப்பியாசம் –பரம பிரயோஜனம் அடைவாய்
பாராயணம் ஆத்ம சாஷாத்காரம் -மீளாத பரம ப்ராப்யம் –
ஸ்ரீ கூரத் தாழ்வான் -ஸ்ரீ முதலி யாண்டான் -விட்டே பற்றவை -பற்றி விடவா –
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட -என்றவாறு –

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—
ஷுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஸிந—-৷৷5.18৷৷

அறிவாளிகள் கல்வியும் அடக்கமும் உடைய அந்தணர் இடமும் அவை அற்ற அந்தணர் இடமும்
உருவத்தால் சிறிய பசுவின் இடமும் உருவத்தால் பெரிய யானையின் இடமும் –
கொன்று தின்னப்படும் நாயிடமும் அதைக் கொண்டு தின்னும் சண்டாளனிடமும் கூட
ஆத்மா ஒரு படிப் பட்டு இருக்கையாலே சமமாகப் பார்ப்பவர்களாய் இருக்கின்றனர்
சம தர்சனம் முக்கியம் -ப்ரஹ்ம ஞானம் -சேஷ பூதர்-அனைவரும் —
வித்யையும் விநயமும் உள்ள -இல்லாத ப்ராஹ்மணர்களுக்குள் வாசி
கோ ஹஸ்தி பசுவோ யானையோ -நாயை அடித்து உண்ணும் வேடனுக்கு நாயுக்கும் வாசி பார்க்காமல்
சம தரிசனமே ஆத்ம சாஷாத்காரம் –
இவை எல்லாம் சரீரத்தால் தானே -ஆத்மா இயற்கையாகவே ஞானி -ஏக ஆகாரம் தானே
புல்லாங்குகள் ஒரே காத்து -சப்த ஸ்வரம் – பசுமாடு பல வர்ணங்கள் பால் வெண்மை தானே –

இஹைவ தைர்ஜித ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந–
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா—৷৷5.19৷৷

எவர்களுடைய மனம் முன் ஸ்லோகத்தில் சொன்ன ஆத்ம சாம்யத்திலே நிலை நிற்கிறதோ –
அவர்களால் சாதனா அனுஷ்டான நிலையிலேயே சம்சாரம் ஜெயிக்கப் பட்டது –
ப்ரக்ருதி சம்பந்த ரூப தோஷம் அற்றதாய் அதனாலேயே சமமாய் இருப்பதான ஆத்ம வஸ்துவே அன்றோ
ப்ரஹ்மம் எனப்படுகிறது -ஆகையால் அவர்கள் ப்ரஹ்மத்தில் நிலை நிற்பவர்கள் ஆவார்
தோஷம் விலக்கப்பட்ட ஆத்ம -பிரகிருதி சம்பந்தம் இல்லாமல் -கர்ம யோகி -இங்கேயே
சாதன தசையில் சம்சாரம் கழிக்கப் பெற்ற பெருமை அடைகிறான் –
ப்ரஹ்மம் சாம்யம் பெறுகிறான் -பாப புண்ய ரூப கர்மங்கள் வில்லை -சமமாக அனைத்தையும் பார்க்கிறான்
மேலே ஆறு நிலைகள் சம தரிசனத்துக்கு -படிப் படியாக உயர்த்திக் கொண்டு அருளிச் செய்கிறான்

ந ப்ரஹருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத் விஜேத் ப்ராப்ய சாப்ரியம்.—
ஸ்திர புத்திரஸம்மூடோ ப்ரஹ்ம வித் ப்ரஹ்மணி ஸ்தித—৷৷5.20৷৷

நிலையான ஆத்மாவிடம் ஈடுபட்டவனாய் -நிலையற்ற தேகத்தை ஆத்மாவாக எண்ணி மயங்காதவனாய் –
உபதேசத்தால் ப்ரஹ்மம் ஆகிற சுத்தாத்மாவை அறிந்து அவ்வாத்மாவில் ஈடுபட்டவன்
ப்ராக்ருதமான இனிய பொருளை அடைந்தும் ஆனந்தம் அடைவது இல்லை –
ப்ராக்ருதமான இன்னாத பொருளை அடைந்தும் பயத்தை அடைவது இல்லை
ப்ரஹ்மவித் -ஆத்மாவை அறிந்தவன் -பிரியமானது பெற்று ஹர்ஷமோ -அப்ரியமானது பெற்று பயப்படாமல் –
ஸ்திர புத்தி கொண்டு தேஹாத்ம அபிமானம் இல்லாமல் -அமூடராக -ஆத்மாவை அறிந்து -நிலை நிற்கிறான் –
அப்ரியம் கண்டு துக்கப் படாதே சொல்ல வில்லை -பயப்படாதே என்கிறான் –
வருவதற்கு முன்பு உள்ள நிலை தானே -இது முதல் நிலை –

பாஹ்ய ஸ்பர்ஸேஷ் வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யஸ் ஸுகம்.—
ஸ ப்ரஹ்மயோக யுக்தாத்மா ஸுக மக்ஷய மஸ்நுதே—-৷৷5.21৷৷

எந்த கர்ம யோகியானவன் வெளி விஷய அனுபவங்களில் ஈடுபடாத நெஞ்சை உடையவனாய் –
உள்ளே இருக்கும் ஆத்மாவாலேயே இன்பம் அடைகின்றானோ –
அவன் ஆத்மாவைப் பயில்வதிலேயே ஈடுபட்ட மனம் உடையவனாய்
ஆத்ம அனுபவம் ஆகிற அழியாத ஸூகத்தைப் பெறுகிறான் –
அடுத்த நிலை -ஸ்திர புத்தி ஏற்பட்ட -முதல் நிலை வந்த பின்பு – இங்கு நெஞ்சு -பாஹ்ய விஷயம் தீண்டினாலும்
மனஸ் செல்லாமல் ஆத்மா இடமே ஸூகத்தை பார்த்து -சுத்த ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சை செலுத்தி -ஆனந்தம் படுகிறான் –

யே ஹி ஸம் ஸ்பர்ஸஜா போகா துக்கயோநய ஏவ தே.—
ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷

குந்தீ புத்திரனே விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் யாவை சில உண்டோ –
அவை துன்பத்திற்கே காரணமாய் இருப்பவை அன்றோ -முதலும் முடிவும் உள்ளவை அன்றோ –
அவற்றின் இயல்வை அறிபவன் அவற்றில் ஈடுபட மாட்டான்
மூன்றாவது நிலை -விஷயங்கள் தீண்டி -இந்திரியங்கள் விஷய சம்பந்தம் பெற்று –சுகமே துக்கத்துக்கு காரணம் என்று அறிந்து —
அல்பம் அஸ்திரம் -முதலிலே படாமலே இருக்கலாம் ஆத்ம சுகமே ஆதி யந்தம் இல்லாதது -என்று அறிந்து –
சம்சாரம் தோஷம் காட்டியே மனசை திருப்பி –
வஸ்து சம்பாதிக்கும் கஷ்டம் -ஆர்ஜன தோஷம் -ரக்ஷணம் -எலிகள் திருடன் ராஜா -நெல்லை காப்பது கஷ்டமே –
க்ஷய தோஷம் -போக தோஷம் அனுபவிக்கும் பொழுது -ஹிம்ஸா தோஷம் -அனுபவிக்கும் பொழுது இவை கண்ணில் பட்டு -சுகப்படாமல் –
பட்டு -காணும் பொழுது எத்தனை பட்டு பூச்சி – மாலை சாத்தும் பொழுது -இதை பூ பறித்து கட்டி செய்த கஷ்டங்களை அனுசந்தித்து –

ஸக்நோதீஹைவ ய ஸோடும் ப்ராக் ஸரீர விமோக்ஷணாத்.—
காம க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த ஸ ஸுகீ நர—-৷৷5.23৷৷

சரீரம் விடுவதற்கு முன் -சாதன அனுஷ்டான நிலையான இக்காலத்திலேயே காம க்ரோதங்களால் –
மநோ வாக் காயங்களால் ஏற்படும் வேகத்தை எந்தக் கர்ம யோகியானவன் பொறுக்க வல்லவன் ஆகிறானோ
அந்த மனிதனே ஆத்ம அனுபவத்தை அடையத் தக்கவன் –
சரீரம் விட்ட பின் ஆத்ம அனுபவ ஸூகத்தை அவன் அடைகிறான்
நான்காவது நிலை –சரீரம் போவதற்கு சற்று முன்பு -தடுக்க யாரால் முடியுமோ –
காமம் க்ரோதங்களால் ஏற்படும் -வேகம் -நிதானம் இழந்து-கரண த்ரயங்களால் –அவனே அதிகாரி -ஆவான்

யோந்தஸ் ஸுகோந்தரா ராமஸ் ததாந்தர் ஜ்யோதிரேவ ய–
ஸ யோகீ ப்ரஹ்ம நிர்வாணம் ப்ரஹ்ம பூதோதி கச்சதி–৷৷5.24৷৷

எவன் ஒருவன் ஆத்ம அனுபவத்தையே போக்யமாகக் கொண்டவனாய் -எவன் ஒருவன் அதையே
போக ஸ்தானமாகக் கொண்டவனாய் -அவ்வண்ணமே எவன் ஒருவன் அதையே
போக உபகரணமாகக் கொண்டவனாய் இருக்கிறானோ அவன் சுத்தாத்மா நிலையை அடைந்தவன் ஆவான் –
அந்தக் கர்ம யோகீ ஆத்ம அனுபவ ஸூகத்தை அடைகிறான் –
ஐந்தாவது நிலை –உண்ணும் சோறு -இத்யாதி -ஆத்மாவை பற்றியே -சுகம் அடைந்து –
ஆத்மாவையே போக ஸ்தானம் போக உபகரணம் -சுத்த ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து

லபந்தே ப்ரஹ்ம நிர்வாணம் ருஷய க்ஷீண கல்மஷா—
சிந்நத்வைதா யதாத்மாந ஸர்வ பூத ஹிதே ரதா—-৷৷5.25৷৷

சீத உஷ்ணம் முதலிய இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாய் -ஆத்மாவிலேயே ஈடுபட்ட மனத்தை உடையவர்களாய்
எல்லா ஜீவ ராசிகள் உடையவும் நன்மையில் ஊற்றம் உடையவர்களாய் ஆத்ம சாஷாத்காரத்தை பயில்கின்றவர்களான
கர்ம யோகிகள் ஆத்மாவை அடையத் தடையாய் இருக்கும் எல்லாப் பாபங்களும் நீங்கப் பெற்றவர்களாய்
ஆத்ம அனுபவ ஸூகத்தாய் அடைகிறார்கள் –
ஆறாவது நிலை – எல்லா ஜீவ ராசிகள் -அடியார்கள் வாழ –கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ –
இரட்டை கடந்து -ஆத்மாவில் நிலை நின்று -பாபங்கள் வாசனை தொலைந்து சாயுஜ்யம் பெறுவார்
ரிஷிகள் போலே மந்த்ர த்ரஷ்டர்-ஆவார்கள் -கஷ்டப்பட்டு தவம் இத்யாதியால் பெற்றதை கர்ம யோகி பெறுவான் – –

காம க்ரோத வியுக்தாநாம் யதீநாம் யத சேதஸாம்—
அபிதோ ப்ரஹ்ம நிர்வாணம் வர்ததே விஜிதாத்மநாம்—৷৷5.26৷৷

காம க்ரோதங்கள் அற்றவர்களாய் பிராகிருத விஷயங்களில் பற்று அற்றவர்களாய் –
மனத்தை ஆத்மாவிலேயே ஈடுபட்டவர்களாய் -மனத்தை வென்றவர்களான கர்ம யோகிகளுக்கு
ஆத்ம அனுபவ ஸூகம் அருகிலேயே உள்ளது
இந்திரியங்களை வென்று –நமக்கு நெருக்கமான -அக்கரை அநர்த்தக்கடல் -இக்கரை அடையலாம் –
பிராகிருத விஷயங்களில் வைராக்யம் -கொண்டு -கை இலங்கு நெல்லிக் கனி யாகும்

ஸ்பர்ஸாந் க்ருத்வா பஹிர் பாஹ்யாம் சக்ஷுஸ் சைவாந்தரே ப்ருவோ–
ப்ராணா பாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப் யந்தர சாரிணௌ—৷৷5.27৷৷

யதேந்த்ரிய மநோ புத்திர் முநிர் மோக்ஷ பராயண–
விகதேச்சா பய க்ரோதோ யஸ் ஸதா முக்த ஏவ ஸ—৷৷5.28৷৷

வெளி விஷய ஸ்பர்சங்களை வெளியிலே தள்ளி -கண்கள் இரண்டையும் புருவங்களின் நடுவே செலுத்தி
மூக்கினுள் சஞ்சரிக்கும் பிராண அபான வாயுக்களை சமமாக ஆக்கி -ஆத்மா தவிர்ந்த விஷயங்களில் செல்ல முடியாதபடி
அடைக்கப் பட்ட இந்த்ரியங்களையும் மனத்தையும் அறிவையும் உடையவனாய் –
அதனாலேயே விஷயங்களில் விருப்பம் -அவ்விருப்பம் நிறைவேறாதோ என்னும் பயம் –
அதை நிறைவேறாதபடி செய்பவர்கள் இடம் கோபம் -ஆகியவை அற்றவனாய்
ஆத்ம பிராப்தி யாகிற மோக்ஷத்தையே மேலான ப்ராப்யமாகக் கொண்டவனாய் –
ஆத்மாவைக் காண்பதையே இயல்வாகை உடையவனாய் எவன் இருக்கிறானோ அவன் எப்போதும் முக்தனாகவே இருப்பவன் –
வெளி விஷயங்கள் தீண்டினால் அகற்று -புருவம் நடுவில் பார்த்து -இரண்டு கண்களாலும் ஒன்றையே பார்த்து –
பிராண வாயு ஆபரண வாயு கதிகளை சமன்வயப்படுத்தி –
அடக்கப்பட்ட இந்திரியங்கள் மனஸ் புத்தி -முனியாகி -ஆத்ம சாஷாத்காரத்தில் ஆசை வைத்து –
இச்சை பயம் க்ரோதம் மூன்றும் இல்லாமல் எப்பொழுதும் முக்தனாக இருக்கிறான்

போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்—-
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி—৷৷5.29৷৷

யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக் கொள்பவனும் எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக என்னை அறிந்து சாந்தி அடைகிறான்
தன்னை பற்றி இங்கே அருளிச் செய்து -கர்மங்களால் ஆராதிக்கப்படுபவன் தானே –
ஸூ லாபமான கர்மம் -என்னை நோக்கி பண்ணுவதால் -அழகான வாதம்
காருண்யம் உதாரன் மகேஸ்வரன் மூன்றையும் அறிந்து –
திருமேனி அழகை நினைந்தே -சர்வரும் நன்றாக இருக்க வேன்டும்-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: