ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -4—-ஸ்ரீ ஞான யோகம்-(ஸ்ரீ கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )

பிரசங்காத் ஸ்வ ஸ்வபாவ உக்தி-கர்மணோ அகர்ம /அஸ்ய ச -பேதா-/- ஜ்ஞாநஸய மஹாத்ம்யம்–/
சதுர்த்தாத்யாய உச்யதே– ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -8–

அவதார ரஹஸ்யம் (-4-11-)/ கர்ம யோகத்துக்குள் ஞான யோகம் (4-24)/
அஸ்ய ச -பேதா-13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் -4-30-/ஜ்ஞாநஸய மஹாத்ம்யம்-

1-அவதார சத்வத்வம் —
2-அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவத்வம் —
3-சுத்த சத்வ மயத்வஞ்ச –
4–ஸூ இச்சா மாத்ரா நிதானதா
5-தர்ம கிலானோ சமுதயா –
6–சாது சம்ரக்ஷணர்த்ததா —

——————————————

ஸ்ரீ பகவாநுவாச-
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா நஹமவ்யயம்.-
விவஸ்வாந் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேப்ரவீத்—৷৷4.1৷৷

ஏவம் பரம்பரா ப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது–
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட பரந்தப—৷৷4.2৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -நான் அழியாததான முன் அத்தியாயத்தில் சொன்ன இந்த கர்ம யோகத்தை
ஸூர்யனுக்கு வைவஸ்வத மன்வந்த்ரத்தின் ஆதியில் உபதேசித்தேன் –
ஸூர்யன் வைவஸ்வத மனுவுக்கு உபதேசித்தான் -அந்த மனு தன் உத்ரனான இஷுவாகுவுக்கு உபதேசித்தான்

எதிரிகளைச் தவிக்கச் செய்யும் வீரனே -இவ் வண்ணமாக புத்ர பவுத்ர பரம்பரையாக உபதேசித்து அறியப் பட்ட
இக் கர்ம யோகத்தை ஜனகர் முதலான ராஜ ரிஷிகள் அறிந்தவராக இருந்தனர்
அக் கர்ம யோகம் இவ்வுலகில் காலத்தின் கொடுமையால் -உபதேச பரம்பரை இல்லாமையால் -அழிந்து விட்டது –

இந்த அழிவற்ற கர்ம யோகத்தை -நான் விவஸ்வனுக்கு உபதேசித்தேன் —28-சதுர் யுகங்களுக்கு முன்பு –
அவன் மனுவுக்கும் -மனு இஷுவாக்குக்கும் உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது —
அஸ்வபதி அம்பரீஷர் ராஜ ரிஷிகள் பின் பற்றி வந்தனர் பல காலங்கள் ஆனதாலும்-த்ரேதா யுகம் —
ஸ்ரீ ராமன் -35-ராஜா -கலியுகத்தில் கண்ணன்
புத்தி குறைவாலும் இந்த கர்ம யோகம் அழியும் நிலையில் இப்பொழுது உள்ளது –
நஷ்ட -நலிந்து -என்றவாறு -இன்றும் -பீஷ்மர் துரோணர் உண்டே -தெரிந்தும் சரியாக பண்ண வில்லையே –

ஸ ஏவாயம் மயா தேத்ய யோக ப்ரோக்த புராதந-
பக்தோஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேத துத்தமம்—৷৷4.3৷৷

எனக்குப் பக்தனாகவும் நண்பனாகவும் இருக்கிறாய் என்னும் காரணத்தினால் -பழையதாய் -இப்படி
உபதேச பரம்பரையினால் ரக்ஷிக்கப் பட்டு வந்த அத்தகைய இந்த கர்ம யோகமே பிரபன்னனான உனக்கு
இன்று என்னால் விரிவாக உபதேசிக்கப் பட்டது -இது மேலான வேதாந்த ரஹஸ்யம் அன்றோ –
அதே கர்ம யோத்தை மாற்றாமல் இன்று -உன் பொருட்டு -சர்வஞ்ஞன் சர்வசக்தனான நான் –
உன்னுடைய நட்புக்காகவும்–சஹன் -பக்தன் – பக்திக்காகவும் இந்த பழைய யோகத்தை
அங்கங்கள் உடன் உபதேசிக்கிறேன் -சிஷ்ய லக்ஷணமும் இத்தால் சொல்லப் பட்டதே –
வேதாந்தத்தில் உள்ள ரஹஸ்யமான இந்த பக்தி யோகம் என்னால் அல்லது யாராலும் உபதேசிக்க முடியாதே –

அர்ஜுந உவாச
அவரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத-
கதமேதத் விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி—৷৷4.4৷৷

அர்ஜுனன் கேட்டான் –உம்முடைய பிறப்பு காலத்தால் பிற்பட்டது -ஸூர்யனுடைய பிறப்பு காலத்தால் முற்பட்டது –
அப்படி இருக்க நீயே மன்வந்த்ரத்தின் ஆதியில் ஸூர் யனுக்கு உபதேசித்தாய் என்னும்
இந்த அர்த்தத்தை எப்படி உண்மை என அறிவேன் –
அவரம் -தாழ்ந்த ஜாதி தேவ ஜாதிக்கு உபதேசமோ -சொல்ல வில்லை-தர்ம வியாதன் இடம் உபதேசம் –
கொடுமின் கொள்மின் – அர்ஜுனன் அறிவான் இவனே திவ்ய பரம புருஷன் -பீஷ்மர்-சகாதேவன் -சொல்லிய வார்த்தைகள்
தர்மர் ராஜசூய யாகம் செய்யும் பொழுது -அவன் அவதாரம்-உண்மை என்றும் அறிவான் –
கம்ச வதம் -முக்கிய காரணம் என்று –சாஸ்திரம் அறிபவன் -முன் பிறவி ஞானம் நம்புபவன் –
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் என்று அறிபவன் –அவதார ரஹஸ்யங்கள் அவன் அருளிச் செய்யக்
கேட்கும் ஆசையால் கேட்கிறான்-அன்று உபதேசித்த திருமேனி எது –
கர்மா தொலைக்க நாம் பிறக்கிறோம்- உன் அவதார காரணங்கள் என்ன -சங்கைகளை மறைத்து கேட்கிறான் —

ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—৷৷4.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -அர்ஜுனா உனக்குப் போலே எனக்கும் கணக்கற்ற பிறவிகள் கடந்து விட்டன –
அவை அனைத்தையும் நாம் அறிவேன் -ஆனால் நீ அவற்றை அறிய மாட்டாய் –
நான்கு ஸ்லோகங்கள்-ஆறு ரஹஸ்யங்கள் –
அவதாரஸ்ய சத்யத்வம் –என்கிறான் இதில் –மேலே மூன்று ஓன்று ஓன்று ஆக ஆறும் அருளிச் செய்வான் –
உன்னைப் போலே பல பிறவிகள் எனக்கும் கழிந்தன – -த்ருஷ்டாந்தம் அறிந்த ஒன்றை காட்டியே தானே சொல்ல வேன்டும் –
பிரசித்தம் -ஸ்தூலா நிந்ததி நியாயம் —
நஸ சீதாத் –ந அஹம் அபி ராகவா -அக்குளத்தில் மீன் -என்றான் –
பத்து என்பது மனசில் பிடிக்க– அஜாயமானோ பஹுதா விஜாயத-
எனக்கு உன் பிறவி என் அவதாரங்கள் எல்லாம் தெரியும் -எல்லாம் மெய்யே
உனக்கு பிறப்பு-எனக்கு அவதாரம் -ஆவிர்பூதம் —
பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து -எளிமையை அனுபவிக்க ஆழ்வார்கள் –

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்
முதல் ஸ்லோகத்தில் ஓன்று – மூன்று ரஹஸ்யங்கள் இதில் –
அடுத்த இரண்டிலும் இரண்டு -அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவதா –ஒன்றும் குறையாமல் அவதாரம்

அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண ஏக குணாத்மகம் –திவ்ய மங்கள விக்ரஹம் -இத்யாதி –
ப்ரக்ருதிம்-ஸ்வபாவம் -மாறாமல் -நீல தோயத மத்யஸ்தாம் –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்த மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்.
தமேவ விதித்வாதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய৷—ஸ்வேதாஸ்வத்ர உபநிஷத் – 3.1.8৷৷
ஸ ஹோவாச மஹாத்மநஷ்சதுரோ தேவ ஏக க ஸ ஜகார புவநஸ்ய கோபாஸ்தம் காபேய நாபிபஷ்யந்தி
மர்த்யா அபிப்ரதாரிந்பஹுதா வஸந்தம் யஸ்மை வா ஏததந்நம் தஸ்மா ஏதந்ந தத்தமிதி ৷৷–ப்ரஹதாரண்யகம் 4.3.6 ৷৷

மீனில் உடம்பு முழுவது நீர் போலே எங்கும் ஸ்ரீ தேவி இவனுக்கு எல்லா அவதாரங்களிலும் –
ஆமையான கேசனே –என்ன கேசபாசம் -கொண்டாடுகிறார் –
சரீரம் உண்டோ உனக்கு -மூன்றாவது கேள்வி –எதனால் செய்யப்பட்டது -நம்மது பாஞ்ச பவ்திக்கம் —
மாத்ரு யோனி பரீஷை -வீட்டு இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் –
பஞ்ச சக்தி மயம் -உபநிஷத் மயம் -அப்ராக்க்ருதம் அன்றோ அவன் திவ்ய மங்கள விக்ரஹம் –
சுத்த சத்வ மயத்வஞ்ச –பதில் இதற்கு -எதனால் அவதாரம் கேள்விக்கு
ஸ்வேச்சா மாத்ர நிதானதா –ஆசைப்பட்டு இச்சையால் -அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—
சன் மூன்று இடத்திலும் –
அஜோபிஸந் -பிறவாதவனாக இருந்து கொண்டு —
முடிவு இல்லாதவனாக கொண்டு –
ஈஸ்வரனாக இருந்து கொண்டு –
தேரோட்டியாக இருந்தாலும் நான் தான் ரதி –

ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா-
எனக்கே உரித்தான அப்ராக்ருதமான திருமேனியை எடுத்துக் கொண்டு -சங்கல்பத்தால் அவதரிக்கிறேன் –
பன்னி பன்னி வியாக்யானம் -பிறக்காதவன் -வேறுபட்டவன் -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஸ்ரீ ராமானுஜர் முத்திரை ஸ்ரீ ஸூக்தி–
அசித் பத்த முக்த நித்ய -இவர்களில் மாறி -என்பதற்கு நான்கு சப்தங்கள் –
பிறக்கும் அனைத்தும் பத்தாத்மா விட மாறு பட்டவன் -அஜோபி சன்
அஜ- பிறப்பிலி பல் பிறவி பெருமான் -அசித் ஸ்வரூப விகாரம் -பத்தன் ஸ்வபாவத்தால் விகாரம்
குறைவில்லாமல் அடுத்து -அவ்யயாத்மாசன் முக்தர் முன்பு குறைபட்டு -இவன் நிர்விகாரம் எப்பொழுதும்
நித்யர் அஸ்ருப்ஷ்ட சம்சார கந்தன் -பூதானாம் ஈஸ்வரோ சன் -அவர்கள் சொத்து நான் ஸ்வாமி –

ஐந்து விரல்கள் போலே -அங்குஷ்ட மாத்ர -நான்கையும் விட மாறுபட்ட கட்டை விரல் –
நான்கும் இது சேர்ந்தால் தானே வேலை செய்யும் –
அவனுக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம் -சுத்த சத்வமயம் -எங்கு சேவித்தாலும் நமக்கும் சத்வம் வளரும் —
சுபாஸ்ரயம் -அர்ச்சா ரூபங்களும்-
கோல நீள கொடி மூக்கும் -கொடி பூத்து தாமரைக் கண்கள் —
கனிந்து செவ்வாய் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி என்னுள் நிறைந்தானே –
கிரீட மகுட சூடாவதாம்ச –ஹார கேயூர –மகர குண்டல –மின்னு மா மகர குண்டலங்கள் –
மை வண்ண –இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை -இத்யாதி –
ஆற்று இடை கரை புரண்டு ஓடும் –காவேரி ஆறு -ஐந்தலை அரவே–அவ்வரவம் சுமத்தோர் அஞ்சன மலையே –
கரு மணி கோமளம் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –
அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே –10-தாமரை -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே —
திருவடிகள் -திருக்கைகள் உந்தி தாமரை -திருமார்பு தாமரை —
திருக் கண்கள் -என்னையும் பேச வைத்து -ஆகியவை -நிகர் இல்லையே –
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தோரே –
பொன் இவர் மேனி அச்சோ ஒருவர் அழகிய வா –

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம தர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்—৷৷4.7৷৷

பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்
பிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் –
தர்மத்திற்கு தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –
நானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –
தர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்
சாது -அநந்ய பக்தர்கள் -நாமங்கள் சேஷ்டிதங்கள் ரூபங்கள் மட்டுமே வாக்கிலும் நெஞ்சிலும் –
க்ஷணம் காலம் பிரிந்தாலும் கல்பம் போலே எண்ணி –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
இவர்களுக்கு திரு முகம் காட்டி அருளவே யுகம் யுகமாக மீண்டும் மீண்டும் திருவவதாரம் –
சாது சம்ரக்ஷணார்தாமே முக்கிய காரணம் -அது பண்ண
துஷ்டர்களை அழித்து- நாசம் -இல்லை விநாசம் -தூள் தூளாக்கி என்றபடி
இவை நடந்தால் தர்மம் நிலை பெரும் –
சாது -வர்ணாஸ்ரம தர்மம் நழுவாமல்–பிரகலாதன் –மாலாகாரர்–போன்ற பக்தர்கள்
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத ஞானமே படையாக இருக்க -சக்கரப் படையும் இருக்க —
கதறி கண்ணா கண்ணா என்று அலர–முதலை மேல் சீறி வந்து –சுடர் சோதி -மறையாமல் இருக்க அன்றோ –
கொடியேன் பால் காண வாராய்
பிறவி சத்யம் -பெருமைகள் குறையாமல் -பஞ்ச சக்தி மயம் -இச்சை அடியாக –
தர்மம் தலைக் குனிவு காலம் உணர்த்தும் -காரணங்கள் மூன்று -இப்படி ஆறும்

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –
அவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் –
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–
உண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –
அதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து
மே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே —
ஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –

வீத ராக பய க்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா–
பஹவோ ஜ்ஞாந தபஸா பூதா மத்பாவமாகதா—-৷৷4.10৷৷

முன் கூறிய அவதார ரஹஸ்ய ஞானம் ஆகிற தவத்தினால் பாபம் கழியப் பெற்ற பலர்
என்னை த்யானிப்பவர்களாய் -மற்ற விஷயங்களில் விருப்பம் பயம் கோபம் ஆகியவை அற்றவர்களாய் –
என்னிடமே நெஞ்சு செலுத்தியவர்களாய் -என்னைப் போன்ற தன்மையையும் உடையவர்களாய்
மோக்ஷ நிலையை அடைகின்றனர்
என்னுடைய சேஷ்டிதங்கள் -அவதார ரஹஸ்யங்கள் உள்ளபடி அறிந்தவர்கள் இரட்டைகளை விட்டு –
குண வஸ்யர் இல்லாமல் -என்னையே அடைகிறார்கள் –
தபஸ் -ஆலோசனை -பலர் உண்டே -ரிஷிகள் -என் திருவடி பற்றி -ராகம் -ஆசை பயம் -க்ரோதம் -மூன்றும் இல்லாமல் –
என்னிடமே மனம் செலுத்தி என் நிலையை அடைகிறார்கள் –
எட்டு குண சாம்யம் -அபஹத பாப்மா -சம்யா பத்தி மோக்ஷம் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –
அவதார ரகஸ்யம் அறிந்தால் பெரும் பேற்றை பற்றி இதில் அருளிச் செய்கிறான்

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்–
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த்த ஸர்வஸ—-৷৷4.11৷৷

எவர்கள் என்னை எவ் வண்ணம் நினைத்துப் பற்றுகின்றார்களோ அவ் வண்ணமாகவே என்னை
ஆக்கிக் கொண்டு அவர்களை அடைகிறேன் -பார்த்தனே -என் தன்மைகளை -அவர்கள் தாம் விரும்பும்
எல்லாப் படியாலும் அனுபவித்து வாழ்கின்றனர்
அர்ச்சையிலும் இதே தான் –எந்த தாழ்ந்தவனும் எப்படியும் -என்னை சேவிக்க ஆசை பட்டாலும் -அப்படியே சேவை சாதித்து –
தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் தானே –தமர் உகந்தது எப்பேர் அப்பேர் —
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -சதங்கை அழகியார் -ஸ்ரீ நஞ்சீயர் சாத்திய திரு நாமம்
எல்லா உறவாகவும் எல்லா திவ்ய தேசங்களிலும் -எல்லா இந்த்ரியங்களாலும் அனுபவிக்க
இது வரை ஸ்ரீ அவதார ரஹஸ்யம் –
மேலே கர்ம யோகத்துக்குள் ஞான ஆகாரம் -பீடிகை ஆறு ஸ்லோகங்கள் –

காங்க்ஷந்த கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா–
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர் பவதி கர்மஜா—৷৷4.12৷৷

இவ்வுலகில் மனிதர்கள் கர்மங்களுக்குப் பயனை விரும்பியவர்களாய் –
இந்திராதி தேவதைகளையே ஆராதிக்கிறார்கள் -ஏன் எனில் மனித உலகில் கர்மத்தினால் உண்டாகும்
செல்வம் முதலிய பயன்கள் விரைவில் கிடைக்கின்றன
தேவதாந்த்ரங்கள் –யஜ தேவ பூஜா -இஹ லோக ஐஸ்வர்யம் -உடனுக்கு உடன் பலன் பெற -ஆசைப்பட்டு –
இப்படி எல்லாம் நான் கொடுக்க மாட்டேன் –
பல தியாகம் கர்ம யோகத்துக்கு வேண்டுமே -மனுஷ்ய லோகத்தில் -இது அனுஷ்டிப்பவர்கள் துர்லபம் –
வாயுரவை யாகம் ஐஸ்வர்யம் சூறாவளி காற்று போலே செல்வம் கொட்டும் —

சாதுர் வர்ண்யம் மயா ஸரிஷ்டம் குண கர்ம விபாகஸ–
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்ய கர்தார மவ்யயம்—৷৷4.13৷৷

நான்கு வருணங்களைக் கொண்ட உலகு அனைத்துக்கும் குணப் பிரிவுகளையும் செயல் பிரிவுகளையும் ஒட்டி
என்னால் படைக்கப் பட்டது -அதற்கு நான் கர்த்தாவாக இருந்த போதிலும் -அவற்றில் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு
கர்த்தா ஆகாதவனாகவும் -அதனால் குற்றம் அற்றவனாகவும் என்னை அறிவாயாக
நான்கு வர்ணங்கள் நானே -குணம் கர்மம் அடியாக -வேதம் யுத்தம் வியாபாரம் மூவருக்கும் உதவ சூத்திரர் –
சத்வ குணம் -ஆசை அடக்கி / ஷத்ரியன் / வைசியன் / சூத்ரன் – நான் காரணம் இல்லை -உடனே சொல்லி –
உயர்வு தாழ்வுகளுக்கு நான் காரணம் இல்லை
நீயாக கற்பித்து கொண்டவை -வைஷம்யம் நிர்க்ருண்யம் இல்லையே / அனுக்ரஹம் ஒன்றாக இருந்தாலும்
கர்மம் அடியாக வேறு பாடு உண்டே
நான்குக்குள் வேறுபாடும் நாமே உண்டாக்கி /ஆக்கையில் வழியாக உழல்கிறார்கள்

ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம பலே ஸ்ப்ருஹா.—
இதி மாம் யோபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே—৷৷4.14৷৷

படைத்தல் முதலிய கர்மங்கள் என்னைக் கட்டுப் படுத்துவது இல்லை –
எனக்கு படைத்தல் முதலான செயல்களின் பயனில் ஆசை இல்லை –
இவ்வண்ணமாக எவன் என்னை அறிகிறானோ அவன் பாவங்களினால் கட்டுப்படுவது இல்லை
கர்த்தா -அகர்த்தா நீயாக இருக்க முடியுமோ -கர்மாணி -பாபம் புண்யம் தீண்டாது தெரியும் –
ஸ்ருஷ்டியாதிகள் -செய்வதால் ஆனந்தம் துக்கம் நமக்கு –
பலன் எனக்கு இல்லை -என்ற ஞானத்துடன் கர்மம் செய்ய வேன்டும் -விரோதிகள் தொலையும்

ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி—
குரு கர்மைவ தஸ்மாத் த்வம் பூர்வை பூர்வதரம் கரிதம்—-৷৷4.15৷৷

இவ்வண்ணமாக என்னை அறிந்த முன்னோர்களான முமுஷுக்களாலும் கர்மயோகம் செய்யப் பட்டது –
எனவே நீயும் முன்னோர்களால் செய்யப்பட்டதும் பழையதுமான கர்ம யோகத்தையே செய்வாயாக
அவதார ரஹஸ்ய ஞானத்துடன் செய்வாய் -மேலையார் செய்வனகள் -சிஷ்டாச்சாரமும் உண்டு –
மேலே கர்ம யோகம் ஸ்வரூபம்

கிம் கர்ம கிமகர்மேதி கவயோப்யத்ர மோஹிதா–
தத்த்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே ஸூபாத்—৷৷4.16৷৷

அறிவாளிகளும் கர்மம் எது -அதில் அடங்கிய ஞானம் எது -என்னும் இரண்டு விஷயத்திலும் மயங்கி நிற்கிறார்கள்
எதை அறிந்து அமங்களமான சம்சாரத்தில் இருந்து விடுபடுவாயோ அந்த ஞானத்தோடு கூடிய
கர்மத்தை உனக்கு நான் கூறப் போகிறேன்
சுலபம் இல்லை -ஞானிகளும் மயங்கி இருப்பர் -நீ நண்பன் -அகர்மம் -ஆத்ம ஞானம் –ஞானத்தை தனக்குள்
அடக்கிய கர்ம யோகம் உனக்கு சொல்வேன்
தெரிந்து செய்து -ஞாத்வா -என்பதற்கு -ஞானம் அனுஷ்டானம் -விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண–
அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி—-৷৷4.17৷৷

ஏன் எனில் கர்ம ஸ்வரூப விஷயத்திலும் அறியத் தக்கது உள்ளது –
விதவிதமான கர்மங்களிலும் அறியத் தக்கது உள்ளது –
ஞானத்திலும் அறியத் தக்கது உள்ளது —
ஆகையால் கர்மத்தில் அறியத் தக்க அம்சம் அறிவதற்கு அரிதாக உள்ளது
அறிவது கஷ்டம் -விவிதம் -பல வகை கர்மங்கள் உண்டே -அதனாலும் கஷ்டம் –
அவற்றுக்குள் உள்ள ஞானம் மூன்றையும் அறிவது கஷ்டம்
நடை முறை மிகவும் ஆழமானது -பீடிகை வைத்து அருளுகிறார் –
பல வகைகளில் கர்ம யோகம் சொல்லி உதவுவான் மேலே –

யஸ்மாத் மோக்ஷ சாதனா கர்மா யோகம் ஸ்வரூபம் அறிவது கஷ்டம் —
கர்மா விகர்மா–விவிதமான கர்மா -விருத்த கர்மா இல்லை -நிஷித்தவை இல்லை
இப்படி கர்மங்களின் அம்சம் அறிவதும் அறிந்து அனுஷ்டிப்பதும் கஷ்டம் என்று நான்காவது பாதத்தில் உள்ளதால்
இங்கு நிஷித்த கர்மாவாக இருக்க முடியாதே -ஆதலால் விகர்மா விதித்த கர்மம்
அகர்மா – கர்மா இல்லாத ஞானம் என்றும்
விகர்மா -நித்ய நைமித்திக காம்ய ரூபங்கள் உண்டே –
தத் சாதனா – த்ரவ்ய ஆர்ஜனாதிகள் விவிதங்கள் உண்டே -அதனால் வி கர்மா
அகர்மா -விஷயம் -ஞானம் என்றபடி – தர்மம் அதர்மம் போலே நேரே எதிர்மறை -போல் இல்லை –
கர்மம் அல்லாதது -வேறே பட்டது இதர என்றபடி
கஹனம் ஆழம் -அறிவதற்கு அரியது- துர்லபம் -மோக்ஷம் ஆசைப்படுபவனுக்கு –
முமுஷுவுக்கு -பிரகரணம்– வி கர்மா போக்த்வயம் ஆகாதே -காம்ய கர்மங்களை அறிய வேண்டாமே —
இவை வேறே வேறே பலன்களை கொடுக்கும்
நித்ய நைமித்திக கர்மாக்கள் -விடாமல் செய்து கொண்டே பாபம் தொலைய
வேறே பலன்களை ஆசைப்படாமல் -கர்மா பழ சங்க தியாகங்கள் செய்து
இந்த எண்ணம் வர -பல பேத க்ருதம் விவிதம் –வைவித்யம்–பரித்யஜ்ய மோக்ஷ ஏக பலத்திலே கண் வைத்து
ஏக சாஸ்த்ரார்த்தம் -இவை —2–41-இவற்றை விவரித்து அருளிச் செய்ததால் இங்கே விவரிக்க வில்லை
ஆத்மா சாஷாத்காரம் ஒரே லஷ்யம் –
விவிதமாக இருந்தாலும் -விவசாயாகா புத்தி -விவசாயம் உறுதிப்பாடு வேண்டும் என்பதை பார்த்தோம் –
பகவத் முக மலர்த்தியே பிரயோஜனம் -எல்லா அங்கங்களும் இதற்கே -என்ற எண்ணம் வேண்டும் –
அடுத்த ஸ்லோகத்தில் அகர்மா பற்றி சொல்லி -விகர்மா பற்றி சொல்ல வில்லை –
இங்கு பிரகரணம் கர்மா யோகத்துக்குள் உள்ள ஞான யோகம் பற்றியே சொல்ல வேண்டும் –

கர்மண்யகர்ம ய பஸ்யேத கர்மணி ச கர்ம ய–
ஸ புத்திமாந் மநுஷ்யேஷு ஸ யுக்த க்ருத்ஸ்ந கர்ம க்ருத்—-৷৷4.18৷৷

கர்மத்தில் ஆத்ம ஞானத்தை எவன் ஒருவன் காண்கிறானோ –
ஆத்ம ஞானத்திலும் கர்மத்தை எவன் ஒருவன் காண்கிறானோ -அவனே அறிவாளி –
அவனே மனிதர்களுள் மோக்ஷத்திற்குத் தகுந்தவன் -அவனே கர்மம் முழுவதும் செய்பவன்
கர்ம யோகத்தை ஞானாகாரமாக பார்ப்பதை -ஞான பாகத்தை பல வகைகளில் அருளிச் செய்கிறான் –
கர்ம பாகத்தை விட ஞான பகுதி உயர்ந்ததே —
கர்ம யோகம் விட ஞான யோகம் உயர்ந்தது என்று சொல்ல வர வில்லை —
கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகத்தை –எண்ணாது அந்தியால் ஆம் பயன் என் கொல் —
ஞானத்துக்குள் உள்ள கர்ம பாகத்தை -ஞானம் அனுஷ்டானம் இரண்டும் உள்ளவரே சிறந்தவர் –
மனிதர்களில் மாணிக்கம் -புத்திமான் -யோகம் கை வந்தவன் ஆகிறான் -எல்லா கர்மாக்களை செய்து முடித்தவன் ஆகிறான் –
இரண்டும் முரண்பாடு உள்ளவை இல்லையே -பூ கை தொடுக்கலாம் -பாக்யம் பெற்றோமே -நினைவுடன் -செய்வதே –
கருட மந்த்ரம் -தேசிகன் -பெற்று -ஹயக்ரீவர் -கருட த்ருஷ்டாந்தம் –தியானித்து கருட மந்த்ரம் சொல்லி –
முத்திரை காட்டி -மூன்றும் ஒரே காலத்தில்
செய்வது முரண்பாடு இல்லையே -த்யானம் முக்கியம் -கையால் முத்திரை விட -சொல்வதை விட -போலே இங்கும் –
இதனால் தான் பூர்வர் வியாக்யானம் கொண்டு கிருஷ்ணன் திரு உள்ளம் உள்ளபடி -அறிகிறோம் –

அகர்ம -அந்யத்-இதர -பிரஸ்த்துத -ஆத்ம ஞானம் உச்யதே -ஏதோ ஒரு ஞானம் இல்லை -ஆத்மா யாதாத்ம்ய ஞானம் –
ஞானத்தால் நிறைந்த செயல்பாடு -பெருமை சேர்க்கும் –
கர்மணி க்ரியமானம் ஏவ -பண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது ஆத்ம ஞானம் பச்யதே -கண்ணால் பார்க்க முடியாதே
கர்மாக்கு அந்தர்கதம் -ஞானத்தை கர்மவடிவாக – ஞானம் அனுஷ்டானம் இரண்டும் வேண்டுமே –
நாய் லைப் போலே அனுஷ்டானம் இல்லாத ஞானவான் -சேஷத்வ ஞானம் புரிந்த பின்பு கைங்கர்யம் செய்ய வேண்டுமே

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக் நிதக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக
தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
தொடங்கி -சர்வே -நித்யை நைமித்திகம் -காமம் -பலனில் பற்று இல்லாமல் -தேஹாத்ம மயக்கம் இல்லாமல் –
பண்ணப் பண்ண -பாபங்களைப் போக்கி – ஞானம் சூழ்ந்து -அநாதிகாலம் சேர்த்த
பிராரப்த சஞ்சித கர்மாக்கள் -எரிக்கப்படும் -இவனே பண்டிதர் என்பர் அறிவாளிகள் –
பற்ற வேண்டியதை பற்றி – விட வேண்டியதை விட்டதால் -வீடுமின் முற்றவும் -வீடு செய்து -புல்கு பற்று அற்றே –
நஞ்சீயர் -விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம் –

த்யக்த்வா கர்ம பலா ஸங்கம் நித்ய த்ருப்தோ நிராஸ்ரய–
கர்மண்யபி ப்ரவ்ருத்தோபி நைவ கிஞ்சித் கரோதி ஸ—৷৷4.20৷৷

கர்ம பலன்களில் பற்றைக் கை விட்டு -நித்தியமான ஆத்மாவில் திருப்தி பெற்றவனாய் –
அநித்யமான உடலில் பற்று அற்றவனாய் -எவன் ஒருவன் கர்மம் செய்கின்றானோ –
அவன் கர்மங்களில் ஒரு முகமாய் ஈடுபட்டவனாயினும் எக்கர்மத்தையும் செய்யாதவன் ஆவான்
கர்மாக்கள் ஒன்றும் பண்ணாதே -கீழே தீயினில் தூசாகும் என்று சொல்லி –
இங்கு நித்ய ஆத்ம வஸ்துவில் ஆசை கொண்டு சரீர ஆசை இல்லாமல் -இந்திரியங்கள் ஞானத்துடன் மேய விட்டதால் –
சாஸ்த்ர விரோதமாக செய்யாமல் நித்ய கர்மாக்கள் -மூன்று வித த்யாகத்துடன் செய்ய வேன்டும் –

நிராஸீர்யத சித்தாத்மா த்யக்த ஸர்வ பரிக்ரஹ–
ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந் நாப்நோதி கில்பிஷம்–৷৷4.21৷৷

பலன்களில் ஆசை அற்றவனாய் -சிந்தையை அடக்கிய மனத்தை உடையவனாய் –
எல்லாப் பொருள்களிலும் என்னுடையது என்னும் பற்று அற்றவனாய் -உடல் உள்ளவனான ஒரு ஜீவன்
தான் கை விட முடியாத கர்மத்தை மட்டும் செய்வதாலேயே சம்சாரத்தை அடைய மாட்டான்
மேலே மூன்றால் ஏற்றம் -பலன்களில் ஆசை விட்டு -மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தைக்கு சொல்லி திருத்தும் தாய் போலே –
மனசை அடக்கி -ஆத்ம சாஷாத்காரம் தவிர மற்றவற்றை விட்டு -சரீரம் இருக்க வேண்டியதை மட்டும் செய்து –
கேவலம் கர்ம -கர்ம யோகமே போதும் -நேரே பெறுகிறான் -ஞானாகாரம் உள்ள கர்மாவால் பலன் என்றவாறு –

யத்ருச்சா லாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர–
ஸம ஸித்தாவ ஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே—৷৷4.22৷৷

கிடைத்த பொருள்களைக் கொண்டு திருப்தி அடைபவனாய் -சுகம் துக்கம் முதலிய இரட்டைகளைப்
பொறுத்துக் கொள்பவனாய் -பொறாமை அற்றவனாய் -வெற்றி தோல்விகளில் சமமான நெஞ்சை
உடையவனானவன் -ஞான யோகம் இன்றிக்கே கர்மத்தை மட்டுமே செய்த போதிலும்
சம்சார பந்தத்தால் கட்டுப்பட மாட்டான்
கிடைத்ததை கொண்டு ஸந்தோஷம் அடைந்து -த்வந்தம் -தோல்வி ஜெயம் -சாதிக்க முடியாமல் தடுப்பார் மேல்
கோபம் பண்ணாதே சித்தியையும் அசித்தியையும் சமமாக கருதி இருந்தால் சம்சாரம் தடைபடாமல் இருக்கும் –

கத ஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ–
யஜ்ஞாயாசரத கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே—৷৷4.23৷৷

ஆத்ம ஞானத்திலேயே நிலை நிற்கும் நெஞ்சை உடையவனாய் -அதனாலேயே பிற விஷயங்களில் பற்று அற்றவனாய் —
அதனாலேயே மற்ற விஷயங்கள் அனைத்து நின்றும் விடுபட்டவனாய் -யஜ்ஞம் முதலிய கர்மங்களின் பொருட்டு
செயல்களைச் செய்கின்றவனுக்கு புண்ய பாப கர்மங்கள் மிகுதி இல்லாமல் முழுவதும் அழிந்து விடுகிறது
பற்று தொலைந்து -விஷயாந்தர ஆசை இல்லாமல் -ஞானம் நிறைந்து -சாஸ்திரம் விதித்த
கர்மாக்கள் யாகங்கள் தர்ப்பணாதிகள் செய்து —
சந்தனு பீஷ்மர் கையில் கொடுக்க வில்லையே -பூமியில் கொடுக்க தான் சாஸ்திரம் விதித்தது –

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்.—
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா—-৷৷4.24৷৷

ப்ரஹ்மமாய் இருக்கும் ஹோம சாதனங்களால் சமர்ப்பிக்கப் படுவதான ப்ரஹ்ம ரூபமான ஹவிஸ்ஸை
ப்ரஹ்மமாய் இருக்கும் ஹோமம் செய்பவனால் ப்ரஹ்மமான அக்னியில் ஹோமம் செய்யப்பட்டது –
இவ்வண்ணமாக ப்ரஹ்ம கர்மத்தை அனுசந்திப்பவனான அவனாலே ப்ரஹ்மமான ஜீவாத்மா அடையத் தக்கதாகிறது –
எல்லாம் ப்ரஹ்மாகாரம் என்று அறிந்து -சரக் உபகரணங்கள் நெய் கரண்டி -ஹவிஸ் –
அக்னி ப்ரஹ்மம் ஆத்மா கொண்ட ஜீவாத்மா செய்கிறான் –
ப்ரஹ்மம் கர்மம் என்று நினைத்து -செய்கிறான் -ஞானம் பண்ண பண்ண வளர்ந்து பாபங்கள் எரிக்கப் படும்

தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந பர்யுபாஸதே—-
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞே நைவோப ஜுஹ்வதி—৷৷4.25৷৷

ஒரு வகைக் கர்ம யோகிகள் தேவர்களைப் பூஜிப்பதாகிய யாகத்தையே விசேஷமாகச் செய்கிறார்கள் –
மற்ற ஒரு வகைக் கர்ம யோகிகள் ப்ரஹ்மமாய் இருக்கும் அக்னியில் யஜ்ஞ சாதனமான ஹவிஸ்ஸை
யஜ்ஞத்திற்கு உரிய உபகரணமான ஸ்ருக் முதலியவைகளால் ஹோமம் செய்வதிலேயே ஊன்றி இருக்கிறார்கள்
மேலே -13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் –இருவரை பற்றி இங்கு –
திவ்ய மங்கள விக்ரஹம் வைத்து திருவாராதனம் –
அபரே -அந்நிய -வேறு வகை மீண்டும் மீண்டும் வரும் -ப்ரஹ்மத்தை அக்னியாக வைத்து
கீழே தேவ பூஜை இதில் நிஜமான யாகங்கள் -கரண்டி நெய் — யாக வேள்வி –

ஸ்ரோத்ராதீ நீந்த்ரியாண் யந்யே ஸம்ய மாக்நிஷு ஜுஹ்வதி.—
ஸப்தாதீந் விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி—৷৷4.26৷৷

மற்றும் சில கர்ம யோகிகள் செவி முதலிய இந்திரியங்களை புலன் அடக்கமாகிய அக்னியில் ஹோமம் செய்கிறார்கள் –
வேறு சில கர்ம யோகிகள் சப்தம் முதலான விஷயங்களை இந்திரியங்கள் ஆகிற அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்
அக்னி ஹவிஸ் உருவகம் -கண் காதி இத்யாதி இந்திரியங்கள் புலன் அடக்கம் அக்னி -இந்திரியங்கள் ஆஹூதி-
துஷ்டர்கள் இருந்தாலும் நம்மால் பாதிப்பு இல்லை என்று இருப்பர் –
இந்திரியங்கள் அக்னி சப்தாதிகள் ஹவிஸ் -நான்காவது அதிகாரி -முதல் நிலை -துஷ்டர்களை கண்டு தூர விலக்கி-
தர்மம் ஒத்து கொண்ட ஆசையில் அளவுடன் பண்ணி -சாஸ்த்ர விரோதம் அணுகாமல் இருந்து என்றபடி –

ஸர்வாணீந்த்ரிய கர்மாணி ப்ராண கர்மாணி சாபரே.—
ஆத்ம ஸம்ய மயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாந தீபிதே—৷৷4.27৷৷

மற்றும் சில கர்ம யோகிகள் அறிவாகிய விளக்கால் கொளுத்தப் பெற்ற மன வடக்கம் எனும் நெருப்பில்
இந்திரியங்களின் செயல்கள் அனைத்தையும் பிராணங்களின் செயல்கள் அனைத்தையும் ஹோமம் செய்கிறார்கள்
அறிவு என்னும் ஒளி விளக்கால்–ஐந்து பிராணங்கள் -இந்திரியங்கள் கார்யங்களை ஏத்தி -மனஸ் அடக்கம் –
ஆத்ம ஞானம் இருந்தால் தானே மனஸ் அடக்கம் வரும் -ஐந்தாவது அதிகாரி இவன்

த்ரவ்யயஜ் ஞாஸ்தபோ யஜ்ஞா யோக யஜ்ஞாஸ் ததாபரே—
ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞாஷ்ச யதய ஸம்ஸித வ்ரதா—-৷৷4.28৷৷

முயற்சியும் உறுதியும் உடைய சில கர்ம யோகிகள் நல் வழியில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு
தாளம் முதலிய நற் செயல்கள் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
மற்றும் சிலர் உடலை வருந்திச் செய்யும் தவங்கள் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
அது போல் வேறு சிலர் புண்ணிய ஸ்தலம் புண்ணிய தீர்த்தம் முதலியவற்றை அடைதல் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
வேறு சிலர் வேத அத்யயனம் செய்தலாகிய யஜ்ஞங்களைச் செய்பவர்களாவும்
வேறு சிலர் வேதத்தின் பொருளை அறிவதாகிய யஜ்ஞங்களைச் செய்பவர்களாயும் உள்ளனர் –
ஐந்து அதிகாரிகள் இதில் -முயற்சி உள்ளவர்கள் -விடா முயற்சி உத்ஸாகத்துடன் இருந்து -மனம் தளராமல் –
திருவடி போலே -முயற்சி திரு வினை ஆக்கும் –
உறுதியான நெஞ்சும் -தார்மிக வழியால் பெற்ற ஐஸ்வர்யம் கொண்டு தானம் தர்மம் செய்து
கதிக்கு பதறி –வெம் கானமும் கல்லும் கொதிக்க தபம் செய்து-
யோகம் -தீர்த்த யாத்திரை திவ்ய தேச யாத்திரை யோகம் சேர்க்கை -சீரார் திருவேங்கடமே இத்யாதி
வேத அத்யயனம் – வேதார்த்தம் -ஞான -அனுசந்தானம் –

அபாநே ஜுஹ்வதி ப்ராண ப்ராணேபாநம் ததாபரே—
ப்ராணா பாநகதீ ருத்த்வா ப்ராணாயாம பராயணா—-৷৷4.29৷৷

அபரே நியதாஹாரா ப்ராணாந் ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேப்யேதே யஜ்ஞ விதோ யஜ்ஞக்ஷபித கல்மஷா—-৷৷4.30৷৷

யஜ்ஞ ஸிஷ்டாம் ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்.–
நாயம் லோகோஸ்த்ய யஜ்ஞஸ்ய குதோந்ய குரு ஸத்தம—৷৷4.31৷৷

ஏவம் பஹு விதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
கர்மஜாந் வித்திதாந் சர்வா நேவம் ஜஞாத்வா விமோஷ்யஸே —৷৷4.32৷৷

பிராணாயாமத்தில் ஊன்றி நிற்பவர்களாய் -ஆகார நியமம் உள்ளவர்களான சில கர்ம யோகிகள் அபாந வாயுவோடே
பிராண வாயுவை ஓன்று படுத்துவதான பூரகத்தில் ஊன்றி நிற்கின்றனர் –
அத்தகைய மற்றும் சில கர்ம யோகிகள் பிராணன் உயரச் செல்வத்தையும் அபானம் கீழ்ச் செல்வத்தையும் தடுத்து
ப்ராணன்கள் அனைத்தையும் அவற்றிலேயே ஓன்று படுத்துவதாகிய கும்பகத்தில் ஊன்றி நிற்கிறார்கள் –
காற்றை நாசித் துவாரம் வழியாக உள்ளே இழுப்பது பூரகம் -அத்தை உள்ளே நிறுத்துவது கும்பகம் -அத்தை வெளியே விடுவது ரேசகம் –

முன் கூறிய கர்ம யோகிகள் அனைவரும் யஜ்ஞங்களை அறிந்து அனுஷ்டிப்பவர்கள் –
அந்த யஜ்ஞங்களாலே பாவம் நீங்கப் பெற்றவர்கள் -யஜ்ஞத்தில் எஞ்சிய அன்னம் முதலிய அமுதையே உண்பார்கள் –
பழையதான ப்ரஹ்மாத்மகமான ஆத்ம ஸ்வரூபத்தை அடைகிறார்கள்
குரு குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே -நித்ய நைமித்திக கர்மங்கள் அற்றவனுக்கு இந்த உலகில் அடையப்படும்
புருஷார்த்தங்களே கிடைக்காது -அப்ராக்ருத லோகத்தில் அடையப்படும் மோக்ஷம் ஆகிய புருஷார்த்தம் எப்படிக் கிடைக்கும் –

இவ்வண்ணமாக பலவிதமாக கர்ம யோக வகைகள் ஆத்மாவை அடைய உபாயமான கர்ம யோகத்தில் பரந்து உள்ளன –
அந்த கர்ம யோகங்கள் அனைத்தையும் நித்ய நைமித்திக கர்மங்களால் உண்டாகின்றவையாக அறிவாயாக
இவ்வண்ணமாக அறிந்து -அனுஷ்ட்டித்து -சம்சாரத்தில் இருந்து விடுபடுவாய் –

மூவர் -பிராணாயாம பராயணர் –பூரகம் கும்பகம் ரேசகம் -உள்ளே இழுத்து நிறுத்தி வெளியில் விட்டு —
பிராண வாயு ஹிருதயம் மேல் நோக்கி –அபான கீழ் நோக்கி –பிராண வாயுவை அபான வாயுவில் ஆஹுதி யாக கொடுத்து பூரகம் —
ரேசகம் -வெளியில் விடும் பொழுது அபான வாயு ஆஹுதி பிராண வாயு அக்னி –
கும்பகம் -நிறுத்தி -இரண்டையும் போக விடாமல் -ஐந்தையும் ஐந்தில் ஆஹுதி
16-தடவை நிமிஷம் பண்ணுவதை -12-ஆக குறையும் இதனால் -ஜீரண சக்தி கூடும் -ஹிருதயம் -உடல் ரீதியாகவும் உண்டு
கண்ணன் ஆத்ம நன்மைக்கு அருளிச் செய்கிறான் –
ஆகார நியமமும் முக்கியம் -வயிற்றில் அன்னம் தண்ணீர் காற்று மூன்றுக்கும் இடம் -பாதி வயிற்று மட்டும் அன்னம் –
இப்படி —13-வகை கார்ய யோகிகளை அருளிச் செய்கிறான் –
பெருமாளே காந்தம் -இரும்பு போல் வழிய நெஞ்சம் -வட்டத்துக்கு உள்ளே வந்தால் -போதும் –
இழுத்துக் கொள்வான் -13-வகைகளில் -ஏதாவது ஒரு விதம்
யாகம் பண்ணி -மிச்சம் சேஷம் உச்சிஷ்டம் அம்ருத மயம் -அநு யாகம் நாம் உண்பது –
பண்ணாமல் -நித்ய நைமித்திக கர்மம் பண்ணா விடில்
இந்த லோகத்தில் ஒன்றும் கிடையாது -அந்த லோக பிராப்தி இல்லை என்பது சொல்லவும் வேண்டுமோ –
தர்ம அர்த்தம் காமம் மோக்ஷம் ஒன்றுமே கிட்டாது
இப்படி பல வகை -ஆத்ம சாஷாத்காரம் -செய்ய -உலகத்தில் பரவி —
இந்த கர்ம யோகம் நித்ய நைமித்திக கர்மாக்களுக்குளே பிறந்தது –

ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாத் ஜ்ஞாந யஜ்ஞ பரந்தப.–
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே—৷৷4.33৷৷

எதிரிகளை அழிப்பவனே -த்ரவ்ய சாத்தியமான கிரியைகளை முக்கியமாகக் கொண்ட கர்ம யோக
அம்சத்தைக் காட்டிலும் -கர்ம யோகத்தில் உள்ள ஞான அம்சமே சிறந்தது -குந்தீ புத்திரனே –
சர்வம் எல்லா பிரகாரங்களோடு கூடியதாய் -எல்லா அங்கங்களோடும் கூடியதான கர்ம ரூபமான அம்சம்
ஆத்ம யாதாம்ய ஞானத்தில் முடிவடைகின்றது அன்றோ
ஞான யஜ்ஜம் உயர்ந்தது -சர்வ கர்மாக்களும் ஞானத்தில் அடையும் -த்ரவ்யமயம் -கர்மபாகம் –
பலன் கர்தவ்யம் நம்முடையது இல்லை என்ற ஞான பாகமே உயர்ந்தது -எண்ணமே வேன்டும் –
ஆத்ம ஞானம் ஸ்திரீகரிக்கப்படும் இந்த எண்ணத்தால் -அதுவே சாஷாத்காரம் –

தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந—৷৷4.34৷৷

நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை
ஞானிகள் இடம் அறிவாயாக –
ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –
ஞானிகள் பலர் உள்ளார் -நான் தத்வம் -ஆச்சார்யர்கள் தத்வ தர்சி -வசனம் உயர்ந்தது –
கண்ணாலே கண்டு அன்றோ உபதேசிக்கிறார்கள்-
பீஷ்மர் இடம் தர்மரை கேட்டு அறிந்து கொள்ள சொன்னானே -திருவடியில் விழுந்து —
சுற்றி சுற்றி நின்று கைங்கர்யம் பண்ணி -இதனால் ப்ரீதி அடைந்து ஆசையுடன் உபதேசம் செய்வார்
நேராக நின்றோ பின் நின்றோ கேட்க கூடாது -பக்கத்தில் இருந்து கேட்க வேன்டும் -பரீஷை பண்ணக் கேட்கக் கூடாது
சங்கைகள் தீர்க்க கேட்க வேன்டும் -நிறைய பேர் இடம் நிறைய தடவை நிறைய கேட்க வேன்டும் -பக்குவம் பெற

யஜ்ஜ்ஞாத்வா ந புநர் மோஹ மேவம் யாஸ்யஸி பாண்டவ.—
யேந பூதாந் யஸேஷேண த்ரக்ஷ்யஸ்யாத் மந்யதோ மயி—৷৷4.35৷৷

எதை அறிந்து மறுபடியும் இவ் வண்ணமாக மயக்கத்தை அடைய மாட்டாயோ –
எந்த அறிவினால் ஜீவ ராசிகள் ஓன்று விடாமல் தனக்கு சமமாகவும் எனக்கும் சமமாகவும் காண்பாயோ –
அந்த அறிவைப் பெறுவாயாக –
சாஷாத்காரம் அடைந்தால் -மயக்கம் பிரமம் வராது -பார்வை -உன்னை போலே பூதங்களை பார்ப்பாய் –
எல்லாரையும் ப்ரஹ்மமாகவே -சரீரம் தானே என்று அறிந்து -கொள்வாய்
சுகர் வியாசர் -பிள்ளாய் -மரங்கள் திரும்ப பதில் -பெண்கள் பதில் -வாசி அறியாத சுகர் –
ப்ரஹ்மாத்மகம் அனைத்தும் –

அபி சேதஸி பாபேப்யஃ ஸர்வேப்யஃ பாப க்ருத்தம–
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி–৷৷4.36৷৷

எல்லா பாவிகளைக் காட்டிலும் மகா பாவியாக நீ இருந்தாலும் -எல்லா பாவக் கடலையும்
ஆத்ம ஞானம் ஓடத்தினாலேயே நீ நன்கு கடந்து விடுவாய்
பாபங்கள் எல்லாம் எரிக்கப்படும் -நிறைய பாபங்கள் செய்து இருந்தாலும் –
ஞானம் ஓடம் -பாபக்கடலை கடத்தும் -கவலை வேண்டாம் –

யதைதாம் ஸி ஸமித்தோக்நிர் பஸ்ம ஸாத்குருதேர்ஜுந—
ஜ்ஞாநாக்நி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத்குருதே ததா—-৷৷4.37৷৷

அர்ஜுனா கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பல் ஆக்குகிறதோ
அப்படியே ஞானம் ஆகிய நெருப்பு எல்லாக் கர்மங்கள் ஆகிய விறகுகளை சாம்பல் ஆக்குகிறது
கடலை தாண்டினால் திரும்ப வரலாமே சங்கை வந்தது -ஒரு வினாடி ஞானத்தால் இவை போகுமோ –
விறகு கட்டை போலே பாபங்கள் -திரும்பாதே -பஸ்மம் ஆகுமே -தீயினில் தூசாகும் செப்பு –

ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே.—
தத் ஸ்வயம் யோக ஸம் ஸித்த காலேநாத்மநி விந்ததி—৷৷4.38৷৷

இவ் உலகில் ஆத்ம ஞானத்தை ஒத்ததாக சுத்தி அளிப்பது வேறு ஒன்றும் இல்லை –
அத்தகைய ஞான யோகத்தை கர்ம யோக சித்தி பெற்றவன் காலக் கிரமத்தில் தன் ஆத்மாவில் அடைகிறான்
கொளுத்தும் -அக்னி -பாவானத்வமும் உண்டே -புனிதமாக்கும் -மங்களம் உண்டாக்கும் -தானே நடக்கும் –
யோகம் கை வந்து -காலப் போக்கில் பரிபக்குவம் அடையும்
கேசவா என்ன –கெடும் இடராய வெல்லாம் கெடும் -நடமினோ-அலகிட்டு-
இருள் மண்டின குகைக்குள் விளக்கு வைத்த அடுத்த வினாடி இருள் போகுமே –

ஸ்ரத்தாவாந் ல்லபதே ஜ்ஞாநம் தத்பர ஸம்ய தேந்த்ரிய–
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதி கச்சதி—৷৷4.39৷৷

ஆத்ம ஞானத்தை வளர்ப்பதில் ஆவல் மிக்கவனாய் அதிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவனாய் –
இந்திரியங்களை அடக்கியவன் ஆத்ம ஞானத்தை அடைவான் -அந்த ஞானத்தை அடைந்து
விரைவிலேயே மேலான சாந்தியை அடைகிறான்
மெதுவாக என்றால் -எத்தனை ஜென்மம் சங்கை -த்வரை தான் முக்கியம் —
ஸ்ரத்தை உள்ளவனை கொண்டாடி அடுத்ததில் இல்லாதவனை நிந்திப்பான்
பரமமான ஷாந்தி -விஷயாந்தர நிவ்ருத்தி -சீக்கிரம் பெறுவான் – இங்கு -இடைப்பட்ட நிலை என்றவாறு

அஜ்ஞஸ் சாஸ்ரத் ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி—
நாயம் லோகோஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந—-৷৷4.40৷৷

ஆத்ம ஞானம் அற்றவனும் அவ்வறிவை வளர்ப்பதில் ஆர்வம் அற்றவனும் ஐயம் உற்றவனுமான
மனிதன் அழிந்து விடுவான் ஐயம் உற்ற நெஞ்சினனுக்கு இவ்வுலகில் புருஷார்த்தங்கள் கிடையாது –
பர லோக புருஷார்த்தமான மோக்ஷமும் கிடைக்காது -ஆத்ம விஷயமான சுகமும் கிடைக்காது –
தனக்கு ஞானம் இல்லாமல் சிரத்தையும் இல்லாமல் அதுக்கு மேலே சங்கைகள் கொண்டு
பிறர் சொன்னாலும் விஸ்வாசம் இல்லாதவன் -நாசம் அடைகிறான்
இங்கும் ஆனந்தம் இல்லை -மோக்ஷ ஆசையும் இல்லாமல் நாசம் அடைகிறான்

யோக ஸம்ந்யஸ்த கர்மாணம் ஜ்ஞாந ஸஞ்சிந் நஸம்ஸயம்—
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய—৷৷4.41৷৷

அர்ஜுனா கேவல கர்மத்தைக் கை விட்டவனாய் -ஆத்ம ஞானத்தினால் அறுக்கப் பட்ட ஐயத்தை
உடையவனாய் -நல் நெஞ்சை உடையனான மனிதன் புண்ய பாப கர்மங்கள் கட்டுப் படுத்துவது இல்லை –
நிகமத்தில் -கர்மாவை வெல் -தனம் வென்றாய் தனஞ்சயன் -புத்தியால் -கர்மங்களில் பற்று இல்லாமல் –
ஞானம் -கத்தி -ஐயப்பாடு அறுக்கும் அழகனூர் அரங்கம் போலே கீதாச்சார்யர் உபதேசம் –
புண்ய பாப கர்மாக்கள் கட்டுப்படுத்தாது -கடல் ஓடம் -விறகு அக்னி -சங்கை வாள் -பல த்ருஷ்டாந்தங்கள் காட்டி

தஸ்மாத ஜ்ஞாந ஸம் பூதம் ஹருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந—.
சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத—৷৷4.42৷৷

பரத குலத்தில் உதித்தவனே -முன் கூறிய கர்ம யோகத்தை அனுஷ்டியாமல் மோக்ஷம் அடைய முடியாதாகையாலே–
உடலைக் காட்டிலும் வேறான ஆத்மா உண்டு எனும் அறிவு இல்லாமையால் ஏற்பட்ட நெஞ்சில் உள்ள
ஆத்ம விஷயமான ஐயத்தை ஆத்ம ஞானம் ஆகிய கத்தியினால் அறுத்து
கர்ம யோகத்தை அனுஷ்டிப்பாயாக -அதன் பொருட்டு எழுந்திரு
இதுவே வழியாகும் -தேஹாத்ம அபிமானம் பிரமம் -சங்கை இருந்தது -உபதேசத்தால் பிறந்த ஞானம் கத்தி கொண்டு வெட்டி
கர்ம யோகம் செய்வாய் -அதற்காக எழுந்திரு -உன் பெயரில் தேசமே உண்டே -பரத -என்கிறான்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: