ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – 3-ஸ்ரீ கர்ம யோகம் –

அசக்த்யா லோக ரஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-
உலகோரை ரஷிக்கும் பொருட்டு (3-26-வரை)-
முக்குணங்களால் தூண்டப் பட்டு செய்கிறோம் என்ற எண்ணத்துடன் -பகவான் நியமிக்க -இவை தூண்ட
அடுத்த நிலை –பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் -கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றவாறு –
லோக ரக்ஷணத்துக்காக -இந்திரியங்களை அடக்க முடியாதவர்க்கு கர்ம யோகம் -என்றவாறு –
பழகியது -சுலபம் -நழுவாதது -ஞான யோகியும் கர்ம யோகம் சரீரம் நிலைக்க –பல காரணங்கள் சொல்லி —

—————————

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர் ஜநார்தந.–
தத் கிம் கர்மணி கோரே மாம் நியோ ஜயஸி கேஸவ—৷৷3.1৷-

அர்ஜுந உவாச = அர்ஜுன் கேட்கிறான்
ஜ்யாயஸீ = உயர்ந்தவனே
சேத் = அப்படியானால்
கர்மணா = காரியம் செய்வதுதான்
தே = உன்
மத = எண்ணம் என்றால்
புத்தி = புத்தி, ஞானம், அறிவு
ஜனார்த்தன = ஜனார்தனனே
தத் = அது
கிம் = ஏன்
கர்மணி = கர்மம் செய்வதில்
கோரே = கோரமான
மாம் = நீ
நியோஜயஸி =என்னை ஈடுபடுத்துகிறாய்
கேஸ²வ = கேசவா

அர்ஜுனன் கேட்டான்
ஜனார்த்தனனே -கேசவனே -கர்ம யோகத்தைக் காட்டிலும் ஞான நிஷ்டை சிறந்தது என்று
எனக்கு உறுதியான கருத்தாகில் பயங்கரமான போர் முதலிய செயல்களில்
எதற்க்காக என்னை ஏவுகிறாய் -அவனுக்கு யுத்தம் தானே ஷத்ரியன்
அந்தணர் பஞ்ச கால பராயணர் -போலே –
ஜனார்த்தனன் -கேசவன் -இரண்டு திரு நாமங்கள் -ஜனங்களுக்கு நல்லதே செய்பவன் -பிறப்பை அறுத்து –
கேசவன் -ப்ரஹ்மாதிகள் ஸ்வாமி -சிலர் வாழ சிலர் தாழ -சிலர் மடிய காரணம் தள்ளலாமோ –
அணுவிலும் அணு-பரமாத்மா -ஸ்தூலா நியாயம் -அருந்ததி -சரீரம் சொல்லி -ஜீவாத்மா சொல்லி -பரமாத்மாவை காட்டி –

வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹஸீவ மே—
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோஹமாப்நுயாம்—৷৷3.2৷৷

வ்யாமிஸ்ரேண = கலந்து, குழப்பமான
ஏவ = நிச்சயமாக
வாக்யேந = வாக்கினால், உன் பேச்சால்
புத்திம் = என் புத்தியானது
மோஹயஸீவ = பேதலிக்கிறது
மே = என்
தத் = அந்த
ஏகம்தே = ஒன்றை மட்டும்
வத = பேச்சு
நிஸ்சித்ய = நிச்சயமான
யேந = அதனால்
ஸ்ரேயோ = உறுதியான, உயர்வான
அஹம்ஹ = நான்
அப்நுயாம் = நான் அடைவேன்

ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வாக்யத்தினாலேயே என் அறிவை மயக்குகிறாய் போல் தோன்றுகிறது –
எனவே நான் அனுஷ்ட்டிக்க வேண்டிய அர்த்தத்தை நிச்சயித்து மேலான புருஷார்த்தத்தை
நான் அடைவதற்கு உரிய ஒரு சொல்லைக் கூறு -எது ஸ்ரேயஸ் கொடுக்குமோ அத்தை சொல்லு –

ஸ்ரீ பகவாநுவாச-
லோகேஸ்மிந் த்வி விதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக—
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்—৷৷3.3৷৷

ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
லோகே = இந்த உலகில்
அஸ்மிந் = இதில்
த்விவிதா = இரண்டு
நிஷ்டா = நிலைகள், வழிகள் உள்ளன
புரா = பழமையான
ப்ரோக்தா = சொல்லப்பட்ட
மயா = என்னால்
அந் நக = பாவம் இல்லாதவனே
ஜ்ஞாநயோகேந = ஞான யோகம்
ஸாங்க்யா நாம்= சாங்கியர்களால் கூறப்பட்டது
கர்மயோகேந = கர்மயோகம்
யோகி நாம் = யோகிகளால் கூறப்பட்டது

ஸ்ரீ பகவான் கூறினான்
பாவம் அற்றவனே -இவ்வுலகில் என்னால் அறிவு உடையவர்களுக்கு ஞான யோகத்தில் நிலை
கர்ம யோகத்தில் அதிகாரம் உடையவர்களுக்குக் கர்ம யோகத்தில் நிலை
ஆகிய இரண்டு விதமான நிஷ்டைகள் முன்னால் கூறப்பட்டது
கர்ம யோகம் அநாதி -சாஸ்த்ர ஸம்மதம் -மயா -தன் திரு மார்பை தொட்டு -அருளிச் செய்கிறான்
சர்வஞ்ஞன் -சர்வ சக்தன் பிராப்தன் பூர்ணன் -கருணையால் சொன்னேன் -லோகே –லோகோ பின்ன ருசி –
இந்திரியங்களை அடக்க முடியாதவனுக்கு கர்ம யோகம் -என்றும் -அடக்கியவனுக்கு ஞான யோகமும்

ந கர்மணாமநாரம்பாந் நைஷ்கர்ம்யம் புருஷோஸ்நுதே—-
ந ச ஸம்ந்ய ஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி—৷৷3.4৷৷

ந = இல்லை
கர்மணாம் = கர்மம்
அந் – ஆரம்ப = தொடங்காமல் இருந்தால்
ந்நைஷ்கர்ம்யம் = பற்றற்ற கர்மம்
புருஷ = ஒருவன்
அஸ்நுதே| = அடைவதில்லை
ந = இல்லை
ச = மேலும்
ஸந்ந்யஸ = துறப்பதன் மூலம்
ஏவ = நிச்சயமாக
ஸித்திம் = வெற்றி
ஸமதிகச்சதி = அவன் அடைகிறான்

எந்த மனிதனும் கர்ம யோகத்தை தொடங்காமல் இருப்பதாலேயே ஞான யோகத்தை அடைவது இல்லை
தொடங்கிய கர்ம யோகத்தைக் கை விடுவதாலேயே ஞான யோகத்தை அடைவதும் இல்லை
நேராக ஞான யோகம் போக முடியாது -தொடங்கி பாதியில் விட்டாலும் ஞான யோகம் சித்திக்காது –
யுத்தம் -நேராக சொல்லாமல் கர்ம யோகம் –
நைஷ்கர்ம்யம் -செய்யாமல் இருக்கும் ஞான யோகம் -சன்யாசம் -விடுவது –
அர்த்தித்தவம் ஆசை -வேன்டும் -ஆசை இருந்தாலும் சக்தியும் வேன்டும்
வஸ்துவை அடைய ஆசையும் சக்தியும் வேண்டுமே –

ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்ம க்ருத்—
கார்யதே ஹ்யவஸ கர்ம ஸர்வ ப்ரகரிதி ஜைர்குணை—৷৷3.5৷৷

ந = இல்லை
ஹி = அதனால்
கஸ்சித் = ஒருவன்
க்ஷணம் = ஒரு நொடி கூட
அபி = இப்போது
ஜாது= ஒருபோதும்
திஷ்டதி = நிலையாக இருத்தல்
அகர்மக்ருத் = காரியம் ஒன்றும் செய்யாமல்
கார்யதே = செயல் என்பது
ஹி = அது
அவஸ: = அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் , கட்டாயமாக , அவசியமாக
கர்ம = செயல்
ஸர்வ: = அனைத்து
ப்ரக்ருதிஜைர் = உயிர்களுக்கும்
குணை: = குணங்களில் இருந்து

ஏன் எனில் எந்த மனிதனும் எக்காலத்திலும் ஒரு க்ஷணம் கூட ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது இல்லை –
எல்லாரும் உலகத் தொடர்பினால் வளரும் சத்வ ரஜஸ் தமோ குணங்களினால் –
அவ்வவற்றுக்கு உரிய செயல்களில் தம்மை அறியாமலே தூண்டப்படுகிறார்கள் அன்றோ
ஓர் வினாடி யாவது கர்ம யோகம் இல்லாமல் சம்சாரி வாழவே முடியாதே -தூங்குபவனும் —
தூங்குவதும் கர்மா தான் -தூங்கினால் தான் புத்தி கூர்மை
இந்திரியங்கள் பின்பு -பிராணன் உண்டே தூங்கும் பொழுதும் -தெரியாமல் கார்யம் தானே நடந்து கொண்டே இருக்கும் –
கர்ம யோகம் தான் பழகி -பிறந்த குழந்தை அழுகிறதே -சன்யாசிகளும் விடாமல் செய்கிறார்கள் –

கர்மேந்த்ரியாணி ஸம் யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்—
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதே–৷৷3.6৷৷

கர்மேந்த்ரியாணி = இந்திரியங்களால் (புலன்கள் மூலம்) செய்யப்படும் காரியங்களை
ஸம்யம்ய = நிறுத்தி விட்டு, கட்டுப் படுத்தி விட்டு
ய = அவன்
ஆஸ்தே = இருக்கிறனானோ
மநஸா = மனதில்
ஸ்மரந் = நினைத்துக் கொண்டு
இந்த்ரியார்தாந் = புலன் இன்பங்களை
விமூடாத்மா = மூட ஆத்மா.
மித்யாசார: = களவொழுக்கம் உள்ளவன்
ஸ = அவன்
உச்யதே = சொல்லப் படுகிறான்

எவன் ஒருவன் வாக்கு கை கால் முதலிய கர்ம இந்திரியங்களை அடக்கினாலும் ஆத்ம ஞானம் அற்ற
நெஞ்சை உடையவனாய் அந்த நெஞ்சால் இந்திரியங்களுக்கு உரிய சப்தாதி விஷயங்களை
நினைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் பொய் ஒழுக்கம் கொண்டவனாகக் கூறப்படுகிறான்
நிந்தை -மனசை அடக்காமல் -இந்திரியங்களை மட்டும் அடக்கி பொய் ஆசாரம் –
சாஸ்த்ர ஸம்மதம் -படி இருக்க வேன்டும் -ஆர்ஜவ குணம்

யஸ்த் விந்த்ரியாணி மநஸா நியம்யாரப தேர்ஜுந.–
கர்மேந்த்ரியை கர்மயோகம் அஸக்தஸ்ஸ விஸிஷ்யதே–৷৷3.7৷৷

ய = எவன்
து = ஆனால்
இந்திரியாணி = புலன்களை
மநஸா = மனதால்
நியம்யா = கட்டுப்படுத்தி
ஆரம்பதே = தொடங்குகிறானோ
அர்ஜுந = அர்ஜுனா
கர்மேந்த்ரியை: = புலன்களால் காரியங்கள் செய்கிறானோ
கர்மயோக = கர்மயோகத்தின் மூலம்
அஸக்த: = பற்றில்லாமல்
ஸ = அவன்
விஸிஷ்யதே = சிறந்தவன்

எவன் ஒருவன் ஆத்மாவில் ஈடுபட்ட மனத்தால் இந்திரியங்களை சாஸ்திரீய கர்மங்களில் ஈடுபடுத்தி –
பலன்களில் பற்று அற்றவனாய் -கர்ம இந்த்ரியங்களால் கர்ம யோகத்தைத் தொடங்குகிறானோ
அவனே ஞான நிஷ்டனை விடச் சிறந்தவன்
புத்தி சாரதி – மனஸ் கடிவாளம் – அடங்கினால் தானே -இந்திரியங்கள் அடங்கும் -பள்ள மடை -இதுவே –
போகும் வழியில் போனால் திரும்பக் கொண்டு வரலாமே -கண் பார்க்கட்டும் -வரையறைக்கு உள்பட்டு
பல காரணங்கள் -பழக்கம் சுலபம் ஞான யோகிக்கும் விட முடியாதே –
பல சொல்லி -மேலே கேட்ட கேள்விக்கு பதில் அடுத்து -நேராக அருளிச் செய்கிறான்

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண–
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷

நியதம் = நியமப்படி, ஒழுங்கு முறையாக
குரு = செய்தல்
கர்ம = கர்மங்களை
த்வம் = நீ
கர்ம = செயல்களை
ஜ்யாயோ = சிறப்பாக, உயர்வாக
ஹி = அதனால்
அகர்மண: = செயலன்றி இருப்பது
ஸரீர யாத்ரா = உடலின் போக்கு , உடலின் பயணம்
அபி = இருந்தும்
ச = மேலும்
தே = உன்
ந = இல்லை
ப்ரஸித்த்யேத் = வெற்றி அடைவது
அகர்மண: = செயலன்றி இருந்தால்

அநாதி காலமாகப் பழகிப் போந்த கர்ம யோகத்தையே நீ செய்வாயாக –
ஏன் எனில் ஞான நிஷ்டையை விட கர்ம யோகமே சிறந்தது
எக்கர்மத்தையும் செய்யாத உனக்கு ஞான நிஷ்டைக்கு வேண்டிய தேஹ தாரணமும் கை கூடாது
கேள்வியில் உள்ள சப்தம் ஜ்யாயோக – சக்தி இருந்தாலும் கர்ம யோகம் அனுஷ்ட்டிக்க வேன்டும் –
நழுவவே நழுவாது கர்ம யோகம் – விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் அடுத்த ஜன்மாவில் –
ஞான யோகம் அப்படி இல்லை -சரீர யாத்ரைக்கும் இது வேன்டும்
சரீரம் தேகம் வாசி உண்டே -இளைத்து கொண்டு போவது சரீரம் – வளரும் உடம்பு தேகம் –
இங்கு சரீர யாத்திரை -இளைத்து போகும் சந்யாசிக்கும் கர்ம யோகம் விட முடியாதே -என்கிறான்
சாதனத்தால் தான் ஆத்ம சாஷாத்காரம் -பிராணன் போனால் கிடைக்காது -அடுத்த ஜன்மா தான் கிடைக்கும் –
சரீர யாத்திரை நம் கையில் இல்லையே -நின்றனர் இருந்தனர் –இத்யாதி எல்லாம் அவன் அதீனம் தானே
நியத கர்மா ஒரு வகை – அநியத கர்மா வேறு வகை
அவன் தூண்ட நாம் செய்கிறோம் என்ற நினைவால் செய்ய வேன்டும் -விநயம் உடன் இருக்க வேன்டும் –

யஜ்ஞார்தாத்கர்மணோந்யத்ர லோகோயம் கர்மபந்தந–
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த சங்க ஸமாசர—৷৷3.9৷৷

யஜ்ஞார்தாத் = யக்ஞய + அர்த்த = வேள்வியின் நோக்கத்தோடு
கர்மண = காரியங்களை
அந்யத்ர = வேறுவிதமாக
லோகா = உலகில்
அயம் = இது
கர்மபந்தந: = கர்மத்துடன் இணைப்பது
ததர்தம் = தத் = அர்த்தம் = அதற்காக
கர்ம = காரியங்களை
கௌந்தேய = கௌந்தேயனே
முக்தஸங்க: = முக்த + சங்க = பற்றினை விடுத்து
ஸமாசர = செய்

கர்மா செய்ய செய்ய பாபங்களும் வருமே என்ன -/யஞ்ஞார்த்தமாக -ஆத்ம சாஷாத்காரம் -பற்று அற்ற கர்மா செய்தால் -பாபங்கள் கிட்டாது –
இதை தவிர மற்ற கர்மாக்கள் தாழ்வு -என்றவாறு /பலத்தை பொறுத்தே -உயர்ந்த அல்லது தாழ்ந்த கர்மா ஆகும் –
வர்ணாஸ்ரம தர்மம் -சாஸ்த்ர சம்மத கர்மாக்கள் / பற்றி அற்ற -சாஷாத்காரம் பலன் என்ற எண்ணம் வேன்டும் –

ஸஹயஜ்ஞா ப்ரஜா ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி–
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ் த்விஷ்ட காமதுக்—-৷৷3.10৷৷

ஸஹயஜ்ஞா: = வேள்வியுடன்
ப்ரஜா: = மனித குலம்
ஸ்ருஷ்ட்வா = வெளிப்பட்டு
புரோ = முன்பு
உவாச = கூறினான்
ப்ரஜாபதி:| = பிரமன்
அநேந = இதன் மூலம்
ப்ரஸவிஷ்யத்வம் = நீங்கள் பெருகி வளர வேண்டும்
இஷா = அது
வ = உங்கள்
அஸ்து = இருக்க வேண்டும்
இஷ்டகாமதுக்= உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தரும் காமதேனுவாய் இருக்கும்

ப்ரஜாபதியானவர் ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பிரஜைகளைப் படைத்துப் பின் வருமாறு கூறினார்
இந்த யஜ்ஞத்தினால் மேன்மையைப் பெறுங்கள்-இந்த யஜ்ஞம் உங்களுக்கு மோக்ஷத்தையும்
அதற்கு வேண்டியவைகளை கொடுப்பதாகட்டும் –

மேலே எழு ஸ்லோகங்களில் -யஞ்ஞத்துக்கு சொல்லி வைத்த கர்மங்கள்
பிரஜாபதி -பர ப்ரஹ்மம் -என்றவாறு இங்கு -பொருள் என்று இவ்வுலகம் படைத்து -சோம்பாது –
இதுவே பயன் -அதே பயனுக்கு வாழ்தல் சிரமம் இருக்காதே -ஒரே கோணம் ஆகுமே
யாகங்கள் செய்து இஷ்டமான காமங்கள் பெற்று கொள்ளலாம் –
தேவர்கள் உதவுவார் -வருண ஜபம் விராட பர்வம் வாசித்தால் மழை பெய்யும் -என்பர் —
சகல வேத அந்தராத்மா பர ப்ரஹ்மம் -அவன் ப்ரீத்யர்த்தம் என்று நினைத்து பண்ணினால் கர்ம யோகம் ஆகும்

தேவாந் பாவய தாநேந தே தேவா பாவ யந்து வ–
பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத—৷৷3.11৷৷

தேவாந் = தேவர்கள் , தெய்வீகத் தன்மை
பாவயதா = வெளிப்படும்படி
அநேந = அதன் மூலம்
தே = அவர்கள்
தேவா = தேவர்கள், தெய்வீக தன்மை
பாவயந்து = செயல் பட்டு
வ: = உங்களுக்கு
பரஸ்பரம் = ஒருவர்க்கு ஒருவர்
பாவயந்த: = உதவி
ஸ்ரேய: = உயர்நிலை, சிறப்பு நிலை
பரம = இறுதி நிலை, உன்னத நிலை
வாப்ஸ்யத = வாய்க்கப் பெறுவீர்கள்

இந்த யஞ்ஞத்தினால் என்னை அந்தர்யாமியாகக் கொண்ட தேவர்களை ஆராதியுங்கள்
அந்த தேவர்கள் உங்களைப் போஷிக்கட்டும்-ஒருவருக்கு ஒருவர் இவ்வண்ணமாக
உதவுகின்றவர்களாய் மேலான நன்மையாக மோக்ஷத்தை அடைவீர்களாக
தேவர்கள் -மழை கொடுப்பர் –ஹவிஸ் வாங்கி –பர்ஜன்ய தேவதை –
பரஸ்பரம் நல்லது செய்து கொண்டு ஸ்ரேயஸ் அடையலாம்
தானே செய்ததாக சொல்லாமல் பிரஜாபதி -என்கிறான் –
ஆட்டு வாணியன் இல்லையே -சேதனன் சாஸ்திரம் அறிந்து செய்வான் –

இஷ்டாந் போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா–
தைர்தத்தாந ப்ரதாயைப் யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ—৷৷3.12৷৷

இஷ்டாந் = வணங்கத்தக்க
போகாந் = போகங்களை
ஹி = அதனால்
வோ = உங்களுக்கு
தேவா = தேவர்கள்
தாஸ்யந்தே = தருவார்கள்
யஜ்ஞபாவிதா = யாகத்தில்
தைஹ் = அவர்களால்
தத்தா = தரப்பட்டவை
அப்ரதாயை = தராமல்
ப்யோ = அவர்களுக்கு
யோ = எவன்
புங்க்தே = அனுபவிக்கிறானோ
ஸ்தேந = திருடன்
ஏவ = நிச்சயமாக
ஸ: = அவன்

யஞ்ஞங்களால் ஆராதிக்கப் பட்ட தேவர்கள் உங்களுக்கு வேண்டியவையான அனுபவிக்கத் தக்க
பொருள்களைக் கொடுப்பார்கள் –
அந்த தேவர்களால் கொடுக்கப்பட்ட அப்பொருள்களை அந்த தேவர்களுக்கு
யஞ்ஞங்களால் கொடுக்காமல் எவன் ஒருவன் தானே அனுபவிக்கிறானோ அவன் திருடன் யாவான் –
தனக்காக பயன் படுத்தி -தேவர்களுக்கு கொடுக்காமல் -இவன் தான் பெரிய திருடன் –

யஜ்ஞ ஸிஷ்டாஸிந ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை-
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்ம காரணாத்—৷৷3.13৷৷

யஜ்ஞஸிஷ்டாஸிந: = யாகத்தின் மீதியை
ஸந்தோ முச்யந்தே = உண்மையான, சந்யாசிகள்
ஸர்வகில்பிஷை:= அனைத்து பாவங்களிலும் இருந்து
புஞ்ஜதே = உண்கிறார்கள்
தே = அவர்கள்
து = அப்புறம்
அகஹம் = பாவம், துன்பம்
பாபா = பாவம் செய்பவர்கள்
யே = அவர்கள்
பசந்த்தி = அவர்கள் சமைக்கிறார்கள்
அத்மகாரணாத் = தங்களுக்காக

யஞ்ஞத்தில் எஞ்சி நிற்பதைப் புசிப்பவர்களான நல்லோர்கள் -திருவாராதனம் பண்ணி -சேஷம் உண்பவன்
எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள் –
எவர்கள் தங்கள் பசியாறுவதற்காக மட்டும் சமைத்து உண்கிறார்களோ
அவர்களோ என்னில் பாவிகளாய் பாவத்தையே உண்கிறார்கள்

அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்ந ஸம்பவ–
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ—৷৷3.14৷৷

அந்நாத் = உணவு
பவந்தி = இருக்கிறது
பூதாநி = உயிர்களுக்கு
பர்ஜந் = மழையின் மூலம்
அதந்நஸம்பவ: = உணவு சம்பவிக்கிறது; உருவாகிறது
யஜ்ஞாத் = வேள்வியினால்
பவதி = இருக்கிறது
பர்ஜந்யோ = மழையின்ய மூலம்
யாங்கய = வேள்வியின் மூலம்
கர்மஸமுத்பவ: = கர்மத்தை செய்வதால் உண்டாகிறது

அன்னத்தில் இருந்து தேவர் மனுஷ்யர் முதலான எல்லா ஜீவ ராசிகளும் உண்டாகின்றன –
மழையில் இருந்து அன்னத்தின் உத்பத்தி ஏற்படுகிறது
யஞ்ஞத்தில் இருந்து மழை ஏற்படுகிறது
யஞ்ஞம் கர்மங்களில் இருந்து உண்டாகிறது
அன்னத்தால் பூதங்கள் வாழலாம் -இங்கு சுழல் ஒன்றை அருளிச் செய்கிறான் –
பர்ஜன்யம் தேவதை அன்னத்துக்கு மழை – யாகங்கள் செய்தால் மழை -கர்மா தான் யாகம் –
கர்மம் பண்ண சரீரம் -ஜீவாத்மா உள்ளே புகுந்து உடல் -என்றவாறு -சக்கரம்

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்–
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்—৷৷3.15৷৷

கர்ம = செயல்கள்
ப்ரஹ்மோத்பவம் = பிரம்மத்தில் இருந்து வருவது
வித்தி = என்று உணர்
ப்ரஹ்மம் = ப்ரம்மம்
அக்ஷர = அழியாத (க்ஷர என்றால் அழியக் கூடிய)
ஸமுத்பவம்| = வெளிப்படுகிறது
தஸ்மாத் = எனவே
ஸர்வகதம் = எங்கும் நிறைந்த
ப்ரஹ்ம = பிரமம்
நித்யம் = நிரந்தரமாக இருக்கும்
யஜ்ஞே = யாகத்தில்
ப்ரதிஷ்டிதம் = நிலைத்து நிற்கிறது

கர்மத்தை சரீரத்தில் இருந்து பிறப்பதாக அறிவாயாக -சரீரம் ஜீவனிடம் இருந்து பிறக்கிறது –
ஆகையால் எல்லா அதிகாரிகள் இடமும் உள்ள சரீரம் எப்போதும் யஞ்ஞத்தை மூலமாகக் கொண்டது –
சரீரம் எல்லாம் கர்மாவை எதிர்பார்த்து இருக்கும்

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய–
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி—৷৷3.16৷৷

ஏவம் = எனவே
ப்ரவர்திதம் சக்ரம்= ஒரு சுழற்சியில் இருக்கும்
நா = இல்லை
அனுவர்தயதி = நடக்கச் செய்தல்
இஹ = இங்கு
ய: = எவன்
அகாயு = பாவம் நிறைந்த
இந்ரிந்த்ரியாராமோ = இந்திரிய சுகங்களில்
மோகம் = ஆசை கொண்டு
பார்த = பார்த்தனே
ஸ = அவன்
ஜீவதி = வாழ்கிறான்

இவ்வண்ணம் ஒன்றுக்கு ஓன்று காரணமாகச் சுழன்று வரும்படி செய்யப்படும் சக்கரம் போன்ற
கார்ய காரண நடைமுறையை எவன் ஒருவன் -தானும் யஞ்ஞம் செய்வதன் மூலம் சுழலச் செய்வது இல்லையோ
அவன் பாவத்தின் தொடர்பு உள்ள வாழ் நாளை யுடையவனாய் –
ஐம் புலன்களிலேயே வீழ்ந்தவனாய் -வீணாகவே உயிர் வாழ்கிறான்
சக்கரம் அனுவர்த்தனம் பண்ண வேன்டும் -இல்லாதவன் வாழ்வது பாபம் -அவன் இந்த்ரியராமன் ஆவான் –
மேலே மூன்று ஸ்லோகங்களால் கைவல்யார்த்தி பற்றி –

யஸ்த்வாத்ம ரதிரேவ ஸ்யாதாத்ம த்ருப்தஸ்ச மாநவ–
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ் தஸ்ய கார்யம் ந வித்யதே–৷৷3.17৷৷

ய = எவன்
து = ஆனால்
ஆத்ம ரதி = தன்னில் இன்புற்று இருக்கிறானோ
எவ = நிச்சயமாக
ஸ்யாத் = இருக்கும்
ஆத்மத்ருப்த = ஆத்ம திருப்தி உள்ளவனாய்
ச = மேலும்
மாநவ: = அவன்
ஆத்மநி = தன்னில்
எவ = நிச்சயமாக
ச = மேலும்
ஸந்துஷ்ட = பூர்ண திருப்தியுடன்
தஸ்ய = அவனுடைய
கார்யம்= காரியங்களில்
ந = இல்லை
வித்யதே= இருப்பது

எந்த மனிதன் ஆத்மாவிலேயே ஈடுபட்டவனாகவும் -ஆத்மாவிலேயே திருப்தி அடைந்தவனாகவும் –
ஆத்மாவிலேயே மகிழ்ச்சி அடைந்தவனாகவும் இருக்கிறானோ அவனுக்குச் செய்யத் தக்க கர்மம் இல்லை
கைவல்ய பரம் இதுவும் மேலே 2-ஸ்லோகங்களும் -தத்வ த்ரயம் -அசித் அனுபவம் ஐஸ்வர்யார்த்தி –
சித் அனுபவம் கைவல்யார்த்தி-கேவல அனுபவம் -பர ப்ரஹ்மம் அனுபவம் பகவல் லாபார்த்தி
கைவல்யார்த்தி கர்ம யோகம் அனுஷ்ட்டிக்க வேண்டாம் -ஆத்ம சாஷாத்காரம் பெற்றான் –
அர்ஜுனன் -நீ கைவல்யார்த்தி இல்லையே -பண்ணு -என்றவாறு –
ஆத்மா ரதி ஏவ -இதிலே ஆசை -இதிலேயே திருப்தி – அனுபவித்து ஸந்துஷ்டன் —
தாரக -ஆசை / போஷக-திருப்தி / போக்யம் -ஸந்தோஷம் –

நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந.–
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்த வ்யபாஸ்ரய—-৷৷3.18৷৷

ந = இல்லை
ஏவ = நிச்சயமாக
தஸ்ய = அவனுடைய
க்ரெத்ன = செயல்களில்
அர்த்த = பலன், செல்வம், நோக்கம்
ந = இல்லை
அ க்ரெத்ன = செயலில்லாமல் இருப்பதிலும்
இஹ = இங்கே
கஸ்சந = எதிலும்
ந = இல்லை
அஸ்ய = அவன்
ஸர்வபூதேஷு = அனைத்திலும்
கஸ் சித் = எதிலும்
அர்தவ்யபாஸ்ரய: = பலன்களில் தஞ்சம் புகுவது இல்லை

ஆத்ம தரிசனத்தைப் பெற்றுள்ள நிலையில் இருக்கும் இவனுக்கு செய்த கர்மத்தினால் பலன் ஒன்றும் இல்லை
செய்யாத கர்மத்தினால் யாதொரு தீங்கும் உண்டாவது இல்லை
இவனுக்கு எல்லாப் பொருள்களிலும் பயனாகப் பற்றத் தக்கது யாது ஒன்றும் இல்லை –
அவன் எதை செய்தாலும் ஒரு பலன் கிட்டாது -உலக இன்பம் வேண்டாம் –
ஆத்மா சாஷாத்காரம் கிடைத்ததே -செய்யாததால் கஷ்டமோ பாபமோ இல்லையே –
மோக்ஷம் ஆசை இல்லையே இவனுக்கு –

தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸமாசர—
அஸக்தோ ஹ்யாசரந் கர்ம பரமாப்நோதி பூருஷ—৷৷3.19৷৷

எனவே பற்று அற்றவனாய் -இடைவிடாமல் அவசியம் செய்ய வேண்டியது என்றே கர்ம யோகத்தைச் செய்வாயாக –
பற்று அற்றவனாகக் கர்ம யோகத்தைச் செய்யும் மனிதன் -பிரக்ருதியைக் காட்டிலும் மேலான ஆத்மாவை அடைகிறான் –
அதனாலே -நீ கைவல்யார்த்தி இல்லையே -அத்தை பிள்ளை –என்னிடம் ஆசை இருக்குமே –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் -சேராத படியால் வெளுத்து
ஆத்ம சம சஹன் நீ -அசக்தன் -பற்று இல்லாமல் -கர்மம் செய்து -பலத்தில் ஆசை இல்லாமல் –
அக்ருதவ அனுசந்தானம் உடன் -பரம் அடைகிறான் -ஜீவாத்மா சாஷாத்காரம் அடைகிறான் –

கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷

ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –
உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –
செய்யாதன செய்யோம் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு –
ஞான யோகத்துக்கு அதிகாரம் இருந்தாலும் -அவன் கூட கர்ம யோகம் சம்சித்திம் –
ஞான யோகத்தால் அடையும் அதே சாஷாத்காரம் பெற்றார்
ரிஷி -மந்த்ர த்ருஷ்டர் -இந்திரியங்களை அடக்கினவராக இருந்தாலும் –
அதிகாரம் இல்லாத உனக்கு வேன்டும் என்று சொல்லவும் வேண்டுமோ –
மேலே லோக சங்க்ரஹம் இதிலும் சொல்லி மேலே -6-ஸ்லோகங்களில் -அருளிச் செய்கிறான் –
ராஜாவை பார்த்து பின் வருபவர் நடப்பர் -உனக்கு ஞான யோகம் முடியும் என்று கொண்டாலும் –
உன் வாதப் படியே வைத்தாலும் -பின் வருபவர் அசக்தர்கள் -ஞான யோகம் ஆரம்பித்து விட –
தவறான வழிகளில் போக வைப்பாய் –அதனாலும் கர்ம யோகமே நீ பண்ண வேன்டும் –

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்
அந்தச் சிறந்தவன் அக்கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது
சிரேஷ்டர் -புகழப் படுபவர் -சாஸ்திரம் அறிந்து -அதன் படி நடந்து -அதன் படி நடக்க வைத்து —
அங்கமாக செய்வதை போலே -லோகம் பண்ணுமே -சிரேஷ்டர் என்று அர்ஜுனனை கொண்டாடுகிறான் —
குந்தி புத்ரன்- குரு குலம்- யுதிர்ஷ்டன் தம்பி- என் ஆத்ம சஹா- ஊர்வசியைப் பார்த்தும் தாய் என்றானே –

ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷

பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத்தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –
இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –
அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்
தன்னையும் சொல்லி கொள்கிறான் -இதில் -நானே கர்மம் செய்கிறேன் -நீ பண்ண வேன்டும் சொல்லவும் வேண்டுமோ –
கிம் முதி நியாயம் -வடை குச்சி -தாண்டா அபூபம் -வடை குச்சி நியாயம்
கர்ம வஸ்யன் இல்லை ஆசை பட்டு வந்தவன் -கர்மம் தொலைக்க வேண்டாம்- சாஸ்திரம் கட்டு படுத்தாது –
அனுபவம் வேண்டி செய்ய வேண்டாம் -குதிரைக்கு தண்ணீர் -தேரோட்டி –எல்லா செயலையும் செய்து –
எனக்கு இல்லை -ராமானுஜர் -சர்வேஸ்வரனான் –ஸ்வ இதர விலக்ஷணன் –எல்லா விசேஷங்களை காட்டி –
மூன்று யோனிகளில் தேவ மனுஷ்ய திரியாக் ஜாதியில் அவதரித்து -என்றவாறு -எந்நின்ற இனியுமாய் பிறந்து
எந்த யோனியில் பிறந்தாலும் செய்ய வேண்டியது இல்லை -ஆனாலும் செய்கிறேன் என்றவாறு –
அவாப்த ஸமஸ்த காமன் -நானும் கர்ம யோகத்தில் நிற்கிறேன் -ருக்மிணி கண்ணன் -என் இடம் என்ன இருக்கு இடையன்
என் அடியார் இடமும் ஒன்றும் இல்லை என்றானே –
அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்பதை மறைத்து —
அடியார்களுக்கு வேறே எதிலும் ஆசை இல்லையே என்னையே அடைந்த பின்பு –

யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்ய தந்த்ரித—
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த்த ஸர்வஸ—-৷৷3.23৷৷

பார்த்தனே சர்வேஸ்வரனான நான் கர்மங்களில் ஒரு போதும் சோம்பல் இல்லாமல் செய்பவனாக
இல்லாமல் இருந்தால் மனிதர்கள் எல்லாப் படியாலும் என் வழியையே பின் பற்றுவார்கள்
ஒரு வேளை நான் -வாஸூ தேவர் பிள்ளையாக பிறந்த நான் -கீழே நெஞ்சை நிமிர்ந்து -இங்கு கிருஷ்ணனாக அவதரித்து –
சோம்பல் ஏற்பட்டு -பண்ணாமல் இருந்தால் -கண்ணனே பண்ண வில்லை -என்னை பார்த்து –
மம -உயர்ந்த என்னைப் பார்த்து -பின் வரும் மநுஷ்யர்கள் உண்டே –
ஒரு வினாடி பொழுதிலும் நான் செய்யாமல் இருந்தால் –இவர்கள் எப்பொழுதுமே செய்யாமல் போவார்கள் –
கூர்மையான புத்தி வளர்க்க இந்த வாதங்கள் படித்து வியாக்யானம் அறிந்து —

உத்ஸீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்.–
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா ப்ரஜா—৷৷3.24৷৷

நான் கர்மத்தைச் செய்யவில்லையாகில் என்னைப் பின் பற்றும் இவர்களும் கர்மத்தைச் செய்யாமல் அழிந்து விடுவார்கள் –
வர்ணாஸ்ரமக் கலப்பைச் செய்பவனாகவும் நான் ஆகி விடுவேன் –
அதனால் இந்த மனிதர்கள் உய்வற்றவர்களாயும் ஆக்கி விடுவேன்
சாஸ்திரம் அறிந்து புரியாத லோகத்தார் –என்னை பார்த்து பண்ணாமல் -நானே செய்யாமல் இருந்தால் –
உபதேசம் பண்ணி ஷத்ரிய தர்மம்-காக்க வைப்பதே என்னுடைய வேளை -வர்ண சங்கரஹம் கூடாதே —
ஷத்ரியன் தர்மம் -வைசியன் தர்மம் -அறிந்தவன் -நேர்மை மாறாமல் செய்து காட்டி –
என்னை பார்த்து பண்ணாமல் விட்டால் லோகத்தார் என்றுமே உய்ய இயலாமல் போகுமே –

ஸக்தா கர்மண்ய வித்வாம் ஸோ யதா குர்வந்தி பாரத—
குர்யாத் வித்வாம் ஸ்ததாஸக்தஸ் சிகீர்ஷுர் லோக ஸங்க்ரஹம்৷৷3.25৷৷

பரத குலத்தில் உதித்தவனே -கர்மத்தில் தொடர்பை உடையவர்களாய் -ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற
அறியாதவர்கள் எப்படிக் கர்ம யோகத்தைச் செய்கிறார்களோ அவ்வண்ணமாக கர்மத்தில் பிணைப்பு அற்றவனாய்
ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற அறிந்தவனாய் -உலகத்தை இசைய வைப்பதற்கு விரும்பியவன்
கர்ம யோகத்தைச் செய்யக் கடவன் -ஆத்ம யாதாம்ய ஞானம் பெறாதவன் -அவித்வாம் ச –
எப்படி செய்ய முடியுமோ -அத்தையே வித்வான்கள் கூட –செய்ய வேன்டும் –
இந்திரியங்களை வென்றவனாக இருந்தாலும் -கர்ம யோகம் செய்ய வேன்டும் இதற்காக –

ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்ம ஸங்கிநாம்—
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வாந் யுக்த ஸமாசரந்৷৷3.26৷৷

ஆத்மாவைக் குறைவற அறியாதவர்களாய்க் கர்மத்திலேயே பிணைப்பை யுடைய முமுஷுக்களுக்கு
கர்ம யோகத்தைக் காட்டிலும் வேறொரு சாதனம் உள்ளது என்னும் புத்தி மாறாட்டத்தை உண்டு பண்ணக் கூடாது –
ஆத்மாவைக் குறைவற அறிந்தவனும்-கர்ம யோகமே ஆத்ம தரிசனத்துக்கு சாதனம் என்னும் அறிவுடன் கூடியவனாய்
கர்ம யோகத்தை நன்கு அனுஷ்டித்துக் கொண்டு எல்லாக் கர்மங்களிலும் உகப்பை உண்டாக்க வேண்டும் –
கர்மம் தொடர்பு -அசக்தர்கள் -புத்தி பேதம் ஏற்படுத்தாமல் -ஞான யோகமும் வழியாக உண்டு என்று சொல்லி –
நான் உனக்கு முன்பு சொல்லியது போலே -அறிவுடன் செயல் பட வேன்டும் –
கர்ம யோகம் சுலபம் பழகியது -ஆனந்தம் ஏற்படுத்தும் என்று செய்ய வைக்க வேன்டும் –
உலகம் ரஷிக்கும் பொருட்டு -கர்ம யோகம் இதுவரை –
மேலே முக்குணம் வசப் பட்டு இருக்கும் தன்மை –

ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஸ-
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே—৷৷3.27৷৷

தேகமே ஆத்மா எனும் அஹங்காரத்தால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உடையவன்
பிரக்ருதியைச் சேர்ந்த சத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாகிற குணங்களால் பல வகைகளில் செய்யப்படும்
கர்மங்களைக் குறித்து -நானே செய்கிறேன் -என்று மயங்குகிறான் –
முக்குணம் -காரணம் -அஹங்காரம் -அஹம் என்று அநஹம்-தேஹாத்ம பிரமம் -அபிமானம் அஹங்காரம் –
அஹம் கர்த்தா -நானே செய்கிறேன் என்று நினைக்கிறான் –
முக்குணங்கள் தூண்ட செய்கிறோம் -என்ற எண்ணம் இல்லையே -ஸ்வபாவிகமாக ஆத்மா -செய்யமாட்டான் –

தத்த்வ வித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ–
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே—-৷৷3.28৷৷

தடக்கையனே -குணப் பிரிவுகள் -கர்மப் பிரிவுகள் ஆகியவை பற்றி உண்மையை அறிந்தவனோ என்னில்
குணங்கள் தம் காரியங்களில் ஈடுபடுகின்றன என்று எண்ணி –
கர்மங்களை நானே செய்பவன் எனும் சங்கத்தை அடைவது இல்லை
உண்மையாக அறிந்தவன் -குணம் கர்ம -காரண கார்யம் அறிந்தவன் –
குணங்கள் அதன் அதன் கர்மாக்களில் வர்த்திக்க -கர்த்தா என்ற பற்று இல்லாமல் வாழ்கிறான் –
இத்தையே நாம் வளர்க்க வேன்டும் -கீதையை வழிமுறை படுத்த இது தானே உபாயம்
ரஜஸ் தமஸ் குணம் குறைத்து சத்வ குணம் வளர்க்க வேன்டும் –

ப்ரக்ருதேர் குணஸம்மூடாஸ் ஸஜ்ஜந்தே குணகர்மஸு.–
தாநக்ருத்ஸ்ந விதோ மந்தாந் க்ருத்ஸ்ந விந்ந விசாலயேத்—-৷৷3.29৷৷

மூல பிரக்ருதியினுடைய முக்குணங்களால் ஆத்மாவை அறியாமல் மயங்கி நிற்பவர்கள்
குணங்களால் செய்யப்படும் கர்மங்களில் எப்போதும் ஈடுபாடு கொள்கின்றனர்
மந்த புத்தி உடையவர்களாய் ஆத்ம ஸ்வரூபத்தை முழுவதும் அறியாதவர்களான அவர்களை
ஆத்ம ஸ்வரூபத்தை முழுவதும் அறிந்தவன் கர்ம யோகத்தின் நின்றும் நழுவச் செய்யக் கூடாது
குணங்களால் மறைக்கப் பட்ட அறிவு -ஆசை விடாமல் இருக்க -அறிந்தவன் -ஞான யோகத்துக்கு –
அதிகாரம் இல்லாதவர்களை -கர்ம யோகத்தில் இருந்து நீக்க கூடாது –
உயர்ந்தவன் தாழ்ந்தது பண்ணலாமா என்ற சங்கைக்கு பதில் –கர்ம யோகம் தாழ்ந்தது இல்லை –

மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ் யாத்யாத் மசேதஸா.–
நிராஸீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர—৷৷3.30৷৷

ஆத்மாவைப் பற்றிய அறிவோடு -அனுசந்தானத்தோடு -எல்லாக் கர்மங்களையும் சர்வ அந்தர்யாமியான
என்னிடத்தில் நன்கு வைத்து -கர்ம பலத்தில் விருப்பம் அற்றவனாயும் –
என்னுடைய கர்மம் என்ற எண்ணம் அற்றவனாயும் ஆகி
அநாதி பாவத்தைப் பற்றிக் கவலைப் படாதவனாய்ப் போர் புரிவாயாக –
தூண்ட ஞானம் வேன்டும் -முக்குணம் தூண்டுமோ -சர்வேஸ்வரன் -நியமித்தால் தூண்டப படுகின்றன –
என்னிடம் அனைத்தையும் சமர்ப்பித்து -சர்வ அந்தர்யாமி வியாபகம் -மயி -ஹ்ருதய குஹைக்குள்
சர்வ நியாந்தா தானே -என்ற எண்ணம் வேண்டுமே –

உயிரான ஸ்லோகம் –மூன்று வித தியாகமும் இதில் உண்டு –சந்யாசியா நான் கர்த்தா இல்லை –
நிராஸீ -ஆசைப்படாதே -பலமும் நமக்கு இல்லை -யாக எஜமான் போலே இல்லை –
சொத்து அடைந்து ஸ்வாமி ஆனந்தம் படுவது போலே –
நிர்மமோ– மமதா தியாகம் -அடுத்து -ஜுரம் நீங்கி சண்டை போடு -மூன்று ஜுரங்களும்- இல்லாமல் –
சம்சார தோஷங்களையும் அறிந்து ஆத்ம சாஷாத்கார இன்பமும் அறிந்து -விடாமல் கேட்டு -மனம் பழக்கி –
ஸ்வதந்த்ர கர்த்தா அவன் பரதந்த்ர கர்த்ருத்வம் நமக்கு –
மா மரம் தென்னை மரம் -ஒரே நீர் -ஒரே உரம் -விதை வேறே -போலே நம் கர்மா
சேர்த்தே அறிந்து கொள்ள வேன்டும் -பரதந்த்ர கர்த்ருத்வம் நமக்கு உண்டு –
பலன் -கூடாது என்றது -ஆத்ம சாஷாத்காரம் உயர்ந்த பலனில் மட்டும் நோக்கு –
தியாகம் பண்ணும் கர்த்ருத்வம் உண்டோ என்றால் -நான் சாஸ்திரத்தில் சொன்னதால் செய் –

யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா–
ஸ்ரத்தா வந்தோநஸூயந்தோ முச்யந்தே தேபி கர்மபி—৷৷3.31৷৷

எந்த அதிகாரிகள் இந்த என் சித்தாந்தத்தை எப்போதும் அனுஷ்டிக்கிறார்களோ
அனுஷ்ட்டிக்கா விட்டாலும் எவர்கள் ஸ்ரத்தை உடையவர்களாகவாவது இருக்கிறார்களோ –
ஸ்ரத்தை இல்லாதவர்கள் ஆயினும் எவர்கள் இதில் பொறாமை அற்றவர்களாகவாவது இருக்கிறார்களோ
இவர்கள் மூவரும் எல்லாப் புண்ய பாப கர்மங்களின் நின்றும் விடுபடுகிறார்கள்
தே அபி -கர்ம யோகம் -நித்யம் பின் பற்றி -அனுஷ்டானம் -பண்ணுபவனை கொண்டாடி
ஸ்ரத்தை மட்டும் இருந்தாலும் -அடுத்து அநஸூயை இல்லாமல் இருந்தாலும் இவர்களையும் கொண்டாடுகிறான் —
மூன்று அதிகாரிகளை -பாவை நோன்பு அனுஷ்டித்த கோபிகள் -அநு காரம் செய்த ஆண்டாள் -அப்பியசிக்கும் நாம்
மூன்று பேருக்கும் கிருஷ்ண அனுபவம் துல்யம்
நல் கன்றுக்கும் தோல் கன்றுக்கும் -பாலை சுரக்கும் -கர்ம யோகம் மேன்மை இத்தல அருளிச் செய்கிறான் –
இல்லாமல் இருப்பவனை இகழ்கிறான் அடுத்ததில்

யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்.—
ஸர்வஜ்ஞாந விமூடாம் ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ—-৷৷3.32৷৷

எவர்கள் இந்த என் சித்தாந்தத்தை அனுஷ்டிப்பது இல்லையோ –
எவர்கள் இதில் ஸ்ரத்தை இல்லாமல் இருக்கிறார்களோ –
எவர்கள் இதில் பொறாமை படுகிறார்களோ -அவர்கள் மூவரையும் எல்லா அறிவுகளிலும் விசேஷமாக
மயங்கி நிற்பவர்கள் என்றும் -அதனாலேயே உயிர் அற்றவர்களுக்குச் சமமானவர் என்றும் –
உண்மை அறிவற்றவர் ஆகையால் நெஞ்சு படைத்த பயன் பெறாதவர் என்றும் அறிவாயாக
அஸூயை உடன் இருந்து -கடைப்பிடிக்காமல் -ஸ்ரத்தை இல்லாமல் -இருந்தால் -விமூடர் –
மனசே இல்லாமல் -அசத் பிராயர்கள்– இல்லாததும் சமம் –இருகால் மாடுகள் போலே

ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞாநவாநபி–
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ கிம் கரிஷ்யதி—৷৷3.33৷৷

சாஸ்த்ரங்களினால் ஏற்படும் ஆத்ம தத்வ ஞானத்தை உடையவனும் தன்னுடைய அநாதியான விஷய
வாசனைக்குத் தக்கபடி -உலக விஷயங்களிலேயே பழகுகிறான் -ஏன் எனில் –
அசேதனத்தோடு சேர்ந்து இருக்கும் சேதனர்கள் அநாதி வாசனையையே பின் செல்கின்றனர் –
அவர்களை சாஸ்திரம் செய்யும் நியமனம் என்ன செய்து விட முடியும் –
மூன்று ஸ்லோகங்களால்-ஞான யோகம் கஷ்டம் -வைத்தியர் யாருக்கு எந்த மருந்து -அறிவான்
ஞான வான்களுக்கு கூட -ஆத்ம ஞானம் அறிந்தவர்கள் -வாசனை -கர்மாவில் உழன்று –
பிரகிருதி சம்பந்தம் போகாமல் இருப்பதால் -வழக்கமான செயலை உடம்பு செய்யும் -இந்திரியங்கள் அங்கே பட்டி மேயும் —
வாசனை அற்று போகாதே -பிரகிருதி வலையில் சிக்கி — சாஸ்திரம் விதிப் படி எளிதில் செய்யாமல் —
முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியில் உழல்வேன் –
அக்ருத்ய கரணம் க்ருத்ய ரணம் -இரண்டையும் -சாஸ்திரம் அப்ரத்யக்ஷம் -உடம்பு ப்ரத்யக்ஷம்
பலனை நேராக பார்க்க முடியாதே –சுலபத்தில் நம்பிக்கை வராதே -இன்று தோன்றினது சரீரம் -என்றோ வந்தது சாஸ்திரம் —
அதனால் மாத்த முடியாதே -வாசனையின் பலம் என்றவாறு –

இந்த்ரியஸ் யேந்த்ரியஸ் யார்தே ராக த்வேஷௌ வ்யவஸ்திதௌ—
தயோர்ந வஸமாகச் சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ—৷৷3.34৷৷

காது முதலான ஞான இந்த்ரியங்களுடையவும் -வாக்கு முதலான கர்ம இந்த்ரியங்களுடையவும் முறையே
விஷயங்களான சப்தம் முதலானவற்றாலும் வசனம் முதலானவற்றாலும் காம க்ரோதங்கள் தவிர்க்க ஒண்ணாத படி
நிலை நிற்கின்றன -அந்தக் காம க்ரோதங்களுக்கு வசப்படலாகாது –
அந்தக் காம க்ரோதங்கள் ஞான யோக நிஷ்டனான முமுஷுவுக்கு வெல்வதற்கு அரிய விரோதிகள் அன்றோ
ராக த்வேஷம் கொடுத்து வாசனை சிரமப் படுத்தும் -கர்மேந்த்ரியங்கள் ஞான இந்திரியங்கள் -அதன் அதன் வியாபாரங்களில் –
ஈடுபடுத்தி -வசத்துக்கு போகாமல் -ஞான யோகி போலே கஷ்டத்தில் விழாமல் -வெல்ல முடியாத எதிரிகள்-வாசனை ராக த்வேஷங்கள்
அதனால் கர்ம யோகமே செய் -என்றவாறு

ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பர தர்மாத் ஸ்வநுஷ்டிதாத்—
ஸ்வ தர்மே நிதநம் ஸ்ரேய பர தர்மோ பயாவஹ—-৷৷3.35৷৷

இயற்கையில் உரியதாய் இருக்கும் உபாயமான கர்ம யோகம் அங்கங்களில் குறையுடையதாக அனுஷ்ட்டிக்கப் பட்ட போதிலும்
குறைவற அனுஷ்ட்டிக்கப்பட்ட -பிறர்க்கு உரிய -ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
தனக்கு உரிய உபாயமான கர்ம யோகத்தை அனுஷ்டித்துக் கொண்டு-அந்தப் பிறப்பில் பலன் அடையாமல் மரணம் அடைவதும் சிறந்தது –
பிறர்க்கு உரிய உபாயமான ஞான யோகமோ என்னில் -தவறு ஏற்பட்டு அழிய இடம் உள்ளதால் பயத்தை அளிக்கக் கூடியது –
உயர்ந்தது –குறைவாக செய்யப் பட்ட கர்ம யோகம்–ஸ்வ தர்மே-நிறைவாக செய்யப் பட்ட ஞான யோகத்தை–பரதர்மோ- விட –
வர்ணாஸ்ரம தர்மமே சாஸ்திரம் சொல்வதால் வேறு ஒருவர் தர்மம் செய்வதை சொல்லாதே -பரதர்மம் ஞான யோகம் மட்டுமே குறிக்கும் –
அங்கி அங்கம் –உபாகர்மா -காண்ட ரிஷி தர்ப்பணம் -யஜ்ஜோபவீதம் -காமோகார்ஷி -ஸ்நானம் இவை அங்கங்கள் -குறைவானாலும் -என்றபடி
ஞான யோகம் கர்ம யோகம் எதிர் பார்க்கும் -அதனால் தொடராதே –

அர்ஜுந உவாச-
அத கேந ப்ரயுக்தோயம் பாபம் சரதி பூருஷ–
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித—৷৷3.36৷৷

அர்ஜுனன் கேட்டான் -வ்ருஷ்ணி குலத்தில் உதித்த கண்ணனே ஞான யோகத்தை அனுஷ்ட்டிக்க முயலும்
இந்த மனிதன் விஷயங்களை அனுபவிப்பதில் விருப்பம் இல்லாதவனாயினும் எந்தக் காரணத்தினால் தூண்டப்பட்டு
பலாத்காரமாகத் தள்ளப்பட்டவன் போலே விஷய அனுபவம் ஆகிற அநர்த்தத்தைச் செய்கிறான்
ஆசைப்பட்டவன் -ஞான யோகி -இந்திரியங்களை அடக்கி -எதனால் முடிக்க முடியாமல் உள்ளான் –
அத -இப்படியாலே -ப்ரயுக்த ஆரம்பித்த ஞான யோகி -பாப கர்மாக்களை சேர்த்து கொண்டு –
பிடிக்காமல் இருந்தும் -சூறாவழி காற்றால் தூக்கிப் போடும் படகு போலே – எது பிடித்து தள்ளுகிறது -கேட்க

ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ–
மஹா ஸநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷

பகவான் கூறினான் -நீ கெட்ட விஷய அனுபவ காரணம்-ரஜோ குணத்தால் உண்டாவதாய் –
பெரும் தீனி தின்னும் காமமே யாகும்
இக் காமமே -தடை செய்யப்பட போது -தடை செய்தவர்களைக் குறித்து -பெரும் பாவச் செயல்களையும் புரியும்
கோபமாகப் பரிணமிக்கிறது –இக் காமத்தையே இந்த ஞான யோகத்துக்கு விரோதி என்று தெரிந்து கொள்வாயாக
காமம் -ஆசை படுத்தும் பாடு -காமம் க்ரோதம் தூண்டி விட -கிடைக்காத காரணத்தால் – காமம் ரஜஸ் குணத்தால் தூண்ட
மஹா சனம் –அடி இல்லா குழி போலே -மூட முடியாத -ஆசை -தூராக் குழி தூர்த்து -எனை நாள் அகன்று இருப்பன் –
மஹா பாப்மா -பாபங்களை செய்ய வைக்கும் க்ரோதம் -கோபம் வசப்பட்டு குருவையும் கொல்ல வைக்கும்
தாரை -லஷ்மணன் இடம் -விசுவாமித்திரர் கோபம் –
காமாதி தோஷ ஹரம் -பராங்குச பாத பக்தன் –
யயாதி சாபத்தால் முடி இழந்த யதுகுலம்–வம்ச பூமிகளை உத்தரிக்க வல்ல அவதாரங்கள் –

தூமேநாவ்ரியதே வஹ்நிர் யதாதர்ஷோ மலேந ச.–
யதோல்பேநா வ்ருதோ கர்பஸ்ததா தேநேத மாவ்ருதம்—৷৷3.38৷৷

அக்னியானது எப்படிப் புகையால் மூடப்படுகிறது கண்ணாடி எப்படி அழுக்கால் மூடப்படுகிறது
கருவானது எப்படி கருப்பையால் மூடப்பட்டுள்ளதோ
அப்படியே இக் காமத்தால் இச் சேதன ஸமூஹம் மூடப்பட்டுள்ளது
ஆத்மாவை மறைக்கும் -நெருப்பு புகையால்– கண்ணாடி அழுக்கு மூடுவது போலே -கர்ப்பம் உல்பம் குடநீர் -மூன்று த்ருஷ்டாந்தம்
நெருப்பு புகை பிரியாதே -ஆத்மாவும் காம க்ரோதங்கள் -அழுக்கு தொடைக்க தொடைக்க மீண்டும் மூடுமே
கர்ப்பம் தானே உடைத்து வராதே -அனுக்ரஹம் கொண்டே -காம க்ரோதம் பிரிய- பகவத் அனுக்ரஹம் வேண்டுமே –

ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்ய வைரிணா—
காம ரூபேண கௌந்தேய துஷ் பூரேணாநலேந ச—৷৷3.39৷৷

குந்தீ புத்திரனே அடைய முடியாத விஷயங்களை ஆசைப்படுவதும் அடையக் கூடிய விஷயங்களிலும்
போதும் என்னும் நிலை இல்லாததும் அறிவுக்கு என்றும் சத்ருவாய் இருப்பதுமான காமம் என்னும் இதனால்
அறிவையே இயல்வாக் கொண்ட ஜீவனுடைய அறிவும் மறைக்கப் பட்டுள்ளது
அடையவே முடியாத ஆசைகள் –நிறைவேறும் ஆசைகளில் போதும் என்ற எண்ணம் வராதே -ஆசை -நித்ய விரோதி நமக்கு
ஞானம் மூடப்பட்டு -ஆத்ம விஷய ஞானம் -அறிய முடியாமல் –

இந்த்ரியாணி மநோ புத்திரஸ் யாதிஷ்டாந முச்யதே.–
ஏதைர் விமோஹ யத்யேஷ ஜ்ஞாந மாவ்ருத்ய தேஹிநம்—৷৷3.40৷৷

இக் காமத்திற்கு இந்திரியங்களும் மனமும் விஷய அனுபவத்தில் உறுதியும் ஆத்மாவைப் பற்றி நிற்பதற்கு
உபகரணமாகக் கூறப்படுகிறது
இக் காமம் இந்திரியங்கள் மனம் உறுதி என்னும் இம் மூன்று உபகரணங்களாலும் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய
உண்மை அறிவை மறைத்து சரீரத்தோடு கூடிய ஜீவனைப் பல வகையில் மயங்கச் செய்கிறது –
ஆத்மாவை மறைக்கிறது -ஆத்ம ஞானம் மறைத்து -கீழே சொல்லி -இதில் எதை வைத்து -மறைத்து –
இந்திரியங்கள் -மனஸ் புத்தி மூன்றும் -தன் வசப்படுத்தி கொண்டு -காமம் அதிஷ்டானம் இவை மூன்றும் –
உறுதியான புத்தி ஆசை பட்டு -அனுபவிக்கும் உபகரணங்கள் இந்திரியங்கள் –
ஸ்வ தந்தர்ய பிரமம் -தேஹாத்ம பிரமம் இரண்டையும் ஏற்படுத்தும் -சம்சாரத்தில் அழுத்தும்

தஸ்மாத் த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப.—
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்—৷৷3.41৷৷

பரத குலத்து தலைவனே -முன் கூறியபடி ஞான யோகம் செய்தற்கு அரிதாகையாலே நீ மோக்ஷ உபாயத்தைத்
தொடங்கும் போதே இந்திரியங்களை கர்ம யோகத்திலேயே ஈடுபடுத்தி ஆத்மாவின் தன்மைகளைப் பற்றிய
அறிவை அழிப்பதான இக் காம ரூபமான எதிரியை அழிப்பாயாக
கர்ம யோகம் கொண்டு இவற்றை நியமிக்கும் முறை -சொல்கிறான் அடுத்து அடுத்து -கர்ம யோகம் அதிகாரம் உள்ள நீ -த்வம் –
இந்திரியங்களை கர்ம யோகத்தில் செலுத்தி -ஞான யோகிக்கு வியாபாரம் இல்லையே -சிரமம் –
ஸ்வரூப ஞானம் -ஆத்ம சேஷ பூதன் -விஞ்ஞானம் -விசேஷ ஞானம் -இரண்டையும் எதிர்க்கும்
காம க்ரோதங்களை ஜெயிப்பாய் -கர்ம யோகத்தில் ஈடுபடுத்து –

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே பரதஸ்து ஸ—-৷৷3.42৷৷

ஞானத்தை தடை செய்வதில் பத்து இந்திரியங்களும் முக்கியவையாக கூறுகின்றனர்
இந்திரியங்களைக் காட்டிலும் மனத்தை முக்கியமாகக் கூறுகின்றனர்
மனத்தைக் காட்டிலும் விஷய அனுபவத்தில் உறுதியான புத்தி முக்கியமானது
புத்தியைக் காட்டிலும் எது மேலானதோ அது காமமே யாகும் –
இந்திரியம் -மனஸ் -பத்தி -காமம் -ஒன்றை விட ஓன்று பலம் மிக்கு -புத்தியை பிடித்துக் கொண்டு வசப்படுத்தி –
மனசை இழுத்து -இந்திரியங்களை தன் விஷயத்தில் செலுத்தும் –
புத்தி உறுதி படுத்தி -காமத்தை பகவத் விஷயத்தில் வைத்தால் -மற்றை நம் காமங்கள் மாற்று -என்றபடி –
அதுவே புத்தி மனஸ் இந்திரியங்களை வசப்படுத்தும் – இதுதான் கர்ம யோகத்துக்கு வழியாகும் –
ஞான யோகம் நிவ்ருத்தி மார்க்கம் அன்றோ -கண்ணனுக்கே ஆமது காமம் -ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –

ஏவம் புத்தே பரம் புத்த்வா ஸம் ஸ்தப் யாத்மாநமாத்மநா.–
ஜஹி ஸத்ரும் மஹாபா ஹோ காம ரூபம் துராஸதம்—৷৷3.43৷৷

தடக் கையனே இவ்வண்ணமாக ஆத்ம ஞானத்தைத் தடை செய்வதில் புத்தியைக் காட்டிலும் மேலான காமத்தை
அறிந்து மனத்தை உறுதியான அறிவால் கர்ம யோகத்தில் ஈடுபடுத்துவதாகிய நியமனத்தைச் செய்து
காமம் என்னும் சத்ருவை அழிப்பாயாக
புத்தியை காட்டிலும் உயர்ந்த -கூடியதான -காமம் அறிந்து -புத்தியால் மனசை -மாற்றி -கர்ம யோகத்தில் செலுத்தி சத்ருவை ஜெயிப்பாய்
சத்ரு -ஏக வசனம் -காமம் க்ரோதம் -இரண்டும் ஒன்றே -தடக்கையன் -உள் சத்ரு -ஜெயிப்பது கஷ்டம் மஹா பாஹோ

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: