Archive for May, 2017

ஸ்ரீ இராமாயண ஸூதா நிதி -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்து அருளியவை –

May 10, 2017

-தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் -நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முனி புங்கவம்

தபஸ்வீ –தன்னை கொண்டாடி சொல்வது இல்லை -நிர்வேதம் யுடையவர் என்று காட்டிக் கொள்ள –
சாஸ்த்ரார்த்தம் ஆச்சார்யர் வாயிலாக கேட்க உள்ள விருப்பம் –
நாரதர் சாஸ்த்ரார்த்தம் அனுபவித்து உருகி உள்ளவர் என்று காட்ட –வாக்விதாம் வரம் -என்றும் –முனி புங்கவம்-இரண்டு விசேஷணங்கள் –

கோன் வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச் ச வீர்யவான் தர்மஞ்ஞ ச க்ருத்தஞ்ஞ ச ஸத்ய வாக்யோ த்ருட வ்ரத

அஸ்மின் லோகே –தேவ லோகத்தில் உள்ளவனை சொல்லல் ஆகாதே -/சாம்ப்ரதம்-என்றைக்கோ இருந்து மறைந்து போனவன் கூடாதே –
மஹர்ஷே த்வம் சமர்த்தோசி ஜ்ஞாது மேவம்விதம் நரம் –மனுஷ்ய யோனியில் பிறந்தவனையே சொல்ல வேணும் -மூன்று நிர்பந்தங்கள் –
1-குணவான் -சீலவான் -என்றபடி –வசீ வாதான்யோ குணவான்
2-வீர்யவான்ஸுர்ய -வீர்ய பராக்ரமங்கள் மூன்றுக்கும் உப லக்ஷணம் -அஞ்சாமல் அசாஹயனாய் புகுந்து அநாயாசமாய் பொடி படுத்தினாலும்
தனக்கு ஷதி ஏற்படப்படாத மிடுக்கு -அஸஹாய சூர-அநபாய ஸாஹஸ –
3-தர்மஞ்ஞ–தருமம் அறியா குறும்பன்- –ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத–கருணா காகுஸ்தன் -விவிதஸ் சாஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல
ஸத்ய வாக்ய -சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் –பூத ஹித வாதி என்றபடி
4-க்ருத்தஞ்ஞ ச –5-ஸத்ய வாக்யோ
6-த்ருட வ்ரத-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸருத்ய ப்ராஹ்மனேப்யோ விசேஷத-என்றும்
நத்யஜேயம் கதஞ்சன—அபயம் சர்வ பூதானாம் ஏ வ்ரதம் மம –-சாரித்ரேண ச கோ யுக்த சர்வ பூதேஷூ கோ ஹித -வித்வான் க சமர்த்தச்ச கச்ச ஏக ப்ரிய தர்சன-

7-சாரித்ரம்--நல்ல ஒழுக்கம் -நல்ல நடத்தை -/
8-சர்வ பூதேஷூ கோ ஹித- ஹிதம் -பிரியம் தத்கால இன்பம் -ஹிதம் உத்தர கால இன்பம் -ப்ரஹ்மாஸ்திரம் ஹிதம் என்றவாறு –
9-வித்வான் -வேத வேதாங்க தத்வஞ்ஞ சதுர்வேத ச நிஷ்டித-சர்வ சாஸ்த்ரார்த்த தத்தவஞ்ஞ ஸ்ம்ருதிமான் பிரதிபனாவான் —
10-சமர்த்தவித்வான் வேற சமர்த்தம் வேறே -லௌகிக சாமர்த்தியமும் விஞ்சியவர் என்றபடி
11-ஏக ப்ரிய தர்சனதருணவ் ரூப சம்பன்னவ் -வைய வந்த வாயாலும் வாழ்த்த வேண்டும் படி ரூப லாபவண்யம் —ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ த்யுதி மான் கோ அநஸூயா -கஸ்ய பிப்யதி தேவாச் ச ஜாத ரோஷஸ்ய சம்யுகே–

12-ஆத்மவான்-ஆத்மா ஜீவே த்ருதவ் தேஹே ஸ்வபாவே பரமாத்மநி–ஜய ஜய மஹா வீர –மஹா தீர தவ்ரேய -அநபாய அசஹாச /
13-ஜிதக்ரோதோ-கோபம் வென்றவன் -என்றபடி –
14-த்யுதி -காந்தி தேஜஸ் -வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -பிரபாவான் சீதயா தேவ்யோ பரம வ்யோம பாஸ்கர —
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா -/ அநன்யாஹி மயா சீதா பாஸ்கரேண ப்ரபா யதா–என்று
சொல்லும் படி நித்ய யோகத்தால் வந்த தேஜஸ் –
15-அநஸூயா–வாத்சல்யம் உடையவர் அன்றோ / சரணாகத வத்ஸல -ரிபூணாம் அபி வத்ஸல –
16-கஸ்ய பிப்யதி தேவாச் ச ஜாத ரோஷஸ்ய சம்யுகே–கீழே -15-குணங்களும் ஒரு தட்டாய் -இது மட்டும் ஒரு தட்டாய்
-சீற்றத்தின் மிகுதியால் அனுகூலராலும் அணுக ஒண்ணாத -ராகவ ஸிம்ஹம் அன்றோ –
குண பரீ வாஹாத்மநாம் ஜன்மநாம் –ஸ்ரீ பட்டர் —

——————————————————————

ஏதத் இச்சாம் யஹம் ஸ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே மஹர்க்ஷே த்வம் சமர்த்தோசி ஜ்ஞாது மேவம் விதம் நரம் —
சொல்வதை விட கேட்பதே கௌதூஹலம் –ஞாதும் -அறிவின் பயனும் அறிவிப்பதே –
ஸ்ரோதும் இச்சாமி–ஸ்ரோதும் மே குதூஹலம் -வக்தாவுக்கு உரியவர் -நாரதரே-காது படைத்தது சபலமாம் படி கேட்டுக் கொண்டே இருப்பதில் குதூஹலம் என்றதாயிற்று –

முநே வஹ்யாம் அஹம் புத்தவா தைர்யுக்த க்ரூயதாம் நர —
வஹ்யாம் அஹம் புத்தவா-தெரிந்து கொண்டு சொல்லுவேன் என்பது பொருள் அல்ல -நான்முகக் கடவுள் இடம் பெருமாள் குணங்களை கேட்டு
நெஞ்சில் தரித்துக் கொண்டு இருப்பவர் அன்றோ நாரதர் -மோஹம் நீங்கி அறிவு தெளிந்த பின்பு சொல்லுவேன் என்றபடி
-குணக்கடலில் அமிழ்ந்து கரை காண மாட்டாதே முசித்திக் கிடக்கிற நான் புத்தி சுவாதீனம் வந்தால் அன்றோ சொல்ல இயலும் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -அன்றோ
தைர்யுக்த க்ரூயதாம் நர –கீழே —ஜ்ஞாது மேவம் விதம் நரம் —
என்று இருக்கையாலே மனுஷ்ய யோனியில் பிறந்தவனைப் பற்றியே சொல்லுவது பிராப்தம் / தசரதாத் மஜன் -சக்கரவர்த்தி திருமகன் -என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்வான் அன்றோ –
பவான் நாராயணோ தேவ -என்று தேவர்கள் புகழ்ந்தாலும் –ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசாரதாத் மஜம் –என்று
மன்யே -பஹு மன்யே -மனுஷ்யத்வத்திலே தான் மிக உகப்பு என்பவன்
விச்வாமித்ரரும் மஹா சதஸிலே –வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்ற ஸ்ருதி சாயையிலே –அஹம் வேத்மி மஹாத்மானம் -என்று சொல்லி வைத்து
ஏகாந்தத்தில் திருப் பள்ளி உணர்த்தும் பொழுது –உத்திஷ்ட நரசார்தூல -என்று சம்போதனம் பண்ணினார் –
வால்மீகியும் பட்டாபிஷேகத்தை பேசும் இடத்தில் அப்யஷிஞ்சன் நர வ்யாக்ரம் -என்றது
ஸ்ரீ ராமாயணம் குசலவர்கள் பாட முகம் சுளிக்காமல் பெருமாள் கேட்பதற்கு ஏற்ப அருளிச் செய்தார் –
ஆக –தைர்யுக்த க்ரூயதாம் நர –என்கிற இடத்தில் நாரத மகரிஷியின் விவஷிதம் –கீழே -வால்மீகி —ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று
நீர் சொன்னபடியே மனுஷ்ய விரக்தியைப் பற்றியே சொல்கிறேன் -என்பதாம் –
இஷுவாகு வம்ச ப்ரபவ –-என்று தொடங்கி —சத்யே தர்ம இவாபர என்னும் அளவும் -12-ஸ்லோகங்களில் பெருமாளுடைய திருக் கல்யாண குணங்களை பரக்க பேசி
தமேவம் குண சம்பந்தம் ராமம் சத்ய பராக்ரமம்-19—என்று தொடங்கி –ராமஸ் சீதா மநு ப்ராப்ய ராஜ்யம் புநர் அவாப்தவரன் -89-என்னும் அளவும்
சம்ஷேகமாகச் சொல்லி தலைக் கட்டி நாரதர் தேவ லோகம் போய்ச் சேர்ந்தார் –

———————————-

ச ஸத்ய வஸனாத் ராஜா தர்ம பாசேன சம்யத -விவாச யாமாச ஸூதம் ராமம் தசரத ப்ரியம் —-23-
தர்ம ஆபாசம் -என்றது குத்ஸித தர்மம் -என்றபடி –முன்பே வர பிரதானத்தைப் பண்ணி வைத்து -இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான
ஸத்ய தர்மத்தைப் பற்றி நின்று —ராமோ விக்ரஹவான் தர்ம –என்கிற பெருமாளோடே கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தி போலே
-மா முனிகள் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –
ச ஜகாம வனம் வீர ப்ரதிஞ்ஞா அநு பாலயன் -பிதுர் வசன நிர்தேசாத் கைகேய்யா ப்ரிய காரணாத் –24-
தண்டகாரண்யம் -செல்ல முக்கிய காரணம் பிதுர் வசன நிர்தேசாத் –
-விச்வாமித்ரஸ்ய சாஸனாத் -தாடகா நிரசனம்
-அகஸ்திய வஸனாத் -பரத்வாஜஸ்ய சாஸனாத் -ஸ்ரீ பரத ஆழ்வான் உடைய துடிப்பையும் மறந்து –
ந மே ஸ்நானம் பஹு மதம் வஸ்த்ராண் யாபரணா நிச தம் விநா கைகேயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம்-என்று புஷபக விமானத்தில் விரைந்தாலும்
பரத்வாஜர் சொல்லை மீள மாட்டாரே பெருமாள் –
ஆக கைகேய்யா ப்ரிய காரணாத் -என்றது அமுக்கிய ஹேதுவாய் –-பிதுர் வசன நிர்தேசாத் -என்றதே பிரதானம் -என்றவாறு –

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்ராதா லஷ்மண அநு ஜகாம ஹ-25-என்ற அனந்தரம் –சீதாப் யனுகதா ராமம் சசிநம் ரோஹீணீயதா -28-என்று
இளைய பெருமாள் முன்னம் புறப்பட்டதாகவும் -பிராட்டி பின்னம் புறப்பட்டதாகவும் சொல்லி -மேலே அயோத்யா காண்டத்தில் விரித்து சொல்லும் பொழுது
முற்படப் பிராட்டியும் -பிறகு இளைய பெருமாளும் உடன் வர பிரார்த்திப்பதை சொல்லி –விரோதம் இல்லை -இருவரும் அநு சரர்கள் என்றவாறு இங்கே –
குஹமாசாத்ய தர்மாத்மா நிஷாதாதி பதிம் ப்ரியம் -குஹேந சஹிதோ ராமோ லஷ்மணே நச சீதயா -29-
ஆசிரித்தார்கள் உடன் கலந்து பரிமாறவே -சாது பரித்ராணாமே -அவதார பிரயோஜனம் -மற்ற இரண்டும் முக்கியம் –
குஹேந சஹிதோ ராமோ-என்று மட்டுமே சொல்லாமல் –லஷ்மணே நச சீதயா -என்றது -பெருமாள் குகனோடு சேர்ந்த பின்பே தம்பியோடும் தேவியோடும்
சேர்ந்ததாகத் திரு உள்ளம் பற்றினார் –
பெருமாளே ஆரண்ய காண்டத்தில் -19-40-கதா நு அஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மனா சத்ருக்நேந ச வீரேண த்வயா ச ரகு நந்தன –என்று
ரகு நந்தனான இளைய பெருமாள் –ச காரத்தால் சீதா பிராட்டி- உடன் கூடுவது -பரத்தாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் உடன் கூடின பின்பே என்று அருளிச் செய்கிறார்
அபரிமித அவா வுடன் அடியார்கள் உடன் பரிமாறவே திருவவதாரம் என்றதாயிற்று

தே வநேந வனம் கத்வா -30-அடுத்து அடுத்து வனமாகவே இருந்தன -என்றும் –தேவனம் -பாதசாரம் -நடந்து சென்றமையை சொன்னவாறு –

ரம்யமா வசதம் க்ருத்வா ரம மாணா வநே த்ரய -31-இங்கு த்ரய என்றது ராம லஷ்மண சீதா பிராட்டி மூவரையும் –
மூவருக்கும் ஆனந்தம் -என் நெஞ்சினால் நோக்கிக் கண்ணீர் -என்றபடி -அவர்கள் அவர்கள் திரு உள்ளத்தால் பார்த்தால் தான் நாம் அவர்கள் ஆனந்த ஹேது அறிவோம் –

ச காம மனவாப்யைவ ராமபாதா வுபஸ் ப்ருசன்-நந்தி க்ராமே அகரோத் ராஜ்யம் ராமா கமன காங்ஷயா -38-
பரத்தாழ்வான் மநோ ரதம் பெறாமல் திரும்பினாலும் ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்நேந சமன்வித –அயோத்யா -113-1-ஸந்துஷ்டனாய் திரும்பினான் –
சேஷி யுகந்த அடிமையே -செய்ய வேணும் -ஸ்வரூப ஞான பூர்த்தி -சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பார தந்தர்ய போக்யதைகள்
-லோக சாரங்க முனிவர் தோள்களில் இருந்தாலும் அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன் -என்றார் அன்றோ திருப் பாண் ஆழ்வார்
அரசு அமர்ந்தான் அடி சூடும் ஆசை யல்லால் அரசாக எண்ணேண் மற்ற அரசு தானே -என்பார்கள் இறே-

ப்ரவிஸ்ய து மஹாரண்யம் ராமோ ராஜீவ லோசன –விராதம் ராக்ஷஸம் ஹத்வா சரபங்கம் ததர்ச ஹ -41-பெருமாள் சித்ர கூடத்தில் இருந்து
தண்டகாரண்யம் செல்வதை சொல்லும் -25-திரு நக்ஷத்ரம் பெருமாளுக்கு –
மா ச லஷ்மண ஸந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே ராஜ்யம் வா வனவாசோ வா வனவாசோ மஹோதய –அயோத்யா -22–29-என்று
வனவாசம் பெறாப் பேறு-அத்தை மனமார அருளிச் செய்தது என்று காட்டவே -உள்ளே பொங்கும் ஹர்ஷம் திருக்  கண்களிலே தோன்ற இந்த சப்த பிரயோகம்
சரபங்க மஹரிஷியைக் காண விராத ஹதனம் அங்க அனுஷ்டானம் -என்றவாறு –
ஊன ஷோடச வருஷ மே ராமோ ராஜீவ லோசன –அஸ்தமித்தவாறே கண் உறங்குபவன் என் பிள்ளை –

ச சாஸ்ய கதயாமாச சபரீம் தர்ம சாரிணீம்–ச்ரமணீம் தர்ம நிபுணாம் அபி கச்சேதி ராகவம்--56-
இதில் விவாசித்தமான தர்மம் –ஆச்சார்ய சிசுருஷை -ஆச்சார்ய அபிமானம்
மேலே ஆரண்ய காண்டத்திலும் –கச்சித் தே குருஸ் ஸ்ருஷா சபலா சாரு பாஷிணி —என்றும் –
சஷூஷா தவ ஸும்யேந பூதாஸ்மி ரகு நந்தன பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் –என்றும் சொல்லி
ஆச்சார்ய ஸ்ரீ பாத சேவை பண்ணி இருந்ததே இவளுடைய தர்மம் –
சோப்யகச்சன் மஹா தேஜாச் சபரீம் சத்ரு ஸூதன -சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசாரதாத்மஜ –57-என்று
மேலும் அபிகச்ச -சப்த பிரயோகம் –அபிகமனம்-சரம பர்வ நிஷ்டையில் இருந்தவளைக் கண்ட ப்ரீதியால் பெருமாள் மஹா தேஜஸ் -ஆனார்
-சபரியுடைய அனைத்து பிரதிபந்தகங்களையும் போக்கி அருளினார் என்பதையே சத்ரு ஸூ தன -கடாக்ஷ வீக்ஷணத்தாலே சங்கல்பித்து அருளினார் -என்றவாறு –
சபர்யா சம்யக் பூஜிதா –ரகுகுல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் –சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசாரதாத்மஜ –என்னும்படி வேடுவச்சியாய் இருந்து வைத்தே
குரு சுச்ருஷையில் பழுத்து ஞானாதிகையாய் -தன நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன ஆதார அனுகுணமாக தன கையாலே அமுது செய்யப் பண்ண அதி ஸந்துஷ்டாராய் அமுது செய்தார் -மா முனிகள் வியாக்யானம்
பெருமாள் சபரி கையால் அமுது செய்து அருளினார் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்திக்கு-
கீழே சரபங்க முனிவர் அகஸ்திய முனிவர் போன்றோர் செய்தது சாமான்ய பூஜை –இங்கே சபரி செய்து அருளினது சம்யக் பூஜை என்பதே பெருமாள் திரு உள்ளம் –
இத்தையே கபந்தனும் பெருமாள் இடம் –சிரமணீ சபரி நாம காகுஸ்தா சிரஞ்சீவி நீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் -என்றும் சிரமணீம் தர்ம நிபுணாம் அபிகச்ச -என்றான் –

பம்பாதீரே ஹனுமதா ஸங்கேதோ வானரேண ஹ -58-
ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாசோ நஷ்டா சீதா ஹதோ த்விஜ -ஈத்ருசீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் -என்று பரிதபித்து வந்த பெருமாள்
பொறுக்க ஒண்ணாத துயரத்தில் ஆழ்ந்து இருக்க -காட்டிலே வழி பறி யுண்டவர் தாய் முகத்திலே விழிக்குமா போலே —
தைவாதீனமாக பெருமாள் உயிர் பிழைத்தார் என்கிறார் முனி -ஆசுவாசம் அடைகிறார் வால்மீகி -இதனால் என்றவாறு –

ஹனுமத் வசனாச் சைவ ஸூக்ரீவேண சமாகத -ஸூக்ரீவாய ச தத் சர்வம் சம்சத் ராமோ மஹா பாலா –59- என்று
அக்னி சாஷிதமாக மஹாராஜர் உடன் நட்ப்பு-தீன பந்து தீன தயாளு -காட்டி அருளவே –அங்குல் அக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
-சங்கல்ப மாத்திரத்திலே அனைத்தையும் முடிக்க வல்ல பெருமாள் அன்றோ –

அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷ சேந்த்ரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ –86-
ஆக்க்யாஹி மம தத்வேந ராக்ஷஸா நாம் பலாபலம்-
விபீஷணனை ராவணன் குலா பாம்சனம் என்றான் -பெருமாள் இஷுவாகு வம்சராகவே நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
இஷுவாகு குல நாதரான பெருமாள் இவனை ஆதார பூர்வகமாக அங்கீ கரித்த அனந்தரம் –ஆக்க்யாஹி மம தத்வேந ராக்ஷஸா நாம் பலாபலம்–என்று
ராக்ஷஸருடைய பலாபலம் இருக்கும் படியை நமக்குச் சொல்லும் என்கையாலே இவனை ராக்ஷஸ சஜாதீயனாக நினையாதே
திருத்தம்பி மாரோபாதியாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்தார் –
ஆச்ரித ரக்ஷணமே க்ருதக்ருத்யம் -ஆச்ரித சம்ரக்ஷணம் ஸ்வ லாபம் -ததா ராமோ பபூவ/ ததா விஜ்வர /துயர் அறும் சுடர் அடி அன்றோ –
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -ஹ –மகரிஷி மகிழ்ந்து என்ன ஸ்வ பாவமோ என்கிறார் –

ராமஸ் சீதா மநு ப்ராப்ய ராஜ்யம் புனர் அவாப்தவான் -ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோகஸ் துஷ்ட புஷ்டஸ் ஸூ தார்மிக -90–
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழ் யுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –-7–10–1-
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் பிரஜைகளுக்கு ஒரு குறையும் பிறவாது இ றே-ஆக இருவருமாக சேர்த்தியாலே
தங்களுக்கு ஆனந்தம் உண்டாக -அச் சேர்த்தியைக் காண்கையாலே லோகத்துக்கு ஆனந்தம் உண்டாக –பிரஜை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான ப்ரீதியைக் கண்டு திவ்ய தம்பதிகள் தங்கள் இனியராய் இருப்பார்கள் ஆயிற்று –ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –

அகர் தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிராமய -ரமணீயம் ப்ரசன்னாம்பு சன் மனுஷ்யானோ யதா –பாலா -2–5-என்று
தாம் அவகாஹிக்கப் புகும் தீர்த்தத்தை சன் மனுஷ்ய மனசுக்கு ஒப்பிட்டு பேசுகிறார்
அகர்தமம் -கர்த்தமாம் -சேறு -இது இல்லாமை -மனனகம் மலம் அற-அபஹத பாப் மாதவம் -உண்டாகி கழிந்தவை இல்லாமல் -பிரசக்தியும் அற்று இருக்கை-
காம க்ரோத லோப மோஹ மத மாத்சர்ய அஸூ யாதிகள் இல்லாமை –அகர்தமம் -பாப ரஹிதம் -பாப ஹேதுக்களை பாபமாகவே ஸ்ரீ கோவிந்த ராஜர் அருளிச் செய்வார் –
தீர்த்தம் -பரிசுத்த ஜலம் –காலை நல் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்
ரமணீயம் -மநோ தரம் -ரமிப்பதற்கு உரியதானவை-கண்டவர் மனம் வழங்கும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரின்
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டோடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ –
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கலாகாமை நிச்சயித்து இருந்தேனே
ப்ரசன்னாம்பு –தெளிந்த நீர் -நீரகத்தான் நீர் வண்ணன் – நீர் புரை வண்ணன் -அம்புவத் பிரசன்னம் –
அவனை உள்ளே கொண்ட சத் மனுஷ்யர் திரு உள்ளங்களும் பிரசன்னமாகவே தானே இருக்கும் –

ததாவிதம் த்வீஜம் த்ருஷ்ட்வா நிஷாதேன நிபாதிதம்–ருஷேர் தர்மாத் மனஸ் தஸ்ய காருண்யம் சமபத்யத-13-
வேடனால் அடித்து வீழ்த்தப்பட்ட பறவை கண்ட தர்மாத்மா வால்மீகிக்கு காருண்யம் உண்டாயிற்று –
தயா கருணா அநு கம்பா அநு க்ரோசம் -பர்யாய சப்தங்கள் -பர துக்க துக்கித்தவம் /பர துக்க நிராசி கீர்ஷா/ பர துக்க அஸஹிஷ்ணுத்வம்
சோகம் ஸ்லோகத்துவம் ஆகத –
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வாகமச் ஸாஸ்வதீஸ் சமா –யாத கிரௌஞ்ச மீது காதேகம் அவதீ காம மோஹிதம் —15-
மா நிஷாத ப்ரதிஷ்டாம் து அம கம ஸாஸ்வதீஸ் சமா –நிஷாதன் -வேடன் -/ அம –அவனுக்கு விசேஷணம் -திருவில்லாத வேடன் -என்றபடி –
ஸாஸ்வதீஸ் சமா ப்ரதிஷ்டாம் மா கம -வெகு காலம் நன்மை இழந்து இருப்பாய் -என்கை –காம மோஹிதமான ஆண் பறவையை கொன்றதினால் –
மா நிஷாத -மா நிஷீ ததி-சீதா பதி/ மண்டோதரி இராவணன் -ராக்ஷஸ மிதுனம் -காம மோஹம் கொண்ட இராவணனை கொன்றதால்
நெடு நாள் வாழ்வு அடைந்தீர் என்று வாழ்த்தினை படி –கிரௌஞ்ச சப்தம் பஷி விசேஷத்தையும் ஆசூர பிரக்ருதிகளையும் சொல்லக் கடவது –

தமுவாச ததோ ப்ரஹ்மா பிரஹசன் முனி புங்கவம் -30-
ச்சந்தா தேவ தே ப்ரஹ்மன் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ–ராமஸ்ய சரிதம் க்ருதஸ்தம் குரு த்வம் ருஷீ சத்தம–31-
நான்முகக் கடவுள் தம்முடைய உள்ளக்கருத்தை ஒட்டியே வந்த ஸ்லோகம் என்று ஆசுவாசப் படுத்தி
தமுவாச ததோ ப்ரஹ்மா பிரஹசன் முனி புங்கவம் -30–ஹாஸத்துக்கு காரணம் விஸ்மயம்/சரஸ்வதி அந்தர்வாஹினி அன்றோ /
மேலே –க்ருத்ஸ்னம் ராமாயணம் காவ்யம் ஈத்ருசை கரவாண் யஹம் -41-என்ற ப்ரதிஞ்ஜை-ஈத்ருசை -அந்தர்வாஹினியான சரஸ்வதி
ஜிஹ்வாக்ரத்திலே வந்து புகுந்து ஸ்லோகமாக வந்தமை -காட்டி அருள படும் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நீருக்கும் எம்பெருமானுக்கு சாம்யங்கள் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

May 10, 2017

நீருக்கும் எம்பெருமானுக்கு சாம்யங்கள் –

1-நீர் பள்ளத்தே ஓடி செல்லும் -விதுரர் திருமாளிகைக்கே சென்று உண்டான்
2-லோகோ பின்ன ருசியாய் இருந்தாலும் அனைவரும் நீரை விரும்புவார் -எம்பெருமானையும் விரும்புவார்கள்
3–நீருக்கு குளிர்ச்சி இயற்கை சூடு வந்தேறி -நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே சீற்றம் பிறக்கும் படி அன்றோ அபராதம் செய்கிறோம்
4–நீர் சுட்டாலும் ஆற்ற நீரே வேண்டும் –சீறினாலும் தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
5–இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓடவிடவும் உரித்தாய் இருக்குமே -சூடிக் களைந்த மாலையால் விலங்கிடலாம் -கழுத்திலே ஓலையைக் கட்டி தூது விடலாம்
6–நீரை வைத்தே மற்ற உணவு சமைப்போம் -அவனே உபாயமும் உபேயமும் -ஸ்வயம் புருஷார்த்தமும் -பிரயோஜனாந்தரங்கள் பெறவும்
7–நீருக்கு நீரே வேண்டும் -வேறு ஒன்றால் தாகம் தணித்து கொள்ள முடியாதே -குண அனுசந்தானத்தாலும் போக்க அரியவன் –
ஒரு நாள் காண வாராய் -அடியேன் தொழ வந்து அருளே -கர்மா ஞான பக்தி பிரபத்தி -இவற்றில் எத்தை விட்டு
எத்தைப் பற்றினாலும் எம்பெருமான் ஒரு படியாலும் விட முடியாதே
8–அன்னம் புஜித்தாலும் நீர் வேண்டுமே -நீர் வேறு ஒன்றையும் அபேக்ஷிப்பது அன்று -உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும் –
இவன் இதர நிரபேஷன் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
9–கொள்ளும் பாத்திரம் குறை -தார தம்யம் -அவனும் கொள்ளக் குறைவற்றவன் -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
ஐஸ்வர்யமே போதும் கைவல்யம் போதும் என்பாருமாக குறையக் கொள்ளுவது அவர்கள் குற்றமே
10–பஞ்ச பிரகாரம் -பூமிக்குள் நீர் போலே அந்தர்யாமித்வம் / ஆவரண ஜலம் போலே பரத்வம் / விடாய்த்தவனுக்கு கிட்ட அரிதான பாற்கடல் போலே வ்யூஹம்
/பெருக்காறு போலே வைபவம் /தேங்கின மடுக்கள் அர்ச்சை /
11–நீரானது பரிசுத்தமானாலும் ஆஸ்ரய தோஷத்தால் த்யாஜ்யம் ஆவது போலே தேவதாந்தரங்கள் / நல் தீர்த்தம் -கூராழி வெண் சங்கு ஏந்தின எம்பெருமானே
12–தோண்ட தோண்ட சுரக்கும் நீர் -கொள்ள மாளா இன்ப வெள்ளம் -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் –
13–பரார்த்தமாகவே இருக்கும் நீர் – ந தேரூபம் ந ஸாகாரோ பக்தானாம் தவம் பிரகாசஸே
14–வடிம்பிட்டு பெய்விக்க முடியாதே -கேவலம் ஸ்வ இச்சையை வாஹம் ப்ரேஷ கஞ்சித் கதாசனா -காட்டவே காணலாம்
15–காளமேகம் மூலமே கடல் நீர் மழை யாகும் -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாய் திருந்தினவாறே ஸர்வதா சர்வ உப ஜீவ்யம் ஆமே
16–ஒரே துறையில் சிறியோர் பெரியார் வாசி இல்லாமல் நீராடலாம் -கணமும் வானரமும் வேடும் உடை வேங்கடமே -நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடம்
17–சிறிய துவாரம் கிடைத்தாலும் நீர் உள்ளே புகும் -திருமால் இரும் சோலை மலை என்றேன் -என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
-என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -இத்யாதி –
18–புஷ்கரம் பிரயோகம் தீர்த்த விசேஷங்கள் மஹாத்ம்யம் -கோயில் திரு மலை பெருமாள் கோயில் -திருப்பதிகளில் சிறப்பு பொலியுமே-
19–விடாய்த்தவர்கள் நீரை முகத்திலே ஏறட்டுவது -முதுகில் கொட்டுவது -படிந்து குடைந்தாடுவது போலே வாக்கினால் கருமம் தன்னால்
மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்க்கை மீதூர வாங்கி விழுங்குவார்கள் திருமங்கை ஆழ்வார் போல்வார் எம்பெருமானையும்
20–தாகம் மிக்கவன் நுனி நாக்கு நனைந்தால் போதும் என்பான் -கூரார் ஆளி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே
21–நீரிலே சிறிய கல்லும் அமிழும் -தெப்ப மரமும் மிதக்கும் –ப்ரஹ்மாவாய் இழந்து போவதும் இடைச்சியாய் பெற்று விடுவதும் காண்போமே –
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –எல்லாம் தெய்வ நான்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனுஷர் அமிழ்வதும் ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்பதுவும் உண்டே
22– துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை–அன்னம் விருத்திக்கும்-போக சாதனமாயும் ஸ்வயம் போக்யமாயும் -இருக்குமா போலே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் -ப்ராபகனாயும் பிராப்யனாயும் இருப்பான் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரும் பூதூரில் -ஸ்வாமி திருமஞ்சனக் கட்டியங்கள் / ஸ்ரீ கடிகா சதகம் அம்மாள் -அருளிச் செய்த ஸ்ரீ யதிராஜ விஜய ஸ்லோகம் —

May 9, 2017

முதல் திருமஞ்சனக் கட்டியம்

நாயந்தே நாயந்தே

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்டத்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே

அப்பனுக்கு சங்காழி அளித்தருளும் பெருமாள்
அறமிகு நற் பெரும் பூதூர் அவதரித்த பெருமாள்
அறுசமயச் செடியதனை அடியறுத்த பெருமாள்
அருளாழி வரி வண்டே என்று ஆழ்வார் அழைக்கும் பெருமாள்
அருள் மாரி அடியிணைக் கீழ் அன்பு பூண்ட பெருமாள்
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாம் ஆண்டாள் தமக்கும் அண்ணரான பெருமாள்
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் தாழ்வின்றி வாழும் பெருமாள்
அடியார் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவிக் கிட்டிக் கிழங்கொடு வெட்டிக் களைந்த பெருமாள்
நம் தேசிக சிகாமணிப் பெருமாள்-

தேவரீர் திருவடித்த தாமரைகளின் தாஸ்யார்ஹ சாரஸ்ய தாநார்த்தமாக ஆசன அரவிந்தத்தில் அழுத்தியிட்ட இடது கழலும்
இடது துடையின் மேல் வளர்த்திக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குக் காட்டியிட்ட வலது கழலும்
சாஷாத் மன்மத மன்மதாயமான மது மதன விஜய தூணிர யுகளம் போல் இணைந்து வைத்த கணுக் கால்களும்
கீழ் நோக்கும் ஒளி வெள்ளம் மறியுண்டு கழித்தால் போலே இரண்டுருவம் திரண்டு உருண்டு மடியுண்ட மூலம் தாள்களும்
கந்தளித கதலீ காண்ட கரிகர கலபகங்கள் போல் அதி ம்ருதுள மாம்சலங்களாய் விளங்குகின்ற திருத் துடைகளும்
சந்த்யா ரஞ்சிதா சாரதாப்ரத்தில் தனித்து எழுந்ததோர் கொடி மின்னல் நிலை நின்று வளர்ந்தால் போலே ஆஜங்கம் தழைத்து உடுத்து
அரைச் சிவந்த ஆடையின் மேல் வளைந்து வந்து நிகு நிகு என்ற பொன்னரை நாண் பூண்ட அழகும்
சேவா ரஸ பாச பரப்ராமித மதி மந்தார மா மத்யமான ஸுந்தர்ய துக்த சிந்தூதரம் நடுக்குழித்திட்ட சுழி போல் ஸூந்தரமாம் உந்தி மலரும்
மஞ்ஜூள தர மாயூரோ சீர வாலவ்யஜன வேவீ ஜ்யமான திவ்ய தூப குமிதமித மந்தகதவஹ கோதூயமான
திவ்ய லாவண்ய தரங்கிணீ தரங்கங்கள் போல் இருபாலும் திகழ்கின்ற திருவலிகளும்
அபிநவதர தர விகஸ்வர சரஸிஜ வர முகுள தளத் தளாயமான நிஜாஞ்சலி சிகாங்குளீ சோபையை நிஜ ஹ்ருதய ஜலஜததர ரசிக ஹார்த்த
ஜனார்த்தனனுக்கு அவநமித்துக் காட்டுவது போல் நெஞ்சுக்கு நேராகக் கொஞ்சம் சாய்த்து அஞ்சலித்த தடக் கைகளும்
தங்க வளை மேல் தங்கித் தொங்குகின்ற சங்கிலிகளோடு இணக்கமுற்ற கணுக் கைகளும்
முறுக்கியிட்ட முன்கையோடு உள் விம்மிப் புறங்குவித்து மடியுண்டு முழங்கைகளும்
கநகமய குல தரங்களைக் கடைந்து எடுத்து மடுத்தால் போல் திரண்டு நீண்ட பாஹு தண்டங்களும்
வைகுண்டாதி ப்ரஹ்ம கோசங்கள் வந்திருக்கும் மாணிக்கப் பண்டாரமான நெஞ்சமாகிய நீணகர்க்கு ஓர் கநகமய கவாடம் போல்
பளபளன்று அகன்று காட வ்யூடமாய்த் திகழ்கின்ற திரு மார்பின் அழகும்
அம்மார்பின் அழகில் ஆழங்கால் பட்டு மயங்கிவிடும் மநோ நயனங்களைத் தோள் அளவில் துவக்கி விடும் அவலம்ப ஸூ த்ரம் போல் இலங்குகின்ற முந்நூல் அழகும்
சேஸ்வர விபூதி த்வயமும் இளைப்பாறும் நிழல் தடமாய் வளர்ந்து உயர்ந்த திண் தோள்களும்
கண்ட வ்யக்த தாரா ஷரங்கள் புறம்பொசிந்து காட்டினால் போல் ரேகாத்ரய விபக்தாங்கமாய் வலம் புரியின் சுழி ஒழுங்கைப் பழித்து எழுந்த கழுத்தின் அழகும்
மறு கழித்தன சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையும் அதகரித்துக் கிட்டினாரை மையல் ஏற்றி மயக்கும் மாய மந்திரமாய்
விளங்குகின்ற ஸ்மயமான முகார விந்தமும்
இசைந்து கனிந்து த்ராஷாத்வயம் போல் வகுப்புண்ட கமுக விகாசமும்
அதிருசிர பாவ கர்ப்பமானதொரு வார்த்தை சொல்லத் தொடங்கித் துடிப்பது போல் விளங்குகின்ற திருப் பவளங்களும்
அபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி வழிகின்ற அவ்யக்த மதுர மந்த ஹாஸ விலாசமும்
ஸ்படிகமய முகர மண்டலங்கள் போல் தள தள வென்ற திவ்ய கபோலங்களும்
கந கநக மகர குண்டல த்வயத்தால் தழைந்து வளர்ந்து படிந்து வடிவிட்டு சுருண்டு நீண்டு தோள் அளவும் தொங்குகின்ற கர்ண பாசங்களும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமான கோலா நீள் கொடி மூக்கின் அழகும்
மிதோபத்த ஸ்பர்த ஸ்புரித சபரி த்வந்த்வ வல்லிதங்களாகப் புடை படர்ந்து மிளிர்ந்து நீண்ட தன தாமரைக் கண்களும்
குணோத்கர்ஷ குண்டிலதமான திருச் சார்ங்கம் போலே வளைந்த திருப் புருவ வட்டங்களும்
அஷ்டமீ சந்த்ர அம்ருத ப்ரவாஹங்கள் கற்பகக் கொடியடியில் பெருகி வந்து தேங்கினால் போலே திரு நுதல் மேல் இலங்குகின்ற
நாசிகா மூல த்ருத ஸ்ரீ ராமானுஜ தீவ்ய திவ்ய ஊர்த்வ புண்ட்ர விசேஷமும்
அதன் நடுவில் உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேக லஷ்மீ விஹார நிஷிப்த பாத கமல லாஷா பங்கம் போல் சிவந்து படிந்து விளங்குகின்ற ஸ்ரீ சூர்ண ரேகையும்
உயர்ந்து மலர்ந்த திரு முடியும்
வளர்ந்து மடிந்து வ்யக்த அவ்யக்தமாய் விளங்குகின்ற திருக் குழல் ஒழுங்கும் -சுற்றிச் சுழற்றிக் குழைத்திட்டு முடித்துத் தொங்கவிட்ட சிகா பந்தமும்
பின் எடுத்த பிடரி அழகும்
திருவனந்தாழ்வான் பின் படம் போலே நடுப் பதிந்து விசாலமாய் நெரித்திட்ட திரு முதுகும்
வலவருகில் முன்னாட்டித் தாங்கியிட்ட த்ரிதண்டாக்ரமும்
சீரியதோர் நிதி போலே திரு முன்பே நோக்கிக் கொண்டிட்டு வைத்த திருவடி நிலைகளுமாய்
இப்போது தேவரீர் திரு மஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் அழகியது
ஏதேனும் சிந்தை மருளோ
ஜெகன் மோஹன மந்த்ர ப்ரபாவமோ
சகல ரஸ குளிகா விலாசமோ
சர்வ போக சிந்தாமணி பிரகாசமோ
அகில ஜகத் ஸூக்ருத விபாகமோ
நிகில பல கல்பலதா பிரசரமோ
ஸமஸ்த சம்பத் சாம்ராஜ்ய வேஷமோ
சர்வ மங்கள சந்தா ப்ரசவமோ
அகில ஜெகஜ் ஜீவன மூலமோ
அதுல ஆனந்த கந்த அவதாரமோ
சகல கலா ரஹஸ்ய சர்வஸ்வமோ
சர்வேஸ்வர ஆபத் தனமோ
ஈது எல்லாம் திரண்டு எழுந்து கொண்டதோர் வடிவமோ
இதுவும் அன்று அப்ரமேய தேஜஸோ
நாங்கள் ஏது ஓன்று அறியா இவ்வழகுடன் தேவரீர் ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
யதி ஸார்வ பவ்மனே
திருமஞ்சனம் கண்டருளவே ஜய விஜயீ பவ –

———————————–

இரண்டாவது திருமஞ்சனக் கட்டியம்

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்டத்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –

போதைச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரேற வொட்டிச் சிறந்தடியேன்
ஏதத்தை மாற்றும் எதிராசனார் தம் இனிமை தரும்
பாதக் கமலங்கள் வாழியரோ பாதக் கமலங்கள் வாழியரோ–

பற்பம் எனத் திகழ் பைங்கழலும் தம் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கு அழகும்
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா வழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும்
காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவு அழகு என் இதயத்து உளதால்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே —

தேவரீருடைய திருவடித்த தாமரைகளின் போக்கிய அதிசயத்துக்கு ஒரு போலியாக கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூம்ருஷ்ட நாள ரவிகர விகசிதமான தோர் செந்தாமரைப் பூவை
அதனுடைய கர்வ சர்வஸ்வ நிர்வாபரண பூர்வகமாக திருவடிகளின் கீழ் அமுக்கி அதன் தலை மேல் வெற்றியுடன் வீற்று இருக்கும் இருப்பின் அழகும்
பங்கஜ ரஜஸ்ஸூம் பாதாருந்துதமாம்படி சேடீ ஜன சர்ச்சா ஸஹ ஸுகுமார்ய சாலிநிகளான பிராட்டிமாரும் பிடிக்கக் கூசும் படி புஷப ஹாஸ ஸூ குமாரதரரான
பெரிய பெருமாளுக்கும் மெத்தென்ற பஞ்ச சயனமாய்-அத்யந்த ஸூகுமாரரான தேவரீர் தமக்கு ஆசனமாய்க் கொண்டு தொண்டு பூண்ட புண்டரீகத்துக்கு
ஸ்வ தாஸ்யார்ஹ சாரஸ்யாதிகளை யூட்டுக்கைக்குத் ததாஸ்யாந்தரத்தில் சொருகிவிட்டு வைத்தால் போலே மறைத்திட்ட இடது திருவடிகளும்-
சம்சரண தவ தஹன தந்தஹ்யமான சகல ஜகதவநபர சந்தத சிந்தா ஸாமக்ராந்தியாலே நிப்ருததயா பணிபதி சயன சயானரான பெரிய பெருமாளுடைய
யோக நித்ரா முத்ர அனுசாரியாக இடது தொடையின் மேல் வளர்த்திக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்குக் காட்டியிட்ட வலத்திருவடிகளும்
பர ப்ரஹ்ம பூத பர புருஷ விஷயக சங்க காமத் யுத்தீபகரான மன்னிய சீர் மாறன் என்னும் மாறனுக்கு தேவரீருடைய பதசாசிஜ வியாஜேன
குஸூமாசர ஸஹிதமாக அமைத்து வைத்த அம்பறாத் துணிகள் போலே இணைத்து வைத்த கணுக் கால்களும்
கீழ் நோக்கிக் கிளர்கின்ற சுடர்ச் சோதி வெள்ளங்கள் ஆசன அபிகத்தால் மறியுண்ட கழித்தால் போல் இரண்டுருவம் திரண்டு உருண்டு மடியுண்ட முழம் தாள்களும்
கந்தளித கதளீ காண்ட கரிகர கரபங்களை வென்று அடி பெருத்து நுனி சிறுத்து மத மதவென்று மாம்ச லங்களாய் விளங்குகின்ற திருத் தொடைகளும்
சடப் ரமதன சமதன ஸார்வ பவ்ம ஜைத்ரயாத்ரா ரதம் போன்ற தேவரீருடைய திரு மேனிக்கு கீழ் உருண்டு வரும் இரண்டு சக்ர மண்டலங்கள் போன்ற ப்ருது நிதம்ப பிம்பங்களும்
திருவரையில் மடி தொடங்கிக் கணைக் கால்கள் நடுவளவும் உள்ளுள்ள வடிவு அழகுக்கு அத்யந்த பிரகாசகமாய் பொருத்தமுடன் தரித்து இருந்த கமநீய காஷாயமும்
இடவருகில் தொடையடியில் தொங்குகின்ற தலைப்புடனே நடுக்கோத்து மடித்துடுத்த சர்வோத்தர உத்தரீயமும்
சந்த்யா ரஞ்சிதா சாரதாப்ரத்தில் தனித்து எழுந்ததோர் கொடி மின்னல் நிலை நின்று வளர்ந்தால் போல் ஆஜங்கம் தழைத்து உடுத்து
அரைச் சிவந்த ஆடையின் மேல் வளைந்து வந்து நிகு நிகு என்ற பொன்னரை நாண் பூண்ட அழகும்
பகவத அனுபவ ரஸ விவசருடைய அபிநிவேச பாச பரிப்ராமித மதி மந்தார மா மத்யமான ஸுந்தர்ய துக்த சிந்துவான சுற்றோரம் திரைந்து எழுந்து
நடுக்குழித்திட்ட சுழி போல் ஸூ ந்தரமாம் உந்தி மலரும்
விநயமுடன் வீசுகின்ற வெட்டி வேர் விசிறிகளால் அத்யந்த குமுகுமித சனைச்சன ப்ரசரன் மந்த கந்தவஹ விஹரண விசேஷங்களாலே தேவரீருடைய
திவ்ய லாவண்ய தரங்கிணீ பார்ஸ்வ பாகங்களில் இரண்டு அலை வரிசை பரம்பினால் போல் இரு பக்கமும் திகழ்கின்ற திருவலிகளும்
மாம் ஏகம் என்பதை அபிநயித்துக் காட்டுவது போல் நெஞ்சுக்கு நேராகக் கொஞ்சம் சாய்த்து அஞ்ஜலித்த திருக்கைகளும்
தங்க வளை மேல் தங்கித் தொங்குகின்ற சங்கிலிகளோடு இணக்கமுற்ற கணுக் கைகளும்
அபிநவதரதர விகஸ்வர சரஜிஜவரே முகுள தளத் தளாயமான நிஜாஞ்ஜலி சிகாங்குளீ சோபையை நிஜ ஹ்ருதய ஜலஜததர ரசிக
ஹார்த்த ஜனார்த்தனனுக்கு அவனமித்துக் காட்டுகையால் முறுக்கியிட்ட முன் கைகளும்
அகடிதகடநா சமர்த்த சதுர்புஜ புஜதுர்ப்பர விபூதி த்வய பர பரணார்த்தமாகக் கனக மய கிரி வரங்கள் இரண்டை வெளிறறக் கழித்துப் புகர் எழக்கடைத்து
தூணாக்கி மடுத்தால் போல் இரண்டட்டத்திலும் திரள் திரண்டு நீண்டு த்ருட தரங்களுமாய் சிரீஷ குஸூம ஸுகுமார்யம் திரண்டு இரண்டு வடிவு கொண்டால் போல்
அத்யந்த ம்ருதுளங்களுமாய் சாஷாத் புஜகபதி போகாத்மகத்வ ப்ரத்யாயகங்களுமாய் விளங்குகின்ற பாஹு தண்டங்களும்-
ஹ்ருதயாந்தர நிஹித ப்ரஹ்ம புரகோபுர கோபநாத்தமிட்ட ஹாடகமய கவாடம் போல் பள பள என்றகன்று காட வ்யூடமாய்
வயபரிணாம ஸூசநார்த்தமாககே கொஞ்சம் தளர்ந்தது போல் விளங்குகின்ற விசால விமல வக்ஷஸ் ஸ்தலமும்
அழகு கொண்டாடுகிற அம்மார்பின் அழகிலே ஆழங்கால் பட்டு மயங்கி விழுகின்ற மநோ நயன யுகளங்கள் மூன்றுக்கும் கைப்பிடி கொடுத்து
அவற்றைத் தோள் அழகிலே துவக்குகைக்குத் தொங்கவிட்ட அவலம்ப ஸூத்ர த்ரயம் போன்ற ஸுதாமாநீ ஸ்வர்ண ஸுவர்ண யஞ்ஞ ஸூத்ரமும்
சேஸ்வர விபூதி த்வயத்துக்கும் நிழல் கொடுத்து வளர்ந்து விசாலங்களுமாய் கிரிவர சிகர ஸூக ப்ரதிஷ்டித்த ஸிம்ஹஸ் கந்த
சந்திபந்த சமஸ்தான பத்த ஸ்பர்சங்களுமாய்ச் சரிந்து உயர்ந்து விளங்குகின்ற திருத் தோள்களும்
கண்டருத்த பிரணவ அக்ஷரங்கள் கழுத்துள்ளே நெருக்குண்டு விம்மிப் புறம்பு பொசித்தால் போல் ரேகாத்ரய விபக்தாங்கமாய்
க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிமமாய் விளங்குகின்ற திருகி கழுத்தின் அழகும்
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தது என்கிறபடியே சாரத சர்வரீ பர்வாக்ர சமய சமேதித சகல கலா பரிபூர்ண சர்வ ஆஹ்லாத கரமான
மறுக்கழற்றின சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையும் ஸஹஜகாந்தி சைத்திய மார்த்வ ஸுராபாதிகளால்
அதிகரித்துக் கிட்டினாரை மையல் ஏற்றி மயக்கும் மாய மந்திரமாய் விளங்குகின்ற ஸ்மயமான முகாரவிந்தமும்
நின்றவா நில்லா நெஞ்சு பிணிப்புண்ணும் படி கண்ணிக் கயிற்றுச் சுருள்கள் போலே சுருண்டு உருண்டு நீண்டு மநோ ஹரங்களுமாய்-முன் சில நாள்
சாத்திக் களைந்த கநகநக மகர குண்டல த்வயத்தை தளர்ந்து வளர்ந்து வடிவிட்ட வடிவு அழகால் கோள் சொல்லித் தரக் கடவதுகளுமாய்
மார்த்தவ அதிசயத்தாலே மெல்ல அசைந்து ஆடுவது போல் தோள் அளவும் தள தள வென்று தொங்குகின்ற திருச் செவிகளும்
இசைந்து கனிந்த த்ராஷாத்வயம் போல் நடுப்பதிந்து வகுப்புண்டு திரண்டு எழுந்த சுபுக விகாசமும்
ஸ்வாந்த ஸ்வாந்தர் நிரந்தர சிந்த்யமான அனந்த சயாநந்த சிரந்தநோதந்த சந்தான சாஷாத்கார சமுதஞ்சித ரோமாஞ்ச விசேஷங்களாலே
பரம புருஷ சம்ச்லேஷ ஹர்ஷாதிரேக ஸூசககங்களுமாய்-அவ்யக்த அங்குர ஸ்மஸ்ரு சமூஹதயா –யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண -என்கிற
நித்ய யுவத்வத்தைக் கோள் சொல்லித் தரக் கடவதுகளுமாய்-புகர் படைத்துப் பெருத்து விளங்குகின்ற தாலு மூலங்களும்
சகல விபுத சதா ஸ்வாத்யமான தேவரீருடைய வதன ஸூதா நிதி மண்டலாந்தரளத்திலே திரட்டியிட்ட அம்ருத ரஸ சாரங்கள் போல்
அத்யந்த போக்யங்களுமாய்ச் சிவந்து கனிந்த கோவைப் பழத்தையும் கடைந்து துண்டிட்ட பவளக் கொடியையும் பரிஹஸித்துச் சிரிப்பது போலே
மந்த ஸ்மித மநோ ஹரங்களுமாய் அதி ருசிர பாவ கர்ப்பமானதொரு வார்த்தை சொல்லத் தொடங்கித் துடிப்பது போல் விளங்குகின்ற திருப் பவளங்களும்
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தாலே அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற அவ்யக்த மதுர மந்தஹாஸ விலாசமும்
ஸ்படி கமய கண்ட சைல க்ருதங்களான இரண்டு முகுர மண்டலங்களை மாசறக் கடைந்து தூளிட்டுத் துலக்கித்
துடைத்திணத்து வைத்தால் போல் தள தள வென்ற திவ்ய கபோலங்களும்-
எப்பாலும் பரந்துள்ள சகல ஜனங்களுக்கும் தங்களையே நோக்கினால் போலே அத்யந்த ரஞ்சகங்களுமாய் புடை பரந்து மிளிர்ந்து இலங்கு ஒளி சேர்
அரவிந்தம் போன்று நீண்டு விசாலங்களுமாய் சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற தாண் தாமரைக் கண்களும்
குண ஆரோபணம் கொண்டு வளைந்து நின்ற சார்ங்க வில்லை நிஜமான வடிவு அழகால் வென்று கொண்டு வளைந்து நின்ற திருப் புருவ வட்டங்களும்
தொங்குகின்ற செண்பகப் பூ போலே நுனி நிமிர்ந்து உயர்ந்து அடி குறுகி நீண்டு நளிகாயுகம் போலே ஏகாந்தர த்வய சோபிதமாய்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமாய் விளங்குகின்ற கோல நீள் கொடி மூக்கின் அழகும்
அம மூக்கின் அடியை விளாக்குலை கொண்டு விளங்குகின்ற ராமாநுஜாக்க்ய திவ்ய பீட சம்யுதமான திவ்ய ஊர்த்வ புண்ட்ர திலக பிரகாசமும்
அதன் இடையில் சகல விபூதி பட்டாபிஷேக சாம்ராஜ்ய லஷ்மியின் ஸ்வ இச்சா விஹார ரவி ஷிப்த பத கமல லாஷார சதாரா ரேகை போலச்
சிவந்து படிந்து விளங்குகின்ற ரக்த வர்ண ஸ்ரீ சூர்ண ரேகையும்
மலர்ந்து உயர்ந்த திரு முடியும்
வளர்ந்து மடிந்து வியக்த அவ்யக்தமாய் விளங்குகின்ற திருகி குழல் ஒழுங்கும்
சுற்றிச் சுழற்றிக் குளைத்திட்டு முடித்த சிகா பந்தமும்
பின்னெடுத்த பிடரி அழகும்
திருவனந்தாழ்வான் பின் படம் போல் நடுப் பதிந்து பரந்து நெறித்திட்ட திரு முதுகும்
வலவருகில் கை மேலும் மார்பிலுமாய் முன்னாட்டித் தாங்கியிட்ட த்ரிதண்டாக்ரமும்
சீரியதோர் நிதி போலே திரு முன்பே நோக்கி வைத்திட்ட பொன்னடியாம் செங்கமலப் போதுகளுமாய் தேவரீர் திருமஞ்சனம்
கண்டருள வீற்று இருக்கும் இவ் வழகு ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே யதி ஸார்வ பவ்மனே

————————————————————

ஸ்ரீ கடிகா சதகம் அம்மாள் -அருளிச் செய்த ஸ்ரீ யதிராஜ விஜய ஸ்லோகம் –

மாயாவி மோஹித ஸூரா நஸூரா நலாவீத்
யேநாஸ்யுத குஹநாஸமயைர் மநுஷ்யன்
சம்மோஹ யத்ஸூ புநரேஷூ ஸூ தர்சன அபி
தாநேவ ஜேதுமதுநா யதி சேகர அபூத்–1-

தேவர்களை அசுரர்கள் மாயா வித்யைகள் மூலம் குழப்ப அச்சிட்டுதான் தனது ஸூ தர்சனம் கொண்டு வீழ்த்தி அருளினான் –
இதே போலே மாயாவாதங்கள் கொண்டு பல மதங்கள் குழப்பிய போது அந்த ஸ்ரீ ஸூ தர்சனமே ஸ்ரீ யதிராஜராக ஆவிர்பவித்தது –

த்ரிதண்ட காஷாய சிக உபவீதை
ப்ரஸாதயன் பாரமஹம்ஸ்ய லஷ்மீம்
வைகுண்டம் ஆரோபயிதம் முமுஷூன்
சோபாந காரீ யதிராஜ ஏஷ–2

ஸ்ரீ யதிராஜர் -த்ரிதண்டம் -காஷாயம் -யஞ்ஜோ பவீதம் -கமநீய சிகா -வேஷத்துடன் மிகவும் அழகாக வீற்று இருந்து
முமுஷுக்களுக்கு மோக்ஷம் செல்ல படிக்கட்டை அமைத்து அருளுகிறார் –

ச ஏஷ சாஷாத் க்ருத க்ருஷ்ணதத்தாம்
நிஷேப வித்யாம் நிரவத்ய பூமா
கத்யாத்மனா க்ருஷ்ண ஜநோப போக்யம்
சம்வாத ரூபாம் விததே தயாளு — 33-

ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகம் படியே அவனை நேராக சாஷாத்காரித்து –பெரிய பிராட்டி முன்னிலையாக -நம் பெருமாள் இடம் சரணாகதி
அனுஷ்ட்டித்து -தம்முடைய சம்வாதத்தை நாம் உஜ்ஜீவிக்கவே கத்ய த்ரயம் மூலம் வெளியிட்டு அருளிச் செய்தார் –

ப்ரமாணேஷ்வேஷ வேதாந்த ப்ரமேயேஷூ பர புமான்
ப்ரமாத்ருஷூ யதீந்த்ர அயம் ந த்வதீயம் அபேக்ஷதே–4-

பிரமாணங்களில் உபநிஷத்துக்களுக்கு நிகரானவை இல்லை / அவை மூலம் கூறப்படும் பொருள்களில் ஸ்ரீ மன் நாராயணனுக்கு நிகர் இல்லை
-இதே போன்று யதிகளில் எம்பெருமானாருக்கு நிகரானவர்கள் யாரும் இல்லையே –

கர்ம வ்யாஜ க்ருத அகிலாத்ம நிவஹ கிலேச அவபோதஸ் புரத்
பச்சாத்தாப க்ருபா விமோசித ஜகத் ஜென்மாதி லீலாதரம்
போகைக பிரணவம் விதாஸ்யதி பரம் ப்ரஹ்மாபி தாத்தாபய
பூதேப்யோ யதிராஜ ஏஷ இதி மே சேதஸ்ய பூந் நிச்சய -5-

கர்மாதீனமாக ஸ்ருஷ்டித்து -உண்டியே உடையே உகந்து போகும் இம்மண்டலத்தோரின் இழவு கண்டு வருந்திய எம்பெருமான்
எம்பெருமாரின் திருவவதாரத்துக்கு பின்பே தானும் பிழைத்து தான் செய்து அருளிய லீலா வியாபாரமாக ஸ்ருஷ்டிக்கும் பலம் கிட்டிற்றே என்று மகிழ்ந்தான்

தேஹாஷாதி விலக்ஷண அணு ரஜதோ நித்ய அஹமர்த்த அமல
ஞான ஆனந்தமய அப்ய தன்மய இவ ப்ராப்யத்ய வித்யாவ்ருத
பஞ்ச கிலேச விபாக பாவக சிகாலீடஸ்ய தஸ்யாத்மன
நிர்வாணாய நிசர்க ஸுஹ்ருத நிதே நான்யா கதி த்வாம் விநா –6-

ஆத்மா தேஹ வியதிரிக்த -புலன்களின் வேறுபட்ட அணு ஸ்வரூப -ஞான ஆனந்தம் -ஸ்வரூபனாய் இருந்தாலும் துயரத்தில் ஆழ்ந்து வருந்த
காரேய் கருணை இராமானுச -அநந்ய கதியான அடியோங்களை -நீரே ரஷித்து அருள வேணும் –

சர்வஞ்ஜோ ந ந வேத தஸ்ய கருணராசே ரூபேஷா குத
ஸர்வேச கிம் அசவ் ந சஷ்யதி பரித்ராதும் ததாபி ப்ரபு
சர்வான் ரஷதி யத் கடாக்ஷ கணி காபேஷீ நராநுத்தரான்
சம்சார அம்பு நிதே ச ஏவ ஹி குரு சர்வோத்தரம் தைவதம் —7-

சர்வஞ்ஞான் -சர்வ சக்தன் -சர்வ காருண்யன் -சர்வ ரக்ஷகன் -ஸ்ரீ யதிராஜர் உடைய கருணை மிகுந்த கடாக்ஷம் கொண்டே
லோகத்தார் உஜ்ஜீவிக்க காத்து இருந்து அவரது மிக்க சீல குணங்களை பிரகாசித்து அருளுகிறார் அன்றோ –

த்ரிவர்க்கம் அவதீரயன் த்ரிவித சேதன அசேதன
பிரபஞ்ச மய கஞ்சுகே பகவதி ஸ்வயம் ஜ்யோதிஷி
நிவோசித தியாம் சதாம் நிகில மங்கலைகாஸ் பதம்
தமேவ கதயன் கதிம் யதி ப்ரீடித க்ரீடதி–8-

விஷயாந்தர ப்ராவண்யம் துறந்து -சேதன அசேதன அந்தர்யாமியாய் உள்ள ஜ்யோதிஸ் ஸ்வரூபமே -உயர்ந்த கதி
என்று எதிராஜர் உபதேசித்து அருள -சத்துக்களால் வணங்கப்பட்டு மிகவும் ஆனந்தத்துடன் எழுந்து அருளி உள்ளார் –

குதர்சனா நீதர தர்ச நாதி யதீந்த்ர குர்வான் நிஜ தர்சநேந
சம்யக் சுருதி நியாய கலா பதர்சீ ஸூ தர்சன அஸி ப்ரிய தர்சன த்வம்-9-

யதிராஜரே -உமது ஸ்ரீ ஸூ க்திகளால் புற சமய வாதிகள் பலன் அற்றவை -என்றும் -வேதாந்த சித்தாந்தத்தை -வெளிப்படுத்தி அருளி
வேதாந்தங்களும் மகிழ -அதனால் ஸ்வாமியும் மிகவும் இனிமையாகக் காட்சி கொடுத்து எழுந்து அருளி உள்ளார் –

காலே வர்ஷது வாஸவ ஷிதி பூஷோ ரஷந்து சம்யக் மஹீம்
சர்வே சந்து நிராமயாச்ச க்ருதின சத்வோத்தரா ப்ராணிந
புண்யா லோகம் இதம் புனாது பகவத் பக்தி சிரஸ்தயிநீ
மாலாவத் யதிசேகரஸ்ய விஹரத் வாஞ்ஞா ந்ருணம் மூர்த்தஸூ –10- –

நாட்டில் நல்ல மழை பொழியட்டும் -அரசர்கள் சிறந்தவர்களாக இருந்து நாட்டை ரக்ஷிக்கட்டும் -அனைத்து உயிர்களும் நோய் இன்றி வாழட்டும்
ஞானம் செழிக்கட்டும் -தூய்மையான பக்தி வளரட்டும் -உலகம் தூய்மை யாகட்டும் –
ஸ்ரீ யதிராஜர் உடைய உபதேசங்கள் மாலை போலே அனைவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டு உஜ்ஜீவனம் அடையட்டும் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கடிகா சதகம் அம்மாள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

May 4, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை
ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்த ச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள
பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிக்கிறார் –

—————————————————————–

1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் -ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும் ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை
அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப்பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ -பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரியபிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்யதம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள்
எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .
இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.
இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்குபோல,
உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,
முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,
பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,
தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ச்லோகத்தில், ஆதிகுருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

———————————-

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்
வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ச்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்த வர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில்சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.
அதற்கு, பிராட்டி, நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.
உடனே பகவான், பிராட்டியிடம், “நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.
இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து, பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

——————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ராவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே
ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –
குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூ த்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்யதம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனைமுதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற்கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய்விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனைமுதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

—————————-

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத்துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனைமுதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.
அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால் பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர். குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து, மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.
மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்துகொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபரயுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.
அவரோ,கண்திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.
மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்ததன் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது, ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?
ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” அதாவது, சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து, தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.
பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது, ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.
பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது . இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .
பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

————————————-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப்பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
“ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !’
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு, அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட, அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல, திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக
ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார். அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.
அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து, அவரை ஆசார்யராக வரித்து,அவரிடம்,மறைந்துபோன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள் ரஹஸ்யஅர்த்தங்கள்,ப்ரஹ்மஸுத்ரங்கள் எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.
ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
“கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.
திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .
ஸ்ரீ நம்மாழ்வார் அருள்செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.
தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————————-

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

———————————–

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –
லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம். \
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.
புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால், மணக்கால்நம்பி 4வது ராமர்.

——————————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
-விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
“யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

———————————————————–

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

——————————

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் -பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது . இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன். ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத்தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச்சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.
அதைப்போல , ” ச்ருதி “—உபநிஷத் நாயகி .இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான். வேத வாக்யங்களுக்கு ,
பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி, பொய் என்றும் சொல்லி ,அழுக்கை ஏற்றிவிட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ” மீமாம்சம் போன்ற வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,உண்மையான ரூப கல்யாண குணவிசேஷங்களை உடைய பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

———————————

11-உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ர வந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

திரு மார்பில் இலங்கிய முந்நூலினாலும் -அணிந்த ஈராறு திரு நாமங்களினாலும் –
முக்கோல் ஏந்திய திருக் கையினாலும் –மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானை
ஆவாஹநம் செய்திருக்கும் அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்–திரு முடியில் திரு குழல் கற்றையினாலும்
எழில் யுற்று விளங்குபவராய் -எல்லா உலகங்களின் நல் தவப் பயனின் உருவோ என்று
அதிசயிக்கக் கூடியவராக யதி ஸார்வ பவ்மரை ஸ்துதிக்கப் புகுகிறேன் -என்கிறார்

———————————–

12-பிரதயன் விமதேஷூ தீஷ்ண பாவம் பிரபு அசமத் பரி ரஷணே யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே

ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்திலும் –ஆஸ்ரித விரோதி நிரசனத்திலும் தீஷித்து இருப்பதில் பிரகாசமுள்ள எம்பெருமானின் பஞ்ச திவ்ய ஆயுதங்களின்
ஸ்வபாவத்தையே மாறுபடாமல் கொண்ட ஸ்ரீ யதிராஜரானவர் தம்மைச் சார்ந்த ஜனங்களின் உஜ்ஜீவனத்திலும் -பாஹ்ய குத்ருஷ்டிகளின்
நிரசனத்திலும் சமர்த்தராக விளங்கினார் –
அடையார் கமலத்து -33-பாசுரம் அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் –

—————-

13-சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய -13

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –
கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால்
யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் -பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-
பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-ஸ்ரீ பார்த்த சாரதியே தானே இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ
சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூ க்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

————————–

14- அபஹூஸ்ருத சம்பவம் ஸ்ருதீ நாம் ஜரதீ நாம் அயதாயத பிரசாரம்
வி நிவர்த்தயிதம் யதி ஈஸ்வர உக்தி விததே தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-14

ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -அல்ப ஞானம் படைத்த குத்ருஷ்டிகளால் உண்மைக்கு புறம்பான
அர்த்தங்களை பிரசாரம் பண்ணுவதால்
வேதங்களுக்கு ஏற்பட்ட இளைப்பைப் போக்கி -அவைகளை மறுக்க ஒண்ணாத நியாயங்களால்
நன்றாக ரக்ஷிக்கப் பட்டவைகளாய் ஆக்கி யுள்ளன
உபநிஷத் ஆகிற கிளியை மீண்டும் ரஷித்து அருளினார் –வேதாந்த விழுப் பொருளை சித்தாந்தப் படுத்தி அருளினார் என்றபடி –

——————————-

15-அமுநா தபந அதிசாயி பூம் நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி

தேஜோவானான ஸூ ரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

———————————

16-அலூந பஷச்ய யதி ஷமாப்ருத விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்
யத் உத்பாவ ஸூ த்த ஸூ வ்ருத்த சீ தளா பவந்தி முத்தாவளி பூஷணம் புவ –

புறச் சமயிகளால் கண்டிக்க இயலாத எம்பெருமானார் தர்சனம் -ஆகிய பரதத்வம் —
ஸமஸ்த கல்யாண குணங்களோடும் -திவ்ய மங்கள விக்ரகத்துடன்
வெட்டிக் களையப் படாத இறகுகளை யுடைய பர்வதம் போலே-(மைனாக பர்வதம் விருத்தாந்தம் -சிறகுகள் உண்டே பர்வதங்களுக்கு )
ஸூ ரஷிதமாக விளங்குகிறது
இந்த சம்பிரதாயஸ் தர்களான மஹான்கள் சத்துக்களையும் குளிர்ந்த இதயம் படைத்தவர்களாயும் பூமிக்கே அணிகலன்களாகயும் யுள்ளனர் –

————————

17-அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம் யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –

சந்திரன் உடன் ஒப்புமை –சந்திரன் களங்கம் உள்ளவன் / உபராகத்துக்கு க்ரஹணத்துக்கு உட் பட்டவன் –
ஸ்வாமி இடத்திலோ தோஷத்துக்கு பிரசக்தியே இல்லையே
சகல வித்யைகளையும் பூர்ணமாக அதிகரித்து -தோஷம் அற்று -மகான்கள் மனசில் சதா பிரகாசித்து -ராக துவேஷாதிகளுக்கு புறம்பாயும்
உபராகத்துக்கு உட் படாத யதிராஜ சந்திரனை உபாசிக்கிறேன் –

————————————

18-அபிகம்ய சம்யகநகா ஸூ மேத்ஸ யதி சக்ரவர்த்தி பத பத்ம பத்த நம்
ஹரி பக்த தாஸ்ய ரசிகா பரஸ்பரம் க்ரய விக்ரயார்ஹ தசயா சமிந்ததே

அவதார பிரயோஜனத்தை அருளிச் செய்கிறார் -முன்பு மந்த மதிகளாயும் நல் நடத்தை இல்லாதவர்களாயும் இருந்தவர்கள்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே மன்னரும் ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆளாயினரே-என்கிறபடியே
நல்ல புத்தி யுடையவர்களாய் குற்றம் அற்றவர்களாய்
எம்பெருமானார் திருவடிகள் ஆகிற திவ்ய நகரத்தை அடைந்து பாகவத பண்புகளில் நிலை பெற்று
ஒருவருக்கு ஒருவர் விற்கவும் வாங்கவுமாம் படி விளங்குகின்றனர்

——————————————–

19-புருஷ அதிவாத பரிவாத பைசு ந ப்ரப்ருதி ப்ரபூத பத நீய பங்கி லா
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா

அப்படி உலகோர் திருந்தியமைக்கு தாமே த்ருவ்ஷ்டாந்தம் -முன்பு அடியேனுடைய வாக்கு கொடுமை நிறைந்து –
பிறரை பழித்தும் கோள் சொல்லியும்
அதிவாதம் பண்ணியும் -இதனால் தூய்மை அற்றதாய் சேறு போலே கலக்கம் உற்று இருந்தது –
ஸ்வாமியைப் பற்றியபின் -ஸ்வாமியுடைய பிரபாவம்
ஆகிற தேத்தாம் கொட்டை யால் தெரிவிக்கப்பட்டு அனைவராலும் ருசிக்கும் படி அழகாய் அமைந்ததே –

———————————

20-அனுகல்ப பூத முரபித் பதம் சதாம் அஜஹத் த்ரிவர்க்கம் அபவர்க்க வைபவம்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔ ஷதம் சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –

இப்படி தமக்கு வாழ்ச்சி அளித்த எம்பெருமானார் திருவடிகளில் -அத்திருவடிகளின் பிரபாவத்தை வாயாறப் பேசி சரணம் புகுகிறார் –
சத்துக்களுக்கு இத்திருவடிகள் பகவத் சரணாரவிந்தமும் இதற்கு அடுத்த படியே என்னும்படி பரம ப்ராப்யமாய் இருக்கும் —
பெரு நிலம் அளிக்கும் -எல்லாம் தந்திடும் -நிலையில்லா என் பாவி நெஞ்சத்தை தன்னிடத்தில் நிலை நிறுத்த மருந்தாயும் இருக்கும் –
இப்படிப் பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை புகலாகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –
சோமாசி ஆண்டான் திருநாராயண பெருமாள் செல்லப் பிள்ளைக்கு பாட -எம்பெருமான் ஆட -உடையவர் சேவித்து களிப்பார்-மோக்ஷ சாம்ராஜ்யம்
நம் இராமானுசன் இட்ட வழக்காய் இருக்கும் -உமது ஸூக்ருத பலம் நீர் பாட நீர் களிப்புறம் படி நான் ஆடிக் காட்டுகிறேன் –
உடையவர் தந்தால் உமக்கு பேறு உண்டு -என்றதும் அன்று முதல் தேவு மற்று அறியேன் என்று அதி ப்ரவணராய்
கைங்கர்யத்தில் ஈடுபட்டு பாவ பந்தத்துடன் -எம்பெருமானார் -என்பர் -பட்டார் நம்பெருமாள் என்று சொல்வது போலே –

———————————————

21-ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா நிகமாந்த நீதி ஜலதே தல ச்ப்ருச
பிரதிபாதயந்தி கதிம் ஆபவர்க்கிகீம் யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா –

இப்படி பெருமை வாய்ந்த யதிராஜ சரணாரவிந்தத்தை ஆஸ்ரயித்தவர்களுடைய பெருமையை அருளிச் செய்கிறார் –
அன்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப-என்றபடி ஸூ ஷ்ம அர்த்தங்களை தெரிந்து தெளிவாக உபதேசிப்பார்கள் அன்றோ –
இவர்களுடைய ஹூம் என்ற மூச்சுக் காற்றாலே பிரதிவாதிகள் அனைவரையும் அழிக்கக் கூடியவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் நிலை பெற்ற மனசை உடையவர்களாய் தாங்களே மோக்ஷ சாம்ராஜ்யம் அளிக்க வல்லவர்கள் –

——————————————-

22-மூலே நிவச்ய மஹதாம் நிகம த்ருமாணாம் முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந

மீண்டும் உடையவர் சரணம் போற்றுகிறார் –பரந்து கிடைக்கும் வேதமாகிய பெரிய மரத்தின் நிழலில்
கையில் முக்கோல் ஏந்தி அமர்ந்து வஞ்சனையுள்ள
குத்ருஷ்டிகளால் உண்டாகும் பயத்தை போக்கி அருளி -ஸ்ரீ ரெங்கநாதன் அடியார்கள் மணம் ஆகிற தடாகத்தில்
ராஜ ஹம்சம் போலே சஞ்சரிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு புகலாக வேண்டும் -என்கிறார் –

———————————————–

23-சத் மந்திர வித் ஷிபதி சம்யமி நாம் நரேந்திர -சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
விஷ்வக் ததம் விஷய லோப விஷம் நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவ நாபி –

எம்பெருமானாரை புகலாக பற்றி அவர் அனுக்ரஹத்தால் விஷய ப்ராவண்யன் அற்றவன் ஆனேன் –
சதாச்சார்ய உபதேச முகமாய் நலம் தரும் சொல்லான
திரு மந்த்ரார்த்தங்களை அளித்தும் யதிகளுக்கு ராஜாவாகவும்-நிரதிசய ப்ரபாவமும் யுடைய எம்பெருமானார் -சம்சாரம் ஆகிய விஷ பாம்பு மூலம்
நம்முள் பரவி சூழ்ந்து இருக்கும் விஷய ப்ராவண்யம் என்கிற விஷத்தை புட் கொடியனான எம்பெருமான் அனுக்ரஹம் கொண்டு போக்கடிக்கிறார் –
மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் பற்று விட்டறும் என்றபடி –

—————————————-

24-நாத ச ஏஷ யமி நாம் நக ரஸ்மி ஜாலை அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே வ்யாக்யாந கேளி ரசி கே ந கர அம்புஜேந –

எந்தன் மெய் வினை நோய் களைந்தான் என்றார் கீழ் -களைந்து நல் ஞானம் அளித்தனன் என்று போற்றுகிறார் இங்கு -யோகீந்த்ரரான எம்பெருமானார்
என்னுள்ளே மறைந்து –என்னைத் தீ மனம் கெடுத்து -மருவித் தொழும் மனமே தந்து -தம் திருக் கை தாமரைகளால் வியாக்கியான சைலிகளை
ரசித்துப் போற்றக் கூடிய எண் உள்ளத்திலே நல் ஞானம் ஆகிற சித்தரத்தை எழுதுகிறார் போலும் –

—————————————–

25-உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம் சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம் உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்

இனி திருப்பொடு எழில் ஞான முத்திரை வாழியே -என்கிறபடியே ஞான பிரதராய் எழுந்து அருளி யுள்ள யதிராஜரை சாஷாத் கரித்து மேலும் அனுபவித்து மகிழ்கிறார்
உபநிஷத்துக்குள் மறைந்துள்ள பொருள்களை மந்த மதிகளான நம்முடைய மனசில் பதிய வைப்பதற்காக -உயர்ந்து இருப்பதும் -அலர்ந்த தாமரை மலர் போல்
மனத்துக்கு இனியதாய் நமக்கு ப்ராப்தமான உபதேச முத்திரை யுடைய திருக் கைகளை சேவித்து களிக்கிறோம்-

————————————————–

26-ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம் உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம் ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி –

ஞான முத்திரையை கீழ் இரண்டு ஸ்லோகங்களில் அனுபவித்து இனி ஸ்வாமி திருவாய் மலர்ந்து அருளும் ஸ்ரீ வாக்ய சைலிகளை போற்றுகிறார் –
எம்பெருமானாருடைய உபதேச பரம்பரைகள் வேதாந்த வாக்யங்களுக்கு மகிழ்ச்சி யுண்டு பண்ணுபவையாயும் -பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும்
சம்சார பேறு நோய்க்கு சமனம் பண்ணும் பத்யங்களாய் மனதில் கொண்டு போற்றும்படியான நிதிகளாய் விளங்குகின்றன –

——————————————————

27-சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான் தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம் ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா –

உபதேச வாக்ய ச்ரேணியில் ஈடுபட்டவர் மேலே ஸ்வாமி திங்களும் ஆதித்யனுக்கும் எழுந்தால் போலே விளங்குவதை கொண்டாடுகிறார் —
பாபங்களை எரித்து நம்மை தூய்மை படுத்தும் ப்ரபாவத்தால் அக்னியாய் இருப்பாராயும் -இனிய குளிர்ந்த ஸ்வ பாவத்தால் -அஞ்ஞானமான இருளை போக்கடிப்பதில்
நியதமான மஹிமையுடைய சந்திரனாக இருப்பவரும் -ஆத்யாத்மிகாதி தாபங்களின் ஸம்பந்தத்தை ஒழிப்பதில் சூர்யன் போன்றவரும்
இப்படி ஒருங்கே சேர்ந்துள்ள மூன்று தேஜஸ்களை யுடைய எம்பெருமானாருக்கு பல்லாண்டு -என்று மங்களாசாசனம் செய்து அருளுகிறார் –

———————————-

28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூ ர்ய நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர –

ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் -மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் -குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –
எல்லா வித்யைகள் ஆகிற நதிகளுக்கு தோற்றுவாயான உயர்ந்த மலை போன்றவரும் -சம்சாரம் ஆகிற நெடு வழியில் தொடர்ந்து நடந்து வந்த
களைப்பை போக்கும் நிழல் தரும் மரம் போன்றவரும் -எல்லா குத்ருஷ்டிகளின் பிரமமாகிற இருளை போக்கடிக்கும் பால சூர்யன் போன்றவரும் –
வேதமாகிய கடல் நீர் களித்து பொங்குவதற்கு முழு நிலவு போல் இருப்பவராக யதிராஜருக்கு பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

————————————————

29-முனி பஹூ மத சாரா முக்தி நிஸ்ரேணிகா இயம் சஹ்ருதய ஹ்ருதயா நாம் சாச்வதீ திஷ்ட ஸித்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ரச்ய ஸூ க்தி பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம்

எம்பெருமானாரின் சகல வித்யா பாரங்கத்தைப் பேசினவர்-மேலே ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகள் தமக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறார் –
பராங்குச பரகால நாத யாமுன முனிவர்களால் அருளப்பட்ட சாரமான அர்த்தங்களை உட் கொண்டவைகளும்-பரமபதத்துக்கு படிக்கட்டு போன்றதும்
சத்துக்களுடைய மனசில் நித்தியமான ஆனந்தம் பொங்கச் செய்பவைகளும்-ப்ரதிபஷிகளால் உண்டாகும் துக்கத்தை போக்குபவைகளும் -அனுபவிக்க
பரம கம்பீரமாய் இருப்பவைகளுமான ஸ்வாமியுடைய ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூ க்திகள் அடியேனுக்கு நன்றாக விளங்க வேண்டும் படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –

——————————————————–

30-பவ மரு பரிகிந்த ஸ்ப்பீத பா நீய சிந்து துரித ரஹித ஜிஹ்வா துக்க குல்யா சகுல்யா
சுருதி நயன சநாபி சோபதே லஷ்மண உக்தி நரக மதன சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந –

ஸ்வாமியின் ஸ்ரீ ஸூ கைதிகளின் பெருமைகளை மேலும் பேசி ப்ரீதர் ஆகிறார் -வேதாந்தங்களை தெளிவாக பார்த்து அறியும் கண்களாக இருப்பவைகள்-
சம்சாரமாகிற பாலைவனத்தில் அலைந்து மிகவும் களைத்தவர்களுக்கு-தாப ஹரமாக -பருக இனிதான தீர்த்தமுள்ள நதி போன்றவைகளும்
பாபம் அற்ற மஹான்களுக்கு பால் போலே நாவுக்கு இனியவையாயும் -நரகாசுரனை முடித்த எம்பெருமானுடைய குண அனுபவத்தை
ஆனந்தவாஹமாக செய்வதுமாக விளங்குகின்றன -எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியை ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகளிலே பரக்க
அருளிச் செய்கையாலே -இவை ஆனந்த ஜனகமான நாடி விஷயத்தை தட்டுமைவாய இருக்குமே –

—————————————-

31-ஹரிபத மகரந்த ச்யந்தின சம்ஸ்ரிதா நாம் அனுகத பஹூ சாகா தாபம் உன்மூல யந்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ர பிரபன்னா கதக ஜன மநீஷா கல்ப நா கல்ப வ்ருஷா-

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் -தன்னை கிட்டினவர்களை பகவத் சரணாரவிந்தங்கள் -சர்வ பாபங்களையும் போக்கி தேனே பாலே கன்னலே அமுதே என்று
மிகவும் போக்யங்களாயும் இருக்குமா போலே சகல வேதங்களையும் அனுசரித்து சமன்வயப்படுத்தி அவதரித்த ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளை அப்யசிப்பவர்களை
சகல பாபங்களையும் போக்குபவையுமான அர்த்தங்களைச் சுரப்பதால் உபபாதனம் பண்ணுகிறவர்களுக்கு கற்பக வ்ருக்ஷத்தை போலே தாபங்களைப் போக்கடிக்கும் –

—————————————————

32-நாநா பூதை ஜகதி சமயை நர்ம லீலாம் விதித்சோ அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ ஆதிம வ்யூஹ பேதே
விச்வம் த்ராதும் விஷய நியதம் வ்யஞ்ஜிதா அனுக்ரஹ சந் விஷ்வக் சேன யதிபதி அபூத் வேத்ர சார த்ரிதண்ட

எம்பெருமானார் ஸ்ரீ ஸூ க்திகள் இனியவை -மஹா உபசாரம் செய்பவை என்றார் கீழ் -எம்பெருமானார் சேனையர் கோன் அவதாரமாக வந்து பிறந்து
மஹா உபகாரத்தை செய்தார் என்கிறார் -பல மதங்களை ஸ்ருஷ்டித்து பரிஹாஸமான தொரு விளையாட்டை விளையாடுவதாக வ்யூஹ மூர்த்தியான
வாஸூ தேவன் கள்ள வேடம் கொண்டு ஒருப்பட்ட போது விஷய ப்ரவணராய் இருக்கிற சம்சாரிகள் இந்த மதங்களைப் பற்றி நாசம் அடையாக கூடாது என்று
கிருபையால் சேனை முதலியாரே எம்பெருமானாராக திருவவதரித்தார் -அவர் கை பிரம்பு செங்கோல் த்ரிதண்டம் ஆயிற்று –
சாது பரித்ராணத்துக்காகவே ஸ்வாமி அவதாரம் -திருவனந்த ஆழ்வான் -எம்பெருமான் -சேனை முதலியார்
-பஞ்ச திவ்ய ஆயுதங்கள் திருவவதாரமாகவே ஸ்வாமி போற்றப்படுகிறார் –

————————————-

33-லஷ்யம் புத்தே ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம் சுத்த ஆஸ்வதம் கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை லஷ்மீ காந்த ஸ்படிக முகுர லஷ்மணர்ய உபதேச –

இப்படி திருவவதரித்து அருளிய எம்பெருமானாருடைய உபதேசங்கள் பெருமையை உபபாதிக்கிறார் -தெளியச் சொல்லப் பட்டவை –
புத்தியில் எளிதாக படியும்படி யுள்ளவை -அப்படிப் படிந்தவர்க்கு மேலும் மேலும் வாசிக்கவும் சொல்ல நாவு துடிக்கும் படியும் உள்ளவை –
வாசிப்பவனுக்கு ஆனந்தம் உண்டாக்குபவை -கேட்பவனுக்கு பரம ஒளஷதமாய் இருப்பவை -இன்பம் விளைவிப்பவை -சர்வேஸ்வரனை கண்ணாடி போலே காட்டித் தருமவை –
இத்தன்மைகள் சார்ந்த எம்பெருமானாரது உபதேச கிரந்தங்கள் -கடலில் எளிதில் கண்டு எடுக்கக் கூடியவைகளும்-இப்படி சில –
காணக் கூடாதவை -ஆழ்ந்து நோக்கியே அறியத் தக்கவை -இப்படி சில தாத்பர்யங்களான ரத்னங்கள் நிரம்பிய கடல் போல் விளங்குகின்றன –

————————————————–

34-ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி மதீம் யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்

எம்பெருமானார் தர்சனம் என்ற மாசற்ற தனத்தைப் பற்றி அதனால் பெருமை யுற்றவர்கள் -யானைகள் கட்டி வாழ்தல் -ஆகிற பெரும் ஐஸ்வர்யத்தை பெற
நேர்ந்தாலும் அந்த ஐஸ்வர்யத்தை சிறிது அளவும் மதிக்க மாட்டார்கள் -த்ருணீக்ருத விரிஞ்சாதி –முக்தகம் ஸ்லோகம் அனுசந்தேயம் –

————————

35-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன் நிகம விமர்ச கேளி ரசிகை நிப்ருதை வித்ருத
குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட நயா ரடதி திசா முகேஷு யதிராஜ யச படஹ-

ப்ரபாவத்தை சமத்காரமாக அருளிச் செய்கிறார் -யதிராஜர் யசஸ் ஆகிற படஹம்-பறை -போன்ற வாத்ய விசேஷம் -வேதாந்த விசாரம் ஆகிற விளையாட்டில் ரசிகர்களால் –
பொருள் செறிந்த திவ்ய ஸூ க்திகள் ஆகிற தண்டத்தால் தட்டப்பட்டு ஸ்ரீ ரெங்க வாசிகளான ரசிகர்களை தாமாகவே களி நடம் புரியச் செய்து ஒலிக்கிறது –
ஸ்ரீ ரெங்க வாசம் விரும்புவர் நாட்டியகாரர் என்று கொண்டு -நாட்டியம் அன்றாட வாழ்வு -பறை ராமானுஜர் புகழ் -வேத விற்பன்னர் பறை அடிப்பவர்கள்
ஸ்ரீ ரெங்க நாதனது திருக் கல்யாண குணங்கள் அந்த பறையில் கட்டப் பட்ட கயிறுகள் -ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள் பறையை அடிக்கும் குச்சி –
இப்படிப் பட்ட ஸ்ரீ ரெங்க வாழ்வே அநந்ய பிரயோஜனர் மகிழ்ந்து இருக்கும் படி -அந்த பறை ஓசை திக்கு எட்டும் முழங்கு கின்றதே

—————————————

36-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ
ஷரந்தி அம்ருதம் அஷரம் யதி புரந்தரச்ய உக்தய சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சை ரந்த்ரிகா-

மிகவும் ப்ராசீனமான வைதிக தரிசனத்தை உபபாதிக்கும் யதீந்திரருடைய திவ்ய ஸூ க்திகள் -வேதத்துக்கு புறம்பான -மிகவும் பிற்பட்ட காலத்தில் உண்டான
குமதிகளுடைய மதங்களை நசிக்கப் பண்ணியும் -மாயாவாதம் ஆகிற விஷ அக்னியால் தப்பிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவாதுவாய் இருந்து கொண்டும் -வேத மாதின்
அளகபாரமான உபநிஷத்துக்களை சிக்கிவிடுத்து அழகாகப் பண்ணும் சைரந்திரிகை யாகை யாகப் பணி செய்தும் நித்தியமான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கின்றன –

————————————————–

37-ஸூ தா அசன ஸூ துர்க்ரஹ சுருதி சமஷ்டி முஷ்டிந்த்ய கதா ஆஹவம் அசௌ கதான் கபட சௌகதான் கண்டயன்
முனி மனஸி லஷ்மண முதம் உதஞ்ஜயதி அஞ்ஜசா முகுந்த குண மௌக்திக ப்ரகர சுக்திபி ஸூக்திபி

ஸ்ரீ ஸூ க்தி பிரபாவத்தை -மேலும் அனுபவிக்கிறார் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் பகவான் என்று ஸ்தாபித்து -பகவத் குணங்களான முத்துக்களுக்கு இவை
முத்துச் சிப்பி போல் உள்ளன -அமுதம் உண்ணும் தேவதைகளுக்கும் நிலம் இல்லாத மறைகளின் உட் பொருளை கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டு
கொண்டுள்ள ஸ்வாமி கபடர்களைத் தம் ஸ்ரீ ஸூ க்திகளால் கண்டித்து நம் மனத்தில் ஆனந்தத்தை வளரச் செய்கிறார் –

——————————————————–

38-கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம் துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹ நா முகே நிபதத பரப்ரஹ்மண கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி

பரம் பொருளான புருஷோத்தமனைப் பல பெரிய ஆபத்துக்களின் நின்றும் ரக்ஷித்து அருளினவர் எம்பெருமானார் –
கடக்க அரிதான சைவம் என்ற சேற்றைக் கிடந்து சாங்கியருடைய அப்ரமாணிகமான மதமாகிற வலையில் இருந்து தப்பி –
த்ருஹிண -மதமாகிற -யோக மதம் -சுழலும் யந்திரத்தின்-மத்யத்தையும் தாண்டி குத்ருஷ்டிகளான குகை வாயிலில் விழுந்து கொண்டு இருந்த பர ப்ரஹ்மம்
எம்பெருமானைக் கை கொடுத்து ஆபத்தின் நின்றும் விடுவிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த இந்த லஷ்மண முனி விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கிறார் –

—————————————–

39-கணாத பரிபாடிபி கபில கல்பநா நாடகை குமாரில குபாஷிதை குரு நிபந்தன க்ரந்த்திபி
ததாகத கதா சதை தத் அநுசாரி ஜல்பை அபி பிரதாரிதம் ஜகத் பிரகுணிதம் யதீந்திர உக்திபி –

தாங்கள் கெட்டது போதாது என்று லோகத்தாரையும் தாங்கள் கல்பித்த அபார்த்தங்களாலே கெடுத்தவர்கள் கணாதர் கபிலர் குமரில பட்டர்
பிரபாகர் புத்தர் இவர்களை தம் ஸ்ரீ ஸூ க்திகளால் நிரசித்து லோகத்தார் க்ஷேமத்தை பெருக்கியவர் நம் ஸ்வாமி –

——————————

40-கதா கலஹ கௌதுக க்ரஹ க்ருஹீத கௌதச்குத ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன கும்ப சம்பூதய
ஜெயந்தி ஸூ திய யதி ஷிதிப்ருத் அந்திக உபாசநா பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி பாரதீ சம்பத

ஸ்வாமியுடைய சிஷ்ய அக்ரேஸர்களுடைய பெருமையை பரக்க உபபாதிக்கிறார் -இப்படி புறச் சமயிகள் வாதம் பண்ணுபவர்கள் எங்கே எங்கே என்று கடல் போலே பொங்கி வந்தாலும் -அகஸ்தியருக்கு ஒப்பான சிஷ்யர்கள் -கடல் நீர் வற்றும் படி ஆசமனம் பண்ணினது போலே -இக்கடலையும் உலர்த்த வல்லவர்கள் -ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் போல்வார்
அவர்களை அடக்க வல்லவர்கள் -எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்ய ப்ரபாவத்தால் இவர்கள் வித்யா பூர்ணர்களாய் -தத்வ ஞானிகளாய் -ஜய சீலர்களாய் -விளங்குகிறார்கள் –

———————————————————————

41-யதீஸ்வர சரஸ்வதீ ஸூ ரபித ஆசயா நாம் சதாம் வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலி நா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம் சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்

ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் -யதிராஜ திவ்ய ஸூக்திகளின் வாசனை கமழும் மனத்தினரான மஹான்களுடைய திருவடித் தாமரைகளை சென்னிக்கு அணியாகக் கொண்ட அடியேன் எம்பெருமானார் தரிசனத்துக்குப் புறம்பான மதங்களில் துர்மானத்தால் மனதை வைத்துள்ள புறச் சமயிகள் தலைகளை எண் இடதுகாலால் மிதிக்கிறேன் -யாவரும் காண்க என்று வீர வாதம் பண்ணுகிறார் –

—————————————————-

42-பஜஸ்வ யதிபூபதே அநிதமாதி துர்வாச நா கதத்வ பரி வர்த்தன ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம்
லபஸ்வ ஹ்ருதய ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம்

எம்பெருமானார் தரிசனத்தில் நிலையாய் இருந்து பாபம் அற்று ஸூ கமாய் இருப்பாயாக -என்று தம் திரு உள்ளத்தை நோக்கிச் சொல்கிறார் –
ஓ மனமே அநாதியாக துர்வாசனையால் தடம் கெட்டுத் திரிவதால் உண்டான இன்னல்களைப் போக்கும்படி யுள்ள செப்பன் இட்ட மார்க்கமாகிற சத் சம்பிரதாயத்தைப்
பற்றினால் கை கழலா நேமியனான எம்பெருமானின் அனுக்ரஹத்தால் பாபம் அற்ற வாழ்ச்சி பெறுவாய் என்று தம் திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார் –

——————————————-

43-குமதி விஹித க்ரந்த்த க்ரந்த்தி ப்ரபூத மதாந்திர க்ரஹிள மனச பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித குலகிரி துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌச்துப-

எம்பெருமானார் ஸ்ரீ ஸூ க்திகள் சார தமமானவை -அதனால் மதிக்க முடியாத பெருமை வாய்ந்தவை -என்கிறார் -இதர மதஸ்தர்கள் அநேக விஷயங்களை
சம்பந்தா சம்பந்தம் இன்றி முடித்து இருப்பதால் அவர்களுடைய கிரந்தங்கள் விஸ்தாரமாய் இருக்கும் -பொருள் இராது -எம்பெருமானார் ஸ்ரீ ஸூ க்திகள்
சாரமாய் இருப்பதால் சிறியவை என்று சொல்லி அவமதிப்பார் சிலர் -பெரிய பாராங்கல்லை தராசின் ஒரு தட்டிலும் பெரிய பெருமாள் திரு மார்பை அலங்கரிக்கும்
ஒப்புயர்வற்ற கௌஸ்துபத்தை ஒரு தட்டிலும் வைத்தால் எது எடை அதிகமாக இருக்கும் –அதிக எடை இருப்பதால் பாராங்கல் உயர்ந்ததாகி விடாது என்றபடி –
—————————————-

44-ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம் யதீஸ்வர பாரதீம் குமதி பணிதி ஷோப ஷீபா ஷிபந்து பஜந்து வா
ரச பரிமள ச்லாகா கோஷ ஸ்ப்புடத் புட பேதனம் லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் கிம் இதி அபிமன்வதே

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகளின் பெருமை மந்த மதிகளுக்கு நிலம் இல்லை என்கிறார் -சிக்கல்களை விடுவித்துத் தெளிவாக உண்மைப் பொருளை
உபபாதிக்கும் யதீஸ்வருடைய ஸ்ரீ ஸூ க்திகளை புத்தி கேடர்களான புறச் சமயிகளின் பேச்சுக்களால் மனக் கலக்கம் அடைந்து மதி இழந்தோர்
கொண்டால் என்ன -விட்டால் என்ன- ஒரு குறையும் இல்லை -மிக உயர்ந்த வஸ்து என்று ஊர் அறிந்த கற்பூரத்தின் பெருமையை -விலையை
-உப்பு விற்பவன் எப்படி அறிவான்–மூட்டை என்ன விலை – என்று தான் கேட்ப்பான் –

———————————

45-வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம் மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

எம்பெருமானார் தரிசனத்தை அவலம்பித்தவர்கள் விஷய வைராக்யம் உள்ளவர்களாகப் பார்க்கக் படுகிறார்கள் -என்கிறார் –
அனாதையான வேதங்களை சதா உருச் சொல்லிக் கொண்டு இருக்கும் நான்முகனும் நாவிலே மனைவியை கொண்டுள்ளான் –
சிவனுடைய இடது புறமே பெண்ணாய் விட்டது -பரதத்வமான எம்பெருமானும் கோபியர்கள் வசமாய் விட்டான்
ஆனால் எம்பெருமானார் திருவடிகளை பற்றினவர்கள் காமனால் பீடிக்கப் படுவதில்லை –பரம விரக்தர்களாய் இருப்பார்களே –

———————————————-

46-நிகம பதிக சாயா சாகீ நிராசா மஹா நிதி மஹித விவித சாத்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி
திரிபுவன தம ப்ரத்யூஷ அயம் த்ரிவித்ய சிகாமணி ப்ரதயதி யதி ஷமாப்ருத் பாராவரீம் அபிபர்யயாம்

எம்பெருமானார் வேதம் காட்டும் வழியில் சஞ்சரிக்குமவர்களுக்கு குளிர்ந்த நிழல் தரும் பல கிளைகளையுடைய மரமாய் இருப்பவர்
வைராக்ய சீலர்களுக்கு பெரிய நிதி -பற்றிலார் பற்ற நின்றானே என்னும் படி –
வர்ணாஸ்ரம ஸ்த்ரீ புருஷ விபாகத்தால் பலவிதமான பூஜிக்கத்தக்க சிஷ்யர்கள் மனம் ஆகிற ரதங்களுக்கு சாரதி
எல்லா உலக இருள் போக்கும் உஷஸ் -வைதிக ஸார்வ பவ்மர் –
நித்தியமான ஜீவாத்மா பரமாத்மா -சம்பந்த -சேஷ சேஷி பாவத்தை விளக்கமுறச் செய்து அருளுகிறார் –

———————————————————

47-ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔ ஷத சித்தய ப்ரமிதி நிதய ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய
சுருதி ஸூரபய சுத்த ஆனந்த பிவர்ஷூக வாரிதா யம கதி விச்சேதின்ய யதீஸ்வர ஸூ க்தய

மேலும் ஸ்ரீ ஸூ க்திகள் வைபவம் -புத்தி கேடர்களான புறச் சமயிகளுடைய பற்களில் கடியுண்டதனால் உண்டான வ்ரணத்தை ஆற்றுவதற்கு
நல்ல மருந்தாயும் -உண்மை நல் ஞான நிதிகளாயும் -அந்த ஞானமான பயிரை நன்றாகக் காக்கக் கூடிய முள் வேலியாயும்-
அந்த ஞானப் பயிரை வ்ருத்தி பண்ண -வேத மணம் கமழ்ந்த பரிசுத்த ஆனந்தமான மழையைப் பெய்யும் மேகங்களாயும்-எம லோகம் என்ற
பேச்சையே அழிப்பதாயும் உள்ள யதிராஜ திவ்ய ஸூ க்திகள் விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கின்றன –

———————————————————-

48-ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந
அகலுஷ பரஞான ஔத் ஸூ க்ய ஷிதா ஆதுர துர்த்தசா பரிணத பல ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூ க்ரஹா

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூ க்திகள் ஸூ க்ரஹம் -எளிதில் தெளிய அறியக் கூடியவை -இவ்விருள் தரும் மா ஞாலத்தில் ஜீவ தத்துவத்தை
கண்டு அறிவதற்கு சுடர் விளக்காய் இருப்பவர்களும் -பரதாத்ம தத்துவத்தை பற்றின உண்மை ஞானம் பெறும் அவா என்ற பசியால்
வாடுபவர்களுக்கு தம் கையாலேயே எட்டிப் பறிக்கும் படி பழுத்த பழங்களை-அடிக் கிளைகளையே -தரும் படியான மரம் போல் உள்ளவைகளும்
எளிதில் கிரஹிக்கக் கூடியவையாயுமாய் யுள்ள எதிராஜருடைய கிரந்தங்கள் எங்களுக்கு சதா சிந்தனைக்கு விஷயமாய் இருக்கின்றன –

————————————————

49-முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி பரிஷத் திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா –

ஜீவ பர யாதாத்ம ஞானம் பெற்றவர்க்கு பகவத் சரணார விந்தங்களில் பக்தியும் மோக்ஷத்தில் இச்சையும் ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகளே உண்டு பண்ணுகின்றன –
மோக்ஷ பிரதனான எம்பெருமான் திருவடிகளில் பக்தியாகிற குமுத மலர்களுக்கு நில ஒளிக்கு ஒப்பானதும் -ஆம்பல் சந்திரனை கண்டு வ்ருத்தி யடையுமே –
தங்கள் மதங்கள் ஆகிற நிலையான இருளில் களிக்கும் துர்வாதிகளான ஆந்தைக் கண்களுக்கு சூரியோதயம் போலே வெறுப்புண்டு பண்ணுபவையுமான
ஸ்ரீ யதீந்திரருடைய ஸ்ரீ ஸூக்திகள் மோக்ஷத்தில் நிலையான இச்சையை விளைவிக்கின்றன –

—————————————————

50-நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூ பகா விசுத்த உபன்யாச வ்யதிபுதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூ தியாம்

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூ க்திகள் வித்வான்களுக்கு ஆனந்தம் விளைவிப்பவை –முன்னுக்கு பின் முரண்பாடு ஏதும் இன்றி இருப்பவையாயும்
பகவத் போதாயன க்ருதமான வ்ருத்தி கிரந்தத்தை தழுவியபடியால் தெளிவுற்றதாயும் இருப்பதாயும் குற்றம் குறை கூற முடியாதபடியான
உபபாதனங்களால் விளங்குகின்ற -அதிகரண நிபந்தங்கள் -விஷயங்களை பாகுபடுத்தி உரைத்தல் -உள்ள ஸ்ரீ ஸூக்திகள்
நன்றாக ஸ்தாபிக்கப் பட்ட பிரதான அர்த்தங்கள் உள்ளவையாய் வித்வான்களுடைய மலர்ந்த ஞானத்துக்கு ரசம் விளைவிக்க வல்லவையாய் அமைந்துள்ளன –

————————————————

51-விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன் யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சபதே விரமதி
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட ப்ருத நா வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ

ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் மற்று ஒரு படியால் அருளிச் செய்கிறார் -சோபனமான வழியை தம் இஷ்டப்படி சஞ்சரித்து யானைகள் பாழ் படுத்துமா போலே
மனம் போனபடி கூச்சல் இடுவதால் வேத மார்க்கத்தை பாழ் படுத்தும் துர்வாதிகள் தமது தங்கள் துர்வாதங்களால் பரஸ்பரம் ஜெயிப்பதற்காக விளைவிக்கும் கலகமானது
யதிராஜ ஸ்ரீ ஸூ க்திகளின் சப்தங்களை யாதிருச்சிகமாக கேட்டால் கூடத் தானே அடங்கி விடும் –ஸ்ரீ எதிராஜரின் பெயரைச் சொன்னாலே அடங்கி விடும் என்னவுமாம் –

—————————————————–

52-பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம் பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி அசௌ தாபச கிராம் பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகள் தமது ஞானத்துக்கு தெளிவை அளிக்க வேணும் என்று பிரார்த்திக்கிறார் -சகல வேதங்களையும் அனுசரித்துப் பொருள்
கண்டவையும் -நாம் அறிய வேண்டிய தத்துவங்களை பிரகாசிப்பவைகளுமாய் மகரிஷிகளுடைய வாக்கை பிரதிபாலிப்பதுமாயும் உள்ள
ஸ்ரீ ஸூ க்திகள் தாம் நமது ஞானத்துக்கு தெளிவை அனுக்ரஹிக்க வேணும் –
ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-புற மதங்கள் அனைத்தையும் எதிர்வாதம் செய்யும் யுக்திகள் நிறைந்தவை -ருக்வேதப் பொருள் போன்றவை -யஜூர் வேத இருப்பிடம் –
சாம வேதங்களுக்கு பெருமை சேர்ப்பவை -அதர்வண வேத மூல தனம் தத்தவங்களை சரியாக விளக்கிக் காட்டும் தீபம்
வால்மிகியாதி முனிவர்களின் சொற்சாயல்-ப்ரஹ்ம ஞானம் மலர்ந்து தெளிய வைப்பவை

——————————————

53-ஹத அவத்யே ஹ்ருதயே ஹரி சரண பங்கேருஹ யுகே நிபத்தந்தி ஐ காந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக் ப்ரபேசாதி ஷூ தர பிரணதி பரிஹார பிரதிபுவ

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஐகாந்த்ய பக்தியை உண்டுபண்ணுகின்றன —
குற்றம் அற்றவை -இன்பம் விளைவிப்பவை -சிவன் அயன் இந்திரன் கந்தன் கரிமுகன் அக்னி சூர்யாதி சகல பகவச் சேஷமான தேவதைகள் இடத்தில்
ஸ்வாமித்வ புத்தி கொண்டு வணக்கம் செலுத்துவதை பரிஹரிப்பதில் மிக சமர்த்தங்களாய் இருந்து எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்
ஐகாந்த்ய பக்தியை உண்டுபண்ண வல்லவனாய் யுள்ளன –
சர்வ ஸ்மாத் பரனாயும் மோக்ஷ பிரதனனாயும் உள்ள எம்பெருமான் இருக்க தேவதாந்த்ர பஜனம் பண்ணிக் கெடாதீர்கள் -என்றபடி –

————————————————

54-யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூ க்திர் விஜயதே ஸூ தா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
கதா த்ருப்யத் கௌதச்குத கலஹ கோலா ஹல ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன வி நோத பிரணயிநீ

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகள் வைதிகர்களின் ஸூ க்ருத பலன் -என்கிறார் -வேதங்களை பரம பிரமாணமாகக் கொண்ட வைதிகர்களின் ஸூ க்ருதமே வடிவாய்
யுள்ளவைகளும் -உண்மைப் பொருளை உணர்விப்பதால் அமுதமயமான கடல் போல் உள்ளவைகளும் -செறுக்குற்று துர்வாதம் பண்ணும் புறச் சமயிகளுடைய அட்ட
ஹாஸங்களாலே துயர் உற்ற வேதங்களின் துயரத்தை போக்கடிப்பதிலேயே நோக்குடைய ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூ க்திகள் விஜய ஸ்ரீ யுடன் விளங்குகின்றன –

———————————————–

55-சுருதி ஸ்ரோணி சூடாபத பஹூமதே லஷ்மணமதே ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விததமதி ஆரோபயதிய
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச க லு நிஜகாத்ரேஷூ பஹூளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட

எம்பெருமானார் தரிசனத்தில் குறை சொல்லுபவர் தாமே தமக்கு இழுக்கைத் தேடிக் கொள்கின்றனர் -என்கிறார் –வேதாந்தம் -உபநிஷத்துக்களுக்கு அபிமதமாய்
இருக்கும் எம்பெருமானார் தரிசனத்தில் புத்தி கெட்டவனாக எவன் தோஷங்களை ஏறிட்டுச் சொல்லுகிறானோ -அந்த ஜடபிராயனானவன்-ஆகாசத்தில் சேற்றை
பூசுவதாக எறிய அது முழுவதும் தன் மேலேயே விழுவதால் தன்னையே சேற்றால் பூசிக் கொள்கிறான் –

——————————————–

56-நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித யதி ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம்

எம்பெருமானார் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபமாய் இருக்கிறார் என்கிறார் -இருள் அடைந்த இவ்வுலகில் எம்பெருமான் நிருஹேதுக கிருபை என்ற
எண்ணெயினால் நிரம்பிய எம்பெருமானார் என்ற தீபம் ஒளிவிட்டு பிரகாசியா விடில் சத்துக்கள் -குதர்க்கங்களான பாதாள குகையை எப்படி அண்டாமல் விலகுவார்கள் –

—————————————–

57-யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் -தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத் நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல் அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் -இதை விட சங்கராதி மாதங்கள் தொன்மை
வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை -உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் -இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே
ப்ரவர்த்திப்பத்தது-டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

————————————-

58- ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாண ப்பணிதய
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய மஹிம உல்லாசித தியாம் சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம் ஸூ மநசம்

மீண்டும் ஸ்ரீ ஸூ க்திகள் வைபவம் -செல்வச் சீமானான இளையாழ்வார் இடம் அவதரித்து பரவும் வேதாந்த விழுப் பொருள்கள் -ஸ்ரீ ஸூக்திகள் -தமது
காதுகளில் பெருக்கும் அம்ருத தாரையின் அனுபவங்களால் மலர பெற்ற ஞானத்தை யுடைய வித்வான்களுக்கு அவை
நித்தியமாக அனுபவிக்கத் தக்கவை – அளவிடமுடியாத ஆனந்தம் விளைவிப்பவை -மோஷம் அடைவிப்பவை –

————————————————

59-யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக ஜனதா சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்

எம்பெருமானார் திருவடி சம்பந்தமே உத்தாரகம்-எந்த யதி ஸார்வ பவ்மருடைய திருவடிகள் ஐஸ்வர்யாதிகளிலே பற்று இல்லாத பெரியோர்களுடைய சிரங்களால்
வணங்கப் பட்டு அநந்ய பிரயோஜனர்கள் சென்னிப் பூவே-அஞ்ஞானம் ஆகிற பெறும் காட்டில் விளையாடித் திரியும் அடியேன் மனசாகிற மத யானையை
பிடித்துக் கட்டும் சங்கிலியாக ஆகுமோ அத்திருவடிகள் இவ்வுலகத்தவருக்கு திடமான சம்பந்தம் யுடையதாக விளங்க வேண்டும் –

————————————————–

60-சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ கரீயோபி தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம் யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ –

காரேய் கருணை இராமானுசரின் அருளின் தன்மையைக் கண்டு வியக்கிறார் -கருணை வெள்ளத்தை சமத்காரமாக வர்ணிக்கிறார் –
மோக்ஷ சாம்ராஜ்யம் இவரிட்ட வழக்கு என்பதால் முக்தர்களுக்கு தோற்றுவாய் -சகல சேதனர்களின் பாபங்களை போக்கி அருளும் –
ஆளவந்தார் போல்வாரின் விசேஷ கடாக்ஷங்களால் விருத்தி பண்ணப் பட்ட பெருமை யுடையது -தடங்கல் இல்லாமல் பெருகுவது –
யாருக்கும் தாழாமல் அஹங்கரித்து இருக்கும் என்னையும்- நிர் வியாஜ்யமாக ஏறிப் பாய்ந்து ஆட் கொண்டு விட்டது –
என்னையும் மூழ்கடித்து தனது திருவடிகளில் இட்டுக் கொண்டதே –

———————————————–

61-சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத கிம் குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்

ஸ்ரீ ஸூ க்திகளை அனுபவிக்கப் பெற்றவர்கள் மற்ற கிரந்தங்களைக் கண் எடுத்தும் பாரார் -ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூ க்திகளை சதா அனுசந்திப்பார்க்கு
புத்தி கேடு உண்டாக்குவதையே குறிக் கோளாகக் கொண்டு அபார்த்தங்கள் நிறைந்த கந்தல் மூட்டைகளான இதர மத கிரந்தங்கள் விஷயமாகவே தோன்றாதே
முத்துச் சிப்பிகள் இங்கே நிறைந்து இருப்பதால் -உயர்ந்த கங்கையை சிரத்தில் அலங்காரமாகக் கொண்ட அரன்-தவளைகள் நிறைந்த கால்வாயை தலையில் கொள்வானோ –

———————————————

62-வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம் மான அந்தகார த்ருஹா -பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய -காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி

பரம தயாளுவான எம்பெருமானாரை அடி பணிகிறேன் -இந்த அருள் கடலான எம்பெருமானாராலே சமர்ப்பிக்கப் பட்ட தூய்மை படைத்த திருமஞ்சன
நீரைப் பருகி அத்திகிரி உச்சியில் உள்ள கரும் கொண்டல் -தேவ பெருமாள்-பேர் அருளாளன் – நமக்கு உசித காலத்தில் வேண்டுமவை எல்லாவற்றையும் தாராளமாக பொழியுமோ
அஹங்காரமான இருளைப் போக்குபவரும் சத்ருக்களுடைய மதங்களை தன் கண் பார்வையாலே -பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -என்னும் படி
மண் உண்ணும் படி செய்பவராக அந்த யதிகட்க்கு இறைவனான ஸ்வாமியை அடி பணிகிறேன் -என்றவாறு –

——————————————-

63-காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா -சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத் குணாத் ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந

ஸ்ரீ தத்தாத்ரேய மகரிஷியாக திரு அவதரித்து த்ரி தண்டம் ஏந்தி வேதங்களை ரஷித்தான் முன்பு -அவரைக் காட்டிலும் மேம்பட்ட ஸ்வாமியாக
அவரே திருவவதரித்து -சித்தாங்களை வெளியிட்டு அருளிய கருணையின் புகழ் திக்கெட்டும் என்றும் பரவி உள்ளது –
ஸ்வாமியுடைய கீர்த்தி பிரபாவங்களையும் திவ்ய மங்கள விக்ரக சோபையையும் ஏற்றிப் பேசுகிறார் -எம்பெருமானாராலே பிரகாசிக்கப் பெற்ற சத் ஸம்ப்ரதாயத்தால்
விளக்கம் உறச் செய்யப் பட்ட புத்தியை யுடையோமான அடியோங்களுக்கு ஸ்வாமியுடைய குண அனுபவம் பண்ணுவதால் -அவருடைய சமுத்திர பர்யந்தம் பரவிய
கீர்த்தி நெஞ்சுக்கு விஷயம் ஆகிறது -காஷாயமான பீத வஸ்திரத்தாலும் -திருக்கையில் ஏந்திய த்ரிதண்டத்தாலும் எம்பெருமான் யுடைய
திவ்ய மங்கள விக்ரஹம் போலே சோபையுடன் விளங்கா நிற்கின்றதே -பல்லாண்டு பல்லாண்டு –

———————————

64-லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா -யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தாம் எப்போதும் அணுக்கராக வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் -கடலை துகிலாகக் கொண்ட இந்த பூமி
-மாதுகரத்துக்கு எழுந்து அருளுவது போன்ற சமயங்களில் திருவடி சம்பந்தத்தால் திரு ரேகைகள் முத்தரிக்கப் பெற்று சகல தோஷங்களும் விலக்கப் பெற்று
தூய்மை அடைகிறது -திருவடிகளுக்கு ரஷையான பாதுகைகளை தங்கள் சிரசில் தாங்குவதால் புண்ணியர்களான மஹான்களுக்கு
ஸ்வாமி திருவடிகள் அணித்தாய் உள்ளன -அடியேனுக்கும் அப்படியே ஆக வேண்டும் –

—————————————–

65-நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி -கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
வியாச ஹாச பதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன

பாஹ்ய குத்ருஷ்டிகளை பரிகாசப் பேச்சால் ஏளனம் பண்ணுகிறார் -வேதாந்தங்களை சரியாக கிரஹிக்க யோக்யதை இல்லாமல் கலக்கமுற்று தெளிவற்ற
புத்தி யுடையவர்களால் நிர்ணயிக்கப் பெற்ற தீதுற்ற நெறியுடைய குத்ருஷ்டிகள் வியாச மகா ரிஷியை பரிகாசத்துக்கு உள்ளாக்குகிறார்கள்
-வால்மீகி முநிவரை மூடராக்கி விட்டனர் -சுக ப்ரஹ்மத்தை விளையாட்டு கிளியாக்கி விட்டனர் -யசஸ்வியான பகவத் போதாயனருடைய
ஞானத்தையும் வியர்த்தமாக்கி விட்டனர் -அந்தோ பரிதாபம் –

—————————————

66-அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ -பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூ தா சித்த ஔஷதா ஸ்வாதி நாம் -பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–எம்பெருமானாருடைய பிரசாதம் அடியாக தமது சித்தம் கட்டுப்பாடுடன் உண்மை பொருள் செறிந்து விளங்குகிறது -பாற் கடலை கடைந்து பெற்ற அமுதம் போன்ற ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூ க்திகள் -ஆகிற
சித்த ஒளஷத்தை யுண்டவர்கள் -மம மாயா துரத்யயா என்னும் படி பகவானுடைய மாயையான நீண்ட இரவு -அநாதி மாயயா ஸூப் தா என்கிறபடி தூக்கத்துக்கு காரணம் ஆவது இல்லை
பாரோ உபகாரரான எம்பெருமானாரது அருளாலே பிறப்பு முதலே என் புத்தி கட்டு இன்றி திரியாமல் ராஜாவை அனுசரித்து நடக்கும் பிரஜை போலே கட்டுப்பாடுடன் ருஜுவாக யுள்ளது
நான் பிறந்தது முதல் எனது புத்தியில் ஸ்வாமியே உள்ளார் -அதனால் சீரான தெளிந்த புத்தி பெற்று பிரக்ருதியான மாயையால் மயங்காமல் உள்ளேன் –

——————————————————

67-சுத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா -ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர -ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம

ஸ்ரீ லஷ்மி சமேத ஷீராப்தி நாதன் குளிர்ந்த கடாஷத்தால் எனது அறிவு மலர்ந்து சதாச்சார்ய உபதேசத்தினால் பெற்ற யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீயபதியின்
அருளை பெறுவித்து அடியேன் மனம் அவனையே அனுபவிக்கும் படி பண்ணின -துய்ய மதி பெற்ற சதாச்சார்ய அனுக்ரஹத்தாலே கையில் கனி என்ன வசப்பட்டவையும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் உள்ள ஸ்ரீ ஸூக்திகள் என் மனசில் நிறம்பி உள்ளன -சமுத்திர உத்பாவையான பெரிய பிராட்டி
அகலகில்லேன் இறையும் என்று நித்தியமாய் தன்னிடம் இருப்பதால் ஆனந்திக்கும் எம்பெருமானுடைய குளிர்ந்த கடாக்ஷத்தால் மலர்ந்த
என்னுடைய புத்தியானது -ஸ்ருதி சிரசி வீதீப்தே -என்றபடி வேதாந்த ப்ரதிபாதனான எம்பெருமானை அடைகிறது –

——————————————————–

68-ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான சுத்தா மதி -தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
கோ வா சஷூ உதஞ்சயேத் அபி புர சாடோப தர்க்க சடா -சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந

நல்ல ஆயுத பலம் உள்ளவன் எதிர்த்து போராட முடியாதவனாய் எப்படி இருப்பானோ அப்படி எம்பெருமானார் சித்தாந்தத்தை அவலம்பித்த நான் தர்க்க பலத்தினால்
எதையும் சாதிக்க வல்லேன் -என் எதிரினில் யார் வாதத்துக்கு நிற்க முடியும் -ராமானுஜ சித்தாந்தத்தைப் பற்றி ஒழுகுபவற்கு பிறப்பு முதலாக தீதற்ற ஞானம் வாழ்ச்சி பெறுமாக-
பொருள் செறிந்ததாகவும் அழகாகவும் ரஸ கனமாகவும் நித்யமாயும் இருப்பவைகளாயும் அவர்களுடைய வாக்விந்யாஸங்கள் வாழ்ச்சி பெறுமாக –
படாடோபத்துடன் கூடிய யுக்தி வாதங்கள் ஆகிற ஆயுதங்களைக் கொண்டு வாதப்போர் என்ற விளையாட்டில் மகிழ்ச்சியுறும் என் முன் எதிர் விழி கொடுத்து நிற்க எவன் வல்லவன் –
ஸ்வாமி சம்பந்தம் அடைந்தவர்கள் பிறந்ததுவே முதலாக ஞானம் படைத்தவர்களாக கம்பீரம் அழகு இனிமை நிறைந்து இருந்து புற மத வாதிகள்
இவர்கள் கண்ணைத் திறந்து பார்த்த ஷணத்திலே மாய்ந்து போவார்கள் –

———————————————–
69-பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம் ஆஷபாதம் சிசிஷே -மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம்
இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை -அந்தர் மோ ஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-

சாக்கியம் கற்றோம் -சமணம் கற்றோம் -சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் -என்கிறபடி கணாத கௌமத மீமாம்சக சாங்க்ய யோக மதங்களை வேண்டிய அளவு அவ்வவற்றில் உயர்ந்த பாண்டித்யம் பெறும் அளவுக்கு கற்றுள்ளேன் -ஆயினும் எம்பெருமானாரால் முறியடிக்கப் பெற்ற பல பல பொய்ச் சமயங்கள் என்கிற காட்டில் அஞ்ஞான இருளால் குருடர்களாக அலைந்து திரியுமவர்கள் இடம் நமக்கு ஆக்கவேண்டியது ஒன்றும் இல்லை -கணாதகரின் வைஷிக மதம் – கௌதமரின் மதம் -ஜைமினி மீமாம்ச மதம் -கபிலரின் சாங்க்ய மதம்
-பதஞ்சலி யோக மதம் -போன்றவை காடு போலே நிரம்பி உள்ளன அஜ்ஞானம் இருள் சூழ -பலரும் குருடராக உழல–ஸ்வாமி திருவவதாரத்தால் வேரோடு ஒழிக்கப் பட்டாலும் மீதி -கொஞ்சம் கொஞ்சம் உள்ளாருடன் தொடர்பு கொண்டு சிந்திக்க என்ன உள்ளது –

————————————————–

70-காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் -கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –

எம்பெருமானார் மூன்று வித ஸ்ருதிகளான சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பதைக் கண்ட மாத்திரத்திலேயே இதர மதங்கள் தாமே நசித்துப் போயின –
புத்தர்கள் பாட்டுக்கள் அடங்கின -கபிலர் காட்டின வழி எங்கேயோ சென்று மறைந்தது -கணாதனுடைய குரல் ஓய்ந்து விட்டது -நான்முகன் அரன் பற்றிய பேச்சின்
வாசனை கூட தெரியவில்லை -குமரில பட்டருடைய பேச்சுக்களும் ஒடுங்கின -பிரபாகர் மதம் மதிப்புள்ள இடத்தில் இருந்து வெகு தூரம் சென்று விட்டது
-மற்ற சங்கராதிகளுடைய மதங்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ -சந்தேகமே வேண்டாம் அதுவும் அழிந்து விட்டது என்றபடி –

——————————————————

71-விஷ்வக் வியாபி நி அகாதே யதி ந்ருபதி யச சம்பத் ஏக அர்ணவே அஸ்மின் -ஸ்ரத்தா சுத்த அவகாஹை சுப மதிபி அசௌ வேங்கடேச அபிஷிக்த –
ப்ரஜ்ஞா தௌர்ஜன்ய கர்ஜத் ப்ரதிகதக வச தூல வாதூல வ்ருத்த்யா -சப்தத்யா சாரவத்யா சமதநுத சதாம் ப்ரீதிம் ஏதாம் சமேதாம்

முன் ஸ்லோகத்துடன் எதிராஜா சப்ததி முற்றுப் பெறும் -இனி இந்த பிரபந்தம் சத்துக்கள் ஆதரிக்கக் கூடியதாய் இருக்கும் என்கிறார் –
எங்கும் பரவியுள்ளதும் ஆழம் காண அரியதாயும் யுள்ள யதிராஜ ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற பெறும் கடலில் மூழ்கிப் பாவனம் ஆக்கப் பெற்று
நல் ஞானம் அடைந்த சத்துக்களால் கொண்டாடப் பெற்ற வேங்கடேசன் என்று அழைக்கப்படும் அடியேனால் பணிக்கப் பட்டு ஞான சம்பத் இன்றி
கேவலம் சப்தம் மட்டும் செய்கின்ற ப்ரதிபஷிகளின் வாக்குகள் ஆகிற பஞ்சை அடித்துத் தள்ளும் பெறும் காற்றின் பணியைச் செய்யுமதாயும்
சாரமான பொருள்களை யுடையதுமான இந்த யதிராஜ சப்ததியானது பாகவதர்களுக்கு இன்பம் தர வல்லதாய் உள்ளது -என்ன பாக்யம் இது -என்றபடி –

——————————————————–

72-ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான் -பாதே யதி ஷிதி ப்த ப்ரசபம் நிருத்தன்
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் -கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

கவிதார்க்கிக ஸிம்ஹம் என்ற பட்டாப் பெயரை யுடைய வேதாந்த வாரியன் பணித்த யதிராஜ சப்ததி என்ற சிம்ம நாதம் ப்ரதிபஷிகளுடைய காதில் பட்டால்
அவர்களும் எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பர்கள் என்கிறார்
புற மதத்தார் யானை போலே மதம் கொண்டு பேராசையால் திரிய சிம்ஹம் போலே கர்ஜித்து யதிராஜர் திருவடிகளில் வலியக் கொண்டு வந்து கட்டினேன்
கவிதார்க்கிக சிம்ஹ கர்ஜனை அவர்கள் செவியில் புகுந்து இந்நிலைமை ஏற்படுத்தி விட்டது –

———————————————–

73-உபசமித குத்ருஷ்டி விபலவா நாம் உபநிஷதாம் உபசார தீபிகா இயம்
கபளித பகவத் விபூதி யுக்மாம் திசது மதிம் யதிராஜ சப்ததி ந

பங்கம் அடைந்த குத்ருஷ்டிகளால் ஏற்படக் கூடிய உபத்ரவங்கள் நீங்கிய வேதங்களுக்கு கை விளக்காய் அமைந்த இந்த யதிராஜ சப்ததியானது நமக்கு
மதி நலத்தை அருள வேணும் புற மத வாதங்களால் துன்பம் அடைந்த உபநிஷத்துக்களை யதிராஜர் நீக்கி அருளினார் -ஸ்வாமி பெருமைகளை விளக்கும்
இப்பிரபந்தம் இரு பக்கம் ஏற்றி வைக்கப் பட்ட தீபம் போன்றதாகும் -உபய விபூதி யாதாம்ய ஞானமும் இதனால் பெறலாம் –

————————————
74-கரதல ஆமல கீக்ருத சத் பதா -சுருதி வதம்சித ஸூ ந்ருத ஸூ க்தய
திவச தாரக யந்தி சமத்சரான் -யதி புரந்தர சப்ததி சாதரா –

இந்த யதிராஜ சப்ததியைக் கற்பதில் விஷயத்தில் ஆதரம் யுடையவர்கள் சத் ஸம்ப்ரதாயத்தைக் கைக் கொண்டவர்களாய் நல்ல விஷயங்களையே
எப்போதும் கேட்பவர்களாய் மாச்சர்ய லேசமும் இல்லாதவர்களாய் விளங்கட்டும் –
நிகமத்தில் -இந்நூலைக் கற்றார்க்கு மார்க்கம் உள்ளங்கை நெல்லிக் கனி போலே தெளிவாக புலப்படும் இவர்கள் வார்த்தைகள் வேதங்களின் தலை மேல் வைக்கப்படும்
புற மதத்தினரையும் ஸ்வாமி மேல் பொறாமை கொள்பவர்களையும் பகல் வேளை நஷத்ரம் போலே ஒளி குன்றும் படி செய்து விடுவார்கள் –

—————————————–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –